செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12

பூமி உருண்டை என யார் சொன்னது அல்லாவா? மனிதனா?

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

பூமியின் வடிவம் குறித்த அந்த பதிவில், உருண்டை என குரான் கூறுவதாக சொல்லப்படும் வசனங்களில் பெரும்பாலான வசனங்கள் பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாமல் இரவு பகலின் காட்சியை விவரிக்கும் வசனங்களாக இருக்கின்றன என்பதையும்; தஹாஹா, துல்கர்னைன் குறித்த வசனங்கள் பொய்யாகவும், வலிந்து ஏற்றப்பட்டதாகவும் இருக்கின்றன என்பதையும்; இன்னும் ஏராளமான வசனங்கள் பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளன என்பதையும் விளக்கியிருந்தேன். இவற்றில் தஹாஹா குறித்து அந்த வசனத்திற்கு ஜாஹிர் நாயக் தவறான விளக்கம் கொடுத்து வருவதாக நண்பரும் சேர்ந்து கூறியிருப்பதால் அந்த வசனத்தை தள்ளுபடி செய்துவிடலாம். ஆனால் ஜாஹிர் நாயக் மட்டும் தான் வசனங்களுக்கு பொருந்தாத அறிவியல் விளக்கம் கூறியிருக்கிறாரா? வேறு யாரும் கூறுவதில்லையா? துல்கர்னைன் வசனத்திற்கு பிஜே அளிக்கும் விளக்கம் எப்படி அறிவியலற்று இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.

முதலில், இரவு பகல் காட்சிகளை விவரிக்கும் வசனங்கள் குறித்து நண்பர் குழப்பமான வாக்கியங்களில் கடந்து செல்கிறார். அந்த வசங்களில் பூமியின் வடிவம் குறித்த விளக்கம் இருக்கிறதா? இல்லையா? நண்பர் அதை சரி காண்கிறாரா? மறுக்கிறாரா? \\அதை தவறு என்று மறுக்கவில்லை. மாறாகஇதை 1400 வருடங்களுக்கு 

முன் என்ன 2800    வருடங்களுக்கு முன்இருந்தவர்களாலும் 

சொல்ல முடியும் என்கிறார். ஆக, இதற்களிக்கும்விளக்கத்தில்

 எந்த மறுப்பும் அன்னாருக்கில்லை என்றாகிவிட்டது// என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது அந்த வசனங்கள் பூமி உருண்டை என விளக்குவது போலவும், அதை நான் தகுந்த முறையில் மறுக்கவில்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். ஆனால் புளி போட்டு விளக்கும் அளவுக்கு அந்த வசனங்களில் ஒன்றுமில்லை என்பதை அந்த பதிவில் தெளிவு படுத்தியிருக்கிறேன். \\ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள்// ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது, தொடர்கிறது, அடுத்தடுத்து வருகிறது, ஒன்றை ஒன்று மூடுகிறது இதுபோன்று தான் அந்த வசனங்கள் இரவு பகலை விவரிக்கின்றன. மனிதன் தோன்றிய நாள் முதல் இரவு பகல் இப்படித்தான் வந்து கொண்டிருக்கிறது. இதைக் கூறுவதற்கு, ஆண்டவனிடம் டியூசன் படித்தவர்களால் மட்டும் தான் முடியுமா? ஆனால் அந்த வசனங்களில் பூமி உருண்டை என கூறப்பட்டிருப்பதாக ஜல்லியடிப்பதற்கு நிச்சயம் ஆண்டவனிடம் டியூசன் படித்திருக்க வேண்டும். அவ்வாறு டியூசன் எதுவும் படிக்கவில்லை என்பதால் தான் நண்பர் அவைகளில் உருட்டு விளக்கங்கள் கொடுக்காமல் தவிர்த்துக் கொண்டார் போலும்.

துல்கர்னைன் வசனங்களை எடுத்துக் கொண்டால், அந்த வசனங்களில் பிஜே அவர்கள் துப்பறிந்து பூமி உருண்டை என்று கண்டுபிடிப்பதை இதை சொடுக்கி கண்டு களியுங்கள். இந்த விளக்கத்தைத் தான் நண்பரும் தன்னுடைய மறுப்பில் எடுத்து வைத்திருக்கிறார். அதாவது பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் சூரியன் மறைவதையும் உதிப்பதையும் பார்க்கலாம். அப்படி பார்ப்பதாக குரான் கூறுவதால் பூமி உருண்டை என்று உறுதிப்படுகிறது என்கிறார். இது எப்படி அடிப்படையற்றதாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம். திசைகள் என்பவை மனிதனுக்கான அடையாளங்கள் தாம், அண்ட வெளியில் திசைகள் இல்லை. சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, மறையும் திசை மேற்கு என்றால் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் சென்று மறைவதில்லை. பூமி சுழல்வதால் அப்படியான தோற்றம் வருகிறது. இப்போது ஒருவர் பூமியில் கிழக்கு நோக்கி பயணம் மேற்கொள்கிறார்(படம்) என்று கொள்வோம். அவரின் முகத்திற்கு எதிரே சூரியன் இருப்பதால் கிழக்காக செல்கிறார் என்று பொருள். தொடர்ந்து 90 பாகை கடந்ததும் அவர் தன் பாதையில் இயல்பாக மேற்கு நோக்கி திரும்பி விடுவாரா? நிச்சயம் மாட்டார். பூமியின் இரவுப் பகுதியில் நுழையும் போது அவரால் சூரியன் மறைவதை காண முடியாது. ஏனென்றால் சூரியனின் மறைவு அவரது பின் தலையில் நிகழும். 180 பாகை கடந்ததும், மீண்டும் அவர் சூரியன் உதிப்பதை காண முடியும். இப்படி அவர் எத்தனை சுற்றுகள் பூமியை சுற்றி வந்தாலும், சூரியன் உதிப்பதை மட்டுமே திரும்பத் திரும்ப காண முடியுமேயன்றி ஒருபோதும் அவரால் சூரியன் மறைவதை காண முடியாது. சூரியனின் மறைவை காண வேண்டுமென்றால் அவர் திரும்பி தன் திசையை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே ஒருவர் கிழக்காகவோ, மேற்காகவோ எந்த திசையில் சென்றாலும் சூரியன் உதிப்பதையோ மறைவதையோ ஏதாவது ஒன்றை தான் காண முடியுமேயன்றி இரண்டையும் காண முடியாது. இரண்டையும் கண்டிருக்கிறார் என்றால், அவர் தன் திசையை மாற்றியிருக்கிறார் என்பதைத்தவிர வேறு ஒரு பொருளும் இல்லை. இதைத்தான் பதிவில் இப்படி \\நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது// சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்.

இதே துல்கர்னைன் வசனத்தில் முதலில் ஒரு பாதை, பின்னர் ஒரு பாதை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அவர் இருவேறு திசைகளில் பயணம் செய்திருக்கிறார் என்று கூறியிருந்ததை மறுத்து நண்பர் \\அவர் இது வரை பயணம் செய்த வழி தரைவழிப்பயணம் எனபதையும் மேற்குத்திசை நோக்கி பயணம் செய்தார் என்பதையும் ….. பின்னர் ஒருவழியில் சென்றார் என்பதன் அர்த்தம் கடல் மார்க்கமாக அல்லது நீர்மார்க்கமாக பயணம் செய்ததை குறிப்பிடுகிறது என்பதை அறியலாம்// என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வாதத்திற்காக அப்படியே வைத்துக் கொள்வோம். என்றாலும் அவர் திசையை மாற்றாமல் ஒரே நேர்கோட்டில் சென்றார் என்பதை எப்படி கூறுகிறார்கள்? ஒரே திசையில் தான் சென்றார் என்பதை அந்த வசனத்தில் எந்த சொல்லிலிருந்து எடுத்துக் கொண்டார்கள்? அவர்களுக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானலும் வளைத்து, நெளித்து பொருள் சொல்வார்களா?

குரான் 2800 ஆண்டுகளுக்கு முன்பே எல்லாவற்றையும் கூறிவிட்டது என்று வாய்ப்புக் கிடைத்த எல்லோருமே கூறித் திரிகிறார்கள். ஜாஹிர் நாயக் கூறியது தவறு என்று நண்பர் கூறுகிறார். பிஜே கூறியதை என்ன செய்வது? ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னால் சௌதி இமாம் ஷேக் இபின் பாஸ் பூமி தட்டை என்பதை ஏற்காதவர்கள் குரானை மறுக்கும் காபிர்கள் என்று வரலாற்று புகழ்மிக்க பத்வாவை வழங்கியிருக்கிறார் என்பது நண்பரின் கவனத்திற்கு.

பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாத வசனங்களை உலையில் பழுக்க வைத்து சம்மட்டியால் அடித்து நீட்டி பூமி உருண்டை என்று கதற வைக்கிறார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும்; பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருளில் குறிப்பிடும் வசனங்களைக் கூட எப்படி உருண்டை என்று பொய் சாட்சி சொல்ல வைத்துவிடுகிறார்கள் என்பதை அந்த பதிவில் விளக்கியிருந்தேன். அதை மறுக்க வேண்டும் என நினைத்த நண்பர் எப்படி மறுப்பது என்பது புரியாததால் அறிவை ஐயப்படுகிறார். பூமியை விரித்தான் என்று கொண்டாலும், பூமியில் விரித்தான் என்று கொண்டாலும் அங்கு பூமி உருண்டை எனும் பொருளை அதிலிருந்து பெறமுடியாது. இதை தெளிவாகவே கேட்டிருக்கிறேன், \\ எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?// சதுரமாக இருந்தாலும், முக்கோணமாக இருந்தாலும் விரிப்பை விரிக்க முடியும். பூமியில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்பு எந்த வடிவின் மேல் விரிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு பதில் சொல்ல இன்னொரு முகம்மதா வருவார்? இருக்கும் முகம்மதுகள் தான் பதில் கூற வேண்டும்.

முகம்மது பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே பூமி உருண்டை என்பது மக்களுக்கு தெரிந்து தான் இருந்தது. கடலாடிகள் தங்கள் பட்டறிவின் மூலமும், அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலமும் அதை வெளிப்படுத்தி இருந்தார்கள். இதில் புளகமடையும் விதமாக நண்பர் தன் நேர்மையுணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரே செய்தியை நானும் அவரும் கூறியிருப்பதை பாருங்கள். \\கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. ….. பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர்// இது நான். \\இந்தியா, சீனா, கிரேக்கம் போன்ற நாடுகளில் குறிப்பிட்டது முகம்மது 

நபிக்குஎப்படித் தெரியும்?// இது நண்பர். அரபியர்களை மட்டும் நேர்மையாக மறைத்து விட்டார். தொடர்ந்து எனக்கு நெத்தியடி, சாட்டையடி முதல் இன்னும் பலவாறான அடிகளை அடிப்பதாக எண்ணிக் கொண்டு கேள்விகளாக அடுக்கியிருக்கிறார். ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா, முடியல (வடிவேலு பாணியில் படித்துக் கொள்ளவும்)

பூமி உருண்டை என்று குரான் கூறுகிறதா? என்பது எடுத்துக் கொண்ட தலைப்பு. ஆம் கூறுகிறது என்பதாக சுட்டப்படும் வசனங்களை மூன்றாக பிரித்து 1) இரவு பகல் காட்சி வசனங்களில் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை, 2) தஹாஹா, துல்கர்னைன் வசனங்களில் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை, 3) தட்டை என்று பொருள் கொள்ளத்தக்க வசனங்களிலும் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறேன். மேலதிகமாக முகம்மதின் காலத்திற்கு வெகுமுன்பே பூமி உருண்டை என்பது நிருபணமாகியிருக்கிறது என்பதையும் எடுத்தியம்பி இருக்கிறேன். இதை மறுக்க வேண்டும் என்பதற்காக ஏதேதோ உளறி வைத்திருக்கும் நண்பர், அறிவுடன் தான் எழுதுகிறேனா? என்றும் கேட்டிருக்கிறார். மெய்யாகவே நண்பருக்கு அறிவு முற்றி இருக்கும் துளைகள் வழியாகவெல்லாம் வெளியேறிக் கொண்டிருப்பதாக எண்ணினால் உருப்பெருக்கி கொண்டு குரானின் வரிகளுக்கிடையே தேடி பூமி உருண்டை என்று கூறும் வசனங்களை கூற முயலட்டும், அவரால் முடிந்தால்.

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்    
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨   
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩   
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்    
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫   
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6  
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7  
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8   
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9  
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

35 thoughts on “செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12

  1. தோழரே,
    பூமியில் ஒரே திசையில் பயனிக்கும் ஒருவர் சூரியன் உதிப்பது மற்றும் அஸ்தமிப்பது என்ற இரு நிகழ்வையும் காணமுடியாது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கி தோழர் சாகித் ஒரு வீடியோ எடுத்து அதை பல அண்ணன் விசுவாசிகளுக்கும் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். அனைவருமே பீஜே அண்ணன் சொல்வது சரிதான் எனவும் சிலர் கருத்து கூறாமலும் பதிலனுப்பியிருந்தனர். குரானுக்கு தவறான விளக்கம் கொடுக்கும் பீஜே ஒரு பொய்யன் என்பதையும் TNTJ வினர் பீஜேவிற்கு ஈமான் கொண்டவர்கள் என்பதையும் நிரூபிக்க இந்த சான்று ஒன்று போதும்.

  2. குரானுக்கு முன்பே ஆர்யபட்டா சொல்லிவிட்டாரே?கிரகணங்கள் எப்படி ஏற்படுகிறது, கோள்களின் எடை(இன்று வேறுபடலாம்!ஆனால் அன்று சொன்னது பெரிய விஷயம்!)இதில் மதம் எங்கிருந்து வருகிரதுன்னே தெரியல!
    http://en.wikipedia.org/wiki/Aryabhata

  3. ரெண்டு வருசத்துக்கு முன்னரே பீஜே இது பற்றி பேசிய வீடீயோ பார்த்தேன், வேலை பளுவினால் அப்போதே எழுத முடியவில்லை, நீங்கள் எழுதியதில் மிக்க மகிழ்ச்சி! ஒரே அயர்ச்சி நாம் ஒரு கேள்வி கேட்டால் அவர்கள் வேற ஒன்றுக்கு பதில் அளிப்பது தான்!

  4. Andha saasthirsthukku peyare bhookoLa saasthiram enbadhuthaan. KoLam endraal sphere (urundai) endru porul. So Hindus ku bhoomi in shape therindhe irukkiradhu.

  5. //குரான் 2800 ஆண்டுகளுக்கு முன்பே எல்லாவற்றையும் கூறிவிட்டது என்று வாய்ப்புக் கிடைத்த எல்லோருமே கூறித் திரிகிறார்கள். ஜாஹிர் நாயக் கூறியது தவறு என்று நண்பர் கூறுகிறார். பிஜே கூறியதை என்ன செய்வது? //

    1400 ஆண்டுகள் என இருக்க வேண்டும்.

  6. பூமியின் வடிவம் உருண்டை என்பதை விட oblate spheriod (தமிழ் வார்த்தை தெரியவில்லை) என்பதுதான் சரியாக இருக்கும்.

    ”oblate spheriod என்று குரானில் சொல்லப்பட்டிருக்கிறது” என்று இனிமேல தோண்ட தோண்ட வசனங்கள் வரலாம்.

  7. நன்றி நரேன்,

    ஒரு கிண்டலுக்காக இருக்கட்டுமே என்று தான் 2800 என்று குறிப்பிட்டுள்ளேன்.

  8. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது அல் வாரக் என்ன சொல்றார்?

    That Muhammad could predict certain events does not prove that he was a prophet: he may have been able to guess successfully, but this does not mean that he had real knowledge of the future. And certainly the fact that he was able to recount events from the past does not prove that he was a prophet, because he could have read about those events in the Bible and, if he was illiterate, he could still have had the Bible read to him

    மேலும் படிக்க :
    http://en.wikipedia.org/wiki/Muhammad_al_Warraq

  9. இஸ்லாமின் எதிரியான ஆண்ட்ரு ஃப்ளூவை பாரட்டி பதிவு எழுதும் ஆஸிக் அகமது..
    http://www.ethirkkural.com/2011/12/blog-post.html
    நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..
    இரு இறை மறுப்பாளர் இறை நம்பிக்கை கொள்வது அவரின் சொந்த விஷயம் என்றாலும் இதில் ஆபிரஹாமிய கடவுளை கும்பிடுபவர்களுக்கு எநத விததிதிலும் பயன் அளிக்காது.
    //Flew was particularly hostile to Islam, and said it is “best described in a Marxian way as the uniting and justifying ideology of Arab imperialism.”[5] In a December 2004 interview he said: “I’m thinking of a God very different from the God of the Christian and far and away from the God of Islam, because both are depicted as omnipotent Oriental despots, cosmic Saddam Husseins”.[17]//
    http://en.wikipedia.org/wiki/Antony_Flew

    ஆண்ட்ரு ஃப்ளூ கொடுமையான இனவெறி கொண்ட‌ ஆபிரஹாமியக் கடவுள்களை நம்பாத ஒரு மனிதரே.ஒரு மேற்பட்ட சக்தி இருப்பதாக ஏற்ற அவரை அவரை இந்து மதத்தின் கொள்கைகளை ஏற்பவராக வேண்டுமானால் கூறலாம்.

    இஸ்லாமிய பதிவர்களில் யோசித்தே எழுத மாட்டார்களா!!!!!!!!!!!

  10. ///இது நண்பர். அரபியர்களை மட்டும் நேர்மையாக மறைத்து விட்டார். தொடர்ந்து எனக்கு நெத்தியடி, சாட்டையடி முதல் இன்னும் பலவாறான அடிகளை அடிப்பதாக எண்ணிக் கொண்டு கேள்விகளாக அடுக்கியிருக்கிறார். ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா, முடியல(வடிவேலு பாணியில் படித்துக் கொள்ளவும்)////
    இஹ்சாஸ் உடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வடிவேலு போல் நடித்து தப்பிக்க நினைப்பது சரியன்று.
    ///அரபியர்களை மட்டும் நேர்மையாக மறைத்து விட்டார். ////
    குறைந்த பட்சம் அரபியர்கள் அறிந்ததையாவது விலக வேண்டும் அல்லவா?

    செங்கொடி அவர்களே நீங்கள் போட்டிருக்கும் படம் பூமி சுழற்சி அடிப்படையில் போட்டு காண்பித்து உள்ளீர்கள்.பூமி சுழல்வதால் நீங்கள் சொல்லுவது போல் ஒரே திசைதான் வரும் ஆனால் ,நீங்கள் சென்னையிலிருந்து உலகம் சுற்றிவர கிழக்கு நோக்கி ஆஸ்திரேலிய வழியாக சென்று சுற்றி வருகையில் அமெரிக்க சென்று சவுத் ஆப்ரிக்க வழியாக கேரளா வழியாக சென்னையை அடைகிவீர்கள் .இப்போது நீங்கள் வந்த வழியான சவுத் ஆப்ரிக்கா ,கேரளாஅஆகியவை சென்னைக்கு மேற்கில் இருக்கிறதா ?இல்லையா? இப்போது சூரியன் உதிக்கும் திசையில் சென்று மறையும் திசையில் தானே வருவீர்கள் .இதைத்தான் குர்ஆன் கூறுகிறது

  11. NILA////இஸ்லாமிய பதிவர்களில் யோசித்தே எழுத மாட்டார்களா!!!!!!!!!!!////
    யோசித்தே எழுதி உள்ளார்.அவர் நாத்திகனா ?ஆத்திகனா ? என்பதில் ஆத்திகனாகிவிட்டார் அதுவே முதல் வெற்றி.அடுத்து ஆத்திகத்திர்க்குள் ஆண்ட்ரு விவாதத்திற்கு வந்திருந்தால் இஸ்லாத்திற்குள் வந்திருப்பார். நியூயார்க் யுனிவர்சிட்டியில் உள்ள யூத புத்தகங்களை படித்து இஸ்லாத்தை அறிந்து இருந்தால் அவர் எப்படி இருப்பார் ?///இந்து மதத்தின் கொள்கைகளை ஏற்பவராக வேண்டுமானால் கூறலாம்.///அவருக்கு தொடையில்,காலில் பிறந்த கதைகளை சொல்லிவிட்டீர்களா?

  12. நண்பர் இப்ராஹிம்,
    ஆன்ட்ரு ஃப்ளூ இஸ்லாமின் கடவுள் அல்லாவை என்ன கூறுகிறார்?
    பிரபஞ்சத்தின் சதாம் ஹுசைன் என்கிறார்.மிக சரியான வார்த்தைகள்.அப்புறம் என்ன இப்படி உக்காரு ,நில்லு,உச்சா போ,செய் செய்யாதே என்று சர்வாதிகாரி மாதிரி மிரட்டி செய்தால் கிளுகிளு குஜால் சொர்க்கம் செய்யாவிட்டால் நித்திய நரகம் என்பதை மிக அருமையாக் கூறியுள்ள ஆண்ட்ரு ஃப்ளூவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
    (இப்ராஹிம்,:ஒரு ஃபத்வா போடலாமென்றால் கிழவன் செத்து போய் விட்டார்)
    In a December 2004 interview he said: “I’m thinking of a God very different from the God of the Christian and far and away from the God of Islam, because both are depicted as omnipotent Oriental despots, cosmic Saddam Husseins”

    இஸ்லாம் என்பது அரபி மேலாதிக்கத்தை நிறுவும் ஒரு அரசியல் என்று உண்மையை போட்டுடைக்கும் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை.
    Flew was particularly hostile to Islam, and said it is “best described in a Marxian way as the uniting and justifying ideology of Arab imperialism.

  13. /செங்கொடி அவர்களே நீங்கள் போட்டிருக்கும் படம் பூமி சுழற்சி அடிப்படையில் போட்டு காண்பித்து உள்ளீர்கள்.பூமி சுழல்வதால் நீங்கள் சொல்லுவது போல் ஒரே திசைதான் வரும் ஆனால் ,நீங்கள் சென்னையிலிருந்து உலகம் சுற்றிவர கிழக்கு நோக்கி ஆஸ்திரேலிய வழியாக சென்று சுற்றி வருகையில் அமெரிக்க சென்று சவுத் ஆப்ரிக்க வழியாக கேரளா வழியாக சென்னையை அடைகிவீர்கள் .இப்போது நீங்கள் வந்த வழியான சவுத் ஆப்ரிக்கா ,கேரளாஅஆகியவை சென்னைக்கு மேற்கில் இருக்கிறதா ?இல்லையா? இப்போது சூரியன் உதிக்கும் திசையில் சென்று மறையும் திசையில் தானே வருவீர்கள் .இதைத்தான் குர்ஆன் கூறுகிறது/
    ஒரு திரைப்படத்தில் வடிவேலு ஒருவருக்கு ஹிந்தி கற்றுக் கொடுப்பார்.எப்படி இங்கே வா என்றால் இதர் ஆவ் என்று சொல்வார்.அந்த மனிதர் அங்கே வா என்றால் வடிவேலு அங்கே போய் நின்று கொண்டு இதர் ஆவ் என்பார்.இப்படியே தெரிந்த இதர் ஆவ் என்பதை வைத்தே ஓட்டுவார்.
    அது போல் இருக்கிறது.

    அதாவது.திசை என்பது என்ன ?. ஒரு இடத்தின் திசையை குறிக்க சூரியன் உதிப்பதை அடிப்படையாக வைத்து கூறுகிறோம். ஒன்றாம் வகுப்பில் படித்த பாடம்.நாம் சூரியனை நோக்கி நின்றால், நம் இடக்கைப் பக்கம் வடக்கு, வலக்கை பக்கம் தெற்கு,முகம் காட்டும் திசை கிழக்கு,பின்புறம் மேற்கு.

    இபோது இரு இடங்களை வைத்து ஒன்றை மையமாக வைத்து இன்னொன்றின் திசையை குறித்தல் இந்தியாவிற்கு மேற்கே இஸ்லாமியர்களின் புண்ணிய பூமி சவுதி அரேபியா உள்ளது.அத‌னை பார்த்தே இந்திய‌ முஸ்லிம்க‌ள் தொழுகின்ற‌ன‌ர்.

    இபோது ந‌ண்ப‌ர் இப்ராஹிமின் த‌த்துவ‌ப்ப‌டி அரேபியா இந்தியாவிற்கு கிழ‌க்கே வ‌ர‌ வேண்டும்.இந்தியாவை அப்ப்டியே கிழக்கே கொஞ்சம் கொஞ்சமாக நக்ர்த்தினால் பூமி உருண்டை ஆதலால் சவுதிக்கு மேற்கு வருமாறு செய்யலாம்.இதைத்தான் சொல்கிறார்.
    கொண்டுவாருங்க‌ள் இப்ராஹிம்.

    இதே போல் உலகினை கிழக்கே சுற்றி சவுதியின் பின்னால் வரும் ஒரு ம‌னித‌னுக்கு ச‌வுதி திசை மாறும் என்கிறா‌ர்..இங்கே பிரச்சினை சவுதி முன்னாலே போய் பின்னாலே வருவது இல்லை. இதுதான் பிரச்சினை.ஒரே திசையில் போய் துல்கர்னன்(யாருப்பா இவரு? அது பெரிய பிரச்சினை)சூரியன் உதிப்பதையும் மறைவதையும் கண்டார் என்றால் சாத்தியமா என்பதுதான்.

    அம்ம‌னித‌னின் பார்வையில் சூரியன் உதிக்குமா ?மறையுமா? நல்லா யோசியுங்கள்.அம்மனிதனின் கையில் ஒரு காந்த திசை காட்டி கொடுத்து விடுவோம்.ஒரே திசை யில் சென்றால் காந்த திசைகாட்டி திசை மாறுமா? இதை கூகிள் மேப்பில் செய்து பார்க்க்லாம் நண்பர்களே.செய்து மாறுகிறதா என்று பாருங்கள். அப்படியே உலக் உருண்டையை உருட்டி திசை அல்லா சொன்ன மாதிரி மாறுதா இல்லையா என்று பாருங்கள்.

    இக்கேள்விக்கு ப‌தில் கூறாவிட்டால் இப்ராஹிமுக்கு இஸ்லாமிய சுவனத்தில் 72 நித்ய‌ க‌ன்னிக‌ளுக்கு ப‌திலாக‌ பூலோக இஸ்லாம் போல் 4 மட்டுமே கொடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்

  14. செங்கொடி ,பூமி உருண்டை என்பதால் உங்கள் படத்தில் இரண்டு மேற்குகளும் இரண்டு கிழக்குகளும் உள்ளன .ஆம் குர்ஆனும் அதைத்தான் சொல்லுகிறது.

    இரண்டு கிழக்கு திசைகளுக்கும் அவனே இறைவன். இரண்டு மேற்கு திசைகளுக்கும் அவனே இறைவன்.குர் ஆன் 55;17

  15. NILA ஆண்ட்ருபளு இஸ்லாத்தை விமர்சிப்பது இருக்கட்டும் .இஸ்லாத்தினை விமர்சிக்கும் கிறிஸ்தவராக கொள்வோம் .அவர் கிறிஸ்தவாரக இல்லாவிட்டாலும் அதையும் விமர்சிக்கும் கடவுளை ஒப்புக்கொள்வோம் நபராக கொள்வோம் .ஆனால் இப்போது அவர் நாத்திக அணியைவிட்டு விலகி ஆத்திக அணியான எங்கள் பக்கம் வந்துவிட்டார். நீங்களும் அதைப்போல் மாறும் நிலை வரவே செய்யலாம் .நீங்கள் அதையும் மீறி தூய இஸ்லாத்தை அறிந்து அவரைவிட உன்னத நிலையாகா முஸ்லீமகா மாறிவிடலாம். உங்கள் நண்பர் மீண்டும் *************** மாறலாம்.அவனே அனைத்தையும் அறிந்தவன்

  16. இப்ராஹிம்
    இன்னும் நல்லா சொல்லுங்க‌
    அல்லா என்பவன் பிரபஞ்ச சதாம் ஹுசைன்.சதாமுக்கு நேர்ந்த கதிதான் அல்லா சிக்கினால்.

    யூதர்கள் ஆத்திக்ர்கள் என்பதால் இன்னொரு ஆத்திகர்களான் பாலஸ்தீன முஸ்லிம்களை கொன்றாலும் பரவாயில்லை.
    ஆத்திகர் நரேந்திர மோடி,இராம கோபலன் போன்றவ்ர்களுக்கும் ஆதரவு கொடுங்கள்.
    ஆத்திகர்கள் அல்லா,முகம்மதுவை எவ்வளவு கேவலமாக பேசினாலும் அது பரவாயில்லை.

    இதைத்தானைய்யா அரபி குரேஷிகள் பண்ணினானுங்க.அவனுங்களோடு முகம்மது கொலை கொள்ளை பண்ணாம இருந்திருந்தாதல் இன்னைக்கு உலகமே அமைதியா இருக்குமே.

    ஆத்திக அஹமதியா ஷியா,பஹாய் போன்றவர்களும் முஸ்லிம்களே

    ஆத்திக தமிழ் ஹிந்து காபா ஒரு இந்து கோயில் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் .ஆகவே காஃபாக்கு பக்கத்தில் காளியாத்தாக்கு கோயில் கட்ட்லாம்.அல்லாவும் ஓரமா இருந்துட்டு போகட்டும்.

    அப்புறம் உலகத்தை சுத்தர வழி எப்படி?

  17. ஒரே நேர்கோட்டில் செல்லுபவர் பூமியை சுற்றி வருகையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் ஒரே திசையில் பார்க்க முடியுமா ?என்பதல்ல கேள்வி. இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டியது சூரியன் மறையும் திசையில் சென்றவர் ,சூரியன் உதிக்கும் திசையில் வருவதாக குரான் கூறினால் பூமி உருண்டை என்பதை குரான் வெளிப்படுத்துகிறதா? இல்லையா?

  18. NILA ,சுன்னத் ஜமாஅத் ,தவ்ஹித் ஜமாஅத் களுக்கிடையே பிரச்னைகள் வந்தால் தவ்ஹித் ஜமாஅத் அணியில் இருப்போம். சன்னி ,ஷியா பிரச்னைகள் வந்தால் சன்னி என்ற ஓரணில் நிற்போம் .முஸ்லிம் ஹிந்து பிரச்னை வந்தால் முஸ்லிம் என்ற அணியில் இருப்போம்.ஆத்திகம் நாத்திகம் என்று பிரச்னை வந்தால் ஆத்திக அணியில் இருப்போம்.ஆதிக்க சக்திகளுக்கும் ,பின்தங்கிய மக்களுக்கும் பிரச்னைகள் வந்தால் பின்தங்கிய மக்களின் அணியில் இருப்போம் நரேந்திர மோடி ,ராம கோபாலன் ,யூத வெறியர்கள் மனிதர்களா மிருகங்களா என்றால் நாமெல்லாம் மனிதர்கள் அணியில் இருப்போம் .
    ////இதைத்தானைய்யா அரபி குரேஷிகள் பண்ணினானுங்க.அவனுங்களோடு முகம்மது கொலை கொள்ளை பண்ணாம இருந்திருந்தாதல் இன்னைக்கு உலகமே அமைதியா இருக்குமே.////
    நாத்திகவாதிகள் ,பொதுவுடமைவாதிகள் ஆகிய நீங்கள் அறிவுபூர்வமாக சிந்திக்க கூடியவர்கள் என்று பீற்றிக் கொள்ளும் நீங்கள் உங்களது மேற்கண்ட கூற்றுக்கு ஆதாரம் தர வேண்டும் அல்லது நீங்களும் மோடிவகையறாக்கள் போல் இஸ்லாத்தை சாடும் நபர்கள் யென்பதை ஒப்புக் கொள்ளவேண்டும்

  19. பி.ஜே காணொளியில் கூறியதாக பதிவில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?
    /அதாவது பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் சூரியன் மறைவதையும் உதிப்பதையும் பார்க்கலாம்./
    அப்போது பி.ஜே&ihsaas சொன்னது தவறு.
    XXXXXXXXXXXXXXXXXXXXx

    This is Ibrahim

    /சூரியன் மறையும் திசையில் சென்றவர், சூரியன் உதிக்கும் திசையில் வருவதாக குரான் கூறினால் பூமி உருண்டை என்பதை குரான் வெளிப்படுத்துகிறதா/
    சவுதிக்கு மேற்கே நேர் கோட்டில் போய் உலகை சுற்றி சவுதிக்கு கிழக்கே வரலாம்.அதாவது சவுதியை அல்லது ஒரு இடத்தை reference வைத்து கூறினால் மட்டுமே உண்மை.ஆனால் இங்கு சூரியனே reference..

    குரான் சொல்வது என்ன?
    18:85. ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.(1)
    Pickthall: And he followed a road
    َ18:86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.(2)
    Pickthall: Till, when he reached the setting-place of the sun, he found it setting in a muddy spring, and found a people thereabout. We said: O Dhu’l-Qarneyn! Either punish or show them kindness.

    18:89. பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.(3)
    Pickthall: Then he followed a road
    18:90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.
    Pickthall: Till, when he reached the rising-place of the sun, he found it rising on a people for whom We had appointed no shelter therefrom
    18:92. பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.(4)
    Pickthall: Then he followed a road

    மொத்தம் 4 தடவை வழியில் போனார் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரு முறை சூரியன் தோன்றும் இடம் என்றும் இன்னொரு முறை சூரியன் மறையும் இடம் என்றும் குறிப்பிடப் படுகிறது. இடம் என்பதை திசை என்பது மொழி மாற்று ஏமாற்று வேலை.

    1.திசைக்கு பதிலாக இடம் என்றால் பூமி தட்டை என்று அர்த்தம் ஆகும்.
    (18:90:4) maṭli”a=(the) rising place

    2. வழி என்றால் ஒரே திசை அல்லது நேர் கோட்டில் என்றும் குறிப்பிடபடவில்லை.அப்ப‌டியும் இருக்கலாம்.
    18:85:2) sababan a course-road

    இபோது பிற தஃப்சீர்களில் என்ன குறிப்பிடப் பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்
    (cond)

  20. /நாத்திகவாதிகள் ,பொதுவுடமைவாதிகள் ஆகிய நீங்கள் அறிவுபூர்வமாக சிந்திக்க கூடியவர்கள் என்று பீற்றிக் கொள்ளும் நீங்கள் உங்களது மேற்கண்ட கூற்றுக்கு ஆதாரம் தர வேண்டும்./
    சிந்திப்பதால்தன் கூறுகிறோம்.உங்கள் ஹதித்,வரலாறு புத்தகங்களில் இருந்தே காட்ட முடியும்.இதற்கு நீங்கள் இறையில்லா இஸ்லாம் தளம் படியுங்கள் .இபோது இது கருப்பொருள் அலல.உலகம் உருண்டை என்று துல்கர்னைஅன் போன வழியில் இருந்து விளங்க முடியுமா என்பதுதான்.இதனை பிறகு விவாதிப்போம்.

  21. NILA, இஸ்லாம் என்பது அரபி மேலாதிக்கத்தை நிறுவும் ஒரு அரசியல் என்று உண்மையை போட்டுடைக்கும் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை.
    பார்க்க ,,,
    http://onlinepj.com/unarvuweekly/arabu_mozithan_sirantha_moziya/

  22. NILA,
    செங்கொடி ,பூமி உருண்டை என்பதால் உங்கள் படத்தில் இரண்டு மேற்குகளும் இரண்டு கிழக்குகளும் உள்ளன .ஆம் குர்ஆனும் அதைத்தான் சொல்லுகிறது.
    இரண்டு கிழக்கு திசைகளுக்கும் அவனே இறைவன். இரண்டு மேற்கு திசைகளுக்கும் அவனே இறைவன்.குர் ஆன் 55;17
    நீங்கள் இதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்

  23. NILA,
    உங்களது அபிமான இறையில்ல இஸ்லாம் நடத்தும் தச்சஆள் நல்லூர் முழக்கத்தில் ஆதாரம் இல்லாமல் திணறி திண்டாடுவதை பார்க்கலாம் இந்த லட்சணத்தில் நீங்கள் அதை களவு கொண்டு இங்கு உளற வேண்டாம் .

  24. நண்பர் இப்ராஹிம்,

    பூமியைச் சுற்றி ஒரு நேர்கோட்டில் செல்லும் போது சூரியன் உதிப்பதையும், மறைவதையும் பார்க்கலாம். இது பூமி உருண்டை என்பதை நிரூபிக்கிறது. இது தான் துல்கர்னைன் வசனங்களுக்கான விளக்கம் என்று பிஜே கூறுகிறார். இதில் இரண்டு கேள்விகளை எழுப்பலாம்.
    1) துல்கர்னைன் ஒரே நேர்கோட்டில் சென்றார் என்று எந்த வசனத்தில் எந்த வார்த்தை கூறுகிறது?
    2) பூமியில் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்தால் திசையை மாற்றாமல் சூரியன் மறைவதையும் உதிப்பதையும் பார்க்க முடியுமா?
    இந்த இரண்டு கேள்விகளுக்கும் உங்களின் வழக்கமான உருட்டல்கள், புரட்டல்கள் இல்லாமல் பதில் கூறுங்கள் பார்க்கலாம்.

  25. செங்கொடி,

    எங்களை மாதிரி மூஃமின்களை புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறீர்களே..

    எதற்கும் கவுண்டமணி செந்தில் நடித்து காட்டிய “அந்த வாழப்பழந்தான்னே இது” பார்த்துவிட்டு வரவும்

    நீங்கள் என்ன அரப்பு போட்டு வெளக்கினாலும், அந்த கிழக்குதான்னே இது என்ற வசனம் எங்களை போன்ற மூஃமின்களிடமிருந்து வரும் என்று அறியவும்.

  26. இவுஹ இங்கண குரான்ல உலகம் உருண்டைன்னுதான் சொல்லுதுன்னு சும்ம்மா சுத்தி உடறாங்க.. ஆனா, உலக தலைப்பு செய்திகளில், அந்த பக்கம் நைஜீரியாவுல உலகம் உருண்டைன்னு சொல்லக்கூடாது, சொல்லிக்கொடுக்கக்கூடாதுன்னு சொல்லி நம்ம மூஃமின்கள் ஜிகாத் ஆரம்பிச்சிட்டாங்க…
    நம்ம மூஃமின்கள் உலகம் தட்டைன்னுதான் குரான்ல அல்லாஹ் சொல்லிக்கீறான். இந்த அம்ரீக்காக்காரன் உலகம் உருண்டைன்னு சொல்லி ஈமானை கெடுக்கிறான்னு சொல்லி, கிறிஸ்துவன் மேல எல்லாம் பாம் போட்டு ஈமானை பரப்புறாங்க

    இந்த வாழப்பழ கதையெல்லாம் நம்ம நைஜீரிய ஒரிஜினல் ஈமாந்தாரிகள் நம்ப மாட்டேங்கராய்ங்க..

    இதுக்கு நடுவுல, நம்ம ரசூலுல்லாஹ்வே ஒரு மரைகழண்ட கேஸூன்னு, காக்கா வலிப்பில கடவுளை பாத்த கேட்டகிரின்னு வீடியோவெல்லாம் போடறாய்ங்க..

    யா அல்லாஹ்.

  27. நண்பர் இப்ராஹிம்
    உங்களுக்கு கொஞ்சம் தள வடிவியல் கணிதம்[plane geometry] கற்க வேண்டும்.அதாவது தளம் என்பது இரு பரிபாணம் உடைய பேப்பர் போல் இருந்தால் திசைகள் ஒரு பரிமாணம் உள்ள கோடுகள்.

    பூமி என்பது ஏறத்தாழ‌ கோள வடிவம் உள்ள முப்பரிமாண வடிவம். ஆகவே திசைகள் இரு பரிமாணமுடைய வட்டம் (கோளத்தின் குறுக்கு வெட்டு)
    ஒரு பூமி உருண்டை மாதிரி உங்கள் முன் இருக்கிறது என்று வைத்துக் கொள்ள்வும்.திசை என்பது இடம் அல்ல ஒரு பயணத்தையே குறிக்கிறது.So

    கிழக்கு=உங்கள் வலது புறமாக் சென்று பூமி உருண்டையை சுற்றி வருவது(வட்டம்).(right hand turn circle)

    மேற்கு=உங்கள் இடது புறமாக் சென்று பூமி உருண்டையை சுற்றி வருவது(வட்டம்). .(left hand turn circle)

    வடக்கு=மாதிரிக்கு மேல் சென்று பூமி உருண்டையை சுற்றி வருவது(வட்டம்). ).(upside turn circle)

    தெற்கு=மாதிரிக்கு கீழ் சென்று பூமி உருண்டையை சுற்றி வருவது(வட்டம்). ).(downside turn circle)

    இவ்வட்டத்தின் மீது பயனிக்கும்(நிற்கும்) ஒருவருக்கு அந்த தொடுகோடுகளே நேர் திசைகள்.ஆகவே இரணடு மட்டுமல்ல வட்டத்தின் அனைத்து புள்ளிகளிலும் தொடுகோடுகளாக் திசைகள் உண்டு.ஆகவே எண்ணற்ற கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு உண்டு.
    http://www.hort.purdue.edu/newcrop/tropical/lecture_02/lec_02.html

    http://en.wikipedia.org/wiki/Geodetic_system

    இரண்டு கிழக்கு,இரண்டு மேற்குகளுக்கு மட்டும் அல்லா இறைவன் [குர் ஆன் 55;17]].

    மீதமுள்ள திசைககளுக்கு பிற கடவுள்கள் யார் யாருக்கு எவ்வளவு வேண்டுமோ சண்டை போடாமல் பிரித்து எடுத்துக் கொள்ள‌வும்.

  28. நமக்கு என்னடா? நம்ம தவுகீத் அண்ணன் பி.ஜே இப்படி அடித்து விடுரார் என்றால் எங்கிருந்தாவது எதாவது கொஞ்சம் அறிவியல் விஷயம் அரைகுறையாக தெரியாமல் சொல்ல மாட்டார்.அது எங்கே என்று அவரின் தொண்டர்களுக்கு சொல்லாமல் குரானில் இருந்து அர்த்தம் விளங்கியதாக சொல்லி விடுவார். தொண்டர்களும் புல்லரித்து ஆஹா அண்ணன் சொல்வதே வேதவாக்கு என்று மயங்கி விடுவார்கள்.

    நாம் அப்படி இருக்க முடியாது என்பதால் பி.ஜே உண்மையில் என்ன சொல்ல வருகிறார் என்று ஒரு வழியாக கண்டு பிடித்து விட்டொம்.
    அதாவது அட்ச ரேகை, தீர்க்க ரேகை [Latitude and Logitude based GPS] அடிப்படையில் பூமியில் இடங்களை குறிக்கிறார்கள் அல்லவா. இக்காணொளி பார்த்தால் புரியும்.ஒர் வட்டத்தில் மொத்தம் 360 டிகிரி ஆகவே 180 டிகிரி முடிந்ததும் வரை படத்தில் கிழக்கிற்கு பதில் மேற்கு(‍எதிர் திசை) என்று வரும்.

    அண்ணன் இதை வைத்துத்தான் கூறுகிறார்.ஆனால் இதில் ஒரு விஷயம் என்ன வெனில் இந்த ஆயத் தொலைவுகள் இது (0,0) என்ற மையப்புள்ளியை ஆதாரமாக கொண்டது.இது நம் கணக்கிற்காக இபோது வைத்துக் கொண்டது.

    http://itouchmap.com/latlong.html

    இவை இடத்தைத்தான் குறிக்கிறது திசை அல்ல.ஒவோரு புள்ளிக்கும் திசை அப்புள்ளியின் தொடுகோடுகளே!!!!!!!!!!!!!!!!ha ha

  29. செங்கொடி ///பூமியைச் சுற்றி ஒரு நேர்கோட்டில் செல்லும் போது சூரியன் உதிப்பதையும், மறைவதையும் பார்க்கலாம். இது பூமி உருண்டை என்பதை நிரூபிக்கிறது. இது தான் துல்கர்னைன் வசனங்களுக்கான விளக்கம் என்று பிஜே கூறுகிறார். இதில் இரண்டு கேள்விகளை எழுப்பலாம்.
    1) துல்கர்னைன் ஒரே நேர்கோட்டில் சென்றார் என்று எந்த வசனத்தில் எந்த வார்த்தை கூறுகிறது?
    2) பூமியில் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்தால் திசையை மாற்றாமல் சூரியன் மறைவதையும் உதிப்பதையும் பார்க்க முடியுமா?
    இந்த இரண்டு கேள்விகளுக்கும் உங்களின் வழக்கமான உருட்டல்கள், புரட்டல்கள் இல்லாமல் பதில் கூறுங்கள் பார்க்கலாம்////
    துல்கர்னைன் ஒரே நேர் கோட்டில் சென்றார் என்று பீஜே கூறவில்லை.ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு ஒரு வழியை ஏற்படுத்தினோம்..ஒரு வழியில் சென்றார்.சூரியன் மறைவதை பார்க்கிறார்.பின்னரும் ஒரு வழியில் சென்றார்.அவர் திரும்பினார் என்றோ மாற்று வழியில் சென்றார் என்றோ இங்கு காணப்படவில்லை.85 வது வசனம்ஒரு வழியில் ஒருவர் செல்கிறார் என்றால் அவர் அந்த பயணத்தை ஒரே திசையிலே தொடங்குகிறார் என்றும் .[அதன்]பின்னரும் ஒரு வழியில் செல்கிறார் என்றும் 89 வது வசனம் கூறுகிறது .92 வது வசனமும் கூறுகிறது என்றால் அவர் அதே திசையில் தொடர்கிறார் என்றுதான் பொருள் கொள்ளமுடியும்
    85″வ அத்பஅ சபையா ” என்றும் அடுத்து வரும் 89 “சும்ம அத்பஅ சபையா’ என்றும் 92 “சும்ம அத்ப சபையா” என்று அந்த வசனங்கள் வருகின்றன .பீஜே போன்ற அறிஞர் களால் தான் அரபு இலக்கணத்தில் ‘சும்ம “‘என்று வரும்பொழுது அந்த சொல் முந்திய சொல்லை தொடர்வதை விளக்க முடியும்.
    ////2) பூமியில் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்தால் திசையை மாற்றாமல் சூரியன் மறைவதையும் உதிப்பதையும் பார்க்க முடியுமா?////
    துல்கர்னைன் எத்தனை நாள் பயணம் மேற்கொண்டார் என்பதெல்லாம் இங்கு கூறப்படவில்லை .அவர் நீண்ட பயணம் தொடர்கிறார்.தினசரி மக்கள் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியும். சாதரணமாக பார்த்தால் இது குஆனில் சொல்லப்படுவதற்கு உரிய செய்தி அல்ல.ஆனால் அது குறித்து இங்கு முக்கியம் கொடுத்து பேசுவதன் நோக்கம் என்ன? ஒரு எல்லையில் சூரியன் மறைவதையும் அடுத்த பயணத்தின் எல்லையில் சூரியன் உதிப்பதை பார்ப்பதையும் கூறுவதிலிருந்து பூமி தட்டையாக எண்ணிய மக்கள் காலத்திலும் ,பூமிஅசல் வடிவம் கண்டு பிடிக்கப்படும் பொழுதும் அதையும் மெய்ப்பிக்கும் வகையிலே சூரியன் மறையும் திசையில் சென்றவர் ,சூரியன் உதயமாகும் திசையில் வந்துவிட்டார் என்பதை மக்கள் எளிதாக புரியும் வண்ணம் உரைத்திருக்கிறது.
    வழக்கமான உருட்டல்,புரட்டல் என்று நீங்கள் சல்லியடிப்பது ஏனோ?

  30. NILA ////திசைகள் இரு பரிமாணமுடைய வட்டம் (கோளத்தின் குறுக்கு வெட்டு)
    ஒரு பூமி உருண்டை மாதிரி உங்கள் முன் இருக்கிறது என்று வைத்துக் கொள்ள்வும்.திசை என்பது இடம் அல்ல ஒரு பயணத்தையே குறிக்கிறது.So
    கிழக்கு=உங்கள் வலது புறமாக் சென்று பூமி உருண்டையை சுற்றி வருவது(வட்டம்).(right hand turn circle)
    மேற்கு=உங்கள் இடது புறமாக் சென்று பூமி உருண்டையை சுற்றி வருவது(வட்டம்). .(left hand turn circle) ////
    சூரியன் மறையும் திசை என்றும் கொள்ளாமல் மறையும் இடத்தை நோக்கி சென்றவர் சூரியன் உதிக்கும் இடத்திற்கு வருகிறார் என்றால் பூமி உருண்டை என்பதை குர்ஆன் வெளியாக்குகிறதா?இல்லையா?

  31. நண்பர் இப்ராஹிம்,

    \\வழக்கமான உருட்டல்,புரட்டல் என்று நீங்கள் சல்லியடிப்பது ஏனோ?// அது ஜல்லியடித்தலில்லை உண்மை என்பதை விளக்கவா? \\துல்கர்னைன் ஒரே நேர் கோட்டில் சென்றார் என்று பீஜே கூறவில்லை// \\பீஜே போன்ற அறிஞர் களால் தான் அரபு இலக்கணத்தில் ‘சும்ம “‘என்று வரும்பொழுது அந்த சொல் முந்திய சொல்லை தொடர்வதை விளக்க முடியும்// \\ அவர் அதே திசையில் தொடர்கிறார் என்றுதான் பொருள் கொள்ளமுடியும்// இவைகள் நீங்கள் கூறியவைகள் தானே. துல்கர்னைன் ஒரே திசையில் சென்றாரா? இல்லையா?

    துல்கர்னைன் ஒரே திசையில் செல்லவில்லை திசை மாற்றிச் சென்றார் என்றால் அதிலிருந்து பூமி உருண்டை என்பதை நிரூபிக்க முடியாது. ஒரே திசையில் சென்றார் என்றால் கூரான் கூறுவது போல் மறைவதையும் உதிப்பதையும் பார்க்க முடியாது. அந்த காணொளியை பார்த்தீர்களா? நேர்கோட்டில் செல்வதாகத்தான் பிஜே விளக்கமளிக்கிறார். நேர்கோட்டில் செல்வதாக சொன்னால் தான் பூமி உருண்டை என்பதாக பொருள் கொள்ள முடியும். ஆனால் குரான் அவரின் பயணத்தில் சூரியன் மறைவதைக் கண்டார், சூரியன் உதிப்பதைக் கண்டார் என்று தான் குறிப்பிடுகிறது. இரண்டையும் அவர் கண்டிருக்கிறார் என்பதால் நேர்கோட்டில் அல்லது ஒரே திசையில் சென்றதாக குரான் கூறவில்லை. ஏனென்றால் ஒரே திசையில் செல்பவரால் இரண்டையும் பார்க்க முடியாது. பின் எப்படி அந்த வசனத்தை பிழிந்து பூமி உருண்டை என்று சாறு எடுக்க முடியும்?

    ஆக குரான் கூறுவது சரி என்றால் பிஜே கூறியது பொய். பிஜே கூறியது சரி என்றால் குரான் கூறுவது பொய். இரண்டும் சரி என்றால் நீங்கள் கூறுவது பொய். எங்கே எது உண்மை? எது பொய்? என்று உருட்டல் புரட்டல் இல்லாமல் ஜல்லியடிக்காமல் சொல்லுங்கள் பார்க்கலாம்.

  32. ///சுன்னத் ஜமாஅத் ,தவ்ஹித் ஜமாஅத் களுக்கிடையே பிரச்னைகள் வந்தால் தவ்ஹித் ஜமாஅத் அணியில் இருப்போம். சன்னி ,ஷியா பிரச்னைகள் வந்தால் சன்னி என்ற ஓரணில் நிற்போம் .முஸ்லிம் ஹிந்து பிரச்னை வந்தால் முஸ்லிம் என்ற அணியில் இருப்போம்.ஆத்திகம் நாத்திகம் என்று பிரச்னை வந்தால் ஆத்திக அணியில் இருப்போம்.ஆதிக்க சக்திகளுக்கும் ,பின்தங்கிய மக்களுக்கும் பிரச்னைகள் வந்தால் பின்தங்கிய மக்களின் அணியில் இருப்போம் நரேந்திர மோடி ,ராம கோபாலன் ,யூத வெறியர்கள் மனிதர்களா மிருகங்களா என்றால் நாமெல்லாம் மனிதர்கள் அணியில் இருப்போம்////

    அருமை நண்பர் இப்ராகிம்

  33. “ நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான். பகலை இரவில் புகுத்துகிறான்….. என்பதை நீர் பார்க்கவில்லையா? “
    (அல்குர்ஆன் 31:29)
    மேற்கூறிய திருக்குர் ஆன் வசனத்தில் “யலிஜ்” என்ற சொல் இடம் பெறுகின்றது. இதன் பொருள் சங்கமித்தல், இரண்டறக் கலத்தல் என்பதாகும்.
    சங்கமித்தல் என்ற சொல்லுக்கு பொருள் என்னவெனில், இரவு மெல்ல மெல்ல, படிப்படியாகப் பகலுக்கு மாறுவதும், அவ்வாறே பகல் இரவுக்கு மாறுவதையும் எடுத்துரைக்கின்றது. பூமி உருண்டை வடிவாக இருந்திடும் பட்சத்தில்தான் இந்தத் தொடரான இயற்கை நிகழ்வு ஏற்பட்டிட வாய்ப்புள்ளது.
    ஒருவேளை, பூமி தட்டையாக இருந்திருக்குமாயின், இரவிலிருந்து பகலுக்கும், பகலிலிருந்து இரவுக்கும் ஏற்படும் மாற்றமானது திடீரென நிகழக்கூடியதாக இருந்திருக்கும்.
    பின்வரும் திருக்குர் ஆன் வசனம் பூமி உருண்டை வடிவானதுதான் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.
    “அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான். அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்.”
    (அல்குர் ஆன் 39:5)
    இங்கே “கவ்வாரா” என்ற அரபிச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்பொருள் ‘கவிந்திருத்தல்’ ‘சுருளச் செய்தல்’ என்பதாகும். தலையில் சுற்றப்படும் தலைப்பாகைக்கு நிகரான செயலாகும் இது. பூமி உருண்டையாக இருக்கும் போது தான், இரவும் பகலும் சுற்றிவரும் செயல் நிகழ முடியும்.
    அதேநேரத்தில், பூமியானது ஒரு பந்தைப் போன்று முற்றிலும் உருண்டையானதும் அல்ல. அது தன் துருவப் பகுதியில் தட்டையாக உள்ளது. பூமியின் வினோதமான வடிவைப் பற்றி பின்வரும் திருக்குர் ஆன் வசனம் ஒரு வர்ணையைத் தருகின்றது.
    “இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்”(அல்குர் ஆன் 79:30)
    முட்டையைக் குறிக்கும் ‘தஹாஹா’ என்ற அரபிச்சொல் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல் தீக்கோழி முட்டையைக் (Ostrich Egg) குறிக்கும். தீக்கோழியின் முட்டையானது அதன் ஓரங்களில் தட்டையாக இருக்கும்.
    விண்ணகத் தாது மண்ணகத்தில்  புகுந்த நேரம்,
    நாம் வசிக்கும் பூமி தட்டையானது என்ற தவறான கருத்து பரவலாக நிலவிய போது, திருகுர் ஆன் வசனமோ

  34. நண்பர் ரிஸ்வான்,

    உங்கள் பின்னூட்டம் நீக்கப்படுகிறது. உங்கள் கருத்தைக் கூறுங்கள், அது எத்தகையதாக இருந்தாலும் வரவேற்கிறேன். உங்கள் கருத்துக்கு துணையாக வேறொருவர் எழுதியதை மேற்கோளாக காட்டுங்கள், ஏற்கிறேன். ஆனால் வெறுமனே வேறொரு இடத்திலிருந்து வெட்டி இங்கு வந்து ஒட்டிச் செல்வதை ஏற்கவியலாது.

    நன்றி.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s