உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?

  தேர்தல் அல்லாத காலங்களில் எல்லாவிதமான ஜனநாயகமற்ற வழிகளிலும் மக்களை சூறையாடுவதும், சூறையாட துணைபோவதுமாய் இருந்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களுக்கு ஜனநாயக பாடம் எடுக்க வந்து விடுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் வியாதிகள். மக்களும் தாங்கள் வாழ்வதற்காக படும்பாடுகளுக்கு யார் காரணம் என்பதையோ, அதில் ஜனநாயகத்திற்கு ஒட்டும் தொடர்பிருக்கிறதா என்பதையோ அறியாமல், ஓட்டுப் போட மறுப்பது ஜனநயகத்தை மறுப்பது என்பது போன்ற மயக்கத்தில் இழுபட்டு விடுகிறார்கள்.   நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மேல்மட்ட அளவிலான … உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா

  எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் ஆணாதிக்க மதமே. அதன் விதிமுறைகளும், சட்ட திட்டங்களும் அதை தக்கவைக்கும் விதத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பெண்களை கண்ணியப்படுத்துவதாக கூறப்படும், இஸ்லாமிய ஆணாதிக்கத்தின் குறியீடாக இருக்கும் புர்கா கலாச்சாரத்தை கொண்டே இதை பார்க்கலாம்.   புர்கா, பர்தா, துப்பட்டி, ஹிஜாப் என்று பலவிதங்களில் அழைக்கப்படும் பெண்களுக்கான மேலதிக ஆடை தமிழ்ச் சூழலில் 80களுக்கு முன்பு வெகு சில ஊர்களில் மட்டும் மரபாக இருந்தது. கடுங்கோட்பாட்டுவாத இயக்கங்கள் செயல்படத் தொடங்கியதன் பின்னர் தற்போது … அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா-ஐ படிப்பதைத் தொடரவும்.

தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும்: புதைந்துள்ள உண்மைகள்

இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது, ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் … தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும்: புதைந்துள்ள உண்மைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும்

எங்கும் ஒரே பேச்சு இல்லையில்லை, எங்கெங்கும் ஒரே ஏச்சு.     கடந்த ஆட்சி துண்டாய் போனது மின்வெட்டினால் தான் எச்சரிக்கிறார்களாம் சிலர். நடக்கும் ஆட்சி துண்டாய் போனாலும் மின்வெட்டு எஞ்சியிருக்கும் அறியாதவர்களா இவர்கள்.     காற்றாலை சுற்றவில்லை அணைகளில் நீரில்லை அனல் நிலக்கரி தரமில்லை அண்டை மாநிலங்கள் ஒத்துழைப்பதும் இல்லை ஒன்றா இரண்டா காரணங்கள் ஏராளம். ஆனாலும், மின்சாரம் இல்லை.     பேசுவது எதிர்க்கட்சியா ஆளும் கட்சி செயல்படவில்லை. பேசுவது ஆளும் கட்சியா … தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.