செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 7

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 7

ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

ஹதீஸ் குறித்த இந்த கட்டுரையில், அது எந்த காலகட்டத்தில் எப்படி தொகுக்கப்பட்டது என்பது குறித்த சுருக்கமாக விவரித்திருந்தேன். அதை நண்பரும் ஒப்பியிருக்கிறார். ஆனால் ஹதீஸின் நம்பகத்தன்மை குறித்தவற்றில் மட்டும் அவரின் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹதீஸ்கள் என்பது அவை தொகுக்கப்படுவதற்கு முன்னர் வரை செவி வழிச் செய்திகள் தான். முகம்மது இறந்து நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஹதீஸ்களை தொகுக்கும் பணி தொடங்குகிறது. இடைப்பட்ட அந்த ஆண்டுகளில் ஹதீஸ்கள் எப்படி பாதுகாக்கப்பட்டன என்பது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி. குரானைத்தவிர நான் கூறும் எதனையும் பதிவு செய்ய வேண்டாம் எனும் முகம்மதின் அறிவுறுத்தலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதன் பிறகும் ஹதீஸ் என்பவைகளை முழு வரலாறுகளாகக் கருத முடியுமா?

இதை மறுக்க நினைக்கும் நண்பர் கூறுவதென்ன? \\முஹம்மது நபி இறந்த பின் வந்த முதல் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்தவர்களின் நம்பகத் தன்மை அவர்களிடமிருந்து அறிவிக்கும் நபரிடமிருந்தும் அவரை அறிந்து வைத்திருந்த நபர்களிடமிருந்தும் அவர்களின் உறவினகளிடமிருந்தும் இன்னும் பல வழிகளில் அறியப்படும். இதற்காக இப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பல ஊர்களுக்கும் சென்று அவர்களது விபரங்களை திரட்டி எடுத்தனர்// அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைப் பற்றி அவர் ஞாபக சக்தி மிக்கவர், இவர் நேர்மையாளர் என்று நூறு ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளவர்கள் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது தான் ஹதீஸ். இதைத்தான் நண்பரும் கூறுகிறார் நானும் கூறுகிறேன். இப்படி திரட்டப்பட்ட திரட்டை தோராயத் தன்மையானது என்று குறிப்பிடுவதில் என்ன தவறு இருந்துவிட முடியும்?

இன்னொரு தகவலையும் பார்க்கலாம். ஹதீஸ் தொகுப்புகளில் ஸிஹாஹ் சித்தா என போற்றப்படும் ஆறு நூல்களில் முதன்மையான நூலைத் தொகுத்தவரான புகாரி என்பவர், ஹதீஸைத் தொகுக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யப் பகுதியிலிருந்து மக்காவிற்கு வரும்போது அவருக்கு வயது பதிமூன்று. இவர் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் சேகரித்த மொத்த ஹதீஸ்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சம். அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு 275 ஹதீஸ் வீதம் சேகரித்திருக்கிறார், அதுவும் பதின்ம வயதுகளில். இந்த செய்தி தரும் நம்பகத்தன்மையின் அளவில், ஹதீஸின் நம்பகத்தன்மையில் என்ன மாறுதல் இருந்துவிட முடியும்?

எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு ஹதீஸ்களில் ஏற்கப்பட்டவை மறுக்கப்பட்டவை என்பது பிரச்சனையே அல்ல. ஏற்பிலும் மறுப்பிலும் ஹதீஸின் உள்ளடக்கமே வினைபுரிகிறது என்பதே முதன்மையானது. அதை நண்பரும் மறுக்கவில்லை என்றாலும் அதற்கு வேறொரு விளக்க, அளிக்கிறார். \\ஹதீஸின் கருத்து மையப்படுத்தப்படுவது உண்மைதான். அந்த கருத்து குர்ஆனுக்கு முரண்படுகிறதா இல்லையா என்றுதான் மையப்படுத்தப்படும். எனது அறிவுக்கு உடன்படுகிறதா இல்லையா என்று மையப்படுத்தப்படுவதில்லை// குரானின் வசனங்களுக்கு காலத்திற்கு தகுந்தவாறு பொருள் வழங்கப்படும் நிலையில் குரானுக்கு முரண்படுகிறதா? என்பதற்கும் அறிவுக்கு முரண்படுகிறதா? என்பதற்கும் இடையில் பாரிய பேதம் எதுவும் இருந்துவிட முடியாது. இதை கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்ததைக் கொண்டே விளக்கலாம். \\ஒரு குழுவினர் ‘முகம்மதுவிற்கு சூனியம் வைக்கப்பட்டிருந்தது என்றால் மொத்த குரான் மீதே சந்தேகம் வந்துவிடும் எனவே அதிகாரபூர்வமான ஹதீஸாக இருந்தாலும் குரானோடு முரண்படுவதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என்றும் மற்றொரு குழுவினரோ ‘ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கக்கூடாது இதில் முரண்பாடு ஒன்றுமில்லை. அல்லாவே குரானின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதால் குரானில் பாதுகாப்பில் சந்தேகம் ஒன்றுமில்லை. அதேநேரம் ஆதாரபூர்வமான ஹதீஸ் முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுவதால்; முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு அவர் பாதிக்கப்பட்டார் ஆனால் அது குரானை பாதிக்கும் அளவில் இல்லை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்றும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர்// இங்கு ஒரு ஹதீஸை ஒரு பிரிவினர் குரானுக்கு முரணானது என்றும் மற்றொரு பிரிவினர் அது குரானோடு முரண்படவில்லை என்றும் வாதாடுகின்றனர். இரு பிரிவினருமே குரான் வசனங்களை அடிப்படையாகக் கொண்டே தத்தம் வாதங்களைச் செய்கின்றனர். என்றால் இதில் எது மையப்படுத்தப்படுகிறது? குரான் வசனமா? அதற்கான அறிவு விளக்கமா?

குரானுக்கு முரண்படும் ஹதீஸ்களை பொருத்தவரையில் அதுவும் ஹதீஸ்கலையின் விதிதான் என்கிறார் நண்பர். எல்லா ஹதீஸ் தொகுப்புகளை விடவும் காலத்தால் முந்திய முகம்மதுவின் வரலாற்றை எழுதிய தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றோர்கள் குரானுக்கு முரணானதை தள்ளிவிட வேண்டும் என விதி ஏற்படுத்தவில்லை. அதன் பிறகு உள்ளவர்களான இமாம்கள் என போற்றப்படும் ஷாஃபி, ஹனபி, ஹம்பலி, மல்லிக் எனும் நால்வரும் அவ்வாறு எந்த விதியையும் ஏற்படுத்தவில்லை. இதன் பிறகு ஹதீஸ்களைத் தொகுத்தவர்களுள் முக்கியமானவர்களான புஹாரி, திர்மிதி உள்ளிட்ட அறுவரில் எவரும் அப்படி ஒரு விதியை ஏற்படுத்தவில்லை. அதேநேரம் இவர்களில் எவரும் குரானுக்கு முரணான எதுவும் இஸ்லாத்தில் ஏற்கத்தக்கதல்ல எனும் அடிப்படை தெரியாதவர்களும் அல்லர்.  ஆனால் இவர்கள் எல்லோரையும் விட காலத்தால் பிந்தியவர்கள் அவ்வாறு விதியை ஏற்படுத்துகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? மாறிவரும் காலத்திற்கு ஏற்பவும், விரிவடைந்தும் ஆட்சிப்பகுதிகளின் சமூகத்தேவைகளை ஈடுகட்டவும் புதுப்புது ஹதீஸ்களின் தேவையும், அதனை ஒழுங்குபடுத்த புதுப்புது விதிகளும் தேவைப்பட்டிருக்கின்றன என்பதல்லாது வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியும்? ஹதீஸ்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்குமா? நீக்கப்பட்டிக்குமா? என்பது இப்போதைய கேள்வியல்ல என்றாலும், இதிலிருந்து பெறப்படுவது ஹதீஸ்களின் நம்பகத்தன்மை தோராயமானது என்பதுதான்.

முறையான அறிவிப்பளர்கள் வரிசையைக் கொண்டிருக்கும் ஹதீஸ்களில் சில குரானுடன் முரண்படுகின்றன. என்றால் அதன் பொருள் என்ன? இதை இரண்டு விதமாக கொள்ளலாம். முறையான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருக்கும் ஹதீஸ்கள் கூட நூறு விழுக்காடு உண்மையானது எனக் கூறவியலாது. சரியான ஹதீஸ்கள் என நம்பப்படுவதற்கு முறையான அறிவிப்பாளர் வரிசை இருக்கிறது என்பது மட்டுமே ஆதாரம் கூற போதுமானதில்லை. ஆக எந்த வகையில் பார்த்தாலும் ஹதீஸ்களின் நம்பகத்தன்மை தோராயமானது எனும் முடிவிற்குத்தான் வரவேண்டியுள்ளது.

அடுத்து நண்பர் ஒரு கேள்வியை இரண்டாக பிரித்து தனித்தனியே பதில் கூற முனைந்திருக்கிறார். \\ குரானின் மொத்த வசனங்களில் சில மக்காவில் அருளப்பட்டவை, சில மதீனாவில் அருளப்பட்டவை; இன்னும் சில வசனங்கள் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவிலா என்று முடிவுசெய்ய இயலாதவை. குரான் வசனங்களிலேயே மக்காவிலா மதீனாவிலா எங்கு அருளப்பட்டது என்பதை ஹதீஸ்களின் துணையோடு தீர்க்கமுடியவில்லை எனும்போது நரை முடி என்பதெல்லாம் உயர்வு நவிற்சி தான்// அதாவது எத்தனை நரைமுடி முகம்மதுவிற்கு இருந்தது என்பதைக்கூட துல்லியமாக கூறிவிடும் அளவிற்கு முகம்மதின் வாழ்க்கை ஹதீஸ்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவதற்கு எதிராக இஸ்லாத்தோடு ஒரு தொடர்பும் இல்லாத நரை முடியைவிட நெருக்கமான உறவு கொண்டிருக்கும் எந்த வசனம் எங்கு இறங்கியது என்பதைக் கூட ஹதீஸ்களின் துணையோடு அறிய முடியாதிருக்கும் போது எத்தனை நரை முடி இருந்தது என்பது ஒரு பயனும் இல்லாதது என்பதைத்தான் நான் பதிவு செய்திருந்தேன். ஆனால் நண்பர் இரண்டையும் பிரித்து, நரை முடிக்கு ஒரு ஹதீஸ் இருக்கிறது என்றும், எங்கு இறங்கியது என்பது அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஒன்று என்றும் தனித்தனியே பதிலளித்திருக்கிறார் இரண்டும் தேவையற்ற விசயங்கள் தான் என்பதில் மறுப்பு ஒன்றுமில்லை. ஹதீஸ்கள் துல்லியமாக முகம்மதின் வாழ்க்கையை படப்பிடித்துக் கூறவில்லை என்பது தான் இங்கு முதன்மையான செய்தி.

பொதுவாக முஸ்லீம்கள் ஹதீஸ்களைப் பொருத்தவரை குரானுக்கு அடுத்தபடியாக இருக்கும் புஹாரி, முஸ்லிம் தொகுப்புகளின் கற்பில் ஐயம் ஏதும் கொள்வதில்லை. குரானின் புனிதத்தன்மைக்கு ஈடாக ஹதீஸ்களையும் பேணுகிறார்கள். ஆனால் பிரச்சனை என வந்துவிட்டால் அதில் ஐயத்தன்மை இருப்பதை சுற்றி வளைத்து ஒப்புக் கொள்வார்கள். அதேநேரம் இப்போது எழுந்திருக்கும் கேள்விகளால் மீண்டும் ஹதீஸ்களை சரிபார்த்து மெய்யான ஹதீஸ்களை மட்டும் தொகுத்து இனி இதுதான் உறுதிப்படுத்தப்பட்ட  ஹதீஸ்கள் என அறிவிப்பார்களா? ஒருபோதும் முடியாது. பல்வேறு நாடுகளின் ஆன்மீகத் தலைமைகள், அவர்களின் வர்க்க நலன்கள், பல அமைப்புகளுக்கிடையேயான பகைமைகள் என பல்வேறு நிலமைகளால் அது சத்தியமில்லை. மட்டுமல்லாது சிக்கலான கேள்விகளை நீர்த்துப்போக வைக்கவும் இவைகள் பயன்படுகின்றன. ஆனாலும் அன்றைய நிலையில் ஏற்பட்ட சமூக நெருக்கடிகளை தீர்ப்பதற்காகவே ஹதீஸ்களை தொகுத்ததும் பின்னர் விதிமுறைகளை ஏற்படுத்தி தணிக்கை செய்வதற்கான தெரிவுகள் பயன்படுத்தபட்டதும் நடந்திருக்க முடியும்.

முன்னர் நடந்த ஒரு விவாதத்தில் நண்பர் இப்ராஹிம் ஹதீஸ்கள் வரலாறுதான் என நிருவுவதற்கு கடுமையாக முயன்றார். அவரின் வாதமும் இதுவாகத்தான் இருந்தது. ஹதீஸ்களுக்கு முறையான அறிவிப்பாளர் வரிசை இருந்தது, குரானுக்கு முரணான ஹதீஸ்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவையல்ல. குரானுக்கு முரணான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டவை என்றால் அவைகளுக்கு முறையான அறிவிப்பாளர் வரிசை வந்தது எப்படி? தவறான ஹதீஸ்களுக்கு முறையான அறிவிப்பாளர் வரிசை இருக்க முடியுமென்றால்; முறையான அறிவிப்பாளர் வரிசை இருக்கிறது என்பதாலேயே ஒரு ஹதீஸ் சரியானது என்று எப்படி ஆகும்?

எனவே, ஹதீஸ்கள் உண்மையான வரலாறு என்பதைவிட 1400 ஆண்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறுவதாக கருதப்படும் நம்பகத்தன்மையில் சமரசத்தைக் கொண்டுள்ள தொகுப்பு என்பது தான் அறிவுக்கு பொருத்தமானதாகும்.

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

15 thoughts on “செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 7

 1. நல்ல‌ பதிவு
  1.ஹதிதுகளை புஹாரி தொகுத்த விதம் பற்றி கூறும் ஹதிது உண்டா?அதில் எப்படி புஹாரி வருவார் என்று கேட்கும் நண்பர்களே,சில ஹதிதுகளில் அவ்ரே புஹாரியாகிய நான் என்றெல்லாம் கூறுவதை கேளுங்கள்.
  _____________
  5887. (நபியவர்களுடைய துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
  என் வீட்டில் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் இருந்தபோது நபி(ஸல்) அவர்களும் அங்கு இருந்தார்கள். அப்போது அந்த அலி, என் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம் ‘அப்துல்லாஹ்வே! நாளை உங்களுக்கு தாயிஃப் நகரத்தின் மீது அல்லாஹ் வெற்றியளித்தால் ஃகைலானின் மகளை உனக்கு நான் காட்டுகிறேன். (அவளை மணந்துகொள்.) ஏனெனில், அவள் முன்பக்கம் நாலு (சதைமடிப்புகளுட)னும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்’ என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘(அலிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வரவேண்டாம்’ என்றார்கள்.
  **
  அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
  ***
  அவளுடைய வயிற்றுச் சதையின் நான்கு மடிப்புகளின் காரணத்தால் ‘முன்பக்கம் நான்கு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்’ என்று அந்த அலி சொன்னார். அந்த நான்கு மடிப்புகளின் ஓரங்கள் இரண்டு புறங்களிலும் சேர்ந்து பின்புறம் எட்டு ஓரங்களாக காட்சி தருவதால் ‘பின்பக்கம் எட்டு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்’ என்று கூறினார்.96
  ‘தரஃப்’ (ஓரம்) எனும் சொல் ஆண்பாலாயினும், அது வெளிப்படையாகக் குறிப்பிடாததால் ‘அர்பஉ’ (நான்கு), ‘ஸமான்’ (எட்டு) ஆகிய எண்கள் (இலக்கண விதிக்கு மாறாக) ஆண்பாலாகவே (மூலத்தில்) குறிப்பிடப்பட்டுள்ளன.
  Volume :6 Book :77
  __________
  இம்மாதிரி 40+ ஹதிதுகளில் புகாரியாகிய நான் கூறுகின்றேன் என்று வருகிறது.

  அப்பொழுது அவருக்கு ஹதிதுகளை தொகுக்கும் அதிகாரம் யார் வழங்கியது?,அவருடைய தேர்வு எப்படி கண்காணிக்கப் பட்டது?.போன்ற விவரங்களும் அங்கீகரிக்கப் பட்ட ஹதிதில் இருக்க வேண்டுமல்லவா?
  (தொடரும்)

 2. ஹதிதுகள் குறித்த விவாதம் தொடர்வோம்
  1.அதி முக்கியமான புஹாரி,முஸ்லிம் ஆகியொரின் த்குத்தல் குறித்த ஜோனத்தான் பிரௌன் என்பவர் ஆய்வு செய்டு முனைவர் பட்டம் பெற்றார்.அந்த ஆய்வு கட்டுரை இங்கே தர்விறக்கம் செய்து கொள்ளலாம்.
  http://www.scribd.com/doc/17926706/The-Canonization-of-AlBukhari-and-Muslim-by-Jonathan-Brown
  _____________
  2.பிரிவுகளை பொறுத்து ஹதிதுகள் வேறுபடுவது அரசியல் காரனம் மட்டுமே.திரு முமுகமதுக்கு பிறகு ஏற்பட்ட வாரிசுப் போட்டியும் அதின் காரணமாக் எழுந்த இரண்டு ஒட்டக்ப் போர்கள் ஷிய பிரிவு இஸ்லாமை ஏற்படுத்தின.சுன்னி பிரிவு ஹதிதுகளில் அதிக ஹதிது கூறிய அபு ஹுரைராவின் நபி மொழிகளை ஷிய பிரிவினர்,அதே கருத்து வேறு சங்கிலித் தொடர் மூலம் வந்தால் மட்டுமே ஏற்கின்றன்ர்..
  *************
  1223. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
  அபூஹுரைரா அதிகம் (ஹதீஸ்களை) அறிவிப்பதாக மக்கள் (குறை) கூறுகின்றனர். நான் ஒரு மனிதரைச் சந்தித்து நேற்றிரவு இஷாவில் நபி(ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள்? என்று கேட்டேன். அவர் தெரியாது என்றார். நீர் அத்தொழுகையில் கலந்து கொள்ள வில்லையா? என்று கேட்டேன். கலந்து கொண்டேன் என்றார். அவரிடம் நான் ‘அதை அறிவேன். இன்னின்ன அத்தியாயங்களையே நபி(ஸல்) அவர்கள் ஓதினார்கள்” என்றேன்.
  Volume :2 Book :21
  ****************

 3. அபு ஹுரைராவின் வாக்கு மூலம்
  **************************************
  2047. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
  “அபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை? அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!” என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் ‘என் வயிறு நிரம்பினால் போதும்’ என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்! என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்!’ எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை!”
  Volume :2 Book :34

  *****************
  ம்ரண்பரும் ஹதிதுகளை தீர்க்கும் விதம்
  _____________
  1483. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  மழை நீராலோ, ஊற்று நீராலோ, தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம் கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.
  இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
  விளைபொருட்களில் தரப்பட வேண்டிய ஸகாத்தின் அளவை மட்டும் கூறிவிட்டு எந்த அளவுள்ள விளை பொருட்களுக்கு ஸகாத் கொடுக்கப்பட வேண்டும் என்று இப்னு உமர்(ரலி) அவர்களின் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்தாமல் போய்விட்டது. எந்த அளவுள்ள விளை பொருட்களில் ஸகாத் கடமையாகும் என்று தெளிவுபடுத்திக் கூறுகிற அபூ ஸயீத் குத்ரீ(ரலி) அறிவிக்கிற (அடுத்து வரும் 1484-ம் எண்) ஹதீஸானது. இந்த இப்னு உமர்(ரலி) அவர்களின் (1483ம் எண்) ஹதீஸிற்கு விளக்கமாக அமைந்துள்ளது” என்று அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்.
  ஒருவர் கூறுவதை விட அதிகமான விபரத்தை நம்பகமான மற்றொருவர் கூறினால் அந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படும். நம்பகமானவர்களால் அறிவிக்கப்படும் தெளிவான ஹதீஸ் தெளிவற்ற ஹதீஸுக்கு (விளக்கமளித்து) தீர்மானமான ஒரு கருத்தைத் தரும்.
  இதை(எதைப் போன்றதெனில்) ‘நபி(ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை’ என்ற ஃபள்லு இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸைவிட்டுவிட்டு. ‘நபி(ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்கள்’ என்று பிலால்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதைப் போன்றதாகும்.
  Volume :2 Book :24
  __________________

 4. ஒருவர் அளித்த ஹதிதில் குழப்பம்
  *************
  1953. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
  ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது” என்றார்கள்.
  இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் சகோதரி மரணித்துவிட்டார்…’ என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
  இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தாய் இறந்துவிட்டார்…’ என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
  இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ‘நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்துவிட்டார்…’ என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
  இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில், ‘என் தாய் மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் இறந்துவிட்டார்’ என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
  Volume :2 Book :30
  _________________

 5. சங்கர் ///இம்மாதிரி 40+ ஹதிதுகளில் புகாரியாகிய நான் கூறுகின்றேன் என்று வருகிறது.
  அப்பொழுது அவருக்கு ஹதிதுகளை தொகுக்கும் அதிகாரம் யார் வழங்கியது?,அவருடைய தேர்வு எப்படி கண்காணிக்கப் பட்டது?.போன்ற விவரங்களும் அங்கீகரிக்கப் பட்ட ஹதிதில் இருக்க வேண்டுமல்லவா?////
  சங்கர் ஏதாவது குழப்பம் பண்ண வேண்டும் என்பது விருப்பமா?மிகத் தெளிவாகவே புகாரி அவர்கள் ஹதீதை கூறிவிட்டு அதற்கான தனது விளக்கத்தையும் கூறி உள்ளார் .இதில் புகாரி ஹதீதில் கூறியதாக எப்படி எடுத்துக் கொள்ளமுடியும்? அரசியல் நிலவரங்கள் பற்றி எத்தனையோ இணைய தளங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.ஆனால் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் உலகம் விக்கி லீக்ஸ் தகவல்களை மட்டும் என்ன அடிப்படையில் நம்புகிறது ?அவர்களுக்கு இவ்வாறு செய்திகள் வெளிய்ட அதிகாரம் வழங்கியது யார்?
  ///அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
  அபூஹுரைரா அதிகம் (ஹதீஸ்களை) அறிவிப்பதாக மக்கள் (குறை) கூறுகின்றனர். நான் ஒரு மனிதரைச் சந்தித்து நேற்றிரவு இஷாவில் நபி(ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள்? என்று கேட்டேன். அவர் தெரியாது என்றார். நீர் அத்தொழுகையில் கலந்து கொள்ள வில்லையா? என்று கேட்டேன். கலந்து கொண்டேன் என்றார். அவரிடம் நான் ‘அதை அறிவேன். இன்னின்ன அத்தியாயங்களையே நபி(ஸல்) அவர்கள் ஓதினார்கள்” என்றேன்.
  Volume :2 Book :௨௧////
  சங்கர் இதிலிருந்து ஷியாக்களின் ஹதித்கள் தவறானவை என்று உறுதிபடுத்தப்படுகிறது அல்லவா?

 6. சங்கர் காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம்,,,, என்பது போல் நீங்கள் மூன்று ஹதித்களை கூறி ஹதிதில் குழப்பம் ,முரண்பாடு,அபு ஹுரைராவின் மனன சக்தி ஆகியவை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் .மேலும் நீங்கள் ஹதிதின் விதிகள் பற்றி செங்கொடியின் இது பற்றிய முந்தைய கட்டுரை படித்தால் புரிந்து கொள்ளலாம் .

 7. செங்கொடி ////ஹதீஸ் குறித்த இந்த கட்டுரையில், அது எந்த காலகட்டத்தில் எப்படி தொகுக்கப்பட்டது என்பது குறித்த சுருக்கமாக விவரித்திருந்தேன். அதை நண்பரும் ஒப்பியிருக்கிறார். /////
  இது என்ன கூத்து ,?ஹதீத் கலை நூல்களில் படித்ததை அப்படியே எழுதியுள்ளீர்கள் .உண்மைகளை திரிபுகள் இல்லாமல் எழுதும்போது அவர் ஏன் அதை மறுக்க வேண்டும் ?இது உங்கள் சொல்லாடல்?

 8. வால் பையன் நன்றாக படியுங்கள் ,சப்பை எங்கே இருக்கிறது என்பது புரியும் ?

 9. அதாவது இந்த ஹதிது சரி என்று அங்கீகரித்து அதில் சிலவற்றில் விளக்கம் கூறுகிறார்.சரி.அவ்ரே ஹதிதை கூறுகிறார் என்று கூறவில்லை.
  ________________
  சும்மா யார்ர் வேண்டுமானாலும்ஹதிது தொகுக்க முடியுமா?
  1.இறைவன் இப்படி கூறியிருக்க வேண்டும்.
  குரான் 33.40 ந் படி முகம்து இறுதி தூதர் இனி வஹி யாருக்கும் வரக் கூடாது.
  அப்போது இரவன் இல்லை.
  2.அப்பொழுது அவருக்கு ஹதிதுகளை தொகுக்கும் அதிகாரம் யார் வழங்கியது?,
  3.அவருடைய தேர்வு எப்படி கண்காணிக்கப் பட்டது?,போன்ற விவரங்களும் அங்கீகரிக்கப் பட்ட ஹதிதில் இருக்க வேண்டுமல்லவா?

  இப்படி இருக்க வேண்டியது இல்லை யென்றால் புகாரி யாரும் அனுமதி கொடுக்காமல், யாருக்கும் தெரியாம‌ல் அவராகவே 7000/600000(?) ஹதிது கொடுத்தார் என்று கூறலாமா?
  பிற ஹதிது தொகுப்புகளில் புஹாரி பற்றி குறிப்பு உண்டா?

 10. சங்கர் ,பல அறிஞர்கள் ஹதித்களை தொகுத்தது போலவே இமாம் புகாரியும் ஹதித்களை தொகுத்தார்.அதற்கு பின்னர் வந்த அறிஞர்கள் l ஆய்வு செய்ததில் புகாரியின் நூலே முதலிடம் பெறுகிறது மேலும் புகாரி பற்றிய விளக்க நூல்களாக “பதஹுல் பாரி ‘ “அய்னி” போன்ற நூல்கள் உள்ளன

 11. ///குரானுக்கு முரண்படும் ஹதீஸ்களை பொருத்தவரையில் அதுவும் ஹதீஸ்கலையின் விதிதான் என்கிறார் நண்பர். எல்லா ஹதீஸ் தொகுப்புகளை விடவும் காலத்தால் முந்திய முகம்மதுவின் வரலாற்றை எழுதிய தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றோர்கள் குரானுக்கு முரணானதை தள்ளிவிட வேண்டும் என விதி ஏற்படுத்தவில்லை.////
  இங்கு காலம் முக்கியமல்ல ,எடுத்துவைக்கப்படும் ஆதாரங்களே முக்கியம். காலம்தான் முக்கியம் என்றால் ஸ்டாலின் பற்றிய சம காலத்து குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளாமல் இப்போது நடை பெரும் விசாரணைகளை ஏன்உண்மை என கொள்ளவேண்டும்?
  ///அதன் பிறகு உள்ளவர்களான இமாம்கள் என போற்றப்படும் ஷாஃபி, ஹனபி, ஹம்பலி, மல்லிக் எனும் நால்வரும் அவ்வாறு எந்த விதியையும் ஏற்படுத்தவில்லை. இதன் பிறகு ஹதீஸ்களைத் தொகுத்தவர்களுள் முக்கியமானவர்களான புஹாரி, திர்மிதி உள்ளிட்ட அறுவரில் எவரும் அப்படி ஒரு விதியை ஏற்படுத்தவில்லை. அதேநேரம் இவர்களில் எவரும் குரானுக்கு முரணான எதுவும் இஸ்லாத்தில் ஏற்கத்தக்கதல்ல எனும் அடிப்படை தெரியாதவர்களும் அல்லர்.////
  இமாம்களாக அபுஹனிபா ,ஷாபி,மாலிக் ,ஹன்பல் ஆகியோர் மட்டும் போற்றப் படவில்லை .இன்னும் நூற்றுக்கணக்கானோர் அவ்வாறு போற்றப்பட்டனர்.மேற்கூறிய நான்கு இமாம்களும் ,தாங்கள் கூறியவற்றை அப்படியே மேம்போக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்.நாங்கள் எவ்வாறு ஆய்வு செய்தோமோ ,எவற்றிலிருந்து எடுத்துக் கொண்டோமோ அது போன்று நீங்களும் ஆய்வு செய்து அறிந்து கொள்ளுங்கள்.நாங்கள் சொன்னது குரான் ஹதித்களுக்கு மாற்றமாக இருந்தால் குரான் ஹதித்களையே எடுத்துக் கொள்ளுங்கள் .நாங்கள் சொன்னதை தவிர்த்து விடுங்கள் என்று பொருள்படும்படியாக தங்களது நூல்களில் கூறியுள்ளனர்.
  குரானுக்கு மாற்றமாக நபி[ஸல்]அவர்கள் ஒருபோதும் சொல்லியிருக்கவோ ,செய்திருக்கவோ மாட்டார்கள் .ஒருவேளை அவ்வாறு ஸஹிஹ் ஹதித்கள் இருக்குமானால் அதில் குரானுக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டுமே தவிர ஹதித்க்கு அல்ல என்ற இஸ்லாத்தின் அடிப்படையை விளங்கிக் கொள்ளவேண்டும்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s