கடையநல்லூர் பிரச்சனை குறித்த விவாதம்: அனைத்து முஸ்லீம்களுக்குமான அழைப்பு

 

கடந்த ஒரு மாதமாக செங்கொடி, நல்லூர் முழக்கம் ஆகிய இரண்டு தளங்களும் பொதுப் பார்வைக்கு தடுக்கப்பட்டிருந்தன. இதை முன்னிட்டு பலர் தங்கள் அதிர்ச்சியையும், கடவச்சொல் கோரிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் நான் யாருக்கும் பதிலோ, அவை குறித்த தகவலோ அளிக்கவில்லை. காரணம் மீண்டும் இயங்கச் செய்யும் போது தடுத்திருந்ததற்கான காரணத்தை விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என எண்ணியதால் தான். எனவே, முடக்கத்திற்கு பிறகான முதல் இடுகையாக இந்த விவாதம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கேள்வியை எடுத்துக் கொண்டு விரிவாக அலசவும், அதனை விவாதத்திற்கு ஏதுவான களமாக மாற்றுவதுமே எண்ணம்.

 கடையநல்லூரில் நடந்தவை குறித்து விரிவாக அறிய கீழ்காணும் கட்டுரையை படியுங்கள்.

கடையநல்லூரில் இஸ்லாமிய மதவாதிகளின் வெறியாட்டம்.

 

இதை யாரோ சிலரின் மதவெறி பிடித்த காட்டுமிராண்டிகளின் செயலாக கடந்து போக முடியுமா? முடியாது. கூடாது. ஏனென்றால் கடந்த 1400 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நாடுகளிலும், பல நூறு மனிதர்களுக்கு நடந்து வந்திருக்கும் கொடுமையின், கொடூரத்தின் தொடர்ச்சி. ஒரு சங்கிலியின் தொடர்ச்சியில் ஒரு கண்ணியை மட்டும் பிரித்துப் பார்க்க முடியுமா? ஆகவே, கடையநல்லூர் எனும் ஓர் ஊரில் தோழர் துராப்ஷா எனும் தனி ஒருவருக்கு நடந்த அநீதியாக மட்டும் இதை குறுக்கிப் பார்க்க முடியாது.

 

அற்றை நாட்களில் கொலை செய்யப்பட்ட அபூ அபக், அஸ்மா பின் மர்வான் தொடங்கி பல்வேறு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளான அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி வரை; மைலாஞ்சி கவிதைத் தொகுப்பில் ”ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி” என்று கவிதை எழுதியதற்காக ஆண்டுகள் பல கடந்தும், ஊர் விலக்கம் செய்தது தவறு என்று நீதி மன்ற தீர்ப்பு வந்த பின்னும், இன்னும் விலக்கி வைக்கப் பட்டிருக்கும் தக்கலை கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் தொடங்கி, தோழர்கள் அலாவுதீன், துராப்ஷா வரை நெடிய வரலாறாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த அநீதியை தடுத்து நிறுத்தியாக வேண்டும். தடுப்பதோடு மட்டுமன்றி சுதந்திரமான விமர்சனப் போக்கை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் சமூகத்தின் மீது அக்கரை கொண்டிருக்கும் அனைவர் மீதும் கடமையாகிறது. அந்த கடப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த விவாதம் முன்னெடுக்கப்படுகிறதேயன்றி, பாதிக்கப்பட்டவன் எனும் அடிப்படையில் அல்ல.

 

 

ஆம். இந்த பிரச்சனையில் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கடந்த ஜனவரி 27ம் தேதி தோழர் துராப்ஷாவுக்கு எதிராக மசூதியில் பொருளாதாரத் தடை(!) பிறப்பிக்கப்பட்டதாக அறிந்த அந்த கணத்திலிருந்தே, அது சௌதியிலிருந்த என்னை தீண்டும் அளவுக்கு நீளக் கூடும் என்பதை உணர்ந்திருந்தேன். ஊரிலிருந்தும் என்மீது கரிசனம் கொண்டவர்கள் (கவனிக்கவும்: என் கருத்துகள் மீதல்ல) அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் எனக்கு தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள். அதேநேரம் இங்கு (சௌதியில்) இருக்கும் குழுக்களின் அசைவையும் நண்பர்கள் உதவியுடன் நான் கண்காணித்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில், செங்கொடி தளத்தின் கட்டுரைகளை மொழிபெயர்த்து முத்தவா (கலாச்சார காவலர்கள்) மூலம் நடவடிக்கை எடுக்குமாறு ஊரிலிருந்து அவர்களுக்கு தகவல் வந்தது. இதன் பின்னர் தான் நான் தோழர்களின் ஆலோசனையின் பேரில் தளத்தை பொதுப்பார்வைக்கு தடுத்தேன். இது குறித்து என்ன முடிவெடுப்பது என்பதை ஆலோசிக்க ஒரு கூட்டத்தையும் அவர்கள் கூட்டினார்கள்.  ஆனால் அந்தக் கூட்டத்தில்,“எடுத்தவுன் நேரடியாக முத்தவாவிடம் செல்ல வேண்டாம். ஊர் திரும்புமாறு அவருக்கு(எனக்கு) நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவோம், அவர் ஊர் செல்வதை தவிர்க்க முனைந்தால் பின்னர் முத்தவா மூலம் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்” என்று முடிவெடுத்திருந்தார்கள்.

 

 

எனக்கு வியப்பாக இருந்தது, எந்த அடிப்படையில் இப்படியான தாராள முடிவை எடுத்தார்கள்? என்று. மட்டுமல்லாது எனக்கு தகவல் தந்தவர்களும், வேறு ஏதோ திட்டமிருக்கிறது ஆனால் அதை அறிய முடியவில்லை என்றார்கள். என்றால் அவர்களின் இந்த முடிவின் பின்னணி என்னவாக இருக்க முடியும் என்பதை அறிய முயன்றேன். எனக்கு மூன்று காரணங்கள் தோன்றியது.

 

1)     நேரடியாக அவர்கள் முத்தவாவிடம் புகார் அளித்தால் அத்துடன் இந்தப் பிரச்சனையில் அவர்களின் பங்கு முடிந்துவிடும். அதன் பிறகு அது எனக்கும் சௌதி அரசின் முத்தவாக்களுக்கும் இடையிலான பிரச்சனை ஆகிவிடும். பின்னர் இந்த விசயத்தில் அவர்கள் தலையிடவோ வழிநடத்தவோ முடியாது.

 

2)     ஒருவேளை, முத்தவா அமைப்பு எனக்கு தலைவெட்டோ அல்லது பாரதூரமான வேறு தண்டனைகளோ வழங்கினால் அது ஊரில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிராக திரும்பக் கூடும்.

 

3)     நேரடியாக முத்தவாவிடம் புகார் கொடுக்காமல் அவர்களாகவே என்னைப் பிடித்து (ஊரில் தோழர் துராப்ஷாவுக்கு நடத்தியது போல்) தாக்குதல் தொடுத்து பின்னர் ஊருக்கு அனுப்பிவைத்தால் அதைக் கொண்டு ஊரிலும் இஸ்லாத்தை காத்து விட்டதாய் பிரச்சாரம் செய்து கொள்ள முடியும்.

 

இதைத்தவிர அவர்களின் முடிவுக்கு வேறு காரணம் இருக்க முடியுமா?

 

 

இதனிடையே மேற்கண்ட குழுவல்லாத வேறு சில குழுக்கள் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை அறிவதற்கு முயற்சிகள் எடுப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இந்த இடத்தில், நான் யார்? எப்படி இருப்பேன்? என்பது யாருக்கும் தெரியாது என்பதே எனக்கு உதவியாக இருந்தது. அவர்களை திசை திருப்புவதற்காக நான் தம்மாம் தப்பிச் சென்று விட்டதாகவும், ஜித்தாவில் ஒழிந்து கொண்டிருப்பதாகவும் நானே வதந்திகளை கட்டிப் பரப்பினேன். நான் எந்த நிறுவனத்தில் பணி புரிகிறேன் என்பது, வேறு நிறுவனமாக தவறான தகவல் வெளியில் பரவியது. அதை அப்படியே தக்கவைப்பதற்கும் நான் ஆவன செய்தேன். மட்டுமல்லாது, நான் பணிபுரியும் நிறுவனத்தில் இந்திய தமிழர்கள் யாருமே இல்லாததால் அதுவும் என்னை வெளிப்படுத்தாமல் பாதுகாத்தது. வெளிப்படுத்தும் வாய்ப்பிருப்பவர்களையும் நான் கடுமையாக எச்சரித்திருந்தேன். ஆக மொத்தம், வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருப்பதாகவே நான் கருதிக் கொண்டிருந்தேன், தலைமை அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வரும் வரை.

 

மூன்று இந்தியர்கள் ஒரு சௌதி உட்பட நால்வர் தலைமை அலுவலகத்திற்கு சென்று மிரட்டியிருக்கிறார்கள். 15 நாட்களுக்குள் அவரை(என்னை) ஊருக்கு அனுப்ப வேண்டும், அல்லாத பட்சத்தில் நாங்கள் முத்தவாவிடம் செல்வோம். சென்றால் அவருக்கு மட்டுமல்ல உங்கள் நிறுவனத்திற்கும் பிரச்சனை என்பதாக இருந்திருக்கிறது அவர்களின் மிரட்டல். வேறு ஏதாவது பிரச்சனை என்றால், என்ன தவறு எங்கு தவறு என்று ஆலோசிப்பார்கள். இஸ்லாத்திற்கு எதிராக என்றால் ஆலோசனைக்கோ, ஆய்வுக்கோ இடமேது? என்னுடைய விளக்கங்கள் எதுவும் பலனளிக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், என்னுடைய விளக்கங்களைக் கேட்பதற்கு முன்னமே நிர்வாகம் முடிவு செய்துவிட்டது. ஒரு மணி நேரம் கூட எனக்கு அவகாசம் தரவில்லை.

 

 

இவைகளெல்லாம் ஏன்? எதிர் கருத்து எழுந்தால் அதை எதிர்கொண்டு அவர்களின் பார்வையைக் கூறலாம். மாறாக, பொருளாதா இழப்பை ஏற்படுத்த முயல்வதும், சமூக உறவுகளிடமிருந்து தனிமைப்படுத்த முயல்வதும், வாய்ப்பு கிடைத்தால் தாக்கி அழித்து எதிர்கருத்து கொண்டிருப்பவரை கொன்றழிப்பதன் மூலம் எதிர்க்கருத்துகளை இல்லாமல் செய்வதும் என்ன மாதிரியான வழிமுறைகள்? மெய்யாகவே ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கும், அதையே நம்பி மத போதை ஏறிக் கிடப்பவர்களுக்கும் இடையேயான வித்தியாசம் இது தான். ஏற்பது என்றால் அதில் பரிசீலனை வேண்டும், விமர்சனங்களை அனுமதிக்கும் போக்கு வேண்டும். அதுவே பரிசீலனையற்ற வெற்று நம்பிக்கை என்றால் விமர்சனங்களுக்கு எதிராக இயலாமையும் கோபமுமே பிறக்கும். இந்த கோபம் தான் அன்றிலிருந்து இன்றுவரை கனன்று கொண்டிருக்கிறது, பலரை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. முறையற்ற இந்த நெருப்பை அணைக்கும் தேவை தான் இங்கு முன்னெழுந்து நிற்கிறது.

 

 

பொதுவாக மதங்கள் அனைத்துமே அதன் உள்ளடக்கத்தில் தன்னைப் பின்பற்றும் மக்களை யதார்த்த நிலமைகளை அறியவிடாமல் அடக்கி ஒடுக்குகின்றன. அந்த வகையில் மதங்கள் அனைத்துமே புரட்சிக்கு எதிர்வினையாற்றுபவைகளே. வர்க்க அடிப்படையில் மக்கள் ஒன்றிணைவதற்கு மதங்கள் தடைக்கல்லாகவே நிற்கின்றன. இந்த புள்ளியிலிருந்து தான் கம்யூனிஸ்டுகள் மதங்களை எதிர் கொள்கிறார்கள். இதில் இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் விலக்கு இருக்க முடியுமா? அதேநேரம் இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது ஓர் ஒடுக்கப்படும் மதம். இந்துத்துவ பாசிசங்கள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஏனைய மதங்களை தமக்கிசைவாக்க கொடுக்கும் நெருக்கடிகளின் எதிர்விளைவு தான் உருத்திரிந்து மதவெறியாக உருவெடுக்கிறது. அந்த வகையில் இந்து பாசிசங்களின் அடக்குமுறைகளிருந்து ஏனைய மதங்களின் பாதிப்புகளை தடுக்கும் தேவையும் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கிறது. இதன் பொருள் மதங்களுக்கு வால் பிடிப்பது என்பதல்ல. மாறாக, ஒடுக்கப்படும் மக்கள் எனும் அடிப்படையில் அவர்களை வர்க்கமாக ஒன்றிணைக்கும் தேவை இருக்கிறது என்பதே. நான் இஸ்லாத்தை விமர்சித்து கட்டுரைகள் எழுதுவதும், இந்து மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பிடாததும் இந்த அடிப்படையை முன்வைத்துத்தான்.

 

 

ஆனால் இஸ்லாமிய மதவாதிகளுக்கு அடிப்படைகளோ, கொள்கைகளோ அதை விமர்சனம், சுயவிமர்சனத்தின் ஊடாக பற்றியிருக்கும் உறுதியோ எந்த விதத்திலும், எந்த விகிதத்திலும் அவசியமில்லை. அவர்கள் பார்வையெல்லாம் தான் நம்பிக் கொண்டிருக்கும் ஒன்றை இவன் எதிர்க்கிறான் என்பதுதான். அதைத்தவிர வேறொன்றுமில்லை.

 

 

இந்த விவாதம் அனைத்து முஸ்லீம்களையும் உள்ளடக்கியே நடத்தப்படுகிறது. எனவே இது இணையம் பாவிக்கும் அனைத்து தமிழ் முஸ்லீம்களுக்குமான அழைப்பு. பிரபல பிஜே தொடங்கி தமுமுக, இதஜ உள்ளிட்ட அனைத்து இணைய இஸ்லாமிய பிரசங்கிகள் முதல் இஸ்லாமிய பதிவர்கள், இணையம் பாவிப்பவர்கள், இணையப்பரப்பில் பின்னூட்டமாக தங்கள் கருத்துகளைப் பதிவிடுபவர்கள் என சகலரையும் உள்ளடக்கியே இந்த விவாதம் நடத்தப்படவிருக்கிறது. இந்த விவாதத்தில் பங்கெடுத்து இந்த பிரச்சனை குறித்த தங்கள் கருத்துகளை பதிவிடுவது அவரவர்களின் சொந்த விருப்பத்தைச் சார்ந்தது. என்றாலும், குறிப்பாக முஸ்லீம்கள்,  கடையநல்லூரில் இணைய தளம் நடத்துபவர்கள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இணையத் தொடர்பில் இருக்கும் கடையநல்லூர் வாசிகள் தங்கள் கருத்துகளை இதில் பதிவிட்டே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் நடந்திருப்பது இஸ்லாத்தை முன்னிட்டு, இஸ்லாமியர்களால், இஸ்லாத்திற்காக நடத்தப்பட்டிருக்கிறது. இதில் கருத்து சொல்லும் அவசியம் எனக்கில்லை என்று யாரும் ஒதுங்க முடியாது. இதில் இரண்டே நிலைப்பாடு மட்டுமே இருக்க முடியும். ஒன்று, நிகழ்ந்த அந்த காட்டுமிராண்டித்தனத்தை ஆதரிக்க வேண்டும். இரண்டு, நிகழ்ந்த அந்த காட்டுமிராண்டித்தனத்தை எதிர்க்க வேண்டும். இது தவிர்த்த மூன்றாவது நிலை என்றோ நடுநிலைமை என்றோ எதுவும் இருக்க முடியாது. இத்தனையையும் மீறி தங்கள் கருத்துகளை இங்கு பதிவு செய்வதிலிருந்து இஸ்லாமியர்கள் நழுவினால் தங்கள் மதம் காண்டுமிராண்டித்தனமானது என்பதையும், தாங்கள் இன்னும் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மீளவில்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள் என்பதே பொருள்.

 

 

ஆதரிப்பவர்கள் அது எந்த அடிப்படையில் சரியானது என்பதை பதிவு செய்யுங்கள். அப்படி பதிவு செய்யப்படும் ஒவ்வொரு காரணத்திற்கும் தகுந்த பதிலளிக்கும் கடமையுடன் நான் ஆயத்தமாக இருக்கிறேன். என்னிடம் தவறிருப்பதாக தகுந்த தரவுகளுடன் சுட்டிக்காட்டப்பட்டால் எந்தவித தயக்கமோ அசூயையோ இன்றி சுய விமர்சனம் செய்து கொள்வதற்கும் ஆயத்தமாக இருக்கிறேன். எதிர்ப்பவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். அவர்கள் நம்பிக் கொண்டிருப்பது போல் உலகமும் யதார்த்தமும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

 

வாருங்கள், உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நானும் தொடர்கிறேன்.

 

 

ஓரிடத்தில் மட்டுமே ஒரு மனிதன் பிறக்கிறான்.

ஆனால் பலதடவை பல தருணங்களில்

எங்கெங்கோ அவன் இறந்து விடுகிறான்.

நாடு கடத்தப்படும் போது,

சிறைக் கொட்டடிகளில் வதைபடும்போது,

தாய் நாடு ஆக்கிரமிப்புக்கும்

ஒடுக்குமுறைக்கு ஆளாகும்

பயங்கரங்களை எதிர்கொள்ளும் போது

கவிதை இயற்கையின் பதிலையும்

அற்புத வீரியங்களையும் கற்றுத் தருகிறது.

நம்மிடமிருந்தே மறுபடியும் மறுபடியும் நாம்

எப்படி பிறப்பதென்பதை சொல்லித்தருகிறது.

சொற்களின் மூலம் ஒரு உன்னத உலகத்தை

மாற்று பிரபஞ்சத்தைப் படைக்கிறது.

சரியான வாழ்வின் தேடலுக்காய்

நிரந்தரமாய் அதில் கையெழுத்திடுகிறது.

 

 – பலஸ்தீன கவிஞன் மஹ்மூத் தர்வேஷ் 

158 thoughts on “கடையநல்லூர் பிரச்சனை குறித்த விவாதம்: அனைத்து முஸ்லீம்களுக்குமான அழைப்பு

 1. தைரியம் இருந்தா நேர்ல வாடா பயந்தாங்கொள்ளிப் பயலே

 2. ஸலாம் நண்பர் செங்கொடி
  பணி நிமித்தமாக சவூதி யில் வாழும் நீங்கள் பணி ஒப்பந்தங்களின் அடிப்படையில் அங்கு வாழும் மக்களின் கலாச்சாரத்தையோ அல்லது மத நம்பிக்கைகளையோ விமர்சிக்க மாட்டேன் இன்னும் சவூதி அரசியல் விசயங்களில் ஈடுபடமாட்டேன் என ஒப்புக்கொண்டு வேலை செய்ய சென்ற நீங்கள் அதை மீறியிருந்தால் நியாமாக அந்நாட்டு சட்டதிட்டங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து குற்றவாளி என்றால் தண்டனை அடைந்தே ஆகவேண்டும்

 3. வாருங்கள் நண்பரே, தங்களை இணையத்தில் மீண்டும் பார்ப்பதற்கு மிகவும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைகிறேன்
  //மெய்யாகவே ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கும், அதையே நம்பி மத போதை ஏறிக் கிடப்பவர்களுக்கும் இடையேயான வித்தியாசம் இது தான். ஏற்பது என்றால் அதில் பரிசீலனை வேண்டும், விமர்சனங்களை அனுமதிக்கும் போக்கு வேண்டும். அதுவே பரிசீலனையற்ற வெற்று நம்பிக்கை என்றால் விமர்சனங்களுக்கு எதிராக இயலாமையும் கோபமுமே பிறக்கும்//

  சரியான வார்த்தைகள்.
  அதை நிரூபிப்பதற்கு முதல் பின்னூட்டமான ‘கடையநல்லூர்காரன்’ பின்னுட்டமே சாட்சி

 4. உங்க ப்ளாக்களை திறந்திருப்பதால் நீங்கள் சென்னை வந்ததாக அறியமுடிகிறது. ஊர் சென்று உங்கள் தரப்பு நியாயங்களை (அப்படி ஒன்று இருப்பதாக கருதினால்)எடுத்து வைத்து சுபிட்சமாக வாழ வாழ்த்துகள்

 5. எதிர் கருத்து எழுந்தால் அதை எதிர்கொண்டு அவர்களின் பார்வையைக் கூறலாம். மாறாக, பொருளாதா இழப்பை ஏற்படுத்த முயல்வதும், சமூக உறவுகளிடமிருந்து தனிமைப்படுத்த முயல்வதும், வாய்ப்பு கிடைத்தால் தாக்கி அழித்து எதிர்கருத்து கொண்டிருப்பவரை கொன்றழிப்பதன் மூலம் எதிர்க்கருத்துகளை இல்லாமல் செய்வதும் என்ன மாதிரியான வழிமுறைகள்?//

  தன்னை ஒரு மதவாதியாகக் கருதும் ஒவ்வொருவரும் இதற்கு விடை தரவேண்டும். செங்கோடிக்கு நிகழ்ந்த இந்த மிகப்பெரும் கொடுமை, கண்டிப்பாகக் கண்டிக்கத்தக்கது. இது இறைவனின் தீர்ப்பு என எக்காளமிடும் எவரும் இருப்பீர்களானால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இந்த சமூகம் இப்படியே நிலை பெற்றுவிடாது. இந்தக் கொடுமைத் தீ பற்றிப் பரவி, நாளை உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ அல்லது உங்கள் உயிர்தோழனுக்கோ நிகழும் வரை, வாய் மூடி மௌனமாகக் கிடப்பீர்கள் எனில், நீங்கள் மனிதர்கள்தானா எனப் பரிசீலித்துக் கொள்ளுங்கள்.

 6. நீ முசுலிம்களை தேவுடியா மவனே அவுசாரி மவனே என்று திட்டி பதிவு போடு அவர்கள் சும்மா இருப்பார்கள்

  நீ பதிவு போட்டவுடன் எல்லோரும் வந்து உனக்கு பதில் போட வேண்டுமா? மயிரு ஆசையே பாரு

 7. மதவன்முறையாளர்களை பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு சரி என்றாலும், கருமம் பிடிச்ச கம்யூனிஸத்தை பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு தப்பா இருக்கே.

 8. நண்பர் ரப்பானி,

  இடுகை குறித்து அதாவது கடைய‌நல்லூர் நிகழ்வு குறித்து உங்கள் கருத்து என்ன? சரியா? தவறா? இது குறித்து எதுவும் கூறாமல் தொடர்பின்றி ஏதேதோ கூறியிருப்பது அழுகுணி ஆட்டம் அல்லவா? சௌதியின் சட்ட திட்டங்கல் எதையும் நான் மீறவில்லை. கலாச்சார விழுமியங்களை விமர்சிக்கக் கூடாது என்று எந்த ஒப்பந்தத்திலும் நான் ஒப்பமிட்டிருக்கவில்லை. அப்படி ஒரு வழக்கு வந்தால் அதுபற்றி விவாதிக்கலாம். இப்போது விவாதிக்கப்பட்டிருக்கும் விடயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

  என்னுடைய நிலைப்பாடுகளை எந்த இடத்திலும் எடுத்து வைப்பதற்கு எனக்கு தயக்கமொன்றுமில்லை. கடையநல்லூரிலும் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இந்த இடுகையின் ஆதங்கம். ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை. இதை மாற்றுவதற்கு உங்கள் பங்களிப்பு என்ன?

  \\சுபிட்சமாக வாழ வாழ்த்துகள்// இதை நீங்கள் இடக்கரடக்கலாக கூறியிருக்கிறீர்களா? இதிலிருந்தே புரிகிறதே உங்களின் இரட்டை வேடம்.

 9. ///////////////////////////// ஆனால் இஸ்லாமிய மதவாதிகளுக்கு அடிப்படைகளோ, கொள்கைகளோ அதை விமர்சனம், சுயவிமர்சனத்தின் ஊடாக பற்றியிருக்கும் உறுதியோ எந்த விதத்திலும், எந்த விகிதத்திலும் அவசியமில்லை. அவர்கள் பார்வையெல்லாம் தான் நம்பிக் கொண்டிருக்கும் ஒன்றை இவன் எதிர்க்கிறான் என்பதுதான். அதைத்தவிர வேறொன்றுமில்லை////////////////////////////////////// . தோழர் செங்கொடியின் வருக்கைக்கு வாழ்த்துக்கள் மதவாதிகளின் கருதுரிமைக்கேதிரான. தோழர் செங்கொடியின் பதிவை வரவேற்கிறேன். ஒட்டுமொத்த மத வாதிகளின் நிலை இதுவாகவே உள்ளது . இஸ்லாத்தை பற்றி விமர்சனம் செய்தாலே கொலைவெறியோடு தாக்குதல் தொடுப்பதை விட்டு விட்டு கருத்தியல் ரீதியாக விவாதிக்க வாருங்கள் நண்பர்களே

 10. வணக்கம் தோழர் செங்கொடி
  நலமா
  தள்ம மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக் உள்ளது.பணியை தொடருங்கள்.விவாதம் வருமா ?பார்க்க்லாம்.
  நன்றி

 11. நண்பர் செங்கொடி
  கடையநல்லூர் நிகழ்வு பற்றி உண்மை நிலவரம் எனக்கு தெரியாது (நான் மஸ்கட் இருப்பதால்) ஆகையால் கருத்து சொல்ல விருப்பம் இல்லை. அழுகுனியாட்டம் ஆடுவது நீங்களா அல்ல உங்களின் மீது குற்றம் சொல்லும் ஆட்களா? கொள்கை உறுதியும் நியாயமும் உங்களிடம் இருக்கும் எனில் சம்பந்தப்பட்ட பகுதி வாசிகளிடம் எடுத்துரைத்து குடும்பம் சகிதமாக வாழ சொல்லி பின்னூட்டம் போட்டால் இரட்டை வேடம் போடுவதாக பதில் தருகிறீர்கள். இதற்கு எனது கண்டனங்கள் . உங்களிடம் இரட்டை வேடம் போட்டு நான் என்னய்யா சாதிக்கபோகிறேன்

 12. ///இப்ராஹிமு ஒரு மனுசன் என்ன மதம், கடவுள் நம்பிக்கைய பின்பற்றனும்னு நீ என்னடா சொல்றது? கடயநல்லூர்ல பொறுக்கிய மதகுருவா வைச்சிருக்குற நீ குடும்பத்த மிரட்டி மன்னிப்பு வாங்கினத வெக்கமில்லா நியாயப்படுத்திறியே நீ சோத்த திங்கறயா இல்ல வேறதையுமா? உங்கள மாதிரி வெறிபிடிச்ச மிருகங்களுக்கு மத்தது தேவலம்டா

  உன்னோட முஸ்லீம் மதம் ஒரு பொறுக்கி தன்னை முஸ்லீம் என்று அறிவித்துக் கொண்டால் அனைத்து ஓட்டைகளையும் மூடிக் கொண்டு அவனை மத குருவாக ஏற்றுக் கொள்னு சொல்லுதா? இதுக்கு பதில் சொல்லுங்கடே மானமுள்ள முஸ்லீம் அடிப்படைவாதக் குரங்குகளா..////

  இஸ்லாம் மத அடிப்படைவாத குரங்குகளின் ஆட்டம்,

  குரங்குகளுக்கு இணையத்தில் குல்லா தூக்கும் பக்கிகளுக்கு அழைப்பு

  https://senkodi.wordpress.com/2012/03/01/kdnl-argument/

  இவன் அதிகாரத்துக்கு வரதுக்கு முன்னாடியே இந்த திமிரெடுத்து ஆடுறானே, இந்த மதவெறி பிடிச்ச மிருகங்கள அடிச்சி ஒழிக்க வேனாம்?

  உங்களது கண்ணியமிக்க ,கொள்கை சகோதரன் அழைப்பை ஏற்று வந்துள்ளேன் .
  ஒரு மிரட்டலுக்கு இவ்வளவு ஆட்டமும் ,சோக கீதமும் வாசிக்கிறீர்களே ,ரசியர்களால் ஆப்கானில் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்களே ,
  கற்பழிக்கப்பாட்டார்களே!
  அதற்கு நீதி சொல்லுவது யார்?

 13. கொள்கை தங்கங்கள் இப்படி அழுகுணி ஆட்டம் போட்டால் கொள்கை என்னாவது?

  தனது இருகால்களும் வெவேறு திசையில் ஓடும் இரு ஒட்டகங்களின் வாலில் கட்டி இரு கூராகியும் கொள்கை இழக்காது உயிர் நீத்த யாசர் ,அவரது மனைவி சுமைய்யா முதல் கோடிகணக்கான தியாக செம்மல்களை விதையாக்கி வளர்ந்த மார்க்கத்தை சீண்டி பார்க்கும் நோக்கத்துடன் பைபிளோடு இணைத்து ஆபாசம் படங்கள் வெளியிட்டு லூது ஒரு லூசு என்று எழுதுவது ஏற்புடைய செயலா?

  இதைப் போன்று கடையநல்லூர் போன்று செங்கொடிகள் அதிகம் வாழும் ஊரில் ஸ்டாலின் பல இளம் பெண்களோடு பொது உடமை கொள்கைகளை செயலாக்கம் பண்ணினார் என்று ஸ்டாலின் மற்றும் அவர் செயலாக்கம் பண்ணிய இளம் பெண்களின் படங்களை நிர்வாண கோணத்தில் வெளியிட்டால் ,அந்த துராப்சா வெளியிட்டால் இப்போது உலகை விட்டு ரொம்ப தூரம் போயிருப்பார்.

 14. மத வெறியர்களிடம் இருந்து நீங்கள் மீண்டுவந்ததில் எனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன். மதத்துக்கு எதிராக கருத்து வைத்தால் பொருளாதா இழப்பை ஏற்படுத்துவது,தனிமைப்படுத்துவது, கொன்றழிப்பது.
  நல்ல இஸ்லாம்! நல்ல சௌதி அரேபியா!

 15. இந்த கட்டுரைக்கு சரியான மறுப்பு அல்லது நியாயமான பதில் சொல்லாமல் ஏகமாக திட்டி எழுதியிருக்கும் இஸ்லாமியர்களை வைத்தே இஸ்லாம் எப்படிப்பட்டதென்று அறிந்து கொள்ளலாம்.

 16. மத அடிப்படைவாதிகளாக வாழ்ந்துகொண்டே அடுத்தவர்கள் மத்சாற்பர்ரவர்களாக வாழ வேண்டும் என்ர எதிர்பார்ப்பு முசலிகமளிடம் இருக்கிறது.அவர்களின் கண்ணை மதவெறி மறைக்கிறது.இருட்டில் இருப்பவர்களுக்கு விளக்கு கொடுக்கலாம்.ஆனால் கண்கல இல்லாதவர்களுக்கு விளக்கு கொடுக்க முயர்சிக்கஈரிர்கள் செங்கொடி.

 17. தோழர் செங்கொடியின் வருக்கைக்கு வாழ்த்துக்கள் மதவாதிகளின் கருதுரிமைக்கேதிரான. தோழர் செங்கொடியின் பதிவை வரவேற்கிறேன். ஒட்டுமொத்த மத வாதிகளும்வன்முறையாளர்களாகவே உள்ளனர் இஸ்லாத்தை பற்றி விமர்சனம் செய்தாலே கொலைவெறியோடு தாக்குதல் தொடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன தெரியும்?

 18. கருத்தை பற்றி மத வாதிகளிடம் பேசி ஒரு பலனும் இல்லை தோழர்

 19. தோழர் செங்கொடிக்கு வாழ்த்துக்கள், ஒரு போராளியின் வாழ்வில் வரும் இடையூறுகள்தான் இதுவும். உங்கள் இடுகைகளை தொடரவும்.

 20. வணக்கம் தோழர்,
  மீண்டும் செங்கொடி தளத்தை காண மகிழ்ச்சி.
  இஸ்லாமிய மதவாதிகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஜமாதுக்களுக்கு எந்த அதிகாரங்களும் இருக்க கூடாது. இவர்கள் யார் ஒருவரின் திருமணத்தை ரத்து செய்ய.? பஞ்சாயத்து பண்ண ? சாதாரண மத பிடிப்பற்ற குடிகார முஸ்லிம் கூட இவர்களது மத வெறியை ஆதரிப்பான். இஸ்லாம் என்பதே மற்றவரின் மீது வெறுப்பை உமிழ்வதையே கொள்கையாக கொண்டதால் இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. மக்கள் நல இயக்கங்கள் மிக பெரிய போராட்டங்களை முன்னெடுத்து இவர்களை ஒடுக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவே இவர்களின் அத்துமீறல்களுக்கு முடிவாக இருக்கும்.
  தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

 21. ##அதேநேரம் இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது ஓர் ஒடுக்கப்படும் மதம். இந்துத்துவ பாசிசங்கள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஏனைய மதங்களை தமக்கிசைவாக்க கொடுக்கும் நெருக்கடிகளின் எதிர்விளைவு தான் உருத்திரிந்து மதவெறியாக உருவெடுக்கிறது##

  செங்கொடியாரே. இந்துத்துவா பாசிசத்தின் விளைவாகத்தான் இந்தியாவில் இசுலாமிய மதவெறி உருவானதா? இல்லை என்றால் இவர்கள் சாந்த சொரூபிகளா?

  அடிப்படையிலேயே இவர்கள் வெறியர்கள். இந்தியாவில் பிற இசுலாமிய நாடுகளில் வெறியாட்டம் போடுவதுபோல் முடியாது என்பதால் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கின்றனர்.

  ஆப்கானில் பழமையான புத்தர் சிலையை வெடிவைத்து தகர்த்த திலிருந்து இவர்களின் மதவெறி தெரியவில்லயா?

 22. முட்டாள் இபுராகிமே. லூத் ஒரு தூசு என்று சொன்னதெற்கே உனக்கு கோவம் வருகறதே ! பிஜே ஏசுவை சொல்வதுமாரி பைத்தியக்காரன், மனதில் குஷ்டம் உள்ளவன் என்பதுபோல் லூத்து ஒரு குடிகாரன், மகள்களையே புணர்ந்த காமவெறியன் என்றெல்லாம் எழுதியிருந்தால் வெந்து செத்தே போய்விடுவாய் போலும். நாகரீகம் கருதியே தஜ்ஜால் “லூசு” என்று சொன்னதுடன் நிறுத்திக் கொண்டார்.

 23. முட்டாள் இபுராகிமே! உனது நண்பர் வட்டம் பேஸ்புக்கில் எழுதினால் இது உனக்கும் வருமா வராதா? நண்பர்கள் வட்டத்திற்கு ஏதாவது அளவுகோள் உள்ளதா? இதலெல்லாம் ஆள் பாரத்து முகம் பார்த்து ஏற்படுத்திக்கொள்வதா?எவரும் எப்படியும் எழுதலாமே! நீ விரும்பினால் சொல், உன்னுடை பேஸ்பிக்கிற்கும் மின்னஞ்சலுக்கும் அப்படி இறையில்லா இசுலாத்தின் பதிவுகளை தானாக வரும்படிச் செய்து விடுகிறேன். அதுபோல தூராப்ஷாவிற்கும் வந்துள்ள பதிவைக்கொண்டு அவரை அடித்தும் ஊர்விலக்கம் செய்தும் தண்டித்தார்களே இது நியாமானதா? மதவெறியா?

 24. தேவப்ரியாசாலமன்

  உங்கள் வலதளம் திறக்கப்பட்டது முதல் நிறைவு, நிறுவன ரீதியிலான மதங்களானவைகள் பலம் வாள் முனையில் தான் பரப்பி கட்டுப்படுத்துகிறது.

  கிறிஸ்துவம் பைபிள் முழுதும் புனையல்களே என்பதை பாதிரிகளின் பாடபுத்தகங்களில் தெளிவாக ஏற்கிறார்கள்-பாமர மக்களை தொடர்ந்து ஏமாற்றி வந்தாலும்.

  இசுலாமின் மத நூல் அப்படியே பைபிளைத் தழுவியே வரையப் பட்டுள்ளது, பின் அதன் ஆசிரியர் எப்படி எவற்றை எழுதி இருக்க முடியும்?

  மேலும் இசுலாமின் மத நூல் பற்றி ஒரு நேர்மையான ஆய்வுகள், அதிலும் தமிழில் குறைவு.

  உங்கள் பணி தொடரட்டும். உண்மையை எத்தனை நாள் ஆள்-பண-ஆயுத பலத்தால் தடுக்க முடியும்

 25. கலீல்…… எப்படி நலமா?

  இந்த மதங்கள் உன்னை என்ன செய்தது…..
  அதை வைத்து வியாபாரம் செய்து கொணடிருக்கிறாய்…..

  எந்த மதமாவது உன்னை கட்டாயப் படுத்துகிறதா? இதில் தான் நீ இருக்க வேண்டும்…. இப்படித்தான் வாழ வேண்டும் என்று?

  மகஇக என்கிற பொதுவுடமை உன்னை கவர்ந்ததாக அறிமுகத்தில் கூறியிருக்கிறாய்….. அது உன்னுடைய சுதந்திரம்…. எந்த வழி பிடித்திருக்கிறதோ அதன் படி வாழ்பவன் தான் மனிதன்…..

  காட்டுமிராண்டிகள் என்று கூறுவது…. அறிவுக்கு ஏற்புடைய வாதமாக கொள்ள முடியாது …. அந்த காட்டுமிராண்டிகளில் ஒருவனாக உன் தரத்தை உயர்த்திக் கொண்டவர்களில் நீயும் ஒருவன்….. உமர்ந்தரகன் என்கிற குடும்பததுக்காரனுக்கு தான் கடையநல்லூர் ஜமாத்தில் பெண் கொடுத்தார்கள். நீ செங்கொடி யென்றால் அது நடந்திருக்குமா?

  வெளிநாட்டு சுகபோகமான வாழ்க்கை …… நீ காட்டு மிராண்டியாக இருந்த மதம் தான் உனக்கு தந்தது. அப்படி ஒரு வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு இப்படி ஒரு வியாக்கியானம் தேவையா?

  இஸ்லாமிய மதம் இந்து மதம் கிறிஸ்துவ மதம் சீக்கிய மதம் இன்னும் பல மதங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அது நியாயமானது அதன் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது தேவையில்லை உன்னை இஸ்லாமிய மதம் நிர்ப்பந்தித்ததா? இதில் தான் இருக்க வேண்டும் என்று…….

  நீ செத்த பிறகு உன் மேல் செங்கொடி போர்த்திட வேண்டும் என்று கூறினாயே….. அதை யார் செய்ய?

  மகஇக வின் கொள்கை இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என்று எங்காவது லெனின் கூறியிருக்கிறாரா? ஏன்டா இந்த கொல வெறி….

  நக்ஸலைட் என்று உன்னை தெரிந்தவர்களுக்கு தெரியும்… ஆனால் உண்மையான கொள்கை வாதியாக இருந்தால் நேருக்கு நேராக களம் காண வேண்டும் உன்னைப் போல் கோளைகள் அந்த இயக்கத்தை விளம்பரத்திற்காக பயன் படுத்த வேண்டாம்.

  நீ பொறந்த ஊருக்கு வா…… இங்கு நிறைய காட்டு மிராண்டிகள் இருக்கிறார்கள் அவர்களை உன் ஆழ்ந்த சிந்தனையால் திருத்து .

  அதை விட்டு விட்டு கேவலமாக இப்படி ஒளிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன வேண்டியிருக்கிறது.

  அங்கு இருந்து கொண்டு கிறுக்கன் போல் உழரிக் கொண்டிருக்காதே

  முழு கிருக்கனாக ஆகி விடுவதற்கு முன் உன் ஊருக்கு வா. நீ தேடும் நியாயம் இங்கு கிடைக்கும்

  இருட்டில் தொலைத்து விட்டு
  வெளிச்சத்தில் தேடும் உன்னை
  நினைத்தால் வேதனைப்படத்தான் வேண்டியிருக்கிறது.

 26. நடந்து வந்த பாதை தன்னை மறந்திட்டாயாட
  நீ நாசவேலை செய்துவிட்டு வருந்துவாயடா

  நிச்சயம் வருந்துவாய்………….

  செங்கொடி உனக்கு விரைவில் சிவப்புக்கொடி

 27. கருத்தை கருத்தால் மட்டும் எதிர்கொள்ள திரணியற்றவர்கள் கடைபிடிக்கும் வழக்கமான நடைமுறை இதுதான்.இவ்வளவு நாள் சிங்கத்தின் குகைக்குள் இருந்தா இதயெல்லாம் செய்தீர்கள்?இங்கும் கூட இந்த விவாதத்தின் தலைப்பு சம்பந்தமாக யாரவது கருத்திடுகிறார்களா பாருங்கள்?துராப்ஷ அந்த கட்டுறையை எழுதினார் என்பது குற்ற சாட்டு.அதை சொன்னவர்களால் அதை நிருபிக்க முடியவில்லை.ஆனால் அதற்கான தீர்ப்பு மட்டும் வழங்கியாகிவிட்டாச்சு.அவர் மண்ணிப்பும் கெட்டுவிட்டாராம் குதுகளிக்கிறார்கள் மதவெறியர்கள்.ஆனால் அவர்தான் எழுதினாரென்றால் அந்த கட்டுறை இன்னும் அப்படியே இருக்கிறதே ஏன் அழிக்க்வில்லை எனகேட்டால் பதிலே வராது!இவர்கள் நம்பும் அல்லாவே இவர்களை சிந்தித்துபார்க்க சொன்னாலும் சிந்திக்க மறுக்கும் மூடர்கள்

 28. நாஞ்சில் ///நியாயமான பதில் சொல்லாமல் ஏகமாக திட்டி எழுதியிருக்கும் இஸ்லாமியர்களை வைத்தே இஸ்லாம் எப்படிப்பட்டதென்று அறிந்து கொள்ளலாம்////
  நான் திட்டியிருக்கேனா?

 29. செங்கொடி தங்களுடய விழிப்புணர்வு கருத்துகள் சாதாரண மக்களுக்கு சேர்தேதீரும் இதையாராலும் தடுக்கமுடியாது ஆகவே தங்களுடைய பணியை தொடருங்கள் வாழ்த்துக்கள் பல.
  அன்புடன் குப்புசாமி

 30. நண்பர் ரப்பானி,

  மஸ்கட்டில் இருப்பதால் உண்மை நிலவரம் தெரியாது என்று கூறும் நீங்கள், \\ நல்லூர் வாசிகளே பொறுமை இவர் ஒரு டம்மி பீஸ்…… சவுதியில் உள்ள செங்கொடியையும் இறைவன் நமக்கு அடையாளம் காட்டுவான்// என்று பின்னூட்டமிட்டது எப்படி? வெளிப்படையாகச் சொன்னால் பரிசீலனை செய்ய வேண்டிய இடத்தில் எனக்கு தெரியாது என்று நழுவுவதும் மதவெறி பிடித்தாட்டும் இடத்தில் மெயின் பீஸ் செங்கொடி பாக்கி இருக்கிறார் என்பதும் இரட்டை வேடமா இல்லையா? உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியாது என்றால் என்ன நடந்தது என்றல்லவா நீங்கள் விசாரித்திருக்க வேண்டும்? சரி இப்போது தெரியும் தானே, உங்கள் கருத்து என்ன? நடந்தது சரியா? தவறா? தவறு என்று கூறுவதற்கு மனமில்லாமல் எனக்கு தெரியாது என்று கூறுவீர்களாயின் உங்களுக்குள் இருப்பது மதவெறியா? இல்லையா?

  ஒரு நிகழ்ச்சியைப் பற்றி எழுதி இது குறித்து கருத்து கூறுங்கள் என்று கேட்டால், தொடர்பே இல்லாமல் வேறெதையோ கூறுவது அழுகுனி ஆட்டம் இல்லையென்றால் அது வேறென்ன?

  ஒரு இடத்தில் செங்கொடி இன்னும் மிச்சமிருக்கிறார் என்று பின்னூட்டம் போடுகிறீர்கள். இன்னொரு இடத்தில் குடும்பம் சகிதமாக சுபிட்சமாக வாழுங்கள் என்று இடக்கரடக்கலாக கூறுகிறீர்கள் (தமிழ் இலக்கணத்தில் இடக்கரடக்கல் என்றால் என்ன என்று விசாரித்துப் பாருங்கள்) என்றால் இது இரட்டை வேடமல்லாமல் வேறென்ன?

 31. நண்பர் இப்ராஹிம்,

  என்ன நடந்திருக்கிறது என்பதை விலாவரியாக எழுதிய பின்னும் உங்களால் வெறும் மிரட்டல் என்று கடந்து போக முடிகிறது என்றால் உங்களுக்குள் இருப்பது என்ன?

  ஆப்கானில் நடந்தவை குறித்து நாங்கள் என்ன கூறியிருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியாது என்றே நான் நம்ப விரும்புகிறேன். ஆனாலும் உங்களுக்கு உங்கள் மறதியின் மேல் இத்தனை நம்பிக்கையா? அதிலும் சந்தடி சாக்கில் லட்சக்கணக்கில் என்று வேறு அழந்து விடுகிறீர்கள்.

  நேர்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பீர்கள் போல. அது சரி, நடந்த நிகழ்சிகளை சரி என்று ஏற்கிறீர்களா? தவறு என்று மறுக்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்.

 32. நந்தன்////ஆப்கானில் பழமையான புத்தர் சிலையை வெடிவைத்து தகர்த்த திலிருந்து இவர்களின் மதவெறி தெரியவில்லயா?///
  அந்நிய நாடான ஆப்கானில் புகுந்து அந்நாட்டு மக்களை கொன்று பெண்களை கற்பழித்த ரசியாவின் அந்தாப சொரூபிகளே ! தாலிபான் ஆட்சியை கைப்பற்று முன்னர் அங்குள்ள அரசுடன் குழந்தைகள் உயிர்காக்கும் மருந்துகளை ஒப்பந்த அடிபடையில் சப்ளை செய்த ஜப்பான் அரசு தாலிபான் ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் சொல்லை கேட்டு ஒப்பந்தத்திற்கு மாறாக குழந்தைகள் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்புவதை நிறுத்தியதால் அங்குள்ள குழந்தைகள் பலர் இறக்கநேரிட்ட்டது எங்கள் குழந்தைகளை விட உமது புத்தர் சிலை பெரிதோ என்று தகர்த்தனர் /உலக மீடியாக்கள் எல்லாம் அந்த கொடுமையை எடுத்து கட்டியது. அதே நேரத்தில் தமிழ் மக்களின் கற்பு தெய்வமாக கொள்ளும் கண்ணகி சிலை தமிழகத்தில் லாரியால் இடிக்கப் பட்டு அப்புறப்படுத்தப் பட்டது.

 33. நண்பர் இப்ராஹிம்,

  உங்களால் முடிந்தால் அந்தக் கட்டுரையில் இருக்கும் தவறு என்ன வெளிப்படையாக கூறுங்கள். விவாதிக்கலாம்.

  தோழர் ஸ்டாலின் மீது கூறப்படாத அவதூறுகளா? அவதூறுகளுக்காக யாரும் கண்டிக்கப்பட்டார் என்று கூறமுடியுமா உங்களால்? வெறுமனே அவதூறுகளைக் கழிந்து வைக்காமல் இந்த இடுகைக்கான உங்கள் மறுமொழியைக் கூறுங்கள்.

 34. நண்பர் இப்ராஹிம்,

  உங்களின் சுட்டி ஒரு பக்கப் பார்வை தான். இதற்கும் மறுப்புகள் வந்தனவே உங்களுக்குத் தெரியாதா? செலக்டிவ் அம்னீசியாக்களுக்கு தெரியாது தான். ஆனாலும் நீங்க ரெம்ம்ம்ம்ம்ப நல்லவருங்க. கண்டதையெல்லாம் சுத்தி சுத்தி பேசினாலும் இடுகையைப் பற்றி மட்டும் பேசவே மாட்டேன் என்கிறீர்களே.

 35. ஐயா ஜாஹிர்,

  பல முறை பதில் கூறிய பின்னும் மீண்டும் மீண்டும் அதையே வாந்தியெடுக்கிறீர்களே. வாந்தியையே உண்ணும் அளவுக்கு அப்படி என்ன பசி உங்களுக்கு?

  இஸ்லாம் என்னை எப்படி எல்லாம் கட்டாயப் படுத்தியது என்று நான் பட்டியலிட்டால் நீங்கள் என்ன செய்வதாய் உத்தேசம்?

  ஒரு பொய்க் குற்றச்சாட்டை விசாரிக்காமல் தண்டனை கொடுப்பவர்கள் காட்டுமிராண்டிகளா இல்லையா? இதில் அறிவுக்கு பொருந்தாமால் என்ன இருக்கிறது கூறமுடியுமா?

  பொது வெளியில் இருக்கும் ஒன்றை யாரும் விமர்சிக்கலாம். இதை தவறு என்கிறீகளா நீங்கள்? இஸ்லாத்தை விமர்சித்தால் கொல்வீர்களா?

  கேள்விகளுக்கு பதில் சொல்லும் துணிவற்ற நீங்களா என்னை கோழை என்பது? நேர்மையாக பதில் சொல்ல முன்வாருங்கள் யார் கோழை என்பது அப்போது தெரியும்.

 36. நண்பர் இப்ராஹிம்,

  இந்த இடுகைக்கு முதலில் பதில் கூறுங்கள் அதன் பிறகு உங்கள் வெட்டி ஒட்டல்கள் வெளிவரும்.

 37. இந்த விவாதத்தின் முதல் விளக்கமாக கடையநல்லூரில் கொடுக்கப்பட்ட ஃபத்வா எடுத்துக் கொள்ளப்படுகிறது.

  தோழர் துராப்ஷாவுக்கு வழங்கப்பட்ட ஃபத்வா.

  1. இஸ்லாத்தில் இருந்து கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டதால் இஸ்லாத்தை விட்டு விலகி விட்டார்.
  2. கடையநல்லூரின் எந்த மையவாடியிலும் இவரை அடக்கம் செய்யக் கூடாது.
  3. யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
  4. திருமண பந்தம் உட்பட அனைத்தும் முறிந்து விடும்.

  இந்த ஃபத்வாவை வழங்கியது யார்? யாருக்கும் தெரியாது. என்னைப்பற்றி தொடர்ந்து கிசுகிசுக்களை எழுதிக் கொண்டிருக்கும் கடையநல்லூர்.ஆர்க் தளத்தில் ஜமாத்தார்கள் கூடி அறிவித்ததாக எழுதியிருந்தனர். ஜமாத்தார்கள் என்ற பெயரில் இப்படி தீர்ப்புச் செய்தவர்கள் யார்? இப்படி தீர்ப்பளிக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? அதிகாரமில்லாதவர்கள் இப்படி தீர்ப்புக் கூறினால் அதன் பெயர் தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா? கட்டப்பஞ்சாயத்து செய்ததாக ஒரு பொது வழக்கை தொடுத்தால் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள், அதை அறிவித்தவர்கள் என அனைவரும் உள்ளே போக வேண்டியதிருக்கும் என்பது தெரியுமா?

  ஒருவர் காஃபிர் என்று அறிவிப்பதற்கும், திருமண பந்தம் முறிந்து விட்டதாக தீர்ப்பளிப்பதற்கும் அரசால் நியமிக்கப்பட்ட காஜிக்கு மட்டும் தான் அதிகாரம் உண்டு. அந்தவகையில் கடையநல்லூருக்கான மண்டல காஜியாக இருப்பவர் முஹைதீன் அப்துல் காதர் என்பவர். இவர் எந்த ஃபத்வாவையும் வழங்கவில்லை. ஆனால் மன்னிப்புக் கடிதம் கொடுக்கப்பட்ட பின்னர் அதை அங்கீகரித்திருக்கிறார். இதில் இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது என்பதால் தான் அங்கீகரித்த கடிதத்தில் கூட எழுதிய தேதி குறிப்பிடப்படாமல் விடப்பட்டிருக்கிறது. அதாவது கட்டப்பஞ்சாயத்து செய்துவிட்டு அதை சமாளிக்க காஜியை அங்கீகரிக்க கேட்டு அவர் என்னுடைய அனுமதியின்றி எப்படி நீங்கள் தீர்ப்பு கொடுக்கலாம் என்று மறுத்து பின்னர் ஒரு வழியாக மன்னிப்பு கடிதம் வாங்கிக் கொடுத்து சரிக்கட்டியிருக்கிறார்கள்.

  எங்கள் மனம் புண்பட்டு விட்டது என்று கூறிக்கொண்டு அடித்துக் கொல்ல உரிமை கோருபவர்கள் தங்கள் மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட இந்த மொள்ளமாரித்தனத்திற்கு எதிராக என்ன அறச்சீற்றத்தைக் காண்பிக்கப் போகிறார்கள்? இஸ்லாத்தைப் பழித்தவனை கொன்றாலும் தப்பில்லை என்று பின்னூட்டம் எழுதியவர்கள், எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் கேள்வியை கண்டு கொள்ளாமல் நகர்ந்து விடுவார்கள் என்றால் உண்மையில் அவர்கள் யார்? மனிதன் என்ற பிரிவில் அடங்க வேண்டும் என்றால் அவர்களின் உணர்ச்சி வேகத்தையும் அதைத் தூண்டும் மதத்தையும் பரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு பரிசீலனை செய்யவோ, பதிலளிக்கவோ இயலவில்லை என்றால் மனிதர்கள் என்று கூறிக் கொள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? இரண்டில் எந்தப் பிரிவில் அடங்குவார்கள் என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

 38. jahir said: வெளிநாட்டு சுகபோகமான வாழ்க்கை நீ காட்டு மிராண்டியாக இருந்த மதம் தான் உனக்கு தந்தது. அப்படி ஒரு வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு இப்படி ஒரு வியாக்கியானம் தேவையா?

  இஸ்லாமிய காட்டுமிராண்டிநாடான சௌதி அரேபியாவில் நண்பர் செங்கொடி செய்த தொழிலுக்கு அவர் வேலை செய்த நிறுவனம் சம்பளம் கொடுத்தது. காட்டுமிராண்டிநாடான சௌதி அரேபியாவின் இஸ்லாமிய மதபிரசாரங்கள் செய்பவர்களுக்கு அந்த நாட்டு அரசே பணம் அள்ளி கொடுப்பது இரகசியம் எதுவும் கிடையாது. நண்பர் செங்கொடியால் முதலாளித்துவம் என்று எதிர்கபடும் மேற்க்கு முதலாளித்துவ நாடுகளில் இஸ்லாமிய சௌதி அரேபியாவின் காட்டுமிராண்டிதனங்கள் மருந்துக்கும் கிடையாது. தொழிளாளர் சங்கங்களின் பாது காப்புரிமையும் உண்டு. இஸ்லாமை மட்டும் இல்லை எந்த மதத்தையும் கிழித்து தொங்கவிடலாம். தமிழ் இஸ்லாமியர்கள் தங்கள் இருண்ட உலகத்தைவிட்டு வெளியே வர வேண்டும்.

 39. இஸ்லாத்தில் இருந்து கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டதால் இஸ்லாத்தை விட்டு விலகி விட்டார்.///
  கேரளாவில் கம்யுனிஸ்ட் இலிருந்து மோடிக்கு ஆதரவாக உளறியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறியமாட்டீரா? முஸ்லிம் என்றால் ,அல்லாஹுவுக்கும் அவனது தூதருக்கும் கட்டுபட்டவன்,கட்டுபடமாட்டேன் என்றால் வெளியேற்றிவிட்டால் ,அதற்காக அழுவதற்கு என்ன விவாதம் வேண்டி கிடக்கிறது?
  2. கடையநல்லூரின் எந்த மையவாடியிலும் இவரை அடக்கம் செய்யக் கூடாது.
  முஸ்லிம்களைத் தவிர யாரும் அந்த மையவாடியில் அடக்கப் படமாட்ட்டர்கள் .முஸ்லிம் இல்லை என்ற பிறகு முஸ்லிம்களின் மையவாடியில் சொர்க்கம் நரகம் இருக்கிறதே .அதை ஏன் நீங்கள் தேட வேண்டும்?
  3. யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
  முஸ்லிம் அல்லாதவர்களிடம் எப்படி நடந்து கொள்கிரமோ அதைப் போன்று திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்றால் ஓகே.மற்றபடி எங்களது நபி[ஸல்] அவர்களையும் இஸ்லாத்தையும் பற்றி விமர்சிக்கும் பொழுது பெரும்பாலோர் அவர்களுடன் தொடர்பு கொள்ளுவதை தவிர்க்க செய்வார்கள்.தங்களது கொள்கைக்காக இதையெல்லாம் தியாகம் செய்ய வேண்டும்.நாங்கள் எங்களது ஏகத்துவ கொள்கைக்காக ,எங்கள் உறவுகளை ,பல பள்ளிவாசல்களை கைகழுவி விட்டோமே
  4. திருமண பந்தம் உட்பட அனைத்தும் முறிந்து விடும்.
  இஸ்லாமிய திருமணத்தை நீங்கக் முறித்துக் கொண்டு ,புரட்சி திருமணம் செய்து கொள்ளுங்கள். அல்லது கம்யுனிச கொள்கையான லிவ்விங் டுகெதர் ஆக வாழுங்கள் .முஸ்லிமகளின் நிக்காஹ் புத்தகங்களை நீங்கள் ஏன் பொருட்படுத்த வேண்டும்?நாங்கள் சுன்னத் ஜமாத்தினர் நிக்காஹ் புத்தகங்களை தர மாட்டோம் என்று சொன்னதும் இப்படியா அழுது கொண்டு இருந்தோம்? நாங்கள் எந்த கொள்கையை சொன்னோமோ அந்த கொள்கையின் அடிப்படையில் திருமணங்கள் செய்து வருகிறோமே .அவர்கள் என்ன விலக்கி வைப்பது? இஸ்லாமிய கொள்கைக்கு மாறாக வரதட்சணை ,பெண் விருந்து நடைபெறும் திருமணங்கள் நெருங்கிய உறவுகளாக இருந்தும் நாங்களாகவே விலகி கொள்கிறோமே ! அது போல நீங்கள் இருந்துகொள்ள வேண்டியது தானே
  ///ஒருவர் காஃபிர் என்று அறிவிப்பதற்கும், திருமண பந்தம் முறிந்து விட்டதாக தீர்ப்பளிப்பதற்கும் அரசால் நியமிக்கப்பட்ட காஜிக்கு மட்டும் தான் அதிகாரம் உண்டு. அந்தவகையில் கடையநல்லூருக்கான மண்டல காஜியாக இருப்பவர் முஹைதீன் அப்துல் காதர் என்பவர். இவர் எந்த ஃபத்வாவையும் வழங்கவில்லை///
  அப்படியானால் அவரை ஏற்றுக் கொள்கிறீர்களா? அவருடைய மதத்தை ஏற்றுக் கொள்ளாமல் அவரை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? ஒருவேளை அவரை ஏற்றுக் கொண்டால்,அவர்தான் பத்வா கொடுக்கவில்லையே நீங்கள் கணவன் மனைவியாக் வாழ வேண்டியதுதானே ! சுன்னத் ஜமாத்தினர் உங்கள் இவர்களையும் தனித்தனியாக கட்டிவைத்துள்ளனரா? அல்லது தனி சிறையில் அடைத்து உள்ளனரா? உங்கள் மனைவியை தோழர் கொள்கையை ஏற்க செய்து அதன் அடிப்படையில் வாழ வேண்டியதுதானே,ஒருவேளை உங்களது மனைவி உங்களது கொள்கையை ஏற்கவில்லை என்றால் அவரை விட்டுவிட்டு வேறொரு கம்யுனிச கொள்கை சீமாட்டியை திருமணம் செய்து கொள்ளவேண்டும்.உங்களது மனைவிக்கு உங்கள் கொள்கை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லைஎன்றால் நாங்கள் என்ன செய்யட்டும்? உங்களுக்கு மனைவி மக்கள் பெரிது என்றால் வாய் பொத்தி உங்களது கம்யுனிசத்தை இஸ்லாம் பற்றி விமர்சிக்காது பரப்புங்கள். இல்லையெனில் கொள்கை பெரிது என்றால் ஏதாவது ஒரு லிவ்விங் டுகெதர்.உங்களது இயக்க கொள்கையை நீங்களே நடை முறைப்படுத்த வில்லை என்றால் வேறு யார் செயலாக்கம் தருவார்?

 40. இப்ராகிமே, அமெரிக்காகாரனும் ஜப்பான்காரனும் உன்னை வதைத்தால் அவர்களுக்கு எதிராக அல்லவா வாளைத்தூக்க வேண்டும், அதற்கு வக்கத்துபோய் அவர்களுடன் கொஞ்சிக்குலாவிக்கொண்டே புத்தர் சிலையைத்
  தகர்த்தது கோழைகளின் செயல். உன்அபிமான இசுலாமிய அரசு நாடான சௌதியில் வாழும் இந்துக்கள் தம்க்காக ஒரு கோவில் கட்டிக்கொள்ள இனுமதிப்பாயா? இனுமதிக்க மறுப்பதை எதிர்த்து போராடினால் என்ன செய்வாய்? மரணதண்டனை விதிப்பாய். அதை எதிர்த்து அந்த அரசுடன் போராடாமல் உனது குர்ஆனை எரித்தால் உனது எண்ணம் எப்படி இருக்கும்? வக்கிரம் பிடித்தவனே, முகம்மது ஆறு சிறிமியை திருமணம் என்ற பெயரால் வன்கொடுமை செய்ததை “உறவை பலப்படுத்த” என்று கூறியபோல நீ புத்தர் சிலையை இடித்துவிட்டு அமெரிக்கா,ஜப்பான் என்று கூறிக்கொண்டு மதவெறியினுடன் அலையாதே.

  நாங்களெல்லாம் கோழைகளாம். நீ கோழையல்லாத வீரன் என்றால் உனது முகவரியையும் செல்பேசி எண்ணையும் முதலில் கொடு பார்க்காலாம்.

 41. திரு செங்கொடி,

  //இஸ்லாம் மத அடிப்படைவாத குரங்குகளின் ஆட்டம்,
  குரங்குகளுக்கு இணையத்தில் குல்லா தூக்கும் பக்கிகளுக்கு அழைப்பு//

  வினவு தளத்தில் இந்த ‘அழகான’ அழைப்பைப் பார்த்தே இந்தப் பதிவிற்கு வந்தேன்.

  தலைப்பில் ‘அனைத்து முஸ்லிம்களுக்குமான அழைப்பு’ என்று வேறு போட்டிருக்கிறீர்கள். ஆனால் பதிவைப் படித்தபிறகுதான் நீங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. பாதிப்படைந்ததால் மிகவும் ஆத்திரமடைந்திருப்பதாகவும் தெரிகிறது. எனவே வார்த்தைகள் மிகவும் கரடுமுரடாக இருக்கின்றன. வழியெங்கும் முள்ளை நிரப்பி உங்களைச் சுற்றி ஒரு அகழியைத் தோண்டி அதில் சில முதலைகளையும் மேயவிட்டு ‘எல்லா முஸ்லிம்களும் என்னுடன் விவாதம் புரிய வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். விவாதம் செய்ய நான் தயார்தான். ஆனால் நீங்கள்தான் அதற்குத் தோதுவான மனநிலையில் இல்லை போலத் தெரிகிறது. எனவே விவாதத்திற்குத் தோதான சூழ்நிலை ஏற்பட்டால் சொல்லுங்கள். அப்போது நம் விவாதத்தைத் தொடங்குவோம். அதுவரை என்னையும் என்னைப்போன்ற பிற சகோதரர்களையும் காட்டுமிராண்டிகள், கோழைகள்’ குரங்குகள், குரங்குகளுக்குப் பக்கி தூக்கும் குல்லாக்கள் என எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டு அழைத்துக் கொள்ளலாம்.

 42. செங்கொடி பதுங்கிவிட்டார், ஓடிவிட்டார் என்று சிலர் குதூகளித்தார்கள். அவர்களின் கற்பனாவாத வெற்றிக்களிப்பில் கரியை பூசும் வண்ணம் செங்கொடியை திறந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  இபுறாஹீமின் கவனத்திற்கு,

  இபுறாஹீம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். நாங்கள் மதங்களை விமர்சிப்பது என்பது மதப்புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளவற்றை கொண்டே விமர்சிக்கிறோமே தவிர அதில் சொல்லப்படாதவற்றை அவதூறுகளாக தெளித்து அல்ல. நீங்கள் ஸ்டாலின் பற்றியோ மாவோ பற்றியோ கூற வருபவைகள் வெறும் அவதூறுகளேத் தவிர எதனினும் உள்ள ஆதாரத்துடன் அல்ல.

 43. குத்தம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது போலத்தான் முஸ்லீம் மதவெறியர்களின் நிலையாக இருக்கிறது.

  பைபிளில் சொல்லப்பட்டுள்ள கதைக்கு தகுந்தாற்போல்தானே அந்தப் படங்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஆதமோ அல்லது ஹவ்வாவோ அல்லது அவர்களது மகன், மகள்களோ எவ்விதம் உடல் உறவு வைத்திருப்பார்கள் என்று கற்பனா உலகில் சஞ்சரித்துப் பார்க்கையில் இது போன்ற படங்கள்தானே காட்சிக்கு வருகிறது. இதை இயற்கை என்றுதான் சொல்லமுடியும். இதை ஆபாசம் என்று ஏன் இந்த இபுராஹீம் மதத்தவர்கள் குதிக்கிறார்கள்? இது அசிங்கமான ஆபாசம் என்றால் இதற்காக குத்தம் சொல்லவேண்டியது அந்த பரமபிதாவைத்தான். எல்லோரையும் அழித்த பிறகு அவர்களால் எப்படிதான் இனப்பெருக்கம் செய்ய முடியும்? லூத்தின் மச்சினிச்சி யாரையாவது விட்டுவைத்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகளும் தோன்றியே இராது.

  மனிதன் தனது உழைப்பின் பயனாக அவனது சமூக உறவுகளும், குடும்ப உறவுகளும் மாற்றமடைந்து இன்று சிறந்த நாகரீகக் கட்டத்தில் இருக்கிறான். இந்த சுரண்டலமைப்பு ஒழியும்போது இது இன்னும் செழுமையடையும். இன்றைய உறவுகளைப் போன்றுதான் லூத்தின் காலகட்டமும் இருந்திருக்கும் என்ற நினைப்பில் பின்னூட்டம் இடுவது தவறான கண்ணோட்டம்.

 44. மாமேதை நந்தா ////முட்டாள் இபுராகிமே. லூத் ஒரு தூசு என்று சொன்னதெற்கே உனக்கு கோவம் வருகறதே ! பிஜே ஏசுவை சொல்வதுமாரி பைத்தியக்காரன், மனதில் குஷ்டம் உள்ளவன் என்பதுபோல் லூத்து ஒரு குடிகாரன், மகள்களையே புணர்ந்த காமவெறியன் என்றெல்லாம் எழுதியிருந்தால் வெந்து செத்தே போய்விடுவாய் போலும். நாகரீகம் கருதியே தஜ்ஜால் “லூசு” என்று சொன்னதுடன் நிறுத்திக் கொண்டார்.///
  மாமேதை நந்தன் ,லூத் ஒரு லூசு என்று மட்டும் சொன்னாரா? அதில் எனக்கு கோபம் வந்ததா? சொகுசாக வெளிநாட்டு வாழ்க்கையில் இஸ்லாத்திற்கு தொடர்பு இல்லாத நிர்வாண படங்களை இஸ்லாத்துடன் சம்பந்தபடுத்தி வெப்சைட்டில் எழுதியதும் அதை உழைக்கும் மக்கள் மத்தில் வெளியிட்டதும் கடைய நல்லூர் மக்களுக்கு கோவம் வந்தது .பீஜே இயேசுவை குறைகாணவில்லை.பைபிளில் இயேசுவை இப்படியெல்லாம் எழுதி உள்ளார்கள் .இது திரிபு என்பதே பீஜேவின் வாதம்.ஆக அரைவேக்காட்டுதனமாக அலற வேண்டாம்

 45. நண்பர் மரைக்காயர்,

  பாதிக்கப்பட்டதனால் இந்தப் பதிவை எழுதவில்லை என்று தெளிவாகவே கூறியிருக்கிறேன், படிக்கவில்லையோ. அல்லது உங்கள் பார்வையில் இந்த இடுகை பாதிக்கப்பட்டதன் விளைவு என்பதாக தோன்றினால் அது இந்த பதிவில் எந்த இடத்தில் எப்படி வெளிப்படுகிறது என்று சுட்டிக் காட்டுங்கள். அது தான் நேர்மையானதாக இருக்கும். நான் நேர்மையான விவாதத்திற்கு ஆயத்தமாகவே இருக்கிறேன். அதனால் தான் வெளிப்படையாக அழைப்பும் விடுத்திருக்கிறேன். வாருங்கள் விரிவாக பேசலாம்.

  பின்குறிப்பு: உங்களைச் சார்ந்தோரின் அழ‌கிய அழைப்புகளெல்லாம் இங்கு அழிக்கப்பட்டமலேயே இருக்கின்றன, கண்டு கொள்ளலாம்.

 46. நண்பர் இப்ராஹிம்,

  நீங்கள் இப்போதும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமால் ஏதேதோ எழுதியிருக்கிறீர்கள். கொடுக்கப்பட்ட ஃபத்வா இங்கு விமசிக்கப்படவில்லை (அது பின்னால் வரும்) மாறாக ஃபத்வா என்ற பெயரில் செய்யப்படிருக்கும் மொள்ளமாரித்தனம் தான் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு உங்கள் பதில் எங்கே?

 47. செங்கொடி ,நீங்கள் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவே இல்லையே ! அவர்கள் பத்வாவை ஏன் பொருட்படுத்த வேண்டும்? அதை வழங்கியவர்களையும் ஏன் பொருட்படுத்தவேண்டும்? பத்வா என்ற பெயரி வழங்கப்பட்டுள்ள மொள்ளமாரித்தனத்தை ஏன் அங்கலாய்க்க வேண்டும்? நீங்கள் முஸ்லிம் இல்லைஎன்றால் முஸ்லிம் அடிப்படையில் நீங்கள் செய்த திருமணம் தானாகவே முறிந்துவிடும்..உங்கள் மனைவி முஸ்லிமாக இருந்தால் உங்களுடன் வாழ்வது இஸ்லாமிய சட்டம் ஹராம் என்கிறது. பதவா என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உங்களது திருமணத்தை ரத்து செய்யும் அதிகாரபூர்வமான ஆதாரம் .அதை கடையநல்லூர் காஜி தான் கொடுக்கவேண்டும் என்றால் கடையநல்லூர் ஜமாஅத் கொடுத்ததை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம் .உங்களைபோல் பெயரைக் கூட மாற்ற உழைக்காத நீங்கள் உழைக்கும் மக்களிடையே இஸ்லாத்தை பற்றி அவதூறாக எழுதினால் வாங்கி கட்டவேண்டியத்தை வாங்கி உங்களது தியாக் பட்டியலில் எழுதி கொள்ளுங்கள் .இஸ்லாம் மட்டுமல்ல ஜெயலலிதாவை பற்றி நக்கீரன் வாங்கி கட்டவில்லையா? அதற்கு முன்னாள் உங்களது கம்யுனிச தெய்வம் ஸ்டாலின் ஆட்சியில் அவரை எப்படியெல்லாம் மக்கள் ஜனநாயக உரிமைகளோடு விமர்சித்தார்கள் என்று சொன்னால் என்னை போன்ற புதிய ஜனநாயகம் தெரியாதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.அடுத்து உங்களது புதிய ஜனநாயக நந்தன் அவர்கள் எனது முகவரியெல்லாம் கேட்கிறாரே ,கொடுத்தால் துராப்சா கதிதானா அல்லது ஈயை கூட கொள்ளாத ஸ்டாலின் நடவடிக்கையா?

 48. //நாங்களெல்லாம் கோழைகளாம். நீ கோழையல்லாத வீரன் என்றால் உனது முகவரியையும் செல்பேசி எண்ணையும் முதலில் கொடு பார்க்காலாம்.///
  கடைய நல்லூரில் மொல்லுமாரிகள் தான் அப்படியிருக்கிரறாக்கள் என்றால் உங்களது புதிய ஜனநாயகவாதிகள் அதற்கு மேல் இருக்கிறார்களே .இவர் மொல்லுமாரியா? கொல்லும் மாரியா?

 49. அன்புள்ள செங்கொடி,

  இப்போதுதான் தளத்தைப் பார்வையிட்டேன். அதிர்ச்சியும் தங்கள் உயிருக்கு ஆபத்து எதுவும் ஆகிவிடவில்லை என்ற ஆறுதலும் உண்டானது. இதுபோல நடவாதிருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். நான் முன்பே அடிக்கடி நினைப்பதுண்டு. இவ்வளவு தைரியமாய் போராடும் உங்களை எப்படி இந்த மதவெறியர்கள் சீண்டாதிருக்கின்றார்கள் என்று. நீங்கள் ஏதோ ஒரு வகையிலே உங்களைத் தற்காத்துக் கொண்டுதான் இதில் ஈடுபடுகின்றீர்கள் என்று நினைத்தேன். ஆனால் இதை நீங்கள் எத்ரிபார்த்திருக்கத்தான் வேண்டும்.

  உங்கள் உறுதியான கருத்துக்களை எதிர்கொள்ளத் திராணியில்லாத கோழைகள் ஒருவிதத்தில் நீங்கள் முன்வைத்த அத்தனை கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் தாமே வாழும் ஆதாரங்களாக்கிக் கொண்டுள்ளதன் மூலம் உதவிதான் செய்திருக்கின்றார்கள். சிலவேளை எதிர்காலத்தில் ஏதாவது இதை விட பாரதூரமாய் ஊறு விளைவித்தாலும் கூட உங்கள் கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லவே முடியாதவர்களாகத்தான் காலச்சக்கரத்திலே உழன்று கொண்டிருப்பார்கள். அதுகூட உங்கள் சித்தாந்தத்தின் கருத்தின் நிரந்தர வெற்றிதான் தோழரே! உங்கள் துணிவுக்கும் வெளிப்படைத் தன்மைக்கும் எனது பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள்!

 50. திரு செங்கொடி,

  //பாதிக்கப்பட்டதனால் இந்தப் பதிவை எழுதவில்லை என்று தெளிவாகவே கூறியிருக்கிறேன், படிக்கவில்லையோ. அல்லது உங்கள் பார்வையில் இந்த இடுகை பாதிக்கப்பட்டதன் விளைவு என்பதாக தோன்றினால் அது இந்த பதிவில் எந்த இடத்தில் எப்படி வெளிப்படுகிறது என்று சுட்டிக் காட்டுங்கள். அது தான் நேர்மையானதாக இருக்கும்.//

  உங்கள் பதிவின் பெரும்பகுதி உங்களுக்கு நேர்ந்த பாதிப்பைக் குறித்தே பேசுகிறது.

  தவிர, கடையநல்லூர் பிரச்னை வினவு தளத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தில் நீங்களும் கலந்துக் கொண்டிருந்தீர்கள் என்று நினைக்கிறேன். அப்பிரச்னையில் உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால்கூட அவற்றை நீங்கள் அங்கேயே தெரிவிக்கலாம். எனவே இதையே ஒரு தனிப்பதிவாக, தனி விவாதமாக ஆக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

  மேலும், ஒரு மாதமாக பொதுப் பார்வைக்கு தடுக்கப்பட்டிருந்த உங்கள் இரண்டு தளங்களையும் மீண்டும் இயங்கச் செய்யும் போது அவற்றை தடுத்திருந்ததற்கான காரணத்தை விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என நீங்கள் எண்ணியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

  எனவேதான் உங்களின் இந்த இடுகை உங்களுக்கு நேர்ந்த பாதிப்பின் விளைவு என எனக்குத் தோன்றியது.

  நேர்மையான விவாதத்திற்கு நான் தயார், இன்ஷா அல்லாஹ். எதைக் குறித்து விவாதிக்க விரும்புகிறீர்கள், அல்லது எதிலிருந்து துவக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாகச் சொல்லி விடுங்கள்.

 51. நண்பர் இப்[ராஹிம்,

  மீண்டும் உங்களது திருகல்களைத்தான் காட்டியிருக்கிறீர்கள். ஃபத்வாவை நான் ஏற்கிறேனா இல்லையா என்பது இங்கு கேட்கப்படவே இல்லை. இஸ்லாத்தின் பெயரால் நடந்த இந்த மொள்ளமாரித்தனத்தை நீங்கள் ஏற்கிறீகளா? மறுக்கிறீர்களா? என்பது தான் கேள்வி. உங்களுக்குள் மதவெறி எவ்வளவு குடிகொண்டிருக்கிறது என்பதற்கு திருகித் திருகி நீங்கள் அளித்துக் கொண்டிருக்கும் இந்த பதில்களே சாட்சி.

 52. நண்பர் மரைக்காயர்,

  நடந்த பாதிப்புகளைக் கூறித்தான் இது சரியா என்ற கேள்வியை எழுப்பமுடியும்? இதில் முக்கியமான பகுதி நடந்து விட்ட அநீதி சரியா தவறா எனும் விவாதத்தின் மூலம், இது போல் அடாவடிகள் எதிர்காலங்களில் நடைபெறாமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம்? எனும் முயற்சிதான். ஆகவே, இது பாதிப்புகளைக் கூறி அங்கலாய்ப்பது அல்ல.

  வினவு தளத்தைத் தவிர வேறெங்கும் இதை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூற வருகிறீர்களா? மனிதநேயம் உள்ள எல்லாத் தளங்களிலும் இந்தக் கேள்வி எழுப்பப்பட வேண்டும். நான் வெளிப்படையாக கோரிக்கை வைக்கவில்லையே தவிர, நேர்மையான முறையில் இந்த மதவெறியை கண்டிக்கும் அனைவரும் இதை மீள்பதிவு செய்ய வேண்டும் என்பதே என் ஆவல்.

  ஆம். மீண்டும் தளம் திறக்கப்பட்ட பிறகு இதை விவாதப்பொருள் ஆக்க வேண்டும் எனும் எண்ணத்தில் தான் இருந்தேன். அந்த எண்ணத்தின் நோக்கம் வெறுமனே எங்களுடைய பாதிப்புகளை அறியச் செய்வது அல்ல. மாறாக இது போன்ற அநீதிகளை தடுத்தாக வேண்டும் எனும் நோக்கத்தில் தான்.

  விவாதம் புரிய ஒப்புக் கொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. தலைப்பை நீங்களே தேர்ந்தெடுங்கள். அது கடையநல்லூர் விவகாரமானாலும் சரி, அதற்கு அடிப்படையாக இருக்கும் மதவெறியானாலும் சரி. எனக்கு சம்மதமே.

 53. ///இஸ்லாத்தின் பெயரால் நடந்த இந்த மொள்ளமாரித்தனத்தை நீங்கள் ஏற்கிறீகளா? மறுக்கிறீர்களா? என்பது தான் கேள்வி. .//
  பகுத்தறிவை வளர்க்கிறோம் என்ற பெயரில் குர்ஆன் கூறும் சம்பவத்தை அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை இழிவுபடுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக பைபிள் சம்பவத்தையும் அதனோடு இணைத்து ,அது சொன்னால் மக்களுக்கு புரியாது என்பதால் ஆபாச படங்கள் போட்டு ,அத சம்பவங்கள் குர் ஆனில் இருப்பது போல் காட்டியுள்ள மொள்ளமாரித்தனத்தை நீங்கள் ஏற்கிறீர்களா? கண்டிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள்

 54. நண்பர் இப்ராஹிம்,

  திருகல்கள் தீர்ந்துபோய் தற்போது முருகல்களை முடுக்கி விட்டிருக்கிறீர்களா? ஆனால் உங்களைப்போல் நேர்மையற்ற செயல்களை நான் செய்வதில்லை.

  \\குர்ஆன் தெளிவான, நன்கு விவரிக்கப்பட்ட, முரண்பாடற்ற புத்தகமாக இருப்பதனால் இதற்கான பதிலை பெற நாம் தலைகீழாக நின்றாலும் குர்ஆனிலிருந்து கிடைக்காது. எனவே முந்தைய வேதமான பழைய ஏற்பாட்டிற்குச் செல்வோம்// அந்த கட்டுரை தெளிவாக இப்படி குறிப்பிட்டிருக்கிறது. குரானும் பழைய ஏற்பாடும் கூறும் ஒரு கதையை ஒன்றிணைத்து முழுமைப்படுத்தி அந்த இடுகை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் என்ன தவறு இருக்கிறது என்று ஏற்கனவே நான் கேட்டிருக்கிறேன். இப்போது நீங்கள் சொல்லுங்கள். அந்தக் கட்டுரையில் நீங்கள் கொலைவெறி கொள்ளும் அளவுக்கு என்ன தவறு இருக்கிறது?

  இதற்குமேலும் உங்களால் இந்த இடுகை குறித்து பதில் கூறுவதை தள்ளிப் போடமுடியாது.

 55. செங்கொடி
  இந்தக்கட்டுரையை நான் வாசித்த பின் எனக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள, உங்களை நலிவடையச் செய்த, மற்றும் அதன் பின் நீங்கள் வேறு புகலிடம் தேடி அபயமாகி தற்போது வரை அனுபவித்த நிகழ்வுகள் யாவும் வித்தியாசமாகப் படவில்லை.
  உங்களின் நிலையை இங்கே சவூதியில் நினைத்தால், நீங்கள் அச்சப்பட்டு சென்றிருப்பது இந்த நாட்டின் மதநிந்தனை சட்டத்தின் பிடியில் சிக்கினால் விளையும் துன்பத்திற்குப் பயந்து தான்…
  சவூதி அரசின் சட்டங்கள் கடுமையானவை அதே நேரம் அவை வாழ்க்கை நெறியை செம்மைப் படுத்த வேண்டி முஸ்லிம்களின் மார்க்கத்தொடு கூடிய ஷரீஅத் மற்றும் தற்காலத்திய இஸ்லாமிய அறிஞர்களினது நெறிகாட்டுதலுக்கு உட்பட்டு வடிவமைக்கப்பட்டது.
  சவூதியில் வாழும் இஸ்லாமிய மற்றும் பிற மத அன்பர்கள் கட்டாயமாக இநநாட்டுக்குள் வாழும்போது இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டு தான் ஆக வேண்டும்… இந்நாட்டில் இருந்து கொண்டு இந்நாட்டில் தனது உழைப்பை செலுத்தி ஈட்டிப்பெரும் செல்வத்தை நம்பி வாழும் நண்பரே இங்கிருக்கும் வரை அதன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டு தான் வாழ வேண்டும் பிறரைப் போல் மற்றபடி, நீங்கள் காட்டு மிராண்டித்தனமான அச்சுறுத்தல் எனச்சொல்வதன் அடிப்படை ஊற்றுக்கன் சவூதி அரசின் சட்டத்தை பற்றித் தான். அதை நீங்கள் அந்நாட்டின் அரசாங்கத்திடம் கேட்கவேண்டும்.
  “இந்த புள்ளியிலிருந்து தான் கம்யூனிஸ்டுகள் மதங்களை எதிர் கொள்கிறார்கள். இதில் இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் விலக்கு இருக்க முடியுமா? அதேநேரம் இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது ஓர் ஒடுக்கப்படும் மதம். இந்துத்துவ பாசிசங்கள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஏனைய மதங்களை தமக்கிசைவாக்க கொடுக்கும் நெருக்கடிகளின் எதிர்விளைவு தான் உருத்திரிந்து மதவெறியாக உருவெடுக்கிறது. அந்த வகையில் இந்து பாசிசங்களின் அடக்குமுறைகளிருந்து ஏனைய மதங்களின் பாதிப்புகளை தடுக்கும் தேவையும் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கிறது.”
  எனக்கூறும் உங்களின் வாசகங்கள் உண்மைதான் பாசிச கட்சிகளின் பயங்கரங்களிளிருந்து சிறுபான்மை சமூகங்களை காக்கும் உங்களது காலாகாலமாக நீங்கள் நிகழ்த்தும் கம்யுனிச அரசியல் செயல்பாடுகள் நம்பக்கூடியது தான். அதற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டு நீங்கள் எங்களின் நபிமார்களைப் பற்றி அவதூறாக விமர்சிக்கையில் அது சரி என்று சொல்வதற்கு எங்களைக் கட்டாயப்படுத்துகிறீர்களா கலீல்.
  “இஸ்லாமிய மதவாதிகளுக்கு அடிப்படைகளோ, கொள்கைகளோ அதை விமர்சனம், சுயவிமர்சனத்தின் ஊடாக பற்றியிருக்கும் உறுதியோ எந்த விதத்திலும், எந்த விகிதத்திலும் அவசியமில்லை. அவர்கள் பார்வையெல்லாம் தான் நம்பிக் கொண்டிருக்கும் ஒன்றை இவன் எதிர்க்கிறான் என்பதுதான். அதைத்தவிர வேறொன்றுமில்லை”
  இவ்வாறு நீங்கள் உங்கள் கட்டுரையில் சொல்லியிருப்பது தவறானது.. அதை நான் உங்களுக்கு சொல்லவே தேவையில்லை இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்கள் அடிப்படையில் பிற மத ஆன்மீக குருமார்களுடன் இஸ்லாமியர்களுடைய விவாதக்களங்கள் இன்று நேற்று நடப்பது அல்ல.. பன்னெடுங்காலமாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது அவையெல்லாம் ஆரோக்கியமான விவாதங்கள் பக்குவப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள் பண்போடு நடந்து புரிந்துகொள்ளும் விஷயம். அது உங்களுக்கு சரிப்படாது… நீங்களும் உட்பட மாட்டீர்கள்… காரணம் விமர்சனம் என்ற பேரில் சட்டையில் சேறு அடிப்பது அந்தச் சட்டையையே கிழிப்பவர்களுமல்லவா நீங்கள்….
  “கடையநல்லூர் வாசிகள் தங்கள் கருத்துகளை இதில் பதிவிட்டே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் நடந்திருப்பது இஸ்லாத்தை முன்னிட்டு, இஸ்லாமியர்களால், இஸ்லாத்திற்காக நடத்தப்பட்டிருக்கிறது. இதில் கருத்து சொல்லும் அவசியம் எனக்கில்லை என்று யாரும் ஒதுங்க முடியாது. இதில் இரண்டே நிலைப்பாடு மட்டுமே இருக்க முடியும். ஒன்று, நிகழ்ந்த அந்த காட்டுமிராண்டித்தனத்தை ஆதரிக்க வேண்டும். இரண்டு, நிகழ்ந்த அந்த காட்டுமிராண்டித்தனத்தை எதிர்க்க வேண்டும். இது தவிர்த்த மூன்றாவது நிலை என்றோ நடுநிலைமை என்றோ எதுவும் இருக்க முடியாது. இத்தனையையும் மீறி தங்கள் கருத்துகளை இங்கு பதிவு செய்வதிலிருந்து இஸ்லாமியர்கள் நழுவினால் தங்கள் மதம் காண்டுமிராண்டித்தனமானது என்பதையும், தாங்கள் இன்னும் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மீளவில்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள் என்பதே பொருள்”

  நான் கருத்துச் சொல்லாமல் ஒதுங்க விரும்பவில்லை. நடந்தது கா……..த்தனம் என்பது உங்களது கருத்து. அது ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதால் விளைந்த வார்த்தைக் குறியீடு..
  தாய் தன் பிள்ளையைக் கண்டிப்பது போல ஒரு ஒன்றுபட்ட சமூகத்தில், நான் உங்களோடு வாழ வேண்டும் என விரும்பும் ஒரு நபருக்கு இவ்விதம் இருந்தால் தான் நீங்களும் எங்களுடன் சேர்ந்து வாழ முடியும் என, அவரின் குற்றத்தின் அடிப்படையில் அவருக்கு இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்க நெறிகளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட முடிவு… அவர் அதனை ஏற்றுக் கொண்டு நான் இஸ்லாமியன அல்ல என்று போனாலும் அதனால் கடையநல்லூர் காரர்களுக்கு நட்டம ஒன்றும் இல்லை. அவ்விதம் தனியனான பின் அவர் சமூகத்தோடு உறவில் உள்ளவர்களின் அன்பை, அவர்களின் உதவியை, உறவுப் பிணைப்பை எதிர் பார்ப்பது தவறு… இஸ்லாத்தை மறுத்த நபர் இஸ்லாமியனாக தன்னைக் காட்டி அவர் மணமுடித்த மனைவி “ஒரு இஸ்லாமிய மறுப்பாளனுடன் தான் வாழப்பிரியப் படவில்லை” என்பதால் பின்னர் அவர் இஸ்லாத்தில் இணைந்ததாகச் சொல்லி தனது கம்யூனிசச் சட்டையில் காறி உமிழ்ந்துவிட்டு சக மனிதனாக வாழ்கிறார் அவ்வளவு தான்.
  இங்கு விவாதிக்க ஒன்றும் இல்லை. இஸ்லாமிய நெறிகளிந அடிப்படையில் வாழும் அன்பான மனைவியும் இஸ்லாமிய நெறியின் பால தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் உங்களது குடும்ப உறுப்பினர்களும் உங்களுக்கு உங்களின் கண்களுக்கு இஸ்லாமியர்களாய் தெரியவில்லையா… அவர்கள் அனைவரும் கா……..ண்டிகளா… . உங்களின் பாஸ்போட்டில் இஸ்லாமியன் எனக் குறிப்பிட்ட இடத்தில் இறை மறுப்பாளன் எனக் குறிப்பிட்டு வானூர்தி ஏறி இனி எந்த முதலாளித்துவ நாட்டுக்கும் பாடு படக் கிளம்புங்கள்… இரட்டை வேடம் வேடம் போடுவது அசிங்கமானது….
  இஸ்லாமியம் மனிதனை கண்ணியமாக வாழச் சொல்லும் மார்க்கம். அனைத்து உறவுகளுடனும் அன்பை விதைக்கச் சொல்லும் மார்க்கம். இஸ்லாமியனாக நான் இருப்பதென்பது எனக்கு இந்த உலகில் அனைத்து விசயங்களையும் காட்டிலும் பெருமைக்குரியது…. உங்களுடைய கண்ணைக் கட்டிக்கொண்டு கம்யூனிசக் கானகத்தில் அலையும் போக்கு தான் நீங்கள் குறிப்பிடும் அந்தக் ………த்தனம். இவ்வளவு நடந்த பின்னும் தெளிவு பெறாதது உங்களின் துரதிருஷ்டமே….அந்தக் …….த்தனத்திலிருந்து நீங்கள் இன்னும் மீளவில்லை என்பதை நான் மனதார ஒப்புக் கொள்கிறேன்.
  இதையெல்லாம் வாசித்து விட்டு நீங்கள் என்ன எழுதுவீர்கள் என்பது கூட எங்களுக்குத் தெரியும் உங்களுக்கு இதற்கு பதில் வரையக்கூட எனக்கு மனம் வரவில்லை.. உணமையான கம்யூனிச வாதிகளுடன் மட்டுமே விவாதிக்கலாம் உணகளைப்போன்ற இஸ்லாமியப் பேர்தாங்கிகளுடனும் முதலாத்துவ நாட்டில் பணியை நம்பி வாழ்ந்துகொழுக்கும் போலியானவர்களுடன் அல்ல….
  “எதிர்ப்பவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். அவர்கள் நம்பிக் கொண்டிருப்பது போல் உலகமும் யதார்த்தமும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்”…. இது உங்களுக்குத்தான்.
  ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

 56. செங்கொடி
  இரைஇல்லா wasலாம் என்ற அத்தளம் ,குறையில்லா இஸ்லாமை பற்றித்தான் விமர்சித்து வந்தது..தனது விமர்சனத்திற்கு குர்ஆனில் உள்ள வசனங்களோடு அவர் முடித்திருந்தால் அவரை விமர்சகராக எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் குர்ஆனை இழிவுபடுத்திக் காட்டவேண்டும் என்ற வெறியோடு மத வெறியை விஞ்சும் நாத்திக வெறியோடு எழுதியது மொள்ளமாரித்தனம் இல்லையா? அதில் அந்த ஆபாச படங்களை போட்டு கேவலப் படுத்த நினைத்தது மொள்ளுமாரித்தனம் இல்லை என்றால் ,கடையநல்லூர் உழைக்கும் மக்கள் உள்ள அந்த ஜமாஅத் நடந்து கொண்டதிலும் மொள்ளுமாரிதனம் இல்லை என்பது சரியாகும.

  உங்களது மனசாட்சியை என் சாட்சியாக கேட்கிறேன்.80௦ சதவீத மக்கள் கொலை இலக்கு கலக்கம் அமைப்பினர் உள்ள மடையநல்லூரை சேர்ந்த நான் ரசியாவில் வேலைப் பார்க்கிறேன் .அங்கு ஜனநயாக இலக்கணம் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்.நான் அவரையும் அவரது கம்யுநிசத்தையும் விமர்சித்து ஒரு இணைய தளத்தில் எழுதிவருகிறேன் ,[முடியுமா? என்பது வேறு விஷயம்] என்னுடைய கட்டுரைகளை பக்கத்தூர்சா தனது முகநூலில் அல்லது துண்டு பிரசுரம் மடையநல்லூரில் வெளியிடுகிறார் .இப்போது என்ன நடக்கும்? நான் துருக்கிக்கு செல்லுகிறேன் என்று திசை மாற்றி இந்தியாவுக்கு வருவதை நினைத்து பார்க்க முடியுமா? சைபிரீயாவில் எனது ரத்தம் உறைந்திருக்காதா? மம்பக்கத்து கடை பக்கத்தூர்சா வை சிக்கன் 65 போட்டிருக்க மாட்டர்களா? இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் உங்களது நியாய உணர்வை பார்ப்போம். திருகல்கள் முருகல்கள் என்ற முனகல்கள் வேண்டாம்

 57. நண்பர் அப்துல்லா,

  மனமே இல்லாமல் ஒப்புக்கு விவாதம் செய்ய வரவேண்டாம். நேர்மையாக பதில் கூறும் ஆர்வமிருப்பின் தொடரலாம். பதில் கூறுவதில்லை என முடிவு செய்துவிட்டால் அங்கு விளக்கத்திற்கு இடமில்லை.

  நீங்கள் நினைப்பது போலன்றி துன்பத்திற்குப் பயந்து ஓடி ஒளிவதில்லை நாங்கள். மனிதப் போர்வையிலிருக்கும் மிருகங்களுக்கு அஞ்சியே ஓடிக் கொண்டிருக்கிறோம். சௌதி அரசின் சட்ட திட்டங்கள் என்னை கேள்விக்கு உட்படுத்தவும் இல்லை, அதனால் எனக்கு பிரச்சனை ஏற்படவும் இல்லை. ஆனால் அப்படியான பிரச்சனையை ஏற்படுத்த முயன்றார்கள் சிலர். மொழிபெயர்ப்பு என்ற போர்வையில் எதையும் எழுதித்தரலாம் அவர்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும், இஸ்லாத்தை விமர்சித்து நான் எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளை படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் கூறுங்கள் அதில் செய்யப்பட்டிருப்பது விமர்சனமா? அவதூறா? இஸ்லாம் குறித்து எந்த விமர்சனமும் யாரும் செய்யக் கூடாது என்றால் அதை நீங்கள் உங்களுக்குள் தான் வைத்துக் கொண்டிருக்க வேண்டும், பொதுவெளிக்கு கொண்டு வந்திருக்கக் கூடாது. ஒருவேளை அவதூறு என்று கருதினால் கூட அதை நீங்கள் மறு விளக்கங்கள் மூலம் தான் கையாண்டிருக்க வேண்டுமேயன்றி வன்முறையின் மூலமல்ல. ஆனால் பலநூறுஆண்டுகளாக இங்கு வன்முறை கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை எந்த அடிப்படையில் உங்களால் சரிகாண முடியும்? கூறுங்களேன்.

  நான் இங்கு காட்டுமிராண்டித்தனம் என்று குறிப்பிட்டிருப்பது, தோழர் துராப்ஷாவை பொய்யாக குற்றம் சாட்டி, அதனை விளக்குவதற்கு வாய்ப்பளிக்காமல் தாக்குதல்கள் மூலம் தண்டனையளித்திருப்பதைத்தான். அதில் உங்களால் உடன்பாடு கொள்ள முடியாதபட்சத்தில், பொருத்தமான சொல்லாடலை நீங்கள் தெரிந்தெடுத்தால் அதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை, அது பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதைத்தவிர. நான் யாரை காட்டுமிராண்டிகள் எனக் குறிப்பிடுகிறேன்? பொய்க் குற்றம் சாட்டி, விளக்கமளிக்கும் வாய்ப்பை மறுத்து, கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பளித்து தாக்குதல் நடத்தினார்களே அவர்களை, நேர்மையாக பரிசீலிக்காமல் மதம் என்ற ஒரே காரணத்திற்காக அதை ஆதரிக்கிறார்களே அவர்களை. உங்கள் வசதிக்காக அதை கடையநல்லூர் இஸ்லாமியர்கள் அனைவரும் என்று வரட்டுத்தனம் காட்டாதீர்கள். நடந்தது தவறு என்று நேர்மையாக ஒப்புக் கொள்ளும் துணிவுள்ளவர்கள் வெகுசிலர் கடையநல்லூரில் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறியாமலில்லை.

  மீண்டும் மீண்டும் உங்கள் நபிமார்களை அவதூறாக விமர்சித்தோம் என்று கூறி உங்கள் பெயரை நீங்களே கொயபல்ஸாக மாற்றிக் கொள்ள வேண்டாம். என்ன அவதூறாக விமர்சிக்கப்பட்டிருந்தது சுட்டிக் காட்ட முடியுமா? தனிமனிதரை விமர்சிப்பதும் பொது மனிதரை விமர்சிப்பதும் வேறு வேறானது. உங்கள் விருப்பத்திற்கிசைய நீங்களாகவே முடிவு செய்து கொண்டு அதை எங்களையும் நம்புமாறு உங்களால் பணிக்க முடியாது. உங்கள் நபிமார்கள் மீது அவதூறு கூறப்பட்டிருந்தால் இது அவதூறு என்று சுட்டிக் காட்டுங்கள், அது மெய்யாகவே அவதூறாக இருந்தால் திருத்திக் கொள்வதற்கும் திருந்திக் கொள்வதற்கும் நாங்கள் தயார். ஆனால் அவதூறு என்று நீங்கள் ஒன்றை ஆய்வுகளின்றி நம்பிவிட்டால் அது உங்களுக்கு தடியை தூக்கும் உரிமையை தந்துவிடும் என்பதை எங்களை ஏற்கச் சொல்கிறீர்களா?

  எது இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்க நெறிகளை பேணி எடுக்கப்பட்ட முடிவு? வழங்கப்பட்ட ஃபத்வாவின் மொள்ளமாரித்தனம் குறித்து எழுதப்பட்டிருப்பதை படிக்க வில்லையா நீங்கள்? அது எப்படி? நீங்கள் அவதூறு என்றால் அது அவதூறு. நீங்கள் ஒழுக்க நெறி என்றால் அது ஒழுக்க நெறியா? எந்த விதத்தில் அது அவதூறு? எந்த விதத்தில் இது ஒழுக்க நெறி? பதில் கூற முடியுமா?

  இஸ்லாமிய மனைவி, கம்யூனிச சட்டை என நீங்கள் கூறியிருப்பதெல்லாம், உண்மைகளோடு உங்களுக்கு ஒரு தொடர்பும் இல்லை என்பதை சுட்டிக் காட்டும் தரவுகள். இஸ்லாமிய சமூகத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அவன் இஸ்லாமியனாகவே வாழ்ந்தாக வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் இஸ்லாமியன் என்பது அவனது வெற்று அடையாளமாக இருக்கும் அவ்வளவு தான். பெயருக்கு இஸ்லாமிய நம்பிக்கையை கொண்டிருந்து செயலில் இஸ்லாத்தோடு துளியும் தொடர்பில்லாத ஒருவனை இவ்வாறு நீங்கள் வன்சுட்டுவதில்லை. காலனிய இந்திய அரசில் பிறந்து விடுதலை போராட்ட வீரனாக இருக்கும் ஒருவன் தான் பெற்றிருக்கும் கடவச்சீட்டில் பிரிட்டீஷ் இந்தியா என்று குறிப்பிட்டிருந்தால் அவன் காலனியாதிக்கத்தை ஏற்கிறான் என்று எவ்வாறு கூற முடியாதோ அதுபோலவே நீங்கள் குறிப்பிடும் இஸ்லாமியன் என்பதும். சமூக பிணைப்புகளை மதமாகவும், மதப் பிணைப்புகளை சமூகமாகவும் மொழிமாற்றம் செய்யாதீர்கள்.

  யார் இரட்டை வேடம் போடுவது என்பதை உங்கள் வீட்டில் நிலைக்கண்ணாடி இருந்தால் அதற்கு முன்னின்று கேட்டுக் கொள்ளுங்கள். நிகழ்ந்த விளைவுகளையும், அதற்கான வினைகளையும் அவை பொருந்துகின்றனவா என்பதையும் உங்களுக்குள் சீர்தூக்கிப் பாருங்கள். அப்போது புரியும் இரட்டை வேடம் என்றால் என்ன? அது யாருக்கு பொருந்துகிறது? என்பது.

  இதற்கு நீங்கள் பதில் கூறுவீர்களா? அமைதியாகி விடுவீர்களா? என்பது உங்களுள் இருக்கும் நேர்மையைப் பொருத்தது. பதில் கூறும்பட்சத்தில் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டின் தரம் ஒருபோதும் மதவாதிகளால் எட்ட முடியாதது என்பதை நிரூபிக்க ஆசை.

 58. நேர்மைக்கும் தனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. மதவெறியில் ஊறிக்கிடக்கும் அற்பப் புழுக்கள் தாம் என்பதை நிரூபித்துக் காட்டியதோடு மட்டுமல்லாமல், அதை ஊருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிய இப்ராஹிமுக்கு நன்றி

 59. அற்புதம் செங்கொடி!

  இப்ராகீம் போன்ற அவதூறு அரைவேக்காடுகளுக்கும் அப்துல்லாஹ் போன்ற போலிப் புத்திஜீவி இரட்டை வேடதாரிகளுக்கும் ஒரே சமயத்தில் மிக நன்றாகவே பதிலளித்து வெளுத்து வாங்குகின்றீர்கள். சபாஷ்!

  ஒருபுறம் நிகழ்ந்தவைகள் கவலையைத் தந்தாலும் இப்படி உங்களுடன் கனவான் வேஷம் போட்டு விவாதித்துக் கொண்டிருந்த கபடதாரிகளின் முகமூடிகள் இப்போது அசிங்கமாகக் கிழிந்து தொங்குவதற்கான களத்தை அமைத்துத் தந்ததும் அந்த நிகழ்வுகளல்லவா? அதற்காக அவற்றை வரவேற்கிறேன். இவர்களைப் போன்றவர்களிடம் நெஞ்சில் உரமோ நேர்மைத்திறனோ கிடையாது.

  சுருக்கமாகச் சொன்னால் ‘நான் சொல்கிறேன் நீ நம்பு’ என்பவர்களிடம் ‘நீ சொல்லு நம்புவதா இல்லையா என்பதைப் பரிசீலிக்கின்றோம்’ என்று கூறும் நாம் விவாதித்து வீணாகிக் கொண்டிருக்கின்றோம்.

 60. இன்னமும் இந்த வெறியர்கள் , நண்பர் துரப்ஷா அந்த கட்டுரையை எழுதியது போலவும், சம்பந்தம் சம்பதமே இல்லாமல் ரஷ்யா – ஸ்டாலின் கதையாடுவதும், சௌதி சட்டங்கள் பற்றியும் பினாத்துவதில் இருந்தும் இவர்கள் யார் என்று அவர்களாகவே காட்டிக்கொண்டிருகின்றனர்.

 61. செங்கொடிக்கு
  இங்கு பதிலளிக்க வேண்டி நிர்பந்தப்படுத்தியதால் மட்டும் தான் பதிலளித்தேன்.. எனக்கு டீக்கடை பெஞ்சு அரட்டைகளில் ஈடுபடுவது அறவே பிடிக்காது.. அது எனக்கு அவசியமும் இல்லை. மக்கட்டி துராப்சா சம்பந்தமான கடையநல்லூர் ஜமாத்தின் முடிவு அவரைப்போல செயல்படும் அனைத்து கடையநல்லூர் வாசிகளுக்கும் பொருந்தும். அது மிகச் சரியானதும் கூட,
  கம்யூனிசமோ மதங்களோ பிற கலாச்சாரங்களில் வடிவெடுத்த அனைத்து வகை இயக்கங்களும் அதனை கடைப்பிடிப்பவர்களுக்கு போதிக்கும் அடிப்படை ஒழுங்கு பிறரைக் காயப்படுத்தாமல் வாழப் பணிப்பது தான்.
  சாதாரணமான ஒரு பிரச்னையை அதுவும் முடிந்துபோன ஒன்றை, மிக எளிதாக தீர்வு செய்யப்பட பின்பு ஒரு குறிப்பிட்ட ஊரின் பெயரைப் போட்டு இணையதளத்தின் அனைத்துப் புலங்களிலும் உலவும் கம்யூனிசவாதிகளின் கவனத்துக்கு தவறாகத் திரித்துச் சொல்லி கடையநல்லூர் மீது களங்கம் கற்பிக்க மேலும் மேலும் ஏதாவது எழுதுவது என்பது கடைந்தெடுத்த மடத்தனம்…
  அவற்றின் பின்னோட்டங்களில் நாங்கள் காணும் அசிங்கமான மறுமொழிகள் மனத்தைக் காயப்படுத்துகின்றன. நீங்கள் நிறைய இன்னும் மனித நாகரீகம் கற்றுக்கொள்ளப் பாக்கியுள்ளது. கடையநல்லூர் பற்றி அங்கு வாழும் மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டி வரையும் உங்களின் அனைத்து பதிவுகளிலும் நீங்கள் விளக்கம் தா எனக்கேட்பது வெற்றுக்கேள்வியாகவே படுகிறது. அவ்விதம் நாம் ஏதாவது சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை உங்களிடம் இல்லை. இஸ்லாமியப்பெயரில் பாஸ்போட் பற்றிக் குறிப்பிட்டால் பிரிட்டீஷ் இந்தியா பற்றியும், இஸ்லாமிய சமூகத்தில் வளர்ந்த உமது வாழ்க்கை குடும்ப சூழல் பற்றி சொன்னால் உண்மை எதுவும் எனக்கு தெரியாது எனவும்…. கடையநல்லூர் நிகழ்வுகளை நடந்தது என்ன என்பது பற்றியும் அப்படி செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவாகச் சொன்ன பின்பும் அதையே மொள்ளமாரித்தனம் எனக் குறிப்பிட்டு வார்த்தையாடும் உம்முடன் களத்தில் நிற்க எனக்கு அசிங்கமாக உள்ளது… எனது பொன்னான மணித்துளிகள் எல்லாம்…
  மொத்தத்தில் விழலுக்கு இறைத்த நீர்.

 62. ///அந்த ஆபாச படங்களை போட்டு கேவலப் படுத்த நினைத்தது மொள்ளுமாரித்தனம் இல்லை என்றால் ,கடையநல்லூர் உழைக்கும் மக்கள் உள்ள அந்த ஜமாஅத் நடந்து கொண்டதிலும் மொள்ளுமாரிதனம் இல்லை என்பது சரியாகும.///
  இதை மறுக்காமல் ஒத்துக்கொண்ட உங்களுக்கும் ,”நேர்மைக்கும் தனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. மதவெறியில் ஊறிக்கிடக்கும் அற்பப் புழுக்கள் தாம் என்பதை நிரூபித்துக் காட்டியதோடு மட்டுமல்லாமல், அதை ஊருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிய செங்கோடிக்கு நன்றி

 63. கடையநல்லூர் சம்பவம் குறித்து நியாயமான பல கேள்விகளை எழுப்பியுள்ளீர்ள். ஆனால் உங்களின் நியாமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விவாதத்தை திசை திருப்ப முயல்வதோடு இஸ்லாமிய மதவெறியால் தங்களைப் போன்றோருக்கு வரும் அச்சுறுத்தல் மற்றும் ஆபத்துகளை புலகாங்கிதம் கொண்டு மகிழ்கின்ற ஒரு சாடிச மனப்பான்மை இங்கே பின்னூட்டமிட்டுள்ள இஸ்லாமியர்களிடம் காணமுடிகிறது.

  இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு மட்டுமல்ல இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அதே வேளையில் ஏதோ சில காரணங்களுக்காக குர்ஆனின் வழிகாட்டுதல்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தாத அப்பாவி இஸ்லாமியர்களுக்கும் இத்தகைய இஸ்லாமிய மதவெறியர்களால் அச்சுறுத்தல்களும் ஆபத்துகளும் ஏற்படும் – ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.

  இனக்குழு சமுதாயத்தில் அதிலும் வர்த்தகப் பிரிவினரை முன்னிலைப்படுத்தி தோன்றிய இஸ்லாம் எல்லாக் காலத்துக்கும் – பல்வேறு வர்க்கப் பிரிவினருக்கும் ஏற்புடையது என பலரும் வாதிடுகின்றனர்.

  உற்பத்தி முறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியும் அதையொட்டி உற்பத்தி உறவுகளில் உருவாகும் மாற்றங்களும் தவிர்க்க முடியாதவை. இத்தகைய மாற்றங்களால் சமூக ஒழுங்கு மாறுவதும் தவிர்க்க முடியாதவை. இஸ்லாம் மட்டுமல்ல இன்ன பிற மதங்களின் கோட்பாடுகளை கடைபிடிப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளதால்தான் சில-பல மதக்கோட்பாடுகளை கைகழுவி வருகிறார்கள்.

  அதனால்தான் இத்து வரும் மதக்கோட்பாடுகளை தூக்கி நிறுத்த நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை துணைக்கு அழைக்கிறார்கள். அது இயலாத போது மதவெறிக்கு ஆளாகிறார்கள். எங்கே மதவெறி அதிகமாக தலைதூக்குகிறதோ அங்கே அவர்கள் தங்களின் மதக்கோட்பாடுகளுக்கும் சேர்த்தே சவக்குழி தோண்டுகிறார்கள்.

  இஸ்லாம் கோட்பாடுகளுக்கு இஸ்லாத்தை விமர்சிப்பவர்களால் வரும் ஆபத்தைவிட இஸ்லாம் மதவெறியர்களால் வரும் ஆபத்து மிக அதிகம் என்பதை பாவம் அவர்கள் அறியாமல் உள்ளார்கள். அவர்களே அவர்களுக்கு குழிதோண்டிக் கொள்ளும் போது அந்த அல்லாவே நினைத்தாலும் குர்ஆனின் கோட்பாடுகளை முழுமையாக – அதன் அசலான வடிவத்தில் நடைமுறைப்படுத்த முடியாது.

 64. ///விவாதம் புரிய ஒப்புக் கொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. தலைப்பை நீங்களே தேர்ந்தெடுங்கள். அது கடையநல்லூர் விவகாரமானாலும் சரி, அதற்கு அடிப்படையாக இருக்கும் மதவெறியானாலும் சரி. எனக்கு சம்மதமே.////
  “இஸ்லாம் மற்றும் அதன் அவதூறு எழுத்தாளர்களும் ரசிகர்களும் ” என்று தலைப்பு வைக்கலாமே

 65. அடேய் வெண்ணை அப்துல்லா. உன் லாஜிக்படி பார்த்தால் இந்தியாவில் பெரும்பான்மை ஹிந்துக்கள் சொல்றபடி தானேடா நீயும் வாழணும்? உனக்கு வந்தா ரத்தம். அடுத்தவனுக்குன்னா தக்காளிச் சட்னியா?

 66. இபுராகிமே ! மலக்குகளை புணரக்கேட்ட ஆண்களிடம் தன் மகள்கள் இருவரையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று லூத் கூறிய இடத்தை சுட்டிக்காட்டியே லூத் ஒரு லூசு என்று எழுதியதாக தஜ்ஜால் விளக்கம் கொடுத்துள்ளதை கவனிக்கவில்லையா? பாமரனுக்கு மறுப்புரையில் படி.

  அது சரி லூத்தின் வாரிசு முகம்மது சொல்றதையும் படி.

  புகாரி 2229:
  அபு சயீத் அவர்கள் கூறியதாவது. நான் நபியவர்களிடம் அமர்ந்திருக்கும்போது “அல்லாஹ்வின் தூதரே, எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் நாங்கள் அஸ்ல் செயலைச் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்“அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்கள் மீது கடமையில்லை. (அதாவது இதற்கு தடை யில்லை) ஆயினும் அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும். ஏனெனில் உருவாகும் என்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.

  கன்னுபோடாத இளம் பசுமாடாக சந்தையில் பெண்களை விற்க உன் முகம்மது கூறியுள்ளதற்கு பதில் சொல்.

  கிறித்துவர்கள் லூத் பற்றி வரைந்துள்ள படங்கள்தான் அவைகள். அவைகளில் இன்னும் அசிங்கமான அதாவது நம்ம ஓவியர் ஹூசைன் இலட்சுமியை நிர்வானமாக வரைந்தாரே அதுபோல உள்ளபடங்களும் உள்ளன. நாகரீகம் கருதியே அரசல் புரசாலாக உள்ள படத்தை வெளியிட்டுள்ளோம்.

  ஜப்பான்காரன் அமெரிக்காகரன் என்று உளறி புத்தர் சிலையை வெடிவைத்து தகர்த்த தற்கு நியாயம் பேசுறியே, புத்தர் சிலையை உடைத்ததற்கு புத்த மதத்தினர் உன் குர்ஆனை எரித்தால் நீ என்ன செய்வாய்? உண்மையில் அவர்கள்தான் அன்பை போதிப்பவர்கள். உன்போன்றோர் மதவெறியர்கள்தான்.

 67. இபுராகிமே ! பைபிள் திருத்தப்பட்டது என்ற செய்ந்த ரெக்காடையே தேய்க்காதே. திருத்ப்பட்டது என்றால் திருத்தப்படாத பைபிளை கொண்டு வந்து வைத்துவிட்டு சாமியாடு.

 68. மூமின்களே காபிர்களே சனாதிக்காக்களே..

  இஸ்லாம் ஒரு மதமா மார்க்கமா? மாபியா கும்பலா? என்ற பெயரில் தாவா செய்து ஒரு அழகிய ஈமாந்தாரி கட்டுரை எழுதியுள்ளேன்.

  இந்த பதிவுக்கு தொடர்பானது என்பதால் அதனை இங்கே குறிக்கிறேன்.

 69. இந்த வெண்ணைகளிடம் விவாதம் என்ன வேண்டிகிடக்கு. இவர்களுக்கு நாம் பத்தவா விதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 70. மரியாதை மிக்க நந்தன் அவர்களே !உங்கள் மதி விரியட்டும்
  லூது நபி அவர்களுடைய அந்த நிகழ்வு நீங்கள் எழுதியது போன்று சரி கண்டாலும்
  ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பத்தாவது வகுப்பு வரை எந்த மாணவர்களையும் பெயிலாக்கக் கூடாது மாணவர்கள் அடிக்கக் கூடாது ,அவர்களுடன் மாதம் ஒருமுறை கவுன்சிலிங் நடத்த வேண்டும் ,பள்ளியில் புகார் பெட்டிவைக்க வேண்டும் என்று அரசு சொன்னால் முதல்வர் சரியான லூசு என்றுதான் சொல்லியிருப்பார்கள்.இது மட்டுமல்ல ,மக்களின் எத்தனயோ பழைய பழக்கங்களை இப்போது செய்தால் அவர்களை லூசு என்று சொல்லுமளவுக்கு மாறிவிட்டன.பராசக்தி வசனங்கள் போன்று இப்போது வசன படம் எடுத்தால் அவர்களையும் லூஸ் என்றே கூறுவார்கள்.லூது நபி காலத்தில் அவர்களது சமுதாயம் எப்படி இருந்தது என்பதை முழுமையாக அறியாமல் அதைப் பற்றி விமர்சிப்பது அவதூருவாக இருக்கும்.இங்கே மக்களுக்கு ஓரின சேர்க்கை கூடாது என்பதர்க்க மட்டுமே சில குறிப்புகள் எடுத்து காட்டப் பட்டுள்ளது,ஆகவே அதனுடன் நிறுத்திக் கொள்வதே அறிவுடமை.
  “என் சமுதாயமே ,இதோ என் புதல்விகள் உள்ளனர் அவர்கள் உங்களுக்கு தூய்மையானவர்கள்.அல்லாஹ்வை அஞ்சுங்கள்.எனது விருந்தினர் விசயத்தில் என்னை கேவலப் படுத்தாதீர்கள் .உங்களில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா?”என்று கேட்டார்.இந்த வசனத்தைத்தான் அவர் விமர்சிக்கிறார்.அப்படியெனில் ,இந்த வசனத்தில் உள்ள ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு ,அடுத்த வார்த்தைகளை கண்டு கொள்ளாமல் விடுவதுதான் அறிவுடைமையா? தஜ்ஜால் நல்ல சிந்தனையாளராக இருந்தால் அவர்கள் உங்களுக்கு தூய்மையானவர்கள் என்ற வார்த்தைக்கும் உங்களில் ஒரு ஆண்மகன் இல்லையா என்ற வார்த்தைக்கும் விளக்கம் தந்திருக்க வேண்டும்.

 71. ##அதேநேரம் இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது ஓர் ஒடுக்கப்படும் மதம். இந்துத்துவ பாசிசங்கள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஏனைய மதங்களை தமக்கிசைவாக்க கொடுக்கும் நெருக்கடிகளின் எதிர்விளைவு தான் உருத்திரிந்து மதவெறியாக உருவெடுக்கிறது##

  செங்கொடி,

  இந்திய அரசின் இந்துத்துவா கொள்கையின் விளைவாக முஸ்லீம் மதவாத சக்திகள் அம்மக்களை தங்களது மதக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது உண்மைதான். ஆனால் உங்களுக்கும் துராப்ஷாவிர்கும் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது இஸ்லாத்தின் தனிப்பட்ட குணாம்சம். இந்தியாவில் மட்டுமல்ல உலகில் வேறெங்கேனுமாக இருந்தாலும் இஸ்லாம் இதே நடைமுறையைத்தான் பின்பற்றும். இதற்கு தெளிவான குரான் வசனங்கள் கூட உள்ளன. எனவே, பத்வா கொடுக்கப்பட்ட மொள்ளம்மாரி நிகழ்வுடன் இஸ்லாமின் பிற்போக்குத்தனத்தையும் விவாத்தில் எடுத்துக்கொள்ளல் வேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கின்றேன்.

  நந்தன்,

  இஸ்லாம், பார்ப்பனீயத்தைப் போன்று மற்ற இனங்களை ஒடுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்

 72. நண்பர் அப்துல்லா,

  உங்களால் பதிலளிக்க முடியாததெல்லாம் அல்லது விருப்பமில்லாததெல்லாம் டீக்கடை அரட்டையாகிவிடும் என்றால் அது உங்கள் புரிதலில் ஏற்பட்ட பிழையாகவே இருக்கும்.

  தோழரின் மீதான ஜமாத்தார்களின் முடிவும், அந்த முடிவை செயல்படுத்திய விதமும் தான் இங்கு விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? என்பது தான் முன்னிருத்தப்பட்டிருக்கும் கேள்வி. இந்த கேள்வியின் அடிப்படையில் தான் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் எதையும் நீங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை. மாறாக உரசிப்பார்க்காமலேயே எனக்கு புரிந்து கொள்ளும் திறன் இல்லை என்று முடிவு செய்துவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது நான் அப்படி எந்த முன்முடிவுக்கும் வர விரும்பவில்லை. அது உங்களின் பதில்களைக் கொண்டே முடிவு செய்யப்பட வேண்டும்.

  முடிந்து விட்ட எளிய பிரச்சனையா இது? இதற்கு இடுகையிலேயே தெளிவாக விடையிறுத்துள்ளேன். இது தனிப்பட்ட ஒருவருக்கு நடந்த பிரச்சனை அல்ல. பலநூறு ஆண்டுகளாக நடந்து வந்திருப்பதன் தொடர்ச்சி. கடையநல்லூரை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் பூமி தட்டை என்றுதான் கூறமுடியும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தான் உண்மை புரியும்.

  பிறரைக் காயப்படுத்தாமல் இருப்பது தான் ஒழுங்கு என்கிறீர்கள். எந்த ஒரு தத்துவமும், கொள்கையும் நடப்பில் இருக்கும் எதையும் விமர்சிக்காமல் எழுந்துவிடுமா? உங்கள் கொள்கைப்படி இஸ்லாம் என்பதே அதன்போது இருந்த சமூகச் செயல்பாடுகளை விமர்சித்து மாற்றுவது தானே. ஆனால் இது எப்போது காயப்படுத்தல் ஆகிறது? செய்யப்படும் விமர்சனத்திற்கு பதில் கூறவும் முடியாமல், அதை ஏற்கவும் மரபுமனது இடந்தராமலும் இருந்தால் அங்கு தான் கோபமும், அந்த கோபத்தை மறைக்க காயப்படுத்துகிறீர்கள் எனும் குற்றச்சாட்டும் அவசியப்படுகிறது. இங்கு கருத்துக்கூறும் அனைவரும் காயப்படுத்துகிறது என்கிறார்களே தவிர எது எப்படி காயப்படுத்துகிறது என்று கூறமறுக்கிறார்கள், நீங்கள் உட்பட.

  மீண்டுமொருமுறை அமைதியாக இடுகையையும், பின்னூட்ட விளக்கங்களையும் படித்துப்பாருங்கள். எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா பாருங்கள். கூறுங்கள், இதுவரை நீங்கள் கூறியதை ஒப்பீடு செய்யுங்கள். அதுதான் சரியான நிலையில் நிற்க உதவும். மாறாக, நான் எங்கு நிற்கிறேனோ அதுதான் சரி என நீங்கள் எண்ணுவீர்களாயின். நான் அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்.

 73. இந்த விவாதத்தின் இரண்டாவது பகுதியாக தோழர் துராப்ஷா மீது கொடுக்கப்பட்ட முறையீடு குறித்தும், தோழரின் பதிலால் அந்த முறையீடு காவல் நிலையத்தில் வைத்தே திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது குறித்தும் பேசப்படவிருக்கின்றன. சைபுல்லா ஹாஜாவும் தோழர் துராப்ஷாவும் கடையநல்லூர் காவல் நிலையத்தில் இருந்த போது அதாவது தோழரின் கடையை கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி மூடவைத்த பிறகு காவல் நிலையத்தில் சைபுல்லா ஹாஜாவும் மஸ்ஜித் முபாரக் கமிட்டி செயலாளர் சின்ஷாவும் இரண்டு குற்றச்சாடுகளை முன்வைத்தார்கள். அவைகளையும் அவற்கான பதிலையும் பதியவைப்பது தான் இதன் நோக்கம்.

  1) ஹலாலான முறையில் இவர் கோழி அறுக்கவில்லை என்று மஸ்ஜித் முபாரக் கமிட்டிக்கு புகார்கள் வந்துள்ளன.
  2) லூத் எனும் லூஸ் கட்டுரையை எழுதி வெளியிட்டிருப்பது மத நிந்தனை.

  இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுமே காவல் நிலையத்தில் வைத்து தோழரால் மறுக்கப்பட்டது.

  ”ஹலால் முறையில் தான் அறுக்கப்படுகிறது. அதற்கென்றே வேலையாள் ஒருவரை வைத்திருக்கிறேன். தவிரவும், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நானே பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கிறேன். இதுவரை யாரும் இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறியதுமில்லை, அப்படி ஒன்று நடக்கவும் இல்லை. இது என்னிடம் கறி வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெரியும். ஒரு வேளை, ஹலாலாக இல்லாமல் நான் அறுத்திருந்தால் அந்தப் பிராச்சனை முதலில் கடையில் தான் தொடங்கியிருக்கும். கேள்வி கேட்டிருப்பார்கள், நான் சரியான விளக்கமளிக்காவிட்டால் பிறரிடம் கூறியிருப்பார்கள், வாங்குவதை நிறுத்தியிருப்பார்கள். இது எதுவுமே நடக்காமல், நான் பிஸ்மி சொல்லி அறுக்கவில்லை என்றதும் மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டிக்கு வந்து புகார் கூறியிருக்க மாட்டார்கள். மெய்யாகவே புகார் வந்தது என்றால் புகார் செய்தது யார் எனக் கூறுங்கள், நிச்சயம் அவர் என் வாடிக்கையாளராக இருக்க மாட்டார்” இது முதல் குற்றச்சாட்டிற்கு தோழர் அளித்த விளக்கம்.

  ”குறிப்பிட்ட அந்த கட்டுரை இறையில்லா இஸ்லாம் எனும் இணைய தளத்தில் வெளிவந்தது. அந்த தளத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், யார் எந்த இடத்திலிருந்து எழுதியிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதற்கான வசதிகளெல்லாம் அரசிடம் இருக்கின்றன. முறையாக வழக்குப் பதிவு செய்யுங்கள், விசாரணை நடக்கட்டும், ஐபி முகவரி போன்றவற்றை வைத்து நான் தான் எழுதினேன் என்பதை நிரூபித்து விட்டால் நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் கட்டுப்பட நான் தயார், நான் தான் எழுதினேன் என்பதை நிரூபிக்க நீங்கள் தயாரா?” இது இரண்டாம் குற்றச்சாட்டிற்கு தோழர் அளித்த விளக்கம்.

  தோழரின் இந்த விளக்கங்களுக்கான மறு அழுத்தமோ, வேறு விடயங்களோ சைபுல்லா ஹாஜா, சின்ஷா குழுவினரால் கொடுக்க முடியவில்லை. அந்த அடிப்படையில் முறையீட்டு மனுவை எடுத்துக் கொள்வதற்கு போதிய காரணங்களில்லை என்று மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருவரிடமும் கையொப்பம் வாங்கிக் கொள்ளப்பட்டது. இதன் பிறகு தான் அனைவரின் முன்னிலையில் மூன்று நாட்கள் கழிந்து வியாழனன்று கடைய திறந்து வழக்கம் போல் வியபாரம் செய்யலாம். யாரும் எந்த பிரச்சனையும் செய்யக் கூடாது என்று முடிவானது.

  ஆக ஹலால் பிரச்சனையும், கட்டுரை பிரச்சனையும் காவல் நிலையத்திலேயே முடிந்துவிட்டது. என்றால் வேறு தளங்களில் இது நீண்டது எப்படி? இங்குதான் நாம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியதிருக்கிறது. பிரச்சனை எளிமையாக முடிந்து விட்டதே மீண்டும் மீண்டும் ஏன் கிளற வேண்டும் என எண்ணுபவர்கள் இதற்கு பதில் கூற முனையலாம்.

  1) மெய்யாகவே இஸ்லாத்திற்கு எதிராக எழுதியது மட்டும் தான் பிரச்சனை என்றால் முதலிலேயே உலமாகள் சபை மூலம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாறாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது ஏன்? காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை தேவையில்லை என்று திரும்ப பெற்ற பின்பு ஜமாத்களுக்கு உலாமாக்களுக்கு அனுப்பியது ஏன்?

  2) முதலில் பள்ளிவாசலில் அறிவிப்பு, அது விரும்பிய இலக்கை எட்டவில்லை என்றதும் காவல் துறையில் முறையீடு அதிலும் தோழருக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை என்றதும், குடும்பத்தார்கள், வட்டாரத்தார்கள் உலாமாக்கள் என்று விரிக்கப்படுகிறது. இதில் தெரிவது என்ன? இஸ்லாத்திற்கு எதிரான கட்டுரை எழுதியது தான் கோபத்தை தூண்டியது என்றால் அதற்கான எதிர்வினை இப்படி திட்டமிட்டதாக இருக்குமா?

  முகநூலில் இஸ்லாத்திற்கு எதிரான கட்டுரையை பகிர்ந்தது தான் தோழருக்கு எதிரான நடவடிக்கைகளின் காரணம் என்றால் இங்கு அந்த நடப்புக்கு ஆதரவளிக்கும் அனைத்து முஸ்லீம்களும் நேர்மையுடன் தங்களைத் தாங்களே பரிசீலித்துக் கொள்ளட்டும், இந்த நடவடிக்கை சரியானது என்றால் உலகில் ஒரு முஸ்லீமாவது இது போன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்ப முடியுமா? அல்லது இஸ்லாத்தை விடுத்த வேறு காரணங்கள் இந்த நடவடிக்கைக்கு பின்புலம் என்றால் நீங்கள் இஸ்லாத்தின் பெயரால் ஏமாளியாக்கப்பட்டிருப்பது குறித்து எங்கள் கருத்து என்ன?

 74. வணக்கம் தோழர்களே, நண்பர்களே,

  பூங்கொடி என்பவர் சில கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளர். கேள்விகளுக்கு பதிலளிக்க நான் என்றுமே தயங்கியதில்லை. கண்டிப்பாக பதில் வரும். ஆனால் அதற்கு முன்னதாக ஒரு வேண்டுகோளையும் கேட்க விரும்புகிறேன். ஒருவர் கேள்வி கேட்கிறார் என்றால் அதன் எதிர்வினைகளுக்கு பதிலளிக்கும் கடமையும் அவருக்கு இருக்கிறது என்பதே பொருள். இந்த அடிப்படையில் நான் எழுப்பும் கேள்விகளுக்கும் பூங்கொடி பதிலளிப்பாரா?

 75. உங்களை சிலருக்கு வெளிப்படுத்தியது முதல் சிக்கல்.
  கடையநல்லூர் விவகாரத்தில் ஜமாத் மீது முழு தவறும் உள்ளது. அவர்கள் இசுலாம் பெயரை பயன்படுத்தி தங்களின் தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொண்டுள்ளார்கள். பேசு பொருளை விட்டு விட்டு மற்றதை பற்றியே பேசுகிறார்கள்.

 76. //கம்யூனிசமோ மதங்களோ பிற கலாச்சாரங்களில் வடிவெடுத்த அனைத்து வகை இயக்கங்களும் அதனை கடைப்பிடிப்பவர்களுக்கு போதிக்கும் அடிப்படை ஒழுங்கு பிறரைக் காயப்படுத்தாமல் வாழப் பணிப்பது தான்.//
  இதை முதலில் இஸ்லாமியர்கள் பின்பற்றட்டும். ஊருக்குத்தான் உபதேசமா?

 77. திரு செங்கொடி,

  சகோதரர் அப்துல்லாவின் தெளிவான வாதங்களுக்கான உங்கள் பதில்கள் ஏமாற்றமளிக்கின்றன.

  //காலனிய இந்திய அரசில் பிறந்து விடுதலை போராட்ட வீரனாக இருக்கும் ஒருவன் தான் பெற்றிருக்கும் கடவச்சீட்டில் பிரிட்டீஷ் இந்தியா என்று குறிப்பிட்டிருந்தால் அவன் காலனியாதிக்கத்தை ஏற்கிறான் என்று எவ்வாறு கூற முடியாதோ அதுபோலவே நீங்கள் குறிப்பிடும் இஸ்லாமியன் என்பதும். சமூக பிணைப்புகளை மதமாகவும், மதப் பிணைப்புகளை சமூகமாகவும் மொழிமாற்றம் செய்யாதீர்கள்.//

  முற்றிலும் தவறான விளக்கம். சகோ. அப்துல்லா சொல்வதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அவரது கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லையா?

  //உங்களின் பாஸ்போட்டில் இஸ்லாமியன் எனக் குறிப்பிட்ட இடத்தில் இறை மறுப்பாளன் எனக் குறிப்பிட்டு வானூர்தி ஏறி இனி எந்த முதலாளித்துவ நாட்டுக்கும் பாடு படக் கிளம்புங்கள்… இரட்டை வேடம் வேடம் போடுவது அசிங்கமானது…. – சகோ. அப்துல்லா //

  //இஸ்லாமிய சமூகத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அவன் இஸ்லாமியனாகவே வாழ்ந்தாக வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் இஸ்லாமியன் என்பது அவனது வெற்று அடையாளமாக இருக்கும் அவ்வளவு தான். – திரு செங்கொடி//

  காலனிய இந்திய அரசில் கடவுச்சீட்டு வெளியிடும் அதிகாரம் பிரிட்டீஷ் இந்தியாவுக்கு மட்டுமே இருந்தது. இங்கு சுயதேர்வுகளுக்கு வழியே இல்லை. எனவே காலனியாதிக்கத்தை எதிர்ப்பவராக இருந்தாலும் அவரது கடவுச்சீட்டில் ‘பிரிட்டீஷ் இந்தியா’ என குறிப்பிடப்படுவதை அவரால் மாற்ற முடியாது.

  ஆனால் இன்றைய சுதந்திர இந்தியாவில், இந்திய அரசு வெளியிடும் கடவுச்சீட்டில் உங்களது மதம் பற்றிய அடையாளத்தை தேர்வு செய்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. உங்கள் விண்ணப்ப படிவத்தில் நீங்கள் எதை எழுதுகிறீர்களோ அதைத்தான் கடவுச்சீட்டில் பதிந்துத் தருவார்கள். உங்கள் இஸ்லாமியப் பெயர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட உங்கள் பெயரை மாற்றிக் கொண்டு பிறகு கடவுச்சீட்டிற்கு விண்ணப்பம் செய்யும் வசதி இந்தியாவில் இருக்கிறது.

  இதைத்தான் சகோ அப்துல்லா கேட்கிறார். உங்கள் பிறப்பின் மூலம் உங்கள் மீது சுமத்தப்பட்ட ‘இஸ்லாமியன்’ என்ற அடையாளம் உங்களுக்குச் சுமையாக இருந்தால் அதை உதறித் தள்ளி விடலாமே?

  அற்பமான பொருளாதாரக் காரணங்களுக்காக ஏன் பிடிக்காத ஒரு அடையாளத்தை சுமந்துக் கொண்டிருக்கிறீர்கள்?

 78. ஆப்பக்கரே,
  ## இஸ்லாம், பார்ப்பனீயத்தைப் போன்று மற்ற இனங்களை ஒடுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்##

  இப்படி ஒரு பின்னோட்டத்தை போட்டுட்டா இசுலாம் புனிதமானது என்று படிப்பவர்கள் நம்ப்பிவிடுவார்கள் என்று கனவு காணவேண்டாம். முகம்து நபி கொய்த தலைகளும் இனங்களும் நிறைய உள்ளன. சமீபகால புத்தர்சிலை தகர்ப்பும் உங்களின் மதவெறிக்கு சாட்சிகள். விவரங்கள் தெரியாது என்றால் புகாரியையும் இறையில்லா இசுலாத்தையும் படி.

 79. ## அவர்கள் உங்களுக்கு தூய்மையானவர்கள் என்ற வார்த்தைக்கும் உங்களில் ஒரு ஆண்மகன் இல்லையா என்ற வார்த்தைக்கும் விளக்கம் தந்திருக்க வேண்டும்.##

  இபுராகிமே, தஜ்ஜால் அழகாகத்தான் விளக்கியுள்ளார். மதபோதையில் உள்ள மூளைகளுக்கு புரியாது. உனது பதிலிருந்து நிறைய விளக்கங்கள் கூறலாம். ஒவ்வொன்றாக போவோம்.

  தூய்மையான மகள்கள் என்று லூத்த கூறக்காரணம் என்ன? வந்திருந்தவர்களேல்லாம் பெண்களா? பெண்களா மலக்குகளை புணரக் கேட்டார்கள்? இந்த வரிகளிலிருந்து மதி விரிந்த நீயே விளக்கு.

 80. நந்தன் ///பைபிள் திருத்தப்பட்டது என்ற செய்ந்த ரெக்காடையே தேய்க்காதே. திருத்ப்பட்டது என்றால் திருத்தப்படாத பைபிளை கொண்டு வந்து வைத்துவிட்டு சாமியாடு.///
  பைபிள் திருத்தப் பட்டது என்று சும்மா சொல்லவில்லை .இறை வேதத்திர்கான மாற்றமான வசனங்கள அதில் இருப்பதைக் கொண்டே பைபிள் திருத்தப்பட்டது என்று கூறுகிறோம்.அத மறுப்பவர்கள் ,மறுக்கா முடியாமல் ஓடிவிட்டனர்.உடையானே ஓடிவிட்ட பிறகு நந்தனுக்கு எங்கே குடைதோ !

 81. நவீன குருடர்களும் ,வாட்டர் டான்க் யானையும் ,

  நான்கு குருடர்கள் போகும் வழியில் யானை குறுக்கே நின்றதால் ,அதில் மோதும் முதல் குருடன்[பகடு] அதை தடவி பார்க்கிறான் .ஏதோ தூண் போல் தெரிகிறது என்கிறான் .அடுத்தவனும் இன்னொரு பக்கம் செல்லுகிறான் .தடுப்பதை தடவி பார்க்கிறான் .ஆமா இங்கே ஒரு தூண் இருக்கிறது என்கிறான் ,அடுத்தவன் ஒருபக்கம் பாக்கிறான் அங்கேயும் தூண் இருக்கிறதாக இப்படியாக நால்வரும் நான்கு குருடர்களும் யானையின் நான்கு கால்களை தடவி பார்த்து நான்கு தூண்களுடன் ஒரு கட்டிடம் இருப்பதாக கூறுகின்றனர் அதன் வயிற்ரை தடவி இப்போதுதான் கட்டியிருக்கிறார்கள் .இன்னும் சுவற்றை பூசவில்லை போலும் சொரசொரப்பாக இருக்கிறது என்று கூறுகிறான்.அந்த சமயத்தில் ,பகடு பாசையில் சொல்லுவதென்றால் ,யானைக்கு உச்சா போனது.தண்ணி சத்தம் கேட்டதும் முதல் குருடர் ,டான்க் ஒவேர்ப்ளா ஆகி தண்ணி வடிகிறது என்றான் .பின்னூட்ட குருடர் ,இல்லை தண்ணி மேலேயிருந்து வடிவது போல் தெரியவில்லை.கீழே இருந்துதான் ஒழுகுகிறது என்றார்.அதோடு நில்லாது கீழே கையால் தடவியே தேடி பார்த்தார். யானையின் உச்சா உறுப்பை பிடித்து விட்டார், இதோ இந்த குழாய் வழியாகத்தான் தண்ணி லீக்காவதாக கூறினார்.
  இதை போலவே ,இப்போது இஸ்லாத்தை படித்து உளறி கொட்டுகிறார்.

 82. ///இதைத்தான் சகோ அப்துல்லா கேட்கிறார். உங்கள் பிறப்பின் மூலம் உங்கள் மீது சுமத்தப்பட்ட ‘இஸ்லாமியன்’ என்ற அடையாளம் உங்களுக்குச் சுமையாக இருந்தால் அதை உதறித் தள்ளி விடலாமே?///
  இதைத்தான் அப்துல்லா மட்டும்ம் கேட்கிறார் அனைத்து முஸ்லிம்களும் கேட்கின்றனர்.பெயர் மாற்றத்தான் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டும்.மதம் என்ற இடத்தில் நாத்திகம் என்று எழுத ஒருவேளை கை வலிக்கிறதா?

 83. கடையநல்லூர்.ஆர்க் தளத்தில் வெளிவந்த ஜாஹிரின் பதிவுக்கான பதில்

   

  நேர்மையின் மறுவடிவான ஜாஹிர் பாய் க்கு,

   

  நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இருக்க வேண்டும் எனவும் விழைகிறேன். உங்களுக்கு நான் பலமுறை பதிலளித்த பின்னும், உங்கள் கேள்வியை இல்லையில்லை உங்கள் நயவஞ்சக ஆசையை பல இடங்களிலும் கழிந்து திரிகிறீகள். அதை கழுவிவிடும் வேலை எனக்கில்லை என்றாலும், பொது இடங்களில் கழிவது தவறானது என்பதை மீண்டுமொருமுறை சுட்டிக் காட்டவே இந்தப் பதிவு.

  முதலில் வினவிலும் செங்கொடியிலும் உங்களுக்கு அளித்த பதிலை மீள்வாசிப்பு செய்துவிட்டு வாருங்கள். ஏனென்றால் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

  அடுத்து உங்களது நயவஞ்சக ஆசை குறித்தும் பதிந்து விடலாம். நான் செங்கொடி என்பது பல ஆண்டுகளாக உங்களுக்கு தெரியும். செங்கொடி என்ற பெயரிலேயே உங்களது இதழ்களிலும் நாளிதழ்களிலும் என்னுடைய கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறீர்கள். அப்போதெல்லாம் என்னுடைய பெயர் குறித்தோ விபரங்கள் குறித்தோ கவலையின்றி கருத்துகள் குறித்து மட்டுமே வினையாற்றிய நீங்கள், இந்தப் பிரச்சனை வெடித்தவுடன் நான் யார்? என்னுடைய பெயர் என்ன? நான் எங்கிருக்கிறேன்? என்பதையெல்லாம் வெளிப்படுத்தினீர்களே, இதற்கான பொருள் என்ன? நான் அறியப்பட வேண்டும், அறியப்படுவதன் மூலம் தாக்குதலுக்கு உள்ளாக்கி என்னை முடக்க வேண்டும் என்பது தான். அதாவது என்னுடைய கருத்துகளை எடுத்துக் கொள்ள முடியாமல், எதிர்கொள்ள முடியாமல் அடையாளத்தை வெளிப்படுத்த துடிக்கிறீர்கள். இப்போது புகைப்படத்துடன் எழுத வேண்டும் என்கிறீர்கள். ஏன் இப்போது புகைப்படம் கேட்கிறீர்கள் என்பதை அறியாமலிருப்பதற்கு, நான் ஒன்றும் உங்கள் வீட்டு கைக்குழந்தையும் அல்ல. என்னையே எனக்கெதிராய் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் ஒன்றும் புத்திசாலியும் அல்ல.

   

  நான் என்னுடைய தளத்தில் மலம் போயிருக்கிறேன் என்று நீங்கள் கூறியிருப்பது, எங்கள் மனம் புண்பட்டு விட்டது என்று கூறுவது போல் பச்சைப் பொய்யும், கட்டக் கபடமும் நிரம்பியது. துணிவிருப்பவர்களால் மட்டுமே அதை எதிர் கொள்ள முடியும். கோழைகளால் இந்த மலம் புளிக்கும் என்று நழுவத்தான் முடியும்

   

  ஒன்றைக்குறித்து ஒருவன் விமர்சனம் செய்ய வேண்டுமென்றால், அது குறித்து அவன் அறிந்திருக்க வேண்டும். இஸ்லாமும் புரியாத கம்யூனிசமும் தெரியாத உங்களைப் போன்ற மட்டைகளிடம் என்ன நார் உரிப்பது? எனவே முதலில் நீங்கள் உங்களை பரிசீலனை எனும் ஈரத்தில் நனைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நான் உரிக்க வருகிறேன்.

   

  அடுத்து நீங்கள் கூறியிருக்கும் ஒன்றை விளக்கியே ஆக வேண்டும். \\ குடும்பத்தோட காட்டுல போய் செட்டில் ஆக வேண்டியது தானே// இது இதை தானே எதிர்பார்த்தேன். உங்களுடைய மத வெறியை உங்கள் வாயாலேயே அம்பலப்பட வேண்டுமல்லவா? உங்கள் மதம் பிடிக்கவில்லை என்றால் நான் ஏன் காட்டில் போய் இருக்க வேண்டும்? சுய சிந்தனையோடு யாரும் எங்கள் மத்தியில் இருந்துவிடக் கூடாது. எங்களைப் போல் செக்கு மாட்டு சிந்தனையில் இருந்தால் மட்டும் தான் எங்களோடு இருக்க முடியும் என்கிறீர்களா? கடையநல்லூர் என்ன உங்கள் அப்பன் பாட்டன் சொத்தா? அல்லது உங்கள் மதத்தின் மகாத்மியத்தால் மந்திரிக்கப்பட்டு உருவானதா? ஒரு வகையில் நீங்கள் கூறியிருப்பது சரியானது தான். காட்டில் உலவ வேண்டியவைகள் எல்லாம் ஊரில் உலவிக் கொண்டிருக்கும் போது நாட்டின் நல்லவர்கள் காட்டுக்குப் போவது தவிர்க்க முடியாதது தான்.

   

  பின்குறிப்பு: நான் எழுதிய கட்டுரையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த எந்த அம்சமும் மறுக்கப்படவோ, மேல் விளக்கமளிக்கப்படவோ இல்லை எனும் போது எப்படி செங்கொடியின் கட்டுரைக்கான மறுப்பு என்று தலைப்பிட முடியும்? அதுசரி உளறி வைப்பதற்கு எதற்கு விழுமியங்கள்?

 84. கடையநல்லூர்.ஆர்க் தளத்தில் வெளிவந்த பூங்கொடியின் பதிவுக்கான பதில்

   

  பூங்கொடியின் நம்பிக்கை எனும் கற்பிதம் குறித்து

   

   

   

  முன்குறிப்பு: புனை பெயர் சூட்டிக் கொள்வதொன்றும் குற்றச் செயலல்ல. யாரும் தான் விரும்பும் எவ்வாறும் பெயரிட்டுக் கொள்ள உரிமையுள்ளவர்களே. என்றாலும், நான் எனக்கு புனை பெயர் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதாலேயே முகவரியற்ற கோழை என்று பிதற்றித் திரிபவர்கள் மத்தியில் இருப்பதனால் கேட்கிறேன். நீங்கள் ஏன் புனை பெயர் வைத்துக் கொண்டீர்கள்?

   

   

   

  நெருப்புக்கோழி தன் தலையை மண்ணில் புதைத்துக் கொண்டு தன் உருவம் மொத்தத்தையும் மறைத்து விட்டதாய் கருதிக் கொள்ளுமாம். அதுபோல ஏதோ ஒன்றை பிடித்துக் கொண்டு ஒட்டு மொத்தமும் அது தான் என்று கருதி உங்கள் ஆக்கத்தை செய்திருக்கிறீர்கள். நம்பிக்கை என்றால் என்ன? நாத்தீகர்கள் நம்பிக்கையை ஏற்காதவர்களா? நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. நம்பிக்கை இல்லையென்றால் மனித முன்னேற்றத்தின் பல அத்தியாயங்கள் நொண்டியடித்துக் கொண்டே இருந்திருக்கும். ஆகவே ஆத்திகர்கள் மட்டுமல்ல கிருஸ்தவம் இஸ்லாத்தை அடுத்து மூன்றாவது அதிக மக்கட்தொகையை கொண்டிருக்கும் நாத்திகர்களுக்கும் நம்பிக்கை அவசியமானது தான்.

   

   

   

  அதேவேளை, கடவுள் மீதான நம்பிக்கை குறித்த நாத்திகர்களின் கேள்வி வறட்டுத்தனமானது அல்ல. நம்பிக்கையை மட்டும் அடிப்படையைக் கொண்டிருப்பதனால் கடவுள் இல்லை என்று யாரும் கூறுவதில்லை. கடவுள் எனும் கற்பிதத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகுதிகள், பண்புகள், இயல்புகள், ஆற்றல்கள் ஆகிய அனைத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு நம்பிக்கை மட்டும் போதுமானதல்ல என்பது தான் நாத்திகர்களின் வாதம். மறுபக்கம், கடவுள் என்பது நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்று கூறிவிட்டால் அதற்கு மேல் அதில் கேள்வி கேட்பதற்கு ஒன்றுமே இல்லை. மாறாக கடவுள் என்பது மெய்யேகவே நிலவும் ஒன்று அது வெறும் நம்பிக்கையல்ல என்று கூறப்படுவதால் தான் அது விமர்சிக்கப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். இதை நான் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

   

   

   

  மனிதன் நம்பிக்கை கொண்டிருப்பவன் என்பதால், நம்பிக்கையை முன்வைத்து கூறப்படும் அனைத்தையும் ஏற்க வேண்டுமா? நீ உன் தகப்பனையும் குழந்தைகளையும் நம்புகிறாயே அதனால் பக்கத்து வீட்டுக்காரன் கூறுவதை நம்பு என்று ஒருவன் கூறினால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அவ்வளவு அபத்தம் தகப்பனை நம்புவதால் கடவுளை நம்பு என்பது. தகப்பன் பிள்ளைகள் என்பது கண்முன்னே இருக்கும் சமூக உறவு, கடவுள் என்பது காண வழியில்லாமலும், உணரும் திறமில்லாமலும் (அழுத்தம்: வழியில்லாமலும், திறமில்லாமலும்) இருக்கும் கருத்து. இரண்டையும் ஒப்பிடுவதே அடிப்படையற்றது. நம் கண்முன்னே வாழ்ந்து, நம்முடைய சுக துக்கங்களில் பங்கெடுத்து, நம்முடைய வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கும் ஒருவர் கூறுவதை நம்புவதும்; எந்த விதத்திலும் தொடர்பில்லாத, வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் துளியும் சம்மந்தப்படாத, பலநூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் கூற்றை நம்புவதும் ஒன்றாகுமா? மனைவி, தாய் என்பவர்கள் நமக்கு நெருக்கமானவர்கள் என்பதால் மட்டுமல்ல சமூக உறவுகளால் நம்மோடு பிணைக்கப்பட்டவர்கள் என்பதாலும் அவர்களை ஏற்கிறோம். இதுவும் நம்பிக்கை தான் என்றாலும் எந்த நொடியிலும் இதை சோதித்தறிய வழியிருக்கிறது. ஆக சோதித்தறியும் வசதி இருக்கும் நிலையில், சமூக உறவுகளால் பாதுகாக்கப்பட்டிருக்கும் நிலையில், உடன் வாழ்ந்து வாழ்வின் ஏற்ற வற்றங்களில் பங்கெடுத்து கொண்டிருக்கும் நிலையில் ஒன்றை நான் நம்புவது இயல்பானது. இயல்பான இந்த நம்பிக்கையை நான் கொண்டிருக்கிறேன் என்பதால் எந்த வழியிலும் சோதித்தறிய முடியாத நிலையிலிருக்கும், சமூக உறவுகள் மூலம் பாதுகாக்கப்பட்டிராத நிலையிலிருக்கும், வாழ்வின் எந்த நிலையிலும் யாதொரு பங்கையும் செய்திருக்காத நிலையிலிருக்கும் ஒன்றை நான் ஏன் நம்ப வேண்டும்?

   

   

   

  மட்டுமல்லாது, நம்பிக்கை இருக்கிறது இல்லை என்பதால் மட்டுமல்ல. அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், பயன்பாட்டு ரீதியாகவும் ஒன்றுமில்லாத ஒன்றை உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதால் அதை நானும் நம்ப வேண்டும் என்பது அராஜகமில்லையா? உங்களைப் போல் பரிசீலனைக்கு அப்பாற்பட்டு எதையும் நாங்கள் ஏற்பதில்லை. உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை மெய்யானது என்றால் அதன் சாத்தியப்பாட்டைக் கூறுங்கள் நாங்கள் பரிசீலிக்கிறோம். அதுபோல அது இல்லை என்பதற்கான சாத்தியப்பாட்டை நாங்கள் கூறுகிறோம் நீங்கள் பரிசீலிக்கத் தயாரா?

   

   

   

  அடுத்து, பொதுவுடமையை ஏற்பவர்கள் ஏன் முதலாளிகளின் கீழ் வேலை பார்க்க வேண்டும்? எனும் புழகமடையச் செய்யும் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறீர்கள். பொதுவுடமைத் தத்துவத்தின் அடிப்படையை மட்டுமாவது தெரிந்திருந்தால் கூட இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருக்க முடியாது, அல்லது சமூகம் பற்றிய குறைந்தபட்ச புரிதலேனும். மனித குல வரலாறு ஐந்து காலகட்டங்களாக பிரிந்துள்ளது. 1) புராதன பொதுவுடமைச் சமூகம், 2) ஆண்டான் அடிமைச் சமூகம், 3) நிலப்பிரபுத்துவ சமூகம். 4) முதலாளித்துவ சமூகம், 5) பொதுவுடமைச் சமூகம். ஒவ்வொரு காலகட்டமும் அதற்கு முந்தியகாலகட்டத்திலிருந்து தான் கிளைத்திருக்கிறது. அது போல இன்றைய முதலாளித்துவ சமூகத்திலிருந்து தான் பொதுவுடமைச் சமூகம் கிளைக்கும். இன்றைய உலகம் முதலாளித்துவ உலகமாக இருப்பதால் அதன் கீழ் பணி செய்வது தீண்டத் தகாததல்ல.

   

   

   

  இதையே வேறொரு கோணத்தில் கூறினால் ஆதிமுதற் காலம் தொடங்கி இன்றுவரை மனிதன் தன் உழைப்புச் சக்தியை செலவு செய்தே உயிர் வாழ்ந்து வருகிறான். அது ஆத்திகனானாலும், நாத்திகனானாலும்; முதலாளித்துவாதியானாலும், பொதுவுடமைவாதியானாலும் உழைப்புச் சக்தியை செலவு செய்யாமல் உயிர் வாழ முடியாது. இந்த உழைப்புச் சக்தியை செலவு செய்யும் வடிவம் காலந்தோறும் மாறுபட்டு வந்திருக்கிறது. இன்று அதன் வடிவம் முதலாளித்துவம் என்பதால், அந்த சந்தை விதிகளுக்கு உட்பட்டு உழைப்புச் சக்தி செலவிடப்படுகிறது. இது அநீதியானது என்பதால் அதை நீக்கப் போராடுகிறான் பொதுவுடமைவாதி. முட்டையை உடைத்துத் தானே குஞ்சு வெளிவருகிறது என்றால் ஏன் குஞ்சு முட்டைக்குள் இருக்க வேண்டும்? முட்டையைக் கடந்து தான் கரு குஞ்சாக வேண்டும். முதலாளித்துவத்தைக் கடந்து தான் சோசலிசம் மலர வேண்டும்.

   

   

   

  அடுத்து, நான் தம்மாமில் இருந்தபோதும் ஊர் திரும்பியபோதும் ஐயந்தீர்க்க யாரோ என்னை அணுகியதாகவும் நான் மறுத்ததாகவும் ஒரு பொய்யான செய்தியை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். எங்கும் என்னிடம் வருபவர்களிடம் உரையாட நான் என்றும் மறுத்ததில்லை. தம்மாமிலும் சரி ஊரிலும் சரி விவாதிக்க வருகிறேன் என்று கூறிவிட்டு வராமல் வெருண்டோடியவர்கள் அனேகமுண்டு. இப்போதும் என்னை சந்திக்கும் நிலையிலிருப்பவர்களுடன் நான் விவாதம் செய்வதற்கு தயங்குவதில்லை. அவ்வாறில்லாதவர்கள் எழுத்து விவாதத்திற்கு வரலாம் செங்கொடி தளம் அவர்களுக்கு வரவேற்பளிக்க எப்போதும் ஆயத்தமாக இருக்கும்.

   

   

   

  என்னுடைய தேடல் குறித்து ஏதேதோ கூறியிருக்கிறீர்கள். நான் இஸ்லாத்திற்கு உள்ளிருந்தே என்னுடைய தேடலை நடத்தினேன். நான் சந்தித்த மவ்லவிகள், ஹஜரத்துகள் எவரும் நான் எழுப்பிய ஐயத்தை தீர்க்கவில்லை. வேதங்கள், விளக்கங்கள், வரலாறுகள் என தேடித்தேடி படித்தே நான் தெளிவை வந்தடைந்தேன். என்னுடைய தேடலில் ஒரு நூற்றுமேனி கூட நீங்கள் தேடியிருக்கமாட்டீர்கள் என்று என்னால் திண்ணமாக கூற முடியும். தெளிவை வந்தடைந்த பின் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னுடைய தெளிவு தவ|று என நினைப்பவர்கள் எவரும் இங்கு வரலாம். மற்றப்படி என்னை சைக்கோ என்று கூறும் எவரையும் சவால் விட்டு அழைக்கிறேன். உங்களில் நெஞ்சுரம் கொண்டோர் யாரும் உண்டா?

   

   

   

  நண்பர் பூங்கொடி, கடையநல்லூர் பிரச்சனை குறித்து நான் தொடர்ச்சியாக எழுதத்தொடங்கிய பிறகு தான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் எனும் எண்ணம் உங்களிடம் தோன்றியிருக்கும் எனக் கருதுகிறேன். உங்கள் விருப்பபடியே நான் பதிலளித்து விட்டேன். இனி என்னுடைய விருப்பத்தின்படி உங்களின் பதில் நாடி ஒரு கேள்வி. கடையநல்லூர் பிரச்சனை குறித்து உங்கள் கருத்து என்ன ஏற்கிறீர்களா? மறுக்கிறீகளா? தேவைப்பட்டால் உங்களுடன் இது குறித்து விவாதம் நடத்தவும் நான் தயார். கூட்டத்தில் ஒழிந்து கொண்டு கேள்விக் கல்லெறிந்து விட்டு ஓடிவிடும் சிறுவன் போல் நீங்கள் இருக்க மாட்டிர்கள் என நம்புகிறேன்.

   

   

   

  உங்கள் பதிலுக்காக ஆவலுடன்,

   

  செங்கொடி.

   

   

   

  பின்குறிப்பு: இது மின்னஞ்சலில் மட்டும் வரவில்லை. கடையநல்லூர்.ஆர்க் தளத்திலும் வெளிவந்திருக்கிறது எனும் அடிப்படையில் இது அந்த தளத்திற்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களின் நேர்மை குறித்து எனக்கு தெரியும் என்றாலும், அதை நிரூபித்துக் கொள்ள கடைசியாய் ஒரு வாய்ப்பளிக்கலாம் எனும் எண்ணத்திலேயே அனுப்புகிறேன். பார்க்கலாம் அவர்கள் நேர்மையாளர்கள் தாமா என்று.


 85. //பைபிள் திருத்தப் பட்டது என்று சும்மா சொல்லவில்லை .இறை வேதத்திர்கான மாற்றமான வசனங்கள அதில் இருப்பதைக் கொண்டே பைபிள் திருத்தப்பட்டது என்று கூறுகிறோம்.அத மறுப்பவர்கள் ,மறுக்கா முடியாமல் ஓடிவிட்டனர்.உடையானே ஓடிவிட்ட பிறகு நந்தனுக்கு எங்கே குடைதோ !// இப்ராஹீம்,
  பி.ஜே விவாதத்திற்கு அழைத்தபிறக்கும் பிடிகொடுக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறாரே, தெரியாதா.
  வருவேன் ஆனால் வரமாட்டேன்: பி.ஜே

 86. நண்பர் மரைக்காயர்,
  பெயர், அடையாளம் குறித்து நான் ஏற்கனவே விரிவாக அளித்த பதில் கேள்வி பதில் பகுதியில் இருக்கிறது பார்வையிடுங்கள்.
  யாரும் சமூகத்தைவிட்டு விலகி வாழ்ந்துவிட முடியாது. சமூகத்துடனான ஒட்ட ஒழுகலின் ஒரு வடிவம் தான் மதம். மதத்தின் எச்ச சொச்சங்கள் ஒட்டியிருப்பது சமூகப் பயன்பாட்டிற்காகத்தானேயன்றி மதப் பயன்பாட்டிற்காக அல்ல. இதைத்தான் நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் மதப் பயன்பாட்டையும் சமூகப் பயன்பாட்டையும் குழப்பிக் கொள்கிறீர்கள்.
  ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம், பதிவதற்கு எளிதாக இருந்தால் கடவச்சீச்சில் மட்டுமல்ல எல்லாவற்றிலிருந்தும் துடைத்தெறிந்து விடலாம். ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகள் விதித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகளை கடந்து நீக்கிக் கொள்வது ஒன்றும் பெரிய விசயமல்ல, ஆனால் அதை செய்தே தீர வேண்டும் எனும் அளவுக்கு அதை நாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுவதில்லை. அது ஒரு அடையாளம் அவ்வளவு தான். இதை புரிந்து கொள்ளாமல் தான் என்ன கேட்டாலும் சுற்றீ…. சுற்றீ…… ஓடிக் கொண்டிருக்கும் சிலர் “”பெயர் மாற்றக்கூட உழைக்க மறுக்கிறோம்” என்று பிதற்றித் திரிகிறார்கள். பெரியாரிடம் ஒருமுறை நீங்கள் தான் நாத்திகராயிற்றே ஏன் ராமசாமி என்று கடவுள் பெயரை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு பதிலாக நீங்கள் வேண்டுமானால் மண்ணாங்கட்டி என்று கூப்பிட்டுக் கொள்ளுங்களேன், எனக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை. அது ஒரு அடையாளம் அவ்வளவு தான் என்றார். ஆனால் இதே பெரியார் தான் பெயருக்கு பின்னால் ஒட்டியிருக்கும் சாதி வாலை(சாதிப்பெயர்) வெட்டி வீசுங்கள் என்றார். ஆக அடையாளப் பெயர்கள் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாதது என்பது தான் காரணம்.
  இன்னொன்றையும் தெளிவுபடுத்தி விடலாம். என்னுடைய கடவச் சீட்டில் இஸ்லாமியன் என்றிருப்பதனால் என்னை ஒரு இஸ்லாமியனாக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? எதை வைத்து நீங்கள் கண்டு கொள்வீர்கள் அடையாளத்தை வைத்தா? செயல்பாடுகளை வைத்தா? ஒன்று தெரியுமா? நடைமுறைகளை வெகு எளிதாக்கி, எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்று கூறும் மதத்தில், மதத்தை விட்டு வெளியேறும் யாரையும் எதுவும் செய்ய மாட்டோம். ஊர் விலக்கம் செய்ய மாட்டோம், மண விலக்கம் செய்ய மாட்டோம்,விருப்பபட்டால் இருக்கலாம் இல்லாவிட்டால் விலகிவிடலாம் என்று அறிவித்துப் பாருங்கள். இருப்பதில் பாதிப் பேர் நாங்கள் முஸ்லீமல்ல என்று அறிவித்துக் கொள்வார்கள். சமூகக் கட்டுப்பாடுகள் தான் அனேகரை மதங்களில் இருத்தி வைத்திருக்கிறது அறிந்து கொள்ளுங்கள்.
  மற்றொன்றையும் தெளிவுபடுத்தி விடலாம். எந்த மதத்தில் பிறக்கிறானோ அந்த மதமே அவனது மதம். இதில் அவனது தேர்வு ஏதாவது இருக்கிறதா? என்னுடைய பிறப்பை வைத்து மதத்தை என்மீது திணித்து விட்டு என்னுடைய சிந்தனை வளர்ந்ததும், அதை நீக்கினால் தான் ஆயிற்று என்று அடம்பிடிப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? சுயசிந்தனை வளர்ந்து தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றபின் அவனது மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்,அது வரை அவன் மனிதனாக மட்டும் இருக்கட்டும் என கூறினால் தான், மதத்திலிருந்து வெளியேறும் போது அதை நீக்கு என்று கட்டளை போட முடியும். மதம் என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? சமூகம் என்றால் என்ன? என்று எதுவுமே தெரியாத நிலையில் என்மீது அடையாளமாக சுமத்தப்பட்ட ஒன்றை நான் சிந்தித்து சுய தெரிதலாக ஒன்றை தேர்ந்தெடுக்கும் போது அதையும் நீக்க வேண்டும் என நீங்கள் கோருவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

  எல்லாம் இருக்கட்டும், விவாதத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல், அதுவல்லாத விசயங்களில் ஏன் இங்கு வருகை தந்திருக்கும் முஸ்லீகள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான பொருள் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.

  ஒரு நினைவூட்டல். நீங்கள் விவாதத்திற்கு வருகிறேன் என்று கூறினீர்களே என்னவாயிற்று?

 87. இஸ்லாம் என்று கடவுசீட்டில் இருப்பதால் உங்களுக்கு ஆதாயம் என்றால் வைத்துக் கொள்ளுங்கள்.
  பெரியாரை இப்போது யாரும் ராமசாமி என்று அழைப்பதும் இல்லை .ராமசாமி என்றால் யாருக்கும் தெரியாது .அவர் பெயரை அவருக்கு ஞாபகப்ப்படுத்தியபோது அதை தூக்கி எறிந்தார்.சாக்கு போக்கு சொல்லவில்லை .சுற்றி சுற்றி விளக்கம் சொல்லவில்லை .அவரது கடவு சீட்டிலும் இது போன்று ஹிந்து என்று இருந்தால் அதை யாராவது சுட்டி காட்டியிருந்தால் அதையும் தூக்கி எறிந்திருப்பார்.
  மேலும் கடைய நல்லூரில் உங்களை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.பிறகு மரைக்காயர் எப்படி விவாதத்திற்கு வருவார்? ஏட்டு சோசலிசமும் கனவு கம்யுனிசமும் என்று தலைப்பு கொடுத்து இருந்தால் அவர் வந்திருப்பார்.

 88. லூத்தின் கூட்டத்தை அழிக்க வந்த மாபெரும் சக்தி பெற்ற மலக்குகளையே காப்பற்ற லூத் பாடுபட்டதாக கூறும் வசனம், இன்னும், மாதவிடாய் வராத சிறுமிக்கும் இத்தா 3 மாதம் என்று கூறும் வசனம் என்று ஏராளமாக குன்ஆனிலும் பொருந்தாத வசனங்களை எடுத்துக்காட்டாகத் தந்து குர்ஆனும் இறை வேதமில்லை என்று கூறலாம். இதனை பிறகு விவாதிக்கலாம்.

  முதலில், தூய்மையான மகள்கள் என்று லூத்த கூறக்காரணம் என்ன? வந்திருந்தவர்களேல்லாம் பெண்களா? பெண்களா மலக்குகளை புணரக் கேட்டார்கள்? உன்னுடைய இந்த வரிகளிலிருந்து மதி விரிந்த நீயே விளக்கு.

 89. //அவர் பெயரை அவருக்கு ஞாபகப்ப்படுத்தியபோது அதை தூக்கி எறிந்தார்.// தவறான தகவல்.

 90. மூமின் குருடன் பின்னூட்டவாதி உம்ராவாதி இப்ரஹிம்,

  இஸ்லாம் ஒரு உச்சா போகும் யானை என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி. காபிர்கள் அது உச்சா போகும் ஒட்டகம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

  மூமின் குருடன்கள் யானையை எப்படி பார்க்கிறார்கள் என்றுப் பார்ப்போம்

  அதில் மோதும் முதல் குருடன்[ ஷோக் ஜமாலி] அதை தடவி பார்க்கிறான் .ஏதோ தூண் போல் தெரிகிறது என்கிறான், பி.ஜே. இன்னொரு பக்கம் செல்லுகிறான் .தடுப்பதை தடவி பார்க்கிறான் .ஆமா இங்கே ஒரு தூண் இருக்கிறது என்கிறான், பின்னூட்ட குருட்டு பி.ஜே தம்பிமார்கள் இன்னொரு பக்கம் செல்லுகிறான் .தடுப்பதை தடவி பார்க்கிறான் .ஆமா இங்கே ஒரு தூண் இருக்கிறது என்கிறான் கோவை ஜாக் அயூப் ஒருபக்கம் பாக்கிறான் அங்கேயும் தூண் இருக்கிறதாக இப்படியாக நான்கு மூமின் குருடர்களும் யானையின் நான்கு கால்களை தடவி பார்த்து நான்கு தூண்களுடன் ஒரு கட்டிடம் இருப்பதாக கூறுகின்றனர் அதன் வயிற்ரை தடவி இப்போதுதான் கட்டியிருக்கிறார்கள் .இன்னும் சுவற்றை பூசவில்லை போலும் சொரசொரப்பாக இருக்கிறது என்று கூறுகிறான்.அந்த சமயத்தில், நபி பாசையில் சொல்லுவதென்றால் ,யானைக்கு உச்சா போனது.தண்ணி சத்தம் கேட்டதும் முதல் குருடர் ,டான்க் ஒவேர்ப்ளா ஆகி தண்ணி வடிகிறது என்றான் .பின்னூட்ட குருட்டு பி.ஜே தம்பி இல்லை தண்ணி மேலேயிருந்து வடிவது போல் தெரியவில்லை.கீழே இருந்துதான் ஒழுகுகிறது என்றார்.அதோடு நில்லாது கீழே கையால் தடவியே தேடி பார்த்தார். யானையின் உச்சா உறுப்பை பிடித்து விட்டார், இதோ இந்த குழாய் வழியாகத்தான் தண்ணி லீக்காவதாக கூறினார்.

  இதை போலவே ,இப்போது இஸ்லாத்தை பின்னூட்ட மூமின் உளறி கொட்டுகிறார்.

  குருட்டு மூமின் உச்சா உறுப்பை பிடித்து விட்டதற்கு ஏதாவது அதீஸ் ஆதாரம் காட்டினால் அங்ஙகன நல்லது.

 91. திரு செங்கொடி,

  //மதத்தின் எச்ச சொச்சங்கள் ஒட்டியிருப்பது சமூகப் பயன்பாட்டிற்காகத்தானேயன்றி மதப் பயன்பாட்டிற்காக அல்ல. இதைத்தான் நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் மதப் பயன்பாட்டையும் சமூகப் பயன்பாட்டையும் குழப்பிக் கொள்கிறீர்கள்.//

  மிக அடிப்படையான ஒன்றை மிகத் தவறாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. மத நம்பிக்கைகளின் அடிப்படையில்தான், அதிலும் குறிப்பாக ‘மரணத்திற்குப்பின் மறுமை நாள் இருக்கிறது’ என்ற இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில்தான் இஸ்லாமிய சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிமின் ஆன்மீக வழிபாடுகளாகட்டும், அல்லது அவருடைய குடும்ப, பொருளாதார நடவடிக்கைகளாகட்டும், மறுமை நாளில் அதற்கான பயன் என்ன என்பதைப் பொறுத்துதான் அமைந்திருக்கிறது.

  கொள்கைப் பிடிப்புள்ள ஒரு முஸ்லிம் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதற்காக பன்றி மாமிசம் விற்கும் தொழிலில் ஈடுபட மாட்டார். வட்டியை இஸ்லாம் தடுத்திருக்கிறது என்பதற்காக வங்கி வேலையை தவிர்க்கும் பல முஸ்லிம் சகோதரர்கள் இருக்கிறார்கள். இவர்களின் மத நம்பிக்கைகள்தான் இவர்களின் பொருளாதார நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது.

  இது இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படைகளுள் ஒன்று. இஸ்லாத்தில் மதப்பயன்பாடு, சமூகப்பயன்பாடு என இருவேறு நிலைப்பாடுகள் கிடையாது. நீங்கள்தான் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

  //பதிவதற்கு எளிதாக இருந்தால் கடவச்சீச்சில் மட்டுமல்ல எல்லாவற்றிலிருந்தும் துடைத்தெறிந்து விடலாம். ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகள் விதித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகளை கடந்து நீக்கிக் கொள்வது ஒன்றும் பெரிய விசயமல்ல, ஆனால் அதை செய்தே தீர வேண்டும் எனும் அளவுக்கு அதை நாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுவதில்லை.//

  //என்னுடைய பிறப்பை வைத்து மதத்தை என்மீது திணித்து விட்டு என்னுடைய சிந்தனை வளர்ந்ததும், அதை நீக்கினால் தான் ஆயிற்று என்று அடம்பிடிப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?//

  இஸ்லாமிய கொள்கைகளில் நம்பிக்கையோ ஈடுபாடோ இல்லாத ஒருவர் தனது இஸ்லாமிய அடையாளங்களை நீக்கிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லைதான். இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்து இஸ்லாமியப் பெயர்களைக் கொண்ட எத்தனையோ சினிமா நடிக, நடிகையர் இருக்கிறார்கள். அவர்களை ‘பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று யாரும் நிர்ப்பந்திப்பதில்லை.

  ஆனால் ‘இஸ்லாத்தின் கொள்கைகள் தவறானவை. இஸ்லாத்தின் பிடியிலிருந்து இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும்’ என்றெல்லாம் ஒருபுறம் கொள்கை முழக்கமிட்டுக் கொண்டு, இன்னொரு புறத்தில் மிக எளிதாக நீக்கிக் கொள்ள முடிந்த இஸ்லாமிய அடையாளங்களைக்கூட நீக்கிக் கொள்ளாமல் அவற்றால் கிடைக்கும் சிற்சில சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பது நயவஞ்சகம் இல்லையா?

  மேலும், இஸ்லாமியக் கொள்கைகளில் ஈடுபாடில்லாமல் ஒதுங்கிச் செல்லும் எவரையும் ‘உன் இஸ்லாமிய அடையாளத்தை நீக்கினால் தான் ஆயிற்று’ என்று யாரும் அடம் பிடிப்பதில்லை. ஆனால் இஸ்லாமியக் கொள்கைகளை நேர்மையான முறையிலன்றி இழிவாக விமர்சனம் செய்பவர்கள் முதலில் தம் இஸ்லாமிய அடையாளங்களைத் துறந்து விட்டு வருவதுதான் குறைந்தபட்ச நேர்மை.

  பெரியார் கொள்கையளவில் பெருமளவு இஸ்லாத்திலிருந்து வேறுபட்டாலும் முஸ்லிம்களிடையே அவர் மீது நன்மதிப்பு இருந்தது. காரணம் அவருடைய கொள்கையில் அவர் தெளிவாக இருந்தார். சமூக மாற்றம் என்பது முதலில் தன்னிலும் தன் வீட்டிலும் உருவாக வேண்டும். அதை பெரியார் செயல்படுத்திக் காட்டினார். ஆனால் இன்றைக்கு பாருங்கள்… ‘கொள்கை எல்லாம் எனக்கு மட்டும்தான். என் பாஸ்போர்ட்டிற்குக்கூட கிடையாது’ என்பவர்கள் பெரியாரை உதாரணமாகச் சொல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

  //ஒன்று தெரியுமா? நடைமுறைகளை வெகு எளிதாக்கி, எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்று கூறும் மதத்தில், மதத்தை விட்டு வெளியேறும் யாரையும் எதுவும் செய்ய மாட்டோம். ஊர் விலக்கம் செய்ய மாட்டோம், மண விலக்கம் செய்ய மாட்டோம்,விருப்பபட்டால் இருக்கலாம் இல்லாவிட்டால் விலகிவிடலாம் என்று அறிவித்துப் பாருங்கள். இருப்பதில் பாதிப் பேர் நாங்கள் முஸ்லீமல்ல என்று அறிவித்துக் கொள்வார்கள். சமூகக் கட்டுப்பாடுகள் தான் அனேகரை மதங்களில் இருத்தி வைத்திருக்கிறது அறிந்து கொள்ளுங்கள்.//

  வெற்றுச் சவடால்! ஒரு உண்மையை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள். ஒரு உண்மையான முஸ்லிமாக அதற்காகன கடமைகளைப் பேணி வாழ்வதுதான் கடினமே தவிர, பெயரளவில் முஸ்லிமாக வாழ்வதல்ல. நிர்ப்பந்தங்கள் விலகுபவர்களுக்கல்ல, முஸ்லிமாக வாழ விரும்புவர்களுக்குத்தான். ஒரு முஸ்லிம் ஆணைத்தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒரு முஸ்லிமாக வாழ விரும்பும் பெண்ணுக்குத்தான் உண்டு. குஷ்பு என்ற நடிகை இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்தவர் என்கிறார்கள். அவர் முஸ்லிமல்லாத ஒரு ஆணை திருமணம் செய்திருக்கிறார். அவரை யாரும் எதற்காகவும் நிர்ப்பந்திக்கவில்லை.

  //மதம் என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? சமூகம் என்றால் என்ன? என்று எதுவுமே தெரியாத நிலையில் என்மீது அடையாளமாக சுமத்தப்பட்ட ஒன்றை நான் சிந்தித்து சுய தெரிதலாக ஒன்றை தேர்ந்தெடுக்கும் போது அதையும் நீக்க வேண்டும் என நீங்கள் கோருவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?//

  உங்கள் சுயசிந்தனையின் அடிப்படையில் இஸ்லாம் அல்லாத ஒரு கொள்கையை நீங்கள் தேர்தெடுக்க உங்களுக்கு உரிமை உண்டு. அதை யாரும் மறுக்கவில்லை. உங்களுக்கு இஸ்லாம் புரியவில்லை என்ற காரணத்திற்காக இஸ்லாமியக் கொள்கைகளை வரம்புமீறி இழிவாக விமர்சனம் செய்யும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தார்கள்?

  //விவாதத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல், அதுவல்லாத விசயங்களில் ஏன் இங்கு வருகை தந்திருக்கும் முஸ்லீகள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான பொருள் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.
  ஒரு நினைவூட்டல். நீங்கள் விவாதத்திற்கு வருகிறேன் என்று கூறினீர்களே என்னவாயிற்று?//

  விவாதத்திற்குத் தொடர்புடையவற்றைத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். துராப்சா, தஜ்ஜால் பற்றியோ அவர்களின் தரங்கெட்ட கட்டுரை பற்றியோ, அதைத் தொடர்ந்து நேர்ந்த சம்பவங்களைப் பற்றியோ தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதில் பலனிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் அச்சம்பவத்தைப் பற்றிய என் கருத்தை வினவு தளத்தில் விரிவாக பதிந்திருக்கிறேன்.

  நான் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்: இறைத்தூதர் லூத் (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கும் சம்பவங்களை திரித்து ஒரு அவதூறான கட்டுரையாக எழுதி, வெளியிட்டு, பகிர்ந்து, விவாதித்து, ஆதரித்து நிற்பதன்மூலம் உங்கள் தரப்பு சொல்ல வரும் கருத்து என்ன? ஏதேனும் ஒரு கருத்தை நிரூபிப்பதற்கான ஆதாரமாக இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதென்றால் அந்தக் கருத்து எது? சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் சொல்லுங்கள்!

 92. (நடைமுறைகளை வெகு எளிதாக்கி, எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்று கூறும் மதத்தில், மதத்தை விட்டு வெளியேறும் யாரையும் எதுவும் செய்ய மாட்டோம். ஊர் விலக்கம் செய்ய மாட்டோம், மண விலக்கம் செய்ய மாட்டோம்,விருப்பபட்டால் இருக்கலாம் இல்லாவிட்டால் விலகிவிடலாம் என்று அறிவித்துப் பாருங்கள். இருப்பதில் பாதிப் பேர் நாங்கள் முஸ்லீமல்ல என்று அறிவித்துக் கொள்வார்கள்.) எவனும் இதுக்கு பதில் சொல்ல மாட்டான். அருமையான நெத்தியடி

 93. இங்கு தேவயில்லாத கதையை பேசும் இஸ்லாம் நண்பர்களே செங்கொடி கேள்விக்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு மற்ற கதை பேசுங்கள்

 94. நொந்தான் ///இன்னும், மாதவிடாய் வராத சிறுமிக்கும் இத்தா 3 மாதம் என்று கூறும் வசனம் //
  எத்தனையோ தடவைகள் விளக்கம் கொடுத்தும் நந்தன் கோயில் நந்தியாக அந்த இடத்திலே இருக்கிறது.

 95. நந்தன்.அவர்கள் தூய்மையானவர்கள் என்றால் நீங்கள் திருமணம் செய்து இல்வாழ்க்கை வாழ உகந்தவர்கள் என்று பொருள்.உங்களில் இவர்களை திருமணம் செய்து வாழ ஒரு ஆண்மகன் கூட இல்லையா?என்று தொனியில் கேட்கிறார்.உங்களில் இருவர் இவர்களை திருமணம் செய்வது இறைவன் அனுமதித்த ஒன்றாகும் ..அதைப்போல் மற்றவர்களும் பெண்களை திருமணம் உங்களுக்கு தூய்மை ஆக்க்கபட்டவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று மறைமுகமாக உணர்த்துகிறது

 96. நண்பர் மரைக்காயர்,

  நீங்கள் மயக்கத்திலேயே இருக்கிறீர்கள் என்பதைத்தான் உங்கள் பதிவு காட்டுகிறது. சமூகமும் மதமும் வேறு வேறல்ல, மறுமைக்குப் பிறகான வாழ்வே அடிப்படை என்று இருக்க விரும்புகிறீர்கள். அப்படித்தான் கற்றுத்தரப்படுகிறது. ஆனால் யதார்த்தம் அப்படி அல்ல. சமூக உறவுகளும் அதன்மீதான கட்டுப்பாடுகளும் எல்லாருக்கும் எல்லா இடத்திற்கும் பொதுவானவை குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு மட்டும் உரியதல்ல. ஆனால் இஸ்லாமிய மதம் மட்டும் அதன் மீது அதிக உரிமை கோருகிறது. இறப்புக்கு பிறக்கான வாழ்க்கை தான் அடிப்படை என்றால் சமூக அளவில் மதத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் பெரிதும் குறைந்திருக்க வேண்டும். 99.99 நூற்றுமேனி முகம்மதியர்கள் அவ்வாறு இருப்பதில்லை. இதை சிந்தித்தாலே சமூகமும் மதமும் ஒன்றல்ல என்பது விளங்கும். கடையநல்லூரில் நூற்றுக்கும் அதிகமான நாத்திகர்களை என்னால் காட்ட முடியும். ஆனால் அவர்கள் அவ்வப்போது அல்லது வெள்ளி தோறும் தொழுது கொண்டிருப்பார்கள். இதை நீங்கள் தனி மனித அறியாமை என்பீர்கள். ஆனால் நான் கூறியது போல் சமூக கட்டுப்பாடுகள் இல்லை என்றால் தம்மை வெளிப்படையாக அறிவித்துக் கொள்வார்கள். அதனால் தான் அப்படி ஒரு கேள்வியை வைத்திருந்தேன். நீங்களோ வெற்றுச் சவடால் என கடந்து போக முற்படுகிறீர்களேயன்றி, பரிசீலிக்க முற்படவில்லை. காரணம், உங்கள் வேதங்களும், வேத வியாசகர்களும் சமூகமும் மதமும் வேறல்ல என்று போதித்தாலும் யதார்த்தம் அப்படி அல்ல எனும் உண்மை ஓரளவேனும் உங்களுக்கு புரிந்திருக்கிறது என்பதே.

  இஸ்லாமிய நம்பிக்கையை விட்டு விலகிய எல்லோரையும் அடையாளங்களை நீக்குமாறு வற்புறுத்துவதில்லை என்கிறீர்கள். என்றால் விமர்சனம் செய்பவர்களுக்கு மட்டும் ஏன் அந்த நிபந்தனை. ஏனென்றால் விமர்சனங்களுக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் உங்களின் மீது ஏற்படுகிறது என்பதால் தானே. இஸ்லாத்தை தன்னளவில் விமர்சனம் செய்து ஒதுங்கி வாழ்ந்தால் அதில் பிரச்சனை ஒன்றுமில்லை. ஆனால் வெளிப்படையாக விமர்சனம் செய்தால் அவர் அடையாளத்தை நீக்குமாறு வற்புறுத்துவீர்கள் என்றால் இதன் பொருள் என்ன? பெயர்தாங்கி முஸ்லீம் என்று சிலரை நீங்கள் குறிப்பிடுவீர்கள். இப்படி நீங்கள் குறிப்பிடுவதன் காரணம் அவர் முஸ்லீமாக இல்லை என்பது தான். பெயர் இருக்கிறது என்பதால் அவரை நீங்கள் முஸ்லீமாக கருதுவதில்லை. இந்த இடத்தில் அடையாளம் உங்களுக்கு முக்கியமானதாக படவில்லை. ஆனால் யாராவது பொது வெளியில் விமர்சித்துவிட்டால் அடையாளம் முதன்மையான பிரச்சனையாகிவிடுகிறது. என்றால் இங்கு அடையாளம் பிரச்சனையா விமர்சனம் பிரச்சனையா? விமர்சனம் தான் பிரச்சனை என்றானபின் அடையாளத்தை முதன்மையாக்குவது ஏன்? என்னைப் பொருத்தவரை நான் தெளிவாகவே கூறிவிட்டேன். நான் என்னை இஸ்லாமியனாக உணரும் முன்னமே அந்த அடையாளம் என்மீது விழுந்துவிட்டது. அந்த அடையாளம் என்மீது இருக்கிறது என்பது மட்டுமே என்னை முஸ்லீமாக இருப்பதற்கு தகுதியாக்கும் என்று கருதுகிறீர்களா? இல்லையென்றால் அடையாளம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை மட்டுமல்லாது நான் வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறேன் அந்த அடையாளத்தின் மூலம் எனக்கு எந்தவிதமான பலன்களையும் ஏற்க விருப்பமில்லை என்று. இதற்கு மேலும் நீங்கள் அவ்வாறே கூறுவீர்களாயின் அதை நீருபித்துக் காட்டுங்கள். அல்லாவிடின் விமர்சனங்களுக்கு பதில் கூற முடியாததாலேயே அடையாளத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றே கருத வேண்டியதிருக்கும். மீண்டும் கூறுகிறேன். அந்த அடையாளத்தை துறந்தால் தான் நான் நாத்திகனாகவோ கம்யூனிஸ்டாகவோ கருதப்படுவேன் எனும் நிலை எனக்கு இல்லை. அது என்னுடைய பிறப்பின் அடையாளமாக தொடர்கிறது அவ்வளவு தான்.
  \\இஸ்லாமியக் கொள்கைகளை நேர்மையான முறையிலன்றி இழிவாக விமர்சனம் செய்பவர்கள்// \\இஸ்லாமியக் கொள்கைகளை வரம்புமீறி இழிவாக விமர்சனம் செய்யும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தார்கள்?// ஏற்கனவே இங்கு கேட்டிருக்கிறேன். இழிவு இழிவு என்கிறார்கள் எந்தவகையில் இழிவு என்பதைப் பற்றி மட்டும் மூச்சு விடமாட்டேன் என்கிறார்கள். விமர்சனமே இழிவாகிவிடுமா? என்றால் முகம்மது சிலைகளை அடித்து நொறுக்கியதை நீங்கள் எப்படி கருதுவீர்கள்?
  கடையநல்லூர் நிகழ்வு தனியொரு சம்பவமல்ல என்பதை தெளிவாகவே விளக்கியிருக்கிறேன். எங்கும் அதை நீங்கள் கடந்து செல்ல விரும்புகிறீர்களேயன்றி தெளிவான உங்கள் கருத்தை பதிவு செய்யவில்லை. பொய்யாக குற்றம்சட்டப்பட்ட ஒருவனை எந்தவித விசாரணையும் செய்யாமல் தாக்குவதும் தண்டனை கொடுப்பதும் என்ன வகை நீதி? தெளிவாக பதில் கூறுங்கள். பார்க்கலாம்.
  \\இறைத்தூதர் லூத் (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கும் சம்பவங்களை திரித்து ஒரு அவதூறான கட்டுரையாக எழுதி, வெளியிட்டு, பகிர்ந்து, விவாதித்து, ஆதரித்து நிற்பதன்மூலம் உங்கள் தரப்பு சொல்ல வரும் கருத்து என்ன?// இது குறித்து நான் தெளிவாகவே விளக்கியிருக்கிறேன். குரானில் இவ்வளவு தான் கூறப்பட்டிருக்கிறது. இதற்குமேல் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது என்று குரானையும் பழைய ஏற்பாட்டையும் தெளிவாகவே பிரித்துக் காட்டுகிறது அந்தக் கட்டுரை. உங்கள் பிரச்சாரகர்கள் யாரும் பழைய ஏற்பாட்டுடன் பைபிளுடன் குரானை ஒப்பிட்டுக் காட்டுவதில்லையா? இரண்டிலும் இருக்கும் ஒருகதையை முழுமைபடுத்தி வெளியிட்டால் அது இழிவாகிவிடுமா? எங்கே அந்தக் கட்டுரையில் சுயமாக கற்பனை செய்து வேதங்களில் இருப்பதோடு கலக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு வரியைக் காட்ட முடியுமா உங்களால்? குரானிலும் பழைய ஏற்பாட்டிலும் இருப்பதைத்தவிர வேறேதாவது இருக்கிறதா அதில்?வறட்டு ஜம்பம் பேசுவதை விட பரிசீலித்துப் பாருங்கள் அது தான் உடல் நலத்திற்கும் கருத்து நலத்திற்கும் நல்லது.

 97. //நிர்ப்பந்தங்கள் விலகுபவர்களுக்கல்ல, முஸ்லிமாக வாழ விரும்புவர்களுக்குத்தான்.//

  ஆகவே, நீங்கள் நிர்ப்பந்தம் செய்து இருக்க வேண்டியது துராப்ஷாவை அல்ல துராப்ஷாவின் மனைவியை அப்படித்தானே?

 98. வேலையற்ற அம்பட்டன் பூனையைப் போட்டு செரைச்சானம்…!!
  அந்த வகை தான் இந்த கலீல் என்ற செங்கொடியும் ….!!
  இவரின் positives …. எதிர் வாதம் செய்யும் திறன் + வார்த்தைகளை கையாளும் திறன் …!!
  இவரின் negatives …. மற்ற எல்லாமும்…!!
  இவன் நரகல் தின்பவன்…
  நாம் சரி இல்லை என்கிறோம்….
  விட்டு விடுங்கள்….!!
  அவனக்கு அது பிடித்து இருக்கிறது என்றால்….
  அவனை ஏன் மனிதனாய் பார்க்க வேண்டும்…
  மனிதன் நரகல் சாப்பிடுவது இல்லை…!!
  அவன் ……..

 99. இபுராகிமே
  வந்தவர்கள் பெண்களா? ஆண்களா? என்பதையும் சொல்லவும்

 100. nantan///உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா?” என்று கேட்டார்.
  குர் ஆன் 11:௭௮///

 101. செங்கொடி ///இதைத்தான் நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் மதப் பயன்பாட்டையும் சமூகப் பயன்பாட்டையும் குழப்பிக் கொள்கிறீர்கள்.///
  புரிந்துகொண்ட பேராசிரிய பெருந்தகையே ! இவ்விரண்டும் வெவ்வேறானது என்பதை உதாரணங்கள் காட்ட சொல்லுங்களேன்

 102. //இந்துத்துவ பாசிசங்கள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஏனைய மதங்களை தமக்கிசைவாக்க கொடுக்கும் நெருக்கடிகளின் எதிர்விளைவு தான் உருத்திரிந்து மதவெறியாக உருவெடுக்கிறது. அந்த வகையில் இந்து பாசிசங்களின் அடக்குமுறைகளிருந்து ஏனைய மதங்களின் பாதிப்புகளை தடுக்கும் தேவையும் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கிறது.//

  ஆக, இஸ்லாமியர்கள் மதவெறிகொண்டு இருப்பதற்கும் இந்துக்கள் தான் காரணம்? இன்னுமா திருந்தலை?

 103. “கடவுளைக் கற்பித்த முட்டாள்கள்”….. முகம்மது…கிறிஸ்து….கிருஷ்ணன்…….கடவுளை பரப்பிய அயோக்கியன்கள்…..முல்லாக்கள்…( ஹஜ்ரத்க்கள்)….சாமியார்கள்…( பார்ப்பனர்
  கள்)…..பாதிரிமார்கள்….கடவுளை வணங்கும் காட்டுமிராண்டிகள்….. இந்துக்கள் …..முஸ்லிகள்…..கிறித்துவர்கள்…..

 104. கடவுள் நம்பிக்கையிலிருந்து மீள முடியாதவர்கள் அல்லது அதற்கு முயற்சிக்க விரும்பாதவர்கள், மீண்டும் மீண்டும், தங்களின் நம்பிக்கைகளுக்கு, புதிய விளக்கங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு ,. ஒருபுறம் மருத்துவம், உளவியல், அறிவியல் ஆய்வுகள், உண்மைகள் வளர்ந்து, மனித வாழ்வுக்கு புதிய கண்டுபிடிப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. மற்றொருபுறம், கடவுள், மத நம்பிக்கைகள் முற்றிலும் வீழ்ந்து விடாமல் தடுக்கும், புதிய முயற்சிகள். ஆன்மீகம், என்ற போர்வையில் நடந்து வந்தன. இந்த முரண்பாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் கூர்மையடையும்போது அம்பலப்பட்டு போகிறவர்கள் – மதங்களும், கடவுள் கோட்பாடுகளும்தானே தவிர, விஞ்ஞானமோ, அறிவியல் கோட்பாடுகளோ அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.சமூகத்தையும், அதன் உறுப்பினர்களான மக்களையும், சமத்துவமாகவும், தோழமையாகவும் நேசிக்கக் கூடிய ஒரு உயர்ந்த மனிதப் பண்பாட்டைக் கட்டி எழுப்புவதற்கு – மதங்களோ, கடவுள்களோ, துணைக்கு வரப்போவது இல்லை என்பதோடு, அவைகள் தடைக்கற்களாக நிற்கின்றன. காலாவதியாகி விட்டன! காலம் முடிந்து போன மருந்துகளை உட்கொள்வது ஆபத்துகளையும் பக்க விளைவுகளையுமே ஏற்படுத்தும். – கடவுள், மதக் கோட்பாடுகள் செல்லாக்காசுகளாகிவிட்டதை வெளிச்சப்படுத்துகின்றன..

  இனியும், வாழ்க்கைக்கான தீர்வுகளையும், கருத்துத் தேடல்களையும், கடவுள், மதங்களுக்குள் தேடுவதில் எந்தப் பயனும் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வரவேண்டும் .

  கடவுள் என்ற ஒன்றே இல்லை என்ற உறுதியான விஞ்ஞானத்தின் முடிவை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, முழுமையாக இந்த தூசி படிந்த பழமைவாதத்திலிருந்து மீள முடியும் என்பதை வலியுறுத்துகிறோம்.

 105. இபுராகிம்,
  குரான் வசனமேல்லாம் என்க்கு வேண்டாம். வந்தவர்கள் ஆண்காளா ? பெண்களா? எண்ணிக்கையையும் நீங்கள் குறிப்பிடுவதால் எத்தனைபேர் வந்தனர் என்றும் நேரிடையாக கூறுனால் தொடர்கிறேன். இல்லையேல் வெட்டியுடன் என்க்கு வேலையில்லை.

 106. dear brother nandan enjoy!!!!!!!!!!
  1.)
  7:80. மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”
  7:81. “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் – நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.”

  2)

  11:77. நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.
  11:78. அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.
  11:79. (அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.
  11:80. அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார்.

  3)

  15:67. (லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
  15:68. (லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”
  15:69. “அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்” என்றும் கூறினார்.
  15:70. அதற்கவர்கள், “உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.
  15:71. அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.
  15:72. (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
  http://kky30100.wordpress.com/2010/07/06/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/

  http://newindian.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=47665309

 107. நந்தன் குர்ஆன் வசனங்கள் பற்றிய விவாதத்தில் என்னுடைய கருத்துகளை வைத்து என்ன சொல்லபோகிறேர்கள்

  அதன்படி அவர்கள் ஆண்கள் தான் .அவருடைய சமுதாயத்தினர் என்று வருவதால் குறைந்த பட்சம் இரண்டுனபர்களுக்கு மேல் வந்திருக்கலாம்.

 108. நண்பர் இப்ராஹிம் சுட்டியாக தந்திருக்கும் பிஜே தளத்தின் விளக்கத்தை லத்தீப் உள்ளிட்ட சிலரும் மின்னஞ்சலாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே பலமுறை பதிலளிக்கப்பட்ட ஒன்று தான் என்பதால் சுருக்கமாகவே இங்கு பதிகிறேன்.

  இதற்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட பதிவு கீழே

  நான் ஏன் பீஜேவுடன் நேரடி விவாதம் செய்ய விரும்பவில்லை.

  வசை மொழிகளை அள்ளித் தெளித்து எழுதப்பட்டிருக்கும் பிஜேவின் அந்த விளக்கத்தை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். சொல்லவந்த கருத்தை கண்ணியமாக சொல்லத் தெரியாத ஒருவரிடம் என்ன விவாதம் வேண்டிக் கிடக்கிறது?

  அதில் எழுத்து விவாதத்தில் நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் கூறும் எதுவும் நேரடி விவாதத்தில் நடக்காது என்று கருதுவதற்கு இடமுண்டா? நேரடியாக என்றால் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று இவர் நம்புவாராம். இவர் நம்பினால் அது முழுமையான உண்மையாகத்தான் இருக்க வேண்டும்(!)

  எழுத்து விவாதத்தில் என்ன நடக்கும் என்று இவர் கூறியிருக்கிறாரோ அதை அப்படியே அட்சரம் பிசகாமல் செங்கொடி தளத்தில் நடந்த விவாதங்களில் அவரது அடிப்பொடிகள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். அவைகள் நூலகம் பகுதியில் விவாதம் எனும் தலைப்பில் ஆவணப் படுத்தப்பட்டிருக்கிறது, எவரும் கண்டு கொள்ளலாம்.

  நேரடியாக என்றால் அப்படிமுடியாது என்று நம்பும் இவர் நடத்திய நேரடி விவாதங்களில் ஐயந்திரிபற ஒரு முடிவை வந்தடைந்திருக்கிறார்களா? இரண்டு நாள் கூத்தை நடத்தி முடித்து விட்டு வடிவேலு கோப்பை வாங்கி வருவது போல் ஆராவாரமாக கெலித்துவிட்டோம் என்று இவர்களே அறிவித்துக் கொள்வார்கள். இதைத்தவிர வேறு என்ன நடந்திருக்கிறது இதுவரை?

  நான் வறட்டுத் தனமாக எதையும் பார்ப்பதில்லை. நேரடிவிவாதம், எழுத்து விவாதம் இரண்டுமே கருத்தாடலின் இருவேறு வடிவங்கள். இரண்டிலுமே சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளில் சிலவற்றை பதிவில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். முடிந்தால் பரிசீலித்துப் பார்க்கட்டும். இந்த வடிவத்திற்கு வந்தால் தான் ஆயிற்று என்று அடம் பிடித்தால் அது அவர்கள் விருப்பம் அதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

  ஒருவேளை நான் நேரடி விவாதத்திற்கு வந்து என்னை அடையாளம் தெரிந்து என்றோ ஒரு நாளில் எங்கோ ஓர் இடத்தில் யாரோ ஒருசில அடிப்பொடிகளால் தாக்கப்பட்டால் அப்போது இவர்கூறும் பதில் என்னவாக இருக்கும்? அவர்கள் இஸ்லாத்தை அறியாமல் செய்துவிட்டார்கள் என்று ஒற்றை வாக்கியத்தில் கடந்து சென்று விடுவார். துணிந்து கடையநல்லூரில் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டுவிட்டு அதை பரிசீலனை செய்யக்கூட முடியாத இந்தக் கூட்டத்தில் வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்?

  தனிப்பட்ட முறையில் இஸ்லாம் எனும் மதத்தின் மீது எந்த வெறுப்பும் இல்லை, மாறாக அனுதாபமே உண்டு. அதே நேரம் அதுவும் ஒரு மதம் எனும் அடிப்படையில் அதை விமர்சனம் செய்துவருகிறேன். அதன் மீது கருத்துக் கூற விரும்பும் எவரையும் வரவேற்கிறேன். அவ்வாறு அவர்கள் கூறும் கருத்துகளை பரிசீலிக்கும், பதில் கூறும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். வந்தால் விவாதிக்கலாம். சவால் விட்டால் பதிலுக்கு சவால். அவ்வாறன்றி தன் கூட்டத்தார்கள் மத்தியில் சதிராட்டம் புரிந்தால்……… அது அவர்கள் பாடு. எனக்கு அதில் ஒன்றுமில்லை.

   

   

 109. பி.ஜேவின் விவாதங்களில் இதுவரை ஏதாவது முடிவு ஏற்பட்டு உள்ளதா என்பதை விள்க்குங்கள் இப்ராஹிமே!!!!!!!!
  ***********

  பி.ஜேவின் விவாதத்தில் இருந்து சாமர்த்தியமாக நழுவலை பாருங்கள்.
  http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/san-tntj/

  http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=567&Itemid=42

  காவல்துறை என்ன சொல்லி தமிழ்நாட்டில் தடை விதித்தது.
  1.பி.ஜே (ஜால்ரா) கூட்டம் தவிர பிற முஸ்லிம் இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவ்த்தன.முஸ்லிமகளின் விவாதம் என்பதற்கே எதிர்ப்புத் தெரிவித்தன

  2.நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது.
  என்பதால் மட்டுமே
  *********
  ஆகவே சான் தனியாக ஒரு நிகழ்வு போல் ஒரு மண்டபத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யாமல்விவாதம் ந்டத்தி காணொளி எடுப்போம் என்றால் அனைவருக்கும் சரியாகத்தானே படும்.

  குரான் மீது கருத்துகளை கூற சான் ஏன் பயப்பட வேண்டும்?

  சனா குரான் ,வார்ஸ் குரான் என இந்தியாவில் பயன்படுத்தும் ஹாஃப் குரான்[uthmaan keiro text] தவிர உண்டு என்றாலே குரான் இறைவேதம் அல்ல என்பது தெரிந்துவிடும் என்ற பீதி.

  வேண்டுமானல் இதுவரை இந்த வார்ஸ்,ஸனா குரான் பற்றி பி.ஜே என்ன கூறியுள்ளார் என்பதை விள்க்குங்கள் இபுராகிமே
  இது பற்றி நாம் விவாதிப்பொமா

 110. பி.ஜே தான் இப்ராஹிம், அவன் தான் இவன், இவன் தான் அவன். செங்கொடி நீங்க முன்னே போய்க்கொண்டே இருங்கள் .

 111. இபுராகிம்,
  வந்தவர்கள் ஆண்கள். அதுபோல் இரண்டுபேருக்கு மேல் என்பது மட்டுமல்ல, தன்னுடைய சமுதாயத்தினர் என்று கூறுவதால் பத்து பதினைந்து பேராகவாது இருக்கவேண்டும். எந்தனை பேராகாவாது இருந்துவிட்டு போகட்டும். வந்த ஆண்கள் லூத்திடம் என்ன கேட்டனர்?

 112. செங்கொடி .இப்போது மக்கள் புழக்கத்திலுள்ள பழைய ஏற்பாடு மனித கருத்துக்கள் ஊடுருவி உள்ளன என்பதுதான் முஸ்லிம்களின் கருத்து.
  லூத் நபி[அலை] அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் குர்ஆனில் உள்ளது மட்டுமே உண்மை. மேலும் குர்ஆனில் புராண கதை சொல்லப்படவில்லை ஒவ்வொரு நபியை பற்றியும் அவர்கள் மூலம் மக்கள் வாழ்க்கை நெறிகளை அறிந்திடும் வண்ணம் அந்த நபிகளின் வரலாற்றில் உள்ள தேவையானவை மட்டுமே குர்ஆன் கூறுகிறது.அது தவிர்த்து இறைவன் அளித்த பழைய ஏற்பாடு விலும் குறிப்பிட்ட சம்பவங்கள் கிடையாது என்பதே முஸ்லிம்களின் கருத்து.அவாறு இருக்க முஸ்லிம்களை விமர்சிக்கும் நோக்கில் அந்த பதிவு மொள்ளுமாரித்தனமா இல்லையா?

  ///சொல்லவந்த கருத்தை கண்ணியமாக சொல்லத் தெரியாத ஒருவரிடம் என்ன விவாதம் வேண்டிக் கிடக்கிறது? ////////
  எங்கள் நபி[ஸல்] அவர்களையும் இஸ்லாத்தையும் கரடு முரடாக விமர்சிப்பவர்கள் பொதுவாக விவாதத்துக்கு அழைத்தும்வராதவர்களுக்கு பதில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. உங்கள் பெயரை குறிப்பிட்டு அவ்வாறு விமர்சிக்கப் படவில்லை.நீங்கள் நேரில் வருவீர்களானால் கண்ணியத்திற்கு எவ்வித குறைவும் இருக்காது. இதுவரை நடந்த எத்தனையோ விவாதங்களில் நடக்காத ஒன்று உங்களுடன் எவ்வாறு நடக்கும்? இதுவரை விவாத நடத்தியவர்கள் நேர்மையற்றவர்கள் .தங்களது தவறுகள் சுட்டிகாடட்ப்பட்டால்
  பதில் இல்லாமல் தாவி விடுவார்கள் . நீங்கள் அப்படியல்ல .உண்மையிருந்தால் ஏற்றுக் கொள்ளக்க்பப்டியவர் .ஒரு வேலை நீங்கள் கலீலுர் ரஹ்மானாக மீண்டும் பிரகாசிக்கலாம் .ஆயின் அன்பரே காரணம் காட்டாமல் காரியம் ஆற்ற நேரடி விவாதத்திற்கு வாருங்கள்

 113. பி.ஜேவின் விவாதங்களில் இதுவரை ஏதாவது முடிவு ஏற்பட்டு உள்ளதா என்பதை விள்க்குங்கள் இப்ராஹிமே!!!!!!!!
  ***********
  விவாதத்திற்கு வரும் மக்களும் ,மற்றும் அவற்றை டிவிடிகளில் கேட்ட மக்களும் மாற்றம் கண்டுள்ளார்கள் என்பதை நீவீர் அறிய மாட்டீர்.
  ஒருதடவை விவாதத்திற்கு வாருங்கள்.உங்களிடம் உண்மை இருந்தால் உங்களை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. ஆக பயப்படாமல் ,கொள்கை காப்பாற்ற வாருங்கள்

 114. //விவாதத்திற்கு வரும் மக்களும் ,மற்றும் அவற்றை டிவிடிகளில் கேட்ட மக்களும் மாற்றம் கண்டுள்ளார்கள் என்பதை நீவீர் அறிய மாட்டீர்.// யாம் அறிவோம். விவாதத்தில் கலந்துகொண்ட எல்லா கிறிஸ்தவர்களும் தற்போது இஸ்லாமியர்களாக மாறி தாடியும் குல்லாவுமாக திரிகிறார்கள் 🙂

 115. karuppasami///பி.ஜே தான் இப்ராஹிம், அவன் தான் இவன், இவன் தான் அவன். செங்கொடி நீங்க முன்னே போய்க்கொண்டே இருங்கள் .////
  பீஜேயின் விளக்கங்களை கேட்டும் படித்தும் எழுதும் எனது பதிவுகளை வைத்தே இந்த முடிவுக்கு வந்து விட்டீர்கள் என்றால் ,பீஜே உடன் எப்படி செங்கொடி நேரடி விவாதத்திற்கு வருவார்? அவர் ஒடி ஒழிவதில் நியாயமிருக்கவே செய்கிறது

 116. நந்தன் நீங்கள் எல்கேஜி மிஸ்ஸும் அல்ல.நான் மாணவனும் அல்ல .இருப்பினும் சொல்லுவோம்
  உங்களது மகள்களை திருமணம் செய்து அழகிய முறையில் வாழ நாங்கள் விரும்பவில்லை.எங்களுக்கு ஓரின சேர்க்கைதான் பிடிக்கும் அந்த விசயமும் உங்களுக்கு நன்கு தெரியும்.என்று கூறி அவர்களை ஓரின சேர்க்கைக்கு அனுமதிக்குமாறு கேட்டனர்

 117. ஒருவேளை நான் நேரடி விவாதத்திற்கு வந்து என்னை அடையாளம் தெரிந்து என்றோ ஒரு நாளில் எங்கோ ஓர் இடத்தில் யாரோ ஒருசில அடிப்பொடிகளால் தாக்கப்பட்டால் அப்போது இவர்கூறும் பதில் என்னவாக இருக்கும்?
  தங்களை அடையாளம் தெரியாதவாறு ஒரு மாஸ்க் வைத்துக் கொள்ளுங்கள்.இல்லைஎன்றால் பர்தா அணிந்து வாருங்கள்.

 118. செங்கொடி ///தனிப்பட்ட முறையில் இஸ்லாம் எனும் மதத்தின் மீது எந்த வெறுப்பும் இல்லை, மாறாக அனுதாபமே உண்டு. அதே நேரம் அதுவும் ஒரு மதம் எனும் அடிப்படையில் அதை விமர்சனம் செய்துவருகிறேன். அதன் மீது கருத்துக் கூற விரும்பும் எவரையும் வரவேற்கிறேன். அவ்வாறு அவர்கள் கூறும் கருத்துகளை பரிசீலிக்கும், பதில் கூறும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். வந்தால் விவாதிக்கலாம். சவால் விட்டால் பதிலுக்கு சவால். அவ்வாறன்றி தன் கூட்டத்தார்கள் மத்தியில் சதிராட்டம் புரிந்தால்……… அது அவர்கள் பாடு. எனக்கு அதில் ஒன்றுமில்லை.///
  உங்கள் அனுதாபத்தை பெற இஸ்லாம் ஒன்றும் பரிதாபத்துக்குரியது அல்ல.சவுதியின் அனுதாபத்தால் உங்களது பிழைப்பு நடந்தது .உழைப்பாளி வர்க்கம் என்று பேசிக்கொண்டு வெளியூர் சந்தையை தேடியது ஏனோ? சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உழைப்பாளிகள் பற்றி பேசுவது நியாயம் அன்று. மளிகைகடை வைத்து உழைக்க முடியாத எனது நண்பர்கள் பலர் வெளிநாட்டு எட்டு மணிநேர ஏசி வாழ்கையை தேடி சென்றதை நான் அறிவேன் உங்களது கம்யுனிசத்தை நாங்கள் விமர்சித்தால் உங்களது அழைப்பை ஏற்று உங்களது விருப்பபடி எழுத்து விவாதத்திற்கு வரலாம். ஆனால் நீங்கள் எங்களது இஸ்லாத்தை வம்புக்கு கரடு முரடாக இன்னும் சொல்லப் போனால் பகடு என்ற விமர்சன நெறிகளுக்கு அப்பாற்பட்ட தளத்திர்கேல்லாம் இணைப்பு கொடுக்கும் அளவில் உங்களது விமர்சனம் இருக்கிறது .அவ்வாறு எனின் எங்களது அழைப்பை ஏற்று எங்கள் நடைமுறைப்படி நேரடி விவாதத்திற்கு வாருங்கள்.
  வெற்றுசவால் கூச்சல் போடவேண்டாம்.நாங்கள் அழைப்பின்றி மக்களின் எச்சரிக்கையையும் மீறி மக்கள் மத்தியில் கருத்துக்களை கொண்டு சென்று அடி உதை,வெட்டு குத்து ஊரைவிட்டு நீக்கம் ,ஏல்லாவற்றையும் கடந்து வந்துள்ளோம் .

 119. நம்பிக்கை ஊடாடினால் தான் அது பதிலும் ஆகுமோ பூங்கொடி

   

  பூங்கொடியின் இரண்டாவது பதிவு

  பூங்கொடிக்கான இரண்டாவது பதிலுக்கு புகுமுன் சில சுற்றாடல்களைக் கவனித்து விடலாம். முதலில் புனை பெயர் குறித்து வினவியிருக்கிறார். ஆனால் அந்த வினவலுக்கான தேவையே இன்றி அதில் தெளிவான குறிப்பு இருக்கிறது. அதாவது, நீங்கள் புனை பெயர் வைத்துக் கொள்ளவது குறித்து எனக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை. ஆனால் நான் புனை பெயர் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதாலேயே என்னை கோழை என விழிப்பவர்கள் மத்தியில் இருப்பதால் கேட்கிறேன் என தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன். கவனிக்கவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். மற்றப்படி, புனைபெயர் வைப்பது இந்த விவாதத்தின் சாரம் அல்ல என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

  கடையநல்லூர்.ஆர்க் தளத்தின் நேர்மை குறித்து ஏற்கனவே நான் அறிந்தது தான். அவர்களின் நேர்மையின்மையை அம்பலப்படுத்த வேண்டும் என்பதால் தான் அதை குறிப்பிட்டேன். ஆனால் அதை முன்னிட்டு என்னுடைய நேர்மையை நீங்கள் ஐயுறமுடியாது. மீண்டும் கவனித்துப் பாருங்கள். முதலிலேயே உங்களுடைய கேள்விகளுக்கான சுட்டியை கொடுத்திருக்கிறேன். நீங்கள் சொற்கோப்பாக அனுப்பியிருந்தால் வெட்டி ஒட்டியிருக்கலாம் ஆனால் நீங்கள் மின்னூல் கோப்பாக(பிடிஎஃப்) அனுப்புவதால் வெட்டி ஒட்ட முடியாது என்பதால் சுட்டி.

  இதை விவாதமாக மாற்றுவது குறித்தும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வரிசையாக உங்கள் கேள்விகளையும் என்னுடைய பதிலையும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்றால், நீங்கள் விவாதமாக நடத்த முன்வருவதாக அறிவிக்க வேண்டும். எப்படி எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டு பதிலளிப்பது போன்றவைகளையெல்லாம் முடிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் தொடர்ச்சியாக வெளியிட முடியும்.

  நீங்கள் வெறுமனே கல்லெறியும் சிறுவனல்ல என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியென்றால் என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதிலளித்திருந்திருக்க வேண்டும். கடையநல்லூர் பிரச்சனை குறித்த என்னுடைய கேள்வியை நீங்கள் கண்டு கொள்ளவே இல்லையே ஏன்? நீங்கள் கேள்வியை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பீர்கள் நான் பதிலை மட்டுமே கூறிக் கொண்டிருக்க வேண்டும் எனும் ஏற்பாடிருந்தால் அதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே நான் கேட்பதற்கும் நீங்கள் பதில் கூற வேண்டும்.

  இனி உங்களுக்கான பதிலைப் பார்க்கலாம், உங்களுக்கு பதில் கூறுவதற்கு விரிவாக ஒன்றுமில்லை. மீண்டும் கூறுகிறேன் நெருப்புக் கோழி தலையை புதைத்துவிட்டு தானே மறைந்துவிட்டதாய் கருதுவது போல், கடவுளை நம்புவர்களுக்கு மட்டுமே நம்பிக்கை இருக்க வேண்டும். அதை நம்பாதவர்கள் எதையும் நம்பக் கூடாது எனும் பொய்மேட்டில் உங்கள் கருத்தை புதைத்துக் கொண்டு, அதனாலேயே நம்பிக்கையை எதிர்கொண்டுவிட்டதாய் கருதிக் கொள்கிறீர்கள். ஆனால் முதன்மையான ஒரு கேள்வியை என்னுடைய பதிவில் கேட்டிருந்தேன். மிக ஞாபகமாக அதை மறந்துவிட்டீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்கள் என்பதால் பக்கத்து வீட்டுக்காரன் சொல்வதையெல்லாம் நம்பிவிடுவீர்களா? அதை சீர்துக்கிப் பார்க்க மாட்டீர்களா? சீர்தூக்கிப் பார்ப்பீர்கள் என்றால் உங்கள் நம்பிக்கை எந்த விதத்தில் அங்கு தொழிற்படுகிறது? பதில் கூறுங்கள்.

  கடவுள் நம்பிக்கை குறித்த இன்னொன்றையும் நான் தெளிவுபடுத்தியிருந்தேன். வெறுமனே கடவுளை நம்புவது என்பது வேறு. கடவுளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆற்றல், திறன்கள், தகுதிகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக நம்புவது என்பது வேறு. கடவுளுக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் உள்ளடக்கி ஏற்றுக் கொள்வதற்கு நம்பிக்கை மட்டும் போதுமானதல்ல என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இதற்கு உங்கள் பதில் என்ன? மட்டுமல்லாது கடவுள் என்பது வெறுமனே நம்பிக்கை சார்ந்த விசயம் மட்டுமே என்றால் அதில் கேள்விகளுக்கு இடமே இல்லை. ஆனால் உங்களைப் போன்றோர் நாங்கள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக் கொண்டு அதையும் தாண்டி அது மெய்யாக நிலவுகிறது என்றும் கூறுகிறீர்கள். அது தான் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதற்கு நம்பிக்கை மட்டும் போதுமானதல்ல என்பது தான் நாத்திகர்களின் வாதம். இது தான் கடவுள் நம்பிக்கை குறித்த சாராம்சமான விசயம். நழுவிவிடாமல் உங்கள் பதிலை பதிவு செய்யுங்கள்.

  மீண்டும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறேன். நம்பிக்கை என்பது ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்ற பேதமின்றி மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. அனைவரும் நம்பிக்கை கொள்கிறார்கள். அனைவரும் வெற்று நம்பிக்கைகளை மறுத்து கேள்விகளால் விளக்கம் பெறுகிறார்கள். ஒருவர் ஒரு விசயத்தை நம்புகிறார் என்பதால், அவர் கேள்வி எழுப்பும் ஒன்றை அதற்கு இடமின்றி நம்பிக்கை கொண்டாக வேண்டும் என்பது வெளிப்படையான அறியாமை. ஆனால் அதையே நீங்கள் உங்கள் அறிவாயுதமாக முன்னிருத்துகிறீர்கள். சமூக உறவுகளை நம்புவது என்பது அவர்களுக்கிடையேயான பங்களிப்பு உறவு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டது. தகப்பனையும் மகனையும் நம்புவது என்பது இந்த அடிப்படையில் தான். இதற்கு நான் பல தகுதிகளை கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இப்படியான தகுதிகளுக்கு உட்பட்டு ஒரு நம்பிக்கை நான் கொள்ளும் போது, என்றோ, எங்கோ ஒருவர் கூறியதை நான் ஏன் நம்ப வேண்டும்? இங்கு நம்பிக்கை என்பதை விட ஏற்பு என்பது தான் சரியாக இருக்கும். அவர் கூறியதை பரிசீலித்துப் பார்த்து சரியாக இருந்தால் மட்டுமே ஏற்க முடியும். அந்தவகையில் அவர் கூறியவை தவறு என்கிறேன் நான். அதை சரி என்று நீங்கள் கூறினால், எப்படி சரி என்று விள்க்குங்கள் அல்லது எவ்வாறு தவறு என்பதை வினவுங்கள். அதை விடுத்து, நீங்கள் எதையோ நம்புகிறீர்கள் எனவே இதையும் நம்புங்கள் என்றால் ………. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

  மனிதர்கள் அனைவருக்குமே நம்பிக்கை பொதுவானது என்பதாலும், கடவுளை நம்பாதவர்கள் எந்த நம்பிக்கையையுமே கொள்ளக்கூடாது எனும் உங்களின் நிலை அடிப்படையற்றது என்பதாலும், கம்யூனிச ஆசான்கள் குறித்து நீங்கள் கோரியிருக்கும் சான்றுகள் பொருளற்றவை என்பதாலும் அவைகளை புறந்தள்ளுகிறேன்.

  இன்றைய நிலையில் ஒருவன் தன் உழைப்புச் சக்தியை ஒரு முதலாளியிடம் விற்று வாழ வேண்டும். அல்லது தானே ஒரு முதலாளியாய் மாற வேண்டும். அல்லது முன்னோர்கள் கணக்கின்றி சேர்த்து வைத்திருக்கும் சொத்திலிருந்து உழைக்காமல் ஊதாரியாய் வாழ வேண்டும். இந்த மூன்று நிலையல்லாது வேறு எந்த நிலையிலும் ஒருவன் உயிர் வாழவியலாது. இதைத்தான் கடந்த பதிவில் நான் விளக்கியிருந்தேன். ஆனால் நீங்களோ சுயதொழில் என்பதன் பொருள் என்ன என்பதை உணராமலேயே மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஒன்று கூறப்பட்டதை உள்வாங்குங்கள். இரண்டு, பதில் கூறுமளவுக்கு சாரமான கேள்விகளை கேழுங்கள். இரண்டுமில்லாமல் வழவழவென்று சோப்புக் குழம்பு வைத்தால் ……. மன்னிக்கவும், செரிமானக் குறைபாட்டை ஏற்படுத்தும் எதையும் உட்கொள்ளவியலாது.

  நிறைகுடம் குறைகுடம் என்று பழமொழி எழுதியிருக்கிறீர்கள். விமர்சனமும், சுயவிமர்சனமும் எங்களது முக்கியமான பண்பு. எந்த இடத்திலும் பரிசீலனை செய்வதற்கு நாங்கள் மறுப்பதே இல்லை. இஸ்லாம் குறித்த என்னுடைய விமர்சனங்களை வெளிப்படையாகவே வைத்திருக்கிறேன். அதில் என்ன தவறு இருக்கிறது என்பதை கூறுங்கள். மெய்யாகவே அது தவறாக இருந்தால் அதை ஏற்று திருத்திக் கொள்வதற்கு நான் எப்போதுமே தயார். என்னுடைய விமர்சனங்களை பரிசீலிப்பதற்கு நீங்கள் தயாரா?

   

  தோழமையுடனும் ஆவலுடனும்,

  செங்கொடி

 120. ராபின் ,தொப்பி வைத்திருக்கமாட்டார்கள் .தாடி வைக்க வாய்ப்பு உள்ளது.
  ஆனால் இப்போதைக்கு மிக சிலரின் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் ஒருவர் மனதில் தாக்கம் ஏற்படுத்தினாலும் அந்த விவாதம் வெற்றியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே பொருள்..

 121. stupid senkodi, just think about your parents and how did they took care of you when you born, and what islam says about that…

  just read deeply quran in tamil (translation)

  then reply me..

  abdul majeed

 122. //ஆனால் இப்போதைக்கு மிக சிலரின் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் ஒருவர் மனதில் தாக்கம் ஏற்படுத்தினாலும் அந்த விவாதம் வெற்றியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே பொருள்..// பி.ஜெவின் உள்ளத்தில் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதாகக் கேள்வி.

 123. தன்னுடைய கருத்திற்கு எதிராணவர்களையும் மோடி இப்படித்தானே கொலை செய்தான்.

  //சவுதியின் அனுதாபத்தால் உங்களது பிழைப்பு நடந்தது//
  இந்துக்களின் அனுததப்ாத்தினால் முஸ்லிம்களின் பிழைப்பும் நடக்கிறது என கருதலாமா?

 124. ///இந்துக்களின் அனுததப்ாத்தினால் முஸ்லிம்களின் பிழைப்பும் நடக்கிறது என கருதலாமா? ///
  எதன் அடிப்படையில் இப்பட்டி கேட்கிறீர்கள் ?
  ///தன்னுடைய கருத்திற்கு எதிராணவர்களையும் மோடி இப்படித்தானே கொலை செய்தான். ///
  இப்படித்தான் என்றால் எப்படி ? விளக்கமாக சொல்லுங்கள்
  அடுத்துகுஜராத் இடை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது .இன்னும் எட்டு மாதங்களில் பொதுத்தேர்தல் வர உள்ளது .மோடி என்ன செய்வாரோ ?மத கலவரம் கொண்டு வர ரயில் எரிப்பு போன்று வேறு எதுவும் நடத்த திட்ட மிட்டுவாரோ !

 125. இபுராகிம், நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக பின்னால் நடந்தவற்றை முன்னால் கூறி தப்பிக்கப்பார்க்கிறீர்கள். லூத்தின் மகள்கள் பற்றி முதலில் அவர்கள் “உங்களது மகள்களை திருமணம் செய்து அழகிய முறையில் வாழ நாங்கள் விரும்பவில்லை.எங்களுக்கு ஓரின சேர்க்கைதான் பிடிக்கும் அந்த விசயமும் உங்களுக்கு நன்கு தெரியும்.என்று கூறி அவர்களை ஓரின சேர்க்கைக்கு அனுமதிக்குமாறு கேட்டனர்” என்று கூறவில்லை.

  முதலில் மலக்குகளைத்தான் புணரக்க கேட்கின்றனர். அதற்கு லூத் என்ன பதில் சொன்னால் என்று கூறுங்கள்.

  நான் எல்கேஜி இல்லைதான். ஆனால் நீங்கள் முன்னுக்குபின் புரட்டுவதால் வரிசையாக கேள்விகளை எழுப்பியுள்ளேன். அதனால். வரிசையாக பதில் தரவும்.

 126. இந்த விவாதத்தின் மூன்றாவது பகுதியாக சில இணைய மத பரப்புரையாளர்களின் பொய்யும் புனைச் சுருட்டுகளும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதலில் மனிதாபிமானி என்ற பெயரில் வேறு ஏதோ ஒன்றின் அபிமானியாக இருக்கும் பதிவைப் பார்க்கலாம். அந்த பதிவை படிக்க இங்கு சொடுக்குங்கள்.

  வினவு கட்டுரையில் தோழர் துராப்ஷா மன்னிப்பு கேட்டார். அதாவது மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார் என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.மட்டுமல்லாது பின்னூட்ட விவாதங்களிலும் அவரிடமிருந்து எப்படி மன்னிப்பு பெறப்பட்டது என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் எதையோ மறைத்து விட்டதாய் விளம்புகிறார்கள். எதையும் மறைக்காத நிலையிலேயே மறைத்து விட்டதாய் புழுகியவர்கள், தங்கள் பதிவில் எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் எழுதினார்களா? \\\ இவரின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு எதிராக இருந்ததால், அப்பகுதி மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இவர் இறைநிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டார். துராப்ஷாவிடம் இது சம்பந்தமாக கையெழுத்தும் வாங்கிக்கொள்ளப்பட்டது /// வெறுமனே இறை நிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டாரா? ”உன்னுடைய எந்த விளக்கமும் தேவையில்லை. மன்னிப்பு கேட்பதைத்தவிர வேறு எந்த வார்த்தையும் உன் வாயிலிருந்து வெளிவரக் கூடாது” என்று குடும்பத்தாரால் மிரட்டப்படவில்லையா? வேறு வழியில்லாமல் சரி என்று சம்மதித்து மன்னிப்பைக் கேட்கவந்தால் அதையும் கூட கேட்கவிடாமல் தாக்குதல் தொடுக்கப்படவில்லையா? பொய்யாக என்றாலும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் எந்த விசாரணையும் செய்யாமல் ஏற்கனவே எழுதி கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கையெழுத்து வாங்கப்படவில்லையா? இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து ’அறிவிக்கப்பட்டார்’ என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து சென்றது ஏன்? அல்லது எந்த அயோக்கியர்களைக் காப்பாற்ற?

  தோழர் துராப்ஷா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு குறிப்பிட்ட கட்டுரையை முகநூலில் அவர் பகிர்ந்தது காரணமல்ல, அரசியல் ரீதியாக அவர் செயல்பட்டதின் எதிர்விளைவு தான் என்பதை தெளிவாகவே நிருவியிருக்கிறேன். கேள்விகள் எழுப்பப்பட்டால் இன்னும் விரிவாக நிரூபிக்க காத்திருக்கிறேன். ஆனால் இந்த அபிமானிகளோ காழ்ப்புணர்வு எனும் ஒற்றைச் சொல்லில் கடந்து செல்கிறார்கள். முகநூலில் பகிர்ந்தது தான் காரணம் என்றால், இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் அறியப்பட்டபோதே ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இன்றும் கடையநல்லூரில் எத்தனையோ இளைஞர்கள் நாத்திக கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இஸ்லாத்துக்கு எதிரான சிந்தனைகளை பேசிவருகிறார்கள். ஏன் மேடைகளில் கூட முழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லையே. இவ்வாறிருக்க தோழர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்ட மர்மம் என்ன? அதுவும் முதலில் அவரது கடையில் வாங்காதீர்கள் என்று பள்ளிவாசலில் அறிவிப்பு அது செல்லுபடியாகவில்லை என்றதும் கடையில் குழப்பம் செய்து காவல்துறையில் முறையீடு செய்யப்பட்டது. அதிலும் தோழரின் விளக்கங்களுக்கு பதில் கூற முடியவில்லை என்றதும் ஜமாத்தார்கள் உலாமாக்கள் மூலம் நடவடிக்கை. இது ஏன்? பதில் கூற முன்வருவார்களா அபிமானிகள்?

  அடுத்து போட்டி மனப்பான்மையால் வெளிப்பட்ட அரசியல் குறித்தும் எழுதப்பட்டிருந்தது அந்தக் கட்டுரையில் இதை முட்டாள்தனமானது என்று கூறியிருக்கிறார்கள் அபிமானிகள். கூடவே, புத்திசாலித்தனமான கேள்வி ஒன்றையும் எழுப்பியிருக்கிறார்கள். \\\ இப்போது துராப்ஷா முஸ்லிமாகிவிட்டார். இந்த ஜமாஅத்தினர்கள் இதனை எதிர்க்க போகின்றார்களா? /// இந்தக் கேள்விக்கும், போட்டி அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?அந்த ஊரில் போட்டி அரசியல் தான் நிலவில் இருக்கிறது என்பதற்கு கட்டுரையிலேயே எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டிருக்கிறது மறுக்க முடியுமா அபிமானிகளால்? நடந்தது போட்டி அரசியல், அதனை அறுவடையும் செய்து கொண்டார்கள். இப்போது சேர்ந்ததை மறுப்பதால் யாருக்கு லாபம். லாபம் இருக்கிறது என்றால் அதையும் செய்வார்கள். பதில் எழுத அபிமானிகள் தயார் என்றால் முன்னிலும் அதிகமாக விளக்க நானும் ஆயத்தமாக இருக்கிறேன்.

  அதுசரி பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது எழுதாமல் இப்போது ஏன் எழுதுகிறோம். இதற்கு ஏற்கனவே பதில் எழுதப்பட்டிருக்கிறது. தோழரை, தோழரின் குடும்பத்தினரை, தோழரின் உடமைகளை காக்கும் கடமை எங்களுக்கு இருந்தது. அப்போதே எழுதியிருந்தால் கொலைக்கும் அஞ்சியிருக்க மாட்டார்களே இந்த பயங்கரவாதிகள்?

  இந்த இடத்தில் இன்னொரு விளக்கமளிக்க வேண்டியதும் தேவையாகிறது. அபிமானிகளின் பதிவு வெளிவந்த நேரத்தில் அவர்களுக்கு நான் பதிலளித்திருந்தேன். ஆனால் அது வெளியாகவே இல்லை. வினவில் வெளிவந்த அந்த பின்னூட்டம் இங்கே. வழக்கமாக இது போன்ற பின்னூட்டங்களை நான் சான்றுகளுக்காக படமெடுத்து வைப்பது வழக்கம். அன்றிருந்த சூழலில் இதை படமெடுக்க மறந்துவிட்டேன். அப்படி படமெடுத்து வைத்திருந்தால் இன்று இவர்களின் கள்ளத்தனங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம். தவறிவிட்டேன். இதையே சாக்காக வைத்து அதில் எழுப்பபட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவி விட்டார்கள் இந்த அபிமானிகள். அவர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் \\\ எவ்வளவு குரூர மாணவனிடம் வேண்டும் என்றாலும் மோதலாம். ஆனால் பொய்யர்களிடம் மோதி வென்றோ அல்லது தோற்றோ ஆகப்போவது ஒன்றும் இல்லை. ஆகவே, விடு ஜூட்……. /// இவர்களின் சான்றிதழ்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பதாலும், இவர்களிடம் பதில் வாங்க வேண்டும் எனும் ஆவலிருப்பதாலும் ஒரு வாதத்திற்காக நான் அவர்கள் தளத்தில் பின்னூட்டமிடவில்லை என்றே கொள்வோம், கேள்விகளுக்கு பதில் கூறத் தயாரா இந்த அபிமானிகள்? (அந்தப் பதிவை எழுதிய அபிமானிகளுள் ஒருவர் இதுபோன்றே முன்பு என்னுடைய பின்னூட்டத்தை தடுத்துவைத்து தகிடுதத்தங்கள் புரிந்தார். அது இப்போது பேசப்படும் விசயங்களுக்கு வெளியிலுள்ள விசயம் என்றாலும் ஒரு தகவலுக்காக அந்த பதிவை இங்கே சொடுக்கி படித்துப் பார்த்துக் கொள்ளலாம்) துணிவு உள்ளவர்கள் பதில் கூறட்டும். பார்க்கலாம் அவர்களின் நேர்மையை.

  அடுத்து ஷேக்தாவூத் எனும் ஜோக் தாவூத் என்பவர் தொடர்பில்லாத வேறொரு விடயத்தோடு முடிந்திருக்கிறார். நாங்கள் கூறிய புகார் பொய்யானதல்ல என்பதற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட இஸ்லாமியரை உள்ளே தள்ளியிருக்கிறோம் என்பதே சான்று. இணையத்தில் அவதூற்றை கழிந்தவர்கள் அது உண்மை என நம்பினால் எங்கள் தோழர் மீது காவல் துறையில் புகார் அளிக்கட்டும். நாங்கள் சந்திக்கத் தயார். திராணி இருக்கிறதா இவர்களுக்கு? நேரடி நேரடி என்று பீலா விடும் எவரும் எழுத்து விவாதத்துக்கு வாருங்கள் என்று சவால் விட்டு கூறியிருக்கிறேன். அறிவு நாணயம் இருப்பவர்கள் எதிர் கொள்ளலாம்.

  அடுத்து ஜிட்டிஜன் என்பவர் ஜோக் என்றும் பயங்கரவாதம் என்று ஏதேதோ எழுதியிருக்கிறார். அதை படித்து பொருள் புரிந்து கூறுபவர்களுக்கு பரிசு வழங்கலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு குழப்பம். எதை ஜோக் என்கிறார்? எப்படி பயங்கரவாதம் என்கிறார்? அவருக்கே புரிந்திருந்தால் மகிழ்ச்சி. அவர் ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் ஏன் போலீஸுக்கு போகவில்லை என்று. அவர் முகத்தில் படியும் கரியை எப்படி துடைத்துக் கொள்வார் என்று விளக்கினால், போலீசுக்கு போகக்கூடாது என்று குடும்பத்தார்கள் மிரட்டியதால் தான் போகவில்லை என்பதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார். இது மட்டுமல்லாது, சங்கர்லால் போல துப்பறிந்து ஒரு விசயத்தையும் எழுதியிருக்கிறார். நடந்த நிகழ்வு அன்றே எனக்கு தெரியும் என்பதும், வினவு கட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை தான் ’பத்திக்கிச்சு’ என்று எழுதியிருப்பதும் எப்படி எந்த விதத்தில் முரண்படுகிறது? இது எப்படி பொய்யாகும் விளக்க முடியுமா? உளறல் என்பதற்கான மெய்ப்பொருள் வேண்டும் என யாராவது தேடினால் இவரின் இந்த கண்டுபிடிப்பை பரிந்துரை செய்யலாம்.

  அடுத்து அப்துல்லா என்பவர், அமைதியான ஊரை, கண்ணியமான மக்களின் கூட்டமைப்பை என்று உருகியிருக்கிறார். ஆனால் எது அமைதி? கண்ணியம் எங்கிருக்கிறது என்பதை மட்டும் பரிசீலனை செய்ய மறுக்கிறார். ஒரு கருத்தை ஆதரிப்பதும் ஒதுங்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதில் எதை பொய் என்று கருதுகிறார் என்பதை அவர் வெளிப்படுத்தலாமே. அப்போதல்லவா தெரியும் எது பொய் எது உண்மை என்று. ஒதுங்கி ஓடினால் உண்மைகளை உணர முடியாது.

  அபிமானிகளின் இந்த பதிவில் தங்கள் கருத்துகளை பின்னூட்டிய கார்பன் கூட்டாளி, ஷேக்தாவூத், முகம்மத் ஆஷிக், சிராஜ், சுவனப் பிரியன், அப்துல்லா ஆகியோர் என்னுடைய இந்த எதிர்வினை குறித்த பதில்களை தந்தாக வேண்டும். அப்படி அவர்கள் பதில் தராத பட்சத்தில் எந்த சிந்தனையுமற்ற மூடநம்பிக்கை மதவாதிகள் என்றே கருதப்படுவார்கள். ஏனென்றால், அநீதி என்று தெரிந்து கொண்டே அதை ஆதரிப்பவன் மூடநம்பிக்கை கொண்டவனாகத்தான் இருக்க முடியும் அல்லவா? எனக்கு ஹைதர் அலி என்றொரு நண்பர் உண்டு, அவர் என் கருத்துகளின் நண்பர் இல்லை என்றபோதிலும் எதிரி இல்லை என்பதையும் உணர்த்தியவர். இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புபவர்களில் அவரும் ஒருவர். ஆனால் இதுவரை அவர் மௌனமாகவே இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய கருத்தை பதிய வேண்டும் எனும் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

  அடுத்ததாக நாம் பார்க்கவிருக்கும் தளம் கடையநல்லூர்.ஆர்க். கடையநல்லூர் தளங்களிலேயே அதிகம் கவனம் பெறும் தளம். என்னுடைய மாற்றுக் கருத்துகளையும் ஓர் எல்லை வரை அனுமதித்தார்கள் எனும் வகையில் குறிப்பிடத்தக்கதாய் இருந்தாலும், இந்த விசயத்தில் தொடக்கத்திலிருந்து அவர்கள் நடந்து கொண்ட விதம் அப்பட்டமாக குறுகிய மதவெறியை கொண்டதாக இருக்கிறது. இது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் நடந்த அநீதியை மறைத்து அதை மதவாத நோக்கில் சரிக்கட்டும் விதமாகவே அமைந்திருந்தது. மட்டுமல்லாது கடையநல்லூரைச் சேர்ந்த பலர் மதக் கொழுப்பு வழிந்தோட இட்ட பின்னூட்டங்களையெல்லாம் பல நாட்களாக வைத்திருந்துவிட்டு வினவில் அது குறித்த கட்டுரை வெளிவந்த பின்னர் கள்ளத்தனமாக அந்த பின்னூட்டங்களை நீக்கி விட்டார்கள். இது அவர்களின் நேர்மையற்ற போக்கிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு. இதன் பின்னரும் கூட என்னைப்பற்றிய செய்திகளை கிசுகிசுக்களாக வெளியிடுவதில் முனைப்பு காட்டினார்கள். அவற்றில் ஒன்றிரண்டிற்கு நான் பதில் எழுதியதும், நான் அவ்வாறு பதில் எழுதக் கூடாது என்பதற்காகவே தங்கள் தளத்தில் முகநூல் கணக்கில் பின்னூட்டமிடும் வசதியையே நீக்கிவிட்டார்கள். இது அவர்களின் காழ்ப்புணர்வை வெளிப்படுவதாகாதா? அது மட்டுமன்றி என்னை குறிவைத்து எழுதப்பட்ட பதிவுகளுக்கு நான் மறுப்பு எழுதி அனுப்பியபோது அதை வெளியிட மறுக்கிறார்கள், இது இந்திய அவதூறு சட்டப் பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை பெறத்தக்க குற்றம் எனும் அறிதல் கூட இல்லாமல். இவைகளெல்லாம் நேர்மைக்கும் இவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை வெளிக்காட்டும் கருவிகள்.

  கடைசியாக ஒரு பெரியவர். கவிஞர், கவியரங்குகளிலும், பொது மேடைகளிலும் தன் கவிதைகளை வாசித்தவர். கடல்கடந்த எழுத்தாளுமைகளுடன் தொடர்பு கொண்டிருப்பவர். ஆனால் அவருடைய எழுத்தின் ஆளுமையை தெரிந்து கொள்ள இதை படித்துப் பாருங்கள். \\\ USING YOUR RIGHTS YOU HAVE NO RIGHT TO SAY YOUR FATHER AND MOTHER AS BASTARD,. SIMILARLY YOU HAVE NO RIGHT TO EXPRESS ABUSES AGAINST A RELIGION.IF YOU TAKE THE RIGHTS IN YOUR HAND I CAN CALL YOUR WIFE AND MOTHER AS PROSTITUTE. IF I SAY THIS YOUR BLOOD WILL BE BOILING. ISNT ? OUR RELIGION ISLAM IS MORE THAN OUR SOUL, MOTHER AND WIFE. IF YOU ABUSE OUR BLOOD WILL BOIL. IT IS QUIET NATURE. YOU CAN NOT SAY IT AS BRUTAL AND BARBARISM./// இது கடையநல்லூர் பிரச்சனை குறித்து கூகுள் பிளஸில் அவர் எழுதியது. இவர் வேறு யாருமில்லை. இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே என்று என்னுடன் விவாதிக்க வந்து விட்டு முடியாமல் பாதியிலேயே ஓடிப் போனவர். ஐயா ரத்தம் கொதிக்கும் அளவுக்கு என்ன எழுதப்பட்டிருந்தது என்று பலமுறை கேட்டாயிற்று. பதில் கூறுவதற்கு நாதியில்லை. ஆனால் இவர்கள் ரத்தம் மட்டும் கொதித்துக் கொண்டே இருக்குமாம். போங்கையா நீங்களும் உங்கள் ரத்தக் கொதிப்பும். சீக்கிரமாக மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் ஆண்டவன் உங்களுக்கு எழுதிய தேதி சீக்கிரமே வந்துவிடப் போகிறது.

  ஒன்றை கவனிக்கலாம். வெட்டணும், கொல்லணும், புண் பட்டு விட்டது, கருத்துரிமையின் எல்லை என்றெல்லாம் கதை பேசியவர்கள் வாருங்கள் அது குறித்து பேசுவோம் என்றதும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். வந்த சிலரும் கூட பேசவேண்டியதைப் பேசாமல் காணாமல் போய் விடுகிறார்கள். ஆனால் அவர்களின் கருத்தை மட்டும் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வார்கள். என்றால் அதன் பொருள் என்ன? தாங்கள் மத வெறி பிடித்தவர்கள் என்பதையும், கடையநல்லூரில் நடந்தது காட்டுமிராண்டித்தனமானது என்பதையும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தான். ஆனால் இது ஆவணமாக பாதுகாக்கப்படப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து இதைப் படிக்கும் யாரும் உங்கள் மதவெறியின் மீதும் நேர்மையின்மையின் மீதும் காரி உமிழ்வார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.

  பின் குறிப்பு: இந்தப்பதிவு இத்துடம் முடிவடைவதைப் போன்ற தோற்றம் வந்திருக்கிறது என்றாலும் முடிந்துவிடவில்லை. இதில் இன்னும் பல விசயங்கள் பேசப்பட வேண்டியதிருக்கிறது என்பதால் தொடரும்.

 127. S.Ibrahim,
  ///இந்துக்களின் அனுததப்ாத்தினால் முஸ்லிம்களின் பிழைப்பும் நடக்கிறது என கருதலாமா? ///
  எதன் அடிப்படையில் இப்பட்டி கேட்கிறீர்கள் ?//
  சவுதி புண்ணியதில் செங்கொடி பிழைக்கிறார் என்பதன் பொருள் என்ன?

  ///தன்னுடைய கருத்திற்கு எதிராணவர்களையும் மோடி இப்படித்தானே கொலை செய்தான். ///
  இப்படித்தான் என்றால் எப்படி ? விளக்கமாக சொல்லுங்கள்//

  தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையை வெளியெ எடுத்து கொல்ல அவனுக்கு அதிகாரம் இருந்தது.அவன் செய்தான்.நீங்கள் உங்களால் முடிந்த அளவு வன்முறை செய்கிறீர்கள்.

  //அடுத்துகுஜராத் இடை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது .இன்னும் எட்டு மாதங்களில் பொதுத்தேர்தல் வர உள்ளது .மோடி என்ன செய்வாரோ ?மத கலவரம் கொண்டு வர ரயில் எரிப்பு போன்று வேறு எதுவும் நடத்த திட்ட மிட்டுவாரோ !//

  நீங்க‌ உங்க‌ ரேங்சுக்கு பிளான் ப‌ண்ணும்போது மோடி அவ‌ன் ரேங்சுக்கு பிளான் ப‌ண்ணுவான்.ரெண்டும் ஒன்னுதான்.

 128. நல்லூர் ஒப்பாரி ////ஒன்றை கவனிக்கலாம். வெட்டணும், கொல்லணும், புண் பட்டு விட்டது, கருத்துரிமையின் எல்லை என்றெல்லாம் கதை பேசியவர்கள் வாருங்கள் அது குறித்து பேசுவோம் என்றதும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் .////

  அது குறித்து பேசுவோம் ? பீஜே வுடன் விவாதம் என்றால் என்னை அடையாளம் கண்டு கொன்னுவிடுவார்கள் என்று சால்ஜாப்பு சொல்லும் நீங்கள் மற்றவர்களை மட்டும் பேச அழைப்பது ஏன்? அவர்களை எழுத்து விவாதத்திற்குத்தான் அழைத்தேன் என்று கதையை திருப்பக் கூடாது. எழுத்து விவாதம் என்பது மாத கணக்கில் இழுத்துக் கொண்டு செல்லும்.உங்களைப் போல் எல்லோரும் சோம்பேறிகள் இல்லை .வேலை இல்லாதவர்களும் இல்லை .ஆயின் நேரடி விவாதத்தில் ஓரிரு நாளில் பேசி யாரிடம் உண்மை உள்ளது என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டு போகட்டும்

 129. not hindu,சவூதி வேலை கொடுத்தது .அந்த புண்ணியத்தில் செங்கொடி பிழைத்தார்.

  நாங்கள் எங்கே எப்போது வன்முறை செய்தோம் .?

  வன்முறை செய்பவர்கள் அனைத்து மக்களிலும் ஒருபகுதியினர் இருப்பார்கள் .ஆனால் மோடியோ அவரே தனது தேர்தல் ஆதாயத்திற்காக ஹிந்துக்களை கொன்றுவிட்டு முஸ்லிம்கள் மீது பலி போடுவார் .அதை

 130. நந்தன் ,இறைவன் அனுமதித்த தூய்மையான வழியில் எனது மகள்களை திருமணம் செய்து வாழ உங்களில் ஒருவர் கூட ஆண்மகனாக இல்லையா?;என்று லூத் பதில் சொன்னார்.

 131. இபுராகிம் விளக்கம் என்ற பெயரில் பில்டப்களை செய்து புளுக வேண்டாம். குர்ஆனின் அந்த வசனங்கள் பின்வருமாறு.
  அவரிடம் அவருடைய சமூகத்தினர் வந்தனர். அவரின்பால் அவர்கள் விரைந்தவர்களாக; இதற்கு முன்னரும் தீயவற்றையே அவர்கள் செய்து கொண்டிருந்தனர். “என்னுடைய சமூகத்தினரே இவர்கள் என்னுடைய புதல்விகள். இவர்கள் உங்களுக்கு மிக்க பரிசுத்தமானவர்கள். எனவே அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என்னுடைய விருந்துனர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்திவிடாதீர்கள். உங்களில் நேர்மையான மனிதர் இல்லையா?” என்று அவர் கூறினார்.
  பரிசுத்தமானவர்கள் என்பதன் பொருள் கன்னிகழியாத பெண்கள் என்றுதான் பொருள்படும். அதுபோல் உங்களில் எவரும் ஆண்கள் இல்லையா என்று கேட்கவில்லை. உங்களில் எவரும் மனிதர்கள் இல்லையா என்றுதான் கேட்கிறார். இதன் பொருள் வந்தவர்களின் இரக்கத்தை கெஞ்சிக் கேட்பதாகத்தான் இருக்க முடியும்.

  ஆனாலும் நீங்கள் சொன்னதுபோல் லூத் பதில் சொன்தாகவே வைத்துக்கொள்வோம். விருந்தினராக வந்தவர்களோ உலகத்தை ஒரே நொடியில் அழிக்கும் அல்லாவின் அடியாட்கள். லூத், அல்லாவின் தூதர். லூத்திற்கு அல்லாவின் அற்புத சக்தி நன்றாக தெரிந்தே இருக்கும். வந்தவர்கள் ஓரினச்சேர்க்கையுள்ள தீயவர்கள் என்பதையும் லூத் நன்கு அறிந்தவர். அப்படி இருக்க அந்த தீயவர்களுக்கு தன் மகள்களை திருமணம் செய்துகொள்ள லூத் அழைப்பு விடுவது சரியா? உங்களிடம் இப்படிபட்ட தீயவர்கள் வந்தால் உங்ளின் மகள்களை, நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்பீகளா? அல்லது என்ன சொல்வீர்கள்?

 132. இந்த விவாதத்தின் நான்காவது பகுதியாக மக்களின் மனோநிலை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவரை ஆதரவு நிலைகளை விமர்சித்திருக்கிறோம். அதாவது கடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தை அது சரியானது தான் என ஆதரித்து நிற்பவர்களை பார்த்தோம். இப்போது அதற்கு மாற்றமான நிலையில் இருப்பவர்கள், தெளிவாகச் சொன்னால் அது காட்டுமிராண்டித்தனம் தான் எனக் கூறும் எங்களை எதிர்க்காமல் அமைதிகாக்கும் எங்களின் நலம் விரும்பிகளின் மனோநிலையையும் அலசிப்பார்ப்பது அவசியமாக இருக்கிறது.

  பெரும்பான்மையாக எங்களின் உறவினர்கள், குடும்பத்தவர்கள், நண்பர்கள் இந்த மனோநிலையில் இருக்கிறார்கள். இது அவர்கள் மீதான விமர்சனம் அல்ல. என்றாலும், அவர்கள் உளக்கிடக்கையின் தன்மையை, அது என்ன விதத்தில் பிறரிடத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவையிருக்கிறது எனும் அடிப்படையில் இது எழுதப்படுகிறது.

  இந்தப் பிரச்சனையை நாங்கள் அணுவதற்கும் பிறர் அணுவதற்கும் உள்ள பாரிய வேறுபாடு காணும் உரைகல்லில் இருக்கிறது. அது சரியா? தவறா? எனும் அடிப்படையிலிருந்து நாங்கள் அணுகுகிறோம். பிறரோ, அது சாதகமானதா? பாதகமானதா? எனும் அடிப்படையிலிருந்து அணுகுகிறார்கள். அதனால் தான் தற்போதைய நிலை எங்களுக்கு பாதகமானது என்பதால் வருந்துகிறார்கள், ஆலோசனைகள் கூறுகிறார்கள், எச்சரிக்கையாய் இருக்கும் படி அறிவுறுத்துகிறார்கள்.

  முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடுவது அவசியம். எங்களின் தற்போதைய நிலை, அதாவது பிறந்து வாழ்ந்த ஊரிலிருந்து தனிமைப் பட்டிருப்பது, ஊராரின் புரிதலற்ற தண்டனைகளுக்கு ஆட்பட்டு நிற்பது போன்றவை எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பாக எந்த விதத்திலும் நாங்கள் கருதுவதில்லை. வாழ்க்கை எனும் சாலையில் ஏற்படும் திருப்பங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம் அவ்வளவு தான். எங்கும், எப்படியும் எங்களால் வாழ முடியும். ஏனென்றால் அடிப்படையில் நாங்கள் சர்வதேசியவாதிகள். அதனால் தான் எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்ட போதிலும் நடந்தது தவறானது என்று எங்களால் உறுதியாக நிற்க முடிகிறது.

  ஆனால் எங்களின் நலம் விரும்பிகள் இதை இவ்வாறு எடுத்துக் கொள்வதில்லை. இப்படி ஆகிவிட்டதே என்று கைசேதப் படுகிறார்கள். எந்த வகையிலாது இவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் தான் நடந்தது சரியா? தவறா? எனும் கேள்விக்குள் அவர்களால் புகுந்து செல்ல முடியவில்லை. தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நேர்ந்த அவலம் ஏன் நேர்ந்தது?, அப்படி நேர்ந்ததற்கான கூறு தங்களுக்குள் இருக்கிறதா? எனும் சிந்தனைக்கு அவர்களால் வர முடியவில்லை. ஆம். அந்தக் கூறு எங்களுக்கு நெருக்கமானவர்களான இவர்களிடமும் இருக்கிறது.

  தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நேர்ந்த பாதிப்பு எனும் தளத்தின் மேல்தான் இவர்களுடைய எங்களுக்கான ஆதரவு நின்று கொண்டிருக்கிறது. நெருக்கமானவர்களாக இல்லை என்றால் இன்னும் இரண்டு அடி சேர்த்துப் போடு என்று கூறியிருக்கக் கூடும். “எங்கள் உயிரிலும் மேலான நபிகளை கேவலப்படுத்திய இவனை கொன்றாலும் தப்பில்லை” என்று பின்னூட்டம் எழுதியவரின் உறவினர் ஒருவர் இப்படி இருந்திருந்தால் நிச்சயமாக அப்படி ஒரு பின்னூட்டத்தை அவரால் எழுதியிருக்க முடியாது. கைசேதப்பட்டிருக்கவும் கூடும். இதில் இருவருக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. அவர்களின் கருத்தியலில் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லாதது தான் காரணம். கருத்தியல் ரீதியாக இருவருமே ஒரே நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தாம், நடைமுறையில் மட்டுமே சற்று வேறுபாடு. இதுவும் ஒருவகையில் சுயநலம் தான்.

  அடுத்து எங்களின் நலம் விரும்பிகள் முன்வைக்கும் ஓரிரு அறிவுரைகளையும் பார்த்துவிடலாம். ஊரொடு ஒட்ட ஒழுகல் என்பது ஏற்றுக் கொள்ளத் தகாததா?
  “உலகத்தொடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்
  கல்லார் அறிவி லாதார்” என்பது திருக்குறள். இதுமட்டுமன்றி பல்வேறு பழமொழிகளும், சொலவடைகளும் ’உலகொடு ஒட்டி ஒழுகலுக்கு’ மாறாக செயல்பட வேண்டாம் என வலியுறுத்துவதாக இருக்கின்றன. அதேநேரம் இதற்கு எதிரான நிலை கொண்ட பழமொழிகளும், சொலவடைகளும், வழக்காறுகளும் இருக்கவே செய்கின்றன.
  “சொல்லுக சொல்லை பிரிதொருசொல் அச்சொல்லை
  வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”
  “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
  எண்ணுவம் என்ப திழுக்கு”
  ”எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்ப தறிவு” இவைகளும் திருக்குறள் தாம். இதை எப்படி எடுத்துக் கொள்வது?

  எந்த ஓர் அனுபவக் குறிப்பையும் அநீதிக்கு ஆதரவாக ஒருபோதும் கொள்ளக் கூடாது. கடையநல்லூரில் நடந்தது அநீதியா? இல்லையா? என்ற பார்வையிலிருந்து இதை அணுகுவது தான் சரியானதாக இருக்க முடியும். அந்தக் கேள்விக்குள் நுழையாமலேயே ஊரே அப்படித்தான் ஒழுகுகிறது எனவே நீயும் அப்படியே ஒழுகு என்பது பக்கப்பட்டை கட்டிய பார்வையாக மட்டுமே இருக்க முடியும். அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்டவனின் கோணத்தை மறுக்கும் அராஜகப் போக்கவும் அது இருக்கும் என்பதையும் உணர வேண்டும். சரி, ”இந்த உலகொடு ஒட்ட ஒழுகல்” என்பதை இவர்கள் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவார்களா? எண்பதின் முற்பகுதிகளில் தர்கா கலாச்சாரமே ஒட்ட ஒழுகலாக இருந்தது. அதை ஏன் இவர்கள் மறுத்தார்கள்? ஆக ஒட்ட ஒழுகல் என்பதைத் தாண்டி சரியா? தவறா? எனும் பார்வையும் அவர்களுக்கு இருந்திருக்கிறது(அது சரியான பார்வையா என்பது வேறு விசயம்). அந்த பார்வையைக் கொண்டுதான் உழைக்கும் மக்களின் வழிபாட்டு முறையாக இருந்த தர்கா கலாச்சாரத்தை ஒழித்தார்கள். அந்த அளவுகோலை ஏன் இந்த விசயத்தில் பயன்படுத்த மறுக்கிறார்கள்? ஏனென்றால் இது அவர்களின் விருப்பத்திற்கு மாறானதாக இருக்கிறது. அவர்களின் கருத்துக்கு எதிரானதாக இருக்கிறது. அதேவேளை நீ செய்தது தவறு என்று உறுதியாக நின்று சுட்டிக் காட்டவும் முடியவில்லை. அதனால் தான் அவர்களுக்கு ‘ஒட்ட ஒழுகல்’ எனும் முக்காடு தேவைப்படுகிறது. நலம் விரும்பிகளே இதை பரிசீலித்துப் பாருங்களேன்.

  என்ன தான் நீ கூறுவது சரியாக இருந்தாலும் ஊரே எதிர்த்து நிற்கும் போது அதற்கு பணிவது தானே சரியான அணுகுமுறை? இல்லை. தனக்கு ஏற்பில்லாத ஒன்றை ஊர் ஏற்று நிற்கிறது என்பதற்காக சரியான நிலைப்பாட்டை விட்டு மாறுவது பிழைப்புவாத அணுகுமுறை. ஊரே ஏற்று நிற்கும் ஒன்றை கருத்தியல் ரீதியாக தவறு என்று உணரும் போது அணுக்கமான செயலுத்திகள் மூலம் அதை ஊருக்கு புரியவைக்க முயலலாம், அதில் தவறில்லை. இந்த அணுக்கத்தை நான் எழுதும் தொடர் நெடுக நீங்கள் காணலாம். ஆனால், நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதை பிழைப்புவாதிகள் மட்டுமே செய்யமுடியும். சரி, இந்த ஊரே எதிர்த்து நிற்கிறது என்பதை எல்லாவற்றுக்கும் இவர்கள் பயன்படுத்துவார்களா? இன்று ஈரான் விசயத்தில் அமெரிக்கா எடுத்து வரும் அராஜக, மேலாதிக்க நடவடிக்கைகள் அனைவரும் அறிந்தது தான். ஊரே எதிர்த்து நிற்கிறது எனும் அளவுகோலை பயன்படுத்தி அமெரிக்கவிடம் பணிந்து போக முயலுங்கள் என்று ஈரானிடம் இவர்கள் கூறுவார்களா? இன்று ஈரான் தன்னந்தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வெகுசில நாடுகள் கூட எதிர் அரசியல் நிலைப்பாட்டில் தனக்கு கிடைக்கும் ஆதாயங்களை மனதில் கொண்டே ஆதரவு நிலை எடுத்திருக்கின்றன. ஐநா அமைப்பு தொடங்கி பன்னாட்டு நிதியியல் அமைப்புகள் ஈறாக ஈரானை எதிர்க்கின்றன. இந்த பலத்துடன் ஒப்பிட்டால் ஈரானும் அதற்கான ஆதரவும் ஒன்றுமே இல்லை. இந்த நிலையில் ஈரான் குறித்த இவர்களின் மதிப்பீடு என்ன? உலகமே எதிர்த்து நிற்பதால் அமெரிக்காவிடம் பணிந்து போக வேண்டும் என்று விரும்புவார்களா? ஊரே எதிர்த்து நின்றாலும் ஈரானுக்கு ஆதரவான தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊரென்ன உலகமே எதிர்த்து நின்றாலும் ஈரான் விசயத்தில் இவர்கள் கொண்டிருக்கும் அளவுகோல் கடையநல்லூர் விசயத்தில் ஏன் பயன்படாது? நலம் விரும்பிகளே இதை பரிசீலித்துப் பாருங்களேன்.

  அடுத்து, என்னை சற்றே வருத்தம் கொள்ள வைத்த ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு மிக நெருங்கிய உறவினர் ஒருவர், என் கையை பிடித்து முதன் முதலில் ‘அ’ எழுத சொல்லித்தந்தவர், என்னுடைய கருத்தியல் வளர்ச்சியின் ஒவ்வொரு அலகையும் அருகிருந்து கவனித்தவர், சில போதுகளில் உற்சாகம் தந்தவர் அண்மையில் என்னுடைய தாயாரை அழைத்து, “நீ ஒழுங்காக வளர்க்காததால் தான் அவன் இப்படி ஆகி விட்டான்” என்று திட்டியிருக்கிறார். அதிர்ச்சியாக இருந்தது. இன்று நான் கொண்டிருக்கும் கொள்கை உறுதி, சமூகத்தின் மீதான பற்றார்வம் போன்றவை எல்லாம் வெறும் வளர்ப்பில் நேர்ந்த பிழை தானா? என்னை சிறு வயதிலேயே அடித்து ஒடுக்கி ஊரோடு ஒட்ட வளர்த்திருந்தால் நான் இன்று மனிதனாகி இருந்திருப்பேனா? நான் மனிதனா இல்லையா என்பதை கேவலம் ஒரு மதத்தின் நடத்தைகளா தீர்மானிப்பது? என்னிடம் பேசும் போது நேரடியாக என்னை விமர்சிக்காமல் என்னின் பாதிப்புகள் குறித்து மட்டுமே பேசியதை என்மீதான பாசம் என்றுதான் இப்போதுவரை எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் தாயாரிடம் பேசும்போது நீங்கள் வேறு முகம் காட்டியிருக்கிறீர்களே. எது உங்கள் மெய்முகம் என்பதை அடையாளம் காட்ட நீங்கள் உதவினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் என்னை அருகிருந்து கவனித்து வந்திருக்கும் நீங்கள் இதை வளப்புக் கோளாறு என்று எண்ணியிருக்கிறீர்கள் என்றால்; இதுவரை நான் பார்த்த நீங்கள் திடீரென்று நான் பார்க்காத நீங்களாய் மாறியிருக்கிறீர்கள். அதனால் கேட்கிறேன்.

  தெளிவாக ஒன்றைக் கூறவிடலாம். நாங்கள் விமர்சனம் சுயவிமர்சனத்தை மூச்சாக கொண்டிருப்பவர்கள். எங்களை மாற்ற வேண்டும் என எண்ணினால் அது வெகு எளிது. நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்படு தவறானது என்பதை உணர்த்திவிட்டால் போதுமானது. தவறான நிலைப்பாட்டில் நாங்கள் ஒருபோதும் இருக்க விரும்புவதில்லை. மாறாக, சமுகரீதியான பார்வைக்கு அப்பாற்பட்டு எங்களை மாற்ற நினைத்தால் அது வெகு கடினம். ஊரல்ல, உலகமே எதிர்த்தாலும் பிழைப்புவாதியாய், காரியவாதியாய் நாங்கள் சுருங்க முடியாது. இதை நாங்கள் பெருமையாகவே அறிவித்துக் கொள்கிறோம்.வெறுமனே உங்கள் உறவினர்கள் மட்டுமல்ல, நாங்கள் கம்யூனிஸ்டுகள்.

 133. ஊரை விட்டு ஒழிஞ்சு ஓடிக் கொண்டு திரியும் போதும் ஆதரவாக இருப்பவர்கள் மீது விமர்சனமா? உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் செங்கொடி. இது வரை நீங்கள் எழுதினத படிச்சதில்லை. இப்பதான் முழுசா படிச்சு பாக்கணும்னு தோணுது.

 134. நந்தன் ,நீங்கள் சொல்லுவது போலவே அர்த்தம் வைத்துக் கொள்வோம்.
  ////இவர்கள் உங்களுக்கு மிக்க பரிசுத்தமானவர்கள். ///
  என்றால் அதன் பொருள் என்ன ? வந்தவர்கள் லூத்தின் மகள்களை பற்றி பேசவில்லையே ,ஏன் அவர்களைப் பற்றி லூத்த் குறிப்பிட வேண்டும்?
  உங்களுக்கு பரிசுத்தமானவர்கள் என்றால் ,நீங்கள் திருமணம் செய்து தாம்பத்தியம் நடத்த தகுதியானவர்கள்என்றுதான் அர்த்தம் வைக்க முடியும்.
  ///அப்படி இருக்க அந்த தீயவர்களுக்கு தன் மகள்களை திருமணம் செய்துகொள்ள லூத் அழைப்பு விடுவது சரியா? ///
  அவர் சமுதாயத்து மக்கள் எந்த அளவில் தீயவர்கள் என்பது லூதுகுத்தான் தெரியும் .நந்தனிடம் கேட்டு அதை முடிவு பண்ணவேண்டிய அவசியம் இருக்காது என்று நம்புகிறேன்.

 135. செங்கொடி ”////இந்த உலகொடு ஒட்ட ஒழுகல்” என்பதை இவர்கள் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவார்களா? எண்பதின் முற்பகுதிகளில் தர்கா கலாச்சாரமே ஒட்ட ஒழுகலாக இருந்தது. அதை ஏன் இவர்கள் மறுத்தார்கள்? ஆக ஒட்ட ஒழுகல் என்பதைத் தாண்டி சரியா? தவறா? எனும் பார்வையும் அவர்களுக்கு இருந்திருக்கிறது(அது சரியான பார்வையா என்பது வேறு விசயம்). அந்த பார்வையைக் கொண்டுதான் உழைக்கும் மக்களின் வழிபாட்டு முறையாக இருந்த தர்கா கலாச்சாரத்தை ஒழித்தார்கள். அந்த அளவுகோலை ஏன் இந்த விசயத்தில் பயன்படுத்த மறுக்கிறார்கள்? ///
  உங்களது மனமுரண்டு என்பதற்காக இங்கே தர்கா கலாச்சாரத்தை தூக்கி கொண்டுள்ளீர்கள். தர்கா கலாச்சாரம் பெரும்பானமையான மக்கள் பின்பற்றினாலும் அது இஸ்லாத்தின் பெயரால் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் அங்கீகாரத்தின் பெயரால்,நபி[ஸல்] அவர்கள் கற்று தந்ததைப் போல காட்டப்பட்டு வந்தது . ஆனால் அவை இஸ்லாத்திற்கு முரண்பட்டவைகள் என்பதை ஆதரப் பூர்வமாக அவர்களிடையே நேரடியாக ,பகிரங்கமாக ,அடிதடி வெட்டு குத்து களை தாங்கி கொண்டு பிரச்சாரம் செய்து சத்தியம் வெளிப்பட்டது. மேலும் அரபு நாடுகளுக்கு சென்ற மக்கள் அங்கு இஸ்லாத்தினை அதன் அசலை பார்க்கிறார்கள் .மாற்றம் வந்தது.
  ஆனால் நீங்களோ உங்களது கம்யுனிசத்தை சொல்லாமல் ,அதற்கு ஆதாரம் காட்டாமல் ,மக்களை ரசியாவிற்கு அழைத்து சென்று அங்குள்ள மக்கள் எப்படி இஸ்லாத்தை லூது லூசு என்று சொல்லி எந்த அளவில் முன்னேறி யுள்ளார்கள் என்பதை கண் முன் காட்டி உங்களது அற்ப ஆயுசு கொள்கையை நிலை நிறுத்திட முயற்சிக்க வேண்டும் .அதற்கு திராணியற்று லூத் லூசு என்று எழுதுவது உங்களது கண்ணியமற்ற போக்கையே வெளிப்படுத்துகிறது/

 136. இந்த விவாதத்தின் ஐந்தாவது பகுதியாக மதியூர் மைந்தன் என்பவரின் பின்னூட்டம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரு பின்னூட்டம் என்ற முறையிலல்லாமல், விவரிக்கப்படவேண்டிய முதன்மையான அம்சம் ஒன்றில் அந்த பின்னூட்டம் எழுப்பப்பட்டிருப்பதால், அதை விரிவாகவே பார்க்கலாம். அந்த பின்னூட்டத்தைக் காண இங்கு சொடுக்கவும்

   

  \\\ஒருவனின் உயிராக மதிக்கக் கூடிய பெற்றோர்களை மற்றொருவன் அவதூறாக ஏசுகிறான் என்பதற்காக அவனிடத்தில் விவாதம் செய்து நிரூபிக்கக் கூடிய நெறிகள் இதில் அடங்குவதில்லை. உயிருக்கும் மேலாக மதிக்க கூடிய நபரைப் பற்றி பேசினால்அது எப்படி? மாறாக இந்த இடத்தில் உணர்சிகள் மேலோங்குவதை தவிர்க்க இயலாது/// இதைக் கொண்டு தான் எல்லோரும் அந்த காட்டுமிராண்டித் தனத்தை நியாயப் படுத்துகிறார்கள். ஒரு வகையில் இவர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே. தன்னுடைய பெற்றோரை அவதூறாக பேசும் ஒருவனிடம் யாரும் விவாதம் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். உணர்ச்சி மேலீட்டால் தாக்கவே செய்வார்கள். இது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால் இதை எடுத்துக் காட்டும் யாரும் ஒன்றை உணர்ந்ததாக தெரியவில்லை. உதாரணங்கள் உண்மைக்கு அருகில் வரலாமேயன்றி உண்மையாகிவிட முடியாது. பெற்றோர் மீது அவதூறு வீசுவது என்பது உதாரணம் தான் உண்மையல்ல.

   

  என்றால் உண்மை என்ன? உற்றோரைவிட, பெற்றோரைவிட, நேசத்திற்குறிய அனைத்தையும் விட என்னை உயர்வாக எண்ணாத வரையில் உங்கள் இஸ்லாம் முழுமையாகாது என்று முகம்மது கூறுவது அனைத்து நபிகளையும் உள்ளடக்கியது அல்ல. இங்கு சுட்டப்படும் விமர்சனக் கட்டுரை லூத் எனும் நபியைப் பற்றியது. அடுத்து, அந்த கட்டுரையில் தனிமனித விமர்சனம் என்று எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. உணர்ச்சி வேகத்தில் கரையைக் கடக்கும் பலரும் அந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்தவர்களில்லை என்றே கூறலாம். நான் பலமுறை கேட்டு விட்டேன், பதில் கூறத்தான் ஆளில்லை. உயிரினும் மேலான நபியை அவதூறு கூறலாமா என்று கொதிப்பவர்கள் யாராவது சற்று நிதானமாய் அந்தக் கட்டுரையில் என்ன அவதூறு செய்யப்பட்டிருக்கிறது என்று குறிப்பாய் கூறலாமே? ஏன் கூற முடியவில்லை? எதனால் கூற முடியவில்லை?

   

  கொதிப்பவர்களே! கவனியுங்கள். அந்தக் கட்டுரையில் யாருக்கும் தெரியாத புதிதான எதுவும் கூறப்படவில்லை. வேதங்களில் என்ன இருக்கிறதோ அது தான் கூறப்பட்டுள்ளது. அன்று தொடங்கி இன்று வரை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றைத்தான் கட்டுரை பேசுகிறதேயன்றி வேறொன்றுமில்லை. அதுவும் குரானில் எதுவரை கூறப்பட்டிருக்கிறது? அதற்கு மேலதிகமான விபரங்கள் பைபிள் பழைய ஏற்பாட்டில் எதுவரை கிடைக்கிறது? என்று தெளிவாக பிரித்தும் கூறப்பட்டுள்ளது. அதன் நிகழ்வுகளில் தூதருக்கும் இறைக் கட்டளையை நிறைவேற்ற வந்தவருக்குமான வரம்புகள், ஆற்றல்கள் குறித்து இருவருக்கும் தெரியும். ஆனால் அந்த இடத்தில் நிகழ்ந்த உரையாடல்கள் அவற்றை உணராதது போன்ற காட்சியை உருவகிக்கிறது. இந்த முரண்பாட்டை சுட்டித்தான் அந்த கட்டுரையின் மைய இழை நெய்யப்பட்டிருக்கிறது. மைய இழையின் நிறத்தில் தான் தலைப்பும் இடப்பட்டுள்ளது. இதில் உங்கள் நபிக்கு என்ன அவமதிப்பு? யாரால் அவமதிப்பு?

   

  எது அவமதிப்பு என்று கூறமுடியவில்லை, எப்படி அவமதிப்பு என்று கூற முடியவில்லை, அதைத் தொடர்ந்த வாதங்கள் எதற்கும் பதிலளிக்க முடியவில்லை. ஆனால், கோபம் மட்டும் வெடிக்குமாம். என்ன வகை என்று தெரியாது, எதனால் அப்படி என்று தெரியாது. ஆனால் முயலுக்கு மூன்று கால் என்று மட்டும் சொல்லத் தெரியுமாம். அட, அஞ்ஞான விஞ்ஞானிகளே, உங்கள் கோபத்தைக் கொஞ்சம் நேர்மையுடன் உரசிப் பார்த்திருக்கக் கூடாதா? அப்போது புரிந்திருக்குமே உங்கள் ஒட்டாண்டித்தனம்.

   

  இதில் இவர்கள் கூற வருவதென்ன? ஒன்றை குரான் என்ன கூறியிருக்கிறதோ அதை மட்டுமே கூற வேண்டும். எப்படி கூறியிருக்கிறதோ அப்படி மட்டுமே கூற வேண்டும். எந்த விதத்தில் கூறியிருக்கிறதோ அந்த விதத்தில் மட்டுமே கூற வேண்டும். அதற்கு முஸ்லீம்கள் என்ன விளக்கம் அளிக்கிறார்களோ அதை மட்டுமே கொள்ள வேண்டும். அதை மீறி யாரவது கூறினால் அவரை கும்பல் கூடி உதைப்போம் என்கிறார்கள். நண்பர்களே! எப்போது உணர்வீர்கள் இதன் பெயர்தான் பாசிசம் என்பதை. இதை அப்படியே விரித்தால் பார்ப்பனர்கள் வேதமென்று கூறுவதை அப்படியே ஏற்றாக வேண்டும். ஒப்புவீர்களா நீங்கள்? கிருஸ்தவர்கள் பைபிள் என்று கூறுவதை அப்படியே ஏற்றாக வேண்டும். ஏற்பீர்களா நீங்கள்?

   

  ஆம், அணுகு முறையில் அறிவார்ந்தும், உணர்வார்ந்தும் அணுகலாம். ஆனால் அறிவா, உணர்வா என்ற கேள்வி எழுந்தால் என்ன செய்வீர்கள்? உணர்வின் உந்துதலால் பிறர் தவறாக தாக்கப்பட்டால் சீர்தூக்கிப் பார்க்க மாட்டீர்களா? அதைத்தாம் கோருகிறோம். எப்போது செய்வீர்கள்?

   

  மீண்டும் மீண்டும், உறுதியாகக் கூறுகிறேன். செய்யாத தவறுக்கு விசாரிக்காமல் தண்டனை அளிப்பவர்கள், அதை உள்நோக்கத்துடன் ஆதரித்து நிற்பவர்கள் நிச்சயம் காட்டுமிராண்டிகளே. இதில் ஐயம் ஒன்றுமில்லை.

   

  ஐயா, நான் மேலோட்டமாக விவாதம் செய்வதாக கருதினால் நீங்கள் ஆழமாக விவாதம் செய்ய முன்வாருங்கள், கற்றுக் கொள்ள நான் காத்திருக்கிறேன்.

 137. Muslims are brain-dead devils.
  Dont waste time arguing with them.
  You are not going to achieve anything by arguing with them.

  Just as Brahmanism, Islam has to be removed from the face of this earth for the good of human race.

 138. இபுராகிம்,
  உங்கள் கற்பனை விரிவுரைகளை நீங்களே வைத்துகொள்ளுங்கள். அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன கூறுவீர்கள் என்று மட்டும் கூறவும்.

 139. நந்தன் எது கற்பனை? அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்பது தான் கற்பனை.

  அந்த இடத்தில் நான் இருந்தால் ,மலக்குகளை புணர கேட்டவர்கள் இடத்தில் நீங்கள் இருப்பீர்கள் என்று வைத்துக் கொள்வோம் .மலக்குகள் இடத்தில் யார் இருப்பார்கள்?

  மின் வெட்டும் இருட்டும் என்று கட்டுரை எழுத வேண்டிய இடத்தில்தான் செங்கொடி இருப்பார்.இவர் ஜெயலலிதா இடத்தில் இருந்தால் அவர் என்ன செய்திருப்பார்.?இப்படி கட்டுரை எழுதிக் கொண்டிருக்கமாட்டார்.. மின்வெட்டும் இருட்டும் என்று இன்னொருவர் எழுதிக் கொண்டிருப்பார்.

 140. இந்த விவாதத்தின் ஆறாவது பகுதியான இது, கடையநல்லூர் டிஎன்டிஜே எனும் தளத்தில் வெளியான என்னைப் பற்றிய பதிவு ஒன்றின் மறுப்பாக வருகிறது. செங்கொடியினர் காஃபிர்களே என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அது மின்னஞ்சல் மூலமாகவும் பல நூறு பேருக்கு அனுப்பபட்டிருக்கிறது. அந்தப் பதிவு என்னை காஃபிர் என்று அறிவிக்கவும், நான் இறந்தால் எந்த மையவாடியிலும் என்னை அடக்கக் கூடாது என்றும் அறிவிக்க ஜமாத்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டி அனைவரையும் கோருகிறது. ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது தான் உண்மை.

  ஒருவரை முஸ்லீம் என்று இவர்கள் எதனைக் கொண்டு மதிப்பிடுகிறார்கள்? அவர் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் வசிக்கிறரா? முஸ்லீம் பெற்றோர்களுக்கு பிறந்தவரா? முஸ்லீம் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறாரா? என்பதைக் கொண்டா? இதுதான் ஒருவர் முஸ்லீமாக இருப்பதற்கான தகுதி என்றால்; அட மூடநம்பிக்கையில் முக்குளித்துக் கொண்டிருக்கும் முல்லாக்களே, முதலில் உங்கள் மதத்தைப் பற்றியேனும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்குக் கூட எங்கள் மதத்தில் வழிகாட்டுதல் இருக்கிறது என்பவர்களே, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்தால், இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்திருந்தால், இஸ்லாமிய பெயர் வைத்துக் கொண்டிருந்தால் ஒருவர் முஸ்லீமாகிவிடுவார் என்பதற்கு உங்கள் வேதத்திலி(குரான்)ருந்தோ, உபநிடதத்(ஹதீஸ்)திலிருந்தோ மேற்கோள் காட்டமுடியுமா? பின் எந்த அடிப்படையில் என்னை முஸ்லீம் என்று கருதினீர்கள், இப்போது முஸ்லீம் அல்ல என்று அறிவிப்பதற்கு?

  நான் எப்போதாவது என்னை முஸ்லீம் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறேனா? இஸ்லாமியச் சடங்குகள் எதையேனும் செய்திருக்கிறேனா? என்னைத் தெரிந்தவர்களுக்கு வெகு நன்றாகத் தெரியும் நான் எப்போதும் முஸ்லீமாக இருந்ததில்லை என்று. ஆனால் இப்போது இவர்கள் கூறுகிறார்கள் \\\இப்படிப்பட்டவனை மார்க்க அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவன் என்று கருதமுடியாது. இவன் மதம் மாறிய முர்த்தத் ஆவான்///என்று. நான் மதம் மாறவும் இல்லை, முஸ்லீமாகவும் இல்லை. அறியாத வயதில் என்னுடைய பெற்றோரைக் கொண்டு நான் முஸ்லீம் என்று நீங்களாகவே கூறிக் கொண்டீர்கள். இப்போதும் நீங்களாகவே இவன் முஸ்லீம் இல்லை என்றும் கூறிக் கொள்கிறீர்கள். நான் பிறந்தேன் வளர்ந்தேன், அறிகிறேன், சிந்திக்கிறேன், என் தேடலின் அடிப்படையில் என்னை வழி நடத்திக் கொள்கிறேன். இடையில் நீங்கள் யார் என்னை முஸ்லீம் என்றும் முஸ்லீம் இல்லை என்றும் கூறிக் கொள்வதற்கு?

  சமூகத்தையும் மதத்தையும் குழப்பிக் கொள்வது இஸ்லாமியர்களின் வாடிக்கை.நம்புபவர்கள் சமூகமும் மதமும் வேறு வேறல்ல என்று நம்பிக் கொள்ளுங்கள் நம்பாதவர்கள் மீது ஏன் உங்கள் நம்பிக்கையை திணிக்கிறீர்கள்? நான் மக்கள் மத்தியில் வாழ்கிறேன் என்பது சமூகம். நான் மண வாழ்வில் இருக்கிறேன், அதன் விளைவுகளை கொண்டிருக்கிறேன் என்பது சமூகம். ஆனால் உங்கள் மததின்படி நான் ஒழுகவில்லை என்பதற்காக என் திருமணத்தை முறிப்பதற்கும், யாரும் என்னோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கும் நீங்கள் யார்?

  எங்கள் திருமணத்திற்கு முன்பே நான் இறை நம்பிக்கை கொண்டவனல்ல, ஒரு நாத்திகவாதி என்பதை முறைப்படி பெண் வீட்டாருக்கு உறுதியாக தெரிவித்திருக்கிறேன். திருமணத்திற்கு முதல் நாளே திருமணம் நடத்தி வைப்பவரை அணுகி நான் நாத்திகவாதி அதனால் நீங்கள் கூறும் மந்திரம் எதனையும் நான் திரும்பக் கூறமாட்டேன். தமிழில் நீங்கள் கேட்கும் ஒப்புதலை மட்டுமே தருவேன். வேறுஎதையும் நீங்கள் என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று அவருடன் வாதம் செய்து சம்மதிக்கச் செய்திருக்கிறேன். (என்னிடம் இன்றிருக்கும் கொள்கை உறுதி அன்று இருந்திருக்கவில்லை என்பதால் சில சமரசங்களுக்கும் ஆட்பட்டிருக்கிறேன் என்பது வேறு விசயம்) நான் ஒரு முகம்மதியனல்லன் என்பதை என் மனைவிக்கு ஐயந்திரிபற புலப்படுத்தியிருக்கிறேன். சமூக உறவு தேவை எனும் அடிப்படையில் தான் என் திருமணம் நடந்ததேயன்றி இஸ்லாமிய உறவு தேவை எனும் அடிப்படையிலல்ல. இப்போது என் மத நடவடிக்கைகள் உங்கள் விருப்புக்குறியதாய் இல்லை என்று கூறிக் கொண்டு என் மண வாழ்வில் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியது எவர்?

  நான் இறந்தால் எந்த மையவாடியிலும் என் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்று கூறியிருக்கின்றனர். \\\இவனோ இவனது குடும்பத்தினரோ இறந்து விட்டால் முஸ்லிம்களின் எந்த மையவாடியிலும் அடக்கம் செய்யக் கூடாது/// நான் இறந்தால் முஸ்லீம்களின் மையவாடியில் என்னை அடக்கம் செய்யுங்கள் என்று யாரிடமும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. மாறாக ஒரு மருத்துவக் கல்லூரிக்கு என்னுடையை முழு உடலையும் தானம் செய்திருக்கிறேன். நான் இறந்தபின் தோழர்கள் என் உடலை அனுப்பும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அது குறித்து நீங்கள் எந்தக் கவலையும் அடைய வேண்டிய அவசியமில்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்துக் கொள்கிறேன்.

  இன்று நான் முஸ்லீம் அல்ல கூவித் திரியும் இவர்கள், நான் முஸ்லீம் அல்ல என்று என் செயல்களால் உணர்த்திய போது அதை மறுத்து என்னை அந்த மதத்துள் இருத்தி வைப்பதற்கு செய்த முயற்சிகள் எத்தனை? எத்தனை? (’இவர்கள்’ என்பதை பொதுத்தன்மையில் குறிப்பிட்டிருக்கிறேன்) என் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்ற போது இவர்கள் செய்த தடங்கல்கள் எத்தனை, ஜாதி மதம் கடந்தவர்கள் என சான்றிதழ் பதிவு செய்ய முயன்ற போது செய்த இடையூறுகள் எத்தனை எத்தனை. என்னுள் நான் எப்படி இருக்கிறேன் என்பது குறித்து கிஞ்சிற்றும் கவலையற்றவர்கள், என் வெளிச்செயல்கள் முஸ்லீம்களுக்குறியதாக இருக்க வேண்டும் என்பதில் காட்டிய தீவிரம் தான் என்னே. ஒரு நிகழ்வை எடுத்தக் காட்டுதல் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். என்னுடைய திருமண தினத்தன்று காலை, அதுவரை நான்கைந்து நாட்களாக என்னுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த என் நண்பர்கள் யாரையும் காணவில்லை. காத்திருந்தேன், நேரமாகிக் கொண்டிருக்கிறது, இனியும் தாமதிக்க முடியாது என்றாகி, நேரடியாக சென்று கேட்ட போது தான் விசயமே விளங்கியது. “நீ எங்களுடன் சேர்ந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதால் தான் நாங்கள் உன் திருமணத்தில் கலந்து கொள்வோம்” என்றார்கள். “நீங்கள் கலந்து கொள்வதுதான் எனக்கு முக்கியமேயன்றி ஒரு மதத்தின் சடங்குகள் முக்கியமல்ல” என்று அவர்களுடன் சேர்ந்து பள்ளிவாசலில் தொழுதேன். தன்னை முஸ்லீம் என்று கருதிக் கொண்டிருந்தவர்களுக்கு இஸ்லாம் என்பது என்ன என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் எனக்கு தெரிந்திருந்தது, அதனால் தான் என்னால் நண்பர்களுக்காக தொழவும் முடிந்தது. என்னுடைய ஆழம் குறித்து அலட்டிக் கொள்ளாதவர்கள், அடையாளம் குறித்தே கவலை கொண்டார்கள். இன்று அந்த அடையாளிகள் அறிவித்திருக்கிறார்கள் நான் முஸ்லீம் அல்ல என்று. முட்டாள்களா, நீங்கள் நினைத்தால் முஸ்லீம் என்று இருத்திக் கொள்வதற்கும், நினைத்தால் முஸ்லீம் அல்ல என்று விடுவிப்பதற்கும் நான் என்ன உங்கள் முகத்தில் வைத்திருக்கும் மீசையா நினைத்த போதெல்லாம் திருத்திக் கொள்வதற்கு?

  அவர்களது பதிவில் சில விவரப் பிழைகளும் இருக்கின்றன. இணையப் பரப்பில் செங்கொடி என அறியப்படும் நான் செங்கொடி, நல்லூர் முழக்கம் எனும் இரண்டு வலைத் தளங்களை நடத்தி வருகிறேன். இறையில்லா இஸ்லாம் எனும் தளம் என்னால் நடத்தப்படுவதல்ல, மட்டுமல்லாது எந்த இணையக் குழுவுக்கும் நான் தலைமை தாங்கவும் இல்லை. இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் தொடரை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். அது முழுமையாக என்னுடைய தேடல்களின் அடிப்படையில் எழுதப்பட்டு வருகிறது. அதில் இடம்பெறும் எதற்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன். அதுகுறித்து உங்கள் யாருக்கும் விமர்சனம் இருந்தால் தாராளமாக பதிவு செய்யலாம், விளக்கம் கூறுகிறேன். சுய விமர்சனம் செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன். அதேநேரம் நல்லூர் முழக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆரம்பத்தை நோக்கி எனும் தொடர் என்னால் எழுதப்படுவதல்ல, தஜ்ஜால் என்பவரால் எழுதப்படுகிறது. என்றாலும், அதன் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அது குறித்தும் உங்களுக்கு விமர்சனம் இருந்தால் பதிவு செய்யலாம். நண்பர் தஜ்ஜால் உங்களுக்கு தகுந்த விளக்கமளிப்பார். ஒரு விமர்சனம் எனும் அடிப்படையில் அதன் நிறை குறைகளை ஏற்றுக் கொள்வோமேயன்றி, காட்டுமிராண்டித்தனங்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம், தகுந்த முறையில் எதிர்கொள்வோம்.

 141. நெத்தியடி செங்கொடி. இதற்கு மேலும் அவர்களால் அல்வா கிண்டி கொண்டிருக்க முடியாது. கிண்டினால் வழுக்கி விழுந்துவிடுவார்கள்

 142. நொடிந்தகொடி ////இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்தால், இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்திருந்தால், இஸ்லாமிய பெயர் வைத்துக் கொண்டிருந்தால் ஒருவர் முஸ்லீமாகிவிடுவார் என்பதற்கு உங்கள் வேதத்திலி(குரான்)ருந்தோ, உபநிடதத்(ஹதீஸ்)திலிருந்தோ மேற்கோள் காட்டமுடியுமா? பின் எந்த அடிப்படையில் என்னை முஸ்லீம் என்று கருதினீர்கள், இப்போது முஸ்லீம் அல்ல என்று அறிவிப்பதற்கு? ////
  முஸ்லிம் ஜமாஅத் திருமண பதிவு புத்தகத்தில் தங்களது திருமணம் முஸ்லிம் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டிருப்பதால் உங்களை முஸ்லிம் என்று கருதினார்கள்.அதனால் இப்போது முஸ்லிம் அல்ல என்று அறிவித்துள்ளார்கள்.
  ////நான் என்ன உங்கள் முகத்தில் வைத்திருக்கும் மீசையா நினைத்த போதெல்லாம் திருத்திக் கொள்வதற்கு?///
  அவர்களது உடலில் உள்ள வேண்டாத முடிகளை களைய அவர்களுக்கு உரிமைகள் உண்டு .

 143. இந்த விவாதத்தின் கடைசிப் பகுதியாக காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் எந்தவித தயக்கமும் இன்றி ஈடுபடும் மதவாதிகளின் அடிப்படை குறித்து அலசலாம்.

  ஒரு நடவடிக்கை அல்லது செயல் எந்த அடிப்படையில் ஒருவனால் மேற்கொள்ளப்படுகிறது? தன்னால் செய்யப்படும் செயல் தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் இருக்கும் போது மட்டுமே அதை செய்வதற்கான உந்துதல் அவனுக்கு கிடைக்கும். தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் எந்த வழியில் வருகிறது? ஒரு செயல், அதற்கான தூண்டுதல், விளைவு, எதிர்வினை போன்றவை தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவை இரண்டு வழிகளில் அடைகிறார்கள். 1. சரியா? தவறா? 2. சாதகமா? பாதகமா?

  உலகின் பெரும்பாலான மக்கள் சாதகமானதா? பாதகமானதா? எனும் கோட்டில் நின்று தான் சிந்திக்கிறார்கள். தாம் செய்யப் போகும் ஒரு செயல் சரியானதா? தவறானதா? எனும் ஆய்வு அவர்களுக்குள் ஏற்படுவதில்லை. தவறானதாக இருந்தாலும் சாதகமானதாக இருந்தால் செய்துவிடுவதும், தாம் செய்வதையே சரி என வாதிடுவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. சரி என்று வாதிடுபவர்கள் அனைவரும் அது சரி என தெரிந்ததனால் வாதிடுபவர்கள் அல்லர். தவறு என்று தெரிந்து கொண்டே சரி என வாதிடுபவர்களே இங்கு அதிகம். இது ஏன்?

  ஒன்று சரியா தவறா அல்லது சாதகமா பாதகமா எனும் முடிவு அந்தந்தப் பொருள் குறித்து அவர் கொண்டிருக்கும் கருத்திலிருந்து பிறக்கிறது. இந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே சரியா தவறா? சாதகமா பாதகமா? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்கிறார்கள். தனக்கு சாதகமானது என்று ஒன்றைப் பற்றி கருத்து கொண்டிருக்கும் ஒருவரால் மெய்த்தன்மையில் அது பாதகமானதாக இருந்தாலும், தவறானதாக இருந்தாலும் அதை தவறு என்று அவரால் தள்ள முடியாது. ஏனென்றால் அவரது கருத்துக்கு எதிராக அவரால் சிந்திக்க முடிவதில்லை. சிந்தனை கருத்து இரண்டுமே அனுபவங்களிலிருந்து அதாவது சமூகத்திலிருந்து தோன்றுபவை தான் எனும் போது ஏன் ஒருவரால் அவரின் சொந்த கருத்துக்கு எதிராக சிந்திக்க முடியாது? ஒரு பொருளைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்தை மீறி அதே பொருளைப் பற்றிய வேறு கருத்துகளும் இருக்கக் கூடும் எனும் நிலையைச் செரிக்க அவனால் முடிவதில்லை. தெளிவாகச் சொன்னால், ஒரு கருத்து அவனுள் நம்பிக்கையாக நிலை பெற்றிருக்கும் போது அந்தக் கருத்துக்கு எதிராக சிந்தனை செய்வது என்பது சாத்தியமற்றுப் போகிறது. இந்த நம்பிக்கையின் அடிக்கல்லில் எழுந்து நிற்பது தான் மதம். மதத்திற்கு எதிரான சிந்தனை குற்றமாகவும் பார்க்கப்படுவதால் மதத்துக்கு எதிரான சிந்தனைகள் எப்போதுமே இயல்பை மீறிய விசயமாகவே இருக்கிறது.

  மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடயேயுள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டால் யாரும் சட்டெனக் கூறுவது சிந்தனை என்பது தான். ஆனால் விலங்குகள் சிந்திப்பதில்லையா? சிந்திக்கின்றன. கழுதைப் புலிகள் கூட்டாக வேட்டையாடுகின்றனவே சிந்திக்காமல் சாத்தியமா? வேறென்ன வேறுபாடு, பகுத்தறிவா? விலங்குகளும் பகுத்தறிகின்றனவே. குறிப்பிட்ட செடியை மட்டும் உண்ணாமல் தவிர்க்கின்றன ஆடுகள். பகுத்தறியவில்லை என்றால் சாத்தியமா? மனிதர்களைப் போலவே விலங்குகளும் உழைக்கின்றன, உண்கின்றன, தாய்மை உணர்வு கொள்கின்றன. ஆனால் மனிதனைப் போல் விலங்குகளால் மீளாய்வு செய்ய முடிவதில்லை. தான் செய்து கொண்டிருக்கும் செயல் சரியானதா? தவறானதா? தொடர்ந்து செய்யலாமா? கூடாதா? என்பன போன்ற சிந்தனைகள் அதாவது ஒன்றை ஐயப்படத் தெரியாது விலங்குகளுக்கு. அதாவது உயிர் வாழும் தன்மைக்கு பாதிப்பு நேரிடாதவரை தன்னுடைய செயல்களை மாற்றிக் கொள்வதில்லை விலங்குகள். மனிதன் எந்த நிலையிலும் மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான். மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான் என்பது தான் உண்மையேயன்றி; ஒவ்வொன்றையும் மீளாய்வு செய்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உண்மையாக இருக்க முடியாது. தான் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அது சரியா தவறா? என உள்வசமாய் சிந்திக்காமல்; சூழலுக்கான தம்முடைய எதிர்வினை சரியானதா? என்பதை ஆராயாமல் தான் நம்பிக் கொண்டிருக்கும் ஒன்றுக்கு எதிராய் இருக்கும் அத்தனையும் தவறாகவே இருக்கும் என்று எந்த மீளாய்வுக்கும் இடமில்லாமல் எந்த இடத்தில் முடிவு செய்கிறானோ அந்தப் புள்ளியிலிருந்து மூட நம்பிக்கை தொடங்குகிறது. அவன் அதை மூடநம்பிக்கை என்று வகைப்படுத்தவில்லை என்றாலும் கூட அதுவே நிஜம்.

  ஆக, யாராக இருந்தாலும் அவர் தாம் செய்யும் செயல்களை – அது எந்த தத்துவத்தின் வழியில் வருவதாக இருந்தாலும், எந்த மதத்தின் அடிப்படையில் இருப்பதாக கொண்டாலும் – அதை மீளாய்வுக்கு உட்படுத்துகிறாரா? இல்லையா? என்பது மட்டுமே அவர் சரியான நிலைபாட்டில் இருக்கிறாரா என்பதை தெளிவதற்கான அளவுகோல். இப்போது கடையநால்லூர் நிகழ்வில் இதை பொருத்திப் பார்ப்போம். தோழர் துராப்ஷாவைத் தாக்கிய, தாக்க நினைத்த, தாக்கியதை சரி என்று எண்ணிய அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் கேட்கலாம், “உங்களிடம் இன்னும் நேர்மை உணர்வு கொஞ்சமேனும் மிச்சமிருக்குமானால் தோழரை நீங்கள் தாக்கியது, தாக்க நினைத்தது, தாக்கப்பட்டதை சரி என்று எண்ணியது சரிதானா?” நீங்கள் விலங்கு நிலைக்கு தாழ்ந்து போக விருப்பமில்லாதவர்களாயின் நீங்கள் மீளாய்வு செய்தே தீர வேண்டும்.

  உங்களைச் சுற்றி நடக்கும் எத்தனை நிகழ்வுகளுக்கு நீங்கள் காது கொடுத்திருக்கிறீர்கள்? எத்தனை சமூக அநீதிக்கு எதிராக நீங்கள் கொதித்தெழுந்திருக்கிறீர்கள்? உங்கள் வாழ்வை வளங்களை பறித்து உங்களை கடல் கடந்து ஓட வைத்திருக்கும் முதலாளித்துவத்தை நினைத்து நீங்கள் சினந்தது உண்டா? குறைந்தபட்சம் அதை புரிந்துகொள்ளவேனும் முயற்சித்ததுண்டா? உங்கள் கண் முன்னே லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்த போது உங்கள் தார்மீகக் கோபம் எங்கே போனது? கல்வியை கை கழுவிவிட்டு மதுவை அரசுடமை ஆக்கி ஆறாய் ஓடச் செய்திருக்கும் இந்த அரசுக்கு எதிராக உங்கள் கைகள் உயர்ந்ததுண்டா? இன்றல்ல, இரண்டல்ல .. .. சமூகத்தில் நிகழும் பெரும்பாலான செயல்களும் ஏதாவது ஒரு விதத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றன. அவைகள் குறித்த உங்கள் எதிர்வினை என்ன? உங்களை நீங்களே கேள்வி கேட்டதுண்டா?

  ஆனால், ஆனால் கேவலம் மதத்துகு எதிராய் எழுதினான் என்ற பொய்க் குற்றச்சாட்டை அப்படியே நம்பி தாக்கத் துணிந்தீர்களே! உங்கள் செயல் சரிதானா என சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் வந்ததுண்டா உங்களிடம்? என்றால் நீங்கள் எதுவாக இருக்க விரும்புகிறீர்கள்? கேள்வியை கேட்டு விட்டேன், பதிலை நீங்கள் தான் தேட வேண்டும். ஏனென்றால் நான் உங்களை உயர்தினையாய் மதிக்க விரும்புகிறேன்.

 144. நண்பரே கம்யூனிசவாதி ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி அவனால் ரஷ்யாவில் பல லட்சகணக்காணோர் கொல்லப்பட்டுள்ளனர். கம்யூனிச ரஷ்யாவால் ஆப்கானில் பல லட்சம் பேர் இறந்துள்ளனனர்.

 145. நண்பர் ஹமீத் ஃபைசல்,

  இந்தப் பதிவுக்கும் உங்கள் கேள்விகளுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? உங்களைப் போல் பலர் இப்படித்தான் ஏதோ நம்பிக்கையில் இப்படி நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குபலரும் பலவிதங்களில் ஆதாரத்துடன் பதில் கூறியிருக்கிறார்கள். எதையும் நான் பார்க்கமாட்டேன் படிக்க மாட்டேன். ஆனால் நான் நம்புவதை மட்டும் திரும்பத் திருப்ப கூறிக் கொண்டே இருப்பேன் என்பவர்களை ஒன்றும் செய்யவியலாது. ஏன் இந்த செங்கொடி தளத்தில் கூட பலமுறை இதற்கு பதிலளிக்கப்பட்டிருக்கிறது. தேடுங்கள் கிடைக்கும். அல்லது உங்கள் நோக்கத்தை வெளிப்படையாக சொல்லுங்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s