நொய்டா விவசாயிகளும் ராகுலின் போராட்டமும்

கடந்த சில தினங்களாகவே உத்திரப்பிரதேசத்திலுள்ள நொய்டா விவசாயிகள் கலகம் செய்துவருகிறார்கள். இதை காவல்துறையை இறக்கிவிட்டு முறியடிக்க முயன்றதில் இரண்டு விவசாயிகள் உட்பட நான்குபேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.

யமுனா எக்ஸ்பிரஸ் வே என்ற பெயரிலான நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக உத்திரப்பிரதேச அரசு விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இதற்காக கொடுக்கப்படவிருக்கும் இழப்பீட்டுத் தொகை, சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே அதை அதிகப்படுத்தித் தரவேண்டும். நெடுஞ்சாலை பயன்பாடு போக மீதமிருக்கும் நிலத்தை விவசாயிகளிடமே திருப்பித்தரவேண்டும். இதுதான் விவசாயிகள் வைத்திருக்கும் கோரிக்கைகள். இந்த கோரிக்கைகளை வலியிறுத்தி கடந்த ஜனவரியிலிருந்து அந்தப் பகுதி விவசாயிகள் அமைதியான முறையில் போராடிவருகிறார்கள்.

ஆனால் இதுவரை உபி அரசு விவசாயிகளை அழைத்துப் பேசி இழப்பீட்டை அதிகரிப்பது குறித்து எதுவும் செய்யவில்லை. மட்டுமல்லாது மேலதிகமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தரகு முதலாளிகளிடம் கொடுத்து கேளிக்கை, நட்சத்திர சொகுசு விடுதிகளை கட்டும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது. இதுகண்டு ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

விவசாயிகளின் கோரிக்கைகளில் இருக்கும் நியாயம் குறித்து எந்தக் கவலையும் கொள்ளாத அரசு, அதை ஒடுக்குவதற்காக காவல்துறையை ஏவி விட்டது. விவசாயிகளின் தாக்குதலில் இரண்டு காவலர்களும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு விவசாயிகளும் கொல்லப்பட்டனர். நான்கு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடியபோது கண்டுகொள்ளாத செய்தி ஊடகங்கள் தற்போது பரபரப்பிற்காக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

உத்திரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளாக இருக்கும் அனைத்தும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. எல்லோருமே இழப்பீட்டுத்தொகையை அதிகரித்து வழங்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்களே தவிர சந்தை விலைக்கு நிகராகவோ, அதிகமாகவோ வழங்கப்பட வேண்டும் என்பதை கூற மறுக்கிறார்கள். மட்டுமல்லாது விவசாயிகளிடம் பறித்து தரகு முதலாளிகளிடம் வழங்குவது குறித்து மறந்தும் கூட மூச்சுவிட மறுக்கிறார்கள். என்றால் விவசாயிகளின் போராட்டத்திற்கான இவர்களின் ஆதரவு எத்தன்மையது?

தொழில்வளர்ச்சி என்று காரணம் கூறி பல்வேறு வழிகளில் அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளிடமிருந்து நிலப்பறிப்பு நடந்துகொண்டு தான் இருக்கிறது. அடிமாட்டு விலையில் பெறப்படும் நிலங்கள் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கைகளுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி எந்த ஓட்டுக் கட்சியும் இதில் விதிவிலக்கு இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களுக்கு ஆதரவாக வசனம் பேசுவதும், ஆளும்கட்சியாகிவிட்டால் நிலத்தைப் பறிப்பதும்தான் வாடிக்கை. அந்த வகையில் ஓட்டுக்காகத்தான் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பதாக நாடகமாடுகின்றனவே தவிர நிலப்பறிப்புக்கு எதிராகவோ அவற்றின் அடிநாதமான தனியார்மயம் தாரளமயத்திற்கு எதிராகவோ எந்த ஓட்டுக்கட்சியும் கிடையாது.


காங்கிரசின் இளவரசரான ராகுல் காந்தி இன்னும் ஒருபடி மேலேறி இருசக்கர வண்டியில் சென்று நாடகம் ஒன்றையும் நடத்திக்காட்டியிருக்கிறார். பொதுவாகவே மன்மோகன் சிங் அரசு அணு ஆற்றல் ஒப்பந்தம், அணுவிபத்து இழப்பீட்டு மசோதா, காட்டுவேட்டை, விக்கிலீக்ஸ் அம்பலங்கள் உள்ளிட்டு அனைத்திலும் தனியார்மய் தாசராக, அமெரிக்க அடிவருடியாக இருப்பது இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனும் அளவுக்கு வெளிப்பட்டு நாறியிருக்கிறது. இதற்கு மாற்றாக முடிசூடக் காத்திருக்கும் ராகுலை ஏழைப் பங்காளனாக முன்னிருத்துவது சில காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரும் குடிசையில் படுத்துறங்குகிறார், மண் சுமக்கிறார், ரயிலில் சாதரண பெட்டியில் பயணிக்கிறார். இப்போது இருசக்கர வண்டியில் வந்து சாலையில் அமர்ந்து போராடினார் என்று கைதாகி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றப்படி, மக்களுக்கு எதிராக நாடு தனியார்மயத்தில் ஊறிக்கொண்டிருப்பதோ, அமெரிக்காவின் கலனி நாடாக மாறிக்கொண்டிருப்பதோ அவருக்கு கவலைக்குறிய விசயங்களல்ல. மாறாக பட்டம் தரிக்குமுன் மக்களிடம் அறிமுகம் வேண்டும் என்பதற்காகவும், கிளர்ந்து எழும் மக்கள் போராட்டங்களை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தி திசை திருப்புவதற்காகவும் இவை அரங்கேறுகின்றன.

இதற்கிடையே ராஷ்ட்ரிய லோக்தள கட்சித்தலைவர் அஜித்சிங் மன்மோகன் சிங்கை சந்தித்துவிட்டு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக விரைவில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார். அதாவது லோக்பால் நிறைவேறினால் ஊழல் ஒழிந்துவிடும் என நம்பச் சொல்வது போல, இந்த மசோதா நிறைவேறினால் மக்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்துவிடும் என நம்பச் சொல்கிறார்கள். இந்த மசோதா இழப்பீடு வழங்குதல் எனும் போர்வையில் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக்கும் காரியத்தைத்தான் செய்யப்போகிறது. இதுவரை கொண்டுவரப்பட்ட அத்தனை மக்கள்விரோதச் சட்டங்களும் மக்களின் நலனை முன்னிட்டு இயற்றப் படுவதாகக் கூறித்தான் கொண்டுவரப்பட்டன.

விவசாயிகளின் இந்தக் கிளர்ச்சி, இழப்பீடு கேட்பதோடு முடிந்துவிடக் கூடாது. சாராம்சத்தில் இது இந்த நாட்டின் பொருளாதாரக் கொளகையோடு பின்னிப் பிணைந்தது என்பதை உணர்ந்து அதை நோக்கித் திரும்பும் போது தான் இந்தப் போராட்டம் முழுமையடையும்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

5 thoughts on “நொய்டா விவசாயிகளும் ராகுலின் போராட்டமும்

 1. எம்,ஜி,ஆர் மாதிரி ஹீரோயிசம் செய்யும் ராகுல் காந்திய காரித்துப்பி மக்கள் சாணியை கரைத்து ஊற்ற வேண்டும். அப்போது தான் ஹீரோயிச ம் பண்ணும் பல பேர் ஹீரோயிசம் பண்ணாம மக்கள் எதிர்ல சீன் போடாமாட்டானுங்க.

 2. தோழர்களே,

  இன்னும் காவல் தெய்வங்களாக யாரையும் நம்பாமல் அனைத்து ஓட்டுப்பொறிக்கி அரசியல் கட்சிகளையும் மற்றும் நாடகப்புரட்சி இயக்கங்களையும் கைகழுவிவிட்டு ஒற்றுமையுடன் நாம் அனைவரும் ஒன்றுபட்டு ,

  90:04. We have evolved man to struggle.

  60:01. mobilizing to struggle in My cause,

  76:22. and your struggle is appreciated.

  ஆதிக்கவெறியர்களுக்கும் கொடிய அரசுகளுக்கு எதிராகவும் வஞ்சிக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட‌ விவசாய‌ ,ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்களுடைய‌ முன்னேற்றத்திற்காகப் போராடுவோம்.

  8:39.And fight them all until there is no more oppression,

  quranist@aol.com

 3. “பழைய கு(தி)ருடி கதவை திறடி”

  தமிழக மக்களின் முயற்சியால் ஜெயலலிதா முதல்வராகிறார். கருணாநிதி குடும்பத்தின் சொத்தும் குடும்ப‌அரசியல் ஆகியவை தமிழ் மக்களிடையே வெறுப்பையும் பொறாமைத்தீயையும் வளர்த்து மக்களை மனநலம் குன்றச்செய்திருக்கிறது.இம்முறை அதிகமான மக்கள் தேர்தலில் வாக்க‌ளித்திருப்பது இதை உறுதிசெய்கிறது.மேலும் இந்த‌ தேர்வு முறை சரியானது தான் என்ற அவர்களின் “மனநிலை”யையும் பிரதிபளிக்கிறது.

  தேர்தல் முறையும் வேட்பாளர் வாக்காளர் தகுதியையும் ஆராயும்போது முதலாளிகள் மற்றும் அதிகாரவர்க்கம் மேலோங்கவும் உழைப்பாளிவர்க்கம் மேலும் தாழ்த்தப்பட‌வும் தேர்தல் சாசனம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது என்பது சில சமூக ஆர்வலர்களுக்கு மட்டுமே புரிகிறது.மக்களில் பெருபான்மையினரால் உணரப்படாத தத்துவமாகவே ஜனநாயகம் உள்ளது.மக்கள் தாங்கள் ஆளப்படுவதையும் ஆட்டுவிக்கப்படுவதையும் அடக்கி ஒடுக்க‌ப்படுவதையும் சுரண்டப்படுவதையும் அடிமைக்கல்வி முறையால் மூளைச்சலவை செய்யப்படுவதையும் அறியாமலேயே உள்ளனர்.

  இனாம்,இலவசம்,இட‌ஒதுக்கீடு என்று தானம் பெற‌த்துடிக்கும் சிற்றின்பப்பிரியர்களாகவும் மீடியாக்களின் புரட்(டு)சியால் உண்மை எது என அறியாமல் பொய்யை மெய்யாகவும் இலகுவான வாழ்க்கை முறையறியாமல் சிக்கலான வாழ்கை முறையைத்தேடி அதிகப்பொருள்/செல்வம் சேர்க்கையே இவ்வுலகவாழ்வு என்றெண்ணி கடுமையான‌ பொருளாதாரச்சிக்கலில் உழன்று தவிப்பது வேதனையளிக்கிறது.சக மனிதனுக்கு உதவுவதே மனிதம் என்ற சிந்தனையிலிருந்து தவறி அது மூடத்தனம் பாமரத்தனம் என்றும் “தற்குறி”யாக பரிணாமம் பெற்றுவருவது மனித இனம் இப்பிரபஞ்சத்தில் “தற்காலிக நிகழ்வு” என்ற சிந்தனைக்குட்படுகிறது.

  இயற்கை நமக்கு இலவசமாக அளித்தது இந்த பூமி நாம் இந்த பூமியின் புத்திரன் என்பதையும் அறியாது தானம் பெறும் நிலையில் “நாம் யார்” “எதற்காக நாம்” என்ற நிலை அறியாமல் வாழ்வது அறிவுச்சமூகத்திற்கு கவலையளிக்கின்றது.

  இதிலிருந்து விடுபட மனிதம் ஒன்று சேர்ந்து போராடுவது தவிர வேறு வழியில்லை.

  8:39.And fight them all until there is no more oppression,

  அவ்வாறு செய்யத்தவறினால்

  8:73.If you do not do this, then there will be oppression on Earth and great corruption.

  இறுதியாக தமிழக வாக்காளர்களுக்கு முதல்வர் என்ன செய்யப்போகிறார் ?

  2:205. And if she gains power, she seeks to corrupt the Earth and destroy its crops,

  and people’s lineage. God does not like corruption.

  தரகுமுதலாளிகளுக்கும் தனவந்தர்களுக்கும் தமிழகம் தாரைவார்க்கப்படும்.

  தமிழக மக்களுக்கு இனாம் இலவசம் இடஒதுக்கீடு என்ற “எலும்புத்துண்டு”
  தொடரும்…,

  quranist@aol.com

 4. Is th End of Pseudo Communist Marxists in India May 13,2011 ?

  Is the End of The World May 21st, or October 21st for You?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s