அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 1

இஸ்லாம் அனைவரையும் சகோதரர்களாகக் கருதுகிறது, இஸ்லாம் அடிமைத் தனத்தை ஒழித்தது, விடுதலையை தூண்டியது என்றெல்லாம் பலவாறாக பரப்புரை செய்து வருகிறார்கள் இஸ்லாமிய மதவாதிகள். ஆனால் இஸ்லாம் அடிமைத்தனத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இன்று ஒரு இஸ்லாமியன் ஒருவனை அடிமையாக வைத்திருந்து அவன் உழைப்பைத் திருடினாலோ, பெண்ணை அடிமையாக வைத்திருந்து பாலியல் ரீதியாக பயன்படுத்தினாலோ அதை இஸ்லாமிய அடிப்படையில் குற்றம் என்று கூற முடியாது. ஆனால், உலகின் எந்த நாட்டுச் சட்டமும் இவைகளை அனுமதிக்காது. இதை தெளிவாக புரிந்து கொண்டிருப்பதால் தான் இஸ்லாமிய மதவாதிகள், அடிமைகளை படிப்படியாக குறைத்து இல்லாமலாக்க திட்டமிட்டது, குற்றங்களுக்கு பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்ய உத்தரவிட்டது என்பது போல் பசப்புவார்களேயன்றி; ஒருபோதும் இஸ்லாம் அடிமைத்தனத்தை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்பதை தெளிவாகக் கூறமாட்டார்கள்.

 

தவிர்க்கவியலாமல் ஏற்கிறதா? மறுக்கிறதா? என்பதை கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அன்றைய நிலையில் வேறு வழியில்லை என்று கதைகளையும் காரணங்களையும் அடுக்குவார்கள். 1. போர்களில் பிடித்து வரப்படும் கைதிகள் தான் அடிமைகள். அந்தக் காலத்தில் சிறைகள் இல்லை, அதனால் அடிமைகளை பகிர்ந்தளிப்பது தவிர்க்க முடியாயதது. 2. எல்லா நாடுகளிலும் அடிமை முறை இருந்ததால் ஒரு நாட்டில் மட்டும் அதை சட்டம் போட்டு தடுக்க முடியாது. 3. ஏற்கனவே அடிமை முறை நடப்பில் இருந்ததால் திடீரென தடுக்கும் போது அதிக அளவில் அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். இது போன்ற பல காரணங்களினால் இஸ்லாம் அடிமை முறையை அங்கீகரிக்கிறது என்று நீண்ட விளக்கமளிப்பார்கள். இனிவரும் மனித குலம் முழுமைக்கும் இது தான் குரான் அதில் எந்த திருத்தமும் தேவைப்படாது என புளகமடைபவர்கள், இன்று மனிதர்களால் ஒழிக்கப்பட்டுவிட்ட னேரடி அடிமை முறை, அல்லாவினால் ஒழிக்கப்பட முடியாமல் போன அடிமை முறை குறித்த வசனங்கள் இன்றும் குரானில் இருப்பது காலத்திற்கு பொருத்தமானதா? என்பதை நேர்மையான இஸ்லாமியர்கள் மட்டும் சிந்தித்துப் பார்க்கலாம்.

 

வரலாற்றில் அடிமைகள் எப்படி தோன்றினர்? உற்பத்தியில் உபரி தோன்றிய போது, அதை பாதுகாக்க வேண்டிய அவசியம் தோன்றிய போது, மக்கள் அடிமைப் படுத்தப்படுவதற்கான விதை ஊன்றப்பட்டது. புராதன பொதுவுடமைச் சமுதாயத்தில் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிப் போக்கினாலும், விவசாய உற்பத்தி முறை அறியப்பட்டதாலும் உற்பத்தியில் உபரி தோன்றியது. அரசு வடிவம் தோன்றாத ஆனால் இனக் குழுக்களின் ஏற்றத்தாழ்வில் உபரியைக் கைப்பற்றும் போட்டியில் அடிமைகள் தோன்றினர். அடிமைத்தனம் என்பது தனிப்பட்ட மனித ஒழுக்கத்தின் பாற்பட்டது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அது விரிந்த பொருளுடையது. இன்று எப்படி மக்களின் சிந்தனை, பொழுது போக்கு, கலை, அனைத்தும் முதலாளித்துவ வடிவத்தில் இருக்கிறதோ அதுபோன்று அன்று சமூகமே ஆண்டான் அடிமை சமூகமாக இருந்தது. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி ஒரு கட்டத்திற்கு மேல் உற்பத்தி உறவுகளால் கட்டுப்படுத்தப்பட்டு உற்பத்தி முடங்கும் போது அதை உடைத்துக் கிளம்புவது தான் சமூக மாற்றம், உற்பத்தி உறவுகளின் மாற்றம். இது தான் அறிவியல், இது தான் மார்க்சியம். ஆனால் இஸ்லாம் இதை தனி மனித ஒழுங்கு எனும் அளவில் தான் அணுகுகிறது. இஸ்லாம் பேசும் அடிமைத்தளைக்கான அங்கீகாரமும், விடுதலை என்று கூறுவதும் தனி மனித தீர்வுகளாகத்தான் இருக்கிறது. இந்த பேதத்தை புரிந்து கொள்ளாதவரை அறிவியலுக்கும் மதத்துக்குமான இடைவெளியை புரிந்து கொள்வது கடினம்.

 

எளிமையாக சொல்வதானால், ஒரு மனிதனின் உழைப்பை இன்னொரு மனிதன் சுரண்டும் முதல் வடிவம் அடிமைமுறை. இந்த அடிமைமுறை தனி மனித விருப்பத்தினால் ஏற்பட்டதல்ல, சமூகப் போக்கில் ஏற்பட்ட மாற்றம். ஆதிநாட்களில் எல்லோரும் உழைத்து, எல்லோரும் உண்டு, கிடைக்காவிடின் எல்லோரும் பட்டினி கிடந்த உற்பத்தி முறையிலிருந்து ஏற்பட்ட சமூக ரீதியிலான மாற்றம். அந்த அடிமை முறையின் தொடர்ச்சி இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மனிதனின் உழைப்பை இன்னொரு மனிதன் சுரண்டுவது இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சுரண்டலின் வடிவங்கள் மாறிவிட்டன. எந்த வடிவில் இருந்தாலும் சுரண்டல் அநீதியானது தான். எதிர்க்க வேண்டியது தான். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இதை தனி மனித தீர்வுகள் மூலம் செய்ய முடியுமா? என்பது தான்.

 

மதவாதிகளின் சமாளிப்புகளுக்கு திரும்புவோம். முதலில் அடிமை முறையை ஏன் முற்றாக ஒழிக்க முடியவில்லை என்பதற்கு இன்றைய மதவாதிகள் கூறும் காரணங்கள் அனைத்தும் அவர்களின் சொந்தக் கருத்துகளே, இஸ்லாமிய இறையியலில் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. அல்லாவும் அவனது தூதரும் கூறாத எதுவும் இஸ்லாத்துக்கு புறம்பானது தான் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு. அடிமை முறையை ஒழிப்பது அல்லது அடிமை முறை ஏற்கத் தகாதது என்று முகம்மது கூறவே இல்லை. அடிமை விடுதலை என்று முகம்மது கூறுவதெல்லாம் குற்றங்களுக்கான பரிகார நடவடிக்கைகளேயன்றி அடிமை முறை தவறு அது களையப்பட வேண்டியது எனும் நோக்கில் அல்ல. அதாவது அடிமை என்பது தனிப்பட்ட ஒருவனின் சொத்து. தான் கூறும் மதக் கடமைகளை நிறைவேற்றத் தவறுபவன் இழப்பை சந்தித்தாக வேண்டும் எனும் நிர்ப்பந்தம், அந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தத்தில் – தெளிவாகச் சொன்னால் தமக்கு அடிமை இழப்பு, பொருள் இழப்பு ஏற்படும் எனும் பயத்திலேனும் – மதக் கடமைகளை நிறைவேற்றட்டும் என்பது தான் முகம்மதின் திட்டம். இதையும் சமூகத்தின் அநீதியான சுரண்டலின் வடிவத்தை ஒழிப்பதையும் முடிச்சுப் போடுவது வழக்கமான மதவாதிகளின் உட்டாலக்கடி வேலை தானேயன்றி வேறொன்றுமில்லை.

 

போர்களில் தோற்றவர்கள் தான் அடிமைகள் என்பது கருத்தியல் ரீதியில் பிழையில்லாத கூற்றுதான், முழுமையான கூற்றல்ல. முகம்மதுக்கு ஒரு அரசமைப்பு இருந்தது, அவர் பல போர்களை நடத்தியிருக்கிறார் எனும் அடிப்படையில் இருந்து தான் போரில் தோற்றவர்களை அடிமைகளாக்கினர் என்று கூறுகிறார்கள். ஆனால், அரசு எனும் அமைப்பு ஏற்படுவதற்கு முன்பே அடிமைகள் தோன்றி விட்டனர். மேலும் அக்காலத்தில் சிறைகள் இல்லை என்று கூறுவது அப்பட்டமான பொய். சிறை என்றால் என்ன? உயரமான சுற்றுச் சுவர், அதன் மேல் துப்பாக்கியுடன் காவலர்கள், நீதி மன்றம், காவல்துறை இப்படியான காட்சி தான் சிறையா? இது சிறையின் இன்றைய நவீன வடிவம். சிறை என்றால் தப்பிவிடாமல் பாதுகாப்பது. எகிப்தில் பிரமிடுகளைக் கட்டுவதற்கு அடிமைகளை பயன்படுத்தினார்கள் என்பது வரலாறு. அந்த அடிமைகளை எங்காவது உங்களுக்கு பிடித்த இடங்களில் தங்கியிருங்கள் என்று விட்டு விட்டார்களா? ஒரு இடத்தில் கூட்டி வைத்து தப்பிவிடாமல் பாதுகாத்தார்கள். கிபி முதல் நூற்றாண்டில் ரோமில் ஸ்பார்டகஸ் தலைமையில் அடிமைகள் அரசுக்கெதிராக புரட்சி செய்தார்கள். அவர்கள் தனித்தனி வீடுகளில் அடிமைகளாக இருந்தார்களா? ஒரே இடத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார்களா? ஆகவே, அக்காலத்தில் சிறைகள் இல்லை அதனால் தான் தனி ஆட்களிடம் அடிமைகள் இருந்தார்கள் என்பது மதவாதப் பொய்.

 

சட்டம் போட்டு ஏன் இஸ்லாம் அடிமை முறையை நீக்கவில்லை என்பதற்கு மதவாதிகள் கூறும் பதில் தான் எல்லா நாடுகளிலும் அடிமை முறை இருந்ததால், இஸ்லாமிய நாட்டில் அடிமைகளை விடுவித்தால் அது நட்டுக்கு இழப்பை ஏற்படுத்தும். முஸ்லீம் அடிமைகள் பிற நாட்டிடம் சிக்கியிருக்க, முஸ்லீமல்லாத அடிமைகளை விடுவித்துக் கொண்டிருந்தால் அது பலவீனத்தையும் ஏற்படுத்தும். ஆகவே தான் இஸ்லாம் அடிமை முறையை நீக்கவில்லை என்பது. இந்தக் காரணத்திற்காகத் தான் முகம்மது அடிமை முறையை ஒழிக்கவில்லை என்று கூறினால் அது முகம்மதின் வாக்கை மீறிய அல்லது முகம்மதின் வார்த்தைகளுக்கு முகம்மதை விலக்கி வைத்துவிட்டு பொருள் கூறிய, முகம்மதுக்கு மேம்பட்ட தலைவர்களாக அவர்கள் காணப்படுவார்கள். எப்படியென்றால், முகம்மதின் முதன்மையான எதிரிகளாக இருந்த முகம்மதின் சொந்த குலத்தை சேர்ந்த குரைஷி குல சொந்தக்கார அடிமைகளை முகம்மது உடனடியாக விடுவித்திருக்கிறார். மேலும் நோன்பு நோற்காமலிப்பது போன்ற குற்றங்களுக்கு பரிகாரமாக அடிமைகளை விடுவிப்பதை ஊக்குவித்திருக்கிறார். பிற நாடுகளில் இப்படியானதொரு ஏற்பாடு இல்லாத போது முகம்மது இதைச் செய்திருக்கிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, இன்று மதவாதிகள் கூறும் இஸ்லாமிய நாடு பலவீனப்படும் என்பது முகம்மதுவுக்கு தெரிந்திருக்கவில்லை. இரண்டு, முகம்மது அடிமை முறையை ஒழிக்காததற்கு இன்று மதவாதிகள் கூறும் காரணம் தவறானது, பொய்யானது, முகம்மதின் சிந்தனையை மீறியது. இரண்டில் எது சரி?

 

ஏற்கனவே அடிமைகளை வைத்திருந்தவர்கள் பெருமளவில் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள், மட்டுமல்லாது, தவறில்லை என்ற நிலை இருக்கும் போது செய்யப்பட்ட அடிமை வியாபரத்தை பின்னாளில் தவறு என்று கூறுவது நியாயமற்றது அதனால் தான் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்கிறார்கள். ஆடுமாடுகளைப் போல் சந்தைகளில் விற்கப்படுவதும், அதுவரை கணவன் மனைவியாய், பெற்றோர் குழந்தைகளாய், உற்றோராய்,உறவினர்களாய் இருந்தவர்கள்  எல்லா உறவுகளையும் மறுத்து அவர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுப்பது இழப்பாய் தெரியவில்லை. ஆனால் அண்டைகள் வைத்திருக்கும் அடிமைகளை செல்லாது என்று அறிவித்தால் அவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுமாம். என்னே உயரிய சிந்தனை. இந்த உயரிய சிந்தனைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே ஸ்பார்டகஸ் அடிமைகளின் விடுதலை குறித்து சிந்தித்தான் என்றால் முகம்மதின் சிந்தனை மனித குலத்தின் முழுமைக்குமான சிந்தனையாக இருக்க முடியுமா?

 

அடிமை குறித்து இன்று மதவாதிகள் பிதற்றித் திரிவதெல்லாம் அவர்களின் சொந்தக் கற்பனைகள் தானேயன்றி, இஸ்லாம் தெளிவாக அடிமை முறையை அங்கீகரிக்கிறது. நேரடியான அடிமை முறை கொடூரமானது, கொடுமையானது என்று சராசரி மனித மனம் கூறும் போது காலாகலத்துக்கும் இதுவே உண்மை எனக் கூறும் வேதம் அடிமைமுறையை ஆதரிக்கிறது என்றால் அது எல்லாம் தெரிந்த இறைவனின் கூற்றா? ஆண்டான் அடிமைக் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் கூற்றா? இஸ்லாமியர்கள் சிந்திக்க வேண்டும்.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

 

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

36 thoughts on “அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 1

  1. stop you nonsense, !! you don’t understand Islam in correct manor so you take wrong evidence and story’s from the history and publishing wrong things from that source this is too much stop stop stop …

    Learn Islam From Correct person and read the truth after that tell your opinions OK….

    So Stop now …..

  2. முகமது அந்த காலத்தில் அரேபியாவில் இருந்த வழக்கப்படி நடந்து இருக்கிறார். இதில் தவறு கிடையாது. ஆனால் அது இக்காலத்துக்கும் (எக்காலத்துக்கும்) பொருந்தும் என்று சொல்லுவது தான் கொடுமை. இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் (பதிவுலகுக்கு வந்த புதுசு) ஒரு பதிவருக்கு பின்னூட்டம் இட்டேன், அவரு அதில் தவறு இல்லை என்று சப்பையாக காரணம் கூறி மறுமொழி தந்தார். அப்புறம் தான் தெரிந்தது அவரு ‘மதம்’ பிடிச்சவருன்னு. அப்புறம் அந்த பக்கம் எட்டி பார்க்கறதே இல்லை.

  3. செங்கோடியே இஸ்லாத்திற்கு எதிராகவும் குர் ஆனுக்கு எதிராகவும் உனது புலமபல்கள் மக்களை சென்றடைய போவதில்லை .ஆனால அல்லாஹ்வின் கருணையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சான் என்ற கிறிஸ்தவ அமைப்போடு விவாதம் செய்து குர் ஆன் இறை வேதமே
    என்று அறிவியல் பூர்வமாக நிருபித்துள்ளது .இன்ஷா அல்லாஹ் இந்த விவாத டி.வி.டி.கேசட்டுகளை தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டியில் உள்ள
    முஸ்லிமல்லாதவர்கள் முதல் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் வரை கொண்டு சேர்ப்போம் .எப்படி பைபிள் இறைவேதமா ? என்ற விவாத கேசட்டுகளை பார்த்துவிட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வந்தார்களோ இன்ஷா அல்லாஹ் இந்த
    விவாத கேசட்டையும் பார்த்து விட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் வருவார்கள் …அதனால் இஸ்லாத்திற்கு எதிராக
    முகத்தை காட்டமால் முக்காடு போட்டு நீ எழுதுவதினால் எந்த பிரயோஜனமும் இல்லை .உனது நேரத்தைத்தான் வீணடிக்கிறாய் என்பதை புரிந்து கொள்

  4. ஸனாதிக்கா செங்கொடி
    //இஸ்லாம் அடிமைத் தனத்தை ஒழித்தது, விடுதலையை தூண்டியது என்றெல்லாம் பலவாறாக பரப்புரை செய்து வருகிறார்கள் இஸ்லாமிய மதவாதிகள்.// அப்படியெல்லாம்சொல்லியிருக்கிறீர்கள். அது தமிழ்நாட்டு தவ்ஹீத் அண்ணனும் அவரது தொண்டரடிப்பொடிகளும் மட்டுமே. ஆங்கிலத்தில் தாவா செய்யும் சிலரும் இவ்வாறு செய்து வருகிறார்கள். ஆனால், ஒரிஜினல் அரபு புனித பூமியின் இமாம்கள் அப்படி சொல்வதே இல்லை. அடிமை முறை இஸ்லாத்தின் புனித நிலைப்பாடுகளில் ஒன்று என்பதே அவர்களது நிலை.

    http://www.wnd.com/2003/11/21700/
    SAUDI SHEIK: ‘SLAVERY IS A PART OF ISLAM’
    Leading government cleric, author of country’s religious curriculum
    Published: 11/10/2003 at 5:00 PM
    As Saudi Sheikh Saleh Al-Fawzan, a member of the Senior Council of Clerics had said in 2003, those who argue that slavery is abolished are “ignorant, not scholars. They are merely writers. Whoever says such things is an infidel.”[

    அங்கே இங்கே படித்ததிலிருந்து இவை.
    தன் மனைவி ஒரு அடிமையை விடுவித்ததை காககககே எதிர்க்கிறார்.

    http://www.cmje.org/religious-texts/hadith/bukhari/047-sbt.php#003.047.765
    Maimuna should not have freed her slave
    Narrated Kurib:
    the freed slave of Ibn ‘Abbas, that Maimuna bint Al-Harith told him that she manumitted a slave-girl without taking the permission of the Prophet. On the day when it was her turn to be with the Prophet, she said, “Do you know, O Allah’s Apostle, that I have manumitted my slave-girl?” He said, “Have you really?” She replied in the affirmative. He said, “You would have got more reward if you had given her (i.e. the slave-girl) to one of your maternal uncles.”

    விடுவிக்கப்பட்ட ஒரு அடிமையை (முடாப்பர்) நம்ம காககககே வித்து காசு பண்ணுகிறார்.

    http://www.sahihmuslim.com/sps/smm/sahihmuslim.cfm?scn=dspchaptersfull&ChapterID=674&BookID=15

    CHAPTER: THE PERMISSIBILITY OF BUYING A MUDABBAR SLAVE
    No. 4115
    Jabir b. ‘Abdullah said that a person among the Ansar declared his slave free after his death, as he had no other property. This news reached the Prophet of Allaah (sallAllaahu alayhi wa sallam) and he said: Who will buy him from me? And Nu’aim b. al-Nahham bought him for eight hundred dirhams and he handed them over to him, ‘Amr (one of the narrators) said: I heard Jabir b. ‘Abdullah as saying: He was a Coptic slave, and he died in the first year (of the Caliphate of ‘Abdullah b. Zubair).
    No. 4116
    Jabir is reported to have said: A person amongst the Ansar who had no other property declared a slave free after his death. Allaah’s Messenger (sallAllaahu alayhi wa sallam) sold him, and Ibn al-Nahham bought him and he was a Coptic slave (who) died in the first year of the Caliphate of Ibn Zubair.

    நல்லவேளையாக சவுதி ஷேக் இந்த மாதிரி பெயர்தாங்கி முஸ்லீம்களால் கெட்டுப்போகாமல், ஒரிஜினல் இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டுவார். இப்போதைக்கு தக்கியா பண்ணி ஏமாத்தி நெறைய முஸ்லீம்களை சேர்த்துகிட்டு அப்புறம் அடிமைமுறை அல்லாஹ் மூமின்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம் என்று அடித்துவிட்டுட மாட்டோமா?

  5. எனது அடிமை ,எனது அடிமைப்பெண் என்று யாரும் கூற வேண்டாம் .எனது பணிஆள் ,எனது பணிப்பெண் ,எனது பையன் என்று கூறட்டும் என்று நபி[ஸல்]அவர்கள் கூறியதாக அபூமூஸா அறிவிக்கிரார்.[புகாரி 2552]
    உங்களில் ஒருவரிடம் அவரது பணிஆள் அவரது உணவை கொண்டு வந்தால் ,அவரை தன்னுடன் அமர்ந்து உண்ணச் சொல்லட்டும் .அல்லது அந்த உணவிலிருந்து ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் உணவை அவருக்கு அளிக்கட்டும் .ஏனெனில்,அந்த உணவை தயாரிக்கக் அவர் பாடுபட்டார்.புகாரி 2557
    ஒரு மனிதனிடம் அடிமைப் பெண் இருந்து அவளுக்கு அவன் ஒழுக்கம் கற்பித்து ,கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து ,அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைத்தால் ,அவருக்கு இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்.என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதாக அபூமூஸா[ரலி]அவர்கள் அறிவிக்கிரரர்கள் புகாரி 2547

  6. செங்கொடி ////ஒருபோதும் இஸ்லாம் அடிமைத்தனத்தை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்பதை தெளிவாகக் கூறமாட்டார்கள்.///
    அன்றைய சூழ் நிலையில் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிமைத்தனத்தை மருப்பதாலே ,இஸ்லாம் விடுதலை செய்யச் சொல்லுகிறது.இப்போது பழைய காலத்து போர் முறைகள் இருக்கின்றனவா? இப்போது போர்கைதிகள் சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.அவர்களை கவனிக்க அரசு உள்ளது அவர்கள்பற்றி தீர்வு காண சம்பந்தப்பட்ட அரசுகள் உள்ளன.ஆதலால் நபி[ஸல்] காலத்தைப் போன்று போர்க்கைதிகளின் நிலை இப்போது இல்லை .இல்லாத ஒன்றைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை.பத்து பைசா நாணயத்தின் நிலை என்னவோ அது போன்றுதான் அடிமைத்தனம்
    இருப்பினும் கவுதிமாலவிலுள்ள கைதிகள் அடிமைகளை விட கொடூரமாக நடத்தப்படுகிறார்கள்.குற்ற வழக்குகளில் கைதாகியுள்ள பல பெண்கைதிகள் நிலை பற்றி அங்கு போலிசாரால் பலர் கற்பழிக்கப்பட்ட செய்திகள் அப்போதைக்கு அப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

    //// இன்று மனிதர்களால் ஒழிக்கப்பட்டுவிட்ட னேரடி அடிமை முறை, அல்லாவினால் ஒழிக்கப்பட முடியாமல் போன அடிமை முறை குறித்த வசனங்கள் இன்றும் குரானில் இருப்பது காலத்திற்கு பொருத்தமானதா? என்பதை நேர்மையான இஸ்லாமியர்கள் மட்டும் சிந்தித்துப் பார்க்கலாம்.////
    ஒரு மனிதனிடம் அடிமைப் பெண் இருந்து அவளுக்கு அவன் ஒழுக்கம் கற்பித்து ,கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து ,அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைத்தால் ,அவருக்கு இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்.என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதாக அபூமூஸா[ரலி]அவர்கள் அறிவிக்கிரரர்கள் புகாரி 2547
    மனிதர்கள் அடிமையை எப்படி ஒழித்தார்கள்? முஹம்மது நபி[ஸல்] மேற்கண்ட ஹதிதில் கூறியவாறு நபித்தோழர்கள் செயல்பட்டார்கள் .அதன் பின்னர் வந்த சமுதாயம் செயல்பட்டது.அது நாளடைவில் புரட்சி ஏற்பட்டு உலக முழுவதும் வியாபித்தது .இங்ஙனம் இஸ்லாமே அடிமை முறைகளை ஒழிக்க முன்மாதிரியாக இருந்தது.

  7. HEY BROTHER JAMAL FIRST U LEARN ISLAM FROM CORRECT PERSON ,AND THEN TALK ABOUT THE ABOVE ARTICLE,.FIRST YOU READ “ARRAHIK ALMAGTHOOM” AND THEN READ THE ALL HADITH OF SLAVES OF ISLAM LIKE BUHARI,MUSLIM.LAST USAY ABOUT TRUTH!

    WHAT WHAT OPINION OF TRUTH! THOO!!

  8. அமைதிப்படையும், ஐ.நா.வும்:
    ஒரு காட்சியில் டெமக்ரா நிறுவனத்தின் தலைவர் சொல்கிறார், ”நான் என் ஊழியர்களுக்கு நன்னடத்தை விதிகளைப் போதிக்க முடியாது”. நன்னடத்தை விதிகளை அமைதிப்படை வீரர்களுக்குப் போதிக்க முடியாதாம். “பல நாள் குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிற ராணுவ வீரன் போற எடத்துல பொண்ணுங்க மேல கைய வைக்க தான் செய்வான்” என்று பாசிச அரசாட்சியை ஆதரிப்பவர்கள் கூறுவதற்கு நிகரான வார்த்தைகள் இவை. ஆனால் சமகால சமுக சூழலில் இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை.

    ஐ.நா. நிறுவனமயமாக்கப்பட்டு, ஏகாதிபத்திய நாடுகளுக்கு வாலாட்டுகிற ஒரு நிறுவனம். ஆரம்பித்த நாள் முதல் இந்த நாகரீக காலத்தில் ஐ.நா. எத்தனை போர்களை தடுத்திருக்கின்றது? ஏன் இப்பொழுது கூட அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்தியதே ! ஐ.நா. என்ன செய்து விட்டது? ஈழத்தில் நடந்து கொண்டிருந்த யுத்தத்தின் சத்தம் ஐ.நா. காதில் விழவே இல்லையே!
    ஆனால் எல்லாம் முடிந்தவுடன், இன்று ஈராக் மறுவாழ்விற்க்கும், ஈழத்தின் போர் குற்றங்களுக்கும் ஏதோ பிடில் வாசிக்கின்றது ஐ.நா. ’ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆவணப்படுத்த வேண்டுமே’ என்று ஈழ யுத்தத்தை ஆவணப்படுத்தியது, அதற்கு மேல் பேச்சு மூச்சில்லை.

    படத்தின் இறுதிக்காட்சியில் சொல்வது போல் இன்று டெமாக்ரா (டைன்கார்ப்) நிறுவனம் ஈராக்கில் மறு வாழ்வு அமைக்க அமைதிப்படையை அனுப்பும் ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கின்றது. போஸ்னிய சம்பவம் வெளிவந்து, உலகமே காறித் துப்பிய பின்னும் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றால், ஈராக் பெண்களை யார் காப்பற்றுவது?

  9. ஆஹா ஒரு முஸ்லிம் பக்கதுல சட்டை பொடாத பெண் ஆதலால் இசுலாம் அடிமை தனத்தை ஆதரிக்கிரது

    ‍‍‍குப்புற‌படுத்து சோப்பு கொடியைய் பாற்பொர் சங்கம்

  10. @இப்ராஹீம்
    //இல்லாத ஒன்றைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை.பத்து பைசா நாணயத்தின் நிலை என்னவோ அது போன்றுதான் அடிமைத்தனம்// குர்ஆன் 4:24, 23:6, 30:50, 70:30….. இவைகளுக்கும் பத்து பைசா நாணயத்தின் நிலைதானா?

  11. முஹம்மது அடிமை முறையை ஒழித்தவரா?
    புஹாரி ஹதீஸ்: 2534
    ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை (இவனை வாங்குபவர் யார் என்று) கூறி அழைத்து (ஏலத்தில்) விற்று விட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான்.

  12. தஜ்ஜால்,

    அக்காலத்திய அடிமைகள் விடயத்தில் மற்றவர்களை விடவும் முஹம்மது (ஸல்) எவ்வளவோ பரவாயில்லை. எதிர்ப்பா பாத்தீங்கன்னா எல்லாமே எதிர்ப்பாவேத்தான் தெரியும்.

  13. மிச்சேல்,
    எதிர்ப்பாக மட்டுமல்ல எப்படிப் பார்த்தாலும் குர்ஆன் அடிமைமுறையை இன்றும் பகிரங்கமாக ஆதரிக்கிறது என்பதை மறுக்க முடியாது. அடிமைமுறையை முஹம்மது நீக்கினார் என்பது முஸ்லீம்களின் வரண்ட கற்பனையே தவிர வேறில்லை

  14. இதத்தான் நான் முன்னமே சொன்னேன்.

    http://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_23.html

    http://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_27.html

    அனா எந்த துலுகனும் என்கூட விவாதத்துக்கு வரமாட்டேங்கிறான். (வேண்டுமானால் நேரடிவிவாதத்க்கு வா என்கிறான்கள்) என்ன செய்வது , விவாதத்க்கு போனால் என் கழுத்து தாங்காது.

  15. 4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.,,,,,,,,,,,,,,
    23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
    70:30. தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
    ஆஅம் ,தச்சால் இப்போது போர்கள் முற்றும் வேறுபட்டவை .கைதிகளை பராமரிக்க அரசு உள்ளது.அதற்கென்று துறைகளும் உள்ளன.ஆதலின் மக்களிடம் கைதிகளை ஒப்படைக்கும் நிலை இப்போது இல்லை.ஆதலின் அந்த வசனத்திலுள்ள அடிமைகளை பற்றிய குறிப்புகள் அதாவது வலக்கரத்தை சொந்தமாக்குதல் என்பது இப்போது நடைமுறையில் ,பத்து பைசா நாணயத்தை போல் இல்லை.இல்லாத ஒன்றுக்கு சட்டம் எதற்கு?நான் முன்பு டவுசர் காலத்தில் பத்து பைசாவுக்கு ஒரு தேங்காய் வாங்கினேன் ,இப்போதுபத்து பைசாவுக்கு தேங்காய் கொடு என்று கேட்பது தச்சாளுக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம்.

  16. அனைத்து ஹதித்களும் அடிமை விடுதலைக்கு சாதகமாகவே இருக்கின்றன.இந்த ஹதித் இல் தொடர் செய்திகளை அறிந்தால் அதன் உண்மை நிலையினை தெரிய வரும் .மேலும் குறிப்பிட்ட அடிமை யை விடுதலை செய்தால் இஸ்லாமுக்கு எதிராக செயல்படுவார் என்பதையோ அல்லது இவரது குண நலன்களையோ நபி[ஸல்] அவர்கள் அறிந்திருப்பார்கள .நபி[ஸல்] அவர்கள் அறிந்திருந்த வகையில் அந்த நபித்தோழர் அறிந்திருக்க மாட்டார் .அதனாலே அந்த அடிமையை விடுதலையை தடை செய்து அவருக்கு தேவை இல்லைஎன்றால் வேறொருவருக்கு அடிமையாக்கி உள்ளார்கள்.

  17. ////அடிமைமுறையை முஹம்மது நீக்கினார் என்பது முஸ்லீம்களின் வரண்ட கற்பனையே தவிர வேறில்லை///
    எனது அடிமை ,எனது அடிமைப்பெண் என்று யாரும் கூற வேண்டாம் .எனது பணிஆள் ,எனது பணிப்பெண் ,எனது பையன் என்று கூறட்டும் என்று நபி[ஸல்]அவர்கள் கூறியதாக அபூமூஸா அறிவிக்கிரார்.[புகாரி 2552]
    உங்களில் ஒருவரிடம் அவரது பணிஆள் அவரது உணவை கொண்டு வந்தால் ,அவரை தன்னுடன் அமர்ந்து உண்ணச் சொல்லட்டும் .அல்லது அந்த உணவிலிருந்து ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் உணவை அவருக்கு அளிக்கட்டும் .ஏனெனில்,அந்த உணவை தயாரிக்கக் அவர் பாடுபட்டார்.புகாரி 2557
    ஒரு மனிதனிடம் அடிமைப் பெண் இருந்து அவளுக்கு அவன் ஒழுக்கம் கற்பித்து ,கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து ,அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைத்தால் ,அவருக்கு இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்.என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதாக அபூமூஸா[ரலி]அவர்கள் அறிவிக்கிரரர்கள் புகாரி 2547
    தச்ச ஆளே ,இதன் பொருள் என்னவாக இருக்கும்?
    இது மட்டுமா?தலைவர் -தொண்டர் ;குரு-சிஷ்யன் ;என்பதை ஒழித்து மனித உரிமைகளை மதித்து தோழர் என்ற சொல்லை நடைமுறைப் படுத்தியது யார்?

  18. தஜ்ஜால்

    முஹம்மது (ஸல்) தவிர ஏனைய நாடுகளில் அடிமைகள் எவ்விதம் நடத்தப்பட்டனர் என்ற வரலாற்றைப் படித்துப் பாரும். இந்து மதம் தாழ்த்தப்பட்டோரை எந்த அளவிற்கு வெறுக்கத்தகுந்தவர்களாகக் கருதி அடிமைகளாக நடத்தினர் என்பதையும் படித்து விளங்கிக் கொள்ளும்.

  19. @இப்ராஹீம்
    ///ஆஅம் ,தச்சால் இப்போது போர்கள் முற்றும் வேறுபட்டவை .கைதிகளை பராமரிக்க அரசு உள்ளது.அதற்கென்று துறைகளும் உள்ளன.ஆதலின் மக்களிடம் கைதிகளை ஒப்படைக்கும் நிலை இப்போது இல்லை.//நான் முன்பு டவுசர் காலத்தில் பத்து பைசாவுக்கு ஒரு தேங்காய் வாங்கினேன் ,இப்போதுபத்து பைசாவுக்கு தேங்காய் கொடு என்று கேட்பது தச்சாளுக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம்.// எனவே, குர் ஆனின் 4:24, 23:6, 30:50, 70:30….. வசனங்களை செல்லாக் காசு என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

  20. மிச்சேல்,
    மற்ற நாடுகளும், மற்ற மதங்களும் அடிமைகளை என்ன செய்தன என்பதல்ல கேள்வி, குர்ஆன் இன்றும் அடிமைமுறையை பகிரங்கமாக ஆதரிக்கிறது என்பதுதான் இங்கு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள் நண்பரே.

  21. தச்சஆள் ,உங்களுக்கு புரிய வைக்கவே பத்துபைசா உதாரணத்தை சொன்னேன்.அந்த புரிதலுடன் அந்த உதாரணம் முடிந்துவிடும்.அந்த வசனங்கள் என்றென்றும் உயிருடன் இருக்கும் .அதன் வினைகள் இப்போது இல்லை.

  22. தச்சஆள் ///குர்ஆன் இன்றும் அடிமைமுறையை பகிரங்கமாக ஆதரிக்கிறது என்பதுதான் இங்கு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு///
    அப்படி ஆதரித்தால் இப்போது அடிமை முறை நடைமுறைகளில் இருந்திருக்கும் .அடிமைகளை விடுதலை செய்ய மக்களுக்கு அறவுரைகளை கூறி படிப்படியாக அடிமைமுறைகளை ஒழித்தது இஸ்லாமே . கடந்த நூற்றாண்டுகள் வரை கடைபிடித்து வந்த அடிமைமுறைகளை அதற்கு முன்னரே இஸ்லாம் ஒழிக்க முனைந்தது என்றால் அதைவிட மனித உரிமைகளை மதிக்கும் வாழ்க்கை வழி காட்டும் நெறிகள் எதிலும் இல்லை.இங்கு செங்கொடி என்ற பொய்யரால் கட்டப்பட்டுள்ளதைப் போல அடிமைகள் கருப்பர்கள் அல்ல. போர்கைதிகளையே இஸ்லாம் அடிமையாக்கியது அவர்கள் அரபுகளாகவும் யூதர்களாகவும் இருந்தனர்

  23. //அந்த வசனங்கள் என்றென்றும் உயிருடன் இருக்கும் .அதன் வினைகள் இப்போது இல்லை.// குர் ஆனின் வசனங்கள் எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் உயிருடன் இருக்குமாம், ஆனால் அதைபின்பற்றக் கூடாதாம். இது நல்ல வேடிக்கை. பின்பற்றத்தகாத வசனங்களால் என்ன உபயோகம்? நண்பரே..! இப்ராஹீம் உங்கள் ஆட்டம் முடிந்துவிட்டது.
    குர்ஆனின் பெரும்பகுதி சட்டங்களையும் அதன் விளக்கங்களையும் தான் கூறுகிறது. மேலும், வரலாற்று(?) செய்திகளின் வழியே அதுகூறுவது சட்ட விளக்கங்களைத்தான். பொதுவாக, வரலாற்றை எடுத்துரைக்கும் பொழுது நடைமுறை மாறுபாடுகளை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அது அன்றைய நடைமுறை என்று கடந்துவிடுவதுண்டு. ஆனால் குர்ஆனின் நிலையோ, இஸ்லாமின் நிலையோ அவ்வாறல்ல என்பதுதான் இங்கு கட்டுரைகூறும் செய்தி.
    குறிப்பிட்ட இவ்வனங்களில் அல்லாஹ், கூறும் சட்டவழிமுறைகளை, நீங்கள், பத்து பைசா- டவுசர்- தேங்காய் என்று கூறி அல்லாஹ்விற்கு காலம் கடந்த ஞானமில்லை என்று கூறிவிட்டீர்கள். பிற்காலங்களில் கைதிகளை கையாளும் முறை மாறும் அப்பொழுது அதற்கேற்றவாறு அடிமைமுறை உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று உங்களுக்கு அல்லாஹ் அனுமதி ஏதேனும் வழங்கியுள்ளானா? இந்த உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்?

  24. தஜ்ஜால்,

    இன்றுள்ள அமைப்பு முறையிலும் அடிமை முறையை குரான் ஆதரிக்கச் சொல்கிறது என்பதற்கான தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?

  25. @ மிச்சேல்,
    சுயநினைவோடுதானே இருக்கிறீர்கள்? அனைத்தையும் முதலிலிருந்து படித்துப் பாருங்கள். தரவுகள் தானாக வரும்.

  26. தஜ்ஜால்,

    தானாக தரவுகள் வரவில்லை. நீங்களாக சொல்லுங்களேன்.

  27. வணக்கம் மிச்செல்,

    இந்த புஹாரி ஹதிதில் மறுமை நாளில் அடிமைப் பெண் தன் எஜமானரை பெற்று எடுப்பாள் எனெ உங்கள் இறைத்தூதர் நபி(சல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்.

    50. நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து ‘ஈமான் என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு ‘ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது’ எனக் கூறினார்கள். அடுத்து ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்” என்று கூறினார்கள்.
    அடுத்து ‘இஹ்ஸான் என்றால் என்ன?’ என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: ‘(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்’ அடுத்து ‘மறுமை நாள் எப்போது?’ என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானார்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்” என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ‘மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். ‘அவரை அழைத்து வாருங்கள்” என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, ‘இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
    Volume :1 Book :2

    அடிமை முறை ஒழிக்க்கப்படும் என்பது நபிக்க்கோ அல்லவிற்கோ தெரியாது என்பது விள்ங்கும்.

    இதற்கு குரானில்தான் காட்ட வேண்டும் என நீங்கள் தாக்கியா செய்யலாம்.எனினும் குரானில் அடிமை முறை வருங்காலத்தில் இருக்க வேண்டும் என்றோ கொஞ்சம் கொஞ்சமாக ஒழிய வேண்டும் என்றோ எதுவும் கூறவில்லை.

    நபி(சல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ள விடயங்களை பற்றி மட்டுமே குரான் பேசுகிறது.தனக்கு பிறகு இப்படி மதம் உலக முழுதும் பரவும் என அவர் கனவு கூட காணவில்லை.

    ஆகவே இந்த ஹதிது போதுமானது.

    இல்லை குரானில் மட்டுமெ காண்பிக்க வேண்டும் எனில் குரானில் சொல்லாத சுன்னத்,5 வேளை தொழுகை, ,தொழும் முறை,ஜக்காத் அளவு போன்றவற்றை
    விட்டு விடுவீர்கள் என்றால் ஹதிதை மேற்கோள் காட்டுவதை விட்டு விடுகிறோம்.

    குரான் 4.24 சொல்லும் முட்டா என்னும் தற்காலிக திருமண‌த்தை உமர் ஹதிதில் நீக்கியது செல்லாது அல்லாஹ் அனுமதித்த ஒன்று என்வும் ஏற்க வேண்டும்.ஷியக்கள் முடாவை ஏற்கின்றனர். முட்டவின் இன்னொரு வடிவம் மிஸ்யார் இன்றும் அரபி சுன்னி பிரிவு முஸ்லிம்களல் பின்பற்ற‌ப் படுகிறது.

    குரான் எதை பற்ரியுமே தெளிவாக கூறாத புத்தகம் எனவே கூறுகிறோம்.மொழிபெயர்ப்பில் எந்த மாற்ற‌மும் செய்ய இயலும் எனில் அதனை என்ன சொல்வது?

    என்ன மாற்ற முடிந்தது என்றால் மலையளவு ஆழம் குழி தோண்டுவது தவுகீத் அண்ணனின் விள்க்கப் பதிவு காணவும்.

    தவுகீத் அண்ணனின் ‘குரானின் விளக்கமே’ ‘ஹதித்,குரானில் சொல்லாத வஹியும் உண்டு’ ஆகிய பொன்மொழிகளை பின்பற்றாமல் காஃபிராகி விடாதீர்கள்.

    நன்றி

  28. சார்வாகன் ////அடிமை முறை ஒழிக்க்கப்படும் என்பது நபிக்க்கோ அல்லவிற்கோ தெரியாது என்பது விள்ங்கும்////
    அடிமைமுறை ஒழிக்கப்பட்டுவிட்டதா? அப்படியெனில் இடையிடையே கொத்தடிமைகள் மீட்பு என்று செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றனவே ,ஒழிக்கப்பட்டால் இந்த செய்திகள் எங்கிருந்து வருகின்றன.?
    நபிவழி செய்தி உண்மைதான் தான் பெற்றெடுத்த மகனுக்கே அடிமையாகும் நிலைமை வரும் .அப்படிப்பட்ட மக்கள் உலகில் வரும் நாளில் இறுதிநாள் வரும் என்பதே ஹதிதின் கருத்து .அவர்கள் இஸ்லாத்தில் இருப்பார்கள் என்று சொல்லவில்லை .இஸ்லாம் அடிமையை ஆதரிக்கிறது என்றோ மறுமை நாள் வரை இஸ்லாம் அடிமைமுறையை ஆதரிகிறதோ என்ற அர்த்தம் இல்லை.
    6961. முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
    தவணை முறைத் திருமணம் (நிகாஹுல் முத்ஆ) புரிவதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கருதுவதாக (என் தந்தை) அலீ(ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது தவணை முறைத் திருமணத்திற்கும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்கும் தடைவிதித்தார்கள்’ என்று கூறினார்கள்.14
    ‘ஒருவர் தந்திரமாகத் தவணை முறைத்திருமணம் செய்தால் அத்திருமணம் செல்லாது’ என்று சிலர் கூறினர்.
    வேறு சிலரோ, ‘அந்தத் திருமணம் செல்லும்; ஆனால் (அதில் விதிக்கப்பட்ட) முன் நிபந்தனை செல்லாது’ என்று கூறினர்.

    சார்வாகன் உங்களுக்கு இதை நான் சொல்லிதெரிய வேண்டியதில்லை.இருந்தாலும் உங்களால சும்மா இருக்க முடியாது இஸ்லாத்தை விமர்சிக்க ஷியாக்களையும் காதியாநிக்களியும் துணைக்கு லைட்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது முஹம்மது நபி ஸல் அவர்களை இறுதி தூதராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்பதே எங்களது கருத்து

  29. நன்றி சார்வாகன் அவர்களே! எல்லாவற்றையும் நீங்களாகவே பேசி முடிவெடுத்து கொள்வீர்கள் போலிருக்கிறதே. இந்தக் கட்டுரை மதப்பரப்புரையாளர்களின் பசப்பல்களுக்கு எதிர்வினை என்ற ரீதியில் மட்டுமானதான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் இது ஓர் நல்ல கட்டுரைதான். ஆனால் எந்த முகாந்திரமும் இன்றி இன்றும் அன்று சொன்ன அடிமை வசனங்கள் பொருந்தும் என்ற கருத்துதான் தவறானது. நீங்கள் குறிப்பிட்ட அந்த ஹதீத் உண்மையென்றே வைத்துக்கொள்ளுவோமே, நான் அதிகம் அறிந்தவனல்ல என்று கூறிவிட்டுதான் அவர் கூறிச் செல்கிறார். அவருடைய தோழர்கள் கூட அக்காலத்திலேயே உலகம் அழியப்போவதாக நினைத்து பயந்து தொழுத சம்பவமெல்லாம் உண்டுதான். அதற்கென்ன. அது அன்றைய அறியாமை. ஆனால் நான் சொல்ல வருவது அதுவல்ல. நான் பீஜேவின் தொண்டனுமல்ல.

    அடிமைகால சமூகக் கட்டத்தில் ஓர் அடிமை ஒரு அடிமையுடையானுக்குச் சொந்தமானவன். அவன் என்றென்றும் அவனை வாங்குபருக்குச் சொந்தமாகிவிட்ட ஒரு பொருளைப் போன்றவன். அப்படியான ஒரு நிலைமை இருந்தது என்பது சரியா தவறா என்பதற்கு உள்ளேயெல்லாம் நான் இப்போது போகவில்லை. அந்த நிலையிலிருந்து சில சலுகைகளை முஹம்மது அவர்களுக்கு வழங்கினார். அவரது காலகட்டத்திற்கும் அதற்கு பின்னரும் ரோமானியம், எகிப்து, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் அடிமைகளை நடத்திய விதத்தை ஒப்புநோக்கின் முஹம்மது 90% மேல்தான். இன்றைய மதப்பரப்புரையாளர்கள் அடிமை முறையை முஹம்மது ஒழித்தார் என்ரு கதறுவதற்கு முஹம்மது என்ன செய்ய முடியும்? அடிமைகளை ஒழித்த மாவீரன் நான் என்று முஹம்மது நபியும் கதறிக்கொண்டிருக்கவில்லை.
    இன்றைய காலகட்டத்தில் நீங்கள் ஒரு கடையின் உரிமையாளராக இருந்து நீங்கள் மாதம் ரூ 50000 வருமானம் ஈட்டுபவராக இருந்து ஆனால் பணிபுரிபவருக்கு ரூ. 3000 அல்லது 5000 சம்பளம் கொடுப்பீர்களேயானால் செங்கொடியின் பார்வைக்கு நீங்கள் உங்களது பணியாளின் உழைப்பைச் சுரண்டும் கேடுகெட்ட மனிதர்தான். அல்லது இந்த கேடுகெட்ட சமூகத்தை மாற்ற விரும்பாதவராக இருந்தால் நீங்கள் ஒரு பிழைப்புவாதி. இதை ஏன் சொல்லவருகிறேன் என்றால் நியாயத்தை காலம் வென்றுவிடும்.

    அவ்வாறு ஒன்று ஒன்றிற்குச் சொந்தமாக இருந்த காலகட்டத்தில்தான் அதற்குண்டான சட்டத்தைப் பற்றி பேசமுடியும். இப்போதைய நிலைமை வேறு. அப்போதைய உற்பத்தி முறையும், அமைப்பு முறையும் இப்போது கிடையாது. காண்ட்ராக்ட் முறையில் வேலைக்குச் செல்லும் ஒருவன் அவன் எந்த வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டானோ அதற்கு மட்டுமே ஒப்பந்தம் பேசிக்கொள்கிறார்களே தவிர மொத்த உருவத்தையும் அல்ல. இதனிடையில் எல்லை மீறும் எஜமானன் தனது செய்கைக்கு ஆதரவாக அந்த வசனத்தை துணக்கழைத்து கொள்வதற்கு முஹம்மது பொறுப்பாகமுடியாது.

  30. இஸ்லாம் மத ஆராய்ச்சியாளரும் மற்றும் மாபெரும் மார்க்சியரான! திருவாளர் தஜ்ஜால், நான் மத நம்பிக்கையாளன் என்ற காரணத்தினாலேயே என்னை கிறுக்கன் என்று நேரிடையாகக் கூறாமல் சுயநினைவோடுதானே இருக்கிறீர்கள்? என்ற கேள்வியுடன் விளித்தார். அது அவரது மாபெரும் மார்க்சிய ஆராய்ச்சி பண்பிலிருந்து விளைந்ததாக இருக்கலாம். தேவையில்லை தஜ்ஜால் நேரிடையாக கிறுக்கன் என்றே அழைக்கலாம்.

  31. @ மிச்சேல்
    //நான் மத நம்பிக்கையாளன் என்ற காரணத்தினாலேயே என்னை கிறுக்கன் என்று நேரிடையாகக் கூறாமல் சுயநினைவோடுதானே இருக்கிறீர்கள்? என்ற கேள்வியுடன் விளித்தார்.// அப்படியல்ல நண்பரே, நம்பிக்கையென்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். அதில் தலையிடுவது முறையல்ல. ஆனால் பொதுவில் விவாதமென்று வந்த பிறகு விமர்சிக்காமலிருக்க முடியாது. உங்களை ”சுயநினைவோடுதானே இருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்குக் காரணம், இப்ராஹீம் அவர்களுடன் அதைப்பறிதான் விவாதித்துக்கொண்டிருக்கிறேன் திரும்பவும் “முதலிலிருந்தா” என்பதால்தான். நீங்கள் மதநம்பிக்கையாளர் என்பதால் அல்ல.
    //ஆனால் எந்த முகாந்திரமும் இன்றி இன்றும் அன்று சொன்ன அடிமை வசனங்கள் பொருந்தும் என்ற கருத்துதான் தவறானது.///உங்களது இந்த கருத்தை, //அந்த வசனங்கள் என்றென்றும் உயிருடன் இருக்கும் .அதன் வினைகள் இப்போது இல்லை//என்றார் இப்ராஹிம். அதற்கு நான்// குர் ஆனின் வசனங்கள் எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் உயிருடன் இருக்குமாம், ஆனால் அதைபின்பற்றக் கூடாதாம். இது நல்ல வேடிக்கை. பின்பற்றத்தகாத வசனங்களால் என்ன உபயோகம்?// என்றேன். இப்ராஹீம் இஸ்லாமின் அடிப்படையை அறிந்திருக்கிறார் எனவேதான் மேற்கொண்டு இதைத் தொடரவில்லை. நீங்கள் மீண்டும் தொடர்கிறீகள் எனில், இஸ்லாமின் அடிப்படையைக் கூட நீங்கள் பொருட்படுத்தவில்லை என்பதுதான் இதற்குப் பொருள். மேலும் சார்வாகன் அவர்கள் சிறப்பான தெளிவான, விளக்கமளித்த பின்னரும் தொடர்கிறீகள் என்றால், உங்களுக்கு இஸ்லாமைப் பற்றி இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது என்பேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s