மதவாதி என்பதற்கான இலக்கணத்தை கொஞ்சமும் விட்டு விலகாமல் கடைப்பிடிக்கிறார் சுவனப்பிரியன். விசயத்தை குழப்புவது, தெளிவாகத் தெரியும் உண்மைகளை மறுப்பது, சுற்றி வளைப்பது, எது பேசுபொருளோ அதைத் தவிர மற்றெல்லாவற்றையும் பேசுவது, யதார்த்தத்தை பரிசீலிக்காமல் தான் சொல்வது மட்டுமே சரி என குருட்டுத்தனமாக வாதிடுவது இவைகளெல்லாம் மதிவாதியின் இலக்கணம். இவை அனைத்தும் சுவனப்பிரியனிடம் ஒருங்கே குடி கொண்டிருக்கின்றன. இந்த உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? சூழலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? மனிதன் எங்கணம் எதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்? அதிலிருந்து மீள்வதற்கு அவர்கள் என்னென்ன வழிமுறைகளைக் கையாள்கிறார்கள்? இது போன்ற எந்தக் கேள்விகளும் ஆய்வுகளும் சிந்தனைகளும் பதிவர் சுவனப்பிரியனிடம் இல்லை. நெருப்புக்கோழி தனக்கு ஓர் ஆபத்து என்று கருதினால் பாலை மணலில் தலையை புதைத்துக் கொண்டு தானே மறைந்து விட்டதாய் கற்பனை செய்து கொள்ளுமாம். அதுபோல தன் மதத்தில் தலையை புதைத்துக் கொண்டு அனைத்துமே அப்படி இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்.
இங்கு பிரச்சனை என்ன? சுவனப்பிரியன் தன்னுடைய மதத்தை பரப்புரை செய்து பலப்பல பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறார். அது குறித்து கவனம் கொள்ள எதுவுமில்லை. அப்படியான ஒரு பதிவை மணி என்பவர் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வந்து “இது ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது உங்கள் கருத்து என்ன?” என்று கேட்கிறார். இதனால் அந்தப் பதிவில் கவனம் கொள்ள நேர்ந்தது. அப்படி என்ன இருந்தது அந்தப்பதிவில்?
நாத்திகர்களுக்கு நரகம் என்பது சரியா? எனும் கேள்வியை எடுத்துக் கொண்டு பதில் கூறுகிறார். அதில் நேரடியாக பதில் கூறாமல் ஒரு உதாரணம் கூறி அதையே பதிலாக முன்வைக்கிறார். இதை மறுத்து நேரடியாகவும், சுவனப்பிரியன் கூறிய உதாரணம் வழியாகவும் எடுத்துக்கொண்டு அவர் எழுதியது தவறு என்பதை விளக்கி “கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்” எனும் தலைப்பில் பதிவொன்றை எழுதினேன். இதை நண்பர் மணி பதிவர் சுவனப்பிரியனிடம் எடுத்துச் சொல்கிறார். இதற்கு பதிவர் சுவனப்பிரியன் என்ன செய்திருக்க வேண்டும்? ஒன்று, அதை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். இரண்டு, அதற்கு முறையாக மறுத்து பதிலெழுதியிருக்கலாம். ஆனால் பதிவர் சுவனப்பிரியன் என்னுடைய பதில் வழவழா, கொளகொளா என்றிருப்பதாக குறிப்பிடுகிறார். இதற்கு நான் அவரிடம் விளக்கம் கேட்டேன், என்னுடைய பதில் எந்த விதத்தில் வழவழா கொளகொளா என்றிருக்கிறது என்பதை விளக்குங்கள் என்று? இதற்கும் அவர் பதிலெழுதவில்லை. மாறாக நேரடியாக விவாதிக்க வந்தால் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். அதாவது, நாத்திகர்களுக்கு நரகம் சரியே என அவர் எழுதியது குறித்தல்ல. பொதுவாக கடவுள் குறித்து ஏற்கனவே பலமுறை எழுதப்பட்டிருக்கிறது என்பதால் பதில் எழுதுவதை விட எழுத்து விவாதமாக செய்யலாம் என நான் அழைப்பு விடுத்ததற்கு மறு மொழியாக நேரடியாக வாருங்கள் என்று கூறினாரே தவிர எந்த பதிவு குறித்து பேசிக் கொண்டிருக்கிறோமோ அது குறித்து எதுவும் எழுதவில்லை. மீண்டும் நான் அவருக்கு இதை நினைவுபடுத்துகிறேன். நேரடி விவாதமா எழுத்து விவாதமா என்பது இங்கு பொருட்டல்ல. எழுதப்பட்ட பதிவுக்கும் மறுப்புக்கும் உங்கள் பதில் என்ன என்பதே மையமான பிரச்சனை என்றேன். இப்போது மீண்டும் பதிவர் சுவனப்பிரியன் எதையெல்லாமோ சுற்றிவளைத்து பேசுகிறாரே தவிர அந்த பதிவு குறித்து எதுவும் பேச பிடிவாதமாக மறுக்கிறார். ஏன் இப்படி இருக்க வேண்டும்? தனக்கு பதில் தெரியாது என்றோ, தன்னால் பதில் சொல்ல முடியாது என்றோ சொல்லுவதில் அவருக்கு என்ன பிரச்சனை. இதைத்தான் வறட்டுப் பிடிவாதம் என்பது. என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சமும் பரிசீலிக்காமல் கூறியதை மறைக்க வேறொன்று அதை மறைக்க இன்னொன்று என்று கூறிக் கொண்டிருப்பது என்ன விதமான மனநோய்?
மீண்டும் ஒன்றை தெளிவுபடுத்து விடுகிறேன். பதிவர் சுவனப்பிரியன் எடுத்து வைக்கும் எதையும் பரிசீலித்து சரி என்றால் ஏற்பதற்கும் தவறு என்றால் மறுப்பதற்கும் எப்போதுமே நான் ஆயத்தமாக இருக்கிறேன். இது என்னுடைய நேர்மை. இதுபோன்ற நேர்மையை காட்ட பதிவர் சுவனப்பிரியன் ஆயத்தமாக இருக்கிறாரா? என்பதே என் முதல் கேள்வி. அவ்வாறில்லாமல் மீண்டும் மீண்டும் ஏதேதோ பேசி சுற்றிச் சுற்றி வந்தால் மன்னிக்கவும் எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. அவருக்கும் தொழுவது துஆ கேட்பது என்று ஏராளமான வேலைகள் இருக்கும். இருவரின் நேரமும் வீணாகாமல் இருப்பதற்கு அதுவே வழி. இனி அவர் எழுதியிருப்பதற்குள் செல்லலாம்.
பதிவர் சுவனப்பிரியன் தொடக்கத்திலிலேயே, பொய்யிலிருந்தும் காரியவாத முன்முடிவிலிருந்தும் தொடங்குகிறார். \\\நாத்திகர்களுக்கு விவாதம் ஒரு பொழுது போக்கு/// இது காரியவாத முன்முடிவு. \\\எதையுமே நம்பாத ஒருவன்/// இது பொய், நாத்திகவாதிகள் கடவுளின் இருப்பத்தான் நம்ப மறுக்கிறார்களே தவிர தம் வாழ்வில் பலதை நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகில் அறிஞர்கள் பலரும் கேள்வி கேட்பதையை அறிதலுக்கான முதல்படி என்றுதான் கூறியிருக்கிறார்கள். ஆனால் மதவாதிகளுக்கு மட்டுமே கேள்விகள் பிடிப்பதில்லை. ஏனென்றால் கேள்விகள் அவர்களின் மதவாதத்தை சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன. அவர்களின் மதவாதமோ வெற்று நம்பிக்கைகளின் மேல், மூடநம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. அதனால் தங்களை பரிசீலிக்கக் கோரும் எதனையும் அவர்கள் விரும்புவதில்லை. பதிவர் சுவனப்பிரியன் என்னுடைய மறுப்பு நேரடியாக பதில் கூறாமல் சுற்றிச்சுற்றி வருவதும் அதனால் தான். மீண்டும் நான் கூறுகிறேன். முடிவை எட்ட வேண்டும் என்றால் அங்கு நேர்மை இருக்க வேண்டும், பரிசீலனை இருக்க வேண்டும். பரிசீலனையும், நேர்மையும் இல்லாத விவாதம் நேரத்தை வீணாக்கத்தான் செய்யும். என்னிடம் அந்த நேர்மையும் பரிசீலனையும் இருக்கிறது. பதிவர் சுவனப்பிரியனுக்கு அவை இருக்கின்றவா என்பதே இவ்விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும். மற்றதெல்லாம் வீண் தான். அதேநேரம் யார் நேரத்தை வீணாக்க முயல்கிறார்கள் என்பதையும் இது காட்டிக் கொடுத்துவிடும்.
\\\அவர் என்னிடம் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கான பதில் அவரது தளத்திலும் எனது தளத்திலும் பலமுறை கொடுத்தவைகளே! அதனை திரும்பவும் தோண்ட நான் விரும்பவில்லை/// நான் கேட்க விரும்பிய அல்லது நான் ஏற்கனவே காட்ட கேள்வி எதற்கும் பதிவர் சுவனப்பிரியனிடம் பதில் இல்லை. இருந்தால் தாராளமாக எடுத்துக் காட்டலாம். முன்னர் எனக்கும் பதிவர் சுவனப்பிரியனுக்கும் இடையான பதிவுப் பரிமாற்றங்கள் தொடர்பான சுட்டி முந்திய பதிவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலிருக்கும் எதற்காவது பதில் எழுதி இருப்பாரானால் பதிவர் சுவனப்பிரியன் சுட்டிக் காட்டட்டும். கவனிக்காமல் இருந்ததற்காக வருத்தம் தெரிவித்துவிட்டு, அவருடைய பதிவு சரி என்றால் ஏற்றுக் கொள்வதற்கும், தவறு என்றால் விளக்கமாக அதை மறுப்பதற்கும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். சுட்டிக்காட்ட பதிவர் சுவனப்பிரியன் ஆயத்தமாக இருக்கிறாரா என்பதை தெரிவிக்கட்டும். மாறாக இப்படி பொதுமைப்படுத்திக் கூறுவது தங்கள் உள்ளீட்டை மறைக்கும் ஓர் உத்தி என்றே நான் கருதுகிறேன்.
அடுத்த பத்தியில், கம்யூனிசம் சாதிக்காததை இஸ்லாம் சாதித்திருப்பதாக கூறுகிறார். என்ன சாதித்திருக்கிறது என்பதை கூற முன்வந்தால், எது சாதனை? எது வேதனை? என அதை விரிவாக அலசலாம். என்றாலும் அதற்காக ஓர் ஒப்பீட்டை அவர் பயன்படுத்தியிருக்கிறார், \\\கம்யூனிஷம் வீழ்ந்து அந்த நாடுகளில் இஸ்லாம் மறுமலர்சி பெற்று வருவதை தினமும் பார்கிறோம்/// கம்யூனிசம் அந்த நாடுகளில் வீழ்ந்து என்பதில் அவர் குறிப்பிடுவது என்ன? இதை நாம் பலமுறை கேள்களாக எழுப்பியிருக்கிறோம். பதில் கூற முடியாதவர்கள் மீண்டும் மீண்டும் இதை எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். இதை பதிவர் சுவனப்பிரியன் விரிவாக விவாதிக்க முன்வந்தால் எது வீழ்ந்திருக்கிறது எது எழுந்திருக்கிறது என்பது தூலமாக எடுத்துக்காட்டலாம்.
நம்முடைய சிந்தனையை இப்பேரண்டத்தில் உலவவிட வேண்டும் என்கிறார் பதிவர் சுவனப்பிரியன். அப்படி உலவ விட்டால் அது கடவுள் இல்லை எனும் முடிவுக்குத்தான் நம்மை இட்டுச் செல்லுமேயல்லாது கடவுள் இருக்கிறார் எனும் முடிவுக்கல்ல. மற்றப்படி குரானுக்குள் அறிவியல். ஓதத்தெரியாத உம்மிநபி என்பதெல்லாம் மதவாதப் பூச்சாண்டிகள். பதிவர் சுவனப்பிரியன் முன்வந்தால் அந்தப் பூச்சாண்டிகளை பிரித்து, அலசி, காயப் போடலாம். பதிவர் சுவனப்பிரியனுக்கு வசதி எப்படி? இதில் அவர் பயன்படுத்தியிருக்கும் வாசகங்களைப் பாருங்கள். \\\இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கும் இறை வேதமான குர்ஆனுக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. இது இறை வேதம்தான் என்பதற்கு இதை விட ஒரு சாட்சி நமக்கு தேவையில்லை/// அதாவது அறிவியலுக்கும் வேதத்துக்குமான வித்தியாசத்தை அவரால் பார்க்க முடியவில்லையாம், அதனால் நமக்கு சாட்சி தேவையில்லையாம். வார்த்தைகளுக்குள் ஒழிந்து கொள்வது என்பது இதைத்தானா?
மதமும் வேதமும் பரவிவருகிறது என்பது எல்லா வண்ண மதவாதிகளும் கூறுவது தான். இது குறை உண்மை. பொய்யைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை. இஸ்லாம் பாரவுகிறது என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். கிருஸ்தவம் பரவுகிறது என்று கிருஸ்துவர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய வலைதலங்களை பார்வையிடுங்கள். பார்ப்பனிய மதமும் கூட எங்கள் கலாச்சாரத்தில் இணைகிறார்கள் என்று அவ்வப்போது கரடி விடுகிறது. இவை எல்லாவற்றையும் விட கம்யூனிசத்திற்கான ஆதரவு விரிகிறது என்று முதலாளித்துவ அறிஞர்களே கூறுகிறார்கள். அது மட்டுமா? கொலை கொள்ளை வன்புணர்வு நடத்தும் ஆணாதிக்க மிருகங்களும் கூடிக் கொண்டே போகிறார்கள் என்று நாளிதழ்களிலிருந்து அறிய முடிகிறது. இது மட்டும் தானா? தாயிப் நகரில் சாக்கடைக்குள் நூற்றுக்கணக்கான குரான்கள் வீசப்பட்டுக் கிடந்தன? இவைகளுக்கெல்லாம் காரணம் என்ன? மதவாதிகளால் இதற்கு பதில் கூற முடியாது. வேண்டுமானால் பதிவர் சுவனப்பிரியன் கூட இதற்கான பதிலை கூறிப் பார்க்கட்டும். மார்க்க்சியத்தில் மட்டுமே இதற்கு சரியான பதில் இருக்கிறது. ஏகாதிபத்தியச் சுரண்டல் மக்களை வாழ வழியில்லாமல் செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்வாதாரங்கள் பறிபோவதால் எதிர்காலம் குறித்த பயம் வருகிறது. அதனால் அவரவர் வழிகளில் அவரவர் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள், மாற்றிக் கொள்கிறார்கள். இது தான் மதம் மீதான ஆழ்ந்த நம்பிக்கைக்கும், மதம் மாறுவதற்கும், அராஜகம் செய்வதற்கும் சரியான வழியான புரட்சிகர மார்க்சியம் பக்கம் வருவதற்கும் வழிசமைக்கிறது. இதை அவரவர் மதம் சார்ந்து விளம்பரப்படுத்திக் கொள்வது அவரவர்களின் போதாமையைக் காட்டுமேயல்லாது, அறிவு விலாசத்தைக் காட்டாது.
இத்தனை ஆண்டுகள் எழுதியும் ஒருவரைக் கூட மாற்ற முடியவில்லை. மனைவியைக் கூட மாற்ற முடியவில்லை என்றெல்லாம் தேவையில்லாமல் கதை சொல்லி இருக்கிறார் பதிவர் சுவனப்பிரியன். இதெல்லாம் அறியாமையின் வெளிப்பாடு. ஒருவரின் மதத்தை மாற்றி அவரை நாத்திகராக்குவது என்னுடைய வேலையே இல்லை. ஆனால் சமூக, அரசியல் நிலைபாடுகளில் புரிதலை ஏற்படுத்தி வாழ்வின் சரியான திசையை காட்டுவதன் மூலம் மதம் உட்பட அனைத்துவித சுரண்டல் தனங்களை எதிர்த்து போராட வைக்கிறோம். இதில் தான் தனியொருவருக்கு மட்டுமல்ல சமூகத்துக்கான வாழ்வே இருக்கிறது. அப்படி எத்தனையோ இளைஞர்கள் பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து பக்குவப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பன்றிக்குப் பிறந்தது பன்றிக் குட்டி என்பது போல முஸ்லீமுக்கு பிறந்தவன் முஸ்லீம் என்பது போல் கம்யூனிஸ்டுக்கு பிறந்தவன் கம்யூனிஸ்ட் என்று எங்களால் கணக்கு வைத்துக் கொள்ள முடியாது. என்னுடைய மனைவி குறித்து பதிவர் சுவனப்பிரியன் தானாக கற்பனை செய்து கொண்டாரா? இல்லை யாரிடமேனும் கேட்டாரா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் குடும்பத்திலுள்ளவர்கள் இஸ்லாத்தையும், குரானையும் காறித் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பதிவர் சுவனப்பிரியனுக்கு தகவல் கொடுத்தவருக்கு தெரியவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்.
எல்லாம் முடிந்த பிறகும் மதவாதிகள் கடைசியாக நீட்டி முழங்கும் விசயம் ஒன்று இருக்கிறது. மதத்தை நம்புபவர்கள் இவ்வுலக வாழ்வில் செழுமையாக வாழ்கிறார்கள். கடவுள் இல்லை என்றாலும்கூட அவர்களுக்கு இழப்பு ஒன்றுமில்லை. ஆனால் இருந்துவிட்டாலோ நாத்திகர்கள் நட்டமடைந்தவர்கள் ஆவார்கள் என்பது தான் அந்த கடைசி விசயம். மனிதர்கள் இந்த பூமியில் வாழ்வதைத்தவிர வேறொரு வாழ்க்கை அவர்களுக்கு இல்லை. இந்த உலகில் இருக்கும் வரை யாரும் யாரையும் எந்த விதத்திலும் சுரண்டக் கூடாது. அப்படி சுரண்டினால் அதை அனுமதிக்க முடியாது. அதற்கு எதிராக போராடுவேன் என்று வாழும் வாழ்க்கையே சரியான வாழ்க்கை. இந்த அடிப்படையில் வாழாத எவரும் சரியான வாழ்க்கை வாழ்ததாக கூறிக் கொள்ள முடியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் இருப்பதை வாழ்க்கை என்று அறுதியிட முடியாது. அந்த இடைப்பட்ட காலத்தில் இருப்பதில் அல்ல, வாழ்வதிலேயே இருக்கிறது வாழ்க்கை. ஒருவன் மதநம்பிக்கையாளனாக செல்வ வளங்களுடன் வாழ்ந்து மரிக்கிறான் என்று கொள்வோம். மரணத்தின் பிறகான வாழ்தல் ஒன்றில்லை என்றானால், இருக்கும் ஒரே வாழ்க்கையையும் அவன் வீணடித்தவனாவான். பிறந்தது முதல் இறப்பது வரை எதை அடிப்படையாய் வைத்து எல்லா முடிவுகளையும் ஒருவன் எடுக்கிறானோ அந்த ஒன்று கற்பனை, அப்படி ஒன்று இல்லை என்றாவது இருந்த ஒரு வாழ்வை மூடநம்பிக்கையால் வீணடித்து விட்டான் என்றாகாதா? இது அவனுக்கு நட்டம் இல்லையா? ஒருவேளை கடவுள் இருந்து நியாயத் தீர்ப்பு நாளில் கடவுள் முன் தோன்றினால் அவனை சட்டையைப் பிடித்து உலுக்கி, “ஏனடா நீ பொம்மையைப் போல் விளையாடியதற்கு எனக்கெதற்குடா தண்டனை” என்று கேள்வி எழுப்புவான் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட். அதற்கான நெஞ்சுரமும், நேர்மைத் திறமும் புரட்சிகர கம்யூனிஸ்டுகளிடம் மட்டுமே இருக்கும். ஏனென்றால் பூமியிலும் அவர்கள் அவ்வாறே வாழ்ந்திருக்கின்றனர். எனவே, மதவாத வறட்டுக் கற்பனைக் கதைகளெல்லாம் எடுபடாது.
பூமி இருக்கும் வரை எந்த ஒரு முஸ்லீமையும் மாற்ற முடியாது என்று எழுதி வைத்துக் கொள்ளச் சொல்கிறார் பதிவர் சுவனப்பிரியன். பூமி இருக்கும் வரை என்றெல்லாம் இழுக்க வேண்டாம். பதிவர் சுவனப்பிரியன் ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் தரட்டும், “கூறப்படும் விசயங்களை பரிசீலனையுடன் பார்த்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்வேன், தவறாக இருந்தால் விட்டுவிலகுவேன்” என்ற ஒரே ஒரு உறுதிமொழியை மட்டும் என்னிடன் தரட்டும். பதிவர் சுவனப்பிரியனை நான் கம்யூனிஸ்டாக மாற்றிக் காட்டுகிறேன். இது சவால். ஏற்றுக் கொள்ளும் துணிவு இருக்கிறதா பதிவர் சுவனப்பிரியனிடம்.
//சுவனப்பிரியனை நான் கம்யூனிஸ்டாக மாற்றிக் காட்டுகிறேன். இது சவால்.//
அருமையான சவால்.
\\\இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கும் இறை வேதமான குர்ஆனுக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. இது இறை வேதம்தான் என்பதற்கு இதை விட ஒரு சாட்சி நமக்கு தேவையில்லை///
இப்பொழுதுதான் ஒரு சவூதி உலாமா உலகம் சுற்றவில்லை என்ற பேருண்மையை கண்டு பிடித்து சொல்லி இருக்கிறார். குரான் அறிவியலென்றால் சும்மாவா?
அவர் சொன்னது, உலகம் சுற்றுகிறது என்பது உண்மையானால், சர்ஜாவில் விமானம் பறக்க ஆரம்பித்தவுடன் சீனா வந்துவிட வேண்டும் (பூமி தன் பக்கம் சுற்றினால்). இதே எதிர்ப்பக்கம் சுற்றினால் சீனாவுக்கு போய் சேரவே முடியாது. ஆக உலகம் சுற்றுவது என்பது சுத்தப் பொய் என்று தகுந்த ஆதாரங்களுடன் நீரூபித்து இருக்கிறார். 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த படிப்பறிவு இல்லாத ஒரு மனிதரால் எப்படி இப்படிப் பட்ட பேருண்மை பொதிந்த புத்தகத்தை எழுத முடியும் ? ஆக குரான் இறை வேதமே என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார்கள்.
http://english.alarabiya.net/en/variety/2015/02/16/Saudi-cleric-Sun-revolves-around-stationary-Earth.html
https://www.facebook.com/groups/theist.vs.atheist/permalink/823795417686783/
சவுதி செய்யிறது எல்லம் இஸ்லாம் /ஷரியா இல்லை
ஐ எஸ் ஐ எஸ் அல்கொய்தா இஸ்லாமியர்கள் இல்லை
அரபுகள் அமேரிக்க அடிவருடிகள்
அப்படின்னு இங்கு பொங்கும் தவுஹீத் டவுசர்கள்
டி என் டி ஜே தம்மாம் மண்டலம்
டி என் டி ஜே மதீனா மண்டலம்
டி என் டி ஜே ரியாத் மண்டலம்
டி என் டி ஜே ஜெட்டா மண்டலமுன்னு
பல கிளைகளை சவுதியில் வைத்திருக்கிறார்கள்.
அங்கு
நேரடி விவாத சவால்.
ஒரு பொதுக்கூட்டம்
அட ஒரு பிட்டு நோட்டிசு அடிச்சு இதை சொல்லிவிட்டு
தலை சுன்னத்து செய்யபடாமல் தப்பித்துவர முடியுமா?
அஞ்சுவதும் அடிபனிவது அல்லா ஒருவனுக்கே
என்ற கோஷமெல்லாம் காபீர் நாடுகளில் மட்டும்தானா?
ஷரியா படி ஆளும் நாடுகளில் இல்லையா?
Like ·
வீரா பாலு, Makkal Pirathinithi, வால் பையன் and 27 others like this.
Siva Ganesh பதில் சொல்ல நபிக்களின் வாரிசுகளை காணோமே….
19 hrs · Like · 1
Ravi Kumar first ball Wicket…….
7 hrs · Like · 1
Rameesh Riyan அரைகுறை நாத்திக மதத்தினர் எனபது எப்பவும் , உண்மைதான், பகுத்தறிவற்ற நாத்திக மத நண்பருக்கு, இஸ்லாத்தைப்பற்றி புரிதல்தான் இல்லை என்றால்,
மன்னர் ஆட்சி என்றால் என்ன, என்ன சட்டம் என்று கூட தெரியவில்லை,…See More
4 hrs · Like
மனிதம் மட்டும் அஞ்சுவதும் அடிபனிவதும் அல்லா ஒருவனுக்கே(இது மன்னர் ஆட்சியில் வேலை செய்யாது)அப்படின்னு ஸ்டார் போட்டு விளக்கமா சொல்லுங்க பாய்?