ஒருவழியாக முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டுவிட்டார். அனைத்து ஊடகங்களும் இந்த கைது நடவடிக்கையைச் சுற்றியே தங்கள் புல்லரிக்கும் புலனாய்வுகளைச் செய்து செய்திகளாக பீய்ச்சியடிக்கின்றன. இந்தவகைச் செய்திகளைப் படித்தே நாட்டு நடப்பை அறிந்துகொள்ளும் மக்களோ. அவை அடுத்த செய்தியை கொடுக்கும் வரை இதையே தங்கள் அரசியலாக, சமூக அக்கரையாக; இவற்றை அலசுவதையே தங்கள் நாட்டுப்பற்றாக, தார்மீக கடமையாக செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆர்ப்பரிப்பின் பின்னே மக்கள் அறியவேண்டியவைகள் மங்கிப் போகின்றன.
பண்டைய சுக்ராம் தொடங்கி ஊழலில் யாரும் தண்டிக்கப்பட்டதுமில்லை, கைது செய்யப்படுவது மட்டுமே தண்டனையும் இல்லை. மக்களும் அவற்றை அறிந்துதான் இருக்கிறார்கள். இப்போது ராசா கைது செய்யப்பட்டிருப்பதனால் சட்டம் பக்கச் சார்பின்றி தன் கடமையை செய்திருப்பதாக பறைசாற்றப்படுகிறது. இது சரிதானா?
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரையே நடத்தமுடியாதபடி பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கிப்போட்டன. அப்படி முடக்கியதால், நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியதால் நாட்டின் எந்த நிர்வாக நடவடிக்கைகளும் முடங்கிவிடவில்லை என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அடுத்த வரவு செலவு திட்ட அறிக்கை கூட்டத்தொடரும் முடக்கப்பட்டால், பட்ஜெட் நிறைவேற்றப்படாமல் நாடே முடங்கிவிடுமா என்ன? வழக்கம்போல நிர்வாகம் இயங்கும். வரி வசூலிக்கப்படும், திட்டங்களுக்காக செலவிடப்படும், வெளிநாடுகளில் கடன் வாங்கப்படும், வாங்கியதைவிட அதிகமாக வட்டி மட்டுமே திரும்பச் செலுத்தப்படும், புதிய திட்டங்கள் தீட்டப்படும், பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களுக்கு கொள்ளைச் சலுகை வழங்கப்படும், எந்தச் சங்கடமுமின்றி ஊழலும் செய்யப்படும். பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறாமல் முடங்கினாலும் எதுவும் நேர்ந்துவிடாது என்பதை மக்கள் கண்டுகொள்ள இன்னொரு சான்றாக அமையும். என்றால் நாடாளுமன்றம் எதற்காக? நாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காக? அவர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் எதற்காக? அவர்களை உறுப்புகளாகக் கொண்ட அரசாங்கம் எதற்காக? எனும் கேள்விகள் மக்கள் மனதில் எழும். எந்த அமைப்பால் கொழுத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த அமைப்பு மக்கள் மத்தியில் செல்வாக்கு குன்றலாமோ.
நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படுவதால் மட்டும் ஊழலின் அடியும் முடியும் வெளிவந்துவிடுமா? போபர்ஸ் ஊழலுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் என்ன நடந்துவிட்டது? பின் ஏன் காங்கிரஸ் அதை அமைக்க மாட்டோம் என பிடிவாதம் பிடிக்க வேண்டும். நேர்மையாக நாடாளுமன்ற கூட்டுக்குழு செயல்பட்டால் அலைக்கற்றை ஊழலில் முன்னர் பிஜேபி உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகளும் கை நனைத்திருப்பது வெளிவருமே, பின் ஏன் அவை நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்தே தீரவேண்டும் என பிடிவாதம் பிடிக்க வேண்டும்? இவைகளெல்லாம் மக்களின் மறதியை தயாரிப்பாக கொண்டு அந்தந்த நேரத்தேவைகளுக்காக இயக்கி நடிக்கப்படும் நாடகங்கள். இந்த நாடகம் தம்மைச் சங்கடப்படுத்தும் அளவுக்கு நீளக்கூடாது என்பதால் அதை முடித்துவைக்கத் தேவைப்பட்ட உச்சகட்டக் காட்சி தான் ராசா கைது. ஒருவேளை நீண்டாலும் அமைச்சரையே கைது செய்யும் அளவுக்கு அரசு நேர்மையாக நடந்துகொண்டும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நேர்மையின்றி முடக்குகிறார்கள் என பிரச்சாரம் செய்யலாம். எத்தனை நாளைக்குத்தான் கூச்சல், குழப்பம், முடக்கம் என்று ஒரே காட்சியை திரும்பத்திரும்ப நடித்துக்கொண்டிருப்பது. மக்களுக்கு சலிப்பு வந்து நமக்கு எதிராக திரும்பிவிட்டால், எதிர்க்கட்சிகளின் அச்சத்தை முடிவுக்கு கொண்டுவர தேவைப்பட்ட உச்சகட்டக் காட்சிதான் ராசா கைது. பின்வாங்கிவிட்டதாக யாரும் கூறினால் எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் ராசா கைது என பிரச்சாரம் செய்யலாம்.
பாராளுமன்ற பன்றித் தொழுவத்தில் உழலும் எந்தக் கட்சியும், யாரும் நேர்மையானவர்கள் என தங்களை கூறிக்கொள்ள முடியாதபடி ஊழலில் அம்பலப்பட்டிருக்கிறார்கள், அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேர்தல் காலங்களில் எதையாவது செய்து குட்டிக் கரணம் அடித்து எங்கள் கைகளில் அழுக்கில்லை என காட்டிக்கொள்ள முனைகிறார்கள். மக்களும் பழையதை அவர்களுக்கு நினைவூட்டுவதில்லை. எத்தனை மக்கள் செத்தாலும் கடிதம் எழுதும் திறனுள்ள முதல்வர், முன்னர் நடந்த முதல்வர்கள் மாநாடுகளில் கலந்துகொள்ளமுடியா உடல்நலம் குன்றியவர், கூட்டணி பலமாக இருக்கிறது என பலமுறை இருதரப்பிலும் அறிவித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், தொகுதிப்பங்கீடு என்று ஏன் தில்லி செல்ல வேண்டும்? மணிக்கணக்காக காத்திருந்து சோனியாவை சந்திக்க வேண்டும்? 1.76 லட்சம் கோடிகளுக்கு எத்தனை சுழிகள் என்று தெரியாத மக்கள் தான் வாக்காளர்கள் என்றாலும், ஊழல் என்று பதிவாகிவிட்டது, பாம்புக்கும் வலிக்காமல் தடியும் நோகாமல் எப்படி அடிப்பது? என்பதுதான் பிரச்சனை. பிரச்சனையை பேசினார்கள், ராசா கைது என்று பாம்பை அடித்தும் விட்டார்கள். இனி தேர்தல் மேடைகளில் தைரியமாக சவடால் விடலாம்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றதும் ராசா, திமுக, காங்கிரஸ் என்று தான் பேசப்படுகிறது. இவைகள் இலைகள் தாம் வேர்கள் மறைந்திருக்கின்றன. அலைக்கற்றை எனும் மக்களுக்கு பொதுவான வளத்தை முறைகேடாக முதலாளிகளுக்கு குறைந்த விலையில் விற்றதுதான் ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் முறைகேடாக விற்ற ராசா மட்டுமே குறிவைக்கப்படுவதால் எந்த அடிப்படையில் விற்றார்? இதில் பலனடைந்தது யார்? எனும் கேள்விகள் கவனமாக மறைக்கப்படுகின்றன. ராசா முறைகேடாக விற்பதற்காக குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து பலனடைந்தார் என்று குற்றம்சாட்டப்படவும் இல்லை(பலனடையாமல் அதை செய்திருக்கமாட்டார் என்பது வேறு விசயம்), அதன் அடிப்படையில் நடவடிக்கையும் இல்லை. ஆனால் அந்த விற்பனையில் நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்படியென்றால் வேறு எந்த நடவடிக்கைகளிலும் நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டதில்லையா? பொதுத்துறை நிறுவனங்கள் அத்தனையும் அடிமாட்டு விலையில் தான் தனியாரிடம் விற்கப்பட்டிருக்கின்றன. பூமியில் கிடைக்கும் கனிம வளங்கள் அத்தனையும் உப்புப் பெறாத விலைக்குத்தான் மொத்தமாக தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. பல கோடி மதிப்பிலான நிலங்கள் சில லட்சங்களுக்காக மக்களை கொன்று விரட்டிவிட்டு தனியாருக்கு தாராளம் காட்டப்படுகிறது. வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் பணம் உட்பட அனைத்தும் முதலாளிகளின் வசதிக்காக திறந்துவிடப்படுகிறது. அரசின் கொள்கையே அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும் கூட, தனியாரின் லாபத்தை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது. தெளிவாகக் கூறினால் அரசின் அனைத்து நடவடிக்கைகளிலுமே அரசுக்கு இழப்பு தான் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
அலைக்கற்றை விவகாரத்தில் ராசா செய்தது குற்றம் என்றால் அரசின் மொத்தச் செயல்பாடும் குற்றத்தன்மை உடையதே. அரசின் கொள்கையாக செயல்படுத்தப்படுகிற தனியார்மயம் தாராளமயம் இந்த அடிப்படையில் தான் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் வளங்களையும், நாட்டு மக்களையும் சுரண்டிச் சேர்த்து ஒருபக்கம் குவிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறது. என்றால் மாற்றப்படவேண்டியது ராசாவா? அந்தக் கொள்கையா? வெகு சாதாரணமாகவே திருட்டுப்பொருளை வாங்குவது குற்றம், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கள்ளத்தனமாக விற்கப்பட்ட அலைக்கற்றை உரிமத்தால் பலனடைந்தது யார்? அவர்களும் குற்றவாளிகள் தானே. ஆனால் புதிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சரான கபில்சிபல் அந்த திருட்டுத்தனத்தால் யார் பலனடைந்தார்களோ அவர்களிடம், ரிலையன்ஸ், அம்பானிகளிடம் தொலைத்தொடர்பு கொள்கை குறித்து ஆலோசனை கேட்கிறார், உங்களின் தொழிலுக்கு எந்தவிதத்திலும் அரசு தொந்தரவாக இருக்காது என்று உறுதியளிக்கிறார். இதுதான் அரசின் உண்மையான முகம்.
இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலே முதலாளிகளின் போட்டியால் வெளிப்பட்டதுதான். அது இல்லையென்றால் இது ஊழலாக அல்ல ஒப்பந்தமாகவே பார்க்கப்பட்டிருக்கும். பலஆயிரம் டன் அலுமினியத்தாது சந்தை விலையில் 0.017 விழுக்காட்டுக்கு தனியாருக்கு விற்கப்பட்டது ஒப்பந்தமாக மதிக்கப்படும் நாட்டில், எது ஒப்பந்தம், எது ஊழல் என்பதைக்கூட முதலாளிகளின் தேவை தான் தீர்மானிக்கிறது. அதைமட்டுமா முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள்? ஒரு துறைக்கு யாரை அமைச்சராக நியமிப்பது என்பதையே முதாலாளிகள் தான் தீர்மானிக்கிறார்கள் என்பதை ஒரு நீரா ராடியாவின் தேர்ந்தெடுத்து கசியவிடப்பட்ட தொலைபேசி பேச்சுக்களே துல்லியமாக காட்டுகின்றன. நாட்டில் ஆயிரம் நீரா ராடியாக்கள் சட்டபூர்வமாகவே உலவிக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என்பது நீதிமன்றத்தின் பஞ்ச் டயலாக். மக்களுக்கு எதிரான, முதலாளிகளின் கொள்ளைக்கு ஆதரவான அத்தனை ஒப்பந்தங்களையும் மக்களின் அவலக்குரல் காதில் விழாதபடி காதில் பஞ்சை வைத்த இந்த டயலாக்கின் உதவியுடன் தான் அங்கீகரித்துக்கொண்டிருக்கிறது நீதிமன்றம். மயிற்கூச்செரியும் பல்வேறு கேள்விகளை அரசை நோக்கி வீசும் அதே நீதிமன்றம், விற்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமையை ரத்து செய்ய முடியாது என்று கூறியிருக்கிறது. இதுதான் சட்டத்தின் உண்மையான முகம்.
அப்படியென்றால் சட்டத்தின் கடமைதான் என்ன? அரசின் கடமை எதுவோ அதுவே சட்டத்தின் கடமையும். மக்களைக் கொன்றேனும் முதலாளிகளை வாழவைப்பதுதான் அரசின் கடமை. அந்த வகையில் முதலாளிகளின் போட்டி பொறாமையினால் வெளிப்பட்டுவிட்ட ஊழலை அதன் உண்மையான கொடூரம் மக்களுக்கு தெரிந்துவிடாமல் மறைப்பதுதான் அரசின் கடமை. அதிலிருந்து வழுவாமல் உண்மையான ஊழல்வாதிகளை, ஊழல்வாத கொள்கைகளை மறைக்க அரசுக்கு பக்கமேளம் வாசிப்பது தான் சட்டத்தின் கடமை. இதைத்தான் சட்டத்தின் கடமை என்ன என்பதை மறைத்து சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மட்டும் கூறுகிறார்கள். ஆக ராசா கைது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையல்ல, ஆதரவான நடவடிக்கையே.
இந்த கட்டுரையில் கூறப்பட்டவை யாராலும் மறுக்க முடியாத செய்திகள் . இதை ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொள்ள வேண்டும்
தோழா !
தப்பும் தவறான ஆட்சிமுறை
மனுக்குலவிரோத நெறிமுறை
பலே திருடர்கள்
அரிதார புருடர்கள்
மதங்கள்
மத பீடங்கள்
மத கிரந்தகங்கள்
வேத இதிகாசம்
புராண புனைகதைகள்
சித்தரிக்கப்பட்ட இஸம்
ஜோடிக்கப்பட்ட வேதம்
மெருகூட்டப்பட்ட மெய்ஞானம்
போலி விஞ்ஞானம் பொருளாதாரம்
பற்றி தொடர்கட்டுரைக்கும்
நீங்கள் அவற்றை
கம்யூனிஸ ஸித்தாந்தங்களால்
எவ்வாறு களையெடுப்பதென்றும்
மனுக்குலம் உய்ய
ஷேமமும் செளந்தர்யமும் பெற
ஆதார மார்க்ஸிய ஸ்ருதிகளுடன் எப்போது கூறுவீர் !!!
இன்னும் எத்தனை ஊழல் வழக்குகள் தொடரப்பட்டாலும், எத்தனை விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டாலும் எதற்குமே முடிவு தெரியப் போவதில்லை. எல்லாம் கிணற்றில் போடப்பட்ட கல் தான். இதற்கு ஒரே வழி, மக்கள் மனங்களில் மாற்றம் வர வேண்டும். நாம் தான் இலவசங்களில் மூழ்கிப் போய் கிடக்கிறோமே. அடுத்த தேர்தலுக்கு போன தேர்தலை விட அதிகமான இலவசங்களும் வெயிட்டான ‘கவரும்’ எப்படியும் கிடைக்கத் தான் போகின்றன. பிறகு என்ன புலம்பி என்ன?
///அடுத்த தேர்தலுக்கு போன தேர்தலை விட அதிகமான இலவசங்களும் வெயிட்டான ‘கவரும்’ எப்படியும் கிடைக்கத் தான் போகின்றன. பிறகு என்ன புலம்பி என்ன?///
தோழா !
5 வருஷ ஆட்சியின்
மொத்த கொள்ளையில்
7 கோடி மக்களுக்கும்
சமபங்கு கொடுத்தாலும்
புலம்பி வெதும்பி
அப்போதும் ஏதாவது
கொடியின் கீழ் நின்று
ஜனநாயகவழியில்
என் மக்கள் போராடுவர் !!!
JAIHIND !!!
தோழா !
செந்தமிழா !
திராவிட இன திரு இராசா
தமிழ்கூறும் அருமை ரோசா
கருணா நிதிக்கு பிறவா மகன்
தமிழ்த்தாயின் கருப்பு மகன்
கனிமொழி பேசும் கள்வன்
செய்த சில்லறை வியாபாரத்தை
பெரிதாக்காமல்
உடன்பிறவா சகோதரனை
விடுவிக்குமாறு
செங்கோட்டை நோக்கி
சங்கரபரிவாரங்களுடன்
பயணிப்பாயாக !!!
இன உணர்வு கொள் தோழா !!!
வரும் தேர்விலும்
அவர்குலம் வெல்ல வெற்றிபெற
கட்டுரை தீட்டு தோழா !
இந்தியன் ////ஷேமமும் செளந்தர்யமும் பெற
ஆதார மார்க்ஸிய ஸ்ருதிகளுடன் எப்போது கூறுவீர் !!!////
பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு
good post. ref: raasaa paarvai; & congress baavla admk saalna: http://www.marubadiyumpookkum.wordpress.com.we are in similarity to report this matter.
///இந்தியாவும் ஒரு நாள் எகிப்தாகலாம் அது மட்டும் நிச்சயம்.///
மாகாளி போற்றிய கவிஞர் தணிகை.
கவிதைக்கு பொய்யழகு சூத்திரப்படி பொய்யுரையாமல்
கவிபொய்யர்கள் கூட சில சமயம் உண்மையுரைப்பார்களோ ?
சொல்லடி ஜக்கம்மா ?
மாடரேட்டர் தனிக்கையிலாமல் பிரசுரம் செய்வாரே ?
செங்கொடி உற்சவம் !
முகப்பில்
அய்ந்தாறு அமர
கம்யுனிஸ கடவுளர்கள்
மஹா ஜன
அனுமார் கம்ரேடர் படைகள்
இரத்தநெடிபிடித்த
செந்நிரக்கொடி
அரிவாள் சுத்தி ஆயுதமேந்தி
ஏழு பகுதிகளாக ஏழாம்படை
மதம்பிடித்த
விமரிசனக்கட்டுக்கதைகள்
அரசியலையும் அறிவியலையும்
கரைத்துக் குடித்த
மேதாவித்தனம் மற்றும்
கோமாளி கூஜாக்கள் புடைசூல
வாரம் ஒரு சிறப்புவாரம்
மார்க்ஸிய மந்திகளின்
வாந்தியும் பேதியும்
என பொழுதுபோக்கும் லயம்
முழுக்க முத்தியவர்களின்
கோரஸ் கொண்டாட்டம் !!!
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அனுமதி கழிப்பிடம் இலவசம் !!!
*ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை!தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!*
அன்றாடம் பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 1,76,000கோடியை அடைக்கப்போவது நாம் தான். டாடா, அம்பானி, மித்தலின் சொத்து மதிப்பை உயர்த்தப் போகிறவர்களும் நாம் தான். அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததற்காகத்தான் அமைச்சர் ராசா வுக்கு இலஞ்சம்.
இலஞ்சமும் ஊழலிம் முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு மட்டும் தான் அது பாதகமாக இருக்கிறது. இரண்டு ரூபாய் இலஞ்சம் கொடுத்தால் பத்து ரூபாய் எடுத்து விடுவார்கள் முதலாளிகள். பன்னிரெண்டு ரூபாயையும் மறைமுக வரியாகவும், விலைவாசி உயர்வாகவும் தங்கள் தலையில் சுமப்பவர்கள் மக்கள் தான்.
http://vrinternationalists.wordpress.com/2011/02/08/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/