கல்வி வியாபாரி வீரமணியின் கபட நாடகம்!

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க தி.க செய்தது என்ன?

ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் –கல்வி வியாபாரி வீரமணியின் கபட நாடகம்!

sunday malar template

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 1-ம் தேதியன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதில் திமுக தொண்டர்களும் கலந்து கொள்வார்களென கருணாநிதி அறிவித்திருக்கிறார். திராவிடர் கழகத்துக்கு இந்த கோரிக்கையின் மீது தோன்றியிருக்கும் திடீர் அக்கறை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

1970-ல் பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது அன்றைய திமுக அரசு. அதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பார்ப்பனர்கள், ஆகம விதிப்படி தாங்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்றும், பிற சாதியினர் சாமியைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும் என்றும் வாதிட்டனர்.

“அர்ச்சகர்கள் தங்கள் வேலைக்கு வாரிசுரிமை கோர முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறிய போதிலும், “மத சம்பிரதாயப்படி தகுதியான நபர்களை மட்டுமே அரசாங்கம் அர்ச்சகராக நியமிக்க முடியும்” என்றும் கூறியது. சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை இத்தீர்ப்பு எடுத்துக் காட்டியது. இந்நிலையை மாற்றும்பொருட்டு அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு திமுக முயற்சிக்கவில்லை. மாறாக, “அர்ச்சகர் பணி வாரிசுரிமையல்ல” என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பின்னரும், 1972-க்குப் பின் இன்று வரை திமுக, அதிமுக அரசுகளால் நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்களில் பெரும்பான்மையினர் வாரிசுரிமை மற்றும் சிபாரிசின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து வீரமணி போராடியதில்லை. விமரிசித்ததும் இல்லை.

பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியை 1993-ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டமாக ம.க.இ.க நடத்தியது. தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து ம.க.இ.க நடத்திய இப்போராட்டத்தில் பெரியார், அம்பேத்கர் படங்களுடன் எமது தோழர்கள் கருவறைக்குள் புகுந்து அரங்கநாதன் சிலையைத் தீண்டினர். தோர்களைத் தாக்கி மண்டையை உடைத்தது பார்ப்பனக் கும்பல். கோயிலுக்கு தீட்டுக் கழிப்பு சடங்கும் நடத்தியது. அன்று தமிழகமே ஆதரித்த இந்தப்போராட்டத்தைக் கண்டித்தவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் ராம.கோபாலன், இன்னொருவர், “வன்முறைப் போராட்டம்” என்று இதனைக் கண்டித்த வீரமணி.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக 1992-லேயே அறிவித்தார் ஜெயலலிதா. சமூக நீதிகாத்த வீராங்கனையென்று அவருக்குப் பட்டமளித்த வீரமணி, 1996 வரை அதனை அமல்படுத்துமாறு போராடவில்லை. 2001 -ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கிடா வெட்டுத் தடை சட்டம் கொண்டு வந்து, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கிடாவெட்டி சாமி கும்பிடுவதையே கிரிமினல் குற்றமாக்கினார். ம.க.இ.க அதனை எதிர்த்து கிடா வெட்டும் போராட்டம் நடத்தியது. திராவிடர் கழகமோ சட்டத்தை ஆதரித்து காவடி எடுத்தது.

2006 -ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அவசர சட்டம் கொண்டுவந்தார். உடனே கருணாநிதிக்கு தஞ்சையில் பாராட்டு விழா நடத்தினார் வீரமணி. பார்ப்பனரல்லாத அர்ச்சகர் கருவறையில் பூசை செய்வது போலவும், பார்ப்பனர்கள் வெளியே நின்று சாமி கும்பிடுவது போலவும் சிலை செய்து கருணாநிதிக்கு பரிசளித்தார். கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்திய சாதனைக்காக வீரமணியைப் பாராட்டி சென்னையில் ஒரு ஆடம்பர விருந்து வைத்தார்கள் அவரது தொண்டர்கள். விருந்து செரிப்பதற்குள் அந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்று விட்டார்கள் பார்ப்பன அர்ச்சகர்கள்.

இதன் விளைவாக 2007-08 இல் அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி முடித்த 206 மாணவர்கள் தெருவில் நின்று கொண்டிருந்தார்கள். கட்சித்தலைவர்கள் மனது வைத்தால் நடந்து விடும் என்று நம்பிய அந்த அப்பாவி மாணவர்கள் எல்லா தலைவர்களையும் பார்ப்பதற்கு நடையாய் நடந்து கால் தேய்ந்தார்கள். தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் முதல் கருப்புச் சட்டை ஆதீனம் வரை அனைவரையும் பலமுறை பார்த்தார்கள். “வழக்கு இருப்பதால் எதுவும் செய்யமுடியாது” என்பதுதான் மாணவர்களுக்கு கிடைத்த பதில்.

இம்மாணவர்களை, தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று சந்தித்து, அவர்களை சங்கமாகத் திரட்டினார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த எமது வழக்குரைஞர்கள். உச்ச நீதிமன்ற வழக்கில் மாணவர்களையும் ஒரு தரப்பாக சேர்த்தார்கள். மாணவர்களை வைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நாளேடுகள், வார இதழ்கள், ஆங்கிலப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் மக்கள் மன்றத்தில் இப்பிரச்சினையை பிரபலப் படுத்தினார்கள். படித்து முடித்து தீட்சையும் பெற்று விட்ட இம்மாணவர்களுக்கு சான்றிதழைக் கூட திமுக அரசு வழங்கவில்லை. அதனைப் போராடிப் பெற்றுத் தந்தார்கள். தமிழகம் முழுவதும் பல நகரங்களில் அர்ச்சக மாணவர் சங்கமும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் இணைந்து உண்ணாநிலைப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கும் மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர்களை எதிர்த்தும், வழக்கை விரைந்து நடத்த முயற்சிக்காத தமிழக அரசைக் கண்டித்தும் மதுரை மீனாட்சி கோயிலை முற்றுகையிடும் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.

செப், 2010 பெரியார் பிறந்தநாளன்று, திருவண்ணாமலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள் அர்ச்சக மாணவர்கள். அந்தப் புகைப்படம் ஊடகங்களில் பிரபலமாகவே, ஆத்திரம் கொண்ட இந்து முன்னணிக் காலிகளால் தாக்கப்பட்டார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன். “திருவண்ணாமலைக் கோயிலில் பிரசாத லட்டு பிடிப்பதற்குக் கூட பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்” என்று திமுக ஆட்சியில் அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்தது. உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவுடன் அதனை அரசு திரும்பப் பெற்றது.

2009 முதல் இன்றுவரை உச்ச நீதிமன்ற வழக்குக்காக சுமார் 15 முறையாவது டெல்லிக்கு அலைந்திருக்கிறார்கள் எமது வழக்குரைஞர்கள். பார்ப்பன அர்ச்சகர்கள் மூத்த வழக்குரைஞர் பராசரனை அமர்த்தியிருப்பதால், அதனை எதிர்கொள்ளும் பொருட்டு நமது தரப்புக்கு காலின் கன்சால்வேஸ், அந்தி அர்ஜுனா போன்ற மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தியிருக்கிறார்கள். வழக்கு தொடர்பாக இதுவரை ஆகியிருக்கும் செலவை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மட்டுமின்றி ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு போன்ற எமது அமைப்புகள் திரட்டித் தந்திருக்கிறார்கள்.

தற்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், பார்ப்பன அர்ச்சகர்களுடன் பேசி சுமுகத் தீர்வுக்கு வரவிருப்பதாகக் கூறி, நீதிமன்றத்தில் 6 மாத அவகாசம் பெற்றது தமிழக அரசு. “இது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்கும் முயற்சி; ஆகம விதிப்படி அமையாத சிறு கோயில்களில் சூத்திர அர்ச்சகர்களுக்கு வேலை போட்டுக் கொடுத்து வாயை அடைத்துவிட்டு, பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்வதற்கான சூழ்ச்சி” என்று அம்பலப்படுத்தி ஜனவரி 2013-ல் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தப்பட்டது. இதற்குப் பிறகுதான், “ஆறுமாதம் தவணை வாங்கி அரசு செய்தது என்ன” என்று அறிக்கை விட்டார் கருணாநிதி.

இவையெல்லாம் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள் எமது தோழர்கள்தான் என்பதற்கான ஆதாரங்கள். ஆனால் ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டத்தையொட்டி தி.க போட்டிருக்கும் வெளியீட்டில் இவை பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடப்படவில்லை. உண்மையைச் சொன்னால் இந்த வழக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது. ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் என்பதே ஒரு நாடகம் என்பதனால்தான் இதில் கலந்து கொள்ள முடியாதென்று ம.உ.பா.மைய வழக்குரைஞர்களும் அர்ச்சக மாணவர் சங்கத் தலைவரும் தி.க வினரின் அழைப்பை பல ஊர்களில் நிராகரித்து விட்டார்கள்.

பெரியாரின் மறைவுக்குப் பின், கடந்த 40 ஆண்டுகளில் இந்தக் கோரிக்கைக்காக வீரமணி உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதை தி.க வின் வெளியீட்டைப் படித்தாலே புரிந்து கொள்ள முடியும். கல்வி வியாபாரம் செய்து கல்லா கட்டுவதும், பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மேலும் பெருக்குவதும்தான் வீரமணி நடத்திவரும் தொழில் சாம்ராச்சியத்தின் இலட்சியம். பெரியாரின் சொத்துககு மட்டுமின்றி, அவரது எழுத்துக்கும் வாரிசுரிமை கோரியவரல்லவா வீரமணி! அர்ச்சக மாணவர்களுக்காக மற்றவர்கள் போராடினாலும், பெரியார் எழுப்பிய கோரிக்கை என்பதால், வாரிசுரிமை என்ற அடிப்படையில் அதற்குரிய பெருமை தனக்கே சேரவேண்டும் என்றுகூட அவர் எண்ணக்கூடும்!

இதுவரை இக்கோரிக்கையில் அக்கறை செலுத்தாத வீரமணி தற்போது திடீரென்று களத்தில் குதித்திருப்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. “ஆலயத் தீண்டாமையை மத உரிமையாக அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா அல்லது அதனைக் குற்றம் என்று கூறப்போகிறதா” என்பதுதான் இவ்வழக்கின் மையமான கேள்வி. இதனைப் புறந்தள்ளிவிட்டு, மயிலை, திருவரங்கம், மதுரை போன்ற பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்ள அனுமதித்து விட்டு, ஏதேனுமொரு மாரியாத்தா கோயிலில் மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முயற்சிக்கிறது ஜெ அரசு. இந்த திட்டத்தை சுமுகமாக நிறைவேற்றித் தருவதுதான் வீரமணிக்கு வந்திருக்கும் திடீர் அக்கறையின் நோக்கமா?

அல்லது தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிவெறியை ராமதாசு தூண்டி வருகின்ற சூழலில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஆதிக்கவெறியை எதிர்த்துப் போராடாமல் திசைதிருப்புவதற்காக இந்த பார்ப்பன எதிர்ப்பா? “அரசியல் சட்டத்தை திருத்தினால்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும்” என்று கருணாநிதியும், “திருத்தாமலேயே ஆக முடியும் “என்று வீரமணியும் முரண்பட்டுப் பேசிக்கொண்டே ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறிக் கொள்கிறார்களே, அடிப்படையான இந்த வேறுபாட்டுக்கு என்ன விடை? இந்தப் போராட்டமென்பது தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவும், இக்கோரிக்கைக்காக உண்மையாகவே உழைத்தவர்களை இருட்டடிப்பு செய்வதற்காகவும் வீரமணி நடத்தும் நாடகம் என்பதில் ஐயமில்லை. இப்போது இதனை நடத்துவதற்கான நோக்கம் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.

பெரியாரின் தொண்டர்களே, சாதி மறுப்பாளர்களே, தமிழ் மக்களே, போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

15 thoughts on “கல்வி வியாபாரி வீரமணியின் கபட நாடகம்!

 1. உண்மைகளைத் தாங்கிய பதிவு. வீரமணி, மு க, ஜெயா ஆகியோர் திராவிடப் போர்வையில் பார்ப்பனம் வளர்த்தவர்கள் என்பதை வரலாறு சொல்லும் உண்மை. இன்றும் தமிழ் தேசியம் பேசிக் கொண்டு கிளம்பியுள்ளோரும் பார்ப்பனத்துக்கு அடி பணியும் மதவாத / சாதிவாத விரும்பிகளே. அனைவரும் குருக்கள், அர்ச்சகர் ஆகும் நிலையை ஏற்படுத்த இந்து மத சமத்துவாதிகள் முனைய வேண்டும். சமூக சமத்துவத்தை ஏற்படுத்த யாமும் போராடுவோமாக.

 2. முறையான சமயகல்வி பெற்ற குழுக்கள் வலிமை,கௌரவமம் ,அந்தஸ்து,பொருளாதாரம் அரசியல் செல்வாக்கு போன்ற அனைத்தும் பெற்றறு வாழ்நதை இன்றும் நாம் கண்கூடாகக் காணலாம். சமய கல்வி மற்றும்பயிற்சி காரணமாக அக்குழு மக்களிடையே ஒரு மனித வளம் உருவாகி வலிமை பெறுவதைக்காணலாம். ஆகவே சமய வாழ்வின் தரம் உயர்த்தப்பட வேண்டும். 1அதிகாலையில் விழித்தல் 2.மந்திர ஜெபம் மூலம் மனவலிமை பெற பயிற்சி 3. பஜனைப் பாடல்கள் மூலம் மனதிற்கு ஆறுதல் 4. மனப்பாடம் செய்ய பயிற்சி 5.ஆக்கபுர்வமான வழிகளில் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்தல் போன்ற பழக்க்ங்கள் மனதி வளத்தை உருவாக்ககுவதாக கண்டறியப்பட்டுள்ளன. அதனால்தான் சமய கல்வி மற்றும்பயிற்சிகள் சாதீகட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து பலர் ஆச்சாரியர்கள் தோன்றினார்கள். கௌதமர் கபிலர் பல சித்தர்கள் இரானுஜர் புலே குருநானக் ரானடே இராமலிங்க அடிகள் நாராயண குரு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சுவாமி விவேகானந்தா் சாமிதோப்பு மகான் வைகுண்டசாமி போன்ற ஆயிரக்கணக்கான தோன்றி பிற்பட்ட மக்களை பண்படுத்தி அவர்களில் கலாச்சார வாழ்வின் தரம் உயர உழைத்தார்கள். இவர்கள் அனைவரும் ”அன்பை” முன்வைத்தே செயல்பட்டனர். வெறுப்பும் வன்முறையம் இவர்கள் அறியாதது. பிறாமணமர்களை ஒழிப்பேன் அவர்களை ஒழிப்பேன் இவர்களை ஒழிப்பேன் என்று இவர்கள் அலங்காரமாக ஆணவமாக கூட்டம் சேர்க்க பேசியதில்லை.படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று பிறாமணர்கள் அர்ச்சனை செய்யும் கோவில்கள் எத்தனை ? அதைவிடவம் பல பல மடங்கு பேகாவில்களில் பிற்பட்ட வகுப்பினரே அந்தந்த ஊருக்குச் சொந்தமானக் கோவிலில் அந்தந்தஊரைச்சேர்ந்த ஜாதியைச்சோர்ந்தவர்கள் ஏற்கனவே அர்ச்சகர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தக்க பயிற்சி அளித்தால-அதன் மூலம் ஒவ்வொரு மக்களுக்கம் முறையாக சமயகல்வி தமிழ்வழியில் அளித்தால் பிற்பட்ட வகுப்பு ம

 3. மக்கள் அனைவரும் தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள். சமயம் பண்பாடு இசை போன்றவை ஏகபோகமாக்கப்பட்டது. அதை உடைத்து அனைத்து மக்களுக்கும் அது கிடைக்க வேண்டும். அனைத்து வகை பள்ளிகள் கல்லுரரிகள் கோவில்களில் இதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படவேண்டும். சமயம் பொது உடைமையாக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீமத்சுவாமி விவேகானநதர் உறதிபட தெரிவித்துள்ளார். ஆனாலும் ஒரு நெருடல் கடவுள் மறுப்பு கொள்கையாளர்கள் இதில் காட்டும் ஆர்வம் புரியவில்லை. சதா பார்ப்பனர்களை ஒழிப்பது முக்கியமல்ல. பார்ப்பனர்களும் தமிழ்மக்கள்தான். பார்ப்பனர்களை ஒழிக்கும் திட்டமாக இதை யார் கொண்டு வந்தாலும் அதை இந்து சமூகம்ஏற்காது. அர்ச்சகர் தீட்சை பெற்றவன் ஈவேராசிலைக்கு மாலையிடுவது முரண்பாடான தோற்றமே ! இவர்களை கோவிலுக்குள் விடுவது நல்லதா? எனக்கு சந்தேகமாக உள்ளது.

 4. ம.க.இ.க உள்ளிட்ட எமது புரட்சிகர அமைப்புகளுக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறைகளையும், ஊடகங்களின் திட்டமிட்ட இருட்டடிப்பையும் பயன்படுத்திக் கொண்டு, மக்கள் மன்றத்திலும் சட்ட நீதி அமைப்புகளுக்கு எதிராகவும் எமது அமைப்புகள் நடத்தியிருக்கும் வீரியமிக்க போராட்டங்களின் பயனை அறுவடை செய்ய நினைக்கிறார் வீரமணி. இது இந்த திருடர்களுக்குப் புதியதல்ல. ஆனால், மக்களும் போராடும் அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற மாணவர்களும் உண்மையை அறிவார்கள். இந்த அயோக்கியர்களின் அரசியல் அனாகரீகத்தையும் ஏமாற்று வேலையையும் நாம் அம்பலப் படுத்த வேண்டும். சமச்சீர் கல்வி, சேது கால்வாய் திட்டம் என புரட்சிகர அமைப்புகளின் பணிகளை தமது போராட்டங்களாக இந்த பிழைப்புவாத தி.க. மற்றும் தி.மு.க. நரிகள் தொடர்ந்து சித்தரித்து வெட்கமின்றி காட்டிக்கொண்டுள்ளனர். தற்போது தி.க வுக்கு சுவரொட்டி ஒட்டிக் கொள்ளக் கூட சொந்த தொண்டர்கள் கிடையாது என்பதுதான்உண்மை. இது பற்றிய தமது பணிகள் போராட்டங்கள்மற்றும் தொடர்பான எழுத்துக்கள் பேச்சுக்களை அவர்கள்வெளியிட முடியுமா? (இல்லாததை எப்படி வெளியிடுவது?)… அவர்கள் பல தளங்களிலும் அம்பலப்பட்டு நிற்பது தெரிந்தும் இப்படி மானங்கெட்ட முறையில் ஒரு ஆர்பாட்டம் நடத்த முடிகிறது என்றால், அவர்களுக்கும் சுயமரியாதைக்கும் தான் எவ்வளவு நெருக்கம்!!!

 5. நெஞ்சில் ஓர் ஆலயம்

  ஓ பிராமணா !. உணர்ச்சிவசப்படாதே. உண்மையை சொல்கிறேன் கேள்
  பழைய பஞ்சாங்கம் செல்லரித்துவிட்டது. வர்ணத்தின் சாயமும் வெளுத்துவிட்டது
  சாம தான பேத தண்டத்தை சாண‌க்கியன் கற்றுத்தந்தான்
  த‌ருமத்தை திரித்து தருமயுத்தமும் செய்யவைத்தான்

  நாலும் தெரிந்துவிட்டது, ஞானம் பிறந்துவிட்டது
  பாவமூட்டையுடன் புனிதயாத்திரையா? காதடைத்தபின் கதாகாலட்சேபமா?
  போதகரின் பிரச்சாரம் புளித்துவிட்டது
  பண்டிதரின் பஜனையும் படுத்துவிட்டது

  உடைத்துவிடு தடைகளை
  கிழித்துவிடு திரைகளை
  உடைந்த உள்ளங்கள் ஒன்றுசேரட்டும்
  அலைபாயும் மனங்கள் அமைதி கொள்ளட்டும்

  தயங்காதே வா ! ஒன்றுசேர்வோம்
  நெஞ்சில் ஓர் ஆலயம் அமைப்போம்
  அத‌ன் கலசம் வானை முட்ட‌ட்டும்
  அதில் அன்பெனும் நாத‌ம் ஒலிக்க‌ட்டும்

  நீ காணும் இந்தியாவில் இந்தியன் வாழ்கிறான்
  நான் காணும் இந்தியனில், இந்தியா வாழ்கிறது.
  நீ காண்பது ஓர் இந்தியா
  நான் காண்பது ஒவ்வொரு இந்தியனிலும் இந்தியா.

  (பேரறிஞர் அல்லாமா இக்பாலின் கவிதையிலிருந்து உருவான சிந்தனை)

 6. ஓ பிராமணா!. உறங்கும் எங்கள் தந்தை பெரியாரை தட்டியெழுப்புவது எப்படி என தயங்கிக்கொண்டிருந்தேன்.
  தடுக்கி அவர்மீது நீயே விழுந்துவிட்டாய்
  அதோ தடியுடன் வருகிறார் தாத்தா
  ஓடு ஓடு.

 7. ஜாதிவாரிய கணக்கெடுக்க தப்பித்தவறி பெரியார் வீட்டுக்கு போய்விட்டார் ஆபிசர் ஆரியபுத்திரன். யாரோ கிழவனென்று எண்ணிக்கொண்டு கேள்வி கேட்டார்.

  உன் பேரென்ன?
  ராமசாமி
  உன் மதமென்ன?
  மனிதாபிமானம்
  உன் ஜாதியென்ன?
  திராவிடம்
  தொழில்?
  அறுப்பது

  அறுப்பதா? எதையென்று குழம்பிப்போய் நிமிர்ந்து பார்த்தார் ஆபிசர். பெரிய கருஞ்சிங்கமொன்று சிரித்தது. தப்பியது தம்புரான் புண்ணியமென்று மாயமாய் மறைந்துவிட்டார் ஆரியபுத்திரன்.

 8. சாணக்கியர் தனது கருத்துக்ளை நேரடியாகத் தெளிவாகச் சொல்லலாமே! அதை விட்டு விட்டு வார்த்தை ஜாலங்களில் ஏன் ஈடுபடுட வேண்டும். வெறுப்பை வளர்து வளரும் இயக்கங்களால் நன்மை கிடைப்பதை விட தீமைகள் அதிகம் இருக்கும்.ஸ்ரீசுவாமி விவேகானந்தர் மனிதாபிமானம் மிக்கவர் இந்திய மக்களை மிகவும் நேசித்தவர்.அவர் கூறுவதைச்சற்று கேளுங்கள் உங்கள் நாடி நரம்புகளில் அமைதி நிலவும்போதுதான் உங்களால் அரிய பெரிய காரியங்களைச் செய்ய முடியும் – ( கிடை அறுப்பது ஆவேசம். இதய அறுவைச்சிகிட்.சை செய்வதற்கு மனதில் படபடப்பு இல்லாமல் ஆழந்த அமைதி தேவை ) . இதய அறுவை சிகிட்சை செய்யும் தகுதி தேவையெனில் நமக்கு ஆவேசம் வேண்டாம் நண்பரே. பிறாமணர்களை ஒழிக்க வேண்டாம். எல்லோரைப் போலவும் அவர்களும் ஏராளமாக திருந்தியிருக்கின்றனர்.

 9. Dr.A.Anburaj,
  //சாணக்கியர் தனது கருத்துக்ளை நேரடியாகத் தெளிவாகச் சொல்லலாமே! //

  1. “முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1” — செங்கொடியின் இந்த கட்டுரையின் கீழ், பிராமணருக்கும் பெருமானார்(ஸல்) பிறந்த குரைஷி இனத்துக்குமுள்ள காபா தொடர்பு பற்றி பல விஷயங்களை தெளிவாக பதிந்துள்ளேன்.
  —–

  2. பாக்கிஸ்தான் பங்களாதேஷில் வாழும் ஹிந்துக்களுக்கு என்ன தீர்வென்று நீங்கள் சத்தியமார்க்கம் தளத்தில் கேட்ட கேள்விக்கு “காபிர் நரேந்திர மோடிக்கு முஸ்லிம்கள் எப்படி ஆப்படிக்கலாம்?” எனும் தலைப்பின் கீழ் அங்கே பதிலளித்துள்ளேன்.

 10. சாணக்கியர் ஒரு அரேபிய மதவாதி என்று எண்ணுகின்றேன். தனது அரபுநாட்டுப் பெயரை மறைத்து சாணக்கியன் என்று தனது அடையாளத்தை மறைத்து எழுதுகின்றார். இந்து சமூகம் சார்ந்த ஒரு பிரச்சனையில் அரேபிய மதவாதிகள் தலையிடு சரயாக இருக்காது. குழப்பத்தில் கலகம் விளைவிக்கப் பார்க்கின்றார் ஜனாப். சாணக்கியன்

 11. சாணக்கியனுக்கு செங்கொடி ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு பதில் கொடுங்கள் ஜனாப் சாணக்கியன் அவர்களே!

 12. செங்கொடியின் கேள்விகளைக் கண்டால் சாணக்கியனுக்கு பயமோ பயம். வாய் மூடிக் கொண்டாரே

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s