மக்கள் ஆயுதம் ஏந்துவது வன்முறையா?

கடந்த சில நாட்களாக ஓட்டுக்கட்சி அரசியல் வியாதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒருவர் மாற்றி ஒருவராக கண்டன அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி தில்லியிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்கிறார். இந்திய இளைஞர்கள் எங்கே போகிறார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார் பிரணாப் முகர்ஜி. அந்த இளைஞரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்கிறர் முலாயம். ஊழல் பஜனைவாதி ஒருவர் ஒரு அறைதானா என்று அடக்க முடியாமல் கேட்டு வைத்திருக்கிறார். இப்படி அறிக்கை மேல் அறிக்கையாக விட்டு இதை … மக்கள் ஆயுதம் ஏந்துவது வன்முறையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 11

பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு இந்த பதிவில் நண்பர் இஹ்சாஸ் என்ன சொல்கிறார்? அல்லது என்ன சொல்ல முனைந்திருக்கிறார்? என்று கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பரிசு என்று அறிவித்து விடலாமா என்று எண்ணுமளவுக்கு வெறுமையாய் காட்சியளிக்கிறது. மறுக்க வேண்டும் என்பது மட்டும் தான் நண்பருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எப்படி மறுப்பது என்பது கடைசிவரை அவருக்கு பிடிபடவே இல்லை. அதற்காக மறுக்காமல் இருந்துவிட முடியுமா என்ன? அதனால் தான் ஆயுதமின்றியே களத்திற்கு வந்துவிட்டார். … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 11-ஐ படிப்பதைத் தொடரவும்.

பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!

ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் இழுத்து மூடப்பட்டு, முகமது பின் துக்ளக்கே வெட்கப்படும் அளவுக்கு சிறப்பு மருத்துவமனை என்ற அறிவிப்பு; அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக்கப்படுமென்ற ஹிட்லர் பாணி உத்திரவு; ஆயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வக்கிர முடிவு; பரமக்குடியில் … பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 20

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 20 முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களின் போது, ஜெர்மன் - சோவியத்  ஓப்பந்தங்கள் மீதான அவதூறுகள் மீது    ஜெர்மன் - சோவியத் இடையிலான பிரஸ்ட் லிட்டோவ்ஸ்கி ஒப்பந்தத்தை எதிர்த்து டிராட்ஸ்கி, கட்சியின் முடிவுகளையே மீறிச் செயல்பட்டான். இது தொடர்பான இறுதி விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்ற போது, அதில் டிராட்ஸ்கி கலந்து கொள்ளவே மறுத்தான். டிராட்ஸ்கிய நிலைக்கு சார்பாக அக்காலத்தில் சதிகளில் ஈடுபட்டு இருந்த பிரஞ்சுத் தளகர்த்தன் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 20-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்

அன்பார்ந்த பொது மக்களே, தமிழகத்தின் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கன்யாகுமரி மாவட்டம் இடிந்த கரையில் நடத்திவரும் உறுதியான தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜப்பானின் புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் உணவு, குடிநீர், பால், காற்று, கடல்நீர் விசமாகி 2 லட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். கதிர்வீச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது. புகுசிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வு, உலகம் முழுவதும் அணு … பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.