மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

பரிணாமமா? படைப்பா? இதை அறிவியலுக்கு எதிரான மனநிலையில் இருந்துகொண்டு; அவ்வாறு இருப்பதையே சரியானதென்று மதப் பிடிப்போடு இருப்பவர்கள் தங்களின் புரிதல்களை மீளாய்வு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் தான் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு தொடர்வது என முடிவு செய்திருந்தேன். கடந்த கட்டுரையில் நண்பர் இப்ராஹிம் ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

பிரபஞ்சம் தோன்றி கோடான கோடிகள் ஆண்டுகள் ஆகியும் எத்தனை பரிணாமங்கள் நடந்தும் ஏன் மனிதன் மட்டுமே பேச கற்றுக் கொண்டான்? ஏன் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு உள்ளது?

இந்தக் கேள்விக்கு அடிப்படை இஸ்லாமிய மதப் பிரச்சார மேடைகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஒன்றில் இருக்கிறது. சூழ்நிலைதான் மனிதன் பரிணாமமடைவதற்கு முக்கிய காரணி என்றால் மனிதன் பகுத்தறிவு கொள்வதற்கு என்ன சூழ்நிலை பூமியில் நிலவியது? என்பது தான் அந்தக் கேள்வி. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாலே புரியும் இப்படி கேள்வி எழும்புவதன் காரணம் அதுகுறித்தான அடிப்படை புரிதல் இல்லாததே என்பது. மனிதன் மட்டுமா பேசுகிறான்? மனிதனுக்கு மட்டுமா பகுத்தறிவு உள்ளது?

இல்லை. மனிதன் மட்டும் தான் மொழி எனும் கருவியுடன் பேசுகிறான். மனிதன் மட்டும் தான் பகுத்தறிவை சிறப்பாக பயன்படுத்துகிறான். பொதுவாக மனிதன் தானும் ஒரு சமூக வயப்பட்ட விலங்குதான் எனும் உண்மை அவன் வரித்துக் கொண்டிருக்கும் தகுதிக்கு இழுக்கானதாக கருதுகிறான். அதுதான் அவனை அந்த உண்மைகளை விளங்கிக் கொள்வதற்கு தடைகளாக முன்னிற்கிறது. எல்லா விலங்குகளுமே தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றன. ஆனால் அது மனிதன் அளவுக்கு விரிந்த பொருளில் இல்லை. ஏனென்றால் விலங்குகளுக்கு அதன் உயிர் வாழும் தேவைகளைத்தாண்டி வேறெந்தக் கருத்துகளும் இல்லை. மாட்டின் கத்தல்களை நம்மாலே நான்கைந்து விதமாக பிரித்து புரிந்து கொள்ள முடியும். காகம் உணவு கிடைத்ததும் கரைந்து தன் குஞ்சுகளை அழைக்கிறது. தன் குஞ்சை கொத்த வரும் பருந்தை எதிர்த்து கோழி கீச்சலாக கூவி தன் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. எல்லா விலங்குகளுமே ஆபத்து காலங்களில் பலமாக குரலெழுப்பி உதவி தேடுகின்றன. இவைகளெல்லாம் பேச்சில்லையா? “முனியாண்டி விலாசில் இன்னிக்கு நாஸ்தா இன்னாபா?” என்றால் மட்டும் தான் அதை பேச்சாக கொள்ள வேண்டுமா? அதனதன் தேவைக்கு ஏற்பவே அவை தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

மனிதனும் அந்த நிலையிலிருந்து தொடங்கியவன் தான். நியாண்டர்தால்கள் வல்லொலிகளை மட்டுமே பேசியிருந்தார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்று பேசப்படும் மொழிகளும் கூட தற்கால தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் பெருகின்றன. இவைகளையெல்லாம் உள்வாங்காமல் மனிதர்களைத்தவிர வேறெதுவும் ஏன் பேசவில்லை என்று கேட்பதற்கு அவர்களின் உள்ளீடாய் மதம் இருக்கிறது என்பதைத்தவிர வேறெதுவும் காரணம் இல்லை.

இதுபோலவே மனிதனைத்தவிர வேறெதற்கும் பகுத்தறிவு இல்லை என்பதும். அறிவு என்பது மனிதன் விலங்கு என உயிருள்ள அனைத்திற்கும் பொதுவானது. அதை மனிதன் தன்னுடைய வசதிக்காக ஐந்தறிவு, ஆறாவது அறிவு பகுத்தறிவு என பகுத்துக் கொண்டான். தனக்கு நேரும் அனுபவங்களை தொகுத்து நினைவில் வைத்திருந்து அதை சூழல் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வது தான் அறிவு. இதை எல்லா விலங்குகளுமே செய்கின்றன. ஓரிடத்தில் தொடர்ச்சியாக சில முறை கல்லெறி வாங்கிய ஒரு நாய் மீண்டும் அந்த இடத்தைக் கடக்கும் போது சற்று பதுங்கி கவனித்துச் செல்வது பகுத்தறிவின்றி வேறென்ன? சிலவகை நச்சுச் செடிகளை மட்டும் உண்ணாமல் விலக்கும் மலை ஆடுகளுக்கு இருக்கும் அறிவை என்னவாக வகைப்படுத்துவது? ஏனைய விலங்குகளை விட குரங்குகள் இதை இன்னும் சிறப்பாக பயன்படுத்துகின்றன. எட்டாத உயரத்திலிருக்கும் கனிகளைப் பறிக்க கிளைகளை ஒடித்துப் பயன்படுத்தும் அளவிற்கு அதன் பகுத்தறிவு விருத்தியடைந்திருக்கிறது. மாறாக பகுத்தறிவு என்பதை மனிதனுக்கு மட்டுமேயான தனிச்சிறப்பான ஒன்றாக உருவகப்படுத்தி அதற்கு காரணமென்ன என்று கேட்பது பொருளற்றது. மனிதனின் தேவைகள் அவனை அந்த அறிவை மேம்பட்ட நிலையில் கையாளும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

மனிதன் ஏன் பறப்பவனாக பரிணாமமடையவில்லை? வெட்கம், நெருங்கிய இரத்த உறவு கொண்டவர்களுடனான உடலுறவு தவறு போன்றவற்றை எந்த விலங்கிலிருந்து மனிதன் கற்றுக் கொண்டான்?

மனிதன் ஏன் பறக்கவில்லை என்பதை விட எல்லா பறவைகளும் பறக்கின்றனவா? என்பது பொருள் பொதிந்த கேள்வி. பறப்பது என்பது எல்லா உயிரிங்களுக்குமான பொதுப் பண்பல்ல. எளிய எடை குறைந்த விலங்குகளுக்கான சிறப்புப் பண்பு. பறக்கும் உயிரினங்கள் ஏனைய எடைகூடிய உயிரினங்களைப் போல் நடக்கவோ ஓடவோ செய்வதில்லை. எடை குறைவாக இருக்கும் உயிரினங்கள் ஆபத்து காலங்களில் பறந்து தப்பிக்கின்றன. எடை அதிகமாக இருக்கும் உயிரினங்கள் ஓடித்தப்பிக்கின்றன. ஆனால் பறவை இனமாக இருந்த போதிலும் மயிலால் நீண்ட தூரம் பறக்க முடிவதில்லை. ஆனால் நடக்கின்றன. கோழியோ பறக்கவும் செய்கிறது நடந்து ஓடவும் செய்கிறது. ஈமு, நெருப்புக் கோழி போன்ற பறவையினங்கள் பறப்பதில்லை ஆனால் விலங்குகளைப் போல் ஓடுகின்றன. இதிலிருந்து தெரிவதென்ன? உயிரினங்களின் பறப்பது எனும் பண்பு அவற்றின் எடையோடு தொடர்புடையது. மனிதன் குரங்கு வகைப்பட்ட உயிரினத்திலிருந்து பரிணமித்தவன். அவை பறக்கும் தன்மையற்ற உயிரினங்கள் அவற்றிலிருந்து கிளைத்த மனிதன் எப்படி பறக்க முடியும்?

வெட்கம், நெருங்கிய இரத்த உறவு கொண்டவர்களுடனான கலப்பை தவிர்ப்பது போன்றவைகளை மனிதன் எந்த விலங்குகளிடமிருந்தும் கற்றுக் கொள்ளவில்லை. மனிதனின் தொடக்க காலங்களில் அவைகள் இருந்தன. பின்னர் சமூக கூடிவாழும் நெறிகளுக்கு ஏற்ப மனிதன் வகுத்துக் கொண்ட விதிமுறைகள் தான் யாருடன் உறவு கொள்வது? யாரை விலக்குவது? என்பது. இன்றும் கூட ஒரு குழுவின் மணவிதிகள் இன்னொரு குழுவின் மண விதிகளுடன் முழுவதுமாக பொருந்துவதில்லை. வெட்கம் ஆடை அணிவது, பிறப்புறுப்புகளை மறைப்பது போன்றவைகளும் எளிமையாக தாக்கப்படும் இலக்குகளை பாதுகாப்பது என்பதில் தொடங்கி வெயில் மழை போன்றவற்றிலிருந்து உடலை பாதுகாப்பது எனும் அம்சங்களின் வளர்ச்சி தான்.

பரிணாமம் என்பது ஒருவகை உயிரிலிருந்து இன்னொருவகை உயிருக்கு மாறிச் செல்வது என்றால் முதல் உயிர் எப்படி தோன்றியிருக்க முடியும்?

இத‌ற்கு விள‌க்க‌ம் சொல்லுமுன் உயிர் என்றால் என்ன‌? என்ப‌தைப்ப‌ற்றி ச‌ரியான‌ தெளிவான‌ புரித‌ல்க‌ளை ஏற்ப‌டுத்தியாக‌வேண்டும். உயிர் என்ப‌த‌ற்கு ம‌த‌வாதிக‌ள் மிக‌ப்பிர‌மாண்ட‌மாய், மிக‌ அரிதான‌ ஒன்றாய், தெய்வீக‌த்த‌ன்மையுடைய‌தாய் புனைவுக‌ளை ஏற்ப‌டுத்திவைத்திருக்கிறார்க‌ள். உயிருள்ள‌ ம‌னித‌னாய் இருப்ப‌து இறைவ‌னின் மிக‌ப்பெரிய‌ க‌ருணை என‌வே நீ அவ‌னை வ‌ண‌ங்க‌வேண்டும் என்பது கடவுட் கோட்பாட்டின் அடித்தளமாய் இருக்கிறது. க‌ட‌வுள் ந‌ம்பிக்கையே உயிர் ப‌ற்றிய‌ சிற‌ப்பான மிகைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னையில் தான்‌ கட்டியமைக்கப் பட்டிருக்கிறது. உன்னை அவ‌ன் ம‌ண்ணாக‌ ப‌டைத்திருக்க‌ முடியும் ஆனால் ம‌னித‌னாக‌ ப‌டைத்திருக்கிறானே அத‌ற்கு நீ ந‌ன்றி செலுத்து. இப்ப‌டி உல‌கிலுள்ள‌ பெரும்பாலான‌ ம‌னித‌ர்க‌ள் ஆத்தீக‌ர்க‌ளானாலும், நாத்தீக‌ர்க‌ளானாலும் உயிர் ப‌ற்றிய‌ மிகைம‌திப்பிலேயே இருக்கின்றன‌ர்,

 

ஆனால் உண்மையில் ம‌ண்ணுக்கும் ம‌னித‌னுக்கும் பெரிய‌ வேறுபாடு ஒன்றுமில்லை. உல‌கிலுள்ள‌ எந்த‌ப்பொருளை எடுத்துக்கொண்டாலும் உயிருள்ள‌தானாலும் உயிர‌ற்ற‌தானாலும் அவை அணுக்க‌ளாலேயே அக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அணுவுக்குள் புரோட்டான், நியூட்ரான், எல‌க்ட்ரான் என்ற‌ மூன்று பொருட்க‌ள் இருக்கின்ற‌ன‌. இதில் புரோட்டானையும் நியூட்ரானையும் எல‌க்ட்ரான்க‌ள் சுற்றிவ‌ருகின்ற‌ன‌. இது தான் அணுவின் அமைப்பு. இந்த‌ அணுதான் ம‌ண்ணிலும் இருக்கிற‌து ம‌னித‌னிலும் இருக்கிற‌து. உயிருள்ள‌ பொருளிலும் அதேஅணுதான் உயிர‌ற்ற‌ பொருளிலும் அதே அணுதான். இர‌ண்டுவ‌கை பொருட்க‌ளின் அணுவிலுமே புரோட்டானையும் நியூட்ரானையும் எல‌க்ட்ரான்க‌ள் சுற்றிவ‌ருகின்ற‌ன‌. என்றால் உயிர‌ற்ற‌ பொருட்க‌ளுக்கும் உயிருள்ள‌ பொருட்க‌ளுக்கும் உள்ள‌ வேறுபாடு என்ன‌? அசைவு. உயிருள்ள‌ பொருட்க‌ள் அசைகின்ற‌ன‌, வ‌ள‌ர்ச்சிய‌டைகின்ற‌ன‌, இன‌ப்பெருக்க‌ம் செய்கின்ற‌ன‌ இதுதான் உயிர் என்ப‌த‌ன் பொருள்.

 

ஆனால் உயிர‌ற்ற‌ பொருட்க‌ள் இதை‌ செய்வ‌தில்லையா? அவைக‌ளும் இதை செய்கின்ற‌ன‌. எப்ப‌டி? த‌ண்ணீர் ஒரு உயிர‌ற்ற‌ பொருள் தான் அதை ஒரு இட‌த்தில் வைத்தால், வைத்த‌ இட‌த்தில் அது அப்ப‌டியே இருக்கிற‌தா? ப‌ள்ள‌மான‌ இட‌த்தை நோக்கி அசைகிற‌து இட‌ம் பெய‌ர்கிற‌து. காற்று உயிர‌ற்ற‌ பொருள்தான் அது அசைவ‌ற்றா இருக்கிற‌து? வெற்றிட‌த்தை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிற‌து. ஒரு இரும்புத்துண்டை எடுத்துக்கொள்வோம் வெயிலில் அதை போட்டுவைத்திருந்தால் அது நீட்சிய‌டைகிற‌து. ஓரிரு மில்லிமீட்ட‌ர்க‌ள் வ‌ள‌ர்ச்சிய‌டைகிற‌து. காற்ற‌டைத்த‌ ப‌லூனை லேசாக‌ சூடாக்குங்க‌ள் (ப‌லூனுக்கு பாதிப்பு ஏற்ப‌டாவ‌ண்ண‌ம்) ப‌லூன் வெடித்துவிடும் ஏன்? காற்றான‌து பெருக்க‌ம‌டைகிற‌து. உப்பை எடுத்துக்கொள்ளுங்க‌ள் சோடிய‌ம், ஆக்ஸிஜ‌ன், குளோரின் இந்த‌ மூன்று பொருளும் ஒன்றுகூடி சோடிய‌த்தின் ப‌ண்பும் இல்லாத‌, குளோரினின் ப‌ண்பும் இல்லாத‌, ஆக்ஸிஜ‌னின் ப‌ண்பும் இல்லாத‌ சோடிய‌ம் குளோரைடு என்ற‌ புதிய‌ பொருள் அதாவ‌து உப்பு என்ற‌ புதிய‌ பொருள் பிற‌க்கிற‌து. இவைக‌ளெல்லாம் நாம் அன்றாட‌ம் பார்க்கும் விச‌ய‌ங்க‌ள். உயிருள்ள‌வைக‌ளை போல‌வே உயிர‌ற்ற‌வையும் செய‌ல் ப‌டுகின்ற‌ன‌.

 

ச‌ரி, ம‌னித‌னுக்கு வ‌ருவோம். காலில் முள் குத்திய‌தும் வ‌லிக்கிற‌து. இதில் ந‌டைபெறும் செய‌ல் என்ன‌? தோலில் தூண்ட‌ப்ப‌டும் உண‌ர்வுக‌ள் ந‌ர‌ம்பு அணுக்க‌ள் வ‌ழியாக‌ மூளைக்கு க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து. எப்ப‌டி ஒரு க‌ம்பியின் ஒரு முனையை சூடாக்கினால் ம‌றுமுனைக்கு சூடு க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌தோ அதே அடிப்ப‌டையில். ஆசை, கோப‌ம், சிந்த‌னை நினைவு போன்ற‌ மூளையின் செய‌ல்பாடுக‌ள் எப்ப‌டி ந‌டைபெறுகின்ற‌ன‌? வேதியிய‌ல் வினைமாற்ற‌ங்க‌ள் தான். மூளையில் வேதிவினைமாற்ற‌ங்க‌ள் செய்வ‌த‌ன் மூல‌ம் ம‌னித‌னின் ம‌னோபாவ‌த்தை மாற்ற‌ முடியும். க‌வ‌லையாக‌ இருந்தால் தூக்க‌மாத்திரை உட்கொண்டு தூங்குகிறோம். அது என்ன‌ செய்கிற‌து? செய‌ற்கையாக‌ தூக்க‌த்திற்கான‌ வேதிவினையை மூளையில் நிக‌ழ்த்துகிற‌து. அத‌னால் தான் தூக்க‌ம் வ‌ருகிற‌து. ம‌கிழ்ச்சியாக‌ இருக்கும் ஒரு ம‌னித‌னை மூளையின் குறிப்பிட்ட‌ ப‌குதியை காந்த‌ ஊசியால் நிர‌டுவ‌த‌ன் மூல‌ம் எந்த‌ இழ‌ப்பும் இல்லாம‌லேயே சோக‌த்தில் த‌ள்ள‌முடியும். அப்ப‌டியென்றால் என்ன‌தான் வித்தியாச‌ம் உயிர‌ற்ற‌வைக‌ளுக்கும் உயிருள்ள‌வைக‌ளுக்கும்? உயிர‌ற்ற‌வை ஒரு குறிப்பிட்ட‌ வ‌ரைய‌ரைக்குள் செய‌ல் ப‌டுகின்ற‌ன‌, உயிருள்ள‌வை வ‌ரைய‌ரைக‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. இதுதான் உயிர‌ற்ற‌வைக‌ளுக்கும் உயிருள்ள‌வைக‌ளுக்கும் இடையிலுள்ள‌ வித்தியாச‌ம். இதை புரிந்து கொள்ளாத‌துதான். இதை ச‌ரிவ‌ர‌ உள்வாங்காம‌ல் உயிர் ப‌ற்றிய‌ மிகை ம‌திப்பு இருப்ப‌தால் தான் ஒரு உயிரின‌த்திலிருந்து தானே இன்னொரு உயிர் வ‌ர‌முடியும். அப்ப‌டியிருக்கும் போது உயிரில்லாத‌ பொருட்க‌ளிலிருந்து உயிர் எப்ப‌டி தோன்ற‌முடியும்? பூமியில் உயிரே இல்லாதிருக்கும் போது முதல் உயிர் எப்படி தோன்றியிருக்க முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இங்கு தான் ப‌ரிணாம‌த்தின் ப‌ங்க‌ளிப்பு வ‌ருகிற‌து.

 

நெருப்புக்கோள‌ங்க‌ளிலிருந்து வெளிப்ப‌ட்ட‌ பூமி, கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் குளிர்ந்த‌ போது அத‌ன் விளைவால் வாயுக்க‌ள் தோன்றின‌, வாயுக்க‌ள் நெருக்க‌த்தால் ஒன்றுகூடி நீர் உருவாகி ம‌ழையாகி ஆறுக‌ளும் க‌ட‌ல்க‌ளும் உருவாயின‌. ஆறுக‌ளின் வேக‌த்த‌ல் பாறைக‌ள் உடைப‌ட்டு க‌ட‌லோர‌ங்க‌ளில் ம‌ண‌லாய் சேர்ந்த‌து. ம‌ண‌லிலுள்ள‌ சிலிகானும் பாஸ்ப‌ர‌சும் மின்ன‌லின் மின்சார‌த்தால் வினையூக்க‌ப்ப‌ட்டு அசைவைப் பெற்ற‌து. இது தான் முத‌ல் உயிர். இப்ப‌டி தொட‌ங்கிய‌து தான் பூமியின் உயிர்க‌ளின் ப‌ய‌ண‌ம்.

 

பரிணாமம் என்றதும் அது கட்டுக் கதை, யூகம், நிரூபிக்கப்படாதது என்றெல்லாம் அள்ளிவிடும் மதவாதிகள், அவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால் பரிணாமம் குறித்து எழுப்பும் கேள்விகளைப்போல் படைப்புக் கொள்கையிலும் கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் அதை மட்டும் தந்திரமாக எழுப்ப மறுத்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கே தெரியும் படைப்புக் கொள்கையை அறியியலின் அடிப்படையில் நிரூபிக்க முடியாது என்பது. படைப்புக் கொள்கையை நோக்கி யாரும் கேள்விகளை எழுப்பிவிடக் கூடாது என்பதற்காகவே பரிணாமக் கொள்கையின் மீது கேள்விகளை எழுப்புகிறார்கள். குரான் கூறும் படைப்புக் கொள்கை என்ன? மனிதனின் தொடக்கம் குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது. அறிவியலின் பார்வையில் அது சரியா? என்பதை அடுத்த பதிவுகளில் காண்போம்.

 

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

27 thoughts on “மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

 1. //வெட்கம், நெருங்கிய இரத்த உறவு கொண்டவர்களுடனான கலப்பை தவிர்ப்பது போன்றவைகளை மனிதன் எந்த விலங்குகளிடமிருந்தும் கற்றுக் கொள்ளவில்லை. //

  சில மேம்பட்ட விலங்குகளிடமும் தகாப்பாலுறவை தடுக்கும் திறமை இயல்பாகவே உள்ளது, இதுவும் பரிணாமத்தின் விளைவுதான். குறைகளற்ற வலுவான உயிரினத்தை உருவாக்க பரிணாமம் இயல்பாகவே இதை தடுத்து வைத்துள்ளது. இதை பற்றிய சிறப்பான கட்டுரைகள் இங்கு கிடைக்கின்றன.

  http://www.kotukki.net/2011/06/incest-6.html

  மனிதர்களின் பாலியல் நாட்டத்தை அறியும் நோக்கில் நடந்த ஒரு சோதனையில் பெண்களிடம் நிறைய வியர்வை படிந்த ஆடைகளை கொடுத்து, இதில் அவர்கள் விரும்பும் வாசனைக்கு நேர்மறை மதிப்பும், அவர்கள் விரும்பாத வாசனைக்கு எதிர்மறை மதிப்பும் கொடுக்க கூறினர். இதில் அவர்களுக்கு தெரியாத வண்ணம் அவர்களது தந்தை மற்றும் சகோதரர்களின் வியர்வை படிந்த ஆடைகளும் சேர்க்கப்பட்டு இருந்தது. சோதனையின் முடிவில் அந்த பெண்களின் நெருங்கிய உறவினர்களின் வியர்வை வாசனைக்கு எதிர்மறை மதிப்பே கிடைத்தது. மனிதன் காட்டுமிராண்டியாய இருந்த காலத்திலும் இந்த வியர்வை வாசனையை கொண்டே நெருங்கிய உறவுகளை தவிர்த்து வந்தான். மனிதர்க்கு பரிணாமத்தின் விளைவாய் விளைந்ததே தாகப்பாலுறவுக்கு எதிரான நிலை பின்னர் வந்த மதவாதிகள் இதை சிறப்பாய் தங்கள் மதத்துடன் இணைத்து கொண்டனர்.

  தகவல் ஆதாரம்- http://www.youtube.com/watch?v=s_y8NTaPNQY

 2. its not proper answer… try lot. your answer is improper with the questions asked. yen manidharkal paravai pol paraka villa nu ketta ella paravaikalum parakiradhanu thirupi oru kelvi kekuringa.. sammandhamey illama badhil solla kudadhu

 3. பரிணாமம்: சில சுவாரஸ்ய கேள்விகள்:by கார்பன் கூட்டாளி
  நீங்கள் பரிணாமத்தை நம்புபவரா? கீழ்க்கண்ட கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டு கொள்ளுங்கள் அல்லது உங்கள் பரிணாம குருவிடம் பெற முயலுங்கள்.:

  ஓர் விலங்கில்:

  1) எது முதலில் பரிணாமம் அடைந்தது: இரத்தமா, இரத்த குழாயா அல்லது அது செல்ல கூடிய இதயமா…

  இரத்த குழாய் இல்லாமல் இரத்தம் எப்படி செல்லும், இரத்தம் இல்லாமல் இரத்த குழாய் எதற்காக உருவாக வேண்டும், இதில் ஏதேனும் ஒன்று இல்லாத பட்சத்தில் உயிரினம் எப்படி உயிர் வாழும்.

  2) எது முதலில் பரிணாமம் அடைந்தது: வாயா, வயிறா அல்லது கழிவை வெளியேற்றும் துவாரமா…,

  3) எது முதலில் பரிணாமம் அடைந்தது: மூச்சிகுழாயா, சுவாசப்பையா, அல்லது ஆக்சிஜன் உபயோகிக்கும் முறையா…

  4) எது முதலில் பரிணாமம் அடைந்தது: எலும்பா, மூட்டா, அல்லது எலும்பை அசைக்க தேவையான தசையா….

  ஒவ்வொன்றும் பரிணாமம் அடைய மில்லியன் வருடங்கள் அல்லவா தேவை. அதுவரை பாதி உறுப்பை வைத்து என்ன செய்தன???

  5) முட்டாள் தனமாக அல்லவா உள்ளது, இந்த பரிணாம கதையை நம்பும் நான் பகுத்தறிவாலனா????

 4. தகாத முறையற்ற உறவை தற்போது எல்லா மதங்களும் கண்டிக்கின்றன அவ்வாறு நடந்து கொள்பவரைக்கண்டால் மனித சமுதாயம் அனைத்தும் வெறுத்து ஒதுக்கும் என்ற பயத்தினால் தான் இறைமறுப்பாளர்கள் தமது மதமான அறிவியலின் படி அது தவறு இல்லை என்று தெரிந்தும் அவ்வாறு நடந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.

 5. செங்கொடி என்ற கற்பனை லேபிளின் பின்னால் ஒழிந்து கொண்டு குரான் மட்டும் ஹதீத் களில் தமது கற்பனை களை புனைந்து ( அவைகளுக்கு அறிவு பூர்வமாக அறிஞ்சர்கள் பதிலளித்த போதிலும் விடா பிடியாக மறுபடி மறுபடி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி) இஸ்லாமியர்களின் உணர்சிகளைத்தூண்டி அதன் பின் விளைவுகளை கண்டு ரசிக்கும் உமது போக்கிற்கு ஒரு எல்லையே இல்லை என்று நினைக்க தோன்றுகிறது. உமக்கு அடுத்தவர்களின் உணர்சிகளைத்தூண்டி இன்பம் காணும் நோய் முற்றி விட்டது எனத்தோன்றுகிறது அதனால் தான் இந்த புனித மாதத்தில் இப்படி ஒரு இடுகை. உன் போன்றவர்கள் சந்தோசமாக உயிருடன் இப்பூமியில் உலவு வதிலிருந்து எல்லாம் வல்ல இறைவன் எவ்வளவு கருணையாளன் என்று புரிய முடிகிறது

 6. கேள்வி அல்லது கார்பன் கூட்டாளி,

  பரிணாமம் என்றால் என்ன? பரிணாமம் குறித்து உங்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்பதை கூறுங்கள். அதன் பின்னர் உங்கள் கேள்விகளை நீங்களே எள்ளி நகையாடக் கூடிய நிலை வரும்.

 7. ஏக இறைவனின் திருதிருப்பெயரால்
  //தகாத முறையற்ற உறவை தற்போது எல்லா மதங்களும் கண்டிக்கின்றன //
  இது உண்மையல்ல. இஸ்லாம் தகாத முறை உறவை, சின்னம்மா பெண், பெரியம்மா பெண் சித்தப்பா பெண் பெரியப்பா பெண் ஆகிய சகோதரி உறவு முறை திருமணங்களை ஆதரிப்பது மட்டுமல்ல, அது நபி(ஸல்) வழியாகவும் ஆக்கியுள்ளது.

  இது பற்றி அடுத்த பதிவில் ஆதாரத்துடன் எழுதுகிறேன்.

 8. ஆஹா.. செங்கொடி போன்ற நாத்திகர்களை நாக்கை புடுங்குவது போல கேட்டுவிட்டீர்கள்.
  //
  எது முதலில் பரிணாமம் அடைந்தது: இரத்தமா, இரத்த குழாயா அல்லது அது செல்ல கூடிய இதயமா…//

  இதே மாதிரி முதலில் பரிணாமம் அடைந்தது ஆணா பெண்ணா? ஆண் மட்டும் உருவாகி பெண் உருவாகாமல் இருந்தால் அந்த ஆண் என்ன செய்வான்? என்றெல்லாம் போட்டு தாக்குங்கள்..

  கார்பன் கூட்டாளி உயிரியலில் முதுகலை படித்தவர். அதுவும் இந்தியாவில். இதிலிருந்தே எந்த அளவுக்கு இந்தியாவில் உயிரியல் சொல்லித்தரப்படுகிறது என்று தெரிகிறதல்லவா?

  இதில் சிந்திப்பவர்களுக்கு ஏராளமான அத்தாட்சிகள் உள்ளன

  இஸ்லாம் அமைதி மார்க்கமா? தாவா செய்பவர்களுக்கு சிறு விளக்கம்

 9. நண்பர் கார்பன் கூட்டாளியின் கேள்விகளை அவர் கூட்டாளி வெளியிட்டது அருமை.

  அவரின் பரிணாம் எப்படி நடந்திருக்க வேண்டும் என்ற புரிதல் மிகவும் அருமை.அந்த புரிதலில் இருந்தே இக்கேள்விகள் உதித்து இருகிறது.

  இவற்றை கொஞ்சம் சிந்திப்போம்.

  1.உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அனைத்து உறுப்புகளும் உள்ளதா?.இருப்பது இல்லையே.சில உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக் பயனற்று போவதும் அறிந்த விஷயம்தானே.
  http://dharumi.blogspot.com/2010/11/455-3.html

  2.ஒவ்வொரு பரிணாம் வளர்ச்சியின் போதும் ஒவ்வொரு விலங்கும் உயிர்வாழ்வதற்கு தேவையான உறுப்புகளை பெற்று இருந்தால் மட்டுமே உருவாக முடியும்.ஒவ்வொரு கால்கட்டத்திலும் உருவாகிய ஒவொவ்ரு விலங்கும் முழுமையான ,தேவையான் உறுப்புகளி கொண்டிருந்த்வையே.

  3./இறைமறுப்பாளர்கள் தமது மதமான அறிவியலின் படி அது தவறு இல்லை என்று தெரிந்தும் அவ்வாறு நடந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்./
  அறிவியலின் படி அலாவினால் அனுமதிக்கப்பட்ட சித்தி,பெரியம்ம,சித்தப்பா,பெரியப்பா,மாமா,அத்தை வம்சத்தினரிடம் மண உறவு கொள்வதும் தவறு.பல பாகிஸ்தானிய இஸ்லாமிய குடும்பங்களில் மன் வளர்ச்சி இல்லாத குடும்பங்கள் இதனால் பிறக்கின்றன.

  4. இறைத் தூதர் தன் மருமகளுடன் உறவு கொண்டால் அதற்கு அல்லா வசனம் அனுப்பி ஹராமை,ஹலால் ஆக்கி விடுகிறான்.

  33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.
  33:38. நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை; இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் – இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.

 10. 1.முதல் ஒரு செல் உயிர் என்பது அபியோகெனிசிஸ் பிரிவின் கீழ் வருகிறது.பரிணாம்த்தின் கீழ் அல்ல.பரிணாம் உயிரினங்கள் இயற்கைக்கு ஏற்ப எவ்வாறு தங்கலை தகவமைத்து மாறுகின்ரன என்ப்தை குறித்து விளக்குகிறது.

  2. படிமங்களின் படி பல அற்றுப்போன,வாழும் உயிரினங்களின் வாழ்நாள் வேறுபடுகிற‌து.அதாவது மனிதனும் டைனோசாரும் ஒரே சம்யத்தில் வாழ்ந்து இருக்க சான்றுகள் இல்லை.டைனோசார் மனிதனுக்கு முன்பே உருவாகி ,அழிந்த இனம்.

  3..அல்லா அனைத்து விலங்குகளையுமொரே சமயத்தில் படைத்தான் எனில் ஏன் சில விலங்குகள் இல்லாமல் போக வேண்டும்?படைத்து அழியும் உயிரினங்களை எதற்கு படைக்க வேண்டும்.இன்னும் தினமும் பல உயிரினங்கள் இல்லாமல் போய்க் கொண்டே இருக்கின்ரன.
  http://en.wikipedia.org/wiki/Extinction

  4.சில உயிரினங்கள் இல்லாமல் போவது போல் பல கடவுள்களும் மதங்க்ளும் கூட காணாமல் போனது.அது போல் இஸ்லாமும்,அல்லாவும் காணாமல் போகும் நாளும் நெருங்குகிறது.

 11. சாமுராய் அவர்களே,
  இவை அல்லாஹ்வின் நபி(ஸல்) அவர்களின் அருட்கொடைகள். இது பற்றி விவரமாக பதிவு எழுதியிருக்கிறேன்
  படித்து அல்லாஹ்வின் அருள் மழையில் நனைய வாருங்கள்
  முஸ்லீம் உம்மாவுக்கு நமது நபி(ஸல்) அவர்களின் மூன்று அருட்கொடைகள்

 12. /ஏன் மனிதன் மட்டுமே பேச கற்றுக் கொண்டான்? /
  __________
  குரானின் படியும் மனிதனும் விலங்குகளும் ஒன்றுதான்.அவைகளுக்கு பெயர் உண்டா .ஏனெனில் பதிவு புத்தக்த்தில் குறிப்பு இருக்கிறது.
  6:38. பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
  ___________
  குரானின் படி பற‌வைகள்,எறும்புகள் பேசும்.சுலைமானுக்கு இம்மொழிகள் தெரிந்து இருக்கிற‌து.இத்னை ஏன் அவர்கள் நிரூபிக்க முயற்சிக்க கூடாது?.
  *
  27:16. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.

  27:18. இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
  ___________
  முகம்து மனிதர்களில் இறுதி தூதர் எனினும் அடுத்து வரும் தூதுவன் ஒரு விலங்கு
  *
  27:82. அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
  ____________

 13. உங்களது பதிவில் என்னுடைய பதிவுகளை விளம்பரம் செய்வதற்கு மன்னிக்கவும்.

  இப்போது சீப்பு வைத்து தலை சீவுவது பற்றி அல்லாஹ்வின் இறுது இறைதூதர் நபி(ஸல்) என்ன கூறினார்? என்பது போன்ற மூமீன்களுக்கு முக்கியமான கேள்விகளை அலசிக்கொண்டிருக்கிறேன்.
  படித்து உங்களது கருத்தை கூறுங்கள்.

 14. பகுத்தறிவு – பகுத்து பிரித்து அறியும் தன்மையுள்ள மனிதனை படைத்த இறைவன்,
  ஏன் நன்மை தீமைகள் கொண்ட வேத புத்தகத்தை கொடுக்க வேண்டும்?
  பகுத்தறிவு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள போது ஏன் ரசூல்களையும் , தூதர்களையும் அனுப்ப வேண்டும்?

 15. இஸ்லாமிய ,மதவாதிகளுக்கு ஒரு வினோத்மான தந்திரம் ,பெரு வெடிப்பை ஏற்போம் ,பரிணாம்த்தை மறுப்போம் என்பது.இது எப்படி என்றால் அப்படித்தான். அறிவியலோடு முற்று முதலாய் மோத மதவாதிகளுக்கு ஆசையா என்ன ?அறிவியல் அவர்களோடு மோதும் போது பரிணாம‌த்தை எதிர்ப்பது அவ்ர்களின் இருத்தலுக்க்கான போராட்டம் மட்டுமே. பெரு வெடிப்புக் கொள்கையை குரான் கூறுகிறது என்று சொல்கிறார்கள்.வேறு வழி?,சரி என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள் .பூமியும் வானமும் சேர்ந்து இருந்தன,நாம் இதனை பிரித்தோம் என்பதே குரானிய பெரு வெடிப்பு கொள்கை ஆகும்.
  குரானில் காட்டப்படும் ஒவ்வொரு அறிவியல் கொளகையையும் குரான் சொல்லும் படி வரையறுக்கும் ஒரு சிறு முயற்சியே.
  ******************
  21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
  ******************************

  வானம் என்பதை பூமி அல்லாத பிரபஞ்சம் என்று பொருள் கொள்ள வேண்டுமே?வேறு வழி வானம் என்று ஒன்று இல்லை அல்லவா!!!!!!!.அதே வார்த்தை சொர்க்கம்,மேகம் என்றும் உபயோகப் படுத்தப்படும் இங்கு பூமியல்லாத பிரபஞ்சம் .மத அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே.பிரபஞ்சம் தோன்றியதி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்,அதில் உள்ள கோடிக்க்கணக்கான் நட்சத்திரங்களில் சூரியனும் ஒன்று,அதை சுற்றி வரும் ஒரு கோள் பூமி,ஆக பூமி என்பது பெரு வெடிப்பின் போது இருந்திருக்க வாய்ப்பு இல்லை,அதில் சுமார் 0.000000000001%பங்கு என்று வேண்டுமானால் கூறலாம்?). ,பிரிக்க மிகவும் சிரமப்பட்டு பூமி 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது..பிரிக்க 10_5 =5 பில்லியன் ஆண்டு.[dividing].

  குன் என்றால் ஆகும் என்று இன்னொரு இடத்தில் கூறுகிறது..எதற்கு இத்தனை காலம்.இறைவனும் கால இயற்கை சூழ்நிலைகளுக்கு கட்டுப்பட்டவரா?
  *******************************

  2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” – ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
  3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.

  ************************************

  முதல் வசனத்தை கூறுபவர்கள் ,பூமியும் வானமும் இணைந்து பிரிந்தது பெரு வெடிப்பு என்று பெருமிதம் காட்டுபவர்கள்,உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரில் இருந்து படைத்தோம் என்பதை விளக்க் மாட்டார்கள்.ஆதம் கூட நீரில் இருந்துதான் தோன்றினாரா? குரானும் பரிணமத்தை ஏற்கிறதா?.பூமியும் வானம் இணைந்திருந்தன என்று கூறி நீரில் இருந்து உயிர்கள் தோன்றியது என்று ஏன் கூற வேண்டும்

 16. அன்புள்ள மூமீன்களே.

  சுவனத்தின் பாதையை எளிதாக்கிக்கொள்ளுங்கள்…

  ஹராமான உணவுவகைகளை தவிர்த்துகொள்ளுங்கள்.

  எச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்

 17. செங்கொடிக்கு ஒரு சவால்!

  இதோ ஒரு இஸ்லாமிய அறிவியல் கட்டுரை.. இதனை படித்த பின்னரும் நீங்கள் இஸ்லாமை மறுத்தால் உங்களுக்கு பகுத்தறிவே இலலை என்ற கருத்துக்குத்தான் வரவேண்டியிருக்கும்.

  இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்

  1400 ஆண்டுகளுக்கு முன்னரே ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டு கொள்கையை ஆணித்தரமாக வெளியிட்டு அல்குரான் அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு அற்புதமே என்று ஐயந்திரிபற காட்டியிருக்கிறான் அல்லாஹ்!

  சிந்தியுங்கள்.

 18. மேலே கருத்து எழுதும்போது..
  :ஏக இறைவனின் திருப்பெயரால் என்று போட மறந்துவிட்டேன். தேவையான இடத்தில்போட்டுக் கொள்ளவும். அங்கங்கு யா அல்லாஹ் என்றும் அல்லாஹ் போதுமானவன், அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று போட்டுகொள்ளவும்.
  நன்றி

 19. சிலவேளைகளில் நமது மூமீன்களே இஸ்லாம் எளிய மார்க்கம் என்றெல்லாம் குழம்பிவிடுகிறார்கள்.
  ஆகையால் தாவாப்பணியை எப்படி இஸ்லாம் எளிய மார்க்கம் என்று சொல்லி தாவா செய்யும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டியவை என்று ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

  கருத்துக்களை கூறவும்

  இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்

 20. to the idiot who writes under the name of shakir,kader and many more sobs why not you write under you own dirty name, even to attack islam, you need muslim name, right.what a pity man.

 21. பல பிரபஞ்சங்கள் இப்போதும் இயற்கை விதிகளின் படி தோன்றி மறைந்து கொண்டே இருக்கிறது.ஆகவே நமது பிரபஞ்சம் மட்டு கடவுளால் படைக்கப் படவேண்டிய அவசியம் இல்லை.புவி ஈர்ப்பு விசை போல்,இயக்கவியல் விதிகள் போல் பிரபஞ்ச தோற்றமும் ஒரு இயல்பான இயற்கையின் நியதியே .
  அந்த இயற்கை விதிகளை உருவாக்கியவர்தான் எங்கள் இறைவன் என்று கூறாமல் இருப்பர்களா என்ன?.படைப்பதும்,படைப்பு விதிகளை மட்டும் உருவாக்கி தானாக் படைப்பு விளைவதை வேடிக்கை பார்ப்பதும் ஒன்றா?. அறிவியல் வளர வளர இறைவனின் சக்தியாக (செயலாக)கூறப் படுவது சுருங்கிக் கொண்டே வருகிறது

 22. சகோ muslim
  உங்களை இபிலிஸ்தான் இப்படி பேச வைக்கிறான் என்று கருதுகிறேன். அல்லாஹ்வின் கருணையை தேர்ந்துகொல்லுங்கள். .

  ஷைத்தான் தான் உங்களை இப்படி வழிகேடு ஆக்குகிறான். ஷைத்தானை பற்றி மூஃமீன்களான நாம் அறிந்துகொள்வதற்காக புதிய பதிவை எழுதியிருக்கிறேன்.

  இஸ்லாமிய அறிவியல்: ஷைத்தான் ஏன் காதில் மூச்சா போகிறான்?

 23. இஸ்லாம் பற்றிய சிட்டிஜன் முஹம்மத் ஆஷிக்கை ஒட்டி அவரது கருத்துக்களை விவரித்து விளக்கி காபிர்களுக்கு இஸ்லாமிய விளக்கப் பாடம் எடுத்து தாவா செய்துள்ளேன்.

  உங்கள் கருத்துக்களை பதியவும்

  மூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ஒரு இஸ்லாமிய ஆய்வு

 24. பிரபஞ்சத்தில் 0.001% உள்ள பூமியில்,பிரபஞ்சத் தோற்றத்தின்[13.7 பில்லியன் ஆண்டு] 99.99% நேரம் கடந்து தோன்றிய மனிதனுக்கு[2இலட்சம் ஆண்டு] மட்டுமே மதம்,கொள்கை எல்லாம்.இதில் தோன்றிய 99.9% உயிரினங்கள் அழிந்து விட்டன. நகைச்சுவையாக் இல்லை!!!!!!!!!!!!!.
  படைப்பாளரின் வினத்திறமை[efficiency] மெச்சும் படி இல்லையே?http://naannaathigan.blogspot.com/

 25. 2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” – ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
  3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.

  குன் ஆகுக என்றால் ஆகிவிடும் பொது கடவுளுக்கு எதற்கு மனிதனை படைக்க களிமண்ணும் இன்ன பிறவும்? ஹவ்வாவை படைக்க ஆதமின் விலா எலும்பும்.?

 26. ஏக்க இறைவனின் திருப்பெயரால்..

  கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை ஒன்றை பகிர்ந்துள்ளேன்

  உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

  நன்றி

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s