உணவுப் பாதுகாப்பு சட்டமா? உணவு பறிப்புச் சட்டமா?

national-food-protection-policy

அண்மையில் மக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்த உணவுப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தற்போது அனைத்து ஓட்டு அரசியல் கட்சிக்காரர்களும், நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் விவாதங்களிலும் உணவுப் பாதுகாப்புச் சட்டமே பேசு பொருளாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் கருணாநிதி மணிமேகலையின் கையிலிருக்கும் அமுத சுரபி என்கிறார், எதிர்க்கும் ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய அளவு குறைகிறது, விலை குறிப்பிடப்படவில்லை என்கிறார். இப்படி இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பதாக காட்டிக் கொள்பவர்களும் சில அம்சங்களை முன்வைத்து கச்சேரி செய்கிறார்களே தவிர இதன் சாராம்சத்தை காண மறுக்கிறார்கள் அல்லது கண்டுவிடக் கூடாதே என்று மறைக்கிறார்கள்.

 

முதலில் இந்த திட்டத்திற்கு ஆதரவு தான் இருக்கிறதேயன்றி எதிர்ப்பு இல்லை என்பது தான் உண்மை. இருப்பதெல்லாம் நிபந்தனையற்ற ஆதரவு, நிபந்தனையுடன் கூடிய ஆதரவு ஆகியவை தான் யாரும் இச்சட்டத்தை எதிக்கவில்லை. இன்னின்ன திருத்தங்களைச் செய்தால் ஏற்கிறோம் என்று தான் கூறுகிறார்களேயன்றி இந்தச் சட்டத்தை ஏற்கமாட்டோம் என்று இடதுசாரிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் உட்பட யாரும் கூறவில்லை. அதாவது இந்தச் சட்டம் சரியானது தான் தவறானது அல்ல, தாங்கள் கோரும் சில திருத்தங்களைச் செய்துவிட்டால் இந்தச் சட்டத்தை தாராளமாக் அமல் செய்து விடலாம் என்பது தான் எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளின் நிலைப்படும். ஆளும்கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியான பிஜேபியும் ஒன்றிணைந்து நிற்கின்றன இச்சட்டத்தை நிறைவேற்ற. மாநிலக் கட்சிகள் செய்யும் முணு முணுப்பைக்கூட பிஜேபி செய்யவில்லை. தேர்தலுக்காக கொண்டு வந்திருக்கிறார்களாம். மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நிற்கின்றன. தாங்கள் கூறும் திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த முணுமுணுப்பும் இந்தச் சட்டத்திற்கு இல்லை. தாங்கள் வேறுபட்ட கட்சிகள், தங்களுக்கென்று தனித்தனி கொள்கைகள் இருக்கின்றன என்றெல்லாம் கூறிக் கொள்ளும் இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒரே அடிப்படையில் இருப்பவை தான் என்பதற்கு இது ஒரு சான்று.

 

இந்தச் சட்டத்தின் சாரத்தை ஒரே வரியில் கூறுவதென்றால் நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு சலுகை விலையில் அரிசி, கோதுமை, தானியங்கள் வழங்கப்படும் என்பது தான். இது தான் எல்லா மாநிலங்களிலும் ரேசன் கடைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதே புதிதாக ஒரு சட்டத்தின் தேவை என்ன? என்றால் ரேசன் கடைகளில் லட்சக்கணக்கான போலி அட்டைகள் மூலம் கோடிகணக்கான டன் உணவு தானியங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதனைத் தடுப்பது தான் இந்தச் சட்டத்தின் நோக்கம் என்கிறார்கள். ஆனால் ரேசன் கடைகளில் உணவு தானியங்களைக் கடத்துவதும் அதனால் பலனடைவதும் யார்? அந்தந்தப் பகுதியின் எம்.எல்.ஏ, எம்.பி க்களுக்கு பங்கில்லாமல் எந்தக் கடத்தலாவது நடக்கிறதா? அவ்வப்போது கடத்தல் பிடிக்கப்பட்டு விட்டதாக வரும் செய்திகலேல்லாம் இந்த பங்குபிரித்தலின் தகராறு தான் என்பதில் யாருக்காவது ஐயமிருக்கிறதா? யார் கடத்தல் மூலம் பலனடைகிறார்களோ அவர்கள் கூடி கடத்தலை தடுக்க சட்டம் போடுகிறார்கள் என்றால் இந்தச் சட்டத்தின் உள்நோக்கம் என்ன?

 

இந்தச் சட்டத்தை தனிப்பட்ட முறையில் பார்த்தோமென்றால் இதன் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ள முடியாது. பல விசயங்களை ஒன்றிணைத்து பார்க்கும் போது தான் இதன் உண்மையான உருவம் தெரியும். தனியார் விவசாயிகளிடமிருந்து நேரடியாக உணவு தானியத்தை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றொரு அனுமதியை சில ஆண்டுகளுக்கு முன்னர் போட்டார்கள். தனியார் மண்டிகள் கொள்முதல் செய்வது முன்பே நடந்து கொண்டிருப்பதுதானே  என்றால் புதிதாக ஆந்தச் சட்டம் போட வேண்டிய தேவை என்ன? தனியார் என அவர்கள் குறிப்பிடுவது பன்னாட்டு பகாசுரக் கம்பனிகளை. மறுபக்கம் இந்திய அரசு விவசாயத்தை திட்டமிட்டு அழித்து வருகிறது, விவசாயம் செய்வது கட்டுபடியாகாமல் விவசாயிகள் நிலத்தை வந்த விலைக்கு விற்றுவிட்டு ஓடுகிறார்கள். அதாவது, பசுமைப் புரட்சி போன்ற திட்டங்கள் மூலம் நீண்ட் கலமாகவே விவாசயிகள் வஞ்சிக்கப்பட்டு விவசாய உற்பத்தி சரிந்து வருகிறது. அரிசி கோதுமையெல்லாம் வேண்டாம் பணப்பயிருக்கு மாறுங்கள் என்று அரசே மக்களுக்கு பயிற்றுவிக்கிறது. இத்தனையையும் மீறி தாக்குப்பிடித்து நிற்கும் விவசாயிகளின் விளை பொருட்கள் பன்னாட்டு தரகு முதலாளிகளின் கைகளில் குவிகிறது. மக்கள் சாப்பிட வேண்டும் என்றால் ஒன்று பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளின் சங்கிலித் தொடர் கடைகளில் வாங்க வேண்டும். இதற்காகத்தான் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கோருகிறார்கள் திரட்டுகிறார்கள். இரண்டு ரேசன் கடைகளில் போடப்படும் புழுத்த அரிசியை பொங்கித் திங்க வேண்டும். இந்த இரண்டைத் தவிர வேறு மாற்று இல்லை என்பதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ரேசன் கடைகளில் வாங்கி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அதிலிருந்து விலக்கி விட்டால் இந்த பகாசுர நிறுவனங்களின் கொள்ளைக்கு எல்லையே இல்லாமல் போய்விடுமல்லவா?

 

இதற்காகத்தான் உங்கள் பணம் உங்கள் கைகளில் என்றொரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதாவது, தொடக்கத்தில் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் அரிசி பருப்பு தரமாட்டார்கள். வெளிச்சந்தை விலையிலேயே ரேசன் கடைகளிலும் விற்கப்படும். நீங்கள் வாங்கும் பொருட்க்அளின் விலையைப் பொருத்து அதற்கான மானியத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் வங்கிக் கணக்கில் போட்டு விடுவார்களாம். இது நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும். ரேசன் கடையிலும் வெளிச்சந்தையிலும் அரிசிக்கு ஒரே விலை. வெளிச்சந்தையில் தரமான அரிசியாக இருக்கும் ரேசன் கடையிலோ உழுத்துப்போன அரிசி. வெளிச்சந்தையில் உங்களை வரவேற்று அரிசி தருவார்கள். ரேசன் கடைகளிலோ நீண்ட வரிசையில் காத்து நின்று அரிசி வாங்க வேண்டும். ஆனால் நீங்கள் வாங்கும் அரிசியின் அளவை கணக்குப் பார்த்து அதற்கான மானியத்தை ஆயிரமோ ரெண்டாயிரமோ ஆறு மாதத்திற்கும் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் போடுவர்ர்கள். இந்த நிலை வந்தால் ரேசன் கடைகளில் மக்கள் வாங்குவது குறைந்து விடும். உடனே ஆதரவில்லை என்று எடுத்துக் காட்டி ரேசன் கடைகளை மூடி விடுவார்கள். உங்கள் பணம் உங்கள் கைகளில் என்று தொடங்கி இடுப்புக் கோவணத்தை உருவதில் போய் முடியும்.

 

இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் உணவுப் பறிப்பு சட்டம் வறுமைக்கோடு கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல்படப் போகிறது. வறுமை என்பதை எப்படி கணக்கிடுகிறார்கள். ஒருவன் உண்ணும் உணவிலிருந்து அவனுக்கு எவ்வளவு சக்தி கிடைக்கிறது என்பதை கலோரி என்ற அளவில் கணக்கிடுகிறார்கள் இதன்படி ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 2500 கலோரிகள் தேவை. அறிவியலாளர்கள் கணக்கெடுத்துக் கூறிய இந்த அளவை 1200 கலோரி போதும் என்று திருத்தியிருக்கிறார்கள் இந்த அதிகாரவர்க்க அயோக்கியர்கள். அதாவது நகரங்களில் ஒருவன் ஒரு நாளைக்கு 35 ரூபாய் சம்பாதித்தால் அவனால் 1200 கலோரி உடலுக்கு கிடைக்கும் அளவுக்கு உணவை சாப்பிட்டுவிட முடியும், இதுவே கிராமப் புறங்களில் என்றால் 28 ரூபாய் போதும் என்று திமிர்த்தனமாய் அறிவித்து இருக்கிறார்கள். இதற்கு மேல் சம்பாதிப்பவர்கள் எல்லாம் ஏழைகள் இல்லை என்பது இவர்களுடைய கண்டுபிடிப்பு. இந்த அயோகியத்தனத்தைத் தான் வறுமைக்கோடு என்கிறார்கள். அதேநேரம் இந்த கண்டுபிடிப்பைச் செய்த அதிமேதைகளின் அலுவலக கழிப்பறையை செப்பனிட செலவழிக்கப் பட்டிருக்கும் தொகை 20 கோடி. இந்த மேதைகள் 35 ரூபாயைக் கொண்டு ஒரு நாள் வாழ்ந்து காண்பிக்கட்டுமே. இப்படி கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கெல்லாம் ரேசன் கடைகள் மூலம் உணவு தானியங்கள் கிடைக்காது. அந்தக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், அரிசி கிலோ 3 ரூபாய்க்கும் கொடுப்பார்களாம். இதைத்தான் உணவு பாதுகாப்புத் திட்டம் என்கிறார்கள். இது மக்களுக்கான உணவை பாதுகாக்கும் திட்டமா? உணவை பறிக்கும் திட்டமா?

 

பன்னாட்டு முதலாளிகளின் சங்கமான உலக வர்த்தக கழகம் மூன்றாம் உலக நாடுகளுக்கு போட்டுக் கொடுத்திருக்கும் திட்டமான மக்களுக்கான மானியத்தை முற்றாக குறைக்க வேண்டும் எனும் திட்டத்தைத்தான் இந்தியாவிலும் இம்மி பிசகாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த சட்டம் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்குவதை ஒழிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் மானியம் எவ்வளவு தெரியுமா? ஐந்து லட்சம் கோடி.

 

இந்தச் சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டிருக்கிறதோ அதை குறித்து மக்களுக்கு விளக்காமல் அளவு குறையும் என்றும் அமுதசுரபி என்றும், தேர்தலுக்கானது என்றும் பிலாக்கணம் பாடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த பன்னாட்டு தரகு முதலாளிகளின் இந்த ஓட்டுப் பொறுக்கி அடிமைகள். விளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம் கட்டி விட்டு அதை பூஜிக்குமாறு மக்களுக்கு போதிக்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

 

மக்களைக் குறித்து இவர்கலால் இப்படித்தான் சிந்திக்க முடியும். ஏனென்றால் இவர்கள் நமக்காக நாட்டை ஆளவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையடிக்க வழி செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆள்கிறார்கள். இவர்கள் ஆளும் பொறுப்பில் இருக்கும் வரை மக்களுக்கு வாழ்வு கிடைக்காது. உணவைப் பறித்துவிட்டு அதை உணவுப் பாதுகாப்பு என்பார்கள். நிலத்தடி நீரைப் பறித்துவிட்டு பாட்டில் தண்ணீர் குடி என்பார்கள். அரசு மருத்துவமனைகளை ஒழித்துவிட்டு அப்பல்லோவில் வைத்தியம் பார்த்துக் கொள் என்பார்கள். பள்ளிக்கூடங்களை சீரழித்துவிட்டு பணம்கட்டி படித்துக் கொள் என்பார்கள். ஆனால் இது மக்காளாட்சி நடைபெறும் சுதந்திர நாடு என்று கூவிக் கொள்வார்கள். இதை நாம் அங்கீகரிக்க முடியுமா? இதை உணர்ந்து நம்மைப் பிரிக்கும் ஜாதி மத பேதங்களைக் கடந்து வர்க்கமாய் ஒன்றிணைந்து போராடதவரை இதற்கு தீர்வு இல்லை.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

6 thoughts on “உணவுப் பாதுகாப்பு சட்டமா? உணவு பறிப்புச் சட்டமா?

 1. மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் இயற்றப்பட்டிருக்கும் மக்கள் விரோத திட்டங்களை சிறப்பாக அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.

 2. ////விளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம் கட்டி விட்டு அதை பூஜிக்குமாறு மக்களுக்கு போதிக்கிறார்கள் இந்த அயோக்கியர்கள் ……. இதை உணர்ந்து நம்மைப் பிரிக்கும் ஜாதி மத பேதங்களைக் கடந்து வர்க்கமாய் ஒன்றிணைந்து போராடதவரை இதற்கு தீர்வு இல்லை.///

  பேஷ் பேஷ் … அப்போ பாரத அன்னையை கொடுங்கோலரிடமிருந்து காக்க அநீதிக்கெதிராக நீங்கள் ஜிஹாத் செய்யப்போகிறீர்களா இல்லை வலைத்தளத்தில் வீரவசனம் பேசிவிட்டு, சவூதியிலேயே அடிமையாக அரபிக்கு கூஜா தூக்குவதென்று முடிவு செய்துவிட்டீர்களா?.

  ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க. உங்களை முஸ்லிம் ஜிஹாதியென்று என்கவுன்டர் செய்து விடுவார்கள். நான் முஸ்லிமில்லையென்று சொன்னால், கால் சட்டையை அவிழ்த்து சுன்னத் செய்திருக்கா என்று பார்ப்பார்கள். இந்த ஜென்மத்தில் இஸ்லாமிடமிருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது.

  இதற்கான பதில், இந்த ஜென்மத்தில் வராது.

 3. குழப்பவாதி கருணாநிதி என்ன சொல்றார்னு கொஞ்சம் எளிமையா சொல்லுங்க!
  maalaimalardotcom/2013/09/03045849/Food-Security-Act-Profit-Lossdothtml

 4. செங்கொடி

  ////ஜாதி மத பேதங்களைக் கடந்து வர்க்கமாய் ஒன்றிணைந்து போராடதவரை இதற்கு தீர்வு இல்லை.///
  ——————————-

  ஜாதி மத பேதங்களை எப்படி கடப்பது?.

  “சாதிகள் இல்லையடி பாப்பா
  குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்!
  சாதி இரண்டொழிய வேறில்லை”

  என்றெல்லாம் இரண்டாயிரம் வருடங்களாக பாடிவிட்டு கடைசியில் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்றுதானே ஜாதி வாழ்கிறது?. ஜாதியை விட்டு வெளியேறுங்களென்று தேவர், பிள்ளை, கள்ளர், கவுண்டர், பா.ம.க மருத்துவர் அய்யாவிடம் போய் சொல்லமுடியுமா உங்களால்?. அவ்வளவுதான். அடுத்த நாள் தண்டவாளத்தில் இரண்டு துண்டாக கிடப்பீர்கள்.

  நான் ஒன்றும் பெரிய முல்லா கிடையாது. ஆனால் ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தை விட்டால் வேறு வழியே கிடையாது என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஜாதியை ஒழிக்க பலவழிகளுண்டு என்று நீங்கள் ஒரு முறை சொன்னீர்கள். ஏதாவது ஒரு பிராக்டிகல் வழியை சொல்லுங்கள் என்று நான் கேட்ட கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை. இஸ்லாத்திடம் நீங்கள் படுதோல்வி அடைந்து விட்டீர் என்பதற்கு இதை விட பெரிய ஆதாரம் என்ன வேண்டும்?

 5. மொதல்ல அரபு முஸ்லிம் உன்ன சம அளவுல மதிக்கரானானு பாரு. அப்புறம் மத்தத பேசலாம்.

 6. குருட்டுக்கிழவி பாரதமாதா அரபிக்கும் அமெரிக்காவுக்கும் கூஜா தூக்கும் வப்பாட்டியாக போய் படுத்தால், அவன் எப்படி அந்த நாட்டை மதிப்பான்?.

  காலங்காத்தாலே எழுந்ததும் பிழைக்க வழியில்லாமல் இஸ்லாமிய நாட்டிலும் கிருத்துவ நாட்டிலும் வேலைக்கு கையேந்தி நிற்கின்றாள் குருட்டுக்கிழவி.

  அரபியிடம் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவும் குருட்டுக்கிழவிக்கு மரியாதை பற்றி பேச என்ன யோக்கியதை?.

  உனது மண்ணில் மானம் மரியாதையுடன் வாழ வேண்டுமானால், குருட்டுகிழவிக்கு ஆப்படித்து முசல்மான் பாக்கிஸ்தானை உருவாக்கியதைப் போல் தமிழ்த்தேசத்தை உருவாக்கு.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s