வேட்டைக் களமா? உயிரி ஆயுதமா? பன்றிக் காய்ச்சல்

 

பன்றிக் காய்ச்சல் பீதி மீண்டும் பற்றிப் படரத் தொடங்கியிருக்கிறது. நாளிதழ்கள், செய்தி ஊடகங்கள் மிகுந்த முதன்மைத்தனம் அளித்து இந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ எனும் ஐயம் மக்களை தனியார் மருத்துவமனைகளில் ஆயிரங்களை செலவு செய்து சோதித்துக் கொள்ள தூண்டுகிறது. நோய், அதற்கான எதிர்பாராத மருத்துவச் செலவுகள், அதனால் ஏற்படும் சிரமங்கள் போன்றவை உடல்நலம் எனும் அடிப்படையில் தவிர்க்க இயலாதவை. ஆனால் இந்த அடிப்படையைக் கொண்டே சுரண்டல்கள் நடந்தால்..?ஆபத்துகளையும் பேரழிவுகளையும் தன்னுடைய லாபவெறிக்கான களமாக அமைத்துக் கொண்டால்..?

 

கடந்த முறை பன்றிக் காய்ச்சல் உலகை வலம் வந்த போது அது தான் நடந்தது. “மருத்துவ நிபுணர்களே! ஹெச்1என்1 தொற்று நோயைத் தடுத்திடுங்கள்! உயிர்களைக் காத்திடுங்கள்” என்று பிரபல நாளிதழ்களில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது அன்று. பரவும் தொற்று நோயை தடுப்பது அரசின் கடமையா? தனிப்பட்ட மருத்துவர்களின் வேலையா? பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அஞ்சியதால் இப்படி விளம்பரம் வெளியிட நேர்ந்ததாக மத்திய அரசு பின்னர் விளக்கம் அளித்தது. அன்று தனிப்பட்ட மருத்துவர்கள் எந்தக் காய்ச்சல் என்றாலும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதைத்தான் செய்தார்கள். தனியார் மருத்துவ நிலையங்களோ இதைப் பயன்படுத்தி முடிந்தவரை கறந்தார்கள். கடந்த 2009ல் வளைகுடாவில் வேலை செய்யும் சலீம் என்பவர் விடுப்பில் ஊர் திரும்பினார். வந்த இரண்டாம் நாள் அவருக்கு லேசாக காய்ச்சல் இருப்பதாக தெரிந்தது. பெற்றோர்கள் பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ எனப் பதறினார்கள், உறவினர்கள் முடிவே செய்துவிட்டார்கள். ஒரு தனியார் மருத்துவமனையில் சோதனை செய்ய அறிகுறிகள் தெரிவதாகக் கூறி உள்நோயாளியாக சேர்த்துக் கொண்டார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு சாதாரணக் காய்ச்சல் தான் என்று கூறி, கட்டணமாக மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு விட்டுவிட்டார்கள். பல ஆண்டுகளாக வளைகுடாவில் கடைநிலை ஊழியராக இருந்து சேமித்த பணத்தை அந்த தனியார் மருத்துவமனை நான்கே நாட்களில் கொள்ளையடித்துக் கொண்டது. சாதாரண மக்களுக்கு இந்த பீதியை ஏற்படுத்தியது யார்?

 

 

உலக சுகாதார அமைப்பு(WHO) தான் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் அளவில் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டது. இதை உலகின் அனைத்து செய்தி ஊடகங்களும் பரபரப்புக்காகவும், உள்நோக்கத்துடனும் விடாமல் செய்தியாக வெளியிட்டு உலகை பதற்றத்துக்கு உள்ளாக்கின. 2009ல் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் 85 பேர் மரணமடைந்தார்கள், ஆனால் காச நோயால் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 5000 பேர் இறப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தையும் இதனுடன் இணைத்துப் பாருங்கள். மக்களிடம் பயத்தை உருவாக்க மைய அரசும் பாடுபட்டிருப்பது புரியும். இதன் பொருள் மக்கள் இறந்து போகும் எண்ணிக்கையைக் கொண்டு விழிப்புணர்வை தீர்மானிக்க வேண்டும் என்பதல்ல, மாறாக, அளவுக்கு மீறி மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன? அதன் விளைவு என்ன? என்பதே முதன்மையான கேள்வி.

 

 

பன்றிக் காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தான டாமிபுளூ வை உற்பத்தி செய்யும் ரோஷ் என்ற பன்னாட்டு நிறுவனம் 200 மடங்கு லாபத்தை ஈட்டியது. மற்றொரு மருந்தான ரிலின்ஜா வை உற்பத்தி செய்யும் கிளாக்ஸோ நிறுவனந்த்தின் விற்பனை 1900 நூற்றுமேனியாக அதிகரித்தது. சனோஃபிபாஸ்டர், அஸ்ட்ராஜெனிகா, நோவாவெக்ஸ் போன்ற நீறுவனங்களும் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன. புரோடின் சயின்ஸ் கார்பரேஷன் எனும் மருந்து நிறுவனம் திவால் அறிவிப்பை வெளியிடும் நிலையில் இருந்தது, பன்றிக் காய்ச்சலை பயன்படுத்தி உச்சத்திற்கு சென்றுவிட்டது இன்று. டெட்டாலின் இந்தியச் சந்தை ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜான்சன் நிறுவனத்தின் பியூர்ல் ன் விற்பனை 452 கோடியாக அதிகரித்துள்ளது. ஹிமாலயாவின் பியூர் ஹேண்ட்ஸ்ன் விற்பனை ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. முகமூடி தயாரிக்கும் நிறுவனமான ரெலிகேர் பன்றிக் காய்ச்சலைப் பயன்படுத்தி தனது சந்தையை விரிவுபடுத்தி விட்டது. மொத்தத்தில் இந்த பன்றிக் காய்ச்சலுக்காக இரண்டு லட்சம் கோடி டாலர்களை உலக மக்கள் செலவிட்டிருப்பதாக உலக வங்கியின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. தெளிவாகச் சொன்னால், பன்றிக் காய்ச்சல் எனும் நோய் உருவானதினால் அல்லது உருவாக்கப்பட்டதினால் ஏற்பட்ட இழப்புகள், பாதிப்புகள், நட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு; அதனால் கிடைத்த வாய்ப்புகள், லாபம், பலன்கள் அனைத்தும் முதலாளிகளுக்கு. இன்னும் அப்பட்டமாக கூறினால் முதலாளிகளுக்கு லாபம் கிடைப்பதற்காக உலகெங்கும் கோடிக்கணக்கான சலீம்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

 

மருந்துகள், கிருமிநாசினி, காகித கைக்குட்டைகள், முகமூடிகள், கைகழுவும் திரவங்கள் இவற்றால் மட்டும் பன்றிக் காய்ச்சலை நீக்கிவிட முடியுமா? அம்மை, காலரா போன்ற கொடூரமான நோய்கள் உலகில் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தின் நோய்களான பறவைக் காய்ச்சல், டெங்கு, சார்ஸ், பன்றிக் காய்ச்சல் போன்றவைகளை உலகைவிட்டே நீக்கும் தடுப்பூசி வகைகளுக்கான ஆய்வுகள் எந்த மருந்து நிறுவனத்தாலும் செய்யப்படுவதில்லை. மாறாக, நோய் வந்த பின்பு போக்கும் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை மட்டுமே செய்கின்றன. அரசுகளோ சுகாதாரத்துறையை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

 

 

உலகில் கால்நடை இறைச்சி விவசாயம் விரல்விட்டு எண்ணக் கூடிய சில நிறுவனங்களின் பிடியிலேயே சிக்கி இருக்கின்றன. அதிக பால், அதிக முட்டை, அதிக இறைச்சி போன்றவற்றுக்காக இந்நிறுவனங்கள் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவைகளை மரபணு மாற்றத்தின் மூலம் விரும்பிய படியெல்லாம் வளைக்க முயல்கின்றன. விளைவு இயற்கையாக அவைகளுக்கு இருக்க வேண்டிய எதிர்ப்பு சக்திகள் இல்லாமல் போய்விடுகின்றன. இதனால் வெகு எளிதாக நோய்த் தொற்றுகளுக்கு இலக்காகின்றன. மட்டுமல்லாது, குறுகிய இடத்தில் அடைத்து வைத்தே வளர்ப்பது, கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படாமல், உணவும் கழிவும் ஒரே இடத்தில் ஒன்று கலந்து கிடப்பது, முறையான பராமரிப்பு வசதிகளை செய்யாதது போன்றவைகளெல்லாம் சேர்ந்து இது போன்ற பண்ணைகளை நோய் உற்பத்திக் கூடாரங்களாகவும், நோய்க் கிருமிகள் புதிய மருந்துகளை எதிர்கொள்ளும் விதத்தில் பரிணாம ரீதியில் மாற்றமடைவதற்கு ஏதுவான களங்களாகவும் மாற்றுகின்றன. அதனால் தான் ஆண்டுக்கு ஆண்டு புதுப்புது விதங்களில் நோய்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. இவைகளை கண்காணிக்கும் அரசு அமைப்புகளும் பெயரளவுக்கே செயல்படுகின்றன. சுமித் ஃபூட்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தின் பண்ணையிலிருந்தே முதன் முதலில் பன்றிக் காய்ச்சல் பரவியதாக கண்டறியப் பட்டிருக்கிறது. இதே சுமித் ஃபூட்ஸ் நிறுவனம் 2005ல் ISO 14001 எனும் தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனமாம். அதாவது அந்தப் பண்ணையில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பன்றிகள் வளர்க்கப்படுவதாக, உலக அளவிலான தரம் பேணப்படுவதாக சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. பன்றிக் காய்ச்சல் என்ற பெயர் உலகில் பரவத் தொடங்கியதும் இறைச்சிக்கான பன்றி விற்பனையும், ஏற்றுமதியும் பெருமளவில் குறைந்தது. உடனே ஒபாமாவிடம் முறையிடப்பட அவர் பன்றிக் காய்ச்சலுக்கு ஹெச்1என்1 காய்ச்சல் என்று அறிவியல் பெயர் சூட்டினார். ஆனால் உலகெங்கும் உருவாக்கப்பட்ட கோடிக்கணக்கான சலீம்களுக்காக கவலைப்பட எந்த அரசும் தயாராக இல்லை.

 

 

இந்த நோயைப் பயன்படுத்தி பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மக்களிடம் அடித்த கொள்ளை ஒருபுறமிருக்கட்டும். இந்த நோய் உருவானதா? உருவாக்கப்பட்டதா? என்பதிலேயே இன்னும் ஐயம் நீடிக்கிறது. மேல்நிலை வல்லரசுகள் தங்களுக்கு அடிபணிய மறுக்கும் நாடுகள் மீது போர் தொடுப்பதை விட உயிரி ஆயுதங்களை ஏவிவிடுவது பாதுகாப்பானது என்று கருதுகின்றன. அதற்காக செய்யப்படும் ஆராய்ச்சிகள் மறைக்க முடியாதபடி வெளிப்பட்டிருக்கின்றன. அவைகளை வெறும் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. எய்ட்ஸ் குறித்தும் இவ்வாறான சர்ச்சை உண்டு. அது குறித்து ஆராய்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள் பலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொல்லப்பட்டதன் விளைவாக அவர்கள் எழுப்பிய ஐயங்கள் பதிலளிக்கப்படாமலேயே முடங்கிக் கிடக்கின்றன. இந்த வரிசையில் பன்றிக் காய்ச்சலும் சேர்ந்திருக்கிறது. இந்நோய்க் கிருமியின் உட்கூறு பறவைக் காய்ச்சலின் கிருமி(Avian flu), மனிதக் காய்ச்சலின் வகைகளான ஏ, பி கிருமிகள்(Human flu Type A&B), ஆசிய பன்றிக் காய்ச்சலுக்கான கிருமி(Asian swine flu), ஐரோப்யிப் பன்றிக் காய்ச்சல் கிருமி (European swine flu) என பல்வேறு கிருமிகளின் கலப்பாக இந்தக் கிருமி இருப்பது எப்படி? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதாவது ஒரு குறுகிய காலத்தில் நான்கு கண்டங்களில் உருவான கிருமிகளின் கலப்பாக இது இருக்கிறது. ஆகவே, இது ஏன் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட கிருமியாக இருக்கக் கூடாது?

 

இவைகளின் கிளைக் காரணங்கள் பலவாக இருந்தாலும் மூல காரணம் சுகாதாரம், மருத்துவம் என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பது படிப்படியாக விலக்கப்பட்டு சுகாதாரத்துறை தனியார்மயமாவது தான். நோய்களிலிருந்து மக்களைக் காப்பதும், புதிய நோய்கள் ஏற்படாமல் தடுப்பதும், இருக்கும் நோய்களுக்கான காரணங்களைக் களைவதும் அரசின் கடமை. இவைகளை அரசுகள் செய்யத் தயாராக இல்லாத போது செய்ய வைப்பது தான் மக்களின் கடமை. முகமூடி அணிந்து கொண்டாலோ, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொண்டாலோ, மருந்துகள் உட்கொண்டாலோ நோய்களிலிருந்து தப்பித்துவிட முடியாது. ஏனென்றால் மருத்துவம் தனியார்மயமாவதன் நோக்கம் நோய்க் கிருமிகளை உருவாக்குவதோ, அழிப்பதோ, மருத்துவம் செய்வதோ அல்ல. அதைக் காரணமாகக் கொண்டு மக்களின் உழைப்பைத் திருடுவது. இன்று உருவாக்கப்பட்ட கிருமியை முகமூடியைக் கொண்டும், டெட்டாலைக் கொண்டும் தடுத்துவிட முடியும் என்றால், நாளை உருவாக்கப்படும் கிருமி அதையும் தாண்டி உள்ளே நுழையும். அப்போது மக்கள் வேறுவகை சாதனங்களை வாங்க வேண்டியதிருக்கும். என்றால் எது சரியானது? தங்கள் உழைப்பை விற்று புதிது புதிதாய் உபகரணங்களையும் மருந்துகளையும் வாங்கிக் கொண்டே இருப்பதா? தனியார்மயத்துக்கு எதிராக போராடுவதா? இத்தருணத்தை விட்டால் இனி சிந்திப்பதற்குக் கூட நேரமிருக்காது.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்14

 

அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

ஏகத்துவத்தின் விதி ஒரு வரையாவிலக்கணம் 3

 

நண்பர் இஹ்சாஸ் எழுதும் மறுப்புக்கு மறுப்பை எடுத்துக் கொள்வதில்லை எனும் என் முடிவில் மாற்றம் எதுவும் (அவர் களத்துக்கு மீண்டும் வந்து விட்ட போதிலும்) நேரவில்லை. என்றாலும் விதி குறித்த விளக்கங்கள் மீண்டும் மீண்டும் அவசியப்படுகின்றன. அந்த வகையில் நண்பர் இஹ்சாஸ் ஏகத்துவத்தில் (இணையமா? இதழா?) வெளிவந்த கட்டுரையை மூன்று பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். முதல் பகுதி விதி குறித்து முன்னுக்குப் பின் முரணான வசனங்கள் இருக்கின்றன. ஆனால் அதை முரண்பாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார். அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. இரண்டாவது பகுதியில் முஸ்லீம்களாக இருப்பவர்கள் ஏன் விதியை மறுத்து தர்க்கிக்கிறார்கள் என்பதை விளக்கியிருக்கிறார்கள், இதிலும் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. மூன்றாவது பகுதி நாத்திகர்கள் விதியை மறுப்பது, அதில் தர்க்கிப்பது அறிவுடையது தானா? என்பதை அலசியிருக்கிறார்கள். எனவே மூன்றாம் பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்தக் கட்டுரையை ஆக்கியிருக்கிறேன்.

 

முதலில், ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம். விதி என்பது இழப்புகளிலிருந்து மனிதனை ஆற்றுப்படுத்தும் கருவி என்று ஆத்திகர்களும், சுய தேடல்களை மறுத்து மனிதனை முடக்குகிறது என்று நாத்திகர்களும் கூறுகிறார்கள். இதுவரை விதி குறித்து செய்யப்பட்ட விவாதங்கள் இந்த வகைப்பட்டதாக மட்டுமே இருக்கின்றன. விதி என்பது சாராம்சத்தில் மனிதனுக்கு சிந்தனை இருப்பதையே மறுக்கிறது. பதிலெழுதும் யாரும், ஆய்வுக்(!) கட்டுரைத் தொடர் எழுதும் யாரும் இந்த அம்சத்தைக் கணக்கிலெடுக்கவே இல்லை. தொடக்கத்திலிருந்து நான் எழுதிக் கொண்டிருப்பது இதைதான். விதி இருப்பதை நம்புகிறீர்களா? அது முழுமையாக, ஒரே மாதிரியாக நம்புவதாக இருந்தாலும், இரண்டாகப் பிரித்து தனித்தனியாக நம்புவதாக இருந்தாலும் அதன் பொருள் மனிதன் சிந்திக்கும் திறனுடையவன் என்பதை மறுப்பது தான். ஆனால் எந்த மதவாதியாலும் மனிதன் சிந்திக்கிறான் என்பதை மறுக்க முடியாது. அன்று முகம்மது விதி குறித்து விவாதிக்காதீர்கள் என்று பின்வாங்கியதற்கும், இன்று விதி குறித்த தெளிவான அறிவை இறைவன் மனிதனுக்கு வழங்கவில்லை என்று மதவாதிகள் பசப்புவதற்கும் இதுவே காரணம். இதற்காகத்தான் அறிவியல் தொடங்கி தர்க்கவியல் ஈறாக அனைத்தையும் இழுத்து போர்த்திக் கொள்ள துடிக்கிறார்கள்.

 

அறிவு என்பது என்ன? தன் புலன்களின் மூலம் பெறும் அனுபவங்களை தொகுத்து தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்வது தான். சிந்தனை என்பது அறிவின் வலிமையால் கற்பனையான முன்முயற்சிகளை சோதனை செய்து பார்ப்பது. மனிதன் இன்று பெற்றிருக்கும் அனைத்து வகை முன்னேற்றங்களும் அறிவின் வலிமையாலும் சிந்தனையின் வீரியத்தாலும் தான். இந்த வலிமையும், வீரியமும் எந்த எல்லையையும் எட்டிவிடும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியதா? இந்த பேரண்டத்தின் விரிவுடன் மனிதனை ஒப்பு நோக்கினால் எந்த எல்லையையும் அடைவது சாத்தியமா? எனும் கேள்விக்கு சாத்தியமில்லை என்றே பதில் கூற முடியும். அதேநேரம் இது மனிதனின் பலவீனம் அல்ல.

 

இதையே இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். மனிதனின் அறிவு என்பது அவனுடைய தேவைகளோடு பிணைந்தது. எது குறித்த தேவை மனிதனுக்கு இல்லையோ அது குறித்த அறிதல் மனிதனுக்கு அவசியமில்லை. இதுவரை மனிதன் சென்றெத்திய எல்லைகளெல்லாம் அவனுடைய தேவையின் உந்துதல்களாலேயே நிகழ்ந்திருக்கின்றன.  இன்று மனிதன் முயன்று கொண்டிருக்கும் புதிய எல்லைகளுக்கும் தேவையே அடிப்படை. எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதை மனிதன் அறிந்திருக்கிறான். எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதை அறிய முயன்று கொண்டிருக்கிறான். எனவே அவன் அறியாத ஒன்று இருக்குமானால் அதை அறியாதது அவனுடைய பலவீனமல்ல. மாறாக, அவனுக்கும் அவன் தேவைக்கும் இடையிலான இடைவெளி.

 

மனிதன் எதை நோக்கி பயணப்படுகிறான்? எதை அடைய முயல்கிறான்? என்பது தேவையிலிருந்தே கிளைக்க முடியும். ஆனால் தேவை என்பது மனித குலம் முழுமைக்குமான தேவையா? இல்லை. வர்க்கங்களாக பிரிந்து கிடக்கும் உலகம், தனிமனித சிந்தனையினூடாக வர்க்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது. ஒரு வர்க்கத்தின் சிந்தனை இன்னொரு வர்க்கத்திற்கு எதிராகவும் இருக்கிறது.  ஆளும் வர்க்கத்தின் சிந்தனை ஒருபோதும் உழைக்கும் வர்க்கத்திற்கு பலனளிப்பதாய் இருக்க முடியாது. அதன் வடிவம் நீதி முறைமையாக இருந்தாலும், சீர்திருத்தங்களாக இருந்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் மீதான மேலாண்மையையே கோருகிறது. இந்த அடிப்படையில் தான் கடவுள், மதம், விதி போன்றவைகளும் வருகின்றன.

 

இஸ்லாமியர்கள் பொதுவாக வேதத்தில் கூறப்பட்டிருக்கும் விதி நீங்கலாக ஏனைய அனைத்தும் அறிவியல் உண்மைகளாக, காலம் கடந்து நிற்பவைகளாக, மனித அறிவுடன் முரண்படாதவைகளாக இருப்பதால்; முரண்பாடு போல் தோன்றினாலும் விதியை ஏற்றுக் கொள்வது அறிவுடைய செயல் தான் என சாதிக்கின்றனர். ஆனால் வேத வசனங்களுக்கு முஸ்லீம்கள் ஏற்றும் அறிவியலும், காலம் கடந்து நிற்கும் தன்மையும் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை கற்பிதங்களேயன்றி உண்மைகளல்ல. விதியின் மீது எப்படி கேள்விகள் எழுப்பப்படுகிறதோ அது போன்றே அனைத்தின் மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. எனவே, 99 நூற்றுமேனி நிரூபிக்கப்பட்டு விட்ட ஒன்றில் ஒரு நூற்றுமேனியை ஐயுறுவது அறிவுடமையன்று என வாதிப்பது அடிப்படையற்ற அபத்தம்.

 

இது போன்றது தான், அறிவியலைக் கொண்டு முழுமையையும் மனிதன் அறிந்து கொள்ள முடியாது என்பதும்.  இப்பேரண்டத்தில் மனிதன் தன் வல்லமையை விரித்திருப்பது சொற்ப அளவு தான். அவன் அறியாதவைகள் இருக்கின்றனவா என்றால் ஏராளம். இந்த அறியாதவைகளின் பட்டியலில் விதியையும் வைத்துக் கொண்டு அதை ஏற்றுக் கொள் என்பது அறிவியல் ரீதியாக மட்டுமல்ல, தர்க்க ரீதியாகவும் பெரும் ஓட்டையாக இருக்கிறது. விதி பற்றிய அறிவு மனிதனுக்கு வழங்கப்படவில்லை என்றால் மனித வாழ்வில் விதிக்கு என்ன பங்களிப்பு இருக்க முடியும்? எங்கோ பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்று ஒரு கோள் இருக்கிறது என்றால் சாத்தியம், இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அந்தக் கோளில் இருந்து தான் மனிதன் புவியில் பரவினான் என்றால் அதற்கு சான்றுகள் வேண்டும். மனிதன் அனைத்தையும் அறித்து விட்டானா? அவன் அறியாதவைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே அந்தக் கோளில் இருந்துதான் புவிக்கு மனிதன் வந்தான் என்பதை நம்புவது அறிவுக்கு ஏற்புடையது தான் என்று வாதிட்டால் அதில் உண்மைக்கு இடமில்லை. விதி என்பது மனிதனோடு வேறெதையும் விட அதிக நெருக்கம் கொண்டிருக்கிறது. அனைத்தையும் தீர்மானிக்கிறது.  அப்படியான ஒன்றை, அன்றிலிருந்து இன்றுவரை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை, கேள்விகள் கேட்கப்பட்டு வந்திருக்கும் ஒன்றை, இல்லை என்று மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை வெறுமனே நம்பு என்பது எப்படி அறிவுடமையாகும்? எனவே மனிதன் அறியாதவைகளும் இருக்கின்றன என நீட்டி முழக்குவது கடவுளின் இருப்பை தக்கவைப்பதற்கு தேவையானதாக இருக்கிறதேயன்றி, மனிதனின் அறிவை விளக்குவதற்கு தேவையானதாக இல்லை.

 

மனிதன் பலவீனமானவன் என்று மதவாதிகள் கூறுவது அறிவியல் ரீதியில் பொருளற்ற சொல். பலம் பவீனம் என்பது பொருளுடையதாக வேண்டுமென்றால் அது பிரிதொன்றுடன் ஒப்பு நோக்கப்பட்டிருக்க வேண்டும். மனிதன் பலத்தில் புலியை விட பலவீனமானவன். மனிதன் புத்திசாலித்தனத்தில் குரங்கைவிட பலமானவன். மனிதன் இடம்பெயர்வதில் குதிரைவிட பலவீனமானவன், ஆமையைவிட மிக பலமானவன்.  பலமானவன் பலவீனமானவன் என்பதை இந்த அடிப்படையில் தான் கூறமுடியும். இப்போது மதவாதிகள் கூறும் மனிதன் பலவீனமானவன் என்பதை இதனுடன் இணைத்துப் பாருங்கள். எதனுடன் ஒப்பிட்டு மனிதன் பலவீனமானவன் என்கிறார்கள்? கடவுளுடனா? கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்பதே முதன்மையான விவாதமாக இருக்கும் போது, கடவுளுடன் மனிதனை ஒப்பிடுவது அறிவுடமையா? \\\மனிதனின் மிகப் பெரிய பலவீனங்களான மறதி, அசதி, தூக்கம் பைத்தியம், பசி, தாகம், காமம், தேவை, முகஸ்துதி, அவசரம், துக்கம், பொறாமை, தடுமாற்றம், குழப்பம், நோய், முதுமை, மரணம் போன்ற ஏராளமான விஷயங்கள் எப்போதும் மனிதனுடன் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்துமே மனிதனின் அறிவுக்கு எதிரான ஆயுதங்கள். மேலும் அன்பு, கருணை, நன்றி, கோபம் போன்ற ஏராளமான நல்ல பண்புகள் கூட சில நேரங்களில் அவனைப் பலவீனப்படுத்தி விடும்/// இவைகளெல்லாம் மனிதனின் பலவீனங்கள் என்றால் மனிதனின் பலம் தான் என்ன? அல்லது இந்த பலவீனங்கள் இல்லையென்றால் அது மனிதனாக இருக்க முடியுமா? ஆக மனிதன் பலவீனமானவன் என மதவாதிகள் கூறுவது மிகப் பெரிய மோசடி. கடவுளை பிரமாண்டப்படுத்திக் காட்ட செய்யப்படும் செப்படி வித்தை.

 

மனிதனின் அறிவு குறைபாடுடையது எனும் குழப்பம், மனிதன் பலவீனமானவன் எனும் மயக்கம் இவற்றின் மீதுதான் விதிக் கோட்பாடு எனும் மாயத்தை கட்டி எழுப்பியிருக்கிறார்கள் மதவாதிகள்.விதி என்பதை நேரடியாக விளக்க முடியாது. விளக்க முடியாது என்பதை விட விளக்கினால் கடவுள் மாட்டிக் கொள்வார். அதாவது கடவுள் மீதான பற்று மனிதனுக்கு இற்று விடும். அதனால் தான் விதியை விளக்கமுடியாது என்று கூறிவிட்டு மனிதனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிவிட்டு கடவுளை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

 

நடந்து முடிந்துவிட்டால் அது விதி, நடக்க இருப்பது என்றால் நீயாக சிந்தித்து செயல்படு என்று விதியை இரண்டாக பிரிக்க முடியாது. ஏனென்றால் மனிதனுக்குத்தான் கடந்த காலம் எதிர்காலம் என்ற பேதமுண்டு. விதிக்கு எதிர்காலமில்லை, இறந்த காலம் மட்டும் தான். எதிர்காலம் இருக்கிறது என்றாலே அது விதி இல்லை என்றாகிவிடும். விதி என்றால் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்டு விட்டது என்பது தான் பொருள். ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஒன்றை மனிதன் நிகழ் காலத்தில் நின்று கொண்டு சிந்திக்க முடியுமா? இதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல் தான் விதி பற்றிய விளக்கம் மனிதனுக்கு தரப்படவில்லை என்று தப்பித்துக் கொள்கிறார்கள்.

 

அடுத்து சோதனை என்றொரு போலித்தனத்தை வைத்திருக்கிறார்கள். \\\இஸ்லாத்தின் அத்தனை அம்சங்களையும் அல்லாஹ் அறிவுப் பூர்வமாகத் தந்து விட்டு விதியை மட்டும் நமது அறிவுக்குச் சிக்காமல் வைத்திருப்பது நம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காகத் தான். எல்லாவற்றையும் சரியாகவே சொன்ன இறைவன் விதியையும் சரியாகத் தான் சொல்லியிருப்பான் என்று மனிதன் நம்புகிறானா? அல்லது விதியை மாத்திரம் வைத்துக் கொண்டு இஸ்லாத்தின் எல்லா அம்சங்களையும் மறுக்கிறானா? என்று மனிதனை சோதித்துப் பார்க்கக் கூட விதியை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கலாம்/// பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த ஒரு மனிதனின் அறிவைத் தாண்டி குரானிலும் இஸ்லாத்திலும் ஒன்றுமில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும். மனிதன் யாருக்குமே சிக்காமல் இருக்கும் விதி குறித்த அறிவை வைத்து விட்டு விதியை மட்டும் மனிதன் மீது சாட்டியிருக்கும் இறைவன் எதை சோதித்தறிய விரும்புகிறான்? சோதித்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்றால் அவன் எந்த அடிப்படையில் இறைவன்? தன்னையே கேள்விக்குள்ளாக்கும், தன் இருப்பையே மறுக்கும் ஓர் இன்றியமையாத கேள்வியை விள்க்கமின்றி முன்வைத்துத்தான் இறைவன், மனிதனைப் பற்றி அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறான் என்றால்; இந்த மதவாதிகள் இதுகாறும் கூறிவந்த இறைவனுக்கான தகுதிகளை அவர்களே வெடிவைத்து தகர்த்து விடுகிறார்கள் என்பதல்லவா பொருள்.

 

அடுத்து, பத்து கோடி ரூபாய் கதை ஒன்றையும் கூறியிருக்கிறார்கள். என்ன சொல்ல வருகிறார்கள் இதில்? தனக்கு இதுவரை துன்பம் செய்வதைப் பற்றி நினைத்திராத பெற்றோரை ’அட்வான்ஸாக’ நம்புவதுபோல் அத்தனையையும் அறிவுபூர்வமான தந்திருக்கும் இறைவன் மீது விதி விசயத்தில் ‘அட்வான்ஸாக’ நம்புங்கள் என்கிறார்கள். இந்த சொத்தை வாதத்தை வைத்துக் கொண்டுதான் எல்லா இடங்களிலும் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘அட்வான்ஸாக’ நம்புகிறார்களா? ‘தள்ளிப் போட்டு’ நம்புகிறார்களா என்பதல்ல விதி குறித்து எழுப்பிய கேள்வி, ஏன் நம்ப வேண்டும்? என்பதே விதி குறித்து விளக்கமளிக்கும் அத்தனை மதவாதிகளும் செய்வது இதைத்தான், கேள்வி எதுவோ அதற்கு பதில் கூற மறுத்துவிட்டு, எது கேள்வி இல்லையோ அதற்கு வளைத்து வளைத்து விளக்கங்கள் கூறுவது.

 

விதியில் முரண்பாடு இருக்கிறது, ஓர் எல்லைக்குமேல் அதற்கு பதில் கூற முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள் மதவாதிகள். இருந்தாலும் ஏன் விதியை விடாமல் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்? விதியினால் மதங்கள் அல்லது கடவுள் அடையும் பலன் என்ன? விதி தான் கடவுளின் உயிர்.விதி இல்லையென்றால் கடவுள் உயிர்வாழ முடியாது. அதனால் தான் மதவாதிகளுக்கு விதி இன்றியமையாததாக இருக்கிறது.  கடவுளுக்கு முட்டுக் கொடுக்க விரும்புபவர்கள் விதியை நாங்கள் நம்புகிறோம், அதை விவாதிக்க முடியாது என்று வெளிப்படையாக அறிவித்து விடட்டும். பின் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.  ஆனால் அதை ஏற்பது தான் அறிவுடைமை என்று அறிவியல், தர்க்கவியல் விளக்கங்கள் அளிக்கிறார்களே, அங்கு தான் கேள்விகள் எழுகின்றன.

 

நீங்கள் விதியை நம்புகிறீர்களா? மனிதன் சிந்திக்கிறான் என்பதை ஏற்கிறீர்களா? என்பது தான் ஒற்றைக் கேள்வி. இரண்டையும் ஏற்கிறோம் என்றெல்லாம் கூற முடியாது. ஏனென்றால், ஒன்றை ஒன்று மறுக்கிறது. சொல்லுங்கள் நீங்கள் எந்தப் பக்கம்?

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்    

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨   

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩   

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்     
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫    
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6   
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7   
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8    
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9   
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10  
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11 
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12 
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


தண்ணீர்: நாசமாக்கினால் பரிசு, குடித்தால் காசு.

 

சில பத்தாண்டுகளுக்கு முன் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று மக்களிடம் கூறினால் வயிறு வலிக்கச் சிரித்திருப்பார்கள் அல்லது கண் சிவக்க கோபப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று அது தான் யதார்த்தம். இதில் ஒரு அடி மேலே எடுத்து வைத்து ஏழையை மிதித்து இன்னும் கீழே தள்ளுவதற்கு அரசு தயாராகி விட்டது. அதன் அடையாளம் தான் ”தேசிய நீர் கொள்கை 2012” இதன் முதன்மையான ஒரு அம்சம் நிலத்திலிருந்து கிடைக்கும் நீர் அந்த நிலத்தின் உரிமையாளனுக்கு சொந்தமல்ல என்பது. அதாவது ஒரு விவசாயி தன் நிலத்தில் தன் சொந்த செலவில் வெட்டிய கிணற்றிலிருந்து அவன் விருப்பப்படி வயலுக்கு நீர் பாய்ச்ச முடியாது.  அதற்கும் மீட்டர் வைத்து அளந்து காசு கொடுக்க வேண்டும். அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதை தன் ஒட்டுக் கோமணத்தையும் அவிழ்த்துப் போட்டு அம்மணமாகக் காட்டி  ஆண்டுகள் பல கடந்து விட்டன. இந்த வரைவுச் சட்டத்தின் மூலன் தன் கோரைப் பற்களையும் இளித்துக் காட்டியிருக்கிறது.

 

”விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் விவசாயி தேவையின்றி நீரை வீணாக்குகிறான். அதனால் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்கு விலை வைத்தால் தான் தண்ணீர் வீணாவது குறையும் தட்டுப்பாடும் நீங்கும்” இது இறக்குமதி செய்யப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங். ”இந்தியாவில் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம் தண்ணீர் தான். இதை மாற்றியமைக்க வேண்டும்” இது அமெரிக்க கைக்கூலி மாண்டேக் சிங் அலுவாலியா. மக்களைப் பற்றி கவலைப்படாத இந்த சாவி கொடுத்த பொம்மைகள் தான் மண்ணின் புதையல் எப்படி மக்களுக்கு சொந்தமில்லையோ அதேபோல் நிலத்தடி நீரும் அந்த மக்களுக்கு சொந்தமில்லை என்று ஒப்பிக்கின்றன. 

 

மேலோட்டமாகப் பார்த்தால் இது சரியானது போல் சிலருக்கு தோன்றலாம். ஆண்டாண்டு காலமாக குடியிருந்து கொண்டிருந்தாலும் அந்த நிலத்தின் அடியில் கனிம வளம் கண்டுபிடிக்கப்பட்டால் மக்கள் பணத்தில் இயங்கும் இராணுவத்தைக் கொண்டே அந்த மக்களை விரட்டிவிட்டு அந்த கனிம வளத்தை முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு கொடுக்கும். அதாவது மண்ணின் அடியிலிருக்கும் புதையல் அந்த மண்ணை உடைய மக்களுக்கு சொந்தமில்லை, அது முதலாளிகளுக்கே சொந்தம். அதுபோலத்தான் நிலத்தடி நீரும், அது முதலாளிகளுக்கே சொந்தம். இதை சுற்றி வளைத்து சட்டத்தனமான சொற்களால் கூறுவது தான் “தேசிய நீர் கொள்கை 2012”

 

பூமியின் ஒட்டு மொத்த நீர் வளத்தில் 99 நூற்றுமேனி நேரடியாக குடிக்க முடியாத கடல்நீர். மீதமுள்ள நன்னீரில் 96 நூற்றுமேனி துருவங்களில் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கிறது. எஞ்சிய 4 நூற்றுமேனியைத்தான் மொத்த மக்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உலக மக்கட் தொகையுடன் ஒப்பிட்டால் இந்த நீரே உலக மக்கள் அனைவருக்கும் தாராளமாக போதுமானது. என்றால் ஏன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது? ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை முறையாக பராமரிக்காமல் பாழ்படுத்தியது, நிலத்தடி நீரை கணக்கின்றி தனியார் பயன்படுத்த அனுமதித்தது, வரன்முறையின்றி காடுகளை அழித்து மழை பொழிவை கெடுத்தது, முன்னேற்றம் என்ற பெயரில் தொழிற்சாலைக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டி மாசுபடுத்தியது போன்ற காரணங்களினால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இவைகளைச் செய்தது யார்? எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி முதலாளிகளும், அவர்களுக்கு பக்க மேளம் வாசிக்கும் அரசுகளும் தான்.

 

1990களில் செய்யப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளின் முடிவால் அதுவரை அரைகுறையாக செய்துவந்த பாசனத்திற்கு நீர்வழங்குவது நீர்நிலைகளை பராமரிப்பது உள்ளிட்டவைகளை அரசு கைகழுவியது. 1960களின் பிற்பகுதியில் கொண்டுவரப்பட்ட பசுமைப்புரட்சியோ வேதி உரங்களைக் கொட்டி மண்ணை மலடாக்கி விவசாயிகளை தண்ணீர் தாகமெடுத்து அலைய வைத்தது. அதனுடன் நீர்நிலைகள் பராமரிப்பு கைவிடப்பட்டதும், பணப்பயிரை ஊக்குவித்ததனால் அது அதிக தண்ணீரை கோரியதும் சேர்ந்துகொள்ள வேறு வழியின்றி கினறுகளையும் ஆழ்துளைக் கிணறுகளையும் விவசாயிகள் நாடினர். இப்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது என்றதும் அரசும் அறிவுத் துறையினரும் ஒருசேர விவசாயிகளை நோக்கி கை நீட்டுகின்றனர் இரக்கமின்றி.

 

தண்ணீர் தனியார்மயம் என்ற பெயரில் ஆறுகளை தனியாருக்கு தாரை வார்த்தது. அவர்கள் புட்டிகளில் அடைத்து, வறட்சியைப் பயன்படுத்தி விற்பனையை எகிறச்செய்து, இராட்சத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் புவியின் அடியாளம் வரை நிலத்தடி நீரை துரத்திச் சென்றது யார், விவசாயிகளா? முதலாளிகளா?

 

தொழிற்துறை முன்னேற்றம் என்ற பெயரில் ஆலைக் கழிவுகளை ஆறுகளிலும் நீர்நிலைகளிலும் கொட்டி அவைகளை நஞ்சாக்கியது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

புதுப்புது ஆலைகளையும் கேளிக்கை விடுதிகளையும் கட்டுவதற்கென்று காடுகளை வெட்டியழித்து மழையளவை குறைத்தது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

ரியல் எஸ்டேட் பெருக்கத்திற்காக பல்லாயிரக் கணக்கான ஏரிகளையும்,  குளங்களையும் காணாமல் போக்கி அவற்றில் காங்கிரீட் காடுகளை உருவாக்கியது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

எந்திரக் கரங்களால் சுரண்டிச் சுரண்டி மணலள்ளி ஆற்றங்கரைகளை புண்களாக்கி ஆறுகளை வறண்டு போகச் செய்தது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

விவசாயி தண்ணீரை நிலத்தில் தான் பாய்ச்சினான். முதலாளிகளோ தன் தனிப்பட்ட லாபத்திற்காக எல்லா நீர் நிலைகளையும் அழித்து நாசமாக்கினார்கள்.  நாசமாகிய முதலாளிகளின் கைகளிலேயே நீர்வளத்தை தூக்கிக் கொடுத்து மக்களைச் சுரண்ட வழி செய்து கொடுப்பது தான் தேசிய நீர் கொள்கை. ஏற்கனவே குடிநீர் பகிர்வில் தனியாரை நுழைத்து, புட்டிகளில் அடைத்து விற்கப்படுவது தான் தூய்மையானது ஏனைய மூலங்களிலிருந்து கிடைப்பது அனைத்தும் தூய்மையற்றது என்று அவதூறு பிரச்சாரம் செய்து கோடிகளில் குளித்துவருகிறார்கள் முதலாளிகள். தற்போது எல்லாவகையிலும் தண்ணீர் ஒரு வியாபாரப் பண்டமே என வெளிப்படையாக அறிவித்து, இருப்பவன் காசு கொடுத்துக் குடி இல்லாதவன் தொண்டை வறண்டு செத்துப்போ என்று அந்த முதலாளிகளுக்கு மேலும் வசதி செய்து கொடுப்பது தான் தேசிய நீர் கொள்கை.

 

மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு முற்றாக விலக வேண்டும். அனைத்து வகைகளிலும் தண்ணீருக்காக வழங்கப்படும் மானியங்களை ரத்து செய்ய வேண்டும். இதற்கு மாற்றாக சமூகக் குழுக்களுக்கும், தனியார் துறையினருக்கும் அவற்றை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் தேவையின்றி தண்ணீரை வீணாக்குவது குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்பது தான் தேசிய நீர் கொள்கை வரைவுத் திட்டத்தின் சாராம்சம். அதாவது, குடிக்கும் நீரில் சிறு குழந்தை கையை நுழைத்தாலே அடித்துத் தடுக்கும் மக்கள் தண்ணீரை வீணாக்குகிறார்கள். அதை சரி செய்ய, புவியின் நீர் வளங்களையெல்லாம் நாசமாக்கிய முதலாளிகளின் கையில் கொடுக்க வேண்டும். பின்னும் அந்த அறிக்கை கூறுகிறது, மாநில, உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று. இதன் பொருள் இருக்கும் தண்ணீர் வளங்களையெல்லாம் முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு, மக்களே தண்ணீர் தாரளமாக இருக்கிறது தேவைப்படும் போது காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அந்த முதலாளிகளுக்கு விளம்பரம் செய்வது மாநில உள்ளாட்சி அமைப்புகளின் வேலை. அல்லது முதலாளிகளிடம் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி அதை மக்களுக்கு கொடுக்க வேண்டும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலிருந்து அரசு விலகி, தனியாரிடமிருந்து வாங்கி மக்களுக்கு கொடுக்கிறோம் எனும் அரசின் கொள்கையால் இன்று மக்கள் மின்வெட்டினாலும் மின் கட்டண உயர்வினாலும் அவதியுற்று வருகிறார்கள். இதே போன்ற நிலையில் தண்ணீரையும் தள்ளுவதற்குத்தான் துடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

 

விவசாயத்தை வாழவைப்பதற்கு இலவச மின்சாரம் வழங்கிக் கொண்டிருப்பதாகவும், அதனால் அதிக நிதிச் சுமை ஏற்படுவதாகவும், அதை நீக்கினால் தான் நாடு முன்னேறும் என்றும் அரசுகள் பிதற்றிக் கொண்டிருக்கின்றன. மின்சாரம் கண்டு பிடிப்பதற்கு முன் விவசாயம் நடைபெறவில்லையா? விவசாயத்திற்கு பாசன வசதி செய்து தருவது அரசின் கடமை. அந்த அடிப்படையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி, பராமரித்து, பாதுகாத்து வந்த ஆறு, ஏரி,குளங்களை முதலாளிகளின் லாபத்துக்காக நாசமாக்கி விட்டு பாசனச் செலவுகளை தனிப்பட்ட விவசாயியின் தலையில் கட்டி, அதை மறைத்து ஏய்ப்பதற்குத்தான் இலவச மின்சாரம் என்றார்கள். இப்போது அதையும் ரத்து செய்வதற்கு நாட்டு முன்னேற்றம் என்று பசப்புகிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

 

இதை தடுப்பதற்கு வீதியில் இறங்கி போராடுவது அல்லது நாக்கு உலர்ந்து செத்துப்போவது என்ற இரண்டே வழிகள் தான் மக்கள் முன் இருக்கிறது. எந்த வழியைதேர்ந்தெடுக்கப் போகிறோம் நாம்?

தொடர்புடைய பதிவுகள்:

காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்

திருப்பூர் மிரட்டும் சாயப்பட்டரை முதலாளிகள்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 23

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 23

 

“தனி நாட்டில் சோசலிசம்” என்பது டிராட்ஸ்கியமாகும்

 

“தனிநாட்டில் சோசலிசம்” கட்டப்போவதாக என்றும் ஸ்டாலின் ஒரு நாளும் கூறியது கிடையாது. ஆனால் டிராட்ஸ்கியம் இதைக் கூறிதான் இன்று வரை பிழைக்கின்றது. இதையே ஸ்டாலினிசம் என்று முத்திரை குத்துகின்றது. இதன் அரசியல் உள்ளடக்கம் என்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்வதன் மூலம், டிராட்ஸ்கியத்தின் அப்பட்டமான சேறடிப்புக்களையும், அரசியல் வங்குரோத்தையும் கண்டு கொள்ள முடியும். ஸ்டாலினை தூற்றி டிராட்ஸ்கியால் முத்திரை குத்தப்பட்ட “தனிநாட்டில் சோசலிசம்” என்பதையே ஸ்டாலின் எப்போதும் எதிர்த்து வந்தவர். சொந்த நாட்டிலும், உலகளவிலும் தலைமை பத்திரத்தை எற்ற ஸ்டாலின் அதை விளக்கும் போது, மார்க்சியத்தின் இயங்கியல் பண்பை மிகச் சிறப்பாக வெளிக் கொண்டுவந்தவர். ஸ்டாலின் டிராட்ஸ்கியின் கண்டுபிடிப்பான “தனிநாட்டில் சோசலிசம்” என்பதை எதிர்த்து தனியான ஒரு நாட்டில் உள்ள சக்திகளை மட்டும் கொண்டு, சோசலித்தைத் தொழிலாளி வர்க்கத்தால் இறுதியாக உறுதிப்படுத்த முடியும் என்றோ, எதிரிகள் மீண்டும் தனது நாட்டில் நுழைந்து குறுக்கிட்டு அதன் விளைவாக முதலாளித்துவத்தை திரும்பவும் ஸ்தாபிக்க இனி முயற்சிக்க மாட்டார்கள் என்று உத்தரவாதம் உண்டு என்றோ அhத்மாகுமா? அப்படி அவர்கள் முயற்சித்தால், அதை சமாளிக்ககூடிய அளவுக்கு சோசலிசத்தை உறுதிப்படுத்தி விட்டோம் என்ற சொல்வதற்கு முடியும் என்று அர்த்தமாகுமா? இல்லை. அப்படி அர்த்தமில்லை. அப்படி அர்த்தம் கொள்வதற்க்கு முன், இன்னும் குறைந்த பட்சம் பல நாடுகளில் புரட்சி வெற்றி பெறவேண்டியது அவசியம்; ஆகவே வெற்றி பெற்ற நாட்டில் புரட்சியானது, மற்ற நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றியைத் துரிதப்படுத்தவதற்குத் தான் ஒரு உதவி புரிபவனாக, ஒரு கருவியாகத் தன்னை பாவிக்க வேண்டும். தனியே தன்னோடு நின்று கொள்ளும் ஒரு பொருளாகத் தன்னைக் கருதிக் கொள்ளக் கூடாது. தனியே நின்று தனக்கு வேண்டியதனைத்தையும் தானே சாதித்துக் கொள்ளக் கூடிய ஒன்றாகக் கருதிவிடக் கூடாது” என்றார். சொந்த நாட்டில் தொடரும் வர்க்கப் போராட்டம் என்ற புரட்சிகர பணி, சர்வதேசப் புரட்சி என்ற ஒரேயோரு குறிக்கோளை கடந்து எதையும் ஸ்டாலின் முன்னெடுக்கவில்லை, முன்வைக்கவில்லை. அவர் லெனினிய பாதையில் வர்க்கப் போராட்டத்தையே ஆணையில் வைத்தார்.

 

லெனின் சோசலிசம் பற்றி கூறும் போது இந்த சகாப்தம் முடிவுறும் வரையிலும் நிச்சயமாக சுரண்டலாளர்கள் மீண்டும் நிலைநாட்டுதல் எனம் நம்பிக்கையில் திளைக்கிறார்கள். மேலும் இந்த நம்பிக்கை மீண்டும் நிலை நாட்டுதலுக்கான முயற்சியாக மாற்றப்படுகிறது” என்றார். இவை லெனினின் கற்பனைகள் அல்ல. மீண்டும் சுரண்டலை நிலைநாட்டுதல் என்பது சோவியத் யூனியனில் எங்கிருந்து எப்படி உருவாகின்றது என்பதை ஆய்வு செய்யவும், விளக்கவும் எந்த ஸ்டாலின் எதிர்ப்பாளரும் முன்வருவதில்லை. இது பற்றி மாவோ சொந்த அனுபவத்தில் லெனினியத்தின் அடிப்படையை மீள உறுதி செய்தார். சீனத்தில் உடமை முறையைப் பொருத்தவரை சோசலிச மாற்றம் பிரதானமாக முடிந்து விட்டிருப்பினும்… தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபுத்துவம் மற்றும் தரகு முதலாளித்துவ வர்க்கங்களின் மிச்ச சொச்சங்கள் இன்னமும் இருக்கின்றன. இன்னமும் முதலாளித்துவ வர்க்கம் இருக்கிறது. குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை மறு வார்ப்பு செய்வது இப்பொழுது தான் தொடங்கியிருக்கின்றது” என்று எச்சரிக்கின்றார். தொடர்ந்து அவர் சொந்த நாட்டில் இந்த அபாயத்தை எதிர்கொண்டர். அப்போது மவோ பாட்டாளி வர்க்கத்துக்கும் வெவ்வேறு அரசியல் சக்திகளுகுமிடையிலான வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்குமிடையிலான சித்தாந்தத் துறையிலான வர்க்கப் போராட்டம் நீண்ட நெடியதாகவும், சித்திரவதை மிக்கதாகவும் நீடிக்கும் சமயங்களில் மேலும் கூர்மையானதாகவும் மாறக்கூடும்” என்ற எச்சரிக்கையை செய்து கட்சியின் கவனத்தை அதன் பால் திருப்புகிறார். மீண்டும் சோவியத் அனுபவத்தை சரியாக தொகுத்தளித்த மாவோ 1963 இல் இந்த எச்சரிக்கையை துல்லியமாக முன்வைக்கின்றார். வர்க்கப் போராட்டத்தையும் வர்க்கங்களையும் மறந்து விட்டால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறந்து விட்டால், பிறகு நீண்ட காலம் பிடிக்காது, சில ஆண்டுகளில் மட்டுமே அல்லது ஒரு பத்து அல்லது அதிகம் போனால் சில பத்து ஆண்டுகளக்கு முன்பே எதிர்புரட்சி மீட்பு தேசிய அளவில் நடந்துவிடும். மார்க்சிய லெனினியக் கட்சி சந்தேகத்துக்கிடமின்றி ஒரு திரிபுவாதக் கட்சியாக அல்லது ஒரு பாசிசக் கட்சியாக மாறிவிடும். சீனத்தின் மொத்த நிறமும் மாறிவிடும். தோழர்களே இது பற்றி சிந்தியுங்கள். இது எவ்வளவு அபாயகரமான நிலைமையாக இருக்கும்” என்பதை கூறிவிடும் ஒரு வர்க்க சமூக அமைப்பு பற்றி தீர்க்கதரிசியாகி விடுகிறார். ஆம், சோவியத் முதல் சீனா வரை இது நடந்தேறியது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தில் வர்க்கப் போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டியதை இது செம்மையாக உறுதியாக கோருகின்றது. இந்த வர்க்கப் போராட்டத்தையே டிராட்ஸ்கி தனிநாட்டு சோசலிசம் என்று கூறி நிராகரித்தான். இதற்கு மாறாக முதலாளித்துவ மீட்சியை கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் கோரினான். உள்நாட்டில் வர்க்கப் போராட்டத்தை நடத்தக் கூடாது என்றான். இதை அவன் “தனிநாட்டு சோசலிசம்” என்றான். ரஷ்யாவில் ஸ்டாலினுக்கு பின்னும், சீனாவில் மாவோக்கு பின்னும் டிராட்ஸ்கிய வழியில் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டதால் தான் முதலாளித்துவ மீட்சியாக அரங்கேறியது.

 

லெனின் பாட்டாளி வர்க்க ஆட்சி பற்றி கூறும் போது முதன் முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வாகை சூடும்” என்றார். இந்தக் கூற்று எந்தவகையிலும் சர்வதேச வர்க்கப் புரட்சியை மறுக்கவில்லை. முதலாளித்துவ நாடுகள் முரணற்ற முதலாளித்துவ புரட்சியையும், அதன் உள்ளார்ந்த சமூகக் கூறுகளையும் சமூக மயமாக்கும் போது பாட்டாளி வர்க்க புரட்சி பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் அல்லது ஒன்றன் பின் ஒன்றாக நாடக்கும் வாய்ப்பு நிகழ்ச்சி நிரலில் இருந்தது. ஆனால் முதலாளித்துவ புரட்சி முரணற்ற ஜனநாயகத்தை கைவிட்டு சொந்த புரட்சிக்கே துரோகமிழைத்த நிலையில், முதலாளித்துவம் பண்பியல் பாய்ச்சல்களை கண்டது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது எகாதிபத்தியமாக வளர்ச்சியுற்றது. உலகம் எற்றத் தாழ்வான வளர்ச்சியிலும், சமூக அமைப்பிலும் கூட பாரிய இடைவெளிகளை கண்டது. முதலாம் உலக யுத்தத்தின் முன்பு சில விரல்விட்டு எண்ணக் கூடிய முதலாளித்துவ நாடுகள், உலகின் மிகப் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இதனால் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடக்கும் பாட்டாளி வர்க்க புரட்சி உலகம் தழுவிய புரட்சிக்குள் நகர்த்திவிடும் பொதுவான கூறுகள் காணப்பட்டது. இரண்டாவது உலக யுத்தம் தொடங்கிய போது உலக நிலப்பரப்பில் 59.9 சதவீதமும், மக்கள் தொகையில் 63.6 சதவீதமானோர் ஏகாதிபத்தியத்தின் நேரடி காலனித்துவ கட்டுபாட்டில் வாழ்ந்தனர். பிரிட்டன் தனது சொந்த நாட்டை விட 73 மடங்கும், பிரான்ஸ் தனது சொந்த நாட்டை விட 20 மடங்கு நிலப்பரப்பை சொந்த காலனியாக கொண்டிருந்தன. மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்தில் மிகச் சிலவே சுதந்திர நாடுகளாக இருந்த நிலையில், சுதந்திர நாடுகளில் நடக்கும் புரட்சி முழு உலகையே மாற்றிவிடும் நிலையில் இருந்தது. ஆனால் இந்த சுதந்திர முதலாளித்துவ நாடுகள் காலனிகளில் எற்றத் தாழ்வான பிளவை பேணியதுடன், பிரித்தாளும் தந்திரங்களையும் ஏகாதிபத்திய கொள்கையையும் நடைமுறைப்படுத்தின. முதலாளித்துவம் தன் நிலைக்கு எற்ப மாற்றி புரட்சிகளை ஒடுக்கி, உலகை எற்றத் தாழ்வான சமூக அமைப்பாக உருவாக்கின. தாழ்வான சமூகத்தில் இருந்து உறுஞ்சி எடுத்ததை எற்றமாக வாழ்ந்த சமூகத்துக்கு லஞ்சம் கொடுத்தன் மூலம், பாட்டாளி வர்க்க புரட்சியை பின்னுக்கு நகர்த்தியதுடன் புரட்சியின் முன்னைய வரையறைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இந்த நிலையில் தான் லெனின் புரட்சி முதன் முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வாகை சூடும்” என்றார். சமூக நிலைமைகளின் எற்றத் தாழ்வான வளர்ச்சியில் இது தவிர்க்க முடியாது என்பதை எடுத்துக் காட்டினார். இதை டிராட்ஸ்கிகள் மறுத்தனர்.   

 

ஒரு நாட்டில் அதுவும் ரஷ்யாவில் புரட்சி நடை பெற்ற நிலையில் லெனின் புரட்சிக்கும் சீர்திருத்தத்திற்கும் இடையேயுள்ள சம்பந்ததைப்பற்றி சரியாகவும் துல்லியமாகவும் மார்க்சியம் மட்டுமே வரையறுத்திருக்கிறது. எனினும், இந்த சம்பவத்தை ஒரே ஒரு நிலையிலிருந்து அதாவது, ஒரு நாட்டிலாயினும் சரி, ஒரளவுக்காவது நிரந்தரமானதாயும், நீடித்தாயும் இருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிகிட்டியதற்கு முன்னால் நிலவிய நிலைமைகளிலிருந்து தான் மார்க்சுக்குப் பார்க்க முடிந்தது. அந்த நிலைமைகளில், சரியான சம்பந்தத்தின் அடிப்படை இதுதான். தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான வர்க்க போராட்டத்தில் உண்டாகும் உப விளைவுகளே சீர்திருத்தங்கள்… தனியொரு நாட்டில் மட்டுமே இருந்த போதிலும், தொழிலாளி வர்க்கத்திற்கு வெற்றி கிட்டிய பிறகு சீர்திருத்தங்களுக்கும் புரட்சிக்குமுள்ள சம்பந்ததத்தில் ஒரு புதிய விஷயம் புகுகிறது. கோட்பாட்டு ரீதியில் பார்த்தால், அது பழையது தான். ஆனால் உருவத்தில் ஒரு மாறுதல் எற்படுகின்றது. இதை மார்க்சுக்கு முன் கூட்டியே அறிய வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால் இதை மார்க்சிய தத்துவத்தையும் அரசியலையும் கொண்டு மட்டும் இப்போது புரிந்து கொள்ள முடியும். …தொழிலாளி வர்க்கதின் வெற்றிக்கு பிறகு, (சர்வதேசரீதியில் சீர்திருத்தங்கள் இன்னம் “உபபொருட்களாகவே” இருக்கிற போது), வெற்றி ஏற்பட்ட நாட்டிற்கு ஏற்கனவே கடைசி மூச்சுவரை சக்தியை, முயற்சியை உபயோகித்த பிறகு மேலும் புரட்சிகரமாக மாறுதல்களை உண்டாக்க சக்தி போதாது என்று நன்கு தெரிகிற சமயங்களில், அவகாசத்தைப் பெறுவதற்கு அவசியமானவையாகவும், நியாமானவையாகவும் சீர்திருத்தங்கள் இருக்கின்றன. வெற்றியானது அவ்வளவு பலத்தை சேகரித்துத் தந்துள்ள காரணத்தால், நிர்ப்பந்தமாக  பின்வாங்கும் போது கூட பொருள் துறையிலும் தார்மீகத் துறையிலும் தாக்குப்பிடிக்க முடியும்” என்றார் லெனின். இதையே தனி நாட்டில் சோசலிசம் என்று டிராட்ஸ்கியம் மறுத்தது. லெனின் சர்வதேச புரட்சி தொடர்பாக கூறும் போது அநேக நாடுகளில் ஒரே சமயத்தில் புரட்சி நடப்பது என்பது, அபூர்வமாக நடக்கக்கூடியது. ஒரு நாட்டில் மட்டும் நடப்பதுதான் சாதாரணமாக நிகழக்கூடியது. ஆகவே ஒரு நாட்டில் மட்டும் சுரண்டல்காரர்கள் முறியடிக்கப்பட்டால், அவர்கள் முறியடிக்கப்பட்ட பிறகும் கூட சுரண்டப்பட்டவர்களை விட அதிக பலமுடையவர்களாகவே இருக்கிறார்கள்” என்றார். ஆனால் “தனிநாட்டில் சோசலிசம்” என்ற டிராட்ஸ்கிய அவதூறுகள் இப்படி லெனினுக்கு எதிராகவே புனையப்பட்டன. சர்வதேச புரட்சி இன்றி ஒரு நாட்டில் புரட்சியின் வெற்றிகளை பாதுகாக்கவும் போராடவும் கூடாது என்பதே டிராட்ஸ்கியத்தின் அடிப்படை அரசியல் உள்ளடக்கமாகும். ஒரு நாட்டில் புரட்சி நடந்த பின்பும், பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும், உள் நாட்டில் தொடர்ந்தும் சுரண்டும் வர்க்கம் தான் பலமானதாக நீடிக்கின்றது. அந்த வர்க்கம் உள்ளிருந்தே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது. டிராட்ஸ்கியம் முதல் தெங் வரை இதையே பிரதிநிதித்துவப்படுத்தினர். டிராட்ஸ்கியத்தை மறுத்த லெனின், ஒரு நாட்டில் நடந்த புரட்சி தொடர்பாக கூறும் போது, நமது முன்னறிவிப்புகள் எளிதாகவும் விரைவாகவும் நேரடியாகவும் நனவாகவில்லை என்றாலும், நாம் முக்கியமான விசயத்தைச் சாதித்துள்ளோம் என்ற அளவில் அவை நிறைவுபெற்றுள்ளன. உலக சோசலிசப் புரட்சி தாமதப்படும் பட்சத்திலும் கூட, பாட்டாளி வர்க்க ஆட்சி, சோவியத் குடியாரசு ஆகியவற்றைப் பாராமரிப்பது சாத்தியமாகியுள்ளது” என்று பிரகடனம் செய்தார். இதை பாதுகாப்பது தொடர்பாகவும், சோசலிச புரட்சியை தொடர்வது பற்றி லெனின் கூறும் போது முதலாளியச் சுற்றிவளைப்புக்கு நடுவே ஒரு சோசலிசக் குடியரசு நிலவுவது என்பது சிந்தித்துப் பார்க்கக் கூடியதுதானா? அரசியல், இராணுவ அம்சங்களில் இருந்து பார்த்தால் சிந்தித்துப் பார்க்க முடியாததாகத் தோன்றியது. ஆனால் அரசியல் வகையில் அதைச் சிந்தித்துப் பார்க்க முடியும் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு உண்மை” என்றார். இதையே ஸ்டாலின் இராணுவத்துறையிலும் சிந்தித்துப் பார்க்க முடியும் என்ற நிலைக்கு, நாட்டை உயர்த்தி மெய்பித்தார். லெனின் அரசியல் துறையில் பாதுகாக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டிய அதே நேரம் ஒரு புரட்சியிலுள்ள சிக்கல்களைப் பற்றி ஒவ்வொருவரும் அறிவர். அது ஒரு நாட்டில் ஒளிமயமான வெற்றியுடன் துவங்கி, வேதனைமிக்க காலகட்டங்களின் ஊடே செல்லலாம். ஏனெனின் ஓர் உலக அளவில்தான் இறுதி வெற்றி சாத்தியம். அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளிகளின் கூட்டு முயற்ச்சியின் மூலமே இது சாத்தியம்” என்றார். இங்கு இறுதி வெற்றி பற்றி லெனின் குறிப்பிடும் போது, உலக பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி வரை போராட வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தகின்றார். அதுவரை வேதனை மிக்க கடுமையான வர்க்க நெருக்கடிகளை உள்நாட்டிலும் வெளிநாட்டில் இருந்து பாட்டாளி வர்க்கம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதை எச்சரித்தார். லெனின் அனுமதித்தது போல் அரசியல் துறையலும், பின்னால் இராணுவத் துறையிலும் ஒரு சோசலிச நாட்டை ஏகாதிபத்தியத்திடம் இருந்து பாதுகாக்க முடிந்தது. இது டிராட்ஸ்கிய அரசியலுக்கு முற்றுமுழுதாக முரணான லெனினிய வரையறையாகும். டிராட்ஸ்கியத்தை மூடிமறைக்கும் உள்நாட்டு எதிரிகளிடம் இருந்தே, ஒரு நாட்டில் நடக்கும் புரட்சியை பாதுகாக்க முடியாத நிலை உருவானது. மாவோ இது பற்றிய தனது எச்சரிக்கையில் துப்பாக்கியுடன் உள்ள எதிரிகளைத் துடைத்தொழித்த பிறகு இன்னமும் துப்பாக்கி இல்லாத எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கெதிராக ஜீவமரணப் போராட்டத்தை நடத்தியே தீர்வார்கள்; இவ்வெதிரிகளை எளிதாக நாம் எப்பொழுதும் கருதக் கூடாது. இந்த வகையில் பிரச்சினையைப் புரிந்த கொண்டு தருணத்திற்கேற்றவாறு நிற்கவில்லையானால், நாம் பாரதூரமான பிழைகளை இழைக்க நேரிடும்” என்றார். இதை சரியாக கையாளாத எல்லா நிலையிலும், உள்நாட்டில் இருந்தே எதிர்புரட்சியான சுரண்டும் வர்க்கம் ஆட்சிக்கு வருவது தவிர்க்க முடியாது. 1949 புரட்சியில் வெற்றி பெற்றவுடனேயே மாவோ இந்த எச்சரிக்கையை விடத் தயங்கவில்லை. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் உள் நாட்டின் பிரதான முரண்பாடு பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான முரண்பாடு” என்றார். போராட்டத்தின் குவி மையம் அரசு அதிகாரத்துக்கான பிரச்சனையில் தங்கியிருக்கின்றது என்றார். மிகவும் நுட்பமான இந்த தீர்க்க தரிசனமிக்க கருத்துகளை, சமுதாயத்தின் கடுமையாக தொடந்தும் நீடித்த வர்க்க முரண்பாட்டில் இருந்து தான் எடுத்தாளுகின்றார்.

 

ஒரு நாட்டில் புரட்சி நடந்தாலும், அதை வெளிநாட்டு ஆக்கிரமிப்பில் இருந்து பாட்டாளி வர்க்கத் தலைமையால் பாதுகாப்பது ஒரு நீடித்த காலத்துக்கு சாத்தியமானது. ஆனால் உள்நாட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதே மிக கடினமானதாக இருப்பதை சென்ற நூற்றாண்டின் பல புரட்சிகள் தொடர்ச்சியாக நிறுவியுள்ளன. ஏன் மனித வராலாற்றில் பல முற்போக்கான போராட்டங்களுக்கும் இதுவே நடந்தன. புரட்சி ஒரு நாட்டில் நடந்த பின்பு, அதன் பாதுகாப்பு தொடர்பாக மற்றைய நாட்டின் புரட்சி பற்றி எடுத்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அனுபவம் சார்ந்த ஆய்வுரைகள், உள்நாட்டில் இதற்கான முயற்சியை பற்றிய எச்சரிக்கையை மிககுறைவாகவே மதிப்பிடப்பட்டன. இது பின்னால் முக்கியத்துவமுடைய விடயமாகியது. இங்கு ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியின் வெற்றி என்பது, எகாதிபத்தியத்துடான இறுதி போர் இன்றி நடக்க முடியாது என்ற உண்மை, எகாதிபத்திய அமைப்பில் அதன் நீடிப்பை நீண்ட காலத்துக்கு அதை உறுதி செய்கிறது. ஆனால் உள் நாட்டில் கட்சிக்குள் உருவாகும் எதிரி வர்க்க பிரதிநிதித்துவம், ஆட்சிக் கவிழ்ப்புகான கூறை அடிப்படையில் கொண்டே புரட்சிகள் நடக்கின்றன. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான பல்வேறு வர்க்கங்களின் கூட்டாக புரட்சி உருவாகும் போது, உள் நாட்டில் தொடரும் வர்க்கப் போராட்டத்தில் எதிரிகள் பலம்பெற்ற அணியாக கட்சியில் நீடிக்கின்ற நிலைமை தான் புரட்சிக்கு எதிரானதாக, புரட்சிகர நீடிப்பை இல்லாது ஒழிக்கின்றது.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள்: 2023 ல் ஏழைகளே இருக்க மாட்டார்களாம்

இந்தியாவில் அரசவைக் கோமாளி என்று ஒருவர் இருந்தார். போகுமிடமெல்லாம் தூங்குங்கள் கனவு காணுங்கள் என்று கூவிக் கொண்டிருப்பது தான் அவர் வேலை. மார்டின் லூதர் கனவு கண்டார்,விகடர் ஹியூகோ கனவு கண்டார் என்று கூறிக் கொண்டு தமிழ் நாட்டிலும் ஒருவர் தான் கனவு கண்டதாய் தொலைநோக்கு திட்டம் 2023 என்று அறிவித்திருக்கிறார். அதாவது ஆசிய வளர்ச்சி வங்கி போட்டுக் கொடுத்த திட்டத்திற்கு வாயசைத்திருக்கிறார்.

 

கிராமப் பகுதிகளில் கதை ஒன்று கூறுவார்கள். களத்து மேட்டில் அப்பாவும் மகனும் பேசிக் கொள்கிறார்கள். “யப்போவ், அதோ அந்த வட்டக் கெணறும் வயலும் நமக்கு இருந்தா எப்படி இருக்கும்” அவன் தலையில் தட்டிய அப்பன், “எலே!மூதி நெனக்கிறது தான் நெனக்க இந்த வயக்காடு பூரா நமக்கு இருந்தா எப்படி இருக்கும்னு நெனயேண்டா கூமுட்டைக்குப் பிறந்தவனே” என்றானாம். அப்போது வீசிய காற்று ஒட்டியிருந்த கோமணத்தையும் உருவிக் கொண்டு பறந்ததாம். இந்தியாவில் தீட்டப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இப்படி கனவு காண வைத்து கோமணத்தை உருவும் வேலையை கச்சிதமாக செய்திருக்கின்றன. விவசாயத்தில் மறுமலர்ச்சி காண கொண்டு வரப்பட்ட ’பசுமைப் புரட்சி’ திட்டம் ‘காட்’டுடன் கை கோர்த்துக் கொண்டு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிச் சென்றிருக்கிறது.

 

என்ன இருக்கிறது 2023 தொலை நோக்கில்? தனியார் மயம் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை. தனியார்மயம் தீவிரப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதை மறைப்பதற்கு சில வஜனங்களை அதில் சேர்த்திருக்கிறார்கள். தனிநபர் சராசரி வருமானம் ஆறுமடங்கு உயரும், எல்லோருக்கும் அடிப்படை வசதிகள், 25 லட்சம் வீடுகள், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ பாதுகாப்பு, உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை தற்போதைவிட 50 நூற்றுமேனி அதிகரிப்பது, தரமான சாலைகள் போன்றவை அந்த வஜனங்களில் சில. இதற்கு 15 லட்சம் கோடி முதலீடுகள் தேவை என மதிப்பிட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் ஒரு ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடு தோராயமாக ஒரு லட்சம் கோடி. வேறு எதற்கும் ஒதுக்காமல் அப்படியே கொட்டினாலும் தொலை நோக்குத் தொட்டி நிரம்பாது.

 

நடப்பு வரவு செலவு திட்டத்தில் ஆயிரம் கோடி தொலை நோக்கிற்காக ஒதுக்கியிருக்கிறார்கள். இனி முதலீடு செய்யவிருக்கும் முதலாளிகளுக்காக சலுகைகளை மூட்டை கட்டி வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டியது தான். ”இத்திட்டங்கள் நிறைவு பெறும் வரையில் நான் ஓய மாட்டேன், இடையில் நிறுத்த மாட்டேன் என்று மக்களிடம் நான் உறுதி கூறுகிறேன்” என கனவு திட்டத்தை அறிவிக்கும் போது ஜெயா பேசியிருக்கிறார். எந்த திட்டத்தை அறிவிக்கும் போது மக்களிடம் இது போல் உறுதி கூறியிருக்கிறார்? இதை ஏன் மக்களிடம் உறுதியாக கூற வேண்டும்? மக்களின் வளர்ச்சி என்றால் அதன் பொருள் முதலாளிகளின் வளர்ச்சி, இடையில் நிறுத்த மாட்டேன் முதலீடு செய்யுங்கள் என்று முதலாளிகளிடம் கூறியிருக்கிறார் என்பது தான் இதன் பொருள். முதலாளிகள் லட்சக்கணக்கான கோடிகளை முதலீடு செய்தால் அதில் மக்களின் நலன் துளியும் இருக்காது என்பதற்கு சான்றுகளும் வேண்டுமோ!

 

1994 ல் அரசால் பெருகிவரும் மின் தேவையை ஈடுகட்ட முடியவில்லை என்று தனியாரிடம் மின்சாரத்தை பெற்றார்கள். மொத்த மின்சாரத் தேவையில் 0.4 நூற்றுமேனி மட்டுமே அன்று தனியாரிடம் பெறப்பட்டது. அன்று மின் வாரியம் மிகுந்த லாபமீட்டிக் கொண்டிருந்தது. இன்று 35 நூற்றுமேனி மின்சாரம் தனியாரிடமிருந்து பெறப்படுகிறது. ஆனால் மின்வாரியமோ 56 ஆயிரம் கோடி கடனில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவைத்தான் மின்வெட்டாகவும், மின் கட்டண உயர்வாகவும் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  உண்மை இப்படி இருக்க, ஜெயாவோ தனியாரிடம் 15 லட்சம் கோடி முதலீடு பெற்றால் ஏழ்மை ஒழிந்து விடும் என்கிறார். ஐந்தே நிமிடத்தில் ஏழை பணக்காரனாகிவிட இது என்ன திரைப்பட பாடல் காட்சியா?

 

இந்த தொலை நோக்குத் திட்டத்தின் மெய்யான பொருள் தமிழ்நாட்டை விற்பனை செய்வதற்கு 15 லட்சம் கோடி விலை நிர்ணயித்திருக்கிறார்கள் என்பது தான். மின்சாரம் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்ட 56,000 கோடியை ஈடு கட்டுவது யார்? மின்கட்டண உயர்வு மூலம் மக்கள் தான் அதை கொடுக்கிறார்கள். தொலை நோக்கில் சொல்லியிருப்பதும் அதைத்தான். அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார திட்டங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தனியார்மயத்தை தீவிரப்படுத்துவது தான். கவனிக்கவும் தீவிரப்படுத்துவது. ஏற்கனவே எல்லாத்துறைகளிலும் தனியார்மயம் நுழைக்கப்பட்டு விட்டது. அதை தீவிரப்படுத்தினால் அதுதான் தொலை நோக்கு.

 

இதன்படி 2023ல் தமிழகம் எப்படி இருக்கும்? இதற்கும் மின்சாரத்தையே எடுத்துக் காட்டாய் கொள்ளலாம். தனியார் மின் உற்பத்தி நுழைவதற்கு முன்னால் அனைவருக்கும் ஓரளவுக்கு தடையின்றி மின்சாரம் கிடைத்து வந்தது. தேவை அதிகரித்து விட்டதனால் பற்றாக்குறை என்பதின் பின்னால் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை யாரும் மக்களுக்கு நினைவூட்டுவதில்லை. தனியார் மின் உற்பத்தியாளர்கள் செய்யும் மின் உற்பத்தி எல்லாம் சலுகை விலையில் பன்னாட்டு இன்னாட்டு தரகு நிறுவனங்களுக்கே செல்கிறது. அதனால் ஏற்படும் மின் வெட்டும் கட்டண உயர்வும் தான் மக்களுக்கு. இதை அனைத்துக்கும் விரித்துப் பார்த்தால் 2023 பளிச் எனத் தெரியும். வெண்ணெயாய் வழுக்கும் சாலைகள் இருக்கும் அதில் பயணம் செய்ய மக்களிடம் பணம் இருக்காது. பல்வேறு ஆய்வுக்கூட வசதிகளுடன் கல்லூரிகளும் கல்விக்கூடங்களும் இருக்கும், அதில் பயில்வதற்கு மக்களிடம் பணம் இருக்காது. பஞ்சமின்றி குழாயைத் தொட்டால் தூய்மையான(!) தண்ணீர் காத்திருக்கும் ஆனால் திறந்து குடிக்க மக்களிடம் பணம் இருக்காது. எல்லாவகை உபகரணங்கள், கருவிகளுடன் மருத்துவமனைகள் இருக்கும், ஆனால் அதில் சென்று மருத்துவம் பார்க்க மக்களிடம் பணம் இருக்காது. இது தான் தொலை நோக்கு.

 

தனிநபர் சராசரி வருமானம் என்பதும் புரட்டு தான். ஒரு ஊரில் 100 பேர் இருக்கிறார்கள் என்று கொள்வோம். அதில் 5 பேருக்கு ஆண்டுக்கு தலா 100 கோடி வருவாய் வருகிறது. 20 பேருக்கு ஆண்டுக்கு 10 லட்சம் வருவாய் ஏனையோர் பட்டினி கிடக்கிறார்கள் என்று கொண்டால், அந்த ஊரில் ஒருவரின் சராசரி வருவாய் ஐந்து லட்சம். ஆனால் பெரும்பான்மையினரான 75 பேர் உண்ண உணவின்றி பட்டினி கிடந்து கொண்டிருப்பார்கள். இதைவிட மோசடி வேறு இருக்க முடியுமா? 2023ல் ஆறு மடங்கு சராசரி வருமானம் உயரும் என்றால் டாடா, அம்பானிகள் கொழுப்பார்கள், மக்கள்……..?

 

மைய அரசின் அறிக்கைகளும் ஏழ்மை குறைத்து விட்டதாக அறிக்கை அளித்துக் கொண்டிருக்கின்றன. நாளொன்றுக்கு 22 ரூபாய் ஒருவனால் சம்பாதிக்க முடிந்தால் அவன் வறுமைக் கோட்டுக்கு மேல் வந்து விடுவான் என்று கணக்கிட்டிருக்கிறார் அலுவாலியா.இதன்படி நாட்டின் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 44 கோடியிலிருந்து 34 கோடியாக குறைந்துவிட்டது என்கிறார்கள். அதாவது ஏழ்மையை ஒழிப்பதற்கு பதிலாக ஏழ்மையின் அளவுகோலை குறைத்துவிட்டால் ஏழைகள் குறைந்து விடுவார்கள் என்கிறது மைய அரசு. இப்படி வறுமையைக் குறைத்தவர்களின் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறைய ஈடுகட்ட செய்திருக்கும் நடவடிக்கைகளை பார்க்கலாமா? சேவை வரி, சுங்க வரி, உற்பத்தி வரிகளை உயர்த்தியதன் மூலம் மக்களிடமிருந்து 46 ஆயிரம் கோடியை கறந்திருக்கிறார்கள். மட்டுமல்லாது பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியமாக கொடுக்கப்பட்டுவந்த  25 ஆயிரம் கோடியையும், உரமானியமாக கொடுக்கப்பட்டு வந்த 7 ஆயிரம் கோடியையும் வெட்டிக் குறைத்திருக்கிறார்கள்.  குறைந்த பட்சம் மக்கள் பலனடையும் மானியங்களை வெட்டிக் குறைத்து விட்டு, வரிகளை மடங்குகளில் உயர்த்திவிட்டு இராணுவத்திற்கு தோராயமாக 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கு 4500 கோடி வரிச் சலுகைகள் புதிதாக அளிக்கப்பட்டிருக்கின்றன. மட்டுமல்லாது கடந்த நிதி நிலை அறிக்கையில் அளிக்கப்பட்ட 5லட்சத்து 29 ஆயிரத்து 432 கோடியில் ஒற்றை ரூபாயைக் கூட குறைக்கவில்லை. இவர்கள் வறுமையைக் குறைப்பார்கள் என்றோ, மக்களை வாழ வைப்பார்கள் என்றோ நம்ப முடியுமா?

 

இப்படி உள்ளும் புறமும் முதலாளிகளின் ஏவலாளர்களாக இருந்து மக்களை திண்டாட்டத்தில் தள்ளுபவர்கள், கலர் கலராக கனவுகளை விதைப்பதற்கு தயங்குவதே இல்லை. மக்கள் தங்கள் கோமணத்தை காத்துக் கொள்ள வீதியில் இறங்க இதைவிட வேறு காலமும் இல்லை. 

தொடர்புடைய பதிவுகள்:

மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்

தொட்டுவிடு ஷாக் அடிக்கட்டும்

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: