செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௪

அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

அல்லாவின் ஆற்றலிலிருக்கும் இடர்பாடுகள் குறித்த விளக்கங்களில் புகுமுன் ஒன்றை தெளிவுபடுத்திவிடலாம் என கருதுகிறேன். \\யாருடைய நம்பிக்கையை விமர்சிப்பதாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கை எத்தகையது என்பதை புரிந்து அதில் நின்று தான் விமர்சிக்க வேண்டுமே தவிர அவர்கள் நம்பாத வேறு கிரவுண்டில் இருந்து விமர்சிக்கக் கூடாது// என்று நண்பர் எழுதியிருக்கிறார். அதில் இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியில் எந்த விமர்சனமும் இடம்பெற்றிருக்கவில்லை. இஸ்லாம் குறித்த விமர்சனத்தை, இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியிலிருந்து வைக்கவும் முடியாது. எது அவர்களின் நம்பிக்கையோ அதில் தான் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் நம்பாத ஒன்றை விமர்சனமாக வைத்தால் “இது இஸ்லாமல்ல” எனும் ஒற்றைச் சொல்லில் அதைக் கடந்துவிட முடியும். ஆனால் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடையளிக்க அவர் முயன்றிருக்கிறார் என்பதே இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியே கேள்வியேதும் எழுப்பப்படவில்லை என்பதற்கு போதுமானதாகும்.

 

குரானில் சொல்லப்பட்டிருக்கும் சுயபாராட்டல்களின் அளவு அதிகம் என்பதை ஒரு தகவலுக்காக குறிப்பிட்டிருந்தேன். ஒரு வார்த்தை கூட தேவையில்லாமல் இருக்காது என இறும்பூறெய்தலாக குறிப்பிடப்படும் ஒரு வேதத்தில், அதன் அளவே பாதியாக குறைந்துவிடும் அளவுக்கு அந்த சுயபாராட்டல்கள் இருக்கின்றன. இதற்கு பகரமாக நண்பர் \\குர்ஆன் இறைவனுடைய வேதம். அதில் அவனைப்பற்றி அவனுக்கே உரிய வேறு யாருக்குமே இல்லாத அவனுடைய வல்லமைகளை கூறுகிறான். அது சில இடங்களில் விரிவாகவும் பல இடங்களில் சுருக்கமாகவும் உள்ளன// என்பதாக கூறுகிறார். அவனுடைய வல்லமைகளை, தன்மைகளை ஒவ்வொன்றையுமேகூட ஓரிரு முறை கூறினால் போதுமானது. ஆனால், சற்றேறக் குறைய‌ எல்லா வசனங்களின் பின்னாலும் ஒரு வாலைப்போல் அது ஒட்டியிருக்கிறது. எனவேதான் சோர்வடையவேண்டாம் என்று ஈறொட்டாக குறிப்பிட்டிருந்தேன்.

 

முதல் இடர்பாடாக நான் குறிப்பிட்டிருந்தது, எல்லாமே எழுதப்பட்ட ஏட்டில் இருப்பது தான் எனும்போது அது மனிதனுக்கு சிந்தனை இருக்கிறது என்பதை மறுக்கிறது என்பதை. அதை தெளிவாக கேள்வியாக எழுப்பியிருந்தேன், \\ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும்// இந்த முரண்பாடான தன்மையை நண்பர் விதிக்கொள்கை என கடந்து செல்கிறார். ஒருவனுக்கு இழப்பு ஏற்பட்டால் விதியின் தொழிற்படுதலால் அவன் ஆறுதலடையவும், செருக்கு கொள்ளாமலிருக்கவும் விதிக்கொள்கை பயன்படுகிறது என அதற்கு விளக்கமும் தருகிறார். இது மேம்போக்கானது. தனிப்பட்ட ஒருவனுக்கு இழப்பு என்பது தனியுடமையிலிருந்து எழுகிறது, வணிகர்களின் நலைனைப் பாதுகாக்க எழுந்த ஒரு கொள்கையால் இப்படித்தான் சிந்தித்திருக்க முடியும். தனக்கு ஏற்பட்ட இழப்பு எதனால் ஏற்பட்டது?, செயலின் பிழைகள் என்ன? என்னென்ன தாக்கங்கள் அந்த செயலில் வினையாற்றின? அவைகளின் எதிர்வினை என்ன? என்பதைக் கண்டுணர்ந்து அடுத்தமுறை அந்த தவறு மீள ஏற்படாமலிருக்க ஆவன செய்யவேண்டுமென்றால் அவன் விதிக்கொள்கையை மறுத்தாக வேண்டும். அல்லா எழுதிவைத்தபடி தான் தமக்கு நேர்ந்திருக்கிறது என ஒருவன் ஆறுதல் கொள்வானாயின், அவனிடம் தேடல் இருக்காது. தேடலிருக்கிற, வெற்றிகரமாக செயல்பட விரும்புகிற, எதிர்வினையாற்ற ஆவலுருகிற‌ எவரும் (முஸ்லீம்கள் உட்பட) சாராம்சத்தில் விதிக்கொள்கையை மறுக்கவே செய்கின்றனர், நம்பிக்கையளவிலேயே அவர்களிடம் விதிக்கொள்கை இருக்கிறது. இதை உணர்ந்துதான் இஸ்லாமும்; விதி இருக்கிறதா? எனும் கேள்விக்கு ஆம் என பதிலளிக்கிறது, அதேநேரம் பின்பாதியை நம்பு முன்பாதியை நம்பாதே என இரட்டை நிலையை மேற்கொள்கிறது.

 

\\விதி உள்ளதெனில் நான் நல்லவனாக,கெட்டவனாக நடப்பதற்கு நான் எவ்வாறு பொறுப்பேற்பது என்ற கேள்வியும் விதி இல்லையெனில் நான் என்ன செய்வேன் என்று தெரியாதவன் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழும்// கடவுளை நம்புபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை இது. கடவுளின் இருப்பையே அசைத்துப்பார்க்கிற இந்தக் கேள்விக்கு விடைகூற முடியாது என்பதாலேயே முகம்மது இதுபற்றி தர்க்கிக்காதீர்கள் என அறிவுறுத்தியிருக்கிறார். அங்கும் இல்லாத, இங்கும் இல்லாத இரட்டை நிலையை மேற்கொண்டிருக்கிறார். இஸ்லாத்தை நம்புகிறவர்களுக்கு விதிக்கொள்கை போதுமானது. ஆனால் அதை எதிர்த்து விமர்சனம் செய்பவர்களுக்கும் அந்த நம்பிக்கையையே பதிலாக கூறுவீர்களென்றால், அது எல்லாருக்கும் பொதுவான மனிதனின் தோல்வியாக இருக்காது. மதத்தை கடவுளை நம்புகிறவர்களின் தோல்வியாக இருக்கும். முரண்பாடான இருவேறு நிலையை புரிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு இல்லை என்றெல்லாம் நீட்டிமுழக்க முடியாது.

 

பொதுவாக இந்த இடர்பாட்டை விதிக்கொள்கை என கடந்து செல்வதும், சரியானதாக இருக்காது. விதிக்கொள்கை என்பது மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கக் கூடியது. மனிதன் மூளை எனும் பொருளைக்கொண்டு சிந்தித்து செயல்படுகிறான் என்பது அதன் எல்லாவித கூறுகளாலும் நிரூபிக்கப்பட்டிருக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மூளையின் செயல்பாடு, அதன் வேதியியல் மாற்றங்கள், இருமடி ரீதியான அதன் நினைவுத்திறன் என அனைத்தும் ஐயந்திரிபற விளக்கப்பட்டிருக்கிறது. கேள்வி எளிமையானது. நிரூபிக்கப்பட்டிருக்கும் மனிதன் சிந்திக்கிறான் என்பதை ஏற்கிறீர்களா? அதை மறுக்கும் விதிக்கொள்கையை ஏற்கிறீர்களா? என்பதுதான். இரண்டையும் ஏற்கிறோம் என்றெல்லாம் பசப்ப முடியாது. ஏனென்றால் ஒன்றை மற்றொன்று மறுக்கக்கூடியது.

 

இரண்டாவது இடர்பாடு, தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் படைப்புகள் எனும் நிலையில், எதனையும் படைத்திருக்காதபோது முதல் படைப்பை அல்லா எங்கிருந்து செய்திருக்க முடியும்? என்பது. நண்பர் இதை அல்லாவிடம் கேள்வியாக கேட்கும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை என எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருக்கிறார். அல்லாவின் இருப்பை ஏற்று இந்தக்கேள்வியை அல்லாவிடம் நாம் கேட்கவில்லை. மாறாக அல்லாவின் இருப்பை மறுக்கும் விதமாக மனிதர்களிடம் கேட்கிறோம். அல்லா எங்கிருந்தான் என இடம்சார்ந்த கேள்வியாக மட்டும் இதை கேட்கவில்லை, முழுமையான சாத்தியப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கேள்வி கேட்க்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் இடர்பாடுகள் குறித்த பதிவில் தெளிவாகவே விளக்கப்பட்டிருக்கிறது. \\எங்கு இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வியின் மையம். மாறாக நம்பர் 24 படைத்தோன் வீதி, நியூரோபிக்டஸ், ஆண்ரோமீடா. என முகவரி கேட்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம்// ஆனால் நண்பரோ வெறும் இடம்சார்ந்து முகவரி கேட்பதாக நினைத்துக்கொண்டே பதில் கூறியிருக்கிறார்.

 

அல்லா என்பது பொருளா? கருத்தா? பொருள் என்றால் அது இடம் சார்ந்தே இருந்தாக வேண்டும். கருத்து என்றால் ஒரு பொருளைச் சாராமல் கருத்து மட்டும் தனித்து உலவமுடியாது. இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டு வேறொன்று என்றால் அது என்ன? எப்படி? என விளக்கும் கடமை நண்பருக்கு உள்ளது. மனிதனைப்போல் அல்லாவை அற்பமாக நினைக்கிறீர்களா? என நண்பர் விசனப்பட்டு கேள்வி எழுப்புகிறார். நண்பர் மறந்துவிட வேண்டாம், அல்லா என்ற ஒன்று இல்லை என்ற நிலையிலிருந்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அல்லாவின் இருப்பே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் \\அவன் எப்படியும் இருக்க முடியும். எந்தப் பொருளீன் துனையும் இல்லாமல் இருக்க முடியும்// என தன் நம்பிக்கையை பதிலாக கூறுகிறார் நண்பர். உங்கள் நம்பிக்கையே போதுமானதாக இருக்கமுடியும் என்றால், இஸ்லாம் கற்பனை எனும் இந்த கட்டுரைத் தொடரே அவசியமில்லை.

 

இரண்டாவது இடர்பாட்டை எளிமையாக ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம், ஒருவர் ஒரு பேனாவை உருவாக்குகிறார் எனக் கொள்வோம். ஒருவர் அந்த பேனாவுக்குள் உட்கார்ந்துகொண்டு அந்த பேனாவை உருவாக்க முடியுமா? எந்த மூலப்பொருளுமின்றி ‘குன்’ ஆகுக என்று கூறியே அந்தப் பேனாவை உருவாக்கும் வல்லமை அந்த ஒருவருக்கு இருக்கிறது என்றே கொண்டாலும், பேனாவுக்குள் இருந்துகொண்டே பேனாவை உருவாக்க முடியுமா? இது கட்டுரையில் தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளது, \\ஒரு பொருளைப் படைப்பதற்கான முக்கியமான நிபந்தனையே படைப்பவன் படைக்கப்படும் பொருளுக்கு வெளியில் இருந்தாக வேண்டும் என்பது// என்று. தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் தன்னுடைய படைப்பு என்று எந்த ஆற்றலாலும் கூறமுடியாது. தன்னை மட்டுமே சுயம்பு என கூறிக்கொள்ளும் ஒன்று இடமில்லாத ஒரு இடத்தில் எப்படி இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வி. அதை அறிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு இல்லை என இதை ஒடுக்கிக் கொள்ளமுடியாது. ஏனென்றால், இடம்சார்ந்து மட்டுமே இந்தக் கேள்வி கேட்க்கப்படவில்லை. அப்படி இருக்கும் சாத்தியமில்லை என்பதே அந்தக் கேள்வியில் உள்ளார்ந்து இருப்பது.

 

இதை விளக்க நண்பர் அறிவியலையும் துணைக்கழைத்திருக்கிறார். பெருவெடிப்புக்கு முன்னர் என்ன நிலை இருந்தது என்பதை மனிதன் அறிந்து கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். தவறு. பெருவெடிப்புக்கு முந்திய கணம் வரை மனிதன் கண்டறிந்திருக்கிறான். அதற்கு முன்னர் என்ன? என்பது இன்றைய நிலையில் மனிதனுக்கு தெரியாது அவ்வளவுதான். நாளை கண்டறியப்படலாம். இதுதான் அறிவியலின் நிலை. ஆனால் அல்லாவின் நிலை இப்படியல்ல, என்றும் அதற்கு விடைகாண முடியாது என்பதே இஸ்லாத்தின் நிலை. அல்லது, முதல்படைப்பை அல்லா எப்படி படைத்தான் என்பது இன்று தெரியவில்லை, நாளை தெரிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது என்பதை நண்பர் விளக்கட்டும். அப்போது இந்தக்கேள்வியை திரும்பப்பெற்றுக்கொண்டு தெரிந்து கொள்ளும் அந்த நாளுக்காக காத்திருக்கலாம். இன்னொன்றையும் நண்பர் தெரிந்துகொள்ள வேண்டும் பெருவெடிப்புக் கொள்கை என்பது அறிவியல் யூகம் தான், அறுதியான உண்மையல்ல. நாளை பெருவெடிப்புக் கொள்கையேகூட காணாமல் போகலாம்.

 

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

26 thoughts on “செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪

 1. நண்பர் இஹ்சாஸின் சிறப்பான கேள்விகளால் தோழரின் அறிவுப்பூர்வமான விளக்கத்தை இப்பதிவில் காணமுடிகிறது.கேள்விகள் கேட்டதால்தான் பகுத்தறிவை நாம் பெற்றோம்.இத்தொடர் ஓர் நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறது. தொடரட்டும் வாழ்த்துக்கள்.

 2. \\ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும்//
  கருணாநிதி வரும் தேர்தலில் போட்டியிடமாட்டார்.பிரச்சாரம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செய்வார்.ஜெயலலிதா போட்டியிடுவார்.அவருடன் வைக்கோ கூட்டணி வைப்பார் அசல் கம்யுனிஸ்ட் களான வலதும் இடதும் அதிமுகா வுடன் கூட்டணி வைக்கும் என்று நான் உங்களது தளத்தில் எழுதிவைக்கிறேன் அவர்களும் அதன்படியே நடந்துவிட்டால் அவர்களது சிந்தனையை நான் வரையறுத்தேன்.என்னுடைய கூற்றின்படியே அவர்கள் நடந்தார்கள் என்று அர்த்தமா?
  சாதாரண நம்மால் இவர்கள் இப்படித்தான் செயல்படுவார்கள் என்று கூற முடியும் .அவ்வாறே உலகையும் மக்களையும் படைத்த இறைவனால் ஒவ்வொருவரும் எப்படி சிந்திப்பார்கள் ,எங்ஙனம் செயல்படுவார்கள் என்று எழுதிவைக்கமுடியும்.
  நாம் எழுதிவைப்பதில் தவறுகள் வந்தாலும் இறைவனின் யூகத்தில் தவறுகள் வரவேசெய்யாது.

 3. //தனிப்பட்ட ஒருவனுக்கு இழப்பு என்பது தனியுடமையிலிருந்து எழுகிறது, வணிகர்களின் நலைனைப் பாதுகாக்க எழுந்த ஒரு கொள்கையால் இப்படித்தான் சிந்தித்திருக்க முடியும். தனக்கு ஏற்பட்ட இழப்பு எதனால் ஏற்பட்டது///
  செங்கொடி இப்படித்தான் சிந்திப்பார் என்றும் கூட இறைவன் எழுதி வைத்திருப்பான்.அடுத்து தனது கட்டுரையில் 16 ;48 பற்றித்தான் எழுதுவார் என்றெல்லாம் இறைவன் குறித்திருப்பான்
  .
  கொஞ்ச மனசாட்சியுடன் எழுதுங்கள்,பதுக்கலுக்கு எதிராக ஆன்லைன் பிசினஸ்க்கு எதிராக,எடை மோசடி,கூடுதல் லாபம் ,பொருளின் தன்மை மாற்றாமல் வணிகம் செய்ய சொன்னதோடு ,தொழிலாளியின் வியர்வை உலருமுன் கூலி கொடுத்தல் ,சமையற்காரனை உடன் வைத்து சாப்பிடவோ அல்லது அவனுக்கும் அளித்து சாப்பிட உணவளித்தோ ,,,,'”என்றெல்லாம் சிந்தித்த ஒரு மாமனிதர் பற்றி வாயில் வந்ததையெல்லாம் எழுத அச்ச்சப்படுங்கள் .பொதுவுடைமை வாதிகளின் கற்பனை கொள்கையை விட தொழிலாளரின் நலனில் அக்கறை உள்ள உயர்கொள்கையாளர். உங்கள் கம்யுனிஸ்ட் களில் ஒருகாலத்தில் தொழிலாளியாக இருந்தவர்கள் இன்று தொழில் அதிபதியாகி இருக்கலாம்,அவர்களில் ஒரு நபராவது பழைய சிந்தனையுடன் செயல் படுவதாக எடுத்து காட்ட முடியுமா?தனக்கென்று ஒரு பைசாவையும் வைத்து செல்லாத லட்சிய சிந்தனையாளர்

 4. இந்தப் பதிவு இஸ்லாமுக்கு மட்டுமல்ல, விதியை (இறைவன் அமைத்ததாக) நம்பும் மதங்கள் அனைத்திற்கும் எதிரான கேள்விகளாக உள்ளன.

  சிறப்பான கருத்தாய்வுகள்.

 5. ////அல்லாவின் நிலை இப்படியல்ல, என்றும் அதற்கு விடைகாண முடியாது என்பதே இஸ்லாத்தின் நிலை. அல்லது, முதல்படைப்பை அல்லா எப்படி படைத்தான் என்பது இன்று தெரியவில்லை, நாளை தெரிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது என்பதை நண்பர் விளக்கட்டும்.////
  குர்ஆனின் 3 ;7 வசனம் கூறுவதை பாருங்கள் , [முஹம்மதே ]அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான்.அதில் உறுதி செய்யப்பட வசனங்காலும் உள்ளன.அவையே இவேதத்தின் தாய்.இரு கருத்தை தருகின்ற மற்ற சில வசனங்களும் உள்ளன.உள்ளங்களில் கோளாறு இருப்போர்,குழப்பத்தை நாடியும் ,அதற்கேற்ப விளக்கத்தை தேடியும் அதில் இரு கருத்துடையவற்றை பின்பற்றுகின்றனர். அல்லாவையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர [மற்றவர்கள்] அறியமாட்டார்கள்,
  அவர்கள் ,இதை நம்பினோம் ;அனைத்தும் எங்கள்படைத்தான் இறைவனிடமிருந்து வந்தவையே எனக் கூறுவார்கள்.அறிவுடையப்வர் [மற்றவர்கள் ] இந்தி சிந்திப்பதில்லை.
  குர்ஆனில் இரு கருத்தை தரும் வசனங்களும் உள்ளன.முன் எப்படி “அலக்” என்ற வார்த்தைக்கு இரு பொருள்கள் இருந்து பின் அக்காலத்தில் ரத்தக்கட்டியாகவும் இப்போது ஒட்டி உறிஞ்சும் ஒன்றாகவும் அர்த்தப்படுத்துவது போல் இறைவன் எப்படி படைத்தான் என்பது பற்றியும்
  இப்போது கிடைக்கும் அர்த்தங்கள் தவிர வருங்கால இளைஞ்சர்களுக்கு கிடைக்க உள்ள வேறு அர்த்தகளால் அல்லாஹ் எப்படி
  படைத்தான்என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 6. நண்பர் இஹ்சாஸின் பதிவில் அவர் மறுப்பாக கூறுவது.
  1. //அடுத்து, அர்ஷ் இப்பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறது என கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு யாரும் கருதுவதில்லை!. அவ்வாறு கருதினால் அது தவறு. அர்ஷ் இப்பிரபஞ்சத்திற்கு மேல் இருப்பதாக நம்புவதே முஸ்லிம்களின் நம்பிக்கை!.//

  கருதுவது,நம்புவதே நம்பிக்கை இதற்கெல்லாம் ஏதாவது ஒரு ஆதாரம் வேண்டுமா இல்லையா?

  அ)குரானில் அர்ஷ் பற்றி இவ்விதமாக கூறப் பட்டு உள்ளதா?
  __‍
  57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் – அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
  __

  அர்ஷ் என்பது அரியாசனம்,சிம்மாசனம் என்று தமிழில் பொருள் கொள்ளப் படுகிறது.

  இதே போல்7.54,10.3,13.2,20.5,25.59,32.4,57.4 வசனக்ங்ளிலும் வானம்,பூமியை 6 நாட்களில் படைத்து பின்(னர்)அர்ஷின் மீது அமைந்தான்.என்றே கூறுகின்றன.

  அர்ஷின் மேலிருந்து வானம் பூமியை படைத்தான் என்று ஒரு இடத்திலாவது வந்து இருந்தால் இஹ்சாஸ் சொல்வது மிக சரி.

  தமிழ் மொழி பெயர்ப்புகளில்,

  அர்ஷின் மீது அமைந்தார்(அமர்ந்தார்) என்றே கூறப்படுகிற‌து.அப்படியெனில்.எங்கு அமர்ந்தார் என்ற கேள்வி வருகிறது..வானம் பூமி படைத்து பின் அர்ஷின் மீது அம்ர்ந்தான் என்றால் அர்ஷையும் படைத்தான் என்பதில் முரண்பாடு இல்லையே.

  பிறகு ஏன் அர்ஷ் வானம் பூமிக்கு அப்பால் இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.?
  _____________

  ஆ) இந்த வாக்கியத்திற்கு ஆங்கில மொழி பெயர்ப்புகளை பார்த்தால் ‘தன் அரசாட்சியை ஏற்படுத்தினான்’ என்றே பொருள்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.

  quran 57.4

  Sahih International: It is He who created the heavens and earth in six days and then established Himself above the Throne.

  Pickthall: He it is Who created the heavens and the earth in six Days; then He mounted the Throne.

  Yusuf Ali: He it is Who created the heavens and the earth in Six Days, and is moreover firmly established on the Throne (of Authority).

  Shakir: He it is who created the heavens and the earth in six periods, and He is firm in power;

  Muhammad Sarwar: It is He who created the heavens and the earth in six days and then established His Dominion over the Throne.

  Mohsin Khan: He it is Who created the heavens and the earth in six Days and then Istawa (rose over) the Throne (in a manner that suits His Majesty).

  Arberry: It is He that created the heavens and the earth in six days then seated Himself upon the Throne.

  அர்பெர்ரி மட்டுமெ சிம்மாசனத்தின் மீது அமர்ந்ததாக கூறுகிறார்.மற்ற அனைவரும் அர‌சாட்சியை ஏற்படுத்துவதாக் கூறுகிறார்கள்.
  __________
  ஒரு அரசர் தனது 25வது வய்தில் சிம்மாசன‌ம் ஏறினார் என்றால் என்ன அர்த்தம்?

  மறுப்பு கூட சரியாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள் அதையும் நாமே செய்ய வேண்டியுள்ளது.
  ____________
  என்ன கொடுமை சார் இது.

 7. என்ன மறுப்பு இது.
  1.விதியை எல்லா மதத்தினரும் நம்புகிறர்ர்கள்.நம்புவதே நம்பிக்கை என்றால்.மற்ற மதங்கள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்குமோ,இஸ்லமும் அதே அளவுதான் உண்மையாக இருக்க முடியும்.

  2.அவர் கூறும் கருத்துகளுக்கு குரானில் அல்லது ஹதிதுகளில் இருந்து ஆதாரம் காட்டவில்லை.

  3.இஹ்சாஸ் கூறியது அல்லாவின் அர்ஸ்(சிம்மாசனம்) பிரபஞ்சதிற்கு வெளியேஎன்று.இன்னும் அவர் அர்ஸ் என்றால் அரியனை .சிம்மாசனம் என்று கூறவேவில்லை.

 8. சகோதரர் சங்கர்,

  உங்களது எனது மறுப்பு சம்பட்ந்தப்பட்ட கேள்வியை என்னிடமே நேரடியாக எனது வளைத்தளத்தில் சுட்டிக்காட்டலாம்! அதை விட்டு விட்டு இங்கே வழா வழா கொளா கொளா என்பது உங்கள் கோழைத்தனம்! என்னிடம் நேரடியாக கேளுங்கள் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிரேன்!

 9. ஹதிதுகள் அர்ஷ் பற்றி கூறுவது என்ன?
  3191. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார்.
  நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று கூறினார்கள். அவர்கள், ‘எங்களுக்கு நற்செய்தி அளித்தீர்கள். அவ்வாறே எங்களுக்கும் (தருமம்) கொடுக்கவும் செய்யுங்கள்” என்று (இரண்டு முறை) கூறினார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தார்கள். (அவர்களிடமும்) நபி(ஸல்) அவர்கள், ‘யமன் வாசிகளே! (என்னுடைய) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏற்றுக் கொண்டோம்” என்று பதில் கூறினார். பிறகு, ‘நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, ‘ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப் போய்விட்டது” என்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்று விட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! ‘நான் அதை அப்படியேவிட்டு விட்டிருந்தால் நன்றாயிருக்குமே (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி(ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)’ என்று நான் ஆசைப்பட்டேன்.
  Volume :3 Book :59

  5443. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
  ….
  (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அரீஷ்’ (பந்தல்) மற்றும் ‘அர்ஷ்’ ஆகிய சொற்களுக்குக் ‘கட்டடம்’ என்று பொருள். ‘(இச்சொல்லில் இருந்து பிறந்த) ‘மஅரூஷாத்’ எனும் சொல்லுக்குத் திராட்சை முதலியவற்றின் பந்தல் என்று பொருள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
  Volume :6 Book :70

  7411. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
  அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. வாரி வழங்குவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. இரவும் பகலும் (மழை மேகத்தைப் போல் அது தன் அருள மழையைப் பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானங்களையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் வழங்கியவை அவனுடைய கரத்திலுள்ள (செல்வத்)தை வற்றச் செய்து விடவில்லை என்பதைப் பார்த்தீர்களா? வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு (முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்), நீரின் மீது இருந்தது. அவனுடைய இன்னொரு கரத்தில் தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; அவனே உயர்த்துகிறான்.
  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
  Volume :7 Book :97
  ________

  அர்ஷ் என்னும் வார்த்தைக்கு கட்டடம் என்னும் பொருள் இருந்தது என்றால் அரியாசனம் என்று மாற்றியது யார்?

 10. கடவுள் தான் மனிதனை படைத்தான் என்றால்,பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் அவனது விதிப்படி தான் பிறக்கின்றது என்பதும் உண்மையானால், இரு தலைகள்,இரு உடல்கள் ஒட்டியும்,நான்கு கைகால்கள் சேர்ந்தும் ஒழுங்கீனமாக பிறக்க வைப்பதும் அவன் விதிப்படிதான் பிறக்கின்றது என்றாகிறது. ஆனால் கடவுள் படைத்த(?)ஒழுங்கற்ற இப்படைப்பை ஒழுங்கு படுத்தி இவ்வுலகில் வாழவைப்பது என்னவோ மருத்துவர்களே! எனவே விதியை மதியால் வெல்ல முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இருந்தும் எல்லாம் விதிப்படிதான் அதாவது அவனது நாட்டப்படிதான் நடைபெருகிறது என்ற ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பயனை அடைந்துகொண்டிருக்கிறார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்?????

 11. அன்புள்ள இஹ்சாஸ்
  பினூட்டங்கள் அளிப்பது பதில் அளிக்கவே.
  1.அர்ஸ் என்பது என்ன?

  2.வானங்கள்,பூமி படைக்கப் படுவத்ற்கு நீரில் மிதந்தது என்றால் இதற்கு குரானில் ஆதாரம் உண்டா?

  3.வானம் பூமிக்கு முன்பு அதாவது பெருவெடிப்புக்கு முன்பே நீரும் அதன் மீது அர்ஸ் இருந்தது என்று ஹதிதுகள் கூறுகின்றன

  4.அ)பெரு வெடிப்பு அறிவியலின் ப்டி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்.
  .

  ஆ0பூமி தோன்றியது 5 பில்லிய்ன் ஆண்டுகளுக்கு முன்.

  ..
  மனித இனம் தோன்றியது 2இலட்சம் ஆண்டுகளுக்கு முன்

  குரானில் இதற்கு கொஞ்சமாவது ஆதாரம் உண்டா?
  ______

  இரண்டு வசன‌ங்கள்(2:29,20:4 ) பூமி பிறகு வானம் என்று குறிப்பிடுகின்றன.

  2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்

  20:4. பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.

  இதுஒன்றும் பிரச்சினை இல்லை ஏனெனில் இரண்டு இடத்தில்தான் பூமி பின் வானம் என்று கூறுகிறார்கள். ஆனால் 9 இடங்களில் வானம் பிறகு பூமி என்று குரான் கூறுகிறது 9>2 ஆகவே குரான் சரியான‌ இறைவனின் வார்த்தையாகும்.1) 7:54,2)10:3,3) 11:7,4) 25:59,5) 32:4,6) 50:38,7) 57:4,8)79:27_33,9) 91: 5_ 10)

 12. குரான்,ஹதிதுகள் படைப்பியல் பற்றி கூறும் கருத்துகள் பற்றி பார்ப்போம்.

  முதல் கருத்து
  _____________________
  9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  ________
  இந்த வசனத்தில் இருந்து தெரிவது.

  1.வானமும் பூமியும் ஒரே நாளில் படைக்கப் பட்டது.
  2. படைத்த நாளில் இருந்தே பூமி சூரியனை சுற்றி வருகிறது.
  3. சூரியனை சுற்றி வர 12 மாதங்கள்(365 நாட்கள்) ஆகிறது.

  சரியா
  _________
  இரண்டாவது கருத்து
  ___________________________

  21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
  21:31. இன்னும்: இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.

  21:32. இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்
  _____________
  .
  இந்த 21.30ஐ பெரு வெடிப்பு கொள்கைக்கு ஆதாரமாக மத வாதிகள் காட்டுவர்.
  வானங்கள் என்பதௌ பூமி நீங்கலாக எடுத்து கொண்டால்,இரண்டின் அளவையும் ஒப்பிட்டு பார்த்தால் என்ன தோன்றும்.

  பூமி பிரபஞ்சத்தின் 0.00001% அளவே இருக்கும்.இதனை இணைதல் பிரிதல் என்பது சரியா?

  உயிருள்ள ப்வ்வொன்றையும்(மனிதன் உட்பட) தண்ணிரில் இருந்து படைக்கப் பட்டன என்றால் குரான் பரிணாம வளர்ச்சி பற்றியும் பேசுகிறது.

  இதை எந்த காஃபிர்கள்,எப்படி எபோது பார்த்தார்கள்?

  பூமி தன் அச்சில் இருந்தெ 23.5 டிகிரி சாய்ந்துதான் உள்ளது.இது பாவம் கடவுளுக்கு தெரியலவில்லை. மலையை வைத்து பூமியை நேராக்கினார் இறைவன் என்கிறது குரான்.

  வானம் என்பது பூமிக்கு கூரை என்கிறது.

  சரியா?
  ______

 13. இது நண்பர் ரஃபிக்காக‌
  _________________________

  3849. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.
  அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.
  Volume :4 Book :63

  விபசாரம் புரிந்த குரங்கு தண்டிக்கப் படுகிறது.ஆனால் விலங்குகளில் ஓரின புணர்சி உண்டு.யார் தவறு?
  http://en.wikipedia.org/wiki/Homosexual_behavior_in_animals

  http://valpaiyan.blogspot.com/2010/07/blog-post_09.html

 14. சகோதரர் சங்கர்,
  மீண்டும் உங்கள் இயலாமையை காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்! உங்களுக்கு இஸ்லாம் சம்பந்தமாக எழும் ஐயங்களுக்கு பதிலளிக்க காத்திருப்பவர்களிடம் கேட்பதுதான் முறை! அதை விடுத்து இங்கு வந்து ஜால்ரா அடிப்பதுதான் உங்கள் பகுத்தறிவும் கற்றுத்தரும் நேர்மையா? எனது மறுப்பில் உங்களுக்கு சந்தேகமிருந்தால் அதை என்னிடமே நேரடியாக கேட்கலாம்.! இங்கு வந்து எழுதுவதால் உங்களுக்கு பதில் வரப்போவது கிடையாது! உங்கள் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் எனது மறுப்பின் தவறுகளை எனது வலைப்பதிபில் சுட்டிக்காட்டுவதில் என்ன தயக்கம்? நான் உங்களை அறிவு நாணயம் அற்றவராகவே கருதுகிறேன்.

 15. //உங்கள் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் எனது மறுப்பின் தவறுகளை எனது வலைப்பதிபில் சுட்டிக்காட்டுவதில் என்ன தயக்கம்? நான் உங்களை அறிவு நாணயம் அற்றவராகவே கருதுகிறேன்//
  நண்பர் இஹ்சாஸ்

  1.எனக்கு எந்த ஐயமும் கிடையாது.
  2.என் தேடலில் நான் அறிந்த விஷயத்தை சொல்கிறேன்.
  3.தோழரின் பதிவுகளில் கடந்த ஒரு வருடமாக பின்னூட்டமிடுகிறேன்.

  நான் சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ள‌வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
  __________

  நான் சொல்வது என்ன?

  அனைத்து மதங்களுமே நம்பிக்கை என்ற ஒரே புள்ளியை மட்டுமே ஆதாரமாக கொண்டு இயங்குகின்றனர்.

  மத புத்தகங்களில் கூறப்படும் சம்பவங்கள்,மனிதர்கள்,அத்தாட்சிகள் போன்றவை ஆதாரம் அற்றவை.

  உங்கள் பதிவில் அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் இடுகிறேன்.

  இத்ற்கு உங்கள் பதிவில் பதில் அளியுங்கள்.

  அ)இஸ்லாமின் விதி பற்றிய கொள்கை மற்ற மதங்களின் விதி கொள்கையைவிட எப்படி வேறு பட்டது?

  உங்கள் சொந்த கருத்தை கூறாமல் குரான் மற்றும் ஹதிதுகளில் இருந்தே வரையறுக்க வேண்டும்.

  பதிவு இடுங்கள் பார்கிறேன்.அவசியம் என்றால் அங்கும் ,இங்கும் மறுப்பு
  பின்னூட்டம் இடுகிறேன்.

 16. //நான் உங்களை அறிவு நாணயம் அற்றவராகவே கருதுகிறேன்//
  எனக்கு இருக்கிறது.

  இதே பின்னூட்டத்தை இஹ்சாஸ் அவர்களின் தள்த்திலும் இட்டிருந்தேன் ஆனால் வெளியிடவில்லை.இது ஏற்கெனவே ஒருமுறையும் நடந்தது.

  அதனால் இனி பின்னூட்டம் இடப் போவதில்லை.தோழர் பெரும்பாலும் உடன்பாடில்லாத கருத்துகளை கூட வெளியிடுகிறார்.

  ஆனால் இந்த பெருந்தன்மை எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது.
  ____________

  விதியை பற்றிய விவரம் இஸ்லாமிய மத நூல்களில் குறிப்பிட படவில்லை.

  மற்ற மதங்களும் குறிப்பிடவில்லை.

  மனிதனால் சுய‌மாக சிந்திக்க,செயல்பட முடியும் என்ற பட்சத்தில் கடவுள்(இருந்தால்) எந்த அளவிற்கு மனித வாழ்வில் பங்காற்றுகிறார் என்பது மதவாதிகளால் சொல்ல முடியாது.

  மத புத்தகம் தூதர்கள் மூலம் அனுப்புவதுதான் கடவுளின் வேலையா?

  அப்புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே நம்பி வாழ்வதுதான் வாழ்க்க்கையா?

  நம்புவர்களுக்கு சொர்க்கம் அளிக்க கட‌வளுக்கு சக்தி இருந்தால் கொடுக்கட்டும்.ஆட்சேபனை இல்லை. இப்போதைய உலகில் எதற்கும் ஒத்துவராத கொள்கைகளை,சட்டங்களை அனவரையும் பின் பற்ற சொல்லி மதவாதிகள் மூலமாக வற்புறுத்த வேண்டும்?
  ________________

  எந்த மத்மனாலும்,கொள்கையானாலும் இபோதைய மனித நாகரிகத்திற்கு ஏறற மாதிரி இருந்தால் மட்டுமே பின்பற்ற‌ முடியும். அப்படிபட்ட செயல்களை, கொள்கைளை விமர்சனம் செய்வதை என் கடமையாக நினைக்கிறேன்.

 17. சங்கர் , ////எந்த மத்மனாலும்,கொள்கையானாலும் இபோதைய மனித நாகரிகத்திற்கு ஏறற மாதிரி இருந்தால் மட்டுமே பின்பற்ற‌ முடியும். அப்படிபட்ட செயல்களை, கொள்கைளை விமர்சனம் செய்வதை என் கடமையாக நினைக்கிறேன்////
  சங்கர் ,இஸ்லாத்தின் கொள்கைகள் இப்போதைய மனித நாகரிகத்திற்கு ஏற்ற மாதிரிதான் உள்ளது அதை பின்பற்ற வேண்டியதுதானே .

 18. நண்பர் இப்ராஹிம்,
  அப்படி நினைத்துக் கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.
  குரானில் இந்த விஷயங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளன. இவையும் நாகரிகமான செயலாக நீங்கள் கருதுவது போலவே சவுதியில் ஒரு முல்லா(சாதாரண ஆள் இல்லை) அடிமை முறைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.முடிந்தால் இவரை சென்று பாருங்கள்.நிறைய படித்தவர்.அருமையாக வழி காட்டுவார்.

  1. அடிமை முறை.(1962வரை சவுதியில் இருந்தது)

  http://www.wnd.com/?pageId=21700

  2.பல தார மணம்.

  3.ஜிஸ்யா
  ஜிஸ்யா 1920வரை ஆட்டோமான் பேரரசில் நடை முறையில் இருந்தது.

 19. சகோதரர், சங்கர்,

  //இதே பின்னூட்டத்தை இஹ்சாஸ் அவர்களின் தள்த்திலும் இட்டிருந்தேன் ஆனால் வெளியிடவில்லை.இது ஏற்கெனவே ஒருமுறையும் நடந்தது.
  அதனால் இனி பின்னூட்டம் இடப் போவதில்லை.தோழர் பெரும்பாலும் உடன்பாடில்லாத கருத்துகளை கூட வெளியிடுகிறார்.
  ஆனால் இந்த பெருந்தன்மை எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது.//

  உங்கள் கமண்ட் வெளியிடப்பட்டுள்ளது. நான் எதையும் நிறுத்துவது கிடையாது தானாகவே டாது பதிவாகிவிடும்!
  பார்க்க: http://ihsasonline.blogspot.com/2011/01/03.html#comments

  எங்கேயோ பதிந்து விட்டு எங்கொயா பார்த்தால் எப்படி வரும்! தேவையில்லாமல் குற்றம் சாட்ட வேண்டாம்!

 20. சங்கர் ,அடிமை கண்டிப்பாக வைத்துக் கொள்ளவேண்டும் .ஒரு மனைவியுடன் வாழ்வது பாவம் பலதார மனம் செய்தவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் என்று இஸ்லாம் வலியுறுத்துவது போல் உள்ளதுஉங்களது கூற்று.,நபி[ஸல்]அவர்கள் அவர்களின் வற்புறுத்தலில் நபிதோழர்கள் அடிமைகளை வாங்கி விடுதலை செய்த நிகழ்வுகளை பார்க்கமுடிகிறது.அவர்கள் தாங்கள் கடைசி காலத்தில் அடிமைகள் வைத்திருக்க வில்லை. மேலும் நபி[ஸல்] காலத்தில் அடிமைகள் என்றால் இப்போதும் பல இடங்களில் உள்ள கொத்தடிமை போல் இல்லாமல் அவர்களுக்கு பல உரிமைகள் கொடுக்கப் பட்டிருந்தன
  மனைவியை இழந்த முதியவர்கள் இயலாத காலத்தில் தங்களின் இயற்க்கை தேவைகளை கவனித்துக்கொள்ள பெண்கள் தேவைப்படின் திருமணம் செய்து கொள்ள முடியுமா? இந்த சமயங்களில் வயதான பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வதைத்தான் இந்த அடிமை முறையில் கடைபிடிக்கமுடியும்
  சங்கர் அவசியம் ஏற்படின் விபச்சாரம் செய்து பல பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் வாழவும் ,பெண் மனைவி என்ற தகுதியுடன் அதனது குழந்தைகளுக்கும் சம உரிமைகள் பெறுவதற்குமே அங்கீகரிக்கப்பட்டது.
  ஜிஸ்யா வரி முஸ்லிம்களுக்கு சக்காத் வரி வசூலிக்கப்படுவதால் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு ஜிஸ்யா .இதில் என்ன குறை காணுகிறீர்கள்?.

 21. இப்ராஹிம்
  உங்களின் மதம் மீதான பார்வை எல்லாருக்கும் இருப்பது இல்லை.மத கருத்துகளை ஒவ்வொருவரும் அவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி பயன் படுத்துகிறார்கள்.அந்த‌ சவுதி இஸ்லாமிய அறிஞர்(ஷரியாவில் முனைவர் பட்டம் பெற்றவர்)இப்படி கூற முடிகிறது என்றால்,மத புத்தகங்களின் படி அவர் கூறுவது தவ‌று என்று நிரூபிக்க முடியாது.

  தமிழ் இஸ்லாமியர்களில் நான் இப்போதைய காலகட்டத்தில் நான்கு மனைவி உடையவரை பார்த்தது இல்லை.99% ஒரு மனைவி உடையவர்கள்தான்.சிலர் இரு மனைவி அதுவும் ஏதாவது சூழ்நிலை காரணமாக அவ்வளவுதான்.இது தமிழ் பிற மத்த்தினரிடம் கூட இதே நிலை காணப்படுகிறது.

  நாம் வாழும் இடல்,சூழ்நிலை காரண்மாகவே நாம் இப்படி இருக்கிறோம்,இதில் மதத்தின் பங்கு ஒன்றும் இல்லை.

  நீங்கள் நல்லவரக இருக்கும் பட்சத்தில்மத கருத்துகளை நல்ல விதமாக விளங்குவீர்கள்.நாத்திகம்,பிற மதங்கள் கூட அபப்டித்தான்.
  ஒவ்வொரு கொள்கையிலும் பலவிதமான அடிபடை கொள்கை வேறுபாடுகள்,செயல் படுதுவதில் உள்ள காரிய சிக்கல்கள்,குறிப்பிட்ட காலகட்டத்திற்கு எது சரி,எது தவறு என்பதிலேயே குழப்பத்தை ஏற்படுத்தும்.

  மறுமை வாழ்வு உண்டு என்று நம்புபவர்களுக்கு மதம் அவசியம்.

  (மத) கருத்துகளை விளங்குவதிலும்,செயல் படுத்துவதிலும் ஒவ்வொருவரும்,வெவ்வேறு விதமாக்வே நடக்கிறார்கள் என்று நான் எண்ணுகிறேன்.

 22. சங்கர் ////நாம் வாழும் இடல்,சூழ்நிலை காரண்மாகவே நாம் இப்படி இருக்கிறோம்,இதில் மதத்தின் பங்கு ஒன்றும் இல்லை////
  நம்மிடம் பணம் இல்லாததால் நாம் தொழிலாளி வர்க்கத்தை ஆதரிக்கிறோம் .நம்மிடம் ஆயிரம் கோடி இருந்தால் நாம் நடத்திக் கொண்டிருக்கும் தொழிற்சாலையில் தொளிலாளிகளுக்கு லாபத்தில் பங்கு கொடுப்போமா?

  பல தார மனம் ஏன் கூடாது ?சவுதிகாரர்கள் போல் நாம் செல்வ செழிப்பாக இருந்தால் எப்படி இருப்போம்? நம் நாட்டில் செல்வந்தர்கள் எத்தனை பேர் ஏக பத்தினி விரதம் மேற்கொண்டோர் ? திருமணம் செய்யாமல் பல பெண்களுடன் உறவு வைத்திருக்கும் செல்வந்தர்கள் 90௦ சதவீதத்திற்கு குறையாமல் இருப்பார். நடுத்தர மக்களும் இதில் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல.

 23. /திருமணம் செய்யாமல் பல பெண்களுடன் உறவு வைத்திருக்கும் செல்வந்தர்கள் 90௦ சதவீதத்திற்கு குறையாமல் இருப்பார். நடுத்தர மக்களும் இதில் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல.
  /]
  நண்பர் இப்ராஹிம]

  மிக சரியாக சொல்கிறீர்கள்,
  நீங்கள் பிறந்த வர்க்கம் உங்கள் கொள்கையை தீர்மானிக்கிறது.விதிவிலக்குகள் குறைவே.உலகின் எந்த காலகட்டத்திலுமே சிலர் செல்வம் படைத்தவர்களாக இருந்ததும்,மற்றவர்கள் அவர்களை சார்ந்து வாழ்ந்ததுமே வரலாறு.

  சவுதியில் கூட 50% செல்வந்தர்கள் என்று ஏற்று கொண்டால் கூட அவர்களுக்கு பணி புரிய வெளிநாடுகளில் இருந்தாவது ஆட்கள் தேவை படுகிறார்கள்.
  செல்வந்தர்களுக்கு பலதார மணம் என்பது அவர்களின் நுகர்வு க்லாச்சாரத்தின் வெளிபாடே.

  மேல் தர நடுத்தர மக்களிடம் இப்போது நுகர்வு கலாச்சாரம் அதிகரிக்கிறது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் வாழ்க்கை முறைமையை அவர்களின் மதத்தை விட ,சுமூக பொருளாதார இருப்பே நிர்ணயிக்கிறது.

  ____________

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s