அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தொடுத்திருக்கும் நயவஞ்சகமான, கொடிய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்
மத்திய மாநில அரசுகளே,
- இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும், அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளையும் உடனே திரும்பப்பெறு!
- அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிக்காதே!
- கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்து!
- மக்களுக்கும், உயிரினங்களுக்கும்,சுற்றுச் சூழலுக்கும் பெருநாசம் விளைவிக்கும் அணு உலைகளை இழுத்து மூடு!
உழைக்கும் மக்களே,
- போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம்.
ஒரு குடியரசு நாட்டில் அற வழியில் போராடினால் இப்படியா செய்வது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுபட மத்திய அரசிடம் தமிழ் மக்களை பணயமாக வைத்து விட்டார். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த மக்களை நம்ப வைத்து கழுத்தறுப்பது நியாயமா? மனித உரிமைக்கு அர்த்தம் தெரியுமா இந்த ஆளும் “மா”க்களுக்கு?
இடிந்தகரை மக்களின்
போராட்டத்திற்கு ஆதரவாக மீனவர்கள்
வேலை நிறுத்தத்திற்க்கு
செல்கிறார்கள். ஆனால்
ஜெயலலிதா மீனவர்களிடம் சொல்கிறார் உங்களுக்கும் உங்கள்
தொழிலுக்கும் எந்த பங்கமும் வராது,ஆதலால் நீங்கள் மீன் பிடிக்கச்
செல்லுங்கள் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை செப்கிறார்.
பெண்குரங்குகள் கூட தன் சின்னஞ் சிறிய
குட்டிகளை கீழே விழாமல் இறுகப்பற்றி
க் கொள்கிறது. அந்த
குரங்குகளுக்கு உள்ள
உணர்வு கூட இந்த
பாசிச குரங்கிற்க்கு இல்லை. ஓட்டு வாங்குவதற்க்கு முன்
இந்த குரங்கு என்ன
சொல்லியது, இப்போது
என்ன சொலகிறது பாருங்கள். அதனால்
தான் இடிந்தகரை மக்கள் ஓட்டு பொறுக்கி
களை புறக்கணித்து
விட்டு அந்த மக்களே
வரும் தலைமுறைகளை காப்பதற்க்கு புரட்சிகரமாய் அணி திரள்கிறார்கள். இது
அவர்களின் போராட்டம்
அல்ல நம்முடைய நம்
நாட்டு மக்களின் போராட்டம் நாடு முழுவதும் இந்த போராட்டத்தை கொண்டு செல்வோம்.