இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 22

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 22

டிராட்ஸ்கியம் என்பது, அரசியல் சதிகளை மூலமாக கொண்டது

 

டிராட்ஸ்கியும், நான்காம் அகிலமும் தமது அரசியல் உள்ளடக்கத்தில் சோவியத்யூனியன் பற்றி கூறும் போது சோவியத் யூனியனை சீரழிந்த தொழிலாளர் அரசு” என்றனர். டிராட்ஸ்கி தனது தொடர்ச்சியான எழுத்ததுகளில் ஸ்டாலின் அதிகாரத்துவத்துக்கும் அதன் மூலம் உலக ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கின்றார். ஆனால் அவர் அதிகாரத்துவம் தனது சொந்த நலன்களின் பேரில் சுரண்டும் சமூக அடிப்படைகளை பேனாமல் அதிகாரத்துக்குச் சேவை செய்ய முடியாது. அந்தளவுக்கு ஸ்டாலின் தேசிய மயமாக்கப்பட்ட சொத்துக்களை ஏகாதிபத்தியத் தாக்குதல்களில் இருந்தும் அதிகாரத்துவத்தின் பொறுமையிழந்ததும் பேராசை கொண்டதுமான தட்டினரிடமிருந்து கூடப் பேணுகின்றார். எவ்வாறெனின் அவர் இந்த பாதுகாப்பினை சோவியத் சமுதாயத்தினை பொதுவாக ஒழித்துக் காட்டும் தயாரிப்பு நடவடிக்கைகளுடனேயே இதை அழுல் செய்கின்றார். சரியாக இதன் காரணமாகவே ஸ்டாலினிசக் கும்பல் தூக்கிவீசப்படவேண்டும்” என்று எழுதுகிறார். சீரழிந்த தொழிலாளர் அரசு என்று கண்மூடித்தனமாக புலம்பிய போது, அதன் வர்க்கத் தன்மையை பற்றி மூடிமறைக்கிறார். மறுபுறத்தில் முரண்பாடாக தனது தலைமைய அதன் மேல் நிறுவ, சோவியத் அமைப்பை பாட்டாளி வர்க்கத் தன்மை உடையது என்கின்றார். ஆனால் சீராழிந்த பாட்டாளி வர்க்கத் தன்மை என்கின்றார். இப்படி முரண்பாடான, மார்க்சியமல்லாத புலம்பல் ஒரு முதலாளித்துவ மீட்சிகான ஒருமுயற்சியே. இப்படி பிதற்றும் டிராட்ஸ்கியம் பற்றி லெனின் மார்க்சியத்தின் முக்கியப் பிரச்சனை எதிலும் டிராட்ஸ்கி ஒரு போதும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்ததில்லை. எந்தக் கருத்து வேறுபாட்டிலும் உள்ள விரிசல்களில் நுழைந்து கொள்ள எப்போதும் அவர் கடும் முயற்சி செய்கிறார். ஒரு சாராரைக் கைவிட்டு இன்னொரு சாராருடன் சேர்ந்து கொள்கின்றார்” என்றார். டிராட்ஸ்கிய கோட்பாடு இப்படி முரண்நிலையாகவும், தனது தனிப்பட்ட நலன்களை சார்ந்து விளக்கம் பெறும் போது, சோவியத்யூனியனில் சீராழிந்த தொழிலாளர் வர்க்க அரசு” ஒன்று நிலவுவதாக கூறுவது, அடிப்படை மார்க்சியத்தையை மறுப்பதாகும். வர்க்க சமுதாயத்தில் இப்படி ஒன்று இருக்கவே முடியாது. இருக்க முடியாத நிலையில் அதை இருப்பதாக கூறுவது தான் டிராட்ஸ்கியமாக உள்ளது. எதார்த்தத்தின் உண்மையை யாரும் மறுத்து புனைய முடியாத நிலையில், முரண்நிலையில் புலம்புவது தொடங்குகின்றது. சோவியத் ஆட்சி பாட்டாளி வர்க்க ஆட்சியாக அல்லது முதலாளித்துவ அரசாக, இரண்டில் ஒன்றுதான் இருக்கமுடியும். இரண்டுமாக அல்லது இரண்டும் அல்லாததாக இருக்க முடியாது. இது வர்க்க அமைப்பு பற்றி அடிப்படையான மார்க்சிய ஆய்வுரையாகும். இதை மறுத்து தான் ஸ்டாலின் ஆட்சியை அகற்றி தனது தலைமையை நிறுவ டிராட்ஸ்கியம் கொள்கை விளக்கம் அளிக்கின்றது.

 

இதற்கு மாறாக சுய விமர்சனத்தை வளர்த்தெடுப்பதிலும் தமது பலவீனங்களையும் தவறுகளையும் போக்கிக் கொள்வதிலும்; நமக்கு இடையூறு விளைவிக்கின்ற – அதிகார வர்க்கத்தினரையே நான் குறிப்பிடகிறேன்.  நமது அமைப்புகளில் உள்ள அதிகார வர்க்கத்தனத்தை வெறும் வழக்கமான சிவப்பு நாடா முறை என்று கருதிவிடக் கூடாது. அதிகார வர்க்கமுறை என்பது நமது அமைப்புகளில் உள்ள முதலாளியச் செல்வாக்கின் வெளிப்பாடாகும்” என்றார் ஸ்டாலின். மிகவும் சரியான தெளிவான நிலையை மூடிமறைக்க, ஸ்டாலின் அதிகார வர்க்கத்துக்கும், எகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கின்றார் என்று கூறும் டிராட்ஸ்கி, அதை எப்படி என்று விளக்க முடியாது திணறுகின்றார். அதேநேரம் ஸ்டாலின் எகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளார் என்றும் எழுதுகிறார். அத்துடன் சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்த படி அதற்கு எதிராக ஸ்டாலின் செயல்படுவதாக ஒன்றுக்கு ஒன்று முரணாக புலம்புகின்றனர். எகாதிபத்தியத்துக்கு ஸ்டாலின் உதவுவதாக கூறும் இவர்கள், அதே நேரம் எகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக கூறுகின்றனர். இதை எப்படி மார்க்சியமாக விளங்கிக் கொள்வது? அதிகார வர்க்கத்தை பாதுகாப்பதாக கூறும் இவர், சுரண்டும் வர்க்கத்தை ஒழிப்பதாக கூறுகின்றார். இப்படி இவை ஒரு முரண்நிலைக் கூற்றாக இருந்த போது, டிராட்ஸ்கிய அரசியல் தன்னை சதிகள் மூலமும் ஸ்டாலினிய அவதூறுகள் மூலமும் மூடிமறைத்துக் கொள்கின்றது. ஸ்டாலினை இப்படி முரண் நிலையாக காட்டி, கோட்பாடற்ற வகையில் சதிகள் மூலம் அவரையும், சோவியத் சமூகத்தையும் ஒழித்துக்கட்ட கோருகின்றார். தனது ஆரூடங்களை கேள்வி இன்றி எற்றுக் கொண்டு, தனது தலைமையிலான ஆட்சியைக் கோரினார். தேசியமயமாக்கப்பட்ட சொத்துகளை ஸ்டாலின் பாதுகாப்பதாக கூறி, ஒட்டு மொத்தத்தில் ஸ்டாலின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று அறைகூவல் இடுகின்றார். எதற்காக அகற்றப்பட வேண்டும் என்பதை விளக்க முடிவதில்லை. இந்த ஆட்சியில் தான் அமர்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதே டிராட்ஸ்கிய அரசியல். உண்மையில் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சிக்கு மாறாக முதலாளித்துவ மீட்சியையே அவர்கள் கோரினர்.

 

பாட்டாளி வர்க்க அரசு பற்றியும், வர்க்கப் போராட்டம் பற்றியும் டிராட்ஸ்கி கூறும் போது அரசின் வர்க்கத் தன்மை தொடர்ந்து நிர்ணயம் செய்யப்படுவது அதன் அரசியல் வடிவங்களால் அன்றி, அதன் சமூக உள்ளடக்கத்தினாலாகும். அதாவது குறிக்கப்பட்ட அரசு காத்து, பேணிக் கொண்டுள்ள சொத்துவடிவங்களின் பண்பிலாகும். … பறிமுதல் செய்த தேசிய சொத்தினைக் காக்கும் ஆட்சியானது சுதந்திரமான அரசியல் வடிவங்களை – பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தினைக் கொண்டுள்ளது..” என்றார். பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை, அதன் அடிப்படையை மறுக்கும் உள்ளடக்கம் தான் முதலாளித்துவ மீட்சியை மறுக்கின்றது. லெனினின் அரசியல் அணுகுமுறைக்கும், பொருளாதார அணுகுமுறைக்கும் இடையில் எப்படி பாட்டாளி வர்க்க ஆட்சி மற்றும் வர்க்க கண்ணோட்டம் தூக்கியெறியப்படும் என்பதை விளக்கும் போது அவர்கள் “பொருளாதார” அணுகுமுறையைப் பின்பற்றுகின்ற பொழுது நான் “அரசியல்” அணுகுமுறையைப் மேற்கொள்வதற்காகவும் அவர்கள் இருவருமே (டிராட்ஸ்கி மற்றும் புக்காரின்) என்னை இடித்துரைக்கின்றனர்…. இது வெளிப்படையான தத்துவார்த்த தவறாகும்; எனது “அரசியல்” அணுகுமுறை ஒரு மார்க்சியவாதிக்கு முரணான முறையில், ஏற்பில்லாத முறையில் இடித்துரைக்கப்பட்ருப்பதை முன்பே கேள்விப்பட்ட காரணத்தால் …. எல்லா வகைகளிலும் அரசியலே பொருளியலை விட தலைமையான முக்கியத்துவமுடையது. வேறு வகையான வாதம் செய்வது என்பது மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுத்துவிடுவதாகும்.

 

நான் எனது அரசியல் மதிப்பீட்டில் தவறு செய்துள்ளேனா? அப்படி நீங்கள் கருதினால் அதைக் கூறுங்கள் மற்றும் நிருபியுங்கள். ஆனால் அரசியல் அணுகுமுறை “பொருளாதார” அணுகுமுறைக்குச் சமமானது என்று நீங்கள் கூறும் போது, “இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்” என்று சொல்லும் போது நீங்கள் மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுத்து விடுகிறீர்கள்.வேறு சொற்களில் கூறினால், அரசியல் அணுகுமுறை என்பதன் அர்த்தம் என்ன? தொழிற்சங்களின் தவறான போக்கு சோவியத் ஆட்சி அதிகாரத்தை நாசப்படுத்தும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நாசப்படுத்தும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் குப்புறக் கவிழ்க்கும் என்பதே” அரசியல் அணுகுமுறைக்கு பதிலாக பொருளாதார அணுகுமுறையை வைத்து சமுகத்தை வழிநடத்தவும், மதிப்பிடவும் முனைந்த போது, லெனின் இதை அம்பலப்படுத்தினார். இது அம்பலமான போது அவர் இரண்டையும் சமநிலையில் வைத்து மதிப்பிட முடியும் என்றனர். லெனின் இது மார்க்சியத்தையே மறுப்பதாகும் என்றார். இப்படி டிராஸ்கியத்தை லெனின் அம்பலப்படுத்தியிருந்தார். ஸ்டாலின் ஆட்சியை மேல் இருந்து கவிழ்த்து தனது தலைமையை நிறுவக் கோரிய டிராஸ்கி மீண்டும் அதே அரசியலை ஸ்டாலினுக்கு எதிராக முன்னிறுத்தினார். அரசியல் அணுகுமுறையை பொருளாதார அணுகுமுறைக்கு கீழானதாக காட்டி, ஸ்டாலினை தூற்ற டிராட்ஸ்கி தயங்கவே இல்லை.

 

இதை விளக்கிய டிராட்ஸ்கி சொத்துரிமை எப்படி உள்ளது என்பதே, அரசின் வர்க்கத் தன்மையை  தீர்மானிக்கும் அரசியல் உள்ளடக்கம் என்றார். சொத்துக்கள் தேசியமயமாக்கபட்டால், அந்த  அரசை  பாட்டாளி வர்க்க அரசாக காணவேண்டும் என்றார். அரசின் வர்க்கத் தன்மை அவசியமற்ற ஒன்றாக  மறுத்துவிடுகின்றனர். இந்த அடிப்படையில் டிராட்ஸ்கி அரசின் வர்க்கத் தன்மை தொடர்ந்து நிர்ணயம் செய்யப்படுவது அதன் அரசியல் வடிவங்களால் அன்றி, அதன் சமூக உள்ளடக்கத்தினாலாகும். அதாவது குறிக்கப்பட்ட அரசு காத்து, பேணிக் கொண்டுள்ள சொத்துவடிவங்களின் பண்பிலாகும்” என்று கூறி மார்க்சியத்தையே மறுத்தார். அரசியல் வடிவங்கள் தான் ஆணையில் உள்ளது என்பதை மறுப்பது, டிராட்ஸ்கியத்தின் முதலாளித்துவ மீட்சிக்கான செயல்முறை கொண்ட அரசியல் அடிப்படையாக இருந்தது. அதாவது அரசியல் வடிவங்களில் பாட்டாளி வர்க்க போராட்டத்தை நடத்தாமலேயே, அரசு காத்து பேணிக் கொண்டுள்ள சொத்துவடிவங்களைக் கொண்டு, பாட்டாளி வர்க்க அரசு என நிர்ணயம் செய்ய போதுமானது என்கின்றனர். தேசிய சொத்துரிமை, பாட்டாளி வர்க்க அரசாக நிர்ணயம் செய்ய போதுமானது என்கின்றனர். இதுதான் முதாலாளித்துவ மீட்சி நிலவிய காலகட்டமாகும். சோவியத் சமூக ஏகாதிபத்தியமாக நீடிப்பதை டிராட்ஸ்கியம் மறுத்து, அதை பாதுகாப்பதற்கான அரசியல் உள்ளடக்கமாகவும் கூட இது இருந்தது.

 

உலகளவில் தேசியமயமாக்கபட்ட சொத்துகளை அரசுகள் பேணும் போது, தேசிய மயமாக்கும் போது, அதை சோசலிசமாக கடந்த காலத்தில் புனையப்பட்ட பல நிகழ்வுகள் டிராட்ஸ்கியத்தின் கடைந்தெடுத்த ஏகாதிபத்திய கோட்பாடாகும். தேசிய சொத்துகளின் வரலாறு என்பது மக்கள் நலனில் இருந்து உருவாக்கபட்டவையல்ல. மாறாக மூலதனத்தின் நலனுக்கு இசைவாக கையாளப்பட்டவைதான். விதிவிலக்காக மக்களின் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பவும், சொத்துக்களை தேசிய மயமாக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. ஆனால் இங்கு தனிச் சொத்துரிமை ஒழிக்கப்படவில்லை. அரசின் வர்க்க அணுகுமுறை பற்றிய மதிப்பிடு அவசியமற்றதாக இருந்தது. தனிச் சொத்துரிமையை ஒழிக்கும் அங்கமாக பாட்டாளி வர்க்கம் சொத்துகளை தேசியமயமாக்கிய போது, அதை அத்துடன் நிறுத்திவிடவில்லை. (நிறுத்திவிட வேண்டும் என்பதுதான் இங்கு டிராட்ஸ்கியமாகும்) தொடர்ந்தும் அதன் பண்பாட்டு கலாச்சார கூறுகள் ஈறாக தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தை நடத்தும் ஒரு அரசியல் இயக்கத்தை, மக்கள் திரள் வடிவத்தை முன்வைப்பதை சீரழிந்த சோசலிசம் என்கின்றனர். அரசு எந்த வர்க்கத்துக்கு சார்பாக எப்படி தொடர்ச்சியாக, வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்றது என்பதைப் பொறுத்தே, அரசின் வர்க்கத் தன்மை தீர்மானமாகின்றது. மாறாக தொடர்ச்சியான போராட்டத்தை மறுத்து, சொத்துடமை எப்படி இருக்கின்றது என்பதை ஆணையில் வைக்கும் அணுகுமுறை அரசின் வர்க்கத் தன்மையை தீர்மானிப்பதில்லை. இது முதலாளித்துவ மீட்சிகான அடிப்படையை உருவாக்கி விடுகின்றது. ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கம் அரசியல் வடிவங்களால் அமைந்த வர்க்கப் போரட்டத்தின் மூலம் அரசின் வர்க்கத் தன்மையை முன்னிறுத்திய போது, டிராட்ஸ்கி சொத்துடமை வடிவங்கள் மூலம் முதலாளித்துவ மீட்சிக்கான அரசின் வர்க்கத் தன்மையை நிர்ணயம் செய்ய அறை கூவலை விடுத்தார்.

 

தேசியமயமாக்கப்பட்ட சொத்துரிமை பாதுகாப்பதற்கு வெளியில், தொடர்ச்சியான அரசியல் வடிவங்கள் மூலம் தனிச் சொத்துரிமை கண்ணோட்டத்தில் இருந்து சமூகத்தை மாற்றும் புரட்சிகரமான செயல் முறையைப் பொறுத்தே, அரசு பாட்டாளி வர்க்க அரசா அல்லது முதலாளித்துவ அரசா என்பதை தீர்மானிக்க முடியும். சோவியத் முதல் சீனா வரையிலான அரசுகளின் தேசியமயமான சொத்துரிமை அடிப்படையாக கொண்டு, பாட்டாளி வர்க்க அரசாக கருத முடியாது. தேசிய சொத்துரிமை பாட்டாளி வர்க்கத்தின் உயர்ந்த அரசியல் இலக்குடன் கூடிய போராட்டம் அல்ல. டிராட்ஸ்கியத்துக்கு அதுவே அரசியல் எல்லையாக இருப்பதால் தான், ஆட்சிக் கவிழ்ப்பை மேல் இருந்து மட்டும் சதிகள் மூலம் கோர முடிந்தது. இதை மிக துல்லியமாக புரிந்து கொள்ள உதாரணமாக கியூபாவை அல்லது வடகொரியாவை எடுத்தால் தேசிய சொத்துரிமையை பெரும்பாலும் அவை கொண்டு இருப்பதால், அது பாட்டாளி வர்க்க அரசு என்று மதிப்பிடப்படுவதில்லை. டிராட்ஸ்கியும், டிராட்ஸ்கியமும் இப்படித் தான் தனது அரசியலை பிதற்றுகிறது. கியூபா, வடகொரிய அரசுகள் தேசிய அரசாக இருக்கின்றதே ஒழிய, பாட்டாளி வர்க்க அரசாக அல்ல. பாட்டாளி வர்க்க அரசு என்பது வர்க்கப் போராட்டத்தை எப்படி தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கை மூலம், கையாளுகின்றது என்பதை அடிப்படையாக கொண்டது. அதாவது பாட்டாளி வர்க்க கட்சி, அரசு என எங்கும் வர்க்கப் போராட்டத்தை ஆணையில் வைத்து அதை நடைமுறை ரீதியாக தொடராத வரை, அது பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் சார்ந்தவையல்ல. அது முதலாளித்தவ கண்ணோட்டம் சார்ந்தாகவே இருக்கின்றது.

 

மேலும் டிராட்ஸ்கி வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சிகரப் போராட்டம் அரசியல் முரண்பாடுகளை பலப்படுத்துகின்றதே தவிர பலவீனப்படுத்தவில்லை” என்று சீனா பற்றி சீனப் புரட்சிக்கு முந்திய குறிப்பில் தூற்றுகிறார். இதன் மூலம் என்ன சொல்ல முனைகின்றார்? ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிடக் கோரினார். சீனப் புரட்சி எகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. உண்மையில் எகாதிபத்தியம் பலவீனப்படுவதை டிராட்ஸ்கி எதிர்த்தார். இது தனிநாட்டில் சோசலிசத்தை நோக்கி முயற்சியாக, டிராட்ஸ்கியத்தின் அரசியல் பிதற்றலுக்கு சவால் விடுவதாக இருந்தது. இதை ஸ்டாலினிசமாக டிராட்ஸ்கியம் கருதியது.

 

ஸ்டாலின் என்ன சொன்னார். ஒரு நாட்டில் புரட்சி வெற்றியடைந்ததும், அதனை தன்னைத்தானே நிறைவு செய்து கொள்ளும் தனிப்பட்ட விசயமாகக் கருதமால் மற்றெல்லா நாடுகளிலும் பாட்டாளி வர்க்க வெற்றியை துரிதப் படுத்துவதற்கு உதவியாகவும் ஒரு சாதனமாகவும் கருத வேண்டும். எனெனின் ஒரு நாட்டில் புரட்சியின் வெற்றி, தற்போதைக்கு ரஷ்யாவில் அடைந்திருக்கும் வெற்றி ஏகாதிபத்தியத்தின் மென்மேலான அழிவின் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியில் ஒரு விளைவாக மட்டுமல்லாமல் அதே சமயம் உலகப் புரட்சியின் தொடக்கமாகவும் முன்நிபந்தனையாகவும் இருக்கிறது” என்றார். மேலும் அவர் பல்வேறு நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கங்கள் ஒன்று சேர்ந்து முயற்சிகள் இல்லாமல், தனி ஒரு நாட்டில் அதனை விடுதலை செய்யும் சோசலிசத்தின் இறுதி வெற்றி சாத்தியமானதே அல்ல என்பது உண்மையே, ஆனால் அதே சமயம் இதர எல்லா நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் முதல் சோசலிச நாடு தரும் உதவி எவ்வளவு அதிகமாக பயனுள்ளதாக இருக்கிறதோ, அந்தளவு உலகப் புரட்சியை அருகில் கொண்டு வருவதும் மிகவும் துரிதமானதாகவும் செழுமையானதாகவும் இருக்கும் என்பது உண்மையே” என்றார். இதையே ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கம் நடைமுறையில் கடைப்பிடித்தது. எகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாக சோவியத் விளங்கியது. இரண்டாம் உலக யுத்தத்தில் ஆரம்பம் முதலே ஜெர்மனியை ஆயுதமயமாக்கிய ஏகாதிபத்தியங்கள், சோவியத்தை தாக்கியழிக்க தன்னால் இயன்ற அனைத்தையும் ஜெர்மனியினூடாக கையாண்டது. பல பிரதேசங்களை எகாதிபத்தியங்கள் நிபந்தனை இன்றியே ஜெர்மனிக்கு தரைவார்த்துக் கொடுத்தது. சோவித்யூனியன் பாசிசத்துக்கு எதிராக விடுத்த அனைத்து ஒன்றுபட்ட முயற்சியையும் ஏகாதிபத்தியங்கள் நிராகரித்தன. மாறாக ஏகாதிபத்தியங்கள் ஜெர்மனியுடன் பல தொடர்ச்சியான ஒப்பந்தங்களைச் செய்தது. சோவியத் யூனியனை தனிப்படுத்தி அழிக்கும் வகையில் பாசிச ஜெர்மனிக்கு இயன்ற அனைத்தையும் செய்தனர்.

 

இரண்டாம் உலக யுத்த முடிவில் சோவியத் யூனியனை அணுவாயுதம் மூலம் தீடிரென தாக்கி அழிக்க, அமெரிக்கா இராணுவ திட்டங்கள் போடப்பட்டன. அவை பற்றி இன்று விரிவான தகவல்கள் வெளிவந்துள்ளன, வெளிவருகின்றன. சோவியத் யூனியன் ஏகாதிபத்திய அமைப்பின் மீது கடுமையான வர்க்கப் போராட்டங்களை ஊக்குவித்தது. இது ஏகாதிபத்தியம் முதல் காலனிகள் வரை விரிந்த தளத்தில் வர்க்க எழுச்சிகள் முதல் தேசிய எழுச்சிகள் வரை தனது ஆதரவை வழங்கியது. உலகம் எங்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற இலட்சியத்தை தனது ஆணையில் வைத்தது. ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சிக் காலம் உலகளவில் கடுமையான வர்க்க நெருக்கடிகளையும், வர்க்கப் போராட்டங்களையும் இதற்கு முன்போ பின்போ உலகம் சந்திக்கவில்லை. இதில் மிக தெளிவான கொள்கை வழிப்பட்ட போராட்டங்களாக அவை இருந்தன. இதனால் ஸ்டாலின் கடுமையான எதிரியாக ஏகாதிபத்தியம் முதல் பல வண்ண கோட்பாடளர்களின் முன் உயர்ந்து நின்றார். இது டிராட்ஸ்கிக்கு தனிப்பட விதிவிலக்கல்ல. இதனால் அவர் ஏகாதிபத்தியம் எதிரி என்பதையே மறுத்தார். மாறாக ஏகாதிபத்தியத்தக்கு எதிரான போராட்டம், வர்க்கப் போராட்டத்தை சிதைக்கின்றது பலவீனப்படுத்துகின்றது என்றார்.

 

குறுகிய நோக்குடன் டிராட்ஸ்கி ஒரு சமூக இயக்கத்தின் உள்ளார்ந்த இயங்கியல் வர்க்க விதிகளை மறுத்தார். டிராட்ஸ்கி சீனாவில் உள்ளாந்த உறவுகளில் ஏகாதிபத்தியம் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக இருந்து கொண்டுள்ளது. இந்தச் சக்தியின் பிரதான மூலம்…. வெளிநாட்டு முதலாளித்துவத்துக்கும் தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான பொருளாதார அரசியல் பந்தங்களே” என்றார். முதலாளித்துவ ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில், ஜனநாயகப் புரட்சியின் உள்ளார்ந்த வர்க்க விதியை மறுத்தார். லெனின் கூறுவது போல் டிராட்ஸ்கி போல்ஷவியத்தைச் சிதைக்கிறார் ஏனெனில் ரசிய முதலாளி வர்க்கப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பாதிரம் பற்றிய திட்டவட்டமான கண்ணோட்டங்கள் எதையும் உருவாக்குவதற்கான ஆற்றல் அவரிடம் ஒரு போதும் இருந்ததில்லை” என்று அம்பலம் செய்கின்றார். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளின் வர்க்க போராட்ட உள்ளடகத்தை லெனின் கூறியது போல் என்றும் டிராட்ஸ்கி புரிந்து கொண்டது கிடையாது. மாறாக புரிந்து கொண்டவர்களை அரசியலற்ற கோசங்களால் தூற்றியே வாழமுடிந்தது. முதலாளித்துவ நாடுகளில் சோசலிசம் இல்லாத கம்யூனிசத்தை ஒரே பாச்சலில் அடைய முடியும் என்று சிலர் எப்படி வாதிடுகின்றரோ, அதே போல் ஜனநாயகப் புரட்சி இன்றி சோசலிசத்தை அடைய முடியும் என்பதே டிராட்ஸ்கியத்தின் உள்ளடக்கமாகும். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில் ஜனநாயக சக்திகளை இனம் காண மறுப்பதும், அவர்களுடன் ஐக்கியப்பட்ட பாட்டாளி வர்க்க புரட்சியை மறுப்பதும், இதன் உள்ளார்ந்த ஏகாதிபத்திய சார்பு நிலையாகும். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில், ஏகாதிபத்தியம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனது காலனித்துவத்தை வைத்திருக்கின்றது. இந்த காலனித்துவத்தை, காலனித்துவத்தைச் சேர்ந்த சுதேசிகள் கூட்டம் ஒன்று முண்டு கொடுக்கின்றது. இது எல்லா காலனித்துவ வரலாற்று கட்டத்திலும் நடந்தன, நடந்து வருகின்றன. அதனால் காலனித்துவ மக்கள் தத்தம் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க மாட்டார்கள் என்பது டிராட்ஸ்கியத்தின் கடைந்தெடுத்த பொய்யுரையாகும். தேசியம் என்பது தேசிய முதலாளித்துவ நலன்களைக் குறிக்கின்றது. இது ஏகாதிபத்திய நலனுக்கு நேரடியாக எதிரானது. ஏகாதிபத்தியத்தை முண்டு கொடுக்கும் சக்திகள் நிலபிரபுத்துவ வர்க்கமும், தரகு முதலாளித்துவ வர்க்கமுமே. இந்த வர்க்கங்கள் மட்டும் தான் ஏகாதிபத்திய காலனித்துவத்தில் லாபம் பெறுகின்றன. தேசிய முதலாளித்துவம் ஏகாதிபத்திய சந்தையால் தனது சொந்த உற்பத்தியை இழக்கின்றது அல்லது ஒடுக்கப்படுகின்றது. இதனால் தான் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கின்றது. சுயநிர்ணயத்தை ஆதரித்து உயர்த்துகின்றது.

 

முதலாளித்துவ ஜனநாயக புரட்சி ஒன்றை எந்த வர்க்கங்கள் விரும்புகின்றன, எந்த வர்க்கங்கள் எதிர்க்கின்றன என்பதை பாகுத்தாய மறுப்பது மார்க்கசியம் அல்ல. அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் வேறுபட்ட புரட்சிகர பணிகளை மறுப்பது வரட்டுவாதமாகும். டிராட்ஸ்கியும், டிராட்ஸ்கியமும் மார்க்சிய எதிர்ப்பிலும் வரட்டு வாதத்திலும் மார்க்சிய லெனினியத்தின் உள்ளார்ந்த அடிப்படைகளை தூற்றுகின்றனர். ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிச முகாமுக்கும் இடையிலான முரண்பாடு” ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட கற்பனை பொருள் என டிராஸ்கியம் வாதிடுகிறது. டிராட்ஸ்கி ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்தை பலப்படுத்தும் என்று கூற, அவர்களின் வாரிசுகள் ஏகாதிபத்தியம் என்பது ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான பொருள் என்கின்றனர். ஸ்டாலின் தேசிய மயமாக்கப்பட்ட சொத்துக்களை ஏகாதிபத்தியத் தாக்குதல்களில் இருந்தும் அதிகாரத்துவத்தின் பொறுமையிழந்ததும் பேராசை கொண்டதுமான தட்டினரிடமிருந்து கூடப் பேனுகின்றார்” என்று டிராட்ஸ்கி கூற்று ஒன்றுடன் ஒன்று முரண்பாடாக இருப்பதை சதிக்கான அரசியல் என்றும் கண்டு கொள்வதில்லை. ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிச முகாமுக்கும் இடையிலான முரண்பாடு” இதை அடிப்படையில் ஆராய்ந்தால், குருச்சேவ் வைத்த ஏகாதிபத்தியத்துடனான சமாதான சக வாழ்வு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. ஏகாதிபத்தியத்துடன் முரண்பாடாடற்ற சோசலிச அமைப்பை அடிப்படையாக கொண்டது. சொந்த நாட்டில் சோசலிசத்தை கட்டுவது என்ற வர்க்கப் போராட்டத்தை நிராகரித்த டிராட்ஸ்கியம், ஏகாதிபத்தியம் என்பதையும் அதன் முரண்பாட்டையும் கற்பனையானது எனக் கூறுவது தவிர்க்க முடியாது. இதை ஸ்டாலினிசமாக முத்திரை குத்தி ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பதும் தவிர்க்க முடியாது. சொந்த நாட்டில் வர்க்கப் போராட்டத்தை அதாவது சோசலிச கட்டுமானத்தை நிரகாரித்தவர்கள், ஸ்டாலினால் முன்னெடுக்கபட்ட சர்வதேச வர்க்கப் போராட்டத்தையும் நிராகரித்தனர். சர்வதேச ரீதியான வர்க்கப் போராட்டங்களை ஸ்டாலின் ஆதாரித்து ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தால், ஏகாதிபத்தியத்துக்கும் சோவியத்துக்கும் இடையிலான முரண்பாடு ஊச்சத்தை எட்டியது. இதை டிராட்ஸ்கியம் கற்பனையானது என்றனர். ஆனால் எதார்த்தம் டிராட்ஸ்கியத்துக்கு நேர் எதிராக இருந்தது.

 

நான்காம் அகிலம் மார்க்சியத்தை மறுத்து நிறுவும் விமர்சனத்தில் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ சிந்தனை கொண்ட மாவோ, குருசேவில் இருந்துதான் ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வுக் கொள்கை இடம் பெற்றதாக தனது குருநாதர் ஸ்டாலினைக் காப்பாற்றும் மூடிமறைப்பு வேலையில் ஈடுபட்டதுடன், சோவியத் சமூக ஏகாதிபத்தியமாக சீராழிந்து விட்டதாக அரிய கண்டு பிடிப்பபைச் செய்தார். அரசுடைமையாக்கப்பட்ட சொத்துடமையின் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் எங்கு வந்தது? என்பதையெல்லாம் மாவோ விளக்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக, ஏகாதிபத்தியத்தின் லஞ்சத்துக்கு விலை போன தொழிலாளர் வர்க்கத்தின் மேல் தட்டுபற்றி குறிப்பிடும் போதே “சமூக ஏகாதிபத்தியம்” என்ற சொல்லை லெனின் பயன்படுத்தினார்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தையே தூற்றுகின்றது.

 

ஜனநாயகப் புரட்சியின் உள்ளடகத்தையே மறுப்பவர்கள், புதிய ஜனநாயகப் புரட்சியின் நட்பு சக்திகளை எதிர்நிலைக்கு தள்ளுகின்றனர். இது டிராட்ஸ்கியும், மென்ஸ்சுவிக்குகளும் லெனினுக்கு எதிராக நடத்திய பழைய சரக்கே. சோவியத்யூனியனில் ஜனநாயக புரட்சியை நிராகரித்து, நட்பு சக்திகளை எதிர்நிலைக்கு தள்ளிய போது, இதற்கு எதிராக லெனின 1905 இல், ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயவாதத்தின் இரண்டு போர்தந்திரங்கள்” நூலையே எழுத வேண்டியிருந்தது. அதில் லெனின் “… சமூக-ஜனநாயகக் கட்சியால் ஒழுங்கமைக்கப் பெற்ற பாட்டாளி வர்க்கத்தை மட்டுமின்றி எங்களுடன் அக்கம் பக்கமாக வழிநடையிட திறமைபடைத்த இந்தச் சிறுமுதலாளி வர்க்கத்தினரையும் வழிகாட்டி நடத்திச் செல்ல…, பாட்டாளி வர்க்கம் கற்றுக் கொள்ளவும் தலைமை தாங்கவும் மறுத்தால், புரட்சி பற்றிய சொற்தொடர்கள் வெற்றுரையாகவே எஞ்சும்”. இதைத் தான் டிராட்ஸ்கியம் செய்கின்றது.  விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ சிந்தனை கொண்ட மாவோ” என்று கூறி ஜனநாயக புரட்சியின் உள்ளடகத்தையே சிறுமைப்படுத்த முனைகின்றனர். ஆனால் மாவோ ஒரு மார்க்சிய லெனினியவாதியாக எதார்த்த்ததில் அவர் லெனினிய வர்க்க உள்ளகத்தில் உயர்ந்த கட்டத்தை பரிசோதித்து வெற்றியும் பெற்றார். டிராட்ஸ்கியம் இந்த லெனினிய சிந்தனைக்கு முரணாக இருந்ததுடன், லெனின் பெயரை முறைகேடாக பயன்படுத்தியது. 

 

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

8 thoughts on “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 22

 1. நண்பர் சிவா,

  மதமும் அறிவியலும் எதிரெதிர் துருவங்கள். மதத்தில் அறிவியல் என்பதும் மதம் அறிவியல் வளர துணை புரிகிறது என்பதும் பிரச்சார உத்தி என்பதைத் தாண்டி ஒன்றுமில்லாதது.

  யார் முஸ்லீம்? எது முஸ்லீம் நாடு? ஈரானின் அறிவியல் வளர்ச்சிக்காக அவர்கள் முஸ்லீம், முஸ்லீம் நாடு என்று சேர்த்துக் கொள்பவர்கள் ஷியாக்கள் குறித்து கொண்டிருக்கும் பார்வை என்ன? உலகில் இஸ்லாத்தில் இருந்து கொண்டு இஸ்லாத்தைவிட்டு விலகி நிற்பவர்கள் யார் என்று கேட்டால் துருக்கியர்கள் என்று ஒரே குரலில் கூறுவார்கள். இன்று அறிவியல் பாலத்தால் அவர்கள் முஸ்லீம் நாட்டினரா? இஸ்லாமே நவீன அறிவியலுக்கு வழிகாட்டியது என்று பெருமைப்படும் அந்த காலம், இஸ்லாத்தை விட்டு விலகி நின்றதாக முஸ்லீம்களால் தூற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அதே காலம். கடுங்கோட்பாட்டு ரீதியாக யாரை முஸ்லீம்கள் அல்ல என்கிறார்களோ அவர்களை அறிவியல் வளர்ச்சிக்காக முஸ்லீம்கள் என்கிறார்கள், இஸ்லாமே காரணம் என்கிறார்கள்.

  கிருஸ்தவம் பல அறிவியலாளர்களை தண்டித்தது கொன்றது. இஸ்லாமியர்கள் அவ்வாறு செய்யவில்லை. அதுமட்டும் தான் வித்தியாசம். பரிணாமத்தின் அடிப்படையிலான அலோபதி மருத்துவத்தை எந்த முஸ்லீமும் தள்ளி வைப்பதில்லை, அதேநேரம் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டதும் இல்லை.

  மதத்தையும் அறிவியலையும் ஒன்றாக்கி விளம்பப்படும் எதைக் கண்டாலும் அது எந்த மதமாயினும் புறக்கணித்து விடுங்கள். அது ஒன்றே சரியானதும் செய்ய வேண்டியதும்.

 2. நண்பரே.

  இந்த தொடர் பதிவு இன்னும் எத்தனை பகுதிகளாக வரும் என்று தெரிந்துக் கொள்ளலாமா?

 3. நன்றி செங்கொடி தற்போதுதான் கண்டேன் உங்கள் பதிலை

 4. நண்பரே மீண்டும் வந்ததற்கு நன்றி,
  இந்த தொடர் பகுதிகளை தரவிறக்கம் செய்யாமல் போய்விட்டோமே என்ற கவலை இருந்தது. இப்போது செய்துவிடவேண்டியதுதான்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s