செங்கொடியல்ல இஸ்லமே கற்பனைகளின் களம் 19

விந்து குறித்த குரானின் விந்தைகள்

 எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 19073

மறுப்புக் கட்டுரை என்றால் எதை மறுக்கிறோமோ அதில் எழுதப்பட்டவைகளை உள்வாங்கி அதன் ஒட்டு மொத்த சாரத்தை மறுக்கும் நோக்கில் விபரங்களையும் விளக்கங்களையும் எடுத்து வைக்க வேண்டும். நண்பர் இஹ்சாஸின் பதிவை எடுத்துக் கொண்டால் மேற்குறிப்பிட்ட ஏதாவது இருக்கிறதா? இந்த நிலையில் அதையும் மறுத்து எழுத வேண்டும் என்றால் .. .. .. மெய்யாகவே மிகக் கடினமான ஒரு வேலை தான்.

 

குரான் வசனம் 86:7 ல் முரண்பாடான ஒரு செய்தியை பதிவு செய்திருந்தேன். குறிப்பிட்ட அந்த வசனம் முதுகந்தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து என்றிருக்கிறதா? முதுகந்தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து என்றிருக்கிறதா? சில மொழி பெயர்ப்புகளைப் பார்க்கலாம்.

 

between the backbone and the ribs: யூசுப் அலி

between the loins and ribs: பிக்தல்

between the loins and the breast-bones: அல் பெர்ரி

between the loins [of man] and the pelvic arch [of woman]: ஆஸாத்

முதுகந்த்ண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து: ஜான் டிரஸ்ட்

முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து: பிஜே

 

குறிப்பிட்ட அந்த வசனத்திற்கு இதுவரை மொழிபெயர்த்த பெரும்பாலானோர் முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து என மொழிபெயர்த்திருக்க, சிலர் முதுகந்தண்டுக்கும் மார்பெலும்புக்கும் இடையிலிருந்து என்று மொழிபெயர்த்திருக்க, இன்னும் ஒருவரோ பொதுவாக முதுகந்தண்டுக்கும் தனியாக ஆணுக்கு ஒரு இடத்திலும் பெண்ணுக்கு ஒரு இடத்திலிருந்தும் கடைசியாக வந்த பிஜே வின் மொழிபெயர்ப்போ முதுகந்தண்டுக்கும் முன்பகுதிக்கும் என்றிருக்கிறது. குரானில் இருக்கும் “பைனி இ சுல்பி வல் தரைபி” எனும் சொற்றொடருக்கு மெய்யாகவே என்னதான் பொருள்? முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் என்பதா? முதுகந்தண்டுக்கும் நெஞ்செலும்புக்கும் இடையில் என்பதா? முதுகந்தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையில் என்பதா? எது சரியான பொருள்? இருக்கும் சொல் ஒன்று கொள்ளும் பொருள் மூன்று என்றால் ஒன்று குரானின் அந்த வசனத்தில் பிழையிருக்க வேண்டும். அல்லது, இவர்கள் காலந்தோறும் மாற்றி மாற்றிக் கூறும் பொருளில் பிழை இருக்க வேண்டும். நண்பர் இஹ்சாஸ் இதில் எதை ஒப்புவார்?

 

கருத்து முதல் வாதம் என்பது இதைத்தான். இருக்கும் சொல் ஒன்றாக இருக்கும், காலந்தோறும் விரிவடையும் அறிவியல் நுட்பங்களுக்கு ஏற்ப அந்தச் சொல்லின் பொருளை மட்டும் மாற்றிக் கொண்டே செல்வார்கள். இது போன்று பொருள் மாறுதலுக்கு உள்ளான சொற்கள் குரானில் ஏராளம் இருக்கின்றன. அனைவருக்கும் தெரிந்த ஒரு எடுத்துக்காட்டு ‘அலக்’ இதை வைத்துக் கொண்டுதான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் அறிவியல் பேசியது என்று புளகமடைந்து கொள்கிறார்கள்.

 

முதகந்தண்டிற்கும் அதன் சுற்றுப்புற ஏரியாவில் ஒரு இடத்திலிருந்து என்று இன்னொரு மொழி பெயர்ப்பு வருவதற்கு முன் நாம் நம்முடைய விளக்கத்தை இன்னும் விளக்கமாக கூறிவிடுவோம். குதித்து வெளிப்படும் நீரினால் அவன் படைக்கப்பட்டான், அது முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. இது மிகத் தெளிவாக மனிதன் கருவாக உருவாவது குறித்து பேசுகிறது. மனிதன் கருவாக உருவாவதற்கு எது தேவையோ அது முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. இது தான் அந்த வசனம் கூற வருவது. பெண்ணின் சினை முட்டையுடன் இணைந்து கருவை உருவாக்க வல்ல விந்து எங்கிருந்து வெளிப்படுகிறது? விரையில் உற்பத்தியாகி செமினல் வெஸிக்கிள்ஸ், புரோஸ்டேட் ஆகிய இரண்டு சுரப்பிகளில் உற்பத்தியாகும் சுரப்புகளையும் இணைத்துக் கொண்டு சுரப்பிகளின் இடத்திலிருந்து சற்று மேலேறியிருக்கும் குழாய் வழியே ஆணுறுப்பிலிருந்து வெளியாகிறது. இது தான் விந்தின் பாதை. இந்த அறிவியல் விளக்கம் குரானில் இருக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் விந்து உருவாகும் விரைகள் குறித்தோ அதனுடன் கலக்கும் துணைத் திரவங்கள் குறித்தோ எதுவும் கூறாத குரான், தண்டுவடத்தை ஒட்டிய ஒரு இடத்திலிருந்து வெளிப்படுகிறது என்று கூறினால் அது எப்படி அறிவியல் கண்டுபிடிப்பாகும்? இதற்கு மதவாதிகளின் விளக்கம் தான் அது வரும் குழாய் தண்டுவடத்தை ஒட்டிச் செல்கிறது என்பது. இது போதாதா மதவாதிகள் புழகமடைவதற்கு? ஆனால் நாம் அப்படி புல்லரிக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர் இல்லையே. ஒரு எடுத்துக்காட்டு கூறலாம், ஒரு பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரம் திருச்சி வழியாக மதுரைக்கு செல்கிறது என்று கொள்வோம். அந்தப் பேருந்து விழுப்புரத்திலும், திருச்சியிலும் நின்று ஆட்களை ஏற்றிக் கொண்டு மதுரை வருகிறது. ஆனால், அந்தப் பேருந்து திண்டிவனத்தில் நிற்கவும் இல்லை ஆட்களை ஏற்றவும் இல்லை. இந்த நிலையில் அந்தப் பேருந்து திண்டிவனத்திலிருந்து வருகிறது என்று கூறினால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்குமோ அந்த அளவுக்குத்தான் மேற்கண்ட வசனமும் இருக்கிறது. யார் எந்த அளவுக்கு புல்லரித்துக் கொள்ள வேண்டுமோ அந்த அளவுக்கு புல்லரித்து சொரிந்து கொள்க.

 

இதே விந்து குறித்து குரான் குறிப்பிடும் இன்னொரு விந்தை தகவலையும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். கலப்பு இந்திரியத் துளியிலிருந்து மனிதனைப் படைத்தோம் என்பது குரானின் அந்த மற்றொரு வசனம். கலப்பு இந்திரியத் துளி என்பதற்கு குரான் “நுஃப்ததின் அம்ஷாஜின்” எனும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறது. இது நண்பர் இஹ்சாஸ் குறிப்பிடும் சீனிக் கரைசலுக்கு பொருந்துமா? அப்படிக் கூறமுடியுமா? கலப்பு இந்திரியத் துளி என்றால் ஆணுக்கு வெளிப்படும் விந்துத்துளியும் பெண்ணுக்கு வெளிப்படு உயவுத் துளியும் கலந்தது என்று தான் பொருள் கொள்ள முடியும். அப்படிக் கொள்வதற்குத் தான் அந்த வசனத்தில் இடமிருக்கிறது. மாறாக அதற்கு உயிரணுவும், சினை முட்டையும் எனும் பொருளை அந்த வசனத்திலிருந்து எப்படி வந்தடைந்தார் என்று நண்பர் இஹ்சாஸோ, அதற்கு பொழிப்புரை எழுதிய வசனகர்த்தாக்களோ விளக்குவார்களா? துளி எனும் சொல் நீர்த்த நிலையிலிருக்கும் திரவப் பொருட்களைத்தான் குறிக்கும். தவிரவும், பெண்களுக்கு வெளிப்படும் திரவம் உயவுத் திரவம் என்பது முகம்மதுவுக்கு தெரியாது என்பதோடு மட்டுமல்லாது, அந்தத்திரவம் குழந்தை பிறப்பில் பங்கு வகிக்கிறது என்று முகம்மது கூறிய ஹதீஸும் இருக்கிறது.

sperm5 

.. .. .. உம்மு ஸலமா பெண்களுக்கு ஸ்கலிதம் ஏற்படுமா என்று கேட்டதற்கு நபி அவர்கள், நண்றாக கேட்டாய்! ஆம், அப்படி இல்லையென்றால் அவர்களுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது? என்று கேட்டார்கள் என ஸைனப் பிந்த் உம்மு ஸலாமா அறிவித்தார். புஹாரி 130

 

முகம்மது கூறிய மேற்கண்ட ஹதீஸின் செய்திக்கும், குரானின் அந்த வசனத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லையா? அந்த நேரத்தின் அறிதலின் படி முகம்மது கூறிய அந்த தவறான செய்தியே அவர் கூறிய குரானிலும் பிரதிபலித்திருக்கிறது. பின் எந்த விதத்தில் இவர்கள் உயிரணு, சினை முட்டை என்று சகட்டு மேனிக்கு பொருள் கொள்கிறர்கள்? குரானில் அறிவியல், புவியியல், வரலாறு, மாங்காத்தொலி, தேங்காமட்டை எல்லாம் இருக்கிறது என்று கூறுவதற்கு முன் கொஞ்சமேனும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா? 

குரானில் ஒரு சொல் கூட மாறாது என்று ஜல்லியடித்துக் கொண்டே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்த்ச் சொல்லின் அர்த்தத்தை மாற்றிக் கொண்டு திரிகிறார்கள். மத போதையில் நனைந்து ஜல்லி கண்டு நடுங்கிக் கொண்டிருப்பவர்களால் உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியாது. அறிவியலின் வெயிலில் தங்களை காய வைத்துக் கொள்வோர் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். நண்பர் இஹ்சாஸும் அவ்வாறு தன்னை வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல அல்லா(!)விடம் துஆ செய்வோம். வேறு என்ன செய்வது .. .. ..?

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 1

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 2

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 3

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 4

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 5

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 14

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 15

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 16

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 17

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 18

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

5 பதில்கள்

  1. குரானில் அறிவியல், புவியியல், வரலாறு, மாங்காத்தொலி, தேங்காமட்டை எல்லாம் இருக்கிறது என்று கூறுவதற்கு முன் கொஞ்சமேனும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா?

    ஹா ஹா ஹா ஹா

  2. அட போங்க செங்கொடி எவ்வளவு சொன்னாலும் இவங்க சிந்திக்கிற மாதிரியும் தெரியல!
    அல்லாஹ்வும் சிந்திக்க விடாம ஈமாந்தாரியா இவர்களை சாகும் வரை வெச்சிருப்பான் போல தெரியுது!
    இஹ்சாஸ்,இப்ராகிம் போன்ற மர மண்டைகளுக்கு சிந்தனையாவது, மண்ணாங்கட்டியாவது!
    இன்னைக்கும் இஸ்ரேலுக்கும்,இந்தியாவுக்கும் சண்டை வந்தால் அடிமைகளை கற்பழிப்பதுதான் நபி வழி என்று பகிரங்கமாக கூறும் இவர்களின் கருத்துக்களை முதலில் கழுவேற்றவேண்டும்!
    இதைபோன்ற கிருமிகளை சமுதாயத்தில் பரவவிடக்கூடாது!
    இந்த லட்சணத்தில் நீங்கள் வேறு இவர்களிடம் அறிவியலை பற்றி மறுப்புக்கு மறுப்பு கூறி தாவா பண்ணி வருகிறீர்கள்! உங்க பொறுமய பாராட்டுகிறேன் !
    இந்த புண்ணாக்குகளுக்கு அறிவியல் ஒரு கேடா?

  3. இருங்க பாஸ் விரைவில் பி ஜே இணைப்பை கொடுத்து ஹோம் வொர்க் செய்ய சொல்வார்கள் அல்லது நேரில் விவாதிக்க தைரியம் இருக்க என மறைமுக மிரட்டல் விடுபபர்கள் செம காமெடி

  4. //காலந்தோறும் விரிவடையும் அறிவியல் நுட்பங்களுக்கு ஏற்ப அந்தச் சொல்லின் பொருளை மட்டும் மாற்றிக் கொண்டே செல்வார்கள். //

    நாசாவிடமிருந்து 2013ல் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிப்போம்னு அறிவிப்பு வந்திருக்கு. கண்ண்டுபிடிச்சவுடன் பாருங்க நம்ம இஸ்லாமிய நண்பர்களை, இதும் குரான்ல அல்லா சொல்லிடார்னு விடுவாங்க. “வானத்துல உள்ளாவற்றை நாமே படைத்தோம்” என்கிற குரானை எடுத்து கொஞ்சம் பிராக்கெட் சேர்த்து, இதாண்ணே அதுன்னு, அதுதாண்ணே இதுன்னு.

    எதுக்கும் நீங்களும் கொஞ்சம் ரெடியா இருங்க பதில் சொல்ல.

  5. நம்ம தவ்ஹீத் அண்ணன் பிஜே அவர்களது இணையப்பக்கத்தில் அடிக்கடி நபிவழியில் செல்லும் உலகம். இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள் என்று தலைப்பில்,
    அதேபோல இன்னும் நிறைய நிகழ்வுகளை நம்ம தவ்ஹீத் அண்ணன் கண்டுகொள்ளவில்லை என்பதால், அந்த நிகழ்வுகளையும் போட்டு, எவ்வாறு நம்ம காககககே வழியில் உலகம் செல்லுகிறது என்பதை அறிந்து நாமும் புல்லரிப்போம்.

    பார்ப்போம்பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்

    இந்த பதிவில் எப்படி போர் காலத்திலும் மற்ற காலத்திலும் பெண்களை கற்பழிப்பது என்று நமது காககககே நெஞ்சம் *ஞ்சம் நெகிழும் வண்ணம் எடுத்துரைத்திருக்கிறார்கள் என்று படித்து இறும்பூது எய்துகிறோம்.

    நமது ஈமாந்தாரிகள் போர் புரியும் சிரியா நாட்டில் (போற்றுதலுக்குறிய ஷாம் நாடு என்று நமது ஹதீஸ்களில் அடிக்கடி வரும்)

    Refugees Are Fleeing Mass Rapes In Syria என்ற செய்தியில் நமது ஈமாந்தாரிகள் (இது ஷியா வகையறா) எப்படி சுன்னி பெண்களை (கன்பூஸ் ஆகாண்டாம். சுன்னி என்பது இஸ்லாத்தில் ஒரு வகை) நபி வழியில் உட்டு ஆட்டுகிறார்கள் என்று அறிந்து புல்லரிக்கலாம்.

    http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-syria-refugees-rape-20130114,0,7106644.story
    http://www.npr.org/blogs/thetwo-way/2013/01/14/169353702/report-rape-in-syria-is-driving-women-to-leave
    http://www.newser.com/story/160924/rape-a-weapon-of-war-in-syria.html
    http://www.onislam.net/english/news/middle-east/460889-syrians-flee-rape-sell-bodies-for-food.html

    இவ்வாறு போர்க்காலத்தில் சுன்னி பொண்ணுங்களை ஷியாக்கள் கற்பழிப்பது நபி வழி இன்னும் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது என்பதற்கான நிகழ்கால நிரூபணமாக இருக்கிறது அல்லவா?

    இவ்வாறு நபி வழியில் சுன்னி பெண்களை உட்டு ஆட்டும் ஈமாந்தாரிகளுக்கு பயந்து அங்கிருந்து சுன்னி பெண்கள் சிரியாவை விட்டு ஓடுகிறார்களாம். இப்படி ஓடும் பெண்கள் முஸ்லிமாக்களா இல்லை காபிர்களா என்று எனக்கே அவமானமாக போய்விட்டது.

    ஒரு சில காபிர்களும், ஒரு சில ஈமாந்தாரிகளும் கூட சேர்ந்துகொண்டு இந்த கற்பழிப்புகளை தவறு என்று கூறுகிறார்கள். மீண்டும் நாம் நபி வழி சிந்தனையை நினைவு படுத்துகொள்வோம். சீ.. அழகிய போட உட்டுடிச்சி.. மீண்டும் நாம் அழகிய நபிவழி நெஞ்சம் நெகிழும் சிந்தனையை நினைவு படுத்திக்கொள்வோம்.

    ”நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.[புகாரி]

    ”அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

    ”இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

    உட்டு ஆட்டு கண்ணா ஆட்டு என்றுதானே ஈமாந்தாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்?

    ஆகவே அந்த நபி வழியில் நாம் இந்த கற்பழிப்புகளை எப்படி நியாயப்படுத்தவேண்டும் என்று பார்க்கவேண்டுமே தவிர, நமது ஈமாந்தாரிகளின் நபிவழிச் செயல்களை அவமரியாதை செய்வது கூடாதுகாககககேவின் அருளாலும் பெட்ரோலியத்தின் அருளாலும், அம்ரீக்காவின் அருளாலும் பணம் கொழுத்துப்போன அரபு ஷேக்குகள் அஞ்சு லட்சத்துக்கு அஞ்சு அஞ்சு வயசு பொண்ணுங்களை அதிகாரப்பூர்வமாக மெஹர் விலை கொடுத்து மனைவி என்ற அடிமையாக வாங்க வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அப்பப்போ 90 வயசு கிழங்களிடமிருந்து 15 வயசு பொண்ணுங்கள் தப்பிப்பதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு ஈமான் இல்லாத 15 வயசு பொண்னுங்கள் ஈமானை பெற்றுகொண்டு, மீண்டும் 90 வயசுகிழங்களுக்கு சேவகம் செய்யவும் அவர்களது பாலுறவு தேவைகளை பூர்த்தி செய்யவும் துவா செய்குவோம். இந்த 90 வயசு கிழங்கள் அந்த 15 வயசு பொண்னுங்களை பாலுறவுக்கு கூப்பிடும்போது வராவிட்டால், மலக்குகள் அந்த வீட்டுக்கு 5000 ஒளிவருட தொலைவிலிருந்து வந்து அந்த அரபு ஷேக்கின் படுக்கறையில் உட்கார்ந்துகொண்டு, அந்த 15 வயசு பொண்ணுங்களை சபிப்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

    இவ்வாறு பெண்களை பாலுறவு பலாத்காரம் செய்வதும், சின்ன பொண்ணுங்களை 90 வயசு கிழங்கள் நிக்காஹ் செய்வதும், மெஹர் குடுத்து அமுக்குவதும் நபிவழியில் இன்னும் தொடர்கின்றன என்பது நபி வழி செய்திகளை உண்மைப்படுத்தும் நிகழ்கால நாட்டு நடப்புகளாக இருக்கின்றன என்பதை அறிந்து பரவும் நபி வழி சிந்தனையை போற்றி பரப்புவோம்.
    ஆ அல்லாஹ் ஊ அல்லாஹ்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: