இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 27

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 27

 

ஸ்டாலினை நிராகரிக்கும் கோட்பாடு, மார்க்சிய உள்ளடக்கம் எதுவுமற்ற வெற்றுப் பிதற்றலே.

  

ஸ்டாலினையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்து பல வண்ணக் கோட்பாடுகளை இடதுசாரி பெயரில், மார்க்சியம் என்ற பெயரில், மார்க்ஸ்சுக்கு விளக்கம் கொடுத்து வந்த பலவற்றையும், கோட்பாட்டு ரீதியாகவும், நாம் கேள்விகளை உள்ளடக்கி விடுவதன் மூலம் இது சுயமான தேடுதலை இதன் மேல் ஏற்படுத்தும். இதை அடிப்படையாக கொண்டு அனைவரின் சிந்தனைக்கும் உள்ளாக வேண்டிய, யாரும் கருத்தின்றி தப்பிச் செல்ல முடியாத சில முக்கியமான பிரச்சனைகளை எழுப்புவது அவசியமாகின்றது.

 

அனைத்து ஸ்டாலின் எதிர்ப்பாளர்களையும் மார்க்சியத்தை அடிப்படையாக கொண்டு கீழ் உள்ளவைகளை ஆராயுமாறு சவால் விடுகின்றோம். மார்க்சியத்துடன் சம்பந்தமில்லாத ஸ்டாலின் எதிர்ப்புக்குள் காலத்தை ஓட்டுவதை விடுத்து, நேர்மையாக விவாதிக்கக் கோருகின்றோம். முத்திரை குத்தும் பாணியில் அரசியல், சம்பவங்கள், நிகழ்ச்சிகளை கொண்டு மட்டும் அரசியலை விளக்குவது, குருட்டு வெளவால்த்தனமாகும். முத்திரை குத்தி தூற்றும் வழியில் ஸ்டாலினை மறுக்கும் அதேநேரம் மார்க்சியத்தையே, திரித்து திருத்துவது நிகழ்கின்றது. ஆனால் சரியான மார்க்சிய கோட்பாடுகள் மீது, மாற்றுக் கோட்பாட்டை முன் வைத்து தனியாக விவாதிக்க இவர்களால் முடிவவதில்லை. ஸ்டாலினை சேறடித்து முத்திரை குத்துவதே “மார்க்சியம்” என்றளவுக்கு மார்க்சியத்தை எளிமைப்படுத்தி, சம்பவங்களின் பின் காது மூக்கு வைத்து முத்திரை குத்தி, உயிர்வாழ நினைக்கும் அரசியல், இழிவான நயவஞ்சகத் தன்மை கொண்டவை. அரசியல் ரீதியாக பிரச்சனையை ஆராய்வது அடிப்படையானது. பிரச்சனையை கைவிட்டு விவாதிக்காது ஒடுவது பற்றி லெனின் மென்ஸ்விக்குகளுக்கு எதிராக போராடிய போது கொள்கை ரீதியான பிரச்சனையில் எதிராளியினுடைய ஒரு வாதத்திற்கு பதில் சொல்லாமல் அவன் மீது “இரக்கம்” காட்டுவதாகச் சொல்வது, விவாதிப்பதாகப் பொருளாகாது மாறாக அவதூறு செய்ய முயல்வது ஆகும்.” என்று தெளிவுபடவே விளக்குகின்றார். அடிப்படையாக உள்ளவைகளை கொள்கை ரீதியாக விவாதிக்க, எந்த ஸ்டாலின் எதிர்பாளாரும் தயார் இல்லை என்பதே வரலாற்று உண்மையாகும். இதை யாரும் இனியும் மீறமுடியாது. மார்க்சியம் தனது ஆய்வை தெளிவுபடவே முன்வைத்துள்ளது என்பதால், இதை விவாதிப்பதை கைவிடுவதே ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரிகளின் ஒரேயொரு தற்காப்பு ஆயுதமாகும். இந்த வகையில் நாம் ஸ்டாலின் எதிர்ப்பு அரசியல் பினாமிகளிடமும், மார்க்சியத்தை திரித்து புரட்டுபவர்களிடமும், மார்க்சியத்தை எதிர்க்கும் வக்கிரம் பிடித்தவர்களிடம், சமுதாய மாற்றம் மீதான முழுமையான முரணற்ற விளக்கத்தைக் கோரி சவால் விடுகின்றோம். அந்த வகையில்

 

► மார்க்சியம் என்றால் என்ன?

 

► வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

 

► வர்க்கப் போராட்டத்தை எப்படி நடத்துவது? எந்த வர்க்க எப்படி இணைந்து யாரை எதிர்த்து இந்த வர்க்கப் போராட்டம் நடத்தப்படுகின்றது?

 

► இன்று மார்க்சியவாதி என்பவன் யார்? அவன் எதை எல்லாம் அடிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

 

► “ஸ்டாலினியம்” என்று பல பத்துத் தரம் சொற்களில் முத்திரை குத்தும் அந்த “ஸ்டாலினிசத்தை” நீங்கள் கருதும் “மார்க்சியம்” மூலம் கோட்பாட்டு ரீதியாக மறுத்து எப்போதாவது, எங்காவது எதையாவது வைக்க முடிந்ததா? முடியுமா?

 

► ஸ்டாலினை எதிர்ப்பது மட்டுமா மார்க்சியம்?

 

► ஸ்டாலினை விவசாய சமூகத்தின் மூர்க்கத்தனத்தின் விளைவாக வகைப்படுத்தும் உங்கள் அரசியலுக்கு, அரசியல் தத்துவார்த்த கோட்பாட்டு விளக்கம் என்ன?

 

► அப்படியாயின் விவசாய சமூகங்களைக் கொண்ட நாடுகளில் நீங்கள் கருதும் “மார்க்சியம்” புரட்சிக்கு வரமுடியாதல்லவா? வந்தால் ஸ்டாலின் மார்க்சியம் தான் நிலவும் அப்படித் தானே? அப்படித் தானே உங்கள் கோட்பாட்டு முடிவு? இல்லை என்கிறீர்களா?

 

► உங்கள் “மார்க்சியம்” வரமுடியும் எனின், ஸ்டாலினில் இருந்து எப்படி வேறுபட்ட வகையில் கட்சி, அரசு, வர்க்கங்கள் இருக்கும்? அவைக்கு இடையிலான உறவு என்ன? உங்கள் “மார்க்சியம்” எப்படி அதை நடைமுறையில் கொண்டு வரும்?

 

► முதலாளித்துவ சமூகம் தனது சொந்த வர்க்கப் புரட்சியை வன்முறையூடாக நடத்துமா? அல்லது இல்லையா? நடத்தும் எனின் எப்படி? இல்லை எனின் ஏன்?

 

► இதில் இருந்து விவசாய சமூகங்கள் உள்ள முதலாளித்துவ புரட்சி நடைபெறாத நாடுகளில், புரட்சி எந்த வகையில் வேறுபடுகின்றது? வேறுபாடு இல்லை எனின் எப்படி? இருக்கின்றது எனின் எப்படி?

 

► விவசாய சமூகத்துக்கும், முதலாளித்துவ சமூகத்துக்கும் இடையில் புரட்சியை நடத்துவதில் வேறுபாடு இருக்கிறதா? இல்லையா? ஏன்? எப்படி? இதை உங்கள் மார்க்சியம் எப்படி விளக்குகின்றது?

 

► பாட்டாளி வர்க்கம் என்பதன் விளக்கம் என்ன? அதன் வர்க்கத் தலைமை எப்படி கட்டமைக்கப்படும்?

 

► தொழிலாளர்களை நேரடியாக கட்சியில் சேர்க்க முடியுமா? முடியாதா? ஏன்?

 

► தொழிலாளருக்கும், பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையில் வேறுபாடு உண்டா? இல்லையா?

 

► புரட்சியில் விவசாயிகளின் நிலை என்ன? விவசாயப் புரட்சி எழுச்சி பெறின், அதை பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்? விவாசயிகள் ஆயுதம் ஏந்திய தளப் பிரதேசத்தை நிறுவின், பாட்டாளி வர்க்கம் என்ன செய்யவேண்டும்? விளக்குவீர்களா? இங்கு தலைமை பாட்டாளி வர்க்கம் அல்லது குட்டிபூர்சுவா வர்க்கம் கொண்டிருப்பின், இதை தனித் தனியாக எப்படிக் கையாள்வது? இந்த நிலைமைகளில் பாசிசம் அரசின் பொது வடிவமாக இருக்கும் போது, தொழிலாளர் போராட்டம் எப்படி இருக்கும்?

 

► உலகளவில் ஆயுதப் போராட்ட வடிவங்களின் அனுபவங்களை, ஏற்றுக் கொள்கின்றீர்களா? இல்லையா? கொரில்லாப் போராட்டம் முதல் அரசின் பலவீனமான பிரதேசத்தில் இருந்து பலமான பிரதேசத்தை சுற்றி வளைக்கும் வடிவங்களை, ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியில் பயன்படுத்த முடியுமா? முடியாதா? ஏன்?

 

► பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன? இது யாரை ஒடுக்கும்? எப்படி ஒடுக்கும்? இங்கு அழிக்கப்பட்ட வர்க்கம் புதிதாக உருவாகுமா?, உருவாகாதா? எப்படி? என்?

 

► புரட்சியில் ஒடுக்கப்படும் வர்க்கம் புரட்சிக்கு பின்பு என்ன செய்யும்? அவ்வர்க்கம் புரட்சி செய்த கட்சியில் ஊடுருவுமா? இல்லையா? இல்லை எனின் ஏன்? இந்த வர்க்கங்கள் தனது நலனை அடைய கட்சியை எப்படி எல்லாம், எந்த வடிவங்களை எல்லாம் கையாளும்? விளக்குவீர்களா?

 

► எப்படி, எதன் வழியில் அரசு மற்றும் வர்க்கங்கள் ஒழிக்கப்படும்? இதற்கு தலைமை தாங்குவது யார்? தலைமை பல கட்சி சார்ந்து இருக்குமா? எப்படி?, ஏன்? இதன் வர்க்கம் என்ன?

 

► புரட்சிக்கு பிந்திய கம்யூனிச சமூகம் வரையிலான சமுதாயத்தில் எதிர்புரட்சி நடக்கும் வாய்ப்பு உண்டா, இல்லையா? இல்லை எனின் ஏன்? எப்படி?

 

► எதிர்ப் புரட்சி நடக்கும் வாய்ப்பு இருப்பின் எதன் வழியில் நடக்கும்.? எப்படி? ஏன்? இதை பாட்டாளி வர்க்கம் எப்படி எதிர் கொள்ளும்?

 

► சோவியத்திலும், சீனாவிலும் முறையே 1950 மற்றும் 1970 தொடங்கிய பத்தாண்டுகனின்  இறுதியில் எதிர்ப்புரட்சி நடைபெற்றதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? இல்லையா? இல்லை எனின் எதிர்ப்புரட்சி இந்த நாடுகளில் எப்போது ஏற்பட்டது. அக்கால கட்டம் எது? அதற்கு பிந்திய அவ்வரசுகள் முதலாளித்துவமா? அல்லது எது? இதை விளக்குவீர்களா?

 

► கட்சிக்குள் எதிர்ப்புரட்சி அணிகள் இருப்பார்களா, இல்லையா? இல்லை எனின் முரண்பாடுகள் எதன் அடிப்படையிலானவை? முரண்பாடுகள் புரட்சிகரமானவை எனின் கட்சி உருவான காலம் முதல் அது ஒரு நியதியா? பகை முரண்பாடாக இவை மாறியதில்லையா? சர்வதேச திரிபுகள் கட்சிக்கு வெளியில் உருவானதா அல்லது உள்ளும் உருவாகுமா? இது புரட்சிக்குப் பின் விதிவிலக்கா?

 

► புரட்சிக்கு முந்திய பிந்திய கட்சியில் வேறுபாடு உண்டா? புரட்சிக்கு முந்தி கட்சிகளில் புரட்சிக்கு எதிரான கோட்பாடு உருவாகும் எல்லாக் கட்சியிலும், வரலாற்றிலும் காணப்படும் போது, புரட்சிக்கு பிந்திய கட்சியில் அது அதிகமாகவே இருக்குமல்லவா? இதை மறுக்கின்றீர்களா? எப்படி? ஏன்?

 

► புரட்சியில் பங்குபற்றும் ஒருவர், வாழ் நாள் முழுக்க சரியான புரட்சிக்காரனாக இருக்க முடியுமா? இருக்க முடியும் எனின் இயங்கியலா? எப்படி? புதிய சமூக முரண்பாடுகள் ஏற்படாதா?

 

► புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் பல கட்சி ஆட்சி இருக்க முடியுமா? புரட்சிக்கு வரும் போது ஏற்படும் பல கட்சிகளின் ஐக்கிய முன்னணி தொடர்ச்சியாக நீடிக்க முடியுமா? எது வரை நீடிக்க முடியும்? இந்த நீட்சி தகர்கின்ற போது முரண்பாடு வன்முறையாக வளர்ச்சி பெறுமா? பெறாதா? ஏன்? எப்படி? இதை பாட்டாளி வர்க்கம் எப்படி கையாளும்?

 

► பாட்டாளி வர்க்கம் பல கட்சியை கொண்டிருக்க முடியுமா? முடியாதா? முடியும் எனின் வர்க்கத்தின் கட்சி என்பது என்ன? வர்க்கம் வேறுபட்ட கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் கட்சியாக இருக்கும் போது, வர்க்கம் பல கட்சியை பிரதிநிதித்துவம் செய்ய முடியுமா? எப்படி? ஏன்? இங்கு கட்சி வர்க்கத்தை பிரதிபலிப்பதில்லையா?

 

► புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் பல கட்சி முறை இருப்பின் தேர்தலும், அதன் ஜனநாயகமும் எப்படி இருக்கும்? அதாவது பல கட்சிகள் மக்களிடம் சென்று வாக்கு கேட்கும் முறை (முதலாளித்துவ பராளுமன்ற முறை வடிவில்) இருக்குமா? இல்லை எனின் ஜனநாயகம் எப்படி பாதுகாக்கப்படும்? அப்படியெனின் பாட்டாளி வர்க்க சாவாதிகாரம் என்றால் என்ன?

 

► பல கட்சியை யார் ஏற்றுக் கொள்வது? அதன் வரையறையை யார் தீர்மானிப்பது? இது புரட்சிகர கட்சி அல்லது பிற்போக்கு கட்சி என்பதை எது, எவை வரையறுத்து, யார் கட்டுப்படுத்துவது?

 

► பல கட்சி முறையில், பல கட்சிகள் காலத்துக்கு காலம் தமது பொருளாதார அடிப்படையை வைத்து போராடுமா? அது எப்படி என்ன பொருளாதாரமாக (வர்க்க அடிப்படையில்) பொதுவாக வகைப்படுத்துவீர்களா? இதன் அடிப்படையிலா தேர்தலில் நிற்குமா? வாக்குறுதியைக் கொடுக்குமா? விளக்குவீர்களா?

 

► ஜனநாயகம் என்றால் என்ன? சோசலிச சமூகத்தில் ஜனநாயகம் எப்படி இருக்கும்? யார் கட்டுப்படுத்துவார்கள்? பல கட்சியின் ஜனநாயக எல்லை என்ன? அதை யார் தீர்மானிப்பது?

 

► இலக்கியம், கலை… போன்ற துறைகள் எப்படி இருக்கும்? இங்கு பாட்டாளி வர்க்க தலையீடு இருக்குமா? இருக்காதா? அல்லது இவை வர்க்க வகைப்படுத்தலுக்கு அப்பாற்பட்டதா? விளக்குவீர்களா?

 

► கோட்பாட்டு விவாதம் என்று எதை கருதுகிறீர்கள்? சம்பவங்கள், நிகழ்ச்சிகளை தொகுப்பது கோட்பாட்டு விவாதமா? சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் ஒரு கோட்பாட்டு வடிவத்தில் அல்லவா இருக்கின்றது. இல்லையா? எப்படி? அதை உங்களால் விவாதிக்க முடியுமா?

 

► ஏகாதிபத்தியம் தேசங்களின் தேசியத்தை அழிக்கின்றதா? இல்லையா? இதற்கு எதிராக பாட்டாளி வர்க்கம் போராடுவது சரியானதா? இல்லையா? இல்லை எனின் எப்படி? சரியெனின் எப்படி போராடுவது?

 

► தேசிய முதலாளித்துவத்தை, ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவமும், தேசம் கடந்த பன்நாட்டு நிறுவனங்களும் அழிக்கின்றதா இல்லையா? அப்படியெனின் பாட்டாளி வர்க்க நிலை தேசிய முதலாளித்துவத்தின் பால் என்ன? இதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? எதிர்ப்பது எனின் ஏன்? ஆதரிப்பது எனின் எப்படி?

 

► ஸ்டாலின் கால ஆட்சி, அதிகார வர்க்க ஆட்சி என்றால், எப்படி நீங்கள் வேறுபடுகின்றீர்கள்? அதாவது அதன் கோட்பாட்டு உள்ளடக்கம் என்ன? அரசு வடிவத்தில் எப்படி, எதனூடாக அரசை மாற்றியிருக்க வேண்டும்? நீங்கள் ஆட்சியில் இருந்தால் எப்படி எதை ஸ்டாலினில் இருந்து வேறுபட்டுச் செய்திருப்பீர்கள்? ஸ்டாலின் ஒரு போராட்டத்தை செய்திருப்பின் எப்படி இதை கையாளுவீர்கள்? அதிகாரத்தை கைப்பற்றும் வடிவமாக மாறின் என்ன செய்திருப்பீர்கள்?

 

► சோவியத்யூனியனில் 1936 களில் விசாரணைக்கு உள்ளான தலைவர்கள், எப்படியான போராட்டத்தை கட்சியில் நடத்தினர்? கட்சிக்கு வெளியில் எப்படியான போராட்டத்தை நடத்தினர்? கட்சிக்குள்ளும், வெளியிலும் நடத்திய போராட்டம் ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாக கொண்டிருந்ததா? எப்படி? அவர்கள் வன்முறை சார்ந்த வடிவங்களை கையாண்டார்களா? இல்லையா? வன்முறையை தயார் செய்ததாகவும், அதில் பங்கு பற்றியதாகவும், அதில் ஈடுபட்டதாகவும் கொடுக்கும் இன்றைய வாக்கு மூலம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? ஏன்?  அவர்கள் கட்சியில் வைத்து போராடியவை என்ன? கட்சியில் தோற்ற போது, அதை எப்படி தொடர்ந்து கையாண்டனர்?

 

► புரட்சி எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் ஏற்படுமா? எப்படி? இல்லாத பட்சத்தில் ஒரு நாட்டில் உருவாகும்

புரட்சியை முன்னெடுப்பதா இல்லையா? எப்படி? ஏன்?

 

► அடுத்து “பின்நவீனத்துவம்” மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார வடிவத்துக்கு பொருத்தமில்லை என்பது, ஒரு தத்துவ விளக்கமா? எப்படி? பின்நவீனத்துவம் ஒரு வர்க்கத்தினை பிரதிபலிக்கின்றது எனின், அதன் வர்க்க மூலம் என்ன? அதன் மீதான கோட்பாட்டு விவாதங்கள் என்ன?

 

► பின்நவீனத்துவம் ஐரோப்பாவில் “ஒரு பகுதியின் வர்க்கப் பிரிவின் “முரண்பாடுகளை” இயல்புகளை சொல்ல எழுந்த சிந்தனை.. என்று முன்வைக்கும் விளக்கம், ஒரு பகுதி மக்களின் வர்க்க முரண்பாட்டை விளக்கி விடுகின்றதா? எப்படி? ஒரு பகுதி வர்க்க முரண்பாட்டை எப்படி விளக்கியது? அது எந்த வர்க்கத்தை எப்படி பிரதிநிதித்துவம் செய்தது? அது எந்த வர்க்கத்தை எதிர்த்து எப்படி விளக்கியது? பின்நவீனத்துவம் மார்க்சியத்துக்கு எதிராக உருவானதா? இல்லையா? பின்நவீனத்துவத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் என்ன உறவு? எப்படி? என்ன வேறுபாடு? ஒரு பகுதி வர்க்கப் பிரிவினை பின்நவீனத்துவம் விளக்கியது எனின், விளக்கிய வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் என்ன உறவு இருந்தது? இது மூன்றாம் உலக நாட்டுக்கு ஏன் பொருந்தாது? அல்லது ஏன் பொருந்தும்?

 

► பின்நவீனத்துவம் ஒரு கோட்பாடாக, கலவையாக வைக்கப்படும் போது, அது எப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது என்பதன் தத்துவார்த்த ஆய்வுகளை வைக்க முடியுமா?

 

► இலக்கியம் வர்க்கம் கடந்ததா? இல்லையா? ஏன்? எப்படி? வர்க்க அடிப்படை கொண்டது எனின் வர்க்கப் போராட்டத்துக்கும், வர்க்க சர்வாதிகாரத்துக்கும் உட்ப்பட்டதல்லவா? இல்லை எனின் நாசிய, ஆணாதிக்க….. இலக்கியங்களை எப்படி, எந்த சர்வாதிகாரம் கட்டுப்படுத்தும்? இதை நீங்கள் கருதும் மார்க்சிய வழியில் முன் வைக்கவும்?

 

► மறுவாசிப்பு என்பது மார்க்சியமா? பின்நவீனத்துவமா? மார்க்சியம் முன்வைக்கும் விமர்சனம், சுயவிமர்சனத்துக்கு பதில் பின்நவீனத்துவ வாசிப்பு, மறுவாசிப்பை உங்கள் மார்க்சியம் எப்படி ஏற்றுக் கொள்கின்றது.? விமர்சனம், சுயவிமர்சனம் எப்படி உங்கள் மார்க்சியத்தில் தவறாகி மறுவாசிப்பு மார்க்சியமானது? விளக்க முடியுமா?

 

► போல்ஸ்விக்குகள், இலக்கியவாதிகள், புத்திஜீவிகளை ஸ்டாலின் கொன்றார் என்று அடித்து சத்தியம் செய்கின்றீர்கள். நல்லது. கோடிக்கணக்கில் கொன்ற தரவுக்கு உங்கள் அடி மூல ஆதாரம் என்ன? கட்சியில் நீங்கள் குறிப்பிடும் கொலை நடந்த காலத்தில், எத்தனை லட்சம் பேர் கட்சி உறுப்பினராக இருந்தனர்? எத்தனை லட்சம் புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் இருந்தனர்? தனித்தனியாக எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை அந்த மூல ஆய்வு கொண்டிருக்குமல்லவா? அதை அலட்டாமல் கொள்ளாமல், யார் எங்கே? எப்போது? சோவியத் ஆவணக் காப்பகத்தில் ஆய்வு செய்து, எப்போது? முன்வைத்தனர் என்பதை முன்வைக்கவும்? கடந்த கால நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆவணமாக இருப்பதால், அதை அடிப்படையாக கொண்டே நீங்கள் தரவுகளை தொகுக்கின்றீர்கள் எனின், அதை நேர்மையாக வைக்கவும்? இல்லை உத்தேசம் எனின் அது ஏகாதிபத்திய எச்சில் தெறிப்பில் இருந்து தொகுப்பது அல்லவா? கொல்லப்பட்டோர் ஆவணம் அழிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறுவீர்கள் எனின், அதன் ஆதாரம் என்ன?

 

► ஸ்டாலின் கால கட்டத்தை எப்படி வரையறுக்கின்றீர்கள்? அது சோசலிசம் இல்லை என்றால் அது சுரண்டல் அரசல்லவா? சுரண்டல் அல்லாத, சோசலிசமல்லாத ஒரு வர்க்க சமுதாயம் நிலவ, நீடிக்க முடியுமா?  நிலவ முடியும் எனின் அதன் வர்க்க ஆய்வு என்ன? சீனா பற்றிய நிலைப்பாடு என்ன? ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றதா? இல்லையா? எப்படி? சம்பவங்கள் அல்ல இங்கு கோட்பாடுகளைக் கோருகின்றேன்? முன்வைக்க முடியுமா?

 

► ஸ்டாலின் கால கட்டத்தில் நன்மைகள் இருக்கவில்லை. இராண்டாம் உலகப் போரில் நாசிகளை தோற்கடித்த நிகழ்ச்சிகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லது  சோவியத் தீமைகள் எல்லாம் ஸ்டாலின் மீதும், நன்மைகள் எல்லாம் ஸ்டாலினுக்கு தொடர்பு இல்லை என்கின்றீர்களா? இதன் தத்துவார்த்த விளக்கம் மற்றும் அடிப்படை என்ன?

 

► 1950 களின் குருசேவ்வின் திரிபு வாதம் தொடர்பாக சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் நடந்த கோட்பாட்டு விவாதம் மீதான, உங்கள் மார்க்சிய விவாதம் என்ன? இதன் மீதான உங்கள் கோட்பாட்டு விரிவாக்கம் என்ன?

 

► புரட்சிக்கு பின்பு புரட்சியின் வடிவம் என்ன? அது எப்படி, எதன் வழியில் நிகழும்? புரட்சிக்கு பின்பு புரட்சியை பாதுகாப்பது, புரட்சியை நடத்துவதை விட கடினமானது என்ற மார்க்சிய விதியை எப்படி? நீங்கள் விளக்குகின்றீர்கள்? இங்கு பண்பாட்டு, கலாச்சார புரட்சி அவசியமா, இல்லையா. இல்லை எனின் ஏன்? எப்படி புரட்சியை தொடர்வது?

 

► புத்தக புத்திஜீவி மார்க்சிய வாதிக்கும், நடைமுறை மார்க்சியவாதிக்கும் உள்ள வேறுபாடு என்ன? எப்படி இதை வகைப்படுத்துகின்றீர்கள்?

 

► மார்க்சியம் என்றால் என்ன? அதன் வரையறை என்ன? யார் மார்க்சியவாதி? அதன் வரையறை என்ன? ஒரு மார்க்சியவாதி எதை அடிப்படையாக ஏற்றுக் கொண்டு எதைச் செய்ய வேண்டும்?

 

► விளிம்பு மனிதன் பற்றி, கோட்பாட்டில் அல்ல, நடைமுறை விளக்கத்தில் எதிர்க்க கிளம்பி, பின்பு விளிம்புக்கு உதாரணம் கொடுக்க பின்நிற்கவில்லை. கிட்லர், ஸ்டாலின் கூட விளிம்பு மனிதர்கள் என்று சிலர் கூறத் தயங்கவில்லை? விளிம்பை புதிய மார்க்சிய அகராதியில் இணைத்த பெருமை சிலரைச் சாருக! விளிம்பு என்பது என்ன? விளிம்பு ஒரு பொருளாக சுயமாக இருக்க முடியுமா? ஒரு பொருளில் விளிம்பு இருக்க முடியுமே ஒழிய, விளிம்பு சுயமாக இருப்பதில்லை அல்லவா! நீங்கள் ஸ்டாலின் அல்லாத மார்க்சிய அகராதியில் இணைத்த விளிம்பு மனிதன், எதன் விளிம்பு மனிதன்? வர்க்கத்தின் விளிம்பு மனிதனா? இனத்தின் விளிம்பு மனிதனா? சாதியின் விளிம்பு மனிதனா? … எதன் விளிம்பு மனிதன்? எப்படி? இங்கு வர்க்க பகுப்பாய்வை பின்நவீனத்துவத்துக்கு தாரைவார்த்துக் கொடுப்பது அல்லவா மார்க்சியமாகி விடுகின்றது!

 

நீங்கள் குறிப்பிடும் படுகொலை முதல் ஏகாதிபத்தியம் சொல்லும் கம்யூனிச பத்து கோடி படுகொலை வரை “யாரும் பேசவில்லை” என்பது தவறானது. நாங்கள் அதைப் பற்றி பேசுகின்றோம். ஆனால், அதை நாங்கள் உங்கள் மார்க்சியத்தை விட்டோடும் ஓடுகாலி அரசியலில் இருந்தல்ல, நாங்கள் மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் நடைமுறைகளை ஆய்வு செய்து சுயவிமர்சனம், விமர்சனம் என்ற அடிப்படையில் எல்லாவற்றையும் ஆய்வு செய்கின்றோம். இந்த வகையில் எமது ஆய்வு சர்வதேசிய மயமானவை. இதற்கு யாரும் இது வரை கோட்பாட்டு ரீதியாக பதிலளித்ததில்லை. மாறாக அவதூறுகள் மூலம் தூற்றுவதே அதன் வக்கிரமாகவும், அதன் உள்ளடக்கமாகவும், அதன் அரசியலாகவும் வெளிப்படுகின்றது.

 

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22

23ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23

24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 24

25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 25

26. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 26

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

4 thoughts on “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 27

  1. இப்பொழுது உள்ள பொருளாதார நெருக்கடி
    க்கு ஸ்டாலினுடைய ஆற்றல்(மார்க்சியலெ னினிய) தேவைப்படுகி
    றது.

  2. ஐயா, கேள்விகளைப் புரிந்து கொள்ளவே மார்க்சியம் பயில வேண்டும் போலிருக்கிறதே.

  3. மார்க்சியம் குறித்த அடிப்படையான புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் ஒரு தொடர் என்னை போன்ற படிப்பு வாசனை அவ்வளவாக இல்லாதவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதுங்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s