இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 51
அல்லாவின் தூதர்களில் இறுதியானவர் என்று கூறப்படும் முகம்மது எனும் தனி மனிதரின் குணநலன்கள் அவர் கூறிய கொள்கை குறித்தான சீர்தூக்கலில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? ஒருவர் கொண்டிருக்கும் கொள்கை நிலைப்பாடு என்பது அவர் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பொருத்தது. அதேநேரம் அதுகாறும் இல்லாத புதிய கொள்கை வடிவமைப்பை ஒருவர் செய்யும் போது அவரின் தனி மனித ஆளுமையும் அதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. இஸ்லாம் எனும் மதத்தை அலசிக் கொண்டிருக்கும் போது, அந்த மதத்தை தோற்றுவித்ததாகக் கூறப்படும் முகம்மதின் தனிப்பட்ட குணங்கள் அவசியமா? என்றால் அவசியம் என்றுதான் பதில் கூற வேண்டியதிருக்கிறது. ஏனென்றால், இன்றும் இஸ்லாமிய பரப்புரையாளர்கள், இஸ்லாம் ஒன்றே உண்மையான மதம் என்பதற்கு முகம்மது தாம் வாழ்ந்த காலத்தில் உண்மையாளர் என்று பெயரெடுத்திருந்தார், அந்த உண்மையாளர் கூறிய ஒன்று எப்படி பொய்யாக இருக்க முடியும்? என்றொரு கேள்வியை முன்வைக்கிறார்கள். எனவே, இஸ்லாம் எனும் மதம் குறித்து ஆராயும் போது அதன் தொடக்கப் புள்ளியாக கருதப்படும் முகம்மதின் தனி வாழ்வும் தவிர்க்கவியலாமல் அதில் அங்கமாகிவிடுகிறது.
முகம்மது தன் சமகால மக்களால் நேர்மையாளர் உண்மையாளர் என்று புகழப்பட்டார் என்பதற்கு இரண்டு ஆதாரங்களை எடுத்து வைக்கிறார்கள் மதவாதிகள். முதலாவது, புஹாரியில் 7 வது ஹதீஸாக இடம் பெற்றிருக்கிறது. ரோமாபுரி மன்னனான ஹெர்குலிஸ் சிரியாவின் வணிகக் குழுவிலுள்ளவர்களை அழைத்து முகம்மது குறித்து விசாரித்து அறிந்து கொள்வது போல் இருக்கிறது அந்த ஹதீஸ். அபு சுஃப்யான் என்பவர் ஹெர்குலிஸின் கேள்விகளுக்கு அவர் அதாவது முகம்மது பொய்யே சொல்லாதவர்.உண்மையாளர், நேர்மையாளர், செய்த சத்தியத்தை மீறாதவர் என்றல்லாம் பதிலளிக்கிறார். இரண்டாவது ஆதாரம் முஸ்லீமில் 355 ஆவது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முகம்மது மக்காவில் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காலத்தில் உறவினர்களை ஒன்று கூட்டி அந்த மலையின் மறுபக்கம் குதிரை வீரர்கள் உங்கள் மீது போர் தொடுக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா? என்று வினவுகிறார். அதற்கு அந்த மக்கள் உங்களிடம் நாங்கள் எப்போதும் ஒரு பொய்யையும் கூறக் கேட்டதில்லை என்று பதில் கூறியதாக அந்த ஹதீஸில் காணப்படுகிறது. இந்த இரண்டு ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு தான் முகம்மது அவரின் சமகால மக்களால் பொய்யே பேசாதவராக, நேர்மையாளராக புகழப்பட்டார் என்கிறார்கள். அதைக் கொண்டு இவ்வாறு நேர்மையாக இருந்தவர் இறைவன் மீது பொய் சொல்லி தன் வாக்கை இறைவனிடமிருந்து வந்தது என்று துணிந்து கூறுவாரா? என்று கேட்கிறார்கள்.
இவைகள் ஹதீஸ்கள், அதாவது முகம்மது இறந்து இரண்டு நூற்றாண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டவை. ஆனால் முகம்மது இறந்து பதினைந்து ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டதாக கூறப்படும் குரான் இவைகளுக்கு நேர் எதிராக முகம்மது பொய் சொல்பவர் இட்டுக்கட்டுபவர் என்று அந்த மக்கள் கூறியதாக பதிவு செய்திருக்கிறது.
உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு உங்களது செயல் உங்களுக்கு; நான் செய்வதை விட்டு நீங்கள் விலகியவர்கள் நீங்கள் செய்வதைவிட்டு நான் விலகியவன் என்று கூறுவீராக. குரான் 10:41
.. .. .. நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தாம் என்றும் கூறுகின்றனர். குரான் 15:6
இன்னும் இது பொய்யன்றி வேறில்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் .. .. .. குரான் 25:4
அதாவது தன்னைப் பற்றி தன்னுடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதை முகம்மது தன்னுடைய சொற்களாலேயே கூறியது தான் குரான் வசனமாக இருக்கிறது. அதில் பொய்சொல்பவர், இடூக் கட்டுபவர், பைத்தியக்காரர் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் குரான் வசனங்களுக்கு மாற்றமாக முகம்மதை அவரின் சமகாலத்தவர்கள் நேர்மையாளர் என்று கூறியதாக ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு பரப்புரை செய்துகொண்டிருக்கிறார்கள். அது மட்டுமன்றி எந்த ஒரு ஹதீஸாவது குரான் வசனம் கூறும் செய்திக்கு மாற்றமாக இருந்தால் அது முறையான அறிவிப்பாளர் வரிசையுடன் இருந்தாலும் அதை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று புறந்தள்ள வேண்டும் என்றும் இதே பிரச்சாரகர்கள் தாம் கூறித் திரிகிறார்கள்.
இதுமட்டுமா, ஒருவரை கொல்வதற்கு திட்டம் தீட்டி, அதற்காக பொய் சொல்வதற்கு அனுமதித்த செய்தி ஹதீஸில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கஅப் இப்னு அஷ்ரப் என்பவர் தன்னுடைய உரைகள் மூலம் முகம்மதுவுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வருகிறார். எனவே தன் சீடர்களுடன் கூடி இருக்கையில் யாரேனும் அவரைக் கொல்ல முடியுமா என்று கேட்கிறார் முகம்மது உடனே முகம்மது இப்னு மஸ்லமா எனும் சீடர் தாம் கொல்வதாக முன்வருகிறார். அப்படி கொல்லச் செல்லும் போது அஷ்ரபை நம்பவைப்பதற்க்காக பொய் சொல்லிக் கொள்ளலாமா என்று கேட்கிறார். அதற்கு முகம்மது அப்படியே செய்து கொள் என்று அனுமதிக்கிறார். இது புஹாரியில் 4037 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தான் ஒரு சத்தியம் செய்துவிட்ட பின்பு அதைவிட சிறந்ததாக ஒன்றைக் கண்டால் செய்யப்பட்ட சத்தியம் குறித்து கவலைப்படாமல் சிறந்ததையே செய்வேன் என்று புஹாரி 6721 ல் தன்னைப்பற்றி விவரிக்கிறார் முகம்மது. அதுமட்டுமின்றி அவ்வாறு சத்தியத்தை முறிப்பதற்கு அல்லா தனக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் குரானில் சொல்லியிருக்கிறார் முகம்மது. இது குரான் 66வது அத்தியாயத்தில் இரண்டாவது வசனமாக இருக்கிறது. இன்னும், செய்த சத்தியத்தை முறிக்க வேண்டிய தேவை வந்தால் பரிகாரம் செய்து விட்டு முறித்துக் கொள் என்று புஹாரி 6722 ல் பிறருக்கு அனுமதியும் அளிக்கிறார். புஹாரி 520 முகம்மதை முகஸ்துதி விரும்புபவர் என்று மக்காவாசிகள் அழைத்ததாக குறிப்பிடுகிறது.
தன்னை விமர்சிப்பவர்களை தன் சீடர்களைவிட்டு கொலை செய்திருக்கிறார் என்பதை புஹாரி 4037ல் கண்டோம். அதேபோல் முகம்மது எவ்வளவு கொடூரமாக சித்திரவதை செய்திருக்கிறார் என்பதைப் பார்க்கலாமா? சிலர் முகம்மதுவிடம் வந்து தாங்கள் முஸ்லீம்களாக மாறப் போவதாக நடித்து ஒட்டகக் காவலரைக் கொன்றுவிட்டு ஒட்டகங்களைத் திருடிச் சென்று விடுகிறார்கள். அவர்களைப் பிடித்து வந்து முகம்மது கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா?
.. .. .. அவர்களின் கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடு போட்டார்கள். அவர்களின் கை கால்கள் வெட்டப்பட்டு ஹர்ரா பகுதியில் விடப்பட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டு போயினர் .. .. .. புஹாரி 4192
இதில் இன்னும் கொஞ்சம் விளக்கமாக புஹாரி 233 ல் அவர்கள் பாலைவன பாறைகளில் போடப்பட்டார்கள் என்றும் தண்ணீர் கேட்டு கதறினார்கள் என்றும் சாவது வரை சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கிறது.
ஆக, முகம்மது அந்த நேரத்தின் மனிதர்களைப் போல எந்த சிறப்பியல்களும் இல்லாத ஒரு சாதாரண மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறது. அதிகாரம் இல்லாதவரை சாதாரண மனிதராக இருந்திருக்கும் முகம்மது அதிகாரம் வந்த பின்போ ஒரு இரக்கமற்ற சர்வாதிகாரிக்கே உரிய கொடூரத்துடன் விமர்சிப்பவர்களை கொலை செய்வதும், மிகக் கொடுமையாக சித்திரவதை செய்வதுமாக இருந்திருக்கிறார். இப்படி வெகு சாதாரணமாகவும் மிகக் கொடூரத்துடனும் நடந்து கொண்ட ஆண்டான் அடிமைக் காலத்து இந்த மனிதர்தான் இனி உலகில் தோன்றப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரி என்றால் அதை என்னவென்பது. இன்று மதவாதிகளால் முகம்மதின் மீது விதந்தோதப்படும் அத்தனை நற்குணங்களும், ஒன்று சாதாரணமாக மனிதர்களுக்கு இருக்கும் நல்ல குணங்களை ஊதிப் பெருக்குவதாக இருக்கிறது. இரண்டு, இல்லாதவற்றை பீஜப்படுத்தி காட்டுவதாக இருக்கிறது. இந்த இரண்டையும் நீக்கி விட்டால் முகம்மதிடம் எஞ்சியிருப்பது எதுவுமில்லை.
புகழ்மிக்க ஆனால் வறிய குடும்பத்தில் பிறந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து; ஒரு செல்வச் செழிப்புமிக்க விதவைப் பெண்ணை மணந்ததன் மூலம் இளமையில் திடீரென பெரும் செல்வத்திற்கு சொந்தக்காரனாகி அதன் விளைவால் அரசியல் தலைவானாக ஆசைப்பட்டு; பிறந்த ஊரில் இயலாமல் வாய்ப்பு கிடைத்த இன்னொரு ஊரில் குடியேறி தனக்கென பின்பற்றும் கூட்டத்தை உருவாக்கி, ஓர் அரசை ஏற்படுத்தி வணிக வண்டிகளை சூறையாடி அந்த அரசை பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் பலம் மிக்கதாக்கிய ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த மனிதனின் வாழ்வில் உலக மக்களை வாழும் எல்லாக் காலத்திலும் உய்விக்கும் கொள்கை என்று ஏதேனும் இருந்துவிட முடியுமா? முடியாது என்பது வரலாறு நமக்கு காட்டும் பாடம். ஆனால், மதவாதிகள் கற்பதில் அல்ல, பிறருக்கு கற்பிப்பதை மட்டுமே செய்யக் கூடியவர்கள் என்பதால் அவர்களை விலக்கிவிட்டு பயணிப்பதே பொருத்தமானது. என்வே, முகம்மதின் வாழ்வில் நடந்த மேலும் சிலபல சம்பவங்களினூடாக இன்னும் அவரின் இயல்புகளை தெரிந்து கொள்ளலாம்.
இத்தொடரின் முந்தைய பகுதிகள்
50. முகம்மது அனுப்பிய கடிதங்கள் மதமா? ஆட்சியா?
49. முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?
48. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2
47. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1
46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை
45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்
44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்
43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3
42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2
41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1
40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்
39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை
38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து
37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை
36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா
35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4
34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3
33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2
32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1
31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்
30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்
29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா
28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?
27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்
26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்
25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா
24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?
23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா
21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?
20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?
19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?
18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்
17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்
15. விந்து குறித்த குரானின் விந்தைகள்
14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்
13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்
12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.
11. குரானின் மலையியல் மயக்கங்கள்
10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?
8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்
7. குரான் கூறுவது அறிவியலாகுமா?
6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.
5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.
4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?
2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்
1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….
ஒரு சில வருடங்க்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் இப்போதுதான் இசுலாமின் உண்மை முகத்தை தொ¢ந்து கொண்டு உள்ளனர் நானும் இசுலாமிற்கு மாற எண்ணி இருந்தேன் ,இசுலாமிய பரப்புரையாளர்கள் முகமதை மிகவும் நல்லவராக சித்தா¢க்கிரார்கள் சிறு புத்தகங்களை மட்டும் குடுக்கிறார்கள் குரான் ஹதிஸ் புத்தகங்கள் இசுலாமிய பரப்புரையாளர் களிடம் கூட தமிழில் இல்லை உண்மை இசுலாமை அறிய இவைகள் எனக்கு தேவை நூலகங்களில் தேடி பார்த்து சலித்து விட்டேன் எனவே குரான் ஹதிஸ் புத்தகங்கள் கிடைக்கும் இடங்களை தொ¢யப்படுத்த வேண்டுகிறென் உங்களிடம் சாப்ட் காபி இருந்தால் தந்து உதவுங்கள்
நான்கூட இஸ்லாமிய நண்பர்களிடம் விவாதிக்கும்போது படமுகமது மக்களுக்கு நல்வழி காட்டவந்த மகான் மட்டுமே இறைத்தூதர் அல்ல என்கிற ரீதியில் வாதிட்டு வந்தேன்.ஆனால் உண்மை வேறவிதமாக உள்ளதே?
உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்துவருபவன் நான். உங்களை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. முஸ்லிம்களின் பொய்களையும் அவர்களின் சிறுபிள்ளைதனமான வாதத்திற்கு மரண அடி செருப்படி சவுக்கால் அடி கொடுக்குகிறிர்கள்( எங்கையோ அடிக்கடி கேட்ட மாதிரி இல்ல ?) உங்களிடம் அவர்கள் கருத்து மோதல் சைய்வதை அழகாக தவிர்க்கிறார்கள். ஏனென்றால் முகமதுவின் டவுசர் அவிழ்ந்து விடும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். இன்னைக்கு பொதுவாக முஹம்மதுவை பற்றி யாரிடும் கேட்டாலும் சர்வ சாதரணமாக . அவன் ஒரு பெண் பித்தர்,பாலியல் வல்லுறவுகாரர் கொலைகாரன் கொள்ளைக்காரன் என்று பெரும்பாலோர் உடனடியாக கருத்து சொல்லும் நிலை தற்போது சர்வ சாதரணமாக உள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம்கள் மிக மிக சிறுபான்மையாக இருக்கும் நாட்டில் இடத்தில் கூட முகம்மதுவை விமர்சிப்பது என்பது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத விசியம். வெகுண்டு எழுந்துவிடுவார்கள். மிக கடுமையான எதிர்ப்பு சமாளிக்கமுடியாத அளவு இருக்கும். மீண்டும் அதை பற்றி சிந்திக்க முடியாத அளவுக்கு செய்துவிடுவார்கள். ஆரம்பகால இணையதள முகம்மதுவின் விமர்சனகளின் பொழுது முஸ்லிம்களின் அதிகமான கமெண்ட்ஸ் வரும் (எதிர்ப்பும்,கொலை மிரட்டலும்) அனால் அதை மீறி நிறைய கட்டுரை கள் எழுதி எழுதி அவர்களை சகிக்புதன்மை உள்ளவர்களாக ஓரளவு மாற்றியது நன்மையான விசியமே. இன்று அவர்கள் பெரும்பாலும் இத்தகைய விமர்சனங்களை கண்டும் கானதவர்களாக இருக்கிறார்கள். இன்று எனது முஸ்லிம் நண்பர்களிடம் அவருடைய பாலியல் வல்லுறவு மற்றும் கொலை கொள்ளை பற்றி தைரியமாக பேசமுடிகிறது. அவர்களும் ஏதோ இது யூத சதி என்று மதரசாவில் சொல்லி கொடுத்ததை சிறுபிள்ளை வாதம் பேசி நழுவி கொள்கிறார்கள். ஆனால் பெரியதாக கோவித்து கொள்வதில்லை. இதற்கெல்லாம் காரணம் உங்களை போன்ற தைரியமானவர்கள் மிரட்டலுக்கு பயப்படாமல் தொடர்ந்து எழதி எழுதி முஸ்லிம்களை களைப்படைய செய்து சகஜமாக்கி சைய்துவிட்டிர்கள் தொடர்ந்து எழுதி கொண்டே இருங்கள் .
செங்கொடி,தஜ்ஜால்,ஆனாந்சாகர்,பகடு உங்கள் பணி தொடரட்டும். முஸ்லிம்களிடம் சகிப்புதன்மை வளரட்டும்.
இயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே
http://pagadhu.blogspot.in/2014/03/blog-post_9.html
ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும்
http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_25.html
முகம்மது குரூரமான தண்டனைகள் கொடுத்து ரசித்துப்பார்த்த நிகழ்வுகள் நிறைய உண்டு. அதனால்தான் இசுலாமியர்கள் கல்லெறி தண்டனைகளை கொஞ்சமும் மன சஞ்சலமில்லாமல் பார்த்து ரசிக்கின்றனர். தங்களுக்கு அவ்வாறு நிகழ்த்தப்பட்டால் மட்டுமே ஜனநாயகம் பேசுகின்றனர். இவர்களின் மன வக்கிரத்திற்கு இன்னொரு சான்று இவர்கள் ஹிட்லரை ஆதரிப்பதுதான். சுரை போட்டால் பூசனி முளைக்காதுதானே.
நண்பர்,
செங்கொடிக்கு வணக்கம்
உங்களின் கட்டுறை மிக அருமையாக
உள்ளது.
இஸ்லாம் மதம் பற்றியும் , முகமது நபி பற்றியும் உங்களின் ஆய்வுக் கருத்தை மிகவும்நாகரீகமாகவெளியிடுகின்றீர்கள் .ஆனாம் உ
நண்பர்,
செங்கொடிக்கு வணக்கம் தங்களின் இஸ்லாம் , முகமது நபி பற்றிய ஆய்வும் அதை நாகரீகமாக வெளியிடும் விதமும் மிகவும் அருமை. ஆனால் இதனை மிக கடுமையாக எதிர்க்கும் சில நண்பர்களை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. என்ன செய்வது இது மனித குலத்தின் தீராத சாபம் . நாம் எவ்வாறு வாழ வேண்டும் ?, நமக்கான சட்டங்கள்? இவை எல்லாம் இறைவன் பெயரால் இருந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், அதில் உள்ள தவறை யாராவது சுட்டி காட்டினால் அவர்களோடு மல்லுக்கு நிற்பதை பார்க்கும் போது ஒன்று மட்டும் நிச்சயம்
மனிதர்களுக்கு மதம் பிடிக்கவில்லை மதம்புடிச்சிருக்கு.
முகம்மது செய்த 13 கல்யாணத்தில் அவரால் தொடமுடியாமல் விடுப்பட்ட பெண். அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபிகள் அவர்கள் நுழைந்து உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்! என்று நபிகள் கூறினார்கள். அந்தப்பெண் ஓர் அரசி. தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபிகள் அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவள் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினாள்.நபிகள் அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். புகாரி Volume:6 Book:68. நபிகள் அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபிகள் அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் நபிகள் அவர்கள் கட்டளையிட்டார்கள். புகாரி Volume:6 Book:68 . இவர் மக்களுக்கு ஒரு முன் மாதிரியா? வெட்கம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு மூன்றும் செய்தவர். இதில் பெண் கொள்ளை தான் பிரபலம். அடுத்தவனை கொன்று அவன் மனைவியை கற்பழித்தவன் இறைதூதனா?
ஒரு இறை(??)தூதரின் 13 பொண்டாட்டிகள். இஸ்லாமியர்களின் அம்மாக்கள். 1) கதிஜா பிந்த் குவைலித்:- முகம்மது நபி தன்னுடைய 25 ஆவது வயதில், பணத்துக்காக, 40 வயதான, முன்பு இரண்டு பேரை கல்யாணம் செய்த, கதிஜாவை திருமணம் செய்தார். 2) சௌதா பிந்த் சாமா:- கதிஜாவின் மரணத்திற்கு பின்பு 50 வயதான, இந்த விதவையை நபி திருமணம் செய்தார். 3) ஆயிஷா பிந்த் அபுபக்கர்:- முகம்மது நபி ஆயிஷாவை கல்யாணம் செய்யும் போது வயது 6. அவள் 9 வயது குழந்தையாக இருக்கும் போது, பருவமடையா ஆயிஷாவை, நபி கெடுத்து குடும்பம் நடத்தினார். அந்த சமயம் முகம்மதுவின் வயது 52. 4) ஹப்சா பிந்த் உமர்:-
முகம்மது இவளை திருமணம் செய்யும் போது, இவளுக்கு வயது 20, நபிக்கு 56. 5) ஸைனப் பிந்த் குசைமா:- நபி கட்டும் முன்பு மூன்று பேரை கட்டியவள். நல்ல அழகி. 6) உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா:- உஹுத் கொள்ளையில் இவளுடைய கணவன் மரித்த பின்பு, நபி இவளை திருமணம் செய்யும் சமயம் இவளுடைய வயது 29. நான்கு குழந்தைகளின் தாய். 7) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்:- முகம்மது மகனின் மனைவி. அவள் அழகை கண்டு மயங்கி, மகனை விவாகரத்து செய்ய வைத்து, இவளை திருமணம் செய்து அபகரிக்கிறார். 8) ஜுவைரியா பிந்த் ஹரித்:- இவள் தந்தை ஹாரித் பானு முஸ்தலிக் இனத்தின் தலைவன். இவள் கணவன் முஸாபிஃ பின் ஸஃப்வானை, கொன்று, அவளின் தாலி அறுத்து, நபி கட்டிக்கொண்டார். இவளுக்கு வயது 20, முகம்மது நபிக்கு வயது 58. 9) ரம்லா பிந்த் அபி சுபியான்:- இவள் குறைஷி இன தலைவன் அபு சுயிபானுடைய மகள். இவளின் முதல் கணவன் பெயர்: உபய் துல்லா இபின் யாஷ். இவளுக்கு வயது 35, முகம்மது நபிக்கு வயது 60. 10) ரெய்ஹானா பிந்த் சாயத்:- யூத பானு குரைய்ஸா ஜாதியை படுகொலை செய்த பின்னால், முகம்மது இவளை வைப்பாட்டியாக வைத்துக்கொண்டார். 11) சபியா பிந்த் ஹீயாய்:- நபியின் கைபர் கொள்ளையில், அவள் யூத அப்பனை கொன்று, கணவனை கொன்று, செல்வத்தை கொள்ளையடித்து, இவளை திருமணம் செய்கையில், இவள் வயது 17. நபி 60 வயது கிழவன். 12) மைமுனா பிந்த் அல் ஹரித்:- முகம்மதுவினுடைய 60 ஆவது வயதில், 36 வயதான இவளை திருமணம் செய்து கொண்டார். 13) மரியா அல் கிபித்தியா:- எகிப்திய மன்னனுக்கு இப்ராஹிம் என்கிற ஒரு குழந்தையைப் பெற்று கொடுத்து விட்டு, நபியை கட்டிக்கொண்டாள். இன்னும் கணக்கில் வராத பல உண்டு. என்னை பொறுத்தவரையில் முகம்மது இறை தூதர் இல்லை. காமதூதர் எனலாம். பல பெண்களுடன் கூத்தடித்தவரை மக்கள் பின்பற்றினால் நாடு தாங்குமா? கூத்துதான்!!! இன்றே திருந்துங்கள்!!!
திரு. செங்கொடி அவர்களே! இன்றுதான் உங்களின் கட்டுரையை காண முடிந்தது. அதில் உங்களை இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள முற்பட்டிருக்கும் நீங்கள் தெளிவாக படிக்கவில்லை என்பது உங்களின் வரிகளில் நன்றாக விளங்குகிறது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மலைமீது ஏறி நின்று கொண்டு “இந்த மலைக்கு பின்புறத்தில் ஒரு பெரிய கூட்டம் உங்கள் மீது போர் தொடுக்க வருகிறது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டபொழுது வரை மக்களிடம் பொது இடத்தில் நின்று கொண்டு “ஒரு இறைவனை வணங்க வேண்டும், சிலை வணக்கம் செய்யக்கூடாது” என்று பிரச்சாரம் செய்யவில்லை. எனவேதான் மக்கள் ” ஆம், நாங்கள் நம்புவோம். ஏனென்றால் நீங்கள் பொய் பேசி பார்த்ததே இல்லை ” என்று மக்கள் கூறினார்கள். அப்படி என்றால் 40 வருடங்களாக ஒரு மனிதர் பொய்யே பேசவில்லை என்று பொது மக்களே CERTIFICATE கொடுக்கிறார்கள் நீங்கள் உண்மையாளர் என்று. அடுத்த நிமிடமே முஹம்மது நபி (ஸல்) சொல்கிறார்கள் “அப்படியென்றால், தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள் இறைவன் ஒருவனே! (சிலைகளை வணங்ககூடாது, பல கடவுள்கள் இல்லை) நான் இறைவனது தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன்” என்று கூறினார். இந்த வார்த்தைகளை கூறிய பிறகுதான் மக்கள் கோபம் கொண்டு கூறுகின்றனர். அதாவது அவர்கள் காலம் காலமாக நம்பிக்கையில் ஊறி திளைத்த கொள்கை தவறு என்று சொன்ன உடனே முஹம்மது நபி (ஸல்) அவர்களை திட்டுகின்றனர். பைத்தியக்காரர் என்கின்றனர். நீங்கள் கூறும் குர்ஆன் வசனம் கூட “முஹம்மது தன்னை இறைதூதர் என்று பொது பிரகடனம் செய்த பிறகுதான்”. இந்த சிறு விளக்கம் கூட புரியாமல் நீங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை எந்த வகையில் குறை கூறுகிறீர்கள். இஸ்லாம் மீது உங்களுக்கு இயல்பிலேயே வெறுப்பு உள்ளதா? மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்.
வரதட்சணை வாங்கி திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்களிடையே நீங்கள் திடீரென்று சென்று வரதட்சணை வாங்கி திருமணம் செய்யாதீகள் என்று சொல்லி பாருங்கள் உங்களை என்ன என்னவெல்லாம் சொல்லி திட்டுவார்கள், கிண்டலடிப்பார்கள் என்று தெரியும். இது வாழ்க்கையின் ஒரு ஒரு பகுதி நிலைமைக்கே இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்க்க வேண்டும் என்றால், முஹம்மது நபி (ஸல்) மக்களின் அடி வேறான நம்பிக்கையையே அடியோடு பிடுங்கினார் (அதாவது சிலை வணக்கம் கூடாது, ஒரு இறைவனை வணங்க வேண்டும் என்று). அந்த மாமனிதர் என்னென்ன சுடுசொற்களை தாங்கி கொண்டு பிரச்சாரம் செய்திருப்பார் என்று சற்று யோசித்து கட்டுரையை எழுதி இருக்க வேண்டும்.
மேலும், சில கொடூர செயல்களை நபி (ஸல்) செய்ததாக சில யூதர்கள் ஹதீஸ்-களில் பொய்யாக இட்டுக்கட்டி இடை சொருகல் செய்தனர் அதில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் சம்பவம். தயவு செய்து பொய்களை உண்மையாக காட்ட முயற்சிக்க வேண்டாம்.
நண்பர் வாசிம் முகம்மது,
அது எப்படி நாற்பதாண்டு காலம் நல்லவராக உண்மையாளராக இருந்த ஒருவரை ஓரிறையைச் சொன்னார் என்றவுடன் பொய்யர் பைத்தியக்காரர் என்று கூறி விடுவார்களா? ஓரிறை என்பது முகம்மது முதலில் சொன்னதும் இல்லை முகம்மதுவுக்கு முன்பே மக்காவில் புழக்கத்தில் இருப்பது தான். எந்த அடிப்படையில் அந்த ஹதீஸ்களை யூத இட்டுக் கட்டல் என்கிறீர்கள்? இப்படி மதவாதிகள் கூறுவதை கிளிப்பிள்ளை போல் ஒப்புவிப்பதற்குப் பதிலாக கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
நண்பர் செங்கொடி அவர்களே! தாங்கள் என்னிடம் 2 கேள்விகள் கேட்டுள்ளீர்கள். அந்த கேள்விகளை வைத்தே நீங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை மட்டும் அல்ல அன்றைய அரபு தேச மக்களின் வாழ்க்கை வரலாறு கூட தெளிவாக படிக்கவில்லை என்று புரிகிறது. குறை காணும் எண்ணத்தில் மட்டுமே படித்தீர்களோ என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.
கோபப்பட வேண்டாம் சகோதரரே, நண்பரே! ஏனென்றால் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையே ஓர் இறை கோட்பாடு-தான். குர்ஆன் முழுவதும் நீங்கள் படித்துப்பார்த்தால் தெரியும்.
விஷயத்திற்கு வருவோம். உங்களின் முதல் கேள்வி – அதெப்படி 40 வருட காலங்கள் ஒரு மனிதரை நல்லவர் என்று போற்றிவிட்டு திடீரென ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் பைத்தியக்காரர் என்று தூற்றுவர்? இதற்க்கு நமது வாழ்க்கையை உதாரணமாக கொண்டுதான் பதிலளிக்க முடியும். எடுத்துக்காட்டாக, நான் சிறு வயது முதல் 18 வயது வரை தர்ஹா வழிபாட்டில் அதாவது இறந்து போன ஒரு மனிதரின் கல்லறையில் கட்டிடத்தில் நின்று கொண்டு அவர் நமக்கு கேட்டதெல்லாம் கொடுப்பார் என்ற நம்பிக்கை கொண்டிருந்தேன். என் பெற்றோர் வழியாக இந்த நம்பிக்கை என் மனதில் குடிகொண்டு இருந்தது. ஆனால், என்னுடைய 19-ஆவது வயதில் தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் படிக்க நேர்ந்தபோதுதான் தெரியும் இறந்த மனிதரிடம் துஆ செய்யக்கூடாது. அது மிகப்பெரிய பாவம். அது மூட நம்பிக்கை. இது முஸ்லிம்களிடம் (குறிப்பாக இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,ஸ்ரீலங்கா வாழ் முஸ்லிம்களிடம்) குடியேறிய ஒரு அர்த்தமற்ற பழக்கம். தர்ஹா வழிபாட்டிற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று தெளிவாக உணர்ந்தேன். அதை என் பெற்றோரிடம் சொன்னபோது எனது தாயார் ஒப்புக்கொண்டார். தர்ஹா-வுக்கு போவதை நிறுத்திக்கொண்டார். ஆனால், எனது தகப்பனாரோ என்னை எவ்வளவு திட்டினார், ஏசினார், இன்றளவும் எவ்வளவு இழி சொல்லுக்கு ஆளாகுகிறேன். நாகூர், ஏர்வாடி இன்னபிற ஊர்களில் உள்ள எந்த தர்ஹா-வுக்கும் போக கூடாது என்றும் அங்கே தாயது விற்பார்கள் அதை கட்டி கொண்டால் எந்த நோயும் போய்விடும், எந்த பேய் பிசாசும் அண்டாது என்றும் கூறுவார்கள் அதை எல்லாம் நம்பக்கூடாது என்று விளக்கியபோது எவ்வளவு நக்கல், நையாண்டி, சுடுசொல் கேட்டேன். நான் மட்டுமல்ல, எனது இரு நண்பர்கள் இதே பிரச்சாரத்தை பள்ளிவாசலில் நின்று முஸ்லிம்களிடம் செய்தபோது அவர்களை அடித்து துவைத்துவிட்டார்கள். வயிற்றிலேயே மிதித்தார்கள். அதற்காக காவல்துறையிடம் கூட புகார் அளிக்கப்பட்டது. இன்றுவரை, பள்ளிவாசலில் நோன்பு காஞ்சி காய்ச்சும்போது எங்களுக்கு கொடுக்க மாட்டார்கள். வரதட்சணை வாங்கி திருமணம் செய்யாதீர்கள், பெண்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்று சொன்னோம். வரதட்சணை முஸ்லிம் வாங்ககூடாது என்ற காரணத்தினால் இன்று வரை எங்களுக்கு பள்ளிவாசல் register புக் (தப்தர்) தரமாட்டார்கள். எதற்கும் பின் வாங்கவில்லை. கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றோம். இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் மக்களுக்கு சொன்னோம். பிரசாரத்தை அதிகப்படுத்தினோம். இன்று விளங்கி இஸ்லாத்தை ஏற்று நிறைய பேர் உள்ளனர். இன்றும் நீங்கள் எங்கள் ஊர் வந்தால் எங்கள் நிலைமையை நீங்கள் காணலாம். ஏன்? எதற்காக? ஒரே காரணம் “மக்கள் ஒரு கொள்கையில் ஊறி திளைத்திருக்கும்போது அதை தவறு என்று சொல்லும்போது பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.” ஏன் பெரியாரை செருப்பால் அடித்தார்கள்? சுடுசொல், இழிசொல், இன்னல் நேரத்தான் செய்யும். அதைப்போலவே பெரியார்தாசன் என்றழைக்கப்பட்டவர் அப்துல்லாஹ்-வாக மாறியபோது கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டார். இவையெல்லாம் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் சொல்லெனா துயரங்களை அனுபவித்ததும், அவரை மக்கள் திட்டி தீர்த்ததும், இன்றளவும் உங்களை போல சிலர் அம்மாமனிதரை கொச்சைபடுத்துவதும் அவர் சொன்ன கொள்கை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற காரணமே!. மக்கா வெற்றிக்கு பிறகு கஆபா ஆலயத்தில் இருந்த 360-க்கும் மேற்பட்ட சிலைகளை உடைத்து வெளியில் தூக்கி எறிந்தார்கள் முஹம்மது நபி அவர்கள் என்பதிலிருந்தே அரபு மக்கள் அன்றைய தினம் சிலைவனக்கத்தில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவில்லையா? உங்களின் இரண்டாவது கேள்வி – ஹதீஸ்-களில் யூதர்களின் ஊடுருவல் என்பதற்கான ஆதாரம் கேட்டுள்ளீர்கள். ஒன்றல்ல நிறைய ஆதாரம் உண்டு. அலுவல் காரணமாக ஒன்றிரண்டு மட்டும் தற்சமயம் எழுதுகிறேன். குர்ஆன்- இல் யூதர்களால் கையாடல் புகுத்த முடியவில்லை. காரணம் கலிபாக்கள் காலத்திலேயே குர்ஆன் மனப்பாடம் செய்த பலர் அது கொஞ்சமோ, நிறையவோ பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள். அவர்கள் தாங்கள் கற்றதை மக்களுக்கு அப்படியே சொல்லியும் கொடுத்தார்கள். 4 கலீபாக்கள் ஆட்சிக்காலம் வரை யூதர்களுக்கு முஸ்லிம்களின் கொள்கையில் கை வைக்கும் எண்ணம் வரவே இல்லை. முஸ்லிம்களை பிரித்தார்கள். முஸ்லிம்களுக்குள் சண்டை வர மறைமுக காரணமாக இருந்தார்கள். மற்றபடி இஸ்லாமிய கொள்கையில் குளறுபடி செய்ய அவர்களுக்கு எண்ணம் தோன்றவில்லை. இஸ்லாம் வளர்ந்தது. கலீப்ஹாக்கல் காலம் முடிந்தது. இஸ்லாம் வளர்ந்தது. இதே நிலை நீடிப்பதை யூதர்கள் விரும்பவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது அவர்களுக்கு தோன்றிய எண்ணம்தான் ஹதீஸ்-இல் கைவைப்பது. ஏன் குர்ஆனில் கைவைக்க முடியவில்லை இன்றளவும் என்றால் இதன் பாதுகாப்பை இறைவன் பொறுப்பேற்றுள்ளான் என்கின்ற காரணம் அதன் வடிவம் அப்படியே மக்களுக்கு கிடைத்தது. ஹதீஸ்-இல் யூதர்கள் கையாடல் கொஞ்சம் கொஞ்சமாக புகுந்தது. அதன் விளைவாக அவர்கள் ஹதீஸ்களில் புகுத்திய ஒன்று “முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது” என்ற ஹதீஸ். இஸ்லாம் சூனியத்தை இல்லை என்று கூறுகிறது. என்னை மதவாதிகள் சொல்வதை அப்படியே கேட்டு பேசாதீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். வகுப்பறையிலும் சரி, பிறரிடத்தில் பழகும்போதும் சரி ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வியை கேட்பேன். குருட்டாம்போக்கில் எதையும் நம்பும் பழக்கம் என்னிடம் இல்லை. ஏர்வாடி தர்ஹாவில் மனநிலை சரி இல்லாதவர்களை கட்டி போட்டு சித்ரவதை செய்வதையே எதிர்ப்பவன் நான். தவறு எது? சரி எது? என்று படித்து புரிந்து விளங்கும் அறிவு என்னிடம் உள்ளது. உங்களிடம் நான் கேள்வி கேட்பதும், உங்களுக்கு விளக்கம் கொடுப்பது அந்த அறிவைகொண்டுதான் என்பது விளங்கும் என்று நினைக்கிறேன். உங்களின் இஸ்லாம் குறித்த அனைத்து தலைப்புகளின் கட்டுரைகளையும் அலுவல் பனி காரணமாக கொஞ்சம் கொஞ்சமே வாசிக்க முடிகிறது. படித்த சில விஷயங்களுக்கு பதிலளிக்க முடிகிறது. இன்ஷா அல்லாஹ் ஒய்வு நல்லபடியாக கிடைக்கும்போது உங்களின் அனைத்து கட்டுரைகளையும் நிதானமாக, பொறுமையாக படிப்பேன். உங்களின் அறியாமையை உங்களுக்கே புரியவைப்பேன் இன்ஷா அல்லாஹ். நண்பரே! உங்கள் மனம் புண்படும்படி இவ்விளக்கத்தில் ஏதேனும் எழுதி இருந்தால் மன்னிக்கவும். அழகிய விவாதம் பண்ணவே நான் விரும்புகிறேன்.
நல்லது நண்பர் வாஸிம்,
உங்களுக்கு தரப்பட்ட கதைகளை உண்மை என நீங்கள் நம்பிக் கொண்டிருப்பதை நான் ஒன்றும் செய்து விடவியலாது. ஏன் இப்படிக் குறிப்பிடுகிறேன் என்றால் நான் கேட்டிருந்த கேள்விக்கும் உங்களின் பதிலுக்கும் இடையிலுள்ள இடைவெளியை கொஞ்சம் நிதானமாக படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தவிரவும் நீங்கள் விவாதம் செய்யும் முடிவுடன் இருந்தால் தயவு செய்து பரிசீலித்துப் பார்க்கவும்.
நண்பர் திரு. செங்கொடி அவர்களே! கி.பி 571 -ஆம் ஆண்டு பிறந்து தனது 63-ஆம் வயதில் மரணித்த ஒரு மாமனிதரின் வாழ்க்கையை கதை என்று கூறுகிறீர்கள். வரலாற்றுப்பதிவையே கட்டுக்கதை என்று கூறும் உங்களின் வாதம் வியப்புக்குரியதாக உள்ளது. இஸ்லாம் புராணம் மற்றும் இதிகாசங்களின் தொகுப்பு அல்ல என்று ego காரணமாக உங்கள் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது என்றே தோன்றுகிறது. பரவாயில்லை. அதே சமயம், வரலாறு வரலாறுதான். அதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அதை திரித்துக்கூற நினைக்கும் உங்களது செயல் இந்துத்துவா சங்பரிவார் இயக்கங்களின் செயலை ஒத்து இருப்பது கம்யூனிஸ சிந்தனையாளர்களின் செயல்பாட்டில் வெளிவருவது கொஞ்சம் மனதுக்கு சங்கட்டமாக உள்ளது. தங்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றிய முழு செய்தியும் தெரியவேண்டும் என்றால் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகத்தை ஒருமுறை படிக்கவும். அது நபிகள் நாயகத்தை பற்றி உயர்வாக சொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட புத்தகம் அல்ல. அன்றைய அரேபிய பாலைவனத்தில் காட்டுமிராண்டி மக்களிடையே மாற்றத்தை உண்டு பண்ணிய ஒரு மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமான எளிமையான வரலாற்றுப்பதிவு. தயவு செய்து அதை ஒருமுறை படிக்க கோருகிறேன்.மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், கவிக்குயில் சரோஜினி நாயுடு, அறிஞர் பெர்னாட்ஷா, எழுத்தாளர் மைக்கேல் ஹார்ட், மாவீரன் நெப்போலியன், பெரியார், அறிஞர் அண்ணா இவர்கள் எல்லாம் என்ன கூறியுள்ளனர் என்று முதலில் படித்துவிட்டு பிறகு இந்த புத்தகத்தை படிக்கவும். இந்த வரலாற்று அறிஞர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
விவாதம் செய்யும் எண்ணமிருந்தால் பரிசீலித்து பார்க்கவும் – என்று மறைமுகமாக என் தன்னம்பிக்கையை ஆட்டம் காண முயற்சித்து உள்ளீர்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உலகளாவில் புகழ்பெற்ற பல்கலைகழகங்கள் பதிவு செய்து இருக்கின்றன. அந்த வரலாற்று நூல்களோடு உங்களை விவாத களம் காண்பேன் இன்ஷா அல்லாஹ். மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயமிருக்கும்.
நண்பர் வாஸிம்,
உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பயிற்சி உங்கள் எழுத்துகளில் நன்றாகவே தெரிகிறது. என்னுடைய கேள்வி என்ன? \\\நாற்பதாண்டு காலம் நல்லவராக உண்மையாளராக இருந்த ஒருவரை ஓரிறையைச் சொன்னார் என்றவுடன் பொய்யர் பைத்தியக்காரர் என்று கூறி விடுவார்களா? ஓரிறை என்பது முகம்மது முதலில் சொன்னதும் இல்லை முகம்மதுவுக்கு முன்பே மக்காவில் புழக்கத்தில் இருப்பது தான். எந்த அடிப்படையில் அந்த ஹதீஸ்களை யூத இட்டுக் கட்டல் என்கிறீர்கள்?/// உங்கள் பின்னூட்டங்களில் இவைகளுக்கான பதில் இருக்கிறதா? ஆனால் நான் ஏதோ மொகம்மதுவின் வாழ்க்கையே கதை என்று கூறியது போல் பிலாக்கணம் வைக்கிறீர்கள். பாய் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்து விட்டு வந்தால் நல்லது.
பாய் இன்னும் பயிற்சி எடுத்துவிட்டு வந்தால் நல்லது என்று கூறி இருக்கிறீர்கள். தேடல் உள்ளவனே மனிதன் என்ற கருத்து நீங்கள் அறிந்தது என்று நினைத்தேன். இருப்பினும் முன்னமே நான் பயின்ற கல்வியே உங்களுக்கு போதுமானது. நான் முன்னமே என்னுடைய வரிகளில் கூறி இருந்தேன் “கஅபா (மக்கா) ஆலயத்தில் 360-க்கும் மேற்பட்ட சிலைகளை வைத்து அன்றைய மக்கள் வழிபட்டனர். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அந்த சிலைகளை உடைத்து வெளியில் தூக்கி எறிந்தார்கள்” என்று தெளிவாக எழுதி உள்ளேன். நீங்கள் அதை படிக்காமல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்துக்கு முன்னமே ஒரு கடவுளை அரபு தேசத்து மக்கள் வணங்கினர் என்று திரும்ப திரும்ப கூறுகிறீர்கள். ஒருவேளை நீங்களும் ராமகோபாலன் போல (கோயபல்ஸ் தத்துவம்) “ஒரே பொய்யை திரும்ப திரும்ப கூறினால் அது மெய்யாகி விடும்” என்ற எண்ணம் உடையவரா தெரியவில்லை. மேலும் நீங்களே உங்கள் எழுத்துக்களில் கூறியும் உள்ளீர்கள் “தன்னுடைய நாற்பதாவது வயதில் ஒரு மலைக்குன்றின் மீது ஏறி நின்று அவர் பிரச்சாரம் செய்தபோதுதான் பிரச்சினை துவங்கியது (தங்கள் எழுத்துக்களின் சுருக்கம்)” என்று. ஒரு கடவுள் கொள்கையில் அன்றைய மக்கா நகர மக்கள் இருந்து இருந்தால், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு கடவுள் கொள்கையை பற்றி பேச வேண்டிய அவசியம் இருந்து இருக்காதே. மக்கள் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்க மாட்டார்களே. முஹம்மது நபி (ஸல்) அவர்களும் மக்கா-வில் இருந்து மதீனா-விற்கு புலம் பெயர வேண்டிய அவசியம் இல்லையே. உங்கள் எழுத்துக்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்களே திரு. செங்கொடி அவர்களே!!. ஒரு கடவுள் கொள்கையை சொன்னவுடன் எப்படி திடீரென்று அவரை மக்கள் பார்ப்பார்கள் என்று மீண்டும் மீண்டும் விளங்காமல் அதே கேள்வியையே கேட்டுள்ளீர்கள். தெளிவாக சொல்லியுள்ளேன், மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் “மக்கள் ஒரு கொள்கையில் காலம் காலமாக ஊறி திளைத்திருக்கும் போது அது தவறு மூட நம்பிக்கை என்று சொன்னால் கண்டிப்பாக கோபம் வரும்”. பரீட்சிக்க விரும்பினால் தாங்களே ஏதேனும் கோவிலை தேர்ந்தெடுத்து அங்கு சென்று வழிபடும் பக்தர்களை நோக்கி “இப்படி செய்யாதே, இது தவறு” என்று கூறிப்பருங்கள். உண்மை தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளங்கும். “பெரிய கடவுள் அல்லாஹ், குட்டி தெய்வங்கள் இந்த சிலைகள். இந்த குட்டி தெய்வங்களிடம் நமது குறைகளை கூறினால் அவைகள் பெரிய தெய்வத்திடம் கொண்டு போய் சேர்க்கும்”. என்று கூறி சிலைகளை வைத்து பல தெய்வ வழிபாடு செய்தார்கள் அதை குர்ஆன் தெளிவாக பல இடங்களில் சொல்லி உள்ளது. தயவுசெய்து அரைகுறையாக படித்துவிட்டு எழுத வேண்டாம். ஹதீஸ்களில் யூதர்களின் கையாடல் உள்ளது என்பதற்கு தெளிவாக சொன்னேன் “நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டுவிட்டதாக” சொல்லி இடை செருகல் புகுத்தினார்கள். மேலும் பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. ஆனால் நேரமின்மை காரணமாக அவைகளை தொகுக்க நேரமில்லை. தற்சமயதிர்க்கு அந்த சூனியம் சம்பந்தப்பட்ட ஹதீஸ் தொகுப்புகளை புஹாரி மற்றும் முஸ்லிம் இன்ன பிற ஹதீஸ் தொகுப்புகளில் இருந்து பார்த்துக்கொள்ளவும். மற்ற தொகுப்புகளை நான் நேரம் அமையும் போது கண்டிப்பாக ஆதாரத்தோடு நிருபிப்பேன் இன்ஷா அல்லாஹ்.
நண்பர் வாஸிம்,
ஏன் இப்படி தொடர்பற்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. முகம்மது நல்லவரா கெட்டவரா எனும் கேள்விக்கு 40 வயது வரை அவரை நல்லவர் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறீர்கள். முகம்மதுவுக்கு முன்பே ஓரிறைக் கொள்கை மக்காவில் புழக்கத்தில் இருந்தது என்றால் எல்லோரும் ஓரிறைக் கொள்கையில் இருந்ததார்கள் என நான் கூறியதாக நீங்களே தீர்ப்பெழுதிக் கொள்கிறீர்கள். எப்படி யூத இட்டுக்கட்டல் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டால் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை என்று படம் காட்டுவார்களே அது போல் படம் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் தெளிவாகவும் கூர்மையாகவும் எழுதினால் பதில் கூறுவதற்கு வசதியாக இருக்கும். உதவுவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி
நண்பர் செங்கொடி அவர்களே! நீங்கள்தான் சொன்னீர்கள் “முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுவதற்கு முன்னமே அரபு தேசத்து மக்கள் ஒரு கடவுள் கொள்கையில் (ஓர் இறை கொள்கை) இருந்தார்கள்” என்று. நான் சொன்னேன் “இல்லை. அதற்க்கான சான்று கஅபா ஆலயத்தில் இருந்த 360-க்கும் மேற்பட்ட சிலைகள்” என்று. இப்போது நீங்கள் விவாதத்தை திசை திருப்ப தொடர்பற்று எழுதுகிறேன் என்று கூறுகிறீர்கள். நியாயம்தானா?
“ஒரு மனிதரை 40 வயதுவரை நல்லவர் என்று கூறிவிட்டு பிறகு எப்படி கெட்டவர் என்று மக்கள் கூறுவார்” என்றும் கேள்வி எழுப்பினீர்கள். அதற்கும் தெளிவாக சொன்னேன் “மக்களின் மூடப்பழக்க வழக்கங்களை தவறு என்று சொன்னார், மக்கள் உடனே அவருக்கு எதிராக மாறினர் ” என்றும் தெளிவாக சொன்னேன். உங்களுக்கு புரிய வைப்பதற்காக பரீட்சித்தும் பாருங்கள் என்றும் சொன்னேன். இப்போதும் நீங்கள் விவாதத்தை திசை திருப்ப தொடர்பற்று எழுதுகிறேன் என்று சொல்லுகிறீர்கள்.
யூதர்களின் கையாடலை ஒரு ஹதீஸ் குறிப்பிட்டு சொல்லி மேலும் ஆதாரங்களை நேரம் கிடைக்கும்போது சொல்கிறேன் என்றேன். தொடர்பற்று எழுதுகிறேன் என்று சொல்கிறீர்கள்.
நல்லது விவாதத்தை திசை திருப்பும் எண்ணத்தோடு எழுதும் உங்களிடம் விவாதிப்பதில் பிரயோஜனம் இல்லை என்று தோன்றுகிறது. நடுவர் ஒருவர் இல்லாமல் விவாதம் செய்வதும் உபயோகமில்லை என்றும் தோன்றுகிறது. நல்லது, நட்போடு விடைபெறுகிறேன். நன்றாக புரிந்துகொள்ளவும்! நான் விலகுவது தோல்வி பயத்தில் அல்ல. மடியில் கனமில்லை (அதாவது – இஸ்லாமிய கொள்கையில் எந்த தப்பும், தவறும், முரண்பாடும் இல்லை. எனவே சிந்தித்து சுயவிருப்பத்தோடு ஏற்றுள்ளேன்), வழியில் பயமில்லை (அதாவது – உங்களோடு மட்டும் அல்ல யாரோடும் விவாதிப்பதில் தயக்கமில்லை). நடுவர் இருந்து தீர்பளிப்பது நன்று. இல்லையெனில் நேரம் வீணாவதை தவிர மிச்சம் ஒன்றுமிருக்காது என்ற புரிந்துணர்வால் அன்புடனும் சகோதரத்துவதுடனும் நட்போடும் விலகுகிறேன்.
இங்கே எல்லோருக்கும் அறிவிப்பது என்னவென்றால், இங்கே வாஸிம் பாய் தோல்வி பயத்தில் விலகவில்லை என்பதை அறிவித்துக்கொள்கிறோம் டும்..டும்..டும்..
சென்று வாருங்கள் வாஸிம் பாய் உங்களோடு விவாதிக்கும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை என நினைத்துக் கொள்கிறேன். சென்று வாருங்கள்.
உங்கள் இஸ்லாம் குறித்த கருத்து மிகுந்த பயனளிக்கும் வகையில் உள்ளது