முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

satanic verses

சல்மான் ருஸ்தி என்றொரு அற்பவாத ஆங்கில எழுத்தாளரை அறியாதவர்கள் குறைவு. தமிழில் வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்களைக் கூட ஆங்கில எழுத்தாளர் ஒருவரை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்க முடிந்திருக்கிறதென்றால் அதற்கு “சத்தானிக் வெர்ஸஸ்” எனும் நூலே காரணம். அதற்காகவே ஈரானின் கொமேனியால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இன்றுவரை அரசுகளின் தயவிலும், வெளிப்படையாக உலவ முடியாமலும் இருந்து வருகிறார். அப்படி என்ன தான் எழுதிவிட்டார் அவர் அந்த நூலில்? இந்தியா உட்பட பல நாடுகள் அந்நூலுக்கு தடை விதித்திருப்பதால் அந்நூலில் என்ன எழுதப்பட்டிருந்தது என வெளியங்கமாக தெரியவில்லை என்றாலும் பூடகமாக பல தகவல்கள் உலவுகின்றன. குரானில் முகம்மது சாத்தான் கூறிய வசனங்களையும் சேர்த்து விட்டார் என்பது தான் அந்த நூலின் மையக் கருத்து என்கிறார்கள். அதேநேரம் குரானில் சாத்தானின் வசனங்கள் கலந்திருக்கின்றன எனும் கருத்து முகம்மதின் காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

 

சாத்தானின் வசனங்கள் எனும் கருத்துக்கு அடிக்கல் நாட்டிய வசனங்கள் இவை தான்,

 

நீங்கள் லாத்தையும் உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான மனாத்தையும், உங்களுக்கு ஆண்சந்ததியும் அவனுக்கு பெண் சந்ததியுமா? அப்படியானால் அது மிக்க அநீதியான பங்கீடாகும். இவைகளெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை, நீங்களும் உங்கள் மூததையர்களும் வைத்துக் கொண்ட பெயர்கள். இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை. நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும் தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின்பற்றுகிறார்கள். எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.

குரான் அத்தியாயம் நஜ்ம்53: வசனங்கள் 19-23

 

இந்த வசனங்களின் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், இன்னும் சற்று விபரம் தேவைப்படும். அல்லா என்பது முஸ்லீம்களின் கடவுளாக பொதுவாக அறியப்பட்டாலும், அல்லா எனும் அரபுச் சொல்லுக்கு கடவுள் என்று மட்டுமே பொருள். அதாவது தமிழில் உள்ள கடவுள், இறைவன், ஆண்டவன் என்பதைப் போல பொதுவான சொல் தான் அல்லா என்பது. முகம்மது அல்லா எனும் பெயரில் தனியாக ஒரு கடவுளை உருவாக்குவதற்கு முன்புவரை அல்லா என்பதற்கு பொதுவான கடவுள் என்பது தான் பொருளாக இருந்தது. அதேநேரம் தனிப்பட்ட கடவுளர்கள் பலரும் அன்றைய அரேபியாவில் இருந்தனர். அவ்வாறான தனிப்பட்ட கடவுளர்களில் மூன்று தான் லாத், உஸ்ஸா, மனா என்பவை. மூன்றும் பெண்பாற் கடவுள்கள். அன்றைய அரேபியாவில் காஅபாவினுள் வைக்கப்பட்டிருந்த முன்னூற்றுக்கும் அதிகமான கடவுற் சிலைகளில் மேற்கூறப்பட்ட மூன்று பெண்பாற்கடவுளர்கள் அடக்கம் யாவும் மெய்யான தெய்வங்களல்ல, அவைகளெல்லாம் நீங்கள் உங்கள் முன்னோர்களும் பொய்யாக புனைந்த பெயர்களேயன்றி வேறில்லை. இது குறித்து என்னிடமிருந்து(முஸ்லீம்களின் அல்லா) அவர்களுக்கு நேரான வழி(அவைகளெல்லாம் மெய்யான தெய்வங்களல்ல என்று) வந்திருந்தும், மீண்டும் தங்கள் மன இச்சைகளைப் பின்பற்றி அவைகளை தெய்வமாக்கிக் கொண்டார்கள். இது தான் அந்த வசனங்களின் பொருள்.

 

இப்போது ஒரு ஹதீஸைப் பார்ப்போம்.

 

நபி அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி சஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லீம்களும், இணை வைப்பவர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர். புஹாரி 1071

 

இந்த ஹதீஸின் விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன் சஜ்தா என்றால் என்ன? சஜ்தா வசனங்கள் என்றால் என்ன? என்பனவற்றை அறிந்திருத்தல் அவசியம். சஜ்தா என்பது வணக்கம் செலுத்தும் ஒரு முறை. உடலின் ஏழு இடங்கள்  இரண்டு உள்ளங்கைகள், இரண்டு கால்முட்டுகள், இரண்டு கால் பெருவிரல்கள், நெற்றி ஆகியவை நிலத்தில் படும்படி வணங்குவது சஜ்தா. குரானில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட சில வசனங்களை ஓதும் போதோ அல்லது ஓதுவதை கேட்கும் போதோ சஜ்தா செய்ய வேண்டும் என்பது முகம்மதின் கட்டளை. அப்படி அவர் சஜ்தா செய்யுமாறு பணித்த வசனங்கள் சஜ்தா வசனங்கள் எனப்படுகின்றன. இந்த சஜ்தா வசனங்கள் குரானில் இடம்பெற்றிருக்கும் இடங்கள் நான்கிலிருந்து பதினைந்து வரை அவரவர் இருக்கும் குழுக்களுக்கு ஏற்ப எண்ணிக்கை மாறுபடுகிறது. அது எத்தனை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படியான சஜ்தா வசனங்களில் ஒன்று தான் மேற்கண்ட நஜ்மு அத்தியாய வசனங்கள்.

 

இப்போது அந்த ஹதீஸுக்கு திரும்புவோம். மக்காவில் மக்கள் மத்தியில் அமர்ந்திருக்கும் முகம்மது நஜ்மு அத்தியாயத்தின் வசனங்களை ஓதி சஜ்தா செய்கிறார், அவருடன் இருந்த முஸ்லீம்களும் சஜ்தா செய்கின்றனர். இதுவரை பிரச்சனை ஒன்றுமில்லை. ஆனால் அந்த ஹதீஸ் முகம்மதும் முஸ்லீம்களும் மட்டுமல்ல, இணை வைப்பவர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தா செய்தனர் என்று குறிப்பிடுகிறது. ஏன்? முஸ்லீம்களைத் தவிர ஏனையோர் சஜ்தாச் செய்வதற்கு அந்த வசனங்களில் என்ன இருக்கிறது? முஸ்லீம்களைத் தவிர ஏனையோரை அந்த வசனங்கள் கண்டிக்கிறது, விமர்சிக்கிறது. தங்களைக் கண்டிக்கும் விமர்சிக்கும் வசனங்களுக்கு ஏன் அந்த மக்கள் சஜ்தா செய்தனர்? இது முக்கியமான கேள்வி.

இந்தக் கேள்விக்கு விடை கிடைக்க வேண்டுமானால் அந்த வசனத்தின் பின்னணியை நாம் அறிந்தாக வேண்டும்.

 

மக்காவில் முகம்மது தன்னுடைய கொள்கைகளை பரப்புரை செய்கிறார். அவருக்கு சொற்பமான ஆதரவும் பலமான எதிர்ப்பும் நிலவுகிறது. இதனால் மக்களை தன்னுடைய கொள்கையின்பால் ஈர்ப்பதற்கு சில உத்திகளைக் கையாள்கிறார். அவர்களது நம்பிக்கைக்கு இசைவான சிலவற்றை தம்முடைய கொள்கையில் ஏற்றுக் கொள்ளும் போது அவர்கள் புதுக் கொள்கையை ஏற்றுக் கொள்வார்கள் எனும் எண்ணத்தில் சிலவற்றை ஏற்றுக் கொள்தல். இந்தியாவில் பார்ப்பனிய இந்து மதம் பௌத்த சார்வாக மதங்களை இந்த முறையில் உண்டு செரித்திருப்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதே அடிப்படையில் தான் அந்த நஜ்ம் அத்தியாய வசனங்கள் கூறப்பட்டன.

 

நீங்கள் லாத்தையும் உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான மனாத்தையும், அவை பரிசுத்தமான வெண்மை நிறப் பறவைகள். அவைகளின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

 

என்று தான் முதலில் அந்த வசனங்கள் இருந்திருக்கின்றன. இந்த விபரங்கள் புஹாரி, முஸ்லிம் போன்றவற்றை உள்ளடக்கிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தொகுதிகள் எனப்படும் ‘ஸ்ஹீஹ் சித்தா’ எனும் ஆறு நூல்களைவிட காலத்தால் முந்திய இப்னு இஸாக், அல் தபரி போன்ற முகம்மதின் வரலாற்றை விவரிக்கும் நூல்களில் காணக் கிடைக்கின்றன. இதனால் தான் அந்த வசனங்கள் வெளிப்பட்டு சஜ்தா செய்தவுடன் இணை வைப்பவர்களும்கூட தம்முடைய தெய்வங்களை முகம்மதின் கொள்கை ஏற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் அந்த வசனங்களுக்கு அவர்களும் மண்ணில் விழுந்து சஜ்தா செய்திருக்கிறார்கள்.

 

இதன் பிறகு மக்காவின் ஒரு பிரிவினர் முகம்மதை ஏற்றுக் கொண்டனர் எனும் செய்தி பரவுகிறது. இதனால் மக்காவினர் தாக்கக் கூடும் எனும் அச்சத்தில் தூர இடங்களுக்கு பெயர்ந்து சென்றிருந்த முகம்மதியர்கள் திரும்பி வர எத்தனிக்கிறார்கள். ஆனால் மக்காவாசிகள் முழுமையாக முகம்மதின் கொள்கையை ஏற்றுக் கொண்டார்களா? அதில் ஏதும் சிக்கல் ஏற்பட்டதா? மீண்டும் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பிவிட்டார்களா? போன்ற விரங்கள் விரிவாக இல்லை. இதன் பிறகு தான் முகம்மது அந்த வசனத்தை இப்போதிருப்பது போல் அவர்களுக்கு ஆண் சந்ததியும் எனக்கு பெண் சந்ததியுமா? என மாற்றுகிறார். இது குரானில் இடம்பெற்றிருக்கும் ஒரேயொரு தனிச் சிறப்பான சம்பவம் அல்ல. இது போன்று வேறொரு நிகழ்சியும் நடந்திருக்கிறது. முஸ்லீம்கள் இன்று அவர்கள் உலகின் எங்கு இருந்தாலும் காஅபா எனும் ஆலயத்தை நோக்கி தொழுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தொடக்கத்தில் அவர்கள் நோக்கித் தொழுத இடம் ஜெருசலத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் எனும் ஆலயத்தை நோக்கித்தான். இதன் மூலம் யூதர்கள் பெருமளவில் தன்னுடைய கொள்கையை நோக்கி கவரப்படுவார்கள் என்று முகம்மது எண்ணியிருந்தார். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறாததால் திசையை மாற்றி இன்றிருப்பது போல் காஅபா ஆலயத்தை நோக்கி திருப்பினார். இந்த விபரங்கள் குரான் வசனங்களிலேயே (2:142,143,144) இருக்கிறது.

 

இப்படி முகம்மது கால, சூழல் வர்த்தமானங்களுக்கு ஏற்ப தான் கூறிய வசனங்களை பின்னர் தானே மாற்றியதைத்தான், சைத்தான் முதலில் முகம்மதிடம் தவறான வசனங்களைப் போட்டு பின்னர் அதை அல்லா திருத்தியதாக கதை கட்டி விட்டனர். ஏனைய ஆப்ரஹாமிய மதத்தவர்கள் இஸ்லாத்தை தாக்குவதற்காக இந்த வசனங்களைப் பயன்படுத்திக் கொண்டாலும்; குரான் என்பது முகம்மது தன்னுடைய தேவைகளை ஒட்டி தானே அமைத்துக் கொண்டது தான் என்பதற்கு இந்த வசனங்கள் தூலமான சான்றுகளாக இருக்கின்றன.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

28 thoughts on “முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

 1. அடேங்கப்பா .. சாத்தானிக் வெர்சஸ் க்குள்ளே இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

 2. சல்மான் ருஸ்தியின் சாத்தானின்கவிதைகள் தேவையில்லை,இந்த சான்றுகளே போதும்

 3. ***********************************************************************************************************************************************************************************************************************************************************

  பெயர் தெரியாத மாஜி,

  என்னை எப்படி திட்டினீர்களோ அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் அது உங்களிடமே வந்து விட்டது. பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவை உங்களுக்கு முற்றிலும் பொருந்தக் கூடிய வாசகங்கள்.

 4. // நீங்கள் லாத்தையும் உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான மனாத்தையும், அவை பரிசுத்தமான வெண்மை நிறப் பறவைகள். அவைகளின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. .. என்று தான் முதலில் அந்த வசனங்கள் இருந்திருக்கின்றன. இந்த விபரங்கள் புஹாரி, முஸ்லிம் போன்றவற்றை உள்ளடக்கிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தொகுதிகள் எனப்படும் ‘ஸ்ஹீஹ் சித்தா’ எனும் ஆறு நூல்களைவிட காலத்தால் முந்திய இப்னு இஸாக், அல் தபரி போன்ற முகம்மதின் வரலாற்றை விவரிக்கும் நூல்களில் காணக் கிடைக்கின்றன. இதனால் தான் அந்த வசனங்கள் வெளிப்பட்டு சஜ்தா செய்தவுடன் இணை வைப்பவர்களும்கூட தம்முடைய தெய்வங்களை முகம்மதின் கொள்கை ஏற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் அந்த வசனங்களுக்கு அவர்களும் மண்ணில் விழுந்து சஜ்தா செய்திருக்கிறார்கள்.// அடடா சாத்தானுடைய வசனங்கள் தான் வேறுபட்ட கடவுள் நம்பிக்கை கொண்ட மனிதர்களை ஒன்று படுத்தியுள்ளது என்பது நிறுபனமாகிறது!!!

 5. அண்ணாச்சி நல்லா இருக்கியளா பதிவுகளை தமிழ்மணத்துல இணைங்க

 6. எதற்காக, யாருக்காக இஸ்லாம் வந்தது?

  ஜாதி மதத்தை விட்டு வெளியேறி நாம் அனைவரும் தமிழரெனும் அடிப்படையில் ஒன்று சேரவேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்பு சகோதரர் சீமானின் இலட்சியம். ஜாதிக்கொடுமை, ஜாதிவெறியை விட்டு வெளியேறுவதெப்படி என்பது பற்றி “தந்தி டி.வி மக்கள் முன்னால்” அரங்கத்தில் அவருடையை அருமையான நிகழ்ச்சியை கண்டேன். அதிலே ஒரு சகோதரர் “தமிழன் என்பதற்கு ஆதாரமே ஜாதிதான். ஜாதியை வைத்துத்தான் தமிழனா இல்லையா என்பதை நிரூபிக்க முடியும்” என்று ஒரு போடு போட்டார்.

  “சாதிகள் இல்லையடி பாப்பா
  குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்!
  சாதி இரண்டொழிய வேறில்லை
  சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையில்
  மேதினியில் இட்டார் பெரியோர்
  இடாதார் இழி குலத்தோர்
  பட்டாங் கிலுள்ள படி”
  என்று இரண்டாயிரம் வருடங்களாக பாடுகிறோம், பரீட்சையில் எழுதுகிறோம். கடைசியில் ஜாதி சான்றிதழை தூக்கிக்கொண்டு கல்லூரிக்கும் வேலைக்கும் அலைகிறோம். ஆனால் ஜாதியை விட்டு வெளியேறுவதெப்படி என்பது பற்றி சிந்திக்கிறோமா என்று மற்றொரு சகோதரர் மனசாட்சியை தட்டி எழுப்பினார்.

  இந்த வாதத்தை கேட்டு ஒரு நிமிடம் வாயடைத்து போய்விட்டேன். ஒரு தலித்தால் வேதத்தை தொட முடியாது. சங்கராச்சாரியாராக முடியாது. ஆனால் திருக்குரானை மனனம் செய்யமுடியும். இமாம் ஆகமுடியும். ராவுத்தார், லெப்பை, மரக்காயர், தக்னி என்று சில பிரிவுகள் முஸ்லிம்களில் இருந்தாலும் கூட, பள்ளிவாசலில் நுழைந்தால் அங்கே தொழுகை நடத்தும் இமாமின் ஜாதி, இனம், குலம், கோத்திரம் என்னவென்று எந்த முஸ்லிமுக்கும் தெரியாது. பேரரசன் கூட அந்த இமாமை பின் தொடர்ந்துதான் தொழவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.

  இறைவனை வணங்காத நாத்திகர்கள் கூட ஜாதியென்று வந்துவிட்டால் வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். ஜாதியை விட்டு வெளியேறுவதற்கு இஸ்லாத்தை தவிர வேறு எதாவது மார்க்கத்தை. மனித இனத்தால் சிந்திக்க முடியுமா?. 1400 வருடங்களாக சிந்தித்தவரெல்லாம் இஸ்லாத்துக்கு வந்துவிட்டனர் அல்லது படுதோல்வியடைந்து போய் சேர்ந்துவிட்டனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

  படுதோல்வியடைந்து போய் சேர்ந்துவிட்டனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

 7. அன்பார்ந்த காஃபிர் சகோதரர்களே, தயவு செய்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவு செய்யுங்கள்.

  அண்ணல் நபியை(ஸல்) காஃபிர்கள் எதிர்த்தனர், கல்லால் அடித்தார்கள், கடுஞ்சொல்லால் வதைத்தார்கள், கொலையே செய்ய துணிந்தார்கள், நாட்டை விட்டே ஓடவைத்தார்கள்.. இறுதியில் எதிர்த்த அனைவரும் இஸ்லாத்தை ஏற்றார்கள். கடந்த 1400 வருடங்களில், ஒரு இஸ்லாமிய நாடு கூட இல்லை எனும் நிலை மாறி இன்றுவரை 55 நாடுகள் இஸ்லாத்தை தழுவிவிட்டன. இன்று உலகில் 170 கோடி மக்கள் இஸ்லாமியர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

  1985 வரை பெரும்பாலான இந்திய முஸ்லிம்களுக்கு இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாத நிலை இருந்தது. தர்காவிலும், முஸ்லிம் பீர்கள் என்று சொல்லப்படும் போலி ஆன்மீகவாதிகளிடமும் போய் வேண்டுதல், சந்தனக்கூடு தூக்குதல், ஆசிர்வாதம் வாங்குதலென்று அறியாமையெனும் ஜாஹிலியாவின் வலையில் சிக்கியிருந்தார்கள்.

  அப்பொழுதுதான் சல்மான் ருஷ்டி எனும் சாத்தானின் வேதம் இஸ்லாத்தை தாக்கியது. என்னவென்று புரிவதற்குள் 1992ல் பாபரி மசூதி இடிக்கப்பட்டது. அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த முஸ்லிம்களின் முதுகில் பளாரென்று அறை விழுந்தது. இனியும் உறங்கினால் கப்ரஸ்தானுக்கு அனுப்பி விடுவார்களென்று எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

  அதற்கப்புறம் 9/11 நடந்தது. முஸ்லிம்களின் முதுகில் தீவீரவாதியென்று முத்திரை குத்தப்பட்டது. இனி இந்திய முஸ்லிம்களின் கதையை ஒட்டுமொத்தமாக முடித்து பாரதமாதவுக்கு சுத்திகரணம் செய்யவேண்டியதுதானென்று ஹிந்துத்வா முடிவு செய்தது. அதற்கு வெள்ளோட்டமாக குஜராத்2002ல் நரேந்திரமோடியின் நரவேட்டை நடந்தேறியது. ஈரானிலும் ஆப்கானிலும் தீவீரவாதத்துக்கு எதிரான போரில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

  இன்று இஸ்லாத்தின் நிலையென்ன?. 20 வருடங்களுக்கு முன்பு வரை திருக்குரான் ஒரு இறைவேதம், அதற்கும் உலகவாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த பெருவாரியான முஸ்லிம்கள் இன்று இதுதான் உலக நீதியென்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட உலக மொழிகள் அனைத்திலும் திருக்குரான் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் குரான், அல்லாஹ், முஹம்மத் எனும் வார்த்தைகள் அத்துபடியாகி விட்டன. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் லட்சக்கணக்கானோர் சத்திய மார்க்கம் இஸ்லாத்துக்கு வந்துவிட்டனர். ஐரோப்பா 2025ல் ஐரோபியா ஆகிவிடுமென்று வாட்டிகன் சொல்கிறது. போப்பாண்டவர் பெனடிக்ட் “நான் ஆண்டவனில்லை. அல்லாஹ்வின் அடிமை” என்று அறிவித்து பதவியை ராஜினாமா செய்து விட்டார். இன்ஷா அல்லாஹ், இந்த வருடம் ஹஜ் செய்வாரென்று சொல்லப்படுகிறது.

  எனதருமை காஃபிர் சகோதரர்களே, இந்த அற்புதம் எப்படி நடந்தது?. நீங்கள் மட்டும் இஸ்லாத்தை தாக்காமலிருந்திருந்தால் இந்நேரம் நாங்கள் வந்தே மாதரம் பாடியிருப்போம். எங்களை உலுக்கி எழுப்பியதற்கு நன்றி. இது போதாது. தயவு செய்து விஸ்வரூபமெடுங்கள். உங்களுக்கு ஷஹாதா தர காத்திருக்கிறோம்.

  “உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் பொழியட்டும்”

 8. ஹிந்து சகோதரர்களிடம் நான் கேட்க விரும்புவது. உங்கள் சிலைகளை நீங்கள் கடவுளென்று நம்புகிறீர்கள். அந்த சிலைக்கு முன்னின்று மனமுருகி பிரார்த்தனை செய்யும் போது, உங்களையறியாமல் உங்கள் கண்கள் ஏன் மூடிக்கொள்கின்றன?.

  ஏனென்றால், உங்களுடைய மனசாட்சி “இந்த சிலைகள் பொய்யானவை” என்று சொல்வதால். உங்களுடைய சிலைகளை நேருக்கு நேர் பர்த்து உங்களால் மனமுருகி இறைவனை பிரார்த்திக்கவே முடியாது. முயற்சி செய்து பாருங்கள். நன்றி.

 9. காபிர்களின் கோரப்பிடியிலிருந்து வெளியேறி பாக்கிஸ்தான் எனும் புனித பூமியை உருவாக்கிய முஸ்லிம்கள் பள்ளிவாசலில் குண்டு வைத்துக்கொண்டு சாவதேன்?.

  உருவாக்கிய 25 வருடங்களுக்குள் முஸ்லிமும் முஸ்லிமும் அடித்துக்கொண்டு 1971ல் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் என்று இரண்டு துண்டாகிவிட்டது. இஸ்லாமியர் ஆட்சியில் பாலும் தேனும் பாக்கிஸ்தானில் ஆறாக ஓடும் என்று கனவுகண்ட முஸ்லிம்கள் ரத்த ஆறு ஓடுவதைத்தான் பார்க்கின்றனர்.

  1947 வரை காபிர்களுக்கு எதிராக ஒற்றுமையாக ஒன்று திரண்ட முஸ்லிம்கள், காபிர் எனும் எதிரி இல்லாதபோது ஒருவரையொருவர் அடித்துக் கொல்லுவதேன் என்று சிந்திக்கவேண்டும்.

  பெருமானார்(ஸல்) அவர்கள் அபுஜஹல் மற்றும் கலீபா உமருக்காக(ரலி) அல்லாஹ்விடம் துஆ கேட்டபோது “யா அல்லாஹ், இருவரில் ஒருவரை எனக்கு தா” என்றுதான் துஆ கேட்டார். இருவரையும் என்னிடம் தந்துவிடு என்று கேட்கவில்லை. ஒரு வலிமையான காபிர் இருந்தால்தான் முஸ்லிம்கள் ஒன்று சேர்வர் என்பதுதான் யதார்த்தம்.

  நரேந்திர மோடி போன்ற அபுஜஹல்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் முஸ்லிம்களின் கதி என்னாகுமோ என்று அஞ்சாமல், எதிரணியில் அபுஜஹல்கள் இருந்தால்தான் முஸ்லிம்களிடையே உமர் கலீபாக்கள் உருவாக முடியும் என்பதை நாம் உணர வேண்டும். இஸ்லாத்தை தைரியமாக ஹிந்து சகோதரர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டுமானால், எதிரணியில் ஒரு மோடி அல்ல 100 மோடிகள் தேவை.

  இஸ்லாமிய எழுச்சிக்கு நன்பர் பூங்கொடி போன்ற காபிர்கள் மேன்மேலும் தேவை.

 10. திருக்குரானின் அடிப்படையில் இறைவன் அன்புக்கும் ஆசைக்கும் அப்பாற்பட்டவன். அவன் யார் மீதும் அன்பு செலுத்துவதுமில்லை, யாருடைய அன்பும் அவனுக்கு தேவையுமில்லை. அவனுடைய சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமம்.

  திருக்குரானிலே இறைவன் தன்னைப்பற்றி “அனுவளவும் நீதி தவறாத நீதிமான்” என்று சொல்கிறான். “தீமை செய்தால் நரகம், நன்மை செய்தால் சுவர்க்கம்” என்று செயலும் அதன் விளைவையும் பற்றி தெளிவாக சொல்கிறான். எந்த இடத்திலும் “என் மீது அன்பு செலுத்து” என்று சொல்லவில்லை. நீதிபதிக்கு பயந்தால்தான் சட்டத்தை மனிதன் மதிப்பான். நீதிபதிக்கு அவன் மீது அன்பு வந்துவிட்டால் சட்டத்தை வளைப்பான்.

  அன்பே சிவம் என்று வந்துவிட்டால் கண்ணன் மீது காதல் வந்துவிடும். “கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான்” என்று கண்ணனை காதலனாகவும், “அபிஷேக நேரத்தில்அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன், ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்” என்று காதலியை அம்பாளாகவும் நினைந்து காம ஆன்மீக பக்தி பரவசத்தில் திளைக்குமளவுக்கு சிந்தனை கோளாறு வந்துவிடும். நன்றி.

 11. காபிர் நரேந்திர மோடிக்கு முஸ்லிம்கள் எப்படி ஆப்படிக்கலாம்?

  முஸ்லிமாக வாழ முடியாவிட்டால், எங்கே முஸ்லிமாக வாழமுடியுமோ அங்கே ஹிஜ்ரத்(புலம்பெயர்தல்) செய் என்று திருக்குரான் சொல்கிறது. பெருமானாரை(ஸல்) காபிர்கள் “இஸ்லாத்தை பற்றி பேசாதே, முஸ்லிமாக வாழாதே, இல்லாவிட்டால் கொன்று விடுவோமென்று” மிரட்டியபோது, இரவோடு இரவாக மதீனாவுக்கு புலம்பெயர்ந்தார். மதீனாவாசிகள் அடைக்கலம் தந்து முஸ்லிமாக வாழ அனுமதித்தனர். அந்தகாலத்தில் அடைக்கலம் கேட்க ஒரு முஸ்லிம் நாடு கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  1. முதலில் 30 கோடி முஸ்லிம்களூம் “இன்று முதல் நாங்கள் இந்தியாவின் பிரஜைகளல்ல. திருக்குரான்படி நாங்கள் தாருல் இஸ்லாமின் பிரஜைகள். ஆகையால் தயவு செய்து எங்களுடைய குடியுரிமையை ரத்து செய்யுங்கள், தேவைப்பட்டால் எங்களை அடித்துவிரட்டுங்களென்று” ஜனாதிபதியிடம் அறிவிக்கவேண்டும். அதே சமயம் சைனாவுக்கும் “நீங்கள் விரும்பினால், எங்கள் தாருல் இஸ்லாம் தேசத்தை சீனாவின் பெடரேசனென்று அறிவிக்கலாம். நாங்கள் தயார்” என்று தூது அனுப்பிவிட வேண்டும்.

  2. அடுத்த கட்டமாக, இன்றைக்கு 55 முஸ்லிம் நாடுகள் உள்ளன. 30 கோடி இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக ஹிஜ்ரத் கோரிக்கை வைக்கவேண்டும். வரவேற்பதும் வரவேற்காததும் அவரவர் இஷ்டம். கோரிக்கை வைக்க எங்களுக்கு உரிமையுண்டு. மற்ற கிருத்துவ நாடுகள் “முஸ்லிமாக வாழலாம், வாருங்களென்று” அறிவித்தால் அங்கேயும் செல்லலாம்.

  நரேந்திர மோடியிடம் அடிபட்டு சாவதைவிட இது மேலானது. இது ஒன்றும் முடியாத காரியமல்ல. ஒரே ஒரு ஜும்மா தொழுகை மூலம் நாடு முழுக்க பள்ளிவாசல்களில் அறிவிக்கமுடியும்.

  தாருல் இஸ்லாமென்பது தனி நாடல்ல. நாட்டுக்குள்ளே நாடு(Nation within a nation). முஸ்லிம்கள் மானம் மரியாதையுடன் வாழ இது ஒன்றே வழி. இல்லாவிட்டால் நரேந்திர மோடி பற்றி புலம்பிக்கொண்டே சாகவேண்டியதுதான்.

  இப்பொழுது உங்களுடைய ரியாக்சன் என்னவென்று சொல்லுங்கள். நன்றி.

 12. ஆம்.. அநீதிக்கு எதிராக ஜிஹாத் செய் என்றுதான் திருக்குரான் சொல்கிறது:

  மஹாத்மா காந்தியை போட் தள்ளியது யாரென கேட்டால், நாங்கள்தான் என்று பிராமணர் தைரியமாக சொல்வர்.  இந்திரா காந்தியை போட் தள்ளியது யாரென கேட்டால், நாங்கள்தான் என்று சீக்கியர் தைரியமாக சொல்வர். ராஜீவ் காந்தியை போட் தள்ளியது யாரென கேட்டால், நாங்கள்தான் என்று தமிழர் தைரியமாக சொல்வர்.

  அநீதிக்கு எதிராக ஜிஹாத் செய் என சொல்வது யாரென்று கேட்டால் “திருக்குரான்” என உலகமே சொல்லும். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் “ஹி..ஹி.. அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அதாவது நன்மையை ஏவி தீமையை தடுத்து நிறுத்துங்கள் என்பதுதான் அதன் அர்த்தம்” என்று மழுப்புவார்கள்.

  1400 வருடங்களுக்கு முன்பு, புனித கஃபாவில் 360 சிலைகளை வைத்து பிராமணர்கள் கிட்டத்தட்ட 2500 வருடங்களாக சிலைவணக்கம் செய்து வந்தனர். அந்த குறைஷிக்கள் எனும் பிராமணர் குலத்தில்தான் பெருமானாரை(ஸல்) அல்லாஹ் படைத்து ஏகத்துவ கொள்கையை எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டான்.
  “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர  வேறு யாருமில்லை. முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதரும் அடிமையும் ஆவார்கள்” எனும் உண்மையை பிரச்சாரம் செய்த நபிகளாரை பிராமணர்கள் கல்லால் அடித்தனர், கடுஞ்சொற்களால் வதைத்தனர். கடைசியில் அவரை கொல்ல திட்டமிட்டனர்.
  அப்பொழுது மதினாவாசிகள் அவருக்கு அடைக்கலம் தந்து தலைவராக ஏற்றுக்கொண்டனர். மதினாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியது. சிறிது காலத்தில் வறுமை நீங்கி அமைதி மலர்ந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணல் நபிகளார், மக்கா பிராமணர்களிடம் தங்களை நாடு திரும்ப அனுமதிக்கவேண்டும் என்று பலமுறை அமைதி தூதனுப்பினார். ஆனால், அமைதியின் அர்த்தம் பிராமணர்களுக்கு விளங்கவில்லை.

  இறுதியாக, தங்களது பிறந்த மண்ணை பிராமணரின் வருணதரும கொடுமையிலிருந்த மீட்க ஜிஹாத் எனும் தருமயுத்தம் ஒன்றே கடைசி வழியென்று அறிவித்தார். பத்ரு போரில், ஆயிரக்கணக்கான போர் வீரர்களையும் பயங்கர ஆயுதங்களையும் கொண்ட மாபெரும் பிராமணரின் படையை முந்நூற்று முப்பது பேர் கொண்ட மிகச்சிறிய முஸ்லிம்களின் படை பெருமானாரின் தலைமையில் தோற்கடித்தது.
  அதற்குப்பிறகு, தனது அறுபதாவது வயதில் மக்காவை கைப்பற்றினார். புனித கஃபாவில் இருந்த முந்நூற்று அறுபது சிலைகளையும் உடைத்தெறிந்து வருணதருமத்தின் வேரை அரேபிய மண்ணிலிருந்து வெட்டி எறிந்தார். அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் 55 நாடுகளை கைப்பற்றிவிட்டது. 170 கோடி மக்கள் முஸ்லிம்களாக வாழ்கின்றனர்.

  1940ல் இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் பிராமணர் முஸ்லிம்களை தாக்கினர். முஸ்லிம்கள் அவர்கள் மீது ஜிஹாத் செய்து 1947ல் பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று பாக்கிஸ்தான் ஒரு அனுசக்தி நாடாக உருவாகி பிராமணரின் திமிரை அடக்கிவிட்டது. என்ன அந்தர்பல்டி அடித்தாலும் பிராமணரால் பாக்கிஸ்தானை இனி ஒன்றுமே செய்யமுடியாது என்பது ஊரறிந்த உண்மை.

  இன்று பாக்கிஸ்தானில் பாலும் தேனும் ஆறாக ஓடுகிறது என்று சொன்னால் அது முட்டாள்தனம். அமெரிக்கா எனும் ரத்தக்காட்டேறியை ஆப்கானிஸ்தானில் பாக்கிஸ்தான் ஒடுக்கிவிட்டது. விட்டால் போதுமென அமெரிக்கா ஓடத்தயாராகிவிட்டது. அமெரிக்கா வெளியேறிவிட்டால், காஷ்மீரை விடுதலை செய்ய தாலிபான்கள் இந்தியா மீது ஜிஹாத் செய்வர் என்பது வருணதருமத்தின் உச்சானிக்கொம்பிலிருக்கும் பிராமணருக்கு நன்றாகவே தெரியும்.

  ஆக 1400 வருடங்களுக்கு முன்பு வருணதருமத்துக்கு எதிராக கஃபாவில் முஸ்லிம்கள் தொடங்கிய ஜிஹாத்தான் இன்றுவரை பிராமின் முஸ்லிம் தருமயுத்தமாக தொடர்கிறது என்பதை எந்த முஸ்லிமாலும் மறுக்கமுடியாது. தினந்தோறும் ஐந்து வேளை “குல் யா அய்யுஹல் காஃபிரூன்” எனும் சூராவை முஸ்லிம்கள் காஃபிர்களுக்கு எதிராக ஓதுகின்றனர் என்பதையும் முஸ்லிம்களால் மறுக்க முடியாது.

  ஜிஹாத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றவேண்டுமானால், 30 கோடி முஸ்லிம்களை இந்தியாவைவிட்டு வெளியேற்றுவது ஒன்றே இறுதிவழி. ஆனால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது. அதுவே ஜிஹாத் செய்ய லைஸன்ஸ் கொடுத்தது போலாகிவிடும். அதற்குள் இந்தியா இஸ்லாமிய நாடாகிவிடும் என்பதுதான் கசப்பான உண்மை.
  பிராமணர் மனதுவைத்தால் “லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” எனும் திருக்கலிமாவை ஓதி அகண்டபாரதத்தின் கலிஃபாக்களாக ஆகமுடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

  எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பிராமின் சகோதரர்களுக்கு நேர்வழியை காண்பிப்பானாக.

 13. ப்ராஹ்மின் இப்ராஹ்மின் – ரிஷி மூலம், நதி மூலம்:

  ப்ராமின் எனும் வார்த்தைக்கு அர்த்தமென்ன என்று எனது பிராமின் நன்பர்களிடம் கேட்டேன். ப்ராமின் என்றால் “பிரம்மனிலிருந்து வந்தவன்” என்று அர்த்தம் என்றார்கள். அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேட்டேன். எங்கள் வேதம் அப்படித்தான் சொல்கிறது என்றார்கள்.ஆம் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  ப்ராஹ்மின் = ப்ராஹ்ம்+மின்: ப்ராஹ்மின் என்பது அரபி வார்த்தை. “ப்ராஹ்ம்+மின்” எனும் இரண்டு சொற்களின் இணைப்பு. அரபியில் “மின்” என்றால் “அங்கிருந்து, அதிலுருந்து” என்று பொருள்.
  ப்ராஹ்ம்+மின் = “ப்ராஹ்ம்”ல் இருந்து”, பிரம்மனிலிருந்து.

  ப்ராஹ்மணா = ப்ராஹ்ம்+அனா: ப்ராஹ்மணா எனும் சமஸ்கிருத வார்த்தையும் “ப்ராஹ்ம்+அனா” எனும் வார்த்தைகளின் இணைப்பு. அரபியில் “அனா” என்றால் நான் என்று பொருள்.
  ப்ராஹ்ம்+அனா = நான் “ப்ராஹ்ம்”, நான் இப்ராஹிமின் சந்ததி.

  “ப்ராஹ்ம்” என்பது இப்ராஹ்ம், அப்ராஹ்ம் என்று இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்களை குறிப்பிடுகிறது. அதாவது ப்ராஹ்மின், ப்ராஹ்மணா என்றால் இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்களின் வம்சாவழியினர், சந்ததி என்று பொருள்.

  5000 வருடங்களுக்கு முன்பு இப்ராஹிம்(அலை) அவர்களின் தந்தை கோயில்களுக்கு சிலைகளை செய்து தரும் தொழிலை செய்து வந்தார். சிலைவணக்கத்தை எதிர்த்து இப்ராஹிம்(அலை) வீட்டை விட்டு வெளியேறினார். 1400 வருடங்களுக்கு முன்பு புனித கஃபாவில் 360 சிலைகளை வைத்து குறைஷிக்கள் எனும் பிராமின்ஸ் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது புனித கஃபா பெருமானாரின் தாத்தா அப்துல் முத்தலிபின் பொறுப்பிலிருந்தது.

  ஏகத்துவத்தை பறைசாற்றிய எம்பெருமானார்(ஸல்) சிலைவணக்கம் செய்த குறைஷிக்கள் இனத்தில் பிறந்தார் என்பதை மறந்து விடலாகாது.

  1. ஏகத்துவத்தை ஏற்கா விட்டாலும், சிலவணக்கம் செய்து கொண்டிருந்த குறைஷிக்கள் அனைவரும் இப்ராஹிம்(அலை) அவர்களின் சந்ததியினர். அவரை பெரிதும் மதித்தனர். தங்களை “இப்ராம்-மின்” (இப்ராஹிமிலிருந்து வந்தவர்) என்று சொல்லி பெருமிதம் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  2. இது தவிர ஹஜ்ஜில் முஸ்லிம்கள் நிறைவேற்றும் கடமைகளும் திருப்பதியில் ப்ராமின்ஸ் நிறைவேற்றும் கடமைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என்பதை மறுக்க முடியாது.

  * மொட்டையடித்தல்
  * இஹ்ராம் எனும் தையலற்ற வெள்ளைத்துணியை உடலில் சுற்றிக்கொள்ளுதல்
  * ஏழு முறை கஃபாவையும் கர்ப்பக்கிருகத்தையும் சுற்றுதல்
  * தூண் மீது சிறு கூழாங்கற்களை ஏழு முறை எறிதல் – பூக்களை எறிந்து அர்ச்சித்தல்.
  * ஜம் ஜம் எனும் புனித நீர் குடித்தல் – தீர்த்தம் அருந்துதல்

  3. திருப்பதியை சுற்றி ஏழு மலைகள் உள்ளன. மெக்காவை சுற்றியும் ஏழு மலைகள் உள்ளன.

  பிராமின்ஸின் ஆட்சி அதிகாரத்தின் மையமாக காஃபா இருந்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட உட்பூசல்களால், ஒரு பிரிவினர் பிரிந்து சென்று காஃபா போலவே ஏழு மலைகளால் சூழப்பட்ட திருப்பதியில் கோயில் கட்டி தங்களது வணக்க வழிபாடுகளை நிலைநாட்டினர். இது இப்ராஹ்ம்(அலை) அவர்களுக்கு முன்னால் கூட ஏற்பட்டிருக்கலாம். காஃபாவை முதலில் கட்டியது ஆதம்(அலை) அவர்கள். காஃபா வழிபாட்டு முறைகள் இப்ராஹ்ம்(அலை) அவர்களுக்கு முன்பே வழக்கத்தில் இருந்தது.

  ஜெருசலேம், ரோம் ஆகிய நகரங்களும் ஏழு மலை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. அதாவது புனித ஸ்தலங்களுக்கும் ஏழு மலைகளுக்கும் ப்ராஹ்ம்(அலை) வம்சாவழிக்கும் உள்ள உறவை புரிந்து கொள்ளலாம்.

  4. இப்ராஹிம்(அலை) அவர்களின் துணைவியார் பெயர் சாரா. ப்ரம்மனின் மனைவி பெயர் சர”ஸ்வதி”. ஸ்வதி என்றால் தூய்மை. அதாவது தூய சாரா என்று பொருள்.

  5. காஃபாவுக்கு வெளியே இப்ராஹிம்(அலை) அவர்களின் பாதச்சுவடுகள் “மகாமே இப்ராஹிம்” எனும் உலோகக் கூண்டுக்குள் பாதுகாக்கப் படுகிறது. முஸ்லிம்களுக்கு இது மிகவும் புனிதமானது. குரைஷி பிராமின்ஸும் இதை மிகவும் புனிதமாகக் கருதி 2500 வருடங்கள் பூஜித்தனர். அதுதான் இன்று பாதபூஜை எனும் சம்பிராதயமாக மாறிவிட்டது.

  6. வேதத்தில் பிரம்மன் என்பது உருவமற்ற ஏக இறைவனை குறிக்கும். பிரம்மா என்பது இறைத்தூதர் இப்ராஹ்ம்(அலை) அவர்களை குறிக்கும். ஹிந்து சமய வழிபாட்டில், உருவமற்ற பிரம்மனுக்கு சிலையும் கிடையாது, சிலைவணக்கமும் கிடையாது என்பது குறிபிடத்தக்கது. உருவவழிபாட்டை எதிர்த்த பிரம்மாவுக்கு ஒன்றிரண்டு கோவில்கள் உண்டு. பிரம்மாவின் சிலைக்கு மட்டும் தாடியும் உண்டு என்பதும் குறிபிடத்தக்கது.

  7. “அக்ரஹாரம்” — கஃபாவை “ஹரம்” என்று முஸ்லிம்கள் அழைப்பதுண்டு. ஹரம் என்றால் விலக்கப்பட்டது என்று அர்த்தம். அதாவது தீமை விலக்கப்பட்ட புனித இடம் என்று பொருள். அக்ரஹா என்றால் ஆட்கொள்வது என்று பொருள். ஆக அக்ரஹாரம் என்றால் புனித இடத்தை ஆட்கொண்டவர் என்று பொருள். அதாவது 2500 வருடம் கஃபாவை ஆட்கொண்ட குரைஷி பிராமின்ஸை குறிக்கும்.

  மிருகங்களை வேட்டையாடுவது ஹரம் வட்டாரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. காஃபா அக்ரஹாரத்தில் வாழ்ந்த பிராமணர் சைவமாக மாறியதற்கு இதுவும் ஒரு வலுவான காரணம் என்று கூட சொல்லலாம்.

 14. பிராமின் கலீஃபா (Khalifa – தலைவர், தளபதி):

  “ஓ பிராமின் சகோதரா !!. குண்டுச்சட்டியை விட்டு வெளியேறு. உனது குதிரை, உனது முன்னோர்களின் அக்ரஹாரம் புனித கஃபா நோக்கி செல்லட்டும்”.

  ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றால், நல்ல திறமைசாலிகளை அதன் இயக்குனர்களாகவும் மேனேஜர்களாகவும் நியமிக்க வேண்டும். அதே போல் ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் நல்ல தலைவர்களை மனம் திறந்து வரவேற்க வேண்டும்.

  இன்று உலக முஸ்லிம்கள் ஜனத்தொகை 170 கோடி. 55 இஸ்லாமிய நாடுகள். கனிவளம், நிலப்பரப்பு போன்றவற்றை இந்தியாவிடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 10 இந்தியாவுக்கு சமம். இதைத் தவிர ஐரோப்பாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் முஸ்லிம் ஜனத்தொகை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

  இந்த 170 கோடி முஸ்லிம்களை 5 கோடி பிராமின் சமுதாயத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். முஸ்லிம்களிடம் எல்லாத் திறமைகளும் உள்ளன, இரண்டைத் தவிர. அது அரசியல் சாதுர்யமும் அறிவாற்றலும். நல்ல தலைவனுக்கு இந்த இரண்டும் அவசியம். அது பிராமின்ஸிடம் உள்ளது. அதனால்தான் “தலைவா!!. தலைமை தாங்க வா !!” என்று அழைக்கிறேன்.

  நான் அழைத்ததும் இஸ்லாமிய உலகம் இவர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளுமா?. முஸ்லிம்களிடம் ஆயிரம் பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் அனைவரிடமும் இருப்பது ஒரே ஒரு திருக்குர்ஆன். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. அது காட்டும் வழிதான் “லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலல்லாஹ்” எனும் ஷஹாதா. திருக்குர்ஆன் உங்களை நேரடியாக அழைக்கிறது. எவ்வளவு பெரிய கண்ணியம்?. நான் வெறுமனே எடுத்துச் சொல்கிறேன். அவ்வளவுதான்.

  5 கோடி பிராமின்ஸிடம் உள்ள திறமை 170 கோடி முஸ்லிம்களிடம் உள்ளதா?. உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் 55 முஸ்லிம் நாடுகளுக்கு கிடைக்கிறதா?. பிராமின் சமுதாயத்தை உலக நாடுகள் பெரிதும் மதிக்கின்றன. முஸ்லிம் நாடுகள், இது போல் நமது முஸ்லிம்களில் யாருமே இல்லையே என்று ஏங்குகின்றன.

  தலைமை ஏற்க இவர்களை விட திறமைசாலி முஸ்லிம்களில் உண்டா?. அப்படி இருந்திருந்தால், இந்த பேச்சுக்கே இடமில்லையே. ஆக திறமையின் அடிப்படையில் வைத்தால், இவர்களை மிஞ்ச யாருமே கிடையாது. இஸ்லாமிய உலகம் இவர்களை சிம்மாசனத்தில் அமர வைத்து மணிமகுடம் சூட்டி விடும். முஸ்லிமுக்கு முஸ்லிம் தலைவர். இவர் நம்மாளு என்று பெருமைப் படுவர். பிரச்னையே கிடையாது.

  இதனால் இந்தியாவுக்கு என்ன பயன்? :

  1. 55 இஸ்லாமிய நாடுகளின் தன்னிகரில்லா தலைவனாக இந்தியா ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் படும்.

  2. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் ஜனத்தொகையை எளிதாக இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி விடலாம். அவர்களுக்கு மனித வளம் தேவை. யாதும் ஊரே யாவரும் முஸ்லிம்.

  3. இதன் மூலம் அடுத்த 100 வருடங்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வறுமை ஒழியும். செல்வம் கொழிக்கும். எல்லோரும் எல்லாமும் பெறுவர்.

  இதனை குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

  யூத மதமும் கிருத்துவமும் இந்த கண்ணியத்தை தருவார்களா?. தலைவனாக ஏற்றுக் கொள்வார்களா?. யூத சூத்திரராகவும், கிருத்துவ அடிமையாகவும்தான் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் கூஜா தூக்க வேண்டும். வெண்சாமரம் வீச வேண்டும்.

 15. பெருமானார்(ஸல்) பிறந்தது சிலைவணக்கம் செய்த குரைஷி இனத்தில். அங்கிருந்து இந்தியாவுக்கு சிலைவணக்கம் கொண்டு வந்த குரைஷிக்கள்தான் பிராமின்ஸ் ஆகிவிட்டனர்.

  பெருமானாரை(ஸல்) 8 வயது முதல் கிட்டத்தட்ட 53 வயது வரை வளர்த்து பாதுகாத்தவர் அவரது சித்தப்பா அபு தாலிப். இவர் குரைஷிக்களின் தலைவர். சாகும் வரை இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும், தனது இறுதி மூச்சு வரை பெருமானாரை(ஸல்) உயிருக்கும் மேலாக பாதுகாத்து வளர்த்த ஒரு மஹா பிராமின் என்று இஸ்லாமிய அறிஞர்களால் மதிக்கப்படுகிறார். இவர் இறந்த பின் குரைஷிக்கள் பெருமானாரை(ஸல்) கொல்ல திட்டமிட்டனர். அப்பொழுதுதான் மக்கா விட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்.

  தனது 60வது வயதில் பெருமானார்(ஸல்) கஃபாவை சிலைவணக்கம் செய்த குரைஷிக்களிடமிருந்து கைப்பற்றினார். அப்பொழுது அவரைச் சுற்றி ஹஜ்ரத் பிலால் போன்ற தலித் அடிமைகளும் முஸ்லிம்களும் கிருத்தவரும் யூதரும் சிலைவணக்கம் செய்வோரும் நின்றிருந்தனர். அங்கே ஒரு மாபெரும் கண்ணியத்துக்குரிய “இப்ராஹ்ம்-மின்”னும் நின்றிருந்தார்.

  வேத பண்டிதரின் தலைக்குப் பின்னால் ஒரு ஜான் நீளத்துக்கு தொங்கும் குதிரை வால் முடிக்கும், இமாமின் தலைப்பாகையின் பின்னால் தொங்கும் ஒரு ஜான் துணிக்கும் உறவு உண்டு. திருப்பதியில் ஏழு முறை கர்ப்பக்கிருகத்தை சுற்றுவதற்கும் கஃபாவை ஏழு முறை சுற்றுவதற்கும் அர்த்தமுண்டு.

  ப்ராஹ்ம்-மின்தான் இப்ராஹ்ம்-மின். இப்ராஹ்ம்-மின்தான் ப்ராஹ்ம்-மின்.

  திருக்குர்ஆன் முஸ்லிம்களின் ஏகபோக உரிமையல்ல. இது மனிதகுலத்திற்கு இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம். இஸ்லாம் வந்துவிட்டால் நாங்கள் எங்கே போவது என்று பீதியடையாமல், இஸ்லாம் வந்ததே உங்களிடமிருந்துதான் என்பதை உணர வேண்டும்.

  ஆக பிரம்ம சூத்திரத்தை அரபியில் சொன்னால் ஷஹாதா. ஷஹாதா சொல்லிவிட்டால், 55 இஸ்லாமிய நாடுகளும் பிராமணரின் கையில் லட்டு போல் விழும்.
  பெருமானர்(ஸல்) முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. மனித குலத்துக்கே சொந்தம்.

  “உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர், உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்”.

  ****************************

  மனித இனத்துக்கே வழிகாட்டும் திறமை பிராமின்ஸிடம் உள்ளது. தேவை ஒரு லட்சம் ஷஹாதாக்கள்.

  குண்டுச்சட்டியின் மீது ஏனிந்த மோகம்?. தூக்கி எறியுங்கள். உலகம் உங்கள் கையில்.

  இஸ்லாமிய உலகின் அடுத்த கலீஃபா இந்தியாவில்தான் தோன்றுவார். அவர் ஒரு பிராமின் குடும்பத்தில் பிறப்பார் என்பது எனது கணிப்பு.

  இதனைச் சொல்வதால் நான் பெரிய இஸ்லாமிய மார்க்க அறிஞர், முல்லா என்று எண்ண வேண்டாம். பசி, பட்டினி, வறுமை ஒழிந்து “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்” என விரும்பும் ஒரு சராசரி மனிதன். என்னுடைய அறிவுக்கு இதை விட சிறந்த வழி தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

 16. அன்னை ஆயிஷாவின் பெயரை பற்றி சிந்தித்து பார்த்தேன். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா எனும் கேள்வி எழுந்தது. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது என்பது என்னை பிரமிக்க வைத்துவிட்டது. ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா ……

  SHA வுக்கும் SHAH வுக்குமுள்ள வித்தியாசத்தை கவனிக்கவும். அனைத்து பிராமின் பெண்களின் பெயர்களும் AISHA போல் SHA என்றே முடிகின்றன. SHA என்பது அரபிகளின் அடையாளமல்ல. பாராசீக பிராமணரின் அடையாளம். வேத அறிஞர்களுக்கு தரப்பட்ட பட்டம்தான் SHA, SHASTRYஎன்பது. SHAHஎன்றால் அரசன் என்று அர்த்தம்.

  அன்னை ஆயிஷாவின் தந்தை அபுபக்கர் சித்தீக் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு காபாவில் குரைஷி இனத்தை சார்ந்த பெரிய பூசாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  எல்லாப்புகழும் இறைவனுக்கே.

 17. சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்:

  தலித் சூத்திரர் தீண்டத்தகாதவரென பிறந்து இட ஒதுக்கீட்டால் இஞ்சினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளை அடைந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே திருமணம் என்று வந்து விட்டால் உயர்ஜாதிப் பெண்களை மணப்பதையே விரும்புகின்றனர், திரு.அம்பேத்கர் உட்பட. எத்துனை பேர் ஓலைக்குடிசைக்கு சென்று சித்தாள் வேலை செய்து பிழைக்கும் மாமன் பெண் கருப்பாயி, மூக்காயிக்கு தாலி கட்டினர் என்பதை சிறிது ஆய்வு செய்தால் நல்லது.

  பிரச்னை என்னவென்றால், திருமணம் செய்த தம்பதியருக்குள் மேல்ஜாதி கீழ்ஜாதி வேற்றுமைகள் உடனே தலைதூக்கி விடுகிறது. “உனது பெற்றோருக்கு தனியாக வீடு வாங்கி கொடுத்து விடு. இங்கே அவர்கள் வரக்கூடாது. நம்மோடு இருந்தால், நமது சமூக அந்தஸ்துக்கு ஒத்து வராது. நீ அவர்களை தனியாக சந்திப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. நமது குழந்தைகளை அழைத்துச் செல்லாதே” போன்ற நிபந்தனைகளை ஏற்று உயர்ஜாதிப் பெண்ணை திருமணம் செய்யும் நிலை. ஒரு அடிமை சாசனத்திலுருந்து விடுபட்டு மற்றொரு அடிமை சாசனம் எழுதித் தரவேண்டிய நிலை.

  அப்படியும் பிரச்னை தீர்ந்ததா?. கல்யாணம் காட்சிகளில் மாமனார் வீட்டு ஹை சொசைட்டியினரின் மறைமுக தீண்டாமை. அதிலும் குழந்தைகளின் சாயல், தந்தை வழி மரபணு பக்கம் சென்று விட்டால் கேட்கவே வேண்டாம். கூடப் பிறந்த தங்கைகள், அய்யங்கார் வீட்டுக் கல்யாணத்தில் தன்னை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லையே என்று வைதேகி ஆண்டியப்பன் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழும் நிலை.

  “கிரீமி லேயரா?… உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா?. எனது கணவரின் ஐ.ஏ.எஸ் அதிகாரம் இங்கே செல்லுபடியாகாது. தடுக்கி விழுந்தால் இந்த சபையில் ஹார்வேர்டும், ஸ்டான்ஃபோர்டும்தான். நான் ஒரு நவீன தலித்” என்று எண்ணிக் கொண்டார்.

  *************************

  அடுத்த வாரம் துபாய் இப்ராஹிம் பாய் பையனின் திருமணம். பெண் மரக்கடை ராவுத்தரின் பேத்தி. பரம்பரை பணக்காரர். 25 வருடங்களுக்கு முன்பு இப்ராஹிம் பாய் எனும் முத்து, எருமை நாயக்கன் பட்டியில் ரோடு வேலை செய்து கொண்டிருந்தார்.

  வைதேகி ஆண்டியப்பன் தம்பதியர் திருமண மண்டபத்தில் நுழைந்ததும் “அண்ணா வாங்க, அண்ணி வாங்க, வணக்கம், சலாமலைக்கும்” என்று இரு வீட்டாரும் தடபுடலான வரவேற்பு.

  பிரியாணி சாப்பிட்டு வெத்திலை பாக்கு போட்டும் இப்ராஹிம் பாய் விடவே இல்லை. அவர் கட்டிய புது பள்ளிவாசலை அழைத்துச் சென்று காண்பித்தார். பள்ளியின் நுழைவு வாயிலின் அருகே கல்வெட்டில் “எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் இந்த பள்ளியை கட்டியவர் ஜனாப்.இப்ராஹிம் பாய். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என்று எழுதப் பட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை.. வைதேகி ஆண்டியப்பன் தம்பதியருக்கு யாரோ சம்மட்டியால் அடித்தது போன்ற உணர்வு. ஒருவரை ஒருவர் மௌனமாக பார்த்துக் கொண்டனர்.

  இப்ராஹிம் பாயிடம் பிரியா விடை பெற்று வீட்டுக்கு திரும்பும் வழியில், பள்ளியிலிருந்து “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்..” எனும் தொழுகை அழைப்பு. “ட்ரைவர்..ஒரு நிமஷம் காரை திருப்பு” என்றனர் வைதேகியும் ஆண்டியப்பனும் ஒரே குரலில்.

  இப்ராஹிம் பாய் பள்ளி நோக்கி கார் திரும்பியது. ஆண்டியப்பனும் வைதேகியும் ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை தழுவினர். அப்துல்லாஹ் ஆமினா என்று தங்களை அறிவித்தனர். குழந்தைகளுக்கு முஹம்மத், பிலால் என்று பெயர் சூட்டினர். இஸ்லாமிய சகோதரர்கள் “மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்” என்று வாழ்த்து தெரிவித்தனர்.

  15 நாள் அலுவல் காரணமாக வெளியூர் சென்று வீட்டில் நுழைந்த திரு.அப்துல்லாஹ் அவர்களுக்கு நம்ப முடியாத அதிர்ச்சி. 20 வருடங்களில் ஒரு முறை கூட வீட்டு வாசப்படி ஏறாத அப்துல்லாஹ்வின் தலித் பெற்றோர் “வாப்பா வா” என்று கண்ணீர் மல்க வரவேற்றனர்

  “நீதியைக் காட்டி, நேர்மையை ஊட்டி
  நெறிவழி அழைத்தார் நபி பெருமானார்
  ஜாதியை பேசி, சடங்குகள் பேசி
  சமூகத்தை கெடுத்தார் இருமுறை தாரார்
  என்ன காலமோ என் சோதரா
  ஏன் எடுத்தாய் இந்த கோலமோ”

 18. Dr.A.Anburaj,

  //சாணக்கியர் ஒரு அரேபிய மதவாதி என்று எண்ணுகின்றேன். தனது அரபுநாட்டுப் பெயரை மறைத்து சாணக்கியன் என்று தனது அடையாளத்தை மறைத்து எழுதுகின்றார். இந்து சமூகம் சார்ந்த ஒரு பிரச்சனையில் அரேபிய மதவாதிகள் தலையிடு சரயாக இருக்காது. குழப்பத்தில் கலகம் விளைவிக்கப் பார்க்கின்றார் ஜனாப். சாணக்கியன்//

  வாதம் செய்ய முடியாவிட்டால், ரிஷி மூலம் நதி மூலம் ஆரய்ச்சியில் இறங்குவது சிலரின் இயல்பு.

  1. ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை ஏற்று, காபிர்களுக்கு எதிராக 1400 வருடங்களாக “குல்யா அய்யுஹல் காபிரூன்” ஒதுவோர் அரேபிய மதவாதிகள் என்றால், 170 கோடி முஸ்லிம்களும் அரேபிய மதவாதிகள்தான்.

  2. சரி அது போகட்டும். காபிர் நரேந்திர மோடிக்கு முஸ்லிம்கள் எப்படி ஆப்படிக்கலாம் என்று மேலே பதிந்துள்ள கட்டுரைக்கு உங்கள் பதிலென்ன?. அதாவது பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஹிந்துக்களுக்கான தீர்வும் அதுவே.

 19. தலித்தால் வேதத்தை தொட முடியாது. சங்கராச்சாரியாராக முடியாது. நிற்க ……. நாடு முழுவதும் கிளைபரப்பி உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில், திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் யாரும் துறவறம் ஏற்கலாம். என்ன சாதி என யாரும் கேட்க மாட்டார்கள். யாராவது துறவு நெறியேற்று வாழ விரும்பினால் உடனே ஸ்ரீமடம் செல்லுங்கள்.

 20. சாணக்கியன் செங்கொடியில் உள்ள இஸ்லாம் குறித்த பல கட்டுரைகளை முதலில் படிக்க வேண்டும். அவைகளை மறுத்து கடிதம் எழுத வேண்டுகின்றேன். 50 வயதில் 6 வயது சிறுமியை திருமணம் செய்த பரம யோக்கியன் முகம்மதுவை பின்பற்றத்தான் வேண்டுமா ?படிப்பதற்கே அசிங்கமாக இருக்கின்றது.

 21. //யாராவது துறவு நெறியேற்று வாழ விரும்பினால் உடனே ஸ்ரீமடம் செல்லுங்கள்//

  இந்த பஜனையெல்லாம் வேண்டாம். துறவியாவதற்கு எந்த மடத்தின் உதவியும் தேவையில்லை.

  பிராமினாக மாறமுடியுமா?. ஐயர் ஐயங்கார் எனும் கோத்திரத்தில் இணைய முடியுமா? வைதீக கோயில் பூசாரியாக முடியுமா?. அல்லது மனதுக்கு பிடித்த தேவர், செட்டியார், கவுண்டர், பிள்ளைமார் போன்ற ஹிந்து உயர்ஜாதியில் சேரமுடியுமா?.

  விஷயம் தெரியாமல் ஏதாவது உளறினால், இளவரசனுக்கு நேர்ந்த கதிதான் நடக்கும்.

 22. //50 வயதில் 6 வயது சிறுமியை திருமணம் செய்த பரம யோக்கியன் முகம்மதுவை பின்பற்றத்தான் வேண்டுமா ?//

  1400 வருடங்களுக்கு முன்பு, உங்கள் கொள்ளு பாட்டிக்கு எந்த வயதில் திருமணம் நடந்தது?.

 23. சாணக்கியனின் இஸ்லாமிய மயப்படுத்தும் கருத்தை ஒதுக்கித் தள்ளிவிடலாம். ஆனால், அவரது கூற்றுக்கள் மிக முக்கியமாக ஆய்வு செய்ய ப்பட வேண்டிய விஷயங்கள். அராபியர்களுக்கும் இங்குள்ள வைதீகர்களுக்குமான தொடர்புகள் இதுவரைக்கும் பேசப்பட வில்லை. பல்வேறு தொடர்புகள் இவர்களிடையே உள்ளன. கேரளத்தில் நம்பூதிரி சமூகங்களிடையே அண்மைக்கால வரைக்கும் வழக்கத்திலிருந்த, மகளைத் திருமணம் செய்து கொடுத்த வீட்டிலுள்ள ஒரு பெண்ணை தகப்பனும் மணம் செய்து கொள்ளும் ஒன்று கொடுத்து ஒன்று எடுப்பது எனும் வழக்கம் அரபு சமூகத்திலும் நிலவியது. அக்னியை வழி படுகிற சொராஸ்ட்ர சமூகம் அரபு நாடுகளில் வசித்து வந்தன. ஏறத்தாழ முகம்மதுவின் வருகைக்குப் பிறகுதான் இவர்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அரபு சமூகங்களும் வைதீகர்களும் தான் கோத்திரங்களைக்கொண்ட சமூகங் களாக இருந்தன. சமஸ்கிருதத்திற்கும் அரபு மொழிக்கு மான பொருத்தங்கள் நிறைய இருக்கின்றன. தெரிந்தவர்கள் யாராவது இது குறித்துச் சொல்லுங்களேன்.

 24. அபுஆசியா பாடிய அதேப்பாட்டைத்தான் பாடுகிறார் சாணக்கியன் வேறுஒன்றும்புதிதாய் இல்லை அபுஆசியா பாட்டை பிஜெ தளமோ எஸ் கே தளமோ ஏற்றுக்கொள்வதில்லை .சணக்கியன் சார் கட்டுரைக்கு பதில் என்ன?

 25. சாணக்கியன், உங்கள் கருத்துக்கள் சிறப்பாக இருக்கிறது. உங்களின் பணியை தொடர்ந்து செய்யுங்கள். திருக்குர்ஆன் கூறும் பெரிய ஜிஹாத் இதுதான். திருக்குர்ஆன் கூறுகிறது. வஜாஹித்தும் பிஹி ஜிஹாதன் கபீரா. திருக்குர்ஆன் மூலமாக பெரிய ஜிஹாத் செய்வீராக.

 26. “1400 வருடங்களுக்கு முன்பு, உங்கள் கொள்ளு பாட்டிக்கு எந்த வயதில் திருமணம் நடந்தது?.”

  எந்த கொள்ளுப் பாட்டியும் 50 வயசு கெழவன கல்யாணம் பன்னல

 27. பார்ப்பனர் சாதியில் சேருவதால் யாருக்கும் இன்று எந்த லாபமும் இல்லை. எனவே சாணக்கியனின் கருத்து அர்த்தமற்றது. அவர் எந்த யுகத்தில் வாழ்கிறார் என்று தெரியவில்லை. உண்மையான அதிகாரம் என்பது நில உடைமை மூலமே வருகிறது. நில உடமையில் சமத்துவம் வந்தால் தான் ஜாதி ஒழியும். சில சாதியினர் மற்றும் மதத்தினர் தங்கள் மக்கள் தொகையை விட அதிக நிலம் வைத்து மற்ற சாதியினர் மற்றும் மதத்தினரின் பங்கினை உறிஞ்சி வாழ்கின்றனர்.பார்ப்பன சாதியில் பாரதியார் கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த அன்பருக்கு பூணூல் அணிவித்து, அவருக்கு காயத்திரி உபதேசம் செய்வித்தார். எல்லோரும் பூணூல் அணிந்து வேதம் கற்பதால் யாருக்கும் பொருளாதார முன்னேற்றம் வந்துவிடாது. வாழ்க்கையில் முன்னேற்றம் வர வேண்டுமானால் நில உடைமை முக்கியம். நிலம் இருந்தால் தான் விவசாயம் அல்லது தொழில் செய்து முன்னேற முடியும். நிலம் இல்லாவிட்டால் , உலகில் எந்த நாட்டிலும் பிழைக்க முடியாது. எனவே நிலத்தைப் பங்கிட்டு சமமாக கொடுத்து விட்டால், ஒரு பிரச்சினையும் இருக்காது. ஆனால் அதனை செய்ய , எந்த அரசியல் கட்சியும் , எந்த அரசியல்வாதியும் தயாராக இல்லை. பார்ப்பன சாதியில் சேருவதால் யாருக்கும் ஒரு புண்ணியமும் இல்லை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s