செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 11

பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

இந்த பதிவில் நண்பர் இஹ்சாஸ் என்ன சொல்கிறார்? அல்லது என்ன சொல்ல முனைந்திருக்கிறார்? என்று கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பரிசு என்று அறிவித்து விடலாமா என்று எண்ணுமளவுக்கு வெறுமையாய் காட்சியளிக்கிறது. மறுக்க வேண்டும் என்பது மட்டும் தான் நண்பருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எப்படி மறுப்பது என்பது கடைசிவரை அவருக்கு பிடிபடவே இல்லை. அதற்காக மறுக்காமல் இருந்துவிட முடியுமா என்ன? அதனால் தான் ஆயுதமின்றியே களத்திற்கு வந்துவிட்டார். வீரர் தான்.

இப்பேரண்டம் பெருவெடிப்பிலிருந்து தொடங்கியிருக்கலாம் என்பது அறிவியல் யூகம். இது அறிவியல் உண்மையல்ல யூகம் தான் அதனால் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று மதவாதிகள் யாரும் கூறவில்லை. ஏனென்றால் பெருவெடிப்புக் கொள்கையை ஒட்டிவைப்பதற்குத் தோதாக ஓரிரு வசனங்களை குரானில் கண்டடைந்து விட்டார்கள். அந்தோ! ”அறிவியல் உண்மையல்ல யூகம் தான்” என்னும் பெருமையைப் பெறுவதிலிருந்து பெருவெடிப்புக் கொள்கை நூலிழையில் தவறிவிட்டது.

அண்டவெளியில் சீராக பரவியிருக்கும் வெப்பம், பருப்பொருட்களின் விரைவு உள்ளிட்ட சில காரணங்களைக் கொண்டு பெருவெடிப்பை ஊகித்திருக்கிறார்கள். ஆனால் இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முகம்மது கூறியிருக்கிறார் என்று காட்டுவதற்கு கண்டுபிடித்தவை தான் குறிப்பிடப்பட்ட அந்த இரண்டு வசனங்களும். அந்த இரண்டு வசனங்களுமே பெருவெடிப்போடு ஒட்டுறவு எதையும் கொண்டிருக்கவில்லை என்பதை காட்டியிருந்தேன். இதற்கு மொத்தப்பதிவில் நண்பர் எடுத்து வைத்துப்பது இதைத்தான் \\ இதன் மூலம் வானங்களும் பூமியும் முதலில் ஒன்றாக இருந்தது என்றும் அதை பின்னர் பிரித்து பிளந்தெடுத்தோம் என்றும் அல்லாஹ் கூறுகிறான். இது தற்கால விஞ்ஞானிகள் கூறும் பிரபஞ்சத்தின் தோற்றத்தை அப்படியே எடுத்துக்காட்டுகிறது.இதன் பின் உருவான தூசுப்படலத்த்லிருந்துதான் ஏனைய கிரகங்கள் தோன்றின என்று குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள்// இந்த ஒற்றை வரியை எழுதுவதற்கு ஏன் ஒரு பதிவை வீணாக்கினார் என்பது அவருக்கே வெளிச்சம்.

வானங்களும் பூமியும் ஒன்றாய் இருந்தது என்று எந்த விஞ்ஞானி மதவாதிகளிடம் விளக்கினார் என்று நண்பர் நமக்கு விளக்குவாரா? வானங்களிடமிருந்து பூமி முதலில் பிரித்தெடுக்கப்பட்டது இதன் பின் உருவான தூசுப்படலத்திலிருந்து ஏனைய கிரகங்கள் தோன்றின. இதை நன்கு கவனித்துப் பார்த்தால் புதிய அறிவியல் உண்மையை(!) நண்பர் கண்டுபிடித்து உலகிற்கு அளித்துள்ளார் என்பது விளங்கும். முதலில் வானங்கள் பின்னர் பூமி அதன் பிறகு உருவான தூசுப்படலத்திலிருந்து சூரியன் உள்ளிட்ட விண்மீன்கள் கோள்கள் எல்லாம் பின்னர். இந்த அறிவியல் உண்மை தெரியாமல் உலகின் அறிவியலாளர்களெல்லாம் காலத்தே மிகவும் பிற்பட்டது பூமி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்கட்டும், பதிவின் தொடக்கத்தில் நண்பர் ஒரு விளக்கம் தந்திருக்கிறார். அதாவது குரான் வசனங்களில் அறிவியல் உண்மைகள் இருக்கின்றன என்று பலர் கூறித் திரிகிறார்களாம். அப்படி பலர் கூறித் திரிவதில் கலப்படமும் இருக்கிறதாம். எனவே கலப்படமான அறிவியல் உண்மையை எடுத்துக் கொள்ளாமல் அக்மார்க் அறிவியல் உண்மையை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே செங்கொடி கலப்படமான அறிவியல் உண்மையை எடுத்துக் கொண்டு மறுப்பு கூறியிருந்தால் நண்பர் அக்மார்க் அறிவியல் உண்மையை மட்டுமே கூறி மறுப்புரை வரைவாராம். அந்த விதத்தில் நண்பர் கூறும் அக்மார்க் அறிவியல் உண்மை தான் வானங்கள் பூமி பின்னர் ஏனையவை என்பது. இப்போது உங்களுக்கு எது அக்மார்க் அறிவியல் உண்மை? எது கலப்படமான அறிவியல் உண்மை? என்று குழப்பம் ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

சரி, எது அக்மார்க் அறிவியல் உண்மை, எது கலப்படமான அறிவியல் உண்மை என்று பிரித்தறிவதற்கு அளவுகோல் எதையாவது நண்பர் வைத்திருக்கிறாரா? ஒருவேளை நண்பர் சார்ந்திருக்கும் குழு கூறுவது மட்டும் அக்மார்க் அறிவியல் உண்மை அதற்கு மாற்றமாக கூறப்படுவதெல்லாம் கலப்படமான அறிவியல் உண்மை என்று கூறுகிறாரோ. குரானில் அறிவியல் என்று யார் கூறினாலும் அது கலப்படமில்லாத அக்மார்க் பொய் என்பது ஒருபுறம் இருக்கட்டும். குரானில் அறிவியல் என்று கூற முற்படுபவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது எனுமொரு மனிதர் எழுதியதை ஆண்டவன் எழுதியது என்று பீஜப்படுத்துவது தான்.

இன்னொன்றையும் நண்பர் குறிப்பிடுகிறார். எடுத்துக் காட்டப்பட்ட இரண்டு வசனங்களில் இரண்டாவது வசனத்தை மட்டும் மறுத்துவிட்டு முதல் வசனத்தை நான் ஏற்றுக் கொண்டு விட்டதைப் போல் பாவனை காட்டுகிறார். நண்பரின் காட்சிப்பிழையை உத்தேசித்து மீண்டும் ஒருமுறை கூறிவிடலாம் \\ வானமும் பூமியும் முன்னர் இணந்திருந்தது இப்போது பிரிந்திருக்கிறது என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலம் அறியலாம். ஆனால் வானம் என்பது மேலே தெரியும் நீல நிற பின்னணி மட்டுமல்ல எந்தக்கோளின் எல்லையிலிருந்தும் வானம் தொடங்கிவிடுகிறது. இன்னும் தெளிவாகச்சொன்னால் சூழ இருக்கும் வானத்தில் கோள்கள் குறை மூழ்கலில் கிடக்கின்றன. அதாவது நீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு பந்து முழுவதும் மூழ்கி தரை தட்டிவிடாமலும் நீரின் மேற்பரப்பில் மிதக்காமலும் நடுவில் இருப்பதைப்போல் கோள்களின் பூமியின் அனைத்து திசைகளிலும் வானம் சூழ்ந்திருக்கிறது. இந்த அறிவியலை அறியாத குரான், பூமியையும் வானத்தையும் பிரித்துவிட்டதாய் விளம்புகிறது//

ஒன்றுமில்லாத மறுப்பை மறுத்து எழுத வேண்டுமா என நீண்ட நேரம் யோசித்தேன். இது போன்ற குழப்பத்தை மீண்டும் எனக்கு நண்பர் தராதிருக்கட்டும். ஒரு வேளை நண்பரின் எந்த இடுகைக்காவது மறுப்பு எழுதாமல் விட்டுவிட்டேன் என்றால் இப்படியான ஒரு குழப்பத்தில் நகர்ந்து விட்டேன் என்று கொள்க.

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்   
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨  
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩  
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்   
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫  
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6 
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7 
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8  
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9 
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10  

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

9 Comments Add yours

 1. ibnushakir சொல்கிறார்:

  http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/muthalil_padaikapatathu_vanama_boomiya/

  பூமியை முதலில் படைத்துவிட்டுத்தான் பிறகு வானத்தை படைத்ததாக நபிஹள் நாயஹத்துக்கு பிறகு நமக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடை பி ஜெயினுலாபுதீன் கூறுகிறார். அல்லது அப்படித்தான் அல்குரானில் இருக்கிறதாம்.
  ஆகவே பெருவெடிப்புக்கு முந்தியது பூமி என்று அறியலாம். பெருவெடிப்பு நடந்தது 14 பில்லியன் வருடங்களுக்கு முன்னால், பூமி தோன்றியது 4 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் என்று காஃபிர் அறிவியலறிஞர்கள் கூறுவதை நம்ப வேண்டாம்.

  அன்பு மார்க்க சகோதரர் இஹ்சாஸ், நீங்கள் பட்டையை கிளப்புங்கள். 14 பில்லியன் வருடமெல்லாம் வெறும் தியரி. அது நிரூபிக்கப்பட்ட உண்மை கிடையாது. பெருவெடிப்பு தோன்றி பல வருடங்களாக ஒன்றுமே இல்லாமல் அங்கங்கு நட்சத்திரங்கள்தான் இருந்தன என்று சொல்வதெல்லாம் வெறும் தியரி. நீ போய் பார்த்தியா என்று சும்மா மரண அடி கொடுக்கலாம்.

  இல்லைன்னா இருக்கவே இருக்கார் நம்ம கார்பன் காப்பி. ஆர்கிட்ட விட்டீங்கன்னா சும்மா டார்க்மேட்டர் கருந்துளை எல்லாம் போட்டு சும்மா ரவுண்டுகட்டி சவுக்கடி கொடுப்பார்..

  ய்ய்ய்ய்ய்யாஆ ஆல்லாஹ்….

 2. naren சொல்கிறார்:

  மார்க்க அறிஞர் அண்ணன் பி.ஜே. சொல்வது

  //படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்.அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான்.இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல்பயிர்களையும் வெளிப்படுத்தினான். மலைகளை முளைகளாக நாட்டினான்.
  அல்குர்ஆன் (79 : 27-30)
  இந்த வசனத்தில் பூமி பின்னர் படைக்கப்பட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக பின்னர் பூமியை விரித்ததாகத் தான் கூறப்பட்டுள்ளது. ஒன்றைப் படைப்பதும் அதை விரிவுபடுத்துவதும் வேறுவேறாகும்.
  பூமியை முதலில் படைத்து விட்டு பின்னர் வானத்தைப் படைத்தான். அதன் பின்னர் ஏற்கனவே படைக்கப்பட்டிருந்த் பூமியை விரிவுபடுத்தினான் என்பது தான் இவ்வசனத்தில் இருந்து பெறப்படும் கருத்தாகும்.
  எனவே இதில் எந்த முரண்பாடும் இல்லை//

  இதில் “பூமிமை விரித்தான்” என்று வார்த்தைக்கு என்ன என்ன அர்த்தங்கள் தருகிறார்கள் என்று பார்த்தால்.

  1) பூமியை விரித்தான் என்றால். பிரபஞ்சத்தை விரித்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதனால் பெரு வெடிப்பிற்கு பிறகு பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற அறிவியல் கூற்றை 1400 வருடங்களுக்கு முன்னால் குரான் சொல்கிறது என்கிறார்கள்.

  2) பூமியை விரித்தான் மலைகளை முளைகளாக நட்டான் என்பது பூமி flat ஆக படைத்தான் என்று கருத கூடாது, விரித்தான் என்றச் சொல் அரபி வார்த்தையில் நெருப்பு கோழியின் முட்டை என்று அர்த்தம். அதனால் நெருப்பு கோழியைப் போல உலகம் உருண்டையாக படைக்கப் பட்டிருக்கிறது என்று குரான் அப்பவே சொல்கிறது என்கிறார்கள்.

  அதனால் அந்த வசனம் பூமியை பற்றி சொல்கிறதா அல்லது பெரு வெடிப்பை பற்றி சொல்கிறதா என்பதைப் பற்றி மார்க்க அறிஞர்களிடையே கருத்து ஒற்றுமையில்லை. சூழ்நிலைக்கு தக்கவாறு ஒவ்வொன்று சொல்கிறார்கள்.

 3. Vibin சொல்கிறார்:

  ஒரு வேளை நண்பரின் எந்த இடுகைக்காவது மறுப்பு எழுதாமல் விட்டுவிட்டேன் என்றால் இப்படியான ஒரு குழப்பத்தில் நகர்ந்து விட்டேன் என்று கொள்க//

  நெத்தியடி தோழர். எளிய வார்த்தையின் மூலம் எதிரியை விரட்டுவதில் உமக்கு இணை எவருமில்லை. தொடர்ந்து செல்லுங்கள்.

 4. குண்டக்க மண்டக்க சொல்கிறார்:

  ௧.எனக்கு ரெண்டு டவுட்டு!மனிதர்கள் காட்டுவாசிகளாக திரிந்த பொது ஏன் இறைவன் தனது தூதரை அனுப்பி மக்களை பண்பட செய்யவில்லை?ஏன் மக்கள் civilized ஆனா பின்பே தூதரை அனுப்பினார்?வேலை மிச்சம் பிடிக்கவா?
  ௨.எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள மூலம் தோன்றியவர்கள் என்றால் தமது உடன் பிறந்தோர்களை அல்லாவா நாம் புணர்ந்து கொண்டிருக்கிறோம்?இது uncivilized இல்லையா?

 5. natheer சொல்கிறார்:

  கமென்ட் எல்லாம் எதுக்கு பொய் வேலையப்பாருங்க”””””” செங்கொடி பார்காதிங்க

 6. hasan சொல்கிறார்:

  “நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்” (அல்குர்ஆன்: 35:41)

  “நிச்சயமாக பிரபஞ்சத்தையும், அதில் உள்ள பால்வீதி மண்டலத்தையும், அதில் உள்ள சூரியக் குடும்பத்தின் உள்ள அனைத்து கோள்க்ளையும்,முக்கியமாக மூன்றாவது கோளாகிய மனிதர்களுக்காக் நான் படைத்த‌ பூமியும் வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக பெல்லாவே தடுத்துக் கொண்டிருக்கிறான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் இஸ்லாமிய காஃபிர்களின் கடவுள் அல்லா உட்பட எவரும்,எதனையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக பெல்லா பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்” (டுல் டுர்ஆஃப்: 9;9)

  குரானை விட‌ உலகின் இறுதி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ டுல் டுர்ஆஃபில் இன்னும் தெளிவாக‌ கூற‌ப்ப‌ட்ட‌தில் இருந்தே பெல்லாவே உண்மையான் இறைவ‌ன் என்று அறிய‌லாம். வேண்டுமானால் குரானையும் பி.ஜே போன்ற ஆட்கள் தப்பும் தவறுமாக் மொழி பெயர்த்து உண்மையான செய்தியினை மறைத்து,கறை படுத்தி விட்ட படியால் விட்டபடியினால் பெல்லா(பழைய பெயர்கள்,ஏல்,யெஹோவா, கர்த்தர்,அல்லா) அண்டார்டிக மொழியில் அவன் தூதருக்கு(யார் என்பதை இன்னும் கொஞ்ச நாளில் உலக்மே அறியும்?) வழங்கிய ஒரே வேதம் டுல் டுராஃப் ஐ கேட்டு மறுமை அடைவீர். குரானை விட மிக கிளுகிளுப்பான சொர்க்கம்

 7. Anil சொல்கிறார்:

  முகமது நபிக்கு அடுத்தவன் பொண்டாட்டிதான் பிடிக்கும். இந்த ஆளுக்கு வக்காலத்து வாங்குவதற்கு ஒரு கும்பலே இணையத்தில் சுற்றிக் கொண்டு திரிகிறது. கேவலம்!

 8. Ihsas சொல்கிறார்:

  இந்த பதிவிற்கான மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க
  http://www.mohamedihsas.blogspot.com/2012/06/blog-post.html

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s