வாழ்வையும், பண்பாட்டையும் ஆக்கிரமிக்கும் பயங்கரவாதி

 

மக்களின் ஆரோக்கியத்தின் மீதும், மனித வளத்தின் மீதும், தனி மனிதனின் ஆளுமையின் மீதும் மிகப்பெரிய பண்பாட்டு ஆக்கிரமிப்பு தாக்குதலை தொடுத்து வருகிறது தமிழக அரசு .. .. .. சாராய வியாபாரத்தின் மூலம். குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி, கொலை. குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை. குடிபோதையில் மனைவி குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி .. .. .. இப்படி அன்றாடம் மூன்று நான்கு செய்திகளை பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். அண்மைக்காலமாக நிகழும் குற்ற நடவடிக்கைகளில் பாதிக்கும் மேற்பட்டவை குடிபோதையினால் நடப்பவையே. அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் வரதட்சனையை விட குடிபோதையில் பெண்களைத் துன்புறுத்தும் ஆண்கள் மீதான புகார்கள் தான் 80 விழுக்காட்டுக்கு மேல் பதிவாகின்றன.

 

பள்ளி மருத்துவமனைகளுக்கு அருகில் 100 மீட்டருக்குள் புகையிலை மதுப் பொருட்கள் விற்கக் கூடாது என அரசின் விதி உள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால் அதே அரசு தான் அது போன்ற விதிகளை குடித்துவிட்டு கசக்கி எறியபடும் ‘டிஸ்போஸபிள் கப்’ போன்றதாக மாற்றுகிறது. சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் முதல் இடம் தமிழகத்திற்கு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தோராயமாக 15 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் மரணமடைந்திருக்கிறார்கள். இந்த விபத்துகளில் 60 விழுக்காடு மது காரணமாக நடந்திருக்கிறது.

 

18 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது என்பதற்காக பத்தாயிரம் பேரை சாலை விபத்துகளில் காவு கொடுக்க அரசு தயாராக இருக்கிறது. அரசு கணக்கின் படியே டாஸ்மாக்கின் வருவாய் உயர்வுக்கு நிகராக குடித்துவிட்டு வாகனம் ஓட்டி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. நிகழாண்டில் 21 ஆயிரம் கோடிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளது அரசு. இனி சாகப் போகிறவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ? இதில் நம்மில் ஒருவர் கூட இருக்கலாம்.

 

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மனித வெடி குண்டுகள் என்றும், போதையில் மரணங்களை உண்டாக்குவோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் கூறுகிறது நீதிமன்றம். இத்தகைய மனித வெடிகுண்டுகளையும், கொலையாளிகளையும் டாஸ்மாக் மூகம் உருவாக்கி உலவவிட்டிருக்கும் அரசை என்ன செய்யலாம்?

 

தொடர்ச்சியான மதுப்பழக்கத்தால் கணிசமானோர் சிரோஸிஸ் உள்ளிட்ட மிகக் கொடுமையான கல்லீரல் நோய்களுக்கும், சைக்கோஸிஸ் போன்ற மனநோய்களுக்கும் ஆட்படுகின்றனர். குடியினால் ஏற்படும் மரணத்தினால் இளம் விதவைகளின் எண்னிக்கையும் தமிழ் நாட்டில் அதிகரித்து வருகிறது.

 

குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆண்டுதோறும் இலக்கு வைத்துச் செயல்படும் அரசிடம், குடிநோயை குணப்படுத்த வேண்டிய போதை மீட்பு மையங்களுக்கும் மனநல மருத்துவர்களுக்கு இருக்கும் பற்றாக்குறையை தீர்க்கும், குறைக்கும் திட்டமோ, இலக்கோ கிடையாது. ஊருக்கு பத்து டாஸ்மாக் கடைகளை நடத்தும் அரசு, ஒற்றை ஒரு போதை மீட்பு மையம் கூட நடத்தவில்லை. குடிக்கு அடிமையானவர்களை குடி நோயாளிகள் என்கிறது மருத்துவம். இந்த நோயை திட்டமிட்டுப் பரப்பும் அரசை கிரிமினல் அரசு என்று கூறாமல் வேறென்ன பெயரால் அழைக்க முடியும்?

 

பள்ளி கல்லூரி மாணவர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை போதைப் பழக்கம் அறிமுகமாகும் வயது 25ஆக இருந்தது. இன்று அது 13 வயதாக குறைந்திருக்கிறது. 21 வயதுக்குட்பட்டோருக்கு சாராயம் விற்கக் கூடாது என விதி இருந்தும் பள்லி மாணவர்களுக்கும் கூட சாராயம் விற்கப்படுகிறது. பருவ வயதில் போதைப் பொருட்கள் மீது இயல்பாக இருக்கும் ஆர்வமும்; சாராயம் சிகரெட் குடிப்பது ஆண்மையின் வெளிப்பாடு என்ற அறியாமையும் சேர்ந்து மாணவர்களை டாஸ்மாக் பக்கம் ஈர்க்கிறது. பார்களும் அதற்கு வசதி செய்து கொடுக்கின்றன. முன்பு குடிநோய் சிகிச்சைக்கு கணவன்களை அழைத்துச் சென்ற பெண்கள் தற்போது பருவ வயது பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள். எதிர்கால தலைமுறையே சீரழிந்து போய்க் கொண்டிருப்பதற்கான அபாயச் சங்கு இது.

 

அரசு நிறுவனமான டாஸ்மாக் 1983 – 1984ல் தொடங்கப்பட்டபோது அதன் முதலீட்டுத் தொகை 15 கோடி, அன்றைய ஆண்டு வருவாய் 139 கோடி. 2003 – 2004ல் அதன் ஆண்டு வருவாய் 3500 கோடி. 2011 – 12ல் 18 ஆயிரம் கோடி 18 ஆயிரம் கோடி என்பது லாபம் மட்டுமே ஆண்டு தோறும் 40 ஆயிரம் கோடி ரூபாயை உழைக்கும் மக்களிடமிருந்து பிக்பாக்கெட் அடிக்கிறது அரசு. இது 25 ஆண்டுகளில் பூதாகர வளர்ச்சி. இந்தியாவின் எந்த பொதுத்துறை நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடையவில்லை. அந்த திமிரில் தான் நிகழும் ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் மதுக் கொள்கை என்று எதுவுமில்லை. அதிகபட்ச வருவாய் ஈட்டுவது ஒன்று மட்டும் தான் அதன் இலக்கு. ஆண்டு தோறும் போடப்படும் அந்த இலக்கு எட்டப்பட வேண்டுமானால் புதிய குடிகாரர்களையும், புதிய குடி அடிமைகளையும் அது உருவாக்கியாக வேண்டும். கட்டுப்பாடில்லாமல் குடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அது பார்களையும் திறந்து வைத்திருக்கிறது. அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெருந்தொழிலதிபர்கள், சமூக விரோதிகள் என அனைவரையும் கொண்ட வலைப் பின்னலோடுதான் இந்த டாஸ்மாக் இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் டாஸ்மாக் மூலம் பணம் கொட்டுகிறது. 18 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்து இன்னுமொரு பத்தாயிரம் கோடி அரசியவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் போகிறது. கருணாநிதி கொண்டுவந்த பல திட்டங்களை கலைத்துப் போட்ட ஜெயா டாஸ்மாக்கில் ஒட்டுகிறார்.

 

எந்த ஓட்டுக் கட்சியாக இருந்தாலும் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களை அறிவித்துத்தான்  தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். ஜெயாவோ, கருணாநிதியோ தங்கள் பரம்பரை சொத்துகளிலிருந்தோ அல்லது தாங்கள் கொள்ளையடித்த பணத்திலிருந்தோ இந்த இலவசங்களைக் கொடுக்கவில்லை. மாறாக, டாஸ்மாக் மூலம் மக்களிடமிருந்து பறித்தெடுத்துத்த பணத்தைக் கொண்டு தான் இந்த இலவசங்களை வழங்குகின்றன. ஜெயா அரசு ஆண்டொன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு கொடுக்கும் இலவசங்களின் மதிப்பு 16 ஆயிரம் ரூபாய். மாறாக, குடிப்பதன் மூலம் அரசு அதே குடும்பத்திடமிருந்து ஓர் ஆண்டில் பறித்துக் கொள்ளும் மதிப்பு ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்.

 

சாராய விற்பனை மூலம் பெண்களின் தாலியறுத்து, இளம் தலைமுறையினரை சீரழித்து சின்னாபின்னமாக்கி, குடிகார கணவன்மார்களால் பெண்கள் குழந்தைகளின் மன அமைதியை இழக்க வைத்து, அவர்களை அன்றாடம் சித்திரவதைக்கு உள்ளாக்கி அந்த அவலம் சோகம் கண்ணீரிலிருந்து கறக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, பறிகொடுத்த மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மடிக்கணிணி போன்றவற்றை இலவசமாக தருவது எவ்வளவு பெரிய கிரிமினல் தனம்? எவ்வளவு பெரிய கொடூரம்? எவ்வளவு பெரிய குற்றம்? பதவிக்கு வந்து மக்கள் பணத்தை பகற் கொள்ளையடிக்கவும், தொழிலதிபர்கள் பெரும் லாபம் ஈட்டவும் கொடுக்கப்படும் இந்த இலவசங்கள் ஏதோ ஜெயா கருணாநிதியின் தயாள குணத்திலிருந்து பிறந்த மக்கள் மீதான பாசம், பரிவு என்றெல்லாம் சித்தரிப்பது எவ்வளவு பெரிய மோசடி? பித்தலாட்டம்?

 

தனியார்மயம், தாராளமயம், கடுமையான உழைப்பு நிறைந்த உதிரித் தொழிலையும், அதிக பணிச் சுமையையும், வீடு குடும்பத்தை விட்டு நாடோடிகளாக அலையும் அகதி வாழ்க்கையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில் சாராயம் என்பது எளிதில் ஆனால் சற்றே செலவில் கிடைக்கும் வலி நிவாரணியாக மாறுகிறது. அவலத்தில் உழலும் வாழ்க்கையை உரிமைக்கான போராட்டங்களினால் மாற்றுவது என்பது போய் வலியை மறக்க குடிப்பது என்றாகி விட்டது.

 

முன்னெப்போதைக் காட்டிலும் பெரும்பாலான ஆண்கள் அன்றாடம் குடித்தே தீர்வது என்பது வழக்கமாக மாறிவிட்டது. உடலுழைப்பு செய்யும் ஏழை ஆண்கள் தங்களின் வருமானத்தில் குறிப்பிடத்தகுந்த பங்கை குடிப்பதற்காகச் செலவழிக்கிறார்கள். வேலை கிடைக்காத நாட்களில் கடன் வாங்கி குடிக்கிறார்கள். அதனால் வருமானமிருந்து வாழமுடியாத அவலம் நிரந்தரமாகி விட்டது. அந்த வகையில் இது ஏழைக் குடும்பங்களின் பெண்கள் பிரச்சனையாகி விட்டது.

 

காற்று நிலம் நீர் என இயற்கையின் அத்தனை வளங்களிலும் பகற்கொள்ளையடித்து லாபம் பார்த்து பழகிப் போன அரசியல்வாதிகளும், தொழிலதிபார்களும், அரசு அதிகாரிகளும், சமூக விரோதிகளும் எக்காலத்திலும் டாஸ்மாக்கை ஒழிப்பதற்கு விரும்ப மாட்டார்கள். எனவே டாஸ்மாக்கால் அதிகம் பாதிக்கப்படும் ஏழைப் பெண்கள் விழித்தெழுந்து போராடும் வரை டாஸ்மாக்கை ஒழிக்க முடியாது. அத்தகைய போராட்டம் ஆந்திராவில் 90களில் நடந்தது. பல நகரங்களில் சாராயக் கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கி மூடினார்கள்.

 

இதைத்தவிர டாஸ்மாக்கை ஒழிப்பதற்கு வேறு வழியில்லை. நமது வாழ்வை வழிமறிக்கும் மறுகாலனியாக்கத்தை உணரவிடாமல் நமது சிந்தனையை சீரழித்து பண்பாட்டு ஆக்கிரமிப்பு செய்யும் டாஸ்மாக்கை ஒழித்துக் கட்டாமல் நமக்கு வாழ்வில்லை, வழியில்லை.

 

4 பதில்கள்

  1. இதுபற்றி நிறைய எழுதி விட்டேன். ஆனால் இவை எல்லாம் எந்த பலனும் அளிக்கவில்லை. நிறைய சண்டை சச்சரவுகளை எனக்கு ஏற்படுத்தியது அல்லாமல் எந்தவித மனநிறைவும் இல்லை. இருந்தாலும் எழுதுவதை தொடர்வேன்.

  2. குடி குடியை கெடுக்கும்,குடிப்பழக்கம் குடும்பத்தையே சீரழிக்கும்,குடி நாட்டுக்கும் கேடு,வீட்டுக்கும் கேடு என்று விளம்பரம் செய்து விட்டு டாஸ்மாக் விற்பனையை இவ்வளவு அதிகப்படுத்தி மக்களை மாக்களாக மாற்றுவதை இந்த உழைக்கும் இனம் என்று அடையாளம் காணும்?

  3. இதையே திருக்குரான் சொன்னால், வாழ்க்கையை அனுபவிக்கத்தெரியாத காட்டுமிராண்டி தீவிரவாதிகளின் வேதமென்று அறிவு ஜீவிகள் எள்ளி நகைப்பர்.

  4. //// நமது வாழ்வை வழிமறிக்கும் மறுகாலனியாக்கத்தை உணரவிடாமல் நமது சிந்தனையை சீரழித்து பண்பாட்டு ஆக்கிரமிப்பு செய்யும் டாஸ்மாக்கை ஒழித்துக் கட்டாமல் நமக்கு வாழ்வில்லை, வழியில்லை. ////

    ஒரு இஸ்லாமிய அறிஞர் சொன்னது:

    ஒரு கட்டம் வரும். குடிக்கும் காமசூத்திரத்துக்கும் அடிமையாகி காபிர்கள் தன்னிலை மறந்து, மானங்கெட்டு, மதியிழந்து தரையிலே தவழ்ந்து வந்து இஸ்லாமியரின் காலைப்பிடித்து கெஞ்சுவார்கள். “அய்யா. என்னால் நடக்க முடியவில்லை, இதுதான் எனது கடைச்சாவி. தயவு செய்து நீங்களே நடத்தி எனக்கும் ஏதாவது கொடுங்கள். எனது பெண்கள் என்னைப்போல் குடிகார காபிரை மணந்து கொள்ள தயாரில்லை. நீங்களே அவர்களை இரண்டாவதோ, மூன்றாவதோ அல்லது நான்காவது மணைவியாகவோ மணந்து கொள்ளுங்கள். நான் உங்கள் அடிமை”.

    இன்ஷா அல்லாஹ், குருட்டுக்கிழவி பாரதமாதா முசல்மானுக்கு மீண்டும் அடிமையாகும் நாள் நெருங்கிவிட்டது.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: