தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும். அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி பாடத்திட்டத்தின் மீது இறுதித் தீர்ப்பு சொல்லவேண்டும்.
சுருக்கமாக இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஒரு முடிவை மேற்கொள்ளும்போது அது மக்கள் நலனுக்கானதாக இருக்கும் என்றே கருதவேண்டும். அவ்வாறின்றி தமிழக அரசின் மசோதாவுக்கு நோக்கம் கற்பித்து முடக்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. எனவே சமச்சீர் கல்வியை மேம்படுத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்கள் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள்.
இதனை எதிர்த்து வாதாடிய பிரசாந்த் பூஷண் (மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில்), கிருஷ்ணமணி, ஹரீஷ் ஆகிய வழக்குரைஞர்கள் “மொத்தப் பாடங்களையும் முடக்கும் அளவுக்கு என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. NCERT மற்றும் NCFP ஆகிய அமைப்புகள் 2005 இல் கொடுத்த வழிகாட்டுதல் அடிப்படையில் துறைசார் வல்லுநர்கள், ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, கருத்தறியப்பட்டு இறுதியாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தை முற்றிலுமாக முடக்கும் அளவுக்கு இதில் என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. 214 கோடி ரூபாய் வரிப்பணத்தை செலவு செய்து நூல்கள் தயாராக உள்ளன. இதனை நிறுத்திவிட்டு 2002 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தை அச்சிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது பிற்போக்கானது. உள்நோக்கம் கொண்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்த தனது 10.09.2010 தேதியிட்ட தீர்ப்பில், “அரசுகள் மாறும்போது, அவர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தையும் பாடநூலையும் மாற்றுவதையும், பள்ளிகளையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் பந்தாடுவதையும் இந்த நீதிமன்றம் அனுமதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறது. ஆனால் தற்போது தமிழக அரசு அதைத்தான் செய்கிறது” என்று வாதிட்டனர்.
“அதற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் ஏற்கெனவே சமச்சீர் பாடங்கள் அமலில் இருப்பதால் அது தொடரட்டும். மற்றவை குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து 3 வாரத்தில் உயர்நீதி மன்றத்தின் ஒப்புதலைப் பெறட்டும். பிள்ளைகள் 3 வாரம் விடுமுறையை அனுபவிக்கட்டும்” என்று தீர்ப்பளித்தார்கள் நீதிபதிகள்.
சட்டத்துக்கோ நீதிக்கோ இந்தத் தீர்ப்பில் இடமிருக்கிறதா என்பதை சட்ட வல்லுநர்கள்தான் கூறவேண்டும். நீதிபதிகளுக்குப் பின்னால் ஒரு அரச மரமும் முன்னால் ரெண்டு பித்தளை செம்புகளும் இருந்ததா என்பதை டெல்லிக்கு நேரில் சென்றவர்கள் கூறவேண்டும்.
“என்ன எழவோ ஒரு பாடத்திட்டம். என்னிக்கி இஸ்கூலு தொறப்பான், அதச்சொல்லு” என்றுகேட்பவர்களுக்கு எமது விளக்கம் பின்வருமாறு:
இத் தீர்ப்பின்படி 1,6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே உள்ள சமச்சீர் பாடம்தான் என்பதால் பள்ளிக் கூடத்தை திறந்து அவர்களுக்கு மட்டும் வகுப்பு நடத்தலாம்.
மற்ற வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் பாடப்புத்தகத்துக்காக காத்திருக்க வேண்டும். 15 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறப்பதும் திறக்காததும் புரட்சித்தலைவியின் விருப்பம். அல்லது நீதிபதிகள் போகிறபோக்கில் குறிப்பிட்டதைப் போல எல்லோருக்கும் 3 வாரம் லீவு விடலாம்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிபுணர் குழுவை தமிழக அரசு உடனே அமைத்துவிடும். பெரும்பாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் சில கல்வியாளர்களையும் கொண்டு இக்குழு அமைக்கப்படும். இந்த நியமனமே பிரச்சினைக்குரியதாக இருப்பின் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.
“நீக்க விரும்பும் பாடங்களை அரசு நீக்கிக் கொள்ளலாம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்துவது என்று தமிழக அரசு முடிவெடுத்திருந்தால், செம்மொழி வாழ்த்து, சென்னை சங்கமம் முதலான தனக்கு விருப்பமில்லாத பக்கங்கள் அனைத்தையும் கிழித்து விட்டு வெறும் அட்டையை மட்டும் கூட மாணவர்களுக்கு விநியோகித்திருக்கலாம். ஆனால் அப்பீலுக்குப் போய் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு தேடிப் பெற்றிருக்கிறது. இனி, பாடத்திட்டத்திலிருந்து மழித்தல், நீட்டல் எதைச்செய்தாலும் இறுதியாக அதற்கு உயர்நீதி மன்றத்தின் அனுமதியை தமிழக அரசு பெற்றாக வேண்டும். ஆட்சேபங்கள் உயர்நீதி மன்றத்தில் குவிந்தால், வழக்கு முடிவதற்கு எத்தனை காலமாகும் என்று சொல்ல முடியாது.
பாபர் மசூதி வழக்கிலாவது புராணம், தொல்லியல், வரலாறு ஆகியவற்றுடன் பிரச்சினை முடிந்து விட்டது. இதில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களிலும் பிரச்சினை இருப்பதாக புரட்சித்தலைவியின் அரசு நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. எனவே இந்த வழக்குக்கு மட்டும் சிறப்பு நீதிமன்றம் போட்டு அன்றாடம் விசாரித்தாலும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி முடியும்வரை விசாரித்து முடியுமா என்று தெரியவில்லை.
ஒரு வேளை 3 வாரத்தில் கமிட்டி அறிக்கை கொடுத்து, ஒரு வாரத்தில் தடலடியாக நீதிமன்றம் விசாரித்து முடித்து விட்டாலும், இறுதியாக்கப்படும் பாடங்களை அச்சிடுவதற்கு 4 மாதங்களாவது தேவை. மொத்தத்தில் நவம்பர் மாதம் பள்ளிக்கூடம் திறக்கலாம். அல்லது வேறு ஏதாவது சதிகாரத் திட்டம் இந்த அரசின் மனதில் இருக்கக் கூடும்.
உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றது யார்?
“பாடத்திட்டத்தை அரசு எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளட்டும். 4 விதமான பாடத்திட்டங்கள் இனி கிடையாது. ஒரே பாடத்திட்டம்தான் என்று முடிவாகி விட்டதல்லவா? இது சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றிதானே! அந்த வகையில் பார்த்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நமக்குக் கிடைத்த வெற்றி தானே என்று கேட்டார் ஒரு நண்பர்.
இல்லை. இதனை வெற்றி என்று கருதுவது மயக்கம். சரியாகச் சொன்னால் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பும், போராட்டத்தின் தேவையும் இப்போதுதான் முன்னைக்காட்டிலும் அதிகரித்திருக்கிறது.
ஏற்கெனவே கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சமச்சீர் பாடத்திட்டத்தில் குறைகள் பல இருப்பினும், அது ஆசிரியர்கள், கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மாணவர்களுக்கு கற்பித்த அனுபவம் பெற்றவர்கள். துறை சார் அறிவு கொண்டவர்கள்.
தற்போது அதனை மறுபரிசீலனை செய்ய இருப்பவர்களில் பெரும்பான்மயினர் கல்வித்துறை அறிவோ அனுபவமோ இல்லாத அதிகார வர்க்கத்தினர். உயர் வர்க்கத்தை சேர்ந்த இவர்களது பிள்ளைகள் பத்மா சேஷாத்ரி, டான் பாஸ்கோ முதலான மேட்டுக்குடிப் பள்ளிகளில் படிப்பவர்கள். எனவே அந்தப் பள்ளிகள் பின்பற்றும் பாடத்திட்டங்கள்தான் தரமானவை என்பதே இவர்களது கருத்தாக இருக்கும்.
சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்கும் மசோதாவை அறிமுகப்படுத்திய கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உலகமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலும், ஐ.ஏ.எஸ் முதலான அனைத்திந்தியத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை தமிழக மாணவர்களுக்கு வளர்க்கும் விதத்திலும் நமது பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றார் கல்வி அமைச்சர்.
துக்ளக் சோ முதல் பார்ப்பன அறிவுத்துறையினர், முதலாளிகள், அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் காலம் காலமாகக் கூறி வருவது இதைத்தான். அமெரிக்க ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை ஈடு செய்யும் விதத்திலும், அவர்களுக்கு தரமான ஊழியர்களை உருவாக்கிக் கொடுக்கும் விதத்திலும் நமது கல்வி அமைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். “”பிரவுன் சாகிப்புகளை”” உருவாக்குவது பற்றி மெக்காலே கேவலமான மொழியில் அன்று பச்சையாக கூறியதை, “உலகமயத்தின் சவால்” என்று ஜம்பமாக கூறுகிறார் கல்வி அமைச்சர்.
“ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி முடித்து வெளியே வருபவர்கள் 7 இலட்சம் பேர். இவர்களில் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அனைத்திந்திய தேர்வுகளுக்கு செல்பவர்கள் மொத்தம் 1000 பேர். இந்த 1000 பேரின் தேவைக்கு ஏற்ப 7 இலட்சம் பேரின் கல்வியை மாற்றியமைக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளரும் சமச்சீர் கல்விப் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினருமான எஸ்.எஸ்.இராசகோபாலன்.
நமது நாட்டின் தேவை, மக்களின் தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டோ, வரலாறு முதல் பண்பாடு வரையிலானவற்றைக் கற்பித்து மனிதனை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டோ கல்வியை அணுகாமல், தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு ஏற்ப கார்ப்பரேட் கொள்ளைக்கு ஏற்ப கல்வி மறுவார்ப்பு செய்யப்படுகிறது. இதயமில்லாத மனித எந்திரங்களை உருவாக்கும் அத்தகைய கல்வி முறையைத் திணிப்பதைத்தான் “மேம்படுத்துவது” என்று கூறுகிறார் கல்வி அமைச்சர்.
தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை ஜெ வுக்கு அளித்திருக்கிறது. புதிய பாடநூல்கள் அச்சிடுவதற்கு தாமதமாகும் என்ற பெயரில், “இப்போதைக்கு மெட்ரிக் பள்ளிகளின் தரமான பாடத்திட்டத்தையே வைத்துக்கொள்ளலாம்” என்று கூறி அவற்றைத் திணிப்பதற்கும், அவற்றையே மேம்படுத்தி அந்த திசையில் கல்வியை எடுத்துச் செல்வதற்குமான வாய்ப்பு அதிகம். உலகமயமாக்கலை முன்னேற்றம் என்று கருதுவோர், இந்தக் கல்வியையும் முன்னேற்றம் என்று கருத வாய்ப்புண்டு. அந்த வகையில் கடுமையானதொரு போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது.
நன்றி: வினவு
கல்வித்திட்டம் பற்றிய ஒரு வரையறை:
1. விரும்பிய மொழி .
2. திரிக்கப்படாத அனைத்து சமூக சமய வரலாறு.
3. கணிதம்.
4. அறிவியல் தொழிற்நுட்பம்.
5. வாழ்வியல்.
ஐந்து வயது முதல் பத்து வருட கட்டாயப்படிப்பு உலகத்தரம்.
ஒரு வேண்டுகோள் தயவு செஞ்சி சோனியா பற்றி விரிவான ஒரு கட்டுரையை நீங்கள் தர வேண்டும்.ஏனெனில் மன்னுமோகன் ஒரு உலக வங்கி கைக்கூலி என்பது தெரியும்.ஆனா சோனியா பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியலை!!இதை செய்யுங்கள்
இப்போதைய அரசு கல்வி பாடத்திட்டம் மாணவர்களின் போட்டிக்கு தரமனதாக இல்லை .இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு முடிவுகளில் முதல் மூன்று இடங்களுக்கு 41 பேர் வந்துள்ளனர்.முன்பு மாநிலத்தில் முதல் மதிப்பெண் 460 ஆக இருந்தது இன்று 497 ஆக ஆகிவிட்டது. இப்போதைய பாடத்திட்டம் மாணவர்களின் தரத்திற்கு உகந்தது அல்ல.அதே சமயத்தில் தேர்ச்சி விகிதம் 85 விழுக்காடு அளவில் உள்ளது.ஆயின் அரசே மெற்றிக் பாடத்திட்டத்தில் தனியாக பள்ளிகள் ஆரம்பித்தால் திறமை மிக்க ஏழை மாணவர்களுக்கும் தரமான சமச்சீர் கல்வி கிடைக்கும் .அல்லது மெற்றிக் பள்ளிகளால் அரசுக்கு ஆசிர்யர்களின் சம்பளம் அதிகமாக மிச்சப் படுகிறது .இதனால் மெற்றிக் பள்ளிகளில் ஏழை மாணவர்களை 25 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டு அதற்குரிய கட்டணங்களை அரசே செலுத்திவிடலாம்.மற்றபடி இப்போதைய சமச்சீர் பாடத்திட்டம் மாணவர்களின் திறமைகளுக்கு உகந்ததாக இருக்காது.அவ்வாறு கூச்சலிடுபவர்கள் குழந்தைகளை முதலில் அரசு பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு போராடுவதே சிறந்தது
this TN present govt. headed by J.J. is cheating by the way of nominating members like mrs. parthasarathy in the committee .It is also crossing apex courts order in a way or other. That is why revolutionists are thinking Law is having so many loopwholes to trespass.
சமச்சீர் கலவியில் இருந்து மதரசாக்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதை எதிர்த்தும் போராடலாமே?
மதரசாக்கள் சமச்சீர் கலவியில் கொண்டுவரப்படவில்லையே.அதை பத்தி எழுதுங்க.பின்னூட்டம் போட்டாலும் டெலிட் பண்ணிடுருங்க.சூப்பர்
இருபது கிலோ இலவச அரிசியில் மாசம் ஓடிடும்.அப்புறம் இலவச பசுமை வீடு சூரிய மின்சக்தியுடன்.இலவச டிவி இருக்கு அரசு கேபிள் இலவசம்.மிக்சி கிரைண்டர் இலவசம் ஹாயா மின்விசிறிய போட்டுகினு டிவி பாக்க வேண்டியதுதான் இலவச லேப்டாப் இணையத்துக்கு.இதுக்கு மேல என்னத்த புரட்சியில் கிழிக்க போறீங்க?
சரி மதராசக்களை சமச்சீருக்கு கீழ் கொண்டு வரவும் போராடுவீங்களா?
ரவி,அசன்.பிரதீப் உங்களுக்கு என்னவாயிற்று?சமச்சீர் கல்வி ஏன் வலியுறுத்தபடுகிறது என்பது உங்களுக்கு புரியவில்லையா?அதை என்னவோ சம பந்தி விருந்து போல் பேசுகிறீர்கள் .அப்புறம் மதரசாவில் ஸ்டேட் போர்ட் சிலபஸ். மெட்ரிகுலேசன் சிலபஸ் .ஆங்கிலோ இந்தியன் சிலபஸ் எல்லாம் இருக்கிறதா? மத்ரசாகல்வி முடிந்ததும் கட் ஆப் மார்க்கில் எஞ்சினியரிங் ,மெடிகல் காலேஜிக்கு போக முடியுமா?
ஏக இறைவனின் திருப்பெயரால் ..
இஸ்லாமை பொறுத்தமட்டில் பூமி சூரியனை சுற்றிவருகிறது என்பதோ அல்லது பூமி உருண்டை என்பதோ ஹராமானது. வஹாபிய கொள்கைக்கு முரணானது. இந்த பாடங்களை கொண்டுள்ள பாடபுத்தகங்களை சமச்சீர் என்ற பெயரில் சிறுபான்மையினர் உரிமைக்கு எதிராக ம்தரஸாவில் புகுத்துவது உங்களது பாசிச மனப்பான்மையை காட்டுகிறது.
நைஜீரியாவில் உண்மையான இஸ்லாமிய கல்விக்கானபோராட்டம் ஆரம்பித்துள்ளது. boko haram போகோ ஹராம் என்ற அமைப்பினர் ஷரியத்துக்கான போராட்டத்தில் மேற்கத்திய ஹராமான கல்விக்கு எதிராக தொடங்கிய போர் உலகெங்கும் விரிவடையும். உண்மையான குரானின் போதனைகள் உலகெங்கும் பரப்பப்படும்.
அபு ஸாலிஹ் என்ற பெயரில் அபு சைத்தான் இங்கு விஷம் கக்கியுள்ளது
இப்ராஹீம்
சரி இப்படி எதுக்கும் போக முடியாத கல்விக்கு பதில் பயனுள்ள சமச்சீர் கலவியை அமல்படுத்தலாமே
ஏக இறைவனின் திருப்பெயரால்
அபு சைத்தான் இங்கே முஸ்லீம் பெயர் தாங்கியாக வந்து அல்குரானுக்கு மாற்றாக உளறிக்கொண்டிருக்கிறது. அடுத்து மனிதன் குரங்கிலிருந்து வந்தான், டார்வினிஸம் போன்றவைகளை அல்குரானில் சொல்லப்பட்டிருக்கின்றன என்றும் உளறும் அடுத்து வானத்தில் உள்ள நட்சத்திரங்களை சுற்றி பூமி போன்ற கிரகங்கள் இருக்கின்றன அவற்றில் மனிதர்கள் போன்ற உயிரினங்கள் இருக்கலாம் என்றும் இந்த முஸ்லீம் பெயர்தாங்கி உளரலாம் எஸ் இப்ராஹிம் என்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் ஒழியும் நேரம் வந்துவிட்டது. அல்லாஹ் நாடினால், இந்த முஸ்லீம் பெயர்தாங்கிகள் துண்டைக்காணம் துணியைக்காணம் என்று ஓடுவார்கள். இஸ்லாமிய கல்வி உலகெங்கும் நிலைபெறும் ஷரியத் மட்டுமே சட்டமாக ஆகும்.