சென்னையில் இரண்டு மணிநேரமும் சங்கரன் கோவில் நீங்கலாக ஏனைய பகுதிகளில் எட்டு முதல் பத்து மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப் படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின்வெட்டை வெட்டிவிடுவோம் என்று அம்மா கூறியதன் பொருள் என்னவென்பது இப்போது தான் மக்களுக்கு விளங்குகிறது. கடந்த ஆட்சியில் மின்வெட்டு அமைச்சராக ஆர்காடு வீராசாமி புகழப்பட்டார், இப்போது நத்தம் விஸ்வநாதன். யார் மாறினாலும், யார் ஆண்டாலும் மின்வெட்டு மட்டும் மாறாது ஆளும் என்பது வெளிப்படையாகி இருக்கிறது. ஆனால் ஏன் இந்த மின்வெட்டு? மக்கள் மீது இந்த மின்வெட்டு சுமத்தப்படுவதன் காரணங்கள் என்ன? போன்றவை மட்டும் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த விகிதத்தில் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. திமுக அதிமுக வை நோக்கி விரல் நீட்டுவதும், அதிமுக திமுகவை நோக்கி விரல் நீட்டுவதும் தமிழகத்தில் வழக்கமாக நடப்பவைதான். ஆனால் இந்த முறை நியாயமான காரணத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது விரல் நீட்டப்பட்டிருப்பது நயவஞ்சகமானது. கூடங்குளம் அணு உலை இயங்கினால் மின்வெட்டு தீர்ந்து விடும், அதை தொடங்க விடாமல் போராடிக் கொண்டிருப்பதால் தான் மின்வெட்டு அதிகரித்துவிட்டது என்று மக்கள் மீதே மக்கள் கோபம் திருப்பப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மை நிலை என்ன?
திமுகவும், அதிமுகவும் கடந்த காலங்களில் புதிதாக எந்த மின் உற்பத்தி திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. ஆனால் இதற்கு நேரெதிராக இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு பன்னாட்டு நிறுவங்களை அழைத்து பலவிதமான சலுகைகளை கொட்டிக் கொடுத்து தொழில் தொடங்க வைத்திருக்கின்றன. மக்களுக்கும் உள்நாட்டு தொழிலகங்களுக்கும் மின்வெட்டை தரும் இவர்கள் பன்னாட்டு ஐடி நிறுவனங்களுக்கும் சலுகை விலையில் ஒரு நொடி கூட மின்வெட்டில்லாமல் மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்றால் தற்போதைய மின்வெட்டிற்கான காரணம் யார்?
தமிழகத்தின் தற்போதைய மின்தேவை தோராயமாக 12 ஆயிரம் மெகாவாட், இதில் 3500 மெகாவாட் வரை பற்றாக்குறை நிலவுகிறது. இந்த பற்றாக்குறையை சமாளிக்கத்தான் மின்வெட்டு. அப்படியென்றால் மின்சாரத்தை பகிர்ந்து கொள்பவர்கள் அனைவரும் மின்வெட்டையும் பகிர்வது தானே சரி. ஆனால், மக்களுக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் மின்வெட்டை அளித்து விட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்வெட்டே இல்லாமல் மின்சாரம் வழங்குவது யாருடைய தவறு?
குஜராத்திலிருந்து மின்சாரம் வாங்குகிறோம் என்கிறார்கள், மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை என்கிறார்கள்; அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட பலமடங்கு அதிக விலையில் வாங்கும் மின்சாரத்தில் பாதிக்கு மேல் மின்கடத்தலினால் ஏற்படும் இழப்பில் போய்விடுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை நேரடியாக வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித்தடங்கள் நிறுவிக் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் ஒப்பீட்டளவில் மாநில அரசு தருவதை விட விலை அதிகம் என்பதால், நாநில அரசிடம் இருந்தே வாங்கிக் கொள்கின்றன. மக்கள் கடுமையான மின் தட்டுப்பாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் கூட இதை ஒழுங்கு படுத்தாமலிருப்பது யாருடைய பிழை?
கடந்த சில நாட்களாக பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வு தொடங்குமுன்னரே பல்வேறு தரப்பினரும் மின்வெட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மின்வாரியத்துக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர். இவை எவற்றையும் செவியேற்காத அரசும் வாரியமும் தொடர்ந்து மின்வெட்டை அமல்படுத்தி வருகிறது. ஆனால் நகரங்களில் மீப்பெரிய விளம்பரப் பலகைகள் இரவு முழுதும் கண்ணைக் கூசும் வெளிச்சத்தில், பல்வேறு வண்ணங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. மட்டுமல்லாது, சங்கரன் கோவிலில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பதால் அந்தப் பகுதியில் மட்டும் மின்வெட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை விட, விளம்பரப் பலகைகளைவிட பொதுத்தேர்வு மதிப்பிழந்து விட்டதா? இந்த எளிய ஏற்பாட்டைக் கூட செய்ய மறுத்து அலட்சியம் காட்டுவது யாருடைய குற்றம்?
மின்சாரத்தின் பெயரால் மக்களை வதைக்கும் அத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, கூடங்குளத்தை திறந்தால் அத்தனையும் சரியாகிவிடும் அதை தடுப்பது போராடும் மக்கள் தான் என்று மக்கள் மீதே மடைமாற்றி விடுவது அயோக்கியத்தனம் அல்லவா? கூடங்குளம் அணு உலை குறித்து புள்ளிவிபரங்கள், தரவுகள் அடிப்படையில் விரிவாக, பல்வேறு கட்டுரைகளும், பிரசுரங்களும் நூல்களும் வெளியிடப்பட்டிருக்கிறன. கூடங்குளம் அணு உலையின் பின்னுள்ள அரசியல், அடிமைத்தனம், உலகமய பாதிப்புகள், அதனால் பலனடையப்போவது யார்? பாதிப்படையப் போவது யார்? என்பன உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன, கேள்விகளாக எழுப்பப்பட்டு வருகின்றன. இவை எவற்றுக்கும் பதிலளிக்காத அரசு மற்றும் அறிவியலாளர்கள் என்ற பெயரில் உலாவரும் காரியவாதிகளின் கூட்டணி, அணு உலை பாதுகாப்பானது என்ற ஒரே பல்லவியை சரணங்களே இல்லாமல் திரும்பத் திரும்ப பாடிவருகிறது. அணு உலை முழுமையான பாதுகாப்பை கொண்டது என்றால் அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதா எதற்காக? ஜப்பானில் புஹுஷிமா விபத்து ஏற்படுவதற்கு முன்புவரை சர்வதேச அணுசக்தி முகமை ஜப்பானின் அணு உலைகள் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை என்றுதான் சான்றிதழ் அளித்துக் கொண்டிருந்தது. இதை தற்போது மறந்து விட்டார்களே ஏன்?
நாட்டில் மின்சார பற்றாக்குறை இருக்கும் போது ஏன் அரசே மின் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தக் கூடாது? தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் தனியார் மயமாக்கிய அதே கொள்கை தான் அரசு மின்சாரம் தயாரிப்பதையும் தடை செய்கிறது. 2003ல் பாஜக அரசு இயற்றிய புதிய மின்சாரச் சட்டம் மின்சாரத்தை உற்பத்திச் சரக்காகவும், மின் பகிர்மானத்தை வணிக நடவடிக்கையாகவும் வரையறை செய்தது. இதனால் தான் அரசு மின் உற்பத்தியிலிருந்து ஒதுங்கிக் கொண்டுவிட தனியார்கள் பெருமளவில் மின் உற்பத்தியில் இறங்கினார்கள். இன்று தனியார் மின் உற்பத்தியின் அளவு 48000 மெகாவாட், இன்னும் 30000 மெகாவாட் அதிகரிக்கும் திட்டங்களும் ஆயத்தமாக இருக்கின்றன. மட்டுமல்லாது தனியார் அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் போடப்பட்டிருக்கின்றன. தனியார் மின் உற்பத்தி நடந்து கொண்டிருக்கிறது, மிகை உற்பத்தி செய்யும் மாநிலங்களும் விற்பனை செய்கின்றன. என்றால் வாங்கி பயன்படுத்த வேண்டியது தானே மின்வெட்டின் அவசியம் என்ன?
இங்கு தான் முதன்மையான ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது. மின்வெட்டின் காரணம் பற்றாக்குறையில் மட்டுமில்லை, மின்சாரம் வாங்கப் பணமில்லை என்பதிலேயே இருக்கிறது. தமிழ்நாடு மின்வாரியம் தற்போது 56000 கோடி கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு குறைந்தபட்சம் யூனிட் ஒன்றுக்கு 21 காசுகளிலிருந்து அதிகபட்சம் 2 ரூபாய் வரை ஆகிறது. ஆனால் தனியாரிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 4 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 17 ரூபாய் வரை ஆகிறது. இது முதல் காரணம் என்றால் மின் கடத்துதலில் ஏற்படும் கம்பிவட இழப்பு மட்டும் ஆண்டுக்கு 2000 கோடி. சுருக்கமாகச் சொன்னால் தனியாரிடம் மின்சாரம் வாங்கியே போண்டியாகிக் கிடக்கிறது மின்சார வாரியம். இவைகளைசரி செய்யஎந்த நடவடிக்கையையும் எடுக்காமல் மேலும் மேலும் தனியார் மின்சாரமே தீர்வு என்று தனியாரை நாடிக் கொண்டிருக்கிறது அரசு, தனியார்களும் தங்களின் உற்பத்தி இலக்கைகூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நாளை மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையும் அவர்கள் கைகளுக்கு போகும் போது நிலைமை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்வதே முடியாததாயிருக்கிறது.
இந்த நிலைமையை மூடிமறைக்கத்தான் கூடங்குளம் கூச்சலை கூட்டுகிறார்கள். அணு உலைகளை நம்மீது திணிக்கும் வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் எதுவும் புதிதாக அணு உலை எதையும் அமைக்கவில்லை என்பதோடு மட்டுமன்றி இருக்கும் உலைகளையும் மூடி வருகின்றன. அதேநேரம் இந்தியாவில் தொழில் தொடங்கும் நாடுகளும் இவைதான். அணு உலைகள் இயங்கினாலும் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தான் பயன்படப் போகிறது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆக அவர்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை அவர்களின் தொழில் நுட்பத்தில் செய்து அவர்கள் பயன்படுத்துவதற்கான களம் இந்தியா பலிகிடா அதன் மக்கள். இந்த உண்மைகளை மக்களுக்கு தெரியவிடாமல் மறைப்பதற்குத் தான் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் பாடுபடுகின்றன.
என்றால் நாம் யாரை ஆதரிக்க வேண்டும்? யாரை எதிர்க்க வேண்டும்? அணு உலை,மின்சாரம் ஆகியவற்றின் பின்னாலிருக்கும் அரசியலை உணர்ந்து கூடங்குளத்தில் போராடும் மக்களை ஆதரிப்போம். மக்களுக்கு எதிராக மக்களையே பயன்படுத்தும் ஓட்டுக்கட்சி அயோக்கியத்தனங்களை முறியடிப்போம்.
தொடர்புடைய பதிவுகள்:
பேருந்து, பால், மின்சாரம் விலை உயர்வு, பாசிச ஜெயாவின் பேயாட்டம்
மின்னூலாக(PDF) தரவிறக்க
தோழர் செங்கொடி அவர்களுக்கு, இன்றைய ஆளும் அரசாங்கம் கூடங்குளம் போரட்டக்காரர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது போல் எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் இப்போதுள்ள அணுவுலையானது போராட்டம் மூலம் மூடப்பட்டாலும். இதைவிட மிகவும் பாதுகாக்கப்பற்ற அமெரிக்க அணுவுலை இங்கு தொடங்கப்படும். அதிலுள்ள ஆபத்துகள் மறைக்கப்படுவதற்கு இதே அரசாங்கம் இன்னும் முனைப்புடன் செயல்படும். அப்போது இதுபோன்ற பேச்சுவார்த்தை நாடகங்கள் எதுவும் நடக்காது.இன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் அட்டூழியங்கள் போல் அமெரிக்க அணுவுலைகளின் அட்டூழியங்கள் தொடரும்.அதை செயல்படுத்தவே இன்றய போரட்ட எதிர்ப்பு மற்றும் ஆதரவு நாடகங்கள் இங்கே அரங்கேற்றப்படுகின்றன.இது பாதுகாப்பான அணுவுலை என்று சொல்லும் இந்த அரசாங்கம் இதில் ஏற்படும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளுக்கு அரசு வேலை, காப்பீடு, இழப்பீடு என்று எவ்வளவோ வழிகள் உண்டு ஆனால் இதை இந்த அரசாங்கம் மறுப்பதற்கான காரணம் இது பாதுகாப்பற்ற அனுவுலை என்பதற்காக அல்ல. இந்த அணுவுலை அமைப்பதில் அவர்களுக்கும் உடன்பாடில்லை மாற்றாக இதை அமெரிக்காவிற்கு தாரைவாற்கும் எண்ணமே தவிர வேறொன்றும் இல்லை.அமெரிக்க அணு ஒப்பந்தம் எல்லோருக்கும் நியாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். இது தொடங்கப்பட்டாலாவது அது நமக்கு மட்டும் இயங்க போராட்டம் நடத்த ஒரு வாய்ப்பு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.ஆனால் இதை மூடுவதனால் இது ஒரு நாள் நம்மீது நாம் எந்த கேள்வியும் கேட்க முடியாதபடி தினிக்கப்படும். அது அமெரிக்காவும் அதன் கைக்கூலிகளான நம்மூர் அரசியல்வாதிகளாலும் நடத்தப்படும். இந்த கருத்தின் மீதான உங்கள் விமர்சனம் தேவை.
ஆண் – பெண் நட்புறவு
ஜோதிர்லதா கிரிஜாFirst Published : 20 Mar 2012 04:38:01 AM IST
ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன.
ஆண்களும் பெண்களும் கலந்து பழகவே கூடாது என்பதில் நம் முன்னோர்கள் காலம்காலமாக மிகப் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்கள். இது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்பதே எனது கருத்தாகவும் இருந்து வந்துள்ளது. ஒன்று சொன்னால் நம்புவீர்களா? தோழிகளைக் காட்டிலும் எனக்குத் தோழர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
ஆண்-பெண் நட்புறவில் இங்கே ஆணுக்கு எதிராய் நான் சொல்லப்போகும் கருத்தை என்னைப்பற்றி ஏற்கெனவே இருக்கக்கூடிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதை எடுத்துச்சொல்ல இந்தச் சுய தம்பட்டம் தேவைப்படுகிறது. மன்னிக்கவும்.
ஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது. பத்து வயதுச் சிறுவர்கள்கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை. விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படியெனில், இந்த நாள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. எல்லாத்துக்கும் சின்னவன் ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன் என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.
ஆணின் இயல்பை நன்கு அறிந்த தமிழர்கள் இயற்றிய பொன்மொழி இது. இதுபற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும் என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும். ஒரு தகப்பன் தன் மகளை ஆண் நண்பர்களுடன் பழக அனுமதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஒரு பெண்ணோடு பழகும்போது இவள் ஒரு பெண் என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பனைப் பார்ப்பதுபோல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை.
இத்தகைய அரிய ஆண்களை மட்டுமே தன் உள்ளுணர்வால் கண்டுணர்ந்து பழகும் கெட்டிக்காரத்தனம் பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் உருப்படியாக மீண்டுவர முடியும். இயல்பான உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டு. அது இறைவன் அவளுக்கு அளித்த கொடை. முதுகுக்குப் பின்னால் இருந்தபடி எவரேனும் முறைத்தாலும் திரும்பிப் பார்க்கும் உள்ளுணர்வு அவளது பிறப்பியல்பு.
பெண் அதைச் சரியாகவோ, முழுமையாகவோ பயன்படுத்திக் கொள்ளாதபோதுதான் அவள் கண்மூடித்தனமாக ஆணை நம்பி ஏமாந்து போகிறாள்.
தனது உள்ளுணர்வைப் புறக்கணிக்காமல், அதை ஏற்று நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண் ஏமாந்து போவதில்லை. எதிர்ப் பாலைச் சேர்ந்தவனாக ஆண் நண்பன் இருப்பதால் அதிகப்படியாக நிகழக்கூடிய வன்னுகர்வு எனும் ஆபத்தைத் தவிர்த்தல் கட்டாயமாகிறது.
ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் தோழியாக்கிக் கொள்ளும்போது பாலுணர்வு சார்ந்த இந்தக் கசப்பான ஆபத்து அவளுக்கு இல்லை. எனவே தன் உள்ளுணர்வைச் சார்ந்துதான் ஒருத்தி தன் தோழியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற இன்றியமையாத் தேவையும் இல்லை. சண்டை வரும்போது விலகவோ, விலக்கவோ செய்யலாம். (பெண்களிடையே சண்டை அடிக்கடி வரும்)
தன்னோடு வெறும் நண்பனாக மட்டுமே பழகி வந்துள்ள நிலையிலும் – அது புனிதமான நட்பு மட்டுமே என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும் – திடீரென்று அந்த நண்பன் அத்துமீறிய வக்கிரச் செயலில் ஈடுபடும்போது, அந்தப் பெண் அதிர்ந்து போகிறாள். சின்னச் சின்ன அத்துமீறல்கள் ஏற்படும்போதே, அதைப் புரிந்துகொள்ளும் – ஆனால் அதை விரும்பாத – பெண் அவனைப் புறந்தள்ளி விடுவாள்.
ஆனால், ஆண் இவ்விஷயத்தில் தந்திரமானவன். நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துகொண்டு பெண் தன்னைத் தவிர்த்துவிடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்துமீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப்போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி அவளது நன்மதிப்பைச் சம்பாதித்த பின் என் எழுத்தாள நண்பர் குறிப்பிட்ட அந்த ஐந்து இளைஞர்களைப்போல் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுபவன்.
தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய சிறு அத்துமீறல்களை அவன் செய்ய மாட்டான். தோதான வாய்ப்பின்போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான். அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான்.
எனவே, ஒரு புற்றில் பாம்பு இருக்கிறதா அல்லது எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண் அதனுள் கையை விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற அபாய நிலை (ழ்ண்ள்ந்). ஆக, மிக, மிகச் சரியான கணிப்பு இருந்தால் மட்டுமே அவள் ஆண் நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். மிக மிக நல்லவர்கள் என்கிற மதிப்பீடேயானாலும், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் அவளுக்கு நல்லது. ஏனெனில், மிகுந்த கெட்டிக்காரத்தனமும் கவனமும் உள்ள பெண்களே கூட இந்தத் தேர்வில் ஏமாந்துவிடக்கூடும்.
காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அவளோடும் அவள் பெற்றுத் தந்த குழந்தைகளோடும் வாழும் ஆண்களே சமயங்களில் தம் பெண் நண்பர்களிடம் வழிவது பற்றிய கதைகள் காதில் விழுவதுண்டு. பெரும்பாலான ஆண்கள் முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்லர் என்னும் காரணத்தால், அவர்களுடன் பழகும் பெண்களும் சரி, தோழிகளுடனான தன் கணவனின் நடத்தையை நம்பாத பெண்களும் சரி, வீண் மனக் கலக்கம், குழப்பம், கவலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. (பெண்களிலும் வழிசல்கள் உண்டென்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவே.)
பல்லாண்டுகள் எந்தவிதச் சலனமோ, வக்கிரமோ இல்லாமல் பழகும் ஆணேகூடச் சறுக்கிவிடுவதை அறிந்துள்ள பெண் தன் கணவனையும் அவனுடைய தோழியையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டுவிடுகிறாள்.
ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவை இல்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன? பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய் அபத்தத்திலும் அபத்தமான கருத்து.
பெண்களோடு அவர்களைப் பழகவிட்டாலும், பழகவிடாவிட்டாலும், அவர்கள் காட்டுகிற இயல்பு ஒன்றுதான். அதை மாற்றுவது மிக, மிக மிகக் கடினம். எனவே, பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்பது அவளது பத்திரமும், நலனும் சார்ந்த கோட்பாடாகும். கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி கல்லூரி மாணவனோ, சிறுவனோ, இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.
எனவே, விஷப்பரீட்சை செய்து கொண்டிராமல், நம்பிக்கைக்கு உரியவன் என்பதே தனது கணிப்பானாலும், ஒரு நண்பனைக் குறிப்பிட்ட தொலைவில் வைத்து ஓர் எல்லை வகுப்பதே அறிவுடைமையாகும். நட்பின் தொடக்கத்திலேயே அதை அவனுக்குப் புரிய வைப்பவள் இன்னும் அதிக அறிவாளியாவாள்.
நமது கல்வித் திட்டம் குறைபாடு உடையது. பெண்களைச் சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் கருதும் பக்குவத்தையும், அவர்களைக் காக்கும் ஜடாயுத்தனத்தையும் சிறு வயது முதலே ஆண்களுக்குக் கற்பிக்கத் தவறியுள்ள கல்வித் திட்டம் நம்முடையது.
வட இந்திய ஊர் ஒன்றில் அண்மையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பனுடன் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களைச் சில கயவர்கள் வழிமறித்து வன்னுகர்வுக்கு முயல, அருகே வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்கள், கூக்குரலிட்டு உதவி கோரிய அந்தப் பெண்களை நோக்கி ஓடி வந்து, அவர்களுக்கு உதவாமல், ஆனால், கூட்டு வன்னுகர்வில் தாங்களும் கலந்துகொண்ட கொடுமையை என்ன சொல்ல? பொதுவாக இதுதான் ஆண்களின் லட்சணம்.
இதுபோன்ற நேரத்தில் பெண்ணைக் காப்பற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்துவிடும் ஆண்களும் உண்டுதான். மறுக்கவில்லை. ஆனால், அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதால், ஆணின் பொதுவான இயல்பின் அடிப்படையில்தான் ஒரு பெண் தன் நடவடிக்கைகளை அமைத்துத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.
ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனால் எல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றிவிட முடியாது. நற்சிந்தனையும், உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும்கொண்ட சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான்.
எனவேதான் நல்லிதயம் படைத்த ஆண்கள் சிலர் (மகாபாரத தருமபுத்திரர்போல்) தங்களைப் போன்றே மற்றவர்களையும் எடை போட்டு ஆண்-பெண் நட்புக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அவ்வாறு இல்லாத பிற ஆண்களும்கூட இதை ஆதரிக்கிறார்கள் – ஆனால், வேறு உள்நோக்கத்துடன். அவர்கள் காட்டில் மழை பெய்யுமன்றோ, அதற்காக!
clear -cut report. But this must be spread among the common people essentially. But who cares? they are with Beer in Tasmac.
/////இந்த நிலைமையை மூடிமறைக்கத்தான் கூடங்குளம் கூச்சலை கூட்டுகிறார்கள். அணு உலைகளை நம்மீது திணிக்கும் வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் எதுவும் புதிதாக அணு உலை எதையும் அமைக்கவில்லை என்பதோடு மட்டுமன்றி இருக்கும் உலைகளையும் மூடி வருகின்றன. /////
WORLD NUCLEAR POWER OUTPUT 2011
Nuclear Power sharing and new ones
சி. ஜெயபாரதன்
http://en.wikipedia.org/wiki/Nuclear_power_by_country
Nuclear power by country From Wikipedia, the free encyclopedia
The Cattenom Nuclear Power Plant in France. France produces around three quarters of its electricity by nuclear power.[1]
The Grafenrheinfeld Nuclear Power Plant in Germany. Chancellor Angela Merkel’s coalition announced on May 30, 2011, that Germany’s 17 nuclear power stations will be shut down by 2022, in a policy reversal following Japan’s Fukushima Daiichi nuclear disaster.[2]
Thirty countries operate nuclear power stations. In 2010, before the Fukushima Daiichi nuclear disaster, it was reported that an average of about 10 nuclear reactors were expected to become operational per year, although according to the World Nuclear Association, of the 17 civilian reactors planned to become operational between 2007 and 2009, only five actually came on stream.[3]
As of June 2011, Germany and Switzerland are phasing-out nuclear power.[4][5]
As of June 2011, countries such as Australia, Austria, Denmark, Greece, Ireland, Italy, Latvia, Liechtenstein, Luxembourg, Malta, Portugal, Israel, Malaysia, New Zealand, and Norway remain opposed to nuclear power.[4][6]
Overview
Of the thirty countries that operate nuclear power plants, only France uses them as its primary source of electricity, although many of them have a significant nuclear power generation capacity.[citation needed] According to the nuclear power advocacy association World Nuclear Association, over 45 countries are giving “serious consideration” to introducing a nuclear power capability. Front runners, they say, are Iran, UAE, Turkey, Vietnam, Belarus and Jordan.[7]
The World Nuclear Association say that China, South Korea and India are pursuing ambitious expansions of their nuclear power capacities, with China aiming to increase capacity to at least 60 GWe by 2020, 200 GWe by 2030 and 400 GWe by 2050.[8]
South Korea, they say, is planning to expand its nuclear capacity from 20.7 GWe in 2012 to 27.3 GWe in 2020 and to 43 GWe by 2030.[9]
They say that India aims to have 20 GWe nuclear capacity by 2020 and 63 GWe by 2032.[10]
Extracts from the main article :
http://en.wikipedia.org/wiki/Nuclear_power_by_country
S. Jayabarathan
ஜெயபாரதன், என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லலாமே.
தோழர் செங்கொடி,
கூடங்குளம் போரட்டம் திரும்பப் பெறப்பட்டது குறித்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
வணக்கம் செந்தணல்,
அணு உலைக்கு எதிரான போராட்டம் திரும்பப் பெறப்படவில்லை. காலவரையற்ற உண்ணாவிரதம் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது. 178 பேரை தேவையின்றி கைது செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு அவர்களை மிரட்டி, அரசு இதை சாதித்துள்ளது. அரசு எப்படி நடந்து கொள்ளும் என்பது குறித்து போராட்டக் குழுவினருக்கு நல்ல படிப்பினையை இது வழங்கியிருக்கும். அணு உலையின் பின்னிருக்கும் அரசியல், அடிமைத்தனம், ஆபத்து போன்றவை மக்களுக்கு எதிரானவை. எனவே அவைகளை எதிர்க்கும் போராட்டமும் அவசியமானது. தமிழகம் முழுவதும் இதை எதிர்த்த போராட்டங்கள் வீரியமாக தொடங்கப்பட வேண்டும், தொடர வேண்டும்.
தோழர் செங்கொடி,
என் முந்தைய இடுகைக்கு உங்களது விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். பதிவு செய்யுங்கள்.
///தோழர் செங்கொடி அவர்களுக்கு, இன்றைய ஆளும் அரசாங்கம் கூடங்குளம் போரட்டக்காரர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது போல் எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் இப்போதுள்ள அணுவுலையானது போராட்டம் மூலம் மூடப்பட்டாலும். இதைவிட மிகவும் பாதுகாக்கப்பற்ற அமெரிக்க அணுவுலை இங்கு தொடங்கப்படும்///
வணக்கம் செந்தணல்,
உங்களுக்கு நான் பதில் எழுதத் தொடங்கு முன்னரே போராட்டத்தை அரசு ஆதரிப்பதாக நீங்கள் கருதும் மாயை அகன்று விட்டது என்பதால் தான் விட்டுவிட்டேன், தாமதத்திற்கு மன்னிக்க.
அமெரிக்க அணு உலை, ரஷ்ய அணு உலை என்பதில் பேதம் ஒன்றுமில்லை. இரண்டும் ஏகாதிபத்திய திணிப்புகளே. அணு உலையின் பாதுகாப்பு மட்டுமே முதன்மையான விசயமல்ல. அணு உலைகளின் பின்னுள்ள அரசியல், அடிமைத்தனம் ஆகியவை அணு உலை ஆபத்தின் பின்னே மறைவிடலாகாது. ரஷ்யாவானாலும், அமெரிக்காவானாலும், பிரான்ஸ் ஆனாலும் அதன் அரசியலே ஆபத்தானது. கூடங்குளம் மட்டுமல்ல அனைத்து அணு உலைகளும் மூடப்பட வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் அது உடனடியாய் செய்யப்பட வேண்டும்.