முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?

Badr

முகம்மது மதீனாவின் மன்னராக தம்மை முடிசூட்டிக் கொண்ட பிறகிலிருந்து மரணிக்கும் வரையிலான பத்து ஆண்டுகளில் தோராயமாக பத்தொன்பது போர்களை நடத்தியிருக்கிறார். முகம்மதின் சமகாலத்தில் உலகின் பிற பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட போர்களோடு ஒப்பிட்டால் முகம்மது நடத்தியது போர்களல்ல, குழுச் சண்டைகள். ஆனாலும் ஒரு நிலப்பகுதியின் மன்னர் எனும் ஹோதாவில் நடத்தப்பட்டதால் அவைகள் போர்களாகவே குறிப்பிடப்படுகின்றன. போர்களோ, குழுச் சண்டைகளோ அவைகளின் நோக்கம் என்னவாக இருந்தது? அவை அரசியலை முன்னெடுத்து நடத்தப்பட்டவைகளா? அல்லது ஆன்மீகத்தை முன்வைத்து நடத்தப்பட்டவைகளா? என்பதே இன்றியமையாத கேள்வி. ஏனென்றால் முஸ்லீம்களின் விவரிப்பின்படி முகம்மதின் நோக்கம் ஒரு புதிய மதத்தைப் பரப்பும் ஆன்மீகத் தலைவராக இருப்பது தான். அவர் ஒரு மன்னராக அரசியல் தலைமைப் பாத்திரத்தை ஏற்கவில்லை என்றாலும்கூட அவர் ஆன்மீகத் தலைவராக இருந்திருப்பார். மாறாக ஆன்மீகத் தலைமையை நிராகரித்துவிட்டு ஒருபோதும் அவர் அரசியல் தலைவராக நீடித்திருந்திருக்க மாட்டார். அவர் ஆன்மீகத் தலைவராகவும், அரசியல் தலைவராகவும் ஒருசேர இருந்ததாக கருதப்பட்டாலும் இது தான் இஸ்லாமியப் புரிதல்.

 

முகம்மதின் காலத்தில் அரேபியா அரசுகளைக் கொண்டிருக்கவில்லை. மக்காவில் ஹில்ஃப் அல் ஃபுலூல், மாலா போன்ற அமைப்புகள் இருந்தாலும் அரசு எனும் தகுதியில் அவை இல்லை. மதினாவில் இது போன்ற அமைப்புகளும் கூட கிடையாது. அதேநேரம் அரேபியாவுக்கு வெளியே முறையான அரசமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் அரேபிய பாலைவனப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த நாடோடிகள், விவசாயம் செய்து ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தவர்கள், பண்டமாற்று வணிகர்கள் ஆகிய மூன்று இனக் குழுக்களையும் இணைத்து வணிகர்களின் மேலாதிக்கத்தில் ஒரு அரசமைப்பை முகம்மது மதீனாவில் ஏற்படுத்தினார். இந்த அடிப்படையிலிருந்து தான் அந்தப் போர்கள் நிகழ்த்தப்பட்டன.

 

இந்தப் போர்கள் ஏன் நடத்தப்பட்டன என்பதற்கு இஸ்லாமிய பரப்புரையாளர்கள் சில காரணங்களைக் கூறுகிறார்கள்.

1. மக்காவிலிருந்து முஸ்லீம்களின் சொத்துகளை பறித்து அவர்களை விரட்டியடித்தார்கள். எனவே, அதற்குப் பதிலடியாக போர்கள் நடத்தப்பட்டன.

2. புலம் பெயர்ந்து மதீனா சென்றபிறகும் மக்கா குரைஷிகளின் இன்னல்கள் தொடர்ந்தன. எனவே, அதைத் தடுப்பதற்காக போர்கள் நடத்தப்பட்டன.

3. இஸ்லாமிய நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் எனவே போர்கள் நடத்தப்பட்டன.

4. பலமான படை திரட்டி ஆயுதங்களுடன் முஸ்லீம்களைத் தாக்க வந்தார்கள். எனவே அவர்களை எதிர்கொள்ளும் விதமாக போர்கள் நடத்தப்பட்டன.

இன்றைய தேவைகளுக்கு ஏற்ப மதவாதிகள் கூறும் மேற்கண்ட காரணங்கள் பொருந்தாதவை, பொய்யானவை என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

 

மக்காவிலிருந்து சொத்துக்களை பறித்துவிட்டு விரட்டியடித்தனரா? இல்லை, சொத்துக்கள் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கவில்லை என்பதை கீழ்காணும் ஹதீஸ் பதிவு செய்திருக்கிறது.

 

.. .. .. தங்களுடன் இருக்கும் முஜாஹிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள் .. .. .. புஹாரி 4274

 

நீளமான இந்த ஹதீஸில் இருக்கும் இந்த வாக்கியம் புலம் பெயர்ந்து சென்றவர்கள் தங்கள் சொத்துகளை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் உறவினர்களின் பாதுகாப்பில் விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. இது மட்டுமின்றி புலம்பெயர்ந்து சென்றவர்கள் விரட்டப்பட்டு சென்றவர்களில்லை என்பதையும் ஒரு குரான் வசனம் கோடி காட்டுகிறது.

 

.. .. .. நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ் மீது ஈமான் கொண்டதற்காக இத்தூதரையும் உங்களையும் வெளியேற்றுகிறார்கள். என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்) நீங்கள் பயத்தால் அவர்களிடம் ரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள் .. .. .. குரான் 60:1

 

அதாவது சொத்துக்களை பிடுங்கி விரட்டப்பட்டு வெளியேறியவர்கள் என்று கூறப்படுபவர்கள் யார் அவர்களை வெளியேற்றினார்களோ அவர்களுடன் தொடர்ந்து உறவு வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது. அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு குடி பெயர்ந்தவர்களில் சிலர் மதீனாவின் ரகசியங்களை மக்காவாசிகளிடம் வெளிப்படுத்தி விடுகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறது இந்த வசனம். இது மட்டுமா? இன்னொரு வசனம் மக்காவிலுள்ளவர்கள் புலம் பெயர்ந்தவர்களை விரட்டவில்லை மாறாக விருப்பமின்றி முகம்மதின் நிர்ப்பந்தத்தினாலேயே வெளியேறினார்கள் என்பதையும் போட்டு உடைக்கிறது.

 

.. .. .. எவர் ஈமான் கொண்டு ஊரை விட்டு வெளியேறவில்லையோ அவர்கள் நாடு துறக்கும் வரையில் நீங்கள் அவர்களுடைய எந்த விசயத்திலும் பொறுப்பாளியல்ல .. .. .. குரான் 8:72

 

அதாவது மக்காவை விட்டு வெளியேறும் எண்ணமில்லாதவர்கள் மக்காவை விட்டு வெளியேறி மதீனா வராதவரை தாம் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்று மிரட்டுகிறார் முகம்மது. அதாவது முகம்மது தன்னுடைய சுய விருப்பத்தின் பேரிலேயே தன்னைச் சார்ந்தவர்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு மக்காவிலிருந்து மதீனாவிற்கு புலம் பெயரச் செய்திருக்கிறார் என்பதை மிகத் தெளிவாகவே இந்த வசனம் புரியவைத்து விடுகிறது.

 

இதுமட்டுமா? புலம்பெயர்ந்து மதீனா சென்ற பிறகும் கூட மதீனாவாசிகள் மக்காவாசிகளை மிரட்டும் நிலையிலேயே இருந்திருக்கிறார்கள் என்று இன்னொரு ஹதீஸ் நமக்கு தெரிவிக்கிறது. புஹாரி 3632ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் மிக நீளமான அந்த ஹதீஸ் முகம்மது மதீனவுக்கு புலம் பெயர்ந்து சென்றபின் மதினாவிலிருந்து ஒருவர் மக்கவுக்கு வந்து காஅபாவை வலம் வந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாய்த் தகராறையும், போர் நடைபெறுவதற்கு முன்னரே முகம்மது மக்காவிலிருக்கும் உமய்யா என்பவரை கொல்ல திட்டம் தீட்டியிருந்ததையும் உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி போரை திட்டமிட்டவர்கள் முகம்மதும் அவரின் சீடர்களுமேயன்றி மக்காவிலுள்ளவர்களல்ல என்பதையும் அந்த ஹதீஸிலுள்ள ஒரு வாக்கியம் மிகத் துல்லியமாக விளக்குகிறது.

 

.. .. .. அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தை வலம்வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன் என்று சொன்னார்கள் .. .. .. புஹாரி 3632

 

இஸ்லாத்தின் முதல் போர் என வர்ணிக்கப்படும் பத்ரு போர் மக்காவின் வணிகர்கள் ஷாம் நாட்டிற்குச் செல்லும் பாதையை தடுக்கும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டது என்பது வரலாற்றுத் தகவல்.

 

இஸ்லாத்தின் முதல் போர் என்று பத்ரு போர் வர்ணிக்கப்பட்டாலும் அதற்கு முன்பாக சிறிய அளவில் ஒன்பது போர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சற்றேறக் குறைய பத்து மாதத்தில் நடத்தப்பட்ட இந்த ஒன்பது போர்களின் நோக்கம் என்ன? ஐயமில்லாமல் மக்காவின் வணிகக் கூட்டத்தை தாக்கிக் கொள்ளையடிப்பது தான் என்பதை இப்ன் இஷாக் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.

 

…..இதோ குறைஷிகளின் வியாபாரக்கூட்டம் அவர்களது 

பொருட்களுடன் வருகிறது.அக்கூட்டத்தை நோக்கி நீங்கள்

 புறப்படுங்கள், அல்லாஹ், அவைகளைக் கொள்ளைப் 

பொருட்களாக  உங்களுக்கு அளிக்கக் கூடும் .. .. ..

சிராஅத் ரஸூலல்லாஹ் – இப்ன் இஷாக்

ஆங்கில மொழிபெயர்ப்பு

 

அகழிப் போர் என்றொரு போரைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். மதீனாவில் முஸ்லீம்களின் எதிரிகளுக்கு உதவுகிறார்கள் என்ற காரணத்தைக் கூறி குறைஜா எனும் யூத இனக்குழுவினருக்கு எதிராக அகழி வெட்டி நடத்தப்பட்ட முற்றுகைப் போர். யூதர்கள் சண்டையிடாமலேயே சரணடைந்து விட்ட பின்னரும், அந்த இனக்குழுவில் இருந்த ஆண்கள் அனைவரும் சுமார் அறுநூறு பேர் கொல்லப்படுகிறார்கள். பெண்களும் சிறுவர்களும் அடிமைகளாக பிடித்துக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களின் செல்வங்கங்கள் கொள்ளையிடப்பட்டு பங்கிடப்படுகிறது. பெரும் நிலப் பரப்புகளையும் செல்வச் செழிப்பையும் முஸ்லீம்களுக்கு வழங்கியது இந்தப் போர் தான் என்று குரானே குறிப்பிடுகிறது. இதை குரான் வசனம் 33:26,27 ல் காணலாம்.

 

இன்னும் வேதக்காரர்களிலிருந்தும் உதவி புரிந்தார்களோ அவர்களை அவர்களது கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான். ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள். இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப் பிடித்தீர்கள்

 இன்னும் அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருட்களுக்கும், நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கிவிட்டான். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கல் மீதும் சக்தியுடையவன்

 

போரில் கிடைக்கும் பொருட்களை யாராருக்கு எவ்வளவு பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கு அல் அன்ஃபால் என்று ஒரு அத்தியாத்தையே குரான் தன்னிடம் கொண்டுள்ளது. அதன்படி முகம்மது போரில் நேரடியாக கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும் போரில் கிடைக்கும் பொருட்களில் இருபது விழுக்காடு பொருட்கள் முகம்மதுக்கு சொந்தமாகும். இவைகளெல்லாம் உணர்த்துவது என்ன?

 

முகம்மதின் காலத்தில் நடத்தப்பட்ட போர்களில் இருந்தது அரசியலா? ஆன்மீகமா? என்றால் மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கே அதில் ஆன்மீகம் கொஞ்சமும் இல்லை என்பது எளிதில் விளங்கும். முகம்மது மக்காவிலிருந்தவரை அவரும் சில சீடர்களும் தான். ஆனால் மதினா வந்த பின்னரோ அவர் ஒரு மன்னர், ஒரு அரசமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது, ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் இருந்தது. இவைகளின் நிர்வாகச் செலவுகளுக்கு முகம்மதுவிடம் இருந்த திட்டம் குறித்தும், விதிக்கப்பட்ட வரிகளின் மூலம் கிடைத்த வருவாய் குறித்தும் விளக்குவதற்கு முஸ்லீம்களிடம் ஆவணம் ஏதேனும் இருக்கிறதா? அல்லது மதவாதிகள் இது குறித்து விளக்குவார்களா? போரில் தோற்றவர்களை இஸ்லாத்திற்குள் கொண்டு வருவதற்கு முகம்மது ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டார் என்று யாராவது கூற முடியுமா? முஸ்லீம்களிடம் அன்று இருந்த செல்வங்களெல்லாம் போரில் கைப்பற்றப்பட்டவைகளே.

 

வேறு வழியில்லாமல் தற்காத்துக் கொள்வதற்காகவே முஸ்லீம்கள் போரிட்டார்கள் என்றால் தாக்க வந்தவர்கள் ஆயுதங்களுக்குப் பதிலாக செல்வங்களை அள்ளி வந்தார்களா? புதிதாக ஏற்படுத்திய அரசைக் காப்பதற்கு தேவைப்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும், தன்னை நம்பி வந்தவர்களை தொடர்ந்து தக்க வைக்கவும் அவர்களுக்கு பொருளாதார வளத்தை ஏற்படுத்தவுமே முகம்மது போர்களை நடத்தினாரேயன்றி மதக் கொள்கைகளை பரப்புவதற்காக அல்ல. அந்த வகையில் முகம்மது ஆன்மீகவாதியாக அல்ல அரசியல்வாதியாகவே திகழ்ந்திருக்கிறார். இதில் ஐயம் ஒன்றுமில்லை.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

48. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2

47. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

15 thoughts on “முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?

  1. முஹம்மதுவின்முரட்டுதனமும்வன்முறையும் நமக்கு தலைகுனிவைஏற்ப்படுத்திருக்கிறது இந்த வரலாற்று கறையை நாம் எப்படிசுத்தம் செய்யபோகிறோம் என்பதுதான் இன்றயகேள்விகுறி???

  2. முஹம்மதுவின் காலத்தில் சுமார் 70-80 போர்கள் நிகழ்ந்துள்ளன.இவைகளை போர்கள் என்று கூறுவது பொருளற்றது. கொள்ளையை மையமாகக் கொண்ட திடீர் தாக்குதல்கள் என்பதே சரியானது. இவற்றில் சுமார் 19-27 தாக்குதல்களில் முஹம்மதுவும் கலந்து கொண்டிருக்கிறார்.

  3. கம்யூனிசமே வெல்லும்னு தலைப்பு வைச்சு இருக்கீங்க. கம்யூனிசமே கொல்லும்னு தலைப்பு வைச்சு இருந்தா சரியா இருந்திருக்கும்..

  4. குரைஷியர்களின்டன்படிக்கைக்கு இசைந்திருந்தால் பிறகு தாம் டம்மி பீஸ் ஆகிவிடுவோம் என்று ராஜதந்திரி ரசூலுக்கு தெரியாதா என்ன

    வஹீ என்ற தங்க முட்டையிடும் வாத்தின் கழுத்தை அறுத்தால் காலத்திற்கும் முட்டாள்களின் தலைவனாக நீடிக்க முடியாது.

    அதிலிருந்துதான் போர் என்ற பெயரில் சொத்துக்கள் குவிக்கவும் அடிமைகளை பெருக்கிக்கொள்ளவும் அடிமைப்பெண்களை புணரவும் பகிர்ந்தளிக்கவும்(distibution) போரில் பங்கெடுக்காமலே இவை அனைத்தையும் அனுபவிக்கவும் இவருக்கு special concession கிடைத்தது.

    இதில் அரசியலும் இல்லை ஆன்மீகமும் இல்லை சுயநலம் தவற வேறில்லை .

  5. //இஸ்லாத்தின் முதல் போர் என்று பத்ரு போர் வர்ணிக்கப்பட்டாலும் அதற்கு முன்பாக சிறிய அளவில் ஒன்பது போர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.//

    Dear Dajjal has already pointed about this. These are raids, gazwa in Arabic, unannounced attack, attacking in the early morning, etc. First attack on caravan was done by shaving the heads and deceiving as pilgrims (hajjis), in a holy month, when attacks between tribes are highly sinful.

    //அகழிப் போர் என்றொரு போரைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். மதீனாவில் முஸ்லீம்களின் எதிரிகளுக்கு உதவுகிறார்கள் என்ற காரணத்தைக் கூறி குறைஜா எனும் யூத இனக்குழுவினருக்கு எதிராக அகழி வெட்டி நடத்தப்பட்ட முற்றுகைப் போர்.//

    The trench was dug to ward off the direct attack of Meccans. After some days of siege, Meccans lost interest and withdrew. Emboldened by this, Muhamad sieged the neighboring tribe of Banu Quraiza. When Jews surrendered without fight, they were decimated.

    //முஸ்லீம்களிடம் அன்று இருந்த செல்வங்களெல்லாம் போரில் கைப்பற்றப்பட்டவைகளே.//
    It holds good even today (இன்றும்) in many aspects.

  6. மற்றவர்கள் செய்த பித்னா, குழப்பம், இறை எதிர்ப்பு என்ன தெரியுமா? நார்சிசிஸ்ட், சைக்கோபேட் சொன்ன கிறுக்குத்தனத்தை ஒத்துக் கொள்ளாததுதான்.

  7. “முஸ்லீம்களிடம் அன்று இருந்த செல்வங்களெல்லாம் போரில் கைப்பற்றப்பட்டவைகளே.” இது உண்மையானால் முகம்மது நடத்திய போர்கள் அரசியலுமல்ல, ஆன்மீகமுமல்ல; வெறும் வழிப்பறி கொள்ளையே.

  8. ஆன்மீகத்துக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைப்படி வாழ்வதுதான் இஸ்லாம். அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட வாழ்க்கை ஹலால், தடுக்கப்பட்ட வாழ்க்கை ஹராம். அவ்வளவுதான்.

    பெருமானார் ஒரு ஆடு மேய்ப்பவராக, கூலி வேலைக்காரராக, வியாபாரியாக, குடும்பத்தலைவராக, போர் வீரராக, தளபதியாக, நீதிபதியாக, அரசராக, ஆண்டியாக என்று ஒவ்வொரு மனிதனுக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியுள்ளார்.

    இஸ்லாத்தை விட்டுவிடுங்கள். உங்களை அரேபியாவின் அரசராக நியமிக்கிறோம். பொன்னும் பொருளூம் உங்கள் காலடியில் கொட்டுகிறோமென்று காபா பிராமணர்கள் பெருமானாரிடம் கெஞ்சினர். ஒரு கையில் சூரியனும் மறுகையில் சந்திரனை தந்தாலும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாமல் போக மாட்டேனென்று பெருமானார் உரைத்தார்.

  9. 1400 வருடங்களாக காபிர்கள் புலம்புகின்றனர். ஆனால் இவர்களால் என்ன செய்ய முடிந்தது?. அகண்டபாரத முஸ்லிம்களின் முன்னோரெல்லாம் ஒரு காலத்தில் ஹிந்து காபிர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்தான். அவர்கள்தான் பாரதமாதவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தனை உருவாக்கினர். ஆக காபிரின் எதிரியை காபிரிலிருந்தே இஸ்லாம் உருவாக்கும்போது, காபிரால் எப்படி இஸ்லாத்தை வெல்ல முடியும்?.

    பெருமானாரையே அல்லாஹ் காபா பார்ப்பணர் குலத்தில்தான் படைத்தான். பெருமானாரின் தாத்தா அப்துல் முத்தலிப் காபாவில் பார்ப்பண பூசாரியாக இருந்தவர்தான். ஆயிஷா எனும் பெயர் அரபி பெயர் கிடையாது, அது ஆ ஷா, உ ஷா, அபிலாஷா போன்ற ஒரு பார்ப்பணப் பெயர். ஷா என்று முடியும் ஒரு அரபி பெயர் கூட சரித்திரத்தில் கிடையாது.

    பெருமானாரின் 10 பெரியப்பாக்களில், 8 பேர் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதும் உண்மைதான். பெருமானாரை 8 வயது முதல் 50 வயது வரை பாதுகாத்து வளர்த்தவர் அவருடை பார்ப்பண பெரியப்பா அபுதாலிப் என்பதை மறுக்க முடியுமா? — 2 கோடி காஷ்மீர் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் பார்ப்பண பண்டிதராக வழ்ந்தவர்தானே?. பாக்கிஸ்தானை உருவாக்கிய அல்லாமா இக்பாலே ஒரு காஷ்மீர் பார்ப்பணர்தான். சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடன் மயங்கிகிடந்த பார்ப்பணர்தான் இஸ்லாத்தை தழுவி, பாரதமாதாவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கினர்.

    பார்ப்பணர் இந்திரா காந்தி அம்மையாரே பெரோஸ்கான் எனும் முஸ்லிமைத்தானே லண்டன் பள்ளிவாசலில் நிக்காஹ் செய்தார்?. அவருடையே வாரிசுக்கள்தானே ராகுல் காந்தி, வருண் காந்தி பார்ப்பணரெல்லாம்?

    இஸ்லாத்தை எதிர்த்தால், ஜிஹாத் செய்து முஸ்லிம்கள் பாக்கிஸ்தான்களை மேன்மேலும் உருவாக்குவர். இது தவிர, கிட்டத்தட்ட 2 கோடி காபிர்கள் பாரதமாதாவை அம்போவென நடுத்தெருவில் விட்டுவிட்டு அரேபியாவிலும் மலேசியாவிலும் முஸ்லிம்களின் அடிமையாக வேலை செய்து பிழைக்கிறார்கள். முசல்மானின் பிரியாணியை ருசி கண்டபின் எந்த காபிரும் இந்தியாவுக்கு திரும்பி செல்ல விரும்புவதில்லை. இவர்களனைவரும், ஒரு கட்டத்தில் இஸ்லாத்துக்கு வந்துவிடுவர். வேறு வழி?

    ஜாதிக்கொடுமையிலிருந்து வெளியேற, தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக ஹிந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை ஏற்க வேண்டும். ஒவ்வொரு தலித்தும் அப்துல்லாஹ், ஆமினா ஆக வேண்டும். தலித் கிராமங்கள் அனைத்தும் முஹம்மது பட்டினங்களாகவும், இந்தியா இஸ்லாமிஸ்தானாகவும் மாற வேண்டும். — “கஜினி முகமது தமிழ்நாட்டின் பாதுஷா ஆக வேண்டும். தமிழ்நாடு குட்டி பாக்கிஸ்தானாக வேண்டும், சங்கராச்சாரி பள்ளிவாசலில் மோதினாராக வேண்டும், பாரதமாதா மும்தாஜ் பேகமாகி ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும், பேரரசர் அவரங்கசீப் செங்கோட்டையில் குத்பா ஓத வேண்டும்” என்பதுதான் ஒவ்வொரு முசல்மானின் கனவு.

    இன்று மோடி நாடு முழுதும் குஜராத் செய்தால், அகண்டபாரதத்தில் வாழும் 75 கோடி முசல்மான்களூம் தலிபான்களூம் ஒன்று சேர்ந்து பாரதமாதா மீது ஜிஹாத் செய்து விடுவர். முஸ்லிம் ஜிஹாத் செய்தால், தமிழ்த்தேசம், தலித்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், நக்ஸலைட் புரி என்று பாரதமாதாவை அனைவரும் சேர்ந்து ஆப்படித்து விடுவர்.

    காபிர்களால் இஸ்லாத்தை எப்படி வெல்ல முடியும்?

  10. @சாணக்கியன்
    முஸ்லிம்களுக்கு ஆப்பு அடிக்க தேவை இல்லை… அவர்களே அவர்களை கொன்று விடுகின்றனர்.

    முஸ்லீமாய் இருப்பவன் மனிதனாக மாறவேண்டும் அதுதான் அனைவருக்கும் நல்லது…முஸ்லிம்கள் உட்பட.

  11. சாணக்கியன்,

    //இவர்களனைவரும், ஒரு கட்டத்தில் இஸ்லாத்துக்கு வந்துவிடுவர். வேறு வழி?//

    எல்லோருமே வேறு வழியில்லாமல் தானே இந்த அக்கிரமத்திற்கு (அல் + கருமம்) வந்தது. இதில் என்ன இவ்வளவு பெருமை?

    Your comments shows the pathetic inferior complex of the Muhamadans like you. Would you be happy, if i say all the muslims were descendants of paarpaans?

    Muhamadism is evil and it has been winning. Not any more. Kaafirs like me have become aware of it. The humanity has to prevail or face peril.

  12. univerbuddy,
    //// எல்லோருமே வேறு வழியில்லாமல் தானே இந்த அக்கிரமத்திற்கு (அல் + கருமம்) வந்தது. இதில் என்ன இவ்வளவு பெருமை?///
    ————-

    நபியவர்களை அவமதிக்கும் திரைப்படத்தை தயாரித்த நெதர்லாந்து அரசியல்வாதி இஸ்லாத்தை தழுவினார் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அவனது தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன்”.

    இவ்வாறு புனித கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர் வேறு யாருமல்ல….

    முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக நேசிக்கும் இறைதூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அவமதிக்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த பித்னா எனும் திரைப்படத்தை தயாரிப்பதில் பெரும் பங்கு வகித்த நெதர்லாந்தின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான ஆர்னோட் வான் டூர்ன் என்பவர்தான்.

    கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி திருக்கலிமாவை மொழிந்து புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இவர் கடந்த வாரம் மஸ்ஜிதுந் நபவிக்கு விஜயம் செய்த போதே தான் செய்த பாவத்திற்காக ரசூலுல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினார்.

    மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்துக்கு விஜயம் செய்த அவர் “யாரசூலுல்லாஹ்… திரைப்படமெடுத்து உங்களைக் கேவலப்படுத்த முனைந்தமைக்காக என்னை மன்னித்துவிடுங்கள். எனது பாவக் கறையைப் போக்க உங்கள் அழகிய வாழ்க்கை நெறியை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் திரைப்படத்தை தயாரிக்கப் போகின்றேன்” என்று மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டதாக சவூதி கெஸட் உள்ளிட்ட பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தான் இஸ்லாத்தைத் தழுவியமை தொடர்பில் ஆர்னோட் அல்ஜஸீரா உட்பட பல ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:

    “இது ஒரு பெரிய முடிவாகும், இந்த முடிவு இலகுவாக எட்டப்படவில்லை. கடந்த ஒரு வருட காலமாக நான் குர்ஆன், ஹதீஸ், சுன்னா மற்றும் ஏனைய விடயங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தேன் என்பதை எனக்கு நெருக்கமானவர்கள் அறிவார்கள்.

    நான் அங்கம் வகித்த கட்சியின் இஸ்லாமிய விரோத போக்கே இஸ்லாம் பற்றி ஆராய என்னைத் தூண்டியது. இஸ்லாம் பற்றி எதிர்மறையான பல விடயங்களை நான் கேட்டுள்ளேன். எனினும் என்னைப்பொறுத்த வரை அடுத்தவர்களின் கூற்றுக்களை எனது சொந்த ஆராய்ச்சி இன்றி நான் நம்புவதில்லை. எனவே நான் இஸ்லாம் பற்றிய எனது அறிவை ஆழமாக்க ஆரம்பித்தேன்.

    “சில நபர்களை பொறுத்த வரை நான் ஒரு துரோகி, எனினும் அநேகமான .மனிதர்களின் கருத்துப்படி நான் மிகச் சிறந்த முடிவு ஒன்றையே எடுத்துள்ளேன். என்னுடன் நேரடி அறிமுகம் இல்லாதவர்களும் எனது சூழ்நிலையை விளங்கி எனது தெரிவை ஆதரிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    “வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு நோக்கத்தை அடிப்படையாக கொண்டது. எனினும் எனக்கு தற்போது உள்ள அறிவு அக்கால கட்டத்தில் எனக்கு இருந்திருப்பின் நிச்சயமாக நான் வேறொரு தெரிவை மேற்கொண்டிருப்பேன்”

    “நான் ஏனையவர்களைப்போல் வாழ்வில் அதிக தவறுகள் செய்துள்ளேன், எனினும் இந்த தவறுகளின் ஊடாக அதிக பாடங்களையும் கற்றுள்ளேன். இந்த மாற்றத்தின் மூலம் எனது பாதையை நான் கண்டுவிட்டதாக உணர்கிறேன். இதை ஒரு புதிய ஆரம்பமாக உணர்வதோடு நான் இன்னும் இது பற்றி அதிகம் கற்க வேண்டியுள்ளது என உணர்கிறேன்’’

    ”சில அரசாங்க நிறுவனங்களால் நான் புறக்கணிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறேன். இருப்பினும் நான் அல்லாஹ் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த இக்கட்டான தருணங்களில் எனக்கு வழிகாட்டுமாறு அல்லாஹ்விடமே வேண்டுகிறேன்.”

    ”நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் எனக்கு ஆதரவாக விளங்கிய அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் ” என்கிறார்.

    Ref: vidivelliபுள்ளிlk/morecontentபுள்ளிphp?id=2250

  13. இப்படி உளரி கொட்டுவதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று தேங்காய் முஸ்லிம்களுக்கு தெரியாமல் இருப்பது ஒருவகையில் நல்லதுதான். இவர்களுடைய சாத்தான் காலையில் மூக்கினுல் இருப்பதாக நபி உளரினார். எனக்கு தெரிந்து இவர்களது வாயில்தான் இருக்கிறான்.

  14. //// இப்படி உளரி கொட்டுவதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று தேங்காய் முஸ்லிம்களுக்கு தெரியாமல் இருப்பது ஒருவகையில் நல்லதுதான். /// ——- குருட்டுக்கிழவி பாரதமாதாவுக்கு ஆப்படித்து இன்னொரு பாக்கிஸ்தான் உருவாகுமென்பது மாங்காய் மடையர்களுக்கு புரிந்தால் சரி.

  15. முகம்மது நடத்திய போர்கள் அரசியலுமல்ல, ஆன்மீகமுமல்ல; வெறும் வழிப்பறி கொள்ளையே

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s