மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்

அன்பார்ந்த உழைக்கும் பெண்களே!

 

“பெண்கள் இந்நாட்டின் கண்கள்” என்று சித்தரிக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகம் தான் பெண்களை வீட்டில் முடக்கிப் போட்டு, அவர்களின் சமூகப் பார்வையைக் குருடாக்கி வருகிறது. விண்ணைச் சாடி வெகுதூரம் பாய வேண்டிய பெண்ணைச் சிறகொடித்து சிறைப்படுத்தியும் வருகிறது. இக்கொடுமைகளைக் கண்டு கொதித்தெழாமல், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் சீரழிந்த சீரியலுக்காகவும், சினிமாப் படங்களுக்காகவும், பாடல்களுக்காகவும் முடங்கிக்கிடப்பது ஏன்? இது கேவலமாகத் தெரியவில்லையா?

 

அப்படி என்னதான் இவற்றில் இருக்கிறது? குடும்ப உறவுகளை, ஆண் பெண் உறவுகளை இழிவுபடுத்துகிறது. பெண்களின் உடலை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப்போட்டு அலசுகிறது, விளம்பரப்படுத்துகிறது. இளவட்டங்களின் சிந்தனையைச் சீரழிக்கிறது. அவர்களை ஒருபுறம் வில்லிகளாகவும், மறுபுறம் அடிமைகளாகவும் வாய்பேச வக்கற்றவர்களாகவும் காட்டுகிறது. பனியனுக்கும் ஜட்டிக்கும் சாக்லேட்டுக்கும் ஐஸ்கிரீமுக்கும் சோரம் போகிறவர்களாக இழிவுபடுத்த்டுகிறது. அறைகுறை ஆடைகள் அணிந்த அழகுப் போட்டிகள், ஆபாசமான ஆடல் பாடல் போட்டிகள், இரட்டைப் பொருள் கொண்ட பட்டிமன்றங்கள் ஆகியவற்றைக் கடைவிரித்து தனியார் டிவி நிறுவனங்கள் காசுபறிக்கின்றன.

 

ஆனால், வரதட்சனை வரவில்லை என்று புகையும் சிகரெட்டால் பொட்டு வைப்பதைப் பற்றியோ, வாழாவெட்டியாக பெண் விரட்டியடிக்கப்படுவதைப் பற்றியோ, குடும்பம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பலைப் பற்றியோ, பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றியோ, ஆணாதிக்கக் கொடுமைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடும் பெண்களைப் பற்றியோ, அப்பெண்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் பற்றியோ, பெண்கள் அமைப்பாக அணிதிரளவேண்டிய அவசியத்தைப் பற்றியோ மறந்தும்கூட அந்த டிவி நிகழ்ச்சிகள் சொல்வதில்லை. கதைகளாகக் கூட சித்தரிப்பதில்லை. டிவி மட்டுமல்ல குடும்பப்பத்திரிக்கைகள் என்ற போர்வையில் வலம்வரும் மஞ்சள் மசாலா பத்திரிக்கைகளும் இச்சமூகப் பிரச்சனைகளை விவாதிப்பதில்லை. காரணமென்ன? அவைகளின் நோக்கமே பெண்களை சமூகக் கொடுமைகளுக்கு எதிராக விழிப்படையச் செய்து போராட வைப்பதல்ல, பெண்களை வைத்து காசு பறிப்பதே அவற்றின் நோக்கம். இந்த கேடு கெட்ட நோக்கத்தை உடைத்தெறியாமல் வெறும் சுமை தாங்கிகளாக, அடிமைகளாக இருந்து என்ன பயன்? இவைகளைத் தாங்கிக் கொண்டு எவ்வளவு காலம் தான் இருக்கப் போகிறோம்?

 

குடும்பத்தில் சுமை, வேலையில் சுமை, வயிற்றில் சுமை, இதயத்தில் சுமை என்று பல சுமைகளைத் தாங்கியது போதும். தவிர, ஈராயிரம் ஆண்டுகளாய் பார்ப்பன இந்துமதம் உருவாக்கிய சாதிக் கட்டுமானத்துக்கும், பிற்போக்குகளுக்கும், பல மதப் பிரிவுகளுக்கும் பலியாக்கப்படுவது போதும். சமூகம் நம்மீது திணித்துள்ள இத்தனை சுமைகளுக்கும் பலிகளுக்கும் நாம் பணிந்து போக முடியாது. போராட்டம் ஒன்றே தீர்வு!

 

புதியதொரு சமூகத்தை, புதிய ஜனநாயக சமூகத்தைப் படைக்க உண்மையான கம்யூனிஸ்டுகளாகிய நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம். கள்ளிப்பாலை ஊற்றிக் கல்லறைக்கு அனுப்பும் கொடுமைக்கு முடிவு கட்டுவோம்.

“சமூக மாற்றம் நிகழ்வதும் பெண்ணாலே, ஆணாதிக்கம் அழிவதும் பெண்ணாலே” ஆணுக்குப் பெண் சமம் என்பதை நிலை நாட்டுவோம்!

பெண்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாக திரள்வோம்.

மார்ச் 8 உலகப் பெண்கள் நாளில் உறுதியேற்போம்!

இந்த நாளை உழைக்கும் பெண்கள் நாளாக வளர்த்தெடுப்போம்!

 

பொதுக்கூட்டம் * கலை நிகழ்ச்சி

8.3.2011 செவ்வாய்க்கிழமை, மாலை 5 மணி

பேருந்து நிலையம்,

குரோம்பேட்டை (சென்னை)


தலைமை:

தோழர் உஷா

செயலர்,

பெ.வி.மு.,

சென்னை.

 

சிறப்புரைகள்:

தோழர் அமிர்தா,

பெ.வி.மு., சென்னை.

தோழர் துரை, சண்முகம்

ம.க.இ.க‌

பெண்கள் விடுதலை முன்னணி

சென்னை


தொடர்புக்கு:

தோழர் உஷா,

41, பிள்ளையார் கோவில் தெரு,

மதுரவாயல்,

சென்னை 600095.

பேச: 98416 58457

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

5 thoughts on “மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்

 1. இன்னமும் பெண்னுரிமை விபரம் தெரியாமல் நிறையபேர் உள்ளனர் .அவ்ர்களிடம் இதைக் கொண்டுசெல்லவேண்டும்

 2. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பைத்தியக்காரன் அவர்களின் பதிவு.

  நேற்று மாலை சென்னை குரோம்பேட்டையில் ‘பெண்கள் விடுதலை முன்னணி’ நடத்திய உழைக்கும் மகளிர் தின பொதுக்கூட்டத்துக்கு சென்றிருந்தேன். பேருந்து நிலையத்தை ஒட்டி அமைக்கப்பட்ட மேடையில் கூட்டம் நடைபெற்றது. தோழர் உஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தோழர் அம்ருதாவும், தோழர் துரை.சண்முகமும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

  பெரும் திரளான மக்கள் கலந்து கொண்ட இப்பொது கூட்டத்தில், கிட்டத்தட்ட 70% மக்கள் பெண்களாக இருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம்.எழுச்சியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைவரையும் கவர்ந்த அம்சம் என கலைநிகழ்ச்சியை சொல்லலாம். குறிப்பாக சிறார் தோழர்கள் நடத்திய கலை நிகழ்ச்சி, அனைவரது புருவத்தையும் உயர்த்தி, மெய்சிலிர்க்க வைத்தது.

  இந்தத் தோழர்களுக்கு 5 முதல் 7 வயதுக்குள்தான் இருக்கும். நாட்டு நடப்பை கிண்டலடித்து அவர்கள் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் ஆளும் வர்க்கத்துக்கு அடித்த சாவு மணி என்றால் அது மிகையில்லை. மனப்பாடம் செய்து அவர்கள் ஒப்பிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக, சிந்தனையை ஒருங்கிணைத்து குரலில் கோபம் கொப்பளிக்க சமுதாய அவலத்தை தோலுரித்தார்கள். இவர்களது நிகழ்ச்சி முடிந்ததும் எழுந்த கைத்தட்டல் அடங்க நீண்ட நேரமானது.

  இந்த சிறார் தோழர்கள் அனைவருமே மகஇக, புஜதொமு, புமாஇமு, பெவிமு, ஆகிய அமைப்பை சேர்ந்தவர்களின் பிள்ளைகள். சமுதாய மாற்றம் என்பது அவரவர் குடும்பத்திலிருந்தே தொடங்கும் விஷயம் என்பதை தங்கள் செயல்பாட்டின் வழியே தோழர்கள் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

  சுட்டி டிவி, ஜெட்டிக்ஸ் பார்க்கும் வயதிலுள்ள தங்கள் குழந்தைகளின் மனதில் அமைப்பை திணிக்காமல், நிலவும் சமூக அமைப்பை எளிமையாக அவர்களுக்கு புரிய வைத்து, அதை மாற்ற வேண்டிய அவசியத்தையும் அறிவுறுத்தி, அமைப்பின் செயல்பாடுகளில் அவர்களாகவே பங்கு கொள்ளும்படி செய்திருக்கிறார்கள்.

  இதன் காரணமாகவே அந்த சிறார் தோழர்களால் எழுச்சியுடன் கலை நிகழ்ச்சி நடத்த முடிந்தது. பங்கேற்ற சிறார் தோழர்களுக்கும், தாய்ப்பாலுக்கு நிகராக சமுதாய மாற்றத்தின் அவசியத்தை அவர்களுக்கு புகட்டிய தோழர்களுக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகள்.

 3. யுவதிப்பிரியரே !

  வெற்று தத்துவம்

  மற்றும் மார்க்ஸியம்

  பேசும் கணவர்களின்

  இயலாமையை மறந்து

  அவர் மனைவியர்

  சீரியலை

  சீரியஸாகப்பார்த்து

  கற்பனையில் சஞ்சரிக்கும்

  பெண்களையும்

  ஆறாம் அறிவைப்பெறுமுன்

  அரும்பும் பருவ மொட்டுக்களையும்

  மார்க்ஸிய அபினேற்றி

  தீவிரவாத ஆயுதமேந்தி

  சிறுவயதிலே கொலைகாரனாக்கும்

  நீர் நாசமாவது உறுதி !!!

 4. கவிதை[வசை ] பாடு
  _
  3531. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
  (முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பவர்கள் வசை பாடிய போது) இணைவைப்பவர்களுக்கெதிராக வசைக் கவிதைபாடுவதற்கு நபி(ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அனுமதி கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களுடன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது; எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான்(ரலி), ‘மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி) விடுவேன்” என்று கூறினார்கள்.
  உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்
  (ஒரு முறை) நான் ஹஸ்ஸான்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்” என்று கூறினார்கள்.
  Volume :4 Book :61

 5. மக்களெல்லாம் பெருநாள் தொழுகைக்கு திடலை நோக்கிசெல்கையில் ,முகம்மது நபி [ஸல்] அவர்கள் உமர்[ரலி]அவர்களிடம் .மாத விடாய் ஏற்ப்பட்டுள்ள பெண்கள் உட்பட அனைத்து பெண்களையும் தொழுகை திடலுக்கு வர சொல்லுங்கள்.தொழுகை தவிர மற்ற நிகழ்வுகளில் மாத விடாயில் உள்ள பெண்கள் கலந்து கொள்ளட்டும்.என்று அறிவித்தார்கள் .
  முஹம்மது நபி[ஸல்] அவர்கள் தனது ஆயிசாவிடம் பள்ளிவாசலில் சென்று தொழுகை விரிப்பை எடுத்து வரச்சொன்னார்கள் ,ஆயிஷா[ரலி]அவர்கள் தான் பெரியதில் இருப்பதை ஞாபகபடுத்தினார்கள்.அது இன் கையி இல்லை பாயை எடுத்து வா என்று கூறினார்கள்.
  தனது மனைவி ஆயிஷா[ரலி]பீரியடில் இருக்கும் சமயத்தில் மடியில் தலை வைத்து குர்ஆன் வாசித்தார்கள்.
  தனது மனைவி ஆயிசா[ரலி] பீரியடில் இருந்த சமயத்தில் உணவு உட்கொண்டபோது கோழிக்கறியின் ஒரு துண்டை எடுத்து தனது மனைவியை கடிக்க செய்து ,பிறகு தனது மனைவி கடித்த அதே இடத்தில் தனது வாயினால் கடித்து சாப்பிட்டார்கள்.
  பெண்களின் மாதவிடாய் கடந்த நூற்றாண்டு வரை தீட்டாக கருதப் பட்டு அச்சமயத்தில் அவளை ஒதுக்கு புறமாகவும் புற வாசலிலும் வ்வ்வ்வைத்து தீண்டாமை கொண்டாடிய மக்களிடையே பதிநாலு நூற்றாண்டுகளுக்கு முன் பெண்களை பெருமை படுத்திய உள்ளார் முகம்மது நபி [ஸல்]அவர்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s