இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 16

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 16

“டிராட்ஸ்கியின் கொள்கைத் திட்டத்திலும் எண்ணங்களிலும் ஏற்பட்ட இன்னொரு மாற்றமா அல்லது வேறு காரணமா என்பதை நான் அறியேன்” லெனின் 

1917இல் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றிய பின்பும், டிராட்ஸ்கிய குழுவுக்கும் லெனினின் தலைமையிலான கட்சிக்கும் இடையில் தொடர்ச்சியான முரன்பாடுகள் நீடித்திருந்தன. 1918 துவக்கத்தில் புரட்சி நடைபெற்று சிறிது காலத்தில் ஜெர்மனிய சோவியத் சமாதான உடன்பாடு தொடர்பாக, கடுமையான மோதல் எற்பட்டது. கட்சியில் இதுபற்றி முரண்பாடுகள் இயற்கையே என்ற போதும், கட்சியின் பெரும்பான்மையை முடிவுக்கு முரனாகச் சென்றான் டிராட்ஸ்கி. தனது சிறுபான்மை கருத்தை தன்னிச்சையாக அமல் செய்ய முயன்றதன் மூலம், கட்சியின் உயிரோட்டமான ஜனநாயக மத்தியத்துவத்தையே மீறுமளவுக்குச் சென்றான். 

 

ஜெர்மனியுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்வது தொடர்பாக லெனினுக்கும், டிராட்ஸ்கிக்கும், மற்றும் மூன்றாவது அணிக்கும் இடையில் எற்பட்ட கருத்து முரண்பாட்டின் தொடர்ச்சியில், சமாதான ஒப்பந்தம் கையெழுத்து இடப்படவேண்டும் என்ற முடிவுக்கு கட்சி வருகின்றது. இருந்த போதும் டிராட்ஸ்கி முதற் சுற்று பேச்சுவார்த்தையின் போது கட்சியின் முடிவை மீறி, தனது சொந்தக் கொள்கையை அமலுக்கு இட்டுச் செல்கிறார். இதனால் சோவியத்தின் மீது ஜெர்மனிய தாக்குதல் நடந்ததுடன், பல பிரதேசத்தை சோவியத் இழந்து விடுவதில் முடிந்தது. கட்சி முடிவுக்கு அமைய தொடர்ந்தும் சமாதான உடன்பாட்டை செய்ய மறுத்ததுடன், கட்சிக் கட்டுப்பாட்டை எற்க மறுத்த நிலையில் தனத பதவியை துறந்தான். இதை அடுத்து சமாதானப் பேச்சு வார்த்தையில் டிராட்ஸ்கி கலந்து கொள்ளாமலேயே, கடுமையான நிபந்தனையுடன் கூடிய ஒப்பந்தைத் செய்ய வேண்டிய அவலம் லெனினுக்கு எற்பட்டது. இவை தொடர்பாக கட்சியில் நடந்த விவாதத்தின் போது, தனது திட்டத்தை ஏற்க கோரினான். இதை நிராகரித்த கட்சியை எதிர்த்து டிராட்ஸ்கி தனது அயல்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தான். லெனின் செய்த இந்த ஒப்பந்தத்தை துரோகத்தனமானது என வருணித்த டிராட்ஸ்கி, லெனினுடன் மோதினான். பதவியை விட்டு விலகியதுடன் லெனின் தோல்வியடையப் போகும் சூழலை தனக்கு சாதகமாக மாற்றும் தருணத்துக்காக காத்துக்கிடந்தான்.  இதன் மூலம் லெனுக்கு துரோக பட்டம் சூட்டவும் முனைந்தான்.

 

இந்த ஒப்பந்தம் பாட்டாளி வர்க்கத்துக்கு செய்த துரோகம் என்று லெனினை குற்றம்சாட்டிய டிராட்ஸ்கி, லெனினை தூற்றினான். லெனின் இதற்கு பதிலளிக்கும் போதுதோழர் டிராட்ஸ்கி இது உண்மையான துரோகம் என்கின்றார். இது முற்றிலும் தவறான கருத்து என்று நான் கூறுகின்றேன். …இப்போது இந்தப் பிசாசுச் சமாதானத்தினை ஏற்காதவன், இதில் கையெப்பமிட விரும்பாதவன் வெறும் வாய்செல்லில் வீரனே தவிர போர் தந்திரியல்ல. இதில் தான் சங்கடம். மத்திய கமிட்டி உறுப்பினர்கள் எனக்கு, “பலவீனத்தின் பிரகடனம்” (துரோகம்) என்றெல்லாம் எழுதும் போது, அவர்கள் அதிகத் தீங்கு விளைவிக்கின்ற வெறுமையான…. வார்த்தைகள் மூலம், கட்சித் தலைமையையே பாட்டாளி வர்க்கத்தின் முன் பலவீனப்படுத்தினர்”  1917 இல் டிராட்ஸ்கி லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க கட்சியில் இணைந்த போதும், தனது பாட்டாளி வர்க்கம் அல்லாத கருத்துகளையே தொடர்ச்சியாக முன்வைத்தான். லெனினையே துரோகி என பகிரங்கமாக தூற்றி எழுதினான். டிராட்ஸ்கிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிராக லெனின் 1917இன் இறுதியில் தொடங்கிய போராட்டத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நீடித்த காலம் வரை தொடர வேண்டியிருந்தது.

 

இது போன்று டிராட்ஸ்கி 1920களில் லெனினுடன் முரண்பட்டு தொழிச்சங்கங்களின் ஜனநாயகம் பற்றி ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டார். இது மார்க்சிய அடிப்படையை நிராகரித்ததுடன், பாட்டாளி வர்க்க சர்வாதிகார அமைப்புடனும் மோதியது. மார்க்சியமல்லாத இந்த பிரசுரம் பற்றி லெனின் எனது விமர்சனத்துக்குரிய முதன்மையான விசயம் தோழர் டிராட்ஸ்கியின் சிறு பிரசுரமான “தொழிற்சங்கங்களின் பாத்திரமும் கடமைகளும்” என்பதாகும். மத்திய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுரைகளுடன் இப்பிரசுரத்தை ஒப்பிடும் போது, அதை மிக எச்சரிக்கையாகப் படிக்கும் போது, அது கொண்டுள்ள ஏராளமான தத்துவத் தவறுகளையும் வெளிப்படையான குழப்படிகளையும் கண்டு பெரிதும் வியப்படைகிறேன். … பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் சாரத்தைப் பாதிக்கக் கூடிய ஏராளமான தவறுகளை அவர் செய்துள்ளார் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்” என்று ஆச்சரியத்துடன் லெனின் எழுதுகிகின்றார். தொடர்ந்தம் மார்க்சியமல்லாத இந்த திட்டத்தை லெனின் அம்பலம் செய்தார். “… தோழர் டிராட்ஸ்கி தனது ஆராய்ச்சி உரைகளில் “வேலைத்திட்டத்தினை வகுத்து முன்வைக்கப்பட்டுள்ள இலக்கை நோக்கி நாம் கடந்த காலத்தில் எவ்விதமான முன்னேற்றமும் காணவில்லை, மாறாக உண்மையில் அதிலிருந்து பின்வாங்கியே இருக்கின்றோம்” என்று கூறுகின்றார் இந்த அறிவிப்புக்கு ஆதாரம் இல்லை. இது தவறு எனறு கருதுகிறேன். தொழிற் சங்கங்கள் “தாமே” இதை ஒப்புக்கொள்கின்றன என்று டிராட்ஸ்கி விவாதத்தின் போது கூறியது போன்று சொல்வது இதற்கு சான்றாகாது. …நாம் ஏன் பின்வாங்க நேர்ந்தது? டிராட்ஸ்கி கருதுவது போன்று “பல தொழிற்சங்கவாதிகள்” “புதிய கடமைகள் முறைகளைத் தடைப்படுத்துவது” காரணமா, அல்லது அதிகார வர்க்கத்தின் பயனற்ற, பாதகமான மிகைச் செயல்களைத் தடுத்து நிறுத்தி திருத்துவதற்கான “அவசியமான சக்திகளைத் திரட்டி தேவையான வழிமுறைகளை வகுப்பதில் தான் இன்னும் வெற்றியடையாது” காரணமா? என்று டிராட்ஸ்கியை நோக்கி லெனின் கேள்வி எழுப்பும் போது, அங்கு இருந்த அதிகார வர்க்கத்தை பாதுகாத்துக் கொள்வதில் டிராட்ஸ்கி அவதானமாக இருந்தார். தனது தொழிற்சங்க வாதக் கொள்கைகளை முன் தள்ளுவதன் மூலம், கட்சியை தொழிலாளர் பின் வால்பிடிக்க வைப்பதன் மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை சிதைப்பதற்கு தீவிரமாக முனைப்புப் பெற்றான்.

 

இது தொடர்பாக மேலும் லெனின் விளக்குகையில். ஒன்பதாவது கட்சிக் காங்கிரஸ் வகுத்து முன்வைத்த கொள்கை வழியை நாம் கைவிட்டுவிட்டோம்” என்னும் (டிசம்பர் 30 திகதி விவாதம் பற்றிய அறிக்கை பக்கம் 46) டிசம்பர் 30 திகதி தோழர் புஹாரினின் கடிந்துரையினை (நேற்று ஜனவரி 24ந் திகதி டிராட்ஸ்கியால் இரண்டாம் சுரங்கத் தொழிலாளர் காங்கிரஸ் கம்யூனிஸ்டு பிரிவில் நடந்த விவாதத்தின் போது அது மீண்டும் எழுப்பப்பட்டது.) இது நினைவுறுத்துகிறது. அந்தக் காங்கிரசில் தான் உழைப்பு இராணுவமயமாக்கப்படுவதை தாங்கி ஆதரித்ததாகவும், ஜனநாயகம் பற்றிக் குறிப்பிட்ட போது ஏளனம் செய்ததாகவும் அவை அனைத்தையும் நான் இப்போது “மறுத்து நிராகரித்ததாகவும்” அவர் குற்றம் சாட்டினார். டிசம்பர் 30 திகதி விவாதத்திற்கு பதிலளிக்கையில் டிராட்ஸ்கி இந்தக் குத்தலைச் சேர்த்துக் கொண்டார் தொழிற்சங்கங்களுக்கு உள்ளே எதிர்ப்பு மனப்பாங்குடைய தோழர்களின் கோஷ்டி ஒன்று இருக்கிறது என்ற மெய்விவரத்தை லெனின் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்.” (பக்கம் 65) லெனின் இதை “அச்சுறுத்தும் தந்திரக் கோணத்தில் இருந்து பார்க்கிறார்” (பக்கம் 62) “கட்சிக் கோஷ்டிகளுக்கு உள்ளே சூழ்ச்சி நடவடிக்கை இருக்கிறது” (பக்கம் 70) இதரவை. இந்த விசயம் மீது இத்தகைய வண்ணப் பூச்சு நடத்துவது டிராட்ஸ்கிக்கு நிச்சயமாக மிகவும் புகழ்ச்சியாக இருக்கும், எனக்கோ இகழ்ச்சியை விடவும் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றார். கட்சியில் கோஷ்டிக்குள்ளே சூழ்ச்சிகளை நடத்துவது டிராட்ஸ்கிக்கு பெருமையாக இருப்பதை லெனின் எடுத்துக்காட்டி, இது மிக மோசமான நடவடிக்கை என்பதை லெனின் சுட்டிக் காட்டுகின்றார். 1917க்கு பின்பாக டிராட்ஸ்கி பாட்டாளி வர்க்க நிலையை ஏற்றே போல்ஸ்விக் கட்சியில் சேர்ந்தார் என்பது எவ்வளவு மோசமான பொய்களால் புனையப்படுகின்றது என்பதையே இது காட்டுகின்றது. டிராட்ஸ்கி லெனினையே திரித்து காட்டி சேறு வீசிய போது, அதை லெனின் கடுமையாக மறுக்கின்றார். “உழைப்பு இராணுவமயமாக்கப்படுவதை தாங்கி ஆதரித்ததாகவும், ஜனநாயகம் பற்றிக் குறிப்பிட்ட போது ஏளனம் செய்ததாகவும்” லெனின் மீது அபண்டமாக சேறு வீசிய டிராட்ஸ்கி, லெனின் பெயரால் இதை முன்வைத்து தனது நிலையை தக்கவைக்க முயன்ற போதும், அதை அம்பலம் செய்தார். 

 

தொடர்ந்து லெனின் இந்த விடையம் தொடர்பாகவும், டிராட்ஸ்கியின் அவதூறுக்கும் பதிளித்த போது கட்சி (லெனின் மட்டுமல்ல) சமநிலையாக்கத்துக்குப் படிப்படியாக, ஆனால் உறுதியாக மாறிச் செல்ல வேண்டும் என்னும் நெறியாணையை விடுத்தது. தெட்டத் தெளிவானதும் தத்துவார்த்த முறையில் சரியானதுமான தீர்வைக் கொடுத்த நவம்பர் பேரவைக் கூட்டத்திற்குப் பிறகு “இருபோக்குகள்” பற்றிய ஒரு கோஷ்டிவாதப் பிரசுரத்தோடு முன்வந்து, பொருளியல் வழியில் தவறான ஒரு வரையறுப்பைத் தனது 41 ஆம் ஆராய்ச்சியுரையில் முன்மொழிந்த செயலுக்குத் டிராட்ஸ்கி தன்னைத் தானே பழியேற்றுக் கொள்ளவேண்டும்” என்றார் லெனின். கோஷ்டிகளை உருவாக்கி கட்சியில் சரியான முடிவுகளையும், லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க சரியான நிலையையும் மாற்றக் கோரும் டிராட்ஸ்கி ஆய்வுரைகள் எதுவும் மார்க்சியமாக இருக்கவில்லை. இதைத்தான் வெனின் அம்பலப்படுத்தினார். மாறாக மார்க்சியத்தையே சிறுமைப்படுத்தும் கோஷ்டிவாத பிரகடனங்களாகவே அவை வெளிவந்தது.

 

1921 ஜனவரி 25 திகதி டிராட்ஸ்கி இந்த கோஸ்டிவாத பிரகடனங்களை லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சி அமைப்புக்கு எதிராக வெளியிட்டு இருந்தான். ஒரு மாதத்தின் பின்பும் இது வீங்கிய வெம்பிய போது, லெனின் மீண்டும் மத்திய கமிட்டியிலுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்துச் சில பயங்கரமான விசயங்கள் சொல்லப்பட்டதாக வதந்தி நிலவுகிறது. மென்ஸ்விக்குகளும் சோஷலிஸ்டு – புரட்சிக்காரர்களும் எதிர்ப்பின் பின்னால் புகலிடம் பெற்று வந்தனர். “… மத்திய கமிட்டியிலுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக அது கட்சிக்கு வேண்டுகோள் செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து நடந்த விவாதங்கள் இந்தக் கருத்து வேறுபாடுகளின் சாரத்தையும் வீச்சையும் தெளிவாக வெளிப்படுத்தின. அது வதந்திகளையும் அவதூறுகளையும் அழித்துவிட்டது. கட்சி கோ~;டிவாதம் என்னும் புதிய நோயை (அக்டோபர் புரட்சிக்குப் பிறகு இதைப் பற்றி முற்றும் அடியோடு மறந்து விட்டதால் இது புதியது) எதிர்த்த போராட்டத்தில் தனது படிப்பினைகளைக் கற்றுக் கொள்கிறது. புடமிடப்பட்டு உறுதி பெறுகிறது. உண்மையில் இது பழைய நோயே. அடுத்த சில ஆண்டுகளில் நிச்சயமாக இது மீண்டும் தோன்றலாம்… தோழர் டிராட்ஸ்கி சரியான குறிப்பான… “கட்சிக்குள்ளான சித்தாந்தப் போராட்டம் என்பது பரஸ்பரம் விலக்கி வைப்பதல்ல, மாறாகப் பரஸ்பரம் செல்வாக்குச் செலுத்தலாகும்” இந்த சரியான அணுகுமுறையைக் கட்சி இயல்பாகவே தோழர் டிராட்ஸ்கி விசயத்திலும் பயன்படுத்தும் என்பது திண்ணம். விவாதத்தின் போது தோழர் சியாப்னிக்கவும் “தொழிலாளர் எதிர்க்கட்சி” எனப்படும் அவரது குழுவினருமே மிகவும் முனைப்புடைய சிண்டிக்கல் வாதப் போக்கினை வெளிக்காட்டினார்கள். இது கட்சியில் இருந்தும் கம்யூனிசத்தில் இருந்தும் கண்கூடான திரிபாக இருப்பதால் …சிண்டிக்கல் வாதத் தொடரான “தீர்ப்புக் கட்டளை நியமனங்கள்” என்பதை உண்மையில் உருவாக்கிய தோழர் புஹாரின் இன்றைய பிராவ்தா இதழில் தன்னைத் தானே நியாயப்படுத்திக் கொள்ள முனைகின்றார். …கம்யூனிசத்திலிருந்தான தமது திரிபில், தத்துவார்த்த முறையில் தவறானதும் அரசியல் ரீதியில் மோசடியானதுமான இந்தத் திரிபில் தோழர் புஹாரின் பிடிவாதமாக இருக்கும் வரையில், அவரது பிடிவாதத்தின் பலன் மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கும். …ருஷ்ய சுரங்கத் தொழிலாளர் சங்கத்தில் விசேச மதிப்புக்கு உரியவராக விளங்கும் தோழர் கிசெல்யோலினது ஆதரவைப் பெற்றும் கூட லியாப்னிக்கவின் கொள்கைத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. நமது கொள்கைத் திட்டம் 137 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தது, லியாப்னிக்காவின் கொள்கைத் திட்டத்துக்கு 62 வாக்குகளும் டிராட்ஸ்கியினுடையதற்கு 8 வாக்குகளும் கிடைத்தன.

 

… இந்த ஒரு மாத்தில் கட்சி விவாதத்திற்கு இசைந்து கொடுத்து தோழர் டிராட்ஸ்கியின் தவறான கொள்கையை மிகப் பெரிய பெரும்பான்மையால் நிராகரிக்கப்பட்டு விட்டது என்பதை பெத்ரோகிராத், மாஸ்கோ மற்றும் ஒரு சில மாகாண நகரங்கள் காட்டிவிட்டன. “மேல் மட்டத்திலும்” “மாகாணங்களிலும்” கமிட்டிகளிலும் அலுவலகங்களிலும் நிச்சயமாக ஊசலாட்டம் இருந்திருக்கும். அதே போதில், உறுப்பினர் தொழிலாளர் அணிகள், பெருந்திரளான கட்சி ஊழியர்கள் மிகப் பெரிய பெரும்பான்மையால் தான், இந்தத் தவறான கொள்கையை எதிர்க்க உறுதியாக முன்வந்தன.

 

ஜனவரி 23ம் திகதி மாஸ்கோ ஸமஸ்க்வரேக்சியே வட்டார விவாதத்தின் போது தனது கொள்கைத் திட்டத்தை விலக்கிக் கொண்டு ஒரு புதிய கொள்கைத் திட்டத்தின் மீது புஹாரின் குழுவுடன் சேர்ந்து கொள்ளப் போவதாக தோழர் டிராட்ஸ்கி அறிவித்திப்பதாகத் தோழர் காமெனெவ் என்னிடம் தெரிவித்தார். துரதிஸ்டவசமாக ஜனவரி 23 அல்லது 24 திகதிகளில் சுரங்கத் தொழிலாளர் காங்கிரசின் கம்யூனிஸ்டுக் குழுவில் தோழர் டிராட்ஸ்கி எனக்கு எதிராக உரை நிகழ்த்திய போது அவரிடமிருந்த இதைப் பற்றி எதையுமே நான் கேள்விப்படவில்லை. இதற்குக் காரணம் தோழர் டிராட்ஸ்கியின் கொள்கைத் திட்டத்திலும் எண்ணங்களிலும் ஏற்பட்ட இன்னொரு மாற்றமா அல்லது வேறு காரணமா என்பதை நான் அறியேன்” என்றார் லெனின். 

டிராட்ஸ்கிக்கும் லெனினின் தலைமையிலான கட்சிக்கும் இடையில் இருந்த முரண்பாடு தற்செயலானவை அல்ல. கடந்த காலத்தின் தொடர்ச்சியில் இவற்றை இனங்காண முடியும். ஆனால் டிராட்ஸ்கியவாதிகள் ஏதோ ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்பே இவை ஏற்பட்டதாக காட்ட முனைகின்றனர். டிராட்ஸ்கி லெனினின் கருத்துக்கு இசைவாக டிராட்ஸ்கியின் கருத்துகள் ஒன்றாக ஒரே அடிப்படையில் மாறி இருந்ததாக சினிமா காட்ட முனைகின்றனர். டிராட்ஸ்கி லெனின் தலைமையிலான ஆட்சியில் மிக குறுகிய காலத்தில் இருமுறை தனது வெவ்வேறு மந்திரிப் பதவியை விட்டு விலகியதுடன், லெனினுடனும் கட்சியுடனும் பகிரங்கமாகவும் இரகசியமாகவும். மோதினார். அத்துடன் லெனின் டிராட்ஸ்கியின் நிலை தொடர்பாக கூறும் போது, அக்டோபர் புரட்சியின் பின் மீள எழுந்துவரும் பழைய நோயின் தொடர்ச்சி என தெளிவாக அறிவித்தார். லெனின் – டிராட்ஸ்கி மோதல் பற்றிய வதந்திகள், அவதூறுகளை மிஞ்சி, இது உண்மை என்று உறுதி செய்கிறது எனக் குறிப்பிட்ட லெனின், இது ஒரு கோஷ்டிவாதமாக மாறியுள்ளதையும் கூறி, கட்சி இவை மீது கற்றுக் கொள்கிறது எனக் குறிப்பிட்டார். அத்துடன் இது அடுத்து அடுத்து வரும் என எச்சரித்தார். நிரந்தரப்புரட்சி என்பதை நிராகரித்த லெனின், மாறக அலை அலைய புரட்சியின் தேவையை சுட்டிக் காட்டுகின்றார்.

 

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

 

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

3 thoughts on “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 16

  1. தோழர்க்கு, மொத்தமாக படிக்க முடியவில்லை இரு பகுதியாக வெளியிட்டால் என்க்கு உதவியாக இருக்கும்.

  2. வணக்கம் தோழர்,

    இந்த அத்தியாயத்தைக் கூறுகிறீர்களா அல்லது மொத்த நூலையுமா? மொத்த நூலையும் வெளியிட்டு முடிந்ததும் அது மின்னூல் பதிப்பாக நூலகம் பகுதியில் இடம் பெறும்.

  3. ^^இதைதான் நானும் கேகலாமென இருந்தேன் .மின்னூல் என்றால் படிக்க வசதி.நன்றி செங்கொடி

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s