அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 3. சொத்துரிமை சட்டம்

skd285203sdc

சொத்துரிமை எனும் சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் பெரும்பாலும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. தனியுடமையின் பொருளை உணர்த்துவதற்கு உதவும் மிகத் துல்லியமான சொல் சொத்துரிமை. தான் அனுபவிக்கும் உடமையின் வசதிகளை தனக்குப் பின் தன்னுடைய வாரிசுகளுக்கு கடத்துவது தான் சொத்துரிமை. ஆனால் வாரிசு என்பது யார்? எந்த அடிப்படையில் அவர்களுக்கு கடத்துவது என்பதற்கு உலகின் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் மரபு சார்ந்து வெவ்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை தொடங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சார விழுமியங்கள் வரை அனைத்தும் சேர்ந்தே அந்த வழிமுறைகளை தீர்மானிக்கிறது. இதில் எந்த வழிமுறை சரியானது என்பதை தீர்மானிப்பதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா? அப்படி ஏதேனும் இருந்தாலும் ஒரு சமுதாயத்திற்குள் இருக்கும் வேறுபட்ட நடைமுறைகளில் எது சரியானது என்பதை தீர்மானிப்பதற்கு வேண்டுமானால் உதவலாம். மாறாக ஒரு சமுதாயத்தின் நடைமுறைகளை அது தான் ஒட்டு மொத்த மனித இனத்துக்கும் சரியானது பின்பற்றப்பட வேண்டியது என்று கூறினால் அது திணிப்பாகத் தானே இருக்க முடியும்.

 

சொத்துரிமை குறித்து குரான் கூறுவது என்ன?

 

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும்.. ..பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு மூன்றிலிரண்டு பாகம். ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதி. இறந்தவருக்கு குழந்தைஇருந்தால் பெற்றொருக்கு ஆறில் ஒரு பாகம், குழந்தை இல்லாதிருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று மீதம் தந்தைக்கு .. .. குரான் 4:11

 

.. ..மனைவியர் விட்டுச் சென்றதில் பிள்ளை இல்லையென்றால் கணவனுக்குப் பாதி, இருந்தால் கால் பங்கு. கணவன் விட்டுச் சென்றதில் பிள்ளை இல்லையென்றால் மனைவிக்கு கால் பங்கு, பிள்ளை இருந்தால் எட்டில் ஒரு பங்கு. முன் பின் வாரிசுகள் இல்லாதவர்களுக்கு சகோதரன் அல்லது சகோதரி இருந்தால் இருவருக்கும் தனித்தனியாக ஆறில் ஒரு பாகம். மேற்பட்டால் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தை சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும். .. .. குரான் 4:12

 

இப்படிப் போகிறது குரானின் பங்கு பிரித்தல்கள். இவற்றிலிருந்து இரண்டு அம்சங்களை நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஒன்று, சேர்த்த சொத்துகள் பிரிதொரு குலத்தவருக்குச் சென்று விடாமல் சொந்தக் குடும்பத்தவர்களுக்குள்ளே பிரித்துக் கொள்ள வேண்டும் எனும் முனைப்பு. மற்றெல்லா உறவுகளைக் காட்டிலும் முதன்மையான உறவாக இருந்தும் மனைவி எனும் உறவுக்கு பிற உறவுகளைக் காட்டிலும் குறைவாக பங்கு பிரித்திருப்பது. பொதுவாகவே குரான் ஆணாதிக்கப் பார்வையுடன் எல்லாவற்றிலும் ஆணுக்குக் கீழாகவே பெண்ணை மதிக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

 

ஒருவனின் சொத்துகளை அவன் உறவினர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுப்பது என்பது அரேபியாவின் சொத்துரிமை வடிவம். முகம்மது வாழ்ந்த காலம் ஆண்டான் அடிமை காலகட்டம். அடிமைகள் ஆண்டைகள் மட்டுமல்லாது நாடோடிகளாக வாழ்ந்த மக்களும் அங்கு இருந்தனர். அதாவது புராதன பொதுவுடமையில் தனிப்பட்ட சொத்துகள் என்று எதுவும் இல்லாமல் அனைத்தயும் பயன்படுத்திக் கொள்ளும் வடிவத்தில் இன்னமும் மீதமிருந்த நாடோடிகள், ஆண்டைகளாகவும் வணிகர்களாகவும் உயர்ந்து வரும் நகர்ப்புரத்து அரேபியர்கள். இந்த இரண்டையும் கலந்த வடிவமாகத்தான் அனைத்து உறவினர்களுக்கு சொத்தை பகிர்ந்தளிப்பது எனும் வடிவம் அரேபியாவில் இருந்திருக்கிறது. ஆனால் இது போன்ற வடிவம் இந்தியா போன்ற நாடுகளில் இல்லை. ஒருவனின் சொத்தை மகன்களுக்கு மட்டுமே பிரித்துக் கொடுக்கும் வடிவமே இருந்து வருகிறது, ஏனைய உறவுகளுக்கு கொடுப்பதில்லை. அதனால் தான் அல்லா என்னுடைய வரம்புகளை மீறுபவர்களுக்காகவே நரகத்தை சித்தப்படுத்தி வைத்திருக்கிறேன் என்று ஹைபிட்சில் பயங்காட்டியும் இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் அதை பொருட்படுத்தாமல் இந்திய வடிவத்தையே பின்பற்றி வருகிறார்கள். அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் எல்லாருக்கும் பொருந்தமானது என்று எந்த முஸ்லீம்கள் கூறுகிறார்களோ அந்த முஸ்லீம்களே நடைமுறையில் இஸ்லாமியச் சட்டங்கள் பொருத்தமில்லாதது என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

எல்லாவற்றையும் அறிந்தவராக பீற்றிக் கொள்ளும் அல்லாவுக்கு தனிச் சொத்துடமை இல்லாத மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்பது வேடிக்கை தானே. மலைவாழ் மக்கள், சில பழங்குடிகளிடையே இன்னும் தனிச் சொத்துடமை வேரூன்றவில்லை. அவர்களும் நிலத்தை பண்படுத்தி உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள் என்றாலும் அதை தங்களுடைய சொத்தாக அவர்கள் கருதுவதில்லை, தனித்தனி குடிசைகளில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தனிப்பட்ட சொத்து என்பது அறிமுகமாகவில்லை. இவர்களுக்கு அல்லா கூறும் சட்டங்கள் பொருந்துமா?

wealth in quran 

தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியில் மருமக்கள் வழி மான்மியம் என்றொரு சொத்துடமை வடிவம் இருந்தது. அதை கடைப்பிடித்த மக்கள் தங்கள் சொத்துக்களை மருமகன்களுக்கே கொடுத்து வந்தனர். அது அவர்களுக்கு அநீதியாகவோ சொந்த மகன்களை புறக்கணிக்கும் விசயமாகவோ பார்க்கவில்லை. சரியானது என்றெண்ணியே கொடுத்து வந்திருப்பார்கள். இதன் காரணம் என்னவென்றால் அவர்களின் பண்பாட்டு வழிகளில் மரபை பின்பற்றி யார் தம் சொத்துகளுக்கு வாரிசு என்று முடிவு செய்கிறார்களோ அவர்களுக்கு சொத்துகளைக் கடத்துகிறார்கள். இந்த அடிப்படையில் தான் அரேபியர்கள் தங்களின் பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு சொத்துடமை வடிவத்தைக் கொண்டிருந்தார்கள். இது தான் உலகம் முழுமைக்கும் உள்ள மக்களுக்கு பொதுவானது நீதியானது என்று கூறுவதற்கான அடிப்படை அதில் ஏதும் இருக்கிறதா?

 

ஆனால் மனித குல முன்னேற்றம் எனும் அடிப்படையில் தனிச் சொத்துடமை என்பது அநீதியானது. தனிச் சொத்துடமையில் எல்லைகள் விரிந்து கொண்டே சென்றது தான் இன்று மனிதன் சந்திக்கும் இன்னல்கள், இடையூறுகள் பெரும்பாலானவற்றுக்கு காரணமாய் அமைந்திருக்கிறது. இது குறித்து அல்லா ஏதும் அறிந்திருக்கிறாரா? அல்லது அறிவித்திருக்கிறாரா?

 

அரேபியாவின் சொத்துடமை வடிவத்தை உலகம் முழுதுக்குமாக பரிந்துரை செய்துவிட்டு, இதில் தான் உங்களுக்கு வாழ்வு இருக்கிறது என்று கூறும் அல்லாவுக்கு, அது எந்த அடிப்படையில் சரியானது என்று ஏன் கூற முடியவில்லை? இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. இயங்கியல் வரலாற்றியலின்படி மாறி மாறி வந்திருக்கும் கால்கட்டங்கள் அனைத்துக்கும் பொதுவான சொத்துடமை வடிவம் என்று எதுவும் இருக்க முடியாது. இரண்டு, அல்லா என்பது மதவாதிகள் புளகமடைவது போல் எல்லாம் தெரிந்த சுயம்புவல்ல, அது கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரே. அவருக்கு அவர் வாழ்ந்த காலத்தை தாண்டி சிந்திப்பது ஒற்றும் சாத்தியமானதாக இருக்க முடியாது.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

23 thoughts on “அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 3. சொத்துரிமை சட்டம்

 1. ஒரு நண்பர் இந்தப் பதிவின் சுட்டியை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

  மிக அருமையாக ‘சேம் சைட் கோல்’ போட்டிருக்கிறீர்கள்.

  // இயங்கியல் வரலாற்றியலின்படி மாறி மாறி வந்திருக்கும் கால்கட்டங்கள் அனைத்துக்கும் பொதுவான சொத்துடமை வடிவம் என்று எதுவும் இருக்க முடியாது.//

  அப்படி என்றால் மார்க்ஸிய பொதுவுடமைத் தத்துவம் கூட இக்காலத்திற்குப் பொருந்தாத, காலாவதியாகிப் போன கொள்கை.. அப்படித்தானே?

  // இரண்டு, அல்லா என்பது மதவாதிகள் புளகமடைவது போல் எல்லாம் தெரிந்த சுயம்புவல்ல, அது கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரே. அவருக்கு அவர் வாழ்ந்த காலத்தை தாண்டி சிந்திப்பது ஒற்றும் சாத்தியமானதாக இருக்க முடியாது.//

  கார்ல் மார்க்ஸை ‘எல்லாம் தெரிந்த சுயம்பு’ எனச் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். பிறகு எப்படி “உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வாக” இருக்க முடியும்?

 2. நண்பர் சலாஹுத்தீன்,

  ‘சேம் சைட் கோல்’ எனும் கண்டுபிடிப்பை செய்வதற்கு முன்னால் மார்க்சியம் என்றால் என்ன என்பது குறித்த அடிப்படை புரிதலையாவது பெற்றிருந்தீர்கள் என்றால் உங்கள் பின்னூட்டத்திற்கு தேவையே இருந்திருக்காது.

  எதிர்க்கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும் கட்டுரையில் விவாதிக்கப்பட்டிருப்பவை குறித்து உங்கள் கருத்து என்ன? அது குறித்து விவாதித்தால் தொடர்ந்து நாம் உரையாட வசதியாக இருக்கும்.

 3. நண்பர் செங்கொடி,

  இஸ்லாம் குறித்த அடிப்படை புரிதல்களை நீங்கள் பெற்றிருந்தீர்களென்றால் உங்களின் இத்தனை பதிவுகளுக்கும் தேவையில்லாமல் போயிருந்திருக்கும்.

  நமது முந்தைய உரையாடல் எந்த காரணத்தால் பாதியில் நின்றது என்பதை என்பதை சற்று நினைவுகூரவும்.

  இந்தக் கட்டுரை மட்டுமல்ல, இஸ்லாம் குறித்த உங்களின் எல்லாக் கட்டுரைகளுக்கும் என்னைப் போன்ற சாதாரண முஸ்லிம்களாலேயே பதில் சொல்ல முடியும், இன்ஷா அல்லாஹ். ஆனால் அதை படித்துப் புரிந்துக் கொள்ளும் மனநிலையில் தாங்கள் இல்லை என்பதைத்தான் நமது முந்தைய உரையாடல் வெளிப்படுத்தியது.

  எனவேதான், நீங்கள் ‘நன்றாக அறிந்திருக்கும்’ மார்க்சியம் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் என் எதிர் கேள்விகள்.

  உங்கள் பார்வையில் இஸ்லாம் எங்கெல்லாம் சறுக்குகிறதோ, அங்கெல்லாம் மார்க்சியம் என்ன விதமான தீர்வுகளை முன்வைக்கிறது என்பதைப் பற்றி நீங்களே உங்கள் கட்டுரைகளில் ஓரிரண்டு பத்திகள் சேர்த்திருந்தீர்களென்றால் என் எதிர் கேள்விகளுக்கும் தேவையேற்படாமல் போயிருந்திருக்கும்.

 4. ஓ! நீங்க அந்த சலஹுத்தீனா? வணக்கம் சலாஹுத்தீன் நலமா? கண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே.

  இஸ்லாம் அல்லது மார்க்சியத்தின் அல்லது ஏதோ ஒரு கொள்கையின் அடிப்படை புரிதல்கள் என்றால் என்ன? அந்த கொள்கை குறித்து அது என்னவிதமான இயங்கியல்களை கொண்டிருக்கிறது, அதன் தாக்கங்கள் எதிர்வினைகள் என்ன போன்றவைகளை அறிந்து கொள்வது. அந்த கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் என்ன மாதிரியான நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்களோ அவை அடிப்படை புரிதலில் வராது. ஆனால் இஸ்லாம் குறித்த அடிப்படை புரிதலாக நீங்கள் கூறுவது, இஸ்லாமியர்கள் என்னமாதிரியான நம்பிக்கைகள் கொண்டிருக்கிறார்களோ – அது மூடநம்பிக்கை என்றாலும் – அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் அடிப்படை புரிதல் என்று அடம்பிடிக்கிறீகள். எனக்கு இஸ்லாம் குறித்த அடிப்படை புரிதல்கள் இல்லை என்றால் இஸ்லம் குறித்த அந்த தொடரை என்னால் எழுதியிருக்கவே முடியாது. அல்லது இன்னின்ன விதத்தில் அதில் நான் தவறாக எழுதியிருக்கிறேன் என்று சுட்டிக் காட்ட முடியுமா? அப்படி புரிந்து கொள்ளக் கூடாதுஇப்படி புரிந்து கொள்ளக்கூடாது என்று மதவாத விளக்கங்களைத்தான் உங்களைப் போன்றோரால் கூறமுடியுமே அன்றி; அந்த தொடரில் இஸ்லத்தின் இந்த அடிப்படைப் புரிதலுக்கு இது மாற்றமாக இருக்கிற்து என்று ஒரு போதும் எந்த இஸ்லாமியர்களாலும் எதையும் கூறமுடியாது. உங்களின் பிற்ழ்தலான இந்த புரிதலுக்கு சான்றாக நாம் ஏற்கனவே நடத்திய விவாதம் இன்னும் நூலகம் பகுதியில் இருக்கிறது. யாரும் எளிதில் தரவிறக்கி படித்துக் கொள்ள முடியும். பின்னர் நோவாவின் கப்பல் குறித்த விவாதமும் அது குறித்த கட்டுரையில் இருக்கிறது யாரும் ப்டித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

  இஸ்லாம் குறித்த இந்தத் தொடர் இஸ்லத்தின் மீதான விமர்சனமாக எழுதப்ப்ட்டுக் கொண்டிருக்கிறது. தன் ஒவ்வொரு கட்டுரையிலும் மர்க்சிய தீர்வு குறித்து எழுதியிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனாலும் உரிய இடங்களில் அது வெளிப்பட்டே இருக்கிறது. ஏனென்றால் எங்களின் பார்வையே அது தான். இந்தக் கட்டுரையில் \\\மனித குல முன்னேற்றம் எனும் அடிப்படையில் தனிச் சொத்துடமை என்பது அநீதியானது. தனிச் சொத்துடமையில் எல்லைகள் விரிந்து கொண்டே சென்றது தான் இன்று மனிதன் சந்திக்கும் இன்னல்கள், இடையூறுகள் பெரும்பாலானவற்றுக்கு காரணமாய் அமைந்திருக்கிறது/// என்று குறிப்பிடப்பட்டிருக்கிற்தே கவனிக்கவில்லையா? மேலதிக விளக்கங்கள் வேண்டுமென்றால் கேளுங்கள் தரப்படும்.

 5. நண்பர் செங்கொடி,

  என்னை இன்னும் நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி!

  //இஸ்லாம் அல்லது மார்க்சியத்தின் அல்லது ஏதோ ஒரு கொள்கையின் அடிப்படை புரிதல்கள் என்றால் என்ன? அந்த கொள்கை குறித்து அது என்னவிதமான இயங்கியல்களை கொண்டிருக்கிறது, அதன் தாக்கங்கள் எதிர்வினைகள் என்ன போன்றவைகளை அறிந்து கொள்வது. அந்த கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் என்ன மாதிரியான நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்களோ அவை அடிப்படை புரிதலில் வராது. ஆனால் இஸ்லாம் குறித்த அடிப்படை புரிதலாக நீங்கள் கூறுவது, இஸ்லாமியர்கள் என்னமாதிரியான நம்பிக்கைகள் கொண்டிருக்கிறார்களோ – அது மூடநம்பிக்கை என்றாலும் – அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் அடிப்படை புரிதல் என்று அடம்பிடிக்கிறீகள். //

  நண்பரே! பாலைப் பற்றி பேசுவதென்றால் முதலில் ‘அது பால்’ என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். பிறகு வேண்டுமானால் ‘அதன் நிறம் எனக்கு பிடிக்கவில்லை, அதன் சுவை பிடிக்கவில்லை’ என உங்கள் விமரிசனங்களை வைக்கலாம். ஆனால் நீங்களோ பாலை தக்காளி ஜூஸ் என உருவகம் செய்து கொண்டு அதை விமரிசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  //அல்லா என்பது மதவாதிகள் புளகமடைவது போல் எல்லாம் தெரிந்த சுயம்புவல்ல, அது கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரே. //

  மேற்கண்ட வாக்கியத்தின் மூலம் நீங்கள் சொல்ல வருவது ‘குர்ஆனை நபி (ஸல்) அவர்கள்தான் இயற்றினார்’ என்பது. இஸ்லாத்தைப் பற்றிய மிக மிக தட்டையான புரிதல் இது.

  குர்ஆனை நபி (ஸல்) அவர்களோ வேறு எந்த மனிதரோ எழுதியிருக்க முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

  இருந்தும் நீங்கள் மேற்கண்டவாறு நம்பிக் கொண்டிருப்பதற்குக் காரணம் ஒன்று நீங்கள் இந்த உண்மையை அறிந்திருக்கவில்லை. அல்லது இதைத் தெரிந்திருந்தும் இதை மறுக்கிறீர்கள்.

  முதலாவது காரணமென்றால், அதை சரியாக முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். இரண்டாவதுதான் காரணமென்றால், குர்ஆனைப் பற்றிய முஸ்லிம்களின் நம்பிக்கை எப்படி தவறு என்பதை ஆதாரங்களுடன் விளக்குங்கள்.

  நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் குர்ஆனை தாம் இயற்றியதாகச் சொன்னதேயில்லை. அவர் சொல்லாத ஒன்றை நீங்கள் அவர் மேல் சுமத்துகிறீர்கள். உங்கள் கருத்தில் நீங்கள் உறுதியாக இருந்தால் அதற்கான ஆதாரங்களை எடுத்து வையுங்கள்.

  நான் சுட்டிக் காட்டியிருப்பது இஸ்லாத்தின் ஆணிவேர். அதை மட்டும் வெட்டிவிட்டீர்களென்றால் மற்ற எல்லா நம்பிக்கைகளும் தவிடுபொடியாகிவிடும். எங்கே, செய்யுங்கள் பார்ப்போம்..!!!

  அடிப்படையான இந்த விஷயத்தை விட்டுவிட்டு நீங்கள் ஆயிரம் கட்டுரைகள் எழுதினாலும் அது படு ‘வீக்’கான பேஸ்மென்டை வைத்துக் கொண்டு அதற்குமேல் கற்பனைக் கோட்டைகள் கட்டுவதைப் போன்றது.

  எனவேதான் சொல்கிறேன், நான் அறிந்திராத, நீங்கள் ‘நன்கு அறிந்திருக்கும்’ மார்க்சியத்தைப் பற்றி நாம் உரையாடுவோம். தெரியாத நான் கேள்வி கேட்கிறேன், தெரிந்த நீங்கள் பதில் சொல்லுங்கள்.

  கேள்வி 1: இயங்கியல் வரலாற்றியலின்படி மாறி மாறி வந்திருக்கும் கால்கட்டங்கள் அனைத்துக்கும் பொதுவான சொத்துடமை வடிவம் என்று எதுவும் இருக்க முடியாது என்றால் மார்க்ஸிய பொதுவுடைமைத் தத்துவம் இக்காலத்திற்குப் பொருந்தாத, காலாவதியாகிப் போன கொள்கை என்பது சரிதானே?

  கேள்வி 2: 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ் ‘எல்லாம் தெரிந்த சுயம்பு’ அல்ல. பிறகு எப்படி கார்ல் மார்க்ஸின் கற்பனையில் உதித்த மார்க்சியம் “உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு ஒரே தீர்வாக” இருக்க முடியும்? அவருக்கு அவர் வாழ்ந்த காலத்தை தாண்டி சிந்திப்பது எப்படி சாத்தியமானதாகும்?

 6. நண்பர் சலாஹுத்தீன்,

  அடுத்த சுற்றுக்கு ஆயத்தமாகி விட்டீர்கள் போலிருக்கிறது.

  இஸ்லாம் எனும் கொள்கை உலக மக்களுக்கு என்ன கூறுகிறது, என்னவிதமான வாழ்முறையைக் கற்பிக்கிறது, என்ன செய்யத் தூண்டுகிறது, என்ன தீர்வைப் பரிந்துரைக்கிறது போன்றவைகளை அறிந்து கொண்டிருப்பது தான் அடிப்படை புரிதல். மிகைத்த கடவுள், கடைசித் தூதர், அவருக்கு வஹீ இத்யாதி, இத்யாதி .. .. .. உங்கள் நம்பிக்கைகள். இதை நானும் அப்படியே ஏற்க வேண்டுமென்று அவசியமில்லை. குறிப்பாக பேசுவதற்குப் பதிலாக உதாரணத்துக்கு தாவி விட்டீர்கள். அது பாலா? தக்காளி ஜூஸா? என்பதில் எனக்கு குழப்பம் ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் அது பால் தான். ஆனால் தக்காளியிலிருந்து கிடைக்கிறது என்பது போல் கூறிக் கொண்டிருக்கிறீர்கள் இது போன்ற பிறழல்கள் தான் பிரச்சனை.

  நீங்கள் கூறும் சான்று(!)களையும், நம்பிக்கைகளையும் தான் நான் மறுத்துக் கொண்டிருக்கிறேன்,விமர்சித்துக் கொண்டிருக்கிறேன்.

  கேள்வி ஒன்றுக்கான பதில்: வரலாறு நெடுக சமூகம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவத்தில் பிரச்சனைகள், போராட்டங்கள், தீர்வுகள். இந்த அத்தனை காலகட்டத்திற்கும் ஒரே தீர்வு என்று மார்க்சிய்ம் கூறவில்லை. இன்றைய முதலாளித்துவ காலகட்டத்திற்கும் அதனால் மக்கள் படும் துன்பத்திற்கும் தான் மார்க்சிய்ம் தீர்வுக்கு மக்களை நோக்கி அரைகூவல் விடுக்கிறது. எல்லா காலகட்டத்திற்கும் ஒரே சொத்துடமை வடிவத்தை அல்ல. பொதுவுடமையையே மார்க்சியம் கூறுகிறது. எனவே மார்க்சியமே இன்றைய கலகட்டத்தில் சரியான கொள்கை. ஆனால் நீங்கள் கூறும் இஸ்லாமோ ஆண்டான் அடிமை காலகட்டத்தின் அலசல்களை அன்றிலிருந்து இனி வரும் அனைத்து காலத்திற்குமான தீர்வு என்கிறது. அதனால் தான் இஸ்லாம் பொறுந்தத, காலாவதியாகிப் போன கொள்கை என்கிறேன்.

  கேள்வி இரண்டுக்கான பதில்: நிச்சயமாக மார்க்ஸ் எல்லாம் தெரிந்த சுயம்புவல்ல. அவர் ஒரு சமூக அறிவியலாளர். மார்க்சிய்ம் ஒரு சமூக அறிவியல். மனிதர்களின் துன்ப துயரங்களுக்கு என்ன அடிப்படை என்று இயங்கியல் ரீதியாக, வ்ரலாற்றிய்ல் ரீதியாக ஆராய்கிறது. அதனால் தான் அது ஒரே தீர்வாக இருக்கிறது. அவர் கலத்தை தாண்டி சிந்திக்கவில்லை. வரலாற்று வழியில் என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதன் தொடர்ச்சியில் அது எப்ப்டி மாறும் என்பதை கண்டறிந்தார். மதவாதிகள் அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், உண்மையை கற்பனை என்பதும், கற்பனையை உண்மை என்பதும் வழக்கம் தானே.

  இனி கட்டுரையின் சாராம்சம் குறித்து நீங்கள் பேசலாமே. அல்லது இது போன்ற உதிரிக் கேள்விக்ள் தன் இருப்பு என்றால் கேள்வி பதில் பகுதிக்கு மாறலாம்.

 7. நண்பர் செங்கொடி,

  ஒரே இறைவன், இறுதித்தூதர், இறைவேதம்.. இந்த நம்பிக்கைகள் இஸ்லாத்தின் அடிப்படை..இவை வெறும் நம்பிக்கைகள் மட்டுமல்ல.. மறுக்கவியலாத சான்றுகளும் இவற்றிற்கு உண்டு. இந்த அடிப்படைகளைக் கொண்டு கட்டமைக்கப் பட்டதுதான் இஸ்லாமிய கொள்கைகள், வாழ்வியல், வழிகாட்டல்கள், தீர்வுகள், தனிநபர் / சமூக உறவுகள், பொருளியல், இன்னபிற.

  கார்ல் மார்க்ஸ் என்ற ‘எல்லாம் தெரிந்த சுயம்பு’ அல்லாத ஒரு மனிதரின் கற்பனையில் உதித்த மார்க்சியம் என்ற கொள்கைதான் “உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு ஒரே தீர்வாக” இருக்க முடியும் என்று எவ்வாறு நீங்கள் ‘நம்பிக்கை’ கொண்டிருக்கிறீர்களோ, அதை விட பன்மடங்கு அதிகமாக நான் இஸ்லாமியக் கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறேன். காரணம், இக்கொள்கைகள் எல்லாம் தெரிந்த அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்பதை புரிந்துக் கொண்டிருக்கிறேன். குர்ஆனின் போதனைகளை தம் வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டிய நபி (ஸல்) அவர்கள் உண்மையாளர் என்பதை நம்புகிறேன்.

  இந்த அடிப்படைகளை நீங்கள் அப்படியே ஏற்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் இந்த அடிப்படைகளை புரிந்துக் கொள்ளாமல் இஸ்லாத்தின் கொள்கைகளை விமரிசனம் செய்கிறேன் என்று நீங்கள் அடம் பிடிப்பதுதான் பிரச்னை.

  // கேள்வி ஒன்றுக்கான பதில்: வரலாறு நெடுக சமூகம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவத்தில் பிரச்சனைகள், போராட்டங்கள், தீர்வுகள். இந்த அத்தனை காலகட்டத்திற்கும் ஒரே தீர்வு என்று மார்க்சிய்ம் கூறவில்லை. இன்றைய முதலாளித்துவ காலகட்டத்திற்கும் அதனால் மக்கள் படும் துன்பத்திற்கும் தான் மார்க்சிய்ம் தீர்வுக்கு மக்களை நோக்கி அரைகூவல் விடுக்கிறது. எல்லா காலகட்டத்திற்கும் ஒரே சொத்துடமை வடிவத்தை அல்ல. பொதுவுடமையையே மார்க்சியம் கூறுகிறது. எனவே மார்க்சியமே இன்றைய கலகட்டத்தில் சரியான கொள்கை. ஆனால் நீங்கள் கூறும் இஸ்லாமோ ஆண்டான் அடிமை காலகட்டத்தின் அலசல்களை அன்றிலிருந்து இனி வரும் அனைத்து காலத்திற்குமான தீர்வு என்கிறது. அதனால் தான் இஸ்லாம் பொறுந்தத, காலாவதியாகிப் போன கொள்கை என்கிறேன்.//

  நன்றாக யோசித்துத்தான் இதை எழுதினீர்களா?

  //அத்தனை காலகட்டத்திற்கும் ஒரே தீர்வு என்று மார்க்சிய்ம் கூறவில்லை. //

  // பொதுவுடமையையே மார்க்சியம் கூறுகிறது. எனவே மார்க்சியமே இன்றைய கலகட்டத்தில் சரியான கொள்கை.//

  இன்றைய காலகட்டத்தில் மார்க்சியம் சரியான கொள்கை என்றால், இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு பொருந்திப் போகும் ஒரு கொள்கையை 19-ம் நூற்றாண்டிலேயே கார்ல் மார்க்ஸ் கண்டு பிடித்துவிட்டார் என்கிறீர்களா? அவ்வாறு நூற்றாண்டுகளைக் கடந்து சிந்திப்பது மார்க்ஸுக்கு எப்படி சாத்தியமாயிற்று?

  மார்க்சியம் இந்த காலகட்டத்திற்கு பொருந்தும் கொள்கை என்றால் அவர் வாழ்ந்த காலகட்டத்திற்குப் பொருந்தாத கொள்கைதானே?

  மார்க்சியம் அப்போதும் பொருந்தியது.. இப்போதும் பொருந்துகிறது என்றால் “வரலாறு நெடுக சமூகம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவத்தில் பிரச்சனைகள், போராட்டங்கள், தீர்வுகள். இந்த அத்தனை காலகட்டத்திற்கும் ஒரே தீர்வு என்று மார்க்சிய்ம் கூறவில்லை.” என்பதற்கு என்ன பொருள்?

  // கேள்வி இரண்டுக்கான பதில்: நிச்சயமாக மார்க்ஸ் எல்லாம் தெரிந்த சுயம்புவல்ல. அவர் ஒரு சமூக அறிவியலாளர். மார்க்சிய்ம் ஒரு சமூக அறிவியல். மனிதர்களின் துன்ப துயரங்களுக்கு என்ன அடிப்படை என்று இயங்கியல் ரீதியாக, வ்ரலாற்றிய்ல் ரீதியாக ஆராய்கிறது. அதனால் தான் அது ஒரே தீர்வாக இருக்கிறது. அவர் கலத்தை தாண்டி சிந்திக்கவில்லை. வரலாற்று வழியில் என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதன் தொடர்ச்சியில் அது எப்ப்டி மாறும் என்பதை கண்டறிந்தார்.//

  நல்லது நண்பரே.. ஆராய்ச்சிகள் தேவைதான். ஆராய்ச்சிகள் மூலம் தீர்வுகளும் கிடைக்கலாம். ஆனால் அதுதான் எப்படி ‘ஒரே’ தீர்வாக இருக்க முடியும்?

  கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த ஒரு தென்னிந்திய சிறு விவசாயியின் எதிர்பார்ப்புகளையோ, ஒரு அரபு வணிகனின் கனவுகளையோ மார்க்ஸ் அறிந்திருக்க வழியில்லை. கூட்டுக்குடும்பங்களின் பொருளாதார நிலைப்பாடுகளை அவர் கருத்தில் கொண்டிருக்க வாய்ப்பில்லை. வரதட்சணை, சிசுக்கொலை போன்ற சமூக குற்றங்களின் பிண்ணனியை அவரால் புரிந்துக் கொண்டிருக்க இயலாது. தனியார் சொத்துரிமையைப் பறித்து எல்லாவற்றையும் பொதுவுடைமை ஆக்கிவிட்டால் இவற்றில் எந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்?

  //வரலாற்று வழியில் என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதன் தொடர்ச்சியில் அது எப்ப்டி மாறும் என்பதை கண்டறிந்தார்.//

  சுருக்கமாகச், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று ஜோசியம் சொன்னார் என்கிறீர்களா?

  //இனி கட்டுரையின் சாராம்சம் குறித்து நீங்கள் பேசலாமே. அல்லது இது போன்ற உதிரிக் கேள்விக்ள் தன் இருப்பு என்றால் கேள்வி பதில் பகுதிக்கு மாறலாம்.//

  கட்டுரையின் சாராம்சம் குறித்து என் கருத்தை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். இது “சேம் சைட் கோல்”.

  உதாரணத்திற்கு,

  //ஒரு சமுதாயத்தின் நடைமுறைகளை அது தான் ஒட்டு மொத்த மனித இனத்துக்கும் சரியானது பின்பற்றப்பட வேண்டியது என்று கூறினால் அது திணிப்பாகத் தானே இருக்க முடியும்.// இது நீங்கள் சொன்னது.

  இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மார்க்ஸ் என்ற ஒரு மனிதர், தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத அந்தக் காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்த சொற்ப தகவலை வைத்துக் கொண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் அவருக்குத் தோன்றிய கருத்துக்களை அது தான் ஒட்டு மொத்த மனித இனத்துக்கும் சரியானது பின்பற்றப்பட வேண்டியது என்று கூறினால் அது திணிப்பாகத் தானே இருக்க முடியும்.? – இது நான் சொல்வது. இக்கூற்றில் ஏதாவது தவறு காண முடியுமா?

 8. நண்பர் சலாஹுத்தீன்

  இன்னொரு விவாதத்திற்கு நீங்கள் ஆயத்தமாகியிருப்பது புரிகிறது. விவாதிக்கும் ஆர்வமிருந்தால் அதை விவாதப் பகுதியில் முறையாகவும் விரிவாகவும் பொருத்தமான தலைப்புகளில் விவாதிக்கலாம். இப்போது உங்கள் பின்னூட்டத்திற்கு சுருக்கமாக பதில் தருகிறேன்.

  பொதுவாக மதவாதிகளின் நிலை எதிராக கூறப்படும் எதையும் பரிசீலனை செய்வதில்லை என்பது தான். அவர்களின் முன்முடிவியே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருப்பார்கள்.

  மார்க்சியம் ஒரு சமூக அறிவியல் என்று கூறியிருந்தேன். அது சரியா? தவறா? என பரிசீலித்தீர்களா? \\\ஒரு மனிதரின் கற்பனையில் உதித்த மார்க்சியம் என்ற கொள்கைதான்/// என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் இப்படி கூறுகிறீர்கள்? பரிசீலனையில் கண்டடைந்த முடிவா? உங்களின் முன்முடிவா? மார்க்சின் காலத்திற்கு முன்பே சோசலிசம் பொதுவுடமை குறித்து சிந்தித்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? பொதுவுடமை என்பது ஒரு மனிதனின் சிந்தனையில் உதித்ததல்ல அது வரலாறு என்பது உங்களுக்கு புரியுமா? மெய்யாகவே இவைகள் உங்களுக்கு தெரியாது என்றால் ‘கற்பனை’ எனும் சொல்லை எந்த பொருளில் பயன்படுத்தினீர்கள்? உங்களின் முன்முடிவுகளை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். விவாதிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் முதலில் அது குறித்து தெரிந்து கொண்டு வாருங்கள். விவாதிப்போம். மாறாக தெரியாது என்றால் உங்களின் ஐயங்களை ‘கேள்வி பதில்’ பகுதியில் கேள்விகளாக கேளுங்கள். பதில் கூறுகிறேன். ஆனால், தெரியாது என்று கூறிக் கொண்டே விவாதிக்க முற்படாதீர்கள்.

  மனிதகுல வரலாறு பொதுவாக ஐந்து வித காலகட்டங்களைக் கண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு கூட காலகட்டங்கள் நீடித்திருக்கின்றன. இப்படி மாறிவரும் காலகட்டங்கள் அனைத்திற்கும் பொதுவான நீதி என்று எதுவும் கிடையாது. இருக்கவும் முடியாது. இந்த காலகட்டம் என்பதை நேற்றுக்கும் இன்றுக்குமான வித்தியாசம் என்று கருதிக் கொண்டீர்களா? மார்க்ஸ் வாழ்ந்ததும் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பதும் ஒரே காலகட்டத்தில் தான், முதலாளித்துவ காலகட்டத்தில்.

  ஒரே தீர்வாக ஒன்றை எப்படி கருத முடியும்? நிலவி வரும் தீர்வுகளை ஆராய்ந்து எது சரியானது? எது பொருத்தமானது? எது சரியான பொருத்தமான காரணங்களையும், வினைகளையும் விளைவுகளையும் கொண்டிருக்கிற்து என்பதை ஆய்ந்து கண்டு, அதை ஒரே தீர்வாக கொள்ள முடியும். அந்த வகையில் தான் மார்க்சியம் ஒரே தீர்வு. நீங்களும் தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள் இஸ்லாமே தீர்வு என்று. ஆனால் அப்படி கூறுபவர்கள் யாருக்காவது இஸ்லாமுக்கு வெளியே எது குறித்தாவது தெரியுமா? இஸ்லாமும் எந்த அளவுக்கு தெரியும் என்பது வேறு பிரச்சனை. ஒன்றை சிறந்தது என்று கூற வேண்டுமென்றாலே அதுவல்லாத வேறொன்றை தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. எதுவும் தெரியாமல் ஒன்றை மட்டுமே சரி என்று கூறினால் அது மூடநம்பிக்கை.

  \\\ஒரு மனிதரின் கற்பனையில் உதித்த மார்க்சியம் என்ற கொள்கைதான் .. .. .. நான் இஸ்லாமியக் கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறேன். காரணம், இக்கொள்கைகள் எல்லாம் தெரிந்த அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்பதை புரிந்துக் கொண்டிருக்கிறேன்/// இது நீங்கள் கூறியது. கீழே வருவது முந்திய பின்னூட்டத்தில் நான் கூறியது \\\மதவாதிகள் அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், உண்மையை கற்பனை என்பதும், கற்பனையை உண்மை என்பதும் வழக்கம் தானே/// எவ்வளவு பொருத்தமாக கூறியிருக்கிறேன் பாருங்கள்.

  மீண்டும் கூறுகிறேன். நீங்கள் இஸ்லாமா? கம்யூனிசமா? என விவாதிக்க விரும்புகிறீர்களா கம்யூனிசம் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இரண்டுக்கும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். முடிவு செய்து விட்டு வாருங்கள். இரண்டையும் குழப்ப வேண்டாம்.

 9. நண்பர் செங்கொடி,

  உங்கள் பதட்டத்திற்கான காரணம் புரியவில்லை.

  இப்பதிவில் எனது பின்னூட்டங்கள் அனைத்துமே உங்களின் இக்கட்டுரைக்கு தொடர்புடையவைதாம்.

  சொத்துரிமையைப் பற்றி இக்கட்டுரை பேசுவதால் அதற்கு மாற்றாக நீங்கள் முன்வைக்கும் பொதுவுடைமை பற்றி நான் கேள்வி எழுப்புகிறேன்.

  ‘அல்லாஹ் என்பது கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரே’ என்ற அபத்தமான கருததை இக்கட்டுரை குறிப்பிடுவதால், இஸ்லாத்தின் அடிப்படை பற்றி நான் பேசுகிறேன். குர்ஆனை இயற்றியவர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் அல்லர் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

  ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதருக்கு அவர் வாழ்ந்த காலத்தை தாண்டி சிந்திப்பது சாத்தியமானதாக இருக்க முடியாது என்றால் 19-ஆம் நூற்றாண்டின் கார்ல் மார்க்ஸுக்கு 21-ஆம் நூற்றாண்டிற்கும் பொருந்தும் சமூகவியலைப் பற்றி சிந்திப்பது எப்படி சாத்தியமானது என்று கேள்வி எழுப்புகிறேன்.

  சுருக்கமாக, இஸ்லாம் குறித்த உங்களின் முன்முடிவுகளையும் தவறான புரிதல்களையுமே நான் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறேன். உங்கள் நிலைப்பாட்டில் உள்ள முரண்பாடுகளையும் தவறுகளையும் நீங்களே உணர்ந்து கொள்ளும் வகையில் சில எதிர் கேள்விகளையும் கேட்கிறேன். இதற்கு நீங்கள் விவாதம், கேள்வி-பதில், உரையாடல், எதிர்வினை என என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம்.

  //மதவாதிகள் அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், உண்மையை கற்பனை என்பதும், கற்பனையை உண்மை என்பதும் வழக்கம் தானே.//

  // பொதுவாக மதவாதிகளின் நிலை எதிராக கூறப்படும் எதையும் பரிசீலனை செய்வதில்லை என்பது தான். அவர்களின் முன்முடிவியே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருப்பார்கள். //

  இக்கூற்றுகள் என்னைவிட உங்களுக்குத்தான் அதிகம் பொருந்திப் போகிறது நண்பரே. நம் முந்தைய விவாதத்தின்போதே இது எனக்கு விளங்கி விட்டது. இதை சான்றுகளுடன் என்னால் நிரூபிக்க முடியும். எனவே, திரும்பத் திரும்ப இது போன்ற ஸ்டேட்மெண்ட்களை கூறி நீங்கள் மட்டும்தான் சிந்திக்கப் பிறந்தவர் போன்ற தோரணைகளை ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

  \\\ஒரு மனிதரின் கற்பனையில் உதித்த மார்க்சியம் என்ற கொள்கைதான்/// என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் இப்படி கூறுகிறீர்கள்? //

  நீங்கள்தாம் சொன்னீர்கள்..”[கார்ல் மார்க்ஸ்] வரலாற்று வழியில் என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதன் தொடர்ச்சியில் அது எப்ப்டி மாறும் என்பதை கண்டறிந்தார்.” என்பதாக.

  எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி ஒருவர் பேசினால் ஒன்று இறைச்செய்தி மூலமான முன்னறிவிப்பாக இருக்கலாம். அப்படி அல்லாதவற்றை யூகம், கற்பனை, ஜோசியம் என குறிப்பிடுவதில் என்ன தவறு?

  //மனிதகுல வரலாறு பொதுவாக ஐந்து வித காலகட்டங்களைக் கண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு கூட காலகட்டங்கள் நீடித்திருக்கின்றன. இப்படி மாறிவரும் காலகட்டங்கள் அனைத்திற்கும் பொதுவான நீதி என்று எதுவும் கிடையாது. இருக்கவும் முடியாது. இந்த காலகட்டம் என்பதை நேற்றுக்கும் இன்றுக்குமான வித்தியாசம் என்று கருதிக் கொண்டீர்களா? மார்க்ஸ் வாழ்ந்ததும் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பதும் ஒரே காலகட்டத்தில் தான், முதலாளித்துவ காலகட்டத்தில்.//

  இது உங்கள் கொள்கை அல்லது கருத்து. இவற்றில் சிலவற்றில் நான் உடன்படுகிறேன். சிலவற்றில் நான் மாறுபடுகிறேன்.

  வரலாறு நெடுக சமூகம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்பதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவத்தில் பிரச்சனைகள், போராட்டங்கள், தீர்வுகள் என்பதிலும் நான் உடன்படுகிறேன். எனவேதான் வெவ்வேறு காலக்கட்டங்கள், வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்ந்த சமூகங்களின் நிலைகளுக்கேற்ப வெவ்வேறு இறைத்தூதர்கள் மூலம் இறைக்கட்டளைகள் மாறுபாடு அடைந்து வந்திருக்கின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இறுதித்தூதர் வரும்வரை இதே நிலைதான் தொடர்ந்தது.

  ‘மார்க்சின் காலத்திற்கு முன்பே வாழ்ந்தவர்களின் சிந்தனையில் உதித்த சோசலிசம் பொதுவுடமை சித்தாத்தங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்து இந்த நூற்றாண்டிலும் பொருந்தும்… பல நூற்றாண்டுகள் பழமையான மார்க்சியம் இன்றும் “உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு ஒரே தீர்வாக” இருக்க முடியும்.. என்று நீங்கள் நம்பலாம்..

  ஆனால், கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அருளப்பட்ட இறைச்செய்தி அன்றிலிருந்து உலக முடிவு வரை பொருந்தும் என்று நாங்கள் நம்பினால் அது தவறா?

  // ஒன்றை சிறந்தது என்று கூற வேண்டுமென்றாலே அதுவல்லாத வேறொன்றை தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. எதுவும் தெரியாமல் ஒன்றை மட்டுமே சரி என்று கூறினால் அது மூடநம்பிக்கை. //

  உண்மைதான் நண்பரே. பொதுவுடைமையை ‘பொருந்தாத கொள்கை’ எனும் அளவிற்கு அதைப் பற்றி நான் தெரிந்து வைத்திருக்கிறேன். முதலாளித்துவம் பற்றியும் அதனைப் பொய்த்துப்போகச் செய்யும் அதன் உட்காரணிகளைப் பற்றியும் ஓரளவு புரிந்து வைத்திருக்கிறேன். நீங்களும் இஸ்லாம் பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து உங்களை வெளிப்படுத்தக்கூடும்.

 10. நண்பர் சலாஹுத்தீன்,

  நீங்கள் பதட்டமடைந்திருப்பதால் என்னை பதட்டமடைந்ததாக காட்டி உங்களை மறைத்துக் கொள்ள வேண்டாம்.
  \\\மார்க்சியம் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் .. .. .. பொதுவுடைமையை ‘பொருந்தாத கொள்கை’ எனும் அளவிற்கு அதைப் பற்றி நான் தெரிந்து வைத்திருக்கிறேன். முதலாளித்துவம் பற்றியும் அதனைப் பொய்த்துப்போகச் செய்யும் அதன் உட்காரணிகளைப் பற்றியும் ஓரளவு புரிந்து வைத்திருக்கிறேன்/// இப்படி முரண்பட்ட கருத்துக்களைக் கூறி உங்கள் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொண்டது யார்?

  நான் தெளிவாகவே கூறியிருக்கிறேன். எதற்கும் நான் ஆயத்தமாக இருப்பதாக; நான் கேட்பதெல்லாம் நீங்கள் தெளிவாக கூறுங்கள் என்பதைத்தான். \\\இதற்கு நீங்கள் விவாதம், கேள்வி-பதில், உரையாடல், எதிர்வினை என என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம்/// இப்படி பொதுவில் குழப்ப முடியாது. ஏனென்றால் ஏற்கனவே இரண்டுமுறை உங்களுடன் விவாதம் செய்த அனுபவமும், முரண்டுபிடித்து நீங்கள் செய்த வித்ண்டாவாதங்களும் நீங்கள் புதிதாக சான்று தேடும் அவசியமின்றி ஏற்கனவே இங்கு ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. எனவே உங்களின் பிம்பமாக்கலை விட்டுவிட்டு தெளிவுபடுத்துங்கள் முதலில். தெரியாது எனும் நிலையிலிருந்து கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? தெரியும் எனும் நிலையிலிருந்து விவாதிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் கேள்வியாக கேட்டால் கூறப்படும் பதிலை பரிசீலித்தாக வேண்டும். விவாதிக்க விரும்புகிறீர்கள் என்றால் உங்களின் அறியாமைக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். இதை தவிர்ப்பதற்காகத் தானே ‘என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளுங்கள்’ என்கிறீர்கள்.

  நீங்கள் இக்கட்டுரைப் பொருளை விட்டு விலகி விவாதிப்பதாக எங்கும் நான் கூறவில்லை. ஆனால் இக்கட்டுரையின் வாதங்களை நீங்கள் விவாதிக்க விரும்பவில்லை. மாறாக அதன் அடிப்படைகளை விவாதிக்க விரும்புகிறீர்கள். அதனால் தான் வேறு களங்களுக்கு நகருங்கள் என்கிறேன். உங்களைப் போல் நானும் – அதுவும் இரண்டு முறை அனுபவங்கள் கிடைத்த பிறகும் – மேலோட்டமாய் இருக்க முடியாதே. அதனால் தான் செய்வதை தெளிவாகச் செய்யலாம் என்கிறேன்.

  எதற்கும் நான் தயார். என்ன நண்பரே நீங்கள் தயாரா?

 11. நண்பர் செங்கொடி,

  உங்கள் பிப்-26 பின்னூட்டத்தின் மூன்றாம் பத்தியை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏற்பட்ட பதட்டம் அதில் பதிவாகியிருக்கிறது.

  // இப்படி முரண்பட்ட கருத்துக்களைக் கூறி உங்கள் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொண்டது யார்? //

  என் கருத்துக்களில் நான் முரண்படவும் இல்லை. பதட்டமடையவும் இல்லை. மார்க்சியம் பொருந்தாத கொள்கை எனும் அளவிற்கு அதைப் பற்றி நான் புரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் ‘அகில உலக அனைத்து பிரச்னைகளுக்கும் மார்க்சியமே ஒரே தீர்வு’ என்பதாக சொல்லிக் கொண்டிருப்பதால் உங்கள் கண்ணோட்டத்தை உங்கள் மூலமே தெரிந்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இதில் என்ன முரண்பாடு?

  // தெரியாது எனும் நிலையிலிருந்து கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? தெரியும் எனும் நிலையிலிருந்து விவாதிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் கேள்வியாக கேட்டால் கூறப்படும் பதிலை பரிசீலித்தாக வேண்டும். விவாதிக்க விரும்புகிறீர்கள் என்றால் உங்களின் அறியாமைக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். இதை தவிர்ப்பதற்காகத் தானே ‘என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளுங்கள்’ என்கிறீர்கள். //

  பெயர் சூட்டுவது உங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் உங்கள் மேற்கண்ட கட்டுரைக்கு என்ன பெயர் சூட்டுவீர்கள்? கேள்வி பதிலா? விவாதமா?

  இக்கட்டுரையில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் உங்கள் அறியாமைக்கே நான் பதிலளிக்க முயல்கிறேன். கேள்வியாக கேட்க வேண்டியதை கட்டுரை என நீங்கள் வகைப்படுத்தினால் அது என் தவறா?

  //விவாதிக்க விரும்புகிறீர்கள் என்றால் உங்களின் அறியாமைக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். //

  ஏன் இந்த பிளாக் மெயில் நண்பரே? விவாதிக்க விரும்பினால் அது அறியாமையா?

  உங்களின் இக்கட்டுரை மூலம் சொத்துரிமை குறித்த ஒரு விவாதத்தை நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். எனவே உங்கள் அறியாமைக்கு நீங்கள் பொறுப்பேற்க தயாரா?

  //…மாறாக அதன் அடிப்படைகளை விவாதிக்க விரும்புகிறீர்கள்… உங்களைப் போல் நானும் மேலோட்டமாய் இருக்க முடியாதே. அதனால் தான் செய்வதை தெளிவாகச் செய்யலாம் என்கிறேன். //

  பாருங்கள்.. ஒரே பத்தியில் உங்களுக்கு நீங்களே எப்படி முரண்படுகிறீர்கள் என்று. “அடிப்படைகளை” விவாதிக்க விரும்புவது எப்படி “மேலோட்டமாக” இருக்க முடியும்?

  // எதற்கும் நான் தயார். என்ன நண்பரே நீங்கள் தயாரா? //

  முன்பு இருமுறை நீங்கள் செய்தது போலவும், இப்போதும் செய்து கொண்டிருப்பது போலவுமான வார்த்தை விளையாட்டுகளுக்கு நான் தயாரில்லை நண்பரே. அது தவிர்த்து நேர்மையான _ _ _ _ _ _ _ _ _ -க்கு (கோடிட்ட இடத்தை உங்களுக்கு பிடித்தமான சொல்லை இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்) நான் தயார்.

 12. நண்பர் சலாஹுத்தீன்

  தொடக்கத்திலேயே இத்தனை திருகுதாளங்களா?

  மூன்றாம் பத்தியில் என்ன இருக்கிறது? முரண்பாடாக இருந்தால் இது முரண்பாடு என (நான் எடுத்துக் காட்டியது போல்) எடுத்துக் காட்டுவதில் உங்களுக்கு என்ன முடை வந்துவிடும்? சொல்ல வேண்டும் என்பதற்காக எதாவது சொல்லாதீர்கள். சொல்ல வேண்டியதை தெளிவாய் எளிமையாய் சொல்லுங்கள். பூடகம் பேசாதீர்கள்.

  மார்க்சியம் பொருந்தாத கொள்கை எனும் அளவுக்கு உங்களுக்கு மார்க்சியம் தெரியும் என்றால் கட்டுரையின் வாதங்களுக்கல்லவா நீங்கள் பதில் கூறியிருக்க வேண்டும். அதுவும் சாதாரணமான முஸ்லீம்களால் அதாவது உங்களைப் போன்றோரால் எளிதாக பதில் கூற முடிந்திருக்கும் அத்தொடரில் இதுவரை நீங்கள் வினை புரிந்த ஒரே கட்டுரை நூஹின் கப்பல் குறித்த கட்டுரையில் மட்டும் தான். அதிலும் விதண்டாவாதங்கள் மட்டுமே. அதனால் தான் முரண்பாடுகளும் சப்பைக்கட்டுகளும் தொடர்ச்சியாக வருகிறது.

  நான் இஸ்லாம் குறித்து அறிந்த நிலையிலிருந்து விவாதம் செய்திருக்கிறேன் என்பதால் தான் தொடரின் முதலிலேயே விவாதங்களுக்கு தயார் என அறிவித்து விட்டு தொடர எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்றுவர விவாதிக்க வந்தவர்களிடம் விவாதித்தும் கொண்டிருக்கிறேன். உங்களைப் போன்றவர்களிடம் தடாலடியாகவும் பேசிக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் உங்கள் நோக்கம் நேர்மயான விவாதம் இல்லயே.

  விவாதத்தில் வெளிப்படும் அறியாமைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றால் அது பிளாக்மெயிலா? அல்லது விவாதிக்க விரும்புவது அறியாமை என்று நான் கூறியிருக்கிறேனா? அது எப்படி மதவாதம் பேசினாலே குதர்க்க வாதம் தன்னால் வந்துவிடுமோ. என்னுடைய விவாதங்களில் ஆக்கங்ளில் உங்களால் அறியாமையச் சுட்டிக் காட்ட முடிந்தால் செய்யுங்கள் அது அறியாமை அல்ல என நிரூபிக்கிறேன் இல்லையென்றால் ஏற்றுக் கொள்கிறேன். நான் ஒன்றும் உங்களைப் போல் மதவாதியல்லன், அசூயையற்று குதர்க்கவாதம் பேசித் திரிவதற்கு.

  எப்படி எப்படி ஒரே பத்தியில் நான் முரண்படுகிறேனா? புத்தி உள்ளவர்களுக்கு அந்த பத்தியில் நான் என்ன கூறியிருக்கிறேன் என்பது புரியும். அந்தக் கட்டுரையின் விவாதக் கூறுகளையல்ல அந்த விவாதத்தின் அடிப்படைக் கூறுகளை விவாதிக்க விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் விவாதக் கூறுகளை விவாதித்தாலும், அடிப்படைக் கூறுகளை விவாதித்தாலும் அதை ஆழமாக தேடலுடன் செய்வதில்லை. மேலோட்டமாக உங்கள் முன்முடிவுகளுக்கு சாதகமாக செய்ய விரும்புகிறீர்கள்.

  முன்பு போலல்லாது தேடலுடன் கூடிய விவாதத்த நடத்துவதற்கு முன்வந்திருப்பீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், முன்னிலும் அதிக குதர்க்கங்களுடன் குழப்ப வந்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகி விட்டதால், உங்களுடன் விவாதிக்க வேண்டுமென்றால் நேர்மையாக விவாதிப்பேன் என நீங்கள் உறுதிப்படுத்தாத வரை உங்களுடன் விவாதிக்க முடியாது. வெட்டி அரட்டையடித்து பொழுதுபோக்க நான் தயாராக இல்லை. உங்களின் நேர்மையை முதலில் நிரூபியுங்கள் உங்களுடன் விவாதிக்க வேண்டுமா என்பதை பின்னர் நான் ஆலோசிக்கிறேன்.

 13. // மற்றெல்லா உறவுகளைக் காட்டிலும் முதன்மையான உறவாக இருந்தும் மனைவி எனும் உறவுக்கு பிற உறவுகளைக் காட்டிலும் குறைவாக பங்கு பிரித்திருப்பது. பொதுவாகவே குரான் ஆணாதிக்கப் பார்வையுடன் எல்லாவற்றிலும் ஆணுக்குக் கீழாகவே பெண்ணை மதிக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.// குர்ஆனப் பொறுத்தவரையில், எந்தச் சூழ்நிலையிலும் மனைவி என்பவர் தனது கணவரின் சொத்திற்கு முழு வாரிசுரிமை பெற வழியில்லை. இது என்ன வகையான நீதியென்று புரியவில்லை.

  வழக்கமாக விவாதங்களில் பதில் கூறமுடியாமல் விழிபிதுங்கும் பொழுது விவாதத்தை திசைபிருப்புவது இஸ்லாமியர்களின் பாணி. சலாஹ்வுத்தீன் துவக்கதிலேயே திசை திருப்புகிறார்.

 14. சூப்பர், எப்போதும் போல செங்கொடி கிரேட் எஸ்கேப். விவாதம் செய்ய அழைத்தால் இப்படி மான் கராத்தே போடுவது தான் கம்னியூனிசமோ. இதுக்கு தஜ்ஜால்ன்னு ஒரு கருத்து கந்தசாமி சப்போர்ட் வேற.

 15. நண்பர் செங்கொடி,

  விவாதத்தைத் தொடர உங்களுக்கு மனம் இல்லையென்றால் விட்டுவிடுங்கள். ஆனால் அதற்கான பழியை என் மேல் சுமத்தாதீர்கள்.

  // நீங்கள் இக்கட்டுரைப் பொருளை விட்டு விலகி விவாதிப்பதாக எங்கும் நான் கூறவில்லை. ஆனால் இக்கட்டுரையின் வாதங்களை நீங்கள் விவாதிக்க விரும்பவில்லை. மாறாக அதன் அடிப்படைகளை விவாதிக்க விரும்புகிறீர்கள்..// என்று ஒப்புக் கொண்ட நீங்களே இதை ‘திருகுதாளம்’ ‘குதர்க்கவாதம்’ என்பது எந்த விதத்தில் நியாயம்? இவ்வளவுதான் உங்கள் நேர்மையா?

  கட்டுரையின் வாதங்களைவிட்டுவிட்டு அதன் அடிப்படைகளை முதலில் நான் விவாதிக்க விரும்புவதற்குக் காரணம் இருக்கிறது.

  இஸ்லாம், மார்க்சியம் இவ்விரண்டைப் பற்றியும் நாம் இருவரும் மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கிறோம்.

  மார்க்சியத்தை நீங்கள் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். அதன் அடிப்படைகள் உங்களுக்கு இரண்டாம் பட்சம். உதாரணமாக, அக்கொள்கை தோன்றிய விதம், அதன் உருவாக்கத்தில் பங்களித்தவர்கள், அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள், பரிசீலித்த விஷயங்கள் ஆகியவை.

  இது ஒரு வகையில் top-down approach என்றால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பது Bottom-up approach.

  இஸ்லாத்தின் அடிப்படைகளான ஓரிறை, இறுதித் தூதர், இறைவேதம் குர்ஆன் ஆகியவற்றில் நான் முழுநம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். குர்ஆன் அல்லாஹ் அருளிய இறைவேதம், அதை நபி (ஸல்) அவர்கள் இயற்றவில்லை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இஸ்லாத்தின் கொள்கைகளும் வழிகாட்டல்களும்கூட எனக்கு முக்கியம்தான் என்றாலும் அந்தக் கொள்கைகளுக்காக என்பதைவிட அதன் அடிப்படைகளுக்காக நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் சரி.

  இஸ்லாத்தின் சில கொள்கைகள், அதற்கான காரணங்கள், அது ஏற்படுத்தும் விளைவுகள்.. எனக்கு புரியவில்லை என்றால்கூட அவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். அது நிச்சயமாக பலனளிக்கும் என்று நம்புகிறேன். கைதேர்ந்த ஒரு மருத்துவர் மீது நமக்கு முழு நம்பிக்கை இருந்தால் அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நாம் மீண்டும் சோதித்துப் பார்க்க வேண்டியதில்லை அல்லவா?

  எனவேதான் இஸ்லாம் பற்றிய விவாதங்களில் அதன் அடிப்படைகளை தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. என்னுடைய நிலைப்பாட்டை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அதுதான் என் வாதங்களுக்கு அடிப்படை என்ற அளவிற்காவது நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

  குர்ஆன் அல்லாஹ் அருளிய இறைவேதம், அதை நபி (ஸல்) அவர்கள் இயற்றவில்லை என்பது என் அடிப்படைக் கொள்கையாக இருக்க,

  // அல்லா என்பது மதவாதிகள் புளகமடைவது போல் எல்லாம் தெரிந்த சுயம்புவல்ல, அது கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரே. அவருக்கு அவர் வாழ்ந்த காலத்தை தாண்டி சிந்திப்பது ஒற்றும் சாத்தியமானதாக இருக்க முடியாது. // என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் வெவ்வேறு தளங்களில் நிற்கிறோம். இந்த அடிப்படையிலேயே வேறுபட்டுக்கொண்டு விவாதம் புரிவது எப்படி சாத்தியம்?

  எனவேதான் நான் திரும்பத் திரும்ப இஸ்லாத்தின் அடிப்படைகளைப் பற்றிப் பேசுகிறேன்.

  நண்பரே, என்னுடைய நிலைப்பாட்டை வெகு எளிமையாகவே விளக்கியிருப்பதாக நம்புகிறேன். தயவு செய்து முன்முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு திறந்த மனதுடன் இஸ்லாத்தை அணுகிப் பாருங்கள். சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு நிச்சயம் உண்மை புலப்படும். நன்றி.

 16. நண்பர் சலாஹுத்தீன்,

  நான் பழி சுமத்தவில்லை, உண்மைகளைக் கூறிக் கொண்டிருக்கிறேன். இதுவரை நான் விவாதித்த மதவாதிகள் அனைவரும் – நீங்கள் உட்பட – பரிசீலனையற்று முன்முடிவுகளுக்கு ஏற்ப வரட்டுவாதம் புரிந்து குழப்புவதை, வெறுமனே காலம் கடத்துவதை, வெட்டி அரட்டையடிப்பதைத் தான் நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். மெய்யான தேடுதலுடன் நேர்மையான விவாதம் செய்ய அவர்கள் முன்வருவதே இல்லை. இதற்கு ஆதாரம் வேண்டுமா? இதோ, என்னுடைய 26ம் தேதி பின்னூட்டத்தில் நான் முரண்பட்டு பதட்டப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக கதைத்தீர்கள். நான் அவ்வாறு இல்லை என்றேன். அதை எடுத்துக்காட்டுவதோ, என்ன முரண்பாடு எப்படி பதட்டப்படுகிறேன் என்பதை விளக்குவது தான் நேர்மையானவர்கள் செய்யும் செயல். அதை ஏன் உங்களால் செய்ய முடியவில்லை. ஆக விமர்சனம் வைக்கப்பட்டால் அது சரியா தவறா எனும் நோக்கில் உள்வசமாய் பரிசீலித்துப்பார்ப்பதே இல்லை. ஒப்புக்கு எதிர்குற்றச்சாட்டாக எதையாவது கூறிவிட்டு கண்டு கொள்ளாமல் நழுவி விடுவது.

  நான் எதை குதர்க்கவாதம். திருகுதாளம் என்கிறேன்? \\\ஏன் இந்த பிளாக் மெயில் நண்பரே? விவாதிக்க விரும்பினால் அது அறியாமையா? .. .. .. ஒரே பத்தியில் உங்களுக்கு நீங்களே எப்படி முரண்படுகிறீர்கள் என்று. “அடிப்படைகளை” விவாதிக்க விரும்புவது எப்படி “மேலோட்டமாக” இருக்க முடியும்?/// சாதாரண மனோநிலையில் இருந்து பார்த்தாலே இப்படி நீங்கள் எழுதுவதில் எந்தப் பொருளும் இல்லை என்பது உங்களுக்கே விளங்கும். ஆனால் நேர்மையற்று கட்டுரையின் வாதங்களை விவாதிப்பது, அடிப்படைகளை விவாதிப்பது என் நான் எழுதியதை குதர்க்கம் என்பதைப் போல் திருகுகிறீர்களே. இதில் நேர்மை கொஞ்சமேனும் வெளிப்படுகிற்தா?

  ஒருமுறை மார்க்சியம் எனக்கு தெரியாது என்கிறீர்கள், மறுமுறை போதுமான அளவு தெரியும் என்கிறீர்கள். எதை எடுத்துக் கொள்வது? என்ன தெரியும் உங்களுக்கு? உங்கள் மதவாத பிளிறல்களுக்கு நான் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?

  ஒருமுறை இப்படிக் கூறினீர்கள் நீங்கள்,\\\நீங்கள் மட்டும்தான் சிந்திக்கப் பிறந்தவர் போன்ற தோரணைகளை ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்/// நீங்கள் சிந்திக்க மறுக்கிறீர்கள் என்று எங்கேனும் நான் கூறியிருக்கிறேனா? பரிசீலிக்க மறுக்கிறீர்கள் என்று தான் கூறிக் கொண்டிருக்கிறேன். பரிசீலனை மறுப்பதை சிந்திக்க மறுப்பதாய் மாற்றும் நீங்கள்; இந்த பின்னூட்ட விவாதத்தை படித்துக் கொண்டிருக்கும் யாரும் சிந்திக்க மாட்டார்கள் என எண்ணிக் கொண்டு திரித்தல்களைச் செய்து கொண்டிருக்கிறீர்களே. உங்களுடன் விவாதம் செய்து ஆகப்போவது என்ன?

  இவை ஒரு பானை சோற்றுக்கு ஒற்றைப் பதம் தான். உங்கள் பழைய விவாதங்களிலிருந்தும் இப்போதைய பின்னூட்டங்களிலிருந்தும் இதுபோல் ஏராளம் எடுத்துக் காட்ட முடியும். எனவே தான் கூறுகிறேன். நீங்கள் நேர்மையாக விவாதிக்க விரும்புகிறீர்களா? ஆம் என்றால் அதை உறுதிப் படுத்துங்கள், பின்னர் உங்களுடன் விவாதிப்பது குறித்து நான் முடிவெடுக்கிறேன்.

  இஸ்லத்தின் அடிப்படைகள் குறித்து வெகு நன்றாக தெரிந்து வைத்திருக்கிறேன். அதனால் தான் அந்த அடிப்படைகள் தவறு என்பதை என்னுடைய தொடரின் மூலம் நிருவிக் கொண்டிருக்கிறேன். இதை நீங்கள் மறுக்க விரும்பினால் உங்களின் அடிப்படைகளைக் கொண்டு வாருங்கள். நான் என்னுடைய அடிப்படைகளுடன் வருகிறேன். எது சரி என்பதை விவாதித்துப் பார்த்து விடுவோம். ஆனால் அது நேர்மையான தேடலுடன் கூடிய விவாதமாய் இருக்க வேண்டும். நீங்கள் அப்படி விவாதிப்பீர்கள் எனும் எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை. எனவே அவ்வாறு விவாதிப்பீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள், உறுதிமொழி கூறுங்கள். பின்னர் அதற்கான வடிவங்களை ஏற்படுத்திக் கொண்டு விவாதிப்போம்.

  இதற்கு நேர்மையான பரிசீலனையுடன் கூடிய பதில் உங்களிடமிருந்து வராவிட்டால், இதற்குமேல் உங்களுக்கு பதிலளித்து என்னுடைய நேரத்தை வீணடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

 17. நண்பர் செங்கொடி,

  நான் எழுதும் பின்னூட்டங்களை மட்டுமல்ல, நீங்கள் எழுதுவதைக்கூட நீங்கள் படித்துப் பார்ப்பதில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

  //என்னுடைய 26ம் தேதி பின்னூட்டத்தில் நான் முரண்பட்டு பதட்டப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக கதைத்தீர்கள். நான் அவ்வாறு இல்லை என்றேன். அதை எடுத்துக்காட்டுவதோ, என்ன முரண்பாடு எப்படி பதட்டப்படுகிறேன் என்பதை விளக்குவது தான் நேர்மையானவர்கள் செய்யும் செயல். அதை ஏன் உங்களால் செய்ய முடியவில்லை. //

  இது உங்களுடைய குற்றச்சாட்டு.

  // உங்கள் பிப்-26 பின்னூட்டத்தின் மூன்றாம் பத்தியை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏற்பட்ட பதட்டம் அதில் பதிவாகியிருக்கிறது. // இதுதான் நான் எழுதியது.

  இதில் நீங்கள் முரண்பட்டதாக நான் சொல்லியிருக்கிறேனா, அல்லது அவ்வாறு நீங்கள் கற்பனை செய்து கொண்டீர்களா?

  ‘ஒரு மனிதரின் கற்பனையில் உதித்த மார்க்சியம்’ என்று நான் குறிப்பிட்டதற்குக் காரணம் என்ன என்ற ஒரே ஒரு கேள்விக்கு 16 வரிகள் எழுதியிருக்கிறீர்கள் அந்தப் பத்தியில். அதுதான் உங்கள் பதட்டத்தை வெளிப்படுத்துவதாக சொன்னேனே தவிர ‘முரண்பாடு’ என்ற வார்த்தையை நான் அங்கு பயன்படுத்தவில்லை.

  நான் சொல்லாத ஒரு சொல்லை எடுத்துவைத்து என் மீது குற்றச்சாட்டு சுமத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

  இதுபோலவே, உங்கள் மற்ற எல்லா வாதங்களுமே தவறு என உங்கள் வார்த்தைகளைக் கொண்டே என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் அது அனாவசியம். அதற்கான நேரமும் எனக்கு இல்லை.

  // இஸ்லத்தின் அடிப்படைகள் குறித்து வெகு நன்றாக தெரிந்து வைத்திருக்கிறேன். அதனால் தான் அந்த அடிப்படைகள் தவறு என்பதை என்னுடைய தொடரின் மூலம் நிருவிக் கொண்டிருக்கிறேன். இதை நீங்கள் மறுக்க விரும்பினால் உங்களின் அடிப்படைகளைக் கொண்டு வாருங்கள். நான் என்னுடைய அடிப்படைகளுடன் வருகிறேன். எது சரி என்பதை விவாதித்துப் பார்த்து விடுவோம். ஆனால் அது நேர்மையான தேடலுடன் கூடிய விவாதமாய் இருக்க வேண்டும். //

  என்ன நண்பரே, இரண்டு நாட்களுக்கு முன்புவரை நான் கட்டுரையின் சாரத்தைப் பற்றி விவாதிக்காமல் அடிப்படைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறேன் என்று குற்றசாட்டு வாசித்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது ‘அடிப்படைகளை கொண்டு வாருங்கள்.. விவாதித்துப் பார்த்து விடுவோம்” என்று சவால் விடுகிறீர்கள். இதை உங்கள் மனமாற்றம் என எடுத்துக் கொள்ளலாமா?

  நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், விவாதமோ, உரையாடலோ, கேள்வி பதிலோ, எதற்கும் இன்ஷா அல்லாஹ் நான் தயார். நீங்கள் தயாரா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

  அதோடு, உங்கள் பார்வையில் ‘நேர்மையான தேடலுடன் கூடிய விவாதம்’ என்றால் என்ன? அதன் நிபந்தனைகள் என்னென்ன? அது எனக்கு மட்டும் பொருந்துமா? அல்லது உங்களுக்கும் பொருந்துமா? என்பனவற்றை கொஞ்சம் விளக்கினிர்களென்றால் நலமாக இருக்கும்.

 18. 146. ‘நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், ‘உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்’ என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர்(ரலி), ‘ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்’ என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்” ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

  5187. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
  நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்கள் பெண்களுடன் (அதிகமாகப்) பேசுவதையும் சகஜமாகப் பழகுவதையும் தவிர்த்து வந்தோம். (அவ்வாறு பழம், தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால்) எங்கள் தொடர்பாக (குர்ஆன் வசனம்) ஏதேனும் இறங்கி (தடை விதிக்கப்பட்டு) விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு (பெண்களுடன் தாராளமாகப்) பேசினோம்; சகஜமாகப் பழம்னோம்.

  இந்த இரு ஹதீதுகளும் குரான், பிரபஞ்ச விதிகளுக்கு அப்பால் வீற்றிருக்கும் இறைவன் என்ற கருத்துருவாக்கத்தால் அருளப்பட்டதா அல்லது முஸ்லீம்களின் கன்னியமிக்க ரசூலின் சொந்த கைச்சரக்கா என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

 19. நண்பர் சலாஹுத்தீன்,

  ஒரு கேள்விக்கு 16 வரியில் பதிலளித்தால் பதட்டம் 10 வரியில் பதிலளித்தால் நிதானம் என்று ஏதேனும் நிகண்டு வைத்திருக்கிறீர்களா? இருந்தால் அனுப்பி வைக்கவும் படித்துப் பார்த்து உங்களைப் போல் நானும் தெளிவு(!) பெற்றுக் கொள்கிறேன். பதட்டம் எப்போது வரும் என்பதை விளக்கி நீங்கள் எழுதியதை கொஞ்சம் படிக்கிறீர்களா? \\\என் கருத்துக்களில் நான் முரண்படவும் இல்லை. பதட்டமடையவும் இல்லை. மார்க்சியம் பொருந்தாத கொள்கை எனும் அளவிற்கு அதைப் பற்றி நான் புரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் ‘அகில உலக அனைத்து பிரச்னைகளுக்கும் மார்க்சியமே ஒரே தீர்வு’ என்பதாக சொல்லிக் கொண்டிருப்பதால் உங்கள் கண்ணோட்டத்தை உங்கள் மூலமே தெரிந்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இதில் என்ன முரண்பாடு?/// என்ன கேட்கப்பட்டிருக்கிறது என்ன பதில் சொல்கிறோம். அது சரிதானா? என உள்ளுக்குள் பரிசீலித்துக் கொண்டு சரியாக இருந்தால் மட்டும் வெளியிடுவது தவறாக இருந்தால் உணர்ந்து திருத்திக் கொள்வது எனும் நேர்மையின் அடிப்படையில் செயல்படுவது என்பது எப்போதுமே மதவாதிகளால் முடியாத செயல் தான். ஒரு திருகல் அதை மறைக்க ஒன்பது தாளங்கள் இதுதான் மதவாதிகளின் பொதுவான அடையாளமாய் இருக்கிறது. இதற்கு நீங்கள் மட்டும் விலக்காகிவிட முடியுமா என்ன?

  உங்கள் அபத்தங்களை அம்பலப்படுத்தத் தொடங்கினால் அதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. அதற்கு எனக்கு நேரம் இல்லை. எனவே விவாதம் குறித்து பேசலாம்.

  விவாதத்தில் கூறப்படும் விதிமுறைகள் இருவருக்கும் பொதுவானவை தான். ஆனால் விவாதத்திற்குள் கடக்கும் முன்னர். நீங்கள் 1) விவாதத்தில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும் திரித்து வளைக்காமல் என்ன நோக்கத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கத்திற்கான பதிலை கூறுவேன் என்றும், 2) கேள்விகளை கண்டு கொள்ளாமல் பதில் கூறாமல் நழுவ மாட்டேன் என்றும், 3) விவாதத்தோடு தொடர்பற்ற எதையும் பேசமாட்டேன் என்றும் நீங்கள் உறுதி கூற வேண்டும். இந்த விதிகள் எனக்கும் பொருந்தும் என்றாலும் இதை நீங்கள் உறுதி கூறிய பிறகு தான் நான் உங்களுடன் விவாதம் செய்ய முன்வருவேன்.

  இதனை அடுத்து எந்த வடிவத்தில் விவாதம் செய்வது என்பது குறித்து பேசுவோம். கடந்த முறைகளில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு ஒரு வடிவத்தை நான் தீர்மானித்து வைத்திருக்கிறேன். உங்களுக்கு இதுபோல் வடிவம் ஏதும் இருந்தால் இரண்டையும் ஒப்பிட்டு எது சிறப்பான வடிவமோ அந்த வடிவத்தில் விவாதம் செய்வோம்.

  எந்த தலைப்பில் விவாதம் செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். கம்யூனிசமா? இஸ்லாமா? எது சிறந்தது எனும் அடிப்படையில் அந்த தலைப்பு இருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பை நான் ஒப்புகிறேன்.

  விவாதிப்பதில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் தொடரலாம்.

 20. நண்பர் செங்கொடி,

  பதட்டமும் முரண்பாடும்:

  இது மிகச் சின்ன விஷயம். முழுக்க முழுக்க உங்கள் தவறான புரிதல்களாலும் தவற்றை ஒப்புக்கொள்ள முடியாத உங்கள் பிடிவாதத்தினாலும் இது ஒரு விவாதமாகவே உருவெடுத்திருக்கிறது. இதற்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் என் மேல்தான் தவறு என நீங்கள் நிறுவும் அபாயம் இருப்பதால் முதலில் இதை தெளிவுபடுத்தும் கட்டாயம் எனக்கு நேர்ந்திருக்கிறது.

  உங்கள் பிப்-26 பின்னூட்டத்திற்குப் பிறகு பிப்-27 அன்று நான் எழுதினேன். .// உங்கள் பதட்டத்திற்கான காரணம் புரியவில்லை. // கவனிக்கவும்.. இதில் நான் உங்கள் முரண்பாடுகளை குறிப்பிடவில்லை. சுருக்கமாக ஒரே வாக்கியத்தில் கேட்க வேண்டிய கேள்வியை வளைத்து வளைத்து 16 வரிகளில் நீங்கள் எழுதியதில் உங்கள் பதட்டம் வெளிப்பட்டது. அவ்வாறு நீங்கள் பதட்டமடைந்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை என்பதையே நான் குறிப்பிட்டேன்.

  பிப்-28 அன்று நீங்கள் எழுதிய பதில் இது:

  // நீங்கள் பதட்டமடைந்திருப்பதால் என்னை பதட்டமடைந்ததாக காட்டி உங்களை மறைத்துக் கொள்ள வேண்டாம். \\\மார்க்சியம் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் .. .. .. பொதுவுடைமையை ‘பொருந்தாத கொள்கை’ எனும் அளவிற்கு அதைப் பற்றி நான் தெரிந்து வைத்திருக்கிறேன். முதலாளித்துவம் பற்றியும் அதனைப் பொய்த்துப்போகச் செய்யும் அதன் உட்காரணிகளைப் பற்றியும் ஓரளவு புரிந்து வைத்திருக்கிறேன்/// இப்படி **முரண்பட்ட** கருத்துக்களைக் கூறி உங்கள் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொண்டது யார்? //

  நான்தான் பதட்டமடைந்திருக்கிறேன் என்று சொல்ல வந்த நீங்கள்தான் **முரண்பட்ட** கருத்துக்களைக் கூறி நான் என் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொண்டதாக சொல்லியிருக்கிறீர்கள். முதன்முறையாக பதட்டத்துடன் முரண்பாட்டையும் கலந்தது தாங்கள்தான்.

  இதற்கு பிப்-28 அன்றே நான் பதில் அளித்தேன்.

  அதில் //உங்கள் பிப்-26 பின்னூட்டத்தின் மூன்றாம் பத்தியை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏற்பட்ட பதட்டம் அதில் பதிவாகியிருக்கிறது.// என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன். நான் சுட்டிக்காட்டிய இந்தப் பத்தியிலும் எதுவும் முரண்பாடு இருப்பதாக நான் குறிப்பிடவில்லை.

  // இப்படி முரண்பட்ட கருத்துக்களைக் கூறி உங்கள் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொண்டது யார்? // என்று நீங்கள் சொன்னதற்குத்தான் நான் // என் கருத்துக்களில் நான் முரண்படவும் இல்லை. பதட்டமடையவும் இல்லை. // என்று பதிலளித்தேன்.

  இவ்வளவு எழுதியும் உங்களுக்குப் புரியவில்லை போலிருக்கிறது. அதனால்தான் பிப்-28 அன்று இப்படி எழுதினீர்கள்.

  // மூன்றாம் பத்தியில் என்ன இருக்கிறது? முரண்பாடாக இருந்தால் இது முரண்பாடு என (நான் எடுத்துக் காட்டியது போல்) எடுத்துக் காட்டுவதில் உங்களுக்கு என்ன முடை வந்துவிடும்? சொல்ல வேண்டும் என்பதற்காக எதாவது சொல்லாதீர்கள். சொல்ல வேண்டியதை தெளிவாய் எளிமையாய் சொல்லுங்கள். பூடகம் பேசாதீர்கள். //

  முரண்பாட்டை முரண்பாடு என்று எடுத்துக் காட்டுவதில் எனக்கொன்றும் முடை இல்லை. ஆனால் நான் உங்கள் பதட்டத்தைப் பற்றி பேசினால் நீங்கள்தான் அதை ‘முரண்பாடு’ என தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். ‘அதை எடுத்துக்காட்டினால் என்ன முடை வந்து விடும்?’ என்று என் மேல் எரிந்து விழுகிறீர்கள். இதுவும் பதட்டத்தின் அறிகுறிதான்.

  மேலும் இதைப் பற்றி பேசினால் உங்கள் பதட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் நான் அந்த வாதத்தை அப்படியே நிறுத்தி விட்டேன். என் மார்ச்-2 பின்னூட்டத்தில் இதைக் குறித்து பேசவில்லை.

  ஆனால் நீங்கள் இதை விடவில்லை. உங்கள் மார்ச்-3 பின்னூட்டத்தில், // என்னுடைய 26ம் தேதி பின்னூட்டத்தில் நான் முரண்பட்டு பதட்டப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக கதைத்தீர்கள். நான் அவ்வாறு இல்லை என்றேன். அதை எடுத்துக்காட்டுவதோ, என்ன முரண்பாடு எப்படி பதட்டப்படுகிறேன் என்பதை விளக்குவது தான் நேர்மையானவர்கள் செய்யும் செயல். அதை ஏன் உங்களால் செய்ய முடியவில்லை. ஆக விமர்சனம் வைக்கப்பட்டால் அது சரியா தவறா எனும் நோக்கில் உள்வசமாய் பரிசீலித்துப்பார்ப்பதே இல்லை. ஒப்புக்கு எதிர்குற்றச்சாட்டாக எதையாவது கூறிவிட்டு கண்டு கொள்ளாமல் நழுவி விடுவது.// என்று இந்த வாதத்தைத் தொடர்ந்தீர்கள்.

  எனவேதான் என் மார்ச்-3 பின்னூட்டத்தில் நீங்கள் கேட்டிருந்தபடி எடுத்துக்காட்டுகளை கூறி ‘முரண்பாடு’ உங்களிடமிருந்துதான் தோன்றியது என்று விளக்கியிருந்தேன். சந்தேகமிருந்தால் மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

  மீண்டும் சொல்கிறேன். நான் சொல்லாத ஒரு சொல்லை எடுத்துவைத்து என் மீது குற்றச்சாட்டு சுமத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

  இவ்வளவு விளக்கங்களுக்குப் பிறகும் பதட்டத்தில் முரண்பாட்டை கலந்தது நீங்கள்தான் என்ற உண்மையை ஒப்புக் கொள்ள உங்கள் பிடிவாதம் இடம் தரவில்லை. எனவே மார்ச்-5-ல் கீழ்க்கண்டவாறு எழுதி மீண்டும் பழியை என்மேல் திருப்ப முயற்சிக்கிறீர்கள்.

  // ஒரு கேள்விக்கு 16 வரியில் பதிலளித்தால் பதட்டம் 10 வரியில் பதிலளித்தால் நிதானம் என்று ஏதேனும் நிகண்டு வைத்திருக்கிறீர்களா? இருந்தால் அனுப்பி வைக்கவும் படித்துப் பார்த்து உங்களைப் போல் நானும் தெளிவு(!) பெற்றுக் கொள்கிறேன். பதட்டம் எப்போது வரும் என்பதை விளக்கி நீங்கள் எழுதியதை கொஞ்சம் படிக்கிறீர்களா? \\\என் கருத்துக்களில் நான் முரண்படவும் இல்லை. பதட்டமடையவும் இல்லை. மார்க்சியம் பொருந்தாத கொள்கை எனும் அளவிற்கு அதைப் பற்றி நான் புரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் ‘அகில உலக அனைத்து பிரச்னைகளுக்கும் மார்க்சியமே ஒரே தீர்வு’ என்பதாக சொல்லிக் கொண்டிருப்பதால் உங்கள் கண்ணோட்டத்தை உங்கள் மூலமே தெரிந்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இதில் என்ன முரண்பாடு?///

  நான் முன்பு சொன்னதுபோல இது மிகச் சின்ன விஷயம். முழுக்க முழுக்க உங்கள் தவறான புரிதல்களாலும் தவற்றை ஒப்புக்கொள்ள முடியாத உங்கள் பிடிவாதத்தினாலும் இது ஒரு விவாதமாகவே உருவெடுத்திருக்கிறது. நான் எழுதிய பதில்களை முறையாக படித்து பரிசீலித்திருந்தீர்கள் என்றாலே இந்த வாதம் முன்பே முடிந்திருக்கும்.

  இதுபோன்ற சின்ன விஷயங்களை புரிந்துக் கொள்வதே உங்களுக்கு சிரமமாக இருக்கிறது என்றால் இஸ்லாத்தின் அடிப்படைகளையும் அதன் கொள்கைகளையும் நீங்கள் எந்த அளவுக்கு புரிந்து வைத்திருப்பீர்கள்? முன்முடிவுகளின்றி விவாதத்தில் எடுத்து வைக்கும் வாதங்களை நியாயமான கண்ணோட்டத்தில் பரிசீலிப்பது உங்களுக்குச் சாத்தியமா?

  விவாதத்திற்கான உங்கள் நிபந்தனைகளைப் பற்றி பிறகு எழுதுவேன்.

 21. நண்பர் சலாஹுத்தீன்,

  உண்மைகளை முன்முடிவுகளுக்கு சாதகமாக வளைக்கும் கலையில் முன்னிலும் அதிக தேர்ச்சியுடன், முனைவர் பட்டம் வாங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறீர்கள் என்பது உங்களின் விளக்கப் பின்னூட்டத்தைப் பார்க்கும் போது புரிகிறது.

  அதாவது பதட்டம் எனும் சொல்லையும் முரண்பாடு எனும் சொல்லையும் தனித்தனியாக பிரித்துப் பார்த்து பதட்டம் என்று மட்டும் தான் சொன்னேன் முரண்பாடு என்று சொல்லவில்லை. எனவே இது என்னுடைய தவறான புரிதலும், தவறை ஒப்புக் கொள்ளா பிடிவாதமும் என்று தொகுத்துக் காட்டியிருக்கிறீர்கள். ஆனால் ஒரு விசயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். திடீரென்று பதட்டம் எப்படி வரும்? ஒருவருக்கு பதட்டம் வருகிறது என்றால் அங்கு அவர் எதையோ மறைக்க முயல்கிறார் என்றும் அவர் அம்பலப்படுகிறார் என்றும் உணர்ந்து கொள்ளலாம். ஒருவர் அம்பலப்படாமல், அதை மறைக்க முயலாமல் பதட்டம் வெறுமனே வந்து விடாது.

  சொத்துரிமை பற்றிய கட்டுரை, அதை சேம்சைட் கோல் எனும் உங்கள் விமர்சனம், அவ்வாறல்ல எனும் என்னுடைய மறுப்பு என்று ஒரு விவாத பாணியில் நகர்ந்து கொண்டிருந்தது இதன் பின்னூட்டங்கள். மார்க்சியம் ஒரு தனி மனிதரின் கற்பனை என்று தொடர்ந்து நீங்கள் குறிப்பிட்டது கட்டுரையின் பேசுபொருளின் மீதான விவாதத்தை விடுத்து அந்த பேசுபொருளின் அடிப்படைகளுக்கு விவாதத்தை நகர்த்தியது. இங்கு தான் நான் ஒரு முன்நிபந்தனையை வைத்தேன். மார்க்சியம் தெரியும் தெரியாது என்று இருவிதமாய் பேசாதீர்கள். தெரியாது என்றால் கேள்வி பதில் பகுதிக்கும், தெரியும் என்றால் விவாதப்பகுதிக்கும் வாருங்கள் என்றேன்.

  இதன் பிறகு தான் நான் பதட்டமடைந்திருப்பதாக நீங்கள் கூறினீர்கள். அது எப்படி கேள்வி அதற்கான பதில் என்று சென்று கொண்டிருந்த விவாதத்தில் திடீரென பதட்டம் எங்கிருந்து வந்தது? மெய்யாகவே உங்கள் ஒரு கேள்விக்கு 16 வரியில் பதில் எழுதினால் அதன் பெயர் பதட்டம் என்றால் பிப்ரவரி 25ம் தேதி உங்களின் ஒரு கேள்விக்கு 23 வரிகளில் பதில் கூறியிருந்தேன் அப்போது நீங்கள் நான் பதட்டமடைந்திருப்பதாக கூறவில்லை. 23 வரிகளில் உங்களுக்கு தெரியாத பதட்டம் நான் 16 வரிகளில் பதில் கூறிய போது தெரிந்திருக்கிறது என்றால் அதன் பொருள் எத்தனை வரிகளில் பதில் இருக்கிறது என்பதில் இல்லை, மாறாக வேறு எதோ ஒரு காரணம் இருக்கிறது என்பதாகத் தானே இருக்க முடியும்? என்ன அந்தக் காரணம்? நீங்கள் அப்படி எந்தக் காரணத்தையும் சுட்டிக் காட்டவில்லை. அதனால் தான் உங்களுக்கு பதட்டம் வந்து விட்டது அதை மறைப்பதற்காக எனக்கு பதட்டம் வந்து விட்டதாக கூறுகிறீர்கள் என்றேன்.

  எனக்கு பதட்டம் என்று கூறிவிட்டு காரணம் காட்டாமல் நழுவிதைப் போல் உங்களுக்கு பதட்டம் எனக் கூறிய நான் நழுவிவிட முடியாதல்லவா. அதனால் தான் உங்கள் பதட்டம் எதனால் என்பதற்கு விடையாக உங்களிடமிருந்த முரண்பாட்டை சுட்டிக் காட்டினேன். ஆக முரண்பாட்டுக்கும் பதட்டத்துக்குமான தொடர்பு இது தான். நேர்மையிருந்தால் சொல்லுங்கள். நான் பதட்டமடைந்திருப்பதாக நீங்கள் கூறியதற்கான காரணம் என்ன? 16 வரிகளில் பதில் கூறினேன் என்பது தானா? அதனால் தான் எத்தனை வரிகளில் பதில் எழுதினால் பதட்டம் என்று கொள்ளப்படும் என இலக்கணம் கூறும் நிகண்டு ஏதாவது வைத்திருக்கிறீர்களா என்று கேட்டேன்.

  நீங்கள் கட்டுரையின் வாதங்களை விவாதிக்க விரும்பினால் அது இன்னின்ன விதங்களில் தவறான வாதம் என எடுத்து வைத்திருக்க வேண்டும். அல்லது அந்த வாதம் வந்த வழியான அதன் அடிப்படை குறித்து விவாதிக்க விரும்புவதாக தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் தொடக்கத்திலிருந்து உங்கள் பின்னூட்டங்கள் கம்யூனிசத்தை விட இஸ்லாம் உயர்வானது எனும் பொதிப்பிலேயே வந்து கொண்டிருந்தது. அதேநேரம் உங்களுக்கு கம்யூனிசம் தெரியும் தெரியாது என்று இருவேறு விதமாய் கருத்துச் சொல்லி குழப்பிக் கொண்டிருந்தீர்கள். அதனால் தான் தெரியாது என்றால் கேள்வி பதில் தெரியும் என்றால் விவாதம் என்று உங்களை தெளிவை நோக்கி அழைத்து வந்தேன்.

  இப்போதும் நீங்கள், மதவாதிகள் குறித்து நான் எழுதியதை உறுதிப்படுத்தும் விதமாக என்ன எழுதப்பட்டது என்ன எழுதினோம் என்பதை ஆழமாக பரிசீலிக்காமல் பதட்டம் எனும் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு சிலம்பமாட முயல்கிறீர்கள். ஏன் என்னை காரணமின்றி பதட்டமடைந்திருப்பதாக காட்ட முயன்றீர்கள் என்பதை அலசிப்பார்த்தால் அதில் தெளிவாக விடை கிடைக்கும்.நண்பர் சலாஹுத்தீன் எதையும் மேலோட்டமாக பார்க்காதீர்கள். அது உங்களை தவறான முடிவுக்கே வழிநடத்தும். ஆழமாக பரிசீலித்தால் மட்டுமே நீங்கள் சரியான இலக்கை அடைய முடியும்.

  நீங்கள் கூறுவதையும் ஒப்பத்தான் வேண்டும். தேவையற்ற இந்த விவாதத்தை விட்டுவிட்டு முக்கியமான விவாதத்துக்கு நகர்வோம். அது தான் சரியானதாக இருக்கும்.

  விவாத விதிமுறைகள் குறித்து எழுதுங்கள். நான் காத்திருக்கிறேன்.

 22. நண்பர் சலாஹுத்தீன்,

  இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்? முண்டா தட்டி எழுதி விட்டு இப்போது அமைதியாக இருக்கிறீர்களே ஏன்?

 23. kelvi ketpavargalai talayai vettiye palakka pattavargalai bathil solla sonnal ippadithan sarukkuvargal. qul Qarnain suvar matrum atarkku pinnal irukkum 1 trillion yajuj majuj inatthavar enggeh irukkirargal endra kelvikku indru varai bathil illai. angeyum ingeyum Odugirargal. avargal Satthan endru solla vendumaanal inayatthaithan solla vendum. 1400 varudamaage kaapatri vantha matham 100 varudatthirkkul Patthi kathayage pogirathu.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s