திவ்யாவைச் சுற்றியும் அதற்கு வெளியிலும்

thivila

திவ்யா – இளவரசன் இவர்கள் மீண்டும் ஊடக வெளிசத்திற்கு வந்திருக்கிறார்கள். இளவரசன் தொடுத்திருந்த ஆட்கொணர்வு வழக்கில், தன் தாயாருடன் வாழ விரும்புவதாக திவ்யா கூறியதிலிருந்து செய்தி ஊடகங்கள் பேசித் தீர்த்துவிட்டன. திவ்யா தியாகம் செய்துவிட்டார் என்பதில் தொடங்கி அவர்களுக்கிடையே இருந்தது ஈர்ப்புக் கவர்ச்சி தானேயன்றிக் காதலல்ல என்று கண்டு பிடித்தது வரை கூறப்படுபவைகள் ஏராளம் ஏராளம். இப்படி பல வண்ணங்களில் கூறப்படுபவைகளை விட அவை திணிக்கும் கருத்தியல்களே கவனிக்க வேண்டியவை.

 

முதலில் திவ்யா இளவரசன் கலப்பு மணத்தால் தான் நாயக்கன் கொட்டாய் தாக்குதல்கள் நடந்தன என்பதே அபத்தமான கருத்து. கடந்த பல தேர்தல்களில் பாமக வுக்கு இருப்பதாக நம்பப்படும் வாக்குவங்கி தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. கூட்டணி பலத்தில் தான் இதுவரை உயிர்வாழ்ந்து வந்தது, கூட்டணி வைக்காவிட்டால் பாமாக தூசுதான் எனும் உண்மை வெளிப்படையாக அம்பலப்பட்ட நிலையில் தான், இனியும் சும்மா இருந்தால் அடுத்து வரும் தேர்தல்களில் நாம் உரித்து முடிந்த வெங்காயமாகி விடுவோம் என்பதை வேறு வழியின்றி உணர்ந்து கொண்டார்கள். அதை தடுப்பதற்காக வன்னியர் சங்கத்தை போர்வையால் மூடி பாட்டாளி மக்கள் கட்சி என்று படம் காட்டியதை விடுத்து மறைமுகமாய் செய்ததை நேரடியாய் செய்யத் தொடங்கினார்கள். இந்த திட்டத்திலிருந்து தான் காடுவெட்டி குரு கலப்பு திருமணம் செய்பவர்களை வெட்டித் தள்ளுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பேசியதும், சித்திரைத் திருவிழா என்று அடாவடி செய்வதும், ஆதிக்க சாதி சங்கங்களை திரட்டுவதும் நடந்திருக்கிறது. இது போன்ற திட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் நாயக்கன் கொட்டாய், மரக்காணம் எல்லாம் வருகின்றன. இதை திவ்யா இளவரசன் கலப்பு மணத்தின் எதிர்வினை என்று எண்ணுவது ராமதாஸ் கும்பலின் சாதி வெறியை விசிரி விடுவது போன்றதாகும்.

 

சில மாதங்களுக்கு முன்னர் திவ்யா சாதி அபிமானம், குடும்பம் உள்ளிட்ட அனைத்தையும் துறந்து இளவரனுடனான மண வாழ்க்கை தான் முதன்மையானது என்று தீர்மானித்து காதலனைக் கைப்பிடித்தார். இன்று அதே தியா காதலனுடன் இருக்க விரும்பாமல் அம்மாவே முதன்மையானது என்று வந்திருக்கிறார். இந்த முரண்பாட்டை முன்வைத்துத்தான் ஊடகங்களின் அனைத்து கருத்துகளும் கிளம்பி வருகின்றன. இதில் உள்ள ஒற்றுமையைக் கவனிக்க வேண்டும். இப்படி கிளப்பி விடப்படும் கருத்துகள் அனைத்துமே திவ்யா மனமொப்பி இந்த முடிவைச் செய்திருப்பதாக மட்டுமே எடுத்துக் கொண்டு செய்யப்படும் செப்படி வித்தைகள். வேறு வாய்ப்புகள் எதையும் இவர்கள் பரிசீலிக்கவே இல்லை. அதாவது திவ்யா மனமொப்பி இந்த முடிவை எடுத்திருப்பதான நிலையில் நின்று மாறுபட்ட கருத்துகளை கிளப்பி விடுவதன் மூலம் திவ்யா தெரிந்தோ தெரியாமலோ சாதிவெறி ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருப்பதன் சாத்தியத்தை மூடி மறைக்கிறார்கள். தெளிவாகச் சொன்னால் வன்னிய சாதி வெறியர்கள் தொடர் மிரட்டலால் காரியம் சாதித்திருப்பதை மறைக்கிறார்கள். இதை புரிந்து கொள்வதற்கு பெரிதாக தத்துவ விசாரங்களெல்லாம் செய்ய வேண்டியதில்லை, எளிமையான கேள்விகளே போதுமானது.

 

வன்னிய ஆதிக்க சாதியைச் சேர்ந்த திவ்யா ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இளவரசனைக் காதலிக்கிறார். வீட்டில் சாதியை முன்வைத்து எதிர்ப்பு கிளம்புகிறது. திவ்யாவின் அப்பாவும் இளவரசனின் அப்பாவும் நண்பர்கள் என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒரு எல்லைக்குமேல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்து அதன்படி செய்கிறார்கள். இந்த முடிவில் திவ்யாவின் முன் இருக்கும் கேள்விகள் என்ன? எதிர்காலம், பெற்றோர் பாசம் என்ற இரண்டைத் தவிர வேறு கேள்விகள் எதுவும் இருந்திருக்க முடியாது. எதிர்காலம் குறித்த பயத்தை காதல் மிகைத்திருக்கும் என்பதில் பெரிதாக ஐயம் ஒன்றுமில்லை. பெற்றொர் மீதான பாசமா? காதலா? எனும் கேள்வியிலிருந்து தான் வீட்டை விட்டு வெளியேறும் முடிவை திவ்யா எடுத்திருப்பார். இதில் பெற்றோரை விட காதல் திருமணம் என தேவையானது என்று முடிவெடுப்பதற்கு பெற்றோரை வெறுக்க வேண்டும் என்பதொன்றும் அவசியமில்லை பின்னர் சரி செய்து கொள்ளலாம் என்று கூட எண்ணியிருக்கலாம். ஆக அன்று திவ்யா எடுத்த முடிவுக்கு பின்புலமோ, மிரட்டலோ, வற்புறுத்தலோ இருந்திருக்க வேண்டியதில்லை. இதற்கு சான்றாக திருமணம் முடிந்த பிறகும் கூட திவ்யாவின் அம்மா தொலைபேசியில் திவ்யாவுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருந்திருக்கிறார். ஆக தீர்மானகரமான பதில் இருந்ததாலேயே தீர்மானகரமான முடிவை எடுத்திருக்க முடிந்தது.

 

இன்று திவ்யா நீதி மன்றத்தில் “இளவரசன் மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை. நான் குழப்பத்தில் இருக்கிறேன். அம்மாவுடன் இருக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் திவ்யா தானாகவே நீதிமன்றம் சென்று இவ்வாறு கூறவில்லை. இளவரசன் தொடுத்திருந்த ஆட்கொணர்வு மனுவினால் தான் நீதிமன்றம் வந்து இவ்வாறு தெரிவித்திருக்கிறார். என்னதான் நடந்தது இடையில்? வீட்டைப் பிரிந்து திவ்யா இளவரசனுடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் அம்மா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வருகிறது பார்க்கச் செல்கிறார் பின் திரும்பி வரவே இல்லை. இப்போது திவ்யா காதல் வாழ்வை விட தாயாருடன் இருப்பதே முதன்மையானது என்று முடிவெடுத்திருக்கிறார். இந்த முடிவில் திவ்யாவின் முன் இருக்கும் கேள்விகள் என்ன? மணவாழ்வை என்ன செய்வது? எதிர்காலம் இதில் மணவாழ்வு குறித்த பதில் எதிர்காலத்தினுள் அடங்கியிருப்பதால் எதிர்காலம் என்ன என்பதே முதன்மையான கேள்வி. மணமுறிவு செய்து கொள்ளலாம், மறுமணம் செய்து கொள்ளலாம், அல்லது வீட்டிலேயே இருந்து விடலாம். இவை எதுவுமே தற்போதைய வாழ்வை விட அதாவது இளவரசனுடனான வாழ்வைவிட சிறப்பானதாகவோ உத்திரவாதமானதாகவோ இருக்கும் என யாரும் உறுதி கூற முடியாது. ஆனால் தீர்மானகரமான பதில் இல்லாமலேயே தீர்மானகரமான முடிவை எடுத்திருக்கிறார். இது எப்படி?

 06-dharmapuri-clash1-600

நீதிமன்றத்தில் தான் குழப்பத்தில் இருப்பதாக திவ்யா கூறியிருக்கிறார். தன் முன்னிற்கும் கேள்விக்கு பதிலில்லை, தான் குழப்பத்தில் இருப்பதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனாலும் நடப்பில் தனக்கு பாதகம் விளைவிக்கும் ஒரு முடிவை திவ்யாவால் புற நிர்ப்பந்தம் இல்லாமல் எடுத்திருக்க முடியுமா? ஆக வன்னிய ஆதிக்கசாதி வெறியும் பாமகவும் கொடுத்த நிர்ப்பந்தமே திவ்யாவின் இந்த முடிவுக்க காரணம் என்பதில் குழப்பம் ஒன்றுமில்லை. ஆனால் திவ்யா ஒரு குறியீடு என்றபோதிலும் தனிப்பட்ட ஒரு திவ்யாவுக்கு கொடுத்த நிர்ப்பந்தம் என்பதை விட அதற்கான காரணம் தான் அதிக ஆபத்தானது.

 

மாவட்டம் மாவட்டமாக சென்று ராமதாஸ் உதார் விடுவதும் அதற்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தடைவிதிப்பதுமான ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தபோது, ராமதாஸ் கும்பல் ஆதிக்க சாதிகளை ஒன்றிணைத்து தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்று ஒரு நினைப்பு ஊட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ராமதாஸ் கைது செய்யப்பட்ட போது அதுவும் கலைந்து போனது, இருட்டில் ஒழிந்து நின்று கல்வீசிய சில தீரர்களும் பின்னடங்கிப் போயினர், இதில் சோர்ந்து நிற்கும் வீரர்களுக்கு(!) ஒரு உற்சாகம் தருவதற்காகவே திவ்யா இளவரசனை பிரித்திருக்கிறார்கள். இதிலும் மக்கள் இவர்களை புறந்தள்ளுவார்கள் என்றாலும் அலட்சியப்படுத்த முடியாதே. செத்த எலி என்று அலட்சியப்படுத்தினால் எலிக்காய்ச்சல் (பிளேக்) அபாயம் இருக்கிறதே.

 

இன்றைய நிலையில் திவ்யா இளவர்சன் ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான குறியீடாக ஆகியிருக்கிறார்கள். சாதி வெறியை மீறி வர்க்க ஒற்றுமையே தேவையானதும் சரியானதும் ஆகும் என்பதற்கும் குறியீடாகி இருக்கிறார்கள். இதில் ஊடாடியிருக்கும் வன்னிய சாதிவெறியை மறைத்து வேறு என்ன காரணம் கூறினாலும் அது வர்க்க ஒற்றுமைக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியை ஆதரிப்பதாக ஆகும்.

தொடர்புடைய கட்டுரை

மீண்டும் படரும் சாதீய நெருப்பு

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

3 பதில்கள்

  1. india bin thangi iruppatharku pala karanangal athil entha sathi vearium onru makkal sinthikkum naal eppothu varumo?

  2. இவ்வளவு அடி உதை வாங்கியும் இன்னமும் ஏன் அந்த சாதிச்சாக்கடையில் தலித்துக்கள் உழல வேண்டும்?. 52 சதவீத தலித்துக்கள் இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக ஏற்றால், தனி இஸ்லாமிஸ்தானை உருவாக்கி மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு சந்தோஷமாக வாழலாமே.

    இந்த அடி உதை பத்தாது, உயர்ஜாதி ஹிந்துக்கள் இன்னமும் நன்றாக உதைத்தால்தான் இவர்கள் இஸ்லாத்துக்கு ஓடி வருவர். வாழ்க ஜாதி வெறி.

    இஸ்லாத்தை வளர்க்க இந்த ஜாதி வெறி பிடித்த காபிர்கள் இருக்கும் வரை எவ்வளவு பாக்கிஸ்தான்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.

  3. ஈழத்தில் சிங்களன் வன்னி வேட்டையாடுகிறான். ஆனால் இங்கே வன்னியரின் இனக்காவலர் அதைப்பற்றி மூச்சு விடுவதில்லை. முள்ளிவாய்க்காலில் வன்னியரின் தொப்புள்கொடி உறவுகளை சிங்களன் கற்பழிக்க, அறுக்க இந்திய ராணுவத்தை அனுப்பி உதவினான் பார்ப்பனன். ஆனால் அவனுக்கு பாதபூஜை செய்து காவடி தூக்குகிறார் வன்னியர் குலவேந்தர் மருத்துவர் அய்யா.

    பார்ப்பனர் ராஜீவ் காந்தியின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கிவிட்டோமென தோள்கொட்டுகின்றனர் பார்ப்பனர். இந்த இன அழிவுக்கு விலை தமிழ்த்தேசியமென முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சூளுரைக்கிறான் மறத்தமிழன்.

    அமெரிக்காவை ஓடஓட விரட்டியடித்து விட்டு காஷ்மீர் ஜிஹாத்துக்கு தயாராகிறான் தாலிபான். இந்த காபிர் நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று லட்சக்கணக்கான காபிர்கள் அரேபியாவில் டாய்லட் கழுவி பிழைக்க ஓடுகின்றனர்

    குருட்டுக்கிழவி பாரதமாதா சிங்கள வெறியன் ரஜபக்சேவுக்கு தலயணை மந்திரம் ஓதுகிறாள். காபிரின் கையாலாகாத்தனத்தை பார்த்து பாக்கிஸ்தான் கைகொட்டி சிரிக்கிறான். சைனா அருணாசலத்தையும் லடாக்கையும் மளமளவென முழுங்குகிறான்.

    எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?. நான் சுருட்டிய பில்லியன்கள் பத்திரமாய் இருந்தால் போதுமென்று மண்டையைப் போடும் நேரத்தில் மஞ்சள் துண்டை போர்த்திக் கொண்டு டெல்லிக்கு ஓடுகிறார் தானைத்தலைவர்.

    போனால் போகட்டும் போடாவென்று டாஸ்மாக் அடித்துவிட்டு தெருமுனையில் சொறிநாய்க்கு பக்கத்தில் சுருண்டு படுக்கிறான் இளித்தவாயன் தமிழன்.

    “அல்லாஹ், பாங்கு சத்தம் கேக்குது. தொழுகைக்கு நேரமாச்சுனு” பாய் உன் வழி உனக்கு என் வழி எனக்குனு போய்க்கினே இருக்கிறார்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: