முகம்மது அனுப்பிய கடிதங்கள் எதை உறுதிப்படுத்துகின்றன: மதத்தையா? ஆட்சியையா?

oman_a

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 50

இஸ்லாம் வாளால் பரப்பட்ட மதம் என்றொரு வாதம் அதன் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. இதற்கான முதன்மையான ஆதாரங்களாக அவ்வாதத்தை கூறுபவர்கள் முகம்மது நடத்திய போர்களையும், பிற நாடுகளுக்கு முகம்மது அனுப்பிய கடிதங்களையும் முன்வைக்கிறார்கள். முகம்மது நடத்திய போர்கள் மதத்தை பரப்பும் நோக்கத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அடுத்து முகம்மது அனுப்பிய கடிதங்களைக் கவனிப்போம்.

 

மதீனாவில் முகம்மது ஓர் அரசை ஏற்படுத்திய பிறகு, தொடர்ச்சியாக போர்களை நடத்தி பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அந்த அரசை உறுதிப்படுத்திய பிறகு அண்டை நாடுகளுக்கு முகம்மது கடிதங்களை அனுப்புகிறார். இஸ்லாத்திற்கு அழைப்புவிடுத்து எழுதப்பட்டதாக கூறப்படும் அந்தக் கடிதங்களில் அவர் குறிப்பிட்டிருக்கும் முதன்மையான செய்தி, “மதீனாவில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள், அவ்வாறு நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் போர் தொடுக்கப்பட்டு உங்கள் நாடு கைப்பற்றப்படும்” என்பது தான். அந்த கடிதங்களில் ஒன்று ஓமன் நாட்டில் சோஹார் கோட்டையில் இன்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இவ்வாறு இருக்கிறது,

 

Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God’s Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom.

 

இது அப்பட்டமாக ஓமன் நாட்டு மன்னரை மிரட்டுகிறது. இது போன்று அபிசீனியா, எகிப்து, பாரசீகம், ரோம் யமாமா, சிரியா நாட்டு மன்னர்களுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது. அந்தக் கடிதங்களில் மிரட்டல் தான் இருக்கிறதே அன்றி அழைப்பு இல்லை. இதைக் கொண்டு தான் இஸ்லாம் வாளால் பரப்பட்ட மதம் என்கிறார்கள். இதை எதிர் கொள்வதற்காக தமிழ் இஸ்லாமிய பரப்புரையாளர்கள் அந்தக் கடிதங்களை அதன் வீரியத்தைக் குறைத்து “நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் ஈடேற்றம் பெறுவாய்” என்று மொழிபெயர்த்து சமாளிக்கிறார்கள்.

 

அபிசீனிய(எத்தியோப்பியா) மன்னனுக்கு எழுதிய கடிதம்

 

Peace be upon him who follows true guidance and believes in Allah and His Messenger. I bear witness that there is no god but Allah Alone with no associate, He has taken neither a wife nor a son, and that Muhammad is His slave and Messenger. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety,

நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகுக! நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்.

 

எகிப்து மன்னனுக்கு எழுதிய கடிதம்

 

Peace be upon him who follows true guidance. Thereafter, I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam. If you accept Islam, Allah, the Sublime, shall reward you doubly. But if you refuse to do so, you will bear the burden of the transgression of all the Copts.

நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். ”நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்”

 

பெர்சிய (ஈரான்) மன்னனுக்கு எழுதிய கடிதம்

 

Peace be upon him who follows true guidance, believes in Allah and His Messenger and testifies that there is no god but Allah Alone with no associate, and that Muhammad is His slave and Messenger. I invite you to accept the religion of Allah. I am the Messenger of Allah sent to all people in order that I may infuse fear of Allah in every living person, and that the charge may be proved against those who reject the Truth. Accept Islam as your religion so that you may live in security, otherwise, you will be responsible for all the sins of the Magians

நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறைநிராகரிப்பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் ”நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்) குற்றமெல்லாம் உங்களையே சாரும்

 

ரோம் நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

 

Blessed are those who follow true guidance. I invite you to embrace Islam so that you may live in security. If you come within the fold of Islam, Allah will give you double reward, but in case you turn your back upon it, then the burden of the sins of all your people shall fall on your shoulders

நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய் இஸ்லாமை ஏற்றுக்கொள் அல்லாஹ் உனக்கு கூலியை இருமுறை வழங்குவான் நீ புறக்கணித்து விட்டால் உமது கூட்டத்தினர் அனைவரின் குற்றமும் உன்னையே சாரும்.

 

யமாமா நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

 

Peace be upon him who follows true guidance. Be informed that my religion shall prevail

everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours

நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்

 

சிரியா நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

 

Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to

believe in Allah Alone with no associate, thenceafter your kingdom will remain yours

நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்

 

இந்தக் கடிதங்கள் மூலம் இஸ்லாம் பரவியதா என்றால் இல்லை என்பது தான் பதில். ஒரு சில மன்னர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். சில மன்னர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் எகிப்துக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதிலாக முகம்மதின் கோரிக்கையை நாசூக்காக மறுத்து மரியா, ஷிரின் எனும் இரண்டு அழகிய பெண்களை பரிசாக அனுப்பிவைக்கிறான் எகிப்தின் மன்னன். முகம்மது தன்னிடம் மரியாவை வைத்துக் கொண்டு (இஸ்லாமிய வரலாற்றில் இந்த மரியாவைச் சுற்றி பெரும் பூகம்பமே ஏற்பட்டது. மட்டுமல்லாமல் குரானில் பல வசனங்களை இரக்க(!) வேண்டியதிருந்தது. அதை பின்னர் பார்க்கலாம்) ஷிரினை ஹசன் பின் தாபித் என்பவருக்கு வழங்கி விட்டார். (ஷிரின் ஒரு அரவாணி என்றும் கூறப்படுகிறது) ஆக இஸ்லாத்திற்கான அழைப்பு அழகான ஒரு அடிமைப் பெண்ணோடு முடிந்து போனது.

 

இந்த நாடுகளுக்கு கடிதம் அனுப்பியதுடன் முகம்மதின் பணி முடிந்து விட்டது. உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வந்த அல்லாவின் தூதன் நானே என அறிவித்துக் கொண்ட முகம்மது அந்த நாட்டு மக்களை இஸ்லாமுக்கு மாற்றுவதற்கு செய்த முயற்சிகள் என்ன? ஒன்றுமில்லை ஆனால் அடிபணிந்த நாடுகளிடமிருந்து முறையாக வரி வசூல் செய்யப்பட்டன. ஆளுனர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது அரசியலில் சேருமா? ஆன்மீகத்திலா?

 

முதன்மையான கேள்விக்கு வரலாம். என்னுடைய புதிய கொள்கையை அல்லது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதற்கும், உன்னுடைய நாட்டை நான் பிடித்துக் கொள்வேன் என்று கூறுவதற்கு என்ன தொடர்பு? இஸ்லாத்துக்கு வாருங்கள் என அழைக்கலாம், வந்தால் ஏற்றுக் கொள்ளலாம், மறுத்தால் புரியவைக்கலாம் அல்லது விட்டு விடலாம். ஆனால், உன்னுடைய நாட்டை நான் பிடித்துக் கொள்வேன் என்று கூறினால் அதன் பொருள் என்ன? முகம்மது ஒற்றை ஒருவரைக் கூட இஸ்லாத்துக்கு மாற்றிவிட முடியாது. ஏனென்றால் யார் இஸ்லாத்துக்கு மாற்றுவது யாரை வழிகேட்டில் விட்டு விடுவது என்பதை தீர்மானிப்பது அல்லாதான். அதிகாரத்தில் முகம்மதுக்கு எந்த பங்கும் இல்லை. இதைக் கூறுவதும் ஒரு குரான் வசனம் தான். முகம்மது தன் நெருங்கிய உறவினர் ஒருவரை சாகும் தருவாயிலும் எப்படியவது இஸ்லாத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொள்கிறார். அப்போது இரங்கும்(!) குரான் வசனம் முகம்மதால் ஒற்றை ஒருவரைக்கூட இஸ்லாத்திற்கு மற்றவைக்க முடியாது, அல்லாவின் உதவி இல்லாவிட்டால் என்று முகம்மதை எச்சரிக்கிறது. அப்படி என்றால் முகம்மது எகிறிக்குதித்து முஸ்லீமாக மாறவில்லை என்றால் நாட்டை பிடுங்கிக் கொள்வேன் என்று கடிதம் எழுதுவது ஏன்? இதற்கு ஆட்சி அதிகாரம் தவிர வேறேதும் நோக்கங்கள் இருந்திருக்க முடியுமா? இஸ்லாமியர்கள் என தங்களை அழைத்துக் கொள்வோர் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

49. முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?

48. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2

47. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்

220px-None_of_the_above_in_India

அண்மையில் நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவாலும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காக அளிக்கலாம் எனும் நோட்டோ முறையும் விவாதத்தைக் கிளப்பி வரவேற்பை பெற்றிருகின்றன. தேர்தல் காலங்களில் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்களிடம் இவை புதிய நம்பிக்கையை தோற்றுவித்திருக்கின்றன. அரசும் கட்சிகளும் அப்படித்தான் மக்களிடம் பிரச்சாரம் செய்ய விரும்புகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.

 

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தேர்தலில் வாக்களித்து, ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டதாக மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஒருபுறம். மறுபுறம் யதார்த்தம் அவர்களை குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. முகத்திலடிக்கும் சமூக அவலங்கள், வயிற்றிலடிக்கும் விலைவாசி உயர்வு, மூளையை அரிக்கும் வேலையின்மை, இதயத்தை விழுங்கும் உறவுச் சீர்கேடுகள் என கூரிய நகங்கள் தங்கள் உடலை கிழித்துப் போடுவதன் வலியிலிருந்து மக்கள் அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் மறுகாலனியாக்கக் கொள்கை தான் காரணம் என்பதை முழுமையாக புரிந்திருக்கிறார்கள் என்று கூற முடியாது. ஆனாலும் இந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் இதற்காக எதுவும் செய்ததில்லை, செய்யப் போவதில்லை என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். எல்லோருமே திருடர்கள் தான் என வெளிப்படையாகவே கூறுகிறார்கள். ஆனாலும் தேர்தலில் ஓட்டுப் போடுவது என்பது நமக்குள்ள உரிமை. நான் இந்தியனாக இருப்பதின் அடையாளம். ஓட்டுப் போடாவிட்டால் ஏதோ ஒரு விதத்தில் நாம் தகுதியில் குறைந்து விடுவோம் என்பன போன்ற எண்ணங்களினால் தான் ஓட்டுப் போடுகிறார்கள். ஆனால் இது இப்படியே நீடித்து விடுமா? தங்கள் வாழ்வின் யதார்த்தம் அவர்களை வேறு பக்கமாக நெட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறது.

 

நடந்து முடிந்த வடமாநில சட்டமன்ற தேர்தல்களில் தில்லியில் அரவிந்த் கேஜரிவால் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறார். இதைக் கொண்டு யதார்த்த நிலமைகளுக்கு எதிரான பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த தேர்தல்களில் வேறு வழியில்லாமல் காங்கிரசுக்கு மாற்றாக பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி மோடி அலை வீசுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறதோ; அதேபோல ஆம் ஆத்மி கட்சியின் தில்லி தேர்தல் வெற்றியை நல்ல மாற்றத்தின் அறிகுறியாக நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் பொய்யாக உருவகப்படுத்துகிறார்கள். ராலேகாவ்ன் சித்தியில் அன்னா தன் நாடகத்தின் அடுத்த காட்சியை தொடங்கிவிட்ட இந்த வேளையில் முந்திய காட்சியில் சக நடிகராக இருந்த கேஜரிவாலின் பாத்திரம் என்ன? ஸ்பெக்ட்ரம், நிலக்கரி என ஊழல்கள் சந்திசிரித்த நாட்களில் ஊழல் எதிர்ப்பு போராளிகளாக வெளிச்சத்திற்கு வந்தார்கள். ஆனால் இவர்கள் எதை ஊழல் என்கிறார்கள்? எதை நிர்வாகக் கொள்கை என்று ஏற்கிறார்கள்? இவர்களின் தீர்வு என்ன? என்று பார்த்தாலே போதும், இவர்களின் நாடகத்திற்கு தயாரிப்பாளர் யார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

 

ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, சவப்பெட்டி போன்ற ஊழல்கலெல்லாம் அறியப்பட்ட ஊழல்கள் அறியப்படாமல் எவ்வளவோ ஊழல்கள் அமுங்கிக் கிடக்கின்றன. என்றாலும் இவைகளில் எது ஊழலாக கருதப்படுகிறது என்பது முதன்மையான அம்சம். ஸ்பெட்ரம் ஊழலை எடுத்துக் கொள்வோம். அ.ராசா ஏலம் போட்டு கொடுக்கவில்லை, குறிப்பிட்ட நிருவனங்களுக்கு கொடுப்பதற்காக விதிகளை வளைத்தார் என்பது தான் ஊழலாக கருதப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும்? என்றோ அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஏன் விலக்கப்பட்டது என்பதோ ஊழலாக கருதப்படுவதில்லை. அதனால் தான் தன் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் இந்தநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு ரிலையன்ஸுக்கு வழங்கப்பட்டது எப்படி? எனும் கேள்வி எழவும் இல்லை, அது ஊழலாக கருதப்படவும் இல்லை. அது மட்டுமின்றி இந்த ஊழல்களால் ஆதாயமடைந்த முதலாளிகள் மீது சுட்டு விரல் கூட நீட்டப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தப் பார்வை ஆம் ஆத்மிக்கும் இல்லை, அன்னாவுக்கும் இல்லை. அவர்களைப் பொருத்தவரை ஸ்பெக்ட்ரம் தான் ஊழல், ரிலையன்ஸுக்கு வழங்கப்பட்ட எண்ணெய் இருப்புகள் ஊழலல்ல.

 

சரி, இந்த அறியப்பட்ட ஊழகளையும் கூட ஒழிப்பதற்கு முன்வைக்கப்படும் தீர்வுகள் என்ன? புதிதாக ஒரு சட்டம் இயற்றுவது தான். மேற்குறிப்பிட்டவைகள் எதனால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறதோ அதில் கூடுதலாக ஒரு சட்டத்தையும் அதற்கான அமைப்பையும் சேர்த்துவிட்டால் ஊழல் ஆவியாகிவிடும் என்பது தான் ஊழமை ஒழிப்பதற்கு இவர்கள் வைத்திருக்கும் தீர்வு. இதைத்தான் மேல் நடுத்தர வர்க்கம் உச்சிமோர்ந்து கொண்டாடுகிறது. ஏனென்றால் அவர்கள் ஆராதிக்கும் முதலாளித்துவத்திற்கும், உடலுழைப்பை கேவலமாக எண்ணுகின்ற மனோபாவத்திற்கும் அது தான் பொருந்திப் போகிறது. இப்படி அவர்களுக்கு பொருந்திப் போவதை மெழுகுவர்த்தி எரித்து கொண்டாடிவிட்டு அது ஊழலை ஒழிக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். தொலைத்த இடம் இருட்டாக இருக்கிறது என்பதற்காக வெளிச்சமான இடத்தில் தேடிவிட்டு காணாமல் போனது கிடைத்துவிடும் என்று நாமை நம்பச் சொல்கிறார்கள். ஏற்க முடியுமா?

 

இதே போலத்தான் நோட்டோவையும் முன் தள்ளுகிறார்கள். 49ஓ என்றொரு ஏற்பாட்டை முன்பு கொண்டு வந்தார்கள். ஆனால் அதில் அலுவலர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொடுக்க வேண்டும் என இருப்பது சிரமமாக இருக்கும், ஏற்க மாட்டார்கள் என்பதால், சுலபமாக ஓட்டுப் போடும் எந்திரத்திலேயே ஒரு பொத்தான் அமைத்திருக்கிறார்களாம். யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்றால் அந்த பொத்தானை அழுத்தி பதிவு செய்து விடலாம் என்கிறார்கள். ஓட்டுக்கட்சி அரசியல்வியாதிகளின் ஆட்டங்களையும், அவர்கள் தமக்குச் செய்யும் துரோகங்களையும் கண்டு ஆற்றாமையால் ஒதுங்கத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள். இந்த ஆற்றாமை அரசின் மீதான கோபமாக திரும்பி விடக்கூடாதே என்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட குறுக்கு வழி தான் இந்த மாய்மாலங்கள். ஆனால் இதையே ஜனநாயகத்திற்கான, நம்முடைய ஜனநாயகத்திற்கான மேன்மை என்று பறை சாற்றுகிறார்கள்.

 

இது ஒருபுறமென்றால் மறுபுறத்தில் இந்த வட மாநில தேர்தல்களில் மொத்தம் 16 லட்சம் வாக்குகள் நோட்டோவுக்கு விழுந்திருக்கின்றன. இது இந்த அரசு அமைப்பின் மேல் மக்கள் வெறுப்பு கொண்டு வருகிறார்கள் என்பதன் அடையாளம் என்கிறார்கள். மேலோட்டமாக பார்க்கும் போது இது சரியானது போல் தோன்றினாலும், இது சரியானதல்ல. இந்த அரசமைப்பு நமக்கானதல்ல என்பதை மக்கள் தங்கள் சொந்த அனுபவங்களின் மூலம் உணர்ந்து வருகிறார்கள். அதேநேரம் அந்த அனுபவங்களிலிருந்து தமக்கான வெற்றியை தேடிக் கொள்வது எப்படி எனும் வழி அவர்களுக்கு புலப்படவில்லை. அதனால்தான் தங்களுக்கு எளிதாகத் தெரியும் வழிகளில் செல்லத் தொடங்கி விடுகிறார்கள். அப்படி அவர்கள் தவறாக பயணிக்கும் வழிகளில் ஒன்று தான் இந்த நோட்டோ. எந்த அரசமைப்பு தமக்கானதல்ல என்று தம் சொந்த அனுபவங்களின் மூலம் உணர்ந்திருக்கிறார்கலோ அந்த அரசமைப்புள்ளேயே தீர்வு இருக்கிறது எனும் மயக்கத்தைத்தான் இந்த நோட்டோ ஏற்படுத்துகிறது. அதாவது மக்களின் தேவை இந்த அரசமைப்பை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசமைப்பு தேவையாய் இருக்க; அந்த தேவையை நோக்கி பயணிக்கும் வழியாக அவர்கள் தேர்ந்தெடுப்பது அந்த அரசமைப்பை தக்க வைக்கும் ஏற்பாட்டை. இது எவ்வளவு பெரிய அபாயம்?

 

கேஜரிவாலுக்கு வாக்களிப்பதாய் இருக்கட்டும், அல்லது நோட்டோவை பயன்படுத்துவதாக இருக்கட்டும் இந்த இரண்டுமே நடப்பு ஓட்டுக்கட்சி அரசியல் முறையை எதிர்த்து செய்யப்படும் முயற்சியே. ஆனால் இந்த இரண்டும் அதே ஓட்டுக்கட்சி அரசியல் முறைகளுக்குள் மக்களை தள்ளிவிடும் வேலையையே செய்கின்றன. பயணிக்கும் பாதை தாங்கள் விரும்பும் ஊருக்கு கொண்டு சென்று சேர்க்காது என்பதை அறியாமல் இருப்பது எவ்வளவு பெரிய சோகம். தாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை துன்ப துயரங்களுக்கும் அரசின் மறுகாலனியாக்க கொள்கையே காரணம் என்பதை உணந்து, அதற்கு எதிராக போராட முன்வரும் போது தங்களை பழைய குட்டைக்குள்ளேயே மூழ்கடிக்கும் இந்த வழுக்குப் பாறைகள் உடைந்து தூளாவது உறுதி.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இந்த பயந்தாரி சொன்னதுதான் சரி

திர்பார்ப்பும் யதார்த்தமும் எப்போதும் ஒன்றிணைவதே இல்லை. ஒரு பள்ளிக்கூட மாணவனின் பார்வையிலிருந்து ஆசிரியரை நோக்கினாலும், ஒரு மனிதனாக இருந்து ஆசிரியப் பணியின் விழுமியங்களை சீர்தூக்கினாலும் எதிர்பார்ப்பும் யதார்த்தமும் எப்போதும் ஒன்றிணைவதே இல்லை. ஆனாலும் எல்லா மாணவர்களின் வாழ்விலும் ஆசியர்கள் விட்டுச் செல்லும் தாக்கம் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அவ்வாறு என் மீது தாக்கம் செலுத்திய, செலுத்திக் கொண்டிருக்கும் என் பள்ளிக் காலத்து ஆசிரியர்கள் குறித்து விளம்ப வந்திருக்கிறேன்.

மாணவன்

என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்த ஆசிரியர், என் பாதையை அப்படியே 90 டிகிரிக்கு மாற்றிய ஆசிரியர் என்றெல்லாம் என்னால் யாரையும் குறிப்பிட முடியாது. எல்லா ஆசிரியர்களையும் போலவே நான் குறிப்பிடப் போகும் ஆசிரியர்களும் எளிதாக கடந்து செல்லும்படியான திறனுள்ளவர்களே. ஆனாலும் அவர்களின் யதார்த்த நடவடிக்கைகள் என்னுள் நேர்மறையான சலனங்களை நிகழ்த்தி இருக்கின்றன. வினவு தோழர்கள் தந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களை இந்த மெய்நிகர் உலகில் பதிவு செய்வது மெய்யாகவே எனக்கு மகிழ்வளிப்பதாய் இருக்கிறது.

என் பள்ளி வகுப்புகளில் (எண்பதுகளின் தொடக்கத்தில்) படிப்பில் நான் ஊட்டமான மாணவன் தான் என்றாலும் தயக்கமும் கூச்சமும் காலில் கட்டிய விலங்குடனும் மெலிந்த உடலுடனும் இருப்பேன். உடன் படித்த `மேத்தன்` சாஹுல் ஹமீது, `கானாத்தி` அப்துல் காதர் போன்றவர்கள் தடித்தடியாக துருதுருப்பாக இருப்பார்கள். இவர்களுக்கு இடையில் ரூல்தடிகளுக்கு மத்தியில் பென்சிலைப் போல உட்கார்ந்திருப்பேன். வகுப்பில் ஒரு ஆசிரியர் எப்போதும் பாடம் நடத்தி முடிந்ததும் பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட எதையாவது பேசிக் கொண்டிருப்பார். அப்படித்தான் அன்று அவர் கேட்ட கேள்வி திடீரெனெ தீ பற்றி எரிந்தால் என்ன செய்வீர்கள்? என்பது. என்னுடைய முறை வரும் போது சொல்ல வேண்டும் என்று பதில்களை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் நான் சொல்வதற்குள் அந்தப் பதில்களை எனக்கு முன்னாலுள்ளவர்கள் சொல்லிவிட்டார்கள். என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே எனும் பதட்டத்தில் தீ பிடித்து விட்டது என்று தெருவில் நின்று கத்துவேன் என்று கூறி விட்டேன். வகுப்பறையே பெரும் சத்தத்தில் சிரித்தது.

அப்போது தான் அந்த ஆசிரியர். போன் செய்வேன் என்று சொன்ன மாணவனை எழுப்பி உனக்கு எங்கு போன் இருக்கிறது என்று தெரியுமா? எப்படி டயல் செய்ய வேண்டும் என்று தெரியுமா? நம்பர் என்ன என்று தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் சொன்ன அத்தனை பதில்களையும்விட சிறப்பான சரியான பதில் இந்த `பயந்தாரி` (என்னுடைய பட்டப் பெயர்) சொன்னது தான். எந்தக் காரியத்திலும் தேவைப்படும் போது பிறருடைய உதவியை கேட்டுப் பெறுவது தான் அதை சரி செய்வதற்கான முதல்படி என்று பேசி அன்று என்னை நாயகனாக்கி விட்டார். அதன் பிறகு பாடத்திட்டத்திற்கு வெளியே என்ன சந்தேகம் என்றாலும் நான் தேடிப் போவது அந்த ஆசிரியரைத்தான். ஊரின் பெயர்க் காரணம் என்ன? என்பதில் தொடங்கி திருநெல்வேலி மேம்பாலத்தைப் போல அடுக்குப் பாலம் உலகில் வேறெங்கும் இல்லையாமே? என்பது வரை பல விசயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம். ஆசிரியர் மாணவர் என்பதைத் தாண்டி எங்கள் உறவு இருக்கிறது. இன்றும் கூட வாய்ப்பு கிடைக்கும் போது குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையேனும் அவரை சந்தித்து விடுவேன். அந்த ஆசிரியர் புலங்கார் ஹாஜா.

அடுத்து நான் குறிப்பிட விரும்பும் ஆசிரியர் தமிழாசிரியர் நாகூர்மீறான். அன்றைய நாட்களில் எங்கள் பள்ளியில் வியாழன் மதியமும், வெள்ளியும் தான் விடுமுறை நாட்கள். மாதத்தின் கடைசி வியாழனில் மாதிரி நாடாளுமன்றம் நடக்கும். தலைமை ஆசிரியர் தான் பிரதமர். ஆசிரியர்கள் அனைவரும் அமைச்சர்கள். அவர்களுக்கு துறைகளும் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் மாணவர்கள் அனைவரும் உறுப்பினர்கள். ஏனைய அனைவரும் பார்வையாளர்கள். அன்று நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள் உப்புச் சப்பற்றதாகவும், கூறப்படும் பதில்கள் சடங்குத் தனமாகவும் இருக்கும். ஆனால் அன்று நான் கேட்ட கேள்வி அந்த நாடாளுமன்றத்தையே கலக்கியது.

எப்போதும் தன் ஒன்றரை வயது பையனுடன் வகுப்புக்கு வருவார் ஒரு ஆசிரியர். வகுப்பறையில் அந்தச் சிறுவன் கழிக்கும் சிறுநீரை கரும்பலகை அழிக்கப் பயன்படும் டஸ்டரைக் கொண்டு துடைத்து விடுவார். இது எப்படி சரி? இதை முறைப்படுத்த வேண்டும் என்று தான் அன்று நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஆசிரியரிடம் கேள்வியாக எழுப்பினேன். இதில் வேடிக்கை என்னவென்றால் சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். கூச்ச சுபாவமுள்ள மாணவனான என்னை இப்படி தைரியமாக கேள்வி கேட்க வைத்தவர் தமிழாசிரியர் நாகூர்மீறான் தான். இரு ஆசிரியர்களும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அன்று அதை செய்ய வைத்தார். இதன் பிறகு அந்த நாடாளுமன்றம் சடங்காக இல்லாமல் ஆசிரியர்களை நோக்கி கேள்வி எழுப்பும் மன்றமாக மாறிப்போனது.

இதுமட்டுமின்றி 1,2,3 எனும் எண்கள் ஆங்கில எண்கள் என தெரிந்த போது அதைப் பயன்படுத்த மனமில்லாமல் அ, ஆ, இ என பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இதை மாற்றி தமிழ் இலக்கங்களை கற்றுத் தந்தவர். தமிழின் மீது பற்றார்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர் தமிழாசிரியர் நாகூர்மீறான். இன்று நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். ஒருமுறை வீட்டுக்கு சென்று சந்திக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாலும் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மூன்றாவதாக நான் குறிப்பிட விரும்புவது கலீஃபா ஹஜரத். கண்டிப்புக்கும் நேர்மைக்கும் பேர் போனவர். தவறு என்று தெரிந்து விட்டால் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளமாட்டார். கடுமையாக தண்டிப்பார். என்னையொத்த பையன்களுக்கு கலீஃபா ஹஜரத் வருகிறார் என்றாலே பயம் தான். ஓடி ஒழிந்து கொள்வோம். பள்ளி வகுப்பு ஒன்பது மணிக்கு தொடங்கும் என்றால் காலை ஆறரையிலிருந்து எட்டு மணி வரை இவர் ராஜ்ஜியம் தான். அரபி வகுப்புகள் எடுப்பார். ஒவ்வொரு மாணவனையும் அரபு மொழியில் புலமை பெற வைத்து விடவேண்டும், குரான் படி ஒழுக வைத்துவிட வேண்டும் எனும் அக்கறையில் ஒவ்வொரு மாணவன் மீதும் தனிக்கவனம் எடுத்துக் கொள்வார். ஆனால், நான் நாத்திகன் ஆன போது எங்கள் தெருவில் என்னை முதலில் அங்கீகரித்தவர் கலீஃபா ஹஜரத் தான். அவர் வீட்டுப் பாயில் எப்போதும் எனக்கு இடமிருக்கும். என்னுடைய வாதங்கள் எல்லாம் அவரிடம் சோதித்துப் பார்த்தவை தான். அவர் உயிராய் மதிக்கும் இஸ்லாத்தையும் குரானையும் நான் முதிர்ச்சியற்றும், முட்டாள்தனமாகவும் விமர்சிக்கும் போதெல்லாம் பொறுமையாக விளக்கியிருக்கிறார். எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் என்மீது பரிவைப் பொழிந்தார். என் நெருங்கிய உறவினர்களின் மரணத்தில் கூட கலங்காத நான் கடந்த ஆண்டு கலீஃபா ஹஜரத் மறைந்த செய்தி கேட்டு கலங்கிப் போனேன். என்னிடம் இன்று இருக்கும் சில நல்ல பழக்கங்களை என்னுள் விதைத்தவர் அவர் தான், அல்லது அவரின் தாக்கம் இன்னும் என்னுள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவரின் மரணச் செய்தியில் நான் இப்படி எழுதியிருந்தேன். நிச்சயமாய் அது உயர்வு நவிற்சியல்ல.

என்னை செதுக்கிய முதல் உளியே,

காதை திருகியே நேர்மையை.
செவியேற்கச் செய்த தகமையே,

ஆசான்கள் அறிமுகமாகும் முன்பே.
ஆசிரியராய்,போதகராய்
நல்லவை உண்ணத் தந்த ஆளுமையே,

நீங்கள் கிள்ளித் தருமுன் சர்க்கரையை.
அள்ளித் தின்றதற்காய்
நீங்கள் அடித்த அடி.
இன்றுவரை வலிக்கிறது கையில்.

உலகில் இனி நீங்கள் இல்லை எனும் வலி.
இனி என்றென்றும் வலிக்கும் என் மெய்யில்.

இவர்கள் தவிர என்னுள் சலனங்களை ஏற்படுத்தியவர்கள் என்றால் பழபழப்பான சோவியத்நாடு பத்திரிக்கையை தொடர்ந்து வாசிகத்தந்த பக்கத்து வீட்டு சிபிஐ அக்பர் மாமா, பொது நூலகத்தில் இரட்டை உறுப்பினராய் என்னை சேர்த்து விட்ட வாப்பாவின் நண்பரான கனி மாமா என வேறு சிலரையும் சொல்லலாம். அதேநேரம் என்னுடைய கல்விக்கே குறுக்கே நின்ற ஆசிரியர்கள் குறித்து `ஒரு மாணவனின் தோல்வி` எனும் பதிவில் லேசாக குறிப்பிட்டிருக்கிறேன்.

பள்ளியில் ஆசிரியர்கள் என்மீது செலுத்திய பரிவினால் நானும் ஒரு ஆசிரியராக வேண்டும் எனும் கனவு என்னில் இருந்ததுண்டு. ஆனால் இன்றைய தனியார்மய சூழலில் கல்வி என்பதே கடைச்சரக்காய் ஆகிவிட்ட பிறகு ஆசிரியப் பணி மட்டும் எப்படி தளிர்களை உருவாக்கும் கவனத்துடனும், கண்னியத்துடனும் இருக்கும்? ஆசிரியர்களுக்கு கொடுக்கும் மதிப்பை மாணவர்கள் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் தகுதியாக இருக்கிறார்களா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. நுகர்வுக் கலாச்சார வெறியில் சமூகப் பொறுப்பற்று திரிகிறார்கள் என்றாலும் சிறு தூண்டுதல் செய்தாலும் அதைப் பற்றிக் கொண்டு பற்றிஎரிய மாணவர்கள் என்றும் ஆயத்தமாகவே இருக்கிறார்கள். ஆனால் அந்தத் தூண்டுதலை செய்யும் சுடர்களைத்தான் தனியார்மயம் தணித்து விட்டது.

பொதுவாக கல்வி என்பது மாணவர்களுக்கு கற்கும் ஆசையை தூண்ட வேண்டும். ஆனால் மெக்காலே கல்வி முறையும், கல்வி தனியார்மயமும் சேர்ந்து மாணவர்களை ரப்பர் ஸ்டாம்புகளாக தயாரித்துத் தள்ளுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் கற்கும் அனுபவத்தை விட்டே வெருண்டோட வைக்கிறது. அதனால் தான் மாணவப் பருவத்திலிருந்து மனிதனாக பதவி உயர்வு பெறுவோர் தேடல் எனும் சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள். எல்லா மாணவர்களுக்குமே தேடல் அனுபவம் தூண்டப்பட வேண்டும் என்றால் அது வெறுமனே கல்வியையும் ஆசியர்களையும் மட்டுமே சார்ந்ததல்ல. சமூகச் சூழலையும் முக்கியமாக உள்ளடக்கியது. ரஷ்யக் கல்வி முறைக்கும் இந்தியக் கல்வி முறைக்கும் உள்ள வித்தியாசமாக ஒன்றைச் சுட்டிக் காட்டுவார்கள். நூலில் இருக்கும் யானையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால் இந்தியக் குழந்தை யானை என்று சொல்லும், ரஷ்யக் குழந்தை யானையின் படம் என்று சொல்லும். இந்த நுணுக்கமான வேறுபாடு கற்பிக்கும் முறையிலிருந்து ஏற்படுவதில்லை. மாறாக சமூக அக்கரையுடன் கல்வி மாறும் போது ஏற்படுவது. அத்தகைய சமூக மாற்றத்துக்காக நாம் உழைக்க முன்வரும் போது மாணவர்களும் அந்த இலக்கை எட்டிப் பிடிப்பார்கள்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: