செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 20

கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

தன்னுடைய மறுப்புக் கட்டுரையின் தொடக்கத்தில் நண்பர் இஹ்சாஸ் கயமைத்தனம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, குரானின் சொற்களுக்கு அக்காலத்தில் முழுமையாக பொருள் விளக்கம் தெரியாது. பின்னர் அறிவியல் ஒவ்வொரு விசயத்திலும் நுணுகி விளக்கமளித்தபின் தற்போது தான் குரானின் சொற்களுக்கு முழுமையான பொருள் விளங்குகிறது. அவ்வாறு அறிவியல் வளர்ந்து குரானின் சொற்களுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கு முன்னர் உள்ள மொழி பெயர்ப்புகளை எடுத்துக் காட்டுவது கயமைத்தனம் என்று குறிப்பிட்டிருக்கிறார் நண்பர் இஹ்சாஸ். இந்த விளக்கத்தை மூன்று விதங்களில் கேள்விக்கு உள்ளாக்கலாம்.
1. குரானின் ஆரம்ப காலத்தை விட தற்போது தான் அதன் பொருள் முழுமையாக புரிகிறது என்றால், குரான் தன்னில் குறிப்பிடும் இதை நீங்கள் புரிந்து கொள்வதற்காக எளிமையானதாகவும், முழுமையானதாகவும் ஆக்கியிருக்கிறோம் என்பதன் பொருள் என்ன?
2. நாளை அறிவியல் மேலதிக விபரங்களை கண்டுபிடிக்கும் போது, குரான் வசனங்களின் இன்றைய பொருளும் பிழையுள்ளதாகும் என்றால் காலந்தோறும் குரான் மாறிக் கொண்டே இருக்கும் என்று பொருளாகிறதே?
3. அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்தில் கூறப்படுவது தான் குரான் வசனங்களுக்கான சரியான, சிறந்த பொருள் என்றால், ஒரு வசனத்திற்கு முகம்மது பொருள் கூறிவிட்டால் அதை விடுத்து வேறொரு பொருளை அந்த வசனத்திற்கு கூறுவது முகம்மதை மீறும் செயல் என ஹதீஸ்களில் கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறதே இதை எப்படி புரிந்து கொள்வது?

கருத்து முதல்வாதம் என்பதின் தெளிவான பொருள் இது தான். ஒரு சொல் சொல்லாக அப்படியே இருக்கும் ஆனால் அதன் பொருள் மட்டும் காலத்திற்கு தகுந்தாற்போல் மாறிக் கொண்டிருக்கும். அதாவது மாம்பழம் என்றொரு சொல் 1400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது. அன்று அதன் பொருள் மாமரத்திலிருந்து விளையும் கனி என்பதாக இருந்தது. ஆனால் தற்போது மாம்பழம் எனும் சொல் அப்படியே இருக்கிறது ஆனால் அதன் பொருள் மட்டும் ஆப்பிள் மரத்திலிருந்து விளையும் கனி என்று மாறிவிடுகிறது என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வோமோ அப்படித்தான் குரானின் சொற்களுக்கான பொருளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘அலக்’ எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம். இந்தச் சொல்லுக்கான பொருள் என்ன? இந்த வசனத்திற்கு முகம்மது என்ன விளக்கம் கூறினார்? முகம்மதின் காலத்தில் இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் வழங்கப்பட்டு வந்தது? அல்லது முகம்மதின் காலத்தில் இந்தச் சொல் பொருளற்ற, பயன்படுத்தப்படாத சொல்லா? ஒவ்வொரு வசனமும் சொல்லும்போது அதன் பொருள் என்ன? என்பதை முகம்மது கூறியிருக்கிறார், அவ்வாறு கூறாத வசனங்கள் விளக்கம் கூற வேண்டிய அளவுக்கு கடினமானதாக இல்லாமல் நடைமுறையில் இருக்கும் ஒன்றை பழக்கத்திலுள்ள சொற்களைக் கொண்டு எளிதாகக் கூறப்பட்டிருக்கிறது என்பது பொருள். இந்த அலக் எனும் சொல்லுக்கு முகம்மது விளக்கம் கூறவில்லை என்றால் அது நடைமுறையில் இருந்த சொல் என்றாகும். அப்படி நடைமுறையில் இல்லாத சொல்லாக இருந்து அதை முகம்மது விளக்காமலும் விட்டிருந்தால் உடனிருந்தவர்கள் அது குறித்து விளக்கம் கேட்டிருப்பார்கள். அப்படி விளக்கம் கேட்டு விளக்கமளித்த கதைகள் ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த அலக் எனும் சொல்லுக்கு முகம்மது விளக்கமளித்ததாகவும் இல்லை, உடனிருந்தவர்கள் கேட்டதாகவும் இல்லை, அந்தக் காலத்தில் இந்தச் சொல்லை வேறு எங்கும் பயன்படுத்தியதாகவும் தெரியவில்லை என்றால் இந்தச் சொல்லை எப்படி புரிந்து கொள்வது?

பிஜே என்பவர் கூறியுள்ள விளக்கத்தை எடுத்து மேற்கோள் காட்டியிருக்கிறார் நண்பர் இஹ்சாஸ். அந்த விளக்கம் எப்படி இருக்கிறது என்றால் அலக் எனும் சொல்லுக்கான பொருளாக நடைமுறையில் பயன்படுத்தப்படும் சொற்கள் பொருத்தமற்று இருக்கின்றன. எனவே நான் புதிதாக ஒரு சொல்லை, பொருளை பயன்படுத்தியிருக்கிறேன். அது தான் சரியானது என்கிறார். ஆனால் கட்டுரையில் நான் என்ன கூறியிருந்தேனோ அதையே அவரும் கூறுகிறார். அதாவது நடைமுறையில் அந்தச் சொல்லுக்கு பொருளாக கூறப்பட்டு வந்தவைகள் பொருத்தமற்றுப் போய்விட்டன. எனவே புதிய பொருள் தேவைப்படுகிறது. இதைத்தான் நானும் கூறியிருக்கிறேன். நடைமுறையில் இருந்த சொற்கள் ஏன் பொருத்தமற்றுப் போயின? ஏன் புதிய சொற்கள் தேவைப்பட்டன? ஏனென்றால் அறிவியல் முன்னேற்றம் காண்கிறது. அந்த முன்னேற்றத்தின் ஒளியில் வேதங்கள் மதிப்பிழக்கின்றன. அதனால் தான் புதிய சொற்களை கொண்டு வந்து முட்டுக் கொடுத்து தூக்கி நிருத்துகிறார்கள். இரத்தக்கட்டி என்பதில் தொடங்கி அந்தச் சொல்லின் நேரடிப் பொருள் என்று பிஜே கூறும் இரண்டு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது வரை இவை தான் அந்தச் சொல்லின் பொருள் என்பதை எப்படி அறிந்து கொண்டார்கள்? முகம்மதின் காலத்தில் புழக்கத்தில் இல்லாத சொல் என்றாலே “நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதை லேசாக்கி வைத்துள்ளேன்” என்பது பொய் என்றாகிவிடும். அல்லது முகம்மதின் சம காலத்தின் இலக்கியங்களில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருந்ததற்கான அத்தாட்சி வேண்டும். இரண்டில் எதையாவது செய்யமுடியுமா இந்த மதவாதிகளால்? அதிலும் பிஜே கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள், எல்லாம் நாம் சொல்வதை சிந்திக்காமல் ஏற்றுக் கொள்ளும் கூட்டம் இருக்கிறது எனும் தைரியம் தான். \\\ஆணின் உயிரணு மட்டுமோ, பெண்ணின் சினை முட்டை மட்டுமோ மனிதனின் முதல் நிலை அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொள்வதால் உருவாகும் பொருளிலிருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான்/// என்று பிஜே விளக்கம் கூறுகிறார். ஆனால் குரானோ \\\சொட்டுச்சொட்டாக ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?/// என்று கேடெகிறது. அதாவது ஆணின் உயிரணுவையே கருவாக உருவகப்படுத்தித்தான் குரானே கூறுகிறது. பாவம் இஹ்சாஸ், மதவாதியாகிவிட்டால் மூளையை கழற்றி வைத்துவிட வேண்டும் போலிருக்கிறது.

அதிலிருந்து ஆண், பெண் .. .. .. பின்னர் வேறு ஒரு படைப்பாக்குதல் போன்ற வசனங்களைக் கொண்டு குரான் கூறும் இது அறிவியலுக்கு புறம்பானது என்று காட்டியிருந்தேன். நண்பர் இஹ்சாஸோ வேறு ஒரு படைப்பாக்குதல் என்பதை வசதியாக மறந்து விட்டு வழக்கம் போல் அதிலிருந்து என்று மொழி பெயர்த்து விட்டார்கள், அவனிலிருந்து என்பது தான் சரியான மொழிபெயர்ப்பு என்று போகிறபோக்கில் கூறிச் செல்கிறார். குரான் வசனங்களிலிருந்து கரு ஆணா பெண்ணா என்பது எப்போது நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கு என்ன வரையறுப்புகள் இருக்கின்றன? ஹதீஸ்களில் முகம்மது என்ன உளறி வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டால் மொழிபெயர்ப்புகளின் மேல் பழியை துடைத்து விட்டு ஒதுங்க முடியாது என்பது எளிதில் விளங்கும்.

குரான் கூறும் கரு வளர்ச்சியும் அறிவியல் கூறும் கரு வளர்ச்சியும் கொஞ்சமும் பொருந்தாதவை என்று காட்டியிருக்கிறேன். மட்டுமல்லாது மாமிசம் சதை என்று வெகு சாதாரணமான விபரணங்கள் தான் குரானில் இருப்பது என்றும் காட்டியிருக்கிறேன். அதை கடந்து செல்லும் நண்பர் இஹ்சாஸ் வழக்கம் போலவே உள்ளங்கள் என்று மொழிபெயர்க்க வேண்டிய இடத்தில் இதயங்கள் என்று மொழி பெயர்த்து விட்டார்கள் என்று மொழி பெயர்ப்பின் மீது பழி போடுகிறார். ஒரு வாதத்திற்காக அப்படியே கொள்வோம். செவிப்புலன் என்றால் அது காது எனும் உறுப்பைக் குறிக்கும், பார்வைப்புலன் என்றால் அது கண் எனும் உறுப்பைக் குறிக்கும் அந்த வரிசையில் உள்ளங்கள் என்று வருகிறதே உள்ளம் என்பது உறுப்பை குறிக்குமா? சரி அப்போதும் உள்ளங்கள் என்று ஏன் பன்மையில் வர வேண்டும்? உங்கள் சமாளிப்புகேஷனுக்கு அளவே இல்லையா?

சொந்த இனத்தின் எதிர்பாலின உயிரணு ஒரு பெண்ணின் உடலுக்கு அன்னியப் பொருள் ஆகுமா? அது அன்னியப் பொருளானால் மனித குலமே உயிர்த்திருக்காது. தன்னை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளவே கருவை உடலில் பாதுகாக்கிறது. அந்த வசனம் குறிப்பது கர்ப்ப காலம் குறித்தா? அன்னியப் பொருள் குறித்தா? வாய்க்கு வந்தது கீரைப்பாட்டு என்றொரு பழமொழி கூறுவார்கள் எங்கள் ஊரில். அது தான் நினைவுக்கு வருகிறது.

கால்நடைகளில் எட்டு ஜோடியைத்தான் மனிதன் புசிப்பதற்கும் பலியிடுவதற்கும் பயன்படுத்தியிருக்கிறானா? ஆடு, மாடு, ஒட்டகம், நாய், பன்றி, குதிரை உள்ளிட்டு யானை வரை ஏராளமான விலங்குகளை மனிதன் கொன்று தின்னவும் பலியிடவும் பயன்படுத்தியிருக்கிறான். இதிலென்ன கணக்கு எட்டு? குரான் எட்டு தான் விதித்திருக்கிறது என்று என்று அந்த எட்டு என்னென்ன என்று நண்பர் இஹ்சாஸ் கூற முன்வர வேண்டும். அப்போது நாம் உணர்த்தலாம் அது எவ்வளவு போலித்தனமாக இருக்கிறது என்று.

இந்த மறுப்பில் நண்பர் இஹ்சாஸ் கூறியிருப்பதெல்லாம் மொழிபெயர்ப்பு தவறு என்றதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மதவாத சமாளிப்புகளைக் கடந்து இனியாவது அவர் நல்ல பதிவுகளைத் தர வேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல அல்லாவிடம் நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.

27 thoughts on “செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 20

 1. //மாம்பழம் என்றொரு சொல் 1400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது. அன்று அதன் பொருள் மாமரத்திலிருந்து விளையும் கனி என்பதாக இருந்தது. ஆனால் தற்போது மாம்பழம் எனும் சொல் அப்படியே இருக்கிறது ஆனால் அதன் பொருள் மட்டும் ஆப்பிள் மரத்திலிருந்து விளையும் கனி என்று மாறிவிடுகிறது என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வோமோ அப்படித்தான் குரானின் சொற்களுக்கான பொருளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்./// மத வியாபாரிகள், குர் ஆன் தர்ஜமா, தஃப்ஸீர்கள் மூலம் இதைதான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

 2. மிஸ்டர் செங்கொடி,

  நாங்கள் உயிருக்கும் மேலாக கருதும் ஒரு விசயத்தை கிண்டல் பண்ணுவதற்கு உனக்கு ரைட்ஸ் கொடுத்தது யாரு? பேடிப்பயல்களா? நேரடி விவாதத்துக்கு கூப்பிட்டா பின்னங்கால் எதிலோ அடிக்க ஓடி ஒழியும் செங்கொடியே. எழுத்து விவாதத்துக்கு நான் ரெடின்னு சொல்லி மாசக் கணக்காகுது. துப்புக்கெட்ட செங்கொடி விவாதத்துக்கு வராம பொட்டத்தனமா எழுதிக்கிட்டு இருக்கியே வெக்கமா இல்லை உனக்கு?

 3. இந்துக்கள் காபீர்களாம்.பிஜி கூறுகிறார்.
  குரான் கூறுகிறது
  காபிர்களோடு பழகக்கூடாது, நட்பு பாராட்டக்கூடாது.
  Qur’an 3:118
  3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்.
  4:144. முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
  5:57. முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
  60:4. இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”
  9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

 4. மறுமை நாளின் அடையாளங்கள் பற்றி ஒரு முஸ்லிம் நண்பனிடம் பேசினேன்.
  …கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது…
  ஒட்டகத்தை மூணாம் கிளாஸ் புக்குல பார்த்த நாடுகள் பல இருக்கு. அவர்கள் எப்படி இதை எடுத்துகொள்வார்கள்?

  mind blowing answers பாருங்க:
  1). இப்ப இருக்குற போன், இன்டர்நெட் வசதிகளோட உலகத்துல எந்த மூலைல என்ன நடந்தாலும் எல்லாருக்கும் தெரிந்துவிடும். (அதாவது நாம அரேபியாவுக்கு போன் போட்டு ஒட்டகம் எப்படீருக்குனு கேட்கனுமாம்)
  or
  2). ஒட்டகத்தை எலிகாப்டர் இல்லேன்னா எரோபிலேனாக எடுத்துகொள்ளலாம். அவைகளுக்கு பெட்ரோல் போடாம கவனிப்பாரற்று விடப்படும்.

  எனக்கு நன்றாக விளங்கியது.
  ..முஸ்லிமே இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்…
  பாறை எப்படி பேசும்னு எனக்கு அடுத்த டவுட் வந்தது. ஆனா கேட்கலை.

 5. முபாரக்,

  என்ன வேணும் உங்களுக்கு? ஏற்கனவே கூறியது தான். உங்களுக்கு என்ன தெரியும்? என்பதை வெளிப்படுத்திக் கூறுங்கள். விவாதிக்க வேண்டுமா? கூடாதா? என்பதை அப்புறம் பார்க்கலாம். தவளையைப் போல் கத்திக் கொண்டிருப்பதால் யாருக்கும் பலனில்லை

 6. அல்லா என்றால் அறிவியல் தான். அறிவியலை நம்பியவன் ஒரு போதும் கடவுளை நம்பி மோசம் போகமாட்டன் அரபில் -அல்லா தமிழில்-அறிவியல் ஆங்கிலத்தில்-சயின்ஸ்

 7. இஸ்லாமிய வருடத்துக்கு 355 நாள்கள்தானாமே? ஒவ்வொரு மாதமும் தொடக்கதேதியில் குழப்பம்தானாமே? பல அறிவியல் கண்டுபிடிப்புகளை முன்னறிவித்த அல்லா ஒழழுங்கான நாட்காட்டியைஅறிவிக்கவில்லையா? இதப்பத்தி ஒரு கட்டுரை போடுங்கள்

 8. ஹல்லோ செங்கொடி,

  எனக்கு என்ன தெரியும் என்பதை நான் வைக்கும் விவாதத்தில் தெரிஞ்சுக்கோங்க. நீங்க என்ன லெக்சரரா? நான் என்ன ஸ்டூடண்டா? எக்ஸாம் வைக்குறதுக்கு. ஆடுறதுக்கு தொடை நடுங்குறவன் எதுவோ கோணல்ன்னு சொன்னானாம். என்னாம்மா டபாய்க்கிறாங்கப்பா?

 9. அல்லா என்றால் அறிவியல் தான்//
  .
  .
  ஏம்பா ஒரு தபா அல்லான்னா கடவுள் இறைவன்ன்னு சொல்றீங்கோ..இன்னொருக்கா அல்லான்னா அறிவியல்னு சொல்றீங்கோ…சொல்லகராதி நாளுக்கு நாள் மாறுதே…என்னான்னு பாருங்க

 10. இஸ்லாமியர்களிடம் தொடர்ந்து விவாதம் செய்து ஒரு இடத்தில் கார்னர் செய்தால் இரண்டு வகையாக(மட்டும்)(ஏன் குரான் மட்டும்தான் அடைப்புகுறி பயன்படுத்துமா என்ன?நாங்களும் பயன்படுத்துவோமில்ல) பதில் கிடைக்கும்
  1.பிஜே இணைப்பை கொடுத்து ஹோம் வொர்க் செய்ய சொல்வது
  2.தில்லிருந்தா ஆம்புளையா இருந்தா(இதுக்கும் ஆம்புளையா இருக்குறதுக்கும் என்ன லிங்க்?ஒண்ணும் விளங்கல) நேரில் விவாதிக்க தயாரா?என கேட்பது அப்படி வராமல் போனால் காபிர்கள் கோழைப்பசங்க அல்லாவுக்கு எதிராக எவனாவது விவாதித்து விட முடியுமா என்ன அப்படின்னு எள்ளி நகையாடுதல்.உஸ்…இப்பவே கண்ணா கட்டுதே

 11. யாருப்பா அது புதுசா நரன். புது ஆளா, இல்லை செங்கொடி தான் நரன்னு வேற பெயரில் ஒளிந்து வருகிறாரா? யாராவும் இருந்துட்டுப் போங்க.

  ஏம்பா நேரில் விவாதத்துக்கு வாங்க உங்க டௌட்ஸ் எல்லாத்தையும் க்ளீர் பண்றோம்னு சொல்றோம். இதுல என்ன கிண்டல் பண்ண என்ன இருக்குது. சரி நேர்ல வேணாம். எழுழுழுழுழுத்து விவாதத்துக்கு வாங்கன்னு மாசக் கணக்கா அழைக்கிறேன். நொண்டிச் சாக்கு சொல்லி எப்படி எஸ்கேப் ஆகிறதுண்ணு பாக்குறீங்க. இப்போ நரன்னு புது பெயர்லயா. கலக்குங்க கலக்குங்க. எவ்வளவு நாள் தான் வெக்கம் கெட்டு ஓடி ஒளிவீங்கன்னு பார்க்கிறேன்.

 12. முபாரக்,

  உங்களைப் போல் பலரைப் பார்த்துவிட்டேன். உங்களைவிட அதிகமாக சத்தமிட்டவர்களெல்லாம் காணாமல் போயிருக்கின்றனர். நீங்கள் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்று பார்க்கலாம். உங்களுக்கு விவாதம் செய்ய வேண்டும் அவ்வளவு தானே. விவாதிப்போம். என்ன தலைப்பில் விவாதிக்க வேண்டும். சொல்லுங்கள். பழைய அனுபவங்களிலிருந்து விவாதம் எப்படி செய்வது என்பதற்கு சில விதிகள் வைத்திருக்கிறேன். அதை முடிவு செய்யலாமா? இல்லை அதையும் விவாதத்தில் தெரிந்து கொள்ளுங்கள் என்று உங்கள் தைரியத்தை(!) காட்டப் போகிறீர்களா?

  சீக்கிரம் சொல்லுங்கள் பார்த்து விடுவோம்

 13. செங்கொடி நீங்க யாரையும் பார்த்திருக்கலாம், இந்த முபாரக்கை விவாதத்தில் சந்தித்துப் பாருங்கள் அப்போது புரியும். இன்னும் இரண்டு நாட்களில் டீடைலுடன் வருகிறேன்.

 14. இந்த முபாரக்கை விவாதத்தில் சந்தித்துப் பாருங்கள் அப்போது புரியும்.//
  .
  .
  ஐயோ பயமா இருக்கு…
  *
  டீடைலுடன் வருகிறேன்.//
  .
  .
  அது ஒன்னும் கூரா இருக்காதே?

 15. செங்கொடி,

  மனிதன் சிறந்தவனாக வாழ வழிகாட்டுவது இஸ்லாமா? கம்யூனிசமா? என்பதே நம் வாதத்துக்கான தலைப்பு. நீங்கள் ஒழுங்காக விவாதம் செய்தால் தோத்து செல்லரித்துப்போன கம்யூனிசத்தைவிட இஸ்லாமே இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழிகாட்டி என்பதை புரூஃப் பண்ணுகிறேன். விவாதம் எப்படி செய்வது ரூல்ஸ் & ரெகுலேசன்ஸ் என்ன என்பதை எழுதுங்கள். பிறகு நான் என்னுடைய ரூல்ஸை எழுதுகிறேன்.

 16. தோழர் நல்லூர் முபாரக்

  //தோத்து செல்லரித்துப்போன கம்யூனிசத்தைவிட இஸ்லாமே இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழிகாட்டி//

  இதுதான் இந்த நினைப்புதான் உங்களைபோன்றவர்களை சிந்திக்க விடாமல் தடுத்துகொண்டிருக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து!

  ஒன்றை பற்றிய விமர்சனத்தையோ,விவாதத்தையோ தொடரும்முன் நான் சொல்வது மட்டுமே சரிஎன்று எவர் ஒருவர் நினைக்கிறாரோ அவருடன் விவாதம் செய்வதும் ஒன்று! சுவருடன் விவாதம் செய்வதும் ஒன்று!! என்பதும் உங்களைப்போன்ற அறிவாளிகளுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்!

  ஆகவே எது சரி என்பதை நீங்கள் கூறுவதையும் செங்கொடி கூறுவதையும் நடுநிலையோடு சுயபரிசோதனை செய்வதற்கு பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்!

  அதை விடுத்து நாம் செய்வது,சொல்வது மட்டுமே சரி என்ற நினைவோடு நீங்கள் மட்டுமல்ல செங்கொடி நினைத்தாலும் தவறுதான்!

  தயவு செய்து இப்ராகிம் போல திரும்ப,திரும்ப பேசுர நி?திரும்ப திரும்ப பேசுற நி? ஸ்டைலில் விவாதம் பண்ண வேண்டாம்!

 17. முபாரக்,

  நீங்கள் கூறியிருக்கும் தலைப்பு பொதுவானது. இஸ்லாமா? கம்யூனிசமா? என்றால் அதில் துணைத் தலைப்புகள் அனேகமுண்டு. குறிப்பான தலைப்பை கூறினால் அது துல்லியமாக விவாதிப்பதற்கு உதவும். குறிப்பாக ஏழ்மையை போக்குவது, பெண்ணுரிமை, குற்றங்களைத் தடுப்பது என்பன போறு குறிப்பான தலைப்புகளை எடுத்துக் கொண்டு விவாதித்தால் நன்றாக இருக்கும் அதுவும் இஸ்லாமா கம்யூனிசமா எனும் அடிப்படையில் தான் இருக்கும்.

  விதிமுறைகள்.
  1. கூறப்படும் விளக்கங்களை, கேட்கப்படும் கேள்விகளை பரிசீலித்து தகுந்த பதிலளிக்க வேண்டும். பதிலளிக்காமல் கடந்து செல்லக் கூடாது.
  2. குறிப்பிட்ட காலத்திற்குள் இடுகையை வெளியிடவேண்டும். என்னால் ஒரு வாரத்திற்குள் பதிலளித்து விடுவேன். உங்களுக்கு உகந்த காலத்தைக் கூறுங்கள் முடிவு செய்து கொள்வோம்.
  3. ஒரு கேள்வி, அந்தக் கேள்வியை இருவரும் விவாதித்து ஒரு முடிவை அடைந்து பின் அடுத்த கேள்வி எனும் முறையில் விவாதிக்க வேண்டும். அதாவது ஒருவர் ஒரு கேள்வி கேட்டு அந்தக் கேள்வியை இருவரும் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்து, அந்த முடிவை குறித்துக் கொண்டு மற்றொருவர் ஒரு கேள்இ கேட்க வேண்டும். பின் அந்தக் கேள்வியை இருவரும் விவாதித்து அதில் முடிவுக்கும் வந்து அதை குறித்துக் கொண்டு பின் அடுத்த கேள்வி என்று விவாதத்தை நகர்த்திக் கொண்டு செல்ல வேண்டும். மொத்தத்தில் கேட்கப்படும் கேள்விகள் எடுத்துக் கொண்ட தலைப்பை உள்ளடக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

  இனி உங்கள் விதிகளைக் கூறுங்கள்.

 18. செங்கொடி,

  விக்கிரமாதித்தியன் கதைதான் நினைவுக்கு வருகிறது.

 19. செங்கொடி

  உங்கள் மூன்றாவது கண்டிசன் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது, கொஞ்சம் டீடைலாக சொல்ல முடியுமா?

 20. முபாரக்,

  இதற்கு முன் சில விவாதங்கள் செய்துள்ளேன். அவைகளிலிருந்து பெற்ற பாடம் தான் மூன்றாவது விதி.

  நம்முடைய விவாதம் ஒரு கேள்வியிலிருந்து தொடங்க வேண்டும். நீங்களோ நானோ முதல் கேள்வியை கேட்க வேண்டும். அந்தக் கேள்வியை நாம் இருவரும் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தபின் எதிர்த்தரப்பிலிருந்து ஒரு கேள்வி எழுப்பபடவேண்டும். அதை இருவரும் விவாதித்து அந்தக் கேள்வியின் பதிலில் ஒரு முடிவுக்கு வந்தபின் அடுத்த கேள்வி. இப்படி தொடர வேண்டும் மொத்தத்தில் கேட்கப்படும் கேள்விகள் எடுத்துக் கொண்ட தலைப்பை நோக்கி இருக்க வேண்டும்.

  எடுத்துக்காட்டாக, பெண்கள் புர்கா அணிவது சரியானது மறுக்கமுடியுமா? என்றொரு கேள்வியை நீங்கள் முன்வைத்தால் அதை விவாதித்து சரியா தவறா என்று இருவரும் ஒரு முடிவுக்கு வந்த பிறகு நான் அடுத்த கேள்வியை எழுப்புவேன். எடுத்துக்காட்டாக பெண்கள் எல்லா சூழலிலும் என்ன உடை அணிவது என்பதை ஆண்கள் தீர்மானிப்பது ஆணாதிக்கம் மறுக்கமுடியுமா? என்றொரு கேள்வியை நான் எழுப்புவேன். இருவரும் இதை விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தபின் நீங்கள் அடுத்த கேள்வி பின் நான் அடுத்த கேள்வி. இப்படி போக வேண்டும் விவாதம். கேட்கப்படும் கேள்விகளின் திசை எடுத்துக் கொண்ட தலைப்பை உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டும். (இந்த எடுத்துக்காட்டில் இஸ்லாம் பெண்களை ஆணாதிக்கத்தில் இருத்தி வைக்கிறதா என்று தலைப்பு எடுக்கப்பட்டதாக கொள்க)

  அப்போது தான் பொத்தம் பொதுவாக சில வாதங்களை வைத்துவிட்டு எதுசரி என்பதை வாசகர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று நழுவி விட முடியாது. விவாதிக்கும் இருவரும் ஒரு முடிவை அடையவேண்டும் எனும் இலக்கு நோக்கி பயணப்பட முடியும். பெயருக்கு விவாதம் நடத்திவிட்டு காணாமல் போய்விடுவதால் யாருக்கு பயன்? எனவே தான் இப்படி ஒரு முடிவு. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

 21. மே7, 2013 at 10:37 – பின் பலமுறை வந்து பார்த்து நான் ஏமாந்து விட்டேன்! அப்ப நீங்க!

 22. செங்கொடி,

  உங்க பழைய விவாதங்களை படித்து விபரங்கள் சேமித்துக் கொண்டிருந்ததால் தான் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது. ஓகே. உங்க கண்டிசன்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய கண்டிசன். நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்பது போல் ஆதாரமில்லாமல் கம்மூனிசத்தை திணிக்கக் கூடாது. உங்க ஆட்கள் தேவையில்லாமல் குறுக்கே வந்து விவாதத்தை திசை திருப்பக் கூடாது. உங்கள் இஷ்டத்துக்கு இஸ்லாத்திற்கு விளக்கம் கொடுக்கக் கூடாது. மார்க்க அறிஞர்கள் கூறிய விளக்கங்களை யோசித்துப் பார்த்து விளங்கிக் கொள்ள வேண்டும். கண்ணியமாக எழுத வேண்டும் திட்டி வசைச் சொற்களை பயன்படுத்தி டென்சன் ஏற்படுத்தக் கூடாது. விவாதத்தலைப்பு எல்லோருக்கும் பொதுவான, எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சட்டங்களைக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்துவது இஸ்லாமா? கம்யூனிசமா? இதற்கு தனிப்பகுதியை விரைவில் ஏற்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ் உங்களை நல்வழிப்படுத்தும் வகயில் ஒரு சின்ன டர்னிங் பாய்ண்டாவது இந்த விவாதம் மூலம் உங்களுக்கு ஏற்பட்டால் எல்லாம் வல்ல அந்த ரப்பு எனக்கு தந்த ஒரு பாக்கியமாகவே கருதுவேன்.

 23. நல்லது இந்த வாதத்தின் முடிவில் உண்மையை உணர சிலருக்காவது வாய்ப்பிருக்கும்.

 24. முபாரக்,

  பழைய விவாதங்களைப் படிக்கிறீர்களா? நல்லது. உங்கள் விதிமுறைகள் .. .. ..! விவாதம் என்றாலே தகுந்த உள்ளீட்டுடன் வாதங்களை எடுத்து வைப்பது தான். மற்றப்படி உங்கள் விதிமுறைகளுக்கெல்லாம் பழைய விவாதங்களிலேயே தகுந்த விளக்கம் இருக்கிறது. தலைப்பை பொருத்தவரை, நிரந்தரமான எப்போதும் பொருந்தும் சட்டங்கள் என்று கம்யூனிசத்தில் எதுவும் இல்லை. வேண்டுமானால் மக்களை நல்வழிப்படுத்துவது இஸ்லாமா? கம்யூனிசமா? என்று கொள்ளலாம் சட்டம் தான் விவாதிக்கப்பட வேண்டும் என்றால் இஸ்லாமிய சட்டங்கள் குறித்து நீங்களும் சட்டங்கள் குறித்த கம்யூனிசப் பார்வை குறித்து நானும் விவாதிக்கலாம். விரைவில் விவாதத்துக்கான தனிப்பகுதி தொடங்குகிறேன். அங்கு உங்கள் வாதங்களை எடுத்து வையுங்கள்.

  விவாதக் களத்தில் சந்திக்கலாம்.

 25. //மார்க்க அறிஞர்கள் கூறிய விளக்கங்களை யோசித்துப் பார்த்து விளங்கிக் கொள்ள வேண்டும்….

  இங்கேதான் பிரச்சனை. ரொம்ப நாள் முன்னாடி பீஜே அவர்கள், மஹ்மத்க்கு சூன்யம் வைதுவிட்டார்கள்னு சொல்லிட்டு திரிஞ்சார். இப்ப அது இல்லை சும்மா சொன்னேன்ங்கறார்.

  அறிஞர்கள் தான் குரானை காப்பாற்ற முடியும்னா. குரான் எளிமையானது, யாவருக்கும் புரியும்னு சொன்னதெல்லாம் ஏமாற்று வேலையா?

  எனக்குத்தெரிஞ்சு சட்டங்கள் என்பது dynamic க்காக இருக்கவேண்டும். திருட்டு மென்பொருளுக்கான சட்டம் அல்லா காலத்தில் தெரிய வாய்ப்பில்லை.(அதனால்தான் பீஜே, திருட்டு software யூஸ் பண்ணினா தப்பில்லைன்னுஉளறினார்.)

  நாளைக்கு aliens பூமிக்கு வந்து, தஞ்சம் புகுந்தால், அவர்களின் lifestyle க்கு இப்போதைய உலக சட்டம் சத்தியமாக பொருந்தாது. அப்போது சட்டத்தை மாற்றுவார்கள்.

 26. //எல்லோருக்கும் பொதுவான, எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சட்டங்களைக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்துவது இஸ்லாமா? கம்யூனிசமா?// முள்ளை முள்‌ளால் எடுக்க வழியுள்ளது இந்த தலைப்பையே பயன்படுத்தலாமே! இது கருத்து மட்டுமே.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s