அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 2

இஸ்லாம் அடிமை முறையை ஒழித்ததா? அடிமை முறையை ஒழித்துக் கட்டும் அவசியமோ தேவையோ முகம்மதுவுக்கு இருக்கவில்லை. மட்டுமல்லாது அடிமை முறையின் வரலாற்றுப் பார்வையோ, அது பின்வரும் காலங்களில் நீக்கப்பட்டு மாறுபாடடையும் என்றோ முகம்மது அறிந்திருக்கவில்லை. ஆனால் சில போதுகளில் தன்னால் போதிக்கப்படும் கட்டளைகளை மீறுபவர்களுக்கான தண்டனையாக, பரிகாரமாக அடிமையை விடுவிப்பது குறித்து பேசியிருக்கிறார். இந்த விடுவிப்பு என்பது அடிமை முறையை நீக்குவதோடு தொடர்புடையதா? முகம்மதோ அல்லது அவரால் இயம்பப்படும் அல்லாவோ அடிமை முறை மனித குலத்திற்கு எதிரானது அநீதியானது என்று எந்த இடத்திலும் கூறவில்லை. எனவே அடிமை முறை நீக்கப்பட வேண்டும் எனும் சிந்தனை அவருக்கு எழுந்திருக்க முடியாது. அடிமைகள் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து அவர் கூறியிருப்பவைகளும் தன்மை மீறி அவர்கள் கொடுமைப் படுத்தப்படுவதைக் கண்ட இரக்க உணர்ச்சியின் எதிரொலிப்பு தானேயன்றி வேறொன்றுமில்லை.

 

இதை இரண்டு விதங்களில் பார்க்கலாம். 1. அடிமைகள் விடுவிப்பு அவர்களின் விடுதலையாக முகம்மதால் கையாளப்பட்டதா? 2. ஒரு மனிதன் அடிமைகளை வைத்திருப்பதை முகம்மது எந்த அடிப்படையில் அணுகினார்?

 

அடிமைகள் விடுவிப்பு அவர்களின் விடுதலையாக முகம்மதால் கையாளப்பட்டதா?: கீழ் வரும் ஹதீஸைப் பாருங்கள்

 

அடிமையாக இருந்த பரீரா என்ற பெண்மணி விடுதலைப் பத்திரம் எழுதிக் கொள்வதற்காக என உதவியை நாடினார். நீ விரும்பினால் உனக்குறியதை நானே கொடுத்து விடுகிறேன், உரிமை எனக்கு வர வேண்டும் என்று கூறினேன். ஆனால் அப்பெண்ணின் எஜமானர்கள் என்னிடம் நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டியதை தந்து கொள்ளலாம், ஆனால் உரிமை எங்களுக்கு வேண்டும் என்று கூறினார்கள். இது பற்றி நபி அவர்களிடம் நான் கூறிய போது, நீ அவளை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்து விடு. விடுதலை செய்தவருக்கே உரிமையுண்டு, என்று கூறிவிட்டு மேடை மீது ஏறி.. .. .. புஹாரி 456

 

முகம்மதின் பிரியத்துக்குறிய மனைவியாகிய ஆய்ஷா அறிவிக்கும் இந்த ஹதீஸில் வரும் உரிமை என்பது என்ன? எஜமானரிடமிருந்து விடுபட விரும்பும் பெண்ணாகிய பரீராவுக்கு அவரின் எஜமானர்கள் குறிப்பிட்ட தொகையை தந்து விட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அந்த தொகைக்காக ஆய்ஷாவின் உதவியை நாடுகிறார். இந்த உதவிக்கு முகம்மதின் மனைவி போடும் நிபந்தனை உரிமை தனக்கு வேண்டும் என்பது. அதாவது விடுதலை பெற்ற பெண் தன் உழைப்பிலிருந்து சேமிக்கும் பணத்துக்கு வாரிசாக தானே இருக்க வேண்டும் என்பது தான் அந்த உரிமை என்பது. இதை பரீராவின் எஜமானர்கள் மறுக்கவே, வழக்கு முகம்மதிடம் வருகிறது முகம்மது நாட்டாமையாக இருந்து கொடுக்கும் தீர்ப்பு தான் வாங்கியவருக்கே உரிமை என்பது. ஒரு பெண் உழைப்பதின் மூலம் ஈட்டும் பணம் விலை கொடுத்து வாங்கிய முகம்மதின் மனைவிக்கு வர வேண்டும். இது தான் முகம்மதின் அகராதியில் விடுதலை என்பதன் பொருள். அடிமைகளின் விடுதலை என்பது நடப்பு எஜமானரிடம் இருந்து வேறொரு எஜமானரை ஏற்படுத்திக் கொள்ளுதல் எனும் பொருளில் தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதை இன்னோரு ஹதீஸ் மிகத் தெளிவாக விளக்குகிறது.

 

.. .. .. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்னை விடுதலை செய்த எஜமானர்களான காப்பாளர்களின் அனுமதியின்றி பிறரை தன் காப்பாளராக ஆக்கினால் அவன் மீது அல்லாஹ்வின், வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது. புஹாரி 1870

 

முகம்மதிற்குப் பிறகு நான்காவது கலிபாவாக இருந்த முகம்மதின் மகள் பாத்திமாவின் கணவரான அலி அறிவிக்கும் ஹதீஸ் இது. தன்னுடைய காப்பாளரை மாற்றிக் கொள்ள யார் பணம் கொடுக்கிறாரோ அவரே புதிய காப்பாளர். அவர் அனுமதியின்றி எதுவும் செய்யக் கூடாது. என்றால் இது என்ன பொருளிலான விடுதலை? முகம்மது கூறும் இன்னொரு வகையான விடுதலையான பரிகார விடுதலையும் அடிமை முறை விடுதலையாக இல்லாமல் மதக்குற்றம் செய்த ஒருவனுக்கு ஏற்படுத்தப்படும் பொருளதார இழப்பு எனும் அடிப்படையிலேயே இருக்கிறது.

 

அடிமைகளை வைத்திருப்பதை முகம்மது எந்த அடிப்படையில் அணுகினார்? குரானில் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் என்றொரு தொடர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெண் அடிமைகளைக் குறிக்கும் சொல் இது. திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என இஸ்லாம் அனுமதிக்கிறது. இந்த அனுமதியை இன்னும் விரிவாக முகம்மது தன் சீடர்களுக்கு வழங்குகிறார்.

 

.. .. .. இறைத்தூதர் அவர்களே, எங்களுக்கு போர்க்கைதிகள் கிடைக்கிறார்கள். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால், நாங்கள் அஸ்ல் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? அப்படி செய்யாமலிருப்பது உங்களுக்கு கடமையல்ல. ஏனெனில் உருவாக வேண்டும் என அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை. என்று கூறினார்கள். புஹாரி 2229

 

அஸ்ல் என்ற சொல்லுக்கு கலவியின் உச்சநிலையில் ஆணுக்கு வெளிப்படும் விந்தை பெண்ணுறுப்பில் செலுத்தாமல் வெளியில் வீணாக்குதல் என்பது பொருள். போரில் தோல்வியடைந்த குழுவினரின் சொந்தங்களான பெண்களை அடிமைகளாக வென்றவர்கள் பிடித்து வருகிறார்கள். அவர்களை போரில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கிட்டு வழங்குகிறார் தலைவர். அப்படி கிடைத்த அடிமைகளை வேண்டியவர்கள் வைத்துக் கொள்வார்கள்: வேண்டாதவர்கள் விற்று பொருளீட்டிக் கொள்வார்கள். அப்படி விற்பனை செய்வதற்கு முன் தங்களின் வெறியை தணித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். வழமையான கலவியில் ஈடுபட்டு கருத்தரித்து விட்டால் போதிய விலை கிடைக்காது என்பதால் கருத்தரிக்காமல் இருப்பதற்காக இவ்வாறு செய்ய அனுமதி கேட்கிறார்கள். அதற்கு முகம்மது அனுமதி வழங்குகிறார், இது தான் இந்த ஹதீஸின் முழுமையான பொருள். அடிமை முறை தவறு எனும் எண்ணம் கொண்டிருக்கும் ஒருவரால் இப்படியான அனுமதியை வழங்க முடியுமா?

 

அடிமைகளின் விடுதலை குறித்து முகம்மது என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை இன்னொரு ஹதீஸ் மிகத் தெளிவாக விளக்குகிறது.

 

நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி அவர்கள், நீ விடுதலை செய்து விட்டாயா? என்று கேட்க, நான், ஆம், என்று கூறினேன். நபி அவர்கள், நீ உன் தாயின் சகோதரர்களுக்கு அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள். புஹாரி 2592

 

ஆதாவது முகம்மதின் மனைவியர்களில் ஒருவர் தன்னிடமுள்ள ஒரு அடிமையை விடுதலை செய்ததை (யாரிடம் விற்று ஈடாக எவ்வளவு பணம் வாங்கினார் என்ற விபரம் இல்லை) விட உன்னுடைய உறவினர்களுக்கு அடிமையாக கொடுத்திருக்கலாமே என்று ஆதங்கப் படுகிறார். அடிமைகள் விடுதலை குறித்து முகம்மது பேசுவதன் உள்ளடக்கம் என்ன என்பது தெரிகிறதா? இப்படிப்பட்டவர் அடிமைகளின் விடுதலைக்கு தொடக்கப் புள்ளியாக இருந்தார் என்று மதவாதிகள் கூசாமல் புழுகிக் கொண்டிருக்கும் போது நாம் நகைத்தால் மட்டும் போதுமா?

 

அடிமை முறை என்பது ஆண்டைகளின் உற்பத்திக் கருவி போன்றது. தங்களுக்கு உற்பத்தியை குவித்துத் தரும் கருவிகளின் மீது ஆண்டைகள் கரிசனம் கொள்வது இயல்பானது தான். ஆனால் அது எல்லைக்கு உட்பட்டது. இந்த அடிப்படையில் முகம்மது கூறியவைகளைத் தான் அடிமைத்தளையை நீக்குதல் என்று நீட்டி முழக்குகிறார்கள் மதவாதிகள். எடுத்துக்காட்டாக ஒன்றை பார்க்கலாம். புஹாரியில் 2552ம் ஹதீஸ் இப்படி கூறுகிறது,

 

உங்களில் எவரும் உன் ரப்புக்கு உணவு கொடு, உன் ரப்புக்கு ஒலுச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு என்று கூற வேண்டாம். என் எஜமானன் என் உரிமையாளன் என்று கூறட்டும். என் அடிமை, என அடிமைப் பெண் என்று யாரும் கூற வேண்டாம் பணிப்பெண், என் பணியாள் என்றே கூறட்டும்

 

அதாவது, அடிமைகள் தங்கள் ஆண்டைகளை ரப்பு கடவுள் என்று அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இதை தடுக்க எண்ணும் முகம்மது அதனுடன் அடிமை என்ற பதத்திற்கு பதிலாக வேலையாள் எனும் பதத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார். பூ என்றால் என்ன புய்ப்பம் என்றால் என்ன? வேலை நடந்தால் சரி என்பது தான் முகம்மதின் பாலிசியாக இருந்திருக்கிறது. அதையே இன்று மதவாதிகள் அந்த ஹதீஸின் பின்பாதியை மட்டும் பிய்த்துப் போட்டு அஹா.. .. விடுதலை விடுதலை என்கிறார்கள். ஆனால் இஸ்லாம் பிறந்தது முதலின்றுவரை இஸ்லாமியர்களே ஆண்டு கொண்டிருக்கும் அவர்களின் புனித பூமியான சௌதியில் 1960 வரை அடிமை முறை இருந்தது, அதன் பின்னர் தான் சட்டம் போட்டு மாற்றியிருக்கிறார்கள் என்பதும் மதவாதிகளுக்கு புரிவதே இல்லை, அல்லது புரியாதது போல் நடிக்க விரும்புகிறார்கள்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

10 thoughts on “அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 2

 1. Dear Friend.
  You are given all wrong message, if you know how to give explanation give otherwise keep poet.
  By
  Moahamed

 2. @Moahmed
  //You are given all wrong message// தோழர் செங்கொடி கூறியுள்ளதில் என்ன wrong உள்ளது என்பதை கூறினால் தேவலை. அல்லது பேசாமலிருப்பது நல்லது

 3. உங்களில் ஒருவரை விட மற்ற வரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக் கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமை களிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ் வின் அருட்கொடையையா நிராகரிக்கிறார்கள்?16′;71குர் ஆன்
  செங்கோடியே ,உங்களது கம்யுனிசத்தை இதனோடு ஒப்பிட்டு பாருங்கள்.
  2539. & 2540. மர்வான் இப்னி ஹகம் மற்றும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.
  ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தங்கள் செல்வங்களையும் முஸ்லிம்களால் (சிறைபிடிக்கப்பட்ட) போர்க்கைதிகளையும் திருப்பித் தந்து விடும்படி கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் (அக்குழுவினரை) எழுந்து நின்று (வரவேற்று), ‘என்னுடன் நீங்கள் பார்க்கிற (மற்ற)வர்களும் இருக்கின்றனர். உண்மையான பேச்சே எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, செல்வங்கள் அல்லது கைதிகள் இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களை எதிர்பார்த்தே இருந்தேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியது முதல், பத்து நாள்களாக அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரண்டில் ஒன்றையே திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, ‘நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்’ என்று கூறினார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து (உரையாற்றலானார்கள். அப்போது) ‘உங்களுடைய (இந்தச்) சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களின் (குலத்தினரின்) கைதிகளைத் திருப்பித் தந்து விட விரும்புகிறேன். உங்களில் மனப்பூர்வமாக இதைச் செய்ய (திருப்பித் தந்துவிட) விரும்புகிறவர் செய்யட்டும் (திருப்பித் தந்து விடட்டும்). தம் பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர் அல்லாஹ் நமக்கு (அடுத்தடுத்த வெற்றிகளின் வாயிலாகக்) கொடுக்கவிருக்கும் முதலாவது செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும் வரை அவ்வாறே செய்யட்டும். (தம்மிடமே கைதிகளை வைத்துக் கொள்ளட்டும்.) (இதைச் செவியுற்றதும்) மக்கள், ‘நாங்கள் உங்களுக்காக மனப்பூர்வமாக (கைதிகளைத்) திருப்பித் தந்து விடுகிறோம்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் சம்மதிப்பவர் யார், சம்மதிக்காதவர் யார் என்று நாம் அறிய மாட்டோம். எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை நம்மிடம் தெரிவிக்கட்டும் (பிறகு பார்த்துக் கொள்வோம்)” என்று கூறினார்கள். எனவே, மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களிடையேயுள்ள தலைவர்கள் அவர்களுடன் (கலந்து) பேசினர். பிறகு, நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, அவர்கள் மனமொப்பி சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுதான் ஹவாஸின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.
  செங்கோடியே ,இங்கே அடிமைகள் முழுமையாக விடுதலை செய்யப் பட்டுள்ளனரா??இல்லையா?
  நீங்கள் குறிப்பிடும் ஹதித்கள் ஒருவரிடமிருந்து முற்றிலுமாக அடிமைப்பட்டவரை வாங்கி ,அவர் சுயமாக சம்பாதித்து தனது விலைகொடுத்து வாங்கியவருக்குரிய பணத்தை திருப்பிக் கொடுப்பது பற்றி குறிப்பிடுகிறது

  Volume :2 Book :49
  544. ‘தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
  2545. மஃரூர் இப்னு சுவைத்(ரஹ்) அறிவித்தார்.
  நான், அபூ தர் கிஃபாரீ(ரலி) ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அதைப்பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூ தர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்; நான் ஒருவரை (அவரின் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘இவரின் தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?’ என்று கேட்டார்கள். பிறகு, ‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். எனவே, எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கிறாரோ அவர், தன் சகோதரருக்கு, தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்” என்று கூறினார்கள்.
  Volume :2 Book :49

  இப்படிப்பட்ட சகோதரத்துவத்தை கொண்டுவர இஸ்லாத்தைத் தவிர மற்றவர்களுக்கு இருபதுநூற்றாண்டுகள் பிடித்ததே

 4. MR MOHAMED
  PLEASE GIVE THE RIGHT EXPLANATION OF SLAVES.OTHERWISE
  DONT SAY ABOUT WRONG,BCAS MUHAMMAD IS A 50% RIGHT PERSON,50% WRONG PERSON,READ HADITH AND QURAN.
  SOMETIMES 100% INHUMAN BEING ACTIVITIES LIKE HITLER.
  PLEASE BROTHER READ HADEETHS AND QURAN.

  WHILE I WAS READ THE QURAN AND HADEETH IN TAMIL I UNDERSTAND THE ISLAM IS THE ARABIANS CULTURE BASED WAY.
  PLEASE GIVE THE RIGHT PATH OF SLAVES I WAIT

 5. i think that you are a loser, & you have lot of stress & depressive , so please go to check your health pls , because you are a negative thinger

 6. dear friend

  you given endless hadis in all your statement,if you read the ended hadis you wil be clear about the meaning you want. and Islam is the first said about the human rights and woment rights too.

 7. “செல்வத்தைத் தமது அடிமை களிடம் கொடுத்து”
  “தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து” :
  முதலில் சகோதரர் இப்ராகிம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், அடிமைபடுத்தும் செயல் என்பது மிகவும் கேவலமான,மனிதத்தன்மையற்ற, மிருககுணமுடைய நடத்தை உள்ள மனிதனின் செயல்.நீங்கள் சொல்லும் நற்செயல்கள் அனைத்தையும் நான் ஏற்றுகொள்கிறேன்,அதே சமயத்தில், சக மனிதனை நல்ல விதமாகவோ,அதுவன்றியோ அடிமைபடுத்த இந்த அரபுலக மார்க்கவாதிகளுக்கு உரிமை என்ற அந்தஸ்தை கொடுத்தது சரியா? என்பதுதான் கேள்வி.
  “செல்வத்தைத் தமது அடிமை களிடம் கொடுத்து”
  “தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து” :
  இந்த வசனத்தில் கூறப்படும் அடிமை என்ற சொல்லாடல் வெறும் பெயர்தாங்கி வசனமல்ல.ஏனென்றால் அடிமையை உதாரணம் கூறும்போது கூட ஒன்றும் இயலாதவன் என்று அல்லாஹ்வே கூறுகிறான் என்பதை அறிவீர்கள்!
  குரானின் வசனங்கள் முஹம்மதுக்கு பின் வந்த அரபுலக மார்க்க மேதைகளின் கூட்டத்தில்,இயற்றப்பட்டது என்பதற்கு இந்த “அடிமை” என்ற சொல் பயன்பாட்டில் உள்ள முறையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதே போதுமானது! அற்ப பிறவியான என்னைபோன்றவர்களே “அடிமை” என்ற ஒரு சொல்லை வெறுக்கும்போது அந்த காலத்தில் வேறு வழி இல்லை அதனால்தான் அப்படி நடந்தது என்று சொல்வதின் மூலம் அல்லா வழி ஏதும் தெரியாத கிறுக்கன் என்று நீங்கள் கேவலப்படுத்துகின்றீர்கள்!
  உலகம் அழியும் மட்டும் உள்ள வேதத்தில் இதைபோன்ற வார்த்தைகள் தேவையா?
  அடிமையை விடுதலை செய்தார்கள்,அடிமையை விடுதலை செய்தார்கள்,அடிமையை விடுதலை செய்தார்கள், பார்த்தீர்களா?,, பார்த்தீர்களா? என்று புளகாங்கிதம் அடைய முதலில் வெட்கப்படவேண்டும்,.
  சாகும் வரை அடிமையை வைத்திருந்த நபியால் எப்படி அடிமை என்ற ஒன்றை ஒழிக்க முடியும்? மறுபடியும் நினைவுபடுத்துகிறேன்,அடிமை விடுதலை என்பது வேறு, அடிமை ஒழிப்பு என்பது வேறு!
  இனிமேல் அடிமை என்ற ஒன்று தடை செய்யப்படுகின்றது என்ற சட்டமியற்றிய மனிதனே அல்லாஹ்வை விட சிறந்தவன்!
  அடிமை விடுதலை செய்,என கூறியதெல்லாம் காலத்தின் கட்டாயம்,அந்த நாட்டு கலாசாரம்! மேலும்
  அது ஜாஹிலிய காலம் அதனால் நபி அப்படி ஆறு வயது பெண்ணை திருமணம் செய்தார்,அடிமையை சட்டென்று ஒழித்தால் பாதிப்பு ஆகும்,குறுகிய கால திருமணம் என்பது அறியாமை காலம் என்றெல்லாம் கூறுவதற்கு குறுகிய மனப்பான்மையும்,விசாலமான அறிவும் இல்லாததே காரணம் !!
  அதனை எப்படி வாழ்வியல் நெறியாக உலகம் உள்ளமட்டும் ஏற்றுக்கொள்ள முடியும்!?
  கண்மணி நாயகம் அடிமையை நல்ல விதமாக நடத்தினாலும் தவறு தவறுதான்! ஏன் ,அதை அடிமைபடுத்தாமல்,அடிமை என்ற வட்டத்திற்குள் அந்த பிறவியை வைக்காமல் நல்லவிதமாக நடத்துவதில் என்ன சிக்கல்? பணிப்பெண்,பணியாள் என்று அழையுங்கள் என்று கூறிவிட்டால் போதுமா?,அதனை எப்படி வாழ்வியல் நெறியாக உலகம் உள்ளமட்டும் ஏற்றுக்கொள்ள முடியும்!?
  முதலில் ஏக இறைவன் அப்படி குரானில் குறிப்பிட்டு இருக்கவேண்டும்!
  சாமியே சத்தியம் பண்ணுதாம்! பொய்சாட்சி சொல்ல வந்தானாம் பூசாரி!! என்பது போல் ,ஏனிந்த தகிடு தத்தம்!
  அல்லாவே பணிப்பெண் ,பணியாள் என்று பதிவு செய்ய மனமில்லாமல் அடிமை,அடிமைப்பெண் என்றே குறிப்பிடும்போது,நபிக்கு ஏனிந்த அதிகபிரசங்கிதனம்?

 8. அடிமை முறை என்பது pre-Islamic- காலத்தில் நடைமுறையில் இருந்த சமுதாயத்தோடு பின்னிப்பிணைந்த அமைப்பாக இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஆடு மாடுகள் ஒட்டகங்கள் இருப்பதை போல அடிமைகள் இருந்த காலம் அது, இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன .

  ஒன்று : அந்த காலங்களில் போரில் கைதிகளாக பிடிபட்டவர்களை அதை வெற்றி கொண்ட ஆர்மியிடம் பங்கிடுவது வழக்கத்தில் இருந்தது.

  இரண்டு : pre-Islamic- காலத்தில் இருந்த அரேபியாவில் அடிமை வர்த்தகம் நடைமுறையில் இருந்தது . பொருட்களை பரிவர்த்தனம்செய்வதை போல ..அடிமைகளை வர்த்தகம் விற்கும் வாங்கும் சந்தைகள் இருந்தன .

  அடிமை முறை சமுதாயத்தோடு பின்னிப்பிணைந்த இந்த சூழலில் , அதை ஒழிப்பதற்கு படிப்படியான (gradual / systematic) முறையை இஸ்லாம் மேற்கொள்ளதுவங்கியது .

  எடுத்தேன் ..கவிழ்த்தேன் என்று உடனதித்தடை ஆணை என்பது சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை உருவாகிவிட கூடும் என்பதற்காக .

  ஒரு மிகப் பெரும் மக்கள்தொகை உள்ள அடிமைகளுக்கு அவர்களுடைய தேவைகலை பூர்த்தி செய்வது இயலாத காரியமாக இருந்தது ..அந்த அளவுக்கு மக்கள் தொகையாக அடிமைகள் இருந்தனர் , அவர்களுக்கு நிரந்தரமாக குடி அமைப்பு , பொருளாதார , சமூக தேவைகளை செட்டில் செய்து / அமைத்து தருவதற்கு போதிய பொருளாதாரம் ,,புதிதாக அமைத்த தேசிய கருவூலத்தில் இல்லை.

  அதில் பெரும்பாலான அடிமைகள் வயதானவர்களாகவும் ..தக்குதாமே சப்போர்ட் செய்ய இயலாதவர்களாகவும் இருந்தனர்.

  அவர்களை immediate – ஆக ப்ரீ செய்தால் ..மேற்கூறிய காரணங்கள் ..அதாவது பொருளாதார , சமூக பிரச்சினை ..அதாவது பிச்சை எடுத்தளும் , விபச்சாரமும் (இப்பொழுது இருப்பதை போல ) மட்டமே அவர்களுக்கு ஒரே வழியாகப்போயவிடும் .

  பெண் அடிமைகளை போர்த்தவரை .. அவர்களை immediate – ஆக ப்ரீ செய்தால்…மிக பெரும் அளவில் brothels உருவாக இதுவே காரண மாகிவிடும்.

  எப்படி இஸ்லாம் படிப்படியாக அடிமை ஸ்தாபனத்தின் முறையை ஒழித்தது ?

  Various directives were given at various stages because of which it gradually became possible for this evil to be eradicated from the society. These are summarized below

  ஆகவேதான் அடிமைமுறை சம்மந்தமாக பல்வேறு கட்டளைகளை பல்வேறு நிலைகளில் வழங்கப்பட்டது. அவைகள் பின்வருமாறு :

  1. நபி (ஸல்) அவர்கள் அடிமைகளை விடுவிக்க முஸ்லிம்கள் வலியுறுத்தினார்கள் .
  அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார்.
  “ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். உடனே நான், இந்த நபிமொழியை அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். இதைக்கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) பத்தாயிரம் திர்ஹம்களையோ ஆயிரம் தீனாரையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும. (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையே அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள். (புஹாரி : 2517)
  2.அடிமைகளை விடுதலை செய்யும் வரை ..அவர்களுடன் அன்புடனும் , இரக்கத்துடனும் நடந்துகொள்ளுமாறு முஸ்லிம்களிடம் வலியுறுத்தப்பட்டது .
  “…ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்…” ) – இறைதூதர் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜு பேருரயிளிருந்து )
  “ அடிமைகள் உங்களுசைய சகோதரர்கள் . சர்வ வல்லமையும் பொருந்திய இறைவன் அவர்களை உங்களுக்கு கீழ் நியமித்துள்ளான் . ஆகவே நீங்கள் உண்பதையே அவர்களுக்கு உன்னன கொடுங்கள் ..நீங்கள் உடுதுவதையே அவர்களுக்கு உடுத்துங்கள் ,அவர்கள் சக்திக்கு மீறி எந்த வேலையும் அவர்களுக்கு சுமத்தாதீர்கள் .அவ்வாறு சுமத்தினால் அவ்வேளையில் நீங்களும் அவர்களுக்கு உதவி புரியுங்கள் (முஸ்லிம் : 1661)
  “யாரொருவர் ஒரு அடிமையை அறிந்தாரோ அல்லது அடித்தாரோ ..அந்த பாவத்துக்கு பரிகாரமாக அவர் அந்த அடிமையை விடுதலை செய்துவிடவேண்டும் “ – (முஸ்லிம் : 1657)
  3.யாராவது கொலை , கொள்ளை போன்ற குற்றங்கள் செய்து விட்டால் அதற்க்கு பரிகாரமாக , அடிமைகள் விடுவிக்கப்படவேண்டும் என்று அறிவிறுத்தப்பட்டது . அடிமைகளை விடுவித்தல் மிக சிறந்த தர்மமாக அறிவிக்கப்பட்டது .(பார்க்க குரான் வசனங்கள் 4:92, 58:85, 5:89)

  4.அடிமைகளை மணந்து கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டது .ஏனெனில் சமுதாய ரீதியில் ..ஒழுக்க ரீதியிலும் அவர்கள் சம அந்தஸ்து பெறவேண்டும் என்பதற்காக (பார்க்க குரான் வசனங்கள் 24:32-33)
  5.பொருளாதார சிக்கலால் சுதந்திரமுள்ள பெண்களை மணக்க இயலாதவர்கள் ..அடிமை பெண்களை மணந்துகொள்ளும்படி கட்டளைஇடபட்டார்கள் ..ஏனெனில் ..அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சுதந்திரமுள்ளவைகலாக மாறிவிடும் ..மேலும் கணவனின் மரணத்திற்கு பின் அந்த பெண்ணும் சுதந்திரமடைந்தவல் ஆவாள்.
  6.“….(ஜகாத் என்னும்) தானங்கள் , ஏழைகளுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்குமே உரியவை. …(9:60)
  7. குரான் ( 24:33) – இல் இடப்பட்ட கட்டளைப்படி …ஒரு அடிமை இரண்டு options மூலம் தன்னை விடுவித்துகொள்ளலாம் . குறிப்பிட்டா அளவு பணத்தை செலுத்தியோ அல்லது தன்னுடைய எஜமானுக்கு தேவையான குறிப்பிட்ட சர்வீஸ்/வேலை செய்து கொடுத்தோ ப்ரீ – ஆகிக்கொள்ளலாம் . இந்த இரண்டு options- இல் ஏதாவது ஒன்றை பெற்று அடிமைகளை விடுதலை செய்துவிடும்படி கட்டளையிட்டுள்ளான் . இதன் மூலம் , அடிமை சுதந்திரம் பெற்று தனக்கென இவ்வுலகில் survive – ஆக நம்பிக்கை கிடைத்து விடும் . மேலும் பெண் அடிமைகளை ..அவர்களுக்கு விருப்பத்திற்கு மாறாக ,,நிர்பந்தித்து உறவு கொள்வதை தடுக்கப்பட்டுள்ளது ..அப்படி மீறி செய்தால் அந்த பாவம் எஜமானனை தான் சேரும் ,,அந்த அடிமையை இறைவன் மன்னித்து விடுகின்றான் .

  8. பசித்தவர்களுக்கு உணவு கொடுங்கள் , நோயாளிகளை விசிட் செய்து விசாரியுங்கள் மேலும் மீட்பு பணம் கொடுத்து அடிமையை விடுவியுங்கள் (புஹாரி , Book 65, Number 286)
  குரானிலிருந்து சான்றுகள் ..இதை இன்கு விளங்கிகொல்வதர்க்கு கீழுள்ள வசனங்களை அனலைஸ் செய்க :
  கீழுள்ள குரான் உரைகளை கவனமாக ஆய்வு செய்தால் …அடிமைகளின் தகுதியை மேம்படுத்த இறைவன் குரானின் மூலம் இட்ட படிப்படியான கட்டளைகள் ..குர்ஆனில் உரைகள் ஏற்படுத்திய gradual progress புரிய வரும் ..இதோ சில வசனங்கள் .
  .(4:25) And whoever among you cannot [find] the means to marry free, believing women, then [he may marry] from those whom your right hands possess of believing slave girls. And Allah is most knowing about your faith. You [believers] are of one another. So marry them with the permission of their people and give them their due compensation according to what is acceptable. [They should be] chaste, neither [of] those who commit unlawful intercourse randomly nor those who take [secret] lovers. But once they are sheltered in marriage, if they should commit adultery, then for them is half the punishment for free [unmarried] women. This [allowance] is for him among you who fears sin, but to be patient is better for you. And Allah is Forgiving and Merciful.
  Tamil
  உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;). அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்;. ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;. அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;. தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்

  .(4:36) Worship Allah and associate nothing with Him, and to parents do good, and to relatives, orphans, the needy, the near neighbor, the neighbor farther away, the companion at your side, the traveler, and those whom your right hands possess. Indeed, Allah does not like those who are self-deluding and boastful.
  Tamil
  மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்;. அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை

  (2:117) புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;

  (4: 92 ) “…….And never is it for a believer to kill a believer except by mistake. And whoever kills a believer by mistake – then the freeing of a believing slave and a compensation payment presented to the deceased’s family [is required] …..”

  (5:89)….Allah will not impose blame upon you for what is meaningless in your oaths, but He will impose blame upon you for [breaking] what you intended of oaths. So its expiation is the feeding of ten needy people from the average of that which you feed your [own] families or clothing them or the freeing of a slave…..
  உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;. எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்;. (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது, உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்….

  குரானின் அடிப்படை போதனையே …அடிபணிவதும் அடிமைதனமும் படைத்த இறைவனுக்கு மட்டுமே ஆகும் . மனிதனுக்கோ அல்லது மனிதர்களுக்கோ , படைப்பினங்களுக்கோ அல்ல.

  குர்ஆன் தெளிவாக கூறுகிறது…ஒரு மனிதர் எவ்வளவு உயர்ந்தவர் ஆக இருந்தாலும் ..எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் ..ஈவன் இறைதூதர் அந்தஸ்தில் இருந்தாலும் கூட ..எந்த மனிதர்க்கும் மற்ற மனிதர்களை அடிமையாக்க உரிமை இல்லை
  (3:79) – It is not for a human [prophet] that Allah should give him the Scripture and authority and prophethood and then he would say to the people, “Be servants to me rather than Allah ,” but [instead, he would say], “Be pious scholars of the Lord because of what you have taught of the Scripture and because of what you have studied.”
  மேலுள்ள இறைவசனம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது . எந்தவொரு மனிதனும் ..அது இறைதூதரே ஆனாலும் மற்ற மனிதர்களை அடிமை படுத்துவதற்கு உரிமை கிடையாது . ஈவன் இறைதூதர் அவர்களுக்கே மனிதர்களை அடிமை படுத்த உரிமை இல்லாதபோது , எப்படி சாதாரண இறை நம்பிக்கையாளன் மற்றவர்களை அடிமைபடுத்த முடியும் .

  மறக்க முடியாத உண்மை என்னவெனில் ..மற்ற மனிதர்களை அடிமைபடுத்த கட்டளை இட்டு பாண்டேஜ் என்ற அடிமைத்தனத்தில் வீழ்த்த எந்த வசனமும் குர்ஆனில் இடம் பெறவில்லை ..மாறாக பல வசனங்களில் , இறைநம்பிக்கையாளர்களுக்கு , அடிமைகளை பாண்டேஜ் என்னும் அடிமைதனத்திலிருந்து அடிமைகளை விடுவிக்க சொல்லி ஊக்குவிக்கப்பட்டுள்ளது …அறிவுருதபட்டுள்ளது ..மேலும் கட்டளையும் இடப்பட்டுள்ளது

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s