இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 25

 

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 25

 

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், ஜனநாயகமும்

 

ஒரு நாட்டில் வர்க்கக் போராட்டத்தை தொடர மறுப்பதுதான், மார்க்சியத்தின் முதன்மையான அரசியல் விலகலாகும். இது புரட்சி நடக்காத நாட்டிலும் சரி, நடந்த நாட்டிலும் சரி இதுவே அடிப்படையான கோட்பாட்டு ரீதியான விலகலாகும். லெனின் “இடதுசாரி கம்யூனிசம் ஒரு குழந்தைப் பருவத்தின் கோளாறு” என்ற நூலில் “நடைமுறைகளால் எழுப்பபப்பட்ட பிரச்சனைகளுக்குத் தத்துவம் விடைகாண்டாக வேண்டும்” என்றார்.

 

நடைமுறை சார்ந்த பிரச்சனைகளை வரட்டுத்தனமான கோஷங்களாலும், சொற்கோவைகளாலும், வாய் வீச்சாலும் விடை காணமுடியாது என்பதை ஸ்டாலின் துல்லியமாக தோலுரித்துக் காட்டினார். லெனினை மறுத்த டிராட்ஸ்கியம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்ற முடிந்ததே ஒழிய, பிரச்சனைக்கு நடைமுறை ரீதியான தீர்வைக் காணமுடியவில்லை. இதை லெனினுக்கு மட்டுமல்ல ஸ்டாலினுக்கு எதிராகவும் செய்ததுடன் அல்லாது, அதுவே உச்சத்தையும் எட்டியது. இதற்காகவே ஏகாதிபத்தியங்களுடன் அக்கபக்கமாக கைகோர்த்துக் கொண்டனர். ஒரு நாட்டில் புரட்சி எற்பட்ட நிலையிலும் சரி, ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளிலும் சரி தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதை வரட்டுக் கோட்பாடுகளால் மூடிமறைத்தனர். வர்க்கப் போராட்டம் தொடர்ந்த போது, அதை எதிர்த்துச் சதிகளைச் செய்தனர். இயலாத போது முத்திரை குத்தி தூற்றினர். சதிகளில் ஈடுபட்டவர்கள் புரட்சியினால் தண்டிக்கபட்ட போது, ஐயோ மனித உரிமை மீறல் என்று கூக்குரல் இட்டு அவதூறுகளை சோடித்தனர். தூய ஜனநாயகம் பற்றி மூச்சு இழுத்து அழுதனர்.

 

முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரம்புகள் என்ன? “முதலாளியத்தில், மக்களில் கூலி அடிமைத்தனம், வறுமை, துன்பம் ஆகிய நிலைமைகள் அனைத்தாலும் ஜனநாயகம் வரம்புக்குஉட்படுத்தப்படுகின்றது, நசுக்கப்படுகின்றது, குறைக்கப்படுகின்றது, சிதைக்கப்படுகின்றது.” என்றார் லெனின். ஜனநாயகம் பற்றி புலம்புபவர்கள் இதற்குள் நின்று தான் குரைக்கின்றனர். சோசலிச அமைப்பில் ஜனநாயகம் இந்த வரம்பைக் கடந்துவிடுகின்றது. இதில் இருந்து மக்களை விடுவிக்கின்றது. இதன் மூலம் ஜனநாயகம் மக்களின் செயல்பாடாக மாறுகின்றது. இதை மறுத்து முதலாளித்துவ வரம்புக்குள் ஜனநாயகத்தை மட்டுப்படுத்தி, வறுமையை, துன்பத்தை, கூலி அடிமைத்தனத்தை நிலைநாட்ட, மக்களின் முதுகில் எறி ஜனநாயகத்தின் காவலராக வேடம் போடுகின்றனர். இதை உருவாக்க விரும்புபவர்கள், இருக்கும் இந்த அமைப்பை பாதுகாக்க விரும்புபவர்கள் முன்வைக்கும் ஜனநாயக ஒடுக்குமுறை மீது, விரிந்த ஜனநாயகம் எதிர் நிலையில் செயல்படுகிறது. இதை எதிர்த்தே ஒடுக்கும் ஜனநாயகத்தைக் கோரி நிற்கின்றனர்.

 

இதன் போது “தூய” ஜனநாயகம் பற்றி ஏகாதிபத்தியங்களே புலம்புகின்றன. ஆனால் அது மூலதன விரிவாக்கத்துக்கு மட்டுமே, என்பது அவர்களின் அகாராதி. இது மூடி மறைக்கப்படுகிறது. அதையே டிராட்ஸ்கிய கழிசடைகளும், மார்க்சியத்தை எதிர்க்கும் எல்லா வண்ண நாய்களும் கவ்விக் கொண்டு குலைக்கின்றன. வர்க்க சமுதாயத்தில் ஜனநாயகம் என்பது அனைவருக்கும் இருப்பதில்லை. இது மார்க்சியத்தில் அடிப்படையான உள்ளடக்கம். ஜனநாயகம் என்ற பெரியல் மக்களை பிளக்கும் செயல்பாட்டுக்கு, சுரண்டும் செயல்பாட்டுக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் இடம் இல்லை. இது முதலாளித்துவத்தில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதில், பாட்டாளி வாக்கத்துக்கு உள்ள அடிப்படையான ஒரு தத்துவார்த்த விசயம் மட்டுமின்றி நடைமுறை ரீதியானதும் கூட. சமாந்தரமான சமூக இயக்கத்தில் ஒவ்வொரு துறையிலும் இதன் அடிப்படையில் தான், கோடு பிரித்து தன்னை வேறுபடுத்திக் காட்டுகின்றது. அனைவருக்கும் ஜனநாயகம் இருப்பதாக குலைப்போர், ஜனநாயகத்தின் சமூக இருப்பபையே புரிந்து கொள்வதில்லை அல்லது மூடிமறைக்கின்றனர். அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால் ஜனநாயகம் என்ற கோரிக்கை முதல், ஜனநாயகம் என்ற சொல்லே சமுதாயத்தில் இருந்து அற்றுப்போய்விடுகின்றது. ஜனநாயகம் மறுக்கப்படும் வரை தான், ஜனநாயகம் நீடிக்க முடியும். அதாவது ஜனநாகம் மறுக்கப்படும் போதே, மறுப்பவனுக்கு ஜனநாயகம் இருக்க முடியும். இந்த தத்துவார்த்த உள்ளடகத்தை மறுக்கும் டிராட்ஸ்கியம் முதல் எல்லா வண்ணக் கோட்பாட்டுளர்களும் மார்க்சியத்துக்கு திருத்தத்தை முன்தள்ளுகின்றனர். மார்க்சியம் அனைவரினதும் ஜனநாயகத்தை அங்கீகாரிக்க வேண்டும் என்று புலம்புகின்றனர். மார்க்சியம் மட்டும் தான், ஜனநாயகத்தை எதிரிடையில் சரியாக புரிந்து, அதையே பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் கீழ் இருந்து மேல் நோக்கி கையாளுகின்றது. அதாவது ஜனநாயகம் எப்போதும் மேல் இருப்பவனுக்கு இருந்ததை மறுத்து, உழைப்பவனுக்கு ஜனநாயகம், உழைக்க மறுப்பவனுக்கு ஜனநாயகம் இல்லை என்பதை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கையாண்டது. சமூகத்தின் மேல் கட்டுமானத்தின் அனைத்து துறையிலும் இது கறாராக கையாளப்பட்டது, கையாளப்படும். இதில் சித்தாந்த துறை முதல் எல்லா சமூக இயக்கத்திலும் கறாராக கையாண்டது. இதன் மேல் தான் டிராட்ஸ்கியம் முதல் எல்லா வண்ண கோட்பாட்டாளர்களும் கூச்சல் இட்டு, அவதூறுகளையும் அள்ளிப் பொழிந்தனர். இதன் மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற அரசியல் உள்ளடகத்தை அரசியல் ரீதியாக மறுத்து நிற்கின்றனர்.

 

உண்மையில் இவர்களால் புரட்சியின் எந்த வெற்றியையும் சரி, புரட்சியையும் கூட நடத்த முடியாது. வரட்டுக் கோட்பாடுகளால் பூச்சூட்டும் போது புரட்சியை நடத்தமுடியாது. மாறக சேறடிக்கவும் ஒப்பாரி வைக்கவுமே முடியும். லெனின் கூறியது போல் “புரட்சிகரமான தத்துவம் இல்லை என்றால், புரட்சிகரமான இயக்கமும் இருக்க முடியாது”.  டிராட்ஸ்கி, குருச்சேவ், டெங் போன்றவர்கள் முன்வைத்த முதலாளித்துவ மீட்சிகான கோட்பாடுகளுக்கும் நடைமுறைக்கும் எதிரான புரட்சிகர தத்துவத்தின் அவசியத்தை லெனின் கூற்று உறுதிசெய்கின்றது. வரலாற்றில் பல சமூக இயக்கங்கள் மீள மீள புரட்சிகர தத்துவத்தின் தேவையை கோருகின்றன. புரட்சிகர மார்க்சிய தத்துவத்தை கைவிட்டு, உலகெங்கும் அதன் தொங்கு சதையாக போன இயக்கங்கள், கட்சிகள் அனைத்தும் சீரழிந்து போன வரலாறு நமக்கு காட்டுவது, புரட்சிகரமான தத்துவத்தை நாம் கொண்டிருப்பதன் தேவையைத்தான். புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தின் வர்க்கப் போராட்டத்தை, ஜனநாயக புரட்சி நடக்காத நாடுகளின் ஜனநாயக புரட்சியை எதிர்த்தும், ஒட்டு மொத்த சமூக இயக்கத்தையே வரட்டுக் கோட்பாடுகளால் தூற்றுவதுமே டிராட்ஸ்கியத்தின் நூறு வருட கால அரசியலாக உள்ளது. எங்கெல்ஸ் சமூக இயக்கத்தில் மார்க்சியத்தின் வெற்றி என்பது “விஞ்ஞானம் கண்டுபிடிக்கிற புதிய விசயங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒத்தாக இருக்கும் வண்ணம், பொருள்முதல்வாதம் அவ்வப்பொழுது புதுப்புது அம்சமுடையதாக ஆகவேண்டும்” என்றார். மாவோவின் புதிய ஜனநாயக புரட்சியையும், ஸ்டாலின் நடத்திய தொடர்சியான வர்க்கப் போராட்டத்தை தூற்றிய டிராட்ஸ்கியம், வர்க்கப் போராட்டத்தின் இயங்கியல் கண்ணோட்டத்தை என்றுமே எற்றுக் கொண்டதில்லை. 

 

இயங்கியல் ரீதியாக சமுதாயத்தை புரிந்து கொள்வதில் லெனின் ஒரு மார்க்சியவாதியாக இருந்தனால் தான், அவர் எல்லா நிலைமைகளையும் கவனத்தில் எடுத்து முரணற்றவகையில் புரட்சிகரமான தத்துவத்தால் வழிநடத்தினார். ஜனநாயக புரட்சி நடை பெறாத நிலையில் பாட்டாளி வர்க்கத்தின் கடமை பற்றி லெனின் “…மன்னர் ஆட்சியையும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தையும், மத்திய கால ஆட்சி முறையையும் எதிர்ப்பதற்கு விவசாய மக்கள் “அனைவரையும்” அணைத்துக் கொண்டு புரட்சி முன் செல்லும் (அந்த அளவுக்கு, புரட்சி முதலாளியத் தன்மை வாய்ந்தாக, முதலாளிய வர்க்க ஜனநாயகத் தன்மை வாய்ந்தாக இருக்கிறது) அதன் பிறகு கிராம பணக்கார விவாசாயிகள், குலாக்குகள், லாபக் கொள்ளைக்காரர்கள் முதலியவர்களை உள்ளிட்டு முதலாளியத்தை எதிர்ப்பதற்காக, எழை விவசாயிகள், அரைத் தொழிலாளிகளாக மாறியிருக்கும் எழை விவசாயிகள், எல்லா சுரண்டப்பட்ட மக்கள் அணைவரையும் அணைத்துக் கொண்டு புரட்சி முன் செல்லும்; இந்த அளவுக்கு, புரட்சியானது சோசலிசத் தன்மை வாய்ந்தாகிறது. முந்தியதற்கும் பிந்தியதற்குமிடையே ஒரு பெரிய மதில் சுவரை எழுப்பி பிரிக்க முயற்சிப்பது – இரண்டு புரட்சிகளுக்கமிடையே ஒரு இடைக்காலம் தேவைப்படுவது, தேவைப்படாததும் தொழிலாளி வர்க்கம் இரண்டாவது கட்டத்துக்குப் பாய்வதற்கு எந்த அளவுக்கு ஆயத்தமாயிருக்கிறது என்பதையும்; எழை விவசாயிகளுடன் எந்த அளவுக்கு ஒற்றமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் மட்டுமே பொறுத்திருக்கும்.இதை பாராமல், வேறெந்த காரணத்துக்காகவும் முதலாவது, இரண்டாவது கட்டங்களுக்கு மத்தியில் ஒரு இடைக் காலத்தைத் காண முயற்சிப்பது – மார்க்சியத்தைக் கோணல் படுத்தித் திரித்துக் கூறுவதாகும், கேவலப்படுத்துவதாகும் மார்க்சியத்துக்கப் பதிலாக முதலாளிய மிதவாதத்தை நிலைநாட்டுவதாகும்” என்றார். லெனின் 1905களில் ரஷ்யாவில் இருந்த நிலைமையை கருத்தில் கொண்டு இதைக் கூறியிருந்த போதும், இது இன்றுவரை மூன்றாம் உலக நாடுகளுக்கு, அதாவது ஜனநாயகப் புரட்சி நடை பெறாத அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இது தொடர்பாக லெனின் மூன்றாம் உலக நாட்டுக் கட்சிகளுடான கடிதங்களிலும் மற்றும் நேரடியான சந்திப்பின் போதும் சரி, சோவியத் யூனியனில் இணைந்து இருந்த ஆசியப் பகுதிகளில் புரட்சியின் தொடர்ச்சியான போக்கு பற்றியும் தனது மார்க்சிய ஆய்வுரைகளில், சோவியத் மாதிரியான புரட்சிகர வழியை பின்பற்றுவதை எதிர்த்தார். மாறாக சமூக பொருளாதார குறிப்பான நிலைமைகளில் இருந்து புரட்சியை நடத்தவும், அதன் மூலம் சோவியத்துகளை உருவாக்க கோரினார். மாவோ புதிய ஜனநாயக புரட்சிகர வடிவத்தை உருவாக்கிய போது, ஜனநாயகப் புரட்சி நடை பெறாத நாடுகளின் குறிப்பான நிலையில் ஜனநயாக புரட்சியை உள்ளடக்கிய வகையில் முன்னெடுத்த போது, மாவோ மார்க்சிய இயங்கியல் தன்மைய செம்மையாக கையாண்டார். இதையே டிராட்ஸ்கியம் தூற்றுகின்றது. மார்க்சியத்தை கோணல் படுத்தி திரித்துக் கூறுகின்றது. மார்க்சியத்தை ஏகாதிபத்திய நோக்கத்துக்கு இசைவாக கேவலப்படுத்துகின்றது.

 

டிராட்ஸ்கி “தனிநாட்டில் சோசலிசத்”தை ஸ்டாலின் கட்டுவதாக கூறி, தொடர்ந்த வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து சதிகள் செய்த போது, உலகப் புரட்சி நடைபெற வேண்டும் என்றான். ஆனால் உலகப்புரட்சி பற்றி லெனின் “மேற்கு ஐரோப்பிய முதலாளிய நாடுகள், சோசலிச வளர்ச்சிப் பாதையில் முன்னேறாதவாறு தம்மைத்தாமே தடைப்படுத்திக் கொண்டிருகின்றன. துளித்துளியாக சோசலிஸப் பாதையில் நகர்வதன் மூலம் அல்ல; துளித்துளியாக சோசலிசத்திற்குப் “பக்குவப்படுவதன்” மூலம் அல்ல; சில நாடுகள் வேறு சில நாடுகளைச் சுரண்டுவதன் மூலம் தான், ஏகாதிபத்திய யுத்தத்தில் தோற்கப் போகும் நாடுகளையும், – கிழக்கு நாடுகள் அனைத்தையும், வெற்றியடையும் நாடுகள் சுரண்டுவதன் மூலம் தான் –  மறுபக்கத்தில், ஏகாதிபத்திய யுத்தத்தின் விளைவாகவே, கிழகத்திய நாடுகள் அனைத்தும் புரட்சி இயக்கத்தில் இணையும்படி இழுக்கப்பட்டுவிட்டன. அதாவது உலகப் புரட்சி இயக்கம் எனும் பெரு வெள்ளத்தில் கலக்க ஆரம்பித்துவிட்டன” இந்த நிலைமை எதார்த்தத்தில் மிகச் சரியாக இருந்தது. இரண்டாம் அகிலக் கட்சிகள் துரோகம் இழைத்து, புரட்சிகர தத்துவமற்ற நிலையில், ஜரோப்பாவின் பல நாடுகளில் புரட்சி என்பது காட்டிக் கொடுக்கப்பட்டது. ருசியாவில் மென்ஸ்சுவிக்குகள், டிராட்ஸ்கிய நடுநிலைவாதிகள் கூட புரட்சிகரமான தத்துமற்ற புரட்சிக்கு எதிராக சரிந்து சென்ற போது, போல்ஸ்சுவிக்குகள் மட்டுமே பலமான பாட்டாளி வர்க்க கட்சி என்ற வகையில், முதலாம் உலக யுத்தகாலத்தில் மிகப் பலமாக எதிர்நீச்சல் போட்டதன் மூலம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். டிராட்ஸ்கி போன்றோர் லெனின் தலைமையில் புரட்சி வெற்றி பெறும் என்ற நிலையில் தான், 1917 இல், லெனினுடன் இறுதி நேரத்தில் இனைந்து கொண்ட ஒரு சந்தர்ப்பவாதிகளாகவே நீடித்தனர். மற்ற நாடுகளில் புரட்சி காட்டிக் கொடுக்கப்பட்டது. இதன் போது டிராட்ஸ்கி இiடைநிலைவாதியாக ஜரோப்பிய இரண்டாம் அகிலத் துரோகிகளுடன் அக்கம் பக்கமாக செயல்பட்டு புரட்சிக்கு துரோகம் இழைப்பதில் முன் கை எடுத்தவன் தான்.. முதலாம் உலக யுத்தத்தின் போது பல நாடுகளில் புரட்சி நடைபெறாது தடுத்ததில், டிராட்ஸ்கிய கோட்பாட்டுக்கும் பங்கு உண்டு. பின்பு உலகப் புரட்சி நடைபெறவில்லை என்று ஒப்பாரி வைத்து, புரட்சி நடந்த நாட்டில் தொடரும் வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியான சதிகளைச் செய்தான்;

 

1905 இல் லெனின் ஜனநாயகப் புரட்சி உள்ளடங்கிய சோசலிசம் பற்றிய மார்க்சிய இயங்கியலை பற்றி கூறும் போது ”ரசியப் புரட்சி ஒரு சில மாதங்களில் முடிந்த விடக்கூடிய ஒரு இயக்கமாக இருக்க கூடாது. அதிகாரத்தில் உள்ளவர்களிடம் சில சலுகைகளைப் பெறுவதோடு நிற்காமல், அவர்களை அடியோடு வீழ்த்தும் பொருட்டு அது அநேக வருடங்கள் நடக்கக்கூடிய ஒரு இயக்கமாக ஆகவேண்டும்” என்றார். இதைத் தான் மாவோ கலாச்சார புரட்சியாக தொடர்ந்தார். கலாச்சாரப் புரட்சிக்கு முன்பாக கல்வி மற்றும் விவாதங்கள் என எண்ணற்ற வடிவங்களில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முனைந்த போது, அது தொடர்ச்சியான தோல்விகள் ஊடே எதிரி ஒழிந்து கொள்வதும் நிகழ்ந்தது. முதலாளித்துவ மீட்சி பலமான கூறாக நீடித்தது. பரந்தபட்ட மக்கள் அதில் பங்கு கொள்வது மிக குறைவாக இருந்தது. கலாச்சார புரட்சி இதை முற்றாகவே மாற்றியது. ஸ்டாலினுக்கு முன் உதாரணமற்ற, அனுபவமற்ற நிலையில் வர்க்கப் போராட்த்தின் கூர்மையான போக்கு, முதலாளித்துவ மீட்சியாக அச்சுறுத்தியது. இது ஆழமான வன்முறை சார்ந்த சதிகளாக பாட்டாளி வர்க்க அரசை அச்சுறுத்திய போது, ஸ்டாலின் மேலிருந்து களையெடுப்பை நடத்தினார். இதில் எற்பட்ட சில தவறுகள் மற்றும் மக்களின் பங்களிப்பற்ற போக்கு ஒரு தொடர் புரட்சியாக தொடர்வதை தடுத்தது. மாவோ மக்களின் புரட்சியாக, கலாச்சாரப் புரட்சியை உருவாக்கினார். உண்மையில் மாவோவின் கலாச்சார புரட்சியும், ஸ்டாலின் களையெடுப்பும் வர்க்க எதிரிகளை தனிமைப்படுத்தி ஒடுக்கும் தொடர்ச்சியான போராட்ட வடிவமாகவே முன்னெடுக்கப்பட்டவை. ஒன்று மேல் இருந்தும், இரண்டாவது கீழ் இருந்து நடத்தப்பட்டது. மேல் இருந்து எதிரியை ஒடுக்கிய போது எதிரிகள் ஒழிக்கப்பட்ட போது, மாற்றுக் கருத்து உடைய நட்பு சக்திகளும் திருந்தக் கூடிய சக்திகளும் கூட களையெடுக்கப்பட்ட தவறு நிகழ்ந்தது. ஸ்டாலின் 1939 இல் 18வது காங்கிரசில் கட்சி அணிகளை தூய்மைப்படுத்தும் போது சில தவறுகளை இழைத்தை ஒத்துக் கொண்டு சுயவிமர்சனம் செய்தார். தவறுகளை தடுத்து நிறுத்த பெரிய அளவிலான களையெடுப்பை 1937 இல் தடுத்து நிறுத்தினார். இதைப்போல் ஸ்டாலின் சீனப் புரட்சியின் வழி காட்டுதலில், சில தவறான வழிகாட்டுதல்களை செய்ததை சுயவிமர்சனம் செய்தார். ஸ்டாலின் முன் அனுபவமற்ற ஒரு வர்க்கப் போராட்டத்தில் எற்பட்ட தவறுகளை, எதிரிடையில் நாம் கற்றுக் கொள்ளும் வகையில் மார்க்சியம் அனுகுகின்றது. முன் அறியாத சூனியத்தில் தவறுகள் நடப்பது இயல்பு. இந்த தவறும் கூட எதிரியின் சதிகளின் உயர்ந்த கட்டத்தில் தான் நடந்தது. 

 

மாவோ கலாச்சாரப் புரட்சியை நடத்திய போது எதிரிகள் சரியாக துல்லியமாகவும் இனம் காணப்பட்டனர். திருந்தவும், மீள சரியாக கட்சியின் பக்கம் வருவதற்கான ஒரு பாதை அனுமதிக்கப்பட்டது. ஸ்டாலினில் இருந்து மாறுபட்ட இந்த போக்கின் போது, மீள மீள புனர் ஜென்மம் எடுத்த எதிரிகள் மீள மீள அடையாளம் காணப்பட்டனர். அப்படி இருந்தும் திருத்த எடுத்த முயற்சிகள் மூலம் அவர்கள் தப்பிப் பிழைத்தனர். டெங் உட்பட பின்னால் முதலாளித்துவ மீட்சியை நடத்திய அனைவரும், பாட்டாளி வர்க்கம் நடத்திய கலாச்சார புரட்சியில் முன்பே எதிரி என இனம் காணப்பட்டவர்கள் தான். ஆனால் திருந்துவதற்கு அனுமதிக்கப்பட்ட வழிகள் ஊடாக, மீண்டும் புனர் ஜென்மம் எடுத்து முதலாளித்துவ மீட்சியை நடத்தினர். ஸ்டாலின் பாதையிலும், மாவோ பாதையிலும் முதலாளித்துவ மீட்சியாளர்கள் ஒழிந்து கொண்டு மீண்டும் முதலாளித்துவ மீட்சியை நடத்தினர். ஆனால் சீனாவில் முதலாளித்தவ மீட்சியை நடத்தியவர்கள் முன் கூட்டியே கலாச்சாரப் புரட்சியில் இனங்காணப்பட்டவர்கள் என்பது இங்கு முக்கியமான விடையமாகும்;. கலாச்சாரப் புரட்சியில் எதிரி வர்க்கமாக இனம் காணப்பட்ட தலைமை மட்ட உறுப்பினர்களையும், கீழ் மட்ட உறுப்பினர்களையும் வேறுபடுத்தி அணுக வேண்டிய புதிய நிலைமையை சீனாவின் முதலாளித்துவ மீட்சி கோருகின்றது. கீழ் மட்ட உறுப்பினர்கள் திருந்தும் வழிக்கு விரிவான பாதையும், தலைமட்ட உறுப்பினர்களுக்கு அது ஒரு குறுகிய பாதையாகவும் அல்லது மக்களை உயிருடன் உறிஞ்ச விரும்பும் இந்த அட்டைகளை நெருப்பினால் பொசுக்கிவிட வேண்டியதை இடித்துரைக்கின்றது. எதிர்கால வரலாற்றுப் பாதைக்கு, கடந்தகால வர்க்கப் போராட்டமே இதை எடுத்துரைக்கின்றது. கலாச்சார புரட்சியில் எதிரியாக இனம் காணப்பட்ட டெங் கும்பல் தனது முதலாளித்துவ ஆட்சியை நிறுவி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூக்கியெறியும் முன்பு, கட்சியின் மூன்றில் ஒரு உறுப்பினர்களை கட்சியை விட்டு வெளியேற்றியதுடன் படுகொலைகளையும் நடத்தினான். சோவியத்தில் குருச்சேவ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூக்கியெறியு முன்பு, ஸ்டாலினை இரகசியமாக தலைமை மட்டத்தில் தூற்றியதுடன் பலரை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், கைது செய்த பலரை சுட்டுக் கொன்றான். இதுவே யூக்கோசிலேவியாவிலும் நடந்தது. பாட்டாளி வர்க்கத்தை ஆட்சியில் இருந்து தூக்கியெறியும் முன் களையெடுப்பும், படுகொலைகளும் நடந்தபடி இருந்தன. இதன் பின்னாலும் கூட முடிமறைத்த வழிகளில் மார்க்சியத்தை துறந்து படிப்படியாகவே ஒட்டு மொத்தமாக சிதைக்க முடிந்தது. இதைத் தான் டிராட்ஸ்கியும் செய்ய முனைந்தான்.

 

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22

23ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23

24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 24

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

2 thoughts on “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 25

  1. உங்கள் கம்யூனிஸ்ட் காரன் பர்மாவில் இது வரை 22000 முஸ்லிம்களை அநியாயமாக கொன்று குவித்து வருகிறான் இதை ஊடகங்கள் மூடி மறைக்கின்றது, நீங்களும் இது பற்றி இப்போது வாய் திறக்க மாட்டீர்கள் பின்பு பர்மா கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களுக்கும் இது பொண்டு ஒரு தொடர் பதிவு எழுதுங்கள் பர்மாவில் எந்த முஸ்லிம்களும் கொள்ளப்படவில்லை அவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் என்று.

  2. mupaarakக்கு உனக்கு வினவுல ஊசி போட்ட பின்னூட்டம், கீழே

    முபாரக்கு, பர்மால நடப்பது மிலிட்டரி சர்வாதிகாரம். பேசனும்கறத்துக்காக இப்படியா உளருவது.

    இப்படி ஒரு இனப்படுகொலை நடப்பது அநீதிதான். அமெரிக்காவாகவும், அமெரிக்கா அடிவருடி நாடுகளாக இருந்தாலும் முதலில் முசுலீமைத்தான் வதைக்கிறான்.

    உங்கள் கோவம் நியாயமானது, காட்டும் இடம்தான் தவறு

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s