ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

சிங்கள இனவெறிப் பாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர் போராட்டம் தோற்றுவித்த பொதுக் கருத்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, தாங்களும் மாணவர் கோரிக்கைகளை ஆதரிப்பது போல எல்லா ஓட்டுக் கட்சிகளும் நடிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, “இலங்கையின் மீது பொருளாதாரத் தடை, போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு” என்று அடுத்தடுத்து சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, நடிப்பில் மற்றெல்லா ஓட்டுக் கட்சிகளை விஞ்சுகிறார்.

இராஜபக்சேவுக்கு எதிரா இந்த சவடால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற இதே காலகட்டத்தில்தான், சிறப்பு முகாம் என்ற சிறையிலிருந்து தாங்களை விடுதலை செய்யுமாறு ஈழ அகதிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ‘கணவனைப் பார்க்க வேண்டும்’ என்ற ஒரு மிகச் சாதாரணக் கோரிக்கைக்காக தனது இரு பிள்ளைகளுடன் சிறப்பு முகாம் எதிரில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு ஈழத்தமிழ்ப் பெண். போராட்டம் நடத்திய குற்றத்திற்காக பிள்ளைகளுடன் அவரைக் கைது செய்து சிறை வைக்கிறது ஜெ அரசு. மனைவிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து சிறப்பு முகாமிலிருந்த கணவன் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்ச்சித்திருக்கிறார்.

எந்த விதக் குற்றமும் இழக்காத ஈழத்தமிழ் அகதிகள், சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான தமிழகத்தின் முள் வேலிச் சிறையில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்க்கு முதல்வர் ஜெயலலிதாவின் கையொப்பமிட்ட ஒரு அரசாணையே போதுமானது. ஆனால், சிங்கள அரசிடமிருந்து விடுதலை வாங்கித்தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா, சிறப்பு முகாம்கள் எனும் இந்த கொடும் சிறையிலிருந்து ஈழத்தமிழ் மக்களை விடுவிக்க மறுக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதைக் கூட்டங்களை இழத்தமிழருக்காக உருவாக்கியது யார் தெரியுமா ? இன்று ஈழத்தாய் வேடமேற்றிருக்கும் ஜெயலலிதாவின் அரசுதான். இன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் பலருக்கு, கடந்த பல ஆண்டுகளாக ஈழ அகதிகளுக்கு இங்கே இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைப் பற்றித் தெரியாது. தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். தமது உடமைகளைத் துறந்து, ஏதிலிகளாக வந்திறங்கிய இம்மக்களில் சுமார் 70000 பேர் தமிழகமெங்கும் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தம் சொந்தப் பொறுப்பில் வெளியே வீடு எடுத்து தங்கியிருக்கின்றனர். இலங்கையிலிருந்து இங்கே வந்திறங்கும் ஈழத் தமிழ் மக்களை தமிழக அரசின் அதிகாரிகளும் போலீசும் அனுதபத்துக்குறிய அகதிகளாகக் கருதுவதில்லை. சந்தேகத்துக்குறிய குற்றவாளிகளாகவே நடந்துகிறார்கள். நக்சல்பாரி இயக்கத்தினரை உளவு பார்ப்பதற்கென்றே தமிழக போலீசு உருவாக்கியிருக்கும் கியூ பிரிவு உளவுத்துறை தான் அகதிகள் அனைவரையும் கண்காணிக்கிறது. கட்டுப்படுத்துகிறது. ஈழ விடுதலை இயக்கத்தை நசுக்குவது என்ற இந்திய அரசின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில்தான் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் ஈழ அகதிகள் அனைவரையும் ஒடுக்கி வருகின்றன.

சிங்கள இராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டவர்கள், குண்டடி, ஷெல்லடி பட்டவர்கள் யாராக இருந்தாலும், படகில் வந்து இறங்குபவர்களின் உடம்பில் காயம் இருந்தால், அவர்களின் மீது புலி என்ற முத்திரை குத்தி சிறப்பு முகாமுக்கு அனுப்புகிறது கியூ பிரிவு போலீசு. இது மட்டுமல்ல, லஞ்சம் கொடுக்க முடியாதவர்களுக்கும், எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கும் போலீசு விதிக்கும் தண்டனை சிறப்பு முகாம். தமிழகத்தில் உள்ள ஆறு சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு, சிறைக்கைதிக்குரிய உரிமைகள் கூடக் கிடையாது. வெளியுலகத் தொடர்பிலிருந்து முற்ரிலுமாகத் துண்டிக்கப்பட்டு, மனைவி மக்களைக்கூட பார்க்க முடியாமல் இவர்கள் தடுக்கப்படுகிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் அகதிகள், கைகால்களில் விலங்கிடப்பட்டு கொடிய கொலைக்குற்றவாளியைப் போலவே கொண்டு செல்லப் படுகிறார்கள். பல பத்தாண்டுகள் ஆனாலும் இந்த முகாம்களில் இருப்பவர்களுக்கு பிணை என்பது கிடையாது. வழக்கு, விசாரணை, விடுதலை எதுவும் கிடையாது. இது ஒருவகை ஆயுள் தண்டனை.

சிற்ப்பு முகாம்களில் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பிற முகாம்களில் உள்ள அகதிகளும் நிரந்தரமாகவே போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் கண்காணிப்பின் கீழ் தான் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அகதி இரண்டு நாட்களுக்கு மேல் முகாமுக்கு வெளியே செல்வதென்றால், வட்டாட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். அனுமதியின்றி சென்றால் முகாமிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவர். அனுமதி வாங்க வட்டாட்சியரையே பார்க்க முடியாத காரணத்தினால், பிற முகாம்களில் தங்கியிருக்கும் தமது பெற்றோர் இறந்து போகும் போது, பிள்ளைகளால் இறந்தவர் முகத்தைக் கூட பார்க்க முடிவதில்லை. பெண்கள் வேறு முகாமில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்று திரும்பினால், முகாமிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் மாலை ஆறு மணிக்குள் முகாமிற்கு திரும்ப வேண்டும் என்ற விதியின் காரணமாக, குறைந்த கூலிக்கு உள்ளூரில் மட்டும் தான் இவர்கள் வேலை செய்ய முடிகிறது. தொழில் திறமை இருப்பவர்கள் கூட நகரங்களுக்குச் சென்று நல்ல ஊதியம் ஈட்ட முடியாது.

மண்டபம், புதுச்சேரி தவிர தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்கள் எதிலுமே முறையான வீடு கிடையாது. பத்தடிக்கு பத்தடி அளவில் தகரம் அல்லது, பாலிதீன் காகிதத்தினால் வேயப்பட்ட கூரை; பராமரிப்பில்லாமல் நாற்றமெடுத்த கழிவறைகள்; மின்கம்பங்கள் ஏதும் நிறுவப்படாததால், குறுக்கும் நெடுக்குமாகத் தொங்கும் மின்சார கம்பிகள்; பகல் முழுவதும் மின்வெட்டு இரவு மட்டும் தான் மின்சாரம் என ராஜபக்சே அரசின் மேனிக் பார்ம் முள்வேலி முகாமோடு போட்டி போடுகின்ற தமிழகத்தின் அகதி முகாம்கள். முகாம்களில் பள்ளியோ ஆஅரம்ப சுகாதார நிலையமோ கூட கிடையாது. அருகாமையில் உள்ள போலீசு நிலையங்களின் போலீசார், தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம், ஏதாவது ஒரு வழக்கில் “குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கு” முகாமிலிருந்து ஆளனுப்புமாறு மிரட்டுவார்கள். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை இழைப்பார்கள். இவையெல்லாம் அகதிகளுக்கு எதிராக போலீசால் கேட்பாரின்றி இழைத்து வரும் குற்றங்கள்.

இத்தகைய கொடுமைகளை தாங்க முடியாமல் தான், உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்பிச்செல்ல முயல்கிறார்கள் அகதிகள். அவர்களையும் மடக்கி கைது செய்து சிறையில் அடைக்கிறது தமிழக போலீசு. இவ்வாறு பயணம் மேற்கொண்ட சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கடலிலேயே மூழ்கி மடிந்துள்ளனர். தாய்த் தமிழகம் ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேய்த்தமிழகமாக இருந்து வருகிறது. தொப்புள்கொடி உறவு என்று வசனம் பேசாத பிரான்சு, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தான் ஈழ அகதிகளை கௌரவமாக நடத்துகின்றன. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் விரும்புவோருக்கு குடியுரிமையும் வழங்குகின்றன.

ஆனால், இங்கோ எதுவும் கிடையாது. அகதிகள் பிரச்சனை எழுப்பப்படும் போதெல்லாம், அவர்களுக்கு வழங்கப்படும் புழுத்த அரிசியையும், உதவித் தொகையையும் கொஞ்சம் கூட்டிக் கொடுப்பதற்க்கு மேல் திமுக, அதிமுக அரசுகள் எதுவும் செய்வதில்லை. முக்கியமாக உரிமையும் சுயமரியாதையும் கொண்ட மனிதர்களாக அவர்களை அங்கீகரிப்பதிலை. இந்திய அரசு அகதிகளுக்கான ஐநா உடன்பாட்டில் கையொப்பமிடவில்லை என்பதால் ஐநா அதிகாரிகளை அகதி முகாம்களுக்குள் தமிழக அரசு அனுமதிப்பதில்லை.

ஒரு பேச்சுக்கு இங்குள்ள ஈழத்தமிழர்களை அகதி என்று அழைத்த போதிலும், இந்திய அரசைப் பொருத்தவரை ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் எல்லை தாண்டி ஊடுருவியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள். இந்த நிலைமை காரணமாக, இலங்கை மண்ணையே காண்ணால் பார்த்திராத, அகதி முகாமிலேயே பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு இங்கே அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனங்களோ வேலை தருவதில்லை.

அகதிகள் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டு நாட்டின் குடியுரிமையும் கிடைக்காது. ஈழத்தவரையே திருமணம் செய்து குழந்தை பிறந்தால், இலங்கை துணைத் தூதரகத்திற்கு தெரிவித்து குடியுரிமைக்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2009 இறுதிப் போருக்குப் பின் நாடு திரும்பிச் செல்ல விரும்பிய சிலர், ஈழம் சென்றனர். அங்கே தமது வீடோ, நிலமோ இல்லாத நிலையைக் கண்டு அதிர்ச்சியுற்று மீண்டும் தமிழகம் திரும்பினர். ஆனால் அவர்கள் முகாமை விட்டு ஒருமுறை வெளியேறி விட்டதால் மீண்டும் அகதியாக உள்ளே சேர்க்க முடியாது என்று கூறி, பதிவிலிருந்து அவர்கள் பெயரை எடுத்ததுடன் அவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளையும் நிறுத்தி விட்டது ஜே அரசு. முகாமிலுள்ள மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழக் கூட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இலங்கையில் போர் முடிந்த பின்னரும் ஈழத்தமிழ் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது ராஜபக்சே அரசு. ஆனால், ஜெயா அரசு ஈழ அகதி முகாம்களை ஏன் இன்னமும் போலீசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் ஈழத்தமிழர் அனைவரையும் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளாகவே கருதுகிறது ஜெயா அரசு. ராஜிவ் கொலையைத்க் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஈழ அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு கப்பலேற்றி அனுப்பியவர் ஜெயலலிதா. ஈழத்தமிழ் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் தடை விதித்தவர் ஜெயலலிதா. இன்றைக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இங்கே குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பவர். ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடும், இந்திய அரசின் நிலைப்பாடும் வேறல்ல.

நாம் ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைக்கு குரல் கொடுக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் உரிமைக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கும் குரல் கொடுக்க வேண்டும். அகதிகளாக மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் விரும்பினால் அந்நாட்டுக் குடியுரிமை பெறுகின்றனர். இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு, இலங்கைக் குடியுரிமையுடன், இந்தியக் குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும். தஞ்சம் புகுந்த நாட்டின் குடிமகனாவதா, சொந்த நாட்டுக்கு திரும்புவதா என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்த உரிமையை இந்தியாவும் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டுமானால், இந்திய அரசை அகதிகளுக்கான ஐநா உடன்பாட்டில் கையொப்பமிடச் செய்ய வேண்டும். சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதைக் கூடங்களிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் அனைவரையும் விடுவிக்கவும், பொய் வழக்குகளை இரத்து செய்யவும், அம்மக்களுக்கு கவுரவமான வீடுகள், வேலைவாய்ப்பு வழங்கவும் கோரி, தமிழக அரசிடம் நாம் போராட வேண்டும். இந்த போராட்டங்கள் ஈழ மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஓட்டுக்கட்சிகளையும், அவர்களுக்கு காவடி தூக்கும் சந்தர்ப்ப வாதிகளையும் அடையாளம் காட்ட வேண்டும்.

இந்திய அரசுதான் ஈழ மக்களின் போராட்டத்தை கருவிலேயே சிதைத்தது. அந்தக் கொள்கையின் தொடர்ச்சி தான் அகதிகள் மீதான இந்த அடக்குமுறை. அவர்களுடைய உரிமைகளை உத்திரவாதம் செய்வது சர்வதேச பாட்டாளி வர்க்கம் எனும் முறையில் நமது கடமை.

 சிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
 அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக்குடியுரிமை வழங்கு!
 ஈழத்தமிழ் அகதிகள் மீதான போலீசு கண்காணிப்பு கட்டுப்பாடுகளை நீக்கு!
 கவுரவமான வேலை வாய்ப்பு, குடியிருப்பு வழங்கு!

இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

ஜக்காத், ஜஸ்யா இந்த இரண்டு வரி விதிப்புகள் குறித்து தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. ஏனென்றால் ஜக்காத் எனும் வரிவிதிப்பை மிகப் பெரும் பொருளாதாரத் திட்டமாக இஸ்லாமியர்களாலும், இஸ்லாம் ஏனைய மதத்தவர்களை வதைப்பதன் அடையாளமாக ஜஸ்யா எனும் வரிவிதிப்பை இஸ்லாமியர் அல்லாதவர்களும் மிகப் பெரியதாக ஊதிப் பெருக்குகின்றனர். இந்த இரண்டு வித வரிகள், இதுவல்லாத எப்படி வியாபரம் செய்யலாம், செய்யக்கூடாது என்று குரானிலும் ஹதீஸிலும் இருக்கும் நன்னெறிப் போதனைகள், வட்டியில்லா வங்கி உள்ளிட்டவற்றைச் சேர்த்துத்தான் இஸ்லாமியப் பொருளாதாரம் என்கிறார்கள். அண்மையில் வெடித்துக் கிளம்பிய உலகப் பொருளாதார மந்தத்தின் போது, மீப்பெரும் மாற்றாக இஸ்லாமியப் பொருளாதாரம் முஸ்லீம்களால் முன்வைக்கப்பட்டது.

பொருளாதாரம் என்பது வெறும் வரவு செலவுக் கணக்கும், திட்டங்களும் அல்ல. அது அரசுடன் தொடர்புடையது. அரசு என்பதை அதன் முழுமையான பொருளில் விளங்கிக் கொள்ளாமல் பொருளாதாரம் என்பதை மட்டும் தனித்து விளங்கிக் கொள்ள முடியாது. எந்தவித அரசாக இருந்தாலும் அது அனைவருக்கும் பொதுவான அரசாக ஒருபோதும் இருக்க முடியாது. அரசின் நோக்கம், அதன் சட்டங்கள், அதன் பாதை போன்றவை அந்த அரசு எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறதோ அந்த வர்க்கத்தின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும். அந்த அரசை விரும்புபவர்கள், நேசிப்பவர்கள் என்னதான் நடுநிலையான அரசு, அனைவருக்கும் நீதமான அரசு என்று கூறிக் கொண்டாலும் சாராம்சத்தில் அதன் வர்க்க அடிப்படையை விட்டு எந்த அரசும் விலகிவிட முடியாது. ஓர் அரசு தன் குடிமக்களிடம் எந்த அளவுக்கு வரி வசூலிக்கிறது என்பதல்ல என்னென்ன விதங்களில் அதை செலவு செய்கிறது என்பதை உள்ளடக்கியதே பொருளாதாரம் என்பதன் உண்மையான பொருள். இந்த அடிப்படையில் பாட்டாளி வர்க்கப் பொருளாதாரம், முதலாளித்துவப் பொருளாதாரம் என்று இருக்க முடியுமேயன்றி இஸ்லாமியப் பொருளாதாரம் கிருஸ்தவப் பொருளாதாரம் என்பது போல் இருக்க முடியாது. ஏனென்றால் மதங்களுக்கோ, அதன் மூலங்களுக்கோ வர்க்கங்களும் தெரியாது, வர்க்க பேதங்களும் புரியாது.

இஸ்லாமிய அரசு இரண்டுவித வரிவிதிப்புகளை தன் குடிமக்களிடம் செய்ய வேண்டுமென்று முகம்மது வலியுறுத்தி இருக்கிறார். முஸ்லீம்களிடம் ஜக்காத் எனும் வரியும், முஸ்லீமல்லாதவர்களிடம் ஜஸியா எனும் வரியும் விதிக்கப்படும். இது மத அடிப்படையில் விதிக்கப்படும் தனித்தனி வரிகளாக தெரிந்தாலும் தன்மைகளில் இரண்டும் வேறு வேறானவை. முஸ்லீம்களிடம் விதிக்கப்படும் ஜக்காத் அவர்களின் சொத்துகளைக் கணக்கிட்டு அதில் இத்தனை விழுக்காடு எனும் அடிப்படையில் வசூலிக்கப்படுவது. இதற்கு மாறாக ஜஸியா சொத்துகளின் மீதல்ல, அந்த நாட்டில் அவர்கள் தங்கியிருப்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட அரசின் செலவுகளுக்கான ஈடாக வசூலிக்கப்படுகிறது. இவைகளில் வசூலிக்கப்படும் மதிப்பு முஸ்லீம்களுக்கு கூடுதலா? ஏனைய மதத்தினர்களுக்கு கூடுதலா? என்பதைவிட ஒப்பீட்டளவில் ஏனைய மதத்தினர்களின் குடியுரிமை குறித்த வேறுபாடாகவே கருத வேண்டும். இந்த ஒன்றிலிருந்தே புரிந்து கொள்ள முடியும் ஓர் (இஸ்லாமிய) அரசு அனைவருக்கும் சமமான அரசாக இருக்க முடியாது என்பதை.

ஜக்காத்தும், ஜஸியாவும் யாருக்கு எவ்வளவு விதிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஹதீஸ்கள் இருக்கின்றன. அந்த அடிப்படையில் ஜக்காத் என்பது முஸ்லீம்களின் சொத்துகள் மீது விதிக்கப்படும் இரண்டரை விழுக்காடு வரியாகும். ஒரு முறை வரி செலுத்திய சொத்துக்கு அவரின் ஆயுள் வரை மீண்டும் வரி செலுத்த வேண்டியதில்லை. (இந்த அம்சத்தில் ஒருமுறை வரி செலுத்தினால் போதும் என்றும், ஆண்டு தோறும் செலுத்த வேண்டும் என்றும் இஸ்லாமிய அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு) ஜஸியா என்பது ஜக்காத்தை விட மதிப்பில் குறைவான வரிவிதிப்பு ஆனால் பெண்கள் குழந்தைகள் தவிர ஆண்கள் அனைவர் மீதும் விதிக்கப்படுவது. ஜக்காத் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக சொத்துடையவர்கள் மீது மட்டுமே விதிக்கப்படுவது ஏனையவர்கள் மீது இல்லை. இந்த சொற்பமான வரி விதிப்பைக் கொண்டு ஏழைகளுக்கு என்ன நலத்திட்டங்களை வழங்கி அவர்களை நிலை உயர்த்திவிட முடியும்? ஆனால் இந்த ஜக்காத் தான் ஏழைகளே இல்லாமல ஆக்கக்கூடிய இஸ்லாத்தின் அருட்கொடை என்கிறார்கள் முஸ்லீம்கள். இதற்கு உமர் காலத்தில் ஜக்காத் வாங்க ஆளே இருக்கவில்லை என்று ஹதீஸ் எடுத்துக் காட்டு வேறு. ஆனால் வழிப்பறி போர்களில் கைப்பற்றப்பட்ட பொருட்களுக்காக சச்சரவு நடந்திருக்கிறது என்றும், முகம்மதின் சொத்தை திரும்பக் கேட்டு போரே நடந்திருக்கிறது என்றும் அதே ஹதீஸ் நூல்களில் தகவல்கள் கிடைக்கின்றன. இதை கருத்தில் கொண்டு பார்த்தால் அன்றைய அரசின் ஏழைகள் சிலரை ஜக்காத்தினால் அல்ல வழிப்பறி போர்கள் மூலம் கிடைத்த ‘கனீமத்’ பொருட்களின் மூலமே வறுமையை ஈடுகட்டியிருக்கிறது என்பது புலனாகும்.

ஜக்காத்தைக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முகம்மது வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

.. .. .. தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின்பால் அவர்கள் உள்ளம் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்காகவும், அல்லாவின் பாதையில் போர்புரிவோருக்காகவும், வழிப் போக்கர்களுக்குமே உரியவை. இது அல்லாஹ் விதித்த கடமையாகும் .. .. .. குரான் 9:60

இந்த வசனம் தரித்திரர்கள், ஏழைகள், வழிப்போக்கர்கள் இவர்களுக்கு மட்டுமல்லாது ஜக்காத்தை வசூலிப்பவர்களுக்கான ஊதியமாகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடனை மீட்பதற்காகவும், இராணுவ வீரர்களுக்காகவும், மதம் மாற்றுவதற்கும் ஆகிய அனைத்திற்கும் ஜக்காத்தை செலவு செய்யலாம் என அனுமதிக்கிறது. இதைக் கொண்டு எப்படி ஒரு நாட்டின் ஏழ்மையை நீக்க முடியும்? இப்போதைய அரசுகள் வறுமை ஒழிப்பு திட்டங்களை தீட்டுகின்றனவே அப்படியா? இஸ்லாம் தோன்றியது முதல் இப்போதுவரை இஸ்லாமே ஆட்சியிலிருக்கும் சௌதி அரேபியாவில் இன்றுவரை ஏழ்மையை ஒழிக்க முடியவில்லை என்பது ஒன்றே போதும் ஜக்காத் ஒரு மாயை தான் என்பதை நிறுவுவதற்கு.

மட்டுமல்லாது அங்கு தற்போது குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் வெட்டிக் குறைக்கப்படுவதும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுவதும், கடுமையான சட்டங்கள் இருந்தும் சின்னச் சின்ன திருட்டுகள் வெகுவாக அதிகரித்து வருவதும், வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாவதும் ஏழ்மை உருவாகும் இடம் எது என்பதையும்; இதுபோன்று தர்மங்கள் செய்து விடுவதனால் ஏழ்மை ஒழிந்து விடாது என்பதையும் வெளிப்படையாக போட்டு உடைக்கிறது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் சொத்திருப்பவர்கள் என்ன காரணத்திற்காக ஜக்காத் கொடுக்க வேண்டும் என குரான் குறிப்பிடுகிறது தெரியுமா? கீழ்க்காணும் குரான் வசனத்தையும், ஹதீஸையும் பாருங்கள்.

அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக .. .. .. குரான் 9:103

.. .. .. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் செல்வத்தில் எஞ்சியதை தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்று விளக்கமளித்தார்கள். அபூ தாவூத் 1417

செல்வத்தை தூய்மையாக்குவது என்றால் என்ன? ஏன் செல்வம் அசுத்தமாகியது? ஒன்று இது வழிப்பறியின் மூலம் வந்த செல்வமல்லவா எனும் குற்ற உணர்ச்சி முகம்மதுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இரண்டு இது தான் வறுமையை ஏற்படுத்துகிறது என்று ஏதோ ஒரு விதத்தில் முகம்மது அறிந்ததனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் என்னால் தான் செல்வம் வழங்கப்படுகிறது என்று கூறிய அதே அல்லா தன்னால் வழங்கப்பட்ட செல்வத்தை அசுத்தமானது என்றும் தர்மம் கொடுத்து தூய்மை செய்து கொள் என்றும் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லையே

வியாபாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு சில பல கட்டுப்பாடுகளை முகம்மது விதித்திருக்கிறார். அளவுகளில் மோசம் செய்யாதீர்கள், பொய்யான தகுதிகளை பொருளின் மீது ஏற்றி வியாபாரம் செய்யாதீர்கள், ஒருவரிடம் வியாபாரம் பேசிக் கொண்டே அதே பொருளை மற்றொருவரிடம் வியாபரம் பேசாதீர்கள், அதிக விலை வேண்டும் என்பதற்காக பதுக்கி வைக்காதீர்கள், பொருளே இல்லாமல் வியாபாரம் பேசாதீர்கள் என்பன போல பல அறிவுரைகளை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடம் முகம்மது கூறியிருக்கிறார். ஆனால் மறந்தும் கூட விலையை எப்படி நிர்ணயம் செய்வது என்பதைக் கூறவில்லை. மட்டுமல்லாது எவ்வளவு லாபம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என மறைமுகமாக அனுமதி வழங்கியிருக்கிறார்.

.. .. .. உங்களில் ஒருவருக் கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படும் வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள் .. .. .. குரான் 4:29

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் உண்மை பேசி குறைகளை தெளிவு படுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும். குறைகளை மறைத்து பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும். புஹாரி 2079

இதில் முதலிலுள்ள குரான் வசனத்தில் விற்பவரும், நுகர்பவரும் ஏற்றுக் கோள்ள வேண்டும் என்பது தான் நிபந்தனை. விற்பவர் கூறும் விலையை நுகர்பவர் ஏற்றுக் கொண்டால் அது தான் ஒருவருக் கொருவர் பொருந்திக் கொள்வது. நுகர்பவர் ஏற்றுக் கொள்வாரென்றால் எந்த விலையை வேண்டுமானாலும், எவ்வளவு லாபம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதுவே ஹதீஸில் பரக்கத் கிடைக்கும் பரக்கத் கிடைக்காது என்று மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. அதாவது பர்க்கத் என்பது இறந்த பிறகு கிடைக்கும் ஒருவித பலன். இந்த உலகில் கொள்ளை லாபமடித்தால் செத்த பிறகான உலகில் உனக்கு பலன் கிடைக்காது. இந்த உலகில் அது குற்றமோ கூடாததோ அல்ல. ஒரு பக்கம் ஏழ்மையை ஒழிக்க வந்த மாமருந்து என்று ஜக்காத்தை போற்றுகிறார்கள். மறுபுறம் குரானும் ஹதீஸும் லாபத்தை ஆதரிக்கின்றன. லாபக் கோட்பாடுதான் வறுமை நீடிப்பதிலும் அதிகரிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது எனும் உண்மை விளங்குமா இந்த மதவாதிகளுக்கு?

வட்டி என்பது இஸ்லாத்தில் அறவே கூடாத ஒன்று. வங்கியில் பணிபுரிவது இஸ்லாத்திற்கு விரோதமானது என ‘ஃபத்வா’ கூறும் அளவுக்கு வட்டியின் மீது இஸ்லாமியர்களுக்கு ஒவ்வாமை உண்டு. அதனால் தான் அண்மைக் காலங்களில் இஸ்லாமிய வங்கி எனும் ஒன்றை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். தற்காலத்தில் வங்கியை நிர்வகிப்பதற்கு வட்டியின் மூலம் கிடைக்கும் லாபமே பயன்படுகிறது. என்றால் இஸ்லாமிய வங்கி எவ்விதம் செயல்படுகிறது? ஏனைய வங்கிச் செயல்பாடுகள் போலவே மக்களிடமிருந்து சேமிப்பு பெறப்படுகிறது ஆனால் அதற்கு வட்டி கிடைக்காது. அதேநேரம் வங்கி கொடுக்கும் கடன்களுக்கு அதை பயன்படுத்தி செய்யும் தொழில்களிலிருந்து கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட விழுக்காடு வங்கிக்கு கடனுடன் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். தொழில் நட்டமடைந்து விட்டாலோ கடனை மட்டும் திருப்பச் செலுத்தினால் போதுமானது. இது தான் இஸ்லாமிய வங்கியின் அடிப்படை. வட்டி ஒரு விதத்தில் சுரண்டலென்றால் இது வேறொரு விதத்தில் சுரண்டல். இதிலென்ன மீட்சி இருக்கிறது ஏழைகளுக்கு?

இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கும் பொருளாதாரமுறை நடைமுறை படுத்தப்பட்டால் உலகில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் விதந்தோதும் மதவாதிகள் ஜக்காத்திலும் சில நன்னெறி போதனைகளிலும் என்ன பொருளாதாரக் கூறுகள் இருக்கின்றன என்பதை என்றேனும் சிந்தித்திருப்பார்களா? ஏழ்மை குறித்தும் தெரியாது, பொருளாதாரம் குறித்தும் தெரியாது என்றால் இஸ்லாம் ஏழ்மையை நீக்கும் என்பது வறட்டு ஜம்பமே.

சௌதி நிடாகத் சட்டம்: புரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

அண்மையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், மத்திய அமைச்சர் வயலார் ரவியும் சௌதி அரேபியா சென்று வந்தார்கள். அரேபியாவில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் திரும்பி வந்துவிடப்போவதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 20 லட்சம் தொழிலாளர்கள் இன்னும் இரண்டு மாதத்தில் திரும்பி வரவிருப்பதாக செய்தி ஊடகங்கள் பீதியூட்டுகின்றன. கேரளத்தைப் போல் தமிழகத்தில் இது மிகப்பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கவில்லை என்றாலும் இதை அறிந்திருப்பவர்கள் சௌதி அரசு சொந்த நாட்டு தொழிலாளர்களுக்கு சாதகமாக எடுத்த முடிவு என்றும், அதற்காக இந்திய அரசு செய்யும் முயற்சிகள் இந்தியத் தொழிலாளர்கள் மீது இந்திய அரசு கொண்டிருக்கும் அக்கரை என்றும் இதனைக் கருதுகிறார்கள். இரண்டுமே தவறான எண்ணங்கள்.

சௌதியின் தொழிலாளர்களுக்கான சட்டம் என்பதை விட இருபது லட்சம் தொழிலாளர்கள் திடீரென இந்தியாவுக்கு திரும்பினால் அதனால் ஏற்படப்போகும் விளவுகள் குறித்தே அரசுகள் கவலைப்படுகின்றன. அதாவது அரசுகள் ஏற்கனவே கைக்கொண்டிருக்கும் மறுகாலனியாக்க கொள்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு இயல்பாக அரசுகளின் மீது ஏற்படும் கோபத்தை மடைமாற்றவே இலவசப் பொருட்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி திசைதிருப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இருபது லட்சம் பேர் வேலையிழந்து வந்து குதித்தால் .. .. ..? அதுமட்டுமா, சௌதியைத் தொடர்ந்து ஏனைய வளைகுடா நாடுகளும் இது போன்ற முடிவுகளை எடுத்து சட்டமியற்றினால் .. ..? மெய்யாகவே இந்தியாவுக்கு அது நெருக்கடியாகவே இருக்கும். ஆனால் இந்த நிலையை இதுவரை இந்தியர்களை வைத்து தங்கள் வேலைகளை செய்து கொண்டார்கள் தற்போது அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள் என்பதாக புரிந்து கொள்ள முடியுமா?

பணக்கார நாடான சௌதி அரேபியா பற்றாக்குறை பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு சௌதி குறித்து அறிந்து கொள்வது அவசியம். எரிஎண்ணெய் கண்டுபிடிப்பதற்கு முன்புவரை அது ஓர் ஏழை நாடு. ஒரு ரொட்டிக்காக கொலை செய்வது என்பது சாதாரணமாக இருந்தது. எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகோ அமெரிக்க இறக்குமதி கார்களில் பறந்தார்கள். உள்கட்டமைப்பு வசதிகள் மிகவிரைவாக ஏற்படுத்தப்பட்டன. அதற்கான உடலுழைப்புத் தொழிலாளர்கள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர். இன்று ஆசியாவின் ஏனைய நாட்டு மக்களைவிட வாழ்க்கைத்தரம் சற்றே மேம்பட்ட நிலையில் சௌதி மக்கள் இருக்கிறார்கள்.

சிறிய திருட்டுக்குக் கூட கையை வெட்டுவது போன்ற கடுமையான சட்டங்கள் இருக்கும் இங்கு அண்மை ஆண்டுகளில் திருட்டும் வழிப்பறியும் மிக அதிக அளவில் நடக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்களை குறிவைத்து சௌதிகளால் நடத்தப்படும் இந்த திருட்டுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவைகளை எப்படி புரிந்து கொள்வது?

எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் அமெரிக்காவின் அராம்கோவின் கட்டுப்பாட்டிலேயே மொத்த எண்னெய் வளமும் இருந்தது. பின்னர் அது தேசியமயமாக்கப்பட்டு சௌதி அராம்கோ என்று மாற்றப்பட்டு விட்டது என்றாலும் பெரும்பாலான எண்ணெய் வயல்கள் அமைச்சர்களுக்கும், மன்னர் குடும்பத்தினருக்கும் தனிச் சொத்தாக இருக்கின்றன. அமிதமாக வந்த வருவாயினாலும், தனிச் சொத்தாக எண்ணைய் வயல்களை வளைத்துக் கொண்டிருப்பதை மறைப்பதற்காகவும் மக்களுக்கு ஏராளமான சலுகைகளும் மானியங்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஊடுபாவாக மதமும் தாராளமாக பயன்படுத்தப்பட்டது. மணமாகும் அனைவருக்கும் வீடுகட்ட நிலமும் மானியக் கடனும் வழங்கப்பட்டது. திருமண உதவி, கல்வி உதவி, படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் விரும்பும் அனைவருக்கும் வேலை, முதியோர் உதவித்தொகை, மாதாந்திர உதவி என ஏராளமான சலுகைகள் சவுதிகளுக்கு வழங்கப்பட்டதால் வேலை செய்யாமலேயே ஓரளவு நிறைவுடன் வாழ்ந்தார்கள். மறுபக்கம் உலகெங்கும் மதரசாக்கள் ஏற்படுத்துவதற்கும், மதத்தை பரப்புவதற்கும் நிதி வழங்குதல், உள்நாட்டில் தொழுகை நேரங்களில் கட்டாயம் கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்றும், மக்கள் தொழுகை வேளைகளில் ஒழுங்காக வணக்கத்திற்கு செல்கிறார்களா எனக் கண்காணிக்க தனி போலிஸ் படை(முத்தவ்வா) என்றும், மன்னர் தன்னை மன்னர் என அழைத்துக் கொள்ளாமல் இரண்டு புனிதப்பள்ளியின் பாதுகாவலர் என அழைத்துக் கொள்வது போன்றவை மதவாத நோக்கில் மக்களை திருப்திப்படுத்த மக்களின் சொத்தான எண்ணெய் வளம் வகைதொகையற்று சூரையாடப்பட்டது.

இந்த நிலையில் தான் இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சனை வந்தது. மதம் எனும் அடிப்படையில் பலஸ்தீனத்திற்கு உதவுவது தார்மீகக் கடமையாக, அமெரிக்கா இன்றி அனுவும் அசையமுடியாத வளைகுடா நாடுகள், அமெரிக்காவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தாலும், மக்களுக்காக எதையாவது செய்தாக வேண்டிய நிலையில் எகிப்தின் முன்முயற்சியால் இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொள்ளாவிட்டால் எண்ணெய் தரமாட்டோம் என்று அமெரிக்காவுக்கு எதிராக எழுபதுகளின் தொடக்கத்தில் போராட்டம் நடத்தின. சில நாட்களிலேயே இந்த போராட்டத்தை தெனாவட்டாக முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கா வளைகுடா நாடுகளின் மீது குறிப்பாக சௌதியின் மீது இரண்டு நிபந்தனைகளை விதித்தது. எதிர்காலத்தில் இனி எப்போதும் இதுபோல் எண்ணெய் தாரா போராட்டம் நடத்தக் கூடாது. எண்ணெய் மூலம் கிடைக்கும் பணத்தை அமெரிக்காவிலும், அமெரிக்க நிறுவனனங்களிலும் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதற்கு பகரமாக மக்கள் போராட்டம் வெடித்தால் மன்னர் குடும்பத்தை பத்திரமாக காப்பற்றி சொத்துகளை மீட்டுத் தரவேண்டிய பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும். இதன்பின்னர் அமெரிக்க பகாசுர நிறுவனங்கள் சௌதியை தங்கள் விருப்பத்துக்கு எடுத்துக் கொண்டன. சௌதியின் எந்த பெரிய ஒப்பந்தமும் அமெரிக்க நிறுவனங்களுக்கே கிடைத்தன. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சில ஆண்டுகளாகத்தான் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சௌதியிலோ சில பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்க நிறுவனங்களின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உலகெங்கும் அமெரிக்க நிறுவனங்கள் என்ன செய்தனவோ அதையே சௌதியிலும் செய்தன. விளைவு, மக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மானியங்களும் சலுகைகளும் படிப்படியாக வெட்டிக் குறைக்கப்பட்டன. உதவிகள் பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் படிப்படியாக புகுத்தப்பட்டன. சலுகை பெற்ற பாட்டாளி வர்க்கம் போல் இருந்த சௌதி மக்கள், ஏகாதிபத்திய சுரண்டலால் தங்கள் மானியங்கள் குறைக்கப்பட ஆத்திரம் கொள்கிறார்கள். ஆனால் தங்களை சுரண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் மீதும், தங்களை ஏய்க்கும் ஆளும் வர்க்கங்கள் மீதும் ஏற்பட வேண்டிய ஆத்திரம் தவறாக தேசிய உணர்வு கிளரப்பட்டு மூன்றாமுலக நாடுகளின் தொழிலாளர்கள் மீது திருப்பி விடப்பட்டிருக்கிறது. அதனால் தான் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களும் வழிப்பறிக் கொள்ளைகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாக அரபுலகில் நடந்த வானவில் புரட்சிகள். தங்களை ஆண்ட சர்வாதிகளை எதிர்த்து வெகுண்டெழுந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி அரசுகளை திகைக்க வைத்தார்கள். அடக்குமுறைகளை எதிர்கொண்டு வீதிகளில் இறங்கி அரசை தூக்கியெறிந்தார்கள். இதே போன்றொரு கிளர்ச்சி சௌதியிலும் முன்னெடுக்கப்பட்டது. சௌதியின் மூன்றாவது பெரிய நகரமான தம்மாம் நகரும் அதனைச் சுற்றிலும் அதிகமாக வாழும் ஷியாக்கள் ஆளும் இனமான ஷன்னிகளை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார்கள். ஆனால் அப்போராட்டம் கடுமையான ஒடுக்குமுறையால் அடக்கப்பட்டது. ஷியாக்களின் போராட்டம் அடக்கப்பட்டு விட்டாலும் இன்னும் அது கனன்று கொண்டு தான் இருக்கிறது.

இந்த இரண்டு காரணங்களால், அதாவது தொடரும் மானியக் குறைப்பால் மக்களின் ஆத்திரமும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள்; ஷியாக்கள் மீண்டும் போராட்டம் நடத்தினால் அது ஷியாக்களை மட்டுமின்றி ஷன்னிகளிடமும் பரவும். இந்த இரண்டு அபாயங்களையும் களைவதற்கு சௌதி ஆளும் வர்க்கம் கண்டுபிடித்திருக்கும் குறுக்கு வழி தான் நிடாகத் சட்டம்.

இந்தச் சட்டத்தின்படி, சட்டவிரோதமாக யாரும் சௌதிக்குள் தங்கியிருக்கவோ வேலை செய்யவோ முடியாது. அதாவது முறைப்படியான ஆவணங்கள் மூலம் வந்து வேலை செய்யாமல், புனிதப் பயணத்திற்காக வந்து திரும்பாமல் இங்கேயே தங்கி வேலை செய்பவர்கள் கண்பிடித்து தண்டிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள். வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைந்தது பத்து விழுக்காடு அளவுக்கு சௌதிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும். இதை குறித்த காலத்திற்குள் செய்ய மறுக்கும் நிறுவனங்களின் அனுமதி இரத்து செய்யப்படும். இவைதான் நிடாகத் சட்டத்தின் முக்கியமான அம்சங்கள். இதன் மூலம் பெருவாரியாக சௌதி இளைஞர்கள் வேலை பெறுவார்கள் என்றும், நுகர்வு வெறியில் திளைக்கும் அவர்கள் வேலை சம்பளம் எனும் வட்டத்தில் சிக்கிக் கொண்டால் போராட்டம் போன்ற உணர்வுகளை மழுங்கடித்துவிடலாம் என்றும் சௌதி ஆளும் வர்க்கம் எண்ணுகிறது. தெளிவாகச் சொன்னால் தேவைப்பட்ட போது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உழைப்பாளிகளின் வியர்வையில் தங்களை பளபளப்பாக்கிக் கொண்ட சௌதி தேவை தீர்ந்ததும் கறிவேப்பிலையைப் போல் தூக்கி வீசிவிட எண்னுகிறது.

புரட்சிகார உணர்வுகள் மக்களிடம் கிளர்வதைக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் தங்கள் சுரண்டலை குறைத்துக் கொள்வதில்லை, அதிகரிக்கவே செய்யும். அது மேலும் மக்களை ஒருங்கிணைத்து போராட்டத்தின் வாயிலை அண்மிக்கும். ஆனால் இவைகளை துரிதப்படுத்த இதர அரபு நாடுகளைப் போலவே சௌதியிலும் புரட்சிகர இடதுசாரி கட்சிகள் செயல்படவில்லை. எப்போதும் இந்த நிலையே நீடிக்கும் என்று எண்ண முடியுமா? முடியாது என்பதை சௌதியின் கடந்தகால வரலாறே நிரூபிக்கிறது. முன்னர் நஜ்ரான் பகுதியில் இயங்கிய இடதுசாரி இயக்கத்தை அதன் உறுப்பினர்களை கடவுள் நிந்தனையாளர்கள் என்று கூறி மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து ஒழித்துக் கட்டியது சௌதி அரசு. இனி வரப்போகும் இடதுசாரி இயக்கங்களை அவ்வளவு சுலபமாக ஒழித்துவிட முடியாது. ஏனென்றால் அரசு என்பது முதலாளிகளுக்கானதேயன்றி மக்களுக்கானதல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். மாட்டுவண்டி சக்கரத்தை தொடர்வண்டியில் பூட்டி ஓட்டுகிறேன் என்று அவர்களை அதிக காலத்துக்கு ஏமாற்ற முடியாது அல்லவா.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 29

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 29

ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தொடரவும் அதைப் பாதுகாக்கவும் போராடிய ஒரு தலைவர்

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க ஸ்டாலினின் நடத்திய பேராட்டத்தில் சரிகளையும் தவறுகளையும் ஆராயும் போது, அவதூறுகளை அது தரைமட்டமாக்குகிறது. ஸ்டாலின், வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் பாத்திரம் என்பதன் மூலம், அவர் நேர்மையாக பாட்டாளி வர்க்கத்துக்காக போராடினார் என்பதும், ஸ்டாலினால் இதை விட எதுவும் செய்ய முடியாது என்று கூறும் அனுதாபம் அல்லது வரலாற்றை விளக்கும் எல்லா அடிப்படையின் பின்பும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டுச் செல்வதை கோருகின்றது. ஸ்டாலின் காலம் அதிகார வர்க்க ஆட்சி, அது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் சோசலிசம் அல்ல, என்ற அனைத்து விளக்கமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கின்றது. இவைகளை முன் வைப்போர் ஏன்?, எப்படி? .. என்பதை முன்வைப்பதில்லை. இதை முன்வைக்க முடியாத போது அவதூற்றை விரும்பியவாறு வைப்பது நிகழ்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், அங்கு தொடரும் வர்க்கப் போராட்டத்தையும், வர்க்க சமுதாயத்தில் மறுப்பதில் இருந்து இவர்கள் அரசியல் வெளிப்படுகின்றது. இதற்கு முதலாளித்துவ ஜனநாயகம் பற்றிய பிரமைகளை விதைப்பதில் இருந்தே, இடதுசாரி முகமூடிகளின் பின்பு அவதூறுகள் கட்டமைக்கப்படுகின்றது. இதன் பின்பான தமது வர்க்க நலனை மூடிமறைப்பதில் மிகுந்த சந்தர்ப்பவாத அக்கறை எடுத்துக் கொண்டு, மார்க்சியம் மீது பொறுக்கியெடுத்த தாக்குதலை நடத்துகின்றனர். ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருந்து பிரச்சனைகளை பகுத்தாய்வதற்கு பதில், குறிப்பானதை முழுமையானதாக காட்டி, தமது வர்க்க நலன்களை தக்க வைப்பதில், இவர்கள் ஏகாதிபத்தியத்தின் வளர்ப்பு நாய்களாக இருக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பவாத இடதுசாரிகளின் நோக்கங்கள் பற்றி லெனின் ”உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும், அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயகரமானதும் ஊறு விளைவிக்கக் கூடியதும் அல்ல. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்ன பிறவாகும் நிரூபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது” என்றார். ஸ்டாலின் பற்றிய அவதூறுகள் பற்பல விதமானவை. எல்லாவிதமான வடிவங்கள் ஊடாகவும், ஸ்டாலினை தாக்குவதன் மூலம், மார்க்சியத்தை குழி தோண்டிப் புதைக்க கனவு காண்கின்றனர். ஸ்டாலின் புதைகுழி அரசியலைக் கொண்டு இருந்ததாக முதலாளித்துவ ஜனநாயகத்தை முன்னிறுத்தி பிதற்றுகின்றனர். இப்படி வர்க்க அரசியலை முன்னெக்க முடியாது அரசியல் ரீதியாக ஆண்மை இழந்து மலடாகிப் போனவர்கள், ஸ்டாலினையும், மார்க்சியத்தையும் புதைகுழியில் புதைத்து விட தலைகீழாக சபதம் எடுத்து குதித்தெழும்புகின்றனர்.

யார் இந்த ஸ்டாலின்?

ஸ்டாலின் தனது பாடசாலை வாழ்க்கையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் கண்டு அதைத் துடைக்க, தனது 16 வது வயதில் அதாவது 1895 இல் கம்யூனிஸ் கட்சியுடனான உறவைத் தொடங்குகின்றார். 1890 களின் இறுதியில் பல போராட்டத்தை நடத்தியதுடன், கட்சி வாழ்வை தொடங்கிவிடுகின்றார். கட்சி வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு சென்ற மென்ஸ்விக்குகள், போராட்ட நெருக்கடியில் கட்சிக் கலைப்பு வாதத்தை முன்வைத்த ஓடுகாலிகள், நடுநிலை சந்தர்ப்பவாதிகள், பலர் பலவிதத்தில் நீண்ட விடாமுயற்சியான நெருக்கடியான வர்க்க போராட்டத்தை கைவிட்டுச் சென்ற எல்லா நிலையிலும், ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை முன்நிலைப்படுத்தினார், அதற்காக போராடினார், அதைப் பாதுகாத்து நின்றார். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அவர் இரும்பு மனிதனாக இருந்ததால், அவரை லெனின் ‘இரும்பு’ என்ற பெயரால் ‘ஸ்டாலின்’ என்று அழைத்தார். பாட்டாளி வர்க்க, வர்க்கப் போராட்டத்தை உறுதியாக நடத்திய வரலாற்றில், அவர் ஆறு முறை தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து பலமுறை புரட்சியின் கடமையை முன்னெடுக்க தப்பிச் சென்றார்.

1912 ம் ஆண்டு போல்ஸ்விக் கட்சி பிராக்கில் கூடிய போது, மென்ஸ்விக்குகளை கட்சியில் இருந்து முற்றாக வெளியேற்றியதுடன், லெனின் தலைமையிலான கட்சி தனது சுயேட்சையான பாட்டாளி வர்க்க புரட்சிகரத் தன்மையை ஸ்தாபன வடிவில் பகிரங்கமாக அறிவித்தனர். இந்த காங்கிரஸ் நடந்த காலத்தில் ஸ்டாலின் சிறையில் இருந்த போதும், ஸ்டாலினை மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்யபட்டார். அத்துடன் லெனின் ஆலோசனைப் படி நாட்டில் நடைமுறையை வழிகாட்டும் தலைமை உறுப்பு ஒன்றை உருவாக்கியதுடன், அதன் தலைவராக அதற்கு தகுதியான ஸ்டாலினையே நியமித்தார். நாட்டின் புரட்சிகர அமைப்பாக்கல் மற்றும் அனைத்து வர்க்கப் போராட்டத்தையும், கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் 1912 இல் இருந்தே ஸ்டாலின் கட்சிக்கு நேரடியாக வழிகாட்ட தொடங்கிவிட்டார். 1917 போல்ஸ்விக் புரட்சியில் லெனின் பங்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேயளவுக்கு லெனினை முக்கியத்துவப்படுத்திய புரட்சியை நடைமுறையில் முன்னெடுத்தவர் ஸ்டாலின். இதை அவர் 1912 முதல் வழிநடத்தியவர். லெனின் கோட்பாட்டு தலைமை புரட்சியில் எவ்வளவுக்கு முக்கியமாக நடைமுறை சார்ந்து வழிகாட்டலுக்கு உள்ளாகியதோ, அதேபோல் ஸ்டாலின் நடைமுறைத் தலைமை புரட்சியை முன்னெடுத்த அமைப்பை உருவாக்குவதில் தொடங்கி கோட்பாட்டு வழிகாட்டலை ஒருங்கிணைத்தது. இந்த இரு தலைமையும் ஒரு சேர ஒருங்கினைந்த வரலாற்றில் தான், சோசலிச புரட்சி வெற்றி பெற்றது. இவ் இரண்டும் இன்றி சோவியத் புரட்சி என்பது கற்பனையானது. இரண்டு துறை சார்ந்த முன்னணி பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், தத்தம் பணியில் வெற்றிகரமாக இணைந்து வழிகாட்டிய வரலாறு தான், சோவியத் புரட்சியை நடத்தியது. இந்தளவுக்கு வேறு எந்த தலைவரும் புரட்சியை முன்னெடுக்கும் தலைமைப் பொறுப்பை, பல்வேறு நெருக்கடிகளில் கொண்டிருக்கவில்லை. நாட்டுக்கு வெளியில் இருந்த லெனின் வழங்கிய கோட்பாட்டு தலைமையும், நாட்டுக்குள் ஸ்டாலின் வழங்கிய நடைமுறை அமைப்பாக்கல் தலைமையும், ஒன்றிணைந்த புரட்சி தான் சோவியத் புரட்சியாகும்.

ஸ்டாலின் திடீரென அதிகாரத்தை கைப்பற்றினான் என்பது எல்லாம் இடது வேடம் போட்டவர்களின் வெற்று அவதூறுகளாகும். ஸ்டாலின் நீண்ட அனுபவம் கொண்ட, போராட்ட தலைவனாக, நெருக்கடிகளில் முன் மாதிரி போல்ஸ்விக்காக போராடிய முன்னணி தலைவராக திகழ்ந்தமையால், 1912 லேயே மத்திய குழுவுக்கு தெரிவு செய்ததுடன், நாட்டின் நடைமுறை போராட்டத்துக்கான தலைமைப் பொறுப்பை லெனினின் முன்மொழிவுடன், 1912 லேயே ஏற்றுக் கொண்டு போல்ஸ்விக் தலைவரானார். இந்த தலைமைப் பொறுப்பை சதிகள் மூலமல்ல, பாட்டாளி வர்க்க போராட்டத் தலைவனாக நடைமுறையில் இருந்தமையால், அவர் சிறையில் இருந்த போதும் கட்சி அவரிடம் தனாகவே ஒப்படைத்தது.

1917 இல் நடந்த முதல் (பிப்ரவரி) புரட்சியைத் தொடர்ந்து, ஜூன் மாதம் மென்சுவிக்குகள் ஆதிக்கம் வகித்த சோவியத்தின் முதல் காங்கிரசின் மத்திய நிர்வாக குழுவுக்கு, ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், ஒரு தலைவராகவே இருந்தார். 1917 இல் பிப்ரவரி புரட்சியை நடத்தியவர்கள் போல்ஸ்விக்குகளை கைது செய்து, லெனினை கொன்று விட அவதூறுகளை பொழிந்த போது, டிராட்ஸ்கியும், காமனேவும் சிறைப்பட்டு நியாயம் கோரி வழக்காட வேண்டும் என்றே முன்மொழிந்தனர். ஸ்டாலின் அதை நிராகரித்ததுடன், லெனினின் பாதுகாப்பை தானே பொறுப்பெடுத்தார். ஐரோப்பாவில் புரட்சி நடைபெறாமால் பாட்டாளி வர்க்க புரட்சியா? என்ற கேள்வியுடன் டிராட்ஸ்கி, ருசியாவில் சோசலிஸத்தை சாதிக்க முடியாது என்று புரட்சியை எதிர்த்த போது, ஸ்டாலின் “சோசலிஸத்துக்குப் பாதை வகுக்கும் தேசமாக ரஷ்யா இருக்கக் கூடுமென்பதை புறக்கணிக்க முடியாது…. ஐரோப்பா மட்டுமே வழிகாட்ட வேண்டுமென்ற பத்தாம் பசலிக் கருத்தைக் கைவிடவேண்டும். குருட்டுத்தனமான வறட்டு மார்க்சியமும் இருக்கின்றது. படைப்புத் தன்மை கொண்டு வளரும் மார்க்சியமும் இருக்கின்றது. இரண்டாவது வகையை ஆதரிக்கின்றேன்” என்றார்.

ஐரோப்பா புரட்சியின்றி தொடரும் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறாது என்று கூறி, டிராட்ஸ்கி சோசலிசம் என்ற வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து முன்வைத்த வாதம் மற்றும் நடைமுறைகள், உண்மையில் முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்தை ஒரே தாவில் தாண்டிவிடக் கோரும் இடது தீவிரத்தின் உள்ளடக்கமாகும். அராஜகவாதம் எதை கோட்பாட்டில் முன்வைக்கின்றதோ, அதையே இது பின் பக்கத்தால் வைக்கின்றது. சோசலிச சமூகம் என்பது கம்யூனிசத்தை நோக்கிய, அடுத்த கட்ட வர்க்கப் போராட்ட தயாரிப்பு மற்றும் முன்னெடுப்பு காலம் என்பதை மறுப்பதில் இருந்தே, ‘தனிநாட்டு சோசலிசம்’ என்ற எதிர்ப்பின் பின்னான அரசியல் உள்ளடக்கமாகும். பாட்டாளிகள் வர்க்கப் போராட்டம் மூலம் கைப்பற்றும் ஆட்சி மாற்றம், வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு வடிவ மாற்றம் மட்டுமே தான். இங்கு கம்யூனிசத்தை நோக்கிய போராட்டத்தை சோசலிச சமூகத்தில் கைவிடக் கோருவது, வர்க்கப் போராட்டத்தை பின்பக்க கதவால் இழுத்து தடுப்பதாகும்.

வர்க்கப் போராட்டத்தைப் பற்றி லெனினின் தெளிவான நிலைப்பாட்டைப் பார்ப்போம், சுதந்திரம், சமத்துவம் என்ற முழக்கங்களால் மக்களை ஏமாற்றுவது பற்றிய உரைக்கான தனது முன்னுரையில் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கப் போராட்டத்தின் முடிவல்ல, ஆனால் புதிய வடிவங்களில் இதன் தொடர்ச்சியாகும். தோற்கடிக்கப்பட்ட ஆனால் துடைத்தொழிக்கப்படாத ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக, மறைத்து போகாத, எதிர்ப்பைத் தருவதை நிறுத்தாத, ஆனால் எதிர்ப்பை மேலும் ஆழப்படுத்தியுள்ள ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை கரங்களில் எடுத்துக் கொண்ட பாட்டாளி வர்க்கத்தால் தொடுக்கப்படும் வர்க்கப் போராட்டமே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாகும்” என்றார் லெனின். ஆனால் இதை எதிர்ப்பதில் தான் இன்றைய எல்லா இடது முகமூடிகளும் சரி, அன்றைய டிராட்ஸ்கி மற்றும் புக்காரின் போன்றவர்களும் தங்கள் அரசியலை கட்டமைத்தனர், கட்டமைக்கின்றனர். இவர்கள் லெனின் காலத்தில் சந்தர்ப்பவாதமாக மூடிமறைத்தபடி இதைப்பற்றி வாய்திறந்து எதிர்க்கவில்லை. ஆனால் முடிமறைத்த வகையில் தமது ஆட்சியை நிறுவுவதன் மூலம், இதை மறுக்க முனைந்தனர். இதில் தோற்ற போது இதை எதிர்ப்பது ஒரு அரசியல் கொள்கை விளக்கமாகி அதுவே சதியாகியது. ஆனால் ஸ்டாலின் இதை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்ததில் தான், அவர் மீதான அவதூறுகள் கட்டமைக்கப்பட்டன, கட்டமைக்கப்படுகின்றன.

1917 அக்டோபர் 23ம் தேதி கட்சியின் மத்தியக் கமிட்டி கூடி எடுத்த வரலாற்று புகழ்மிக்க புரட்சியை நடத்துவது பற்றிய முடிவில், ஆயுதம் ஏந்திய எழுச்சிக்கு தலைமை தாங்க அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். புரட்சியை தலைமை தாங்கி நடத்தியது ஸ்டாலின் தான். வேறு யாருமல்ல. இங்கு ஸ்டாலின் சதி செய்து புரட்சிக்கு தலைமை தாங்க வந்தவர் அல்ல. கட்சி தனது தலைவரை தெரிவு செய்வது இயல்பானது. இந்த பொறுப்புமிக்க நடைமுறை ஸ்தாபனப் பணியை செய்யும் தகுதி, ஸ்டாலினைத் தவிர வேறு எந்த மத்திய குழு உறுப்பினருக்கும் அன்று இருக்கவில்லை. ஆனால் இடதுசாரி பெயரில் எழுதுபவர்கள் இதைப் பற்றி வகை வகையாக, வண்ணம் வண்ணமாக எழுதுவது மட்டுமே, அவர்களின் மலட்டுப் பிழைப்பாக உள்ளது.

ஸ்டாலின் என்ற தலைவருக்கு 1919 நவம்பர் 27ம் திகதி லெனின் முன்மொழிந்த தீர்மானத்தின் படி, ஸ்டாலினுக்கு செங்கொடி பதக்கம் வழங்கப்பட்டது. இதே விருதை டிராட்ஸ்கியும் பெற்றார். டிராட்ஸ்கி செஞ்சேனை சார்ந்து பாதுகாப்பு மந்திரியாக இருந்த போதும், சோவியத் புரட்சியை பாதுகாக்க செஞ்சேனையை தலைமை தாங்கி, எதிரிகளை ஒழித்துக் கட்டிய பங்களிப்பு சார்ந்து வழங்கிய விருது, அதே கராணத்துக்காக ஏன் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

சோவியத்துக்கு ஆபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம், கட்சியின் விசேட வேண்டுகோள்களை நிறைவேற்றுவதில், ஸ்டாலின் முன்முயற்சியுடன் செஞ்சேனையை வழி நடத்திய திறமைமிக்க தளபதியாக திகழ்ந்த தனித்துவமான பணிக்காக வழங்கப்பட்டது. கட்சியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஸ்டாலின் பல போர்முனைகளில் பல வெற்றிகளை சாதித்ததன் மூலம், சோவியத்தை பாதுகாத்தார். ஸ்டாலின் கிராட்டில் (ஜாரீட்ஸின்) இருந்து தேவையான உணவை பெறவும், இராணுவ ரீதியாக அதை வெற்றி பெறவும் கட்சியின் வேண்டுகோளின் படி, அதை மீட்டு எடுத்தார். இந்த யுத்த பிரதேசத்தில் டிராட்ஸ்கி செஞ்சேனைக்கு தளபதியாக நியமித்த பழைய ஜார் மன்னனின் இராணுவ தளபதிகளை நீக்கி, புரட்சிகரமான செஞ்சேனை, புரட்சிகரமான தளபதிகளின் தலைமையில் அப்பகுதியை மீட்டு எடுத்தார்.

அடுத்த மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க உக்ரேனுக்கு சென்று அப்பகுதியை மீட்டதுடன், கார்க்கோ, பேலோ ரஷ்யாவையும் மீட்டார். 1918 இல் கிழக்கு முனையில் ஏற்பட்ட ஆபத்தை எதிர்கொள்ள மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க அங்கு சென்று கிழக்கு போர்முனையை வென்றார். அங்கு இருந்து மீண்ட ஸ்டாலின் புதிய பொறுப்பாக அரசாங்கச் செயலாட்சி அமைச்சராக கட்சியால் நியமிக்கப்பட்டார். இது தொழிலாளர், விவசாயிகள் கண்காணிப்பு வாரியம், ஊழல், நாசவேலை, கையாலாகாத்தனம் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துவதில், ஸ்டாலினின் பங்கு கோரப்பட்டது.

1919 இல் மார்ச்சில் எதிரி பெட்ரோகிராடை கைப்பற்ற முன்னேறிய போது, ஸ்டாலினை கட்சி அங்கு அனுப்பியது. அங்கு அவர் மாபெரும் சாதனையை சாதித்து எதிரியை நொருக்கித் தள்ளினார். பின்பு எதிரி ஓரெல் நகரை பிடித்த பின்பு, மாஸ்கோவை நான்கு மணிநேரத்தில் அடையும் வகையில் எதிரி அருகில் நெருங்கி வந்த நிலையில், மாஸ்கோவில் முதலில் கால் வைப்பவனுக்கு 10 லட்சம் ரூபிள் பரிசு அளிக்கப்படும் என்ற நிலையில், லெனின் “தெனீக்கின் – எதிர்ப்புப் போரில் சகல சக்திகளும் திரளட்டும்” என்றார். 1919 இல் மத்திய கமிட்டி இந்த எதிர்ப்பு போருக்கு தலைமை தாங்க ஸ்டாலினை நியமித்தனர். ஸ்டாலின் இந்த பிரதேசத்தை பாதுகாக்க வைத்த திட்டத்தை, கட்சி அங்கிகரித்த நிலையில், இப்போரில் ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்றனர். 1920 இல் முற்றாக இப்பகுதி விடுவிக்கப்பட்டது.

போலிஸ் படை தாக்குதலை தொடுத்த போது, அங்கும் ஸ்டாலின் அனுப்பப்பட்டார். ஏகாதிபத்திய தலைமையில் விரங்கல் புதிய தாக்குதலை யூக்ரேனில் தொடங்கிய போது, மத்திய குழு பின் வரும் தீர்மானத்தை எடுத்தது. “விரங்கல் வெற்றியடைந்து வருகின்றான். கூபான் பிரதேசத்தில் கவலைக்கிடமான நிலைமை. எனவே விரங்கல் எதிர்ப்புப் போரை மிகவும் முக்கியமானதாகவும் முற்றிலும் சுயேட்சையானதாகவும் கருத வேண்டும். ஒரு புரட்சி இராணுவக் குழுவை அமைத்துக் கொண்டு, விரங்கல் முனையில் முழு முயற்சியையும் ஈடுபடுத்துமாறு மத்தியக் கமிட்டி தோழர் ஸ்டாலினுக்கு கட்டளையிடுகின்றது” இதை ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம், ஒரு இராணுவ தளபதியாக நிமிர்ந்து நின்றார்.

இந்த புரட்சிகர யுத்தத்தில் ஒரு செஞ்சேனை தளபதியாக, தலைவனாக ஸ்டாலின் தனித்துவமான பணியை, லெனினால் முன்மொழியப்பட்டு மத்திய குழு அங்கீகரித்து வழங்கிய பதக்க அறிக்கையில் “பேராபத்தான நேரத்தில் நானா பக்கங்களிலும் விரோதிகளின் வளையத்தால் சூழப்பட்டிருந்த பொழுது…. போராட்டப் பொறுப்புக்குத் தலைமைக் குழுவால் நியமிக்கப்பட்ட ஜே.வி.ஸ்டாலின், தன் சக்தியாலும் களைப்பறியாத உழைப்பாலும், தடுமாறிய செம்படைகளை திரட்டுவதில் வெற்றி கண்டார். அவரே போர் முனைக்குச் சென்று, எதிரியின் நெருப்புக்கு முன் நின்றார். தன் சொந்த உதாரணத்தால், சோசலிஸ்ட் புரட்சிக்காகப் போராடியவர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்” இந்த தீர்மானத்தையே இன்று இடது வேடதாரிகள் திரித்து மறுக்கின்றனர். ஸ்டாலின் இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு தளபதியாக இருந்தே இருக்க முடியாது என்கின்றனர். சோவியத் புரட்சியில் ஸ்டாலின் பயந்து ஒளித்துக் கிடந்ததாகவும், வீம்புக்கும், வம்புக்கும் யுத்த முனைக்கு சென்றதாகவும், பல விதமாக அவதூறுகளை கட்டியே பிழைப்பைச் செய்கின்றனர். ஆனால் லெனின் வழங்கிய கருத்தும், பரிசும் மார்க்சிய வரலாற்று ஆவணமாக சர்வதேசிய வழியாக உள்ளது என்பதை மறந்துவிடுகின்றனர்.

1922 மார்ச், ஏப்ரலில் நடந்த பதினோராவது கட்சி காங்கிரசில், கட்சி பொதுக் காரியதரிசி பதவி ஒன்று உருவாக்கப்பட்டு, லெனின் பிரேரணைக்கு இணங்க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியை ஸ்டாலின் உருவாக்கி, அதில் அதிகாரத்தை குவித்து, கட்சி உறுப்பினர்களை தனது சார்பாக நியமித்ததாக, போலி இடதுசாரி பிழைப்புவாதிகள் பசப்புகின்றனர். போல்ஸ்விக் கட்சி வரலாற்றில் லெனினுக்கு பின்பு யாரும் ஸ்டாலினை தாண்டி கட்சித் தலைவராக உயர்ந்ததில்லை. நீண்ட கட்சி வரலாற்றில் லெனினுடன் அக்க பக்கமாக போராடியதுடன், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஸ்டாலினே மேற் கொண்டார். ஸ்டாலின், லெனின் மரணத்துக்கு முன்பே, அதாவது 1912 லேயே லெனின் முன்மொழிவுடன், கட்சியே ஸ்டாலினிடம் தலைமைப் பொறுப்பை கொடுத்திருந்தது. இதை எல்லாம் வரலாற்றில் புதைத்துவிட முயலும், இடதுசாரி புரட்டுத்தனம் வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றது.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்
1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1
2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2
3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3
4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4
5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5
6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6
7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7
8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8
9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9
10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10
11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11
12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12
13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13
14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14
15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15
16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16
17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17
18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18
19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19
20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20
21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21
22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22
23. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23
24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 24
25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 25
26. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 26
27. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 27

சென்னையில் ஒரு நாள்: இப்படி ஒரு நாள் தேவையா?

‘டிராஃபிக்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான ஒரு படத்தின் மறுதயாரிப்பு ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற பெயரில் வெளிவந்து பரவலான கவனிப்பையும், இணைய உலகில் சமூக அக்கரையுள்ள படம் எனும் அடையையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு இணையப் பரப்பில் செய்யப்படும் விமர்சனங்களைப் படித்தபோது மறைந்த நாகேஷ் பேசிய ஒரு வசனம் தான் நினைவுக்கு வந்தது. “உடம்பை விட்டு விட்டு உயிரை மட்டும் தனியே உருவி எடுத்து விட்டாயே, எப்படி?” என்று ஏதோ ஒரு படத்தில் பேசியிருப்பார். அதேபோல் சென்னையில் ஒரு நாள் படத்திலும் இருக்கும் அரசியலை மட்டும் தனியே உருவி எடுத்து விட்டு வெற்றுடம்பை சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது, இந்தப்படத்தில் எந்த அரசியல் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என விரும்பினார்களோ அந்த அரசியல் மட்டும் யதார்த்த அரசியலை உருவி விட்டு முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் முன்னிலைப் படுத்தப்படும், சிலாகிக்கப்படும், சமூக அக்கரையுள்ள படம் துருத்தப்படும் அம்சம் உடல் உறுப்பு தானம். ஓரிரு ஆண்களுக்கு முன் ஒரு மருத்துவ தம்பதியினர் சாலை விபத்தில் இறந்த தன் மகனின் உறுப்புகளை தானம் செய்தது பரவலாக விளப்பரப்படுத்தப்பட்டு அதன் பின்னர் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வது ஏதோ சமூகக் கடமை என்பதைப் போன்ற புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் சில மதவாத அமைப்புகள் தம் உறுப்பினர்களை இரத்த தானம் செய்ய வைத்து, நாங்கள் தான் இத்தனை முறை இரத்த தான முகாம் நடத்தியிருக்கிறோம். எனவே எங்கள் சமூக உணர்வை யாரும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று பீஜப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தானம் செய்யப்படும் இரத்தம் எங்கு செல்கிறது? யாருக்கு எவ்விதம் பயன்படுத்தப்படுகிறது? என்பவை குறித்து எவ்வித அறிதலுமின்றி புளகப்பட்டுக் கொள்வது, தெருவில் பிச்சைக்காரனுக்கு பத்து பைசாவை வீசிவிட்டு புண்ணியம் செய்து விட்டதைப் போல் புளகமடைவதற்கு ஒப்பானது என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

உடலுறுப்புகளை தானம் செய்வது சிறந்த மனிதாபிமானம் தானே. இன்னொரு உயிரை காப்பாற்றும் வாய்ப்பு கிடைத்தால் அது புண்ணியம் தானே என எண்ணுபவர்கள் உடலுறுப்புச் சந்தை குறித்து அவசியம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை உடலுறுப்புகளை விற்பது குற்றம், விருப்பபட்டால் தானமாக கொடுக்கலாம். ஆனால், மாற்று உடலுறுப்புகள் பொருத்திக் கொள்வதற்கு .. .. ..? இன்று தனியார் மருத்துவமனைகளின் பெருலாபத்தின் குறிப்பிடத்தகுந்த பங்கு உடலுறுப்புகள் விற்கப்படுவதால் கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது தனியொரு மனிதன் என்ன காரணத்துக்காக என்றாலும் உடலுறுப்புகளை விற்பது சட்டப்படி குற்றம், ஆனால் அதை தானமாக பெறு தனியார் மருத்துவமனைகள் அந்த உடலுறுப்புகளை லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பது குற்றமல்ல. இரத்த தானம் செய்யும் யாராவது எதாவது ஒரு நோய்க்காக அப்பல்லோவில் சென்று இரத்தம் ஏற்றியிருக்கிறீர்களா? ஏற்றிப் பாருங்கள்.

கிட்னி எடுப்பது என்பது எல்லோருக்கும் தெரிந்த வியாபாரம். சென்னை மணலிக்கு அருகில் கிட்னிவாக்கம் என்று ஒரு குப்பமே இருக்கிறது. சுனாமியைப் பயன்படுத்தி இங்குள்ள அனைவரிடமும் கிட்னியை ‘ஸ்வாஹா’ செய்திருக்கிறார்கள். யாரும் காவல் நிலையம் சென்று நான்கு லட்சம் தருவதாகக் கூறி கிட்னியை எடுத்து விட்டு நாற்பதாயிரம் தான் தந்தார்கள் என்று புகார் செய்ய முடியாது. ஏனென்றால், உடலுறுப்புகளை விற்பது குற்றம் எனும் சட்டம் தன் கடமையைச் செய்யும்.

இதில் தனியார் மருத்துவமனைகளுக்குள் நடக்கும் வியாபாரப் போட்டிகளால் அவ்வப்போது சில தகவல்கள் கசியவிடப்பட காவல்துறையும் சில நடவடிக்கைகள் எடுப்பதாய் காட்டிக் கொள்ளும். ஊடகங்கள் சில நாட்கள் பரபரப்பாய் செய்தி சொல்லும். நான்கு நாட்களில் மக்கள் மறந்து போவார்கள். ஆனால் வியாபாரம் தொடரும்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உடலுறுப்புகள் தானம் பெறும் சட்டங்கள் மிகவும் கடுமையானவை. அதானால் அந்நாடுகளின் பணக்கார சீமான்கள் இந்தியா போன்ற நாடுகளைத் தேடி வருகிறார்கள். அமெரிக்காவில் இதயம் வேண்டும் என்று பதிவு செய்தால் மூன்று வருடங்கள் காத்துக் கிடக்க வேண்டும். இந்தியாவிலோ மூன்றே மாதத்தில் இதயம் கிடைக்கும். அமெரிக்காவில் இதயத்துக்கும், மருத்துவத்துக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்தியாவிலோ லட்சங்கள் போதும். இதனால் அவர்கள் இந்தியாவைத் தேடி வருகிறார்கள். இதைத்தான் இந்தியா மருத்து சுற்றுலா மையமாக மாறி வருகிறது என்கிறார்கள். மருத்துவத்துறையில் பெரும் முன்னேற்றம் என்கிறார்கள். இதை ஒரு துறையாக அங்கீகரித்து இதன் வளர்ச்சிக்கு நிதிநிலை அறிக்கையில் தனி நிதிஒதுக்கீடும் செய்கிறது இந்திய அரசு. இப்படி அதிக அளவில் தேவைப்படும் உடலுறுப்புகளுக்காக்த்தான் உடலுறுப்புகளை தானம் செய்வது சமூகக் கடமை என்றும் தலை சிறந்த மனிதாபிமானம் என்றும் பரப்புரை செய்கிறார்கள். அதைத்தான் ‘சென்னையில் ஒரு நாள்’ எனும் இந்தப் படமும் செய்கிறது.

சொந்த மகள் குறித்து எந்த அக்கரையும் இல்லாத பணத்தின் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் ஒரு நடிகன். அவனுடைய மகளுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு தேவைப்படும் இதயத்தை சாலையில் விபத்துக்குள்ளாகி மூளைச்சாவடைந்த ஒரு இளைஞனின் இதயத்தை முக்கிய சாலையின் போக்குவரத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்தி கொண்டு வருகிறார்கள். இது தான் அந்தப்படத்தின் கதை.

ஒரு நடிகளின் பிரச்சனைக்காக அமைச்சரிலிருந்து அதிகாரிகள் வரை சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள். சாக்கடையில் இறக்கி அதன் அடைப்பை சுத்தம் செய்யும் ஒருவனின் மகளுக்காக அரசு எந்திரம் இப்படி சுறுசுறுப்பாக இயங்குமா? வாழ்க்கைப் பிரச்சனைக்காக லஞ்சம் வாங்கி மாட்டிக் கொள்ளும் ஒரு போக்குவரத்து காவலர் தன்னுடைய பிம்பத்தைக் காத்துக் கொள்ள இந்த சாகசப் பயணத்தை பயன்படுத்திக் கொள்ள முன்வருகிறார். தற்கொலை செய்து கொள்ளும் ஏழை விவசாயிகளின் அவமான உணர்ச்சிகளை இது போன்று மீட்டெடுக்க வாய்ப்புகளை கொடுக்குமா அரசு?

ஒரு நடிகனின் மகளுக்கு இதயத்தை கொண்டு வருவதை ஒரு திரைப்படத்துக்கான கதையாக கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? போக்குவரத்தை நிறுத்தி இதயத்தை சுமந்து கொண்டு பயணிக்கும் அந்த நீண்ட பயணத்தை மட்டுமே முக்கிய கதை நகர்வாக கொண்டு மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்த முடியுமா? இதற்காகத்தான் அந்த இளைஞனை நேசிக்கும் ஒரு பெண்ணின் அழகான காதலும், இன்னொரு இளைஞனின் மனைவியான ஒரு பெண்ணின் துரோகத்தனமான கள்ளக் காதலும் பயன்பட்டிருக்கிறது. அதாவது ஆணின் உள்ளாடை விளம்பரங்களுக்குக் கூட பெண்களை பயன்படுத்துவது போல, இந்த உடலுறுப்பு தான பிரச்சாரத்திற்கு பெண்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

விபத்து நடக்க காரணமாக இருக்கும் பெண் தனியாக காரோட்டுகிறாள் என்றதும் விடாமல் துரத்தி வரும் அந்த ஆணாதிக்க பொறுக்கிகளை என்ன செய்வது? மனைவியும் நண்பனும் துரோகம் செய்கிறார்கள் என்றதும் மனைவியின் மீது காரேற்றி தன் வெறியை தீர்த்துக் கொள்ளும் இளைஞனின் நண்பனை என்ன செய்வது? அமைச்சருடன் இருக்கும் நெருக்கத்தை தனக்குத் தெரிந்தவரின் குற்றத்தை மறைப்பதற்கு பயன்படுத்தும் கவுன்சிலர் உள்ளிட்டு அத்தனையும் கடந்து இதயம் மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் சென்று சேருமா? இல்லையா? பதைக்க வைத்திருக்கிறார்கள். இது தான் நாம் திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையென்றால், இது தான் சமூக அக்கரையுள்ள படம் என்பதற்கான அளவுகோல் என்றால் .. ..

மன்னிக்கவும், உங்களுடைய சீர்தூக்கலில் பிழை இருக்கிறது என்பதற்கு இதுவே அடையாளமாகும்.

%d bloggers like this: