கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
இதுவரை நண்பர் இஹ்சாஸின் பதிவுகளுக்கு தொடரின் மீதான விமர்சனம், மறுப்புக்கு மறுப்பு என இரண்டையும் எடுத்துக் கொண்டு வரிசையாக பதிலளித்து வந்தேன். ஆனால் இந்தமுறை அவரின் மறுப்புக்கு மறுப்பை விட்டு விட்டு தொடர் மீதான விமர்சனத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் கடந்த சில கட்டுரைகளுக்கு நண்பர் இஹ்சாஸ் பதில் எதையும் அளிக்கவில்லை. கைவிட்டுவிடுவதாக அறிவிக்கவும் இல்லை. பதில் கூறுவதிலிருந்து அவர் நழுவிக் கொண்ட பிறகு சாரமற்ற, வெற்றுகளுக்கு விளக்கமளித்து இத்தொடரை நீர்த்துப் போக வைப்பதை விட, இஸ்லாம் குறித்த தொடரின் மீதான விமர்சனங்களை மட்டும் கணக்கில் கொண்டு இத்தொடரை இன்னும் ஆழமாக கொண்டு செல்லலாம் என்று எண்ணியது தான். ஒருவேளை நண்பர் இஹ்சாஸ் மீண்டும் களத்திற்கு வந்து எல்லாவற்றுக்கும் பதிலளிக்க வேண்டும் எனக் கோரினால் அதை பின்னர் பரிசீலிக்கலாம்.
கடல்கள் பற்றிய அந்த கட்டுரையில் குரானின் கூற்றுகளான இரண்டு அம்சங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். 1) கடல்களுக்கு இடையிலான தடை. 2) ஆழ்கடலின் இருள். இந்த இரண்டு அம்சங்களில் நண்பரின் மறுப்பு என்ன? முதல் அம்சத்தில், இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு இல்லையென செங்கொடி மறுக்கவில்லை. மாறாக பண்டைய கடலாடிகளுக்கு தெரிந்திருந்ததை அறைகுறையாக முகம்மது கேட்டு கூறிவிட்டார் என்று நான் கூறியிருப்பதாக அவராகவே முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் அவ்வாறன்றி தெளிவாகவே கடல்களுக்கு இடையே தடுப்பு இருக்கிறது என்பதை மறுத்திருகிறேன். இரு கடல்களுக்கிடையே எல்லை இருக்கிறது என்பதே போர்வையில் வடிகட்டிய முட்டாள் தனமாக இருக்கும் போது, அங்கு தடுப்பு இருக்கிறது என்று எப்படி கூற முடியும்? இரு கடல்களுக்கு இடையே ஒரு தடுப்பு இருக்க முடியும் என்றால் முழுமையாக இரண்டு கடல்களும் தனித்தனியே பிரித்து காட்டப்பட வேண்டும். உலகில் இருக்கும் எந்த இரண்டு கடலையாவது தனித்தனியே பிரித்து அடையாளம் காட்ட முடியுமா? அந்தந்த பகுதிகளை முன்னிட்டு தனித்தனியான பெயர்களில் வழங்கி வருகிறோம். நிலங்களால் பிரிக்கப்படாதவரை தனித்தனியான இரண்டு கடல்கள் என உலகில் எதுவுமில்லை.
இதையே பர்சக் எனும் அரபுச் சொல்லை திணித்து நான் கூறியதை வேறொன்றாக திரித்திருக்கிறார். முட்டுச் சந்தில் மாட்டிக் கொள்ளும் போது மதவாதிகள் செய்யும் வழக்கமான உத்தி தான் இது. குறிப்பிட்ட அந்த 25:53 வசனத்திற்கு ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பு பர்சக் எனும் சொல்லுக்கு வரம்பு என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள். திரை அல்லது தடுப்பு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்கிறார். இந்த வரம்பு என்ற சொல்லைக் கொண்டா கடல்களுக்கு எல்லை இல்லை என கூறுகிறேன். கடல்களுக்கு இடையேயான தடுப்பு என்று தான் நானும் கூறியிருக்கிறேன். ஆனால் குரான் அந்த வசனத்தில் தெளிவாக இரண்டு கடல்கள் என்று தான் கூறியிருக்கிறது. அரபுச் சொல்லுக்கு அருஞ்சொற்பொருள் விளக்க வேண்டுமென்றால், இரண்டு கடல்கள் என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள் ஒரு கடல் என்று தான் மூலத்தில் இருக்கிறது என்று அடித்து விட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி கூற வேண்டுமென்றால் திரை குறித்த வசனங்களே தேவையற்றுப் போய் குரானிலிருந்து நீக்க வேண்டியதிருக்குமே. அதனால் தான் பர்சக்கை பிடித்துக் கொண்டு பல்டியடித்திருக்கிறார்.
கடல்களுக்கிடையே திரையோ தடுப்போ இல்லை என்பதற்கு சில விளக்கங்களையும் அந்த கட்டுரையில் தந்திருந்தேன். கடலடி நீரோட்டங்கள் கண்டங்களைக் கூட கடந்து வெகுதூரம் செல்கின்றன. கடல்கள் கலக்கக் கூடாது என்பதற்குத்தான் தடுப்பு மற்றவற்றுக்கு இல்லை என்று கூறும் நண்பர், நீரோட்டங்கள் கடல் நீரல்ல என்றொரு அரிய அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கலாமே. அருசொற்பொருள் விளக்கமோ, உருட்டி, நழுக்கும் மழுப்பலோ கூட செய்ய முடியாது என்பதால் தான் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டாரோ! ஒரே கடலின் இருவேறு பகுதிகளில் கூட கடல் நீரின் தன்மையில் வித்தியாசங்கள் இருக்கின்றன (எகா தமிழ்நாடு, அந்தமான்) என்பதை எடுத்துக் காட்டியிருந்தேன். அதற்கும் கள்ள மௌனம் தான் பதில். உண்மையிலேயே குரான் அல்லா கொடுத்தது தான் என நண்பர் இஹ்சாஸ் நம்பினால் இதற்கும் பதில் என்ற போரவையில் எதையாவது உளறியிருக்கலாமே. விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டக் கூட முடியாத அளவில் குரானே உளறிவிட்டது என்பதை அறிந்ததால் தான் மௌனமாகி விட்டாரோ!
வெவ்வேறு கடல் பகுதிகளின் தன்மைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை எனும் அனுபவ அறிவை செவியுற்று, கடல்களுக்கு இடையில் திரை அல்லது தடுப்பு இருக்கிறது என்று உருட்டிப் புரட்டி பொய்யை அரங்கேற்றியது. அதற்கு விளக்கமாக ஒருபுறம் உப்பாகவும் மறுபுறம் இனிமையான சுவையாகவும் இருப்பதாக சிறுபிள்ளையும் நகைக்கக்கூடிய வகையில் பிதற்றியிருப்பது. இவை போதாதா குரானும் அல்லாவும் முகம்மதின் உருவாக்கம் தான் என்பதற்கு?
இரண்டாவதாக ஆழ்கடலின் இருள், முகம்மது குரானில் சொல்வதற்கு முன்னால் கடலில் ஆழமாகச் செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து இருள் பரவும் என்பது யாருக்குமே தெரியாததா? ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் கடலுக்குள் செல்ல இயலாது என்றொரு அற்புத ஆழிமுத்தை கண்டெடுத்திருக்கிறார் நண்பர். முத்து எடுத்தவர்கள் எல்லாம் கடலின் மேல் மிதந்து கொண்டே தான் முத்தெடுத்தார்களா? கடலின் மேற்பரப்பில் பயணம் செய்தாலும் கூட அடியாழத்தில் வெளிச்சம் ஊடுருவாது என்பதை அறிந்து கொள்ள முடியும். கடலில் தவறி விழும் ஒரு பொருளை கவனித்தாலே தெரிந்துவிடுமே, முதலில் கண்ணாடி போல் தெளிவாக தெரியும் அந்தப் பொருள் கீழே செல்லச் செல்ல படிப்படியாக மங்கி பார்வையிலிருந்து மறைந்து விடும். அவ்வளவு ஏன், கடலின் மேற்பரப்பிலிருந்து பார்த்தால் வெவ்வேறு ஆழங்களில் நீந்தும் மீன்களின் காட்சித் தோற்றத்தைக் கொண்டே கூறிவிடலாமே கடல் நீரின் ஒளி ஊடுருவும் தன்மையை. இதற்கு மேலதிகமாக அந்த வசனத்தில் என்ன இருகிறது?
அறிவியல் கண்டுபிடிப்பான நிரப்பிரிகையின் ஒளி ஊடுருவும் தன்மைக்கும் அந்த வசனத்துக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் நுணுக்கமாக கேள்வி எழுப்பினால் குரான் ஒன்றும் அறிவியல் நூலல்ல என்று ஜல்லியடிக்கும் நண்பர், அதற்கு முன்னால் நவீன அறிவியலைத்தான் குறிப்பிட்ட வசனங்கள் பேசுகின்றன என்று கூறுவதற்கு அந்த வசனங்களில் தகுதி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டாமா? என்னிடம் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கும் நண்பர் அதற்கு முன்னால் அந்த வசனம் அறிவியலைத்தான் பேசுகிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்திருக்க வேண்டாமா?
மதம் நுழைய நுழைய அறிவு வெளியேறிவிடும் என்று பெரியார் கூறியதற்கான நடப்பு எடுத்துக்காட்டுகள் இது போன்று இஸ்லாத்திற்காக எகிறிக் குதிக்கும் பதிவர்கள் தாம். என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை உள்வாங்குவதில்லை, எப்படி அதை மறுக்க வேண்டும் என திட்டமிடுவதில்லை. இருப்பதெல்லாம் இஸ்லாத்தைக் குறை கூறுவதா எனும் உணர்ச்சிக் கொதிப்பு, மறுக்க வேண்டுமெனும் ஆர்வக் கோளாறு, கொஞ்சம் இரவல் தகவல், நிறைய நம்பிக்கை எல்லாவற்றையும் மொத்தமாக வெட்டிக் கலக்கி தாளித்து இறக்கி விடுவது. உண்டாலல்லவா தெரியும் உணவின் தரம்.
இதுவரை
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௧ செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨ செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩ செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪ செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫ செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12 மின்னூலாக(PDF) தரவிறக்க
அருமையான விளக்கங்கள்.
//கடல்கள் பற்றிய அந்த கட்டுரையில் குரானின் கூற்றுகளான இரண்டு அம்சங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். 1) கடல்களுக்கு இடையிலான தடை. 2) ஆழ்கடலின் இருள். இந்த இரண்டு அம்சங்களில் நண்பரின் மறுப்பு என்ன? முதல் அம்சத்தில், இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு இல்லையென செங்கொடி மறுக்கவில்லை. மாறாக பண்டைய கடலாடிகளுக்கு தெரிந்திருந்ததை அறைகுறையாக முகம்மது கேட்டு கூறிவிட்டார் என்று நான் கூறியிருப்பதாக அவராகவே முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் அவ்வாறன்றி தெளிவாகவே கடல்களுக்கு இடையே தடுப்பு இருக்கிறது என்பதை மறுத்திருகிறேன். இரு கடல்களுக்கிடையே எல்லை இருக்கிறது என்பதே போர்வையில் வடிகட்டிய முட்டாள் தனமாக இருக்கும் போது, அங்கு தடுப்பு இருக்கிறது என்று எப்படி கூற முடியும்? இரு கடல்களுக்கு இடையே ஒரு தடுப்பு இருக்க முடியும் என்றால் முழுமையாக இரண்டு கடல்களும் தனித்தனியே பிரித்து காட்டப்பட வேண்டும். உலகில் இருக்கும் எந்த இரண்டு கடலையாவது தனித்தனியே பிரித்து அடையாளம் காட்ட முடியுமா? அந்தந்த பகுதிகளை முன்னிட்டு தனித்தனியான பெயர்களில் வழங்கி வருகிறோம். நிலங்களால் பிரிக்கப்படாதவரை தனித்தனியான இரண்டு கடல்கள் என உலகில் எதுவுமில்லை.//
//இதையே பர்சக் எனும் அரபுச் சொல்லை திணித்து நான் கூறியதை வேறொன்றாக திரித்திருக்கிறார். முட்டுச் சந்தில் மாட்டிக் கொள்ளும் போது மதவாதிகள் செய்யும் வழக்கமான உத்தி தான் இது. குறிப்பிட்ட அந்த 25:53 வசனத்திற்கு ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பு பர்சக் எனும் சொல்லுக்கு வரம்பு என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள்.//
உண்மைதான்..
இஸ்லாத்திற்கு நெத்தியடி சார் தொடருங்கள்..
சூப்பர் தலைவா..
மதவாதிகளால் இனி ஒரு மயிரையும் புடுங்க முடியாது
//திரை அல்லது தடுப்பு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்கிறார். இந்த வரம்பு என்ற சொல்லைக் கொண்டா கடல்களுக்கு எல்லை இல்லை என கூறுகிறேன். கடல்களுக்கு இடையேயான தடுப்பு என்று தான் நானும் கூறியிருக்கிறேன்.//
சரியாகச்சொன்னீர்கள்..
மதவாதிகள் இதையும் பொய்யின்னு சொல்லுவாங்க பாருங்க.. மதம் என்றாலே என்னைப்பொருத்தவரை கழிவறைதான்
//ஆனால் குரான் அந்த வசனத்தில் தெளிவாக இரண்டு கடல்கள் என்று தான் கூறியிருக்கிறது. அரபுச் சொல்லுக்கு அருஞ்சொற்பொருள் விளக்க வேண்டுமென்றால், இரண்டு கடல்கள் என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள் ஒரு கடல் என்று தான் மூலத்தில் இருக்கிறது என்று அடித்து விட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி கூற வேண்டுமென்றால் திரை குறித்த வசனங்களே தேவையற்றுப் போய் குரானிலிருந்து நீக்க வேண்டியதிருக்குமே//
சூப்பர் சார்…
அண்ணே வாலு,
ஏன் மயிறு கயிறுன்னு பேசிகிட்டு. ஏன் கோபப் பட்றீங்க???? தோத்துகிட்டு இருக்கீங்களா???
இந்த பேச்சை எல்லாம் உங்கள் ஆருயிர் நண்பன் ராஜனுக்கு, அவர் அய்யர் வச்சி கல்யாணம் பண்ணினார்ல, அப்ப அவருக்கு அர்ச்சதை போடைல காட்டி இருக்கணும். ஊருக்கு மட்டும் நாத்திக உபதேசமா????
இல்லே… சொந்தமா எழுதிலாம் பிரபலம் ஆகா முடியாது. இஸ்லாத்த தாக்குனா பிரபலம் ஆகிடலாம்னு எதிர்க்கிறீர்களா???? பார்த்தா அப்படிதான் தெரிகிறது. சொந்த வாழ்க்கைல பின்பற்றாதவன் எல்லாம் அடுத்தாளுக்கு அட்வைஸ் பண்ண கிளம்பிட்டாங்கப்பா. இந்த முகமூடிக தொல்ல தாங்க முடியலப்பா.
சிறப்பான விளக்கங்கள் தோழர்.
@சிராஜ்
என்ன சகோ கோபப்படுரீக
/இஸ்லாத்த தாக்குனா பிரபலம் ஆகிடலாம்னு /
அதை செய்ய பல மார்க்க மேதைகள் உண்டு
பதிவில் சொன்ன விஷயத்தில்
உங்கள் தாவா திற்மை காட்டுங்கள் பார்ப்போம்
குரானில் என்ன சொல்லி இருக்காக?
ஒரு கடலா ,இரண்டா?
இடையில் திரை இருக்கா? இல்லையா?
பி.ஜே விளக்கம் சொல்லி இருக்காரா?
ஜாகிர் நாயக் என்ன சொல்ரார்?
அரபி மூலத்தில் விளக்குவீர்களா?
எதிர் பதிவு போடுவீர்களா!!
Ready 1 ,2 ,3 start
//சொந்த வாழ்க்கைல பின்பற்றாதவன் எல்லாம் அடுத்தாளுக்கு அட்வைஸ் பண்ண கிளம்பிட்டாங்கப்பா//
சரியாக சொன்னீர்கள் சகோ சிராஜ்
இந்த ஹவுரிப் பிரியன்,ஜட்டிஜன்,கரி தோஸ்த் மற்றும் டேஞ்சூர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி
பல தாரமணம் செய்யாதவர்கள் அதனை ஆதரிக்கிறார்கள்.
இங்கே வண்டி ஓட்டும் முஸ்லிமாக்கள்(அவர்கள் வீட்டு முஸ்லிம்கள்) சவுதியில் பெண்கள் ஓட்ட தடையை ஆதரிக்கிறார்கள்.
முஸ்லிம்கள் பெரும்பான்மை இருந்தால் ஷாரியா அனைவருக்கும் என்பவர்கள் சிறு பானமையாய் இருந்தால் மத சார்பற்ற கிரிமினல் சட்டம்+ஸ்பெஸல் சமூக ஷாரியா கேட்கிறார்கள்.
வேறு மதத்த்வன் முஸ்லிமாக மாறினால் வரவேற்பு.முஸ்லிம் வேறு மதத்திற்கு மாறினால் மரண தண்டனை.
சிராஜ் எதிர் பதிவு போடுங்கள்
சகோ NILA ,
/* அரபி மூலத்தில் விளக்குவீர்களா?
எதிர் பதிவு போடுவீர்களா!! */
நமக்கு அரபி தெரியாது சகோ. அதனால அரபி மூலத்தில நம்மால விளக்க முடியாது.
எதிர் பதிவு இப்போதைக்கு சாத்தியம் இல்ல சகோ. எதிர் பதிவுகள் போட ஆரம்பித்தால் எதிர்பதிவுகள் மட்டும் தான் போட முடியும் என்று புரிந்துகொண்டேன். தவிரவும் சில நாட்களாக
சாதா பதிவு கூட போடறது இல்லை. கொஞ்சம் பிஸி. அதனால நமக்குன்னு ஒரு தனி வழி கண்டுபிடிச்சு அதில போக வேண்டியது தான். அப்போதைக்கு அப்போ கமெண்ட் வழியா சந்திக்கலாம், இறை நாடினால்.
ஏங்க NILA ,
/* சரியாக சொன்னீர்கள் சகோ சிராஜ்
இந்த ஹவுரிப் பிரியன்,ஜட்டிஜன்,கரி தோஸ்த் மற்றும் டேஞ்சூர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி */
நான் வால் பையனுக்கு சம்பவத்த சொல்லி, பிறருக்கு சொல்பவர் தன் நண்பர்களுக்கு பின்பற்றாதவர் என்று கூறினால். நீங்கள் பொத்தாம் பொதுவாக, ஆதாரமே இல்லாமல் மேற் சொன்னவர்களை தவறு செய்கிறார்கள் என்று கூறுகிறீர்களே????????
இரண்டாவது, இப்படித்தான் பேர் வைப்பீர்களா???? நல்ல நாத்திகம் போங்கள்.
naan potukiren
சகோ NILA ,
/* சிராஜ் எதிர் பதிவு போடுங்கள் */
பதிவுலகிற்கு கொஞ்சம் புதியவனான நம்மள நல்லா கவனிச்சு இருக்கீங்க. நன்றி.
PJ மற்றும் ஜாகிர் நாயக் தளங்களுக்கு அடிக்கடி சென்றதில்லை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இவர்கள் முக்கியமானவர்கள் என்று நினைக்கிறேன். இனி இவர்கள் சொல்வது என்னவென்றும் கவனிக்கிறேன் சகோ. நன்றி.
சகோ NILA ,
/* வேறு மதத்த்வன் முஸ்லிமாக மாறினால் வரவேற்பு.முஸ்லிம் வேறு மதத்திற்கு மாறினால் மரண தண்டனை. */
இது நமக்கு பொருந்தாது சகோ. ஏனென்றால் கொடுக்கி என்ற இக்பால் செல்வனுடன் நடந்த ஒரு பிரச்சனையில் சர்புதீன் என்ற நண்பர் ஒருவர் இஸ்லாம் பற்றி பட்டும் படாமலும் பேசினார். உடனே கொடுக்கு அவரை இஸ்லாத்தை விட்டு வெளியில் வாங்க என்பதுபோல் பின்னூட்டமிட்டார். அதற்க்கு நான் சர்புதீன் பஹிரங்கமாக தான் இஸ்லாத்தில் இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்றுதான் பின்னூட்டமிட்டேன்.
ஆகவே இது நமக்கு பொருந்தாது சகோ. இஸ்லாத்தை விட்டு போக விரும்பும் அரைகுறை முஸ்லிம்கள், ஒன்று தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது இஸ்லாத்தை விட்டு போய் விட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அல்லாஹ்வும் அவ்வாறு தான் சொல்கிறான்.
“இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை”.
அது சரி உங்களுக்கு இஸ்லாத்தின் மீது கோபமா அல்லது முஸ்லிம்கள் மீதா????
பதிவுலகிற்கு கொஞ்சம் புதியவனான நம்மள நல்லா கவனிச்சு இருக்கீங்க. நன்றி.//
பதிவுல்கில் புதிய பேருக்கா பஞ்சம்.
PJ மற்றும் ஜாகிர் நாயக் தளங்களுக்கு அடிக்கடி சென்றதில்லை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இவர்கள் முக்கியமானவர்கள் என்று நினைக்கிறேன். இனி இவர்கள் சொல்வது என்னவென்றும் கவனிக்கிறேன் .//
இவர்களை முக்கியமற்றவர்கள் என்றால் நண்பர் இப்ராஹிம் கோவித்துக் கொள்வார்.பி.ஜே தெரியாத நீங்க இந்த விளையாட்டில் சேரக் கூடாது.பி.ஜே விவாதத்தின் முடிவு வைத்துதான் குரான் இறை வேதம் என்று முடிவு செய்யப் படும் என்றால் தவுகீத் அண்னணின் மகிமைதான் என்னே!!!!!!.
நல்ல வேளையாக எல்லா விவாதத்திலும் பி.ஜே வெற்றி என்று அறிவித்து விடுவதால் பிரச்சினை இல்லை.விவாதிக்கும் இரண்டு ஆட்களும் முடிந்த பின் அவரவர் வேலை பார்க்க கிளம்பி விடுகிறார்கள்.அண்ணன் சிடி போட்டு கொஞ்சம் பைசா பாக்கிறார்.அதையாவது கேட்டு மகிழுங்கள் சிராஜ்.
இம்முறை பி.ஜே வெற்றி என்றால் அந்த கிறித்தவ போதகர் இஸ்லாமுக்கு மாறினால் மட்டுமே என்று முடிவு செய்தால் நல்மாக இருக்கும்.
அங்கே மேடையிலேயே வைத்து வலுக்கட்டாயமாக் சுன்னத் செய்து மாற்றி விட வேண்டும்.
நடக்குமா? எதற்கும் தாவா மேதை இ.சா விடம் சொல்லி து ஆ செய்ய சொல்ல ஏண்டும்.
//சர்புதீன் என்ற நண்பர் ஒருவர் இஸ்லாம் பற்றி பட்டும் படாமலும் பேசினார்.//
எந்த மதத்திலும் 99% பேர்ர் இப்படித்தான் இருப்பார்கள். மீதம் 1% மதம் மூலம் பிழைப்பு நடத்துபவர்கள்.
//அதற்க்கு நான் சர்புதீன் பஹிரங்கமாக தான் இஸ்லாத்தில் இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்றுதான் பின்னூட்டமிட்டேன்//
எந்த மதத்திலும் இப்படி சொல்ல மாட்டார்கள்.ஒருவரை மதத்தில் இல்லை என்று கூற சொல்லும் அளவிற்கு உங்களுக்கு உரிமை யார் கொடுத்தது?.பிற மதத்தவர் அதிகம் வாழவதால் இப்படி சொல்வதோடு முடிகிறது.இதுவே மத ஆட்சி நாடு என்றால் அதோகதி!!!!!!!!!!!.
யாரும் அவருக்கு பிடித்த மதத்தை ,பிடித்த வகையில் பிறருக்கு இடையூறு இல்லாமல் பின்பற்றலாம்.பின்பற்றாமல் இருக்கவும் உரிமை உண்டு.ஆனால் அதனை பிறர் சொல்லக் கூடாது!!!!!!!!!!!!!!!
இதனை முன்னெடுப்பவர்கள் நாகரிகம் அற்றவர்களாகவே கருதப் படுவர்.
சில அமைப்பினரின் இப்படித்தான் மதம் பின்பற்ற வேண்டும் என்பது சவுதி அரசின் விள்மபர பிரச்சாரம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
பாகிஸ்தானில் அகமதியாக்கள் முஸ்லிம்கள் அல்ல என்று ஒரு சட்டம்.ஒரு வேளை அங்கே அகமதியாக்கள் அதிகம் இருந்து சுன்னி பிரிவினர் முஸ்லிம்கள் அல்ல என்று சட்டம் போட்டால் என்ன செய்வீர்கள்?
உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து கொண்டவர் முஸ்லிம் அல்ல என்று இதையும் ஒரு (பிடி)வாதம்னு பெருமையாக பேசும் உங்களை நைஜீரியா போகோ ஹாரமிற்கு ஆலோசராக அனுப்ப பரிந்துரை செய்கிறேன்!!!!!!!!!!
******************************************************
நண்பர் நிலா,
வேறொரு தளத்தின் பின்னூட்டங்களை இங்கு பதிவு செய்ய வேண்டாம்
In today scientiific methods are followed from Quran so sea one or two this is not matter In Quran what mentioned is correct.
செங்கொடி ///இருப்பதெல்லாம் இஸ்லாத்தைக் குறை கூறுவதா எனும் உணர்ச்சிக் கொதிப்பு, மறுக்க வேண்டுமெனும் ஆர்வக் கோளாறு, கொஞ்சம் இரவல் தகவல், நிறைய நம்பிக்கை எல்லாவற்றையும் மொத்தமாக வெட்டிக் கலக்கி தாளித்து இறக்கி விடுவது. உண்டாலல்லவா தெரியும் உணவின் தரம்.////
உண்டல்லவா சொல்லுகிறோம் உணவின் தரத்தை !
உண்டாலல்லவா உங்களுக்கு தெரியும் உணவின் தரம் !!
நீங்க சீரியசாத்தான் பேசுறீங்களா NILA ?
/* உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து கொண்டவர் முஸ்லிம் அல்ல என்று இதையும் ஒரு (பிடி)வாதம்னு பெருமையாக பேசும் உங்களை நைஜீரியா போகோ ஹாரமிற்கு ஆலோசராக அனுப்ப பரிந்துரை செய்கிறேன்!!!!!!!!!! */
நீங்கள் என்ன சொன்னீர்கள்? இஸ்லாத்தை விட்டு போனால் மரண தண்டனை தருவார்கள் என்று. அவ்வாறு அல்ல என்பதற்கு என்னையே உதாரணமாக கூறினேன். எங்கயோ வேறொரு நாட்டில் நடந்த சம்பவங்களை கொண்டு இந்த குற்றச்சாட்டை கூறிய நீங்கள், தமிழ்நாட்டில் இருக்கும் என்னை பார்த்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள் என்பதற்காக சொன்னேன். இதிலும் வார்த்தை விளையாட்டா????
ஒருவன் இஸ்லாத்தில் இருக்கிறானா இல்லையா என்பதை அந்த இறைவன் ஒருவன் தான் அறிவான், அது அவனுக்கு மட்டுமே உள்ள உரிமை என்பது எனக்கும் நன்றாகவே தெரியும்.
மற்றபடி PJ பற்றி நீங்கள் கூறியதிலிருந்து அவரின் மீது உங்களின் கோபம் தெரிகிறது. PJ மீதான மதிப்பு எனக்கு உயர்ந்துள்ளது. அவர் உங்கள் போன்றவர்களுக்கு எந்த அளவு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பதை என்னால் துல்லியமாக உணர முடிகிறது. நன்றி.
மதமல்ல மார்க்க சகோ எஸ். இப்ராஹிம்.
அப்படிபோடுங்கள்.
ஆனா ஒரு பிரச்னை,
வலிப்பு வந்தாலல்லவா தெரியும் குரானின் மகிமை என்று சொல்லிவிடாதீர்கள். வலிப்பு வந்தவர்கள் எல்லோரும் தனி மதத்தை உருவாக்கி தொலைத்துவிடுகிறார்கள்.
//வேறொரு தளத்தின் பின்னூட்டங்களை இங்கு பதிவு செய்ய வேண்டாம்//
நண்பர் செங்கொடி
எதை குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை.பதிவுக்கு தேவையற்றது எனில் என் பின்னூட்டத்தில் பகுதியையோ,முழுதுமோ நீக்கி விடுங்கள்.எனினும் கொஞ்சம் கவனமாக்வே இருப்பேன்.
*****************
வாங்க இபராஹிம் நம் கடல்(வாழைப்பழம்?) விளையாட்டை ஆரம்பிக்க்லாம்
மொத்தம் இப்பதிவில் குறிப்பிட்ட விவரத்தில் மொத்தம் எத்தனை கடல் இருக்கு ஒன்ற இரண்டா?
திரையை வைத்துதான் இரண்டாக பிரிக்கணும்.ஆகவே
திரை இல்லாமல் ஒரே கடல்தான் இருக்கு.அந்த இன்னொன்று எங்கே?
இந்த பதிவிற்கு நான் கமெண்டே இப்ப தான் போடுறேன், அதுக்கு முன்னால என் பெயருல கமெண்டு போட்டது யாருப்பா?
@நண்பர் சிராஜ்
இஸ்லாம என்பது தமிழ் நாட்டில் மட்டும் இருந்து நீங்கள் கூறியபடி இருக்கிறது என்ற உங்களின் கூற்றுகளை நம்பத்தான் ஆசை ஆனால் என்ன செய்வது?பல இஸ்லாமிய நாடுகளில் இச்சட்டம் அமலில் உள்ளது பெரிய தவுகீத் அண்ணன் ஜாகிர் நாயக் இதை நியாயப் படுத்தி பேசியதை மறந்து இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.வேண்டுமெனில் காணொளி தரவா?நமக்கு பிடித்தது இஸ்லாமிய மத அறிவியல் என்ற காமெடிகளே
*************
பதிவில் குறிப்பிட்ட விவரத்தை பற்றி பேசுவோம்
சரி நீங்களுக்கு வாழைப்பழ காமெடியின் இஸ்லாமிய பதிப்பு கடல் விளையாட்டு ஆடுவோம்.இதில் பழுத்த அனுபவஸ்தர் சகோ இப்ராஹிமோடு சேர்ந்து கொள்ள அன்போடு ஆலோசனை கூறுகிறோம்.
மொத்தம் இப்பதிவில் குறிப்பிட்ட விவரத்தில் மொத்தம் எத்தனை கடல் இருக்கு ஒன்ற இரண்டா?
திரையை வைத்துதான் இரண்டாக பிரிக்கணும்.ஆகவே
திரை இல்லாமல் ஒரே கடல்தான் இருக்கு.அந்த இன்னொரு கடல் எங்கே?
மேலே என் பெயரில் பின்னூட்டம் போட்டிருப்பவர் என் அப்பனுக்கு பிறந்தவர் அல்ல, எனக்கும் யார் என்றே தெரியாது, வேறு யாராகவோ இருக்கக் கூடும்.
உண்டல்லவா தெரியும் உணவின் தரம் .உண்டாலல்லவா உண்டு அள்ளவா என்று பிறரையும் அழைக்க தோணும் .அதே சமயத்தில் ,சாக்கடை பற்றி அறிய அதில் உருண்டு புரள வேண்டியதில்லை.,இ.சா வைப் பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும்
NILA இஹ்சாஸ் அவர்களின் பல கேள்விகளுக்கு செங்கொடியிடம் பதில் இல்லை. அதை நீங்கள் அறிவீர்களா? அறிந்தால் அதற்கு விளக்கம் தாருங்கள் .
///சரி நீங்களுக்கு வாழைப்பழ காமெடியின் இஸ்லாமிய பதிப்பு கடல் விளையாட்டு ஆடுவோம்.இதில் பழுத்த அனுபவஸ்தர் சகோ இப்ராஹிமோடு சேர்ந்து கொள்ள அன்போடு ஆலோசனை கூறுகிறோம்.///
நீங்கள் செந்திலாகவோ கவுண்டமணியாகவோ இருக்கலாம் , ஆனால் நான் அவர்கள் இருவரும் அல்ல,நீங்கள் கவுண்டமணி என்றால் செங்கொடியை செந்திலாக வைத்து விளையாடுங்கள் .ஏனெனில் நாங்கள் வாழையை பயிர் செய்பவர்கள்.,வாழப் பழத்தை விற்பவர்கள்.
NILA உங்கள் குடும்பத்திற்கும் எனது குடும்பத்திற்கும் திருமண உறவைத் தடுக்கும் ஒரு திரை உள்ளது.அதே சமயத்தில் உங்கள் குடும்பமும் எனது குடும்பமும் நட்பு பாராட்ட எவ்வித திரையும் இல்லை.கடல் நீரின் தன்மையை தடுக்க திரை உண்டு .ஆனால் மீன்கள் நீந்த தடுப்பு இல்லை.இதைத்தான் குர்ஆன் கூறுகிறது .
கோவி.கண்ணன் , கோபிக்காதே கண்ணா ,உங்கள் பெயரை தனக்கிட ஒருவர் ஆசை கொண்டுள்ளார்,போலும் .
@ibrahim
//கடல் நீரின் தன்மையை தடுக்க திரை உண்டு //
அந்த திரை எங்கே?,கண்ணுக்கு தெரியுமா?
NILA ///உங்கள் குடும்பத்திற்கும் எனது குடும்பத்திற்கும் திருமண உறவைத் தடுக்கும் ஒரு திரை உள்ளது///
இந்த திரை கண்ணுக்கு தெரியுமா?
மேலும் கீழ் காணும் லிங்கையும் படித்துக் கொள்ளுங்கள்
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/305/
//உலகில் இருக்கும் எந்த இரண்டு கடலையாவது தனித்தனியே பிரித்து அடையாளம் காட்ட முடியுமா? ///
இரு வேறு கருத்துக்களை சொல்லுபவர்களை இரட்டை நாக்குகாரர்கள் என்றால் இரண்டு நாக்குகளை காட்ட சொல்வீர்களா?
வால் பையன், on ஜனவரி23, 2012 at 7:37 AM said:
// மதவாதிகளால் இனி ஒரு மயிரையும் புடுங்க முடியாது //
வால் எங்கே வந்தாலும் மயிறு, மயிறு சொல்லிட்டே இருக்காரே
ஒருவேளை இவரு அம்முட்டனா என்று நினைத்துக்கொண்டே கீழே வரும்போது ,
கோவி கண்ணன்., on ஜனவரி23, 2012 at 8:05 AM said:
மதவாதிகள் இதையும் பொய்யின்னு சொல்லுவாங்க பாருங்க.. மதம் என்றாலே என்னைப்பொருத்தவரை கழிவறைதான் //
அட இன்னாடா இது !! வாலு போலவே கோவியாரும் எங்கே போனாலும் கழிவறையை உடவே உடமாட்டேன்கிறாரு….நேதெகி கூட சுவனப்பிரியன் தளத்துல ” இரண்டு ஆட்டு ஆட்டினால் ” னு கழிவறையை பத்தி அதாவது டோய்லெட் மன்னர்ஸ் பத்தி அழகா சொல்லிருக்கிறார் …ஏன் சாமி!! நா தெரியாமதா கேக்குறேன், கழிவறையை மறக்கவே மாட்டிங்கபோல, உங்க ஸ்டைலுலே சொல்லனும்னா,” ஒருவேளை அவர் அங்கே வேலை செய்பவராக இருக்ககூடும் ”
—
http://designimmaculate.co.uk/wordpress_01/?page_id=143
இபுறாகிம் இறை மார்க்கத்தில் பிழை இருக்காது என்று நம்பு. தவறு இருந்தால் அது இறைவன் சொல்லியிருப்பானா என்று சந்தேகி உன்னையூம் திருத்தும் நம் மார்க்கத்தையூம் திருத்தும் .நாஸ்தீகம்; பேசுபவனால் மாh;க்கம் தவறுகளைக் களைய சந்ர்;ப்பம் உண்டு எல்லாத் தவறான குப்பைகளையூம் சரியா பிழையா என ஆராயாமல் உன்போல் சப்பை விளக்கம் கொடுக்க ஆசைப்பட்டால் அது அந்த இடத்திலேயே கிடந்து அழுகும். நான் நபிகள் கைதிகளைக் கற்பழிப்பது எப்படி என்று கொடுத்திருக்கும் விளக்கம் போன்றவற்றை நம்ப விரும்பவில்லை அது சரி என்றும் வாதிடுவது அவா;தான் சொன்னாh; என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துவிடும். அப்படியான விடயத்தை சரிப்படுத்தினால் நபி சரியில்லாமல் போய்விடுவர்;. கடல் திரை விளக்கத்தை உதுமான் எழுதியதாக நம்புவது இறைவனைப் பாதுகாக்கும். ஏன் உன்னைமாதிரி ஒரு இபுறாகிம்கள் குரானைத் தொகுத்திருப்பார்களோ என்று நான் சந்தேகிப்பது எனது இறை நம்பிக்கையை பாதுகாக்கும்.இறைவனை நம்பு இபுறாகிம்
nasraf////எல்லாத் தவறான குப்பைகளையூம் சரியா பிழையா என ஆராயாமல் உன்போல் சப்பை விளக்கம் கொடுக்க ஆசைப்பட்டால் அது அந்த இடத்திலேயே கிடந்து அழுகும். ////
சமுதாய குப்பைகளே எதுப்பா சப்பை விளக்கம் ?
இந்த பதிவிற்கான மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க:
http://www.mohamedihsas.blogspot.com/2012/04/blog-post.html
இப்பதிவிற்கான மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க
http://www.mohamedihsas.blogspot.com/2012/07/blog-post.html
இதற்கு முன் பதியப்பட்டது முந்தைய தெடருக்குரியது. தவறுதலாக இங்கு பதியப்பட்டுவிட்டது.