மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு

modi-pm-gujarat-riot

நண்பர் சாருவாகன் அண்மையில் ஒரு கட்டுரை “மோடியை எதிர்ப்பது எப்படி?” எனும் தலைப்பில் எழுதியிருந்தார். படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. சரியின் பக்கம் இருப்பவர்கள் எனக் கருதப்படுபவர்கள் எப்படி பிசிறடித்து பாசிசத்தின் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள் என்பதற்கான விளக்கமாக அந்தக் கட்டுரை இருந்தது. மட்டுமால்லாது அது புரட்சிகர இடதுசாரி அரசியலையும் மறுக்கும் விதத்தில் பயணித்திருந்தது. நண்பர் சாருவாகனின் எழுத்தின் மீது ஒரு மதிப்பு இருந்து வந்திருக்கிறது எனும் அடிப்படையில் அவரின் பிறழலை சுட்டிக்காட்டுவது கடமை என்றாவதால் இந்த மறுப்பு பயணப்படுகிறது.

 

நண்பர் சார்வாகன் எந்த அடிப்படையிலிருந்து மோடியின் எதிர்ப்பை ஆய்வு செய்கிறார்? ஆதரவாளரோ எதிர்க்குழுவினரோ அல்ல என்று அவரே கூறியிருக்கிறார். என்றால் எந்த நிலையில் நின்று அவர் ஆய்வு செய்கிறார்? ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல் நடுநிலை என்று ஒன்று இருக்க முடியுமா? நல்லவற்றிற்கு ஆதரவாகவும், அல்லவற்றிற்கு எதிராகவும் இருப்பது தான் சரியானது. இதை மறுத்து நடுநிலை என்பது என்ன? முதலில் ஒரு விசயத்தில் கருத்துச் சொல்கிறோம் என்றால், இரண்டு தரப்பும் ஏற்றுக் கொள்ளும்படியான கருத்து என்று ஒன்றும் இருக்க முடியாது. கருத்தோ தீர்ப்போ ஒருவருக்கு சாதகமாகவும் மற்றொருவருக்கு பாதகமானதாகவும் தான் இருக்கும். பாதகமானவர் அதிகாரத்தின் பிடியில் ஏற்கற் செய்யப்படுகிறார் என்பது தான் சரியானதே தவிர, இருவரும் ஏற்கும் தீர்ப்பு என்று ஒன்று இருக்க முடியாது. ஏனென்றால் உலகம் வர்க்கமாய் பிரிந்து கிடக்கிறது. எடுத்துக்காட்டாக இடஒதுக்கீடு சரி என்று ஏற்பவர்களும் தவறு என மறுப்பவர்களும் அவரவர் வர்க்க நிலையிலிருந்தே அந்த முடிவை எடுக்கின்றனர். இந்த அடிப்படையிலிருந்து தான் நடுநிலை என்று ஒன்று இருக்க முடியாது என்று கூறுகிறோம்.

 

இதை நண்பர் சாருவாகன் இன்னொரு விதமாகவும் எதிர் கொள்கிறார், ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பது நோக்கர்களைப் பொருத்தது என்கிறார். அதாவது மோடி சிலருக்கு கெட்டவராக தெரியலாம் சிலருக்கு நல்லவராக தெரியலாம் என்கிறார். இது ஒரு மோசமான பார்வை. பறி கொடுத்தவன் திருடன் கெட்டவன் என்பான், திருடனின் உற்றவர்கள் அவனை நல்லவன் என்பார்கள் என்றால் திருடனைக் குறித்து என்ன முடிவு செய்வது? இது தவறான அணுகுமுறை. ஒருவனின் செயல்கள் சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் கொண்டு தான் அவனைப்பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியும், அப்படி வருவது தான் சரியான முடிவாக இருக்கும். எனவே மோடியின் வருகை ஏன் இவ்வளவு எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது எனும் அடிப்படையை விலக்கி வைத்து விட்டு மோடியின் வருகை குறித்து முடிவெடுக்க முடியாது.

 

மோடி தமிழகம் வருகிறார், அவ்வாறு வருவதற்கு எதிர்ப்பு இருக்கிறது. இதை எந்த அடிப்படையில் அணுகுவது? மோடி சரியானவர் எனும் அடிப்படையிலிருந்து மோடியின் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். அல்லது, மோடி தவறானவர் எனும் அடிப்படையிலிருந்து மோடியின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். ஆனால் நண்பர் சாருவாகன் இரண்டையும் ஒதுக்கிவிட்டு எதிர்ப்பவர்கள் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள், அவர்கள் எப்படி எதிர்க்கலாம் என்று அணுகுகிறார். இது ஆணி வேரை விட்டுவிட்டு சல்லிவேர்களை அலசுவது போன்றதாகும். சல்லி வேர்களை தனித்து அலசக் கூடாதா? என்று கேட்கலாம். அலசலாம், ஒரு மரத்தின் வளர்ச்சி எனும் அடிப்படையில் ஆணி வேர் குறித்து என்ன கருத்து கொண்டிருக்கிறார் எனும் நிலைப்பாட்டிலிருந்து தான் அவரின் சல்லிவேர் குறித்த அலசலை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் நண்பர் சாருவாகன் மோடி குறித்த தன்னுடைய கருத்தை மறைத்துக் கொள்கிறார். அவர் நல்லவரா கெட்டவரா என்பது மையக் கேள்விக்கு அப்பாற்பட்ட விசயமாக கருதுகிறார். இந்தக் கருத்திலிருந்து நண்பர் முன்வைக்கும் தீர்வு குறித்து பரிசீலித்தால், – அதாவது தேர்தலுக்கு முன்னும் பின்னும் பாஜக வுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று உறுமொழி வாங்க வேண்டும், அதன்பிறகு மாறிவிட்டால் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம். இதை அடிப்படையாகக் கொண்டு கருத்தியல் போராட்டத்தை நடத்தலாம். – ஆதரவுக்குழுவோ எதிர்க்குழுவோ அல்ல எனும் அவரது மொழிதலுக்கு எதிராக ஆதரவுக் குழுவில் அடியெடுத்து வைக்கிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

 

மோடி எதிர்ப்பு குறித்த நண்பர் சாருவாகனின் அலசல் தெரிவிப்பது என்ன? ஓட்டுக்கட்சிகளான இடதுசாரிகள் அதாவது போலிகள் மோடியை எதிர்க்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மோடியுடன் அதாவது பாஜக வுடன் கூட்டணி வைத்திருந்த திமுக, அதிமுக குறித்து இவர்கள் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இப்போது அவர்கள் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக நாளை ஜெயா பிரதமராவதற்கு வாய்ப்பு இல்லை என்றால் செய்யக்கூடிய முதல் வேலை பாஜக வுடன் கூட்டணி வைப்பது தான். இது குறித்து பேசாமல் மோடியை எதிர்ப்பது தேர்தல் கூட்டணி கட்டி பாரளுமன்ற சீட்டுகளை பெறுவதற்கு மட்டுமே உதவும். அதற்காகத் தான் அவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் என்கிறார். சரியானது தான்.

 

தேர்தலில் பங்கேற்காத திராவிட இயக்கங்கள் பெரியாரின் கொள்கைகளை விரிந்த அளவில் கொண்டு செல்லாமல் பார்ப்பன எதிர்ப்பாக மட்டும் குறுக்கிக் கொண்டார்கள். எனவே அவர்களின் மோடி எதிர்ப்பும் வீரியமானதாகவும், சரியானதாகவும் இல்லை என்கிறார். பிழை ஒன்றுமில்லை.

 

இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பும் சந்தர்ப்பவசமானதே என்கிறார். அதாவது பாஜகவின் மையமான ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ இய்அக்கங்களின் கொள்கையும் இஸ்லஅமிய இயக்கங்களின் கொள்கையும் ஒன்றே தான். அது இஸ்லாம் எனும் அடிப்படையில் அதைச் செய்தால் இது இந்து எனும் அடிப்படையில் செய்கிறது. முஸாபர் நகர் கொடுமைகளில் முதல்வர் அகிலேஷ் யாதவ் குல்லா போட்டார். மோடி அவ்வாறு போடவில்லை. இது தான் இஸ்லாமியர்களுடைய எதிர்ப்பின் வடிவம் என்கிறார். ஆட்சேபிக்கத்தக்க கருத்து. என்றாலும் இந்த இடத்தில் இதை விவரிக்க வேண்டாம் என எண்ணுகிறேன் காரணம் கட்டுரையின் பேசுபொருளில் அதுவும் உள்ளடங்கி இருக்கிறது என்பதால்.

 

ஆக, மோடியின் எதிர்ப்பை மூன்றாக வகைப்படுத்தி அந்த எதிர்ப்புகளில் சாரமில்லை என்கிறார். ஒரு கருத்தை மதிப்பிடும் போது எதைக் கூறியிருக்கிறார் என்பதை மட்டுமல்ல, எதைக் கூறாமல் விட்டிருக்கிறார் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது மோடி நல்லவரா கெட்டவரா என்பது தேவையில்லை என ஒதுக்கி வைத்த நண்பர் சாருவாகன் மோடி எதிர்ப்புக்கு போலிகளும் பிறரும் கூறும் காரணங்களை எடுத்துக் காட்டுகிறார். இந்த அடிப்படையில் தேர்தலில் பங்கேற்காத புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் மோடி எதிர்ப்புக்கு கூறும் காரணங்களை சீர்தூக்கியிருக்க வேண்டாமா? அதை நண்பர் செய்யவில்லை. மாறாக, அவர்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் எனவே அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று முடித்துக் கொள்கிறார். மறுதலிக்க முடிந்த இடங்களில் விவரிப்பதும், முடியாத இடங்களில் ஒடுங்கிக் கொள்வதும் மதவாதிகளின் உத்தி. அதாவது மோடி எதிர்ப்புக்கு பிற கட்சிகளின் கொள்கை நடைமுறைகளை எடுத்துக் கொள்ளாமல் அவை கூறும் காரணங்களை எடுத்துக் கொண்ட நண்பர் புரட்சிகர இடதுசாரி இயக்கங்களிடம் மட்டும் காரணத்தை விட்டுவிட்டு கொள்கைநடைமுறைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலில் பங்கேற்காத இயக்கங்களின் கருத்துகளை பரிசீலிப்பதில்லை. என்பது நண்பரின் கருத்தாக இருக்கலாம். ஆனால் மோடி எதிர்ப்பில் தூலமான பாத்திரம் வகிக்கும் புரட்சிகர இடதுசாரி இயக்கங்களின் அதாவது இஸ்லாமிய பெரியாரிய இயக்கங்களுக்கு முன்னதாக நாடெங்கிலும் எதிர்ப்புக் காட்டியதில் தொடங்கி விரிவாகவும் வீச்சாகவும் அதை கொண்டு சென்று பிற இயக்கங்களை எதிர்த்தே தீரவேண்டும் எனும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியது வரை புரட்சிகர இடதுசாரி இயக்கங்களின் பங்கு மகத்தானது. அதை சுலபமாக கடந்து செல்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

 

இதை நண்பர் கூறும் தீர்வின் வழியாக பார்க்கலாம். சார்வாகன் கூறும் தீர்வு இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

  1. ஓட்டுக்கட்சிகள் தேர்தலுக்கு முன்னும் பின்னும் பாஜக வை ஆதரிக்கக் கூடாது எனும் உறுதி கோருவது (மீறினால் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்)
  1. இதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்வது. (கருத்தியல் போராட்டம்)

கூட்டணி சேர விரும்பும், சேர்க்க விரும்பும் எந்த ஓட்டுக் கட்சியும் இப்படி ஒரு உறுதியை கோரப்போவதும் இல்லை. கோரினால் தரப்படப் போவதும் இல்லை. தந்தாலும் கடைப்பிடிக்கப் போவதும் இல்லை. ஏனென்றால் ஓட்டுக்கட்சி அரசியலின் அடிப்படை தெரியாத குழந்தை கூட இப்படி ஒரு அம்சத்தை நம்பாது. ஓட்டுக் கட்சிகள் இருப்பதும் இயங்குவதும் ஓட்டு வங்கியும் அதன்மூலம் கிடைக்கப் போகும் பொருளாதார, ஆட்சியதிகார பலனும் தானேயன்றி மக்களோ அவர்கள் மீதான நலனோ அல்ல. இதுபோன்ற உறுதி மொழியை ஒரு கட்சி யோசிக்கிறது என்றாலே அதற்கு கொஞ்சமேனும் மக்கள் நலனில் அக்கரையோ, அல்லது சந்தர்ப்பவாத அரசியல் கூடாது என்றோ சிந்தித்திருக்க வேண்டும். அப்படி ஏதேனும் ஒரு ஓட்டுக்கட்சி இருக்கிறது என்று நண்பர் சார்வாகன் நம்புகிறாரா? அப்படி இருந்தால் அது மத நம்பிக்கையைவிட மோசமானது. என்றால் கொஞ்சமும் சாத்தியமில்லாத இந்த யோசனையை தன் முடிவாக நண்பர் கூறியது ஏன்?

 

சாத்தியமே இல்லாத இதை எப்படி பிரச்சாரம் செய்வது? நாங்கள் இன்னின்ன கட்சிகளோடு உறுதிமொழி கேட்டோம் அவர்களும் தந்திருக்கிறார்கள் எனவே எங்களுக்கு ஒட்டுப் போடுங்கள் என்றா? இப்போதைய நிலையில் போலிகள் காங்கிரசுடனோ, பாஜக வுடனோ கூட்டணி வைக்கப் போவதில்லை. அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா? என்றால் இருக்கிறது. ஆனால் அதை அந்த நிகழ்வின் போது பார்த்துக் கொள்வோம் இப்போதைக்கு கூட்டணி தேவை என்பது அவர்களின் சந்தர்ப்பவாதம். தேய்ந்துவரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இதுபோன்ற மாநிலக் கட்சிகளின் தயவில்லாமல் அதிகப்படுத்திக் கொள்ள முடியாது என்பது அவர்களுடைய திட்டம். நிலமை இப்படி இருக்கையில் இதுபோன்ற கவைக்குதவாத சொல்லாடல்களை தீர்வாக முன்வைக்க முடியுமா? இதைக் கொட்டு தேர்தல் பிரச்சாரம் தான் செய்யலாமே தவிர மோடி எதிர்ப்பை எப்படிச் செய்வது?

 

இங்குதான் நண்பர் சார்வாகனாரின் அரசியல் பார்வையே இருக்கிறது. அதாவது மோடி எதிர்ப்பு என்பது தேர்தல் பிரச்சாரத்தைத் தாண்டி வேறொன்றுமில்லை. இந்த அரசியல் பார்வையிலிருந்து தான் மோடி எதிர்ப்பிலிருந்து அதன் பாசிசத் தன்மையை நீக்குகிறார். மோடி எதிர்ப்பு குறித்து பேசுவதென்றால் தேர்தல் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளுங்கள். ஆனால்  2002ல் சிறுபான்மையினருக்கு நடந்த கொடுமைகள் குறித்து பேசக் கூடாது என்பது தான் நண்பரின் முடிவாக இருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் பொய் பித்தலாட்டங்கள் குறித்து பேசக் கூடாது என்பது தான் நண்பரின் முடிவாக இருக்கிறது. இந்த முடிவிலிருந்து தான், மோடி நல்லவரா கெட்டவரா என்பது தேவையில்லாத செய்தி என்கிறார். மோடிக்கு எதிராக புரட்சிகர இயக்கங்களின் பிரச்சாரங்களை மதிக்க வேண்டியதில்லை என்கிறார். ஆனால் 2002ல் நடந்த படுகொலைகள் மோடியோடு மட்டும் தொடர்புடையதில்லை. காந்தியை கொன்ற கோட்சே விருத்த சேதனம் செய்து கொண்டு இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்தியிருந்தான். நேரு மட்டும் அன்று வானொலியில் காந்தியைக் கொன்றது இந்து தான் முஸ்லீமல்ல என்று அறிவிக்காமல் இருந்திருந்தால் பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்கள் அன்று கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள். பகல்பூர், ஷாம்ஷெட்பூர் தொடங்கி நேற்றைய முஸாஃபர் நகர் வரை இந்துத்துவ அரசியல் என்பது மக்களை கொன்று குவிப்பதிலிருந்து தான் ஆதாரப்பட்டிருக்கிறது. குஜராத்தைப் பொருத்தவரை அது தவிர்க்க முடியாமல் அம்பலப்பட்டிருக்கிறது. அதனால் தான் மோடியவாதிகள் 2002ஐ பேச மறுத்து வளர்ச்சி என்கிறார்கள். குஜராதில் வளர்ச்சி எனக் கூறப்படுவதெல்லாம் புனைவுகளும் பொய் பித்தலாட்டங்கள் தான். எப்படி பொய் சொல்வது என்பதற்காகவே பல்லாயிரம் டாலர் சம்பளத்தில் ஒரு நிறுவனத்தை பிடித்திருக்கிறார்கள். இவைகளையெல்லாம் விட்டுவிட்டு தேர்தலைச் சுற்றி மட்டுமே பேச வேண்டும் என்றால் அது யாருக்கு சாதகமானது?

 

மோடியை ஏன் எதிர்க்கிறோம்? மோடி பிரதமராக வந்து தொலைப்பதற்கு இருக்கும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை. ஆனால் மோடி ஒரு கிரிமினல். ஆயிரக்கணக்கானோரை கொலை செய்துவிட்டு அதை தன் அதிகார பலத்தைக் கொண்டு மறைத்தவன். தன் பிம்பத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக போலிமோதல்(என்கவுண்டர்) மூலம் அப்பாவிகளை கொன்று குவித்தவன். மோடி குறித்து பேசும் யாரும் இவைகளை தவிர்த்துவிட முடியாது. அவ்வாறு தவிர்த்துவிட்டுப் பேசினால் அது நடுநிலை என்று கூறிக் கொண்டாலும் மோடி ஆதரவு நிலை தான். முள்ளிவாய்க்காலை விட்டுவிட்டு வளர்ச்சி பற்றி பேசுங்கள் என்று இராஜபக்சே கூறினால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

 

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மன்மோகன் சிங்குக்கும் இது போன்ற ஒளிவட்டம் கட்டப்பட்டது. நாட்டின் வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பதுத்தான் வளர்ச்சி என்பது இன்று நிரூபணமாகியிருக்கிறது. அவர் அம்மணமாகி விட்டதால் இன்று மோடி,. நாளை வேறு ஏதோ ஒரு கேடி. இதை அம்பலப்படுத்தித்தான் மக்களிடம் பேசுகிறோம். மோடி தேர்தல் வேட்பாளர் என்பதாலல்ல, மோடி என்பது முதலாளித்துவ சுரண்டலின் உச்சத்திற்கும், பார்ப்பனிய பாசிச பயங்கரவாதத்திற்கும் கச்சிதமான குறியீடாக இருக்கிறார் என்பதால் தான் மோடியை எதிர்க்கிறோம். ஒப்பீட்டளவில் வட மாநிலங்களை விட தமிழகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் நிலை மேம்பட்டிருக்கிறது. நடுவீதியில் ராமனை செருப்பால் அடிக்க முடிந்திருக்கிறது என்றால் அது பெரியார் எனும் பகலவன் தான் காரணம். அந்தப் பெரியாரின் மண்ணில் ஒரு பார்ப்பன பயங்கரவாதி எதிர்ப்பில்லாமல் திரும்பிப் போய்விட முடியுமா? மேலதிக விபரங்களுக்கு திருச்சி மோடி எதிர்ப்பு கூட்டத்தில் தோழர் மருதையன் பேசியதை கேட்டுப் பாருங்கள்.

 

அடுத்து புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் குறித்து சில அறியாமைகளை முன்வைத்திருக்கிறார் நண்பர் சாருவாகன். அவைகளுக்கான மேடை இதுவல்ல என்றாலும் அவருக்கு சில கேள்விகள் மட்டும்.

 

\\\மாற்றம் என்பது இயல்பாக ,சிறிது சிறிதாக சூழல் சார்ந்து நிகழ வேண்டும். அப்படி நிகந்தால் மட்டுமே நிலைக்கும்/// எந்த அடிப்படையில் அல்லது எந்த முன் உதாரணத்தைக் கொண்டு அல்லது எந்த சான்றாதரங்களின்படி இப்படிக் கூறுகிறீர்கள்? மனித குல வரலாறு இப்படித்தான் இருக்கிறதா?

 

\\\ஒருவேளை இவர்களின் கையில் ஆட்சி என்றால் மட்டும் நியாயமாக நல்லாட்சி தருவார்கள் என எப்படி உறுதியாக நம்ப முடியும்?/// ஆட்சி என்பது குறித்தும் அரசு என்பது குறித்தும் வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் மார்க்சியர்களுக்கு ஒரு பார்வை உண்டு என்பது தெரியுமா? இப்போது இருக்கும் அரசு என்பதற்கும் சோசலிச அரசு என்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசம் புரியுமா?

 

\\\அதுவும் ஜன்நாயகம் தேர்தல் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?/// தேர்தல் பாதை திருடர் பாதை எனும் முழக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு இப்படி முடிவெடுத்தீர்கள் என்றால், தேர்தெடுக்கவும் திருப்பியழைக்கவும் மக்களுக்கு உரிமை வேண்டும் என்றும் முழங்குகிறோமே அதைக் கொண்டு என்ன முடிவெடுப்பீர்கள்?

 

இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் என்று வள்ளுவர் முதலாளித்துவ ஜனநாயக தேர்தலைத்தான் கூறினாரா?

 

ஆழமான தேடல் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள் அகவிருப்பத்திலிருந்து இப்படி முடிவெடுப்பது சரியானது தானா?

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

10 thoughts on “மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு

  1. வணக்கம் தோழர்,

    //நண்பர் சாருவாகன் அண்மையில் ஒரு கட்டுரை “மோடியை எதிர்ப்பது எப்படி?” எனும் தலைப்பில் எழுதியிருந்தார். படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.// எனக்கு இது ஆச்சரியமாக இல்லை. இவர் ஏற்க்கனவே , பார்ப்பன இந்து மதத்தை ஏதோ சமாதான சமத்துவ மதமாகவும், அம்பேத்கர் – பெரியார் குறித்த காழ்ப்புணர்வை பார்ப்பன தந்திரத்துடான் செய்யும் முற்போக்கு பார்ப்பனன் திருச்சிக்காரன் பதிவில் பார்ப்பன மதத்துக்கு வக்காலத்து வாங்கியவர். அறிவாளியாக இருக்கும் எல்லோரும் சமூக அறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே.

    நேற்று பார்த்த கமலஹாசன் காணொளி ஒன்று நினைவுக்கு வருகிறது , அவர் சொல்கிறார், “எனக்கு ஆத்திகத்தை முழுமையாக எதிர்ப்பதில் உடன்பாடில்லை. ஏனெனில் ,அதில் இருக்கும் நல்ல விசயங்களும் தெரியாமல் போய்விடும்.”. இப்படி பேசி இந்த முற்போக்கு பூனக் குட்டி வெளியே வந்துச்சி .

  2. பெரியார் திராவிடர்களுக்கு நல்லவன்….பார்ப்பனர்களுக்கு கெட்டவன்.

    ராஜபக்ஷே சிங்களர்களுக்கு நல்லவன்…தமிழர்களுக்கு கெட்டவன்.

    மோடி குஜராத் இந்துக்களுக்கு நல்லவன்…முஸ்லிம்களுக்கு கெட்டவன்

    சார்வாகனின் நல்லவன் கெட்டவன் என்பது அவரவர் பார்வையை பொறுத்தது என்பதும் இப்படித்தான்.

    ————————————————-
    //நடுவீதியில் ராமனை செருப்பால் அடிக்க முடிந்திருக்கிறது என்றால் அது பெரியார் எனும் பகலவன் தான் காரணம். //

    சிவனையும், முருகனையும், மாரியம்மனையும் ஏன் உங்கள் பகலவன் செருப்பால் அடிக்கவில்லை?
    அடித்திருந்தால் அவருக்கு செருப்பு அடி விழுந்திருக்காது என்று சொல்ல முடியுமா?

  3. நான் கூட சில கேள்விகளை சார்வாகனிடம் கேட்டேன் .ஆனால் பதில் ஒன்றுமில்லை . மோடியை

    எதிர்ப்பதால் என்னை இசுலாமிய ஆதரவாளர் என்றார். நல்லவேளை இசுலாமிய தீவிரவாதி என்று அவர் கூறவில்லை .

  4. பாபு சிவா ,

    இடுகைக்கு சம்மந்தமாக கேள்விகளை கேட்டால் அவர் பதிலளிக்க ஏதுவாக இருக்கும் .

    நன்றி

  5. அண்ணல் நபி(ஸல்) இருந்திருந்தால் மோடிக்கு என்ன தீர்வு வழங்கியிருப்பார்?:

    1400 வருடங்களுக்கு முன்பு, “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதரும் அடிமையும் ஆவார்கள்” எனும் உண்மையை பிரச்சாரம் செய்த நபிகளாரை பிராமணர்கள் கல்லால் அடித்தனர், கடுஞ்சொற்களால் வதைத்தனர். கடைசியில் அவரைக் கொல்ல திட்டமிட்டனர்.

    அப்பொழுது மதினாவாசிகள் அவருக்கு அடைக்கலம் தந்து தலைவராக ஏற்றுக்கொண்டனர். மதினாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியது. சிறிது காலத்தில் வறுமை நீங்கி அமைதி மலர்ந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணல் நபிகளார், மக்கா பிராமணர்களிடம் தங்களை நாடு திரும்ப அனுமதிக்கவேண்டும் என்று பலமுறை அமைதி தூதனுப்பினார். ஆனால், அமைதியின் அர்த்தம் பிராமணர்களுக்கு புரியவில்லை.

    இறுதியாக, தங்களது பிறந்த மண்ணை பிராமணரின் வருணதரும கொடுமையிலிருந்த மீட்க ஜிஹாத் எனும் தருமயுத்தம் ஒன்றே கடைசி வழியென்று அறிவித்தார். பத்ரு போரில், ஆயிரக்கணக்கான போர் வீரர்களையும் பயங்கர ஆயுதங்களையும் கொண்ட மாபெரும் பிராமணரின் படையை முந்நூற்று முப்பது பேர் கொண்ட மிகச்சிறிய முஸ்லிம்களின் படை பெருமானாரின் தலைமையில் தோற்கடித்தது.

    அதற்குப்பிறகு, தனது அறுபதாவது வயதில் மக்காவை கைப்பற்றினார். புனித கஃபாவில் இருந்த முந்நூற்று அறுபது சிலைகளையும் உடைத்தெறிந்து வருணதருமத்தின் வேரை அரேபிய மண்ணிலிருந்து வெட்டி எறிந்தார். அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் 55 நாடுகளை கைப்பற்றிவிட்டது. 170 கோடி மக்கள் முஸ்லிம்களாக வாழ்கின்றனர்.

    1940ல் இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் பிராமணர் முஸ்லிம்களை தாக்கினர். முஸ்லிம்கள் அவர்கள் மீது ஜிஹாத் செய்து 1947ல் பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று பாக்கிஸ்தான் ஒரு அனுசக்தி நாடாக உருவாகி பிராமணரின் திமிரை அடக்கிவிட்டது. என்ன அந்தர்பல்டி அடித்தாலும் பிராமணரால் பாக்கிஸ்தானை இனி ஒன்றுமே செய்யமுடியாது என்பது ஊரறிந்த உண்மை.

    அதாவது “அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்” என்று திருக்குரான் அறிவிக்கிறது. ஆக அண்ணல் நபி(ஸல்) இருந்திருந்தால் “ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்ற மோடிக்கெதிராக ஜிஹாத் செய். அவனைப் போட் தள்ளு” என்று முஸ்லிம்களுக்கு நீதி வழங்கியிருப்பார் என்பதில் எந்த காபிருக்காவது எள்ளளவும் சந்தேகமுண்டோ?

  6. இந்தியா சோவியத் யூனியன் போல் சிதறும் நிலையில் இருக்கிறது. தமிழ்த்தேசிய சக்திகள் நாளுக்கு நாள் வலுப்பெறுகின்றன.

    இன்று இந்தியாவை ஒருங்கிணைக்க சர்தார் வல்லபபாய் பட்டேல் தேவையென்று அடிக்கடி மோடி முழங்கி வருகிறார். காஷ்மீரில் விடுதலை இயக்கத்தை நசுக்கியது போல் தமிழ்த்தேசியத்தை நசுக்க வேண்டுமென்பது இவரது திட்டம்.

    அதாவது விடுதலிப்புலிகளை ஈழத்தில் நசுக்கியது போல், அதிரடி தாக்குதல் செய்து சில நூறு தமிழரையும் தமிழ்த்தேசிய தலைவர்களையும் ரவோடு ராவாக போட் தள்ளிவிட்டால், ஜென்மத்துக்கும் தமிழன் வாய்திறக்க மாட்டான் என்பது நரேந்திர மோடியின் ரகசிய திட்டம். இதற்கு பார்ப்பன பாஸிச சக்திகளின் முழு ஆதரவு உண்டு. தமிழனுக்காக முதலைக் கண்ணீர் வடித்து பெட்டி வாங்கும் கும்பலும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.

    அப்படி நடந்தால், தமிழ்த்தேசியத் தலைவர்களால் என்ன செய்ய முடியும்?.

  7. இந்தியா உறுதிமிக்கமுறையில் ஒரே நாடாக இருக்கும். இனிஒரு பிரிவினை ஒருபோதும் நடக்காது. நடக்காது.

  8. annachi nenga 543 thoguthilayum nikkaa venam just 1 mattum ninnu jeyichu ungaloda voicea parlimentla record pannunga ellarum parkattum nangalum parkurom unga eyakkatha pathi inga ethanai perukku theriyum nengalum solrapadi than nadapinganu enna nichayam election illama government veenumna kannuku ettina inum 100 varsam analum mudiyathu

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s