சுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 3
எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவு, “செத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செங்கொடி”
இந்த பதிவுக்கு செல்லும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்தி விடுவது சரியாக இருக்கும்.
- முதல் பதிவான “கள்ள உறவுக்குள் சிக்கிக் கொண்ட கடவுள்” என்பதற்கு பதிவர் சுவனப்பிரியன் இதுவரை எந்தப் பதிலையும் தரவில்லை. எனவே, அதற்கு முதலில் பதில் தர வேண்டும். அடுத்த பதிவில் க.உ.சி.க குறித்து அவர் பதிலேதும் தரவில்லை என்றால் பதிவர் சுவனப்பிரியன் என்னுடைய அந்தப் பதிவை ஏற்றுக் கொண்டார் என்று எடுத்துக் கொண்டு, அந்த அடிப்படையிலேயே வாதங்கள் கொண்டு செல்லப்படும். அதை பதிவர் சுவனப்பிரியனும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மறுத்து எதையும் கூறமுடியாத போது அவரால் மறுக்க முடியாதது சரியானது என்பதே பொருள். சரியான ஒன்றை ஏற்றுக் கொள்வது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பொது உண்மை. ஆகவே, பதிவர் சுவனப்பிரியன் மறுக்க வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டும். எதையும் செய்யாமல் கள்ள மவுனம் சாதிப்பது என்னுடைய நேரத்தை வீணாக்கும் செயல். அதை அனுமதிக்க முடியாது.
- ஒரு நாளுக்கு பதினோரு மணி நேரம் இருக்கும் போதே எழுத்து விவாதம் செய்வதற்கு தனக்கு நேரமில்லை என்றார் பதிவர் சுவனப்பிரியன். ஆனால், இப்போது தொடர்ச்சியாக மூன்று பதிவுகளை இட்டிருக்கிறார். இதன் மூலம் முன்னர் தாம் சொன்னது பொய் என்றும், எழுத்து விவாதம் செய்வதற்கு போதிய நேரம் இருக்கிறது என்றும், எழுத்து விவாதம் செய்வதற்கு தனக்கு விருப்பமிருக்கிறது என்றும் இதன் மூலம் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். நன்றி.
விவாதமென்று ஆகிவிட்டபின் விதிமுறைகள் இல்லாமலா?
- ஒரு பதிவு வெளியிடப்பட்டதிலிருந்து அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் என்னுடைய பதிவை நான் வெளியிட்டுவிடுவேன். இயலாதபட்சத்தில் ஐந்து நாட்களுக்குள் தாமதத்திற்கா காரணத்தைக் கூறி இன்னும் எத்தனை நாள் அவகாசம் வேண்டும் என்பதையும் கோரிவிடுவேன். இது குறித்து பதிவர் சுவனப்பிரியன் தன் கருத்தைக் கூறினால் ஒரு ஒழுங்கை கொண்டு வந்து விடலாம்.
- கேட்கப்படும் கேள்விகளை எந்த விதத்திலும் திசை திருப்பாமல், சரியான கோணத்தில் பதில் சொல்வேன் என்றும், தேவையற்ற திசைதிருப்பல்களோ, குறிக்கோளற்று பதில் கூறுவதோ, பதில் கூறாமல் கடந்து செல்வதோ இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன். இதேபோன்ற உறுதிமொழியை பதிவர் சுவனப்பிரியனிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.
- என்னுடைய வாதங்களை தகுந்த உள்ளீடுகளுடனும், விவாதத்தை தேடல்களுடன், விவாத நேர்மையுடன் நகர்த்திச் செல்வேன் என்றும், என்னுடைய வாதங்களில் தவறிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு அது சரியாகவும் இருந்தால் தயங்காமல் அவற்றை ஏற்று மாற்றிக் கொள்வதில் எந்த வித அசூயையும் எனக்கு இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன். இதேபோன்ற உறுதிமொழியை பதிவர் சுவனப்பிரியனிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.
- இந்த விவாதத்திலிருந்து நானாக முறித்துக் கொண்டு வெளியேறிச் செல்லமாட்டேன், இறுதி முடிவு எட்டப்படும் வரை விவாதம் சீரிய முறையில் செல்வதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்றும் உறுதியளிக்கிறேன். இதேபோன்ற உறுதிமொழியை பதிவர் சுவனப்பிரியனிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.
- இந்த விவாதம் எப்படி முடிவாகிறதோ அதனடிப்படையில் என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன். இதேபோன்ற உறுதிமொழியை பதிவர் சுவனப்பிரியனிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.
- இங்கு எதிரெதிரே நிற்பவை இஸ்லாமும் புரட்சிகர கம்யூனிசமும். வாதிடும் இருவரும் இரண்டையும் தெரிந்திருப்பது அவசியம், குறைந்தபட்சம் அடிப்படைகளேனும். அப்படியில்லாமல் இலக்கின்றி பொத்தம்பொதுவாக கூறப்படுபவைகள் அவதூறுகளாகவே கருதப்படும். இதை ஏன் இங்கொரு விதியாக குறிப்பிடுகிறேனென்றால் பதிவர் சுவனப்பிரியன் எழுதியுள்ள இரண்டாம், மூன்றாம் பதிவுகள் இந்த வகைக்குள் அடங்குபவைகளே. இதை உணாரமல் போனால் விவாதம் சீரிய முறையில் செல்லாமல், நேரம் வீணாவதில் தான் முடியும். இதை பதிவர் சுவனப்பிரியன் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன். ஏனென்றால் தர்ஹாவாதிகள், ஷியாக்களின் செயல்பாடுகளோடு ஷன்னிகளை ஒப்பிட்டால் சுவனப்பிரியன் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனபதை நான் அறிந்திருக்கிறேன். எனவே, நான் என்னுடைய வாதங்களை குரான் ஹதீஸ் அடிப்படையில் எடுத்து வைப்பதை உறுதி செய்வது போல், போலிகளின் செயல்பாட்டோடு புரட்சிகர கம்யூனிஸ்டுகளை ஒப்புநோக்க மாட்டார் என அவர் உறுதியேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
- இஸ்லாம் கம்யூனிசம் என்பவை அனைத்தையும் உள்ளடக்கியவை. எனவே, இந்த விவாதம் ஒரு தலைப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முதலில் தேர்ந்தெடுத்து அதில் நின்று விவாதித்து முடிவு கண்டபின் அடுத்ததை தொடங்க வேண்டும். எ.கா வறுமை, பாலியல், ஆணாதிக்கம் போன்று.
- பதிவு இட்டவுடன் இருவரும் குறிப்பிட்ட பதிவில் அதை தெரிவிக்க வேண்டும்.
இனி சுவனப்பிரியன் பதிவுக்கு திரும்பலாம். தன்னுடைய பதிவின் தலைப்பை செத்த கம்யூனிசம் என்று தொடங்கியிருக்கிறார்.
கம்யூனிசத்திற்கு எதிராக பேசுபவர்கள் எவரானாலும் வழக்கமாக செய்யும் அதே முதலாளித்துவ புரட்டான கம்யூனிசம் செத்துப் போய்விட்டது என்பதைக் கூறி தங்களை அச்சுப்பிசகாமல் அம்பலப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள். பதிவர் சுவனப்பிரியனும் இதற்கு விதி விலக்கல்ல.
கம்யூனிசம் செத்துப் போய் விட்டதா? ஒரு கொள்கை சமூகத்தில் தேவையற்றதாகி விட்டது, மரித்து விட்டது என்று கூற வேண்டுமாயின் முதலில் அந்தக் கொள்கை உலகில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். செயல்படுத்தும் போது எந்த நோக்கத்திற்காக அந்தக் கொள்கை உருவானதோ அதற்கு எதிர்மறையான விளைவுகளைத் தந்திருக்க வேண்டும். அப்போது தான் ஒரு கொள்கையை செத்துப் போன கொள்கை என்று கூற முடியும். ஆனால் இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை. தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது. ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது. கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை. அதைக் கொண்டு வரும் நோக்கிலான ஆயத்தங்கள் தான் சோசலிசம். அரசு என்றால் என்னவென்று புரியாமல், வரலாறு என்னவென்று தெரியாமல் கம்யூனிசம் ஒரு கட்சி என்றும், யாரோ ஆளும் ஆட்சி என்றும் பாமரத் தனத்தில் இருப்பவர்களிடம், அதிலும் அது குறித்து அறிந்து கொள்ளாவோ, தெரிந்து கொள்ளாவோ கூடாது என்ற மூடநம்பிக்கையில் இருப்பவர்களிடம் முதலாளித்துவ வாந்தியை தவிர வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.
குழந்தைப் பருவத்திலிருந்த சோசலிசத்தை அதன் எதிரி வல்லூறுகள் கிழித்துப் போட்டதினால் அந்தந்த நாடுகளில் சோசலிசம் பின்னடைவைச் சந்தித்தது. சோசலிசத்தை தாக்கி வீழ்த்துவதற்கு முதலாளியம் செய்த சதிகளும் எத்தனங்களுமே அது சரியான திசையில் இலக்கை நோக்கிச் சென்றது என்பதற்கான கட்டியம். இன்று உலகமெங்கும் கம்யூனிச திசை வழியில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இஸ்லாமிய நாடுகளும் விலக்கில்லை. கம்யூனிச நூல்களும் அதன் ஆய்வுகளும் பெருமளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன என்பதை முதலாளித்துவ ஊடகங்களால் கூட மறைக்க முடியவில்லை. இதன் பொருள் கம்யூனிசம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையல்லவா குறிக்கிறது. உலகில் இஸ்லாம் போன்ற மதங்கள் உட்பட அனைத்துவித சுரண்டல்களும் இருந்து கொண்டிருக்கும் வரை கம்யூனிசத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கும். தீர்ந்து போகாது, மரித்தும் போகாது.
செத்த கம்யூனிசம் என்று தலைப்பு வைத்திருக்கும் சுவனப்பிரியன் நேர்மையாக கீழுள்ள கேள்விகளுக்கு பதில் கூறிப் பார்க்கட்டும்.
ரஷ்யா சீனாவில் சோசலிச ஆட்சி வீழ்ந்து விட்டது எனவே கம்யூனிசம் செத்து விட்டது என்பவர்களே, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி வீழ்ந்து விட்டது. உத்மானியப் பேரரசு வீழ்ந்து அதனிடத்தில் பல தேசிய அரசுகள் வந்துவிட்டன. எனவே, இஸ்லாம் செத்து விட்டது என நான் கூறுகிறேன், மறுக்க முடியுமா உங்களால்?
இஸ்லாமிய நாடு எனும் ஹோதாவில் இன்று இருக்கும் நூற்றுச் சொச்ச நாடுகளில் எந்த நாடும் முற்று முழுதாக இஸ்லாமிய கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க இயலவில்லை, முடியவில்லை. எனவே, இஸ்லாம் செத்துப்போய் விட்டது என்று நான் கூறுகிறேன், மறுக்க முடியுமா உங்களால்?
இன்று உலகில் இருக்கும் கோடிக்கணக்கான முஸ்லீம்களில் ஒற்றை ஒருவரையாவது இஸ்லாத்தை நூறுசதம் பின்பற்றுபவர் என்று அடையாளம் காட்ட முடியுமா? என்றால் ஒருவரால் கூட பின்பற்றப்பட முடியாத, ஒருவர் கூட முழுமையாக பின்பற்றாத இஸ்லாம் செத்து விட்டது என்று நான் கூறுகிறேன். மறுக்க முடியுமா உங்களால்?
இஸ்லாம் தோன்றிய அன்றிலிருந்து இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கும் மேலாக சௌதியில் ஆட்சியில் இருக்கும் கொள்கை இஸ்லாம் தான். இஸ்லாத்தில் இருப்பதாக கூறப்படும் சமூக மேன்மையை(!), அமைதியை(!) இந்த 1400 கால ஆட்சியதிகாரத்தில் அங்கு கொண்டுவர முடிந்திருக்கிறதா? என்றால் இஸ்லாம் செத்த மதமா? உயிருள்ள மதமா?
அடுத்து, மதவாதிகளின் இலக்கணத்துக்கு கொஞ்சமும் விலகாமல் பதிவர் சுவனப்பிரியன் செயல்படுகிறார் என்று கூறியிருந்தேன். அந்த இலக்கணங்களை மேற்கோளாக எடுத்துப் போட்டிருக்கிறார் சுவனப்பிரியன். அதற்கு மறுப்புக் கூறியிருப்பார் என்று பார்த்தால், அதில் நான் செய்திருக்கும் ஒரு தட்டச்சுப்பிழையை சுட்டிக்காட்டி அதுவே நான் ஆத்திகத்தின் பக்கம் வருவதற்கான ஆதாரம் என்று கூறியிருக்கிறார். என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. (நண்பர் மணியும் தொலைபேசியில் பேசும் போது தன்னால் இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றார்) இருந்தாலும் தட்டச்சுப்பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இனி, சற்றே கவனம் கொள்கிறேன்.
பதிவர் சுவனப்பிரியனுக்கு நான் ஒரு சவால் விட்டிருந்தேன். அந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் துணிவிருக்கிறதா? என்று கேள்வியும் கேட்டிருந்தேன். இதற்கு பதிலெழுதப் புகுந்த பதிவர் சுவனப்பிரியன். இஸ்லாம் ஸ்ட்ராங்கான கொள்கையாக இருப்பதால் வேறெதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கூறியிருக்கிறார். பதிவர் சுவனப்பிரியன் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சுவனப்பிரியனிடம் கோரிக்கை விடுக்கவில்லை. மாறாக சவால் விட்டிருக்கிறேன். ஏற்றுக் கொள்ளும் துணிவிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறேன். இந்த சவாலை சுவனப்பிரியன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவருடைய சுற்றிவளைத்த பதிலிலிருந்து புரிகிறது.
இதில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. இந்த சவாலுக்கு நான் ஒரு நிபந்தனை விதித்திருந்தேன். விவாத நேர்மையுடன் பதிவர் சுவனப்பிரியன் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையுடன் கூடிய அந்த சவாலை சுவனப்பிரியன் ஏற்றுக் கொள்ள மறைமுகமாக மறுத்திருப்பதன் மூலம் அவர் ஒரு விசயத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது, தன்னிடம் விவாத நேர்மையை எதிர்பார்க்க வேண்டாம் என்பது தான் அந்த விசயம். அந்த பதிலிலிருந்து நான் அப்படித்தான் புரிந்து கொள்கிறேன். இதை பதிவர் சுவனப்பிரியன் உறுதிப்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு நேர்மையற்ற விவாதத்தை நடத்தி என்னுடைய நேரத்தை வீணடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.
இதன் பிறகு பதிவர் சுவனப்பிரியன் எழுதியிருப்பதெல்லாம் கம்யூனிசத்துக்கு எதிரான அக்மார்க் அவதூறுகள். தோழர் ஸ்டாலின் தன் மகளுக்கு இஸ்லாமிய ஆடை கண்ணியம் வடிவிலான ஆடையை அணியச் சொன்னார். கம்யூனிச வன்முறை, பெண் உழைப்பு, தீண்டாமை என்று செல்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
தோழர் ஸ்டாலின் தன் மகளுக்கு கூறியது ஒரு தந்தை மகளுக்கு இடையிலான உரையாடல். இருக்கமான ஆடைகளை அணியாதே தொளதொளப்பான ஆடைகளை அணிந்து கொள் என்பதற்கும் இஸ்லாம் கூறும் பெண்களுக்கான ஆடை அடிமைத்தனத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. நுகர்வுக் கலாச்சாரம் பெண்களை உரித்துப் பார்க்கத் துடிக்கிறது என்றால் அதன் காரணம் ஆணாதிக்கம். இதே போல் இஸ்லாமியம் பெண்களை ஆடைகளுக்குள் அடைத்துப் போடுகிறது என்றால் அதன் காரணமும் ஆணாதிக்கமே. இரண்டும் ஆணாதிக்கத்தின் இருவேறு முனைகள். வேறுபட்ட முனைகள் என்பதால் எதிரெதிரானது என்று கருத முடியாது. ஏனென்றால் இரண்டுமே ஆணாதிக்கத்தை அடித்தளமாக கொண்டிருக்கின்றன. மேலதிக விபரங்களுக்கு இந்த கட்டுரையை படிக்கவும். அல்லாவின் பார்வையில் பெண்கள், 1. புர்கா. பதிவர் சுவனப்பிரியன் உட்பட இஸ்லாமிய மதவாதிகள் அனைவரும் இந்த விசயத்தில் பொய்யையே வலிந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் கூறுவது தெளிவான, அப்பட்டமான பெண்ணடிமைத்தனம். எனவே, பதிவர் சுவனப்பிரியன் நுனிப்புல் மேயாமல் எதிலும் ஆழமான பார்வையை செலுத்துமாறு கோருகிறேன்.
இன்று கம்யூனிசம் பேசும் யாரும் தன் மனைவியை வேலைக்கு அனுப்புவதில்லை எனவே, அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்கிறார் பதிவர் சுவனப்பிரியன். பொய்யையும் புனை சுருட்டுகளையும் கட்டவிழ்த்து விட்டால் தங்களுடைய இரட்டைத்தனம் மறைந்துவிடும் என்று கருதுகிறார் போலும். அவர் இப்படி எழுதியிருக்கிறார், \\\ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய வித்தியாசம் உண்டு. அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. இஸ்லாமும் ஒத்துக் கொள்கிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை. இதை உணராத காரணத்தினாலேயே கம்யூனிஸ்டுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்களையும் தொழிற்சாகைளுக்கு இழுத்து வந்து கட்டாய வேலை வாங்கினர்/// இதில் கட்டாய வேலை என்பது பொய் என்பதால் அதை பதிவர் சுவனப்பிரியனிடமே விட்டுவிடுவோம். இஸ்லாம் பெண்கள் வேலைக்குச் செல்வதை அனுமதிக்கிறதா? இல்லையா? ஆம் அனுமதிக்கிறது என்றால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. இதை இஸ்லாம் உணர்ந்திருக்கிறது என்பதன் பொருள் என்ன? சுவனப்பிரியன் என்ன சொல்ல வருகிறார்? ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வித்தியாசம் இருக்கிறது. எனவே, பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிறாரா? அன்றிலிருந்து இன்று வரை கிராமப்புறங்களில் பெண்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர்? இன்று தொழிற்சாலை உற்பத்திகளிலும் பெண்கள் பெருமளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்ன பாதிப்பை பெற்று விட்டனர்? மெய்யாகவே பதிவர் சுவனப்பிரியன் இரட்டை வேடம் போடவில்லை என்றால் பதில் கூறட்டும். பெண்கள் வேலைக்குச் செல்வது சரியா? தவறா? சரி என்றால் கம்யூனிசம் பெண்களை வேலை செய்யச் சொன்னது தவறில்லை என்றாகும். தவறு என்றால் இஸ்லாம் பெண்களுக்கு வேலை செய்ய அனுமதி அளித்தது சரியில்லை என்றாகும். பதிவர் சுவனப்பிரியன் தான் இரட்டை வேடம் போடவில்லை என்று இங்கு நிரூபிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பெண்கள் வேலைக்குச் செல்வது குறித்து கம்யூனிசம் என்ன சொல்கிறது? பெண்கள் ஆண்களைப் போலவே உற்பத்தி வேலைகளில் ஈடுபடாதவரை அரசியல் ரீதியாகவும் சமூக குடும்ப ரீதியாகவும் பெண்கள் விடுதலையடைய முடியாது என்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் உடல் ரீதியாக சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இது ஆணைவிட பெண் உடல் வலுவிலோ, திறனிலோ அறிவிலோ எந்த வித குறையையும் ஏற்படுத்தாது. தவிரவும், ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் இடையே கூட உடல் ரீதியாக வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்படி என்றால் அந்த இன்னொரு ஆண் வேலை செய்யக் கூடாது என்று கூறுவார்களா? உற்பத்தி, உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி உறவுகளுக்கிடையேயான பகிர்மானம் இவைதான் உலகம் இயங்குவதின் அச்சாணி. இதில் உலகின் சரிபாதியினரான பெண்களை உற்பத்தியிலிருந்து அன்னியப்படுத்தியதன் மூலமே பெண்களை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றனர் ஆண்கள். ஆதியில் சமூகத்துக்கும் உற்பத்திக்கும் தலைமை தாங்கியது பெண்களே என்பது தான் வரலாறு. இதை மாற்றி ஆண்கள் உற்பத்திக்கும் பெண்கள் வீட்டு குடும்ப பராமரிப்புக்கும் என்று மாற்றியதன் மூலமே ஆண் பெண்ணை பலவீனப்படுத்தினான். இதை மீளத் திருத்தி ஆணும் பெண்ணும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டும். குடும்பம் சார் வேலைகளிலிருந்தும் குழந்தை வளர்ப்பிலிருந்தும் பெண்ணை விடுவித்து அதை அரசின் கடமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று கம்யூனிசம் கூறுகிறது. இது தான் சரியானது, மதவாதிகள் கூறுவதெல்லாம் பெண்ணை அடிமைத்தளையில் கட்டி வைப்பது. அவ்வாறல்ல என பதிவர் சுவனப்பிரியன் கருதினால் கம்யூனிசம் குறித்தும் இஸ்லாம் குறித்தும் இன்னும் கொஞ்சம் ஆழமாக கற்றுக் கொண்டு வரட்டும். நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
எல்லாம் சரி இப்போது ஏன் கம்யூனிஸ்டுகள் பெண்களை குறிப்பாக தங்கள் மனைவிகளை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் குடும்ப பராமரிப்பிலேயே விட்டு வைத்திருக்கின்றனர்? பெண்களும் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்பது சமூகத்திலிருந்து தனிநபருக்கு வர வேண்டியது. தனிநபரிலிருந்து சமூகத்துக்கு அல்ல. அதாவது பெண்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்றால் குடும்பப் பராமரிப்பு குழந்தை வளர்ப்பு போன்ற வேலைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதாவது இந்த வேலைகளை அரசு ஏற்றுக் கொள்வது வரை பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுவது அவர்களுக்கு இரட்டைச் சுமையாகவே இருக்கும். இன்று வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலையும் செய்துவிட்டு குடும்பப் பராமரிப்பிலும் குழந்தை வளர்ப்பிலும் ஈடுபடும் கொடுமையை உலகம் கண்டு கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாத்திலும் இதில் விதிவிலக்கு இல்லை. ஆனால் கம்யூனிஸ்டுகள் எதை மேலிருந்து கீழாக செய்ய வேண்டும், எதை கீழிருந்து மேலாக செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதனால் தான், கம்யூனிஸ்டுகள் இன்றைய சமூகத்தில் பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதில்லை. இது கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலையல்ல, சரியான நிலை. மட்டுமல்லாது எந்த கம்யூனிஸ்டும் ஆணாதிக்கமாக பெண்களை அடிமைப்படுத்துவதில்லை. கடந்த பதிவில் சுவனப்பிரியன் குறிப்பிட்டாரே, என் மனைவி கூட கம்யூனிசக் கொள்கையில் இல்லை என்று. ஆணின் முடிவை பெண்மீது என்றுமே கம்யூனிஸ்டுகள் திணிப்பதில்லை என்பதற்கு இதுவே சான்று. புரிந்து திருந்தும் வரை விளக்கமளிக்கிறோம், காத்திருக்கிறோம். அவர்கள் உண்மைகளைக் கண்டு திரும்புகிறார்கள். ஆனால் இஸ்லாமிய மதவாதிகளோ பெண்களை அடிமைப்படுத்த எண்ணுகின்றனர். தங்கள் முடிவை வலிந்து திணிக்கின்றனர். இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவே இதற்குச் சான்று. இதை சரியான கோணத்தில் புரியாவிட்டால் இப்படித்தான் பதிவர் சுவனப்பிரியனைப் போல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் நிலையை அடைய வேண்டியதிருக்கும்.
அடுத்து பதிவர் சுவனப்பிரியனின் வன்முறை கொலை எனும் முதலாளித்துவ அலறல். கம்யூனிஸ்கள் மக்களை கொன்றழித்தனர் எனும் முதலாளித்துவ புழுகு மூட்டைகளை அதை கூறிய முதலாளித்துவவாதிகளே “நாங்கள் காசுக்காத்தான் அவ்வாறு கூறினோம்” என்று வாக்குமூலம் அளித்து விட்டார்கள். ரஷ்யா ஒரு இரும்புத்திரை நாடு என்று கூறி, அதன் ஆவணங்கள் வெளியிடப்பட்டால் புரிந்து போகும் என்று கெக்கொலி கொட்டியவர்கள் கோர்ப்பச்சேவ் ஆவணங்களைத் திறந்து வைத்தபோது, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் என்று கூறிவிட்டு இன்று வரை மௌனத்தில் உறைந்து கிடக்கிறார்களே அதே போல் கள்ள மௌனத்தில் அமிழ்ந்து கிடக்கிறார்கள். சோவியத் யூனியனில் ஸ்டாலினுக்குப் பிறகும், சீனத்தில் மாவோவுக்குப் பிறகும் கம்யூனிசம் இல்லை. ஆனால் பதிவர் சுவனப்பிரியன் போன்ற மதவாதிகளோ போலிகளின் செயல்பாடுகளைக் காட்டி தம்மை சமாளித்துக் கொள்ள முயல்கிறார்கள். பதிவர் சுவனப்பிரியனுக்கு திறனிருந்தால் கம்யூனிஸ்டுகள் யார் எங்கு என்ன வன்முறையில் எப்போது ஈடுபட்டார்கள் என்று தரவுகளுடன் வரட்டும் அப்போது தெரியும் வன்முறைகளின் சொந்தக்காரர்கள் யார் என்பது?
ஆனால் கம்யூனிஸ்டுகளின் பாதையெங்கும் இரத்தக்கரை படிந்திருக்கிறது. ஏனென்றால் ஆட்சியாளர்களுக்கு கம்யூனிஸ்டுகளைக் கொன்றழிப்பது என்பது அவ்வளவு உவப்பாக இருந்திருக்கிறது. உலக நாடுகள் அனைத்திலும் இதற்கான தடங்கள் உண்டு. இஸ்லாமிய நாடுகள் கூட இதற்கு விதி விலக்கில்லை. பதிவர் சுவனப்பிரியன் தற்போது இருக்கிறாரே அந்த நாட்டில் 1970களின் தொடக்கத்தில் நஜ்ரான் பகுதியில் 70க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்தோனேசியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான கம்யூனிஸ்டுகள் கொன்று குவிக்கப்பட்டனர். வெறும் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல. பதிவர் சுவனப்பிரியன் ஆராதிக்கிறாரே முகம்மது, அவர் கூட வன்முறை வெறியாட்டம் ஆடியவர் தான். இதோ எடுத்துக்காட்டுகளாக ஒன்றிரண்டு.
இறைத்தூதர் அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை அபூ ராபிஉவிடம் அவனைக் கொல்வதற்காக அனுப்பினார்கள்.. .. .. பிறகு நான் என் உள்ளத்தில் உறுத்தும் வேதனை எதுவுமின்றி எழுந்தேன், இறுதியில் நாங்கள் நபி அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தோம். புஹாரி 3022
நபி அவர்கள் கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு யார்? .. .. .. இவ்வாறு முகம்மத் இப்னு மஸ்லமா அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருந்து அவனைக் கொல்வதற்கு வசதியான தருணம் கிடைத்தவுடன் அவனைக் கொன்று விட்டார்கள். புஹாரி 3031
இன்னும் வேதக்காரர்களிலிருந்தும் உதவி புரிந்தார்களே அவர்களை அவர்களுடைய கோட்டைகளிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டு விட்டான். ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள். இன்னும் ஒரு பிரிவாரை சிறைப்பிடித்தீர்கள். குரான் 33.26
தங்கள் வேத உபனிடதங்களில் இப்படி வரலாறு வைத்திருப்பவர்கள் தாம் கம்யூனிஸ்டுகளை நோக்கி விரல் நீட்டுகிறார்கள் வன்முறையாளர்கள் என்று.
கம்யூனிசத்தில் வன்முறையின் பாத்திரம் என்ன? இதைப் புரிந்து கொள்ள அரசு குறித்த தெளிவு வேண்டும். இணக்கம் காண முடியாமல் போன பகை வர்க்கங்களிடையே தான் பிரநிதிப்படுத்தும் வார்க்கம் சார்ந்து பிற வர்க்கங்களை அடக்கி வைப்பதே அரசு. இப்படியான அரசின் கீழ் அடங்கிக் கிடக்கும் வர்க்கங்கள் அநீதியான உற்பத்திப் பங்கீட்டினால் வாழ்விழந்து போகும் போது, தங்கள் வாழ்வுக்கு இடையூறாக உள்ள அரசை வன்முறை மூலம் அதாவது புரட்சியின் மூலம் அகற்றி விட்டு சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இது தான் கம்யூனிசத்தில் வன்முறையின் பங்கு. இதில் கவனம் கொள்ள வேண்டிய இரண்டு அம்சங்கள். 1. புரட்சியில் ஈடுபடுவது சமூக மாற்றத்துக்காகவேயன்றி வெறுமனே அரசை மாற்ற அல்ல. 2. புரட்சியில் ஈடுபடுவது கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, மக்களே. மக்கள் இன்றி புரட்சி இல்லை. இந்த அடிப்படையில் உலகில் இரண்டு புரட்சிகள் நடந்துள்ளன. ரஷ்யாவிலும் சீனாவிலும் நடந்த புரட்சியை வன்முறை, கொலை என்று எவனும் விரல் நீட்டியதில்லை. மற்றப்படி மக்களின் விரோதிகளும், மதவாதிகளும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக சுட்டுபவை அனைத்தும், ஆதாரமற்ற, காலாவதியாகிப் போன முதலாளித்துவ அவதூறுகள்.
அடுத்து, தீண்டாமை. இஸ்லாமிய மதவாதிகள் தீண்டாமைக்கு எதிராக முழங்குவதெல்லம் ஒரு ஒப்பீடு மட்டுமே. அதாவது, அரேபிய நிலையையும், இந்திய நிலையையும் ஒப்பிட்டுக் காட்டி எங்கள் மதத்தில் தீண்டாமை இல்லை என்று பசப்புவது. ஆனால் இஸ்லாத்தில் தீண்டாமை உண்டு.
முதலில் தீண்டாமை என்றால் என்ன என்று பார்த்து விடலாம். இன்றைய உலகில் சாதிப் படிமுறை ஆசியப் பகுதிகளில் குறிப்பாக இந்தியாவில் நிலவும் நடைமுறை. உலகின் எல்லாப் பகுதிகளிலும் உழைப்புப் பிரிவினை இருந்திருக்கிறது. இந்த உழைப்புப் பிரிவினை மேல்கட்டுமானத்தில் நிலவுவது. உலகின் பிறபகுதிகளில் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் மறைவில் உழைப்புப் பிரிவினையும் மெல்ல மங்கி மறைந்தது. ஆனால் இந்தியப் பகுதிகளில் அது அடிக்கட்டுமானத்தில் சாதிப் பிரிவினையாகப் படிந்ததால் தொடர்ந்ததுடன், பார்ப்பனிய மதம் இதை வாழ்க்கை முறையாக்கி தீண்டாமைக் கொடுமையை தன்னுடைய மேலாதிக்கத்துக்காக நிலை நிருத்தியது. இது இந்தியப் பகுதிகளில் மட்டுமே நிலவும் நிலை. உலகின் வேறு பகுதிகளில் இந்நிலை இல்லை. இதை பார்ப்பனிய மதத்துடன் ஒப்பிட்டுக் காட்டி இதில் இஸ்லாம் சிறந்தது என்று கூறினால் மாற்றுக்கருத்து ஒன்றுமில்லை. ஏற்கலாம். ஆனால் இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்றால் அதை ஏற்க முடியாது. ஏனென்றால் இஸ்லாத்தில் தீண்டாமை உண்டு ஆனால் அது உடல் தீண்டாமையாக இல்லாமல் வேறு வடிவத்தில் இருக்கிறது.
பதிவர் சுவனப்பிரியன் இருக்கும் நாட்டில் பல கோத்திரங்கள் உண்டு. சில கோத்திரங்கள் உயர்வானவை, சில கோத்திரங்கள் தாழ்ந்தவை. எடுத்துக்காட்டாக கஹ்தானி, அஸ்மரி ஆகிய இரண்டு கோத்திரங்களை எடுத்துக் கொள்வோம். பள்ளிவாசலில் தொழுகையில் நிற்கும் போது தோளோடு தோள் உரச நின்று இருவரும் தொழுவார்கள். ஒரே கலத்தில் உண்பார்கள். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று கொள்வார்கள். ஆனால் ஒரு கஹ்தானி வீட்டுப் பெண்ணை ஒரு அஸ்மரி பையனுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள். ஏன்? ஒரு அஸ்மரி உயரதிகாரியாக இருக்கும் ஒரு நிறுவனத்தில் அவருக்கு கீழே ஒரு கஹ்தானி வேலை செய்ய நேர்ந்தால் அங்கு நடக்கும் பனிப்போரை வரலாறு தெரிந்தவர்களால் கவித்துவமாக காண முடியும். அவர்களுள் வெளிப்படும் சாதி மனோபாவம் உடல் தீண்டலில் இல்லை என்பதால் அதை தீண்டாமை இல்லை என்று மொழிபெயர்க்க முடியுமா? இது நடைமுறை எடுத்துக்காட்டு.
இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள், இந்த ஆட்சியதிகாரம் குரைஷிகளிடம் தான் இருக்கும் அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. புஹாரி 3501
ஏன்? அன்ஸாரிகள் ஆட்சியதிகாரத்துக்கு அறுகதையற்றவர்களா? என்ன காரணத்தினால்? முகம்மதுவுக்கு மக்காவிலிருந்து தன்னை விரட்டியடித்த தன்னுடைய குரைஷி குலத்தை விட, தன்னை ஆதரவளித்து ஆட்சியதிகாரத்தை வழங்கிய, இன்னும் ஒரு படி மேலே சென்று புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு தங்களுடைய மனவியர்களையே திருமணம் செய்து வைத்து, தங்களுடைய சொத்துகளை பிரித்துக் கொடுத்த அன்ஸாரிகள் என்ன அடிப்படையில் குறைந்தவர்களாகி விட்டார்கள்? குரைஷிகள் இருவர் இருக்கும் வரை அன்ஸாரிகள் ஆட்சியதிகாரத்துக்கு தகுதியாக மாட்டார்கள் என்றால் அது என்ன மாதிரியான மனோபாவம்? இதை தீண்டாமை எனும் ஒற்றைச் சொல்லில் அடக்கிவிட முடியுமா? இது இஸ்லாமியர்கள் உயிரைவிட மேலானவராக மதிக்கும் முகம்மது வெளிப்படுத்திய எடுத்துக்காட்டு. இதற்குப் பிறகும் இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பவர்களைக் கண்டு எந்த வாயால் சிரிப்பது?
இப்படிப்பட்ட வரலாற்றை கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் சாதிக்காததை சாதித்து விட்டார்களாம். சோவியத் யூனியனிலும், மக்கள் சீனத்திலும் சோசலிச காலங்களில் எந்த விதத்திலாவது தீண்டாமை இருந்தது என்று காட்ட முடியுமா? பதிவர் சுவனப்பிரியனால். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் இருக்கிறது என்பதால் பிற முயல்களுக்கு நான்காவது காலை வெட்டி விட முயலும் பதிவர் சுவனப்பிரியன் போன்றோர் உண்மைகளைக் காண முன்வர வேண்டும்.
சோவியத் யூனியனில் இஸ்லாமியர் நிலை என்ன என்பதைக் காட்டும் சிறு பதிவு. பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
“இஸ்லாமியர் மீது சோவியத் அதிகாரத்தை எவரும் திணிக்கவில்லை. மத்திய ஆசியாவில் அது மக்களாலேயே உருவாக்கப்பட்டது. என்ன கெட்ட காலமோ மக்களுடைய விருப்பத்துக்கு எதிராக சோவியத் ஆட்சியமைப்பு திணிக்கப்பட்டதாக நமது நலத்துக்கு எதிரானவர்களால் கதைக்கப்பட்டு இன்றுவரை பரப்பி விடப்படுகிறது. உஸ்பெக்கிஸ்தானில் புரட்சி நிகழ்ந்த போது நான் இளைஞன். புரட்சி மக்களின் அடியாளத்திலிருந்து வரவேற்பைப் பெற்றது. மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. மறைநூல் ஓதப்பட்டது. மக்களுடைய நலத்துக்கான வெற்றி. அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய சோவியத்துகள் என்றழைக்கப்பட்ட மக்கள் அதிகார ஆட்சியமைப்புகளுக்கு முதன்முதலாக தகைமைசால் இஸ்லாமியர்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.”
முப்தி ஜியாவுதீன் இப்னு முப்தி இஸான் பாபா கான்.
தலைவர்,
இஸ்லாமிய வாரியம்,
மத்திய ஆசியா மற்றும் கஜகஸ்தான்.
நூல் சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள். தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன்.
பதிவர் சுவனப்பிரியன் பதிவிட்டிருக்கும் இரண்டாவது மூன்றாவது பதிவுகளை நான் அலட்சியம் செய்கிறேன். காரணம், விதி எண் ஆறில் குறிப்பிட்டபடி கம்யூனிசத்துக்கும் அந்தப் பதிவுகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அப்படி ஏதேனும் இருப்பதாக பதிவர் சுவனப்பிரியன் கருதி, அதை விளக்கிக் கூறினால் தொடரும் பதிவுகளில் அதைப் பார்க்கலாம். தற்போது பதிவர் சுவனப்பிரியன் பதிலளிக்க வேண்டியவைகள்.
- கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் எனும் பதிவுக்கான பதில்.
- முதலில் எழுத்து விவாதத்துக்கு நேரம் இல்லை என்று பொய்யாக கூறியதன் காரணம் என்ன?
- நேரடி விவாதத்துக்கு வர வேண்டும் என்று கூறியவர் தன் முடிவை மாற்றிக் கொள்ள நேர்ந்ததற்கான காரணம் என்ன?
- சுவனப்பிரியன் – நெருப்புக்கோழி பதிவில் இருக்கும் குறிப்பான அம்சங்களுக்கான பதில்,
- இந்தப் பதிவில் விவாதிக்கப்பட்டவைகளுக்கான பதில்.
- இந்த விவாதத்துக்கு பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுப்பது.
இந்த ஆறு அம்சங்களுக்கும் பதில் கூறிய பிறகு அவருக்கு விருப்பமான கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறிக் கொள்ளலாம்.
முந்திய பதிவுகள்
1. கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்
2. சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி
இசங்களை வேதமாக தலைவர்கள் கடவுளாகவும் பார்க்கப்படும் கம்யூனிசம்.
உலகம் முழுவதிலும் கம்யூனிசம் பெயரால் இவர்கள் செய்த வண்டவாளங்கள், கொடுமைகள் வெளியே வந்து, ஏறக்குறைய எல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்ட கம்யூனிசம்.
குரைத்து குரைத்தே யாரையும் வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் நாய்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள்.
எது குரைப்பு? யார் நாய்? மனிதர்களுக்கு பொருளற்ற சப்தங்களை குரைப்பு என்று வகைப்படுத்தலாம். இங்கு எழுதப்பட்டிருப்பவை பொருளோடு கூடிய மறுப்பாக இருக்கிறது. எனவே, இதை குரைப்பு என்று வகைப்படுத்த முடியாது. ஆனால் இங்கு பொருளற்று,பொருத்தமற்று இருப்பது உங்களின் பின்னூட்டம் தான். எனவே யார் நாய் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
முற்றிலுமாக மூளைச்சலவை செய்யப்பட்டு புழம்பித்திரியும் மனநோயாளி செங்கொடியை நாய் என அழைப்பது சொறிநாய்களுக்கு கூட அவமானம் தான்.
ரஷ்யாவில் 1920 தொடங்கி 1991 வரை கிறிஸ்துவ மதத்தை எப்படி எப்படி எல்லாம் நசுக்கி அழித்தது என்று உனக்கு தெரியுமா?
ரஷ்யாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மதகுருக்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்காண சர்ச்சுக்கள் இடித்து நொறுக்கப்பட்டதும் உனக்கெங்கே தெரியப்போகிறது.
கம்யூனிசத்தால் உலகெங்கும் கோடானுகோடி அப்பாவி மக்கள் அக்கிரமமான முறையில் கொல்லப்பட்டார்களே. ஆதாரங்கள் வேண்டுமா?
அன்றாடம் ஒரு வேளைக்கு கால் வயிற்று கஞ்சிக்கு மக்களை கதறவிட்டுக்கொண்டு சுகபோக வாழ்வை அனுபவித்துக்கொண்டு அக்கிரம ஆட்சி செலுத்திய கம்யூனிச ஆட்சியாளார்களை பற்றிய ஆதரங்கள் வேண்டுமா?
கற்பனை கோட்டைக்குள் இருக்கும் மன நோயாளியே நல்ல மனநல வைத்தியரை போய் பாரு.
மீண்டும் தான் யார் என்பதை நிரூபிக்கும் அதே குரைப்புகள்.
முதலில் இந்தப் பதிவுக்கு உங்கள் எதிர்வினை என்ன என்பதை கூறுங்கள். பிறகு நீங்கள் கூறுபவற்றுக்கு ஆதாரங்களுடன் வாருங்கள். விரிவாகப் பேசலாம்.
++முதலில் இந்தப் பதிவுக்கு உங்கள் எதிர்வினை என்ன என்பதை கூறுங்கள். பிறகு நீங்கள் கூறுபவற்றுக்கு ஆதாரங்களுடன் வாருங்கள். விரிவாகப் பேசலாம்.++ என்று கூறும் அறிவிழந்த ஜீவியே
//கம்யூனிசம் செத்துப் போய் விட்டதா? ஒரு கொள்கை சமூகத்தில் தேவையற்றதாகி விட்டது, மரித்து விட்டது என்று கூற வேண்டுமாயின் முதலில் அந்தக் கொள்கை உலகில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். செயல்படுத்தும் போது எந்த நோக்கத்திற்காக அந்தக் கொள்கை உருவானதோ அதற்கு எதிர்மறையான விளைவுகளைத் தந்திருக்க வேண்டும். அப்போது தான் ஒரு கொள்கையை செத்துப் போன கொள்கை என்று கூற முடியும். ஆனால் இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை. தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது. ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது. கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை.//
என்று இப்பதிவில் நீ குறிப்பிட்டிருப்பதை மீண்டும் படி.
தனியொரு நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தை எந்த கிரகத்தில் செயல்படுத்த போகிறாய்?
எனது கருத்தை மறுக்க முடியுமா மனநோயாளியே?
என்னுடைய ஆதாரங்கள் உன்னுடைய பதிலை மறுப்புகளை பின் தொடரும்.
அஞ்சான்,
முதலில் நாகரீகமாக உரையாடுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது என்றால் என்ன பொருள் என்று உங்கள் தமிழாசிரியரிடம் சென்று கேட்டுவிட்டு வாருங்கள்.
உணர்ச்சி வேகமாக செயல்பட்டால் அங்கு அறிவு குறையும் என்பதற்கு நடைமுறை உதாரணமாக இருக்கிறீர்கள்.
“தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது” என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று ஒரு தனிப்பதிவு போட்டு வாசகர்களின் கருத்தை கேட்க முடியுமா?
உன் பிளாக்கிற்கு வாசகர் இருந்தால் தானே.!!!
கடுப்புடன் யாரையாவது வீண் வம்புக்கிழுத்து தலைப்பு கொடுத்து உன்னுடைய மனநோயை, பன்னாடைத்தனத்தை . “கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” என்ற அபத்தங்களுடன் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றாய்.
“கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” “தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது” என்று உனது பிளாக்கின் பேனரில் இணைக்க முடியுமா?
செத்துப்போன கம்யூனிசத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டு எனது கேள்விக்கு பதில் கூற முடியாமல் நாகரிகம் இல்லை, தமிழ் தெரியவில்லை என பிதற்றலாமா?
இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை என்றால்கம்யூனிசம் மனித குலத்திற்கு ஒவ்வாத ஒன்றுதானே?
ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது என்கிறாய். செயல்படுத்தப்பட்ட சோஷலிசம் கம்யூசனித்தின் எதிரியா?
சோஷலிசம் தான் ரஷ்யாவிலும் சீனாவிலும் உலகெங்கிலும் கொலை, கொள்ளை, வழிபாட்டு தளங்களை அழித்தல், நடத்தி சுபிட்சத்துடன் வாழ்ந்த அப்பாவி மக்களின் நாடுகளை தாக்கி கைப்பற்றி அடக்கி காலம் காலமாக கொடூரமாக அட்டூழியங்கள் செய்ததா?
எங்கே நாகரித்துடன், விளங்கும் தமிழில் விளக்கமாக பதில் கூறமுடியுமா?
அஞ்சான்,
நல்ல மனநல மருத்துவரைச் சென்று சந்திக்கவும். நான் மனநல மருத்துவன் அல்லன்
இந்த பதிவில்
2. கேட்கப்படும் கேள்விகளை எந்த விதத்திலும் திசை திருப்பாமல், சரியான கோணத்தில் பதில் சொல்வேன் என்றும், தேவையற்ற திசைதிருப்பல்களோ, குறிக்கோளற்று பதில் கூறுவதோ, பதில் கூறாமல் கடந்து செல்வதோ இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன்.
3. என்னுடைய வாதங்களை தகுந்த உள்ளீடுகளுடனும், விவாதத்தை தேடல்களுடன், விவாத நேர்மையுடன் நகர்த்திச் செல்வேன் என்றும், என்னுடைய வாதங்களில் தவறிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு அது சரியாகவும் இருந்தால் தயங்காமல் அவற்றை ஏற்று மாற்றிக் கொள்வதில் எந்த வித அசூயையும் எனக்கு இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன்.
4. இந்த விவாதத்திலிருந்து நானாக முறித்துக் கொண்டு வெளியேறிச் செல்லமாட்டேன், இறுதி முடிவு எட்டப்படும் வரை விவாதம் சீரிய முறையில் செல்வதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
என்று கூறப்பட்டிருப்பருக்கிறதா? இல்லையா?
எனது கேள்விகள் பதிந்தவற்றை கொண்டே உருவானதா? இல்லையா?
கற்பனை கோட்டைக்குள் இருக்கும் மன நோயாளியே!
நல்ல மனநல வைத்தியரை போய் பாரு என்று முதலில் நான் உனக்கு கூறியதை எனக்கே வாந்தியா?
என் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.
இல்லாவிட்டால்
“தனக்குள் தானே சிக்கிக் கொண்ட செங்கொடி எனும் மனநோயாளி” என்று இப்பதிவின் தலைப்பை உடனே மாற்றிவிடவும்.
அஞ்சான்,
நீங்கள் யார்? சுவனப்பிரியனா? அல்லது அவர் சார்பில் கலந்து கொள்பவரா? ஆம் என்றால் தொடக்கத்திலிருந்து வாருங்கள். நாகரீகமாக பேசுங்கள். தேடலுடன் விவாதியுங்கள். உங்களுக்கு சரியான பதில் கிடைக்கும். மாறாக, கழிந்து செல்ல வேண்டும் என விரும்பினால் உங்கள் வீட்டு கழிப்பறைக்குச் செல்லுங்கள்.
திருப்பாதே. திசை திருப்பாதே.
கற்பனை கோட்டையில் கழிப்பறையை துணைக்கு அழைப்பதை கண்டு பரிதாபம் கொள்ளுகிறேன்.
என் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் எனக்கு இன்னும் என்னென்ன பெயர் கண்டு பிடிக்கப்போகிறாய்?
ஏன் சுவனப்பிரியன் என்பவரிடமே அஞ்சான் என்னை நார் நாராக கிழித்து தொங்க விட்டுக்கொண்டிருக்கிறார். அது எப்படி என்று நேரிடையாக கேட்டிருக்கலாமே?
உனது பதிவை படிக்கும் நடுநிலை பள்ளி மாணவன் கூட நான் கேட்ட கேள்விகளை கேட்பானே?
உன் கைகளாலேயே நீ சுறுக்குப்போட்டுக்கொண்டு தொங்குவதை காண சகிக்கவில்லை
.
பேசாமல் ஈரச்சாக்கை போர்த்திக்கொண்டு உன் இரு கால்களுக்கிடையில் உன் முகத்தை புதைத்துக்கொண்டு காலத்தை ஓட்டவும்.
ஈசன் உன்னை ரட்சிக்கட்டும்.
ஐயா, அன்புடையீர், அறிவு ஜீவியே, புவி சிறக்க உதித்தவரே, நான் கேட்ட கேள்விகளுக்கு அன்பு கூர்ந்து பதில் கூறுவீர்களா?
சட்டியில் இருந்தால் தானே?
அஞ்சான்,
நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள் அது எனக்கு முதன்மையானதல்ல. ஆனால் யார் சார்பாக விவாதிக்கப் போகிறீர்கள் என்பதே முதன்மையானது. என்ன பிரச்சனை உங்களுக்கு? இந்தப் பதிவில் இருந்த ஏதோ ஒன்று உங்களை கடுமையாக பாதித்திருக்கிறது. அதனால் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் ஒரு முறை உங்கள் பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள். நீங்கள் யார் என்பது அதில் தெரிகிறது.
முறையாக விவாதிக்க வேண்டுமென்றால் பதிவிலுள்ள விசயங்களை அலசிப்பார்த்து அதற்கான எதிர்வினையை முன்வைத்து வாதிடுங்கள். உங்களின் புரிதல் எல்லை வரை வந்து விவாதிக்க நான் தயார். ஆனால் உங்கள் நோக்கம் அப்படி இருப்பதாக தெரியவில்லை. வீண் அலட்டல்களுக்கு நான் மதிப்பளிப்பதில்லை. இந்தப்பதிவில் இருப்பது பதிவர் சுவனப்பிரியனுக்கான பதில்கள். இதில் அசட்டுத்தனமாக கேள்வி எழுப்புவது மட்டும் தான் உங்கள் நோக்கமா?
புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.
செங்கொடி அவர்களே, செம காமெடி போங்க. அஞ்சானுக்கு பின்னால் யாரோ நெருப்பு வைத்து விட்டார்கள் போலும். குதியோ குதியென்று குதிக்கிறார். கை வைக்க கூடாத இடத்தில் கை வைத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் மட்டும் பக்கத்தில் இருந்தீர்களானால் கடித்து குதறியிருப்பார். இவர் மட்டுமல்ல , உலகம் முழுவதும் முஸ்லிம்கள் சூடு தாங்காமல் குதியோ குதியென்று குதிக்கிறார்கள். இணையம் வந்ததும் வந்தது, இஸ்லாத்தின் டவுசரை கிழி கிழியென்று கிழித்து விட்டது. மற்ற மதங்களை தாக்கும் இடத்திலிருந்து, தங்கள் மதத்தை தற்காப்பதில்தான் முஸ்லிம்கள் இப்பொழுது நிறைய நேரத்தை செலவிடுகிறார்கள். அடுத்த 100 வருடம் தாங்கினாலும் பெரிய விசயம். இயற்கையின் அடிப்படையே ” மாற்றமே மாறாதது “. இதை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் இஸ்லாம் டான்ஸ் ஆடுவது பரிதாபத்திற்கு உரியது. சுவனப்பிரியன் மட்டுமல்ல. பல முஸ்லிம்கள் கள்ள மௌனத்துடந்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் நிச்சயமாக பதில் இல்லை. வசைபாடி, மிரட்டி, சாபம் விட்டு, ஒப்பாரி வைத்து ஓடுவதுதான் தற்போதைய முஸ்லிம்களின் வழி.
//இந்தப்பதிவில் இருப்பது பதிவர் சுவனப்பிரியனுக்கான பதில்கள். இதில் அசட்டுத்தனமாக கேள்வி எழுப்புவது மட்டும் தான் உங்கள் நோக்கமா?// —- என்று கூறுகிறாய்
அப்படியென்றால் இந்தப்பதிவை பொதுப்பார்வையில் வைக்காமல் சுவனப்பிரியனுடைய தனிப்பார்வைக்கு மட்டும் என நீ ஏன் குறிப்பிடவில்லை? ஏன் வலைத்திரட்டியில் இணைத்து மற்றவர்களை அழைத்தாய்? ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு நீ இப்போது ஓடி ஒழிய சுவனப்பிரியனா ?
//உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்.// என கொட்டை எழுத்தில் பதிவின் கீழே போட்டிருப்பதின் நோக்கம் உன்னை போன்ற மனநோயாளிகள் உனக்கு டண்டணக்கா டடக்கு நக்கா பாடி ஆடவா?
நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள்// — சரி ஓ.கே. !!
நீயே——////முறையாக விவாதிக்க வேண்டுமென்றால் பதிவிலுள்ள விசயங்களை அலசிப்பார்த்து அதற்கான எதிர்வினையை முன்வைத்து வாதிடுங்கள்.// —— என்றும்
விவாதிக்க வந்தால்——– //என்ன பிரச்சனை உங்களுக்கு?// //அசட்டுத்தனமாக கேள்வி எழுப்புவது மட்டும் தான் உங்கள் நோக்கமா?// //இந்தப் பதிவில் இருந்த ஏதோ ஒன்று உங்களை கடுமையாக பாதித்திருக்கிறது. அதனால் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.// என்றும் கூறுகிறாய்.
உன் பதிவில் இருந்து நீயே,நீயே,நீயே,நீயே, குறிப்பிட்ட , பறை சாற்றிய, புலம்பிய, உளறியவை கொண்டே எனது கேள்விகள். – பதில்???
மறுபடியும் முதலிருந்து..
எல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்ட கம்யூனிசம். உண்மையா? பொய்யா?
நீ இந்த பதிவில் கூறியிருப்பது:
//1.உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை.//
//2.தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது.//
அப்படியென்றால் தனியொரு நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தை எந்த கிரகத்தில் செயல்படுத்த? எந்த காட்டில்?
இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை என்றால் கம்யூனிசம் மனித குலத்திற்கு ஒவ்வாத ஒன்று என்பதாலேயா?
//3.ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது.//
ரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது என்றால் செயல்படுத்தப்பட்ட சோஷலிசம் கம்யூசனித்தின் எதிரியா?
கம்யூனிஷத்தின் பெயரை காப்பாற்ற சோஷியலித்தின் பெயரால் ரஷ்யாவிலும் சீனாவிலும் உலகெங்கிலும் கொலை, கொள்ளை, வழிபாட்டு தளங்களை அழித்தல், நடத்தி சுபிட்சத்துடன் வாழ்ந்த அப்பாவி மக்களின் நாடுகளை தாக்கி கைப்பற்றி அடக்கி காலம் காலமாக கொடூரமாக அட்டூழியங்கள் செய்ததா?
//4.கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை//
அப்படியென்றால் ? ஏன் தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்தவும் முடியாது. ? நாட்டில் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் எல்லாம் மனித குலம் இல்லையா? கம்யூனிஷம் மிருகங்களுக்கானதா?
//..”உங்களின் புரிதல் எல்லை வரை வந்து விவாதிக்க நான் தயார்.” என்று நீ தானே சவால் விட்டிருக்கிறாய்?
எங்கே என் கேள்விகளுக்கு தயை கூர்ந்து, அன்பு கூர்ந்து, இரக்கப்பட்டு பதில் கூறலாம் தானே?
அஞ்சான்
உங்கள் அசட்டுத்தனத்துக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.முதலில் ஒருமையில் விழிப்பதை நிருத்துங்கள். அடுத்து நீங்கள் தேடலுடன் விவாதிக்க வந்திருக்கிறீர்கள் எனும் எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் எழுதுங்கள். அப்படியில்லாதவரை உங்கள் நோக்கம் எதுவோ அப்படித்தான் என் பதில்களும் இருக்கும்.
இது சுவனப்பிரியனுக்கான பதிவு தான். ஆனால் சுவனப்பிரியன் சார்பில் யார் வேண்டுமானாலும் வாதிடலாம். சுவனப்பிரியன் சார்பில் வாதிடுவது என்றால் சுவனப்பிரியனை நோக்கி முன்வைத்த கேள்விகளுக்கு பதில் கூறவேண்டும். அதன் பிறகு கேள்விகள் கேட்க வேண்டும். மீண்டும் கூறுகிறேன். உங்களுடைய பின்னூட்டங்களை தொடக்கத்திலிருந்து படித்துப் பாருங்கள். அதில் எதிராளியை அசிங்கப்படுத்த வேண்டும் எனும் நோக்கம் தான் தெரிகிறதே தவிர நேர்மையான விவாதம் நடத்தும் நோக்கம் கொஞ்சமும் வெளிப்படவில்லை. ஆகவே, ஒரு நேர்மையான விவாதத்துக்கு தயாராகுங்கள் நிச்சயம் உங்களின் புரிதல் எல்லை வரை சென்று என்னால் பதில் கூற முடியும்.
இங்கு நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் விதண்டாவாதத்தனம் கொண்டவை. எடுத்துக்காட்டு, தனியொரு நாட்டில் செயல்படுத்த முடியாது என்றால் வேற்றுக் கிரகத்திலா எனும் கேள்வி. அதற்கு அப்படித்தான் பொருள் வருகிறதா? சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது என்றால் சோசலிசம் கம்யூனிசத்தின் எதிரியா? என்ற கேள்வி. இந்தப் பொருளை எங்கிருந்து எடுத்தீர்கள்? எனவே, உங்கள் கேள்விகளின் நோக்கம் நேர்மையான விவாதத்தில் இல்லை. பதில் கூறமுடியாத படி எழுதியிருக்கிறானே இவனை எப்படி அசிங்கப்படுத்துவது என்று சிந்தித்து நீங்கள் அசிங்கப்பட்டு நிற்கிறீர்கள்.
நேர்மையான முறையில் நீங்கள் விவாதிக்க விரும்பினால், நேர்மையான முறையில் அணுகுங்கள். மீண்டும் உங்கள் வழக்கமான நாராச நடையை தொடர்ந்தால் இது என்னுடைய கடைசி பதிலாக இருக்கும்.
தனக்குள் தானே சிக்கிக்கொண்ட விதண்டாவாதத்திலேயே ஊறித்தளைத்த மனநோயாளியே.
மறுபடியும் முதலிலிருந்தா?
எனக்கு பதிலளிக்க முடியாமல் அரண்டு போய் தோல்வியை உன்னுடைய பாணியில் பறைசாற்றி ஓடுகிறாய்.
விடமாட்டேன்.
Sengodi sir, please reply to anjaan’s questions
ஸிதேன்,
மனப்பிறழ்தலுள்ளவர்களுக்கு பதிலளிப்பது வீண் வேலை. இது போன்றவர்கள் பதிலை எதிர்பார்ப்பதும் இல்லை. இதுவும் ஒரு வகையில் சுய சொரிதல் தான். சொரிந்து கொள்ளட்டும் எனக்கொன்றும் ஆட்சேபனையில்லை.
//தனியொரு நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தை எந்த கிரகத்தில் செயல்படுத்த போகிறாய்?//
அஞ்சான்,
உங்களின் இந்த வாக்கியம் சரியான விவாதமல்ல.
உங்கள் (May not be) கிறிஸ்தவ மதத்தில் ஒருவர் கூட பைபிளில் கூறப்பட்டுள்ளதை கடை பிடிக்க முடியவில்லை. அதனால், பைபிளில் கூறப்பட்டுள்ளவைகளை எந்த கிரகத்திலுள்ள மனிதர்களுக்கு செயல் படுத்த போகிறீர்கள்?
//Zidane, on 27/02/2015 at 2:09 பிப said:
Sengodi sir, please reply to anjaan’s questions//
Zidane,
Do not disgrace yourself by addressing the pest sengodi as sir.
Through your comment you have declared that I am right and the pest sengodi is dodging through stupid, silly and utter nonsense.
This pest sengodi cannot reply my questions at all . He only can twist and turn always.
Anybody can notice that this parasite sengodi’s purpose is to disgrace a particular religion by hiding under the dead rotting communism corpse.
When this pest sengodi gets the “treatment” sooner or later by the dept. concerned then this pest sengodi will eat every bit of what he has vomited.
To escape sengodi pest will plead that he is mentally unfit . .
Nowhere he can escape at all.
I DARE HIM TO PUBLISH THIS COMMENT.
Hope you understood.
Zidane have a good day.
திரு.Suresh அவர்களே,
கருத்துக்கு நன்றி,
செங்கொடி கூறுவதப்போல் கம்யூனிஷத்தைக் கொண்டு “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் என்று பைபிளில் அல்லது வேறு எந்த மத நூலிலாவது உள்ளதா? அல்லது கிறிஸ்தவர்கள் யாராவது கூறியிருக்கிறார்களா?
பைபிளின் பெயரால் ஆட்சி செய்யப்பட்டு கம்யூனிஷத்தைப்போல் கோடானு கோடி மக்களை கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டிருக்கிறதா?
கிறிஸ்தவம் தோன்றி 2015 ஆண்டுகளில் இன்று வரை கிறிஸ்தவம், பைபிளின் பெயரால் கொல்லப்பட்டர்வர்களின் தொகையை விட ஒப்பீட்டில் முந்தாநாள் பெய்த மழையில் நேற்று தோன்றிய நச்சான கம்யூனிஷத்தால் கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் தொகை மிகைத்திருக்கிறதே.
கிறிஷ்தவம், பைபிளின் பெயரால் மருத்துவமனைகள், அறநிலையங்கள், அனாதை இல்லங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இத்யாதி இத்யாதிகளால் இன பேதமின்றி தொன்றுதொட்டு மனிதசமுதாயத்திற்கு செய்திருக்கும் செய்துவரும் தொண்டுகளின் குண்டூசி தலைஅளவு கூட கம்யூனிஷம் செய்திருக்குமா?
கம்யூனிஷத்தின் ஆட்சியிலிருத்து விடுபட்ட நாட்டிலுள்ளவர்கள் எல்லாம் இன்று மகிழ்ச்சியில் சுதந்திரமாக திளைத்திருக்கிறார்களே.
கம்யூனிஷ தலைவர்களை கடவுள்களாகவும் கம்யூனிஷத்தை வேதமாகவும் செங்கொடி எடுத்துக்கொண்டு துதிபாடி வாழ்வதில் நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை.
செங்கொடி கம்யூனிஷத்தின் சிறப்புகளை இமயத்தின் மீது ஏறி நின்று கூவட்டும். கவலை இல்லை.
செங்கொடியின் நோக்கம் கம்யூனிஷ போர்வையில் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்துவதே நோக்கமாக கொண்டிருப்பது யாருக்கும் புரியாமலிருக்காது.
இன்றைக்கு ஒரு மதம், நாளை மற்றொன்று நாளை மறுநாள் மற்றொன்று இப்படியே ஒவ்வொன்றின் மீது அபத்தங்களையும் அவதூறுகளையும் வாரி இறைத்து வாசகர்களின் மனதில் நஞ்சை விதைத்து மத நல்லிணக்கத்தை வேரறுப்பதை யாரால் பொறுத்துக்கொள்ள முடியும்.?
மத இன ஜாதி சண்டை சச்சரவுகளில்லாமல் இப்புவியில் உள்ள யாவரும் இன்புற்று வாழவேண்டும்.
என் கேள்விகளுக்கு செங்கொடி பதில் கூறியே ஆக வேண்டும்.
உங்கள் தினங்கள் இனியதாக தொடங்கட்டும்.
தொடரும் ….
நன்றி அஞ்சான்.
கிறிஸ்தவத்தின் பெயரால் சிலுவைப்போரில் கோடானு கோடி மக்களை கொன்று குவித்திருக்கிறார்கள். அது சில கிறிஸ்தவ தலைவர்களின் மத சகிப்பின்மையே அன்றி, அதற்க்கு கிறிஸ்தவம் காரணம் அல்ல.அதே போல் தான், சில communist தலைவர்கள் தவறு செய்திருந்தால், அது அவர்கள் தவறேயன்றி Communism காரணமல்ல. I support only the Theory of communism. எல்லா மதத்திலும் இருக்கிற பல நல்ல theory கம்யூனிசத்திலும் இருக்கிறது. அவ்வளவு தான். நீங்கள் கம்யூனிசத்தை காரி உமிழ்ததால் தான் நான் இதை எழுதுகிறேன். மற்ற படி செங்கொடியுடன் நியாமான் முறையில் வாதத்தை தொடருங்கள்.
//மத இன ஜாதி சண்டை சச்சரவுகளில்லாமல் இப்புவியில் உள்ள யாவரும் இன்புற்று வாழவேண்டும்.//
உங்களின் இந்த நல்ல எண்ணத்தை நான் வரவேற்கிறேன்.
வாழ்க வழமுடன்.
திரு, சுரேஷ் அவர்களே,
தங்களின் பதிலுக்கு நன்றி,
//கிறிஸ்தவத்தின் பெயரால் சிலுவைப்போரில் கோடானு கோடி மக்களை கொன்று குவித்திருக்கிறார்கள். அது சில கிறிஸ்தவ தலைவர்களின் மத சகிப்பின்மையே அன்றி, அதற்க்கு கிறிஸ்தவம் காரணம் அல்ல.அதே போல் தான், சில communist தலைவர்கள் தவறு செய்திருந்தால், அது அவர்கள் தவறேயன்றி Communism காரணமல்ல.//
கிறிஸ்தவம் 2015 ஆண்டுகளில் கிறிஸ்தவம், பைபிளின் பெயரால் கொல்லப்பட்டர்வர்களின் தொகையை விட ஒப்பீட்டில் குறுகிய காலத்தில் கம்யூனிஷத்தால் கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் தொகை மிகைத்திருக்கிறதே.?
//I support only the Theory of communism. //
I respect your rights.
//எல்லா மதத்திலும் இருக்கிற பல நல்ல theory கம்யூனிசத்திலும் இருக்கிறது. //
செங்கொடி ஜீரணிக்க முடியாததை கூறுகிறீர்கள்.
// நீங்கள் கம்யூனிசத்தை காரி உமிழ்ததால் தான் நான் இதை எழுதுகிறேன்.//
எவரும் கம்யூனிசத்தை காரி உமிழ செய்ய செங்கொடி அல்லும் பகலும் பெறும்பாடுபடுவது அப்பட்டம்.
“இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” என்று எந்த மத நூலிலாவது கூறபட்டிருக்கிறாதா?
சொர்க்கம் என்பதே மரணத்திற்கு பிறகு என்று வேதங்களின் கூற்றை தவிர்த்து யாரும் இதுவரை கண்டு விண்டிராத ஒன்று.
கடவுளே இல்லை எனும் கம்யூனிஷம் மக்களின் கண்களில் மிரட்சியை நிலைக்க செய்து ஒரு வேளைக்கு கால்வயிற்று கஞ்சிக்கே எலும்பொடிய அடக்கி ஆண்ட கம்யூனிஷம் “சொர்க்கத்தை பூலோகத்திலே படைப்போம்” என்பதை கேட்டு எதைக்கொண்டு சிரிப்பது?
***மீண்டும், மீண்டும்,
செங்கொடியின் நோக்கம் கம்யூனிஷ போர்வையில் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்துவதே நோக்கமாக கொண்டிருப்பது மட்டுமே தான் என்பதை யாரால் மறுக்க முடியும்.?
கம்யூனிஷ தலைவர்களை கடவுள்களாகவும் கம்யூனிஷத்தை வேதமாகவும் செங்கொடி எடுத்துக்கொண்டு துதிபாடி வாழ்வதில் நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை. செங்கொடி கம்யூனிஷத்தின் சிறப்புகளை இமயத்தின் மீது ஏறி நின்று கூவட்டும். கவலை இல்லை.
இன்றைக்கு ஒரு மதம், நாளை மற்றொன்று நாளை மறுநாள் மற்றொன்று இப்படியே ஒவ்வொன்றின் மீது அபத்தங்களையும் அவதூறுகளையும் வாரி இறைத்து வாசகர்களின் மனதில் நஞ்சை விதைத்து மத நல்லிணக்கத்தை வேரறுப்பதை யாரால் பொறுத்துக்கொள்ள முடியும்.?
என்று மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன்.***
மத இன ஜாதி சண்டை சச்சரவுகளில்லாமல் இப்புவியில் உள்ள யாவரும் இன்புற்று வாழவேண்டும்.
//செங்கொடியுடன் நியாமான் முறையில் வாதத்தை தொடருங்கள்.//
சில ஜென்மங்களை கசக்கித்தான் தெளிவு பெறச்செய்ய முடியும்.
என் கேள்விகளுக்கு செங்கொடி பதில் கூறியே ஆக வேண்டும்.
உங்கள் தினங்கள் இனியதாக தொடங்கட்டும்.
தொடரும் ….
// மத இன ஜாதி சண்டை சச்சரவுகளில்லாமல் இப்புவியில் உள்ள யாவரும் இன்புற்று வாழவேண்டும். //
//கிறிஸ்தவத்தின் பெயரால் சிலுவைப்போரில் கோடானு கோடி மக்களை கொன்று குவித்திருக்கிறார்கள். அது சில கிறிஸ்தவ தலைவர்களின் மத சகிப்பின்மையே அன்றி, அதற்க்கு கிறிஸ்தவம் காரணம் அல்ல.//
கானான் தேசத்தை மோஸேவுக்கு வாக்களித்து அங்குள்ள மக்களை கொன்றொழித்ததிலிருந்துதான் கிறித்துவம் தொடங்குகிறது. தேவன் தொடங்கிவைத்த முதல் மதவெறி. சூரியனைப் பார்த்து ஓநாய் குலைக்கிறது.