நேற்று கேள்வி பதில் பகுதியில் மணி எனும் நண்பர் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்கான பதில் சற்று நீளமாக வந்து விட்டதால், பதிவாக இட்டுவிட்டேன். பொருத்தருள்க.
நண்பரே,
சுவனப்பிரியன் என்பவர் நாத்திகர்களுக்கு நரக தண்டனை கொடுப்பது சரியானது தான் என்று கூறுகிறார். மனைவி எல்லோருக்கும் எல்லாப் பணிவிடைகளையும் சரியாகச் செய்து நல்ல பெயர் எடுத்து இருந்தாலும் பக்கத்து வீட்டு ஆடவருடன் உடலுறவு வைத்ததை எப்படி ஒரு கணவனால் ஏற்க முடியும்? அதேபோல் நாத்திகன் பல நல்லவைகளைச் செய்தாலும் கடவுளை ஏற்றுக் கொள்ளாததால் அவன் செய்த நல்லவைகள் பலனில்லாமல் போகும் என்கிறார். ஏற்றுக் கொள்ளும்படிதான் இருக்கிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?
அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும் நன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்க்கம் கிடையாதா?
நண்பர் மணி,
இது போன்று பதில் கூறுபவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் உத்தியைக் கையாள்கிறார்கள். சில நேரங்களில் உதாரணங்கள் உண்மைகளை புரியவைக்க உதவும். ஆனால் அவை ஒருபோதும் உண்மைகள் ஆகிவிடுவதில்லை.
நாத்திகர்கள் நல்ல செயல்களை செய்து யாருக்கும் இன்னல்கள் செய்யாதிருக்கும்போது அவர்களை நரகில் இடுவது சரியா? இது நேரடியான கேள்வி. இதற்கு நேரடியான பதிலைக் கூறுவது தான் பொருத்தமானது. இதை நாம் இப்படி பார்க்கலாம். மனிதர்கள் குறித்த கடவுளின் நோக்கம் என்ன? மனிதன் நல்லவனாக, சரியானவனாக, நேர்மையானவனாக இருப்பதா? அல்லது தன்னை வணங்குபவனாக இருப்பதா? தன்னை வணங்குபவனாக மனிதன் இருப்பதே கடவுளுக்கு முதன்மையானது. அதற்கு அடுத்ததாகத்தான் அந்த கடவுள் கூறும் வாழ்வியல் விழுமியங்களுக்கு ஒத்ததாக வாழ்வது. இந்த இரண்டாவது அம்சத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நல்லவனாக இருப்பது என்பதன் பொருள் கடவுள் கூறியபடி வாழ்வது தானே தவிர சமூக மதிப்பின்படி நல்லவனாக வாழ்வதல்ல. இந்த இரண்டு அம்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால் சொர்க்கம் என்பது கடவுளை வணங்கி, கடவுளுக்கு விருப்பமான முறையில் வாழ்வது மட்டுமே, இவ்வாறில்லாமல் வாழ்பவர்களுக்கு நரகம் தவிர வேறில்லை. ஒரு எடுத்துக்காட்டுடன் இதைப் பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்பவனை சமூகம் நல்லவனாக கருதுவதில்லை. ஆனால் நீங்கள் கூறும் சுவனப்பிரியனின் கடவுளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்வது கெட்டவனின் அடையாளமல்ல. ஆக, நல்லவனாக இருப்பது என்பது சமூகத்தில் நல்லவனாக வாழ்வதைக் குறிக்காது. மாறாக, கடவுளுக்கு நல்லவனாக வாழ்வதையே குறிக்கும். ஆகவே, சமூகத்தில் நல்லவனாக வாழும் நாத்திகர்களுக்கு நரக தண்டனை என்பது கடவுளின் முரண்பாடு. இதை மறைப்பதற்காகத் தான், இதுபோன்ற கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூறுவதை விடுத்து உதாரணங்களையே பதிலாக கூறிவிடுகிறார்கள்.
இப்போது அவர் கூறிய உதாரணத்தையும் பார்ப்போம். முதலில் ஓர் ஆண் தன் குடும்பத்தில் இருந்து குழந்தை பெற்றுக் கொண்டு தகாத முறையில் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதற்கும், ஒரு பெண் தன் குடும்பத்தில் இருந்து குழந்தை பெற்றுக் கொண்டு தகாத முறையில் இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்த வித்தியாசம், இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருக்கிறது என்பதிலிருந்து வருகிறது. முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் தன் குடும்பத்துக்கு வெளியே பாலுறவைத் தேடுகிறாள் என்பதன் பொருள் என்ன? தனக்கு பாலுறவு விசயத்தில் பற்றாக்குறை இருக்கிறது என்றும், அதை தீர்ப்பதற்கு இதை விட வேறு வழியில்லை என்றுமே பொருள். பெரும்பான்மையான பெண்கள் குடும்பத்துக்கு வெளியே பாலுறவைத் தேடுவதற்கு இதுவும் ஆண்களின் மிரட்டலுமே காரணங்களாக இருக்கின்றன. ஆனால் ஆணுக்கு இது போன்று அவசியமில்லை. குடும்ப உறவு போதுமானதாக இருந்தாலும் அவனுடைய பாலியல் வேட்கை எப்போதும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே இருக்கும். ஏனென்றால் இது ஆணாதிக்க சமூகம். எந்த ஒரு மனிதனின் தனிப்பட்ட நடவடிக்கைகளும் அவர்களது வாழ்நிலையையே பிரதிபலிக்கின்றன. இப்போது தன்னுடைய குடும்பத்தில் தன் பாலியல் தேவைகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்றும், அதை தாங்கிக்கொள்ள முடியாது என்றும், குடும்ப உறவுக்கு வெளியே தேடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எண்ணி செயல்படும் ஒரு பெண் தன் சமூக உறவுகளிடம் இயல்பானவளாக நல்லவளாக இருக்க முடியுமா? அவளின் பாலியல் பற்றாக்குறை என்பது பல்வேறு வடிவங்களில் உறவுகளிடம் வெளிப்பட்டே தீரும். அப்படி வெளிப்படுத்தும் பெண் தன் சமூக உறவுகளிடம் கோபத்துடன், எரிச்சலுடன், ஆற்றாமையுடன் நடந்து கொள்ளும் ஒரு பெண்ணால் எல்லோருக்கும் நல்லவளாக இருக்க முடியாது என்பதே யதார்த்தம். எனவே, சுவனப்பிரியனின் எடுத்துக்காட்டு பொருத்தமற்றது.
இது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது குடும்பத்துக்கு வெளியே பாலுறவைத் தேடும் ஒரு பெண்ணுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்றால், அவளின் அந்தக் குற்றத்துக்கு அவள் மட்டுமே பொறுப்பாளியா? அவளுக்கு பாலியல் பற்றாக்குறையை ஏற்படுத்திய கணவன், பாலியல் தேவையே முதன்மையானது எனும் எண்ணத்தை அவளுள் ஏற்படுத்திய இந்த சமூகம், அவளின் பற்றாக்குறையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த ஆண், இவர்களெல்லாம் குற்றவாளிகள் இல்லையா? இந்த உதாரணத்தை நாத்திகர்களோடு பொருத்தினால் நாத்திகனாக இருப்பது அவனுடைய குற்றம் மட்டுமா? அவன் நாத்திகனாக இருக்க வேண்டுமென்று ஏற்கனவே தீர்மானித்த கடவுளின் முடிவில் பங்கு இல்லையா? கடவுள் இல்லை என்று உணரவைத்த சமூகத்தின் பங்கு இல்லையா? அவனுடைய தேடல்களை நாத்திகத்தின் திசையில் கொண்டு சென்ற அறிவியலின் பங்கு இல்லையா? அவனை மட்டும் பலிகடாவாக ஆக்குவது எந்த விதத்தில் சரி?
ஆக, நேரடியாகப் பார்த்தாலும், அவர் கூறிய உதாரணத்தின் வழியாகப் பார்த்தாலும் சமூகத்தில் நல்லவனாக வாழ்ந்த நாத்திகனுக்கு தண்டனை வழங்குவது என்பது எந்த விதத்திலும் பொருந்தாத, பிழையான ஒன்று என்பது தெளிவு. இது கடவுள் உண்டு எனும் கோணத்திலிருந்து பார்த்து அளிக்கப்பட்ட பதில். கடவுள் என்ற ஒன்று கிடையாது என்பது அறிவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் நீருபிக்கப்பட்ட ஒன்று. அது மக்களின் மனதில் இருக்கும் ஒரு வெற்று நம்பிக்கை. மக்களில் பெரும்பாலானோருக்கு அந்த வெற்று நம்பிக்கை இருக்கிறது என்பதைத் தாண்டி கடவுளையும், கடவுள் நம்பிக்கையையும் பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை.
அந்த இடுகையில் நாத்திகம் குறித்த வேறு சில கருத்துகளையும் சுவனப்பிரியன் பதிவு செய்துள்ளார். பரிணாமம், பேரண்ட,மனித உடல் அமைப்புகள், தானே தோன்றியிருக்க முடியுமா? போன்றவை குறித்தெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பலரும் பல விதங்களில் பல முறை பதிலளித்து விட்டார்கள். மீண்டும் மீண்டும் அவற்றை பதிவு செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. வேண்டுமானால் நீங்கள் சுவனப்பிரியனிடம் கேள்வி எழுப்புங்கள் இவைகளையெல்லாம் படைத்து பரிபாலிப்பது கடவுள் தான் என்பதற்கு தூலமான ஆதாரம் இருக்கிறதா என்று. மற்றப்படி அந்த வழக்கச் சகதிக்குள் நான் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை.
நாத்திகர்கள் நல்ல செயல்களை செய்து யாருக்கும் இன்னல்கள் செய்யாதிருக்கும்போது அவர்களை நரகில் இடுவது சரியா? இது நேரடியான கேள்வி. இதற்கு நேரடியான பதிலைக் கூறுவது தான் பொருத்தமானது
நண்பர் செங்கொடி,
உங்களுக்கு சுவனப்பிரியன் பதிலளித்துள்ளார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.
http://suvanappiriyan.blogspot.in/2015/02/blog-post_5.html?showComment=1423309860077#c6029901544079116742
போர் என்ற பெயரில் அடுத்தவன் மனைவியை பங்காக பெற்று அவளுடன் தொடர்பு கொள்வது அவனது மனைவிக்கும் இறந்தவன் மனைவிக்கும் நல்ல செயல் அதனால் தான் கடவுளே ”வலக்கரத்தில்” எத்தனை வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துள்ளார். ஆதாயம் இல்லாமல் எவன் போருக்கு போவான்?
ஐய்யா மணி, சுவனப்பிரியனைப்போல் உளறி கொட்டுபவர் யாரையும் நான் பார்த்ததே இல்லை. எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் தரும் நேர்மை அவரிடம் இல்லை. வேண்டுமானால் இந்த கேள்வியை அவரிடம் கேட்டு பாருங்கள்.
முஸ்லிம்கள் உலக முடிவு நாளில் சூரியன் மேற்கில் உதிக்கும் என்று நம்புகின்றனர். அதற்கு ஆதாரமான ஹதீஸ் கீழே,
It is narrated on the authority of Abu Dharr that the Messenger of Allah (peace be upon him) one day said: Do you know where the sun goes? They replied: Allah and His Apostle know best. He (the Prophet) observed: Verily it (the sun) glides till it reaches its resting place under the throne. Then it falls prostrate and remains there until it is asked: Rise up and go to the place whence you came. And it goes back and continues emerging out from its rising place and then glides till it reaches its place of rest under the throne, and falls prostrate and remains in that state until it is asked: Rise up and return to the place whence you came. And it returns and emerges out from its rising place and then it glides (in such a normal way) that the people do not discern anything (unusual in it) till it reaches its resting place under the throne. Then it would be said to it: Rise up and emerge out from the place of your setting, and it will rise from the place of its setting. The Messenger of Allah (peace be upon him) said: Do you know when it would happen? It would happen at the time when faith will not benefit one who has not previously believed or has derived no good from the faith. (Muslim)
அது என்ன தினமும் சூரியன் தொழுகைக்கு போகுமா என்று கேட்டால் உடனே அந்த ஹதீஸ் யூதன் எழுதியது என்பார். அதே அதீஸில்தானே முஸ்லிம்களின் உலக முடிவு நாள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது என்றால் பதில் வராது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரபு ஒருவர் தனக்கு தெரிந்த “அறிவியலை” சொல்லியிருக்கிறார். முகமதை குற்றம் சொல்ல முடியாது. அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான். இந்தியா போன்ற பிற நாடுகளில் உலகை பற்றி நங்கு புரிந்திருந்தாலும் , அரபு நாடுகள் மிகவும் பின் தங்கி இருந்ததால் உண்மையான அறிவியல் தெரியவில்லை. இந்த லச்சணத்தில் இறை வேதம் என்று பெணாத்துகிறார்கள்.
இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்வியை முதலில் விட்டு விடுவோம். அது நீண்டுகொண்டே போகும். ஒரு பேச்சுக்கு இறைவன் இருக்கிறான் என்றே நாத்திகர்களும் ஆத்திகர்களும் ஏற்றுக் கொள்வோம். மதங்கள் உண்மை என்பதற்கு இது போதாது. ஒவ்வொரு மதமும் தனித் தனியாக தனது மதம் இறைவனிடம் இருந்து வந்தது என்று நிரூபிக்க வேண்டும். சுவனப்பிரியர் உதாரணங்களை அள்ளி வீசுவதற்கு பதில், இஸ்லாம் இறைவனிடம் இருந்து வந்ததுதான் என்பதை நிரூபிக்கட்டும். மற்றதை பின்னால் பார்ப்போம்.
நண்பர் மணி,
கொஞ்சம் வேலை இருக்கிறது, முடித்து விட்டு வருகிறேன்.
நண்பர் மணி,
நல்லதே செய்யும் நாத்திகர்களுக்கு நரக தண்டனை சரியா என்பது கேள்வி. இதற்கு பதிவர் சுவனப்பிரியன் தரும் பதில் ஓர் உதாரணம் மட்டுமே. இதற்கு நாம் அந்தக் கேள்விக்கு நேரடியாகவும், அவர் கூறிய உதாரணத்தின் வழியாகவும் பதில் கூறினோம். இதற்கு பதிவர் சுவனப்பிரியன் பதிலோ,விளக்கமோ அளித்திருக்கிறாரா? இல்லை. மாறாக, நம்முடைய பதில் வழவழா கொளகொளாவென்று இருப்பதாக மட்டுமே கூறியிருக்கிறார். என்ன விதத்தில் நம்முடைய பதில் வழவழா என்றும் கொளகொளாவென்றும் இருக்கிறது? என்ன அடிப்படையில் அந்தப் பதில் ஏற்புடையதில்லாமல் இருக்கிறது? அந்தப் பதிலில் இருக்கும் தவறு என்ன? ஏதாவது கூறமுடியுமா? பதிவர் சுவனப்பிரியனால்?
இது அவருக்கு முதன்முறையல்ல. சில ஆண்களுக்கு முன்பு உங்களைப் போலவே டென்தாரா என்பவர் என்னிடம் பரிணாமம், கடவுள் நம்பிக்கை குறித்து சில கேள்விகளை வைத்து அதற்கு நான் பதில் கூறியிருந்தேன். பின்னர் ஒருநாள் பதிவர் சுவனப்பிரியன் தளத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது டென்தாரா என்பவர் என்னிடம் கேட்ட கேள்விகள் பதிவர் சுவனப்பிரியனின் பதிவு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. ஏற்கனவே அதற்கு பதில் கூறியிருக்கிறோம் எனும் அடிப்படையில் அந்தப் பதிவில் இயன்றால் பதில் தருக என்று ஒரு பின்னூட்டம் இட்டிருந்தோம். நம்முடைய பதிலை வாசித்த பதிவர் சுவனப்பிரியன், தனக்கு பதில் கூற நேரமில்லாதிருப்பதால் சில கேள்விகளை கேட்கிறேன் அதற்கு பதில் கூறுங்கள் என்று கேட்டு பின்னூட்டம் ஒன்றை இட்டிருந்தார். அவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு தனிப் பதிவொன்றில் பதிலெழுதி முறைப்படி அவருக்கும் தெரிவித்து வெளியிட்டிருந்தோம். இன்று வரை அதற்கு பதிலில்லை. இப்போது நீங்கள், இப்போதாவது பதில் கிடைக்குமா? பதிவர் சுவனப்பிரியனிடம் கேட்டுச் சொல்லுங்கள், நான் காத்திருக்கிறேன்.
மற்றப்படி பதிவர் சுவனப்பிரியன் முன்வைத்திருக்கும் அனைத்து விசயங்களுக்கும் ஆதாரங்களுடன் பதிலளிக்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அவற்றை அறிவு நேர்மையுடன் ஏற்கவோ மறுக்கவோ பதிவர் சுவனப்பிரியன் ஆயத்தமாக இருக்கிறாரா? இருந்தால் விவாதமாகவே நடத்தி விடலாம். அவர் செங்கொடி தளத்துக்கு வந்தாலும் சரி, அல்லது அவருடைய தளத்தில் என்றாலும் சரி எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை.
அவ்வாறன்றி நெருக்கடியான தருணங்களில் பதில் கூறாது அமைதி காப்பதும், பின்னர் பிரிதொரு சந்தர்ப்பத்தில் அதே விசயத்தை புதியது போல் பேசி கேள்வி எழுப்புவதும் மதவாதிகளுக்கு கைவந்த கலை. இதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்.
சுவனப்பிரியன் அவருடைய தளத்தில் எழுதியது
திரு மணி!
ஏற்கெனவே பலரும் பலமுறை செங்கொடியோடு பின்னூட்டங்களின் மூலம் விவாதித்தாகி விட்டது. இப்போது இவரிடம் தனியாக எனது தளத்திலோ அல்லது அவரது தளத்திலோ விவாதிக்க வேண்டுமானால் நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். அந்த அளவு விவாதத்தில் கவனம் செலுத்த என்னிடம் நேரம் இல்லை. யாரென்றே முகம் தெரியாமல் இணையத்தின் மூலம் விவாதித்து ஒரு முடிவையும் எட்ட முடியாது. நேரிடையான விவாதமே ஒரு முடிவைக் கொடுக்கும்.
எனவே அவர் தரப்பிலிருந்து குறிப்பிட்ட சில பேரும் ஆத்திக இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து குறிப்பிட்ட நபர்களும் நேரிடையாக அமர்ந்து விவாதிப்போம். அதுதான் ஒரு முடிவை எட்டும். இதற்கு முன்பு அனைத்து தலைப்புகளிலும் இவரோடு பல இஸ்லாமியர்கள் விவாதித்து உள்ளனர். எதிலுமே ஒரு முடிவு எட்டப்படவில்லை.
எனவே நேரடி விவாதத்திற்கு அவர் தயாரா என்று கேளுங்கள். அதற்கு உண்டாகும் செலவுகளைக் கூட நானோ அல்லது இன்னும் சிலரோ கூட பகிர்ந்து கொள்கிறோம். அவருக்கு எந்த செலவும் இல்லை. நேரடி விவாதத்துக்கு அவர் தரப்பிலிருந்து மூன்று பேரை அனுப்பட்டும். எங்களது தரப்பிலிருந்து மூன்று பேர் வருவார்கள். தன்னை அவர் வெளிக் காட்டிக் கொள்வதில் பயம் இருந்தால் அவர் தரப்பில் வேறு யாருமாவது வரட்டும். இதனை வீடியோவும் எடுப்போம். பிறகு பொது மக்கள் பார்த்து ஒரு முடிவினை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
அவரிடம் நேரடி விவாதத்துக்கு தயாரா என்பதை கேட்டு சொல்லுங்கள்.
நண்பர் மணி,
இதில் நேரம் செலவழிப்பது வீண் என எண்ணுகிறேன்.
முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டவுடன் நேரடி என பிலாக்கணம் செய்வது மதவாதிகளின் வாடிக்கை தான். நான் ஏற்கனவே பலமுறை தெளிவாக அறிவித்திருக்கிறேன், நேரடி விவாதம் எதற்கும் நான் தாயாரல்லன் என்று. இதை ஒரு தனிப்பதிவாகவும் கூட வெளியிட்டிருக்கிறேன். அதன் பிறகும் நேரடியாய் வந்தால் தான் ஆயிற்று என்பவர்களை என்ன சொல்லி அழைப்பது?
பதிவர் சுவனப்பிரியன் எழுத்தில் தெரிவித்த கருத்துக்கு, நான் எழுத்தில் மறுப்பு தெரிவித்திருக்கிறேன். இதற்கு அவர் எழுத்தில் பதிலளிப்பதில் என்ன பிரச்சனை? எழுத்தில் பதிலளிக்க மறுப்பதற்கு காரணங்களாக சிலவற்றை தெரிவித்திருக்கிறார். 1) நேரமின்மை, 2) முகம் தெரியாமல் இணையத்தில் விவாதிப்பதில் பலனில்லை, 3) நேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும். இந்த மூன்று காரணங்களும் தவறானவை.
தனக்கு அதிகமாக நேரம் கிடைப்பதால் தான் இணையத்தில் அதிகம் எழுதிக் கொண்டிருப்பதாக அவரே அண்மை பதிவொன்றில் தெரிவித்திருக்கிறார். அதாவது, தனக்கு கம்பனி செலவிலேயே இணைய தொடர்பு கிடைத்திருப்பதாலும், 2மணி நேரம் மட்டுமே அலுவலக வேலை இருப்பதாலும், குடும்பம் உடனில்லாமல் தனியாக இருப்பதாலும் சொந்த வேலைகள் போக நாள் ஒன்றுக்கு 11 மணி நேரம் தனக்கு நேரம் கிடைப்பதால் தான் தன்னால் அதிகம் எழுத முடிகிறது என்று அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார். ஆனால் இங்கு தனக்கு நேரம் இல்லை என்கிறார். ஏன் பதிவர் சுவனப்பிரியன் தனக்குத் தானே முரண்பட வேண்டும்? எனவே, நேரமின்மை என்பது தவறான காரணம்.
ஒரு பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு முகம் தெரிந்திருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனையா? கருத்தை கருத்தால் எதிர் கொள்வதற்கு முகம் எதற்கு? நேரடியாக தோன்ற வேண்டும் என்பது எதற்கு? முகம் தெரிவதும், தெரியாமலிருப்பதும் இந்த கருத்துப் பரிமாற்றத்தில் என்ன பங்களிப்பை செய்துவிட முடியும்? இணையப் பரப்பில் எனக்கு முன்பிருந்தே செயல்பட்டுக் கொண்டிருப்பவர் பதிவர் சுவனப்பிரியன். அவர் இதுவரை ஏத்தனையோ பேர்களிடம் விவாதித்திருக்கிறார், கேள்வி கேட்டிருக்கிறார், பதில் கூறியிருக்கிறார். அவர்கள் அனைவரிடமும் முகம் தெரிந்து நேரடியாகத்தான் உரையாடினாரா? அல்லது முகம் தெரியாத யாரிடமும் அவர் விவாதித்ததில்லையா? என்றால் இப்போது மட்டும் ஏன் நேரில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? எனவே, முகம் தெரியாமல் இணையத்தில் விவாதிப்பதில் பலனில்லை என்பது தவறான காரணம்.
நேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும், எழுத்து விவாதத்தில் முடிவை எட்ட முடியாது என்பது பிழையான புரிதல் ஒரு விவாதத்தில் முடிவை எட்ட வேண்டுமென்றால், விவாதிக்கும் இருவரும் நேர்மையுடனும், தேடலுடனும், பரிசீலனையுடனும் அந்த விவாதத்தை அணுக வேண்டும். அப்போது தான் அந்த விவாதத்தில் சரியான முடிவை எட்ட முடியும். மாறாக முன் முடிவுடன் தன்னுடைய கருத்தைத் தவிர வேறெதையும் பரிசீலிக்க மாட்டேன் எனும் நிலையெடுத்தால் அந்த விவாதத்தில் முடிவை எட்ட முடியாது. நேரடி விவாதம் என்றாலும் எழுத்து விவாதம் என்றாலும் இதில் ஒன்று தான். ஆக விவாத நேர்மையுடன் இருக்கிறோமா? இல்லையா? என்பது தான் முக்கியமே தவிர நேரடி விவாதமா? எழுத்து விவாதமா? என்பது இங்கு முக்கியம் இல்லை. எனவே, நேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும் என்பது தவறான காரணம்.
ஏற்கனவே, செங்கொடி தளத்தில் நடந்த விவாதங்களை பதிவர் சுவனப்பிரியன் சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த அத்தனை விவாதங்களிலும் எனக்கு எதிர்நிலையில் நின்று விவாதித்த அனைவரும் விவாத நேர்மையற்று விவாதித்தார்கள் என்பதை அவர்களின் வாதங்களிலுருந்தே எடுத்துவைத்து என்னால் நிருவ முடியும். அதேநேரம் என்னுடைய வாதங்களிலிருந்து நான் விவாத நேர்மையின்றி விவாதித்திருக்கிறேன் என்று பதிவர் சுவனப்பிரியனோ அல்லது வேறு எவரோ நிருவ முடியுமா? விவாத நேர்மையுடன் விவாதிக்க எப்போதும் நான் ஆயத்தமாகவே இருக்கிறேன், அந்த விவாத நேர்மை பதிவர் சுவனப்பிரியனுக்கு இருக்கிறதா? என்பது தான் இங்கு கேள்வியின் மையமாக இருக்கிறதேயன்றி, நேரடியாகவா? எழுத்திலா? என்பதில் இல்லை.
நான் ஏன் நேரடியாக விவாதிக்க விரும்புவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையான காரணம் நான் செங்கொடியாக என்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பது. அதனால் தான் நான் எழுத்தில் மட்டுமே நின்று கொண்டிருக்கிறேன், களத்தில் நான் வேறு தன்மைகளுடன் இருப்பேன். ஆனால் பதிவர் சுவனப்பிரியன் போன்றவர்கள் அப்படி அல்லர். அவர்கள் என்ன அடையாளத்துடன் எழுதுகிறார்களோ, அதே அடையாளத்துடன் அவர்கள் உலவவும் செய்கிறார்கள். இந்த வேறுபாட்டை புரிந்திருப்பதால் தான் அவர்களால் நேரடி விவாதம் என்பதை திரையாக பயன்படுத்த முடிகிறது. மற்றப்படி செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதெல்லாம் ஒரு பொன்மாற்று தான். என் சார்பில் யாரையேனும் விவாதிக்கச் செய்தால் அது நான் விவாதிப்பது போலாகுமா? பதிவர் சுவனப்பிரியன் பதிவுக்கு எதிரான என் பதிவு எழுப்பும் கேள்விகளுக்கு பதில் என்ன? இரண்டில் எது சரி? என்பது தான் இங்கு பிரச்சனை. தன்னிடம் பதில் இல்லை என்றால் நேர்மையாக அதை தெரிவிக்கலாம். அல்லது அறிந்தவர்களிடம் கேட்டுச் சொல்ல அவகாசம் வேண்டும் என்று கேட்கலாம். அல்லது என்னிடம் பதில் இல்லை வேறு யாரிடமும் கேட்டுச் சொல்லவும் இயலாது என்பன போன்று கூறிவிடுவது தான் நேர்மையானவர்களின் செயல். மாறாக நேரடியாக வாருங்கள் நான் செலவை ஏற்றுக் கொள்கிறேன், முடியாவிட்டால் வேறு யாரையாவது அனுப்புங்கள் என்பதெல்லாம் ஏமாற்று.
நண்பர் மணி இங்கு தொடக்கத்திலிருந்தே கவனித்து வாருங்கள், பதிவர் சுவனப்பிரியன் பதிவில் தொக்கி நிற்கும் அனைத்து அம்சங்களையும், பின்னர் அவர் அளித்து வந்த பதில்களின் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து பதிலெழுதி வருகிறேன். ஆனால் என்னுடைய பதில் எதனையும் பதிவர் சுவனப்பிரியன் பரிசீலித்து பதிலளிக்கவில்லை. முதலில் வழவழா கொளகொளா என்று குறிப்பிட்டார். பின்னர் நேரடியாக விவாதிக்க வாருங்கள் என்கிறார். ஆனால் கடைசி வரை பதிலில்லை. இது போன்றவர்களிடம் நேரடியாக விவாதித்து என்ன பயன்? எழுத்தில் விவாதித்து என்ன பயன்? பலன் எதுவும் இருக்கப்போவதில்ல என்பதால் தான் இதில் நேரம் செலவழிப்பது வீண் என்று சொல்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
செங்கொடி,
உங்களுக்கு சுவனப்பிரியன் நீண்டதொரு விளக்கம் அளித்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.
http://suvanappiriyan.blogspot.in/2015/02/blog-post_5.html?showComment=1423772087359#c6893671882857445014
நண்பர் மணி,
இப்போதும் அவர் திசைமாறி என்ங்கெங்கோ சென்று ஏதேதோ பேசியிருக்கிறார். இதற்கு விளக்கமாகவே பதிலளிக்க வேண்டியதிருக்கிறது. எனவே, தனி பதிவாகவே அதனை இடுகிறேன்.