செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௬

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 6

மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

குரான் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

குரானின் பாதுகாப்பு குறித்து எழுதப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளுக்கும் நண்பர் ஒன்றாக பதிலளிக்க முயன்றிருக்கிறார். நண்பரின் மறுப்புக்குள் புகுமுன் அவர் முரண்பாடு என குறிப்பிட்ட ஒன்றை சரி செய்துவிடலாம். இறுதி செய்யப்பட்ட குரானின் காலத்தை தவறுதலாக முகம்மது இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கால் நூற்றாண்டுக்குப் பிறகு என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறானது தான். 15 ஆண்டுகளுக்குப்பிறகு என்பதே சரியானது. பதினைந்து ஆண்டுகள் என்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தாலும் 25 ஆண்டுகள் என எழுதியிருப்பது என்னுடைய கவனக்குறைவினால் நேர்ந்தது தான்.

பிரச்சனை என்று வந்துவிட்டால் ஒப்பிட்டுப்பார்க்க முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது என நான் குறிப்பிட்டிருந்ததை என்னுடைய அறியாமை என நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து நண்பருக்கு அறியாமை ஏதும் இல்லை என்பதில் அவர் உறுதியுடன் இருப்பாராயின், முகம்மது முன்னின்று தொகுத்த குரான் எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கட்டும்.

இதுகுறித்து நான் கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருந்தேன், “முகம்மதின் மரணத்திற்குப்பிறகான 15 ஆண்டுகளில் குரான் மாறவில்லை என்பதற்கு அப்போது இருந்தவர்கள் நேர்மையானவர்கள் இறை பக்தியுள்ளவர்கள் எனவே தவறு செய்திருக்க மாட்டார்கள் என்று ‘நம்பு’வதை தவிர வேறு ஆதாரம் இருக்கிறதா?” ஆனால் நண்பர் மீண்டும் அவரின் நம்பிக்கையையே பதிலாக கூறியிருக்கிறார். எங்கள் நம்பிக்கை என்று முடித்துவிட்டால் அதில் கேள்வி எழுப்ப ஒன்றுமில்லை. ஆனால், அதுதான் சரியானது அதுமட்டுமே சரியானது எனும் போது தான் அதில் கேள்விகள் எழுப்பவும் ஐயப்படவும் தேவை எழுகிறது. இது ஏதோ நமக்கு புரியவில்லை என்பதுபோல் எண்ணிக்கொண்டு எடுத்துக்காட்டு கூறியிருக்கிறார். ஆனால் இதில் புரியாமல் நின்று கொண்டிருப்பது யார்?

ஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார். அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது. நூலாக வெளிவந்தபின் கவனமாக கையெழுத்துப் பிரதி எரித்து அழிக்கப்படுகிறது. ஆனால் எழுத்தாளருக்கு மிக நெருங்கியவர் ஒருவர் அவர் எழுதியது பதினோரு கதைகள், அவர் உயிருடன் இருக்கும் வரையில் பதினோரு கதைகளும் படிக்கப்பட்டு வந்தன என்கிறார். மற்றொருவரோ அவரின் கதைகளை படித்த ஒருவர்தான் தொகுத்தார் எனவே பத்து கதைகள் தான் என்கிறார். இந்த இரண்டில் எது சரியானது என்பதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா? வேறு ஆதாரங்கள் வேண்டாமா?

பொதுவாக குரான் தொகுக்கப்பட்டதற்கு கூறப்படும் காரணங்களிலேயே சில குழப்பங்கள் இருக்கின்றன. குரானைப் பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அல்லா உறுதிகூறுகிறான். அதை அனைத்து முஸ்லீம்களும் நம்புகின்றனர். ஆனால் முகம்மது தன்னுடைய முயற்சியிலேயே அதாவது மனித முயற்சியிலேயே குரானை பாதுகாக்க முயற்சிக்கிறார். தொழுகையின்போது குரான் வசனங்களை ஓதுவதற்கு ஏற்பாடு செய்ததும், அந்த நேரத்து வசதிகளின்படி எழுதி வைத்ததும் மனித முயற்சியினால்தான். ஒருவேளை அல்லா பாதுகாப்பேன் என்று உறுதியளித்தது முகம்மதுவின் இந்த மனித முயற்சியைத்தான் என்றால் தொகுப்பதற்கு கூறப்படும் காரணமான மனனம் செய்தவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது அல்லாவின் உறுதிமொழிக்கு மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட மதிப்பேதும் இல்லை என முகம்மதின் தோழர்கள் கருதினார்கள் என பொருள் வருகிறது. மற்றொரு பக்கம் முகம்மது ஏற்பாடு செய்து எழுதிவைத்திருந்த குரான் வசனங்கள் இருக்கும்போது மனனம் செய்திருந்தவர்கள் இறந்துவிட்டனர் எனும் காரணமே மாற்றுக் குறைவானாதாக ஆகிவிடுகிறது.

அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் இருக்கும்போது உஸ்மான் மீண்டும் தொகுக்க வேண்டிய அவசியமென்ன? பல இடங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமென்றால் அபுபக்கர் தொகுத்த குரானையே படிகள் எடுத்து அனுப்பியிருக்க முடியும் எனும் நிலையில் உஸ்மான் மீண்டும் தொகுக்க முற்பட்டது ஏன்? வெறுமனே அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல் எனும் காரணத்தை முகம்மது ஏற்பாடு செய்து தொகுத்த குரானும் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு பொருத்திப் பார்த்தால் போதுமானதாக இல்லை.

அடுத்து, எழுதுகோல் காகிதம் மை குறித்து நண்பரின் மறுப்பைப் பார்த்தால், நான் கேட்டது ஒரு கோணத்திலும் அவர் மறுத்திருப்பது வேறொரு கோணத்திலும் இருக்கிறது. நான் கேட்டிருப்பது என்ன? வேத வசனங்கள் இறங்கும் போது அதை பாதுகாப்பதற்கு முகம்மது எழுதிவைக்கச் சொன்னபோது பேரீத்தம் மட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் இறங்கிய(!) வசனமோ எழுதுகோலையும் மையையும் பற்றி பேசுகிறது. இந்த முரண்பாட்டை சுட்டித்தான் இந்த வசனம் ஏன் இடைச் செருகலாக இருக்கக்கூடாது எனும் பொருளில் ஐயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு நண்பரின் மறுப்பு என்ன? முகம்மது காலத்தில் மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான். ஆம், முகம்மதின் கடைசி காலகட்டத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் மையைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு. மேற்படி வசனமோ மக்கீ வசனம் அதாவது மக்காவில் இறங்கிய வசனம். வெளிப்படையாக கேட்டால், நடப்பில் மட்டைகளில் எழுதிக்கொண்டிருந்தபோது கனவு வசனங்கள் மையை பயன்படுத்தி எழுதச் சொல்வது எப்படி?

அடுத்து, குரானின் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்வியை கேள்வியை எழுப்பியிருக்கும் ஒரு ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் தொகுப்பான முஸ்லீமில் இடம்பெற்றிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன். முகம்மதுவிற்கு மிகவும் விருப்பமான மனைவியான ஆய்சாவினால் அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த ஹதீஸ் முகம்மது இருக்கும்வரை அந்த வசனம் குரானில் ஓதப்பட்டு வந்தது என்பதையும் பின்னர் நீக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெளிவாகவே விளக்குகிறது. ஆனால் நண்பரோ இது ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் எனவே இதற்கு பதில் கூறுவது தேவையற்றது என்று கடந்து செல்கிறார். முஸ்லீமில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஹதீஸை ஆதாரமற்றது என யார் தீர்ப்பளித்தது? எந்த அடிப்படையில் இது ஆதாரமற்ற ஹதீஸ்? புஹாரியிலும், முஸ்லீமிலும் இடம்பெற்றிருக்கும் ஆதாரமற்ற ஹதீஸ்களின் பட்டியலை தந்தால் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். பிரச்சனை எழுந்தவுடன் அதாரமற்றது என போகிறபோக்கில் சொல்லிச் செல்வது நேர்மையானவர்களின் செயல் அல்ல. தவிரவும், \\இது தொடர்பான மேலதிகவிபரங்களை அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்// என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதுவரை அந்த ஹதீஸ் குறித்த விளக்கம் எதையும் அவர் அளிக்கவில்லை.

அடுத்து, நான் எழுதியிருந்தவைகளில் முரண்பாடு என சிலவற்றைச் சுட்டியிருக்கிறார். அவற்றில் முதலாவது, இதுதான் மெய்யான குரான் என பல விதங்களில் உலவத்தொடங்கியது எப்போது? இதில் அபூபக்கர் காலத்திலா, உஸ்மானின் காலத்திலா என்று நுணுகிப் பார்க்கும் அளவுக்கு இதில் பொருள் வேறுபாடு ஒன்றுமில்லை. மனனம் செய்தவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதால் முதல்முறையும், வேறுபாடுகள் வந்துவிட்டன என்பதால் இரண்டாம் முறையும் தொகுக்கப்பட்டது என்றால்; முதல் முறை தொகுக்கப்பட்டபோதே முகம்மது ஏற்பாட்டில் தொகுக்கப்பட்ட குரான் இருந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே முகம்மதுவின் மரணத்திற்கு பின் என பொதுவாக எழுதுவது போதுமானது.

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று பெரிய மசூதியாக பாதுகாக்கப்படுகிறது. இதுவும் நுணுகிப் பார்க்கும் அளவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லாதது. முதலிலிருந்தே மசூதியாக்கப்பட்டாலும், பிறகு விரிவாக்கத்தில் உள்வாங்கப்பட்டாலும் இது இஸ்லாத்திற்கு தேவையில்லாதது என்று விலக்கப்படவில்லையே. மட்டுமல்லாது இது எதற்காக கூறப்பட்டது என்பதை பார்க்க வேண்டாமா? முகம்மது அடக்கம் செய்த இடம் பாதுகாக்கப்படுகிறது, அவர் அணிந்திருந்த செருப்பு பாதுகாக்கப்படுகிறது, அவர் பயன்படுத்திய வாளுறை பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அவர் முன்னின்று தொகுத்த குரான் மட்டும் எரிக்கப்பட்டுவிட்டது. அந்த குரானை விடவா செருப்பும் மற்றவையும் முக்கியமாய் ஆகிவிட்டது? அல்லது செருப்பும் வாளுறையும் குரானைவிட இஸ்லாத்திற்கு நெருக்கமானதா?

இன்றைய குரான் பிரதிகளுக்கிடையில் வசன எண்களில் வித்தியாசம் இல்லையா? இருக்கிறது ஜான் டிரஸ்ட் வெளியீட்டுக்கும், பிஜே வெளியீட்டுக்கும் இடையில் வசன எண்களில் வித்தியாசம் இருக்கிறது. வசன எண்கள் அடையாளத்திற்குத்தான் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. இப்போது வசன எண்களும் வரிசையும் அவசியமானதல்ல எனக்கூறும் நண்பர் தான் வரிசை சரியாக இருக்காது என்பதால் முகம்மதின் முயற்சியிலான குரான் அழிக்கப்பட்டதையும் சரிகாண்கிறார்.

கடைசியாக தவறுகள் நிறைந்துள்ள கம்யூனிசத்தில் என்றொரு உருவத்தையும் காட்டுகிறார். கம்யூனிசத்தில் தவறுகள் நிறைந்திருக்கிறது என்பது நண்பரின் நம்பிக்கை என்றால் அதில் குறுக்கிடுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் அவரின் நம்பிக்கை சரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. மாறாக அது சரியானது என அவர் நினைத்தால், கம்யூனிசத்தின் தவறுகள் குறித்து ஒரு தனிப்பதிவு எழுதட்டும், பதிலளிக்க நாம் தயார்.

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


17 thoughts on “செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௬

 1. ////ஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார். அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா? வேறு ஆதாரங்கள் வேண்டாமா?////
  உங்கள் எழுத்தாளருடன் இருந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே .அந்த கதைகளை தினசரி யாரும் படிக்க வில்லை.அவற்றினை மனனம் செய்வது கடமையாக கொள்ளவில்லை.ஒரு எழுத்தை கூட மாற்றினால் அது இமாலாயத் தவறு என்று அந்த கதை எழுத்தாளர் காலத்தில் யாரும் பொருட் கொள்ளவில்லை.இது ஒருபுறம் இருக்க ,
  மற்றவர் பத்து கதைகள்தான் என்றதும் முதலாமனவர்,அவர் பதினோராவது கதையை தெரிந்தவர்களை அழைத்து தன்னுடைய அந்த பதினோராவது கதையை அந்த எழுத்தாளர் சொன்னதை கேட்டதை அவர்கள் மூலம் நிருபிக்கிறார் அந்த பதினோராவது கதை சொல்லப்பட காலத்தில் பத்து கதை காரர் ஊரில் இல்லாமல் வெளியூர் சென்றதையும் அதனால் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதையும் அவர் தொகுத்த பதினொன்றும் எழுத்தாளருக்கு உரியது தான் என்று நிருபணம் ஆகிறது.

 2. ////அதை பாதுகாப்பதற்கு முகம்மது எழுதிவைக்கச் சொன்னபோது பேரீத்தம் மட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் இறங்கிய(!) வசனமோ எழுதுகோலையும் மையையும் பற்றி பேசுகிறது. இந்த முரண்பாட்டை சுட்டித்தான் இந்த வசனம் ஏன் இடைச் செருகலாக இருக்கக்கூடாது ////
  பேரித்த மட்டைகளிலும் எலும்புகளிலும் மையை பயன்படுத்தி எழுது கோலைக் கொண்டு எழுதி இருப்பார்கள் என்று தான் இங்கு அர்த்தம் கொள்ள வேண்டும் .இதில் முரண்பட ஒன்றும் இல்லை.இல்லாத முரண்பாட்டை தேடி செங்கொடி அலைய வேணாம்.

 3. தைரியமாக இஸ்லாமின் ஓட்டைகளை எடுத்துரைக்கும் சென்கொடிக்கு சல்யூட்

 4. சில கேள்விகள்.
  1.குரான் என்பது வஹி(இறைச்செய்தி)யா?
  ஆம்/இல்லை

  2.இது இறை தூத்ர்களுக்கு மட்டுமே வருமா?
  ஆம்/இல்லை

  3.குரான் என்பது அக்கால அரபிகளின் பயன்பாட்டில் இருந்த வார்த்தையா?

  4.குரான் புத்தகத்தில் வரும் குரான் என்னும் வர்த்தை ,ஒவ்வொரு முறையும் இறங்கிய வஹியை குறிக்கிறதா?
  ஆம்/இல்லை

  5.அரபி மொழியில் முதலில் எழுதப்பட்ட புத்தகம் குரானா?
  ஆம்/இல்லை

  6.குரான் ஐ விளக்க் பயன்படும் அரபி இலக்கணம் குரானுக்கு பிறகே தோன்றியது.
  சரி/தவறு

  7.உலகில் உள்ள‌ பழைமையான் குரான் பிரதிகள் எவை?

  8.அனைத்து பழைய பிரதிகளும் ஒரே எழுத்துருவில் எழுதப்பட்டு உள்ளதா?
  ஆம்/இல்லை

  9.பழைய குரான் பிரதிகளும் இப்போதைய குரானும் ஒப்பிட்டால் ஒன்றாக இருக்குமா?
  ஆம்/இல்லை

  10.இப்போது உலகில் உள்ளஅனைத்து குரான்களும் அட்சரம் பிசகாமல் ஒரே மாதிரி உள்ளனவா?
  ஆம்/இல்லை

  (தொடரும்)

 5. _ஆடு குரான் வசனத்தை தின்று விட்டது:திருமதி ஆயிசா முகமது
  _______
  Sunan Ibn Majah, Book of Nikah, Hadith # 1934),Sunan Ibn Majah, Volume 2, Page 39,Musnad Imam Ahmad, Volume 6, Page 269

  Narrated Aisha ‘The verse of stoning and of suckling an adult ten times were revealed, and they were (written) on a paper and kept
  under my bed. When the Messenger of Allah (SAWW.) expired and we were preoccupied with his death, a goat entered and ate away the paper.”
  ______________
  அதாகப்பட்டது,
  விபசாரத்திற்கு கல்லெறிந்து கொள்வதும்(ரஜ்கி) இன்னொரு விவகாரமான வசனமும் இறங்கியதாகவும் இந்த ஹதிது கூறுகின்றது.பொதுவாக இது ஹார்லிக்ஸ் அருந்தாத சக்திய்ற்ற ஹதிது என்று நண்பர்கள் கூறுவர்.இது அவர்கள் பாணி என்றாலும் கீழ்க்காணும் ஹதிதில் கல்லெறிந்து கொல்வது அல்லாவின் சட்டம் என்று திரு முகமது கூறி கல்லெறி தண்டனை நிறைவேற்றுகிறார்.
  ______________________

  2725. அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.
  கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். ‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்” என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், ‘சொல்” என்று கூறினார்கள. அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்” என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) ‘உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டாள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.
  Volume :3 Book :54
  ____________

  1.கல்லெறிந்து கொலவது அல்லாவின் சட்டமா?
  ஆம்/இல்லை
  2. அல்லாவின் சட்டம் குரானில் இருக்க வேண்டுமா?
  ஆம்/இல்லை
  3.அப்போது குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா?அதாவது குரானின் மீதி செய்திகலை வேறு புத்தகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாமா?
  .திரு பி.ஜே கூறுகிறார் ஆம் என்று.திரு பி.ஜேதான் குரானில் கூறாத இறைசெய்தி உண்டு என்று கூறுவதை கேளுங்கள்.
  _______________
  http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/258/

  258. குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

  இவ்வசனத்தில் (66:3) “இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான்.

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். “உங்களுக்கு இதை யார் சொன்னார்?” என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது.

  “அனைத்தையும் அறிந்த, நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான்” என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விடை.

  அதாவது “உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொரு வரிடம் சொல்லி விட்டார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான்.

  “குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது” என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.

  அதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும்.

  குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

  இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது.

  முஸ்லிம் சமுதாயத்துக்கோ, மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும்? பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான்.

  குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது.

  11.07.2009. 03:28

 6. SANKAR, on மே10, 2011 at 10:36 மாலை said:
  சில கேள்விகள்.

  1.குரான் என்பது வஹியா?

  Yes.

  Inspired.

  2.இது இறை தூத்ர்களுக்கு மட்டுமே வருமா?

  No.

  For All.

  3. Text/Language of குரான் அக்கால அரபிகளின் பயன்பாட்டில் இருந்த வார்த்தையா/linguistics?

  Yes

  4.குரான் புத்தகத்தில் வரும் குரான் என்னும் வர்த்தை ,ஒவ்வொரு முறையும் இறங்கிய வஹியை குறிக்கிறதா?

  Inspired and recited.

  5.அரபி மொழியில் முதலில் எழுதப்பட்ட புத்தகம் குரானா?

  No.

  6.குரான் ஐ விளக்க் பயன்படும் அரபி இலக்கணம் குரானுக்கு பிறகே தோன்றியது.

  No.

  7.உலகில் உள்ள‌ பழைமையான் குரான் பிரதிகள் எவை?

  www.

  8.அனைத்து பழைய பிரதிகளும் ஒரே எழுத்துருவில் எழுதப்பட்டு உள்ளதா?

  No.

  9.பழைய குரான் பிரதிகளும் இப்போதைய குரானும் ஒப்பிட்டால் ஒன்றாக இருக்குமா?

  Non-zero-error.

  10.இப்போது உலகில் உள்ளஅனைத்து குரான்களும் அட்சரம் பிசகாமல் ஒரே மாதிரி உள்ளனவா?

  No.

  With metaphorical changes in font /vowels/consonants for non-Arabs/illiterates.

  quranist@aol.com

 7. SANKAR, on மே10, 2011 at 11:28 மாலை said:

  1.கல்லெறிந்து கொலவது சட்டமா?

  No.It is barbaric.

  2. சட்டம் குரானில் இருக்க வேண்டுமா?

  Yes.

  3.அப்போது குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா?

  No.

  quranist@aol.com

 8. PJ said
  11.07.2009. 03:28

  குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

  ——————————————————————————————————————-

  தூதர்,மரியம் மற்றும் தேனீக்கும் வஹீ அறிவிக்கப்பட்டது.

  அந்தச்செய்தியும் குரானில் இடம்பெறுகிறது.

  66:03. God revealed it to him,

  03:43. O Mary, be devoted to your Lord and prostrate and kneel with those who kneel.”

  16:68. your Lord inspired to the bees.

  பெற்ற வஹீயை தூதரோ மரியமோ தேனீயோ தனிப்புத்தகம் போட்டுவிடவில்லை.
  ——————————————————————————————————————–
  PJ said:
  11.07.2009. 03:28

  (Question and Answer)

  குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது.
  ——————————————————————————————————————–

  அப்ப நிறைய புத்தகங்கள் படிக்க‌வேண்டியிருக்கும்.
  ——————————————————————————————————————–
  Conclusion:

  வஹீ வரும் அனைவருக்கும் ஆனால்

  வஹீயெலாம் குர்ஆன் ஆகா.
  ——————————————————————————————————————–

  quranist@aol.com

 9. 6830. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
  ……………………
  ………………………..
  அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, ‘நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்’ (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)
  நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை’ என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.
  அறிந்துகொள்ளுங்கள்:
  ………………………………

  Volume :7 Book :86

 10. //குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா?

  No.//

  முகமதுவிற்கு முன் வந்த தூதர்களும் அல்லாவால் அனுப்பப்பட்டவர்கள் என சொல்கிறார்கள் ஆனால் குரானை விட வேறு இறைசெய்தி இல்லை என்கிறார்கள்!

  சரியான குழப்பவாதிகளா இருக்காங்களே!

 11. வால்பையன், on மே11, 2011 at 7:17 மாலை said:
  //குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா?
  No.//
  முகமதுவிற்கு முன் வந்த தூதர்களும் அல்லாவால் அனுப்பப்பட்டவர்கள் என சொல்கிறார்கள் ஆனால் குரானை விட வேறு இறைசெய்தி இல்லை என்கிறார்கள்!
  சரியான குழப்பவாதிகளா இருக்காங்களே!
  ——————————————————————————————————————–

  தோழரே,

  முஹமதுக்கு முன் சென்ற நன்னெறியாளர்களின் “செய்தி”யையும் உள்ளடக்கிய கடைசி ஏற்பாடு தான் குரான் ஆகும்.

  quranist@aol.com

 12. வஹீ என்றால் என்ன ?

  66:3. And when the prophet disclosed a matter in confidence to some of his wives, then one of them spread it, and God revealed* it to him, he recognized part of it and denied part.

  66:3.இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத்* தந்தான்”

  மனதின் உள்ளுணர்வு*
  ——————————————————————————————————————–
  1.பீஜேயின் விளக்கம்:

  “குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது” என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.
  அதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும்.

  1.பீஜேயின் முடிவு:

  ஆக குரான் மட்டும் போதாது !
  ——————————————————————————————————————–
  2.பீஜேயின் விளக்கம்:

  குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.
  இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது.
  முஸ்லிம் சமுதாயத்துக்கோ, மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும்? பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான்.
  ——————————————————————————————————————–
  பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும்?
  ——————————————————————————————————————–
  2.பீஜேயின் முடிவு:

  பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும்?

  ஆகவே

  குரான் மட்டும் போதும்.

  Conclusion:

  93:3.Your Lord has not left you, nor did He forget.
  ——————————————————————————————————————-
  66:03. God revealed it to him,

  முஹமதுக்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட “ஸஹீஹுல் புஹாரி/முஸ்லிம்.

  2:31.And He taught Adam the description of all things,

  ஆதமுக்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட “ஸஹீஹுல் ஆதம்”

  03:43. O Mary, be devoted to your Lord and prostrate and kneel with those who kneel.”

  மரியத்திற்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட “ஸஹீஹுல் மரியம்”

  16:68. your Lord inspired to the bees.

  தேனீக்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட “ஸஹீஹுந்நம்ல்”
  ——————————————————————————————————————–

  quranist@aol.com

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s