பொன்னர் சங்கர் யாருக்காக?

அண்ணன்மார் கதை; சின்னண்ணன், பெரியண்னன் கதை என்றெல்லாம் அழைக்கப்படும் பொன்னர் சங்கர் கதை தமிழகத்தின் மேற்கு பகுதிகளான கோவை  ஈரோடு நாமக்கல் கரூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,ஆகிய பகுதிகளில் குறிப்பாக வெள்ளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதிகளில் நாட்டார் கதையாகவும், நோம்பி காலங்களில் கிராமங்களில் போடும் தெருக்கூத்துக்களாகவும், நாடகங்களாகவும் இருக்கிறது.

இப்படி ஒரு வரலாற்று பாரம்பரியமான அண்ணன்மார் கதை பொன்னர் சங்கர்  கதையாக கருணாநிதியால் கூர்மைப்படுத்தப்பட்டது.  அதன் பிறகு, கருணாநிதியின் அண்ணன்மார் கதையை தியாகராஜன் இயக்கி பிரசாந்த் நடிக்க பலகோடிகளை செலவழித்து பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள், படமும் வெளிவந்துவிட்டது.

சரி!  அப்படி என்ன அண்ணன்மார்களிடம் இருக்கிறது அவர்கள் என்ன தீரன் சின்னமலை,கட்டபொம்மன் போன்று வெள்ளையனுக்கு எதிரான போரில் வீரமரணம் எய்திய மாவீரர்களா? பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு நம் மக்களுக்கு சொல்லுகின்ற பாடம்தான் என்ன? எதற்காக அண்ணன்மார் கதையை கருணாநிதி மீள் உருவாக்கம் செய்தார்?

தான் கோவையில் வாழ்ந்த காலத்தில் அண்ணன்மார் கதையை கேட்டு ரசித்து  பொன்னர் சங்கர் கதையை எழுதியதாகவும் மு.க சொல்லியிருக்கிறார். தந்தை பெரியாரின் பாசறையில் வளர்ந்ததாக சொல்லிக்கொள்ளும் மு.க வை அணணன்மார் கதை கவர்ந்திழுத்திருக்கிறதே , அப்படியானால் கதையில் பார்ப்பன, பார்ப்பனிய இந்துத்துவா எதிர்ப்பு எதாவது இருக்குமா என்று தேடி பார்த்தால் ம்ஹும்… ஒரு வெங்காயமும் இல்லை.

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் தலைவர்களான பொன்னர் , சங்கர் இருவரும் அண்ணன் தம்பிகள், இவர்களின் தங்கை அருக்காணி இவர்கள் வாழ்க்கை தான் அண்ணன்மார் கதை    இவர்களுக்கும், கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர்களின் தலைவனான தலையூர்காளிக்கும் இடையிலான சண்டையும் அதன் முடிவில் அண்ணன்மார்கள் இறப்பதே இக் கதை.  இக்கதை நடந்த காலகட்டம் பதினைந்தாம் நூற்றாண்டு என்று கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.  இப்படி ஒரு கதை நடந்ததா அல்லது எவனாவது கரடி விட்டுட்டு போயிட்டானா? என நாம் சந்தேப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன.


பொன்னரும் சங்கரும் இறந்த பின்பு அவர்கள் கடவுளாக்கபட்டு ஊர் ஊருக்கு கோயில் கட்டபட்டுள்ளது . கோயில் கட்டி கும்பிடும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் வேளாளக்கவுண்டர் சாதிக்காக வேட்டுவகவுண்டர்களிடம் சண்டை போட்டதுதான்.


அதுவும் கொடூரமாக வேட்டுவர் மக்களை வீழ்த்தியிருக்கிறான் பொன்னர்.கீழேயுள்ள அண்ணன்மார் பாடல்களில் பொன்னர் வேடுவர்களுக்கு எதிரான போரில் வேட்டுவர்களின் ஆண் குழந்தைகளையயல்லாம் தலையை வெட்டி கொன்றதாக கூறுகிறது.

“கிழக்கு வளநாடு கீர்த்தி உள்ள மேனாடு

 பெரிய மலையாளம் பெம்ந்துறையும் நன்னாடு

 வேடுதளம் உள்ளதெல்லாம் பொன்னர் வெட்டிக் கருவறுத்து

 ஆணென்று பிறந்ததெல்லாம் பொன்னர் அறுத்துச் சிரமறிந்தார்”

இப்படி வெள்ளாளர்களுக்கும் வேடுவர்களுக்கும் இடையிலான போரில் அண்ணன்மார்கள் மட்டும் வீரசிங்கங்களாக்கப்பட்டது ஏன்? 

வேடுவர்கள் மீதான பகையும் அதை தொடர்ச்சியாக வளர்த்தெடுப்பதற்கும் அண்ணன்மார்கள் கதை பயன்படுத்தபடுகிறது. கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்களான வேடுவர்கள் இப்பகுதியில் வேட்டையாடி தொழில் செய்து வருகின்றனர் அப்போது அங்கு பிழைப்புக்காக வந்த வந்தேறிகளான கொங்கு வெள்ளார்களுக்கும்  வேடுவர்களுக்கும் போர் நடநதாக கொங்குவேளாளர்கள் வரலாற்றில் கூறப்படுகிறது. என்றோ ஒரு காலத்தில் எவனோ ஒரு வேட்டுவனுக்கும் வெள்ளாளனுக்கும் இடையே நடந்த சண்டையை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு கோயில் நோம்பிகளில் நாடகம் போட்டு பகையயை வளர்த்த வேண்டிய அவசியம் என்ன? ஒட்டுமொத்த வேட்டுவர்களையும் திருடர்களாக காட்டுவதை அனுமதிக்கவேண்டுமா?

இந்த அணணன்மார் நாடகங்களையும் கோயில்களையும் எந்தவொரு வேட்டுவனும் ரசிப்பதில்லை, ஒரு சாதியையே திருடனாக அழைப்பதை யார் தான் ஏற்று கொள்வார்கள்.

இன்றைய காலகட்டங்களில் குறிப்பிட்ட இரு சாதியினரும் நண்பர்களாக இருந்தாலும் இது போன்ற கதைகள் சாதி பகையை மூட்டி விடுகின்றன. அது ஏற்படுத்தும் பின் விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளர் தனியரசு சில ஆண்டுகளுக்கு முன் வேட்டுவக் கவுண்டர்கள் அதிகமாக வாழும் நாமக்கல் மாவட்டம் பூசாரிப்பட்டியில்  அவர்களை வமபுக்கு இழுத்து  ஒரு கலவரத்தையே உண்டாக்கினான். அதன் பின்னணியில் பொன்னர் சங்கர் கதையிருப்பதை மறுக்க முடியாது. அன்று வேட்டுவனாகவும் வெள்ளாளனாகவும் இருப்பவன் இப்போதும் அதே சாதியாக இருப்பான் என்று கூறமுடியாது.

இந்ந கதை  மூதறிஞர்(!) கருணாநிதியை கவர்ந்திழுக்க காரணம் என்ன?

ஓட்டு.

ஆம்! ஓட்டு பொறுக்குவதற்காக வேட்டுவன்களை தாழ்த்தியும் வெள்ளாளன்களையும் உயர்த்தியும் இக்கதையை மெருகேற்றியுள்ளார் மு.க., அதற்கு காரணம் கொங்கு பகுதியில் வேட்டுவக்கவுண்டர்கள் சிறுபான்மை சமூகத்தினராகவும் பொருளாதாரரீதியில் பின் தங்கியும்உள்ளனர். ஆனால் வெள்ளாளக்கவுண்டர்கள் பெரும்பான்மையுடனும், பொருளதார பின்னணியுடனும் உள்ளனர்.


ஒரு வேளை, வேட்டுவர்கள் பெரும்பான்மையினராக இருந்திருந்தால் மு.க பொன்னர் சங்கர் எழுதியிருக்கமாட்டார். மாவீரன் தலையூர் காளி என்ற வீர புராணத்தை எழுதியிருப்பார்.

தலையூர் காளியும் பொன்னர் சங்கரும் வேட்டுவர் சாதியைசேர்ந்தவர்கள் என்ற கருத்தும் உள்ளது இப்படி சம்பந்தப்பட்டவர்கள் என்ன சாதி என்பதிலும் பல கருத்து நிலவுகிறது .


இன்றையக் காலக்கட்த்தில் இப்படி ஒரு கதை தேவையா . இந்த டுபாக்கூர் சாதி வெறி கதையை ரசித்து எழுதியதாக சொல்லும் கருணாநிதிக்கு சாதி ஒழிப்பு வீரரான பெரியாரின் பெயரை சொல்லும்  தகுதி கூட கிடையாது.


நடந்ததா என்ற ஐயத்துக்குறிய கதையை எழுதும் கருணாநிதி   வெள்ளையர்களுக்கெதிரான காலனியாதிக்க போரில் வீரமரணம் அடைந்த மாவீரன் பகத்சிங்கின் கதையை எழுதுவாரா?  ஒரு வேளை பகத்சிங்கின் சாதியினர் தமிழ்நாட்டில் வாக்கு வங்கிகளாக இருந்திருந்தால் எழுதியிருந்தாலும் எழுதியிருப்பார் .

நன்றி: தோழர் விடுதலை

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

19 thoughts on “பொன்னர் சங்கர் யாருக்காக?

 1. கட்டபோம்மான் சுதந்திர போராட்டம் பண்ணியதற்கான ஆதாரங்கள் உள்ளனவா? திருட்டு தொழில் செய்துவந்த கட்டபொம்மனை வெள்ளையர் அரசு விரட்டியதால் அவன் போராட்ட வீரனாக தன்னை காட்டிக் கொண்டான்என்று கூறப்படுகிறதே அது உண்மையா?மாபோசி வசனங்களுக்கும் கட்டபொம்மனுக்கும் தொடர்பு இல்லை என்பது யாவரும் அறிந்ததே

 2. நண்பர் இப்ராஹிம்,

  பாளையக்காரனான கட்டப்பொம்மன் குறித்து அவனின் நிர்வாகம் குறித்து விமர்சனங்கள் உண்டு. ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தென்னகக் கூட்டணியின் ஒரு முக்கியமான அங்கம் கட்டபொம்மன். மரணம் வரை அவன் ஆங்கிலேய ஆட்சிமீது காட்டிய வெறுப்பும் எதிர்ப்பும் சொந்த விவகாரங்களையும் கடந்தது. திரைப்படங்களிலும் கதைகளிலும் காட்டப்படும் கட்டப்பொம்மன் மிகை என்றாலும் அவனின் ஆங்கிலேய எதிர்ப்பை குறுக்க முடியாது.

 3. //இப்படி ஒரு கதை நடந்ததா அல்லது எவனாவது கரடி விட்டுட்டு போயிட்டானா? என நாம் சந்தேப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன.//

  இதிலும் இப்படித்தானா!!!!!!!!!!!!!!
  ஒவ்வொரு குல தெய்வமுமே இப்படி ஏதோ அரசனாக இருக்கவே வாய்ய்பு அதிகம். சாதிப் பெருமிதம் தலைக்கேறி இப்போது எல்லா சாதியினருமே தங்களை அரச பரம்பரை என்று கூறிக் கொள்வதும்.சில பதிவர்கள் இத்னையும் பதிவிடுவதும் நகைச்சுவை என்றால் தமிழின(???) தலைவர் என்று கூறிக் கொள்பவர் ஒரு சாதிப் பெருமை கூறும் கதை எழுதுவதும் புதிதல்ல.
  பார்த்தால் அவருடைய படங்கள் அனைத்துமே பிராமணரல்லாத் உயர் சாதியினரின் வாழ்க்கை,அவர்களது பெருமை என்றே புகழ் பாடிவரும். அருமையான உண்மையை உரத்து உரைக்கும் நாட்டுப் புறப்பாடல்கள்.

 4. பொன்னர் சங்கர் யாருக்காக?

  ஆம்! ஓட்டு பொறுக்குவதற்காக.

  31:6. And from the people, there are those who accept baseless narrations to mislead from the path of God without knowledge, and they take it as entertainment. These will have a humiliating retribution.

  quranist@aol.com

 5. பொன்னர் சங்கர் போன்ற கதைகள் சாதி பகையை மூட்டி விடுகின்றன.

  அது ஏற்படுத்தும் பின் விளைவுகள் இன்றும் தொடர்கின்றன.

  5:8. O you who believe, stand for God and be witnesses for justice, and let not the hatred towards a people make you avoid being just. Be just, for it is closer to righteousness, and be aware of God. God is expert over what you do.

  quranist@aol.com

 6. neenga pothupatavaa ezhuthittu poyirukkalaam ………..kathai natanthathukku ungalukku aatharam illai vantherikal entru neengal sonnathukku aatharam kuduthu irukkalaam …………..kudunga athukku aatharam vantherikal nnu sonnathukku ………………kadumaiyaana kandanam itharkku ………

 7. பொன்னர் சங்கர் யாருக்காக?
  Posted on April14, 2011 by செங்கொடி

  பொன்னர் சங்கர் கதையில் பார்ப்பன, பார்ப்பனிய இந்துத்துவா எதிர்ப்பு எதாவது இருக்குமா என்று தேடி பார்த்தால் ம்ஹும்… ஒரு வெங்காயமும் இல்லை.
  ———————————————————————————————————————
  கருணாநிதி செய்யாத சேவையை தனது செங்கொடிச்சிறகுகள் மூலமாக:
  ——————————————————————————————————————–
  இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம்.

  அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது.

  இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. ஏனையோர்களைவிட இஸ்லாமியர்களிடம் மதப்பிடிப்பும், இது தான் சரியான மதம் எனும் உறுதியும், அதை நடைமுறைப்படுத்தும் ஆர்வமும் அதிகம்.ஆனால் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் அவர்கள் அணிதிரள்வது அதிகரிக்கிறது.அதனால் மிகப்பெரிய சக்தியாகவும் அரசியல் அதிகாரம் பெறாமலும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து மார்க்ஸிய வர்க்கவாத‌ அடிப்படை நீரோட்டத்தில் அவர்களைக் கரைத்து அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டியது மார்க்ஸியவாதிகளுக்கு அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.
  ———————————————————————————————————————
  அனைத்து வர்ணக்கொடிகளுக்கும் அறிவுரை;

  5:8. O you who believe, stand for God and be witnesses for justice, and let not the hatred towards a people make you avoid being just. Be just, for it is closer to righteousness, and be aware of God. God is expert over what you do.

  மேலும் சாதி மத இன தேச வர்க்க அடிப்படையில் பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் பெற‌ படம்காட்டாமல்

  31:6. And from the people, there are those who accept baseless narrations to mislead from the path of God without knowledge, and they take it as entertainment. These will have a humiliating retribution.
  ———————————————————————————————————————
  quranist@aol.com

 8. yaarukkaaga? intha ponnar sankar kathai yaarukkaga? cinemaavukkaaga.pirasanth thiyagarajanukkaaga. avvalavuthaan vidunga sir. athaip poy kiLaRikkittu. kozhi kuppai kilariyna veru enna varum?

 9. தணிகை!
  பொன்னர் சங்கர் யாருக்காக என்பதை விளக்கி கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது, இங்கு நாங்கள் கோழி அல்ல குப்பையை கிளற, சமுதாயத்தில் வரலாற்று படம் என்ற ரீதியில் ஒரு பாதிப்பை இந்த படம் ஏற்படுத்துகிறது, எல்லாம் தெரிந்த கைப்புள்ள என்று நினைப்பில் எழுதாதீர் .கட்டுரையின் மேல் விமர்சனமிருந்தால் வைக்கலாம் . அதை விட்டு விட்டு பொன்னர் சங்கர் தியாகராஜனுக்காக என்று நக்கல் வேண்டாம், வயதுக்கேற்ற புத்தியை வளர்த்துக்கொள்ளவும், இந்த மத வெறி, குறுகிய தேச வெறியை கக்கும் உமது தளமே ஒரு குப்பைதான் அதை கிளறும் நீர் ஒரு கிறுக்கு கோழிதான்.

 10. கட்டுரைக்கான மறுமொழிகளை விட தோழர் செங்கொடி மீதான பொறாமையும், அரிப்பும்தான் காணப்படுகிறது இப்ராகிம், குரானிஸ்ட் போன்ற மத பெருச்சாளிகள் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன, இது போன்ற சம்பந்தமில்லாத மறுமொழிகளை தோழர் செங்கொடி அனுமதித்திருப்பது அவருடைய சனநாயக பண்பை காட்டுகிறது, அருவருப்பான் மதவாத பன்றிகளை அம்பலபடுத்தும் செங்கொடியின் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் !

  விடுதலை

 11. வேட்டுவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்று எந்த ஆதாரம் உள்ளது. வெள்ளாளர்கள் வந்தேறிகள் என்று நீ அங்கே உட்கார்ந்து கொண்டு பார்த்தாயா?

 12. கொங்கு பகுதியில் வேட்டுவக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழும் மக்கள் .

 13. ” கொங்கு மண்டல சதகம் ” படிக்கவம், வெல்லலார் வந்தேரிகல் என்ரு உல்லத்து.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s