அடிமைகளின் எழுச்சி! ரோமானிய கனவான்கள், பிரபுக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ரோமானியப் பேரரசு ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அடிமைகளை சிலுவைகளில் அறைந்து, உயிரோடு சித்திரைவதை செய்து, நரமாமிசத்தினை தின்று தீர்த்தாலும் நிம்மதியாக தூங்கவில்லை.
நித்தம் கனவில் அடிமைகளின் உரமேறிய கைகள். எத்தனை நாளைக்குத்தான் செத்து செத்து பிழைப்பது. ஆயிரக்கணக்கான அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த சொர்ணபுரியின் கனவான்கள் அதை எளிதில் இழக்க விரும்புவார்களா? ஆனால் காலம் அதை தொடராக அனுமதித்துதான் விடுமா? ஆண்டைகள் விரும்பித்தான் ஆகவேண்டும். அடிமைகள்! இனியும் அவர்களை அடிமைகளாக இருத்துவது தமக்குத்தாமே தோண்டிக் கொள்ளும் சவக்குழிகள் என்பதை உணர்ந்தனர். எழுச்சியுற்ற அடிமைகள் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர்.
தமது உழைப்பை கூலிக்கு விற்று வயிறு வளர்த்தாலும் இன்று அவர்கள் சுதந்திரமானவர்கள். ஓரளவு தமது விருப்பத்தின் அடிப்படையில் தமது வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரமானவர்கள். உழைப்பிற்கு, உற்பத்திக்கு கூலி கொடுக்கவேண்டிய நிலையானாலும் “உயிர் பயமற்ற” நிம்மதி கனவான்களை முதலாளியாக மாற்றியது. கிடைப்பது சொற்பமே என்றாலும் சுதந்திரத்தை சுவாசித்த அடிமைகள் முதளாலிகளின் பக்கம் திரண்டனர். எச்சசொச்ச நில பிரபுக்களும், அவர்களின் மன்னர்களும் முதலாளித்துவ மாற்றத்தால் தாம் இற்று விழுந்து கொண்டிருப்பதை தடுக்க முடியாமல் திணறித் தவித்தனர்.
காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றுவது முடியாத காரியமல்லவா! உலகை உருவாக்கும் உற்பத்தியின், உழைப்பின் மூலமான அந்த உழைப்பாளி இன்று முதலாளிகள் பக்கம். மன்னரகள் முதலாளிகளின் அரசாங்கங்களாக மாறினர். மாறாதவர்கள் முதலாளிகளின் படைகளால் துடைத்தெரியப்பட்டனர்.
அதுபோல மதங்களின் மூடநம்பிக்கைகளும் தகர்க்கப்பட்டு அறிவியல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 1000, 1500 ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ எழுச்சிகள் இந்தியா போன்ற கீழைநாடுகளில் 200, 300 ஆண்டுகளுக்கு முனபுதான் தலைகாட்டத் தொடங்கியது. இங்கு அடிமைகளின், குடியானவர்களின் எழுச்சிகூட ஏற்படவில்லைதான்.
மேற்கத்திய முதலாளிகள், தங்களின் சந்தைக்கான தேடலில் உலகையே தமது ஆளுகைக்கு கீழ் அடிபணியச் செய்ய ஆசைப்பட்டது, கீழை நாடுகளிலும் முதலாளித்துவத்தை கொண்டுவந்தது. அதன் வளர்ச்சி தரகு முதலாளிகளையும் ஏகாதியபத்தியங்களையும் உருவாக்கியது. கூடவே 500, 1000 ஆண்டுகளுக்குப் பின் தங்கியிருந் கீழை நாடுகளையும் 20ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகில் இணையாக நிறுத்தியது. இது முதலாளிதுவத்தின் மிகப் பெரும் சாதனைதான். இவ்வுலகம் தங்களின் சொர்க்க பூமியாக காலங்காலத்திற்கும் நிலைக்கும் என்பது முதலாளிகளின் கனவு. முதலாளித்துவ புரட்சியின் வளர்ச்சியினூடாக எகிரிப்பாய்ந்த அறிவியல் வளரச்சி, எந்திரங்களின் வரவு, தவிர்க்க இயலாத முதலாளித்துவத்தின் பொருளாதார விதி, தன்னை வாழவைத்த, தன்னை நம்பிவந்த பாட்டாளி வர்க்கத்தை கழித்துக்கட்டத் தொடங்கியது. வேலையில்லா பட்டாளத்தை உருவாக்கியது.
முதலாளித்துவத்தின் தோற்றம் முதல், தொழிலாளிகளை 16 மணிநேரம் கசக்கிப் பிழிந்தனர். அதற்கு எதிரான போராட்டங்களில் தன்னுயிரை தியாகம் செய்த அமெரிக்க பாட்டாளிகள் தமது வாரிசுகளுக்கு 8 மணி நேரவேலையை பரிசாகத் தந்தனர். இன்று அதற்கு 125 ஆம் ஆண்டு. இந்த நூற்றாண்டில், உலகை உருவாக்கும் தொழிலாளர்களின் எழுச்சி குறிப்பாக பிரான்ஸ், ருஷ்யா, போன்ற நாடுகளில் நடந்த எழுச்சிகள் அக் கனவையும் கலைக்கத் தொடங்கியது. அலறினர். சதி செய்தனர். மதங்கள் மற்றும் நிலபிரபுக்களுடனும் கைகோர்த்துக்கொண்டு பிற்போக்காளர்களின் பிரதிநியாக மாறினர்.
அந்தோ பரிதாபம்! மதங்களுக்கும் சதிகளுக்கும் பலியானான் தொழிலாளி. 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யமாட்டேன் என்று போராடிய தொழிலாளி, இன்று “எவ்வளவு நேரவேண்டுமானாலும் வேலை செய்கிறேன். வேலை கொடு. கூலியைக்கூட உன் விருப்பம்போல் கொடு” என்று முதாளிகளிடம் மண்டியிடும் அவலங்கள். கணிணித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் இதை நிறையவே காண்கிறோம். ஏன் இந்த அவலம்?
அன்று அவர்கள் கல்வியறிவற்ற அடிமைகள். ஆனால் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதை விரும்பினார்கள். இன்று இவர்கள் சுதந்திரமானவர்கள். கல்வியறிவில் உச்சானிக் கொம்புகள். ஆனால் எதையும் நுகரத்துடிக்கும் மண்புழுக்கள். இன்றைய இவர்களின் இந்த வாழ்க்கை பலரின் தியாகத்தில் விளைந்த கனிகள் என்பதை அறிந்தும் சமூக அக்கறையற்ற சுயநலமிகள். தான், தான்மட்டும், தனது திறமை என்ற மாயையில் வாழும் இவர்கள் அந்த மாயையிலிருந்தும், அதனை போதிக்கும் மதங்களின் கோரப் பிடியிலிருந்தும் விடுபடாதவரை, விடுவிக்கப்படாதவரை தொழிலாளி வரக்கத்தின் விடுதலை என்பது கானல்நீர்தான்.
மண்ணை தனியுடமையாக்கினோம். நிலத்தை இழந்தோம். கடலையும், நீரையும்கூட தனியுடமையாக்க துணை போனோம். அதனையும் இழந்துகொண்டிருக்கிறோம். காற்றையும் தனியுடமையாக்கி காசுக்கு விற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதனால் ….
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருவோம்!
புரட்சி செய்வோம்!
மடமையில் ஆழ்த்தும் மதங்களை ஒழிப்போம்!
இருப்பது அனைத்தையும் பொதுவிலாக்குவோம்!
எல்லாமும் எல்லோருக்கும் என்ற புது உலகைப் படைப்போம்!
நன்றி: தோழர் சாஹித்
தமிழ்மணம் திரட்டியில் இந்தவார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பரையோசை பதிப்பகம் தோழர்கள் சாஹித், குருசாமி மயில்வாகனன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
dear senkodi: vanakkam. thank u to share the May day essay . It is essential towards to present humanity. good post in time.
தோழர் வணக்கம்,
உங்களுடைய கவனத்திற்கு. மே நாள் குறித்து பொதுவாக ஒரு தவறான கருத்து பலரிடமும் நிலவுகிறது.
மே தினம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் கொண்டாட்ட நாள் அல்ல. அது அன்றைக்கும் அப்படி அல்ல இன்றைக்கும் அப்படி அல்ல நாளை சோசலிச நாட்டிலும் அப்படி இருக்காது.
எனவே, மே நாளை பரஸ்பரம் வாழ்த்து கூறும் நாளாக பார்ப்பது தவறு.
வணக்கம் தோழர்,
நீங்கள் குறிப்பிடுவது சரிதான். மே நாள் என்பது மதப்பண்டிகையோ, வெறும் கொண்டாட்ட நாளோ அல்ல. அது போராட்டத்திற்கான நாள், அந்த உணர்வுடன் தான் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வது. தற்போதைய வெற்றுக் கொண்டாட்டங்களில் வாழ்த்துக்கள் வழக்கமாக இருக்கிறது என்பதால், அடிப்படையை உணர்ந்து கூறப்படும் வாழ்த்தையும் நடப்பிலிருக்கும் வெற்று வாழ்த்துக்களோடு ஒப்பிட்டு ஒதுக்கவேண்டியதில்லை எனக் கருதுகிறேன்.
தற்போதைய வெற்றுக் கொண்டாட்டங்களில் வாழ்த்துக்கள் வழக்கமாக இருக்கிறது என்பதால், அடிப்படையை உணர்ந்து கூறப்படும் வாழ்த்தையும் நடப்பிலிருக்கும் வெற்று வாழ்த்துக்களோடு ஒப்பிட்டு ஒதுக்கவேண்டியதில்லை எனக் கருதுகிறேன்.
தற்போதைய வெற்று கொண்டாட்டங்களில் புத்தாடைகள் அணிவது வழக்கம்மாக இருக்கிறது என்பதால்,அடிப்படையை உணர்ந்து புத்தாடை அணிவதையும் நடப்பிலிருக்கும் வெற்று புத்தாடை அணிவதோடு ஒப்பிட்டு ஒதுக்க வேண்டியதில்லை என்றும் சில ஆண்டுகளில் புதிய செங்கொடிகள் கருதலாம்.
தற்போதைய வெற்று வழிபாடுகளில் இறைவனை வணங்குவது வழக்கமாக இருக்கிறது என்பதால் ,அடிப்படையை உணர்ந்து மார்க்சை வணங்கும் வழிபாட்டை நடப்பிலிருக்கும் வெற்று வழிபாட்டுடன் ஒப்பிட்டு ஒதுக்க வேண்டியதில்லை என்று அடுத்த சில ஆண்டுகளில் செங்கொடி பேரர்கள் கருதலாம்.
தோழருக்கு,
இது வெற்று வாழ்த்தோ உணர்ந்து கூறப்படும் வாழ்த்தோ எதுவாகினும் மே நாளுக்கு வாழ்த்து கூறுவது என்பது அரசியல் ரீதியில் தவறானது, ஏனெனில் 1886 ம் ஆண்டு மே தினத்தன்று என்ன நடந்தது ? சிகாகோ தொழிலாளர்களுடைய போராட்டம் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. அப்படிப்பட்ட கருப்பு நாளை வாழ்த்து கூறி கொண்டாட முடியுமா ?
@ இப்ராகிம், ஏன் இவ்வளவு வண்மம் ? உங்களுக்கு திறமையிருந்தால் இசுலாம் குறித்த தோழரின் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் அல்லது இசுலாத்தை கை கழுவுங்கள் அதை விடுத்து எதற்கு இந்த முரட்டுத்தனமான கோபம் ?
வணக்கம் தோழர் ,
ஹெமர்கட் சதுக்க துக்கத்தை மறப்பவன் துரோகி !!
ஹெமர்க்கெட்டில் கொல்லப்பட்ட தோழர்களை நினைவு கூர்வதே மே தினமாகும்.
இது ஒரு துக்க மற்றும் போராட்ட நினைவு நாளாகும்.
ஆனால் 8 மணி நேர வேலையே பெற்று தந்ததால் கொண்டாட்டமும் ஆகும் !!
தமிழ் கூறும் நிலைப்பாடும் முற்றிலும் உண்மையே.
“மே தினம்” தொழிலாளர்களின் எழுச்சி நாளில் சூளுரை ஏற்பொபோம் என்று தலைப்பு இருப்பதே சரியாகும். எனது தவறுக்கு சுய விமர்சனம் ஏற்றுக் கொள்கிறேன்.
தோழர் காதர் அவர்களின் கருத்து இங்கே சற்று கவனிக்கத் தக்கது.
##ஆனால் 8 மணி நேர வேலையே பெற்று தந்ததால் கொண்டாட்டமும் ஆகும் !!##
உண்மையான! விடுதலை கிடைத்தப் பிறகு இது கொண்டாட்ட நாளாக மாறும். அது வரை அந்த தியாகத்தை நெஞ்சிலேந்தி அவர்கள் வழிநடப்போம் என்று உறுதி ஏற்கும் எழுச்சிநாள்தான் “மே தினம்”
வணக்கம் தோழர் காதர்,
/////ஆனால் 8 மணி நேர வேலையே பெற்று தந்ததால் கொண்டாட்டமும் ஆகும் !! /////
எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் இரத்தம் சிந்தி பெறப்பட்டவை எனவே நாம் அதை கொண்டாட்ட நாளாக கடை பிடிப்பதில்லை அதே நேரத்தில் ‘மே நாள் வாழ்க’ என்கிறோம். அதன் பொருள் மே நாளில் வென்றெடுக்கப்பட்ட அந்த கோரிக்கைகள் வாழ்க என்பது தான்.
நம்முடைய அமைப்பான ம.க.இ.க
மே நாளை கொண்டாடுவதில்லை, மாறாக கடைபிடிக்கிறது அந்நாளில் உறுதியேற்கிறது. தமிழகத்தில் அல்லது இந்தியாவிலும் கூட நம்மைத்தவிர பெரும்பாலான கட்சிகள் கொண்டாடுகிறார்கள் என்று தான் நினைக்கிறேன்.
போலிக்கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல கொண்டாடுகிறார்கள் அது அனைவரும் அறிந்ததே ஆனால், ML கட்சி என்று சொல்லிக்கொள்கிற ம.ஜ.இ.க என்கிற A.M.K வின் ரசிகர் மன்றமும் கொண்டாடுகிறது என்பதை இந்த ஆண்டு தான் தெரிந்து கொண்டேன்.
தோழர்களுக்கு வணக்கம்
சுய விமர்சனம் ஏற்கிறேன்.
வணக்கம் சங்கர் அவர்களே
நீங்கள் இந்த செங்கொடியியை விட்டு எப்ப கழன்டு விடுவிர்கள் என்று எனக்கு தெரியவில்லை சரி நீங்கள் என்னுடன் விவாதத்திற்கு வர முடியுமா எல்லாம் ஆதாரம் கொண்டு இக்கட்டுறையை என்னால் தொடர முடியும் இருந்தாலும் எனக்கு அல்குர்ஆன் மர்திரம் போதும் உங்களுக்கு முடிந்தால் அல்குர்னில் இருந்து ஒரு தலைப்பை ஆரம்பிப்போம்