தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது

4 X 2

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 52

தனக்குத் தானே முரண்படுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு அளவுகளில் ஏற்படுவது தான். கி.பி ஆறாம் நூற்றாண்டில் ஆண்டான் அடிமை காலத்தில் வாழ்ந்த ஒரு முகம்மது இதற்கு விதிவிலக்காகிவிட முடியாது. ஆனால் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனித இனம் நீடித்தாலும் அத்தனை கோடி ஆண்டுகளுக்கும் சேர்த்து மனிதனுக்கு இருக்கும் ஒரே முன்மாதிரி என்று கருதப்படும் குறிப்பிட்ட அந்த முகம்மதுமுரண்படலாமா? அதுவும் தான் மிகுந்த முதன்மைத்தனம் தந்து அறிவித்த கொள்கைகளிலேயே முரண்படல் கூடுமா? அல்லது அவ்வாறு முரண்படுவது அவர் தோற்றுவித்ததாக கருதப்படும், மனித இனம் முழுமைக்குமான வழிகாட்டி என்று விதந்து போற்றப்படும் ஒன்றின் தகுதிக்கு ஏற்புடையது தானா? ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் முகம்மது முரண்பட்டிருக்கிறார் என்பது தான் வரலாறாக இருக்கிறது.

 

ஒரு முஸ்லீமுக்கு ஏனைய அனைத்து விசயங்களையும் விட முதன்மையானது தொழுகை எனும் வழிபாடு. ஏழு வயது தொடங்கி இறந்து போவது வரை ஒரு வேளைத் தொழுகையைக் கூட விட்டுவிட யாருக்கும் அனுமதியில்லை. உங்கள் குழந்தைக்கு ஏழு வயதாகி விட்டால் அடித்தாவது தொழ வைத்து விடவேண்டும். நிற்பதற்கே திராணியில்லாத அளவுக்கு மோசமாக உடல்நலம் குன்றியிருந்தாலும் உட்கார்ந்து கொண்டேனும், படுத்துக் கொண்டேனும் தொழுதாக வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களால், நிர்ப்பந்தத்தினால் தொழுகையை நிறைவேற்ற இயலாமல் போனால் நிலமை சீரானதும் விடுபட்ட தொழுகையை கண்டிப்பாக தொழுதாக வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையில் அலட்சியம் தலைகாட்டி விடக் கூடாது என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் ஒரு ஹதீஸ் இருக்கிறது.

 

.. .. .. தொழுபவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தனக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்கு குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாட்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும். என்று இறைத்தூதர் கூறினார்கள் என அபு ஜுஹைம் அறிவித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபு நழ்ரு என்பவர் நாற்பது ஆண்டுகள் என்று கூறினார்களா? நாற்பது மாதங்கள் என்று கூறினார்களா? நாற்பது நாட்கள் என்று கூறினார்களா? என்று தமக்கு சரியாக நினைவில்லை என்கிறார். புஹாரி 510

 

அதாவது ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது இன்னொருவர் தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே தெரிந்தோ, தெரியாமலோ சென்றால் போதும், அதனால் அவருக்கு ஏற்படும் பாவம் அதிகபட்சம் நாற்பது ஆண்டுகள் நின்றுகொண்டே இருப்பதை விட அதிகமாக இருக்கும் என்கிறது இந்த ஹதீஸ். இதேபோல் தொழுகையின் குறுக்கே செல்வது குறித்து பேசுகிறது இன்னொரு ஹதீஸ்.

 

.. .. .. தொழுகையின் குறுக்கே எவரேனும் செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும். அவர் அதை எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனென்றால் அவர் ஷைத்தானாவார் .. .. .. புஹாரி 509

 

இப்படி உபதேசித்த முகம்மது எப்படியெல்லாம் தொழுதிருக்கிறார் தெரியுமா?

 

நபி அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை உமாமா வை தோளில் சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்கு செல்லும் போது இறக்கி விடுவார்கள். நிற்கும் போது தூக்கிக் கொள்வார்கள். புஹாரி 516

 

யோசித்துப் பாருங்கள் குனியும் போதும் மண்டியிடும் போதும் இறக்கிவிட்டும் நிற்கும்போது தோளில் தூக்கி வைத்துக் கொண்டும் இருந்தால் அது தொழுகையாக இருக்குமா? தொழும் ஒருவருக்கு குறுக்கே செல்ல நேர்வதே பாவமான செயலாக சொல்லிய முகம்மது; தன் பேரக் குழந்தையே ஆனாலும் தூக்கி வைத்துக் கொண்டும் இறக்கி விட்டுக் கொண்டும், பின்னர் தூக்கி வைத்துக் கொண்டும் இறக்கி விட்டுக் கொண்டும் விளையாடிக் கொண்டிருந்தால் அது எல்லாம் வல்ல அல்லாவை வணங்குவதாக இருக்குமா? விளையாடுவதாக இருக்குமா? இதேபோல் இன்னொரு ஹதீஸும் இருக்கிறது படித்துப் பாருங்கள்.

 

நபி அவர்கள் தொழும்போது நபி அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். உடனே கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக்கொள்வேன். புஹாரி 1209

 

இந்த ஹதீஸை அறிவிப்பவர் முகம்மதின் காதல் மனைவி ஆய்ஷா. இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால் இது காதல் விளையாட்டாய் தோன்றுமா? எல்லாம் வல்ல கடவுளை வணக்கம் செய்வது போல் தோன்றுமா? இந்த ஹதீஸுக்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று கூறிக் கொண்டு தமிழ்நாட்டு அறிஞர்(!) ஒருவர், முகம்மது அந்த அளவுக்கு வறுமையில் இருந்தார். ஒருவர் தொழுது கொண்டிருந்தால் இன்னொருவர் இருக்க இடமில்லாத அளவுக்கு இடவசதி இல்லாத வீடாக முகம்மதின் வீடு இருந்தது என்று அந்தக் கால முகம்மதின் வீட்டுக்கு நில அளவை படம் போட்டுக் காட்டுகிறார். கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். ஒருவர் தொழுவதற்கு எந்த அளவு இடம் தேவைப்படும்? இரண்டரை அடி அகலமும் மூன்றரை அடி நீளமும் கொண்ட இடம் போதுமானது. இந்த அளவு தான் முகம்மதின் வீடு இருந்ததா? என்றால் படுத்துக் கொள்ளக் கூட முடியாதே. விளக்கம் கொடுப்பதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? இன்னொரு ஹதீஸைப் பாருங்கள்.

 

ஜாபிர் பின் அப்துல்லாஹ் அறிவிக்கிறார். .. .. .. நான் நபி அவர்களிடம் வந்த போது கிப்லா அல்லாத திசையை நோக்கி தன் வாகனத்தில் அமர்ந்தபடி தொழுது கொண்டிருந்தார்கள். புஹாரி 1217 (கிப்லா என்பது எந்த திசை நோக்கி தொழ வேண்டுமோ அந்த திசையை குறிக்கும். வாகனம் என்பது ஒட்டகத்தைக் குறிக்கும்)

 

புஹாரி 1227 முகம்மது பாதித் தொழுகையை மறந்து விட்டார் எனக் குறிப்பிடுகிறது.

புஹாரி 4647ல் நீ தொழுது கொண்டிருந்தாலும் நான் கூப்பிட்டால் தொழுகையை பாதியிலேயே விட்டுவிட்டு எனக்கு பதிலளிக்க வேண்டும் என்று முகம்மது கூறியதாக அபூ ஸ்யீத் இப்னு முஅல்லா கூறுகிறார்.

 

இவைகளையெல்லாம் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது? அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லீம்கள் எவ்வளவு பயபக்தியுடன் தொழுது கொண்டிருக்கிறார்களோ அந்த பயபக்தி முகம்மதுவுக்கு கொஞ்சமும் இருந்திருக்கவில்லை என்று தோன்றுகிறதா? அல்லது முஸ்லீம்கள் இந்த பயபக்தியை யாரிடமிருந்து பெற்றார்கள் என்ற குழப்பம் ஏற்படுகிறதா? அல்லது, முகம்மது சமயத்துக்கு தகுந்தாற்போல் முன்னுக்குபின் முரணாக ஏதேதோ கூறியிருக்கிறார் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறதா? அல்லது ஊருக்கு உபதேசம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு முகம்மது தான் என்று தோன்றுகிறதா? இவ்வளவு குழப்பங்களையும் முரண்பாடு என ஒற்றைச் சொல்லில் கூறினால் அது பொருத்தமான பொருள் தரும் சொல்லாக இருக்காது.

 

குரானில் முஸ்லீம்கள் ஏன் முஸ்லீம் அல்லாதவர்கள் கூட தெரிந்து வைத்திருக்கும் முத்திரை வாக்கியம் (பஞ்ச் டயலாக்) ஒன்று உண்டென்றால் அது லக்கும் தீனுக்கும் வல்ய தீன்என்பது தான். அதாவது, உங்களுடைய மதம் உங்களுக்கு எங்களுடைய மதம் எங்களுக்கு என்பது அதன் பொருள். தெளிவாகச் சொன்னால், முகம்மது சிலருடன் விவாதித்து அவர்களுக்கு முகம்மதால் பதில் கூற முடியாத நிலை ஏற்படும் போது முகம்மது உதிர்த்த டயலாக் தான் “லக்கும் தீனுக்கும் வல்ய தீன்” என்பது. இது மக்காவில் வெறும் கலகக்காரராக இருக்கும் போது முகம்மது கூறிய அருள் வாக்கு. ஆனால் மதீனாவில் மன்னராகியதும் செய்தது என்ன தெரியுமா? ஏனைய கடவுட் சிலைகளையெல்லாம் அடித்து நொறுக்கியது தான்.

 

காஅபாவைச் சுற்றிலும் முன்னூற்று அறுபது சிலைகள் இருக்க நபி அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள் சத்தியம் வந்துவிட்டது அசத்தியம் அழிந்து விட்டது. சத்தியம் வந்துவிட்டது இனி அசத்தியம் மீண்டும் ஒருமுறை பிடிக்காது என்று கூறிக் கொண்டே தம் கையிலிருந்த குச்சியால் அதை அடிக்கத் தொடங்கினார்கள். புஹாரி 4287

 

இந்த ஹதீஸ் மதீனாவில் மன்னராகிய பிறகு மக்காவை வெற்றி கொண்டு மக்காவிற்குள் நுழையும் போது காஅபா எனும் ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருந்து மூன்னூற்றுக்கும் அதிகமான கடவுட் சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப்படுத்தியதை குறிப்பிடுகிறது. என்னானது லக்கும் தீனுக்கும் வல்ய தீன்?

 

.. .. .. இறைத்தூதர் அவர்களே உங்களை சத்தியமார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக அந்த ஆலயத்தை சிறங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன் என்று கூறினார். உடனே நபி அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படையினருக்கும் பரக்கத்தை அளிக்கும்படி அல்லாஹ்விடம் பலமுறை பிரார்த்தித்தார்கள், புஹாரி 3076

 

இந்த ஹதீஸ் யேமன் நாட்டு காஅபா என்று அழைக்கப்பட்ட ஆலயத்தை நூற்றைம்பது குதிரை வீரர்கள் சேர்ந்து அழித்துவிட்டு வந்ததைப் பற்றி கூறுகிறது. என்னானது லக்கும் தீனுக்கும் வல்ய தீன்? மக்காவில் ஆள் அம்பு இல்லாமல் உங்களுக்கு உங்கள் மதம் எனக்கு என்னுடைய மதம் என்று வசனம் பேசியவர், மதீனாவில் மன்னராகி இராணுவம் வந்ததும் பிற மத கடவுட் சிலைகளை அடித்து நொறுக்க, ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்க ஆளனுப்புகிறார் என்றால் இதைக் குறிக்க முரண்பாடு என்னும் சொல் போதுமானதாக இருக்குமா?

 

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்து கொள்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். முகம்மதுவுக்கும் கூட ஒரேநேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட மனைவியர் இருந்துள்ளனர். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்யும் போது ஏற்கனவே இருக்கும் மனைவிகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இன்னொரு திருமணம் செய்வதை என் மனைவி அனுமதிக்க மறுக்கிறாள் என்று முறையிடும் ஒருவருக்கு அவளை அடித்து விட்டு நீ திருமணம் செய்துகொள் என்று உமர் கூறுவதாக ஒரு ஹதீஸ் உண்டு. ஆனால் முகம்மதின் மகள் பாத்திமாவை மணந்த அலி இன்னொரு திருமணம் செய்ய முயன்ற போது அதை முகம்மது அனுமதிக்க மறுக்கிறார்.

 

இறைத்தூதர் அவர்கள் சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி ஹிஷாம் இப்னு முஹீரா கோத்திரத்தார் தங்கள் மகளை அலீ இப்னு அபுதாலிப் அவர்களுக்கு மணம் முடித்து வைக்க அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ இப்னு தாலிப் அவர்கள் என் மகளை விவாக விலக்கு செய்துவிட்டு அவர்களின் மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர. ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை வேதனைப்படுத்துவது என்னை வேதனைப் படுத்துவதாகும் என்று கூறினார்கள். புஹாரி 5230

 

என்னதான் ஆணாதிக்கத் தனமாக நான்கு திருமணங்கள் செய்து கொள்ளலாம், எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் சுகிக்கலாம் என்று விதி ஏற்படுத்தினாலும், தானாடாவிட்டாலும் தன் சதையாடுமல்லவா? அதனால் தான் அலீ வேறொரு பெண்ணை மணந்தால் தன் மகள் வேதனைப்படுவாள் என்கிறார். இதுவே மற்றப் பெண்கள் தன் கணவன் வேறொரு பெண்ணை மணமுடிக்கையில் மகிழ்வார்களா? முகம்மதுவுக்கு இருக்கும் இதே உணர்வுகள் தானே ஏனைய பெண்ணைப் பெற்றவர்களுக்கும் இருக்கும். என்றால் தன் மகளுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு? இதை என்னவிதமான முரண்பாடு என்று கூறுவது? தனக்கு வந்தால் இரத்தம் மற்றவர்களுக்கென்றால் அது தக்காளி சட்னியா?

 

முன்மாதிரி என கொண்டாடத்தக்க எந்த சிறப்பியல்புகளும் இன்றி வெகு சாதாரணமான மனிதராக; அந்தக் காலத்தில் வாழ்ந்த எந்த மனிதரையும் விட உயர் தகுதிகள் என்று எதுவுமின்றி, முரண்பாடுகளுடன் கூடிய ஒருவராகவே அவர் இருந்திருக்கிறார். முகம்மது மனிதர்களுக்கெல்லாம் அழகிய முன்மாதிரி என்றால் இவைகளை முன்மாதிரி செயல்களாக எடுத்துக் கொள்ளலாமா? முஸ்லீம்கள் சிந்திக்கட்டும்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

51. முகம்மது நல்லவரா? கெட்டவரா?

50. முகம்மது அனுப்பிய கடிதங்கள் மதமா? ஆட்சியா?

49. முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?

48. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2

47. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

14 thoughts on “தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது

  1. ரோசமுள்ள ஆம்பளையா இருந்தா விவாதத்துக்கு வா. இல்லையின்ன சேலை கட்டிக்குட்டு சமையல் கட்டுல ஒளிஞ்சுக்கோ. மவன இன்னொரு வாட்டி எழுதின ….

  2. hey loosu!

    neenga vivaadham panni kizhichadhathaan ellorum paarthaargal

    adhukkappuramum evanaavadhu ungakitta arguemnt pannuvaanaa?

  3. sagaodharan matrum an magan.

    தர்க்கத்தை தர்க்கம் கொண்டே வெல்ல வேண்டும்.அதை விடுத்தது இப்படி கூச்சல் போட்டால் போதுமா.
    இது ஏற்புடைய ஹதித் இல்லை என்றால் ஆதாரத்துடன் தெரிவியுங்கள்.

  4. உங்கள் குழந்தைக்கு ஏழு வயதாகி விட்டால் அடித்தாவது தொழ வைத்து விடவேண்டும்======7 வயது குழந்தையை தோழா ஏவுங்கள, 10 வயதில் அடித்து தொழ சொல்லுங்கள்

  5. நபி அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை உமாமா வை தோளில் சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்கு செல்லும் போது இறக்கி விடுவார்கள். நிற்கும் போது தூக்கிக் கொள்வார்கள். புஹாரி 516=================தொழுகையில் குடித்து விட்டும் வரலாம் என்று இருந்தது, பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டது, தொழுகையில் பேசிய சம்பவங்களும் உண்டு, நீ அறிவிலி என்பதற்கு இதுதான் சான்று

  6. நபி அவர்கள் தொழும்போது நபி அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். உடனே கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக்கொள்வேன். புஹாரி 1209============மிக சிறிய இடத்தில் தொழுததால் இது நடந்தது

  7. ஜாபிர் பின் அப்துல்லாஹ் அறிவிக்கிறார். .. .. .. நான் நபி அவர்களிடம் வந்த போது கிப்லா அல்லாத திசையை நோக்கி தன் வாகனத்தில் அமர்ந்தபடி தொழுது கொண்டிருந்தார்கள். புஹாரி 1217 (கிப்லா என்பது எந்த திசை நோக்கி தொழ வேண்டுமோ அந்த திசையை குறிக்கும். வாகனம் என்பது ஒட்டகத்தைக் குறிக்கும்)=========வாகனத்தில் செல்லும் போது கிபிளா அவசியம் இல்லை

  8. புஹாரி 4647ல் நீ தொழுது கொண்டிருந்தாலும் நான் கூப்பிட்டால் தொழுகையை பாதியிலேயே விட்டுவிட்டு எனக்கு பதிலளிக்க வேண்டும் என்று முகம்மது கூறியதாக அபூ ஸ்யீத் இப்னு முஅல்லா கூறுகிறார்.============தொழும் போதும் முஹம்மது (ஸல்) அழைத்தால் செல்லவேண்டும், கடமை அல்லாத உபரி தொழுகையின் போது தாய் அழைத்தால் தொழுகையை முறித்து விட்டு செல்லவேண்டும் என்பது விதி

  9. ஏனைய கடவுட் சிலைகளையெல்லாம் அடித்து நொறுக்கியது தான்.=============உன்னை நான் கண்டதில்லை ஒரு பன்றியின் உருவத்தை வரைந்து இது தான் நீங என்றால் ஒத்து கொள்வாயா? எப்படி அது தவறோ அதுபோல் காணாத கடவுள் கள்ளி வடிப்பது தவறு,

  10. //ஒரு பன்றியின் உருவத்தை வரைந்து இது தான் நீங என்றால் ஒத்து கொள்வாயா? எப்படி அது தவறோ அதுபோல் காணாத கடவுள் கள்ளி வடிப்பது தவறு,// அப்ப போட்டேவில் உள்ளது யாரோ ..?

  11. நபி(ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளர் (யஸார் (ரலி) அவர்களைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களை (தங்களுடன்) ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, (அவர்களைப் பிடித்து வர) அவர்களைத் தொடர்ந்து ஆளனுப்பினார்கள். (அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்குக் கொண்டு வரப்பட்ட போது) அவர்களுக்குத் தண்டனை கொடுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (மக்கள்) அவர்களின் கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடு போட்டார்கள். அவர்களின் கை கால்கள் வெட்டப்பட்டு, (மதீனாவின் புறநகரான) ‘ஹர்ரா’ பகுதியில் அவர்கள் விடப்பட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டுபோயினர்.
    அறிவிப்பாளர் கத்தாதா(ரஹ்) கூறினார்:
    அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் (மக்களை) தர்மம் செய்யுமாறு தூண்டிக் கொண்டும் சித்திரவதை செய்யவேண்டாமென தடுத்துக் கொண்டும் இருந்தார்கள். 👆👆👆
    சகோதரதரே உங்களின் அறிவு கெட்ட மூளையில் முழு ஹதீஸை படித்து விளங்கிக்கொள்ள. முடியல. உன் வீட்டில் உள்ளவரை ஒருவன் கொலை செய்து விட்டால் நீ என்ன கொஞ்சவியா? அவனை. குர்ஆனின் சட்டம் கொலைக்கு கொலை . அதுவும் நபியவர்கள் என்ன தண்டனை கொடுக்க வேண்டாம் என கூறவில்லை. மக்கள் ஆத்திரத்தில் அவ்வாறு செய்து விட்டார்கள். பின்பு அதை அறிந்து நபியவர்கள் மக்களை இவ்வாறு செய்யக்கூடாது எனவும், தர்மங்கள் செய்யும்படியும் போதித்துள்ளார்கள். அறிவை பயன்படுத்தி கட்டுரை எழுதுங்கள். நான் ஒன்றை மட்டும்தான் பார்த்தேன். அதிலேயே நீ பொய் கூறுகிறாய்.

  12. நண்பர் தமிழ்,

    இந்த ஹதீஸை ஏன் இங்கு பதிந்திருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. நீங்கள் கூறும் விளக்கம் இந்தக் கட்டுரையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அறியவும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s