பாதமில்லாமல் வாழ்வதை விட போராடி இறப்பதே மேல்

 

விவிலியத்தில் ஒரு கதை உண்டு. ஒரு மன்னன் குடிமக்கள் அனைவரும் தனக்கு பணிந்து, தனக்கு அடிமையாக, தினமும் தன் பாதத்தை பூஜித்து வந்தால் மட்டுமே வாழ அனுமதிப்பேன். இல்லாவிட்டால் அவர்கள் பாதங்களைத் தறித்து விடுவேன் என்று சட்டமிட்டு; மீறுபவர்களின் பாதங்களை துண்டித்து நடக்க முடியாமல், வாழவிடாமல் அவர்களை சாகடித்தான். அப்போது மானமும் அறிவும் கொண்ட மக்கள் போராடி இறந்தனர். இன்றைய சமூக சூழல் தன்னுடைய ஆணாதிக்கத் திமிரினால் அந்த மன்னனைப் போல் தனக்கு அடிபணிந்து வாழுங்கள் என்று பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இதை எதிர்த்துப் போராடி தங்களின் சுதந்திரத்தையும் சமூகத்தின் சுதந்திரத்தையும் மீட்டெடுத்துக் கொள்வதே பெண்கள் முன்னிற்கும் கடமை என்று அன்று பாசிச பிராங்கோவின் ஆட்சிக்கு எதிராகப் போராடிய ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவி லாபோசியோனாரியா விவிலியத்திலிருந்து கூறிய மேற்கோள் தான் “பாதமில்லாமல் வாழ்வதை விட போராடி இறப்பதே மேல்” என்பது.

 

1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் ஒன்றுகூடி எட்டு மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என அடிப்படை உரிமைகளுக்காக போராடி, அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இரத்தம் சிந்தி வென்றார்கள். இதன் மூலம் சாமானியப் பெண்களும் போராடி உரிமைகளை வென்றெடுக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய நாள் மார் 8. அதன்பிறகு 1910 ல் கோபன் ஹேகனில் இரண்டாவது அகிலத்தில் மர்ச் 8 ஐ சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார் சோசலிச பெண்ணுரிமைப் போராளியான கிளாரா ஜெட்கின்.

 

இன்று மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம். ஆனால் பெண்கள் தினம் என்ற பெயரில் தன்னார்வக் குழுக்கள், இந்த நாளின் அரசியல் சாரத்தை உருவி எடுத்துவிட்டு, சக்கையைப் போல் அடையாள நாளாக கொண்டாடுகிறது, கொண்டாடத் தூண்டுகிறது. நகைக்கடை, துணிக்கடை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பவை வாழ்த்துக் கூறி பெண்களை தங்கள் வாடிக்கையாளர்களாக வளைக்கின்றன. தொலைக்காட்சிகளில் நடிகைகள் வாழ்த்துக்கூறி குத்தாட்டம் போடுகிறார்கள்.

 

இன்று பெண்கள் நிலை எவ்வாறு இருக்கிறது? பெண்குழந்தைகள் பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்து கொன்றார்கள் அன்று. இன்றோ, ஸ்கேனிங் மூலம் கண்டறிந்து பெண் குழந்தைகளை கருவிலேயே கொன்று விடுகிறார்கள் ஆணாதிக்கவாதிகள்.

 

பெண்குழந்தைகள் தப்பிப் பிழைத்து வந்தால் படிக்கின்ற, பணி புரிகின்ற இடத்தில் ஆண்கள் காதல் கடிதங்களோடு நிற்கிறார்கள். ஏற்க மறுத்தால் ஆசிட் பாட்டலோடு வருகிறார்கள்.

 

பெண் தான் விரும்பிய ஆணைக் காதலித்தால், திருமணம் செய்தால் வன்மத்துடன் பழிவாங்க அரிவாளோடும், ஆண்குறியோடும் களம் இறங்குகிறார்கள் காப் பஞ்சாயத்துகளும், ஆதிக்க சாதி, மத வெறியர்களும்.

 

ஆறுமாதக் குழந்தையைக் கூட வல்லுறவு கொள்ளும் கொடிய விலங்குகள் உலவும் காடாக சமூகத்தை மாற்றி வருகிறது ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாடு.

 

தனியார்மயம் – தாராளமயம் புகுத்தப்பட்டபின் பெண்கள் அன்றாட அத்தக் கூலிகளாக னகர்ப்புறங்களுக்கு விரட்டப்பட்டுள்ளார்கள். வீட்டு வேலைக்காரர்களாக, கார்மெண்ட்ஸ் கம்பனி தொழிலாளர்களாக, பெட்ரோல் பங்க், நகைக்கடை, ஜவுளிக்கடைகளில் சேல்ஸ்வுமன்களாக, பஞ்சாலைத தொழிலாளர்களாக பணி புரிகிறார்கள். பஞ்சாலை முதல் ஐ.சி கம்பனிகள் வரை எல்லா துறைகளிலும் பெண்களுக்கு அற்ப கூலி, நிர்ணயமில்லா வேலை நேரம், உத்திராவாதமில்லாத வேலை என ஓய்வு இல்லாமல், நிம்மதி இல்லாமல் கடும் மன உழைச்சலுக்கு ஆளாகி தற்கொலை வரையிலும் தள்ளப்படுகிறார்கள்.

 

குழந்தைத் தொழிலாளர் முதல், தள்ளாடும் மூதாட்டி வரை உழைத்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம், அன்றாடம் விலைவாசி உயர்வு குறைந்த வருமானத்திற்குள் வாழ்க்கையை சுருங்கிக் கொள்ள வேண்டியதிருப்பதால் ஊட்டச்சத்தில்லாத உணவு, அதனால் ஏற்படும் நோய்கள்.

 

வீட்டில் சலிப்பூட்டும் ஓய்வு ஒழிச்சலில்லாத சமையல் வேலை, துணி துவைக்கும் வேலை, பொதுக்குழாயிலிருந்து தண்ணீர் சுமக்கும் முதுகெலும்பொடிக்கும் வேலை; குடிகார கணவனால், ஊதாரி பிள்ளைகளால் அட் உதை அவமானப் பட்டும், பொறுப்பற்ற கணவர்களால் குடும்பத்தை பராமரிக்கும் முழுச் சுமை என அனைத்தும் பெண்கள் தலையில் தான் விழுகிறது.

 

உழைக்கும் பெண்கள் தினம் வந்து நூறு ஆண்டுகளைக் கடந்த பின்பும் பெண்களின் இந்த அவல நிலை இன்னும் மாறவில்லை. இதற்கெதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சனை கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கல் பாதுகப்புச் சட்டம், பெண்கள் வாழ்வுரிமைச் சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம் என பல்வேறு சட்டங்களை இயற்றியிருப்பதாக பீற்றிக் கொள்கிறது அரசு. அத்தனையும் அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள். நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராக ஏவப்படும் குற்றங்களில் பெரும்பாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. தவிரவும் இதை தடுக்கவும், தண்டிக்கவும் பொருப்பேற்றிருக்கும் காவல்துறை, நீதித்துறை, இராணுவம் ஆகியவை வாச்சாத்தியிலும், மணிப்பூரிலும், காஷ்மீரிலும், பெண்கள் மீது ஏவிய வன்கொடுமைகளை உலகமே அறியும்.

 clara-zetkin

சமூகத்தில் பாதியாக இருக்கிற பெண்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் வன் கொடுமைகளையும், பாலியல் கொடுமைகளையும், சுரண்டல்களையும் ஒழிக்குமா வரும் நாடாளுமன்றத் தேர்தல்?

 

பெண்களின் அவலம் நிறைந்த, சிதைக்கப்படும் வாழ்வை மாற்றியமைப்பார்களா வாக்கு கேட்டு வரும் இந்த ஓட்டுப் பொறுக்கிகள்?

 

ஒருபோதும் மாட்டார்கள். நாட்டையும், மக்களையும் கொள்ளையிட வல்லரசுகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் யார் கூட்டிக் கொடுத்து மாமா வேலை செய்வது என்பதற்கு நடக்கும் போட்டி தான் நாடாளுமன்றத் தேர்தல்.

 

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே, இந்தியாவின் இறையாண்மையையை, பொருளாதாரத்தை, இராணுவ ரகசியங்களை ஒப்பந்தங்கள் என்ற பெயரில் வல்லரசுகளிடம் காட்டிக் கொடுக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள கனிம, கடல், காட்டு வளங்களை பன்னாட்டு கம்பனிகளுக்கும் தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கிறார்கள் இந்த ஓட்டுக் கட்சிகள். இதை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது போலீசு, இராணுவத்தை வைத்து போர் நடத்துகிறார்கள்.

 

உழைக்கும் மக்க்ளை சுரண்டுபவர்கள் தான், இந்திய வளங்களைக் கொள்லையிடுபவர்கள் தான், பெண்களின் உழிப்பையும் உடலையும் கச்சாப் பொருளாக்கி கல்லா கட்டுகிறார்கள். இந்தக் கொடுமைகளை எந்த ஓட்டுக் கட்சியும் ஒழிக்க மாட்டார்கள். பெயரளுவுக்குக் கூட அதிகாரம் இலாத பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத இவர்கள் நாட்டை அடிமையாக்கும் தனியார்மயம் தாராளமயத்தை 100 சதவீதம் அமல்படுத்த துடிக்கிறார்கள்.

 

33 சதவீத இடஒதுக்கீடு பாரளுமன்றத்தில் கொடுத்தாலும் கூட பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் ஒன்றைக்கூட ஒழிக்க முடியாது.. ஒட்டுமொத்த நாடும், அனைத்துப் பிரிவு மக்களும் தனியார்மய தாரளமய கொள்ளையால் மரணக் குழியை நோக்கி தள்ளப்படுகிறாஅர்கள். இதற்கு எதிராக போராடும் மக்கலோடு கரம் கோர்த்து மறுகாலனியாக்கத்திற்கு எதிராக நாம் போராட வேண்டும்.

 

மேலும், பெண்களின் இந்த நாயின் கீழான வாழ்வுக்குக் காரணம் இந்த சமூக அமைப்பு தான். பெண்கள் முதலில் மூலதனத்தால் வேட்டையாடப்படுகிறர்கள். இரண்டாவதாக பெண்கள் தங்கள் வாழ்வின் அவலம் குறித்து சிந்திப்பதை தடுக்கின்ற வீட்டு வேலை என்கிற அடிமைத்தனம். இதை ஒழிக்காமல் பெண்களுக்கு ஜனநாயக உரிமையோ, சுதந்திரமோ இல்லை.

 

பாலின சமத்துவத்தை படைக்க வேண்டுமெனில் சோசலிசத்தை நோக்கிய பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒன்று தான் தீர்வு.

 

சோசலிசத்தில் தான் உழைப்பை சுரண்டுகின்ற மூலதனத்தை ஒழித்து, உற்பத்தி சாதங்கள் பொது உடமையாக்கப்படுகிறது. குழந்தை வளர்ப்பு நிலையங்கள், பொது உணவு விடுதிகள், பொது துணி துவைக்கும் ஆலைகள் ஏற்படுத்தி தனிப்பட்ட வீட்டு வேலைகள் ஒழிக்கப்படுகிறது.

 

அதற்குரிய விரைவான, நேரான, நேர்மையான புரட்சியும் சமூக மாற்றமும் தான். புரட்சி இல்லாமல் விடுதலையும் இல்லை, உரிமைகலும் இல்லை. இதைப் பெற பெண்களுக்கு இருக்கு ஒரே ஆயுதம் அமைப்பாக அணி திரள்வது தான்.

 

அணிதிரள்வோம்! போராடுவோம்! வென்றெடுப்போம்! என இந்த சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தில் உறுதியேற்போம்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

3 thoughts on “பாதமில்லாமல் வாழ்வதை விட போராடி இறப்பதே மேல்

 1. இதே பெண்ணியம் பற்றிய ஒரு தளத்தில் நடந்த விவாதததின் பகுதி
  ————————————————————-
  இடுகை பெண்களின் நலன் பற்றியது… அதற்கு .. இன்றைய சூழ்நிலை.. இதை ஒட்டிய எதிர்கால வாய்ப்புகள் .. பற்றியே பதில் கூறினேன்.. இதில் எனது கோட்பாடு கண்டுபிடிப்பு என்றேல்லாம் எதுவும் கிடையாது …

  1960ல் கலப்பு மணம் பற்றி நினைத்து பார்த்த்ருக்க முடியுமா? அதுவும் ஆச்சரமான பிராமண குடும்பங்களில் ?…
  நம் இன பையன்களுக்கு என்ன குறை.. என்று இளம் பெண்கள் கலப்பு மணத்தை ஆதரிப்பதை … கலப்பு மணம் புரிவதை எதிக்கிறார் பாருங்கள்..
  http://www.brahmintoday.org/magazine/2009_issues/bt67-0902_brahmins.php

  1980-90 களில்.. தேசிய அளவில் கணினித்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த பெண்ணின் நிலை ….
  கொஞ்சம் நீளமானது என்றாலும் உண்மையானது.. பயனுள்ளது ..
  http://moonramsuzhi.blogspot.in/2013/08/blog-post_17.html

  20 வருட காலத்தில் என்னென்ன மாற்றங்கள் என்பதை தயைசெய்து பார்க்கவும்.
  இன்றைய ஐரோப்பிய, ஆஸ்திரேலிய இளய தலைமுறை.. குழந்தை பெறுவதை தங்கள் கேரியருக்கு இடைஞ்சலாக நினைப்பதால் மக்கள் தொகை குறைவதையும் அதை தடுக்க ஏகப்பட சலுகைகளை அரசுகள் அறிவிப்பதையும் கவனிக்கவும். இதற்கும் லிங்குகள் உண்டு.

  1970-80ல் சேர்ந்து வாழ்வதை பற்றி நினைத்து கூட பார்க்கமுடியாத நாட்டில் இன்று நீதிபதி அதற்கு தீர்ப்பு சொல்லவேண்டி வந்துள்ளது.

  இந்த மாற்றத்தில் இருந்து பின்னோக்கி செல்வது இனி முடியாது.. இந்த மாற்றம் முன்னோக்கி செல்லும்போது .. ஆண் பெண் இருவரும் சுயசார்ப்புடையவர்களாய் இருக்கயில் . யாரும் யாருக்கும் அன்பை தவிர வேறு எதற்கும் கட்டுபட்டவர்களாய் இல்லாம இருக்கையில் நிகழக்கூடிய சாத்தியங்களை பற்றியே சொல்லி இருக்கிறேண்.

  சேர்ந்திருப்பவர் பிரிந்து ..குடும்பம் சிதையுபோது குழந்தைகளுக்கு என்ன வழி .. என்பது தவிர்க்க இயலாத கேள்வி. அதற்கு எனக்கு தெரிந்த சாத்தியத்தை அரசு போன்ற அமைப்பு அமைவதை கூறினேன்..

  இது இன்னம் வயதானவர் நோயாளிகள் சுயவாருமானமற்றோர் .. என குடுப்ப அமைப்பு தாங்கும் அனைத்தையும் சமூகமே சுமக்கவேண்டி வரும்.

  சேர்ந்திரூப்பவர் பிரியும்போது தான் தேவைப்படும்.. பிரிந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் உள்ளதா என்ன ? கருதொன்றி..காதலில் கலந்து காலம் முழுவது சேர்ந்திருப்பதையும் அவர்தம் குழந்தையை அவர்களே வளர்ப்பதையும் நானா எதிர்தேன்..?

  1970-80 களில் இன்றைய ஓல்ட் ஏஜ் ஹோம் பற்றி கூறினால் என்ன நினைத்திருப்பர்…?
  பெற்ற தாயை மகனே அனாதை ஆசிரம்த்தில் தள்ளூம் காலம் வரும் என்றால் நம்பி இருக்க முடியுமா?

  60 விவாகாத்து ஜீவனாம்சம் சமுக புரட்சி…
  80ல் புதுமை பெண் என்ற பாரதி ராஜ படத்தில் ரேவதி சந்தேகப்படும் கணவனை உதறுவது புரட்சி…. இன்றைய நிலை என்ன? விவாகரத்து சதவிகிதம் என்ன என்பதற்க்கும் லிங்க் உள்ளது …

  காலம் குரூரமானது கண்பத் அவர்களே..

  குழந்தைகாக பெண் தன் வாழ் நாளை தியாகம் செய்யவெண்டியவளாகிறாள்… அழகு இளமை, உடல் வலு எல்லாம் கொடுத்த்து..பல்லாண்டு பசி, தூக்கம் மறந்து குழந்தையை வளர்த்த வேண்டிய பொறுப்பை பெண்ணுக்கு இயற்கை அளீத்திருக்கின்றது … பிரசவமே மரணத்தை சந்தித்து வரும் மறு பிறப்பு தானே?

  இப்படி தன் வாழ்கையை பணையம் வைத்து தான் வளர்க்கும் குழந்தையை யாருக்கு பெறவேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை பெண்ணுக்கு உண்டா இல்லையா?

  குடிகாரனாக பெண் பொறுக்கியாக இருப்பவனை மணக்க நேர்ந்தாலும் .. அவனுடன் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பதும்.. அந்த கேடு கெட்ட ஜீனை கொண்டு குட்டி போட வேண்டும் என்பதும் .. அதையும் வளர்த்த்தான் ஆகவெண்டும் என்பதும் தானே.. இன்றய சமூகம்..

  இதில் பெண்ணுரிமை எங்கே அய்யா இருக்கு ? சுய சார்ப்புள்ள சிந்திக்கும் பெண் இதை ஏற்றுகொள்வாளா? இதை பற்றிய பெண்ணீன் கருத்தே பதிவாக உள்ளது..

  தன் உடல் மேல் பெண்ணுக்கு உள்ள உரிமை.. தன் வாழ்கை மேல் பெண்ணுக்குள்ள உரிமையை பெண் பயன் படுத்த கூடும் என்றவுடன் உங்களுக்கு தலை சுற்றல் வந்தால் ..
  காப்பாற்ற ஆண்டவனை கூப்பிட்டால் . நான் என்ன செய்ய முடியும் ?

  பாதிக்கபட்ட ஆண்/பெண்களிடம் உரையாடினால்.. இன்னம் சம்பந்தபட்ட வலை தளங்களை படித்தால் வாந்திபேதி வந்தாலும் வரும்

  உலக புகழ் பெற்ற டெல்லி மருத்துவ மாணவி முதல் … மும்பை பெண் பத்திரிக்கையாளார்.. நம் தூத்துகுடி பள்ளி மாணவி வரை பல ஆயிரம் பெண்கள் கற்பையும் .. உயிரையும் இழக்கும்போது ஆண்டவன் எப்படி உதவி செய்தானோ. ..

  இன்னம் சாதிய மத கொடுமையாலும்.. விலை வாசியாலும் ஆதிக்க போர்களாலும் பல கோடிமக்கள் துன்புரும்போது ஆண்டவன் எப்படி உதவி செய்தானோ….

  அதெபோல் உங்களுக்கும் உதவுன்வான் கவலை படாமல் காத்திருங்கள்….

  பின் குறிப்பு..: உங்கள் கொள்கைப்படி லிங்க் கொடுக்காமல் இருக்க முயன்றாலும்…
  நான் எழுதுவது பலதரப்பட மக்களீன் அனுபவத்தின் தொகுப்பே.. அதை விளக்க லிங்க் கொடுத்தாக வேண்டி உள்ளது…

  நான் எழூதியது நான் படித்த பார்த்த பேசிய பழகிய மக்களின் அனுபவங்களின் தொகுப்பே.. ஆனால் உங்களின் நிலைப்பட்டு நேர் எதிராக அமைந்துள்ளது..

  உங்கள் கருத்துக்கு நேர் எதிரான கருத்தையும் உங்கள் தளத்தில் அனுமத்க்கும் ஜன நாயக பண்புக்கு என் நன்றிகள்..

  உஙக்ளுக்கு பிடிக்கவில்லை எனில் லிங்க்கை டெலிட் செய்யவும்… இல்லை பதிலையே கூட டெலிட் செய்யவும்…
  நன்றி..
  வினோத்
  —————————————————————–
  முழு விவாததிற்கான சுட்டி
  http://kannimaralibrary.co.in/?p=1212

  ஆனால் இவர் நான் எதிர்பார்த்தபடியே எனது பதில்களை அழித்துவிட்டு, அவரின் நன்பரின் கிண்டலான கேள்விகளை மட்டும் வைத்திருக்கின்றார்.

 2. ஹிந்து மதத்தில் தேவதாசிகளின் உரிமை:

  இஸ்லாத்தில் நான்கு திருமணங்கள் செய்யலாம். ஆனால் ஹிந்து காபிர் திருமண சட்டத்தில் ஒருவனுக்கு ஒருத்திதான்.

  மணைவி நோயாளியாகி விட்டாலோ இல்லை எதோ காரணத்தால் அவளுடன் தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்க முடியாத நிலை வந்துவிட்டாலோ, ஒரு ஹிந்துவால் இரண்டாவது திருமணம் செய்ய முடியாது. அவருக்கு ஒரே வழி யாரையாவது வப்பாட்டியாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

  கோயில் பூசாரி, சங்கராச்சாரி போன்ற தரும நியதிகளுக்கு கட்டுப்பட்ட பிராமணரால் ஆசை நாயகி வைத்துக் கொள்ள முடியாது. தேவதாசி அமைப்பின் மூலம் தாங்க முடியாத விரகதாபத்தை கோயில் வளாகத்திலேயே தணித்துக் கொள்ள அவர்களுக்கு ஒரு வழி கிடைக்கிறது.

  தேவதாசி முறை அழிக்கப்பட்டதால்தான், நாட்டில் கற்பழிப்புக் குற்றங்கள் பெருகி விட்டன. குடும்பப் பெண்கள் தைரியமாக நடமாட வேண்டுமானால், தேவதாசிகளுக்கு சட்ட பூர்வமான பாதுகாப்பு, மாத சம்பளம், பென்ஷன், வீடு போன்றவற்றை அரசாங்கம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஹிந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை ஏற்பதை விட்டால், ஹிந்துக்களுக்கு வேறு வழியில்லை.

  காபிருக்கு காபிர் வழி, முசல்மானுக்கு முசல்மான் வழி. பிரச்னையென்ன?

 3. ஒரு மனைவியின் ஆசை சுகம் ஆகியவற்றை விட குடும்பம் என்கிற அமைப்பு வலியது.அதுபோல் ஒரு ஆணின் ஆசை சுகம் ஆகியவற்றை விட குடும்பம் என்கிற அமைப்பு வலியது.உத்தமமான குடும்ப அமைப்புதான் மனித குலத்தின் வளர்ச்சிக்கு காரணம்.குடும்பம் இல்லையெனில் நரக வாழ்க்கைதான்.ஆடிமாதம் ஒரு பெண் நாயைச் சுற்றி 15 ஆண்நாய்கள் நிற்கும்.அதுபொல் பெண்களின் வாழக்கை அமைந்து விடும்.ஆக கணவன்-மனைவி பந்தம் ஒரு தெய்வீகமானது என நம்பி நிறையவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்தார்கள். மனைவியைப் தொழில் நிமித்தம் பிரிந்து வாழும் கணவர்கள் உத்தமர்களாக மனைவிக்கு விசுவாசமாக உள்ளார்கள். மனைவி நோய்வாய்பட்டாலும் ….. மனைவியிடம் அன்பு பாராட்டி மனக்கட்டுப்பாடோடு வாழ்பவன் இந்து. காட்டறபிகளின் மதம் ” கணவனைக் கொல் மனைவியைக் கைப்பற்று” என்று கொல்லும் குரான் ……..
  ஆனாலும் இந்துக்கள் மறுதிருமணம் செய்யத்தான் செய்கின்றார்கள். இருதிருமணம் செய்திருப்பவர்கள் பலர் உள்ளார்கள்.

  நஞ்சுண்ட மூரத்திக்க பொய்களை எழுதுவதைத்தவிர வேறு வேலையில்லை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s