இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 24

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 24

 

சோசலிச நாட்டில் வர்க்கப் போராட்டத்தை மறுத்த இடது வலதுக்கு எதிராக ஸ்டாலின் நடத்திய போராட்டம் 

  

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது, சராம்சத்தில் வர்க்கப் போராட்டத்தை உள்நாட்டில் தொடர்வதுதான். லெனினின் அடிப்படையான இந்த மார்க்சிய வரையறையை மறுத்து அதை டிராட்ஸ்கியம் “தனிநாட்டு சோலிசம்” என்று கூறி முதலாளித்துவ மீட்சியை முன்தள்ளியது. இப்படி லெனினை மறுக்கும் டிராட்ஸ்கிய நான்காம் அகிலம் கூறுகிறது தான் ஒட்டுண்ணியாக தங்கி இருக்கும் அரசு சொத்துடமைக்கு ஆபத்து நேராத வண்ணம் ஏகாதிபத்தியத்துடன் ஸ்டாலினிச அதிகாரத்துவம் எப்போதும் ஒரு மோதலில் இருந்து வந்தது. ஏகாதிபத்திய அழுத்தின் காரணமாக எல்லைப்புற நாடுகளில் (கிழக்கு ஐரோப்பாவில்) அதிகாரத்துவ ரீதியில் தனிச் சொத்துடமையை ஒழித்தது” என்கின்றனர். சர்வதேச புரட்சி இன்றி, புரட்சி வெற்றி பெற்ற நாட்டில் வெற்றியை உறுதி செய்யும் வர்க்கப் போராட்டத்தை தொடரக் கூடாது என்று கூறி, அதற்கு எதிராக சதிக் குழுக்களை கட்டிய டிராட்ஸ்கியம் தான் இப்படி புலம்புகிறது. குருச்சேவ் ஆட்சிக்கு வந்து எகாதிபத்தியத்துடன் கொஞ்சிக் குலாவிய போது ஏகாதிபத்தியங்கள் எப்படி வரவேற்றன என்பதை நாம் முன்னர் பார்த்தோம். டிராட்ஸ்கியம் இதனுடன் கைகோர்த்து நின்றதை, அன்றைய அவர்களின் அரசியல் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. இது வரையான ஏகாதிபத்திய சகாப்தத்தில் வர்க்கப் போராட்டம் மிக கூர்மையாக இருந்த காலகட்டம் ஸ்டாலின் காலகட்டமாகும். மூலதனம் அக்கால கட்டத்தில் சந்தித்த நெருக்கடியை, இதுவரையான தனது வரலாற்றில் பெற்றதில்லை. அந்தளவுக்கு எகாதிபத்திய நலன்களை உலகளவில் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கம் கேள்விக்குள்ளாகிய ஒரு நீடித்த நிலை காணப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஐக்கிய முன்னணி நீடித்த காலம் கூட, வர்க்கங்கள் தம்மை பலப்படுத்திக் கொண்டு வேகமாகவும், துரிதமாகவும், பலமாகவும் வளர்ச்சி பெற்றன. இரண்டாம் உலகயுத்தம் முடிந்த பின்பான சர்வதேச நிலைமையில், வர்க்க மோதல் உச்சத்தை எட்டியது. ஏகாதிபத்தியங்கள் எங்கும் கொந்தளிப்பான போராட்டங்கள் உச்சத்தை எட்டியது.

 

உதாரணமாக பிரான்சை எடுத்தால் 1947ம் ஆண்டு தேர்தலில் பிரஞ்சு கம்யூனிசக் கட்சி பெற்ற வாக்கு 28.6 சதவீதமாகும். குருச்சேவின் முதலாளித்துவ மீட்சிக்கு பின் 1959 இல் 19.2 சதவீதமாகும். இதுவே 1993 இல் 9.2 சதவீதமாகும். 2002 இல் 5 சதவீதத்துக்கு குறைந்து போனது. 1947 இல் பிரான்சில் அதிக வாக்குகளைப் (50 லட்சம்) பெற்ற முதலாவது கட்சியாகியது.. அதிக கட்சி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகியது. இது எல்லா நாடுகளிலும் பொதுவான நிலையாகும். இதன் அலை பத்து வருடங்களுக்கு மேலாக நீடித்தது. ஸ்டாலினை மறுத்து குருச்சேவ் முன்னெடுத்த முதலாளித்துவ மீட்சியின் பின் கட்சி முதலாளித்துவ கட்சியாக சீராழிந்து, கட்சி தொழிலாளி வர்க்கத்திடம் இருந்தே அன்னியமாகியது. ஸ்டாலின், பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணி தந்திரம், சர்வதேச புரட்சியின் சரியான கொள்கையை கொண்டிருந்தை இது சரியாகவே சுட்டிக் காட்டியது.

 

பல மூன்றாம் உலக நாடுகளில் காலனிகளுக்கு எதிரான போராட்டங்கள் உச்சத்தை அடைந்தன. ஏகாதிபத்தியங்கள் காலனிகளை அவசர அவசரமாக பொம்மை அரசுகளாக கைமாற்றின. தங்களால் உருவாக்கப்பட்ட கைக்கூலிகள் மூலம், அரைக்காலனி அரை நிலப்பிரத்துவ வடிவத்தில் காலனிகள் தக்கவைத்து பின்வாங்கினர். இதன் மூலமே வர்க்கப் போராட்டத்தை மூன்றாம் உலக நாடுகளில் தற்காலிகமாக பின்தள்ளிவைத்தனர். இதை குருச்சேவ் முதலாளித்துவ மீட்சியுடன் நிராந்தமாக்கினான். சென்ற நூற்றாண்டிலும் சரி, எகாதிபத்திய சகாப்தத்திலும் சரி, ஏகாதிபத்தியத்தின் மிகப் பெரிய எதிரியாக ஸ்டாலின் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தின் மிகக் கடுமையான எதிரியாக ஸ்டாலின் இருந்ததால், இருப்பதால் அந்தளவுக்கு நீண்ட காலம் தூற்றப்பட்டார், தூற்றப்படுகிறார். இது வர்க்கம் போராட்டங்கள் தொடரும் வரை தொடரும். ஏகாதிபத்தியத்தை அதன் வேரில் இருந்தே அசைத்து வீழ்த்தும் வரை, எதிரி வர்க்கம் ஸ்டாலினை தூற்றுவதும் தொடரும். ஸ்டாலின் சொந்த நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் நடத்திய வர்க்கப் போராட்டத்தை, மார்க்சிய தத்துவத்தையும் அதன் அரசியலையும் கொண்டு மட்டும் புரிந்து கொள்ள முடியுமே ஒழிய, வரட்டுக் கோட்பாடுகளைக் கொண்டு அல்ல. மக்கள் தமது சொந்த உழைப்பை தாமே அனுபவிக்கும் உரிமை, அங்கிகாரிக்கும் தத்துவம் மட்டுமே, வரலாற்றின் அனைத்து உண்மைகளுக்கும் சொந்தக்காரனாக இருக்கின்றது. இதற்கு வெளியில் உண்மை என்பது, வரையறைக்கு உட்பட்ட பொய்களால் பூச்சூடப்படுகிறது.

 

வர்க்கப் போராட்டத்தின் உள்ளடக்கத்தை மறுக்கும் போது, உண்மைகள் மறுக்கப்படுகின்றன. புரட்சிக்கு முன் பின் வர்க்கப் போராட்டம் உருவத்தில் மட்டுமே மாறுபடுகின்றது. உள்ளடகத்தில் அல்ல. வர்க்கப் போராட்டம் தான் இரண்டு சமுதாயத்தினதும் பொதுவான அரசியல் நிலையாகும். “தனி நாட்டில் சோசலிசம்” என்று கூறி டிராட்ஸ்கியம் இதை மறுத்து, தூற்றி மார்க்சியத்தை அதன் அடிப்படையில் இருந்தே திரித்துக் காட்டியது; 

 

இந்த நேரத்தில் ஸ்டாலின் 1930 இல் டிராட்ஸ்கி மற்றும் புக்காரின் அரசியல் நிலையை எப்படி சரியாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தினார் என்பதை பார்ப்போம். “டிராட்ஸ்கியத்தின் சாரம் என்ன?

 

முதலாவதாக, நமது நாட்டின் தொழிலாளி வர்க்கம், உழவர் வர்க்கம் ஆகியவற்றின் முயற்சிகளைக் கொண்டு சோவியத்யூனியனின் சோசலிசத்தை முழுமையாககக் கட்டுகின்ற சாத்தியப்பாட்டை மறுப்பதாகும். இதன் பொருள் என்ன? ஒரு வெற்றிகரமான உலகப் புரட்சியானது நம் உதவிக்கு கூடிய விரைவில் வராவிட்டால், நாம் முதலாளி வர்க்கத்திடம் சரணடைந்து, ஒரு முதலாளிய ஜனநாயகக் குடியரசுக்கு வழிகோல வேண்டியிருக்கும் என்பதாகும். இதன் விளைவாக, நம் நாட்டில் சோசலிசத்தை முழுமையாகக் கட்டுகின்ற சாத்தியப்பாட்டைப் பற்றிய ஒரு முதலாளிய மறுதலிப்பை நாம் காண்கிறோம். இந்த மறுதலிப்பு உலகப் புரட்சியின் வெற்றி பற்றிய “புரட்சிகரச்” சொற்றொடர்களால் மூடிமறைக்கப்படுகின்றது…

 

இரண்டாவதாக, நாட்டுப்புறத்தில் சோசலிசம் கட்டும்பணியில் உழவர் வர்க்கத்தினரின் முதன்மையான திரளினரை இழுக்கும் சாத்தியப்பாட்டை மறுப்பதாகும். இதன் பொருள் என்ன? தனிப்பட்ட உழவர்களின் பண்ணைகளைக் கூட்டறவு மார்க்கங்களில் மாற்றுகிற பணியில் உழவர் வாக்கத்தை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் பாட்டாளி வர்க்கத்துக்கு இல்லை என்பதாகும். அதாவது, உலகப் புரட்சியின் வெற்றி பாட்டாளி வாக்கத்தின் உதவிக்கு கூடிய விரைவில் வராவிட்டால், உழவர் வாக்கம் முதலாளிய அமைப்பை மீட்டுவிடும் என்பதாகும்…

 

டிராட்ஸ்கியத்தின் சாரம், கடைசியாக, கட்சியில் உருக்குப் போன்ற கட்டுப்பாடு இருக்க வேண்டியதன் தேவையை மறுப்பதாகும்.  கட்சியில் சிறு குழுக்களுக்கான சுதந்திரத்தை அங்கீகரிப்பதாகும் ஒரு டிராட்ஸ்கியக் கட்சியை உருவாக்குவதன் தேவையை அங்கீகரிப்பதாகும்;. டிராட்ஸ்கியத்தைப் பொறுத்தவரை, “சோவியத் யூனியனின் பொதுவுடமைக் கட்சி (போல்சவிக்) ஒரு தனி, ஐக்கியப்பட்ட, போர்குணமிக்க கட்சியாக இருக்கக்கூடாது. மாறாக குழுக்கள், சிறு குழுக்கள் ஆகியவற்றின் சேர்க்கையாக இருக்கவேண்டும். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மையம், தனித்தனிக் கட்டுப்பாடு, தனித்தனிப் பத்திரிகைகள் இன்னும் பிற இருக்க வேண்டும். இதன் பொருள் என்ன? கட்சிக்குள் இருக்கிற அரசியல் சிறு குழுக்களுக்கு சுதந்திரம் உண்டு என அறிவித்துவிட வேண்டும் என்பதாகும். கட்சிக்குள் இருக்கிற அரசியல் சிறு குழுக்களுக்கான சுதந்திரத்துடன் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கான சுதந்திரம் இருக்கவேண்டும். அதாவது முதலாளிய ஜனநாயகம் இருக்க வேண்டும் என்பதாகும்….

 

நடைமுறையில், சரணடைதல் என்பதுதான் இதன் உள்ளடக்கம். “இடது” சொற்றொடர்கள், புரட்சிகரத் துணிச்சல் வாதப் பாவனைகள் ஆகியவைதான் வடிவம். தோல்வி மனப்பான்மை உள்ளடகத்தை மூடி மறைத்து அதற்கு விளம்பரம் செய்யும் வடிவம் – இதுதான் டிராட்ஸ்கியத்தின் சாரம்.

 

”டிராட்ஸ்கியத்தின் இந்த இரட்டைத் தன்மை, நகர்புறச் சிறு முதலாளி வர்க்கத்தின் நிலையிலுள்ள இரட்டைத் தன்மையைப் பிரதிபலிக்கிறது. இச்சிறு முதலாளி வர்க்கம் நாசமடைந்த வருகின்றது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் “ஆட்சி”யை இதால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தனது அழிவைத் தவிர்த்துக் கொள்வதற்காக, “ஒரே தாண்டில்” சோசலிசத்துக்குள் குதித்துவிடவோ (இதனால் கொள்கையில் துணிச்சல்வாதமும் வெறியுணர்வும் தோன்றுகின்றது) அல்லது அது சாத்தியப்படவில்லை என்றால் சிந்தனைக்குப்படுகிற ஒவ்வொரு சலுகையையும் முதலாளியத்துக்கு வழங்கவோ (இதனால்தான் சரணாகதிக் கொள்கை உருவாகிறது) இவ் வர்க்கம் கடும் முயற்சி செய்கின்றது” என்று டிராட்ஸ்கியத்தின் அரசியலை மிகத் தெளிவாக ஸ்டாலின் தோலுரித்துக் காட்டினார்.

 

வலதுசாரியத்தைச் சேர்ந்த புகாரின், ரைகோவ், டாம்ஸ்கி ஆகியோரை அம்பலப்படுத்தி ஸ்டாலின் “சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டி முடிப்பதற்கான சாத்தியப்பாட்டை வலது திசைவிலகலாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்று சொல்லமுடியாது. இல்லை, அவர்கள் இதை ஒப்புக் கொன்கிறார்கள். இதுவே அவர்கள் டிராட்ஸ்கியவாதிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. ஆனால் வலது திசை விலகலாளரின் பிரச்சனை என்னவென்றால், ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டுவது சாத்தியம் என பெயரளவில் அவர்கள் ஒப்புக் கொள்கிற நேரத்தில், எந்தப் போராட்ட வழிமுறைகள் இல்லாமல் சோசலிசத்தைக் கட்டுவது சாத்தியம் இல்லையோ அவற்றை அங்கீகரிக்க மறுக்கிறார்கள்…. சோசலிசம் அமைதியாக, தானாகவே, வர்க்கப் போராட்டம் இல்லாமலேயே கட்டப்படமுடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆயினும், இத்தகைய அதிசயங்கள் வரலாற்றில் நிகழ்வதில்லை என்பதால், உண்மையில், வலது திசை விலகலாளர்கள் நம்நாட்டில் சோசலிசத்தை முழுமையாகக் கட்டுவதற்கான சாத்தியப்பாட்டை மறுக்கும் கண்ணோட்டத்துக்குச் சரிந்து விழுகின்றார்கள்.

 

….சோசலிசம் கட்டும் பணியில்  உழவர் வர்க்கத்தின் முதன்மையான திரளினரை இழுத்துக் கொள்வது சாத்தியம் என்பதை வலது திசை விலகலாளர்கள் மறுக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. இல்லை அது சாத்தியம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இது அவர்களை டிராட்ஸ்கியவாதிககளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆனால் இதைப் பெயரளவுக்கு ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில், எந்த போராட்ட வழிமுறைகள் இல்லாமல் சோசலிசத்தைக் கட்டுவதில் உழவர் வர்க்கத்தை ஈர்த்துக் கொள்வது சாத்தியம் இல்லையோ அவற்றை அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. .. இப்போதுள்ள முக்கியமான விசயம் ஒரு உயர்விகிதத் தொழில் வளர்ச்சி அல்ல, கூட்டுப் பண்ணைகளோ அரசுப் பண்ணைகளோ அல்ல. சந்தையின் ஆதாரச் சக்திகளை “விடுவித்தல்” சந்தைக்குச் “சுதந்திரம் வழங்கல்”, நாட்டுப்புறத்தில் உள்ள முதலாளிகள் உட்பட தனிப்பட்டவர்களின் பண்ணைகள் மீதுள்ள தளைகளை அகற்றுதல் தான் முக்கியமான விசயம் என்கின்றனர். ஆயினும் குலாக்குகள் சோசலிசத்துக்கு வளர்ந்து செல்ல மாட்டார்கள். ஆதலால், சந்தையை “விடுதலை செய்வது” என்பது, குலாக்குகளை ஆயுதபாணிகள் ஆக்குவதும் உழைக்கும் மக்களை நிராயுதபாணிகள் ஆக்குவதுதான் என்பதால், சோசலிசம் கட்டும் பணியில் உழவர் வர்க்கத்தின் முதன்மைத் திரளை ஈர்த்துக் கொள்வது சாத்தியம் என்பதை மறுக்கும் கண்ணோட்டத்துக்கு வலது திசைவிலகலாளாகள் உண்மையில் சரிந்து விழுகின்றார்கள்…” இந்த இரு பிரதான போக்கையும் அம்பலம் செய்த ஸ்டாலின், இதன் விரிவான அடிப்படையை சுட்டிக் காட்டுகின்றார்.

 

இரண்டு முனைகளில் சிறுமுதலாளியத் தீவிரவாதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் “இடதுசாரிகளு”க்கு எதிராகவும் சிறுமுதலாளிய மிதவாதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலது சாரிகளுக்கு எதிராகவும் சமரசமற்ற போராட்டத்தை நடத்துவதே கடமையாகும்” என்று ஸ்டாலின் பிரகடனம் செய்தார். அவர் எச்சரித்த படி இரண்டும் தனித்தனியாக பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்து சதிகளை கட்டியதுடன், இறுதியில் இவை இணைந்து கொண்டன. பாட்டாளி வர்க்கத் தலைமையை மேல் இருந்து அகற்றுவதன் மூலம் முதலாளித்துவ மீட்சியை நடத்த முனைப்புக் கொண்டன. 

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22

23. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

2 thoughts on “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 24

  1. சில சந்தேகங்கள் ஸ்டாலின் குறித்து… ஏதாவது புத்தகம் பரிந்துரை செய்ய முடியுமா.( தயவு செய்து நடுநிலையான புத்தகத்தைச் சொல்லவும்)

  2. நண்பர் அக்கப் போரு,

    உண்மை பொய் இந்த இரண்டுக்கும் இடையில் நடுநிலை என்று ஏதாவது உண்டா? உங்களுக்கு பொய்யாக தெரிபவை குறித்து நீங்கள் ஆராயுங்கள். பின் எது சரியானது என்று முடிவுக்கு வாருங்கள்.

    கேள்விபதில் பகுதியில் உங்கள் சந்தேகங்களை பதிவு செய்யுங்கள்.

    நீங்கள் சென்னையை சேர்ந்தவரென்றால் கீழைக்காற்று பதிப்பகத்திற்கு ஒருமுறை சென்று பாருங்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s