மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!

மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் நேற்று (25.8.12) ஒருவர்  கொலை செய்து வீசப்பட்டுயிருந்தார்.விசாரணைக்காக போலீசு வந்தது. கொலை சம்பவம் என்பதால் பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் வேடிக்கை பார்த்த பகுதி இளைஞர்களை குறிவைத்த போலீசு அவர்களைத் தூக்க முடிவு செய்தது. வழக்கமாக குற்றவாளிகள் கிடைக்காமல் இப்படி அப்பாவிகள் மீது வழக்கு போடுவது போலீசின் உத்தி. அருகில் நின்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர்-முன்னணி தோழர்கள் திவாகரும், குமரேசனும் மாணவர்களுக்கே உரிய துணிவோடு கொலையில் … மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

திரெண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள்! தீக்கிரையானது முதலாளித்துவ பயங்கரவாதம்! எதுவன்முறை? யார் வன்முறையாளர்கள்? தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்! பொதுக்கூட்டங்கள் தெருமுனைக்கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகள் அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.  அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ்.  முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர்.  அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர்.  தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார … எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 3

  ஆண்டான் அடிமை காலகட்டத்தில் அரேபிய தீபகற்பத்தில் வாழ்ந்த, பல அடிமைகளை உடமையாய் வைத்திருந்த ஓர் உயர் குல வணிகர், தம் வணிகர் குல மேலாதிக்கத்திற்காக உருவாக்கிய ஓர் அரசின் சட்டதிட்டங்கள் அடிமைமுறையை நீக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது என்பது இயல்பாகவே முரண்பாடுடையது. மட்டுமல்லாது நகைப்பிற்கும் இடமானது. இஸ்லாமே அடிமை முறையை ஒழித்தது எனும் மதவாதிகளின் புழகத்தை ஒதுக்கி வைத்து விட்டு அடிமைகள் குறித்து இஸ்லாம் என்ன கருத்து கொண்டிருந்தது என்பதை பார்க்கலாம்.   அடிமைகளும் அவர்களின் எஜமானர்களும் … அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

விடியவில்லையா? விடிவே இல்லையா?

”நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை” என்றொரு பழங்கவிதை உலவுவதுண்டு. எதிர்மறையில் ஏற்கும் ஏக்கம் அது.   கருப்புக் கொடி நாட்டி கருப்பு நாள் என்றறிவித்து எதிர்ப்பை பதிவு செய்யும் எதிர்வினைகளும் இங்குண்டு. எதிர்ப்பின் மூலமே இருப்பதாய் கட்டிக் கொள்ளும் பொருளும் வந்து விடுகிறது அதில்.   விடியவில்லை எனும் ஏக்கத்துக்கும் கருப்புதினம் எனும் துக்கத்துக்கும் எதிராய், விடுதலை எனும் சொல்லின் வீச்சு இந்த சுதந்திர நாளில்(!) எங்கேனும் ஒட்டியிருக்கிறதா? எனும் கேள்வியே மாற்று.   சட்டையில் மூன்றுநிறக் … விடியவில்லையா? விடிவே இல்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து

  அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ.   கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு … மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.