அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 1. மணச் சட்டம்

இஸ்லாத்தில் சட்டங்களுக்கு மிகுந்த முதன்மையான இடமுண்டு. அல்லா கூறும் சட்டங்களை மீறும் யாரும் இஸ்லாமியனாக இருக்கும் தகுதியை இழந்தவர்கனாகிறார்கள். மட்டுமல்லாது நியாயத் தீர்ப்பு நாளில் நரகத்திலும் வீழ்த்தப்படுவார்கள். இந்தச் சட்டங்களை மனிதர்களுக்காக இயற்றித் தந்தது அல்லா தான். மனிதர்களில் எவருக்கும் சட்டங்கள் இயற்றும் தகுதி இல்லை மட்டுமல்லாது அவைகளை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ எந்த மனிதருக்கும் அறுகதை இல்லை. இதை குரான் வசனங்கள் 5:48; 5:50 தெளிவுபடுத்துகிறது,

 

.. .. .. எனவே அல்லாஹ் அருள் செய்ததைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் அவர்களின் மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். .. .. ..

 

அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?

 

ஆக சட்டம் என்றால் அது முக்காலமும் உணர்ந்த, எல்லாவித ஆற்றல்களையும் தன்னில் அடக்கிக் கொண்டிருக்கிற அல்லாவால் மனிதர்களின் நல்வாழ்வுக்காக கொடுக்கப்பட்டது என்பதே பொருள். அதனால் தான் இஸ்லாமியர்கள் நடப்பிலிருக்கும் சட்டங்களை அவைகள் மனிதச் சட்டங்கள் எனும் போக்கில் அணுகுகிறார்கள். ஆனால் சட்டம் என்றால் என்ன? வரலாற்று அடிப்படையில் சட்டம் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?

 

மனிதர்களிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும், ஒழுக்கமான, குறைகளற்ற வாழ்வை வாழ்வதற்கு தேவையான ஒழுங்கு நெறிகளைக் கொண்டது தான் சட்டம் என்று பெரும்பாலானோர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் மனிதன் ஓரளவுக்கு சமூகமாக வாழத் தொடங்கியது முதல் இன்று வரை சட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. என்றால் மனிதர்களிடையே பிணக்குகள் தீர்ந்து மகிழ்வான வாழ்வு வாய்க்கப் பெற்றிருக்க வேண்டுமல்லவா? உலகம் அவ்வாறு இல்லை என்பது தானே யதார்த்தமாக இருக்கிறது. இதற்கு இஸ்லாமிய மதவாதிகள் ஒரு விளக்கம் கூறக் கூடும், அவைகளெல்லாம் மனிதச் சட்டங்கள் இறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அவ்வாறான நிலை உருவாகிவிடும் என்று. ஆனால் இஸ்லாம் தோன்றிய காலம் முதல் அதாவது கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக சௌதி அரேபியாவில் (இஸ்லாம் எனும் மதம் தோன்றிய இடம்) இறைச் சட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது. அங்கே நிலமை என்ன?

 

மனிதகுல வரலாற்றில் சட்டங்களின் பங்களிப்பு எப்போது தொடங்கியது? மனிதர்களிடையே வர்க்க பேதம் ஏற்பட்டு அவர்களிடையே மோதலும் ‘அரசு’ எனும் அமைப்பும் தோன்றிய பிறகே சடங்கள் தோன்றின. சட்டங்களின் பணி வர்க்க ஆட்சிக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் கிளர்ந்து விடாமல் அடக்குவதும், ஆட்சியை தக்கவைப்பதுமே. அதேநேரம் சட்டம் அனைவருக்குமானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் பிரேமைகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சட்டங்களின் நோக்கம் அனைவருக்கும் சமநீதியும், நியாயமும் வழங்குவது என்றால் அதன் விளைவுகள் சமூகத்தில் நிலவியிருக்க வேண்டும், சட்டத்தின் தேவை தீர்ந்து போயிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல் இன்னும் சட்டத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது என்றால், அதன் பொருள் சட்டங்களின் தேவை என்று மக்கள் எதை கருதுகிறார்களோ அதுவாக இல்லாமல் சட்டத்தின் உட்கிடை வேறாக இருக்கிறது என்பது தெளிவாகிறது அல்லவா? மட்டுமல்லாது, சமூகம் இன்னமும் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே சட்டத்தின் பயன் வர்க்க ஒடுக்குமுறை தானேயன்றி, சமநீதியல்ல என்பது புலனாகும். ஆனால் முக்காலமும் உணர்ந்தவராக, முக்காலத்தையும் உருவாக்குபவராக கூறப்படும் அல்லா சட்டத்தின் இந்த தன்மைகள் எதனையும் உணராது, அனைத்து மக்களுக்கும் பொது வானது, எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியது என்று கூறுவது பொருத்தமானதா? அல்லது முகம்மது தன்னுடைய வர்க்க நலன் பேணும் அரசை உருவாக்குவதற்காக சொல்லிய புனைவுகளா?

 

இப்போது திருமணம் செய்வது குறித்த சட்டங்களைப் பார்ப்போம். குரான் வசனம் 4:3 இப்படிக் கூறுகிறது,

 

அநாதைகளிடம் நீங்கள் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் வலக்கரங்களுக்கு சொந்தமானதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அநியாயம் செய்யப்படாமலிப்பதற்குச் சுலபமான வழிமுறையாகும்.

 

இந்த வசனம் ஒரு ஆண் யாரை எப்படி திருமணம் செய்யலாம் என்பதைப் போதிக்கிறது. நான்கு பெண்கள் வரை ஒரு ஆண் திருமணம் செய்வதற்கு அனுமதியளிக்கும் சட்டம் இது. மட்டுமல்லாது தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்களை திருமணத்திற்கு வெளியே பயன்படுத்திக் கொள்வதற்கும் அனுமதிக்கிறது. வெளிப்படையான அடிமை முறை நடைமுறையில் இருந்தது இஸ்லாம் தோன்றி வளர்ந்த காலகட்டத்தில் தான். அதனால் தான் குரான் பல வசனங்களில் ஒரு மனிதனும்  அடிமையும் சமமல்ல என்று கூறியிருக்கிறது.

 

முதலில், இது எக்காலத்திற்கும் பொருந்தும் சட்டமா? இப்போது வெளிப்படையான அடிமைகள் என்று யாருமில்லை. ஆனால் அல்லாவுக்கும் குரானுக்கும் இஸ்லாமியர்கள் கொடுக்கும் தகுதியின்படி பார்த்தால் வெளிப்படையான அடிமைகள் இல்லாத இன்றைய நிலை குறித்து அல்லா அன்று அறிந்திருக்கவில்லை. அல்லது, இது அன்றைய நிலையை மட்டுமே குறிக்கும் வசனம் என்றால் இன்றைக்கு பொருந்தாது. இரண்டில் எது சரி?

 

நான்கு திருமணம் வரை செய்து கொள்ள ஆண்களுக்கு ஏன் அனுமதி தந்திருக்கிறது என்றால் ஆணின் இச்சை தீர்க்கப்பட்டே ஆகவேண்டும் என்பதே. ஆணின் இந்த பலதார வேட்கையே இங்கு பொது விதியாக்கப் பட்டிருக்கிறது. அந்த வகையில் இது ஆணின் நீதி தானே தவிர பெண்ணின் நீதியல்ல.

 

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்வதற்கு ஆணுக்கு என்ன தகுதிகள் வேண்டும்? நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு திருமணத்துடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என்கிறது குரான். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் புரிந்தால் முதல் மனைவிக்கு கொடுத்திருக்கும் அத்தனை வசதிகளையும் இரண்டாவது மூன்றாவது நான்காவது மனைவிகளுக்கும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க முடியாது போனால் அது அநீதி. இது தான் குரானின் நீதி. வெளிப்படையாகச் சொன்னால் காசு இருந்தால் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள். காசு இல்லாவிட்டால் .. .. ? ‘பட்டினி கிடந்து உன் இச்சையை குறைத்துக் கொள்’ என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. இது பணக்காரனுக்கான நீதியா? ஏழைக்கான நீதியா?

 

எக்காலத்துக்கும் பொருந்தும் இறைவனின் நீதி என எம்பிக் குதிக்கும் மதவாதிகள், இப்படி பச்சையாக காசு உள்ளவனுக்கு ஒரு நீதி அது இல்லாதவனுக்கு ஒரு நீதி என்று பிரித்து பேதம் காட்டும் இந்த ஆண்டைகளின் நீதியைத் தான் எல்லோருக்கும் பொது நீதி என்று சண்டமாருதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

42 thoughts on “அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 1. மணச் சட்டம்

 1. செங்கொடியின் கனவுலக கம்யுனிச ஆட்சியின் முதல்கட்டமான சோஷலிச ஆட்சியில் ஸ்டாலின் மற்றும் அவரது சகாக்கள் போன்றோர்கட்கும் சாதாரண தொழிலாளிகட்கும் ஒரேமாதிரியான நீதியில் தான் வாழந்தார்கள் என்பதற்கு ஆதாரங்களை வைத்துவிட்டு இஸ்லாத்தை விமர்சிக்க வந்திருக்க வேண்டும்.
  சமநீதி என்பது உலகம் எதை பின்பற்றிவருகிறதோ அதைவைத்துத்தான் முடிவு எடுக்கமுடியுமே தவிர நடைமுறை சாத்தியமற்ற ,தானே வாழ்ந்து காட்ட இயலாத வ்ர்க்கபேதம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற முனைந்து தோல்வியுற்ற ஒரு மடிந்த கொள்கையின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது.
  காசு உள்ளவனுக்கு ஒரு நீதி காசு இல்லாதவனுக்கு ஒரு நீதி என்று அவதூறு பரப்புவதை விட இஸ்லாத்தில் காசு உள்ளவன் மட்டும் பலதார மணம் செய்துள்ளான் காசு இல்லாதவன் ஒருவனும் பலதார மணம் செய்தததில்லை என்பதை ஆதாரத்துடன் நிருபித்திருக்க வேண்டும்.
  வெறும் சட்டத்தை பார்த்து மெல்லக் கூடாது..இஸ்லாத்தில் பண்காரனைவிட அதிகமாக எளியவனே ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்களை காண முடியும்.பணக்காரன் மறுமணம் செய்ய முதல் மனைவி மற்றும் உறவினர் எளிதாக அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மக்களோடுவாழ்பவர்களுக்கே தெரியும் .கண்ட கண்ட நாட்டில் கயவர்கள் மத்தியில் கீ போடு தட்டுபவர்களுக்கு தெரிய நியாயமில்லை.

 2. /இது பணக்காரனுக்கான நீதியா? ஏழைக்கான நீதியா?
  ///

  செங்கொடியாரே! அது காசுகாக சொல்லப்படவில்லை. 4 மனைவியுடனும் சமமான முறையில் அன்பாக நடந்து கொள்வதைப் பற்றியும் உடலுறவு கொள்வதைப் பற்றியும் பேசுகிறது.

 3. செங்கொடி ஏதோ பெரிய மேதாவி மாதிரி கிறுக்கி இருப்பது நன்றாகவே புரிகிறது..
  பணம் உள்ளவன் எல்லாம் தன மனைவியை சந்தோஷமாக வைத்து இருக்கிறானா?
  ஏழைகள் எல்லாம் தம் குடும்பத்தை நன்றாக வைத்திருக்கவில்லையா?
  நபிகள் அவர்கள் பலதார மணம் செய்திருந்தாலும் அவர் ஒன்றும் கோடீஸ்வரர் இல்லை..
  அன்றாடம் காய்ச்சியாகத்தான் இருந்தார்கள்..
  அனால் அவர்கள் அனைத்து மனைவிகளிடமும் நியாயமாக – நேர்மையாக நடந்து கொண்டார்கள்..இதைத்தான் குரானும் சொல்கிறது..

  முதலில் ஒன்றை விமர்சிக்கும்போது நன்றாக புரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும்..அல்லது பொத்திக்கொண்டிருக்க வேண்டும்..

 4. செங்கொடி செனகல் நாட்டிற்கு சென்று வருமாறு வேண்டுகிறேன்.

 5. நான்கு மனைவிகளை கட்ட அனுமதித்தது, அடிமை வைத்துக்கொள்வது, அடிமை பெண்னை திருமணம் செய்யாமலயே புணர்வது எல்லாம் இப்போது பெரிய குற்றம். அக்காலத்தில் இப்பழக்கங்கள் இருந்திருக்கலாம். குரானை எக்காலத்திற்கும் பொருந்துவது என்று சிலர் கூறுவது பொருந்தாது. இறைவனின் பெயரைச்சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

 6. சந்தையில் முதல் கடையில் பலவகையான வீட்டு சாமான்கள் முதல் அனைத்து பயன் படு பொருள்கள் ,அந்தகாலத்தில் உபயோகித்த பொருட்கள் முதல் இப்போதுவரை உள்ள பல நவீன பொருட்கள் வரை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .மக்கள் கூட்டம் அலைமோதுகிறது .
  அடுத்து ஒரு சிவப்பு பெயின்ட் அடித்த கடை ,அதில் ஈயம் பித்தளைக்கு பேரீத்தம் பழம் கொடுத்து வாங்கப்பட்ட சாமான்கள் ,அதை வியாபாரம் செய்யும் ஒரு நோஞ்சான் ,முதல் கடையில் நடைபெற்றுவரும் வியாபாரத்தை பார்த்து பொறாமையில் பொங்கி ,ஐயோ அந்த கடையில் இருக்கும் சாமான்களை இப்போது உபயோகிக்க முடியாது .அவையெல்லாம் வர்க்க பேதமுள்ள சாமான்கள் முறுக்கு தயார் பண்ண முடியாது ,சறுக்கு விளையாட முடியாது என்று கூப்பாடு போடுகிறான் .
  அங்கு வந்த ஒருவர் ஏம்பா ,உன்னது வியாபாரத்தை பாரேன் ,ஏன்?அடுத்த கடையை பார்த்து ஊளையிட்டு கொண்டிருக்கிறாய்?என்று கேட்டார்?
  நாங்கள் அப்படித்தான் ஊளையிடுவோம் அது எங்களது தனி மனித உரிமை என்றானாம்

 7. @ இப்ராஹிம்
  //கண்ட கண்ட நாட்டில் கயவர்கள் மத்தியில் கீ போடு தட்டுபவர்களுக்கு தெரிய நியாயமில்லை.// நீங்கள் கூறும் அல்லாஹ்வின் சட்டத்திலுள்ள நியாயங்களை சொல்லலாமே. வசைபாடுவதை சற்று நிறுத்திவிட்டு, இஸ்லாம், ஆண்களுக்குமட்டுமே அனுமதிக்கும் பலதாரமணத்திற்கான நியாயங்களை சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறோம்.

 8. @அபு
  //செங்கொடியாரே! அது காசுகாக சொல்லப்படவில்லை. 4 மனைவியுடனும் சமமான முறையில் அன்பாக நடந்து கொள்வதைப் பற்றியும் உடலுறவு கொள்வதைப் பற்றியும் பேசுகிறது.//
  நான்கு திருமணம் வரை செய்து கொள்ள ஆண்களுக்கு ஏன் அனுமதி தந்திருக்கிறது என்றால் ஆணின் இச்சை தீர்க்கப்பட்டே ஆகவேண்டும் என்பதே. ஆணின் இந்த பலதார வேட்கையே இங்கு பொது விதியாக்கப் பட்டிருக்கிறது. அந்த வகையில் இது ஆணின் நீதி தானே தவிர பெண்ணின் நீதியல்ல.

 9. @மர்மயோகி
  //நபிகள் அவர்கள் பலதார மணம் செய்திருந்தாலும் அவர் ஒன்றும் கோடீஸ்வரர் இல்லை.. அன்றாடம் காய்ச்சியாகத்தான் இருந்தார்கள்..
  அனால் அவர்கள் அனைத்து மனைவிகளிடமும் நியாயமாக – நேர்மையாக நடந்து கொண்டார்கள்..இதைத்தான் குரானும் சொல்கிறது..// முஹம்மது, தனது எல்லா மனைவியரிடமும் நியாயமாக -நேர்மையாக நடந்து கொண்டாரென்று குர்ஆனில் எங்கே இருக்கிறது? ஆக இந்த சட்டம் முஹம்மதிற்கு மட்டுமே பொருந்தும் என்கிறீகளா?
  நண்பரே //முதலில் ஒன்றை விமர்சிக்கும்போது நன்றாக புரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும்..அல்லது பொத்திக்கொண்டிருக்க வேண்டும்..//

 10. //நபிகள் அவர்கள் பலதார மணம் செய்திருந்தாலும் அவர் ஒன்றும் கோடீஸ்வரர் இல்லை..//

  அப்ப கொள்ளை அடிச்ச பணத்தையேல்லாம் என்ன பண்ணினார்ர். 40 வயசு பணக்கார அரை பாட்டிய ஏன் 25 வயசுல நிக்ஹா செஞ்சார்ர்

 11. பெண்களை விட ஆண்களுக்கே பாலுணர்வு அதிகம் .,ஆனால் இவர்கள் சொல்வதோ பாலியல் தேவைகளுக்காக ஆண்கள் வெளியில் போக வேண்டாம்,வீட்டிலேயே நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று!
  எது நியாயம் என்று சிந்திப்பவர்களுக்கு தெரியும்.அப்படி பாலுணர்வு சரிகட்ட பெண்களுக்கே முதலுரிமை அளித்திருக்க வழி செய்திருக்க வேண்டும் என்ன செய்வது இயற்கை அதற்க்கான உடலமைப்பை தராமல் அல்லாவை இப்படி சட்டம் போட வைத்துவிட்டது! மேலும் இப்படி கேட்பவர்களிடம் மக்கள் தொகையில் ஆண்கள் பெண்கள் விகிதாட்சரத்தை பற்றி பேசி ஆண்களை விட பெண்களே அதிகம் அதனால்தான் அல்லா கிழித்துவிட்டான் என்று கூறுவார்கள்.ஆனால் அவன் கிழிக்கவும் இல்லை மழிக்கவும் இல்லை.அன்றைய நிலையில் ஆண்களுக்கே முதலுரிமை அப்புறம்தான் பெண்கள். அதனால்தான் பெண்களைப்பற்றிய கீழ்த்தரமான சிந்தனைகள் ஹதீதுகளை பதிவு செய்தவர்களிடம் காணமுடிகிறது.

 12. தஜ்ஜால் ,முதலில் உங்களை எடுத்துக் கொள்வோம் .உங்களது மனைவி அவரது இயலாமையால் உங்களை இன்னொரு திருமணம் செய்ய அனுமதிப்பார்.உங்களுக்கு அதுபோன்று நிலை ஏற்பட்டால் நீங்களோ உங்களது பிள்ளைகளோ அவரது உறவினர்களோ உங்களது மனைவி உங்கள் வீட்டில் இருந்து கொண்டே இன்னொருவரை திருமணம் செய்ய அனுமதிப்பீர்களா?பதிலை தொடருங்கள் ,இறையருளால் தொடர்வோம்

 13. சகோதரன்
  ////எது நியாயம் என்று சிந்திப்பவர்களுக்கு தெரியும்.அப்படி பாலுணர்வு சரிகட்ட பெண்களுக்கே முதலுரிமை அளித்திருக்க வழி செய்திருக்க வேண்டும் ///
  அல்லாஹ்வின் சட்டத்திலே நியாயம் இருப்பதால் நாங்கள் அதை நம்புகிறோம் ,பின்பற்றுகிறோம் .
  நியாய சிந்தனை உள்ள உங்களுக்கு தெரிந்த நியாயப்படி வெற்று வாய் மெல்லாமல் உங்கள் வீட்டு பெண்களுக்கு முன்னுரிமை அளித்து நடைமுறைப்படுத்த முயற்சியுங்கள் .நீங்கள் கிழியுங்கள் அப்புறம் மழியுங்கள் .
  இஸ்லாத்தில் கிழிக்கவும் நாற்பது நாட்கள் மிகைக்காமல் மழிக்கவும் அறிவோம்
  உங்களுக்கு தெரிந்த நியாயத்தை நீங்கள் பின்பற்றுங்கள் .எங்களுக்கு தெரிந்த நியாயத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் .

 14. வா சு ////அப்ப கொள்ளை அடிச்ச பணத்தையேல்லாம் என்ன பண்ணினார்ர். ////
  பணத்தை வைத்து மாடமாளிகை கட்டினார்.ஆடம்பர பங்களா கட்டினார் .சுவிஸ்பாங்கில் டெப்பாசிட் பண்ணினார் .அமெரிக்காவில் இரண்டு சொந்த விமானங்கள் வாங்கினார் .///40 வயசு பணக்கார அரை பாட்டிய ஏன் 25 வயசுல நிக்ஹா செஞ்சார்ர்/////
  டெண்டுல்கர் 30 வயது கால் பாட்டிய 25 வயசுல ஏன் கலியாணம் பண்ணினார்?

 15. சகோ
  ஒருவருடைய மனைவி இயலாமையால் இன்னொருவரை மணந்து கொள்வதை அனுமதிப்பார் என்பது எப்படி உங்களுக்கு தெரியும் ! ஒன்று நீங்கள் பெண்ணாக பிறந்த அனுபவம் வேண்டும் அல்லது பெண்களின் திருமண உறவைபற்றிய,பாசத்தை பற்றிய பரந்த அறிவு வேண்டும்,உங்களுக்கு அது உள்ளது என்றால் உங்களிடம் இந்த வார்த்தைகள் சாதரணமாக வர முடியாது!
  எந்த பெண்ணும் தன்னுடைய கணவன் தன்னைவிட்டு இன்னொரு பெண்ணை நினைவு,உறவு ,வாழ்க்கை இதனில் பங்கு வைக்க எந்த சந்தர்ப்பத்திலும் விரும்பமாட்டாள்! அது இயலாமையில் இருந்தாலும் சரி! திருமணமானவராக இருந்தால் உங்கள் மனைவியரிடம் இல்லையெனில் உங்கள் நண்பர்களின் வட்டாரத்திலும் கேட்டுப்பாருங்கள் தெரியும் !
  மனதை கல்லாக்கிக்கொண்டு சம்மதிப்பார்களே தவிர நீங்கள் சொல்வதுபோல் சாதாரண விடயமல்ல!
  அது போகட்டும்,அடிமைகளின் உடலுறவை நியாயப்படுத்தும் உங்கள் மார்க்க மேதைகளுக்கு எங்கு தெரியும் பெண்களின் இயல்பு! அப்படி தெரிந்தாலும் விலகிக்கொண்டால்
  தன மனைவியை மாற்றானுக்கு விவாகரத்து பண்ணி திருமணம் செய்துவித்த கேடுகெட்ட பொறுக்கித்தனத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு உங்களை போன்றவர்களை எப்படி சீர்திருத்தி சொர்க்கம் சேர்க்க முடியும்?
  //மனைவி உங்கள் வீட்டில் இருந்து கொண்டே இன்னொருவரை திருமணம் செய்ய அனுமதிப்பீர்களா?பதிலை தொடருங்கள் ,இறையருளால் தொடர்வோம்//
  ஆஹா என்ன ஒரு சிந்தனை இப்ராகிம் கண்டுபுச்சிட்டீங்க உங்க இறையருள் இதற்குதான் உதவி செய்யும்,நல்ல வழியில் சிந்திக்க உதவி செய்யாது.
  //இயற்கை அதற்க்கான உடலமைப்பை தராமல் அல்லாவை இப்படி சட்டம் போட வைத்துவிட்டது!//
  என்று உங்களுக்கு கூறினேனே புரியலையா?
  பாலுணர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது பெண்கள்தான்,அப்படி பெண்களுக்கு முன்னுரிமைஅளிக்காத,முதலுரிமைக்கான மாற்று வழி அமைக்காத படைப்பாளி அல்லா என்று கூறினேனே தவிர,.எங்கள் வீட்டு பெண்களுக்கு மாற்று வழி நாங்கள் கண்டுபிடித்து வைத்துள்ளோம் என்று கூறவில்லை சகோதரரே !
  அது என்ன இஸ்லாத்தில் கிழிக்கவும் நாற்பது நாட்கள் ? (மழிக்க நாற்பது நாட்கள் சம்பிரதாயம் தெரியும்)
  சகோதரரே
  மற்றுமொரு செய்தி உங்களுடைய அனைத்து பின்னூட்டங்களையும் படித்த வகையில் நீங்கள் கூறுவதுதான் சரி என்று அடம்பிடித்து வடம் பிடிக்கும் மனிதர் என்பது தெரிகிறது!
  நீங்கள் உங்கள் நண்பர்களிடம் கூறி பின்னூட்டம் இடச்சொல்லுங்கள் அவர்களிடம் சிந்தனை வேறுமாதிரி வெளிப்பட்டு அதன் மூலம் நீங்கள் தெளிவுபெறலாம் !

 16. @ இப்ராஹீம்

  //தஜ்ஜால் ,முதலில் உங்களை எடுத்துக் கொள்வோம் .உங்களது மனைவி அவரது இயலாமையால் உங்களை இன்னொரு திருமணம் செய்ய அனுமதிப்பார்.// முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணின் முடிவைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்களுக்கு எந்த வகையிலும் அறிமுகமில்லாத ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீதே முடிவைத் திணிக்க முடிகிறதென்றால்; இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையை இதற்குமேல் செல்வதற்கு ஏதுமில்லை இதுதான் இஸ்லாமின் யதார்த்த நிலை.

 17. //////மற்றுமொரு செய்தி உங்களுடைய அனைத்து பின்னூட்டங்களையும் படித்த வகையில் நீங்கள் கூறுவதுதான் சரி என்று அடம்பிடித்து வடம் பிடிக்கும் மனிதர் என்பது தெரிகிறது!///

  நான் சொல்லுவதை தவறு என்று உங்களால் நிருபிக்க முடியவில்லை என்ற உங்களது இயலாமையை இந்த வரிகள் காட்டுகின்றன.
  /////நீங்கள் உங்கள் நண்பர்களிடம் கூறி பின்னூட்டம் இடச்சொல்லுங்கள் அவர்களிடம் சிந்தனை வேறுமாதிரி வெளிப்பட்டு அதன் மூலம் நீங்கள் தெளிவுபெறலாம் !///
  இது என்ன கோமாளித்தனமாக இருக்கிறது
  ///திருமணமானவராக இருந்தால் உங்கள் மனைவியரிடம் இல்லையெனில் உங்கள் நண்பர்களின் வட்டாரத்திலும் கேட்டுப்பாருங்கள் தெரியும் !///
  எனது எழுத்துக்களை வைத்து என்னுடைய வயதை கூட உங்களால யூகிக்க முடியவில்லை நீங்கள் நாற்பது வயதை தாண்ட வேண்டும் பெண்கள் பற்றி சில உண்மைகள் புரியும்.
  இயலாமை என்றால் கணவனின் காம சுகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமை.பெண்களில் சிலருக்கு உடற்கூறு ரீதியாக உடலுறவில் ஈடுபடமுடியாத நோய்கள் வரும் .தனது கணவன் அருகில் நெருங்குவதையே வெறுப்பார்கள் .இச்சமயத்தில் பல ஆண்கள் விபச்சாரத்தை நோக்கி செல்லுவதை பார்க்க முடிகிறது .பல மனைவியர் அதை ஏற்றுக் கொள்கின்றனர்.நீங்கள் சொன்னார் போல எனது நண்பர் மறு திருமணம் செய்வதை அவரது மனைவி கடுமையாக எதிர்த்ததால் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்.இஸ்லாம் அங்கிகரித்த முறையில் திருமணம் செய்ய வழியில்லாமல் வைப்பாட்டி வைத்துக் கொண்டு இருக்கிறார். அந்த பெண்ணுக்கு மனைவி என்ற அந்தஸ்து இல்லாமல் விபச்சாரி நிலையிலே இருக்கிறார். இப்படி ஒரு பெண்ணின் நிலையை கேவலப்படுத்துவது ஆணாதிக்கமா? பெண்ணாதிக்கமா? உனது உடல் தேடுதலை என்னால் தீர்க்க முடியாத நிலையில் நான் நோய் வாய்ப்பட்டாலும் நீயும் உனது காம தேவைகளை குழி தோண்டி புதைத்திட வேண்டும் என்று ஒரு பெண் தந்து கணவனை கட்டாயப் படுத்துவது மட்டும் சரியா?
  ///அது போகட்டும்,அடிமைகளின் உடலுறவை நியாயப்படுத்தும் உங்கள் மார்க்க மேதைகளுக்கு எங்கு தெரியும் பெண்களின் இயல்பு! ///
  போர்க்காலத்தில் கணவன் இழந்து அடிமையான பெண்களின் இயல்பு மாமாமேதையே உங்களுக்கு எப்படி தெரியும்?
  ////தன மனைவியை மாற்றானுக்கு விவாகரத்து பண்ணி திருமணம் செய்துவித்த கேடுகெட்ட பொறுக்கித்தனத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு உங்களை போன்றவர்களை எப்படி சீர்திருத்தி சொர்க்கம் சேர்க்க முடியும்?///
  கிறுக்குத்தனமாக உளற வேண்டாம் .தன மனைவியை விவாக ரத்து செய்து அடுத்தவனுக்கு திருமணம் செய்ததாக எங்கு கண்டீர் ?அரைவேக்காட்டுத்தனத்தை வெளிப்படுத்த வேண்டாம்
  ////மனைவி உங்கள் வீட்டில் இருந்து கொண்டே இன்னொருவரை திருமணம் செய்ய அனுமதிப்பீர்களா?பதிலை தொடருங்கள் ,இறையருளால் தொடர்வோம்//
  ஆஹா என்ன ஒரு சிந்தனை இப்ராகிம் கண்டுபுச்சிட்டீங்க உங்க இறையருள் இதற்குதான் உதவி செய்யும்,நல்ல வழியில் சிந்திக்க உதவி செய்யாது./////
  சமநீதி கேட்டவர்களுக்கு இப்படி கேட்டால் சங்கடமாக இருப்பது ஏன்?
  அப்படி எனில் எந்த பெண்களுக்காக சம நீதி கேட்கிறீர்கள் ?
  உங்கள் மனைவிக்கு கூட ,உங்கள் வீட்டு பெண்களுக்கு கூட சமநீதி அளிக்க விரும்பாத நீங்கள் சமநீதி பற்றி ஏன் பேச வேண்டும்?
  ////பாலுணர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது பெண்கள்தான்,அப்படி பெண்களுக்கு முன்னுரிமைஅளிக்காத,முதலுரிமைக்கான மாற்று வழி அமைக்காத படைப்பாளி அல்லா என்று கூறினேனே தவிர,.///
  அப்படி பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப் பட்டதுதான் அல்லாஹ்வின் சட்டம்
  ////எங்கள் வீட்டு பெண்களுக்கு மாற்று வழி நாங்கள் கண்டுபிடித்து வைத்துள்ளோம் என்று கூறவில்லை சகோதரரே !///
  உங்களால் கண்டுபிடிக்க இயலாது என்பதாலும் அங்ஙனம் கண்டுபிடித்த சட்டங்களாலும் பெண்களுக்கு தீங்கு விளைகிறது என்பதாலே நாங்கள் அல்லாஹ்வின் சட்டம் போதும் என்கிறோம்
  பெண்களுக்கு மாற்று வலி கண்டுபிடிக்க இயலாத நீங்கள் ஏன் இறைவனின் சட்டத்தை விமர்சிக்க வரவேண்டும்?கையை மடக்கி கொள்ளவேண்டியதுதானே ,அல்லது வாயை பொத்திக் கொள்ள வேண்டியதுதானே .
  ///
  அது என்ன இஸ்லாத்தில் கிழிக்கவும் நாற்பது நாட்கள் ? (மழிக்க நாற்பது நாட்கள் சம்பிரதாயம் தெரியும்)///
  இஸ்லாத்தில் கிழிக்கவும் நாற்பது நாட்கள் மிகைக்காமல் மழிக்கவும் அறிவோம்.
  திரிபுகள் வேண்டாம் சகோதர ,மழிக்கவே 40 நாட்கள் என்று கூறியுள்ளேன்

 18. தஜ்ஜால் ,முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணின் நிலைபற்றி எனக்கு தெரியாது .உதாரணத்தை உங்களிடமிருந்து எடுத்தால் சமநீதிக்காரர்களுக்கு கோபம் வருவது ஏனோ?
  ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநீதி என்று கத்துவதெல்லாம் ஊருக்குத்தானோ?

 19. தஜ்ஜால் நீங்களும் இவ்வுலகில் வாழ்கிறீர்கள் .கள்ள உறவுகள் வைத்திருக்கும் பெண்கள் கூட தனக்கு ஒரு கணவன் மட்டமே இருக்க வேண்டும் என்று விரும்புவாள் .முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணின் முடிவை எப்படி நீங்கள் அறிய முடியும் என்று கேட்கும் நீங்கள் ,
  எத்தனை பெண்களிடம் ஆய்வு செய்து அவர்களுக்கும் ஆண்களை போல நான்கு கணவர்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களது புறத்து நீதி என்று எப்படி தெரிந்து கொண்டீர்கள்?
  அவர்களுக்கு தேவையில்லாத ஒன்றை அவர்களுக்காக உங்களை வாதாட வற்புறுத்தியது யார்?

  எப்படி குழந்தைகளை பெற்றெடுக்க ஆணுக்கு உரிமை இல்லையோ உரிமை இல்லாதவாறுஅவர்களது உடற்கூருவை இறைவன் படைத்தானோ அது போன்றே நான்கு திருமணங்கள் புரியாதவாறு ,அப்படி ஒரு எண்ணம் அவர்களிடம் ஏற்படாதவாறு பெண்களும் உளவியலை இறைவன் படைத்துள்ளான்

 20. ///பெண்களும் உளவியலை இறைவன் படைத்துள்ளான்////
  பெண்களுக்கும் உளவியலை இறைவன் படைத்துள்ளான் என்று வாசிக்க

 21. //அந்த வகையில் இது ஆணின் நீதி தானே தவிர பெண்ணின் நீதியல்ல.//

  தஜ்ஜால் , ’’’இது பணக்காரனுக்கான நீதியா? ஏழைக்கான நீதியா?’’’ என்று செங்கொடி குறிப்பிட்டது பாலின நீதியைப் பற்றி அல்ல. வர்க்க நீதியைப் பற்றியது.

 22. sengodi///இது அன்றைய நிலையை மட்டுமே குறிக்கும் வசனம் என்றால் இன்றைக்கு பொருந்தாது. இரண்டில் எது சரி?////
  அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் .குர்ஆன் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதையே இது வெளிப்படுத்துகிறது போர்க்காலத்தில் கணவனை இழந்த பெண்கள் இஸ்லாத்திற்கு முன்பு மிக கேவலமான நிலையியல் இருந்ததையே மாற்றி அமைக்க அடிமைகள் பற்றிய சட்டம் வந்தது.அவர்களை பாதி மனைவி உரிமை கொடுத்து பின்னர் அவர்களுக்கு விடுதலை கொடுத்து முழு மனுசியாக்கியது இஸ்லாம்.இப்போது அந்த நிலை இல்லை என்றால் அந்த சட்டம் செயலாக்கம் படவில்லை .திருடினால் கையை வெட்ட வேண்டும் சட்டம் .ஒருவரும் திருடுவதில்லை என்றால் அந்த சட்டம் செயலாக்கப்படாது .இனி திருடர்களே இல்லை அல்லா இனி திருடர்களே இல்லாமற்போகும் என்பதை அறியாதவன் என்று பொருளா?
  இனியும் ஒரு காலம் போர்கள் மூலம் அடிமைகள் உருவாகவே மாட்டார்கள் என்று யாராலும் திட்டவட்டமாக கூற முடியுமா?
  ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 14 மணி நேரம் மின்வெட்டு வரும் என்று உங்களால் கூற முடிந்ததா?
  மின்னே இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றும் நிலைவராது என்று உங்களால அறுதியிட்டு கூற முடியுமா?
  நம் முன் இப்போது என்ன பிரச்சனைகள் இருக்கிறது அதில் இஸ்லாத்தில் தீர்வுகள் இருக்கிறதா ?என்று பாருங்கள் .

 23. @S.Ibrahim
  //.சுவிஸ்பாங்கில் டெப்பாசிட் பண்ணினார்……//
  அப்பவே சுவிஸ்பாங்கில் பற்றி சொல்லி இருக்கார் போல. இதைதான் miracle of Islam ணு சொல்லிறிங்க போல‌.

  //டெண்டுல்கர் 30 வயது கால் பாட்டிய 25 வயசுல ஏன் கலியாணம் பண்ணினார்?//
  மகமதுவ டெண்டுல்கர ரேஞ்க்கு குறைகிறிங்களா?, இல்ல டெண்டுல்கர மகமது ரேஞ்க்கு கூட்டி சொல்லுறிங்களா?.

  டெண்டுல்கரும், மகமது ஒரெ கேரக்டர் போல. அப்ப நீங்க எல்லாரும் டெண்டுல்கர follow பண்ண ஆரம்பிங்க.

  உங்க மதம் unique ஒரு மதம்னு சொல்லுறிங்க. ஆனா பிரச்சனைனு வந்தா, அங்கே அப்படி இல்லையா, இங்கே இப்படி இல்லையா compare பண்ணிட்டு ஒடுறிங்க‌.

 24. வணக்கம் செங்கொடி, தாங்கள் பதிவிட்ட அல்லாவின் சட்டங்கள் எக்காலத்திற்கும்….என்ற புதிய பதிவு தமிழில் பதிவாகவில்லை,மற்றும் பதிவு முழுவதுமாக பதிவதில்லை,தங்கள் தளம் துபாயில் தெரிவதில்லை என்பதால் என் மிண்ணஞ்சலில் முழுவதுமாக பதிவிட வேண்டுகிறேன். நன்றி!!!!!

  ________________________________

 25. வா சு ,நாமும் சாப்பிடுகிறோம் ,முஹம்மது நபி[ஸல்] அவர்களும் சாப்பஈட்டர்கள் நாமும் நடக்கிறோம் ,முஹம்மது நபி [ஸல்] அவர்களும் நடந்தார்கள் என்று சொன்னால் நம்ம ரேஞ்சுக்கு நபி ஸல் அவர்கள் வந்துவிட்டார்கள் என்றோ அவர்கள் ரேஞ்சுக்கு நாம் உயர்ந்துவிட்டோம் என்று அர்த்தமா?
  டெண்டுல்கரும் கிரிக்கெட் ஆடுகிறார் ,எங்க வீட்டு பிள்ளையும் ஆடுகிறது என்றால் எங்க வீட்டு பிள்ளை டெண்டுல்கர் ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டார்கள் என்று அர்த்தமா?

 26. அடிமைப்பெண்கள் பற்றி இபுராகிம் பாதி மனைவி, விடுதலை என்றெல்லாம் இங்கு கதையளந்துள்ளார். கீழுள்ள ஹதீதுக்கு விளக்கம் தாரும் இபுராகிம்.

  புகாரி 2229:
  அபு சயீத் அவர்கள் கூறியதாவது. நான் நபியவர்களிடம் அமர்ந்திருக்கும்போது “அல்லாஹ்வின் தூதரே, எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் நாங்கள் அஸ்ல் செயலைச் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் “அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்கள் மீது கடமையில்லை. (அதாவது இதற்கு தடை யில்லை) ஆயினும் அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும். ஏனெனில் உருவாகும் என்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.

 27. நந்தன் ,அடிமைப்பெண்கள் மூலம் குழந்தைகள் பெற்றால் அவர்கள் மனைவியாகிவிடுவார்கள் .அதற்காக அந்த தோழர்கள் அவ்வாறு கேட்டுள்ள்ளர்கள் .ஏற்கனவே மனைவி இருப்பார்.இவர் மூலம் குழந்தை பிறந்தால் இந்த பெண்ணும் மனைவியாகி விட்டால் பொருளாதாரம் ஒத்துக் கொள்ளாது .போர் முடிந்து வீட்டுக்கு செல்ல பல் நாட்களாகும் .அவர்களது உடல் வாகு ,உணவு பழக்கம் அவர்களிடம் அதிகமாக உள்ள காம உணர்வுகளை உருவாக்கியுள்ளது.மேலும் அந்த காலத்தில் போர்வீரர்கள் போரில் வென்ற பிறகு எதிரி நாட்டு பெண்களிடம் எங்ஙனம் நடந்து கொண்டார்கள் என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மைகளை புரிந்து கொள்ள முடியும் .
  மேலும் அடிமைப் பெண்கள் பற்றி கீழ் கண்ட ஹதிதுவை பார்த்து இஸ்லாம் பற்றி புரிந்து கொள்ளுங்கள்
  2557. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
  உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரண்டு வாய்கள் (அந்த உணவிலிருந்து) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டார்.
  2547. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும்.
  என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
  Volume :2 Book :49
  2552. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  “என் அடிமை; என் அடிமைப் பெண்” என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். ‘என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்” என்று கூறட்டும்.
  என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
  2545. மஃரூர் இப்னு சுவைத்(ரஹ்) அறிவித்தார்.
  நான், அபூ தர் கிஃபாரீ(ரலி) ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அதைப்பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூ தர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்; நான் ஒருவரை (அவரின் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘இவரின் தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?’ என்று கேட்டார்கள். பிறகு, ‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். எனவே, எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கிறாரோ அவர், தன் சகோதரருக்கு, தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்” என்று கூறினார்கள்.
  Volume :2 Book :49

 28. சகோ
  என்ன விளக்கம்! என்ன தெளிவு!
  உங்கள மாதிரி ஆட்களினால்தான் இஸ்லாம் ஜீவிக்கின்றது!
  எப்படி எப்படி? **அடிமைப்பெண்கள் மூலம் குழந்தைகள் பெற்றால் அவர்கள் மனைவியாகிவிடுவார்கள் .அதற்காக அந்த தோழர்கள் அவ்வாறு**
  இதைக்கூற நீங்கள் முதலில் வெட்கப்படவேண்டும்
  ஏற்கனவே மனைவி அல்ல மனைவியர்கள் இருப்பார்கள் அவர்களும் போதாதென்று தினவெடுத்த போர் வீரர்கள் அறப்போர் அல்லது புனிதப்போருக்கு வந்த இடத்தில் காம உணர்வுக்கு வடி தேடினார்களாம்!
  அறப்போர் வந்த இடத்தில் இது தேவையா இப்ராகிம்?
  மனைவியர்கள் இருக்கும் நிலையில் பிறர் மனைவியை நோக்குவதே தவறு இந்த நிலையில் அபயமளிக்கவேண்டிய பொறுப்பில் இருக்கும் நீங்கள் கூறும் நல்லவர்களுக்கு இது அழகா இப்ராகிம்?
  கணவனை இறைமறுப்பாளன் என்று கொன்றுவிட்டு நீங்கள் போற்றும் நல்லவர்கள் நின்று கொண்டு உடலுறவுக்கு அழைத்தால் எந்த மனநிலையில் அப்பெண் சம்மதிப்பாள்?
  அது போகட்டும்,உங்களுக்கு பதில் கூறுவது வீணான வேலை என்று தெரிகின்றது ! இருந்தாலும்
  //கிறுக்குத்தனமாக உளற வேண்டாம் .தன மனைவியை விவாக ரத்து செய்து அடுத்தவனுக்கு திருமணம் செய்ததாக எங்கு கண்டீர் ?அரைவேக்காட்டுத்தனத்தை வெளிப்படுத்த வேண்டாம்//
  மதினத்து தோழர்கள் தங்கள் சொத்தை,வீடை,தோட்டத்தை,பங்குவைத்ததை போன்று தங்கள் மனைவியையும் ஓடிவந்த சஹாபிகளுக்கு அவர்களுக்கு பிடித்தவர்களை விவாகரத்து செய்து மணமுடித்து வைத்த கதை உங்களுக்கு ஹதீதாக சொல்லப்படவில்லையா?
  உங்களுக்கு இது கிறுக்குத்தனமாக தெரியவில்லை போலும்!
  அடிமைகள் என்று அழைப்பதே தவறு என்று கூறிய முஹம்மதுக்கு அடிமைமுறை ஹராம் என்று பத்வா கொடுக்கதெரியல பாருங்க!
  //‘என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்” // இவரு யாரு சொல்ல,அல்லாவே அடிமைனுதான் சொல்றான்!
  ம்ம் அப்புறம் என்ன நீங்க தொடருங்க…..

 29. ##அடிமைப்பெண்கள் மூலம் குழந்தைகள் பெற்றால் அவர்கள் மனைவியாகிவிடுவார்கள் ##

  குழந்தை பெற்றால் அடிமை ஆண்டையின் மனைவியாகிவிடுவாளா? அப்படியானால் கீழுள்ள புகாரி ஹதீதுக்கும் விளக்கம் தாருங்கள்.

  புகாரி 2203
  மரகந்த சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் (யாருக்கு சேரும் என்பது) பற்றி பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மரகந்த சேர்க்கை செய்தவருக்கே (விற்றவருக்க்கே) உரியவையாகும், அடிமையும் பண்பட்ட நிலமும் இவ்வாறே ஆகும்.

 30. மதங்களுக்கு தேவை முட்டாள்கள். முட்டாள்கள் இருக்கும்வரைதான் அது பிழைக்க முடியும் அல்லது அதை வைத்து வியாபாரிகள் பிழைப்பார்கள். அதும் உங்க மததுல கொஞ்சம் புத்திசாலியா இருந்து கேள்வி கேட்டா போதும். உடனே கேட்டவன் தலைக்கு 500K டாலர் விலை வைத்து விடுவீர்கள்

 31. சகோ
  சிந்திக்க மறந்தவன் வெறும் முட்டாள்!
  சிந்திக்க மறுப்பவன் பிடிவாதம் பிடிக்கிற முட்டாள்!
  சிந்திக்க பயப்படுகிறவன் எதிர்கால அடிமை!!
  மதத்தை பற்றி குறை கூறுகின்றபோது தவறுகளை சுட்டிக்காட்டும்பொழுது விமர்சகரை மதவாதிகள் பார்த்து கேட்பதெல்லாம் “நீங்கள் முதலில் உங்களை சரிசெய்து விட்டு வாருங்கள் பேசுவோம்” என்றும்
  வேற்று மதத்தினர் என்றால் “உங்கள் மதத்தில் இப்படி இருக்கிறதே சரியா? என்று கேட்பார்களே தவிர வேறில்லை.
  கொஞ்சம் மேதாவிகள் என்றால் தமக்கு சரி என்று பட்டதை எடுத்துக்கூறி,இது மட்டுமே சரி என்று கைதட்டலை பெறுவார்கள்! ஜாகிர் நாயக் வரை இதே கதைதான் தொடர்கிறது.
  கடவுளுடைய சட்டம் நிகழ்கால ,எதிர்கால தீமையை தடுப்பதற்கு மட்டுமே பயன்படவேண்டும்.சரி ஒரு சட்டம் நடைமுறையில் இருக்கும்போது அதை மாற்றி இது இக்கால மக்களுக்கு மட்டும்தான் ஏனென்றால் வருங்கால மக்களுக்கு நடைமுறைக்கு ஒத்து வராது என்பதை கூறுபவன்,கூறியவன் எப்படி முக்காலமும் அறிந்த இறைவனாக இருக்க முடியும் என்பதை அறியாத முரட்டு முட்டாள்களாகத்தான் மதவாதிகள் திகழ்கிறார்கள்!
  அந்தக்காலம் என்பது மனிதர்களுக்குத்தான்…, இறைவனுக்கல்ல!!.

 32. //கிறுக்குத்தனமாக உளற வேண்டாம் .தன மனைவியை விவாக ரத்து செய்து அடுத்தவனுக்கு திருமணம் செய்ததாக எங்கு கண்டீர் ?அரைவேக்காட்டுத்தனத்தை வெளிப்படுத்த வேண்டாம்//
  மதினத்து தோழர்கள் தங்கள் சொத்தை,வீடை,தோட்டத்தை,பங்குவைத்ததை போன்று தங்கள் மனைவியையும் ஓடிவந்த சஹாபிகளுக்கு அவர்களுக்கு பிடித்தவர்களை விவாகரத்து செய்து மணமுடித்து வைத்த கதை உங்களுக்கு ஹதீதாக சொல்லப்படவில்லையா?
  உங்களுக்கு இது கிறுக்குத்தனமாக தெரியவில்லை போலும்!

  முகம்மதின் வளர்ப்பு மகன் ஸைது தனது மனைவியை விவகாரத்துச் செய்து முகம்மது நபிக்கே திருமணம் செய்துவைத்த நிகழ்வும் உள்ளது.

 33. இபுராகிம், என்ன ஆளையே காணவில்லை?

 34. நந்தன் உங்களுக்கு விபரம் தெரியாதா? மழுப்ப முடியும் வரைக்கும் தான் இபுராகிம் மாய்ந்து மாய்ந்து விளக்கங்கள் கூறிக் கொண்டிருப்பார். கூர்மையாக பதில் கூற வேண்டி வந்தால், அப்புறம் நீங்கள் ஆளை தேடத்தான் செய்ய வேண்டும்

 35. கிறுக்குத்தனமாக உளற வேண்டாம் .தன மனைவியை விவாக ரத்து செய்து அடுத்தவனுக்கு திருமணம் செய்ததாக எங்கு கண்டீர் ? என்று கேட்ட இபுராகிம் தனது கிறுக்குப் பண்ணையில் கம்யூனிசம், ஆனாதிக்கம் என்று உளறித்தள்ளியுள்ளார்.

  இபுராகிம், குழந்தை பெற்றால்அடிமைப்பெண் மனைவியாகிவிடுவாள் என்று கூறியதற்கு ,

  புகாரி 2203
  மரகந்த சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் (யாருக்கு சேரும் என்பது) பற்றி பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மரகந்த சேர்க்கை செய்தவருக்கே (விற்றவருக்க்கே) உரியவையாகும், அடிமையும் பண்பட்ட நிலமும் இவ்வாறே ஆகும்.

  என்ற ஹதீதிற்கு விளக்கம் கேட்டிருந்தேன். அதற்கும் ஏதாவது கொஞ்சம் உளறி வைக்கவும்.

 36. சகோ
  //கம்யுனிசத்தில் திருமண வாழ்க்கை என்பது ஆணாதிக்கத்தனம்//
  இதைத்தான் கிறுக்குத்தனம் என்று சொல்லிவிட்டீர்கள் பின்னர் அதை படித்து நான் என்ன பண்ண? எனக்கு அது தேவையில்லை.
  //நீங்கள் உங்களுடைய இப்போதைய மனோபாவத்துடன் தவிர்க்க முடியாத ,நிர்பந்தமான காலகட்டத்தில் நடந்ததை ஒப்பு நோக்காதீர்கள்.//
  எப்படி எப்படி? தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து அடுத்தவனுக்கு திருமணம் செய்துவிக்க நிர்பந்தமான காலகட்டம்தான் காரணமா? நிர்பந்தமான காலகட்டமாக இருந்தால் சரியா? சரி அப்படி என்ன நிர்பந்தம்?
  தன்னுடைய மனைவியின் மேல் வைத்த உண்மையான அன்பினால் மனைவி தம்மை விட்டு எதிர்பாராத விபத்தில் இறந்துவிட்டால் மறுமணம் செய்யாமல் வாழ்பவர்களை பார்த்திருக்கிறேன்!
  திருமண பந்தம் என்றால் அப்படி ஒரு நிலை உண்டு என்பது உங்களுக்கு தெரியாது போலும்!
  திருமண உறவையே கொச்சைபடுத்தி தன்னுடைய மனைவியை அடுத்தவனுக்கு தலாக் சொல்லி திருமணம் செய்தார்கள் என்கிறேன் செய்தது அந்த காலம் அந்த கால அல்லாவுக்கு இதெல்லாம் தெரியாது, நீங்க இந்த காலம், இப்ப உள்ள நிலையில் வைத்து பார்க்காதிர்கள் என்று கூறுகிறீர்களே உங்கள் என்னத்த சொல்ல?
  அது எப்படி இப்ராகிம் உங்கள மாதிரி மட்டும் இத மாதிரி யோசிக்க முடியுது?
  தாவா பண்ண போறப்ப இந்த ஹதீத கூறி தாவா பண்ணுங்க ரொம்ப பாராட்டுவாங்க!
  //முகம்மதின் வளர்ப்பு மகன் ஸைது தனது மனைவியை விவகாரத்துச் செய்து முகம்மது நபிக்கே திருமணம் செய்துவைத்த நிகழ்வும் உள்ளது.////
  நடந்த சம்பவத்தை தவறாக விளங்கிக் கொண்டு இவ்வாறு கூறியுள்ளீர்கள்.//
  யாரு தவறாக விளங்கிக்கொண்டார்கள் என்பதற்கு உங்களுடைய மனோபாவ பதிலை பார்த்தாலே தெரிகிறது!
  இதில் உங்களுடைய பதிலை படித்து அவருக்கு தெளிவு பிறக்க போகுதா?
  //சைதுவுக்கும் அவரது மனைவிஜைனபுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது .இதனால் அவர்கள் செய்வதறியாது திளைத்தனர் .//
  அதுக்குன்னு? குடும்பம்னா சண்டை வரத்தான் செய்யும் .அவப்பெயரை எதிரிகள் ஏற்படுத்துவார்கள் என்று தெரிந்து எதற்காக திருமணம் செய்ய வேண்டும்? சட்டத்தை உடைக்க வேறு ஆளே கிடைக்க வில்லையா? இல்லை அல்லாவுக்கு வேறு ஆள ஏற்பாடு பண்ணி வைக்க தெரியாம போச்சா?

 37. சகோதரர் இப்ராகிம் ஆரம்பன்னையில்தான் விவாதிப்பாறாம். ஆதலால் அங்கும் சென்று இந்த மேற்கண்ட பதிவை இட்டுள்ளேன்.அவரது கிறுக்கு உளறலிலும் நந்தனுக்கு தெளிவு (!) உண்டாகிவிட்டதாம் ,கொடுமை!!
  இதற்க்கு நந்தந்தான் பதில் சொல்லவேண்டும்.

 38. சகோ இப்ராகிம்
  நல்ல விளக்கம்! தேவை இருந்தால்தான் விளக்கம் அளிப்பேன் என்கிறீர்களா ?
  உங்களுக்கு தேவை என்பதால் எனக்கு தேவை இல்லாவிட்டாலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான் ,அப்படித்தானே?
  அது சரி, ஒன்றை கூறும்போது அது சரியா என்று பார்த்து கூற வேண்டும் அல்லது போதிக்க வேண்டும்! அதுவும் மதம் என்ற ஒன்று மிகபெரிய ஆயுதம்!
  //இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவ்ல்லையே //
  அது சரி ,எனக்கு பிடிக்கவில்லை,ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஒதுங்கிக்கொள்ள சொல்கிறீர்களா?
  என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
  /தன்னுடைய மனைவியின் மேல் வைத்த உண்மையான அன்பினால் மனைவி தம்மை விட்டு எதிர்பாராத விபத்தில் இறந்துவிட்டால் மறுமணம் செய்யாமல் வாழ்பவர்களை பார்த்திருக்கிறேன்!///
  நான் ஒருவர் மீது ஒருவர் செலுத்திய அன்பின் காரணமாக திருமணம் என்ற நிகழ்வு வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளவர்களை பற்றியது அதை விட்டு விட்டு காமாலை காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதை போல //எத்தனை விபச்சாரிகளிடம் போவார்கள்//தங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டோ செல்லமாட்டார்கள் // என்று புலம்புகிறீர்களே, அவர் விபச்சாரம் செய்வாரா அப்படி செய்தால் யாரிடத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்பதா விவாதம் ?
  //திருமண பந்தம் என்றால் அப்படி ஒரு நிலை உண்டு // என்றால்
  //அப்படி ஒரு நிலை இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்பது எதன் அடிபடையில்?//
  என்று சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்டுள்ளீர்கள்! மேலும்
  //திருமண பந்தம் என்பது பிரிக்கவே முடியாத ஒன்றாக் கொள்ள அடிப்படை என்ன ?//
  பிரிக்க முடியும் ஆதலால் கொசைபடுத்தலாம் என்கிறீர்களா?
  மறுபடியும் சொல்கிறேன் தனது மனைவியை தலாக் சொல்லி அடுத்தவனுக்கு திருமணம் செய்து வைப்பது எவ்வளவு பெரிய அயோக்யத்தனம் என்பதை நான் கூறிவிட்டேன் ! வேண்டுமானால் தாவா செய்யும் இடத்தில் மாற்று மத நண்பர்களிடம் கூறுங்கள் ,உடனே இப்படியும் நபித்தோழர்களா என்று பதறிப்போவார்கள் !
  அல்லது
  உங்களுடைய பாணியில்
  //உங்களால ஒன்னும் சொல்ல இயலாது என்பதால் இப்படி உளறல் // என்று நீங்கள் பிதற்றுவீர்கள் !
  இவ்வளவு தெளிவா கிளிபிள்ளைக்கு சொல்வது போல் சொல்லியுள்ளேன் இது உளறல் என்று கூறினால் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?
  ரொம்ப சந்தோஷம்!

 39. இப்ராகிம் சகோ
  உங்களுடைய ஆரம்பன்னையில் பதிவிடமுடியவில்லை ,ஏனென்றும் தெரியவில்லை மன்னிக்கவும்

 40. mecca masjid chennai என்ற வலைதளத்தில் மௌலவி சம்சுதீன் 8.2.2012 குத்பா சொற்பொழிவை கேட்க உடனே பதிவு செய்ய தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நபி மகம்மது தனது 2 மனைவியை மெக்காவிலிந்து வந்தவர்களிடம் காட்டி இவர்களில் உங்களுக்கு யார் வேண்டு்ம என்று சொல்லுங்கள் நான் விவாகரத்து செய்கிறேன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்என்றாராம். கேட்பதற்கு அசீங்கமாய உள்ளது.தன் மனைவியை அடுத்தவனுக்கு …………… சீ சீ. கோழை……….

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s