அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

death sentence in saudi

 

இஸ்லாமிய நீதி வழங்களில் முஸ்லீம்களில் பேருவப்பாக கூறப்படும் சட்டங்கள் என்றால் அது குற்றவியல் சட்டங்கள் தான். இஸ்லாமியச் சட்டங்கள் இருந்தால் நாட்டில் கற்பழிப்பே நடக்காது என்பார்கள். திருட்டு அறவே ஒழிந்துவிடும் என்பார்கள். அப்படி என்ன சிறப்பு இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில்? கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று கூறப்படும் ஹமுராபி காலத்துச் சட்டங்கள் தான். முகம்மது தான் வாழ்ந்த காலத்தின் போது 2,300 ஆண்டு பழமையாக இருந்த ஹமுராபி காலத்து பாபிலோனியச் சட்டங்களை சீர்திருத்தி மறுபதிப்பு செய்தது தான் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள். குற்றவியல் சட்டங்கள் மட்டுமே குற்றங்களைக் குறைத்துவிடும் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலுமே, அது யாருக்கு உரித்தாகும் முகம்மதுக்கா? ஹமுராபிக்கா? யாருக்கு என்பது ஒருபுறமிருந்தாலும், இப்படி குற்றங்களை அறவே ஒழிக்கும் தகுதி சட்டங்களுக்கு உண்டா?

 

திருடினால் மனிக்கட்டிலிருந்து கையை தரித்து விடுவது, கொலைக்கு கொலை இது போன்றவைகள் தான் குற்றங்களுக்கு எதிரான இஸ்லாமிய தீர்வுகள். இப்படி தண்டனை கொடுத்துவிடுவதால் மட்டுமே குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்கிவிட முடியாது. எந்த வகைக் குற்றமானாலும், குற்றம் புரிவதற்கான தேவையும், தூண்டுதலும் சமூகத்தில் இருக்கும் வரை குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்கிவிட முடியாது. ஏற்றத் தாழ்வான சமூகத்தை தக்க வைத்துக் கொண்டு, சமூகம் அப்படி ஏற்றத் தாழ்வாய் இருப்பதினாலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறிக் கொண்டு சட்டம் போட்டு குற்றங்களை தடுத்துவிட முடியும் என்பது கடல்நீரைக் காய்ச்சி சர்க்கரை எடுக்கலாம் என்பது போன்று அபத்தமானது.

 

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள் .. .. .. குரான் 5:38

 

இனி மனித இனம் முழுமைக்கும் இருக்கப் போகும்(!) சட்டம் திருட்டுக்கு கையைத் தரிப்பது. எது திருட்டு? எந்தத் திருட்டிலிருந்து கையைத் தரிப்பது? என்பது குரானிலும் கூறப்படவில்லை, முகம்மதும் பட்டியலிட்டுக் காட்டவில்லை. ஆகவே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் திருட்டு என்பது திருடும் தன்மை தானேயன்றி திருட்டின் மதிப்பல்ல என்பது விளங்கும். பசியின் கொடுமையினால் ஒற்றை இட்லியைத் திருடினாலும், நாட்டின் வளத்தையே ஒட்டக் கொள்ளையடித்தாலும் இரண்டுமே திருட்டு எனும் ஒற்றைச் சொல்லில் அடங்கும். இரண்டுக்கும் தண்டனை கையை வெட்டுவது தானா?

 

திருட்டு என்பதை எந்த அடிப்படையிலிருந்து தீர்மானிப்பது? எடுத்துக்காட்டாக, சௌதி அரேபியாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளலாம். எண்ணெய் எடுப்பது சௌதி, ஆனால் எவ்வளவு எடுக்க வேண்டும், என்ன விலையில் விற்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது அமெரிக்கா. மட்டுமன்றி, எண்ணெயின் மூலம் கிடைக்கும் பணத்தை பெட்ரோ டாலர்களாக அமெரிக்காவில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவுக்கும் சௌதிக்கும் இடையிலிருக்கும் ஒப்பந்தம். இதனடிப்படையில் பார்த்தால் சௌதியில் இருக்கும் எண்ணெய் வளம் அதன் மக்களுக்கு தரும் பலனை விட அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு தரும் பலன் அதிகம். இந்தச் சுரண்டலை மேலாண்மை என்பதா? அடிமைத்தனம் என்பதா? ஒப்பந்தம் என்பதா? எதுவானாலும் சௌதி ஆளும் வர்க்கங்களின் பார்வையில் இது நிர்வாகம். மக்களின் பார்வையில் இது சொந்த நாட்டின் வளத்தை இன்னொரு நாடு திருடிக் கொண்டு செல்வது. இந்தத் திருட்டுக்கு என்ன தண்டனை? யார் கையை வெட்டுவது? கையை மட்டும் வெட்டினால் போதுமா?

 

இது அரசியல் தானே தவிர திருட்டல்ல என்றால் அல்லா போட்ட சட்டம் ஆளும் வர்க்க கண்ணோட்டத்தில் மட்டுமே செயல்படும் என்பது உறுதியாகும். சௌதி மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் மானிய வெட்டுக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் பின்னே இந்த அரசியல் இருக்கிறது என்றால் அல்லா போட்ட சட்டமான கையை வெட்டுவது சர்வ நிச்சயமாக பொருந்தாத சட்டம் என்பது உறுதியாகும். என்ன சொல்கிறீர்கள் முஸ்லீம்களே!

 

.. .. .. சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண், இருப்பினும் அவனுக்கு அவனது சகோதரனால் ஏதும் மன்னிக்கப்படுமானால் வழக்கமான முறையைப் பின்பற்றி நஷ்ட ஈட்டை கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும் நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கிருபையும் ஆகும். .. .. .. குரான் 2:178

 

மேலோட்டமாக படித்தலே அபத்தமாகத் தெரியும் இந்த வசனம் தான் முக்காலமும் உணர்ந்த அல்லா வழங்கும் சட்டம். எளிமையாகச் சொன்னால் கொலைக்குக் கொலை. தூலமாகச் சொன்னால் வர்க்கக் கொழுப்பும், ஆணாதிக்கமும் வழிந்தோடும் சட்டம். குரான் பல வசனங்களில் சுதந்திரமானவனும் அடிமையும் தகுதியில் ஒன்றல்ல என்கிறது, அது தான் இதிலும் தெரித்திருக்கிறது. அடிமையைக் கொன்றால் இன்னொரு அடிமை கொல்லப்பட வேண்டும், பெண்ணைக் கொன்றால் இன்னொரு பெண்ணைக் கொல்ல வேண்டும். ஆண்டான் அடிமைக் காலகட்டத்தில் அடிமைகளைக் கொல்ல ஆண்டைகளுக்கு முழு சுதந்திரம் இருந்தது என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்க.

 

மரணதண்டனை கூடாது என்பதை முன்வைத்து இதை சிலர் மறுக்கக் கூடும். ஆனால், அவ்வாறன்றி கொலைக்கு கொலை என்பது காட்டுமிராண்டித்தனம் என்பதாலேயே இது எக்காலத்துக்கும் பொருந்தாத சட்டமாக இருக்கிறது. கொலைக்கான காரணம் இச் சட்டத்தில் என்ன விதத்தில் தொழிற்படும்? அண்மையில் ஒரு வழக்கு குறித்து செய்தி ஊடகங்களில் வந்த செய்தி, மகளை வன்புணர்ச்சி செய்ய முயன்ற கணவனை மட்டையால் அடித்துக் கொன்ற மனைவியை அது குற்றமல்ல என்று நீதிமன்றம் விடுதலை செய்தது. அல்லாவின் பார்வையில் இது வரம்புமீறிய செயல் என்பதை முஸ்லீம்கள் ஒப்புக் கொள்வார்களா? கொலைக்கு கொலை என்றால் அந்த மனைவி கொல்லப்பட வேண்டியவரா?

 hammurabi code

 

ஆண்டைகளுக்கு இச்சட்டம் ஒரு சலுகையையும் வழங்கியிருக்கிறது. கொலைக்கு பகரமாக கொலை என்பது ஏழைகளுக்கு அடிமைகளுக்கு மட்டும் தான் ஆண்டைகள் நட்ட ஈடாக பணம் கொடுத்து கொல்லப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த அயோக்கியத்தனம் இன்றும் அல்லாவின் அனுமதி எனும் பெயரில் நடந்து கொண்டிருக்கிறது. இதை முன்வைத்து யாராருக்கு நட்டஈடு எவ்வளவு என்று அட்டவணையே போட்டு வைத்திருக்கிறார்கள். இதன்படி கொல்லப்பட்டது முஸ்லீமாக இருந்தால் 3,00,000 ரியால், முஸ்லிம் பெண்ணாக இருந்தால் 1,50,000 ரியால், கிருஸ்துவ, யூதனாக இருந்தால் 1,50,000 ரியால், கிருஸ்தவ, யூத பெண்ணாக இருந்தால் 75,000 ரியால் வேறு மதங்களைச் சார்தவராக இருந்தால் 6,666 ரியால், வேறு மதங்களைச் சார்ந்த பெண்ணாக இருந்தால் 3,333 ரியால். என்ன சொல்வது இதற்கு? இது சௌதிச் சட்டம் தாயன்றி இஸ்லாமியச் சட்டம் அல்ல என்று கூறுவோர் இரண்டு அம்சங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, இப்படி பேதம் பார்ப்பதை வசனம் 4:92ன் மூலம் தொடங்கி வைத்ததே குரான் தான். இரண்டு, இஸ்லாம் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை அங்கு அதிகாரத்தில் இருப்பது இஸ்லாம் தான்.

 

மனிதன் கணந்தோறும் அறிவியல் ரீதியாகவும், வரலாற்று அறிதல் ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பண்பாட்டு விழுமியங்கள் ரீதியாகவும், இன்னும் பலவாறாகவும் மாறிக் கொண்டே இருக்கிறான். எல்லாம் மாறும் உலகில் எல்லாக் காலத்தில் மாறாத ஒரே சட்டம் என்பது கருத்தியல் ரீதியாகவே பிழையானது. முஸ்லீம்கள் இஸ்லாமியச் சட்டமே எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது என்று கூறுவது, மதம் கொடுக்கும் அழுத்தத்திலிருந்து தானேயன்றி யதார்த்தத்தில் அதுவே பொருத்தமானதாக இருக்கிறது என்பதால் அல்ல. மதப் பரப்புரையாளர்கள் கொடுக்கும் திருகல் விளக்கங்களை கிள்ளை போல் புரியாமல் அப்படியே மீளச் சொல்வதை விடுத்து சற்றே சிந்தை செலுத்தினால் எக்காலத்துக்கும் பொருந்தும் சட்டம், எல்லோருக்கும் பொருந்தும் சட்டம் என்று சதா காலமும் கூறிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

8 thoughts on “அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

  1. எனது அருமை சொந்தங்களே இதையும் கொஞ்சம் படியுங்குள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

    43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்
    “இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை” என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.
    ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.
    குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.
    கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப்போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப்போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.
    இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய காரணம் என்ன?
    1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
    2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
    3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளா னவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மன நிறைவு அடைய வேண்டும்.
    குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.
    குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.
    ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.
    அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.
    குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?
    திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும் பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.
    சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.
    நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத் தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக் குள்ளேயே செய்து தரப்படுகின்றன.
    இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்ன வென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
    இந்தப் பெயரளவிலான தண்டனை யால் ஒரு பயனும் ஏற்படாது; ஏற்படவில்லை.
    53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!
    15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!
    என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.
    சிறைச் சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் “நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே” என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.
    மேலும் குற்றவாளிகள் சிறைச் சாலைகளில் கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர்.
    சிறைச் சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.
    ஆண்டு தோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது.
    மனிதாபிமானச் (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.
    பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மன நிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
    திருட்டுக் கொடுத்தவனிடம் போய் திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் “ஆறு மாதம் சோறு போடலாம்” எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் “பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும்” என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?
    கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
    பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது.
    ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையைக் கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
    கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
    இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.
    கண்ணை இழந்தவன் குற்ற வாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் இழப்பீட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.
    அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.
    அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.
    சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படா விட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளி யாகும் நிலைமையும் உருவாகும்.
    கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.
    இந்த நிலைமைக்கு என்ன காரணம்? “கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது” என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.
    இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.
    திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
    இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.
    மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.
    முதன் முதலாகத் திருட எண்ணுபவ னும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.
    கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறிகொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
    “இவர்கள் இங்கே இருக்கிறார்களா?” என்று திருடர்களின் புகைப் படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாள மாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.
    தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.
    “பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!” என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
    மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?
    நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத் தெருவில் நிறுத்திய அயோக்கிய னுக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.
    இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
    நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது; வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.
    உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன.
    கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.
    உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.
    இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும்.
    குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.
    திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.
    இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.
    மேலும் “எடுத்தேன்; கவிழ்த்தேன்” என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.
    மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 24:4, 24:13)
    இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.
    (இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4)

  2. நண்பர் பெரியகுளம் சாஹுல் ஹமீது,

    முதலில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையை படியுங்கள். அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி எதற்காவது நீங்கள் வெட்டி ஒட்டியிருக்கும் நீண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிலில் விளக்கம் இருக்கிறதா? இருந்தால் கூறுங்கள் பிறகு பேசலாம்.

  3. Shakul Hameed Periyakulam >> Superb reply. Lets start a revolution to implement “shariah criminal” law for muslimis only in India. Because we should more bother about others following m laws. we should immediately follow to keep Allah happy.

  4. இயற்றப்பட்ட சட்டங்களின் நோக்கத்தை அறியாமல் மனதில் தோன்றிய எண்ணங்களை பதிவிட்ட சகோதரி செங்கோடியே, முதலில் இஸ்லாமும் அதன் கோட்பாடுகளையும் படியுங்கள். தெரியாத விஷயங்களை எல்லாம் தெரிந்தது போல பதிவிட்டால் உங்கள் அறியாமை எல்லாருக்கும் தெரிந்து விடும்.

    நண்பர் சாஹுல் ஹமீது சொன்ன விளக்கத்தை ஆராயுங்கள். உங்களுடைய எல்லா கேள்விக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இன்னும் உங்களுக்கு விளக்கம் வேண்டும் என்றால், உங்கள் கேள்வியை பட்டியலிடுங்கள். பதில் அளிக்கப்படும்.

    இஸ்லாமிய கோட்பாடுகள் என்ற ஒரே காரணத்தினால் உண்மையை ஏற்க தயங்காதீர்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s