அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா? ஆளை மாற்றுவதா?

மொசாம்பிக்கில் புகையத் தொடங்கி, துனீசியாவில் பற்றி எரிந்து, எகிப்தின் வழியாக ஏமன், ஈரான், பஹ்ரைன் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது மக்கள் கிளர்ச்சி எனும் நெருப்பு. துனீசியாவின் பென் அலியும், எகிப்தின் ஹோஸ்னி முபாரக்கும் தப்பியோடிவிட்டனர். ஒரு வழியாக மக்கள் சீற்றம் தணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் எதற்காக மக்கள் கிளர்ந்தெழுந்தனரோ, எந்த நிலமை மக்களை போராடத்தூண்டியதோ அவை தக்கவைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வென்றது யார்? போராடிய மக்களா? திரை மறைவில் ஆடப்பட்ட சதுரங்கங்களினால் மக்கள் வெற்றியின் நாற்காலிகளில் அமரவைக்கப்பட்டிருப்பதைப் போன்ற மாயையில் தோல்வியின் அருகாமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகம்மது எனும் வேலையற்ற ஒரு இளைஞனின் தற்கொலையிலிருந்து தொடங்கியிருந்தாலும், துனீசிய மக்களின் எழுச்சிக்கான காரணங்கள் பல ஆண்டுகளாகவே அங்கு மக்களைச் சூழ்ந்திருந்தன. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கான சலுகைகள், பிரான்சின் மறுகாலனியாக்கத் திணிப்புகள் என மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் அத்தனை அம்சங்களும் துனீசியாவில் மையம் கொண்டிருந்தன. அன்றைய அதிபர் போர்கிபாவை விட உளவுத்துறை தலைவராக இருந்த பென் அலி தங்களுக்கு சிறப்பாக உதவுவார் என ஏகாதிபத்தியங்கள் தீர்மானித்தபோது துனீசியாவில் இராணுவக் கலகம் நடந்து பென் அலி அதிபரானார். ஆனால் இன்றைய மக்கள் எழுச்சி ஏகாதிபத்தியங்கள் தீர்மானித்து நடந்ததில்லை என்றாலும், அதன் முடிவை ஏகாதிபத்தியங்கள் தீர்மானித்துக்கொண்டிருக்கின்றன. பென் அலி கலவரங்களை(!) கட்டுப்படுத்திவிடுவார் என நம்பி அமைதிகாத்த அமெரிக்கா, வேறுவழியில்லை என்றானபோது, பென் அலி இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் தவறிவிட்டார் என்றாலும் மக்கள் வன்முறை செய்வதும் தவறுதான் என்பதுபோல் கருத்துக்களை உமிழ்ந்தது.

பென் அலி வெளியேறிய பின் ஃபுஆத் மெபாஸா தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. இரண்டு மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தாலும்; பென் அலியை தாங்கிப்பிடிப்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதி என மேற்குலகம் யாரைத் தூற்றியதோ அந்த ஷெய்க் ராஷித் அல் கனூசி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வேலைகள் ஏகாதிபத்தியங்களால் செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்காக கடந்த இருபது ஆண்டுகளாக லண்டனில் வசித்துவந்த ராஷித் அல் கனூசி துனீசியா திரும்பியுள்ளார். அவரின் கட்சியான ‘அன்னஹ்தா’ புதுப்பிக்கப்படுகிறது.

துனீசியாவுக்கு முகம்மது போல், எகிப்துக்கு கிடைத்த முகம்மது, காலித் செய்த். போலீஸால் காலித் செய்த்

காலித் செய்த்

கொல்லப்பட்ட செய்தி மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தினாலும் அதற்கான களம் ஏற்கனவே எகிப்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. சற்றேறக் குறைய எட்டு கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எட்டு க்னீ (எகிப்திய நாணயம் தோராயமாக இரண்டு டாலர்) வருமானத்தில் பொழுதைக் கழிக்கிறார்கள் என்று ஐநாவின் அறிக்கை தெரிவிக்கிறது. உலக அளவில் மக்களை தாக்கும் அத்தனை முதலாளிய கொடூரங்களும் எகிப்திலும் உண்டு. ஆங்காங்கே உணவுக்கலகங்கள் நடைபெற்றுவந்தன. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசை நிலைகுலைய வைத்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குப்ரா நகரில் ஏப்ரல் 6 அன்று நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 6 எனும் பெயரில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு தொடர்ந்து அது போராட்டங்களை நடத்திவந்தது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து மக்களைத் திசை திருப்ப வகுப்புக் கலவரங்கள் தூண்டி விடப்பட்டன. கிருஸ்தவ ஆலயங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டு, அல் கொய்தா செய்ததாக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. தொடர்து சில மத மோதல்கள் நடந்தன. மதமோதல்களுக்கு எதிராக அரசின் ஆதரவுடன் மதநல்லிணக்க இயக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு மனிதச் சங்கிலி போன்றவைகள் நடத்திக் காண்பிக்கப்பட்டன. ஆனாலும் இவையனைத்தையும் மீறி எகிப்திய போலிஸ் தினமான ஜனவரி 25ல் கெய்ரோவின் மையமான தஹ்ரீர் சதுக்கத்தில் மக்கள் ஒன்றுகூடி அரசுக்கெதிராக கிளர்ந்தனர்.

துனீசியாவைத் தொடர்ந்து எகிப்திலும் கிளர்ந்த மக்கள் எழுச்சியைக் கண்டு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் அதிர்ந்தன, குறிப்பாக இஸ்ரேல். எகிப்தின் போராட்டம் தங்களுக்கு எதிராக மக்கள் கைகளில் தொடர்ந்து இருப்பது ஆபத்து என உணர்ந்த ஏகாதிபத்தியங்கள் களத்தில் இறங்கின. முபாரக்கை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியது. போராட்டத்திற்கு தலைமைதாங்கும் உத்தியுடன் எல்பராதே ஐநாவிலிருந்து எழுந்தருளினார். தொடக்கத்தில் இந்தப் போராட்டங்களிலிருந்து விலகியிருந்த முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி மக்கள் ஆதரவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் எண்ணத்துடன் மக்களுடன் இணைந்தது. பதவி விலக முடியாது என்றும் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் கூறிவந்த முபாரக் போராட்டம் தொடரவே, முடிவில் பதவி விலகினார். தற்போது இராணுவம் அரசை நடத்துகிறது. தேர்தல் நடத்தப்பட்டால் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நிலையிலிருக்கிறது எகிப்து.

ஆனால், துனீசிய எகிப்திய மக்கள் இந்த மாற்றங்களைத் தான் விரும்பினார்களா? ஆள்பவர்களை மாற்றுவதற்காகத்தான் அவர்கள் போராடினர்களா? ஊடகங்கள் அப்படித்தான் சொல்லி வருகின்றன. சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி என குதூகலிக்கின்றன. சர்வாதிகாரிகளுக்கு எதிரான எச்சரிக்கை என்பதாக முன்தள்ளுகின்றன. ஆனால் மக்கள் சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடவில்லை. ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவே போராடினார்கள். அந்த ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டு முகம் எனும் உள்ளடக்கத்திலேயே சர்வாதிகளுக்கு எதிரானதாக போராட்டம் இருந்தது. சர்வாதிகளை பதவி விலகச் சொல்லித்தான் முழக்கங்களை முன்வைத்தனர், ஆனால் அதன் காரணம் விலைவாசி உயர்வு உள்ளிட்ட முதலாளித்துவத்தின் விளைவுகள். இதை விரிவான பொருளில் மக்கள் உணர்ந்திருந்தார்களா என்பது வேறு. ஆனால் அதைக் கொண்டு சர்வாதிகாரத்திற்கெதிரான போராட்டமாக மட்டும் இதை குறுக்கிவிட முடியாது.

இப்போது துனீசியாவிலும் எகிப்திலும் நடந்திருப்பது என்ன? தங்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்படுமா? அவைகள் மக்களின் வளத்தை நோக்கி திருப்பிவிடப்படுமா? எனும் கேள்விகளுக்கு அவர்களிடம் விடையில்லை. ஆனால் அந்தக் கொள்கைகளின் விளைவுகளுக்கு ஆட்சியாளர்களை மட்டுமே காரணமாக கூறுவதன் மூலம் மக்களை வாட்டும் பொருளாதாரக் கொள்கைகள் மறைந்துகொண்டன. எத்தனை முபாரக்குகளை மாற்றினாலும், எத்தனை பென் அலிகளை துரத்தியடித்தாலும் அந்தக் கொள்கைகள் நீடித்திருக்கும் வரை மக்களின் துன்பங்கள் தீரப்போவதில்லை.

வரலாறு படைக்கும் அளவுக்கு மக்கள் எழுச்சி நடைபெற்றிருக்கிறது. அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், இராணுவக் கொலைக்கருவிகளுக்கு அஞ்சாமல் லட்சக்கணக்கில் மக்கள் வீதிகளில் திரண்டிருக்கிறார்கள். ஆனாலும் எதை நோக்கி அவர்கள் கிளர்ந்தெழுந்தார்களோ அந்த இலக்கை அவர்களால் அடையமுடியவில்லை. காரணம் இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கி புரட்சியாக அதை வழிநடத்திச் செல்ல புரட்சிகரக் கட்சிகள் எதுவும் அந்நாடுகளில் இல்லை. இருந்திருந்தால் மக்களை விழிப்புணர்வூட்டி, அன்னியக் குறுக்கீடுகளை புறந்தள்ளி, நாட்டின் அனைத்து வளங்களையும் கைப்பற்றி மக்கள் அரசை உருவாக்குவதை நோக்கி நகர்ந்திருக்கும். அப்படி எதுவும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஏகாதிபத்தியங்கள் துடிக்கின்றன.

உலகில் ஜனநாயகம் பேசும் எந்த நாடானாலும் அரசின் நடப்பு அமைப்பை ஏற்றுக்கொண்டு அதற்குள்ளிருந்து போட்டியிடும் அரசியல் கட்சிகளைத்தான் விரும்புகின்றன. மாறாக அந்த அமைப்பை மாற்றியமைக்க விரும்பும் கட்சிகளை அனுமதிப்ப‌தில்லை. தீவிரவாத முத்திரை குத்துகின்றன, வன்முறையாளர்கள் என்கின்றன, கமுக்கமான சதிச் செயல்கள் மூலம் கொன்றழிக்கின்றன. ஏனென்றால் ஜனநாய‌கம், மக்களாட்சி எனும் பெயர்களில் ஜனநாயகமற்ற மக்கள் விரோத ஆட்சிகளையே அரசுகள் நடத்திவருகின்றன. ஆட்சியின் போக்கால் மக்கள் கிளர்ந்தெழுந்தாலும் அது இந்த அமைப்பை மாற்றுவதை நோக்கி நகரக் கூடாது என்பதால் தான் புரட்சிகரக் கட்சிகள் ஏற்பட்டுவிடாதவாறு தடுக்கின்றன. ஏற்பட்டுவிட்டாலோ சிதைத்தழிக்க முயல்கின்றன.

சோவியத்துக்கு எதிராக பதினான்கு நாடுகள் ஒன்றிணைந்து போர் தொடுத்ததும், சிலி தொடங்கி இந்தோனேசியா வரை கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடியதும், சாதாரண மாநில அரசியல் கட்சிகளே தங்கள் பகைவர்களை தீர்த்துக்கட்ட ஆர்டிஎக்ஸ் பயன்படுத்துகையில் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தும் மாவோயிஸ்டுகளை நாட்டுக்கே அபாயம் என்பதும் அவர்கள் அந்த அமைப்பை மாற்ற முற்படுகிறார்கள் என்ற காரணத்திற்காகவேயன்றி வேறில்லை.

ஆட்களை மாற்றுதல் எனும் சோள‌ப்பொரியை போட்டு அரசுகளுக்கு எதிராக கிளர்ந்தெழுதல் எனும் மக்களின் யானைப்பசியை நீண்டநாள் அடக்கிவைக்க முடியாது. மாற்றப்படும் பொம்மைகளிடமும் அதே கோரமுகத்தை சந்திக்கும் மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவார்கள், புரட்சிகர இடதுசாரி இயக்கங்களை தங்களுக்குள் கட்டியமைத்து வெகு சீக்கிரம் அதை புரட்சியாக்கி வென்றும் காட்டுவார்கள்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

18 thoughts on “அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா? ஆளை மாற்றுவதா?

 1. //புரட்சிகர இடதுசாரி இயக்கங்களை தங்களுக்குள் கட்டியமைத்து வெகு சீக்கிரம் அதை புரட்சியாக்கி வென்றும் காட்டுவார்கள்.//

  கம்யூனிஸ கனவுக்கோட்டை கட்டும்

  உம்மால் ஒரு மயிரைக்கூட புடுங்கமுடியாது !!!

 2. சீன அதிபருக்கு தூக்கம் போச்சாமே. புரட்சி, எழுச்சில அரண்டு போய் கிடக்காராம்.

 3. //புரட்சிகர இடதுசாரி இயக்கங்களை தங்களுக்குள் கட்டியமைத்து வெகு சீக்கிரம் அதை புரட்சியாக்கி வென்றும் காட்டுவார்கள்.//
  உங்கள் ஆசை நிறைவேறும்.பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு .
  செங்கொடி ,

 4. பரம்பரை மன்னராட்சி,சர்வாதிகாரம் என்பதில் பல் சிக்கல்கள் உள்ளன.ஒருவேளை ஆள்பவன் சரியில்லை என்றால் மாற்றுவதற்கு மக்கள் பெரும் விலை கொடுக்க நேரிடும். பஹ்ரைனில் கூட மக்கள் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுகிறார்கள். சவுதியில் கூட தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சவுதி,பஹ்ரைன், ஆளும் வர்க்கங்கள் விசுவாசமாக இருப்பதும் நாட்டின் வளங்களை சுரண்டுவதற்கு துணை போவதையும் மக்கள் எவ்வளவு நாட்கள் பொறுப்பார்கள்?.

  ஜனநாயகம் ஏற்படுவதும்,ஆளும் அரச குடும்பங்கள் தங்கள் சொத்துகளோடு தங்கள் எஜமானர் நாடுகளில் அடைக்கலம் புகுவதும் நிச்சயம்.

 5. பஹ்ரைன் போராட்டத்தை வன்முறை கொண்டு ஒடுக்கியதால் 6 பேர் பலி.

  __

  மக்கள் போராட்டங்களை ஏன் அமெஎரிக்க உளவுத்துறை முன்பே கணிக்கவில்லை என்று அம்ரிக்க அரசியல்வாதிகள் விவாதிப்பதையும்,யார் ஆளவேண்டும் என்று கணக்க்கிடுவதும் பாருங்கள்.
  அமெரிக்க பொருளாதாரமே மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வள சுரண்டலை சார்ந்து உள்ளது என்பதும்.அதற்கு சார்பான ஆள்பவர்களையே அமெரிக்கா விரும்புகிறது.

 6. கனவுக்கோட்டை

  கட்டுரையாளரே !

  கயவன் கபோதி

  கருணாநிதியை

  ஆட்சிகட்டிலிருந்து

  அப்புறப்படுத்தி

  செருப்படிதருமாறு

  உமது வாராந்திர

  சிறப்புப்பார்வையில்

  கட்டுரை தீட்டலாமே !!!

 7. கனவக் கோட்டைகளின்

  கதாசிரியராம் பி.ஜே வின்

  கதாகாலேட்ச‌பம் கேளீர்

  கட்சிகளை மாற்றுவதும்

  ஆதரிபதும் ஏனென்று

  அருமையாய் உரைக்கின்றார்

  அனைவரும் கேட்டுப் பயன் பெருவீர்.

  /தேர்தலில் எத்தகைய நிலைபாடு சரி?

  நீங்கள் இந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று உரையாற்றிய வீடியோ பார்த்தேன். இந்த அளவுக்கு கயவர்களான காங்கிரஸ்காரர்களை நாம் தேர்தலில் ஆதரிப்பது எந்த விதத்தில் நியாயம்? இவர்களுக்கும் பிஜேபி க்கும்எந்த வேறுபாடும் இல்லை எனும் போது இவர்களை நாம் எப்படி ஆதரிக்கமுடியும்?தயவு கூர்ந்து விளக்கவும்.

  அர்ஷத்

  தேர்தல் நிலைபாட்டைப் பொருத்தவரை கடந்த காலத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டால் ஒருவரையும் ஆதரிக்க முடியாது. அப்போதைய சூழ்நிலையில் எந்த முடிவு சமுதாயத்துக்கு நன்மை தரும் என்ற அடிப்படையில் தான் முடிவு செய்ய முடியும்.

  ஜெயலலிதா செய்த துரோகம் கொஞ்சம் அல்ல. இட ஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்த போது அதற்காக அதிமுகவை ஆதரித்தோம்.

  கோவை கலவரம் முதல் கருணாநிதி செய்த துரோகமும் சாதாரணமானது அல்ல. ஆனாலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதால் திமுகவை ஆதரித்தோம்.

  இப்போது ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு பத்து சதவிகிதஇட ஒதுக்கீட்டை காங்கிரஸ் அளித்தால் வரும் தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்கும்அவசியம் சமுதாயத்துக்கு ஏற்படும்.

  எந்தத் தேர்தலையும் சமுதாயத்துக்கு நன்மையைப் பெற்றுத் தரும் கருவியாக பயன்படுத்துவதே அறிவுடமை. கடந்த காலத் தவறுகளுக்காக தண்டிப்பதற்கு தேர்தலைக் கருவியாக்கினால் சமுதாயத்துக்கு அதனால் நன்மை ஏற்படாது.

  அது போல் இப்போது காங்கிரஸ் ஆட்சியிலோ திமுக ஆட்சியிலோ பயங்கரமான கொடுமை நடந்து அதற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் அதற்காகப் பாடம் கற்பிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிக்கலாம்.

  உதாரணமாக கோவை கலவரத்தில் சமுதாயத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக ஒட்டு மொத்த சமுதாயமும் திமுகவைப் புறக்கணித்தது.

  ஆனால் அதே காரணத்துக்காக இனி வரும் தேர்தல்களில் அதைப் பிரச்சனையாக்கக் கூடாது.

  அந்த சம்பவம் நடந்து அதை ஓட்டி வரும் தேர்தலில் மட்டுமே இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

  இப்படி நடந்து கொண்டால் சமுதாயத்துக்கு அதிக நன்மைகளைப் பெற முடியும். நாம் முஸ்லிம்களுக்கு நன்மை செய்தால் பழையதை மறந்து நமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும்.

  என்ன தான் நன்மை செய்தாலும் இவர்கள் ஐம்பது வருடத்துக்கும் முன் நடந்தததற்காக நமக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்ற எண்ணம் வரும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் நமக்கு எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள்.

  23.01.2010. 10:55

  /

 8. //எத்தனை முபாரக்குகளை மாற்றினாலும், எத்தனை பென் அலிகளை துரத்தியடித்தாலும் அந்தக் கொள்கைகள் நீடித்திருக்கும் வரை மக்களின் துன்பங்கள் தீரப்போவதில்லை.//

  உண்மை

 9. சங்கர் உங்கள் வார்த்தையை அருந்திய மது ,ராமதாஸ் தனது மகனுக்கும் தனது கட்சிக்கும் ஆதாயம் தேடுபவர் .பீ.ஜே தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ ஆதாயத்தின் அடிப்படயில் தேர்தல் ஆதரவு முடிவு எடுக்கவில்லை. இன்றைய அரசியல் வாதிகளிடம் இதைவிட சமுதாய நலன் கருதி செயல் பட முடியும் சொல்லுங்கள்? அதற்க்கு முன் பொதுவுடைமை கொள்கைவாதிகளாகஇருந்து கொண்டு ,முதாலாளித்துவ நாட்டில் அட்ஜஸ்மென்ட் வாழ்க்கை யில் காலத்தை ஓடுவது எப்படி என்பதையும் கூற விரும்புகிறேன்

 10. kiri எத்தனை மார்க்ஸ் வந்தாலும் எங்கல்ஸ் வந்தாலும்,ஸ்டாலின் எத்தனை முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் கம்யுனிசமும் வராது அதன் பாதையான சோசலிசமும் வராது.

 11. சங்கர் பிழை திருத்தம் ,
  பொதுவுடைமை கொள்கைவாதிகளாகஇருந்து கொண்டு ,முதாலாளித்துவ நாட்டில் அட்ஜஸ்மென்ட் வாழ்க்கை யில் காலத்தை ஓட்டுவது எப்படி என்பதையும் கூறுமாறு வேண்டுகிறேன்
  .

 12. பி ஜேவின் சொல்லைகேட்டு ஓட்டு போடுபவர்கள் தமிழ்நட்டின் வாக்காளார்களில் 2% எனகஎடுத்துக் கொண்டால் இந்த ஓட்டுக்கு அவர் போடும் கணக்கீடுகள் அபாரம்.
  மனித நேய மக்கள் கட்சி ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்து 3 தொகுதிகள் வாங்கி விட்டதால்,பி.ஜே எதிர் கூட்டணிஅயைத்தான் ஆதரிப்பார் என்பதும் அறிந்ததே.

  ஒவ்வொரு தொகுதியிலும் உனக்கு நல்லவனாக தோன்றுபவனுக்கு வாக்களி என்று சொல்லாமல் கை தேர்ந்த அரசியல் வாதி போல்(இதற்கும் குரான் ,ஹதிதில் ஆதாரம் உண்டா) பேசுவதையும் ஆதரிப்பவர் உள்ளவரை பி.ஜே போன்ற‌வர்கள் வாழ்வு நன்றாகவே ஓடும்.

  இதே போன்று அரபு மக்களும் தங்களுக்கு பிடித்த அரசை இந்த கணக்கீடுகள் போட்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். மனிதத்துக்கு விரோதமான முடியாட்சி,பரம்பரை சர்வாதிகாரம் என்பவை ஒழிய வேண்டும் என்பதே நமது ஆசை.

  ஒரு காஃபிர் நாட்டில் வாழும் இஸ்லாமியருக்கு கிடைக்கும் உரிமை கூட பஹ்ரைன் நாட்டின் பெரும்பானமையினரான ஷியா(70%) மக்களுக்கு இல்லை.அந்நிய நாட்டின் கூலி இராணுவப் படை கொண்டு சுட்டு வீழ்த்தும் அர்சனை ஆதரிப்பது இஸ்லாமிய மார்க்கப் படி சரியா?

  சவுதி அரேபியாவில் 30% வாழும் ஷியா மக்களுக்கும் அரசு அதிகாரத்தில் பங்கு இல்லை.

  ________

  //பொதுவுடைமை கொள்கைவாதிகளாகஇருந்து கொண்டு ,முதாலாளித்துவ நாட்டில் அட்ஜஸ்மென்ட் வாழ்க்கை யில் காலத்தை ஓட்டுவது எப்படி என்பதையும் கூறுமாறு வேண்டுகிறேன்.//

  தேர்தலில் போட்டியிடுபவர்களில் சிறந்தவனாக நநான் கருதும் வேட்பாளருக்கு கட்டாயம் வாக்களிக்கிறேன்.வேட்பாளர்களில் சாதி மதம் பார்பதில்லை.நான் யாருக்கு வாக்களிப்பது என்பதை வேறு யாரும் நிர்ணயம் செய்ய முடியாது.

  இந்தியாவை முதலாளிகளுக்கு ஆதரவான ஜனநாயக அமைப்பு கொண்ட நாடு என்று கூறலாம்.

  இந்த அமைப்பு ,மத ஆட்சி,மன்னராட்சியை விட கொஞ்சம் பர்வாயில்லை. இன்னும் கூட கல்வி,சுகாதாரம் போன்றவை அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும்.ஊழல் அற்ற ,சுரண்டல் அற்ற ஆட்சி நோக்கிய மனித சமுதாயத்தின் தேடலே பொது உடமை தத்துவம்.

  ஜன‌னநாயகம் இன்னும் காலத்திற்கேட்ப பல மாற்றங்கள் அடையும்.பொது உடமை அரசை நோக்கியே அதன் பயணம் அமையும் என நம்புகிறேன்.

 13. சங்கர், இரண்டு சதவீதம் என்பது ஒரு தொகுதியில் 2500 முதல் 4000 வோட்டுக்கள் ஆகும்.கடந்த தேர்தலில் முப்பது தொகுதிகளின் முடிவுகளை 3ஆயிரத்துக்கும் குறைவான வோட்டுக்களே நிர்ணயித்துள்ளனஎன்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவும் காங்கிரஸ் ப.ம.க கம்யுனிஸ்ட் கட்சிகள் என்று பலமான கூட்டணியுடன் ஆளும் கட்சி எதிர்ப்பு ஓட்டுக்களும் சேர்ந்தால் திமுக அணி இரு நூறு சீட்களை கைப்பற்றியிருக்க வேண்டும் .ஆனால் திமுக முதன் முதலாக மைனாரிட்டி அரசாக பதவி ஏற்கும் நிலை ஏற்பட காரணம் என்னவாக இருக்கும்?தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி வைத்தால் ஏனைய கட்சிக்கு ஒரு சீட்கூட கிடைக்காது.ஆனால் கடந்த தேர்தலில் இந்த கூட்டணியை எதிர்த்து அதிமுக பத்தில் ஐந்து இடங்களில் வெற்றிபெறுவதற்கு காரணம் டி.என்.டி ஜே வின் பிரச்சாரமே
  ////ஒவ்வொரு தொகுதியிலும் உனக்கு நல்லவனாக தோன்றுபவனுக்கு வாக்களி என்று சொல்லாமல் கை தேர்ந்த அரசியல் வாதி போல்(இதற்கும் குரான் ,ஹதிதில் ஆதாரம் உண்டா) பேசுவதையும் ஆதரிப்பவர் உள்ளவரை பி.ஜே போன்ற‌வர்கள் வாழ்வு நன்றாகவே ஓடும்////
  நல்லவனாக தோன்றுபவனுக்கு,ஏன் வாக்களிக்க வேண்டும்?நல்லவனாக தோன்றுபவன் நல்லவனாக முடியாது. நல்லவனை தேர்தல் களத்தில் காணவும் முடியாது.ஆயின் கல்வியில்,வேலைவாய்ப்பில் பின்தங்கிய சமுதாயமான முஸ்லிம்களுக்கு அதற்குரிய இடஒதுக்கீடு வழங்க வாக்குறுதி தருபவர்களுக்கு ஆதரவு வழங்குவதனால் என்ன தவறு இருக்க முடியும்?இதனால் பி.ஜே வின் வாழ்வு நன்றாக ஓடும் என்ற வார்த்தைக்கு ஆதாரத்துடன் அர்த்தம் தரமுடியுமா?
  முஸ்லிம்களின் நம்பிக்கைளை சிதைக்கவேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டி வலைத்தளத்திலே வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நிஜ உலகில் வாழும் மக்களின் துயர் நிலை போக்கிட உதவிட திராணி இல்லை என்பதற்காக அடுத்தவர்கள் மீது அவதூறு கூற ஆசைப் படவேண்டாம்.
  இன்சா அல்லாஹ் பி.ஜே உலகத்தலைவராகும் சமயத்தில் அரபுநாட்டு மக்களின் ஜன நாயக உரிமைகள் பற்றி பேசுவோம். .

 14. //இதனால் பி.ஜே வின் வாழ்வு நன்றாக ஓடும் என்ற வார்த்தைக்கு ஆதாரத்துடன் அர்த்தம் தரமுடியுமா//

  வேறு மாதிரி அர்த்தம் வந்து விட்டது என்று எண்ணினால் மன்னிக்கவும்.அவ்ருக்கோ,அவர் குடும்பத்திற்கோ அவர் ஆதாயம் தேடினார் என்று நான் சொல்லவில்லை

  எதற்கு ஆதாரம்? த்வுகீத்தின் தானைத் தலைவராக, தன்னந்தனியாக‌ நன்றாகத்தானே மதிப்புடன் வாழ்வை ஓட்டிக் கொண்டு வருகிறார். அவருடைய கருத்துகள் பல‌ தமிழ் இஸ்லாமியர்களால் ஏஎற்றுக் கொள்ளப் படுவதும்,புத்தகங்கள்,ஒலி,ஒளி பேழைகள் நன்றாக விற்பனை ஆவதும் நல்ல வாழ்வுதான்.

  // இன்சா அல்லாஹ் பி.ஜே உலகத்தலைவராகும் சமயத்தில் அரபுநாட்டு மக்களின் ஜன நாயக உரிமைகள் பற்றி பேசுவோம். //

  நண்பர் இப்ராஹிம் போன்ற சிஷ்யர்கள் கிடைப்பது கூட நல்ல வாழ்வுதான்.இது கொஞ்சம் அதிக ஆசை.

  அரபு மக்களின் நியாயமான உரிமையை அவர்கள் பெற போராடுகிறார்கள். அவர்கள் தங்கள் உரிமைகளை இன்றில்லாவிட்டாலும் என்றாவது வென்றெடுப்பார்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s