கலு. அப்துல்லாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

Dung-beetle

சில நாட்களுக்கு முன்னால் கலு.அப்துல்லா ரஹ்மத்துல்லா என்பவரின் முகநூல் பதிவைப் படித்தபோது அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால், அது என்னைக் குறி வைத்து அவதூறாக எழுதப்பட்டிருந்தது.

 

நான் முகம் காட்டி எனது கருத்தை ஒரு பொது தளத்தில் சொல்கிறேன், நீங்களும் உங்களைக் காட்டுங்கள் உங்களின் புத்திமதியை, இடித்துக்கூறும் கருத்துக்களை என்னிடம் சூடாகக் கூட சொல்லுங்கள். பொதுவெளியில் முகம் காட்ட மறுத்து நான் இன்னார் என சொல்ல வெட்கப்பட்டு கோழையைப்போல ஒளிந்துகொண்டு, நீ இவ்விதம் தான் இருக்க வேண்டும் என பிறரை வழிப்படுத்த உங்களுக்கு எந்த அனுமதியும் என் பக்கத்தில் இல்லை, தேடல் விரும்பி உண்மைவிளம்பி இன்னமும் பிற என யாருன்னே தெரியாத நீங்கள் முட்டாள்கள் மடையர்கள்,

ஊரில் இளம்பெண்களின் மொபைல்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவதும் அமைதியான தம்பதியர் வாழ்வில் மொட்டைக் கடுதாசி போட்டு பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதுமாக கழிந்த இந்த கழிசடைகளின் வாழ்க்கை இப்பொழுது இங்கு முகநூலில் மேதாவி போல தங்களை இனம் காட்டி கழிகிறது… மொட்டைக் கடுதாசிக்காரர்கள் மிகுந்த ஆபத்தானவர்கள் தங்களை ஒளித்துக் கொண்டு அமைதியான சமூகத்தில் கருத்து சொல்ல நுழைந்து குழப்பம் தோற்றுவிக்கும் இவர்கள் கேடுகெட்டவர்கள்.. ப்ளாக் செய்து விட்டு நிம்மதியாக இருக்கப் போகிறேன்…

இந்த வேடிக்கை இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது.

 

இதில் இளம் பெண்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவதாகவும், தம்பதியர் வாழ்வில் மொட்டைக் கடுதாசி போட்டு பிரிப்பதாகவும் கூறப்பட்டிருக்கும் செய்தி தான் என்னை பாதித்தது. ஏன் இப்படி அவதூறு செய்ய வேண்டும்? இப்படி வன்மமாக எழுதும் அளவுக்கு என்ன நடந்தது?

 

அண்மையில் முகநூலில் உலவிக் கொண்டிருந்த போது மேற்கண்டவரின் பதிவு ஒன்றைப் பார்த்தேன். பிரபலமாகி விடும் இஸ்லாமிய பெண்கள் இஸ்லாத்தின் தடைகளை மீறி தாங்கள் பிரபலமானதாக சொல்வது தவறு. இஸ்லாத்தில் அம்மாதிரியான தடைகள் இல்லை. இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் இருப்பதாக காட்டினால் தான் பிரபலமாக முடியும் என்பதால் அவ்வாறு கூறுவதாக புலம்புகிறது அந்தப் பதிவு,

 

இது மதவாதியின் கண்ணோட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கருதினேன். எனவே, அந்தப் பதிவில்

இதற்கு வேறு கோணங்களும் இருக்கின்றன. இது மட்டுமே சரியான கோணம் என்று கருதினால் பரிதாபப்படத்தான் முடியும்

எனும் பொருள்பட பின்னூட்டமிட்டேன். இதற்கு மேற்படியார் பதிலேதும் எழுதவில்லை. என்றாலும், வேறொருவர்

வேறு சில கோணங்கள் இருக்கலாம் ஆனால் இதுவே 95 சதவீதம் சரியான கோணம் என நான் கருதுகிறேன்

என்று தங்கிலீசில் எழுதினார். இதற்கு பதிலாக,

நண்பரே பொதுவாக இப்படி எழுதினால் அதனால் பயன் ஒன்றும் விளையாது. குறிப்பிட்ட நிகழ்வில் என்ன நடந்தது, என்ன பிரச்சனை எது சரி எது தவறு என்று எதனையும் ஆராயாமல், பொதுவாக இப்படி நீதிபோதனைகளை செய்து கொண்டிருந்தால் இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் தீர்வை எட்ட முடியாது

என்று நான் எழுதினேன்.

 

இது ஒரு சாதாரண உரையாடல். இதில் கொஞ்சம் காரம் சேர்க்க வேண்டும் என மேற்படியார் எண்ணினார் போலும். உடனே கீழ்கண்டவாறு ஒரு பின்னூட்டமிட்டார்,

தேடல் விரும்பி அப்படின்னா யாரு என்ன ஆளுன்னு தெரியாம கண்ட கண்ட பேக் ஐடிக்கெல்லாம் ஆவிய தொலைக்க முடியாது… முதல்ல நீ யாருன்னு சொல்லு.. அதுக்கு தைரியமில்லாம எதுக்கு அட்வைஸ் முட்டாள். 

இந்த பின்னூட்டத்தினால் நான் கொஞ்சம் எரிச்சலுற்றேன். முட்டாள் என்று திட்டியது கூட பெரிதாக தெரியவில்லை. முகம் காட்டாமலிருப்பது குற்றம் எனக் கருதும் இவர் போன்றவர்களின் தடித்தனத்தின் மீது தான் கடுங்கோபம் வந்தது. ஆகவே, மீண்டும் அதில் ஒரு பின்னூட்டமிட்டேன்.

உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து கொண்டிருந்தால் முட்டாள் என்று திட்டுவீர்களா? எளிமையான இந்த விசயமே ஒருவனை திட்டும் அளவுக்கு உங்களை கொண்டு செல்லும் என்றால் நீங்கள் என்ன நிலையில் இருக்கிறீர்கள் என்பதை பரிசீலித்துக் கொள்ளுங்கள். நாம் ஏற்கனவே சில போதுகளில் உரையாடியிருக்கிறோம் அப்போதெல்லாம் இது போன்ற முகம் காட்டா சிக்கல் உங்களுக்கு எழவில்லையே, இப்போது மட்டும் ஏன்? சரி நான் வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். நான் செங்கொடி. இன்னும் விளக்கம் வேண்டுமென்றால் ஊரில் கேளுங்கள், அல்லது நீங்கள் வசிக்கும் தம்மாமில் கூட கேட்டுப் பார்க்கலாம். மாறாக, முகம் காட்டவில்லை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.

 

இதன் பிறகு மேற்படியார் என்னை தடை செய்து விட்டார். எனக்கு வேடிக்கையாக இருந்தது. இவரின் பதிவுகளை கவனித்துப் பார்த்தால், நிலப்பிரபுத்துவ மேட்டிமைத்தனத்துடன் அறிவுஜீவித்தனமாக நிகழ்வுகளை அணுகும் தன்மை இவரின் ஒவ்வொரு பதிவிலும் காணக் கிடைக்கும். இதன் அடிப்படையில் தான் இவர் குறித்த மதிப்பீடும் என்னுள் இருந்தது. மட்டுமல்லாது, ஆசிரியராகவும் பணியாற்றியவர், ஊரின் பெரும்பாலான நிகழ்வுகளைக் கவனித்து சரியோ தப்போ பதிவிடும் முனைப்புடையவர். எனவே, ஜனநாயகத் தன்மையுடையவராகவும் இருப்பார் எனும் அடிப்படையிலேயே என்னுடைய மாற்றுக் கருத்தை அவருடைய பதிவில் பதிவு செய்தேன். ஆனால் தொடர்ந்த அவரது நடவடிக்கைகள் அவரை மதிப்பிடுவதில் நான் எவ்வளவு தவறு செய்திருக்கிறேன் எனக் காட்டியது. மறுநாள் என்னுடைய பின்னூட்டங்கள் நீக்கப்பட்டிருந்தன. அதேநேரம் எனக்கு மேற்படியார் பதிலளித்தது மட்டும் இருந்தது. எனவே தான் என்னுடைய பக்கத்தில் இரண்டு பதிவுகளை வெளியிட்டேன். பதிவு 1, பதிவு 2

 

அந்த இரண்டு பதிவுகளால் உந்தப்பட்டுத்தான் இந்தப் பதிவின் முதலில் இடம் பெற்றிருக்கும் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

 

அவருடைய பதிவில் எந்தப் பின்னூட்டத்தை அனுமதிப்பது? எதை தடுப்பது என்பது அவரின் விருப்பத்திற்கு உட்பட்டது. அதில் பிறர் தலையிட முடியாது. ஆனால், வெறுமனே மாற்றுக் கருத்து கொண்ட ஒரு பின்னூட்டத்தை தடுப்பதின் பின்னுள்ள அரசியல் என்ன? இது குறித்து பேச அவருடைய அனுமதி தேவையில்லை அல்லவா? தவிரவும், பொது வெளியில் மென்மையான அணுகுமுறை கொண்ட அறிவுஜீவி போல் காட்டிக் கொள்ளும் அவர் உள்ளுக்குள் பாசிச குணங்களைக் கொண்டிருக்கிறார் என்பதை அம்பலப்படுத்துவதும் அவசியம் அல்லவா?

 

பொதுவாக ஒருவருக்கு மெய்நிகர் உலகாகிய இணையப் பரப்பில் எழுதும் உரிமை எங்கிருந்து வருகிறது? கணிணியும், இணைய இணைப்பும், சமூகத்தளங்களில் கணக்கும் இருந்தால் எழுதும் உரிமை வந்து விடுமா? நிச்சயமாக இல்லை. எழுதப்படுவதற்கு பொறுப்பேற்று, எழுதப்படுவதன் மீதான விமர்சனங்களை அனுமதித்து விளக்கமளிக்கும் கடமையிலிருந்தே எழுதும் உரிமை வருகிறது. இந்த அம்சத்திலிருந்து பார்த்தால் தன்னுடைய எழுதும் உரிமையை மேற்படியார் தவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்பது உறுதியாகிறது.

 

ஒருவேளை, தான் எழுதியிருப்பவற்றுக்கு மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் விவாதிக்கவோ, கருத்துப் பரிமாற்றம் செய்யவோ விருப்பமற்றிருந்தால் அதை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை எழுதுபவருக்கு இருக்கிறது. அப்படி எந்த அறிவிப்பையாவது மேற்படியார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறாரா? அல்லாவிட்டாலும் கூட கண்ணியமான முறையில் உங்கள் வருகை என்னுடைய பக்கத்துக்கு தேவையில்லை என்று தெரிவித்திருக்க முடியும். அனைவரையும் சக மனிதராக கருதுபவருக்கு மட்டுமே இது வாய்க்கப்பெறும். ஏற்றத் தாழ்வு நினைக்கும் பார்ப்பனியர்களுக்கு இந்நாகரீகம் சுட்டுப் போட்டாலும் வராது.

 

ஆனால் இந்த இரண்டு அம்சங்களையும் மீறி தன் முதல் மறுமொழியிலேயே முட்டாள் என்று திட்டியிருக்கிறார் மேற்படியார். அப்படி திட்டும் அளவுக்கு என்னுடைய பின்னூட்டத்தில் அப்படி என்ன இருந்தது? அதை விளக்கும் கடமை யாருக்கு இருக்கிறது?

 

முகம் காட்டாமல்இது தான் அவர் கூறும் தலையாய பிரச்சனை. அதாவது, செங்கொடி, தேடல் விரும்பி என புனை பெயர் வைத்துக் கொண்டிருப்பது தான் இவ்வாறு நடந்து கொள்வதற்கான முக்கியமான காரணமாக காட்டிக் கொள்ள விரும்புகிறார். அது முக்கியமான காரணம் இல்லை என்பதை பின்னர் பார்க்கலாம். இப்போது மேற்படியார் காட்ட விரும்பும் காரணமான முகம் காட்டாமல்என்பது சரியா? எனப் பார்க்கலாம்.

 

முகம் காட்டினாலும், நிஜப் பெயரிலிருந்தாலும் சொல்லப்படும் கருத்து புரிந்து கொள்வதில் வித்தியாசப்படுமா? அதாவது, ஒரு கருத்தை ஒரு பெயரிலிருந்து கூறும் போது ஒரு விதமாகவும் பெயரிலியாக கூறும் போது வேறு விதமாகவும் புரிந்து கொள்ள இயலுமா?

 

ஒருவர் இணையத்திலிருந்து ஏதோ ஒரு படத்தை அடையாளமாக வைத்துக் கொண்டு அக்பர் அலி, அசன் கனி என்று ஏதாவது பெயர் வைத்துக் கொண்டால் அது மேற்படியாருக்கு முகம் காட்டுவதாக தெரியுமா? அதாவது ஊதா வண்ண சட்டையும் கண்ணாடியும் போட்டிருக்கும் வேறு ஒரு படத்தை அடையாளத்துக்கு வைத்துக் கொண்டு ஆலு.குப்துல்லா என்று பெயர் வைத்துக் கொள்ள இயலாதா? முகம் காட்டாமல் என்று மேற்படியார் கூறுவது எவ்வளவு அபத்தமானது என்று கூட புரிந்து கொள்ள முடியாத குழந்தையா இவர்?

 

முகம் காட்டாமலும், புனை பெயரிலும் இருப்பது மேற்படியாருக்கு பொருட்டானதல்ல என்பதை இணைக்கப்பட்டுள்ள படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். அது இரண்டு வெவ்வேறு பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பின்னூட்டங்கள் இரண்டும் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, முகம் காட்டாமல் இருப்பதோ, புனை பெயரில் இருப்பதோ மேற்படியாரை இந்த அளவுக்கு கோபம் கொள்ளச் செய்வதற்குப் போதுமானவை அல்ல.

kalu.rahmathulla4

 

முகம் காட்டாமல் இருப்பது என்பது, புனை பெயரில் இருப்பது என்ன குற்றச் செயலா? எதற்கு முகம் காட்ட வேண்டும்? நான் தான் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு புனைவுகளை நிகழ்வுகளாக காட்டி பீஜப்படுத்திக் கொள்வதற்கா? கற்பனைகளை அவிழ்த்து விடுவதற்குப் பதிலாக தரவுகளைக் கூறலாம். எந்த சட்டப்படி முகம் காட்டாமலிருப்பது, புனைபெயர் வைத்துக் கொள்வது குற்றச் செயல்?

 

ஆக, சட்டப்படி தவறில்லாத ஒன்றை, பிறர் செய்யும் போது அதில் ஆட்சேபிக்க ஏதுமில்லாத ஒன்றை நான் செய்திருக்கும் போது பிரச்சனைக்குறியதாக ஆகிவிடுகிறது என்றால் அதன் பொருள் என்ன? அது என்னுடைய கருத்து என்பது தான் காரணம்.

 

ஆம். என்னுடன், என்னுடைய அடையாளம், நான் யார் என்பது தெரிந்தே என்னுடன் முன்பு உரையாடியிருக்கிறார். என்னுடைய சொந்தப் பெயரைக் குறிப்பிட்டே அதில் உரையாடியிருப்பதைக் கவனிக்கவும். அந்த உரையாடலை காண விரும்புவோர் இங்கு சொடுக்கவும்1, பதில்1, இங்கு சொடுக்கவும்2, பதில்2 கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு குறிப்பாக பதில் சொல்ல முடியாமல் சுற்றி வளைக்கும், சொந்தக் கருத்தைக் காட்ட முடியாத இந்த லகுடபாண்டி தான் மேதாவி போல் முகம் காட்டுவது குறித்து பேசுகிறார்.

 

பெரியார் மிகத் தெளிவாகத் தான் சொல்லிச் சென்றிருக்கிறார், மதம் உள்ளே நுழைய நுழைய அறிவு வெளியேறும் என்று. ஒரு நிகழ்வு நடந்தால் அதில் தொழிற்பட்டிருக்கும் காரணிகள் என்ன? விளைவுகள் என்ன? சரியா தவறா? என்பன போன்ற எந்தத் தேடலும் இல்லாமல் தான் சார்ந்திருக்கும் மதம் சார்ந்த விசயம் என்பதால் மட்டுமே மூர்க்கத்தனம் காட்டும், அப்படி மூர்க்கத்தனம் காட்டப்படுவதை ஆதரிக்கும் இந்த மத முடைகள் தாம் இங்கே நியாயவாதம் பேசுகின்றன.

 

இப்போதைய பிரச்சனையின் மையப்புள்ளி இது தான். இந்த மத முடைக்கு ஏற்பில்லாதவன் எனும் காரணத்திற்காகவே தான் என்னுடைய கருத்துகள் தடுக்கப்பட்டு வசைச் சொற்களால் வாதிக்கப்பட்டிருக்கிறேன். மற்றப்படி, முகம் காட்டவில்லை மூக்கை காட்டவில்லை என்பதெல்லாம் பம்மாத்து தான். அடே! அரபுப் பார்ப்பனியர்களா, இதை நீங்கள் வெளிப்படையாகவே சொல்லலாமே, உங்கள் பதிவுகளில் பின்னூட்டமிட வேண்டும் என்பதற்காகவா நாங்கள் பிறப்பெடுத்து வந்தோம்.

 

சரி, இவர்கள் மாற்று மத நண்பர்களுடன் பழகுவதில்லையா? என்ன தான் இந்த கழிவுருட்டிகளின் உளவியல்? பொதுவாக மதவாதிகள் அவர்கள் பிற மதத்தவர்கள் ஆனாலும் அவர்களுக்குள் ஓர் ஐக்கியம் உண்டு. என்ன தான் வர்ண பேதம் காட்டினாலும் அடிப்படை, ஆராய்ந்து பார்க்காமல் ஏற்கும் மூடத்தனம் தான். மனதில் ஏன்ன மாதிரியான பிம்பம் பதிக்கப்படுகிறதோ அப்படியே களிமண் போல இருப்பது. அண்மையில் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரனுடன் கிரிக்கெட் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். இந்தியா பாகிஸ்தான் விளையாடினால் இந்தியாவை ஆதரிப்பது தேசப்பற்று என்றான். சரியப்பா பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் ஆடினால் உன் தேசப்பற்று என்ன செய்யும்? என்றேன். தயங்காமல் சொன்னான் இந்தியாவின் எதிரி பாகிஸ்தான். எனவே, ஆஸ்திரேலியாவை ஆதரிப்பது தான் தேசப்பற்று என்றான். இது அந்த ஆர்.எஸ்.எஸ் காரனின் மனோநிலை. இவன் நம் மதத்துக்கு எதிராக பதிவெழுதுகிறான் எனவே அவனின் எந்தக் கருத்தாக இருந்தாலும் வெருட்ட வேண்டும். இது இந்த அழுகிப் போன தர்பூஸின் மனோநிலை. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

 

யாரென்றே தெரியாமல் குறுஞ்செய்தி அனுப்பினேன், மொட்டைக் கடுதாசு எழுதினேன் என்று கூறத் துணியும் இது போன்ற சாக்கடைகளின் உள்ளடக்கம் என்ன? எனக்குப் பிடிக்காத அல்லது என கருத்துகளோடு பொருதி நிற்கும் யாரானாலும் அவர்களை அவதூறு செய்வதற்கு எந்த எல்லைக்கும் கீழிறங்கிச் செல்ல தயாராக இருப்பேன் என்பது தான் இவர்களின் உள்ளடக்கம். வாய்ப்பு கிடைத்தால் எதைத்தான் செய்ய மாட்டார்கள் இவர்கள்? ஹிட்லரை குழந்தைகளை நேசித்தவன், சிறந்த நிர்வாகி என்றெல்லாம் கூறுவதற்கு இப்போதும் ஆளிருக்கிறார்கள். எனவே, மென்மாலை வானின் அழகையும், வட்டார வழக்குகளையும் முகநூலில் கிறுக்குவதை மட்டுமே கொண்டு ஒருவரின் உள்ளடக்கத்தை தீர்மானித்து விட முடியாது என்பதற்கு நாற்றமடிக்கும் இந்த எழுத்தே சான்று.

 

சமூகம் என்பது என்ன? அது எப்படி இயங்குகிறது? என்பன போன்ற எந்தச் சிந்தனையும் சாரம்சத்தில் இருக்காது. ஆனால் எழுத்துகளிலோ அக்கரை கொப்பளிக்கும். இந்த பனங்கொட்டைகளின் அறிவுஜீவித்தன முகமூடியில் மண்டிக் கிடக்கும் முரண்பாடுகள் குறித்தெல்லாம் மீள்பார்வை செய்யாமல் இவர்களை அம்பலப்படுத்துவது முழுமையடையுமா?

 

உருவேற்றப்பட்ட உப்பு மூட்டையே! எது கோழைத்தனம்? இது தான் என் விருப்பம், இதனால் தான் உன்னை தடை செய்கிறேன் என்று சொந்த மனதில் இருப்பதை வெளியில் சொல்ல முடியாமல் மூக்கை காட்டவில்லை, நாக்கை காட்டவில்லை என்று சுற்றி வளைப்பது கோழைத்தனம் இல்லையா?

 

அமுத முலாமில் சாக்கடல் நீரே! எது வீரம்? இது என் கருத்து, இது அவன் கருத்து எது சரி என்பதை பாருங்கள் என்று தன் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு கூட காட்ட முடியாமல் என் கருத்துகளை அழித்து விட்டு வெறுமனே கம்பு சுழற்றுவது தான் வீரமா?

 

புழு பாதுகாத்த புண்ணே! எது அறிவு? என்னைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறி விட்டு மொட்டைக் கடுதாசி அனுப்பினேன், குருஞ்செய்தி அனுப்பினேன் என்கிறாயே, வானிலிருந்து வஹீ வந்தா இவற்றை தெரிந்து கொண்டாய்?

 

எது அமைதியான சமூகம்? எது குழப்பம் விளைவிப்பது? நான் புத்திமதி கூற விரும்புவதில்லை, ஆனால் சொல்ல வருவதை சூடாக இடியைப் போல் கூறுவேன். எது அமைதி? எது குழப்பம்? பேசுவோமா. துணிவோ, திறனோ இருக்குமா?

 

முகம் காட்டா என்னுடைய வீரம் இது தான். முகம் காட்டும் உங்களின் கோழைத்தனம் எப்படி பதுங்கும் என்பதையும் நான் அறிவேன். வீரம் என்பதை முகத்திலோ, அதில் வளரும் மயிரிலோ கொண்டவனல்ல, மூளையில் கொண்டவன். எப்படி வசதி?

 

வாய்ச்சொல் வீரர்கள் பலபேரை பார்த்து விட்டேன். இது போன்ற நேர்மையற்ற, பொய்யையும், புனை சுருட்டையும் அழகிய சட்டை போட்டு மறைத்துலாவும் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் ஆசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் வேதனையை ஏற்படுத்துகிறது. பாவம் இந்த அந்த மாணவர்கள். வேறென்ன சொல்வது,

 

திருந்துங்கள். அன்றேல், திருத்தப்படுவீர்கள்.

 

பின் குறிப்பு 1. அவர் அழித்து விட்ட என்னுடைய கருத்துகளை நான் பதிவு செய்து வைத்திருக்கவில்லை. நினைவிலிருந்தே எழுதியுள்ளேன். சொற்கள் மாறுபட்டிருக்கலாம். ஆனால், பொருளில் மாறுபாடு இருக்காது.

 

பின் குறிப்பு 2. கிடைக்கும் நேரங்களை பயனுள்ள வழிகளில் செலவிட முடியாமல் இது போன்ற அயோக்கியர்கள் திருடிக் கொள்வது வேதனை.

9 thoughts on “கலு. அப்துல்லாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

 1. நண்பர் செங்கொடி இது உங்கள் தகுதிக்கு தேவையில்லை என நினைக்கிறேன். இது போன்ற சில்லுண்டிகளை கடந்து செல்லுங்கள்.

 2. இவ்வளவு நாள் இணையத்தில் பங்கு பெற்று கட்டுரை எழுதி பின்னுாட்டம் இட்டும் இன்னுமா மார்க்கவாதிகளை புரிந்துகொள்ளவில்லை? ஆதரவான கருத்தானாலும் அனானிகள் ஆதரரிக்கபடுவார்கள் (அவர்களே அனானிகளாவதும் உண்டு) எதிரான கருத்தாக இருந்தால் உன் பேர குடு, அட்ரசை குடு, மெபைல் நம்பரை குடு, இமெயில் ஐடிய குடு, நேரடி விவாதத்துக்கு வா என்றெல்லாம் நல்லபிள்ளையாக ”அழைப்பு” விடுக்கப்படும். கருத்துக்கு ஒரு போதும் பதில் கருத்து மட்டும் வராது. தவறி வந்தால் அதில் மேற்கண்ட அழைப்புகள் இருக்கும். மறுக்க வழியில்லை என்று உறுதியாக தெரிந்தால் எந்த அனானியை எதிர்க்கிறார்களோ அதையே பயன்படுத்தி வேறுவிதமான அன்பான பதில் மார்கமுறையில் வழங்கப்படும். இது இணையத்தில் இணைந்த சில நாட்களிலேயே அறிந்து கொள்ளலாம்.

 3. (அவர்களே அனானிகளாவதும் உண்டு) இது ஜகஜம் தானே .. இவர்களுகெல்லாம் பப்ளிக்குட்டி கொடுக்காதீங்க சார்..

 4. ஒரு சில இஸ்லாமியர்களே மறைமுக பெயரில் வாதிடுவதுண்டு,அதைச் சார்ந்ததாகக் கூட இருக்கலாம் தோழர்…

 5. நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் பொழுது இவர் அங்கு ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு இருந்தார். நல்ல வேளையாக எனக்கு எந்த வகையிலும் ஆசிரியராக இருக்கவில்லை. ஆனால் எங்கள் வகுபிற்கு அருகில் இருந்த வகுப்பில் இவர் பாடம் நடத்துவதையும் மாணாக்கர்களிடம் இவர் நடந்து கொண்ட விதத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருத்து எனக்கு தோன்றுவது என்னவென்றால் இவர் தன்னை எப்பொழுதும் மாற்றவர்களை விட உயர்வாக எண்ணக்கூடியவராகவும் மற்றும் மற்றவர்களின் கவனத்தை தன்பால் பெற வேண்டும் என்பதற்காக எதாவது செய்யக்கூடியவராகவும் இருக்கலாம் என தோன்றுகிறது. மேலும் மற்றவர்கள்முன் தன்னை ஒரு ஹீரோவாக காட்டிக்கொள்ளவும் நினைத்திருக்கிறார் என்பது இவரின் செயல் மற்றும் நடவடிக்கைகளை அவதானித்திலிருந்து உணர்கிறேன். இவர் ஒரு விளம்பர விரும்பி என்பது என்னுடைய கருத்து. இவரை நீங்கள் விஷயம் அறிந்தவராக நினைத்துயுள்ளீர்கள் என்பது இந்த கட்டுரையில் தெரிகிறது. ஆனால் அதற்கான தகுதி இவரிடம் இல்லை என்பது எனது கருத்து. சுருங்க கூறவேண்டுமாயின் “இவரு ஒரு டம்மி பீசு”.

 6. வணக்கம் தோழர் செங்கொடி அவர்களே உங்கள் பதிவுகள் எல்லாம் கொஞ்சம் படித்து இருக்கிறேன் நேரமின்மை இன் காரணத்தால் என்னால் பின்னுட்டம் இட முடியவில்லை….இங்கே உங்களை எதிர்த்து பதிவு செய்தவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி இந்த அன்பு சகோதரி கேட்க ஆசை படுகிறேன்……உங்களுடைய இஸ்லாம் சிந்தனையும் செயல் பாடுகளும்…மூஞ்சி புத்தகத்தில் மாஷா அல்லா , அல்ஹம்துலிலஹ், பீ அமாநின்லா, எர்கமகல்லாஹ் ….இவளவுதான் உங்களில் மனசாட்சி உள்ள யாராவது சொல்லுங்கள்
  நான் இறை தூதர் முஹமது நபி சொன்ன மாதிரி ஒரு ஏழை மாற்றுமத பெண்ணுக்கு வாழ்வளித்து,அவளை இஸ்லாம் மதத்துக்கு மாற்றி இருக்கிறேன் ( தாவா )அல்லது பிறர்மனை நோக்காமல் இருந்து இருக்கிறேன் ……வங்கிகளில் கொடுக்கும் வட்டி பணத்தை கூட வாங்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று… ஒருவரிடத்திலும் பதில் இருக்காது உங்கள் இஸ்லாம் R .S .S விடும் அறிக்கைக்கு பதில் சொல்லுவதில் தான் இருக்கிறது,உங்கள் இஸ்லாம் திரைப்படம் நடிக்கும் kadha நாயகர்களின் குற்றங்களை சுற்றிக்காட்டி போராட்டம் பண்ணும் போர் குணத்தில் தான் இருக்கிறதுமதம் மாற்றுவதில் தான் உங்கள் முழு நேரமும் இருக்கிறது உங்களிடத்தில் இருக்கும் இஸ்லாம்…..பெண்களை அடக்கி ஆளுவதில் தான் இருக்கிறது …..நான் கேட்கிறேன் காட்டுமிராண்டி கூட்டம்
  தாலிபான்கள் செய்த வன்முறை வெறியாட்டத்தை தவ்ஹீதின் காவலர் P .J அவர்கள் என்றாவது கண்டித்து ஒரு அறிக்கை விட்டு இருப்பார???? நிர்மூடர்கள் ISIS செய்து வரும் அட்டகாசத்திற்கு ஒரே ஒரு கண்டன குரல் எழுப்பி இருப்பார???? இறை தூதர் முகமத் நபி அவர்கள் இஸ்லாத்தை இப்படி பரபவில்லை, இந்த மாதிரி பரப்பி இருந்தால் அந்த ஒரே ஒரு மனிதரின் கீழ் இதனை கோடி பேர் இருந்து இருக்க மாடீர்கள்,
  என்னை கேட்டால் அவரும் ஒரு நாத்திகர்தான்…மெக்கா கஹ்பதுல்லவில் பாசிச வெறியர்களின் ,வர்ணாசிரம் வடிவமைத்த, ஜாதி வெறி பிடித்த,கல்லை கடவுளாக வணங்கிய அவர்களை ஒரு மாற்று சிந்தனைக்கு விதிட்டர்கள் மொஹம்மத் நபி அவர்கள் தயவு செய்து செங்கொடியை அநாகரீக வார்த்தைகளில் திட்டமால் இஸ்லாம் பற்றி தெரிந்த, அறிஞ்சர்களை வைத்து விவாதம் செய்யுங்கள் நுனி புல் மேய்பவர்களுக்கு இங்கே இடம் இல்லை…….
  இப்பொழுது செங்கொடி சகோகு ஒரே ஒரு கேள்விக்கு விடை அளியுங்கள் அல்லா மனிதனை களி மண்ணாலும் அவனுடைய துணையை அவனுடைய விலா எலும்பை உருவி படைதான் என்று குரான் ல இருக்கு ,மருத்துவ ரீதியாகவும் இது உண்மை , ஆண்களுக்கு 204 எலும்புகள் பெண்களுக்கு 205 எலும்புகள் இந்த ஒரே ஒரு ஆதாரம் போதுமே…..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மாதிரி உங்களின் மேலான பதிலுக்கு காத்து கொண்டு இருக்கும் சகோதரி …..சாரினி பல்லவி
  அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எண்ணாமல் !!! எவர் சொன்ன சொல்லானாலும் உன் பகுத்தறிவால் எண்ணிப்பார்!!!! பெரியார்

 7. சகோதரி,
  உங்களுடைய கேள்வியை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் எலும்புகளின் எண்ணிக்கையில் ஒரு வித்தியாசமும் இல்லை. இருவருக்குமே 206 எலும்புகள் தாம் உள்ளன. விலா எலும்புகள் இருவருக்குமே 12சதை அதாவது 24 எலும்புகள் தான் வித்தியாசம் ஒன்றுமில்லை.

 8. Yes confirmed men has 206 and women has 207 vendum entraal neengal doctor kitta kelungal
  anticipating ur reply bro

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s