விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று

மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கிறது இந்த கட்டுரை….  

                                         

18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்கு வதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே “விடுதலையைக்’ காணும்படி மக்களைப் பயிற்றுவிக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

உண்மையான ஆட்சியதிகாரத்தைத் தம் கையில் வைத்துக் கொண்டு மன்னராட்சிக்குரிய அடையாளங்களை மட்டும் நீடிக்க அனுமதித்ததன் மூலம் துரோகிகளைத் திருப்திப்படுத்திய பிரிட்டிஷார், அதே உத்தியை மக்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதன் விளைவாக 18,19ஆம் நூற்றாண்டுகளில் துரோகிகள் எனக் கருதப்பட்டோரின் வழித்தோன்றல்கள், 20ஆம் நூற்றாண்டில் சமரசவாதிகளாக அவதரித்தார்கள்.

இந்தியர்களுடைய மனக்குறைகளை மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரியணைக்கு மனுச் செய்து தெரிவிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் வெள்ளையர்களாலேயே உருவாக்கப்பட்டது. பாரம்பரியமிக்க பிரிட்டிஷ் அடிவருடிகளான நிலப்பிரபுக்களின் நலனை மட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ஆதாயமடைய விரும்பிய அனைத்திந்திய வர்க்கமான தரகு முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இத்தகையதொரு அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்தத் தரகுக் கும்பலின் முதலாளித்துவ வர்க்கப் பின்புலத்தையும், இவர்களுக்கிடையிலான உறவையும் புரிந்து கொள்ளாத எவரும் இந்திய விடுதலையின் மீது காங்கிரசும் காந்தியும் நிலைநாட்டி இருந்த ஏகபோகத்தை உடைக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது.

இந்திய விடுதலை இயக்கத்தினுள் காந்தி நுழைந்த பிறகு, அவருடைய அகிம்சை வழியிலான போராட்ட முறை மூலம்தான், இந்திய விடுதலை இயக்கம் உண்மையான மக்கள் திரள் இயக்கமாக மாறியது என்ற மிகப்பெரிய வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய லட்சோப லட்சம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம்.

“”வன்முறைப்பாதையா, அகிம்சைப் பாதையா” எனப் போராட்ட வழி முறைகளில்தான் விடுதலை இயக்கத்தில் வேறுபாடு நிலவியதைப் போலவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பொது நோக்கில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை நிலவியதைப் போலவும் ஒரு பொய்ச்சித்திரத்தைப் பதிய வைத்திருக்கிறது நமது அதிகாரபூர்வ வரலாறு. உண்மையில், ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்ட காங்கிரசு, முசுலீம் லீக் ஆகிய தரகு முதலாளித்துவ அரசியல் சக்திகள் எவ்விதச் சமரசத்துக்கும் இடமின்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை சமருக்கிழுத்த தேசியவாத சக்திகள் என இரு போக்குகள்தான் 20ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்க வரலாற்றில் களத்திலிருந்தன.

1921, 1930, 1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளிகளில் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், “வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் என மூன்று போராட்ட இயக்கங்கள் காந்தியின் சத்தியாக்கிரக முறையில் துவக்கி நடத்தப்பட்டன. போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் மக்கள் இயல்பாக போலீசின் தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதல் கொடுக்கத் துவங்கினால், அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால், மறுகணமே காந்தி போராட்டத்தை நிறுத்துவார். காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன், அரசு அவரைக் கைது செய்து விடும். பிறகு, “சென்டிமென்ட் அலை’ அடிக்கத் துவங்கி, இறுதியில் இந்திய விடுதலையை மறந்து காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகி விடும். இதுதான் தியாக வேடமணிந்த துரோகத்தின் சுருக்கமான வரலாறு.

இந்தத் துரோகத்துக்கு எதிராக, சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பையும், உண்மையான நாட்டு விடுதலையையும் முன்வைத்துப் போராடிய தியாகம், பகத்சிங் என்ற இளைஞனின் வடிவில் விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறது.

“…நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பத்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.”

சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய ஒரு கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. இத்தகையதொரு பதிலை 18,19ஆம் நூற்றாண்டுகளின் வீரர்கள் கூறியிருக்க முடியாது. முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய திப்பு முதல் மருது வரையிலான வீரர்களோ, பல்லாயிரக் கணக்கில் போராடி உயிர் நீத்த விவசாயிகளோ, சிப்பாய்களோ, தமது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்திருக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.

தனது வரலாற்றுக் கடமையை அடக்கத்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போராளியாக, ஆனால் தன்னை சமூகத்திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக் கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறான்.

பகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்குமேடையேறிய வீரராக மட்டும் சித்தரிப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியைச் சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞன்தான். உயிரை துறப்பதாலல்ல, உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும், லட்சியமும்தான் அவரது மரணத்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத்தது; இன்றளவும் கவர்ந்திழுக்கிறது.

பகத்சிங்கினுடைய காலத்தின் தேவைதான் என்ன?

1919ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய மக்களிடத்தில், குறிப்பாக பஞ்சாப் மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும், சுதந்திரக் கனலை மூட்டி விடுவதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனாயிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப்படுகொலை ஆழமான காயத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பழி வாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞர் 20 ஆண்டுகள் காத்திருந்து படுகொலைக்குப் பின்னணியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்னர் ஜெனரல் ஓ டயரைச் சுட்டுக் கொன்றார்.

1921ல் காந்தி “ஓராண்டிற்குள் சுயாட்சி’ என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

1922 பிப்.5ஆம் தேதி உ.பியில் உள்ள சௌரி சௌரா எனும் இடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகுண்டெழுந்த மக்கள் சௌரி சௌரா போலீசு நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஒத்துழையாமை இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங்கிரசுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு நம்பிக்கையின் மையும், சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின.

தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக்கைகளைத் தேடலாயினர். காந்தியத்தின் மீது துவக்கத்திலேயே விமரிசனம் கொண்டிருந்த பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பு கிடைக்கப் பெற்றனர். 1924ன் இறுதியில் சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தனர்.

இவ்வமைப்பின் அப்போதைய முன்னணியாளர்களான ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் போன்றோர், 1925 ஆகஸ்டு 9ந் தேதியன்று காக்கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அரசு கஜானாவிற்கான பணத்தைக் கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உணர்ந்த ஆங்கிலேய அரசு, கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இயக்கம் செயலற்று நின்றது.

இந்தத் தேக்க நிலையில், 1926இல் லாகூரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுகதேவ், யஷ்பால் முதலானோர் “நவஜவான் பாரத் சபா’ எனும் இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப்பினரால் நிகழ்த்தப்பட்டன.

1927 இறுதியில் ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். பலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்சூழ்நிலையில், தலைமறைவாயிருந்த ஆசாத்தோடு பகத்சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோளில் விழுந்தது.

1925லிருந்து 1927க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினூடாக, 1917ன் ரசியப் புரட்சியின் விளைவாக, இந்தியாவில் பரவத் தொடங்கிய சோசலிசக் கருத்துக்களையும், இதர ஐரோப்பியக் கருத்துக்களையும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் கற்கத் துவங்கினர். பகத்சிங் சோசலிசக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில் முன்ணணியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண்ணோட்டம்தான் அவருடைய வளர்ச்சி நிலைகளுக்கு அடிகோலியது. இச்சூழ்நிலையை “நான் நாத்திகன் ஏன்?’ எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார்.

“அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன். அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம். இப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத்திய மென்று தோன்றியது…. எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்றதென பிற்காலத்தில் உணரக் கூடிய ஒருநாள் வரக் கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கை யில் அது ஒரு திருப்புமுனையாகும். “கற்றுணர்” எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கணந்தோறும் எதிரொலித்தது”…

“நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்.”

“களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால், உலகப் புரட்சி குறித்த பல்வேறு கருத்துக்களைப் படிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைத்தது. அராஜகவாதத் தலைவர் பக்குனினது எழுத்துக்களையும், கம்யூனிசத் தந்தை மார்க்சினது சில படைப்புக்களையும், அதிகமாகத் தமது நாட்டில் வெற்றிகரமாகப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராட்ஸ்கி மற்றும் பிறரது கருத்துக்களையும் படித்தேன்.”

பகத்சிங்கிற்கு முந்தைய புரட்சிகர பயங்கரவாதிகள் ஆங்கிலேயர்களுக்கெதிராக வீரஞ்செறிந்த முறையில் போராடிய பொழுதிலும், அரசியல் ரீதியாகப் பின் தங்கியிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகான அரசமைப்பு குறித்தும் தெளிவற்றிருந்தனர். அதன் விளைவாக காந்தி, காங்கிரசின் செயல்பாடுகளை அரசியல்ரீதியில் முறியடிக்கவும், அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணராமலிருந்தனர். அவ்வகையில், ஒருபுறம் காந்தி, காங்கிரசின் அடிவருடித்தனத்திற்கும், மறுபுறம் புரட்சிகர பயங்கரவாதிகளின் ஆயுதவழிபாட்டு சாகசவாதத்திற்கு எதிராகவுமான ஒரு மாற்றை உருவாக்க பகத்சிங், பகவதிசரண் வோரா முதலான தோழர்கள் முயன்றனர்.

இதனடிப்படையில், 1928 செப்டம்பர் 9,10 தேதிகளில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அதுவரை இந்துஸ்தான் குடியரசுக் கழகமாக இருந்த அமைப்பின் பெயர், இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகமாக (இ.சோ.கு.க) மாற்றப்பட்டது.
காந்தி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னை புரட்சியாளர்களிடமிருந்து கவனமாகத் தூரப்படுத்திக் கொண்ட போதிலும், புரட்சியாளர்கள், காங்கிரசு நடத்திய மக்கள் போராட்டங்களிலிருந்து அவ்வாறு தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவில்லை. நாட்டு விடுதலைக்கான அனைத்து முயற்சிகளிலும் அவை பலாத்கார முறைகளிலானாலும் சரி, சாத்வீக முறைகளிலானாலும் சரி புரட்சியாளர்கள் உத்வேகத்தோடு ஈடுபட்டனர். இவ்வகையிலேயே, 1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.

லாகூரில், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிரதானமாக நவஜவான் பாரத் சபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசு விதித்த தடையை மீறி, அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது. “பஞ்சாப் சிங்கம்’ என்றழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் எனும் முதிய தலைவர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இரண்டு வாரங்களில் அவர் உயிர் நீத்த பொழுது, வடஇந்தியாவே கொந்தளித்தது. லஜபதிராயின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

மக்களிடம் எழுந்த ஆவேசத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க இ.சோ.கு.க தீர்மானித்தது. லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து டிச17 அன்று, அவர் மீது தடியடிப் பிரயோகம் நடத்திய சாண்டர்ஸ் எனும் போலீசு அதிகாரியை, போலீசு நிலைய வாசலிலேயே வைத்து ராஜகுருவும், பகத்சிங்கும் சுட்டுக் கொன்றனர். மறுநாள் லாகூர் முழுதும் சாண்டர்ஸை கொலை செய்ய நேர்ந்ததற்கான அவசியம் குறித்து இ.சோ.கு.க சுவரொட்டி ஒட்டியது. பகத்சிங்கும், இதர தோழர்களும் லாகூரை விட்டுத் தப்பிச் சென்றனர். இதற்கு முன்பு எத்தனையோ முறை ஆங்கிலேய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும், சாண்டர்ஸ் படுகொலையின் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, புரட்சியா ளர்கள் நாடு முழுதும் போற்றப்பட்டனர்.

தலைமறைவான சூழலில் நாட்டின் அரசியல் சூழலை புரட்சியாளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். பகத்சிங்குடன் நவஜவான் பாரத் சபாவில் இணைந்து செயல்பட்ட தொழிலாளர்விவசாயிகள் கட்சியின் தலைவர் சோகன் சிங் ஜோஷ், 1928 சாண்டர்ஸ் கொலைக்குப் பிறகு கல்கத்தாவில் பகத்சிங்கைச் சந்தித்த பொழுது “”நீங்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணையுங் கள். நாங்கள் ஆங்கில அரசின் ஒருங்கிணைவை உடைத்தெறிகிறோம். நாம் இப்படி ஒரு வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வோம்” என்று பகத்சிங் கூறியதாகப் பதிவு செய்துள்ளார். கம்யூனிசம் அவர்களை ஈர்த்த போதிலும், “மாபெரும் மக்கள் இயக்கத்தின் இராணுவமாக உருக் கொள்வதே’ இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகத்தின் இலக்காக இருந்தது. எனினும், மாபெரும் மக்கள் இயக்கம் குறித்த அவர்களது கருத்து கற்பனையிலிருந்து உதித்த ஒன்றல்ல.

அன்றைய சூழலில், தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தது. 1928இல் வட மாநிலங்களில் பரவலாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க் குணத்தோடு நடைபெறலாயின. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைக் கடுமையாக ஒடுக்கும் முகமாக “தொழிற் தகராறு மசோதா’வை டெல்லி மத்திய சபையில், ஆங்கில அரசு கொண்டு வந்தது.

“தொழிற் தகராறு மசோதா’ நிறைவேற்றப்படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்றும், தானாகவே கைதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் ஆங்கில அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவ தெனவுமான திட்டத்தை பகத்சிங் மத்தியக் கமிட்டியில் முன்வைத்தார். இவற்றை செய்து முடித்த பின்னால் ஒரு வேளை தப்ப முடியவில்லையென்றால், தூக்கு மேடை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென்றார் பகத்சிங். அவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

திட்டமிட்டபடி, 1929 ஏப்ரல் 8ஆம் தேதியன்று கேள்வி நேரத்தில் எதிர்பார்த்தபடியே வைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி “தொழிற் தகராறு மசோதா’ நிறைவேறியதை அறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார். உடனடியாக பார்வையாளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும், பி.கே.தத்தும் வெடிகுண்டு களை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள். “செவிடர்களை கேட்கச் செய்வதற்கு வெடிகுண்டு முழக்கங்கள் அவசியமானவை’ எனும் தலைப்பிலான சிவப்புத் துண்டறிக்கைகளை வீசியவாறு, “புரட்சி நீடுழி வாழ்க, ஏகாதிபத்தியம் ஒழிக, உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ ஆகிய முழக்கங்களை உத்வேகத்தோடு எழுப்பினார்கள். நெடு நேரம் அவர்களை நெருங்கவும் தயங்கியவாறு போலீசார் நின்றனர். பின்னர் பகத்சிங் அவர்களை நோக்கி தாங்கள் கைதுக்குத் தயாராக இருப்பதாகவும், தங்களிடம் ஆயுதங்கள் இல்லையெனவும் உறுதியளித்த பின்னரே அந்த சூரப்புலிகள் அவர்களை நெருங்கி கைது செய்தனர்.

1929 ஜீன் 6ஆம் தேதியன்று பகத்சிங்கும், பி.கே.தத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். வெடிகுண்டு வீசியதை ஏற்றுக்கொண்ட தோழர்கள், அதன் நோக்கம் உயிர்ப் பலியல்லவென்றும், அதன் அரசியல் நோக்கம் குறித்தும் வாதாடினர்.

“எங்களது ஒரே நோக்கம் “செவிடர்களைக் கேட்கச் செய்வதும்’, செவிமடுக்காதவர்களுக்குத் தக்க எச்சரிக்கை வழங்குவதுமேயாகும். மிகப்பலரும் எங்களைப் போன்றே செய்ய விரும்பினர். வெளித் தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இந்திய மக்கட் கடலிலிருந்து, ஒரு மாபெரும் சூறாவளி எழும்பவிருக்கிறது… கற்பனாவாத சாத்வீகத்தின் காலம் முடிந்து விட்டதைத் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி இளைய தலைமுறை ஏற்றுக் கொண்டு விட்டதை நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்.”

அன்று சர்வதேசப் பத்திரிக்கை களிலும், தேசபக்த உணர்வுமிக்க இந்தியப் பத்திரிக்கைகளிலும் விரிவாக வெளியிடப்பட்ட பகத்சிங்கின் அறிக்கைகள் மக்களால் பேரார்வத்தோடு வரவேற்கப்பட்டன. வழக்கை விரைந்து நடத்திய அரசு, 1929 ஜீன்12 அன்று பகத்சிங் மற்றும் பி.கே.தத் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அங்கேயும் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அன்றைய சூழலில் அரசியல் கைதிகள் கிரிமினல் கைதிகளைப் போல நடத்தப்படுவதைக் கண்டித்தும், வெள்ளை அரசியல் கைதிகளுக்கு காட்டப்பட்ட பாரபட்சத்தைக் கண்டித்தும், பகத்சிங் லாகூர் சிறையிலிருந்தும், பி.கே.தத் மியான்வாலி சிறையிலிருந்தும் ஜூலை13ம் தேதியன்று உண்ணா விரதத்தை துவங்கினார்கள். கைது செய்யப்பட்ட பிற புரட்சியாளர்களும், பகத்சிங், தத்துடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்ட முயன்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தனர். 63 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு ஜதின்தாஸ் செப்டம்பர் 13ஆம் தேதியன்று உயிர் நீத்தார். அவரது உடல் லாகூர் சிறையிலிருந்து கல்கத்தா எடுத்துச் செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

சாண்டர்ஸ் கொலை வழக்கு இரண்டாம் லாகூர் சதி வழக்காக ஜீலை 10 முதல் துவங்கியது. பகத்சிங் இவ்வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். பகத்சிங்கும் தோழர்களும் வழக்கு மேடையின் நியாய வேடத்தைக் கேள்விக்குள்ளாக் கினர். லெனின் தினம் மற்றும் காக்கோரி தினம் நீதிமன்றத்திலேயே தோழர்களால் கொண்டாடப்பட்டது. பகத்சிங், மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தங்களது வாழ்த்துத் தந்தியை அனுப்ப நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு கட்டத்தில் இவ்வழக்கு விசாரணை, மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவதற்குப் பதிலாக புரட்சியாளர்களுக்குச் செல்வாக்கு உண்டாக்குவதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1930 மே 1 ஆம் தேதியன்று லாகூர் சதி வழக்கு சட்டவரைவின் மூலமாக வழக்கை விசேட நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதனடிப்படையில், அனைத்து நீதித்துறை விதிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டு, “குற்றம் சாட்டப்பட்டோர் இல்லாமலேயே விசாரணை நடைபெறலாம்” என அறிவித்தது. பிறகு “தடங்கலின்றி’ நடைபெற்ற விசாரணை நாடகம் அக்டோபர் 7ஆம் தேதியன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குத் தூக்கு தண்டனை விதித்தது.

1929 வரை பெயரளவு டொமினியன் அந்தஸ்தையே கோரி வந்த காங்கிரசுக் கட்சி, 1930ல் “பூரண சுதந்திர’ கோரிக்கைக்கு மாறியதும், சட்ட மறுப்பு இயக்கத்தைத் துவக்கியதும், பகத்சிங் ஏற்படுத்திய புரட்சி அலை காங்கிரசைப் புரட்டி எடுத்ததன் விளைவேயாகும். இதனை 29.1.1931ல் “குடி அரசு’ இதழில் பெரியார் குறிப்பிடுகின்றார்.

“..காந்தியவர்களே, இக்கிளர்ச்சி (சட்ட மறுப்பு இயக்கம்) ஆரம்பிப்பதற்கு முக்கியக் காரணம் பகத்சிங் போன்றவர்கள் செய்யும் காரியங்களைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்ற கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.”

சட்ட மறுப்பு இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில், வழக்கம் போல் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி மன்றாடினார். அதன் விளைவாக காந்தி இர்வின் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில், பகத்சிங்கையும், இதர தோழர்களையும் விடுதலை செய்யக் கோரும், குறைந்தபட்சம் அவர்கள் தண்டனையையேனும் குறைப்பதற்கான ஷரத்தைச் சேர்க்க வலியுறுத்தி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உடன்பட மறுத்த காந்தி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் என்ன செய்தார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அரசுக்கு அன்றாடம் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டிருந்த இர்வின், பேச்சுவார்த்தைக் குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார்:

“முடிவில், அவர் (காந்தி) ….

பகத்சிங் வழக்கு குறித்து குறிப்பிட்டார். அவர் (மரண) தண்டனையை நீக்கக் கோரவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையைத் தள்ளி வைக்கக் கேட்டுக் கொண்டார்.”

(கோப்பு எண்: 545/19312, உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள அரசியல் பிரிவு)

“அவர் (காந்தி) வெளியேறும் பொழுது, மார்ச்24ல் பகத்சிங் தூக்கிலிடப்பட இருப்பதாக பத்திரிக்கை களில் செய்தி படித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக காங்கிரசின் புதிய தலைவர் கராச்சியில் வந்திறங்கும் நாளும் அதுவே எனக் குறிப்பிட்டு, அதனால், கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார். நான் இவ்வழக்கை மிகக் கவனத்தோடு பரிசீலித்திருப்பதாகவும், தண்டனையை குறைப்பதற்கான எனது மனசாட்சியை திருப்திப்படுத்தும் எந்த முகாந்திரத்தையும் காணவில்லையென்பதையும் தெரிவித்தேன்… அவர் இந்த வாதத்தின் வலிமையை அங்கீகத்தது போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.”

(கோப்பு, பிப்ரவரி 19 தேதியிட்டது 1970 ஆகஸ்டு 15 மெயின்ஸ்ட்ரீம் இதழில் டி.பி.தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து)

இதனிடையே, 1930 மே 28ஆம் தேதியன்று பகத்சிங்கைத் தப்புவிப்பதற் கான திட்டத்தின் அடிப்படையில், வெடிகுண்டைச் சோதித்த பொழுது ஏற்பட்ட விபத்தில் பகவதி சரண் வோரா வீரமரணம் அடைந்தார். பகத்சிங் சிறையிலிருந்த போது, காந்தியை அம்பலப்படுத்தியும், இளைஞர்களை உற்சாகமாக அணிதிரட்டியும் வந்த வோரா ஒரு விபத்தில் பலியானது துயரார்ந்ததே. மேலும், இ.சோ.கு.கவின் படைத்தலைவராக விளங்கிய ஆசாத் இறுதி வரை தமது பெயருக்கேற்றாற் போல் போலீசின் பிடிக்குள் அகப்படாமலிருந்து, 1931 பிப்ரவரி 27ல் போலீசாருடன் தன்னந்தனியாக நின்று வீரத்தோடு சண்டையிட்டு அலகாபாத் நகரிலிருந்த அன்றைய ஆல்ஃபிரெட் பூங்காவில் வீரமரணமடைந்தார்.

இந்தியச் சிறை வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி காலை நேரத்திற்குப் பதிலாக, மார்ச்23,1931 அன்று இரவோடிரவாக மாலை 7.33 மணியளவில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலானோர் தூக்கிலிடப்பட்டனர். சிறையிலிருந்த நேரடி சாட்சியங்களின்படி, பகத்சிங்கை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்த பொழுது அவர் லெனின் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.

“சிறிது நேரம் காத்திருங்கள், ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறான்’

என்றார். அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்றினால் தடுக்கப்பட்ட அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து புத்தகத்தை உயர வீசிய அவர், “வாருங்கள், போகலாம்’ எனக் கிளம்பினார். பின்னர், அவர், சுகதேவ், ராஜகுரு மூவரும், புரட்சிகரப் பாடல் வரிகளைப் பாடியவாறு தூக்குமேடைக்குச் சென்றனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டை நோக்கி, “இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வாறு மரணத்தை நோக்கி வீரநடை போட்டார்களென்பதைக் காணும் வாய்ப்பு பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்’ எனக் கூறினார். அவர்களது பிணங்களை மக்களிடம் அளிப்பது கூட பேரபாயமாக உணர்ந்த அரசு, அவசர அவசரமாக அவர்களது உடல்களை சட்லெஜ் நதிக்கரையோரம் எரித்துப் போட்டது.

ஆங்கிலேயர்களும், காந்தியும் ஓரணியில் நின்று பகத்சிங்கைப் பல வகைகளில் இருட்டடிப்பு செய்ய முயன்ற போதும், உண்மையான தேசபக்தர்களும், மக்களும் அதனை ஏற்க மறுத்து, பகத்சிங்கை ஆதரித்தார்கள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் 1931 கராச்சி காங்கிரஸ் மாநாடு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டவுடன் நாடே கொந்தளித்தது.

கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த காந்திக்கு இளைஞர்கள் வழியெங்கும் கறுப்புக் கொடி காட்டினர். காங்கிரசின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக, வங்காள காங்கிரஸ் கமிட்டி புரட்சியாளர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. “அந்த நேரத்தில் பகத்சிங்கின் பெயர் இந்தியா முழுவதும் பரவலாக தெரிந்திருந்ததுடன், காந்தியின் அளவிற்குச் செல்வாக்குடனும் இருந்தது என்று கூறுவது மிகையாகாது.” எனக் குறிப்பிடுகிறார் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீத்தாராமையா.

“புரட்சி என்றாலே பகத்சிங் என்று தான் பொருள்’ என்றார் சுபாஷ் சந்திர போஸ். உண்மைதான், நமது நாட்டின் அரசியல், வரலாற்றுப் பொருளில், பகத்சிங்தான் புரட்சியின் அடையாளம். இரண்டு நூற்றாண்டுக்காலமாக விடுதலை வீரர்கள் வென்றெடுக்க முயன்ற விடுதலையை, எதிரிகளிடம் யாசித்துப் பெற வேண்டிய பிச்சையாக மாற்றினார் காந்தி. அந்த விடுதலை வீரர்களின் மரபில் வந்த பகத்சிங்கோ, கம்யூனிசக் கருத்துக்கள் அளித்த ஒளியில் காந்தியக் காரிருளைக் கிழித்து புரட்சியை மீண்டும் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டுவந்தார்.

மைசூர், நெல்லை, வேலூர், மீரட், வங்காளம் என்று ஒவ்வொரு முறையும் எதிரிகள் புதைத்து நிமிர்ந்த மறுகணமே, இன்னொரு பகுதியில் வெடித்துக் கிளம்பிய விடுதலை வேட்கையைப் போல, சட்லெஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட அந்தப் புரட்சி, 1946ல் தெலிங்கானா விவசாயிகள் எழுச்சியாய் ஆந்திரத்தில் எழுந்து, மூன்றாவது சிப்பாய் எழுச்சியாய், மும்பையில் வெடித்தது. “இதனை உடனே நசுக்கவில்லை என்றால் மேடையில் புதிய பாத்திரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று 1857இல் பெஞ்சமின் டிஸ்ரேலி விடுத்த எச்சரிக்கை ஆங்கிலேயப் பேரரசின் காதில் ஒலித்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு நசுக்கினால் எழக்கூடிய கம்யூனிசப் பேரலை ஏகாதிபத்தியவாதிகளின் கண்ணில் தெரிந்தது. காந்தி எனும் கைப்பாவையின் அவதாரம் கலைந்து கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. துரோகிகளின் கைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பதுதான் பேரரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எஞ்சி இருக்கும் ஒரே வழி என்பது எதிரிகளுக்குப் புரிந்ததால் அதிகார மாற்றம் நிகழ்ந்தது.

தியாகத்தின் மரபுகள் அனைத்தையும் பூசையறைப் படங்கள் ஆக்கிவிட்டு துரோகம் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட போதிலும் விடுதலைப் போராட்டத்தின் வீரமரபு, 1967 நக்சல்பாரி எழுச்சியாய் வங்கத்தில் பிறப்பெடுத்தது. திப்பு முதல் பகத்சிங் வரையிலான விடுதலை மரபனைத்தையும் உட்செரித்துக் கொண்டு மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரில் களத்தில் நிற்கிறது.

இதோ, துணைப்படைத் திட்டத்தை அறிவிக்கிறார் ஜார்ஜ் வெல்லெஸ்லி புஷ். வாரிசிலிக் கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறைகளைக் கொடுத்துவிடச் சொல்கிறார் டல்ஹவுஸி ப.சிதம்பரம். “”மகனே குறைந்தபட்சத் திட்டத்துக்கு மேல் எதையும் ஒத்துக் கொள்ளாதே” என்று மரணப் படுக்கையில் முனகுகிறார் சீதாரம் எச்சூரி நவாப். “”மகா பிரபுவே, ஆங்கிலேயக் கம்பெனியை நம்பியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை” என்று ஆக்ஸ்ஃபோர்டில் உரையாற்றுகிறார் தொண்டைமான் மன்மோகன் சிங்.

கனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல், முந்நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும், எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி, தெளிவாகத் தெரிகிறது அந்த முகம். மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம். இந்தப் பேரிரைச்சலைக் கிழித்துக் கொண்டு தீர்மானமானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்:

“இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை.. ..”

நன்றி: புதிய கலாச்சாரம்

முதல் பதிவு: புமாஇமு

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 26

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 26

 

சமூகத்தின் உரிமையை மறுத்த தனிமனித உரிமை  மீதான பாட்டாளி வாக்க சர்வாதிகாரம்

 

லெனினை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த டிராட்ஸ்கி, லெனினின் மரணத்தின் பின் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்ததுடன் சதியிலும் ஈடுபட்டான். லெனினியத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராகவே தொடச்சியாக செயல்பட்டான். லெனின் ஒரு நாட்டில் நடக்கும் புரட்சியையும், அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்கத்தின் பணியையும் தெளிவுபடுத்தியதுடன், டிராட்ஸ்கியம் போன்ற கோட்பாடுகளை முன் கூட்டியே அம்பலப்படுத்தினார். ஒரு நாட்டில் வெற்றியடைகிற புரட்சி, மற்ற எல்லா நாடுகளிலும் புரட்சி வளரவும், ஆதரவு பெருகவும், விழிப்பு எற்படவும் முடிந்த அளவுக்கு தன் நாட்டில் அது சாத்தியமானவற்றையெல்லாம் செய்ய வேண்டும்” என்றார். புரட்சி வெற்றி பெற்ற (சொந்த) நாட்டில் புரட்சி எப்படி முன்னேறுகின்றது என்பதைப் பொறுத்தே, மற்றயை நாடுகளின் புரட்சி மேலும் ஆழமாக வளர்ச்சியுறுகின்றது. அத்துடன் தர்மீக ரீதியிலும் பலம் பெறுகின்றது. ஒருநாட்டில் நடந்த புரட்சிக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகளை எதிர்த்து, ஏகாதிபத்திய நாடுகளின் பாட்டாளி வர்க்கம் போராடும் அதே தளத்தில் தான், புரட்சி நடை பெற்ற நாடு அந்த பாட்டாளிக்காக குரல் கொடுக்கின்றது. இந்த மையமான விடையம் மூன்றாம் உலக நாடுகளில் கூட பொதுவான சர்வதேசிய வரையறையாக உள்ளது. சர்வதேசியம் என்பது வெற்றி பெற்ற நாட்டின் புரட்சியை மேலும் தொடர்வதும், அதற்கு ஆதாரவாக சர்வதேச பாட்டாளி வர்க்கம் போராடுவதும் அடிப்படையானது. அதே போல் வெற்றி பெற்ற நாடு உலகளாவிய சர்வதேச புரட்சி என்ற ஒரு அடிப்படையான உரிமையில் நின்று, உலக பாட்டாளி வர்க்கம் தத்தம் சொந்த நாடுகளில் புரட்சியை நடத்த தர்மிக உதவிகளை வழங்குவதே சர்வதேசியம். இதில் ஒன்றை மட்டும் செய்யக் கோருவது மார்க்சியமல்ல. சொந்த நாட்டில் புரட்சியை தொடர்வதை மறுப்பதும், மற்றயை நாட்டு பாட்டாளி வர்க்க புரட்சிக்கு உதவக் கோருவது மார்க்சியமல்ல. இது முதலாளித்துவ மீட்சியாகும்.

 

புரட்சி என்பது ஆட்சியைக் கைப்பற்றிய பாட்டாளி வர்க்கத்துக்கும், கைப்பாற்றாத பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான இயங்கியல் ரீதியான பரஸ்பர விதிகளால் ஆனது. இதை டிராட்ஸ்கியம் எற்றுக் கொண்டதில்லை. ஏன் மார்க்ஸ்சின் போதனைகளை நிராகரிப்பதே டிராட்ஸ்கியமாகியது. இதற்கு மாறக ஸ்டாலின் மார்க்சிய போதனைகளை உயர்ந்த பட்சத்திற்கு வளர்த்தெடுத்தார். ஸ்டாலின் இது பற்றிய தனது சொந்த நடைமுறையில் நம் கட்சிக்கு உலகத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக நின்று போராட வேண்டிய பொறுப்பு எற்பட்டிருக்கின்றது அத்துடன் மிகவும் சிக்கலான தேசிய மற்றும் உலக நிலைமைகளின் இடையில் நம் கட்சி வேலை செய்ய வேண்டியிருக்கின்றது” என்றார்.  அத்துடன் சொந்த நாட்டில் முதலாவது, வீழ்த்தப்பட்ட சுரண்டும் வர்க்கத்தினுடைய எதிர்ப்பை நசுக்குவதற்கும் தொழிலாளி வர்க்கப் புரட்சியின் சாதனைகளை உறுதிப்படுத்துவதற்கும் ஆகும். இரண்டாவது, தொழிலாளி வர்க்கப் புரட்சியை பூர்த்திக் கட்டம் வரையில் கொண்டு போவதற்கும் சோசலிசத்தின் பூரண வெற்றியை சாதிக்கும் வரை புரட்சியை கொண்டு செல்வதுமாகும்” என்றார். சர்வதேசியம் என்பது பாட்டாளி வர்க்கம் எந்த நிலையில் தனித் தனியான நாட்டில் இருக்கின்றதோ, அந்த நிலையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதை குறிக்கிறது. இதை பரஸ்பரம் ஆதரித்து முன்னேற்றுவ நடத்துவதை குறிக்கிறது.  

 

புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தை பற்றி மார்க்ஸ் உள்நாட்டு யுத்தங்களும் சர்வதேச சச்சரவுகளும் உண்டாகும். அவை பதினைந்து இருபது, ஐம்பது வருடங்கள் என்று அநேக வருடங்களுக்கு நீடிக்கும். அவற்றில் நீங்கள் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டியிருக்கும்,  யதார்த்த நிலைமைகளை மாற்றுவதற்கு மட்டுமல்ல,  உங்களையே நீங்கள் மாற்றிக் கொள்வதற்கும் கூட,  அரசியல் அதிகாரத்தை எந்தி அரசாள்வதற்கு உங்களை நீங்கள் தகுதியுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதற்கும் கூட, அவ்விதம் நீங்கள் போராட வேண்டியிருக்கும்”  என்றார். மிகவும் தீர்க்க தரிசனமாகவே மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்தை எச்சரித்திருக்கிறார். உள்நாட்டில் யுத்தங்கள், சதிகள், சச்சரவுகள், முதலாளித்துவ மீட்சி நீடிக்கும் என்பதையும், அவை பல பத்து வருடங்கள் நீடிக்கும் என்பதையும் இவ்வளவு தீர்க்க தரிசனமாக மார்க்ஸ் முன் கூட்டியே எச்சரித்துவிடுகிறார். இந்த தீர்க்கதரிசனமிக்க எதார்த்த அரசியல் உள்ளடகத்தை புறந்தள்ளிய யாரும், மாhக்சியவாதியாக சொல்லிக் கொள்ளவே தகுதியற்றவர்கள்;. சச்சரவுகளையும், சதிகாரர்களையும், யுத்தங்களையும் தொடக்க முனைந்த டிராட்ஸ்கியம் பேசிய முதல் முதலாளித்துவ மீட்சியாளர்களே; மார்க்ஸ்க்கு எதிராக தங்களை மார்க்சியவாதிகளாக கூறுக் கொள்வது நிகழ்ந்தது. இவர்கள் அனைவரும் புரட்சிக்கு பிந்திய வர்க்கப் போராட்டத்தை எற்றுக் கொள்வதில்லை. முதலாளித்துவ மீட்சி என்பதையும் எற்றுக் கொள்வதில்லை.

 

டிராட்ஸ்கியம் நிரந்தரப்புரட்சி என்று கூறி வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளையே நிராகரிக்கின்றது. சமூகத்தின் எற்றத் தாழ்வான சமூக நிலையை மறுக்கின்றது. ஆட்சியை தொழிலாளி வர்க்கம் மட்டுமே கைப்பற்றும் என்று கூறி, தூய வரட்டுவாதத்தை பேசுகின்றது.  ஒரு நாட்டில் பிரதான எதிரிக்கு எதிரான தொழிலாளி வர்க்கம் அல்லாத வர்க்கப் பிரிவுகளை நிரந்தரப்புரட்சி எற்றுக் கொள்வதில்லை. குறிப்பாக விவாசய வர்க்கத்தை புரட்சியின் எதிரியாக நிரந்தரப்புரட்சியை காட்டி நிராகரிப்பதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை மென்ஸ்சுவிக்குகள் பாதையில் முன்தள்ளப் பயன்பட்டதே ட்ராட்ஸ்கியம். லெனினின் வர்க்கப் போராட்டத்தின் ஏற்றத் தாழ்வான இயங்கியலையும், எற்றத் தாழ்வான சமுதாய இருப்பையும் கேலி செய்த டிராட்ஸ்கி, சமுதாயத்துக்கு புறம்பாக வரட்டுத்தனமாக நிராந்தப் புரட்சி பற்றி புலம்பிய போது, லெனின் இதை “ஒரிஜினல்” என்றும் “அபூர்வமான” என்றும் கிண்டல் செய்து நிராகரித்தார். அந்தளவுக்கு ட்ராட்ஸ்கியம் வர்க்கப் போராட்டத்துக்கு எதிராக இருந்தது. போல்ஸ்விக்குகளின் சரியான மார்க்சிய நிலைக்கு எதிராக இருந்தது. மார்க்சியத்துக்கு எதிராக டிராட்ஸ்கி மார்க்ஸ்சையே திரித்து காட்டிய நிரந்தரப் புரட்சி கோட்பாடு பற்றி லெனின் கூறும் போது இந்த அபூர்வமான தத்துவம் பத்து வருடங்களில் ஒரு பலனையும் உண்டு பண்ணவில்லையே! இதற்கு காரணம் என்ன என்று அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்” என்று அன்று கூறினார். இதையே இன்றும் சிந்திக்க மறுக்கும் டிராட்ஸ்கியவாதிகள், பழைய நிரந்தரப் புரட்சி என்ற வரட்டுக் கோட்பாட்டைக் காட்டியே ஸ்டாலினுக்கு எதிராக தூற்றி முன்தள்ளுகின்றனர். 1917ம் ஆண்டு போலஷ்விக்குகளுடன் இணைந்த டிராட்ஸ்கி பழையவற்றையும், நடுநிலைவாத கதம்பங்களையும் கைவிட்டதாக பறைசாற்றி தன்னை மூடிமறைத்துக் கொண்டான். பின்னால் நிரந்தரப் புரட்சி பற்றி இன்று வரை புலம்புவது தொடருகின்றது. லெனின் நிரந்தரப்புரட்சி பற்றி மேலும் குறிப்பிடும் போது புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் தொழிலாளி வர்க்க அரசியல் அதிகாரத்தைக் கைப்பற வேண்டும் என்றும் போல்ஸ்விக்குகள் வெளியிட்ட முழகத்தை அவர்களிடமிருந்து அந்த தத்துவம் கடன் வாங்கி இருக்கிறது. மறுபக்கத்தில், விவசாயிகள், புரட்சியில் வகிக்கும் பாத்திரத்தை “நிராகரிக்கும்” மென்ஸ்விக்குகளின் கருத்தை அந்த தத்துவம் மென்ஸ்விக்களிடமிருந்து கடன் வாங்கியிருகிறது” என்றார். நிரந்தரப் புரட்சியின் அடிப்படைக் கோட்பாட்டையும், அதன் மார்க்சிய விரோத நிலையையும் அம்பலப்படுத்தினார் லெனின். ஆனால் டிராட்ஸ்கியம் தாமே லெனினியவாதிகள் என்று கூறிக் கொண்டு நிராந்தரப் புரட்சியை முன்தள்ளுகின்றனர். டிராட்ஸ்கியின் நிராந்தர புரட்சியை நிராகரித்த ஸ்டாலினை, லெனினியத்துக்கு எதிரானவராக முத்திரை குத்தி தூற்றுகின்றனர். டிராட்ஸ்கியம் போல்ஸ்விக்கும், மென்ஸ்விக்கும்  இடையில் ஒரு பாதை தேடி, மென்ஸ்சுவிக்காக புரட்சிக்கு எதிராக முன்வைத்த நிரந்தப்புரட்சித் தத்துவத்தையே இன்று வரை டிராட்ஸ்கியம் தலையில் வைத்து கொண்டாடுகின்றது. மார்க்சியத்துக்கு திருத்தத்தை வைக்கின்றது. போல்ஸ்விசத்தை கைவிடக் கோருகின்றது. அதை ஸ்டாலினிசம் என்று கூறி லெனினிச அடிப்படைகளையே கழுவேற்றுவதில் முனைப்பாக செயல்படுகின்றது. மார்க்ஸ் நிரந்தரப் புரட்சி பற்றி கூறியதை திரித்து புரட்டி முற்றாகவே எதிர்நிலையில் திரிபுவாதமாகிய நிலையில், டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவம் காணப்படுகிறது.

 

1850 இல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் லீக்கில் பேசிய போது புரட்சியின் நிரந்தர தன்மை பற்றி மேலே குறிப்பிட்ட கேள்விகளில் கூடுமானவரை எல்லாவற்றையும் பெற்றவுடன் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் புரட்சியை முடித்துவிட ஜனநாயக மனப்பான்மையுள்ள மத்தியதர வர்க்கம் விரும்பும். ஆனால் நம் நலன்களும், கடமையும் அந்தப் புரட்சியை நிரந்தரமானதாக ஆக்குவதில் தான் அடங்கியுள்ளது. உடமை வர்க்கங்கள் யாவும் ஆதிக்கப்பீடத்தில் இருந்து வீழ்த்தப்படும் வரையில், தொழிலாளர் வர்க்கம் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில் ஒரு நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகில் முக்கியமான நாடுகள் அனைத்திலும் தொழிலாளர்களுக்கிடையில் போட்டி இல்லாதவாறு செய்து, பிரதான பொருளுற்பத்தி சக்திகள் யாவும் தொழிலாளிகளின் கையில் திரண்டு சேரும் நிலை உண்டாகும் அளவுக்கு தொழிலாளர்களின் கூட்டுறவு முன்னேறும் வரையில் புரட்சி நீடித்து நடத்தப்பட வேண்டும்” என்றார் மார்க்ஸ். புரட்சிக்கு பிந்திய அமைப்பில் தொடரும் வர்க்கப் போராட்டத்தை சுட்டிக் காட்டவே, புரட்சியின் நிரந்தர தன்மை பற்றி மார்க்சிய அடிப்படையை முன்வைக்கிறார். கம்யூனிசமே அதாவது நிரந்தரமான வெற்றி வர்க்கங்கள் அற்ற சமுதாய உருவாக்கும் நீடித்த வர்க்கப் போராட்டத்தின் முடிவில் தான் அடங்கியுள்ளது என்று கூறியிருக்கிறார் மார்க்ஸ். ஆனால் டிராட்ஸ்கியம் நீடித்த வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து நிரந்தரப் புரட்சியை வரட்டுத்தனமாக திரித்து வைக்கிறது. புரட்சியின் நீடித்த வர்க்கப் போராட்டம், ஆரம்பம் முதலே சமூகத்தில் முரண்பட்ட வர்க்கங்களுடன் இனைந்துள்ள புரட்சியின் அடிப்படை நலன்களுடன் தொடர்புடையது. தொழிலாளி வர்க்கம் மட்டும் தனித்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுவிடுவதில்லை. அப்படி பெற்றாலும் இடைநிலை வர்க்கங்களின் ஆதாரவுடன் தான் புரட்சி வெற்றி பெறுகின்றது. இதை கூர்மையாகவும் நுட்பமாகவும் சொன்னால் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தால் முழுமையாக ஆயுத பாணியாக்கப்பட்ட, ஒட்டு மொத்த மக்கள் சார்ந்து புரட்சி நடப்பது இல்லை. மாறாக சித்தாந்த துறையில், பொருளாதார துறையில் பாட்டாளி வர்க்கமல்லாத சிந்தாந்த ஆதிக்கம் கொண்ட சமுதாயத்தில் தான், தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை பெறுகின்றது. எனவே இது நீடித்த வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை உள்ளடக்கியதே ஒழிய, நிரந்தரமான புரட்சியை உருவாக்கிவிடுவதில்லை. நீடித்த புரட்சியை மறுத்து நிரந்தரபுரட்சி பற்றி கூறும் அந்த உள்ளடகத்தில் தான் முதலாளித்துவமீட்சி வித்திடப்படுகிறது. நிரந்தரம் என்பது நீடித்த புரட்சியின் ஒரு தொடர் விளைவாகவே இருக்கும். இல்லாத கற்பனையில் வரட்டுத்தனமான கோட்பாடுகளிலும், அராஜாகத்தின் கடை கோடியிலும் பிறந்ததே நிரந்தரப்புரட்சி பற்றிய டிராட்ஸ்கிய கோட்பாடு. இது மார்க்சின் அடிப்படையான மார்க்சிய உள்ளடங்களையும், சமுதாய மற்றத்தின் ஏற்றத் தாழ்வான அலை அலையான இயங்கியல் கூறுகளையும் கூட மறுக்கின்றது. இது பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கு, பாட்டாளி வர்க்க புரட்சிக்கு எதிரான கோட்பாடு. ஸ்டாலினுக்கு எதிராக டிராட்ஸ்கியம் முன் தள்ளுவது இதைத்தான். இதற்காகவே ஸ்டாலின் பலவிதத்தில் தூற்றுப்படுகின்றார்.

 

புரட்சியின் நிரந்தர தன்மையை பெறுவதற்கு முன் தொழிலாளர்கள், மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினை உள்ளடக்கிய தொழிலாளர் வர்க்க தலைமையில் கூட்டு அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே புரட்சியை தொடர்ந்து நடத்த முடியும். ஆட்சி அதிகாரத்தை தொழிலாளி வர்க்கம் கைப்பற்றிய பின் நீடித்த புரட்சியின் ஊடாகவே, படிப்படியாக தொழிலாளர் வர்க்கம் ஆட்சியை நிரந்தரமாக்க வேண்டும். இது தனித்த தொழிலாளர்கள் அல்லாத மற்றைய ஒடுக்கப்பட்ட பிரிவுகளை உள்ளடக்கிய ஆட்சியில் நடக்கும், உள்ளுறையான புரட்சியின் ஊடாக தொழிலாளர் வர்க்க ஆட்சியை நிறுவுவதாகும். இதனால் தான் இது கம்யூனிசம் அல்ல சோசலிச சமூகமாக இருக்கின்றது. டிராட்ஸ்கி இதைத் திரித்து தொழிலாளர் வர்க்க ஆட்சியை கைப்பற்றும் அந்தக் கணமே நிரந்தரப் புரட்சியை முன்தள்ளியதன் மூலம், புரட்சிகர கூறுகளையே சிதைத்து முதலாளித்துவ மீட்சிக்கான உள்ளடக்கத்தை முன் தள்ளகின்றார். அதாவது தொழிலாளி வர்க்கத்துடன் புரட்சியில் பங்குபற்றும் பிரிவுகளை எதிர்நிலைக்கு தள்ளி புரட்சியை பின் தள்ளுவது அல்லது புரட்சியை கைப்பற்றிய பின் நிரந்தப் புரட்சி என்பதன் மூலம் நீடித்த வர்க்கப் போராட்டத்தை மறுத்து முதலாளித்துவ மீட்சியை கோட்பாட்டு ரீதியாகவே உறுதி செய்வதே நிரந்தர புரட்சியாகும். சோவியத்தில் தொழிலாளி வாக்கத்தின் தலைமையில், தொழிலாளர் விவசாயிகளின் கூட்டான புரட்;சிகரமான பங்களிப்பை நிராகரித்து, விவசாயிகளை எதிரி வர்க்க நிலைக்கு தள்ளி முன்வைத்த கோட்பாடே நிரந்தரப் புரட்சியாகும். நிரந்தரப் புரட்சி சோசலிச கட்டமின்றி (மூன்றாம் உலக நாடுகளில் புதிய ஜனநாயக புரட்சி இன்றி) கம்யூனிச சமூகத்தை நேரடியாக அமைக்க கோரும் அராஜாகவாத கோட்பாட்டின் கடைக் கோடியில் நின்று முன்வைப்பதே. இன்றும் இதே டிராட்ஸ்கிய நான்காம் அகிலக் கும்பல் நிரந்தரப் புரட்சி என்ற மார்க்ஸின் சரியான நிலையைத் திரித்து, தொழிலாளர் வர்க்கத்துடன் கூட்டுச் சேரும் விவசாய வர்க்கத்தில் போர்குணாம்சத்துடன் கூடிய புரட்சிகரப் பாத்திரத்தை மறுதலிக்கின்றனர்.

 

டிராட்ஸ்கி திரித்துக் கூறிய நிரந்தர புரட்சியையும் இது போன்ற அனைத்தையும் நிராகரித்த லெனின் “சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர் தந்திரங்கள்” என்ற நூலில் நிகழ்ச்சிகள் எல்லாம் நாம் கூறியபடியே நிகழ்ந்திருக்கின்றன. புரட்சி நடந்தேறியிருக்கும் போக்கு நாம் பகுத்தாராய்ந்து முற்றிலும் சரி என்று ஊர்ஜிதம் செய்திருக்கின்றது. முதலாவதாக மன்னர் ஆட்சியையும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தையும், மத்திய கால ஆட்சி முறையையும் எதிர்ப்பதற்கு விவசாய மக்கள் “அனைவரையும்” ணைத்துக் கொண்டு புரட்சி முன்செல்லும். (அந்த அளவுக்கு, புரட்சி முதலாளியத் தன்மை வாய்ந்ததாக, முதலாளிய வர்க்க ஜனநாயகத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது) அதன் பிறகு சீமைப் பணக்கார விவசாயிகள், குலாக்குகள், லாப கொள்ளைக் காரர்கள், முதலியர்களை உள்ளிட்டு முதலாளியத்தை எதிர்ப்பதற்காக ஏழை விவசாயிகள், அரைத் தொழிலாளியாக மாறியிருக்கும் ஏழை விவசாயிகள், எல்லா சுரண்டப்பட்ட மக்கள் அனைவரையும் அனைத்துக் கொண்டு புரட்சி முன் செல்லும். இந்தளவுக்கு புரட்சியானது சோசலிசத் தன்மை வாய்ந்ததாகிறது. முந்தியதற்கும் பிந்தியதற்கும் இடையே ஒரு பெரிய மதில் சுவரை எழுப்பி பிரிக்க முயற்சிப்பது இரண்டு புரட்சிகளுக்குமிடையே ஒரு இடைக்காலம் தேவைப்படுவதும், தேவைப்படாததும் தொழிலாளர் வர்க்கம் இரண்டாவது கட்டத்துக்குப் பாய்வதற்கு எந்தளவுக்கு ஆயத்தமாகிறது என்பதையும், ஏழை விவசாயிகளுடன் எந்தளவுக்கு ஒற்றுழையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் மட்டுமே பொறுத்திருக்கும் என்பதைப் பாராமல், வேறெந்தக் காரணத்துக்காகவும் முதலாவது, இரண்டாவது கட்டங்களுக்கிடையிலே ஒரு இடைக்காலத்தைக் காண முயற்சிப்பது மார்க்ஸியத்தை கோணற்படுத்தித் திரித்துக் கூறுவதாகும், கேவலப்படுத்துவதாகும், மார்க்ஸியத்துக்குப் பதிலாக முதலாளிய மதவாதத்தை நிலைநாட்டுவதாகும்” என லெனின் நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையையே அம்பலப்படுத்தினார். ஆனால் இன்று வரை டிராட்ஸ்கிய வாதிகள் ஸ்டாலினைத் தூற்றியே மார்க்சியத்துக்கு எதிராக தம்மை நிலை நாட்டுகின்றனர்.

 

தமது சொந்த கோட்பாடுகளை பின்பக்க வழியாக திணிக்க ஸ்டாலின் தூற்றப்படுவது, சோசலிச சமுதாயத்தில் நடந்த, நடத்தப்பட வேண்டிய வர்க்கப் போராட்டத்தை மறுத்தே. மார்க்ஸ்; சோசலிச சமுதாயத்தில் துன்பமான கடுமையான துயர் நிறைந்த வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் அனுபவிக்க வேண்டிவரும் என்கிறர். ஆனால் இதைத் தூற்றுவது முதலாளித்துவ அரசியலாக மாறிவிடுகின்றது. பாட்டாளி வர்க்கமும் வர்க்கப் போராட்டத்தின் உள்ளடகத்துடன் மாறிச் செல்லவும், எம்மை நாம் மாற்றிக் கொள்ளவும், எதார்த்தையும் எதார்த்த வர்க்கப் போராட்டத்தை புரிந்து கொள்வதும், பாட்டாளி வர்க்க அடிப்படையை பாதுகாத்து தொடர்ந்து வர்க்கங்களை ஒழிக்க போராடடுவதன் அவசியத்தை மார்க்சியம் எமக்கு போதிக்கின்றது. இதை மார்க்ஸ் தீர்க்க தரிசனமிக்க வகையில் கூறிச் சென்றார்.

 

புதியஜனநாயகம், சோசலிசம் என்பது கம்யூனிசம் அல்ல. கம்யூனிசத்துக்கு முந்திய சமூக கட்டமைப்புகளாகும். புதியஜனநாயகம் என்பது சோசலிச சமூக கட்டமைப்புக்கு முந்திய ஒரு சமூக கட்டமைப்பாகும்;. அதாவது ஜனநாயக புரட்சி நடை பெறாத நாடுகளின் கட்டமைப்பாகும்;. ஒரு புரட்சிகர கம்யூனிச சமூகத்தை படைக்கும் ஒரு பாய்ச்சலை, அதாவது இடைக்கட்டமின்றி அடைந்து விட முடியாது. இடைக் கட்டம் என்பது அடிப்படையில் பழைய சமூகத்தின் பல்வேறு உள்ளடக்க கூறுகளை உள்ளடக்கிய வகையில் புரட்சி மூலம் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்துக்கு வருகின்றது. இந்த அரச அதிகாரமே பழைய முதலாளித்துவ வகைப்பட்ட வடிவில் வர்க்க ஆட்சியாகவே உள்ளது. புதிய ஜனநாயகம், சோசலிசம் என்பன உண்மையில் தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உள்ளடகத்தை மட்டும் குறித்து மார்க்சியம் வரையறை செய்கின்றது. இதை மறுப்பது திரிபு வாதமாகவும், முதலாளித்துவ மீட்பாகவும் உள்ளது. ஒரு புரட்சி இந்த இடைகால கட்டமின்றி கம்யூனிசம் நோக்கி செல்ல முடியம் என்ற டிராட்ஸ்கியத்தின் நிரந்த புரட்சி சரி, அனாஸ்சிட்டுகளின் அராஜாகவாதம் சரி, எதார்த்த நிலைமைக்கு புறம்பான முதலாளித்துவ மீட்சியாக உருவாகின்றது. ஒரு புரட்சியின் வெற்றி புரட்சிக்கு தயாரான மக்களின் தயார் நிலையுடன் நேரடியாக தொடர்புடையது. இந்த நிலைமை எதிரி வர்க்கத்தை தனிமைப்படுத்தி அழிக்கும் ஒரு நீடித்த இடைவிடாத புரட்சியின் முடிவில் தான் வெற்றியளிக்கின்றது. புரட்சி என்பது ஒரு தொடரான நிகழ்ச்சி நிரலைக் கொண்டது. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வந்தவுடன் இது மடிந்துவிடுவதில்லை. மாறக கடுமையானதும் சிக்கல் வாய்ந்ததுமான ஒரு வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் எதிர்கொள்கின்றது. எதிரி கட்சியின் உள் தனக்கான பிரதிநித்துவத்தை கண்டறிகின்றது. சமூக அமைப்பில் இருந்து உருவாகும் கட்சி, உயர்ந்த பட்ச வேலைத் திட்டத்தை நோக்கி நகரும் போது குறைந்த பட்ச வேலை திட்டத்துடன் நிற்பவர்களுக்கிடையில் முரண்பாடு உருவாகின்றது. இது ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் இருந்து உருவான கட்சியாக இருப்பதால், கட்சியில் முரண்பட்ட பிரிவு உருவாகின்றது. முரண்பாடு என்பது புரட்சியை மேலும் ஆழமாக்கி முன்னேறுவதா அல்லது குறைந்த பட்சத் திட்டத்துடன் நிறுத்திக் கொள்வதா என்பதே முரண்பாட்டின் அடிப்படை உள்ளடக்கமாக நீடிக்கும். இது முதலாளித்துவ மீட்சிக்கான புதிய பாதையாக உருவாகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகள் இந்த முரண்பாட்டில் புரட்சியை முன்னேற்றுவதற்கு எதிரான பிரிவுடன் தன்னை இணைத்துக் கொள்கின்றது.

 

இந்த பிணைப்பு பல்வேறு வழிகளில் கோட்பாட்டு ரீதியாக வெடிக்கின்றது. டிராட்ஸ்கி தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதே, சர்வதேச புரட்சிக்கு எதிரானது என்றான். இதை அவன் “தனிநாட்டு சோசலிசம்” என முத்திரை குத்தினான்;. தனது அதிகாரம், பலம் அனைத்தையும் கட்சியின் உள் இருந்தே பிரயோகித்தான். புரட்சியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும் சதிகளை தனது அரசியல் பாதையாக்கினான். இது சீனா, சோவியத் மற்றும் யூகோஸ்லாவியா எங்கும் இதுவே சோசாலிச அமைப்பின் அடிப்படையான முரண்பாடாக இருந்தன. புரட்சியை மேலும் தொடர்வதா அல்லது இத்துடன் நிறுத்துவதா என்பதே தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தின் திசையையும், மார்க்சியத்தின் இயங்கியலின் சரியான போக்கை முன்னெடுப்பதில் எற்பட்ட அடிப்படையான முரண்பாடாக இருந்தாது. அதாவது கம்யூனிச சமூகத்தைத் நோக்கி முன்னேற தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதா அல்லது முதலாளித்துவ மீட்சியை நடத்த வர்க்கப் போராட்டத்தை நிறுத்துவதா என்பதே கடந்த காலத்தில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தூக்கி எறியப்பட்ட நாடுகள் அனைத்திலும் மையமான விடையமாகி, வர்க்கப் போராட்டம் கைவிடப்பட்டு முதலாளித்துவ மீட்சி நடத்தப்பட்டது. இதை அரசியல் ரீதியாக மிகவும் துல்லியமாக முதலாளித்துவ மீட்சிக்கான எல்லா நடத்தைகளிலும் இனம் காணமுடியும். இது போன்று பாட்டாளி வர்க்கம் தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்த நீடித்த போது, இதற்கு எதிராக இருந்தவர்களின் அரசியலிலும் நீக்கல் இன்றி காணமுடியும்.

 

ஆனால் கம்யூனிசத்தையும், மார்க்சியத்தையும், பாட்டாளி வர்க்க தலைவர்களையும் தூற்றும் எவரும் இந்த உள்ளடகத்தினுள் விவாதிப்பதில்லை என்பதை, உழைக்கும் மக்களின் நலனுக்காக போராடும் யாரும் சரியாகவும் துல்லியமாகவும் இனம்காணமுடியும். தனிமனித உரிமையை முதன்மைப்படுத்தி சமூக உரிமையை சிறுமைப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையில் நின்று, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக பட்டியல் இட்டு தூற்றுவது நிகழ்கின்றது. உழைக்கும் மக்களின் உழைப்பை உறுஞ்சும், உறுஞ்ச விரும்பும் இலக்கியம் முதல் அந்த உரிமையை ஒடுக்குவதை மனித உரிமை மீறல் என்பது முதலாளித்துவ அகாராதி. பாட்டாளி வர்க்கம் இதை அங்கீகரிப்பதில்லை. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், பாலின் பெயரால், நிறத்தின் பெயரால், சுரண்டலின் பெயரால் ஒடுக்க நினைக்கும் எந்த இலக்கியமாக இருந்தாலும், நடைமுறை செயலாக இருந்தாலும் அவைகளை பாட்டாளி வர்க்கம் ஈவிரக்கமின்றி ஒடுக்கும். இது வன்முறை ரீதியாக கையாளும் போது கடுமையான தண்டனைக்குள்ளாகும். இங்கு மனிதபிமானம், மனித உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. மூலதனத்தின் எந்த சர்வதேச நீதிமன்றமும் இதை விசாரித்தாலும், பாட்டாளி வர்க்கம் இதற்கு தலைவணங்கப் போவதுதில்லை. தனிமனித உரிமை என்பது சமூகத்தின் உரிமையை பறிக்குமாயின், அது மனித விரோதக் கிரிமினல் குற்றமாகும். இந்த மனித சமுதாயத்தில் சமூக உரிமையை மறுக்கும், இந்த சமூக விரோதிகளுக்கு இந்த சமுதாயத்தில் வாழும் உரிமை மறுக்கப்பட வேண்டும். இதை யாரும் எதிர்த்து நிற்கின்றார்கள் எனின், சமூக உரிமைகளை கொச்சைப்படுத்தி, அந்த சமூகத்தின் வாழ்வை நாசமாக்கி இரத்தை உறுஞ்சி வாழும் ஒட்டுண்ணி ரகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் தான்.

 

மனித இனம் நாள் தோறும் பட்டடினியிலும், நோயிலும், அடிப்படை வசதி இன்றியும், இயற்கை சார்ந்த சூழலை இழந்தும், குடிக்க நல்ல நீர் இன்றியும் கொல்லப்படுகின்றனர். இப்படி வருடம் சில பத்து கோடி மக்களை வருடாவருடம் இந்த மூலதனம் ஜனநாயகத்தின் பெயரில் படுகொலை செய்கின்றது. இது இந்த அமைப்பில் அங்கிகாரிக்கப்பட்ட ஜனநாயகமாக, சட்டத்துக்கு உட்பட்ட கொலையாக தொடருகின்றது. சமுகத்துக்கு எதிரான தனிமனித ஜனநாயகம் உருவாக்கிய மூலதனத்தின் செழிப்பினால், இந்த மனித விரோத கொடூரங்கள் நடக்கின்றது. ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் படுகொலை செய்யும் இன்றயை சமூக நீதி சார்ந்த ஜனநாயக போதனைகளை, நாம் ஒரு நாளும் மண்டியிட்டு தலைவணங்கப் போவதில்லை. இந்த கபடம் நிறைந்த ஒநாய்களை ஒழித்துக் கட்ட, நாம் பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தின் துணையுடன் உலகத்தையே மாற்றியமைப்போம். இங்கு ஊளையிடும் நாய்களாக வேடம் போடும் எவரையும் அனுமதிக்க போவதில்லை. சர்வதேச மூலதனமும், தனிச் சொத்துரிமையையும் நீடிக்கும் வரை, அவர்களின் தயவில் தூற்றுவது ஒரு பிழைப்புவாதத்தின் ஊற்று மூலமாக இருக்கும்;. இது சமூகத்தின் இரத்தத்தை ஊறுஞ்சும் அட்டையாக, தனிமனித உரிமையாக நீடிப்பதே இன்றைய அவதூறுகளின் மூலமாக உள்ளது. 

 

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22

23ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23

24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 24

25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 25

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

கூடங்குளம் போராட்டம்: மயிலைக் கண்ட சில வான்கோழிகள்

 

அமெரிக்கவின் மூன்று மைல் தீவு, ரஷ்யாவின் சொர்னோபில், ஜப்பானின் புக்குஷிமா போன்ற விபத்துகள் அணு உலைகளின் கொடூர முகத்தை வெளிக்காட்டியதுடன் அணு உலைக்கு அதிராக போராடும் உத்வேகத்தையும் மக்களுக்கு தந்திருக்கிறது. அந்த அடிப்படையில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் ஓர் ஆண்டுக்கும் மேலாக வெகுமக்கள் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் மயிரளவுக்கும் கூட மதிக்க மறுக்கின்றன. மறுபுறம் இணைய அறிவுஜீவிகள் தங்கள் மேதமையால் நாராயணசாமிகளாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் மக்கள் கேட்கும் நியாயமான கேள்விகளூக்கு பதிலளிக்கவோ, அந்த கேள்விகளை எதிர்கொள்ளவோ திறனற்றவர்கள் தங்கள் வர்க்க விருப்பங்களை, சொந்தக் கதைகளை பொதுக் கேள்விகளாக மாற்றி உலா விடுகிறார்கள்.

 

கடற்கரை மணலில் இரண்டு நாட்களாக நடந்த முற்றுகைப் போராட்டத்தை சட்ட விரோத செயல் போல திரிக்கப் பார்க்கிறார்கள் இந்த எல்லாம் அறிந்த ஏகாம்பரங்கள். எது சட்ட விரோதம்? தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகின்ற ஒரு ஆலையை தடுப்பதற்காக அமைதியான முறையில், அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமையைக் கொண்டு எந்த வன்முறையும் செய்யாமல் அமைதியாய் முற்றுகைப் போராட்டம் நடத்தியது சட்ட விரோதமா? ஜனநாயக ஆட்சிமுறை என்று தன்னைப் பீற்றிக் கொள்ளும் ஒரு நாடு, ஜனநாயக முறையில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக ஐந்து மாதங்களுக்கு மேலாக 144 தடையுத்தரவு போட்டு வதைப்பது சட்ட விரோதமா?

 

முற்றுகைப் போராட்டம் என்ற பெயரில் வன்முறை செய்தார்களாம், போலிசார் அமைதியாக கையாண்டார்களாம் கதை விடுகிறார்கள் கதை சொல்லிகள். முற்றுகை என்று வெளிப்படையாய் அறிவித்து; அரிசி, பருப்பு முதல் அனைத்தையும் தயார் செய்து முற்றுகை நடத்த வந்தவர்கள் இரண்டு நாட்கள் அல்ல, இருபது நாட்களானாலும் முற்றுகையை தளர்த்தவோ கைவிடவோ மாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்கள் நோக்கம் சிதைந்து போகும். ஆனால், மக்களை விட அதிகமாய் குவிந்திருந்த போலீஸ் படை லத்தி, துப்பாக்கி, முதல் கண்ளீர்புகை குண்டு, வஜ்ரா வரை அத்தனை ஆயுதங்களோடும் திரண்டிருந்தார்கள். முற்றுகையை இரண்டு நாட்கள் வரை விட்டதே அதிகம். ஏனென்றால், அவர்களின் நோக்கமே முற்றுகையை எந்தச் சிக்கலும் இல்லாமல் கலைப்பதே. அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையும் அது தான். ஆண்டுக்கணக்காக நீண்ட உண்ணாவிரதம் போல முற்றுகையும் நாட்கணக்காக நீண்டால் அரசுக்கு அது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கும். அந்தச் சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான் போலீசு படைகளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை. அந்தக் கட்டளையைத் தான் அமைதியாக முற்றுகை நடத்திக் கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் குண்டுகளை வீசி கலைந்து போகச் செய்தார்கள். மண்ணள்ளி வீசும் புகைப்படத்தை போட்டு யார் வன்முறை செய்தார்கள் என்று கேள்வி கேட்க்கும் சிந்தனைச் சிற்பிகளுக்கு, யார் வன்முறை செய்தால் யாருக்கு லாபம்? எனும் கேள்வி மட்டும் சிந்தையில் உதிக்காமல் போனது எப்படி?

 

நீதி மன்றம் எரி பொருள் நிரப்பச் சொல்லி விட்டது, அரசு 144 தடையுத்தரவு போட்டிருக்கிறது இதை மீறி போராடுவது சரியாகுமா? கேட்கிறார்கள். மக்கள் அரசின் அடிமைகளா இல்லை குடிமக்களா? மக்களுக்காக சட்டங்களா? சட்டங்களுக்காக மக்களா? தொடக்க காலத்திலிருந்து அந்தப் பகுதி மக்கள் அணு உலை வேண்டாம் என்று போராடி வருகிறார்கள். மக்களின் கோரிக்கைக்கு தொடர்ந்து செவி சாய்க்க மறுக்கும் அரசுக்கு 144 போடும் அறுகதை உண்டா? சட்டங்களைப் பற்றி யார் பேசுவது? இந்த அரசும் நீதிமன்றங்களும் சட்டத்தை மதிக்கின்றனவா? எரிபொருள் நிரப்பும் அனுமதிக்காக செய்யப்பட்ட முறைகேடுகளை என்ன செய்வது? கடலில் கொட்டப்படும் அணுக்கழிவுகளின் வெப்பநிலை 37 செல்சியஸ் எனும் விதியை கூடங்குளத்திற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தளர்த்தியதன் நோக்கம் என்ன? கடல்சார் ஒழுங்குமுறைச் சட்டங்களிலிருந்து கூடங்குளத்திற்கு மத்திய அரசு விலக்களித்த மர்மம் என்ன? ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகு இந்திய அணு உலைகள் பாதுகாப்பு நிபுணர்கள் பரிந்துரைகளை நிறைவேற்றிய பிறகே செயல்படுத்தப்படும் என்று நீதிமன்றத்திடம் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால் அந்த பரிந்துரைகள் இன்னும் செயல்படுத்தப் பட்டிருக்காத போதும் கூட நீதிமன்றம் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்ததின் பின்னணி என்ன? அணு உலையில் எரிபொருள் நிரப்பப்படும் முன்னர் 30கிமி தூரத்துக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் பேரிடர் மேலாண்மை பயிர்ச்சி வெளிப்படையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் யாருக்கும் தெரியாமல், பத்திரிக்கையாளர்கள் யாரையும் அழைக்காமல், எந்த விபரமும் இல்லாமல் நக்கனேரி கிராமத்தில் ரகசியமாக பயிற்சி நடத்தியதாக காட்டியதை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரித்தது எந்த அடிப்படையில்? அணு உலை அழுத்தக் கலனில் இரண்டு பற்றவைப்புகள்(வெல்டிங் ஒட்டு) இருப்பதாக 2008ல் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அளித்த அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தது. இந்த பற்றவைப்புகள் அணுக் கதிர்வீச்சை தாக்குபிடிக்கும் திறன் கொண்டவையா? என்று சோதனை செய்யாமலேயே எரிபொருள் நிரப்ப அனுமதி தந்தது என்ன காரணத்துக்காக? மக்களின் முன் சட்டத்தை நீட்டும் மகோன்னதமானவர்கள் யாராவது இவ்வளவு விதிகளை மீறியது ஏன் என்று அரசையும், நீதி மன்றங்களையும், அணுசக்தி ஆணையத்தையும் கேட்பார்களா? மக்கள் உயிர் என்ன கிள்ளுக் கீரையா?

 

முற்றுகை நடத்திய மக்களிடம் காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம், நியாயவான்கள் கூறுகிறார்கள். அவர்கள் பேசிய விபரம் என்ன? வெளியிடுவார்களா? 10 நிமிடத்தில் கலைந்து செல்லாவிட்டால் நாங்கள் தடியடி நடத்தி கலைப்போம் என்று கூறுவது மிரட்டலா? பேச்சுவார்த்தையா? கடலுக்குள் மனிதச் சங்கிலி அமைத்து போராடியவர்களில் மீனவர் சகாயத்தை விமானத்தை தாழப் பறக்கச் செய்து கொன்றதை நலம் விசாரிக்கத்தான் விமானத்தில் தாழப் பறந்தார்கள் என்று கூறுவார்களோ!

 

 

மக்களின் அமைதியான போராட்டத்துக்கு முகம் கொடுக்க முடியாமல், தொடர்ச்சியான போராட்டத்தை கட்டுப்படுத்தவும் முடியாமல் அரசு அன்றிலிருந்து இன்றுவரை போராட்டத் தலைமை மீது அவதூறு கற்பிப்பதையே வழிமுறையாக கடைப்பிடித்துவருகிறது. வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது, கைக்கூலி, விசுவாசி என்று ஏதேதோ. அரசிடம் அதிகாரம் இல்லையா? வசதி வாய்ப்புகள் இல்லையா? கூறலாமே, இந்த நாட்டிலிருந்து, இன்ன அமைப்புகளிலிருந்து பணம் வந்தது நாங்கள் கைப்பற்றி வைத்துள்ளோம் என்று. ஆண்டுக்கணக்கில் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்று கூறுபவர்கள், ஏன் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முயலவில்லை? இந்திய நாட்டின் முடிவை எதிர்த்து போராடுபவர்களுக்கு  பணம் அனுப்பும் செயல் என்பது இறையாண்மையையே கேள்விக்குள்ளாக்கும் செயலல்லவா? போராடிய மக்கள்மீது தேசத்துரோக வழக்குகளைப் போட்ட இந்த அரசு, பணம் அனுப்பும் நாடுகளின் தூதரக உறவை ஏன் துண்டிக்கக் கூடாது? தொடர்ச்சியாக பதிவெழுதி விமர்சிப்பவர்கள் இதை அரசுக்கு கோரிக்கையாக வைத்து ஒரு பதிவேனும் எழுதுவார்களா?

 

விஞ்ஞானி அப்துல் கலாமே சொல்லிவிட்டார் உங்களுக்கு இன்னும் என்ன பயம் என்கிறார். போலிமருத்துவர் சொன்னால் பயங்கொள்ளாமல் எப்படி இருப்பது? அப்துல்கலாம் ஒரு ராக்கெட் தொழில்நுட்ப விஞ்ஞானி. ரியாக்டர்கள் இயங்கும் விதம் குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் அவர் எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்? காவிரிக் கரையில் சிறுநீரகக் கோளாறுக்கு தோல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பார்களோ!

 

உதயகுமார் காந்தி வழியில் போராடுகிறாரா? அஹிம்சை என்பது போராட்ட வடிவமா? என்பதெல்லாம் அப்பாற்பட்ட கேள்விகள். அணு உலைகளின் ஆபத்து அதன் பாதிப்புகளில் மட்டும் இல்லை, அதன் அரசியலிலும் இருக்கிறது. அணு உலையின் நோக்கம் மின்சாரத் தயாரிப்பல்ல, பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கு சொந்த நாட்டு மக்களைப் பலியிடுவது. அணு மின்சாரம் குறித்த பல புள்ளிவிபரங்கள், பல கட்டுரைகள் இணையப் பரப்பில் கிடைக்கின்றன. அவை குறித்த தேடல் எதுவும் இல்லாது தம் சொந்த விருப்பிலிருந்து எழுதுவதும் பேசுவதும் உண்மைகளுக்கு அருகில் கூட வருவதில்லை.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17

கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்

 

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

 

கோள்களும் விசைகளும் பற்றிய குரான் வசனங்களில் நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி எனும் சொல்லில் புவி ஈர்ப்பு விசையை ஏற்றி வைத்திருப்பது குறித்து எழுதியிருந்தேன். இதை எந்த விதத்திலாவது மறுத்திருக்கிறாரா? அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இருக்கிறாரா? இரண்டையும் செய்யவில்லை. வெறுமனே உவமைக்கு மட்டும் உதாரணத்தைக் கூறி ‘மான் கராத்தே’ காட்டி விட்டார். இதற்கிடையில் நிரூபிக்க முடியுமா என்று சவடால் வேறு. பாவம் என்ன செய்வார், அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி மறுத்து எழுத வேண்டும் என்பது, அதேநேரம் எதை மறுப்பது எப்படி மறுப்பது என்பதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை போலும். ஐயன்மீர், முதலில் கட்டுரையை படித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். எது புனைவாக எழுதப்பட்டிருக்கிறது? எது மறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது? என்பதை அறிந்து எதை எப்படி மறுப்பது என்பதை ஆய்ந்தறிந்து அதன் பின்பு மறுப்பை கூறுங்கள்.

 

அந்த வசனத்தில் எதை அறிவியல் என்று கூறுகிறார்களோ அது உவமையாக கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி அல்லது தூண்களின்றி வானம் படைக்கப் பட்டிருக்கின்றது. குரானில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உவமை பொருத்தமானதில்லை. எனவே. அது புவியீர்ப்பை குறிக்காது என்பது என்னுடைய வாதம். எந்த விதத்தில் அந்த உவமை பொருத்தமானதில்லை? புவியீர்ப்பு விசை என்ன தன்மைகளைக் கொண்டிருக்கிறதோ அந்த தன்மைகளை உவமையும் கொண்டிருந்தால் தான் அது பொருத்தமான உவமையாகும். புவியீர்ப்பு விசையின் தன்மை என்ன? புவியின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பொருட்களைத் தன்வசம் ஈர்க்கிறது. இந்த இரண்டு தன்மைகளையும் அந்த உவமை எதிரொலிக்கிறதா? என்றால் இல்லை என்பதே பதில். ஒரு கட்டிடத்தின் தளங்களை தூண் தாங்கிப் பிடித்தால் அது எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஓரிரு இடங்களில் இருந்தால் போதும். ஒரு தூண் ஒருபோதும் பொருட்களை தன் வசம் ஈர்க்காது. எனவே அது பொருத்தமானதில்லை, ஆகவே அது புவியீர்ப்பு விசையை குறிக்காது என்று விளக்கினால், நமக்கு மண்ணாங்கட்டி பாடம் எடுக்கிறார் நண்பர். நானும் அதே மண்ணாங்கட்டியை எடுத்துக் கொள்கிறேன்.

 

இஹ்சாஸ் ஒரு மண்ணாங்கட்டி என்று வைத்துக் கொள்வோம், என்றால் என்ன தன்மையில் அந்த உவமையைக் கூறுவோம்? இஹ்சாஸ் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவராக இருக்கிறார் அதுபோல மண்ணாங்கட்டியும் புரிந்து கொள்ளாது. எனவே, இஹ்சாஸின் புரிந்து கொள்ளாத தன்மை மண்ணாங்கட்டியிலும் இருப்பதால் மண்ணாங்கட்டியை அவருக்கு உவமையாக கூறுவோம். இது பொருத்தமான உவமை. இஃதன்றி, இஹ்சாஸ் சட்டை அணியாமல் நிற்கிறார், மண்ணாங்கட்டியும் சட்டை அணியாது எனவே அவர் மண்ணாங்கட்டி என்று யாரேனும் உவமை கூறுவார்களா? அப்படிக் கூறினால் அது பொருந்தாத உவமை. ஆனால் குரானின் தூண் விவகாரத்தில் எத்தன்மைக்கு உவமை கூறப்பட்டுள்ளதோ அத்தன்மைக்கே பொருந்தவில்லை என்று தான் நான் கூறியிருக்கிறேன். தந்தை ஒரு குடும்பத்துக்கு தூணாக இருக்கிறார் என்றால் அந்த தன்மைக்கு மட்டும் தானே உதாரணமும் உவமையும். சட்டை போடவில்லை, கைலி உடுத்தவில்லை என்று பொருத்தமற்று கூறிக் கொண்டிருப்பது யார்? பதில் கூற வக்கற்றிருந்தால் அதற்காக திசை திருப்பக் கூடாது.

 

இன்னொரு கோணத்திலும் அந்த வசனத்தைப் பார்க்கலாம். ஈர்ப்பு விசை என்பது கோளோடு தொடர்புடையது. புவியீர்ப்பு விசை என்றால் அது புவியோடு தொடர்புடையது. இதில் வானம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்பதற்குத்தான் பார்க்கின்ற தூண்களின்றி என்ற பதில் வருகிறது. அதாவது இந்த உவமையின் உண்மை வானம் பார்க்கின்ற தூண்களால் அல்லாது பார்க்க முடியாத தூண்களால் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதே. தெளிவாகச் சொன்னால் அவ்வாறான தூண்கள் இல்லாது போனால் வானம் விழுந்துவிடும் என்பது தான் அதில் உட்பொதிந்திருப்பது. இதில் புவியீர்ப்பு எங்கிருந்து வந்தது? இதில் அறிவியல் இருக்கிறதா? குறைந்தபட்சம் அவியலாவது இருக்கிறதா? இதைத்தான் புனைவாக குறிப்பிட்டிருந்தேன். இதை நிரூபிக்க முடியுமா? என்று சவடால் விட்ட இஹ்சாஸ், நேர்மையானவராக இருந்திருந்தால் அதில் என்ன அறிவியல் இருக்கிறது என்பதையல்லவா வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

 

இவைகள் ஒருபுறமிருக்கட்டும். ஒரு மொழிபெயர்ப்பில் ‘பார்க்கின்ற தூண்களின்றி’ படைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. பிரிதொன்றிலோ ‘வானம் தூண்களின்றி படைக்கப்பட்டிருக்கிறது அதை நீங்கள் பார்க்கிறீர்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இது மட்டுமா? குரானுக்கு உரையெழுதிய பெரும்பாலான ஆசிரியர்கள் தூண்களின்றி படைக்கப் பட்டிருப்பதாகவே மொழி பெயர்த்திருக்கிறார்கள். என்றால் அதை பார்க்கின்ற தூண்களின்றி என உருமாற்றி புவியீர்ப்பு விசையோடு திருமணம் செய்வித்தது யார்? எதற்காக? வேறொன்றுமில்லை இக்கால அறிவியல் உண்மைகளையெல்லாம் முகம்மது ஆறாம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டாராக்கும் என்று அப்பாவி மக்களை ஏய்த்து மதவாத ஜல்லியடிப்பதற்குத் தானேயன்றி வேறெதற்காகவும் இல்லை.

 

அதுசரி, நண்பர் கூறுவதை பொருட்டாக எடுத்துக் கொள்ளலாம், நான் தெளிவாக இப்படி எழுதியிருக்கிறேன், \\\தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது?/// என்றொரு கேள்வியையும் கேட்டிருக்கிறேன். பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்தும் இதற்கான பதில் இல்லையே ஏன்? இது தான் மதவாதம் என்பது, எதையும் பரிசீலித்துப் பார்ப்பதில்லை. சாதகமான இடங்களில் சவடால் அடிப்பது, பாதகமான இடங்களில் கள்ள மௌனம் சாதிப்பது. இதைத்தானே தொடக்கத்திலிருந்து பார்த்து வருகிறோம்.

 

அடுத்து குறிப்பிட்ட காலம் வரை சென்று கொண்டிருக்கும் என்று குரான் வசனம் கூறுவதன் பொருள் என்ன? இதில் குறிப்பிட்ட காலம் வரை என்பது கோள்களின் இயக்கம்; அதாவது பூமியோ சந்திரனோ மட்டுமல்லாது சூரியனும் விரைந்து கொண்டிருக்கிறது. எல்லாக் கோள்களும் விண்மீன்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன, விரைந்து கொண்டிருக்கின்றன எனும் அறிவியல் உண்மையை அந்த வசனம் கூறுவதாக கதையடிக்கிறார்கள். இதை மறுத்து குரான் வசனங்களில் அறிவியல் இருப்பதாக ஜம்பமடிப்பதற்கு மதவாதிகள் என்ன உத்தியை பயன்படுத்துகிறார்கள் என்பதை விளக்கும் விதமாக சில குறிப்புகளைக் கூறியிருந்தேன். பூமி தட்டை என்று உலகம் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் குரான் உருண்டை என்றது என்பார்கள். ஆனால், உண்மையில் குரான் தயாரிக்கப் பட்டுக் கொண்டிருந்த போது பூமி உருண்டை எனும் புரிதல் மக்களுக்கு இருந்தது என்பது மட்டுமல்லாமல் குரான் பூமியின் வடிவம் உருண்டை என்று கூறவும் இல்லை. அது போலவே கோள்கள் விண்மீன்களின் இயக்கம் குறித்து இந்த வசனம் கூறவும் இல்லை; அதேநேரம் குரானுக்கு வெகு காலத்துக்கு முன்பே கோள்களின் இயக்கம் குறித்த அறிவு மனிதனுக்கு இருக்கவும் செய்தது. இதைக் குறிப்பிட்டு விட்டுத் தான் \\\எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// என்று முத்தாய்ப்பாகவும் கூறியிருந்தேன். இவை எதையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாத நண்பர் மறுப்பு கூற வேண்டுமே என்பதற்காக ஏதேதோ உளறி வைத்திருக்கிறார். ஒருவேளை இவைகளையெல்லாம் படித்து நண்பருக்கு ரோசம் வந்து, மெய்யாகவெ அந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்பதை நிரூபித்தால் அதன் பின்னர் நான் விளாக்கங்களுடன் வருகிறேன்.

 

அடுத்து நான் மப்பில் உளறுவதாக நண்பர் எழுதியிருந்தார். எழுதுவதற்கு ஒன்றுமில்லாத போது, பதில் கூற முடியாத போது அவதூறு பொழிவது மதவாதிகளின் வழக்கம். அதை தவறாமல் பின்பற்றியிருக்கிறார் இஹ்சாஸ். ஆனால் மெய்யாகவே மப்படித்தது போல் இஹ்சாஸ் உளறிக் கொட்டியிருக்கிறார், அவைகளைப் பார்க்கலாமா? 1. \\\இவர்களுக்கும் அரேபியாவில் வாழ்ந்த முகம்மது நபிக்கும் என்ன தொடர்பு/// அப்படி ஏதேனும் தொடர்பு இருப்பதாக நான் எங்கேனும் கூறியிருக்கிறேனா? அறிவியலுக்கும் முகம்மதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர் கூறியதில்  அறிவியலும் இல்லை. இதைத்தான் நான் தொடக்கத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கிறேன். 2. \\\இவர்கள் ஏற்கனவே கூறியிருந்தால் ஏன் கொப்பர்னிகஸ் போன்றோர் கூறும்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்?/// கோப்பர்நிகஸ் சூரியக் குடும்பத்தின் மையத்தை பூமியிலிருந்து சூரியனுக்கு நகர்த்தியதால் விமர்சிக்கப்பட்டார்.

 

அடுத்து, குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதன் பொருள் என்பதாக மதவாதிகள் கூறுவதென்ன? இப்பேரண்டத்தின் அனைத்து பருப் பொருட்களும் விரைந்து கொண்டிருக்கின்றன என்பது அண்மை கண்டுபிடிப்பு. இதைத்தான் இந்த வசனம் கூறுகிறது என்கிறார்கள். ஆனால் இந்த வசனம் கூறுவதென்ன? குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் அதன் பிறகு செல்லாது என்றால் அது குறிப்பிடுவது அறிவியலை அல்ல மதக் கற்பனையை. இதைத்தான் நான் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன், \\\நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// இது எப்படி அறிவியல் கண்டுபிடிப்போடு தொடர்பு படுத்தப்படுகிறது என்றால் எந்த விளக்கமும் கிடைக்காது, ஆனாலும் மதவாதிகளுக்கு அது அறிவியல் அவ்வளவு தான்.

 

அடுத்து சூரியன் அதற்குறிய இடத்தை நோக்கிச் செல்கிறது என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மதவாதிகள் புனையும் அறிவியலை புஹாரி 3199 வெடி வைத்து தகர்க்கிறது. அதனால் தான் நண்பர் மெதுவாக அது ஏற்கமுடியாத ஹதீஸ் என்று நூல்விட்டுப் பார்க்கிறார். அது ஏற்க முடியாதது என்பதற்கு அவர் கூறும் காரணம், அது குரான் கூறும் ஒரு தகவலோடு முரண்படுவது என்கிறார். அதாவது அர்ஷ் பூமி, சூரியனுக்கு மேலே இருப்பதாக குரான் குறிப்பிடுகிறதாம், இந்த ஹதீஸில் கீழே இருப்பதாக பொருள் வருகிறதாம். இது முரண்பாடு என்பதால் செல்லாது என்று தீர்ப்புக் கூறுகிறார். எந்த அடிப்படையில் அர்ஷ் கீழே இருப்பதாக பொருள் வருகிறது? விளக்க முடியுமா நண்பரால்?

பாசிச ஜெயா அரசைக் கண்டிக்கிறோம்

அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தொடுத்திருக்கும் நயவஞ்சகமான, கொடிய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்

மத்திய மாநில அரசுகளே,

  • இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும், அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளையும் உடனே திரும்பப்பெறு!
  • அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிக்காதே!
  • கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்து!
  • மக்களுக்கும், உயிரினங்களுக்கும்,சுற்றுச் சூழலுக்கும் பெருநாசம் விளைவிக்கும் அணு உலைகளை இழுத்து மூடு!

உழைக்கும் மக்களே,

  • போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம்.

முதலிபட்டி வெடிவிபத்து படுகொலைகள்: நேரடி ரிப்போர்ட்

டந்த புதன்கிழமை (05/09/2012) பிற்பகலில் சிவகாசியை அடுத்த முதலிபட்டி ஓம்சக்தி புளூ மெட்டல்ஸ் எனும் வெடி பொருட்கள் தொழிற்கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. நேரடியாக அங்கு சென்று நிலமையை அறியும் பொருட்டு தோழர்கள் அடுத்த நாள் காலையில் சிவகாசியைச் சென்றடைந்தோம். திரும்பிய பக்கமெல்லாம் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஈரத்துடன் காட்சியளித்தன. விசாரித்துப் பார்த்ததில் முதலிபட்டிக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ஆட்டோ, வேன் போன்றவையும் கூட செல்லாது என்றும் கூறினார்கள். வேறு வழியின்றி டூவீலர்களுக்கு ஏற்பாடு செய்து கிளம்பினோம்.

முதலிபட்டிக்கு சென்றதும் யாரும் தொழிற்கூடம் இருந்த பகுதிக்குச் சென்றுவிட முடியாதபடி காவல் படைகளின் அரண் தான் எம்மை எதிர்கொண்டது. முன்பக்கப் பாதை, பின்பக்கப் பாதை, சுற்றுவழி, ஒத்தையடிப் பாதை, முள்வேலி என அனைத்து வழிகளில் உள்ளே செல்ல முயற்சித்தும் அத்தனையிலும் லத்திக்கம்புகள் விரட்டின. கேரளாவின் கைரளி தொலைக்காட்சியும், புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஏதேதோ பேப்பர்களைக்காட்டி உள்ளே நுழைந்தன. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் சிபிஎம் தலைவர் எச்சூரியும் (மதுரையில் எஸ்.எஃப்ஃ.ஐ மாநாடாம், அப்படியே துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்) அவர் பின்னே ஒரு கூட்டமும் வந்தது. பின்னர் காவல்படை அரண்களும் விலக்கப்பட்டுவிட உள்ளே நுழைந்தோம்.

வெடித்துச் சிதறி சிதிலமைடைந்த அறைகள், தீப்பிடித்து கரிந்து போன சுவர்கள், முறிந்து போன மரம் என காணக் கிடைத்தவை நடந்த கோரத்தின் மௌன சாட்சிகளாய் எஞ்சியிருந்தன. ஆனால் சிதறிய பட்டாசுகளின் மிச்சங்கள் கூட்டிப் பெருக்கி ஓரமாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லா இடமும் சுத்தமாய் காட்சியளித்தது. தெளிவாய்ச் சொன்னால் கட்டிட இடிபாடுகளைக் கழித்து விட்டால் சில மணி நேரங்களுக்கு முன்னர் கோரமான வெடி விபத்து நிகழ்ந்த இடம் என்று கூறமுடியாதபடி இருந்தது. அதாவது, இப்படி ஒரு விபத்து நேர்ந்து ஒரு வாரம் கழித்து அந்த இடத்தைப் பார்வையிட்டால் எப்படி இருக்குமே அப்படி ஒரே இரவில் மாற்றப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் இது ஏன் என்ற கேள்விதான் மனதில் தொக்கி நின்றது. மெல்ல அங்கு கூடியிருந்த மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

ஒரு முதியவர் கூறினார், இரவோடு இரவாக புல்டோசர்களும், ஜேசிபி எந்திரங்களும் வந்து சென்றன என்று. அந்தக் கோரம் நடந்து ஓரிரு மணி நேரத்திற்குள் அந்தப் பகுதியை காவல்துறை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. காலை வரை யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த நேரத்தில் கனரக வாகனங்கள் வந்து சென்றிருக்கின்றன. காலையில் உள்ளே சென்று பார்த்தால் எல்லா இடமும் சுத்தமாக இருக்கிறது. என்றால் இதன் பொருள் என்ன? முதல் நாள் இரவில் ஜி டிவி செய்தியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 வரை என்று கூறினார்கள். ஆனால் காலையில் அனைத்து நாளிதழ்களும் செய்தி ஊடகங்களும் 38 என்று முடித்து விட்டன. ஆகவே, இது தெளிவாக இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் வேலைதான்.

சிறிதும் பெரிதுமாக சிவகாசி பகுதியில் இது போன்ற பட்டாசு ஆலைகள் 900க்கும் அதிகமாக இயங்கி வருகின்றன. முதலிபட்டி பகுதியில் மட்டும் தோராயமாக 200 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. அத்தனையும் எந்த நேரமும் வெடிவிபத்தை ஏற்படுத்தக் கூடிய மிக ஆபத்தான இரசாயனப் பொருட்களைக் கையாளும் ஆலைகள். இத்தனைக்கும் சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு எட்டு பெண்களுக்கு எட்டு என பதினாறு படுக்கைகள் கொண்ட தீக்காய சிகிச்சைப் பிரிவு மட்டும் தான். ஆபத்து காலங்களுக்கு சிவகாசியிலிருந்தோ சாத்தூரிலிருந்தோ தான் தீயணைப்பு வண்டிகள் வர வேண்டும். சாலைகளோ படு மோசம். 15 ஆண்டுகளாக சாலைகள் செப்பனிடப்படவே இல்லை என்கிறார்கள் பகுதி மக்கள். சரியாக பகல் 12.15 மணிக்கு முதலில் வெடித்திருக்கிறது. ஆனால் தீயணைப்பு வண்டிகளோ, ஆம்புலன்ஸ்களோ வந்து சேர ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகியிருக்கிறது. ஆளும், அதிகார வர்க்கங்கள் எந்த அளவுக்கு மக்கள் மீது அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு பதம்.

இங்குள்ள எந்த பட்டாசு ஆலையும் விதிமுறைகளுக்கு மயிரளவுக்கும் மதிப்பளிக்கவில்லை. ஓம்சக்தி ஆலை உட்பட எந்த ஆலையிலும் சிறிய அளவில் விபத்து நடந்தால் கூட அதை எதிர்கொள்வதற்கு முதலுதவியோ, மருத்துவ உபகரணங்களோ, மருத்துவப் பணியாளர்களோ கிடையாது. வேலை செய்பவர்களுக்கு முறையான பயிற்சியோ, தொழில்நுட்பங்களோ கற்றுக் கொடுக்கப்படவில்லை. முதலிப்பெட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் கூறுகிறார், இங்குள்ள யாருக்கும் எந்தவித பயிற்சியும் தரப்பட்டதில்லை என்று. மட்டுமல்லாது ஆபத்தான ஃபேன்ஸி ரக வெடிகளை தயாரிக்கும் அவருக்கு அதில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் பெயரோ, அது என்ன விதமான பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தும் என்பதோ, விபரீதம் நேர்ந்தால் என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்பதோ தெரியவில்லை. சிவப்பு மருந்து, பச்சை மருந்து, நீல மருந்து என்று அவற்றின் நிறங்களே பெயராக தெரிகிறது. அவருக்கு மட்டுமல்ல அந்தப்பகுதியில் வேலை செய்யும் பெரும்பான்மை தொழிலாளிகளுக்கு தெரியாது என அடித்துக் கூறுகிறார்.

சிவகாசி மருத்துவமனையில் கையில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவரும் காளியம்மாளிடம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெடிவிபத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த போதிய அனுபவமற்ற தொழிலாளர் ஒருவர் வெடிமருந்தை கிட்டிக்கும் போது (வெடியின் குழாய்களில் வெடிமருந்துக் கலவையை திணிப்பது) அதிக அழுத்தம் கொடுத்ததால் வெடித்தது என்கிறார். அனுபவமற்ற, புதிய, பயிற்சியற்ற தொழிலாளரைக் கொண்டு படு ஆபத்தான வேலையைச் செய்வித்த அந்த முதலாளியின் லாப வெறியை என்னவென்று அழைப்பது?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் கூறும்போது, நாங்கள் முப்பத்தாறு பேர் இந்த ஆலையில் வேலை செய்தோம் ஒருவர் இறந்து விட்டார் என்கிறார். எப்படி நேர்ந்தது என்று கேட்டால் எனக்குத் தெரியாது, நான் வெளியில் சென்றுவிட்டேன் என்கிறார். இன்னொருவரைக் கேட்டாலும் அதே பதில். ஏனையவர்கள் எங்கே என்றால் கூற மறுக்கிறார். எதையும் கூறக் கூடாது என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

இறந்தவர்களில் ஓம்சக்தியில் வேலை பார்த்தவர்களைவிட முதல் வெடித்தலுக்குப் பிறகு அக்கம் பக்கத்திலிருந்து காப்பாற்றச் சென்றவர்களும், வேடிக்கை பார்க்கச் சென்றவர்களுமே அதிகம். சரியாக 12.15க்கு முதல் வெடி வெடித்திருக்கிறது. இதில் அதிக சேதம் ஏற்படவில்லை. வேலை செய்தவர்கள் காயங்களுடன் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அருகிலிருந்த ஆலைகளில் வேலை செய்தவர்கள் உதவிக்கு வந்து பெரும்பாலானோரை தூக்கிவந்து வெளியில் கிடத்தியிருக்கிறார்கள். அதற்கு சரியாக அரை மணி நேரம் கழித்து மணி மருந்து என்று சொல்லப்படும் கடுகைப் போல் உருட்டிய வெடிமருந்துக் கலவை சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து அறை மிக மோசமாக வெடித்துச் சிதறி இருக்கிறது. இது தான் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது முதல் வெடிப்பு நிகழ்ந்த பிறகு, உதவி செய்யவும் வேடிக்கை பார்க்கவும் வந்த அநேகர் இரண்டாவது வெடிப்பில் சிக்கிக் கொண்டனர்.

இதில் தன் தம்பியை பறிகொடுத்த குமார் என்பவர் புதுத் தகவல் ஒன்றைக் கூறினார், காலை பத்து மணிக்கு சிறிய அளவில் வெடித்ததாகவும், அதை அணைத்து தார்ப்பாயில் சுற்றி தனியாக ஒதுக்கி வைத்துவிட்டு வேலையை தொடருமாறு நிர்வாகத் தரப்பில் வற்புறுத்தியதாகவும், அது தான் இவ்வளவு பெரிய வெடிப்புக்கு காரணமாகி விட்டது, முதலிலேயே வேலை நிறுத்திவிட்டு அனைவரையும் வெளியேற்றி இருந்தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்கலாம் என்றும் கூறினார். ஆனால் இந்தத் தகவலை அங்கு வேலை செய்த யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த கோரத்துக்கு காரணமான விசயம் என்னவென்றால் மணி மருந்தை சிறிய அளவிலல்லாது சேமித்து வைக்கவே கூடாது. ஆனால் வேறொரு ஆலைக்கு வேண்டி மிக அதிக அளவில் மணி மருந்தை இரண்டு நாட்களாக சேமித்து வைத்திருந்திருக்கிறது நிர்வாகம். இது தான் இரண்டாவது வெடிப்புக்கு முக்கியமான காரணம். மணிமருந்தை சேமித்துவைப்பது ஆபத்து என்று தெரிந்திருந்த போதிலும் இரண்டு நாட்களாக சேமித்து வைக்கத் தூண்டியது எது? அந்த லாப வெறி அல்லவா இந்த விபத்துக்கும் இத்தனை மரணங்களுக்கும் காரணம்?

முதல் வெடிப்பு நிகழ்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது கிரசஷர் எனப்படும் கன்வேயர் பெல்ட் போன்ற ஒன்றின் மீது ஏறி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இரண்டாவது வெடிப்பின் போது சடுதியில் புகை சூழ்ந்து கொண்டதால் எந்தப் பக்கம் இறங்குவது என்று தெரியாமல் கிரஷருக்குள்ளேயே விழுந்திருக்கிறார்கள். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். மட்டுமல்லாது உள்ளே நின்றிருந்த நான்கு பேருந்துகளை வெளியில் எடுத்துவரும் போது அதில் சிக்கியும் சிலர் இறந்திருக்கிறார்கள்.

எப்படி இருந்த போதிலும் 38 என்பது மிகக் குறைந்த எண்ணிக்கை. நேற்று இரவு தொலைக்காட்சி செய்திகளில் மதுரையிலும் சாத்தூரிலும் தலா 13 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சிவகாசியில் 18 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் மொத்தம் 44 என்று கூறினார்கள். ஆனால் இன்று காலையில் அது எப்படி 38 ஆனது என்பது முதலாளிகளுக்கும் அரசுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். ஓம்சக்தியில் அதிகாரபூர்வமாக தற்காலிக வேலை செய்பவர்கள் (நிரந்தரத் தொழிலாளர்கள் பெரும்பாலும் இல்லை) 260 வரை இருக்கும் என்கிறார்கள். ஆனால் எல்லா ஆலைகளிலும் ‘எக்ஸ்ட்ரா ஆட்கள்’ தான் உற்பத்தியில் பெரும்பகுதியைச் செய்வது. இவர்கள் வேலை செய்ததற்காக எந்தப் பதிவும் இருக்காது.

250 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டமிருக்கிறது, பயிற்சித் தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடாது என்று சட்டமிருக்கிறது. ஆனால் இந்த சட்டங்களெல்லாம் முதலாளியின் கழிப்பறைக் காகிதமாகத்தானே இருக்கிறது. அதன்படி எக்ஸ்ட்ரா ஆட்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் என மொத்தம் 400 பேர்வரை வேலையில் இருந்திருக்கிறார்கள். வெடிப்பு நடந்து ஒன்றரை மணி நேரம் வரை எந்த உதவியும் அரசிடமிருந்து வரவில்லை. வந்த பின்னரும் கூட மிக மோசமான சாலைகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்களுடன் ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்தப் பகுதியிலிருக்கும் மக்கள் இறப்பு எண்ணிக்கை 200க்கு மேல் இருக்கும் என்று கூறுவதை மிகைப்படுத்தப்பட்டது என்று கொண்டாலும், நூற்றுக்கு குறையாமல் இருக்கும் என்பதை களத்தை ஆய்வு செய்யும் போது அறிய முடிகிறது. ஆனாலும் இது துல்லியமான எண்ணிக்கை அல்ல.

எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்று உறுதியாக தெரியாதவரை இறப்புக் கணக்கை துல்லியமாக கூற முடியாது. மேற்கு வங்கத்திலிருந்து முதலிபட்டி வரை பல இடங்களிலிருந்தும் வந்து எக்ஸ்ட்ராவாக வேலை பார்த்தவர்கள் இருக்கும் போது உண்மை கணக்கு தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அல்லது தெரியாமலும் போகலாம்.  அதேநேரம் ஊடக வலைப்பின்னல் கொண்டிருக்கும் எந்த செய்தி நிறுவனங்களும் இதை கணக்கெடுக்க முன்வரவில்லை. அவர்களுக்கு அரசு சொன்ன 38 போதுமானதாக இருக்கிறது.

இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை விட ஏன் இறந்தார்கள் என்பதே முதன்மையானது. சற்றேரக்குறைய 30 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் இந்த வெடிமருந்து ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தப்பகுதியில் வேலை செய்யும் அனைவரும் இந்த வேலையைத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் சிறிதும் பெரிதுமாய் விபத்துகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆபத்தான இரசாயனப் பொருட்களை எந்த வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி, எந்தவித தொழில்நுட்ப பயிற்சியும் இன்றி வெறுங்கைகளுடன் குழைத்து திரித்து உருட்டி கிட்டித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு ஆபத்தான இந்த தொழிலை விட்டு வேறு வேலைகளுக்கு ஏன் அவர்கள் செல்லக் கூடாது?

இதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் கேட்கலாம். இவ்வளவு கோரமான விபத்து நடந்து இத்தனைபேர் இறந்திருக்கிறார்கள் ஆனாலும் இந்தப்பகுதி மக்களிடம் உறவினர்கள், நண்பர்கள் இறந்துபோன சோகம் இருக்கிறது ஆனால் இவ்வளவு கோரமான இந்த விபத்து குறித்து எந்த வித அதிர்ச்சியும் அவர்களிடம் இல்லை. இது ஏன்? இதற்கு செல்லையநாயக்கன்பட்டி ஆறுமுகம் பதில் கூறுகிறார், “இன்று எல்லை ஆலைகளுக்கும் லீவு விட்டு விட்டார்கள் அதனால் எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள். வேலை வைத்திருந்தால் இன்றும் வேலைக்கு சென்றிருப்பார்கள். ஏனென்றால் இதை விட்டால் நாங்கள் வாழ்வதற்கு வேறு வழியில்லை” மாற்று வேலை வாய்ப்புகளே இல்லாமல் இந்த மக்களை வெடிமருந்தோடு மருந்தாய் கிட்டிக்கச் செய்திருப்பது யார் பொறுப்பு?

திருடனையும் திருட்டுக் கொடுத்தவனையும் ஒரே தட்டில் வைத்து இருவர் மீது தவறு இருக்கிறது என்று கூறுவது போல், ஜாக்கிரதையாக இல்லாதது தொழிலாளர்கள் தவறுதான் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். எட்டு மணி நேரம் வேலை, மாதச் சம்பளம் என்று இருந்தால் அவர்கள் செய்யும் வேலையின் ஆபத்தை உணர்ந்து நிதானமாய் செய்திருக்க மாட்டார்களா? ஆனால் பீஸ் ரேட் போட்டு ஒரு யூனிட்டுக்கு (ஆயிரம் வெடிகள்) ஆறு ரூபாய் சம்பளம் என்று அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதால் தானே, தங்கள் வயிற்றுக்காக உயிரையே துச்சமென மதிக்கிறார்கள். பீஸ் ரேட் போட்டு கொள்ளையடிப்பதற்கு அனுமதித்த இந்த அரசை யார் தண்டிப்பது?

இராமலிங்காபுரம் இன்னாசி வேடிக்கையாக ஒன்றைக் குறிப்பிட்டார். “மற்ற எல்லா வேலையிலும் கங்காணியோ சூபர்வைசரோ பின்னால் நின்று கொண்டு வேலை செய் வேலை செய் என்று தார்க்குச்சி போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதில் மட்டும், கங்காணிகள் யாரும் இருக்க மாட்டார்கள். அதேநேரம் ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் வேலை நடக்கும்”.  பீஸ் ரேட் என்ற ஒன்றைக் கொண்டு வந்து அவர்களை அவர்களே எந்திரமாய் மாற்றிவைத்தது யார் பொறுப்பு?

இத்தனைக்கும் மேல் மக்களை கொதிக்க வைக்கும் விசயமும் இதிலிருக்கிறது. இந்த ஓம்சக்தி ஆலையின் உரிமையாளரான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் விருதுநகர் சேர்மன் முருகேசன் ஆலை நடத்துவதற்காகப் பெற்றிருந்த அனுமதி கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இவனுக்கோ, இதை லீசுக்கு ஏற்று நடத்தும் திருத்தங்கல் பால் பாண்டிக்கோ இது தெரியாதா? இன்னும் எத்தனை உயிர்கள் இந்த மண்ணில் வீழ்ந்தாலும் இவர்களின் லாபவெறி கண்ணை மறைக்கும். ஆலை நடத்த அனுமதி இல்லை, தொழிலாளர் சட்டங்களை மதிப்பது இல்லை, முறையான பயிற்சி அளிப்பதில்லை, விழிப்புணர்வு கொடுப்பதில்லை, முறையான ஊதியம் கொடுப்பதில்லை, சங்கம் சேர அனுமதி இல்லை. ஆனால் தொழிலாளர்களை கொன்றொழிக்கவும் தயங்குவதில்லை என்றால். இது யார்மீது யார் செலுத்திய வன்முறை? இந்த அரசும் முதலாளிகளும் சேர்ந்து செய்த படுகொலை இது என்பதில் யாருக்காவது ஐயமிருக்கிறதா?

வினவு செய்தியாளர்கள்

முதல் பதிவு: வினவு

அஸ்ஸாம் ஆட்டங்கள்

நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஆளாளுக்கு முகாம்களுக்கு சென்று போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்கள், எல்லாம் சரியாகிவிட்டது என்று அறிவித்தார்கள். ஆனாலும் அஸ்ஸாம் அவ்வப்போது எரிந்துகொண்டே இருக்கிறது. குழு மோதலாக தொடங்கி, இனக் கலவரமாக மாறி உயிருக்கும் உடமைகளுக்கும் பேரிழப்பாக தொடர்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரசே ஆட்சியில் இருந்தாலும் ஒன்றை ஒன்று மாற்றி மாற்றி குற்றம் சுமத்திக் கொள்கின்றன. நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் வாயில் நுழையாத ஏதாவது இஸ்லாமிய அமைப்பை காரணமாகக் கூறும் பாஜக, அதே போல் இந்தக் கலவரத்தையும் வங்க தேச ஊடுறுவல் காரணம் என்று அலறியது. செய்தி ஊடகங்கள் வழக்கம் போலவே எங்கு தொடங்கியது? எப்படி தொடங்கியது? இனக்கலவரத்திற்கான பின்னணி என்ன? யார் தூண்டியது? யார் தாங்கி நிற்பது? என்பது போன்ற எந்த விபரங்களும் இல்லாமல் வெறுமனே இழப்புகளையும், பாதிப்புகளையும் பெரிதுபடுத்திக் காட்டியும், உப்புச் சப்பற்ற கேள்விகளைக் கொண்டு பேட்டிகள் எடுத்துக் காட்டியும் தங்கள் வியாபார நோக்கை உறுதிப்படுத்திக் கொண்டன.

 

இந்தக் கலவரம் இப்போது புதியதாக தொடங்கி ஒன்றல்ல, ஏற்கனவே சில முறைகள் இது போன்ற கலவரங்கள் இந்தப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. அதாவது, இந்தக் கலவரம் இரண்டு சமுதாயத்தினரிடையேயான மோதலோ, ஊடுருவல் பிரச்சனையோ, தீவிரவாதக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கையோ அல்ல. மாறாக இக்கலவரத்தின் வேர்கள் தேசியப் பிரச்சனைக்குள் ஆழ்ந்திருக்கின்றன.

 

இந்தியா எனும் எல்லைக்குள் இருப்பவர்கள் பெருமையுடனும் பூரிப்புடனும் அச்சொல்லை உச்சரித்துக் கொண்டிருப்பதாக யாருக்கேனும் எண்ணமிருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தியா எனும் நிலப்பரப்போடு மரபு கலாச்சார ரீதியாகவோ, இயற்கையான புவி அமைப்பு ரீதியாகவோ தொடர்பே இல்லாத மக்கள், பல காலமாக வெள்ளையர்கள் காலனியாக பிடித்து வைத்திருந்தார்கள் எனும் ஒரே காரணத்திற்காக இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரிகளைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் பீரங்கிகளுக்கு எதிராக கல் வீசுவது பொழுதுபோக்கிற்காக அல்ல. அது போலத்தான் வட கிழக்கு மாநிலங்களும். வடகிழக்கு மாநிலங்களிலும், நேபாளத்திலும் வாழும் போடோக்கள் இந்திய அரசை எதிர்த்து 80களில் உபேந்திரநாத் பிரம்மா தலைமையில் போராடத் தொடங்கினர். அனைத்து போடோ இன மக்களையும் உள்ளடக்கிய தேசியப் போராட்டமாக வளர்ந்திருக்க வேண்டிய இது இந்திய அரசியல் பெருச்சாளிகளால் வன்முறைக் கும்பலாக உருமாறியது.

 

அந்தப் பகுதியின் பழங்குடியினரான போடோக்கள் முன்னர் ‘பாத்தூயிசம்’ என்னும் மூதாதையர் வழிபாட்டு முறையை பின்பற்றினர். ஆனால் அந்த மூதாதை வழிபாட்டை பார்ப்பனிய பாசிசங்கள் இந்துத்துவத் திணிப்பால் இடம்மாற்றி விட்டன. இன்று போடோக்கள் பெரும்பான்மையினர் இந்து(!)க்களே. பார்ப்பனீயம் எப்போதுமே எதிரியை உருவகப்படுத்திக் காட்டுவதன் மூலமே பழங்குடிகளையும், தாழ்த்தப்பட்டவர்களையும் தம்முடைய பட்டிக்குள் அடைத்து வந்திருக்கிறது, அந்த வகையில் அந்தப் பகுதியிலுள்ள முஸ்லீம்கள் எதிரிகளாக அடையாளம் காட்டப்பட்டார்கள்.

 

அதுவரை வங்காளிகளாக இருந்தவர்கள், காலனியாதிக்க பிரித்தாளும் சூழ்ச்சியினால் மத அடிப்படையில் கிழக்கு மேற்கு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு பின்னர் இந்தியா பாகிஸ்தானாக மாறி பின்பு வங்கதேசிகள் எனும் தனி தேசியமாக ஆக்கப்பட்டார்கள். இன்றைய உலகமய சூழலில் ஒப்பீட்டளவில் வங்க தேசத்தைவிட சற்று மேம்பட்டிருந்த இந்தியாவிற்குள் அவர்கள் எல்லை கடந்து ஊடுருவினார்கள். இதை தங்களுக்கு வசதியாக பயன்படுத்திக் கொண்ட இந்துத்துவவாதிகள் அனைத்து இஸ்லாமியர்களையுமே ‘வங்கதேச வந்தேறிகள்’ என்று கூறி போடோக்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான இனப்பகையாக மாற்றினார்கள். இந்தியாவோடு கலாச்சார ரீதியாக தொடர்பு கொண்டிருந்த வங்காள முஸ்லீம்கள் அன்னியர்களாகவும், கலாச்சார தொடர்பற்ற போடோக்கள் இந்தியர்களாகவும் உருமாறிய கதை இது தான்.

 

இதையே வேறொரு கோணத்தில் காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. சட்டவிரோத குடியேற்ற சட்டம் ஒன்றை உருவாக்கி இஸ்லாமியர்களுக்கு சில சலுகைகளை கொடுத்ததன் மூலம் அவர்களை தனது வாக்கு வங்கியாக தக்க வைத்துக் கொண்டது. மற்றொருபுறம் வடகிழக்கு மாநில மக்கள் உணர்வு ரீதியாக இந்தியாவுடன் ஒன்றவே இல்லை. அதனால் அன்றிலிருந்து இன்றுவரை இராணுவத்தின் பலத்தைக் கொண்டே அவர்களை இந்தியர்களாக இருத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. அரசுக்கு விரோதமாக மக்கள் கிளர்ந்தெழும் போது அதை நீர்த்துப் போகவைக்க அரசுகள் பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று தேசிய இனப் பிரச்சனைகளை விசிறி விடுவது. அந்த வகையில் அந்தப் பகுதிகளில் இந்திய இராணுவம் நிகழ்த்திவரும் அடக்குமுறைகளை மறைக்கவும் தேசிய முரண்பாடுகள் உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றன.

 

ஆனால் இவைகலையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் யாரோ இரண்டு குழுக்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்டது தான் கலவரத்துக்கான காரணம் என்றால் அதைவிட அபத்தம் வேறொன்று இருக்க முடியாது. இஸ்லாமியர்கள் இதை மதத்திற்கு எதிரான அநீதியாக பிரச்சனையாக உருமாற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். மறுபக்கம், அதிகார வர்க்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனோநிலையை நாட்டின் அனைத்துப் பகுதி மக்களிடமும் வதந்திகள் மூலம் நுணுக்கமாக ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களிடம் எந்நேரமும் இஸ்லாமியர்களால் தாக்கப்படக்கூடும் எனும் பொய்ச்செய்தியை பரப்புவதன் மூலம் பல பலன்களை அடைந்திருக்கின்றன. அமைச்சர்கள் இரயில் நிலையத்திற்கே சென்று திரும்புமாறு கோரிக்கை விடுப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட பணிப்பாதிப்பை சரிக்கட்ட முயலும் அதேநேரம் தங்களை மக்களுக்காக செயல்படுபவர்கள் போல காட்டிக் கொள்வது. இஸ்லாமியர்களால் தாக்கப்படுவோம் எனும் அச்ச உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மெய்யான காரணங்களிலிருந்து மக்களை திசை திருப்புவது. வதந்தியை பரப்பினார்கள் என்று சமூகத் தளங்களை முடக்குவதன் மூலம் பின்னர் நிரந்தரமாக இணையத் தடை ஏற்படுத்துவதற்கு முன்னோட்டம் பார்ப்பது என்று பல பலன்களை ஆளும் வர்க்கங்கள் அடைந்திருக்கின்றன.சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மைகள் தெள்ளென விளங்கும்.

 

ஆளும் அதிகார வர்க்கங்கள் தங்கள் நலனை சாதித்துக் கொள்வதற்கு எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றன என்பது ஏறகனவே பலமுறை நிருவப்பட்டிருக்கிறது. இனிமேலும் மக்கள் இதை உணராமலிருக்க முடியாது. இன மோதல்கள் தொடங்கி மத மோதல்கள் வரை தங்களைப் பிரிக்கும் அனைத்து பேதங்களையும் கடந்து வர்க்க அடிப்படையில் ஒன்றிணவதைத் தவிர இவைகளை முறியடிப்பதற்கும் முன்னேறுவதற்கும் வேறுவழியில்லை. 

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: